'என் உயிரின் வலி (கேள்வி)யில் மரித்து உயிர்க்கிறேன்'..
******************************************************************
இது வழக்கமான குடும்ப காதல் கதை இல்ல..
ஒவ்வொரு நாளும் ...ஒவ்வொரு முறை செய்தி படிக்கும் போதும் பெண்களின் மனசை கசக்கி பிழியுற ஒரு நிஜம்...
உண்மையான நல்ல ஆண்மகன்கள் வெட்கி வேதனை படும் நிஜம்...
மஹாபாரதி....சாக்ஷி...
இரு பெண்கள்...இவரகளை நாம் தினமும் நியூஸ்பேப்பர் ல பார்க்குறோம்...
பொதுவான ஒற்றுமை..பாலியல் வன் கொடுமை....
3 மாத சிசுவிலிருந்து...75 வயது பட்டி வரை ஆட்படும் கொடுமை..பெண் எனும் ஒரே வடிவத்தின் காரணத்தினால்..
அதற்கு நீ ஒரு நீதி தேவதையா மாறி...தீர்ப்பு சொல்லிருக்கன்னு எனக்கு தோணுச்சு..பல இடங்கள்ல மனம் உடைந்து கண்ணீர் வந்தது...இத்தனைக்கு எந்த விதமான கொடூரமான வார்த்தைகளை இல்லை இந்த கதைல..
அவ்வளவு நாசூக்கான வரிகள் , வார்த்தைகள் மூலமா அந்த கொடுமைகளை உணர வைக்குற..அதுக்கான தீர்ப்பையும் அவ்ளோ அழகை தெளிவா கொடுத்துருக்க...
பெண்கள் குழந்தைகளுக்கான சட்டங்கள்..பற்றி அவ்ளோ தெளிவா ..எளிமையான நடைல புரியுற மாதிரி கொடுத்துருக்க.
மன மாற்றம் வரணும்..சட்டங்களும் கடுமை ஆகணும் னு ஒரு பெண்ணா அவுங்க காண்கிற கனவை..இதுல நடத்தி காட்ட முயற்சி பண்ணிருக்க.
இந்த சின்ன வயசுல உன் தெளிவும் தீர்க்கமும்... ரொம்பவே வியப்படைய வைக்குது..டா பேபி
இது நமக்கான கதை அல்ல பாடம்..
ஒவ்வொரு பெண்ணும்..பெண் குழந்தை வச்சுருகவுங்களும் படிக்க வேண்டிய பாடம்..
சத்ய வாணி ..Hatsoff பேபி...
லவ் யூ for எவர்...