All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் சிறுகதை முயற்சிகள்

Status
Not open for further replies.

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே! இந்த இழையில் சிறு கதைகள் பதியலாம் என்று இருக்கிறேன்.

தளமும் நட்பும் வழங்கும் என் இனிய ஸ்ரீமாவிற்கு வந்தனம்🙏🙏🙏.. எனை ரசனையோடு கூடிய அன்பால் ஆளும் தோழமைகளுக்கு என் சிறு அர்ப்பணிப்பு.💝💝
💝
 

தாமரை

தாமரை


images.png



#நிழலாய்_தோன்றும்_நிஜமே…


"டேய்! உன் மாமனார் எனக்கு ஃபோன் பண்ணார். உன் சின்ன மாமனார் பொண்ணுக்கு நிச்சயம் பண்றாங்களாமே.. அதுக்கு வரச் சொன்னார். இதுக்கெல்லாம் ஏண்டா எல்லாரையும் கூப்பிடுறீங்க..?" என நான் அலுத்துக் கொள்ள,


" அக்கா! என் சின்ன மாமனார் அவர்தான்.. அந்தப் பொண்ணு வைஷாலிக்கு மூனு வயசுலேயே தவறிட்டாரே, அங்கே பெரியவங்கன்னு யாரும் இல்ல. இவங்க வீட்டிலே மாமா தானே பொறுப்பெடுத்திருந்தாங்க.இப்போ... இந்தப் பொண்ணுக்கு எல்லாம் அவர் தான் முன்னின்று நடத்துறார்." என்றவன் சிறிது தயங்கி, " சம்பந்தி முறையெல்லாம் கூட இவர் தான் பண்றார். அதான்கா.. வாங்க." எனச் சொல்லி வைத்து விடவும், கூப்பிட்ட முறைக்கு நாங்களும் தம்பதி சமேதரராய் கிளம்பியாயிற்று..

பதினைந்து நிமிட பயணதூரம் கடந்து, அடைந்த, ஊருக்கு ஒதுங்கியிருந்த மண்டபம் சிறிது எனினும் அலங்காரம் வரவேற்பு எல்லாமே அமர்க்களம் தான்.


தம்பியின் மனைவி, மச்சினன், அவன் மனைவி என அனைவரும் பம்பரமாக சுழன்று தங்கள் வீட்டு விஷேஷமாக எண்ணி வரவேற்பதும் அமர்த்துவதுமாக வேலைகள் செய்து கொண்டிருந்தனர்.


தம்பியின் மாமனார் இரத்தினம் முகம் கொள்ளாச் சிரிப்புடன் கைகுவித்தவர், " பிள்ளைங்க எங்கேம்மா?" என, 'நாங்களே எக்ஸ்ட்ரா இதில் பிள்ளைகளுமா..!' என்று எண்ணினாலும் ஒரு அசட்டுச்சிரிப்பை சிந்தி, " ஸ்கூல் படிப்பு, வேலைகள் இருக்கே மாமா!" என, "அது சரி இப்போவெல்லாம் பிள்ளக கல்யாணம் காச்சின்னா எங்கே வர இஷ்டப்படுதுங்க. வீடுதான் சொர்க்கமுன்னு இருக்குதுங்க.. டிவி, கம்ப்யூட்டரு, கேமு.. அதான் பொழுதுபோக்க ஆயிரமிருக்கே.." என்றவர் கலகலப்பாக இன்றைய தலைமுறையினரைப் பற்றி சொல்லிக் கொண்டே செல்ல,

" ஆமா மாமா அப்படித்தானே மாமா, உலகம் போற போக்கு.." என்றவள், சுற்றி இருந்த எல்லோரையும் அவதானிக்க, என் கண்ணில் பட்டார் தம்பியின் மாமியார் சுந்தரவடிவு.

மஞ்சள் பட்டுடுத்தி, அளவாய் நகைகள் அணிந்து, எளிமையாய் அழகாய் இருந்தவர், எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

சுந்தரவடிவு.. அழகு மட்டுமல்ல.. அன்பும் இனிமையும் அடக்கமும் உடையவர். இத்தனை வருடங்களில் அவர் யாரையும் அதட்டியோ, கோப முகம் காட்டியோ பார்த்ததேயில்லை.

சிறு முறுவலுடன் அருகில் வந்து கை பற்றி வரவேற்றவர், மேளம் ஒலிக்கும் ஒலி கேட்டு திரும்பிப் பார்த்தார். மாப்பிள்ளை வீட்டினர் தட்டுக்களுடன் வருவதை கண்டதும் தன் கணவரை கண்களால் அழைப்பு விடுத்தவாறு வரவேற்க விரைந்து சென்றார். நொடியும் தாமதிக்காது அவரின் பின் சென்றார் இரத்தினம் மாமா.


'ப்பா அந்தக் காலத்து தம்பதின்னா அவங்க கண்ணால பேசிக்கறதே அழகா இருக்கு.. இவரும் இருக்காரே.. வாங்கன்னு கண்ணால கூப்பிட்டா.. "ஏண்டி கும்பல்ல முறைக்கற.." ன்னு எந்திரிச்சு வராமலேயே.. சத்தமா கேட்டு வைப்பார்..' என்று எண்ணியவாறு முறுவல் முகிழ்க்க என்னவரைப் பார்க்க , அவரோ மணப் பெண்ணின் தாயாரை பார்த்தவாறு இருந்தார்.


என் பக்கமாக சரிந்தவர், சிறுகுரலில்,
" பாவம், சின்ன வயசிலேயே கட்னவரை பறி கொடுத்தாலும்.. பிள்ளைகளை வைராக்கியமா ஆளாக்கிட்டாங்க. பையன் நல்ல படிப்பு படிக்கறான். பொண்ணு படிச்சு முடிச்சு கல்யாணம் பண்ணப் போறா.. ஒத்தையா சாதிச்சுருக்காங்கல்ல.. " என சிலாகிக்க,


"எல்லாம் இந்த ரத்தினம் மாமா , வடிவு அத்தை நல்லவங்களா இருக்கப் போயிங்க.." என நான் சொன்னதும்,


"ஆமா.. ஆமா.." என்ற என் தம்பியின் குரலில் ஏதோ செய்தியிருப்பதாக தோன்றியது,
எனது ப்ரம்மையோ?!!


மாப்பிள்ளை வீட்டினர் வெற்றிலைத் தட்டை மாற்ற, பரிவட்டம் கட்ட, சம்பந்தி எனும் முறையில் உள்ளவரை அழைக்க.. மேடையில் இருந்த ரத்தினம் மாமா, " அம்மா எங்கே?" என தம்பியின் மச்சினனை, அதாவது தன் மகனைக் கேட்க அனைவரின் பார்வைகளும் சுற்றி அலைந்து தேடின.

ஒரே கணத்தில் சுதாரித்த ரத்தினம் மாமா, தன் மகனையும் மருமகளையும் அண்ணன்- அண்ணி முறையில் தட்டினை வாங்கச் சொல்ல , அமைதியாக முறைகள் செய்யப் பெற்று சடங்குகள் தொடர்ந்தன.

ரத்தினம் மாமா மேடை விட்டு இறங்கி முன் வரிசையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.


'அட! இந்த அத்தை எங்கே? முக்கியமான நேரத்தில் எங்கே போனாங்க?' என்று யோசித்தவாறு நான் பார்க்க, தம்பி, மனைவியின் சைகை அழைப்பினை கவனித்து எழுந்து அவளின் அருகில் சென்றான்.

இதுவரை தம்பியால் மறைக்கப்பட்டு இருந்த ஜன்னலின் வழியே சென்ற எனது பார்வை வீச்சில் .. மண்டபத்தின் திறந்த வெளியில் இருந்த சிறு வினாயகர் கோவிலின் தூணிற்கு பின்பாக வடிவு அத்தையின் புடவை நிறம் ஒரு கோடு போன்று தோன்றி மறைய.. நான் ஆச்சரியத்துடன் உற்றுப் பார்த்தேன்.

' அவரா.. அவர் ஏன் அங்கே இருக்கிறார்.? ஏதேனும் உடம்பு முடியலையோ..?!' என்ற கேள்விகளும் பதைப்பும் தோன்ற, மெதுவாக எழுந்தேன்.


கூட்டத்தினரின் கவனம் மேடையின் சடங்கு சம்பிரதாயங்களில் இருந்தது. என்னவரும் அங்கே வேடிக்கை பார்ப்பதில் பிஸி. யார் கவனமும் ஈர்க்கா வண்ணம் மெதுவாக ஹால் வாயிலை அடைந்தவள், பின் நடையில் வேகம் கூட்டி
கோவிலை அடைந்து தூண் அருகில் செல்ல.. வடிவு அத்தையேதான்.

நிச்சலனமான முகம், வெறித்த கண்கள்.. அங்கே கோவில் கொண்டிருந்த வினை தீர்க்கும் நாயகனையே பார்த்தபடி அமர்ந்து இருந்தார்.

ஏனோ பயம் தோன்ற, மெதுவாக தோள் தொட்டு,
"அத்தே! ஏன் இங்கே உக்கார்ந்து இருக்கீங்க? அங்கே மேடைல உங்களைத் தேடினாங்க." எனவும் என் புறம் திரும்பியவர்..


"தட்டு கொடுத்திட்டாங்களா.." கேட்டார், தெளிவான குரலில்.

"ஆமா அத்தை பிரபுவும் அவன் வொய்ஃபும் வாங்கினாங்க.. "

" மாமா.. ??"

"உங்களைத் தேடிட்டு , நீங்க இல்லைன்னதும் உங்க பையனப் பாத்துக்க சொல்லிட்டு, கீழே இறங்கி உக்கார்ந்திட்டாங்க அத்தே." எனவும் நிச்சலமான விழிகளில் ஒரு ஒளி..

"இருக்கட்டும் இன்னும் பத்து நிமிஷத்தில எல்லா சாங்கியமும் முடிஞ்சிடும். அப்புறமா போய்க்கலாம்." என.. எனக்கு ஒன்றும் புரியவில்லை.


"என்ன அத்தை இவ்வளவும் பண்ணிட்டு மேடைல நிக்கலைன்னா எப்படி ?வாங்க.." என மெதுவான குரலில் சொல்லி கையினைப் பற்ற விழைய,
தன் கரத்தை உயர்த்தி
இறுகப் பற்றிக் கொண்டவருக்கு அசையும் உத்தேசமே இல்லை.


அமைதியான முகத்துடன் ஏறிட்டவர்,

" பணங்காசு, சொத்து, சொகமெல்லாம் பங்கு கொடுத்திடலாம்.. இந்தா எடுத்துக்கோ.. போன்னுடலாம்.. ஆனா விட்டுக் கொடுக்க முடியாததுன்னு ஒன்னு இருக்குல்ல.

நான் அங்கே இப்போ வரலை."
எனவும்,
எனக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது.

மனமொத்த தம்பதி.. ஆதர்ஷ பெரியவர் என்று எண்ணியவரின் பிம்பங்களில் ஏதோ கீறல் விழுவது போன்ற உணர்வில் வடிவு அத்தையையே பார்த்தவாறு இருந்தேன்.


"கண்ணகி, மாதவியையும் மணிமேகலையையும் காபந்து பண்ணிருந்தா.. மதுரை எரிஞ்சிருக்காது.

கணவனது உரிமை கழுத்து தாலி வரை மட்டும்தான்னு நிறுத்தி, கண்ணகி கோவலனை தன் பார்வைக்குள்ளேயே வச்சிருந்தா அவன் உயிரும் போயிருக்காதுல்ல."

என்றவர் முகம் வழக்கமான அமைதிக்கு திரும்பியிருக்க கண்களின் பளிச்சிட்ட ஒளி குறைந்து சாந்தம் மீண்டும் குடி கொண்டது. ஏதோ யோசித்தவராய் சிறுமூச்சு வெளியேற்றியவர், எழுந்து
மண்டபத்தினை நோக்கி நடக்க நானும் பின்தொடர்ந்தேன்.


அமைதியான நடையில்
சென்றவர், மேடை கீழே இருந்த முன்வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்த கணவரை நெருங்க, அவரை நிமிர்ந்து பார்த்த ரத்தினம் மாமா சட்டென்று பார்வை தாழ்த்தி, எழுந்து அடுத்த நாற்காலியில் அமர, அமைதியாய் அந்நாற்காலியில் அமர்ந்தார் வடிவு அத்தை.


இரு நாற்காலிகளுக்கும் இடையே இருந்த இடைவெளி பலநூறு கிலோமீட்டர் போலத் தோன்றியது.. எனினும் மாமாவால் இஞ்ச் அளவு கூட அத்தையின் பார்வைச் சங்கிலியினைத் தாண்டி நகர முடியாது என்றும் தோன்றியது..


**********************
 

தாமரை

தாமரை
அன்புத் தோழமைகளே எப்படி இருக்கீங்க.💝💝😍😍😍 ஏதோ வேறு உலகில்.. தொடர்ந்து கொண்டே இருக்கும், கொடுங் கனவில் வாழ்வது போன்ற உணர்வு எனக்கு.😅😅

எழுதவே தோனலை. ஒரு வழியா ஒரு சிறுகதை எழுதிட்டேன்💓💓💓💓💓💓 இதை ஆரம்பமா வச்சு அடுத்தடுத்து நமக்கு பிடித்தமான கனவு உலகங்களை சிருஷ்டிக்கலாம்னு ஒரு நம்பிக்கை வந்திட்டது.


இந்தச் சிறுகதை.. ஒரு நிஜ சுந்தரவடிவைப் பார்த்த தாக்கத்தில் எழுதியது. இவங்களைப் போன்ற சுந்தரவடிவுகள் நிறைய இருக்காங்க. நீங்க கூட பார்த்திருக்கலாம். அவங்களை விமர்சிக்கவோ அவங்க வாழ்க்கையைப் பற்றி கருத்து சொல்லவோ நான் இதை எழுதலை. இது சரியா தவறான்னு கேள்வியும் எனக்கு எழல. அவங்க வாழ்க்கை அது. ஏதோ ஒரு விதத்தில ஜெயிச்சு தன் நிலையில் உறுதியா இருக்கிறாங்கன்னு மட்டும் தோனுச்சு. அதை சிறுகதையாக்கிட்டேன்.
இந்தக் கதை பற்றி என்னுடன் பேச நினைப்பவர்கள் "அன்புடன் தாமரை" த்ரெட்க்கு வருக வருகவே😍😍




மீண்டும்💓💓💓 மீண்டும் சந்திப்போம்.

லவ் யூ ஆல் டியர்ஸ் 💝💝💝💝
 

sivanayani

விஜயமலர்
மிக மிக அழகான கதை. நிறைய சுந்தர வடிவு இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். "கண்ணகி மாதவியையும் மணிமேகலையையும் காபந்து பண்ணிருந்தா.. மதுரை எரிஞ்சிருக்காது. கோவலனை கணவனது உரிமை கழுத்து தாலி வரை மட்டும்தான்னு தள்ளி வச்சு தன் கண்பார்வைல வச்சிருந்தா அவன் உயிரும் போயிருக்காதுல்ல" மனதின் தெளிவு, ஆழம், அப்படியே உருக்கி எடுத்துச்சு.
👏👏👏👏👏👏👏👏👏👏👏
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தாமரை,

நிழலாய் தோன்றும் நிஜமே...!

நிஜத்தின் நிழல்
தொடரும் போது...
அகத்தின் சுழல்
இடரும் மாது...!

ஆயிரம் லட்சம்
அகிலத்தில் உண்டு...,
தீவிரம் உச்சம்
உலகத்தில் கண்டு...,
பாயிரம் மிச்சம்
கலகத்தில் விண்டு...
சாவிரம் பட்சம்
சமூகத்தில் ஆண்டு...
கடைத்தேறும் காலம்
கலியுகக் கோலம்....!

உண்மையின் உருக்கம் மனதோடு பூட்டி வாழும் எம் குலப் பெண்டீரின் மனம் சொன்ன விளக்கம், அற்புதம் ஆனால் வேதனை தீராத சாதனை சொன்ன இலக்கு. பேரழகு தாமரை.

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி

 

தாமரை

தாமரை
ஒரு குட்டிக்கதை.. முன்பு எழுதியது.. படிச்சு சிரிக்கலாம்..பயப்படலாம் ..ஃபீல் பண்ணலாம்.. திட்ட மட்டும் படாதூ🙈🙈🙈🙈🙈 மீ பாவம்.
 
Last edited:

தாமரை

தாமரை
21498

#குட்டிக்கதை, தலைப்பு எல்லாம் வைக்கல, நீங்களே நல்லதா ஏதாச்சும் ஜொள்ளளலாம்😋

தன் வீட்டின் மாடியில் துணியைக் காயப் போட்டுக் கொண்டிருந்தவளின்.. மனதில் அவளவனின் ஈர நினைவுகள்.. பல மாதங்களாக.. முத்த நீரூற்றி.. அணைப்புக் கணகணப்பூட்டி வளர்த்த காதல்..


"பல மாதங்கள் பொறுத்தவள் சில நாட்கள் பொறுத்துக் கொள்." என்று விட்டு போனவனின் குரல் கேட்காமல்.. காதுகளே வெறுமையாய் இருக்கும் உணர்வு..

தடதடவென கேட்ட காலடி ஓசையில்.. தனது தம்பியாய் இருக்கும் என சோம்பலாய்த் திரும்பியவளின் விழிகள் விரிந்தன.

அவன்... கண் சிமிட்டினாள்.. அவனே தான்..
இறுக மூடித் திறந்தாள்.. அவனே தான்..

ஏனிப்படி இருக்கிறான்.. தலையும் கோலமுமாய்.. அழுக்கு ஆடையுடன்.. சோர்ந்த முகத்துடன்.. அவளறிந்த அவன் இப்படி இல்லை .. சுற்றுமுற்றும் பார்த்தவள்.. வேகமாய் நெருங்கினாள்..


" ஒரு ஃபோன் பண்ணல.. நேர்ல வந்து குதிக்கிற.. லூசா நீ.. அதும் இங்கே.. எங்க வீட்ல யாரும் பார்த்தா... கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா.. " என்று படபடத்தவளை ஒரு கை உயர்த்தி தடை செய்ய...

"என்னாச்சு.. உங்க வீட்ல ஏதும் பிரச்சனையா.."

என்றவளை தலையசைத்து நிறுத்தியவன், "அதெல்லாம் ஒன்னுமில்ல.. எல்லோருக்கும் சம்மதம் தான்..... சீக்கிரமே.. என் ஃபேமிலியோட வந்திடுவேன்.. உங்க வீட்ல யாரும் ஏதும் சொன்னா.. தூக்கிட்டு போய்னாலும்.." என்றவனிற்கு மூச்சு வாங்கியது..

வேகமாக நெருங்கியவளை.. அவன் தடுக்க முயன்றும் முடியாமல்... தாவியிருந்தவள்.. வழக்கமாக அவன் கேட்டாலும் தராததை.. தானே.. வள்ளியாக மாறி வாரி வழங்கிக் கொண்டிருந்தாள்..

"ஹே விடுடி.." என்ற இதழ்கள் ஒலி எழுப்ப வழியின்றி அடைபட்டன.

விரிந்த அவனின் விழிகளில்.. நிச்சயமாக பரவசம் இல்லை.. அவசரமாக விலக்கித் தள்ளியவன்.. தலையைப் பற்றிக் கொண்டு.. "அடிங்.". என்றவன்.. "முதல்ல போய் வாயைக் கழுவு.. மவுத் வாஷ்.. ஆன்டிசெப்டிக் சோப் எதனாச்சும்.."
என்று பதற..

"ம்... ப்ளீச்சிங் பவுடர்.. டெட்டாலை விட்டுட்டுயே.."
எனவும்..

"ம் ம்.. அதச் செய் முதல்ல.. என்னைக் காணாம.. என் மெஸேஜ் இல்லாம ஏதும் தப்பா நினைச்சு கஷ்டப்படுவியேன்னு வந்தேன்..என்னடி.. நீ " என்றவன்.. தலை கோதி ... தவிப்பாய் வானை வெறித்தவன்.. திரும்பி..
பரிதாபமாய் சொன்னான்..

"எனக்கு.. கோவிட் பாஸிட்டிவ்.. ஐஸோலேஷன்ல இருந்து தப்பிச்சு வந்தேன்.. உன் கிட்ட லவ் மேட்டர் ஓகே ஆனதைச் சொல்ல..."

😶😶😶😶😶

#stay_home
#social_distance
#no_kiss

@Ammubharathi போட்டுட்டேன்.. இதெல்லாம் ஒரு கதையான்னனு காறி துப்புதல் தடை செய்யப் படுகிறது.. கொரோனா பயம்😝.. உங்களது தலையில்.. லேஏஏஏஏசாக... வலிக்காமல், நீங்களே தட்டிக் கொள்ளவும்...😜😜😜😜😜😜
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா செம்ம முதல் கதை வாசித்து ஒரு மாதிரி மனம் கணத்து போய் இருந்தது. இரண்டாவது செம்ம. Stay home stay safe social distancing ellam ok no kiss puthu puraliyaa irukku.
 

தாமரை

தாமரை
அக்கா செம்ம முதல் கதை வாசித்து ஒரு மாதிரி மனம் கணத்து போய் இருந்தது. இரண்டாவது செம்ம. Stay home stay safe social distancing ellam ok no kiss puthu puraliyaa irukku.
அது மாதிரியான தீர்க்கமான சிந்தனை எனக்கு மட்டுமே வருதே வாட் டூ டூ டா,, 😛😛😝😝😝😝😝😝,

நன்றி டா மதி மா😍🥰😍🥰😍
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது மாதிரியான தீர்க்கமான சிந்தனை எனக்கு மட்டுமே வருதே வாட் டூ டூ டா,, 😛😛😝😝😝😝😝😝,

நன்றி டா மதி மா😍🥰😍🥰😍


நல்ல வேளை எனக்கு கல்யாணம் முடிந்து விட்டது. 😝🤪😜
 
Status
Not open for further replies.
Top