நயனிமா சூப்பர் சூப்பர் சூப்பர் மா.....
அன்பினை அறியாத நாயகி..தாயில்லை.. தந்தை இருந்தும் பிரயோஜனமில்லை....அவளூடைய ஏக்கத்திற்கு விடையை போல வருகிறான் ஒருவன்...அவளை மணம் புரிகிறான்..எண்ணற்ற கனவுகளுடன் திருமணவாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறாள் நம் நாயகி அலர்...விதியின் கோர தாண்டவத்தால் அவள் கணவன் ஒரு விபத்தில் தன் நினைவை இழக்கிறான்..உலகத்தோடு போராடி தன்னையும் தன் கணவனை பாதுகாத்து கொண்டிருந்த வேளையில் கணவன் காணாமல் போகிறான்...அவன் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டதை நம்பாமல் அவனை தேடிக்கொண்டு செல்லும்போது தன் கணவனுடைய அண்ணனை சந்திக்கிறாள்..அவன் தான் தன் இதய நாயகன் என்பதை அறியாமல் அவனுடன் போராடுகிறாள்.
நாயகன் __ கயவர்களின் சூழ்ச்சியால் தன்னுடைய குடும்பத்தின் உறுப்பினர்களான தாய், தந்தை, தம்பி தங்கை என அனைவரையும் இழந்து வெஞ்சினத்தோடு பகைவர்களை பழிவாங்க துடிக்கும்போது அவர்கள் தலைமறைவாகின்றனர்....தன்னுடைய தாத்தா பாட்டியை பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்து பகைவர்களை தேடிக்கொண்டிருந்த வேளையில் தன் தம்பி உயிருடன் சுயநினைவின்றி இருப்பதை அறிந்து தன் வீட்டிற்கு கொண்டு வருகிறான்....
இந்த சமயத்தில் தன் தம்பியை தேடிவந்த பெண் தன் தம்பி மனைவி என்பதை அறியாமல் மனதை பறிக்கொடுக்கிறான்....அறிந்த பின் தவிக்கிறான்....இருவரிடையே மோதல்...அவனுடைய தம்பி மரணதருவாயில் இருக்கும்போது தன்னுடைய மனைவியை ஏற்றுக்கொள்ளுமாறு சத்தியம் பெற்று மரித்துப்போகிறான்.....தன் இதயம் கவர்ந்தவன் இவனே என்பதை அறிந்தும் சமுகத்திற்கு பயந்து ஒதுங்க நினைக்கும் நாயகியை எப்படி வம்படியாய் கரம் பிடித்து தன் பகைவர்களையும் அழித்து நம்முடைய நாயகன் எப்படி வெற்றிப் பெறுகிறான் என்பதே இந்த கதை......
இதை தன்னுடைய பாணியில் கொடுத்திருக்கிறார் நயனிமா....
வன்முறைக்கு தீர்வு வன்முறையாகாது என்ற வாதம் எழலாம்....கருநாகம் ஒன்று நம்மை தீண்ட வரின் பயந்தவன் பதறி ஓடுகிறான்..துணிந்தவன் எதிர்த்து நிற்கிறான்..அதை அழிக்கிறான்....பயந்தவனுக்கு ஏதும் நேரிடலாம்...அப்படிதான் ஏகனும் தீமைக்கு எதிர்த்து நின்கிறான்....ஜெயம் பெறுகிறான்....
நயனிமா
இந்த கதையில் உங்களுடைய எழுத்தின் வண்ணத்தால் நிறைத்திருக்கிறீர்கள்...
காதலுக்கு எஸ்.ஜே. சூர்யா
குடும்பத்திற்கு விக்கிரமன்
நகைச்சுவைக்கு சுந்தர். சி
ருத்ர தாண்டவத்திற்கு பாலா
அதிரடி மாஸ் க்கு சங்கர் போல எல்லாம் கலந்த கலவையாய் நீங்கள் செந்தீயே உயிர் மெய் தீண்டாயோ.... என வந்தீர்கள்.
மிக மிக நன்றி மா இப்படி ஒரு கதையைப்படிக்கும் அருமையான வாய்ப்பை தந்தமைக்கு
எல்லா கதாபாத்திரங்களும் அருமை....ஏகனுடைய ஆண்மை வீரம் காதல் கோபம் ஆக்ரோஷம் எல்லாம் அருமை ....குடும்பத்தை நேசிப்பது அதை பாதுகாக்க போராடுவது எல்லாம் அருமை....அலருடன் அவன் வரும் காட்சிகள் யாவிலும் உங்கள் கைவண்ணத்தில் உணர்வுகள் கொஞ்சி விளையாடியது....காதல் ஆகட்டும் மோதல் ஆகட்டும்....இரண்டுமே...
அலரின் பெண்மை அழகு நளினம் தன் கணவனின் பகைக்கு முடிவுக்கட்ட தன் உயிரையே பணயம் வைக்க துணிவது என மனதை கவர்கிறாள்....
தாத்தா பாட்டி அடித்த லூட்டி மறக்கவே முடியாமல் நெஞ்சில் நிற்பவை......
நல்ல இயற்கை காட்சிகள் பலவகை பழங்களின் அறிமுகம்
அதனுடன் இரத்த ரொமான்ஸ்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்....
கடைசியாக எங்களுடைய அரட்டையையும் ரசித்து அதை தொந்தரவாக எண்ணாமல் முகசுளிவில்லாமல் ஏற்றுக்கொண்டதிற்கு நன்றிமா....
நான் உங்களை காதலிக்கிறேன் நயனிமா
அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்...