All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நினைவுகளை நே(யா)சிக்கின்றேன் Chapter 1 Posted

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நேசம் – 01


மூளையைப் போல் அதிசயமான வஸ்து வேறில்லை. CSF என அழைக்கப்படும் Cerebrospinal fluid மிதக்கும் இது, நம் உடலின் மொத்த எடையில் இருபது வீதமே உள்ள மூளை நாம் உட்கொள்ளும் உணவில் 80 வீதத்தை எடுத்துக் கொள்கின்றது. இதில் சுரக்கும் நாளமில்ல சுரப்பிகள் செய்யும் வேலைகள் ஆச்சரியத்திற்குரியது.



“இது நல்லதிற்கில்லை, இது போல அடிக்கடி நிகழ்ந்தால் ஒருநாள் முற்று முழுதாக நீ யாரென்பதையே மறந்து விடுவாய்” கண்டிப்புடன் ஒலித்தது டாக்டர் அங்கிளின் குரல்.

முன்னால் இருந்த டாக்டர் அங்கிளையே கண் விரித்துப் பார்த்தாள் பிரனா ‘பேசாமல் மறந்து விடு... மறந்து விட்டால் துன்பமில்லை’ மனதினுள் ஒலித்தது ஒரு குரல்.

“இந்த மருந்துகள் குழந்தை வயிற்றில் இருக்கும் போது பாவிக்க கூடாது. வேறு மருந்து எழுதித் தருகின்றேன். அதை போடு” எழுதி விட்டு மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறே நிமிர்ந்தவர் “நாளை வரும் போது அவனையும் அழைத்தது வா. இல்லை நானே அவனிடம் பேசுகிறேன்” கண்டிப்புடன் கூறினார்.

அவளுக்கு மட்டும் விருப்பமில்லையா என்ன? அவன் வர வேண்டுமே! நேற்று விவாகரத்து கேட்டவன் இன்று எப்படி வருவான். இதில் இதையெல்லாம் அவனிடம் விளக்கி கூறி அழைப்பதை நினைத்தாலே ஆயாசமாய் இருந்தது.

சோர்வாய் வீட்டிற்கு வந்தவளைப் பார்த்த ஹவுஸ் கீப்பர் யோகம்மா அளவாய் சீனி போட்ட பழச்சாறு கொண்டு வந்து கொடுக்க நன்றியுடன் வாங்கிக் கொண்டாள். ஒரு வாய் குடித்து விட்டு அவரை கேள்வியாக நோக்க “கம்பெனியில் ரெய்ட் போகின்றது. அதனால் இன்று வீட்டுக்கு வர முடியாது என்று போனில் கூறினார்” என்றார்.

தன்னை மறந்து எவ்வளவு நேரம் இருந்தாளோ வீட்டின் கடிகாரம் அழகாய் கூவியது. திடுக்கிட்டு நினைவுச் வந்தவளாய் தன் போனை வெறித்துப் பார்த்தாள். சிறிது நேர யோசனையின் பின் சத்யாவுக்கு எடுத்தாள்.

“ஹலோ அண்ணி…”

“அவருடன் பேச முடியுமா? ரெய்ட் எப்போது முடியும்” யோசனையாய் கேட்டாள்.

“ரெய்ட் முடிந்து எப்போதோ போய்விட்டாரே அண்ணி”

“ஓஹ்” என்றவளுக்கு மேலே என்ன பேச என்று புரியாமல் போனை கட் செய்து அவனது தனிப்பட்ட எண்ணுக்கு அழைத்தாள். யோசனை சிதறல்களாய் நான்கு புறமும் ஓடியது.

பிரிட்டிஷ் வாடையுடன் “ஹெலோ” என்றது இனிமையான பெண் குரல்.

நிஜமாகவே அவள் கையிலிருந்து ஃபோன் நழுவி கீழே விழுந்துவிட்டது. இப்போது நேரம் இரவு பத்து மணி இரண்டு நாளாய் கம்பெனியை விட்டு அசையவே முடியவில்லை. இன்று தான் மூச்சு விடவே முடிந்தது. யாராய் இருந்தாலும் எப்போதடா வீட்டிற்கு வருவோம் என்று தான் இருக்கும். ஆனால் அவள் கணவன் வீட்டிற்கு வரவில்லை. மாறாக வேறு யாரையோ தேடிப் போய் இருக்கின்றான்.

அவள் மூளைக்குள் நரம்புகள் எல்லாம் முறுக்கிக் கொண்டன. தலை வலிப்பது போலிருக்க, கண்கள் எங்கோ நிலைகுத்தி வெறித்தது.

இறுக கண்களை மூடி திறந்தவள் ‘என்ன இடம் இது எங்கு இருக்கின்றேன்’ சுற்று முற்றும் பார்த்தாள். திடிரென அந்த இடமே புதிதாய் அந்நியமாய் தென்பட்டது. எந்த விதத்திலும் அறிமுகமான இடம் போல் தெரியவில்லை. ‘வேறு யார் வீட்டிலோ வந்து இருக்கின்றேன் போலவே” என நினைத்தவள் வேகமாய் வாசலை நோக்கி நடந்தாள்.

*****

“யார் ஃபோனில்” கிட்சினில் இருந்து குரல் வர துள்ளித் திரும்பியவள் “ஹேய் ருத்” ஃபோனை அவன் பக்கம் நீட்டி “உனக்கு தான்” என்றாள்.

“என் போனுக்கு நீ ஏன் பதிலளித்தாய்?” சற்றுக் கடுமையாகவே கேட்டான் “யார் அழைத்தது”

“அது டெடி குட்டி என்று வந்தது, நீதான் யாரையுமே பெட் நேம் சொல்லி கூப்பிட மாட்டியே அதான்” அவன் முறைப்பில் குரலில் சுருதி குறைந்தது.

“சி பிரிட்னி, விவாகரத்துக்கு முன் இந்த மாதிரி இரவு நேரத்தில் வீட்டிற்கு அழைப்பது. இது போல் நடந்து கொள்வது எனக்குப் பிடிக்கல. இது இங்கிலாந்து இல்லை, இந்தியா. இங்கே எனகென்று சில பொறுப்புகளும் மரியாதையும் இருக்கு. அதை மீற முடியாது. ஒன்று விவாகரத்து வரும் வரை பொறுமையாய் இரு. இல்லையா இப்போதே நீ போகலாம்” கண்டிப்பான குரலில் கூறியவனையே விழி விரித்து பார்த்தாள் அந்த பிரிட்னி.

அவள் இந்திய அம்மாவிற்கும் இங்கிலாந்து அப்பாவிற்கும் பிறந்தவள். அம்மாவின் கட்டுப்பாடுகள் பழக்க வழக்கங்களில் பெரிதாய் விருப்பம் இருந்ததில்லை. சரியான கட்டுப் பெட்டி என்ற எண்ணமே. இங்கிலாந்தில் சந்தித்த சில இந்தியர்களின் குணமும் அம்மாவுடன் ஒத்துப் போக அவர்களிடமிருந்து விலகியே இருந்தாள்.

அவனைக் காணும் வரை இந்திய ஆண்களை பிடிக்காது. அவனைப் பார்த்த பின் எந்த ஆணையும் பிடிக்கவில்லை. அவன் லண்டனில் அவள் படித்த அதே யூனிவெர்சிட்டியில் எம்பிஏ படிக்க வந்த நாளில் இருந்தே தெரியும். அவன் ஆளுமை, கம்பீரம், பெண்களைக் கண்டு வழியாத குணம் என அவனிடம் பிடித்தது ஓராயிரம். அனைத்தையும் விட அவனின் பணம் என்று ஒரு பெரிய லிஸ்டே போடுவாள்.

அதிலும் இங்கு வந்து அவன் செல்வாக்கையும் செல்வ நிலையையும் பார்த்தவளுக்கு இவனிடம் வெறும் திருமண வாக்குறுதி வாங்கியிருக்க கூடாது லண்டனில் வைத்தே திருமணம் செய்திருக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது.

லண்டனில் இருந்த காலத்தில் கூட இதழ் முத்தம் தாண்டி எல்லை மீறவில்லை. அவள் அனைத்திற்கும் தயாராய் இருந்த போதும். எத்தனை தரம் கெஞ்சிய போதும் ஒரு தரம் கூட செல்லப் பெயர் வைத்து அழைக்கவில்லை. இன்று போனிலேயே செல்ல பெயர் வைத்து சேமித்து வைத்திருந்ததை பார்க்க ஏனோ நெஞ்சிக்குள் அச்சம் பரவியது.

அவன் தோள்களில் தன் கைகளை தவழ விட்டவாறே “நாம் தான் திருமணம் செய்யப் போகின்றோமே இதில் என்ன தவறு” கேட்டவள் சுட்டு விரல் அவன் தாடை நீளத்தை அளந்தது.

கையில் இருந்து தண்ணீரையும் போக்கெடில் இருந்து எடுத்த மருந்தையும் முன்னே இருந்த மேசையில் வைத்து விட்டு அவளிடமிருந்து விலகி நின்றவன் “தண்ணீர்... நீ கேட்ட மருந்து இரண்டும் இருக்கின்றது. சரிவராவிட்டால் நாளை மருத்துவரை அனுப்புகின்றேன்” உணர்ச்சியற்ற குரலில் சொல்லி விட்டு பறிக்காத குறையாக போனை பிடுங்கிக் கொண்டு சென்றான்.

காரில் ஏறி அதைச் செலுத்தியவனின் மனம் நிலையில்லாமல் தவித்தது. பிரிட்னி அவன் மேல் கை வைத்தாலே யாருக்கோ ஏதோ தூரோகம் செய்யும் உணர்வு. லண்டனில் கடைசி வருடம் படிக்கும் போது பிரிட்னியை சந்தித்தான். அவளும் அழகி, அந்தஸ்து என்று மறுக்க ஏதும் இல்லாமலிருக்க அவள் காதலை ஏற்றுக் கொண்டான். இந்தியா திரும்பி தாத்தாவிடம் இதைப் பற்றி பேச முன்னரே பிடிவாதமாய் அவரின் நண்பனின் பேத்தியை திருமணம் செய்து வைத்துவிட்டார்.

அவனும் முதலில் மறுக்க தான் செய்தான். ஆனால் அவர் கூறிய காரணங்களைக் கேட்ட பின் சம்மதித்தான். அதுவும் ஒரு வருடத்தில் விவாகரத்து செய்துவிடுவேன் என்ற நிபந்தனையுடன். ஆனால் தாத்தாவிற்கு அவர் நண்பனின் பேத்தியின் மீது அபார் நம்பிக்கை. அவன் மனதை மாற்றி விடுவாள் என்று. மாற்றித்தான் விட்டாள் போலிருக்கின்றது.

பிரிட்னிக்கு கொடுத்த வாக்கிற்காய் அவளை விவாகரத்து செய்ய சம்மதித்தான். விவாகரத்து என்ற பேச்சை எடுத்ததில் இருந்து அவன் மனம்தான் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்தது. போதக் குறைக்கு இந்த ரெய்ட் வேறு. மேட்டுப்பாளையத்தில் இருக்கும் அவர்கள் கம்பனிக்கு திடிரென ரெய்ட் வந்து விட அவனால் கம்பனியில் இருந்து அசையவே முடியவில்லை. அன்று அவளைப் பார்த்து விவாகரத்து கேட்ட பின் இன்று வரை அவளை நேரில் பார்க்கவில்லை.

கையில் இருந்த ஃபோனை டாஸ் போர்டில் எறிந்து விட்டு காதில் இருந்த ப்ளூடூதில் நூறாவது தடவையாக ரீடைலை அழுத்தினான்.

ஃபோன் ரிங் போனதே தவிர பதிலில்லை.

“டாம் வேர் ஆர் யூ பிரனா?” ஸ்டியேரிங் வீலில் கைகளால் குத்தினான்.

அடுத்த ரிங்கிற்கு மறுமுனையில் பதிலளிக்க “பிரனா?” அவசரமாய் அழைத்தவன் மறுபக்கம் யாரென்று கூட பாராமல் “போனை எங்க வச்சுட்டு எங்க சுத்துற” அத்தனை நேரப் பதட்டத்தில் எரிச்சலுடன் சீறினான்.

‘தம்பி நான் யோகம்மா, ஃபோன் வீட்டில் தான் இருக்கு.”

அவனிடமிருந்து சில நொடிகள் அமைதியே பதிலாய் வந்தது.

அவரே தொடர்ந்தார் “காலையில் இருந்தே உங்களுக்காகதான் காத்திருந்தார்கள். இருந்த இடத்தை விட்டு அசையக் கூட இல்லை. உள்ள போய் இருப்பாங்க இருங்க கொண்டு போய் கொடுக்கின்றேன்” என்றவரிடம் “வேண்டாம் நான் அங்கு தான் வருகின்றேன். வந்து பேசுறேன்” ஃபோனை கட் செய்தான்.

அது மறுபடியும் அடிக்கவே “ஹலோ” என்றான் சோர்வாய்.

“பாஸ் அண்ணி தேடினாங்க, நீங்க வீட்டிற்கு போய்விட்டதாக சொன்னேன்” சத்யாதான் ஃபோன் செய்திருந்தான்.

“சரி நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்றவன் கைகளில் கார் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் நோக்கி வேகமெடுக்க, ஒரு கையால் டிரைவிங் செய்தபடி முழங்கை கார் கதவில் ஊன்றியிருக்க, இரு விரல்களால் உதட்டை அழுத்தியவன் மனதிலோ யோசனைகளின் அலைமோதல் ‘ஏன் எடுத்தாள்! ஏதோ அவசரமாய் இருக்க வேண்டும். இல்லை விவாகரத்துக்கு சம்மதமம் தெரிவிக்கவா?’ அவனையும் அறியாமல் உடல் நடுங்கியது. விவாகரத்து கேட்டதே அவன்தான். உடலை மெதுவே கூட அசைக்க முடியாது போலிருக்க எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்றே தெரியாது.

நேராக அவர்கள் அறையை நோக்கிச் சென்றவன் கண்கள் அறை முழுவதையும் அலச அவள் நிழல் கூட கண்ணில் படவில்லை. நெஞ்சுக்குள் ஏதோ பிசைய வேகமாய் பிரஷ் ஆகி உடை மாற்றி வேகமாய் கீழே இறங்கி வந்தவன் நேரத்தைப் பார்க்க கடிக்காரம் நடுசாமம் பன்னிரெண்டு என்றது. இந்த நேரம் எங்கே போனாள். மீண்டும் மனதினுள் தவிப்பு எழ படிகளில் வேகமாய் இறங்கி வந்தவனை எதிர் கொண்டார் யோகம்மா.

கண்களில் கேள்வியுடன் பார்க்க “சின்னம்மாவின் ஃபோன்” அவன் கையில் கொடுத்தார். கைகள் நடுங்க வாங்கியவன் “அவள் எங்கே?” அவன் குரல் அவனுக்கே கிணற்றில் இருந்து கேட்பது போல் இருந்தது.

“மேலே அறையில் இல்லையா தம்பி?” என்ற அவர் கேள்வியில் அவன் கையிலிருந்த அவள் ஃபோன் மீண்டும் நழுவி கீழே விழுந்தது.

*****

அந்த இரவு நேரத்தின் ஊட்டி குளிரில் நடந்து கொண்டே இருந்தாள் அவள். இன்னும் சிறிது நேரம் இந்த ஊட்டிக் குளிரில் இருந்தால் இறந்து விடுவாள். அதைக் கூட உணராமல் நடந்து கொண்டிருந்தாள். பின்னால் வந்த காரையும் கவனிக்கவில்லை.

காரில் வந்தவன் சற்று வெட்டி எடுத்து அவள் முன்னே நிறுத்தி “அறிவில்லை நடுசாமத்தில் இப்படியா நடப்பாய்? வராவன் அடிச்சிட்டு போயிட்டே இருப்பான் யூ ஃபுல்” சீறியவாறே காரை விட்டு வெளியே வந்தான் அவன்.

ஆறடி உயரத்தில் அளவான கட்டுமஸ்தான உடலுடன் நீல நிற டெனிம் ஜீன்ஸ், மேக நீலத்தில் சட்டை, அதன் மேல் வேஸ்ட் கோட் போல் ஸ்வட்டர், பக்கவாட்டில் உச்சி பிரித்து அலையலையான ஆரோக்கியமான கேசம், சதா எச்சரிக்கை தென்படும் கண்களை மறைக்க கண்ணில் சதுர பிரேமிட்ட கண்ணாடி என பார்த்தவுடன் மனதில் கண்ணியமானவன் மருத்துவனாய் இருப்பானோ என்ற ஒரு எண்ணத்தை எழுப்பும் தோற்றத்துடன் இருந்தவன் அந்தப் பெண்ணின் முகத்தை நோக்கி லைட்டை அடித்தான்.

சுற்றிலும் இருண்ட அந்தப் பாதையில் தனியாக நடக்கவும் துணிவு வேண்டுமே! யோசனையுடன் முகம் பார்த்தான், அவள் ருத்ர பிரணவ்வின் மனைவி பிரனா.

மறக்காமல் உங்கள் கருத்துகளை சொல்லி செல்லுங்கள்
 
Last edited:
Top