என்னுள் சங்கீதமாய் நீ 4
ஆகாஷ் சொன்னது போல் இரவு வந்த கந்தன் சார் சாப்பாடு என்ன பண்ண என கேட்கவும் மதியம் ஹர்ஷினி வரும் போது கொண்டு வந்திருந்த உணவையே சூடு செய்து தர சொல்லி சாப்பிட்டான்.
மேம் வந்திருந்தாங்களா சார் என கந்தன் கேட்கவும் சிரித்தபடியே ஆமாம் என்றவன்
தான் பிரிந்து விடலாம் என்று சொல்லியதை கேட்டவுடன் “அவளின் அதிர்ச்சி , முகத்தில் இருந்த துயரம் அதோடு கிளம்பும் போது அவள் முகம் காட்டிய நம்பிக்கையும் “ தான் ஞாபகத்திற்கு வந்தது ஆகாஷிற்கு.
கண்டிப்பா அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என் மனதுக்குள் உறுதி எடுத்து கொண்டவன் . என்ன இன்னும் நான் நினைச்சது நடக்கலியே என யோசனையாக தன் போனை பார்த்து கொண்டிருக்கும் போதே
அவன் மிகவும் எதிர்பார்த்த போன் ஒலிக்கவும் ஜெய் ஆகாஷின் முகம் ரகசிய சிரிப்பில் ஒளிர்ந்தது .
“ஹலோ மாஸ்டர் கிளம்பிடீங்களா “என இப்போது அவன் கோரியோ கிராப் செய்யும் படத்தின் டைரக்டர் கேரளாவில் இருந்து கேட்கவும்
“ எஸ் சார் இன்னும் 10 மினிட்ஸ்ல “எனவும்
நோ சார்” நாளைக்கு ஷூட்டிங் இல்ல நீங்க அங்கே இருங்க அடுத்த நாள் இங்க வந்தா போதும்” என அவர் கொஞ்சம் வேகமாகவே சொன்னார் எனலாம்.
நமட்டு சிரிப்பு சிரித்த ஜெய் ஓகே சார் பை என வைத்துவிட்டான் . அடுத்து உடனே அவன் பிஏ மோகன் கால் செய்யவும்
சொல்லு மோகன் “சார் MR . ஆச்சார்யா தான் ஸ்டாப் பண்ணிருக்கார்” அதோட ஷூட்டிங் கேன்சல் ஆன லாஸ்க்காக டபுள் அமோன்ட் ப்ரொடியூசர் கைக்கே வந்துருச்சி எனவும் ஓகே என கால் கட் செய்த ஆகாஷின் முகம் மலர்ந்தே இருந்தது .
ம்ம் ரொம்ப பாஸ்ட்தான் .” யாரு ஆச்சார்யா ஆச்சே இப்படி இல்லாட்டி தான் அதிசயம்" என நினைத்தவன் அடுத்து என்ன செய்வார் என அனுமானம் இருந்தது .
அடுத்து என்ன என ஆகாஷ் யோசித்து கொண்டிருக்கும் போது வீட்டில் இருந்து விஜயா கூப்பிடவும் “நாளைக்கு வீட்டுக்கு வரேன்ம்மா கேரளா போகல ஒரு முக்கியமான வேலை” என்று சொல்லியவன் கொஞ்சம் சந்தோஷமாகவே பேசிடவும் வீட்டில் எல்லோரும் நிம்மதி ஆகினர் .
அவனின் முகம் இரண்டு நாளாய் இறுகி இருந்ததை நினைத்து கவலை பட்டவர்கள் ஆயிற்றே .
...............................................................................................
இரவு 11 மணி கேட்டுக்கு வெளியே ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்கவும் கந்தன் ஹாலில் இருந்த ஆகாஷ பார்த்தார்.
அவன் போய் திறங்க எனவும் இந்நேரத்துக்கு யாரு வந்திருக்கா என யோசித்துவாறே சென்று கேட் திறந்தார் கந்தன் . கேட் திறந்தவுடன் வேகமாக இரண்டு கார்கள் வந்து நின்றது .
முதலில் இறங்கிய கார்ட்ஸ் கார் கதவை திறக்குவும் “ஆச்சார்யா மிகவும் கம்பீரமாக இறங்கினர் அடுத்து சந்திரன் இறங்கவும் இருவர் மட்டும் உள்ளே சென்றனர் “.
ஜெய் ஆகாஷ் நிமிர்ந்து நின்ற படி அமைதியான முகத்துடன் வாங்க உட்காருங்க என உபசரித்தான் . ஆனால் ஆச்சார்யா சந்திரன் இருவரின் முகமும் மிகவும் கோவத்தை உள்ளடிக்கியபடி அவனின் உபசரிப்பை கண்டு கொள்ளாதவர்களாக ஆராய்ச்சியோடும் , கோவத்துடனும் அவனை பார்த்து கொண்டு நின்றனர்.
அவனின் நிமிர்வு , தைரியம் கண்டு ஆச்சார்யா சந்திரன் இருவருக்கும் தங்கள் வரவில் அவனுக்கு எவ்விதமான அதிர்ச்சியும் இல்ல அது மட்டுமில்லாமல் அவன் தங்களை எதிர்பார்த்தே காத்திருக்கிறான் எனவும் புரிந்தது.
ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் ஆச்சார்யா கோவமான முகத்துடன் தன் கையில் இருக்கும்” ரிப்போர்ட்டை” அங்கிருக்கும் டீபாயில் ஏறக்குறைய வீசினார் என்றே சொல்லலாம் .
அவரின் கோவத்தில் இருந்தே தங்களின் காதலை பற்றி அனைத்தும் அவர்களுக்கு தெரிந்து விட்டது என புரிந்தது ஆகாஷிற்கு......ஆனால் “அவன் எதிர்பார்த்தும் அதை தானே” .
அவர்களின் கோவம் எதனால் எனபதும் ஆகாஷிற்கு புரிந்தது “அவர்கள் மிகவும் வெறுக்கும் டான்ஸர்” என்பதாலும் போதாதற்கு அவர்கள் மகள் “சுபத்ராவின் வாழ்க்கையில் வந்த பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்த சினி பீல்டில் இருப்பதாலும்” என்று
இருந்தாலும் முகத்தில் எவ்விதமான உணர்வையும் காட்டாமல் அந்த ரிப்போர்ட்டை எடுத்து பார்த்தான் . “தங்களின் 9 வருட காதலின் முழு டீடைலும்" அதில் இருந்தது .
எவ்விதமான ஆச்சரியமும் இல்ல ஆகாஷிற்கு “டிடெக்ட்டிவ் மூலம் விசாரிச்சிருப்பார்கள்” என தெரியும் என்பதால் அமைதியாக வைத்தவன் அடுத்து “என்ன என்பது போல் தைரியமாகவே” பார்த்தான் .
தீர்க்கமான நேரான பார்வையுடனும் அகன்ற தோள்களுடனும் கம்பீரமாக தைரியமாக தங்களை பார்த்தபடி நின்றிருந்த ஜெய் ஆகாஷ பார்க்கும் போது ஆச்சார்யா ,சந்திரன் இருவருக்கும் தோன்றியது” ஜெய் ஆகாஷ் ஹர்ஷினிக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவன்" என்பதே .
இவர்களின் காதல் தெரிந்தவுடன் அவனை பற்றி விசாரிக்கவும் எல்லாம் நல்ல விதமாகத்தான் தோன்றியது . “மறுக்க எந்த காரணனும் இல்ல ஒரே ஒரு விஷயத்தை தவிர” ….. மற்றபடி ஆகாஷின் குடும்பமும் மிகவும் நல்ல குடும்பம்
ஆகாஷின் தந்தை மகாலிங்கம் கார் ஷோ ரூம் வைத்து இருக்கிறார் அது மட்டுமில்லாமல் நிலம் , மில் என இவர்கள் அளவு இல்லையென்றாலும் நல்ல வசதியாகவே இருந்தனர் .
ஆனாலும் என நினைத்தவர்கள் தங்களின் எண்ணங்களை வெளி காட்டிக்கொள்ளாமலே நின்றனர்.
அது மட்டுமில்லால் தங்கள் “வீட்டு பெண் 9 வருடமாக காதலிக்கிறாள் ஆனால் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியவில்லை” என்பதே அவர்களுக்கு சொல்ல முடியாத உணர்வை கொடுத்தது .
சந்திரன் கொஞ்சம் கோவமான குரலில் “என்னங்க இது எல்லாம் “என கேட்கவும்
ஜெய் ஆகாஷ் மறுபடியும் பர்ஸ்ட்” நீங்க ரெண்டு பேறும் உட்காருங்க” என்றான். மரியாதையாகவே பின்பு அவர்கள் உட்காரமாட்டார்கள் என புரிந்தவன்
“ஓகே இது எல்லாம் உண்மை தான்” என சொல்லவும் ஆச்சார்யா சந்திரன் இருவரின் முகமும் மிகவும் இறுகியது .
ஆனா என இழுத்தவன் அவர்களின் முகத்தை பார்த்து கொன்டே “எங்க காதல் இன்னிக்கு ஈவினிங் தான் பிரேக்கும் ஆச்சு” என்றான் நிறுத்தி நிதானமாக .
ஆச்சார்யாவின் முகம் நக்கல் சிரிப்பில் விரிந்தது . பின் நிதானமாக கால் மேல் கால் போட்டு கம்பீரமாக சோபாவில் அமர்ந்தார் .
இது என் பேத்தி வீடும் இல்ல என்ற ஆச்சார்யாவின் குரலில் பெருமையும் நக்கலும் கலந்தே ஒலித்தது .
இரண்டையும் புரிந்து கொண்டவன் இது “உங்க பேத்தி வீடும்ம் இல்ல …..எப்பவும் அவ வீடு மட்டும்தான் .ரெஜிஸ்டெரும் அவ பேரில் தான் “என ஆகாஷ் உறுதியாகவே சொன்னான் . ஆனால் ஆகாஷும் பாதி ஷேர் போட்டு இருந்தான் தான் .
ஆச்சார்யா அவன் சொன்னதை கண்டு கொள்ளாதவர் போல் “நீங்க என் பேத்தியோட காலேஜ் பங்க்ஷன்ல டான்ஸ் ஆடினவர்தானே” எனவும்
ஆகாஷின் முகம் கோவத்தில் மிகவும் இறுகியது . அதை பற்றி பேச விரும்பவில்ல என காட்டும் விதமாக முகம் திருப்பவும் ஆச்சார்யாவும் அதை புரிந்து கொண்டவர் ஏன் அவருக்குமே அதை பற்றி பேச விருப்பமில்லை அதை நினைக்கவும் பிடிக்கவில்லை என்பதால் ஓகே என்று முடித்து விட்டார்.
இத்தனை வருஷமா என் பேத்தி ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னு இப்போதான் நல்லா புரியுது 9 வருஷ காதல் ஆனா நான் வேற காரணம் எல்லாம் நினைச்சுகிட்டு இருந்துட்டேன் என்ற ஆச்சார்யாவின் மனதில் என்ன நினைக்கிறார் என்று ஒன்றுமே கண்டுபிடிக்க முடியாத குரலில் பேசியவர் தொடர்ந்து
ஆனா இப்போ நீங்க பிரேக் பண்ணிட்டேன் சொல்றீங்க அப்படித்தானே என இழுத்தவர் “எங்களுக்கு ஹர்ஷிய பத்தி நல்லா தெரியும் ….இப்போ உங்களை பத்தியும் முழுசா தெரியும்” என சொல்லவும் ஆகாஷிற்கு புரிந்தது அவர் என்ன சொல்ல வருகிறார் என
உங்க ரிப்போர்ட் என்ன சொல்லுது தெரியுமா “நீங்கள் இருவருமே மனதளவில் உங்க காதலில் மிகவும் உறுதியானவர்கள் . அதோடு இருவருமே ஒன்றை நினைத்தாள் அதிலே நிற்கும் ரகம்” அப்படின்னு
அது மட்டுமில்ல “நீங்க மத்த காதலர்கள் போல் கிடையாதுன்னும் “போட்டிருக்கு
நீங்க அந்த டான்ஸ்ல “என வெறுப்போடு சொன்னவர்” சாதிக்க போராடிட்டு இருந்ததால டைம் கிடைக்கும் போது தான் ரெண்டு பேறும் மீட் பண்ணிருக்கீங்க .போன் கூட வாரத்துக்கு 4 டைம் பேசினாலே பெருசுன்னு போட்டுருக்கு .
அந்த வயசுலே அவ்வளவு மெச்சூரிட்டியோடயும் , உங்க காதலுல உறுதியாவும் இருந்த நீங்க இப்போ சொல்லவே வேண்டாம்
9 வருசமா இவ்வளவு கஷ்டத்தை கடந்துட்டு இப்போ நீங்க ரெண்டு பேறும் உங்க கால்ல நிக்கும் போது நீங்க பிரேக் பண்ணிட்டேன் சொன்னா அதை நான் நம்புவேன்னு நீங்க நினைக்குறீங்களா என ஆச்சார்யா நிதானமாக அவனை போலவே கேட்டார்.
அவர் சொன்னது அனைத்தும் உண்மையே . இவர் கண்டிப்பா நான் சொல்றதை நம்ப மாட்டார் என புரிந்தது ஆகாஷிற்கு. ஆனாலும் முகத்தில் எதையும் காட்டாமல்
“3 மாசத்துக்கு முன்னாடி நான் ஹர்ஷிக்கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு" கேட்டேன் ஆனா அவ அதுக்கு எப்பவும் ஒத்துக்க மாட்டான்னு சொல்லிட்டு என்ன 3 மாசமா புல்லா அவாய்ட் பண்ணிட்டா..
எங்க வீட்லயும் “கல்யாணம் பண்ண பிரஸ்ஸர் “சோ இன்னிக்கு முடிவா பேசினேன் ஆனா அவ என்று விரக்தியாக தோளை குலுக்கியவன் …சோ நான் தான்” பிரேக் அப் பண்ணிட்டேன் . எல்லாம் முடிஞ்சது “ . இது தான் உண்மை என தெளிவாக கூறியவன் . அப்பறம் உங்க இஷ்டம் என முடித்து விட்டான் .
அவன் சொன்னதை கேட்டவுடன் சந்திரனின் முகம் வேதனையதான் காட்டியது.
ஆச்சார்யா எதுவும் பேசாமல் சிறிது நேரம் யோசித்தவர் நீங்க சொன்னனது போல் உண்மையாகவே முடிஞ்சிருந்தால் “முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும் அதுதான் நம்ம எல்லாருக்கும் நல்லதும் கூட" என சொன்னவர்
ஆனால் ஹர்ஷினியும் நீங்களும் உங்க காதலை விடுவீங்கன்னு எனக்கு 1 பெர்சென்ட் கூட நம்பிக்கையில்லை. எப்படிருந்தாலும் இனிமேல் நான் கண்டிப்பா விட மாட்டேன் ….
ஹர்ஷினிக்கு இந்த வருஷத்துக்குள்ள கண்டிப்பா கல்யாணம் முடிச்சிடுவேன் மாப்பிள்ளையும் ரெடியா இருக்கார் . சோ எல்லாமே நல்லவிதமாக நடக்கும் தான் என்றவர் கிளம்பவும்…
சந்திரன் அப்பா என்று கூப்பிடவும் அவரின் எண்ணத்தை புரிந்து கொண்ட ஆச்சார்யா மறுப்பாக தலை அசைத்தார் . ஆனால் சந்திரன் ப்ளீஸ்ப்பா ஒரு டைம் எனவும்
இதுக்கு முதல்ல உன் பொண்ணே கண்டிப்பா ஒத்துக்க மாட்டா நீ கேட்கறது கண்டிப்பா நடக்காது பெரியவனே.
ஹர்ஷினி ஏன் ஆகாஷ் கேட்டப்போ கல்யாணதுக்கு ஒத்துக்கல தெரியுமா ஆகாஷ் டான்ஸ் விட கூடாதுன்னுதான் .
அப்போ நாமளும் கண்டிப்பா இவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டோம் அப்படின்னும் என் பேத்திக்கும் தெரியும் . நான் சொல்றது கரெக்ட் தானே ஆகாஷ் என ஆச்சார்யா கேட்கவும்
ஆகாஷிற்கு உள்ளுக்குள் மிக பெரிய பயமாக இருந்தது இது தான் . ஹர்ஷினிக்காக உன் டான்ஸை விட்டுடு என கேட்டு விட்டால் என்பதே ..
இந்த கேள்விக்கு தன்னிடம் எப்பொழுதும் பதில் இல்லையே . ஹர்ஷினி தன்னை பிரிந்தாலும் பிரிவாளே தவிர நான் கண்டிப்பாக டான்ஸ் விட எக்காரணத்தை முன்னிட்டும் ஒத்து கொள்ளவே மாட்டாளே .
அவர்கள் காதலிக்கும் போதே இதற்காக நிறைய சண்டை போட்டவர்கள் ஆயிற்றே .
ஆச்சார்யா தங்கள் காதலுக்கு கண்டிப்பாக ஒத்து கொள்ள மாட்டார் என தெரிந்து ஆகாஷ் டான்சிலிருந்து விலக முடிவு எடுத்த அன்று ஹர்ஷினியின் கோவமும் அதை தொடர்ந்து அவள் செய்த செயலும் … அதை இப்பொழுது நினைத்தாலும் பயமே ஆம் பயமே ஆகாஷிற்கு .
அவர் சொல்வது அனைத்தும் உண்மையே என்பதால் ஆச்சார்யா கேட்டதற்கு ஆகாஷ் எதுவும் பேசாமல் நின்றான் .
சந்திரன் அவனின் மௌனத்திலே புரிந்து கொண்டு ஆச்சார்யா கிளம்பவும் எதுவும் பேசாமல் நிராசையான முகத்துடன் கிளம்பிவிட்டார் .
அவர்கள் சென்றவுடன் ஜெய் ஆகாஷ் ஓய்ந்து போன முகத்துடன் அமர்ந்து விட்டான் . ஆச்சார்யாவின் மாப்பிள்ளை ரெடியா இருக்கார் என சொன்னதை நினைத்து பார்த்தவன் கோவத்தில் பல்லை கடித்தான் .
என் ஹர்ஷிக்கு மாப்பிள்ளையா அதை நினைத்தாலே பற்றி கொண்டு வந்தது அதையும் தான் பாக்கலாம் என மனதுக்குள் சூளுரைத்து கொண்டான் ஜெய் ஆகாஷ் .
கேரளாவில் இருந்து கிளம்பும் போது “ஆகாஷின் மனநிலை ஹர்ஷினியை பார்த்து பேசினால் போதும் “என்றே இருந்தது .
ஆனால் எல்லாம் மாறியது ஹோட்டல் கார்டெனில் ஹர்ஷினியிடம் பேசிவிட்டு திரும்பும் போது அங்கிருக்கும் “cctv கேமராவை “பார்த்தவுடன் தான் .
ஹர்ஷினிக்கு ஜெய்யிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என தவிப்பில் இருந்ததால் “கார்டெனில் இருக்கும் cctv கேமராவை மறந்து விட்டாள்” .
ஆனால் ஆகாஷ் கவனித்து விட்டவன் அதை தனக்கு ஏற்றார் போல் மாற்றியும் கொண்டான் .
ஆச்சார்யா , ஹர்ஷினி , சுபத்ரா மூவரையும் சமாளித்து கல்யாணம் செய்ய வேண்டும் என்றால் “60 ஆம் கல்யாணம் தான் நடக்கும்” என புரிந்து அதிரடியாக தன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டான் ஜெய் ஆகாஷ் .
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஹாய் ப்ரண்ட்ஸ்
என்னுள் சங்கீதமாய் நீ 4 போஸ்ட் பண்ணிட்டேன் . உங்க கருத்துக்களுக்கு ஆவலாக இருப்பேன் ப்ரண்ட்ஸ் . இதுவரைக்கும் என்ன என்கரேஜ் பண்ண எல்லா ப்ரண்ட்ஸ்க்கும் சைலன்ட் ரீடர்ஸ்க்கும் நன்றி .