All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆஆஆஆ, என்னால முடியல... அதுதான் saakshi வந்ததும் நானும் வந்துட்டேன்.... என்ன சொல்றதுன்னே தெரியல... கோவம் கோவமா வருது கண்டிப்பா ரெண்டு wife கூட இருக்குறமாரி கதைய முடிக்கமாட்டீங்கனு நினைக்கிறன்.... கதைய முடுச்சுட்டு வரேன்...
தனசுதாவின் பிரிக்க முடியாத பந்தம். மருத்துவரான வம்சிகிருஷ்ணா தனது மனைவி சாக்ஷி விபத்தில் இறந்துவிட்டதால் மகளுக்காக ப்ரியம்வதாவை மறுமணம் செய்கிறான். தாயற்ற ப்ரியம்வதா தனக்கு குழந்தை பிறக்காது என்று அவன் குழந்தையை மனமார ஏற்றுக் கொண்டு மறுமணம் செய்கிறாள். சாக்ஷியை மறக்க முடியாத வம்சியின் மனம் ப்ரியம்வதா முதல் மனைவி திரும்ப வந்தால் தான் அவனது வாழ்வை விட்டு சென்றுவிடுவதாக சொல்லும் வாக்குறுதியாலும், அவளின் அன்பாலும் மனம் மாறி அவளை ஏற்றுக் கொள்கிறான். அவளது உடல்நிலையை சரிசெய்கிறான். அவள் கருவுற்று இருக்கும் பொழுது சாக்ஷியின் வருகை. இதனால் இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
Starting to end the story is very nice all characters name super lovely update and nice finishing expecting to ur next story
இது நான் படிக்கிற உங்களுடைய முதலாவது கதை. யாரோ review பண்ணாங்க உங்க கதையை. சும்மா படிக்கலாமேன்னு வந்தேன் அப்படியே மூழ்கிட்டேன். மிகவும் அருமை .
வம்சிகிருஷ்ணா நல்ல கணவன், நல்ல மகன், நல்ல தகப்பன், நல்ல நண்பனும் கூட. முதல் மனைவியின் நினைவுகளில் மூழ்கி அப்புறம் நிதர்சனத்தை உணர்ந்து வாழ ஆரம்பிப்பவன்.
ப்ரியம்வதா ஒரு மலரிலும் மெல்லியவள். அம்முவுடனான நெருக்கம் மற்றும் அவள் பொழியும் தாயன்பு பெற்றால் மட்டும் தான் தாயில்லை என்று உணர வைக்கிறது. விஷ்வா வம்சி மற்றும் பிரியா விட்கு ஒரு தூண்.
ஸ்மிதா இப்படி பட்ட கேடுகெட்ட ஜென்மங்களும் நம் மத்தியில் வாழத்தான் செய்கின்றன. பயிர்களின் நடுவே களை போல .
ஆரம்பத்தில் இருந்தே பாசம் ,கோவம், விரக்தி, காதல், தியாகம்,துரோகம் , பழிவெறி போன்ற உணர்வுகளால் கதையை நகர்த்தி சென்று எம்மை கதையுடன் ஒன்ற வைத்துவிட்டீர்கள். கொஞ்சம் எழுத்து பிழைகளில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் மிக சிறப்பாக இருந்திருக்கும். நான் படிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன் .