All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவேதா-மோகனின்-காதல்-காற்று-கதை-திரி

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்







ஹாய் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க.?

ஒரு புதிய முயற்சியோட உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.!

காதல் காற்று

இதுதாங்க கதையோட தலைப்பு.

இந்த காற்று

கதையின் நாயகனையும் நாயகியையும்

எப்படி சந்திக்க வைக்கபோகுது,

அப்படியே சந்தித்தால் இருவருக்கும்

காதலெனும் காற்று வீசுமா?

இதுதாங்க கதையின் கரு.

வழக்கம் போல இங்கேயும்

நண்ப ,நண்பிகளின்

கலாட்டாக்களும்

பெரியவர்களின் கண்டிப்புகளும்

நாயகன்-நாயகியின்

அன்பை பீச்சி அடிக்கும்

காதல் உணர்வுகளின்

கூடல்..ஊடல்..மோதல்..காதல்

என அனைத்து

கச்சேரிகளும் இக்கதையில் காற்றாய் வீசும்.

இக் காதல் காற்றை உணர்ந்து ரசிப்போம் வாங்க..




Hai friends itho new story introduction , etho pei kathai sonna athu enge ketpinga ennamo theriyalai antha story kku episodela concentrate panna mudiyalai , ezhuthi vachu nightla thukkathula bayanthu amma kittaa adi vaanginathu thani kathai athunala intha story epis pottu compensate pannure kovichukkama pachcha mannu enna mannichurnga makkale.



நிவேதா-மோகனின்-காதல்-காற்று-கருத்துத்-திரி
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPI-1




அலை பாயுதே கண்ணா

என் மனம் மிக அலை பாயுதே

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

அலை பாயுதே கண்ணா

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

அலை பாயுதே கண்ணா




என மனம் உருகி கண்ணனின் காணம் பாடி முடித்தாள், அந்த வீட்டு இளைய தேவதை அவள்..! சிரிக்கும் போது அவள் கண்களும் சேர்ந்து சிரிக்கும்,முகத்தில் எப்போதும் அமைதியின் பாவம் குடி கொண்டு இருக்கும். அவளை பார்க்கும் யாவருக்கும் கண்ணிமைப்பதையும் மறக்கசெய்யும் அம்சம் பொருந்தியவள். இந்த அழகின் தேவதையின் பெயரை இக் கதை நகர நகர அறிந்துகொள்வீர்கள்.



வீடு முழுக்க சாம்ப்ராணி போட்டு துளசி மாடத்தில் விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்து முடித்து விட்டு தன் தாயே தேடி சென்றாள் , அம்மா…அம்மா(வசீகரிக்கும் இனிமைக் குரலில்) நான் கோவிலுக்கு போய்விட்டு வரேம்மா என்று தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு அருகில் இருக்கும் நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு புறப்பட்டாள்.

அடுப்படியில் வேலைசெய்யும் அவளின் அம்மா (மனசுக்குள் )

பெருமாளே இப்படி நித்தமும் உன்னை தரிசிக்கும் அவளுக்கு எப்போ தான் வழிகாட்டப்போராயோ தெரியலையே என்று தாய்மைக்கே உரையே உணர்வில் உளறி கொண்டிருந்தார்



நரசிம்மர் கோவில் அந்த பெருமாள் எல்லோருக்கும் அருள் புரியே ஏனோ இவள் மேல் மட்டும் அந்த நரசிம்ம மூர்த்திக்கு இரக்கமே பிறக்கவில்லை, இதோ இன்றைக்கும் வந்துவிட்டாள்…இந்த கோப மூர்த்தியே தரிஷனம் செய்ய கோவில் பிரகாரத்தில் வளம் வந்து கொண்டு இருந்தவள் கிழே கிடந்த எண்ணெயே கவனிக்க தவறிவிட்டாள் [ ” ஒரு வேலை பெருமாள் திருவிளையாடல் ஆரம்பமோ..” ].

” ஆ அம். அம்மா .. என வழுக்கி விழ போனவளை தாங்கி பிடித்தது ஒரு வலுவான கரம் [ யாருப்பா அது.. ]அவளோ கண்களை இருக்க மூடிகொண்டாள்.





” கிழே பார்த்து வரகூடாதுன்னு ஏதும் வேண்டுதல் இருக்கா என்ன என கம்பிரமான ஒரு குரல் , அந்த பெண்ணை பிடித்தவன் தான் இந்த குரலுக்கும் சொந்த காரன் “



தான் கிழே விழவில்லை என்கிற சந்தோசம் யாரோ ஒருவன் தன்னை விழாமல் தாங்கி பிடித்து இருக்கிறான் என்கிற பயத்தில் அவனிடத்தல் இருந்து விலகி
, சாரி தப்பா எடுத்துகாதிங்க , நான் கவனிக்காமல் வந்துட்டேன்… என திக்கி திணறி சொல்லிவிட்டாள், [ எங்கே அவன் தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்கிற பயத்தில் ” ]

அவளின் பதட்டம் , அவனுக்கு புதிதாய் தோன்றியது, இப்போ எதுக்கு இவ்வளோ பதட்டம் இவளுக்கு கிழ விழ போனா பிடிச்சேன் அவ்வளோதானே அவனை பொறுத்துவரை ஆன் பெண் பழகுவது இது எல்லாம் ஒரு விஷயம் இல்லை…
ஆனால் இவள் என்னவென்றால் இவ்வாறு தவறு செய்தது போல் நடுங்கி கொண்டு இருக்கிறாள் , என்று ஒரு பக்கம் வியப்பாகவும் மறு பக்கம் எரிச்சலாகவும் இருந்தது ..மனசுல பெரியே ரதின்னு நினைப்பு போல என அவன் நினைத்து கொண்டு இருக்கும் போதே…



” என்ன கொஞ்சம் விட்டா நான் போவேன் என்று அவள் மெல்ல சொல்ல. ‘

அப்போது தான் தன் தவறு அவனுக்கு உரைத்தது இவ்வளோ நேரமாக ஒரு அறிமுக இல்லாத பெண்ணை.. தான் தாங்கி பிடித்து கொண்டு நிற்ப்பதை அதுவும் பொது இடத்தில், என்ன நினைத்து இருப்பாள் என்னை பற்றி,

இப்போது மன்னிப்பு கேட்பது இவனது முறை ஆனது, ” சாரி இப்போவாச்சும் கிழ பார்த்து போங்க.. “

அவள் வேற ஏதும் சொல்லாமல்..அவன் தன்னை விட்டால் போதும் என்று வெறுமென சரி என்று தலை அசைத்து விட்டு அந்த இடத்தை விட்டு.. வேகமாய் ஓடிவிட்டாள்”



அவனும் அவள் கவமாக போகிறாளா என்று ஒருமுறை திரும்பி பார்த்து சில்லி கார்ல் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான் ,

அதற்க்கு பிறகு இருவரும் ஒருவரையொருவர் மறந்தே போய் விட்டார்கள் .



இவள் கோவில் பிரகாரத்தை சுற்றி விட்டு… பகவன் இடம் , ‘ பெருமாளே நாராயணா , எப்போவும் வழக்கமா வேண்டுறது தான் எக்காரணத்தைகொண்டு அம்மாக்கு மட்டும் என்னோட மெடிக்கல் ரிப்போர்ட் பற்றி தெரியவே கூடாது, என் ஆயுள் கடைசி வரைக்கும், நான் இப்பிடியே இருந்துவிட்டு போகிறேன் தயவு செய்து என்னோட இந்த கடைசி வேண்டுதல நிறைவேர்த்தி வச்சுட்டுப்பா .. எனக்கு வேற ஏதும் வேண்டாம் என் பெற்றோர் நலமாக இருக்கணும் என்று வேண்டி கொண்டு கோவில் விட்டு வெளியே வர பொழுது அவள் உடன் கல்லூரியில் படித்த தோழி ஒருத்தி அவள் எதற்க்க வந்துகொண்டு இருந்தாள்



தோழியும் இவளை பார்த்து சந்தோசமாய் “ ஹாய் விஸ்மையா எப்பிடி டி இருக்க எவ்வளோ நாள் ஆச்சு உன்னை பார்த்து, ஆமா ஏன் இப்பிடி இளைச்சு போயிட்ட, உடம்பு ஏதும் சரி இல்லையா என்ன”



விஸ்மையா , ” ஹாய் நந்து, ஏன் எனக்கு ஒன்றும் இல்லைப்பா நா.. நான் நல்லா தான் இருக்கேன், நீ எப்பிடி இருக்க நந்தினி” கொஞ்சம் தடுமாறியே படியே பதில் சொன்னாள்



நந்தினியின் இடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது அதாவுது மற்றவர்கள் எதாவுது யாரிடமும் சொல்லாதே என்று சொன்னாள் போதும் அதை அடுத்தவர்கள் இடம் சொல்லிவிட்டு தான் மறுவேலை பார்ப்பாள் இல்லையென்றால் அந்த விசையத்தை வைத்து அவர்களிடம் தனக்கு தேவையானா வேலை வாங்கிவிடுவாள், வேற வழி இன்றி மற்றவர்களும் அவளுக்கு பயந்து வேலையே செய்து குடுத்து விடுவார்கள் இது விஸ்மையாவுக்கு தெரிந்து இருந்ததால் நந்தினியிடம் சற்று கவனமாகவே பேசினாள்.



“எனக்கு என்ன நான் நல்லா இருக்கேன் தான் ஆனா . ஹ்ம்ம் என ஒரு பெருமூச்சு உடன் நிறுத்தினாள்..!!! பிறகு தோழிகள் இருவரும் சிறுது நேரம் பேசிவிட்டு அவர்-அவர் வீட்டுக்கு திரும்பினார்கள்



ஆனால் இறைவனை வணங்கிவிட்டு கிளம்பும் திருப்தி விஸ்மையாயிடம் சிறிதளவு கூட இல்லை மனதை மேலும் அடைப்பது போல் இருந்தது எதையோ சிந்தித்தபடி ஒருவழியாக வீட்டை வந்து அடைந்தாள்



சிந்தனை முழுவதும் தோழியின் பேச்சில் இருந்ததால், தன் கண் முன் நின்ற தாய்,சகோதரிகள் மூவரையும் கவனிக்காமல் தனது

அறையில் போய் முடங்கி விட்டாள் அந்த பாவை, தான் மட்டும் தான் துன்பம் அனுபவிக்கிறோம் என்று நினைத்தால் அவளது தோழியும் அல்லவா ஒரு சிக்கலில் மாட்டி தவிக்கிறாள் என்கிற யோசனை இவளுக்குள்.



அறையின் வெளியே…



என்னம்மா இது வீட்டுக்கு வந்தவங்கள.. வாங்கன்னு கூட கேட்க கூடாதுன்னு இருக்கா என்ன வந்தா அவ பாட்டுக்கு உள்ளார போய் கதவை அடைசுகிட்டா அதையும் நீ பார்த்துகிட்டு சும்மா நிக்கிற.. என்ன ஏதுன்னு கேட்க மாட்டியா…? என விஸ்மையாவின் பெரியே அக்கா பொரிந்து தள்ளி விட்டாள்.





படிக்கிற திமிர வேற யார்கிட்டயாவது காட்ட சொல்லும்மா, எங்க கிட்ட வேணாம்,நாங்களும் இந்த வீட்டு பொண்ணுங்க தான் அதுவும் இல்லாம இந்த வீடு மாப்பிள்ளைங்களுக்கு மரியாதையை குடுக்கலைன்னா நாளைக்கு உன்னை தான் ம்மா சொல்லி காட்டுவாங்க என தங்கள் கோபத்தை காட்டி கொண்டு இருந்தார்கள் அந்த வீட்டு இரண்டு இளவரசிகள்.



ருக்குமணி, அவர்களின் பேச்சை கேட்டு செய்வது அறியா நின்று கொண்டு இருந்தார், இருந்தாலும் சின்னவளை விட்டு குடுக்க மனம் இல்லாமல் பெரியவள் இடம்” சரி டி விடு.. அவள் எதோ ஞாபகத்துல கவனிக்காமல் போயிட்டா அதுக்குன்னு இப்படியா பேசுவிங்க உடம்புக்கு ஏதும் சுகம் இல்லையோ என்னவோ போங்க போய் ஆகுற வேலையே பாருங்க ரெண்டு பெரும் என்று மூடி இருந்த அறை கதவை கவலை உடன் பார்த்தார் ருக்மணி.. ( என்னதான் பிரச்சனை தெரியலையே, இவ ஏன் இப்போ எல்லாம் இப்பிடி இருக்கா, ஒரு வேலை படிக்க போன இடத்துல ஏதும் தவறு நடந்துருச்சா என்ன பெருமாளே, அப்பிடி ஏதும் இருக்க கூடாது என் புள்ளையே நீ தான் காப்பாத்தணும் என கடவுளிடம் அந்த தாயால் வேண்ட மட்டுமே முடிந்தது”







அதற்குள் தாமோதரன் வந்து விட, ருக்மணி தனது கணவருக்கு மாலை நேரம் பலகாரம் எடுத்துட்டு வர சமயலறைக்கு சென்றார்.



தன் தாயிடம் பலிக்காத விஷயம் தந்தை இடம் பலிக்கும் என்கிற எண்ணத்தில் ராகினி – ரேஷ்மா இருவரும் தந்தையிடம் வந்து முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு, “ அப்பா நாங்க எங்கே வீட்டுக்கு கிளம்புறோம்” என சொல்ல





தாமோதரன் மகளின் பேச்சை கேட்டு திடுக்கிட்டு என்னம்மா என்ன ஆச்சு இப்போ எதுக்கு கிளம்புறிங்க , ஒரு வாரம் மாதிரி தங்குற மாதிரி வந்திங்க இப்போ திடிர்ன்னு இப்பிடி சொன்னா..?”



பெரியவள், “ வராத கண்ணீரை கண்களில் இருந்து துடைத்துவிட்டு எங்கே அப்பா , எங்களுக்கு தான் இந்த வீட்டுலையே மரியாதையே இல்லையே அப்போ நாங்க ஏன் இங்க இருக்கணும் எதோ அப்பா வீடு ஆச்சே கொஞ்சம் இருந்துட்டு போகலாம் வந்ததுக்கு நல்ல செய்யிறிங்க என சொன்னாள்”



” என்னம்மா சொல்லுறிங்க யாரு.உங்களுக்கு மரியாதையை பேசினது போனது என தாமோதரன் விசாரிக்க “



” எல்லாம் உங்க பொண்ணு விஸ்மையா தான் ப்பா” ரேஷ்மா சொன்னாள்



சின்ன மகளின் பெயரை கேட்ட உடன் தாமோதரன் யோசித்துவிட்டு” பாப்பாவ இருக்காதே “



” பார்த்தீங்களா , பார்த்தீங்களா

நீங்க நம்ப மாட்டிங்க எங்களுக்கு தெரியும் ப்பா அது நால தான் சொல்லுறோம் எதுக்கு பொல்லாப்பு நாங்க கிளம்புறோம் என்று இளையவள் சொல்ல “



அதற்குள்.. ” ருக்மணி. பலகாரம் எடுத்து வந்து விட்டார் அங்கே நடப்பதை கவனித்த அவர்…மனதுக்குள் ” அடிப்பாவிங்களா அதுக்குள்ள பத்த வச்சுடிங்களா இப்போ இந்த மனுஷன் என்ன பாடு படுத்த போறாரோ, அந்த புள்ளையே என யோசித்த படி கணவர் அருகே வர..





அதற்குள் , தாமோதரன், மனைவியே பார்த்து, என்ன மணி இது புள்ளைங்க ஏதோ சொல்லுறாங்க…”கொஞ்சம் கடுமையாக கேட்க



ருக்மணி மனதுக்குள் தன் இரு மகள்களை திட்டியே படி தாமோதரனுக்கு பதில் சொன்னார்” இல்லைங்க அது அவளுக்கு கொஞ்சம் உடம்பு சுகம் இல்லைங்க அது நால அப்பிடி இருக்கா இல்லேன்னா உங்களுக்கு தெரியாதா சின்னவளை பற்றி”



” அதுக்காக வந்தவங்கள, வாங்க கூட கேட்காமல் இருக்கிறது என்ன பழக்கம்”



” இனி இப்பிடி நடக்காதுங்க நான் பார்த்துகிறேன் என அவர் கணவரை சமாதனம் செய்து விட்டார் “



” சரி சரி பார்த்துக்.., ஹ்ம்ம் மாப்பிள்ளை.. புள்ளைங்களுக்கும் பலகாரம் குடு என அவரை அனுப்பி வைத்தார்”



கிளப்பிவிட்ட பிரச்சனை இப்பிடி வெடிக்காமல் போனதில் ராகினிக்கு ரொம்பவே வருத்தம்



ரேஷ்மா” என்ன அக்கா இப்பிடி ஆகி போச்சி நாம ஒன்னு நினைச்சா இங்கே வேற நடந்திற்ச்சே.”



அதுக்கு ராகினி “விடுடி பார்த்துக்கலாம் என ரேஷ்மா உடன் பலகாரம் சாப்பிட போனாள்



இங்கே விஸ்மயா
தனது அறையில் அமர்ந்து அது எப்பிடி முடியும் அப்பிடி எப்பிடி செய்யலாம் யார் இதுக்கு சம்மதிப்பா இது சாத்தியமா என நந்தினி, தன் இடம் சொன்னது பற்றி அவள் யோசிக்க செய்தாள் .



Hai friends itho 1st epi potuten neenga padichutu unga comments sollunga spelling mistake iruntha mannichukkonga dearies
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
!!2!!


21738












நந்தினி பேசியது எல்லாம் விஸ்மாயா கண் முன் படமாய் விரிந்தது.

” எனக்கு என்ன , நல்லா இருக்கேன் தான் ஆனா ஹ்ம்ம் என ஒரு பெருமூச்சு உடன் நந்தினி பேச்சை நிறுத்தினாள்….!!!

” ஏன் என்ன ஆச்சு…. நந்தினி நீ ஏன் இப்பிடி விரக்தியா,பேசுற உனக்கு பிடிச்சவர தானே கல்யாணம் பண்ணிக்க போற அப்புறம் என்ன? தோழி ஏன் கவலையாக பேசுகிறாள் என விஸ்மையா நந்தியின் முகத்தையே பார்த்தாள்

” அதுல தான் பிரச்சனையே விச்சும்மா…” என நந்தினி சொல்ல

” என்னடி குழப்புற அப்பிடி என்ன தான் பிரச்சனை….சொல்லேன்” விஸ்மையா பதட்டத்தில் கேட்டே விட்டாள் எங்கே தோழி தன்னை போல் ஏதும் கஷ்ட படுகிறாளோ என்கிற பயம் தான்

” கார்த்திக்கும் எனக்கும் ஜாதகம் பொருத்தம் பார்த்த அப்போ அவர் ஜாதகத்துல எதோ தோஷம் இருக்காம் அதுல முதல் தாரம் நிலைக்காதாம் அது நால எங்க கல்யாணம் இப்போதைக்கு நடக்குற மாதிரி தெரியல ஆனா நான் கார்த்தி கிட்ட ஒரு யோசனை சொன்னேன் ஆனா அவன் அதுக்கு சம்மதிக்க மாட்டேன்கிறான் என்ன பண்ண எனக்கே புரியல என நந்தியின் சொல்லி முடிக்க..”

அப்பிடி என்ன யோசனை நந்தினி அவர் ஏன் அதை மறுக்கனும்என முகம் தெரியாத அவன் மீது விஸ்மையா பரிதாபம் பட்டாள்.. கடைசியில் அவளது நிலை பரிதாப பட போகிறது என்று தெரியாமல்.

“ அது வந்து, ஒரு முடியாத அதாவுது உடல் நிலை சரி இல்லாத பெண்ணை பார்த்து முதல் தாரமா கல்யாணம் செய்துகுறது டா எப்பிடியும் உடல்நல குறைவால் இறந்துட்டா அந்த தோசம் கழிந்துவிடும் அப்புறம் நான் கார்த்தியே கல்யாணம் பண்ண எந்த தடை இல்லாம செய்துக்கலாம், இத சொன்னா அவர் கேட்க மாட்டேங்குறாரு, விச்சு, இப்போ நீயே சொல்லு நான் சொன்ன யோசனை சரி தானே சின்ன வையசுல இருந்தே கார்த்திக்கு தான் எனக்கு நான் தான் கார்த்திக்கு சொல்லி சொல்லியே வளர்த்துட்டாங்க.. . இப்போ ஒரு ஜாதகதுக்காக நான் கார்த்தியே இழக்கனும்ன்னா எப்பிடி முடியும் சொல்லு.” என நந்தினி பேசிக்கொண்டே போக

நந்தியின் பேச்சை கேட்டு விஸ்மையா திகைத்து போய் அமர்ந்து விட்டாள். ”ஒரு திருமணத்துக்கு இன்னொரு திருமணம் பரிகாரமா இது எப்பிடி சாத்தியம், இது என்ன சினிமாவா ” என யோசிக்க ஆனால் வீட்டுக்கு நேரத்தோடுகிளம்ப வேண்டுமே என்று சரி நந்தினி நாம இன்னும் ஒரு நாள் பேசலாம் எனக்கு வீட்டுக்கு கிளம்பனும் என்று சொல்லிவிட்டு கிளம்பி வந்துவிட்டாள்.

மீண்டும்.. மீண்டும்.. நந்தினி.. சொன்ன விஷயம் மனதில் ஓடி கொண்டு இருக்க….

அபோதுதான் அறை கதவு வேகமாய் தட்டும் சத்தம் கேட்டு விஸ்மையா திடுக்கிட்டு ச்சைசை இவ்வளோ நேரமும் இதை பற்றியேவா யோசித்து கொண்டு இருந்தேன் அம்மா என்ன நினைபாங்க என அவசரமா போய் கதவை திறந்தாள் அந்த அப்பாவி பாவை

அங்கே ருக்மணி அவளை முறைத்து , ஏண்டி அறிவில்லை உன்னக்கு எம்புட்டு நேரமா கதவை தட்டுறேன் திறக்குறதுக் என்ன மணி என்ன ஆச்சுண்ணு பார்த்தேலே பசியா வரம் ஏதும்வாங்கி வந்து இருக்கியா என்ன ..வா சாப்பிட அப்பிடி என்ன உள்ளே செய்த்துட்டு இருந்த..

” அம்மா ஆ… அது வந்து.. ஒன்னும் இல்லை தூங்கிடென் எனவாய்க்கு வந்ததை சொன்னாள்” விஸ்மையா

”அதை கேட்ட ருக்மணி , என்னது தூங்கிடியா ஏண்டி அறிவு இருக்கா உனக்கு கோவில் போயிட்டு வந்து யாரும் தூங்குவாங்கலா, சரி சரி.. வா சாப்பிட்டு வந்து தூங்கு எனசொல்ல”

” இதோ வரேன் அம்மா நீங்க முன்னாடி போங்க நான் முகம் கழுவிட்டு.. வந்துறேன் என விஸ்மையா சொன்னாள்

” ஹ்ம்ம் சரி வா திரும்ப போய் படுத்துறாத என கண்டிப்புடன் சொல்லிவிட்டு சென்றார் ருக்மணி”

”அவர் சென்ற உடன் கதவில் சாய்ந்து ஹப்பாடா தப்பிச்சோம் என ஒரு பெரியே மூச்சை இழுத்துவிட்டு முகம் அலம்பிவிட்டு சாப்பிட டைனிங் ஹால் வந்தாள்”

தாமோதரன் சொந்தமாய் மல்லிகை கடை வியாபாரம் செய்து வருகிறார் தொழில் ஓர் அளவிற்கு நல்ல லாபம் வருவதால் தனது வீட்டை இடித்து முன்று மாடி. கட்டிடமாய் கட்டி விட்டு இருக்கிறார் கடையும் இன்னும் கொஞ்சம் பெரிது ஆக்கி டிபர்ட்மெண்ட் ஸ்டோர் அளவுக்கு இல்லை நாலும் பெரிதாய் மாற்றி இருந்தார்
மிகவும் அமைதியவர் தான் கஷ்ட பட்ட காலத்தில் உதவாத எந்த உறவின் கூடவும் இப்போ ஒட்டி உறவாட பிடிக்காதவர் தனது இரு பெண்கள் படிப்பில் ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட பெரியவாளுக்கு அடுத்து இரண்டாவுது பெண்ணுக்கும் அடுத்து அடுத்து திருமணத்தை முடித்து வைத்துவிட்டார் கடைக்குட்டியான விஸ்மையா எம் சி ஏ கடைசி ஆண்டு ப்ராஜெக்ட் செய்து முடித்து இருந்தாள் ஆன்லைனில் சிறியே ப்ரொஜெக்ட் எல்லாம் செய்து குடுத்து சம்பாதித்து கொண்டு இருக்கிறாள் கேம்பஸில் தேர்வு ஆகி இருப்பதால் அடுத்த இரண்டு மதங்களில் வேலை சேர காத்து இருப்பவள்.

அப்பிடி தான் ஒரு நாள் ப்ராஜெக்ட் விசையமாக வெளியே சென்று இருந்த பொழுது அந்த சம்பவம் நடந்தது தன் தோழியுடன் வேலை விசையமாக பேசிக்கொண்டு இருக்கையில் மயங்கி சரிந்தாள் விஸ்மையாவின் நிலையே பார்த்து அவளது தோழி பயந்து போய் சுற்றி இருந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள் அங்கே அவளுக்கு எல்லா டெஸ்டுகளும் எடுத்து அனுப்பிவைத்தார்கள் சரியாக இருண்டு வாரம் கழித்து அதே ஹோச்பிடல் சென்று தனது மெடிக்கல் ரிப்போர்ட் வாங்கி பார்த்தவளுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது……

அதில் தனக்கு கான்செர் இருப்பதாக சொன்னார்கள் அங்கே இருந்த டாக்டர் மேலும் ஆப்ரேஷன் செய்தால் மட்டுமே பிழைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கு என சொல்ல இதை கேட்டுமா தான் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என மாயாவுக்கு அழுகையாக வந்தது இந்த விசையத்தை எப்பிடி தன் பெற்றோர் இடம் சொல்லுவது அப்பிடியே சொன்னாலும் தாங்கிகொள்ளுவார்களா , அய்யோ இல்லை நான் இருக்கிற வரைக்கும் அவங்கள சந்தோசமா பார்த்துக்கணும் இப்போதைக்கு இத அவங்களுக்கு சொல்ல வேண்டாம் என தன்னுடையே மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் தோழியிடம் குடுத்துவிட்டு மருந்து-மாத்திரைகளுடன், மாதம் இரு முறை வீட்டுக்கு தெரியாமல் செக் அப் போய் வந்தாள், தன் பெற்றோர்க்கு தெரியாமல் மருந்து மாத்திரைசாப்பிட்டுவந்தாள் , அடிகடி. தலை சுத்தல் வந்தால்.. தன்னோட அறைகுல்லையே முடைங்கி கொள்ளுவாள் எங்கே அவர்கள்கண்டுபிடித்து விடுவார்களோ என்கிற பயம், பணம் இருக்கிறது தான் ஆனால் இப்போ தான் சகோதிரி இருவரும் கல்யாணமும் அடுத்து எல்லா சடங்கிற்கு எல்லாம் செலவு செய்தவர் இப்போ எப்பிடி தனக்கு மருத்துவ செலவு செய்வார் என்ற கவலை இதில் இப்போது தன் தோழி சொன்ன விசயம் அவளை அதிர்ச்சிக்கு உள்ள ஆக்கியது.

………………………………

கார்த்தி- மும்பையில் எம் பி ஏ முடித்துவிட்டு தன்னோட குடும்ப தொழில் தந்தை உடன் இணைந்து பிசினஸ் கவனித்து கொண்டு இருக்கும் 27 வயது இளைஞன் அம்மா- ராஜலக்ஷ்மிஅப்பா- ரகுராம் தாத்தா-வேதாசலம், பரம்பரை தொழில் - டெக்ஸ்டைல் பிசினஸ் வேதாசலம் அவருக்கும் இருண்டு பிள்ளைகள் பெரியவன் ரகுராம் சின்னவள் கௌசல்யா அவரின் கணவர் சங்கர் இவர்களின் செல்ல புதல்வி தான் நந்தினி, என்னதான் சமுகத்தில் சங்கர் பெரியே இடத்தில இருந்தாலும் மாமனார் வீட்டு சொத்தில் பாதியே கொள்ள அடிக்காவிட்டால் இவருக்கு உறக்கம் ஏதும் வராது

பாவம் அவர் பெற்ற பெண்ணையும் அப்பிடியே வளர்த்துவிட்டார்.ராமாயணத்தில் கயிகை எப்பிடியோ அப்படிதான் இந்த கௌசல்யா தானும் தன்னுடையே குடும்பம் தங்களுக்கு அடிமையாக ரகுராம் மற்றும் அவனது குடும்பம் இருக்க வேண்டும் என்று நினைத்தாள் அவள் .

இதுநாள் . இவளை காதலிக்கும் கார்த்திக் என்ன பாடுபட போகிறான் என்று வேதாசலம் முன்பே யோசித்துவிட்டார் போல அதனால் தான் இன்னும் எல்லாம் பொறுப்புகளையும்தன் கிட்டயே வைத்து கொண்டார் [ பெரியவர் நா பெரியவர் தான் பா கரெக்ட் டெசிசன் தாத்தா]

கார்த்திக், மும்மையில் இருந்து திரும்பி வந்த உடன் சங்கர் தன் குடும்பத்துடன் ரகுராம் வீட்டுக்கு வந்துவிட்டார் வந்த உடனேஅவர் செய்த முதல் வேலை தன் பெண்ணுக்கும் - கார்த்திக்கும் கல்யாணம் நிச்சயதார்த்தம் பண்ண வேண்டும் என்று கௌசல்யா சொல்ல என்ன அப்பா இது என்று ரகுராம்- ராஜலக்ஷ்மி பெரியவரை பார்க்க..

அவர்” சிறிது நேரம் யோசித்துவிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து ஜாதகம் பார்க்கலாம் என சொல்லிவிட்டு அப்போதைக்குபேச்சை முடித்து வைத்தார்.

சங்கர் தன் மனைவி காதில் ” என்னடி உன் அப்பா ரொம்ப யோசிக்கிறாரு ஜாதகம் வேற பார்க்கணும் சொல்லுறாரு நாமஎதாச்சும் செய்யணுமே, உங்க அண்ணனுக்கு கார்த்திக் ஒரே பையன் இவ்வளோ சொத்துக்கும் ஒரே வாரிசு வேற எவளாவுது வந்து உரிமை கொண்டாட விடுவேனா நான் எப்பிடியாவுது நம்ம நந்தினியே - கார்த்திக்கு கல்யாணம் செய்து வைக்கணும் அப்புறம். எல்லா சொத்தையும் நம்ம பொண்ணு பெயர்ல எழுதி வாங்கணும் என சொல்லிக்கொண்டு இருந்தார் [இன்னாருக்குஇன்னார் என்று எழுதி வைத்தான் தேவன் அன்று எல்லாம் விதி படி தான் நடக்கும் என இவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது]

ரகுராம் இடம் ராஜலக்ஷ்மி ‘ ஏங்க இது சரியா வருமா..“யோசித்துக்கொண்டே கேட்க

தனது லப்டோப்யில் அன்றையே கணக்கு வழக்கை பார்த்து கொண்டு இருந்துவர் தன் மனைவியின் இந்த திடீர் கேள்வியில் நிமிர்ந்தார் என்னடி இப்போ புதிர் போடுற இப்போ எதுக்கு சரியா வருமா கேட்குற.. எது சரியா வருமா”

‘ இல்லைங்க, நம்ம கார்த்திக் கல்யாணம் தான் “

” ஹ்ம்ம் அவன் சந்தோசம் தானே நமக்கு முக்கியம் அதுவும் இல்லாமல் அப்பா சொல்லுறது தான் பார்ப்போம் என்ன நடக்குதுன்னு’என சொல்லிவிட்டு தனது வேலையே பார்க்க ஆரம்பித்தார்

” அது “

” போதும் ராஜி எதையும் போட்டு குழப்பிக்காத நிம்மதியா தூங்கு நான் நாளைக்கு மீட்டிங் வேற பெப்பெர்ஸ் ரெடி பண்ணனும் என மீண்டும் தன் வேளையில் கவனம் ஆனார்.. ..

” ராஜலக்ஷ்மி, இப்போது ரகுவின் செயல் கோப படுத்தியது நிம்மதியா தூங்கணுமா , ஆமா என்கிட்டே தான் இந்த அரட்டல் உருட்டல் மிரட்டல் எல்லாம் எங்க பேசணுமோ அங்கே பேசுறது கிடையாது என முணுமுணுத்து கொண்டே படுத்து விட.

” ரகுராம் மனதுக்குள் இனி வேலையே பார்க்க விட மாட்டாளே இவ என லேப்டாப்பை முடி வைத்து விட்டு தன் மனைவி இடம் வந்தார்.

” சொல்லு ராஜி என்ன பிரச்சனை இப்போ உனக்கு… “

” ஒன்னும் இல்லை போங்க போய் உங்க பிசினஸ், லேப்டாப் அதையே கட்டி அழுங்க எனக்கு என்ன வந்தது என முகத்தை திருப்பிக்கொண்டு படுத்துவிட்டார் “

” ஹாஹா ,ஏண்டி இப்பிடி என் உயிரை வாங்குற , இப்போ என்னன்னு சொன்னாதானே எனக்கு தெரியும் “ ரகுராம் கேட்க

” ஆமா உங்களுக்கு விரல குடுத்தா கூட கடிக்க தெரியாதுபாருங்க .. வந்துடாரு பேச , கார்திப்பா என் கோபத்தை கிளராம போய்டுங்க அவ்வளோ தான்”

” கார்திப்பா என்கிற வார்த்தையே வைத்தே மனைவியின் கோபத்தை புரிந்துகொண்டார் சமாதனம் செய்து ஆகணுமே என பேச ஆரம்பித்தார் சரி சரி விடு அதான் எனக்கு புரியலைன்னு சொல்லிட்டேன்ல ம்மா இப்போ சொல்லு என்ன பிரச்சனைன்னு “

” இந்த கல்யாணம் சரியா வருமாங்க , எல்லாரும் நம்ம கிட்ட கலந்து பேசாம முடிவ மட்டும் சொல்லுறாங்க , நான் அவன பெத்தவ கிடையாதா என் புள்ளை மேல எனக்கு அக்கறை தான் இருக்க கூடாதா , உங்க தங்கச்சி வந்த உடனே அவ முடிவு பண்ணிட்டு வந்து பேசுற மாதிரி இருக்குங்க மாமா வேற கார்த்தி வந்த உடனே ஜாதகம் பார்க்கலாம் சொல்லுறாரு என்னங்க நடக்குது இங்க அப்போ நாம எதுக்கு என் புள்ளை என்ன யாரும் இல்லாதவனா” என ராஜி தன்னுடையே மனக்குறையே கணவர் இடம் புழம்பி தள்ள

அதை கேட்ட ரகுராம் யோசனையுடன் ‘ எதுனால ராஜி அப்பிடி .சொல்லுற, நம்ம கௌசி பொண்ணு தானே “என கேட்க

” இல்லைங்க, எனக்கு எதோ சரியா படல அதுவும் இல்லாம , நந்தினி மேல எனக்கு தனிப்பட்ட கோபம் எல்லாம் இல்லைங்க ஆனா ஏதோ தப்பா இருக்கிற மாதிரி இருக்கு, நம்மக்குஇருக்கிறது ஒரே புள்ளைங்க அவன் நாளைக்கு கஷ்டப்பட்டா நாம பார்த்துட்டு நிம்மதியா இருக்க முடியுமா சொல்லுங்க “ இது ராஜி

” நீ சொல்லுறது சரி தான் ம்மா ஆனா உன் பையன் மனசுல என்ன இருக்குனு நம்மக்கு தெரியனும்ல ஒரு வேலை அவனுக்கு நந்தினியே பிடிச்சு இருந்தா நாம என்ன பண்ண முடியும் சொல்லு” ரகு சொன்னார்

” நாம எடுத்து சொன்ன புரிஞ்சுப்பாங்க ,நீங்க பேசுங்களேன் அவன்கிட்ட “

” சரி பொறு நான் அப்பா கிட்ட இதபத்தி பேசுறேன் சரியா இப்போ நீ நிம்மதியா தூங்கு “

” சரிங்க என அவர் அமைதியா இப்போது படுத்து விட்டார்”

ரகுராம் தான் இதை பற்றி தந்தை இடம் எப்பிடி பேசுவது என்று யோசித்தார் “

இவ்வளோ மேட்டார் ஓடுது இந்த கார்த்திக் எங்கே போனான் , எப்பா கார்த்திக்கு எங்கே ப்பா இருக்க சீக்கிரம் இங்கே வா உன் பஞ்சயாத் தான் ஓடுது

நள்ளிரவு நேரம் ,மதுரை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியே உடன் கார்த்திக் நந்தினியே தான் , “ஹே நந்து நான் ஊர்க்கு வந்துட்டேன் என சொல்ல

நந்தினி சந்தோஷத்தில் , ஹே கார்த்தி நாளைக்கு காலையில் தான் வருவேன்னு சொன்னே இப்பிடி திடிருன்னு வந்து நிக்கிற சரி பரவாயில்லை அங்கயே இரு நான் இதோ வந்துட்டேன் என்று அவள் சொல்ல

அதை கேட்டு கார்த்திக் , வேண்டாம் நந்து நீ ஏன் சிரமம் படுற அதுவும் இந்த நேரத்துல என அக்கறையாய் சொல்ல

ஐயோ கார்த்தி ,உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணி எவ்வளோ நாள் ஆச்சு நீ அங்கயே இரு நான் வந்துட்டேன் சரியா என சொல்லிவிட்டு போனை வைத்தாள்

கார்த்திக் நந்தினிடம் பேசிவிட்டு ஏர்போர்ட்டைவிட்டு வெளியே வந்தவன் அந்த இரவு நேர குளிரை அனுபவித்தபடி காத்து கொண்டு இருந்தான்.

நந்தியின் சொல்லியது போல் சீக்கிரமாகவே வந்து இறங்கினாள் தனது ச்கொடாவில் இருந்து, கார்த்தி என ஓடி சென்று அவனை அணைக்க போக

கார்த்திக் ஒருநிமிடம் அதிர்ந்து சுற்றிலும் பார்த்து, நந்தினி அங்கயே நில்லு என்ன பண்ணுற நீ ஓர் அடி பின்னால் நகர்ந்து போனான்

அவனது பேச்சில் முகம் சுளித்த நந்தினி , அப்பிடியே நின்று கார்த்தி , நான் உன் அத்தை பொண்ணு அதுவும் இல்லாம கல்யாணம் வேற பண்ணிக்க போறோம் ஜஸ்ட் ஒரு ஹக் அதுக்கு ஏன் இப்பிடி ரியாக்ட் பண்ணுற நீ சொல்ல

நீ சொல்லுறது எல்லாம் சரி தான் நந்து பட் இது ஒன்னு வெளிநாடு கிடையாது அதுவும் மணி என்ன ஆச்சுனு பாரு உன்னோட இந்த நேரத்துல ஜஸ்ட் ஒரு ஹக் பார்க்கிறவங்களுக்கு நம்மள காட்சி பொருளா மாத்திடும் சோ கிளம்பலாமா என நீண்ட விளக்கம் குடுத்துவிட்டு கார்த்திக் தனது லக்கேஜ் எல்லாம் காரில் அடிக்கி விட்டு முன் சீட்டில் ஏறி அமர்ந்தான்

அவனது பேச்சில் நந்தினி தான் எரிச்சலில் மனதுக்குள் இவனை திட்டியே படி டிரைவிங் சீட்டில் அமர்ந்து காரை கிளப்பினாள் ,

நேரா வீட்டுக்கு தானே போறோம் என கார்த்திக் கேட்க

இல்லை கார்த்தி நாம இப்போ ஒரு பார்ட்டிக்கு போறோம் என நந்தினி பேசியது போதும் என டிரைவிங்கில் கவனம் செலுத்தினாள்.


hai friends itho second epi potuten padichutu unga comments sollunga makkale
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

22921


கொஞ்சம் நேரம் தூங்கலாம் என சீட்டில் சாய்ந்தவன் அவளது பார்ட்டிக்குப் போறோம் என்கிற வார்த்தை அதிர்வை கொடுத்தது நாம சின்ன வையசுல பார்த்த நந்தினியா இவள் பிறகு தனது ரொலெக்ஸ் வாட்சில் நேரத்தை பார்த்து ,” நந்தினி இப்போ அங்கே நாம அவசியம் போகனுமா மணி பாரு என்ன ஆச்சுன்னு “கேட்க

” கார்த்திக், நாம போறது க்ளப்க்கு இந்த டைம் தான் சரியா வரும் நீ பேசாம வா நாம போறோம் அவ்வளோதான் இன்னைக்கு என்னோட எல்லா பிரெண்ட்ஸ்க்கும் நீதான் என் உட்பி சொல்ல போறேன் ஐ ஆம் சோ எக்ஸ்சைடேட்”

” எனக்கு பிடிக்கல, நந்து வா நாம நேர வீட்டுக்கே போகலாம். வீட்டுல நாம காக எல்லாரும் காத்துகிட்டு இருப்பாங்க..”என அவன் பொறுமையா சொன்னான்.

” அவனை விச்சித்திரமாய் பார்த்த நந்தினி, கார்த்தி இடம் நீ மும்பையில தானே இருந்த அங்கே இது எல்லாம் சகஜம் தானே ஆனா நீ என்னனா இப்பிடி பேசுற, பார்ட்டி போறது என்ன தப்பா” என நந்தினி நக்கலாக கேட்காள்



” அவளின் இந்த கேள்வி அவனை முகம் சுழிக்க வைத்தது இருந்தும் எங்கே தனது கோபம் அவளை காயே படுத்தி விடுமோ என்று முடிந்த அளவு பொறுமையா பேசினான், ‘ எங்கே இருந்தா என்ன நந்து நம்ம கலாச்சாரமன்னு ஒன்னு இருக்கே அதை மறக்க முடியுமா என்ன, அதுமட்டும் இல்லை நான் மும்பை போனது படிக்க . வேற எதுக்கும் இல்லை புரியுதா உனக்கு வேணும்ன்னா நீ போ நான் இங்கயே இறங்கிக்கிறேன் ,நீ காரை நிறுத்து என அவன் கண்டிப்புடன் சொல்ல

” ச்சே ,இவன் எல்லாம் என்ன மனுஷன் சுத்த இவனா இருப்பான் போல என மனதுக்குள் கார்த்திகை வறுத்து எடுத்தாள், நந்தினி, இவன இப்பிடியே விட்டாள் நம்ம வேலை ஆகாது கல்யாணம் முடியட்டும் அப்புறம் இருக்கு கச்சேரி இவனுக்கும் இவன் தாத்தாக்கும் என நினைத்து விட்டு சரி கார்த்தி நீ சொல்லிட்டா மறுப்பேச்சு கிடையாது நாம வீட்டுக்கே போகலாம் என அவனிடம் கொஞ்சலாக பேசிவிட்டு காரை அவன் வீட்டுக்கு திருப்பினாள்


பார்ட்டி போகணும்,சொன்ன “என கார்த்தி சந்தேகமாய் கேட்க

” கார்த்திக்கு ஏதும் பிடிக்கலையோ அது இந்த நந்தினி செய்ய மாட்டா போதுமா வாங்க போகலாம் “

அவள் மனதில் வன்மம் வைத்து கொண்டு பழகுவது கூட உணராமல் அவள் மேல் இவன் நேசம் மழையே பொழிந்தான். ”

ஆனால் தன்னோட சுயநலத்துக்காக விரைவில் வேறு ஒரு பெண்ணை பார்த்து இவளே திருமணம் செய்தது வைக்க போறது கார்த்திக்கு தெரியே வரும் பொது இவனின் நிலை என்ன இது ஏதும் தெரியாமல் இவளின் கோரிக்கையின் பேரில் இவனை திருமணம் செய்ய போகும் அந்த பெண்ணின் நிலை என்ன என்பது காலம் தான் பதில்.. சொல்ல வேண்டும்.
இருவரும் சேர்ந்தே வீட்டுக்கு வந்துவிட , கார்த்திக் நந்தினியின் இடம் குட் நைட் நந்து போய் தூங்கு என்று சொல்லிவிட்டு தனது லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு தனது அறைக்கு சென்றுவிட்டான் .

அவன் போவதை பார்த்துகொண்டு நின்ற இருந்த நந்தினி ஒரு முடிவுடன் அவளின் பெற்றோரை பார்க்க சென்றாள்
……………………..


கார்த்திக் வந்துவிட்டான் என்று தெரிந்து விடிந்தும் விடியாததுமாய்
கௌசல்யா மகள் சொன்னது போல் தனது திட்டத்தை செயல் படுத்த தொடங்கினார்,

எழுந்து வந்து பார்த்தவர் அங்கே கிழே
அந்த பெரியே வீட்டின் ஹாலில் வேதாச்சலமும் அவரது மகனும் ரகுவும் அமர்ந்து பிசினஸ் பத்தி பேசிக்கொண்டு இருந்தார்கள், கார்த்திக் பயண களைப்பில் தனது அறையில் உறங்கிக்கொண்டு இருந்தான், ஓஹோ எல்லாரும் இங்க தான் எல்லாரும் இருக்காங்களா அப்போ இதுதான் சரியான நேரம் இப்போவே அப்பாவிடம் பேசிட வேண்டியது தான், என அவர் தந்தையிடம் எப்பிடி பேச வேண்டும் என்று யோசித்தபடி , வேதாச்சலத்தை நெருங்கும் பொழுது வராத கண்ணீரை வரவழைத்து அவரிடம் சென்று அப்பா.. என அழ ஆரம்பித்தார் , இப்பிடி காலங்காத்தால அழுத படி தந்தை இடம் வந்த மகளை பார்த்து அந்த பெரியவருக்கு கடுப்பே வரவில்லை இருந்தும் என்ன சொல்ல வருகிறாள் என்று தெரிந்துகொள்ளுவோம் என்று என்ன கௌசி எதுக்கு இப்போ ஒப்பாரி வைக்கிற என கேட்டவரின் குரலில் ஒருவித அழுத்தம் இருந்தது

அவரின் குரலில் இருந்த அழுத்தம் கௌசியின் மனதில் பயத்தை கிளப்பியது இருந்தும் தன்னுடையே காரியம் ஆக வேண்டுமே அதற்காக சமாளித்து, அது வந்து அப்பா, நீங்க சொன்ன மாதிரி கார்த்திக் வந்தாச்சு இன்னைக்கே ஜோசியரை வர சொல்லி பொருத்தம் பாருங்க அப்பா என கெஞ்ச .

பெரியவர் மகளின் செயல் புரிந்து கொண்டு, சரிம்மா நான் இப்போவே ஜோசியர் கிட்ட பேசிடுறேன் , இன்னைக்கே நாள் குறிச்சுடலாம் சொல்லிவிட்டு அவரை ஜோசியருக்கு அழைத்து பேசினார் பிறகு மகளிடம் நாளைக்கு வரேன்னு சொல்லி இருக்காரும்மா ,இப்போ சந்தோசமா உனக்கு போ... போய் வேலையே பாரு என மகனிடம் இன்றையே மீட்டிங் பத்தி பேச ஆரம்பிக்க
கௌசி அந்த இடத்தைவிட்டு சந்தோசமாய் போனார் ,ஆனால் ரகு அப்பிடியே அதிர்ச்சியில் அமர்ந்துவிட்டார், தந்தையிடம் இதை பற்றி பேசவேண்டும் என்று யோசித்துகொண்டு அவர் இருக்க தங்கை அடுத்த கட்டதிற்க்கே சென்ற்விட்டாள் என்று யோசிக்கும் போது அவருக்கும் இப்போ நடப்பது ஏதும் சரியாக படவில்லை, தந்தையிடம் பேசவேண்டும் என அவர் ஆரம்பிக்க அதற்க்குள் பெரியவர் , ரகுவிடம், இன்னைக்கு மீட்டிங்க்கு க்ளைண்ட் சீக்கிரம் வந்துவிடுவாங்க நீ இப்போவே கிளம்பு மத்தத அப்புறம் பேசிக்கலாம் என்று எழுந்து சென்றுவிட்டார்

தந்தை பிடி கொடுக்காமல் போய்விட்டதை பார்த்தவருக்கு மனைவி சொன்னதுபோல் தாமதம் ஆகிவிட்டதோ என்று உரைத்தது. அவர் ஆபீஸ் கிளம்பியே படி பார்வையாலையே மனைவியே தேட, ராஜி கண்ணீருடன் பூஜை அறையில் தன் பிள்ளைக்காக வேண்டிக்கொண்டு இருப்பது தெரிந்தது, மனைவியின் கவலையே கண்டு ரகுவும் ஒரு முடிவுடன் ஆபீசுக்கு கிளம்பி சென்றார்

விசையத்தை கேள்வி பட்ட சங்கர் இது தான் தனக்கு கிடைத்த முதல் வெற்றி என்று அன்று மாலையே தனது பிசினஸ் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடினார்.

ஆனால் பெரியவர் செய்ய போகும் காரியத்தில் சங்கரை விட நந்தினி என்ன முடிவு செய்ய இருக்கிறாள் என்பது பெரியவர்க்கு தெரியே வரும் பொது அவர்களின் நிலை என்ன.

இது தெரியாமல் கார்த்திக் தூங்கி எழுந்து அன்றியே பொழுதை தன்னுடையே அறையிலையே கழித்தான்.

நந்தினி நாளை என்ன நடக்க போகிறது என்று சந்தோஷத்தில் மிதந்து கொண்டு இருந்தாள்

ராஜி, கவலையுடன் தன்னுடையே அறையிலையே முடங்கிவிட்டார்.


அடுத்தநாள் காலை.
ஜோசியர் வீட்டுக்கு வந்தார் வேதாச்சலத்தை நலம் விசாரித்துவிட்டு சொல்லுங்க வேதாச்சலம் திடிருன்னு என்ன வர சொல்லி இருக்கீங்க என்ன விசேஷம் .என அவர் கேட்க

கொஞ்சம் இருங்க ஜோசியரே , என தன் மகளிடம் திரும்பி எல்லாரையும் வர சொல்லும்மா என சொல்லிடுவிட்டு ஜோசியரிடம் பொதுப்படையாக பேசிக்கொண்டு இருக்க

கௌசல்யா ,தன்னுடையே கணவர் மற்றும் மகளை அழைக்க சென்றுவிட்டார்

வீட்டில் பேச்சு குரல் கேட்டு ராஜி - ரகுவும் வந்து சேர சரியாக இருந்தது

தந்தை இடம் பேச வேண்டும் என்று ரகுராம் எவ்வளோ முயன்றும் அவர் பிடிகுடுக்காமல் நழுவிட்டார் இப்போது எல்லாம் அவர் கையே மீறி போய்விட்டது என தோன்றியது ரகுராமுக்கு .


அடுத்து அடுத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடினர் ஹாலில்

கார்த்திக் நந்தினியையும் சேர்ந்து கைகோர்த்த படி நின்றார்கள் இருவருக்கும் . தான் கண்ட கனவு நினைவாக போறது என்கிற சந்தோஷம்

ஆனால் ராஜி தன் கணவனை பார்க்க,அதை பார்த்து நான் பார்த்துகிறேன் என்று தந்தை பக்கம் திரும்பி அப்பா என்ன இது இப்பிடி திடிர்ன்னு ஜோசியர வர சொல்லி இருக்கீங்க.”

பெரியவருக்கா தெரியாது. மருமகளின் மனதின் எண்ணத்தின் ஓட்டம் இருந்தும் மகன் இடம். ” கௌசல்யா, ஆசை படுறா ரகு அவ பொண்ண நம்ம கார்த்திக்கு முடிச்சு வைக்க “

” அது சரி அப்பா. ஆனா இதுல கார்த்திக் விருப்பம்..” என ரகு இழுக்க

இப்போது சங்கர் இடையில் புகுந்து.

” அது என்ன மச்சான் இப்பிடி கேட்டிங்க, ரெண்டும் உயிரா விரும்புதுங்களே அங்கே பார்த்தாலே தெரியலையா… என சிரித்து கொண்டே சொல்ல..”

” வேறு ஒரு சமயமா இருந்தா ரகு நன்ற பேசி விட்டுற்பாறு தந்தையின் முன்னால் அடிக்கி வாசிக்க வேண்டியே நிலை ஆகிவிட்டது என்று. அவரை பார்த்து . முறைத்து விட்டு.. கார்த்திக் பக்கம் திரும்பி..

” என்ன கார்த்திக். மாமா எதோ சொல்லுறாரு நீயும் நந்தினியும்.. ‘என ரகுராம் கேட்க

” அப்பா மாமா சொல்லுற மாதிரி எனக்கு நந்தியே பிடிச்சுருக்கு அப்பா.. என தன்னோட முடிவை சொல்லிவிட்டான் அவன் “

” பிடிக்கிறதுக்கும் காதலுக்கும் வித்தியாசமா தெரியல இந்த பையலுக்கு, எல்லாம் இவன் வாங்கி வந்த வரம் ”என ரகு மனதுக்குள் நினைத்து விட்டு

மீண்டும் தந்தையே பார்த்து.. நீங்க ஜாதகம் பாருங்க பா… என பின் வாங்கி விட்டார், அவருக்கு நடப்பதெல்லாம் கனவு போல் தான் இருந்தது ‘



” வேதாசலம்,ஜோசியர் இடம் ” நீங்க பொருத்தம் பாருங்க ஜோசியரே.”என சொல்ல


ஜோசியரும்” ஜாதக கட்டங்களை கூட்டி கழித்து பார்த்தார் ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல..ஐந்தாறு ,முறை முறை பார்த்து

வேதாச்சலத்தை. பார்த்து பெண்ணோட ஜாதகம் அமோகம் ஆனா அந்த பெண்ணுக்கு இந்த பையனோட வாழ தான் குடுத்து வைக்கல வேதாசலம் என சோகமாய் சொல்ல..”

கௌசல்யா.. மற்றும்…… சங்கர். அதிரிச்சி உடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார் .

” என்ன சொல்லுரிங்க ஜோசியரே அப்பிடி என்ன ஆச்சு ஏதும் பரிகாரம் இருந்த சொல்லுங்க செய்துடலாம் என் பேரன் ஆசை பட்டுதான் செய்ய வேண்டியது என் கடமை என தாத்தா மேலும் எடுத்து சொல்ல

கழிக்கிற மாதிரி இருந்தா நானே சொல்லிடுவேனே ஆனா தம்பிக்கும் இந்த பொண்ணுக்கும் கல்யாணம் செய்து வச்சா தம்பிக்கு முதல் தாரம் நிலைக்காது அப்பிடின்னு ஜாதகம் சொல்லுது மேலும் கல்யாணம் செய்து வச்சா அப்புறம், பெண்ணை தூக்கி எமன் கைல கொடுத்துற வேண்டியது தான் காலம் காலமா உங்க குடும்பத்துல நடக்குற எல்லாம் நல்ல காரியத்துக்கும் நாள் பார்த்து சொல்லுறவன் என்ன நம்பினா நம்புங்க இல்லை நம்பிக்கை இல்லை என்றால் வேற ஒருத்தர் கிட்ட கூட போய் காட்டிக்கலாம் ஐயா நான் கிளம்புறேன் “

” இருங்க ஜோசியரே இப்போ யாரு உங்கள என்ன சொன்னா நீங்க சொல்லுறது நாங்க நம்பாமல் என்ன செய்ய போறோம் வேற என்ன தான் இதுக்கு வழி.

” அது நீங்க தான் முடிவு பண்ணனும் என சொல்லிவிட்டு அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன் ஐயா என அவர் கிளம்பி விட..”

அனைவரும் மனதில் இருந்த எண்ணங்கள் இப்போது வேற விதமாக இருந்தது.. .

நந்தினி . “என்ன இது ஜோசியர் இப்பிடி சொல்லிட்டு போய்டான் “

” தனக்கு இனி நந்தினி கிடைக்க மாட்டாளே என்கிற எண்ணம்..கார்த்திக்கு தோன்றியது”

ரகுராம்.. ராஜலக்ஷ்மிக்கு இப்போதைக்கு இந்த கல்யாணம் நடக்க போறது இல்லை என்கிற எண்ணம் சந்தோசமும் மற்றும் தன் பையனுக்கு தாரம் ரெண்டு என்று சற்று.. வேதனையை இருந்தது..



கௌசல்யா சங்கர் வேறொரு மனநிலமையில் இருந்தார் மனைவியின் காதில்மெல்ல என்னடி இப்பிடி ஆகிருச்சு இப்போ என்ன பண்ணுறது.என சங்கர் கேட்க

எனக்கு என்னங்க தெரியும் நீங்களே பார்த்து எதையாவுது செய்யுங்க, என்று கௌசல்யா சொல்லிவிட

அடுத்து என்ன செய்யலாம் என்று சங்கர் யோசிக்க துடங்கிவிட்டார்

எல்லாரையும் ஒரு முறை பார்த்த வேதாசலம், தன் பேரனை பார்த்து என்ன ப்பா கார்த்தி நீ என்ன சொல்லுற,


அதை கேட்டு ” தாத்தா, நான் இதுல சொல்ல என்ன இருக்கு நந்தினி இல்லன்னா எனக்கு வேற வாழ்கையே தேவை இல்லை தாத்தா..”

நந்தினி, கார்த்திக்கை அதிர்ச்சியுடன் பார்த்து மனதுக்குள் ” அடப்பாவி அதுக்காக உன்னை கட்டிக்கிட்டு நான் சாகனுமா.. “என நினைத்துகொண்டாள்

மேலும் அவனே பேசினான் , ஆனா எனக்கு , இப்பிடி ஒரு பிரச்சனை இருக்கிறது நால.. . நந்தினியே நல்ல இடமா பார்த்து முடிங்க ஆனா எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி விட்டு தன் அறைக்கு போய் விட்டான்

நந்தினி.. “அப்பிடி சொல்லுடா என் ராசா. இதுக்கு வேற என்ன வழி என யோசித்தாள் அவள் பிறகு எதோ ஒரு யோசனை தோன்றிவிட உடனே அதை கார்த்திக் இடம் சொல்லி சம்மதிக்க வைக்க வேண்டும் என்று அவளும் எழுந்து அவன் அறைக்கு சென்றாள்”






hai friends kathai romba mokkaiyaa pogutho ,
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்






"அங்கே, கார்த்திக் தன் தலையே பிடித்த படி அமர்ந்தது இருந்தான் மனதுக்குள் இப்பிடி ஒரு நிலை தனக்கு வரும் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை தன்னுடையே காதல் இவ்வளோ சீக்கிரத்தில் முடிந்துவிடும் என்று அவனால் யோசிக்க கூட முடியவில்லை"

நந்தினி அவன் அருகில் வந்து அமர்ந்தவள் மெல்ல " கார்த்திக்........."என அழைத்தாள்
அவன் நிமிர்ந்து பார்க்காமல் " சொல்லு நந்தினி.. "என சொல்ல

" ஏன் இப்பிடி சொல்லிட்டு வந்துட, கார்த்திக் "நந்தினி கேட்க

" பின்ன என்ன நந்தினி உன்னை இழக்க என் நால முடியாதுஅதே மாதிரி உன் இடத்துல வேற யாரையும் வச்சும் பார்க்க முடியாது என்னால அது தான் உனக்கு கல்யாணம் முடிக்கசொன்னேன்.."என்று கார்த்திக் வேதனையுடன் அவளிடம் சொன்னான்.
அதை கேட்ட நந்தினி கோபத்தில் பேசுவது போல்" எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு நீ தியாகி பட்டம் வாங்க போறியா கார்த்திக்.. . என்னால மட்டும் உன்னை மறந்து வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க முடியும்ன்னு நீ நினைக்கிறியா அது தான் இல்லை கார்த்திக் நான் ஒரு யோசனை சொல்லுறேன் அது சரியா வரும் நீ சரின்னு சொன்னா போதும் வீட்டுல நான் பேசிக்கிறேன் என்ன,
அவர்களது பிரச்சனைக்கு தீர்வு இருக்கு என்று தெரிந்ததும் கார்த்திக் சந்தோசமாய் நந்தியின் கையே படித்த படி" நிஜமாவா சொல்லுற, அப்பிடி என்ன யோசனை, சொல்லு டாஎதுனாலும் நான் செய்யறேன்"


"தன்னுடையே திட்டத்தை நந்தினி சொல்ல ஆரம்பித்தாள்
[இன்று கோவிலில் விஸ்மையா விடம் என்ன சொன்னாலோ அதையே தான் இவன் இடம் சொல்லி முடித்தாள்"]


" கார்த்திக் அவள் சொல்லும் யோசனையே கேட்டு கோபத்தில்" போதும் நந்தினி நிறுத்து இதுக்கு மேல பேசினா நான் மனுசனாஇருக்க மாட்டேன் போயிட்டு இங்க இருந்து என்ன கொஞ்சம் நேரம் தனியா இருக்க விடு போ என கத்த

"கார்த்திக்.." என நந்தினி மேலும் ஏதோ சொல்ல போக

" உன்னை போக சொன்னேன் நந்தினி " அவன் கோபத்தில் உறுமினான்
அவனை சிறிது நேரம் பார்த்துவிட்டு , மனதுக்குள் உன்னை இதுக்கு சம்மதிக்க வைப்பேன் கார்த்திக் சம்மதிக்கவைக்கலைனா நான் நந்தினி இல்லை என நினைத்துவிட்டு அந்த அறையே விட்டு வெளியே வந்தாள் "

அவள் சென்றுவிட்டாள் என உணர்ந்த கார்த்திக்." . ச்சே. என்ன எல்லாம் சொல்லிவிட்டாள் கல்யாணம்னா என்ன சும்மாவா, நந்தினி சொன்னதை நினைத்து அவனுக்குள் கசந்து போனது "

" வெளியே வந்த. நந்தினி.. சும்மா இருந்தா அது அவளுக்கு அழகு இல்லையே., தான் நினைத்த
விஷயத்தை எல்லோர் முன்னாடி சொல்லிவிட்டால்
விஷயத்தை கேட்ட அனைவரும் ஒவ்வரு மனநிலைமையில் இருந்தார்கள்


" ராஜி தன் மகன் விஷயத்தில் யாரும் எதுலையும் தன்னை ஒரு வார்த்தை கேட்க வில்லை
என்று வேதனையுடன் எல்லாவற்றையும் பார்த்துகொண்டு இருந்தார்."

இங்கே வேதாசலம் அவருக்கு தான் செய்த வேலை சரியாக அதோட விளைவை காட்டுது என்று தோன்றியது


தன் மகளை மற்றும் அவளது கணவர் மற்றும் அவள் பெற்ற மகளை பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும் என்பதால் இதில் எப்பிடியாவுது கார்த்திக்கை விடுவிக்க அவர் செய்த சின்ன சதி தான் இது, பேரனுக்கு ஏற்ற பெண்ணை தேடி கண்டுபிடித்து அவன் வாழ்வை காப்பாற்ற அவரின் சின்ன முயற்சி
நந்தினி இவ்வாறு தான் யோசிப்பாள் என்று அவருக்கு முன்பே கணித்துவிட்டார், அதனால் கார்த்திக் வந்த உடனே தைரியமாக தன் திட்டம் படி காயே நகத்தினார்.

இதோ இன்று அவர் நினைத்ததும் நடந்துவிட்டது..

நந்தினி, பணத்துக்காக கார்த்திக்கு இரண்டாம் தரமாக கூட வர சம்மதித்துவிட்டாள் ஆனால்
கௌசல்யா தான் நந்தினி இடம் ஏண்டி உனக்கு பைத்தியமா பிடிச்சு இருக்கு இப்பிடி பேசிட்டு வந்து இருக்க மாப்பிள்ளை கிட்ட.., என கோபத்தில் கத்தினாள் , தாய் அவளுக்கு பயம் எங்கே தன் பெண் ஏமாந்து போய்விடுவாளோ என்று


அம்மா நீ சும்மா இரு , நான் தெரிஞ்சு தான் சொல்லிட்டு வரேன் , எனக்கு கார்த்திக் கூட ரொம்ப வருஷம் வாழனும் அம்மா அதுக்கு தான் இந்த யோசனை சொன்னேன், இது நந்தினி
எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த ராஜி ,ஏன்ம்மா நந்தினி.. என எதோ கேட்க போக..


அதற்குள் வேதாசலம் நடுவில் புகுந்து நீ இரும்மா ராஜி, நந்தினி.... இது தான் உன் முடிவா, நல்லா யோசிச்சிக்கோ அப்புறம் வருத்த படகூடாது ஆமா இதுக்கு கார்த்திக் சம்மதம் சொல்லிடானா.என கேட்க

" எப்பிடி தாத்தா அதுக்குள்ள சம்மதம் சொல்லுவாரு நாம தானே பேசி அவருக்கு புரிய வைக்கணும் என சாதாரணமாக சொன்னால் நந்தினி

" ஆமா ஆமா நாம தான் புரியே வைக்கணும்..என பெரியவரின் குரலில் இருந்த நக்கலை அவள் கவனிக்கவில்லை..."

தினமும் நந்தினி அவன் இடம் பேசியே அவன் மனதை கரைக்க.. முயன்றால் ஆனால் அவனோ அவள் இடம் இருந்து மெல்ல-மெல்ல விலக ஆரம்பித்தான், இப்பிடித்தான் இவர்களின் விவகாரம் கிணற்றில் போட்ட கல் போல் இருந்தது, இப்பிடி தான் அன்றைக்கும் கோவிலில் வைத்து பேசலாம் என்று அவள் கார்த்திக்குடன் போன பொது தான் விஷ்மையாவை பார்த்து விசயத்தை சொன்னாள் .

நாட்கள் வேகமாக நகர அன்று நந்தினிக்கு தன்னுடையே திட்டத்திற்கு துருப்பு சீட்டாய் விஷ்மையா
சிக்க போவது தெரியாமல் அவள் வேலை விசையமாக வெளியே செல்கிறேன் என்று தாயிடம் சொல்லிவிட்டு தன்னுடையே மருத்துவ சம்பந்தமானா கோப்புகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.[ விதி தன்னுடையே ஆட்டத்தின் முதல் கட்டத்தை விஷ்மையாவிடம் இருந்தே சிறப்பாக ஆரம்பித்து வைத்தது ]
************
கார்த்திக் வந்த உடன் தந்தை உடன் சேர்ந்து அவரகளது கம்பனிக்கு செல்ல ஆரம்பித்து இருந்தான் ,ஆபீசில் எல்லா வேலையும் தன் தலைமையில் எடுத்து செய்ய ஆரம்பித்தான் , அவனுக்கு நந்தினியின் திருமண பேச்சில் இருந்து தப்பிக்க வேண்டும் அதற்காகவே நாள் முழுவதும் கம்பனியே கதி என்று கிடந்தான்.


இங்கே வீட்டில் நந்தினி கார்த்திக்கு காக தீவிரமாக அவள் எதிர்பார்ப்பின் படி பெண்ணை தேடி அலைந்தாள்.வேதாசலம் நந்தினியின் வேகத்தை பார்த்து அசந்து தான் போனார் என்று சொல்லவேண்டும்.

நந்தினி மீண்டும் ஒருமுறை கார்த்திக்கிடம் பேசி பார்க்க வேண்டும் என்று ஒவ்வரு நாளும் அவனுக்காக காத்திக்கிட்டு இருக்க அவனோ அவளிடம் சிக்காமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்தான். இன்று எப்பிடியாவுது அவனிடம் பேசிவிட வேண்டும் அவனுக்காக ஹாலில் காத்து கிடந்தாள்.

கார்த்திக்கும் அவள் எதிர்பார்த்தது போல் வந்தான் அவளை அங்கே பார்த்து ஏதும் சொல்லாமல் அவளை கடந்து செல்ல முயன்ற போது

நந்தினி, அவனை வழி மறைத்து , கார்த்திக் ஏன் என்கூட பேசவே மாட்டேங்கிற , எல்லாம் பின்னால நாம சந்தோசமா இருக்க தானே பண்ணுறேன் நீயே என்னை புரிஞ்சக்களைன்னா வேற யாரு என்ன புரிஞ்சுப்பா சொல்லு கார்த்தி, என நந்தினி உருகி –உருகி பேச

கார்த்தி அவளது பேச்சுக்கு பதில் ஏதும் சொல்லாமல் முறைத்து மட்டும் பார்த்துவிட்டு நகர்ந்து விட்டான்



காலை

கார்த்திக் எந்த வேலை செய்யே தோன்றாமல் அப்பிடியே ஹாலில் எதோ யோசனையில் அமர்ந்து இருக்க

அப்போது தான்அங்கே வந்த வேதாசலம் தன் பேரனை அழைத்து ” எப்பா கார்த்தி ஒரு சின்ன வேலை நம்ம சொந்தகாரவங்க தான் உனக்கு பெரியம்மா முறை வரும் உனக்கு அவங்கள ராகவேந்திரன் ஹோச்ட்பிடல சேர்த்து இருக்காங்களாம் நான் கொஞ்சம் வேற வேலையா வெளியே போறேன் பா நீ போயிட்டு அவங்கள பார்த்துவிட்டு மட்டும் வா ப்பா என சொல்ல..

” சரிங்க தாத்தா சொல்லிவிட்டு அவன் கிளம்பினான்
அவன் கூடவே நந்தினியும் நானும் வரேன் கார்த்திக் என்று கிளம்பிவிட்டாள், அவன் மறுத்தும்.. வேற வழி இன்றி அவளை அழைத்து சென்றான் தன்னோடு


ராகவேந்திரா ஹோச்பிடல், மதுரை மாநகரில் இருக்கும்பெரியே தனியார் மருத்துவமையில் இதுவும் ஒன்று , இங்கே தான் புற்றுநோய்க்கான பிறவியில் இந்த மாததிற்க்குகான பரிசோதனைக்கு விஸ்மையா வந்து இருந்தாள், அவளது பார்வை தன்னை யாரும் பின் தொடர்கிறார்கள இல்லை தெரிந்தவர் யாரும் வருகிறார்களா என பயத்துடன் அங்கும் இங்கும் பயத்தில் அலைபாய்ந்து கொண்டு இருந்தது , மனதுக்குள் சீக்கிரம் டாக்டர பார்த்துட்டு கிளம்பிடனும் கடவுளே என ஒரு வித அவஸ்தையுடன் அமர்ந்து இருந்தாள்


கார்த்திக் மற்றும் நந்தினி ஹோச்பிடளுக்கு வந்து தங்கள்உறவினரை
பார்த்துவிட்டு, வெளியே வரும்,போதும் தான் எதிர்பாராமல். விஸ்மயாவை நந்தினி அங்கே பார்த்துவிட்டாள், ஹே.. மாயா என்று அவளை கத்தி அழைத்து விட…
அவள் அருகில் நின்ற கார்த்திக் , ” ஹே , என்ன பண்ணுற… நீஅறிவு இருக்கா இல்லையா இது ஹோஸ்பிடல் இப்பிடி கத்துற


“ சாரி கார்த்தி, அதோ அங்கே என் ப்ரெண்ட் அங்கே நிக்கிறா அவள பார்த்த உடனே என்ன மறந்து.. கத்திட்டேன்..”என நந்தினி சொல்ல

”அவங்க ஏதும் வேலை விசையமா வந்து இருக்கலாம் அதுக்குன்னு இப்பிடியா இடம் பார்க்காம கத்துவ.. “என கார்த்திக் நந்தினியே அதட்டினான்

தன் தவறை உணர்ந்து
” கார்த்திக் ப்ளீஸ் நாம அவ கிட்ட போகலாமே…என கெஞ்சினாள்

” சரி வா நாம போய் பார்த்துட்டு வரலாம்..என கார்த்திக்நந்தினியே அழைத்து கொண்டு மாயா இருந்த பிரிவுக்கு சென்றான்

அப்போது தான் நந்தினி அது கன்செர் பிரிவு என்பதை கவனித்தாள் மனதுக்குள் மாயா இங்க என்ன பண்ணுறா என்றுநினைத்த படி அங்கே நின்று அவள் வரவுக்கு வெளியே காத்து கொண்டு இருந்தால் கார்த்திக் உடன்..

தனது செக் அப் முடிந்து மாத்திரைகள் மட்டும் மெடிக்கல்ரிப்போர்ட் உடன் வெளியே வந்தவள் அங்கே நந்தினியே கண்டுஅதிர்ந்து நின்றாள், இவள் எப்பிடி இங்கே,
பிறகு, சுதாரித்து..” ஹே நந்தினி நீ என்ன பா இங்க ஒரு நிமிஷம்இரு இதோ வந்துறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்று டாக்டர் இடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள்…

“அதை நான் கேட்கணும், நீ இங்க என்ன பண்ணுற அதுவும் கேன்சர்” என சந்தேகமாக விஸ்மையாவை பார்த்து நந்தினி கேட்க

கடவுளே இவ எப்பிடி இங்க,” அது ப்ராஜெக்ட் விஷயமா பேசிட்டு போலாம்ன்னு வந்தேன் என தடுமாறியே படி சொன்னால்

” போய் சொல்லாத மாயா நான் விசாரிச்சுட்டேன் இப்போ நீ சொல்ல போறியா இல்ல அப்பாக்கு போன போட்டு, கேட்கவா.. என குரல் அஉயர்த்தி ஒரு பொய் சொல்ல

நந்தினி அப்பா என்று சொன்ன உடன் விஷ்மையா அங்கே கிடந்த சேரில் சரிந்து அமர்ந்து உடைந்து அழ ஆரம்பித்துவிட்டாள். அவ்வளோ நேரம் போனில் எதையோ பார்த்துகொண்டு இருந்த கார்த்திக்
ஏன் இப்பிடி அழுகிறாள் என நிமிர்ந்து பார்த்தவன் ,மனதுக்குள் இவள் கோவில்லபார்த்த பெண் ஆச்சே, இவள் எப்பிடி இங்கே பிறகு அவள் அழுவது பொறுக்காமல் நந்தினி இடம் நந்து பாரு உன் நால அவங்க இப்போ அழறத முதல அவங்கள அழைச்சுட்டு கிளம்பு வெளியே போய் பேசிக்கலாம்
இங்க நின்னு பேச வேண்டாம் அவன் சொன்ன உடன் என சுற்றிலும் பார்த்தபடி சொன்னான். அவனுக்கு விஸ்மையா எல்லோருக்கும் கட்சிபொருள்ஆவது பிடிக்கவில்லை

நந்தினி, அங்கே கிடந்த சேரில் அமர்ந்து அழுது கரைந்து கொண்டு இருந்த தோழியின் தோளில் கை வைத்து சரி சரி மாயா அழாத வா வெளியே போய் பேசலாம் என விஸ்மாயாவை அழைத்து கொண்டு.. அந்த ஹோச்பிடல்
எதிரில் இருந்த ஒரு காபி ஷாப்க்கு சென்றார்கள் ,அங்கே நந்தினி மாயாவுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க.

நந்தினியின் எண்ணம் அறியாமல் மாயாவும் தனக்கும் இருக்கும் பிரச்சனையே ஒன்று விடாமல் சொன்னாள் எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த நந்தினிக்கு
மனதுக்குள் இவள் தான் நம்ம திட்டத்துக்கு சரியான ஆள் , நாமஏன் இவ கிட்ட பேசி , பார்க்க.. கூடாது.. என்று முடிவு எடுத்துவிட்டாள்..

இது ஏதும் அறியாமல் கார்த்திக், கவலையுடன் விஸ்மயாவிடம்என்ன பண்ணுரிங்க இப்போ , ஹெல்த் இப்போ எப்பிடி இருக்கு டாக்டர்ஸ் என்ன சொல்லுறாங்க…”என அக்கறையாய் விசாரித்தான்

” கொஞ்சம் தியங்கியே படி விஸ்மையா அவனுக்கு பதில்சொன்னாள் ” ப்ரமைரி ஸ்டேஜ் தான் சர்ஜரி பண்ணனும்சொல்லி இருக்காங்க சில டெஸ்ட் எடுத்து இருக்காங்க இன்னைக்கு தான் ரிப்போர்ட் வாங்க வர சொன்னங்க அதுக்குதான் வந்தேன் ”

” ஹ்ம்ம் …. எப்போ ஆபரேஷன்.”

” அது.. கொஞ்சம் நாள் கழிச்சு செய்துக்கலாம்ன்னு “என அவள் மேலும் தயங்க
இப்போ நந்தினி.. ” ஏன் நல்ல நாள் ஏதும் பார்க்குறியா என்ன…”

” இல்லை நந்தினி , அக்கா ரெண்டு பேருக்கும் இப்போ தான் கல்யாணம்.. முடிஞ்சது..வளைகாப்பு.. குழந்தை..அது-இதுன்னுஅப்பாக்கு கொஞ்சம் அதிகமா செலவு ஆகிடுச்சு.. இந்தநேரத்துல அப்பா கிட்ட எனக்கு இப்பிடி இருக்குன்னு சொன்னா, தாங்கிக்க மாட்டாங்க அதுவுமில்லாம பணம் நெருக்கடிவந்துற கூடாதே அதுக்கு தான்
இப்போதான் நான் வேலைக்கு சேர்ந்து இருக்கேன் எப்பிடியும் எனக்கு கொஞ்சம் நாளில் ஹைக் கிடைச்சுறும் அதுக்குஅப்புறம் ஆபரேஷன் பண்ணிக்கலாம் இப்போதைக்கு மாத்திரை மட்டும் எடுத்துக்கலாம்னு இருக்கேன் என அவள்சொல்லி முடிக்க..”


நந்தினி, கோபத்தில் ” உனக்கு என்ன பைத்தியமாபிடிச்சுற்க்கு”என கேட்க


” என்ன என்னடி பண்ண சொல்லுற … பணம்வேண்டாமா..”விஷ்மையா கேட்க”
அதுக்காக.. எவ்வளோ நாள் கத்துகிட்டு இருப்ப அதுக்குள்ளஎதாவுது ஆகி போச்சினா என்ன செய்றது “

” விடு என் தலை எழுதுன்னு போக வேண்டியது தான் ஆனா..அப்பாவ கஷ்ட படுத்த எனக்கு இஷ்டம் இல்லை…”என விஷ்மயாவும் பிடிவாதமாய் நின்றாள்

” இரு பெண்களின் பேச்சை கேட்க கார்த்திக் மனதில் மாயாஎன்ன மாதிரி பெண் என்று தான் தோன்றியது… ” சிறுது நேரம் கழித்து அவனே..” நாங்க வேணும்னா பணம் உதவிசெய்யறோம் ஆபரேஷன் பண்ணிக்கலாமே ..”


அதை கேட்ட விஸ்மையா ” ஐயோ வேண்டாம் சார்… கண்டன்வாங்கி தான் நான் நல்லா ஆகணும் இல்லை.. அப்பாவுக்குதெரிஞ்சா ரொம்ப வருத்த படுவாங்க… அதுவும் இல்லாம..அப்பாக்கு கடன் எல்லாம் பிடிக்காது.. “

நந்தினி, ” சரி மாயா . இப்போ என்ன தான் முடிவு பண்ணிர்க்க..”

” ஹ்ம்ம் இப்போதைக்கு இந்த பிரச்சனையே இப்பிடியே விட்டுரலாம் இருக்கேன் .

சரி நந்தினி நேரம் ஆச்சு நான் கிளம்புறேன் இன்னொரு நாள்பேசலாம்.. வரேன் சார்…” வரேன் நந்தினி.. என இருவர் இடம்சொல்லிவிட்டு கிளம்பியே மாயாவை தடுத்து கார்த்திக்…ஒரு நிமிஷம்… நாங்க உங்கள வீட்டுல விட்டுறோம்.. எங்க இவளுக்குதனியாக சென்று ஏதும் ஆகிவிடுமோ என்கிற எண்ணத்தில் கேட்டான்”


” இல்லை பரவாயில்லை சார்.. நானே போயிடுவேன்.”

” இல்லை உங்க ஹெல்த் “

” அது பிரச்சனை இல்லை சார் நான் ஆட்டோல போய்க்கிறேன்என்று சொல்லிவிட்டு விஸ்மையா சென்றுவிட்டாள்…”
ஆனால் நந்தினி அதே இடத்தில அமர்ந்து யோசித்து கொண்டு இருக்க…
அதை பார்த்த…கார்த்திக்… ” என்ன நந்தினி யோசனை எல்லாம்பலமா. இருக்கு…”

” ஹ்ம்ம் எல்லாம் விஸ்மையா பத்தி தான்…”


hai friends ellarum eppidi irukinga, itho kadhal kaatru next episode potachu padichu unga comments sollunga
 
Top