View attachment 3068
ஹாய் ராஜி
சாரி ரொம்ப லேட்டான ரிவ்யூக்கு...
" சிறகை விரித்தாட ஒரு சுற்றுலா" ன்னு சொல்லலாம்....அவ்வளவு அழகான ஒரு எக்ஸ்பிரியண்ஸ்...
செலவே இல்லாம இண்டியா புல்லா சுத்தி காண்பிச்சீட்டீங்க...இன்றும் பல பேரோட நிறைவேறாத கனவு பிரண்ட்ஸ் கூட டூர் போகணும்ன்றது....அதை கதையா படிக்கும்போது நாமளும் அவங்களோட பயணிக்கறது போல ஒரு உணர்வு....இதுக்காக நிறைய உழைச்சிருக்கீங்கன்து ஒவ்வொரு இடத்தை பத்தின விளக்கத்திலும் தெரியுது....
சஞ்சய் - இவன் கௌதம் போல இருப்பான்னு நம்பி வந்து ஏமாந்துட்டேன்....
இவன் வேற மாதிரி இருக்கான்....
தனக்குள்ள இருக்கற சோகத்தை மறைச்சு மத்தவங்களை சந்தோஷபடுத்தி பார்க்கறது...எப்பவும் எல்லாரையும் சீண்டிக்கிட்டே இருக்கறது....மித்துக்கிட்ட மயங்கறது....அதையும் ஓப்பனா சொல்றதுன்னு செமையா ஸ்கோர் பண்றான்.....
மித்ரா - சஞ்சுக்கு சரியா அவனோட வம்பு வளக்கறது....தன் குடும்பத்தை தாங்கறது....தொழில்லை கவனிக்கறதுன்னு சூப்பர்....
அதிலும் சஞ்சு அவன் லவ்வை சொல்லும் போது அவ மறுக்க இடம் செம....லவ் எல்லாரும் ஒரே நேரத்துல உணர மாட்டாங்க....ஒருத்தருக்கு தோணினா அடுத்தங்களுக்கும் தோணனும்னு கட்டாயம் இல்ல....
பிருந்தா - அடுத்து எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் ....இன்றைய பல திருமணம் ஆன பெண்களின் பிரதிநிதி....அவளோட சிங்கப்பூர் டூர் அனுபவம் குழந்தைகளோட டூர் போற எல்லா பெண்களும் ஒரு முறையாவது அனுபவிச்சு இருப்பாங்க....தன் அருமையை அவங்க உணரணும்னு நினைச்சாலே தவிர அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்த போது அதை பயன்படுத்தி அவங்களை பழிவாங்க நினைக்கலை....இதுவும் பல பெண்களோட மனநிலைதான்....
நிஷா - இன்றைய தலைமுறை பெண்களின் பீஸ்....எல்லா சந்தோஷமும் அமைந்த வாழ்க்கை இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு கவலைபடற கேரக்டர்.....
அடுத்து அந்த இரண்டு பசங்க....மிடில் கிளாஸ் வாழ்க்கையையும் நிலையில்லாத மனசையும் அழகா பிரதிபலிச்சு இருக்காங்க....
மொத்தத்துல சூப்பர் எக்ஸ்பீரியண்ஸ்....
View attachment 3067