தாமரை
தாமரை
நன்றி நன்றி ஜோ மா கதையின் தொடக்கத்தில் இருந்தே, கருத்துக்களை பகிர்ந்து உற்சாகமூட்டி, வழி நடத்தினீர்கள்.கோடையில் ஆரம்பித்து ஜப்பானில் நிறைவு செய்ததே தனி அழகு தான். எபிலாகை ரொம்பவும் பொறுமையாக வாசித்தேன்.
வசீயும் கருணும் சேர்ந்தது ஏதோ எங்கள் வீட்டு பிள்ளைகள் சேர்ந்தது போன்ற மகிழ்வை அளித்தது.
அருமையான கதைக்களம், பிரமிப்பான வர்ணனைகள், சிந்திக்கவூட்டும் தகவல் களஞ்சியங்கள், தொய்வில்லாம கதை சொல்லும் பாங்கு, உடன் அழைத்து செல்லும் கதை மாந்தர்கள் இப்படி சொல்லில் அடங்கா அனைத்தும் இந்த கதையில் அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் எழுத்து பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
இப்போதும்.. உங்களில் அன்பும்.. மிக மிக அழகுமான முழுமையான பின்னூட்டத்தால் மகிழ்வு எனும் மேகத்தில் ஏற்றி விட்டீர்கள்..
எனக்குமே உள்ளத்தளவில் மிகுந்த உற்சாகமூட்டிய கதை, அதனை உங்களிடம் அப்படியே சேர்க்கவே, வந்ணனைகள் அதிகம் பயன்படுத்தினேன். அதனை நீங்கள் ரசித்து சொல்லும் போது.. ஏதோ சாதித்த உணர்வு.
வனங்கள், காடுகள், பூமி, உழவு இவற்றில் ஆராவம் அதிகம், நுண்ணியிர்கள் படுத்தும் பாட்டினைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நன்மை செய்யும் நுண்ணியிர்களால் தான் உலகம் தாளகதியில் இயங்குகிறது என்பது றிந்து, ஆர்வம் வந்து, தெரிந்து கொண்டதை கதைப் போக்கில் இணைத்தேன்.. அவைகள் கவனிக்கப் பட்டதில் மிகுந்த மன நிறைவு..
வாழ்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. எழுத்து மூச்சு போல, கடைமைகளின் ஊடே இதுவும் உள்ளே உருண்டு கொண்டே இருக்கும்.. அடுத்த கதைக்கான அழைப்பு மனதுக்குள் ஒலிக்க ஆர்மபித்ததும் வந்து விடுகிறேன்.. முக்கிய கடமைகளை முடித்து விட்டு