All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக மிக நன்றிஅருமையான பதிவு
I am blessed. Thank you so much maSuperb story madam. Ungal ezhuthu pani melum thodarattum. Wish you all the best.
மிக மிக நன்றிWow excellent
அன்பான தூரிகா... உங்கள் பெயரைப் போலவே என் கதைக்கு அழகாக வண்ணம் தீட்டுகிறீர்கள் தூரிகையால். அப்பப்பா... படிக்கும்போது அத்தனை குதுகலம் மனதில் எழுகிறது. நன்றி என்கிற வார்த்தைகள் போதுமா தெரியவில்லை... ஆனாலும் அதை விட வேறு எதுவும் என் அன்பைக் கூற இல்லை. அதனால் ஆயிரம், லட்சம் முறை என் நற்றியை சொல்கிறேன். நன்றி நன்றி நன்றி. என் கதை நன்றாக இருக்கிறதா இல்லைாய எனக்குத் தெரியவில்லை. ஆனால் உங்கள் வார்த்தைகளின் அழகால் என் கதை மிக அழகாக மிளிர்கிறது என்பதுதான் நிஜம்வணக்கம் மேடம்,
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ!
அருமையான தலைப்பு! தலைப்புக்கேற்ற கதை!
முக நூலில் கமென்ட்ஸ், மீம்ஸ் என்று பார்த்துக் கொண்டே இருந்ததில் கதை ஓட்டம் ஓரளவுக்குப் பிடிபட்டிருந்ததால் அவசரப்படாமல் கொஞ்சம் நிதானமாகவே படித்தேன்.
அவ்வியக்தன், விதற்பரை வழக்கம் போல் வித்யாசமான நாயகன், நாயகி பெயர்கள்
வியக்தம், அவ்வியக்தம், தற்பரை விதற்பரை போன்ற வாரத்தைகள் எங்கள் கல்லூரிப் பாடத்தில் தண்ணீர் பட்ட பாடு என்றாலும் யாருக்கும் பெயராக அவற்றைக் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை...ஆனால் இதுவும் வித்யாசமாக நன்றாகவே இருந்தது.
அவ்வியக்தன் ஆரம்பத்தில் கண் நிறைந்த மனம் நிறைந்த கதானாயகனாக தன் இணைக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்து செய்பவனாக வலம் வந்தான். கொஞ்சம் காமெடி செய்தாலும் விதற்பரைக்காக உருகியது, அவள் குடும்பத்தை தனதாக ஏற்றுக் கொண்டது என எல்லா விஷயத்திலும் மனம் கவர்ந்தான்.
நான் தளத்தில் வந்து இப்போதுதான் படித்தேன் என்றாலும் முகனூலில் உங்கள் போஸ்டில் இவன் படங்களைப் பார்த்திருக்கீறேன். சமீபத்தில்தான் சார்பட்டா படம் பார்த்தேன் அதில் சந்தோஷைப் பார்த்து இவனை எங்கோ பார்த்திருக்கிறோமே என படம் முடியும் வரை கூட யோசித்துக் கொண்டிருந்தேன். பின்பு இன்று தளத்தில் இந்த பெரிய படங்களைப் பார்த்த பின்தான் அடையாளம் புரிந்தது.
அவ்வியக்தன் தமிழ் பேசும் நேரங்களில் எல்லாம் சிரிப்பை வரவழைத்தான் என்றால் தயாளன் புஷ்பாவை வசிஷ்டர் அருந்ததி என்று குறிப்பிட்ட போது கண்கலங்கச் செய்து விட்டான். மொத்ததில் such a nice hero.
உத்தியுக்தன் கதை நான் படித்ததில்லை...அந்த சமயம் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால் மிஸ் செய்து விட்டேன் என நினைக்கிறேன்...கிண்டிலில் ஃப்ரீ கொடுத்தால் படிக்க ஆவலாக உள்ளேன்.
தயாளன், புஷ்பா, மிஸ்ஸஸ் ஜான்ஸி என அனைவருமே மனதில் நிறைந்த கதாபாத்திரங்கள்.
உங்கள் வர்ணணைகள் பற்றிக் குறிப்பிடாமல் என் கருத்துப் பரிமாறல் நிறைவடையாது...அது காற்றைப் பற்றியாகட்டும்...குளிரைப் பற்றியாகட்டும்...பனியைப் பற்றியாகட்டும்...பகலவனைப் பற்றியாகட்டும்...இல்லைக் காதல் காட்சிகள்தான் ஆகட்டுமே...உங்கள் வர்ணனைகள் சிற்றோடையில் ஏற்படும் சலசலப்பைப் போல்...அதன் பயனாய் விளையும் சங்கீதம் போல்... மனதுக்கு இனிமை தருவன...ஒவ்வொரு இடமும் நிறுத்தி நிதானமாகப் படித்தேன்.
முடிவாக இப்படி ஒரு கதை கொடுத்து எங்களை மகிழ்வித்ததற்கு நன்றிகள் பல...இன்னும் பல கதைகள் படைத்து சிறக்க வாழ்த்துக்களுடன்
தூரிகா
வாவ் மிக மிக நன்றி சாந்தி. தமிழில் ஒரு குடும்பமே குடியிருக்கிறது தெரியுமா. உயிர் ஆண், மெய் பெண்... இருவரும் சேர்ந்து பெற்றவர்கள்தான் உயிர் மெய் எழுத்துக்கள். அவர்களின் குடும்பப் பிணைப்புத்தான் வல்லினம் மெல்லினம் இடையினம்... தமிழ் மிக அழகு எந்த மொழிக்கும் இல்லாத அழகு அவளுக்கு உண்டு. உங்கள் அன்புக்கு தலை வணங்கி நிற்கிறேன். இந்தக் கதை ஆரம்பித்த நாள் முதல் உங்கள் அன்பை பல் வகையிலும் தெரிவித்து விட்டீர்கள். உங்கள் விமர்சனத்தால் என் கதை மிக அழகாகப் மிழிர்கிறது தெரியுமா. மிக மிக நன்றிஎப்படி இருக்கீங்க சிவா? என்னவென்று சொல்ல? நிஜத்தில் தங்கள் வித்தியாசமான வர்ணனை கண்டு பிரம்மித்தேன்...
எப்படிப்பா! ஆலிங்கனம் கேள்விப்பட்டுள்ளேன்... ஆனால் தமிழில் வரும் உயிர், மெய், உயிர்மெய், மெல்லினம், வல்லினம், இடையினம், குறில், நெடில், எழுத்து, சொல், பொருள், அதிகாரம், இலக்கியம் மற்றும் இலக்கணம் இதை அத்தனையும் ஒரு ஆண் பெண் உறவிற்கு கொண்டு வந்தது...
எப்படிப்பா! எத்தனையோ நாவல்களை படித்துள்ளேன்... ஆனால் இப்படி யாரும் இத்தனை அழகாக கொண்டு வந்ததை நான் பார்த்தேயில்லை... அற்புதம் சிவா... சரித்திரம் படைக்கிறீர்கள்... உங்களென்று தனி பாணி.. வர்ணனையில் தங்களை மிஞ்ச ஆளேயில்லை... அபாரம் சிவா... வாழ்த்துக்கள்...