தாமரை
தாமரை
உண்மை தான்..அக்கா அதல்லாம் தன்னால வரும்.ஒரு 10நிமிடம் அமைதியா இருந்தால் 2பக்கத்திற்கு எழுதிரலாம் pl.............
பார்க்கிறேன் டா. வித்தியாசமான சீன் யோசிக்கனும்.. அவ்..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
உண்மை தான்..அக்கா அதல்லாம் தன்னால வரும்.ஒரு 10நிமிடம் அமைதியா இருந்தால் 2பக்கத்திற்கு எழுதிரலாம் pl.............
வணக்கம் தூரிகா மாவணக்கம் அக்கா,
கடல்தாகம் தீர்க்கவா மழைத்துளியே!
கவித்துவமான தலைப்பு...ஆயிரம் கடல்துளிகள் கையருகே இருந்தாலும் ஒரு மழைத்துளி தாகத்தைத் தணிப்பது போல் தணித்து விட முடியாது
நீங்கள் போடும் படங்களை எல்லாம் பார்த்துப் பார்த்து ஆவல் பெருகினாலும் என் பொறுமை பற்றித் தெரியும் என்பதால் கதை முடிந்து படிப்பது என்று காத்துக் கொண்டிருந்தேன்...worth waiting story எனப் படித்ததும் புரிந்து விட்டது.
கருண் சாகர தொண்டைமானுக்கு அருணாச்சலம் perfect match. கதை முழுதும் அவனே என் மனதில்...
மதுவர்ஷினி...ப்பா...என்னா make இவ என்பது போல் ஒரு கேரக்டர்...சில நேரங்களில் இவள் வரும் இடங்களில் அடுத்து ‘ எங்க நாம போறோம்...கேஎஸ் கார்டனுக்கு... எங்க நாம போறோம்...கேஎஸ் கார்டனுக்கு...’ என்று டோரா குரலில் பாடி விடுவாளோ என்று கூடத் தோன்றியது எனக்கு...ரோஹித்துக்கு இவள் வைக்கும் நாமதேயங்கள்... செண்பாக்காவுக்கு ஹார்ட் விடுவது...என இவள் செய்யும் அட்டகாசங்கள் மற்ற நாயகி பாத்திரங்களைப் போல் சட்டெனக் கடந்து விடும் பாத்திரமல்ல இவள் என்பதைக் காட்டியது.
கருண்சாகரின் புயல் வீசிய வாழ்வில் தென்றலாய் வந்தவள்... தேவதையாய் வாழ்பவள். வாழ்க வளமுடன்!
விஷ்ணு விஷால்... ஆண் பெண் நட்பு அழகாக அமைந்து விட்டால் அது வாழ்வில் சுவாரசியம் கூட்டும். ‘தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாதே’ என்பது போல் மதுவுக்கு எல்லாமாக... தேவைப்பட்ட போது அவள் சரிபாதியாகப் போகிறவனிடமே எச்சரிக்கை செய்யுமளவு ஒரு நண்பன் கிடைப்பதெல்லாம் வரம்... ஆசீர்வதிக்கப்பட்டவள் வர்ஷினி
இன்னும் உதய் சாகர், கேசி( ரமணிம்மாவின் கதாபாத்திரங்களில் என்னால் மறக்க முடியாத பெயர்), ஹசீனா என அனைத்து கதாபாத்திரங்களுமே நிறைவாக இருந்தன.
காடுகள் அழிப்பு, நிலவளத்தை பாதிக்கக் கருவேலங்காடுகள், நீர்வளத்தை பாதிக்க ஆகாயத்தாமரை போல் ஆங்கிலேயர்களால் மலைவளமும் திட்டமிட்டுக் கெடுக்கப்பட்டிருக்கிறது போன்ற பல அறியாத புதிய விஷயங்களைக் கொடுத்ததன் மூலம் சாதாரண கதையாக இருந்தாலும் அதற்கான விவரங்களுக்காக எத்தனை மெனக்கெட்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது.
Hats off for that effort u took. Very informative story.
ஒரு இனிய கவிதை வாசித்த உணர்வு இன்னும் சில நாட்களுக்கு என மனதில் இருந்து கொண்டிருக்கும் என்ற கடைசி வார்த்தையுடன் இன்னும் பல படைப்புக்கள் இதைப் போல் வழங்கிட வாழ்த்தும்
என்றும் உங்கள் நலம் நாடும்
தூரிகா
ஆஹா வாசூ மா அழகோ அழகு.. நட்பிற்காக.. மை டியர் வீவீ..க்காக..தாமரைமா....❤❤❤
என்ன சொல்ல....நட்பதிகாரம்....நிச்சயம்..
ஏங்க வைத்துவிடுகிறீர்கள்....இதே போல்
நண்பன் ஒருவன் வேண்டுமென...
ஆயிரம் சண்டைகள்...
காரணமில்லா காலைவாருதல்...
குடுமிபிடி சண்டைகள் கூட கோலகலமாய்...
கடைசியில் நட்பின் பெருமை சொன்னீர்களே...
வரிகளா அவை ...எத்தனை உண்மை...
எதிர்பார்ப்பும் இல்லை ஏமாற்றமும் இல்லை ....
ஒருவரின் நலன் மற்றவரினுள் ...
காதல் கூட பிச்சுகொள்ளும்...கடைதேறாது என தெரிந்தால்
நட்பு...உருவத்தால் இல்லாவிட்டாலும்...
உயிர்ப்பாய் உணர்வாய் தொடரும்❣❣❣
வாழ்த்துக்கள்❤❤❤❤
நன்றி நன்றி ஜோ மா.. உங்களோட அருமையான கருத்துப்பகிர்வுகளால்.. வழிநடத்தி கொண்டுபோனீங்க. உற்சாகம் தந்தீங்க.வாவ், செம்ம கவித்துவாமாய் இருந்தது முடிவு. முடிவுன்னு சொல்ல கூடாது, அவர்களின் பயணம் இனிதே ஆரம்பாகிற்று.
அருமையான கதை மாந்தர்கள் கருண், மது, சுகர் ஜி, விவி, சீனா தானா, தீபி, ரோஹித், அருண், வத்சூ, கேஸ் தலைவர், செம்பாக்கா, மீனாக்கா, டேவிட், வள்ளி மற்றும் கியூபி அனைவரும் கண்ணில் உலா வருகின்றனர்.
அருமை என்ற வார்த்தைக்கு வேறு வார்த்தை தெரியாதினால், அருமையோ அருமை.
வாழ்த்துக்கள் சிஸ்.
நன்றி நன்றி சாந்தி மாகதை ரொம்ப அருமை கொடைகானல நேராக பார்த்து வந்தமாதிரி ஒரு உணர்வு வர்ணனை யெல்லாம் ரொம்ப நல்லாயிருந்தது இளமை கலாட்டா காமடிக்கு பஞ்சமில்லை எல்லாம் சூப்பர்
தாமரை ma my name s Swapna. User name en daughter name la irukku.. her name is ஸ்ராவணி .. if dere s epilogue happy... KS romance innum paakka aasaiya irukku... or Ada 2nd parta kudutha kooda me happyநன்றி நன்றி வாணி மா
ஆஹா.. வழக்கம் போல என்று சொன்னதும்.. எனக்கு பெருமை தாங்கலை.. ஹி ஹி.. நமக்கும் தெரியாம நமக்கு ஒரு வழக்கம் செட் ஆகிருக்கு போலன்னு..
உங்களின் ஆதங்கம புரியுது மா..
எபிலாக்கா... ☺☺☺☺ யோசிக்கிறேன் மா..
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!
ஹாய் தாமரை!
கடலின் தீர்க்கம் - அது
காதலின் தீரத்தில்
மழையின் தீர்க்கமோ - அதன்
கூதலின் தூரத்தில்...!
கண்ணாமூச்சி
ஆடிய சாரலில்
கண்ணேறு பட்டதோ
காதலின் தூறலில்...!
தயக்கத்தில் ஓடிய
மழையவள் கண்டு...
மயக்கங்கள் கூடிய
கடலவன் கண்டு ...
இயக்கங்கள் நின்றதோ
ஆர்வலர் நெஞ்சம்!
பூக்கள் விடும் தூதில்...
மதுமகள் மயக்கம்
உயிர்த்திட்ட வேகம்...
சாகரனவனின்
சாகச விவேகம்!
படபடக்கும் பட்டாம் பூச்சி
தடதடக்கும் பட்டுப் பூச்சியாய்
பெண்மையின் நளினம்
காட்டிய எழிலில்...
பூத்திட்ட கண்களை
என்னவென்று நான் சொல்ல...!
பூஜை புனஸ்காரம்
தடபுடலாய் நடந்தாலும்,
முறுக்கும் துடுக்கும்
தடாலடியாய் உடைந்தாலும்,
நட்பின் நம்பிக்கை
நவரசத்தில் நர்த்தனமே!
காவிய நாயகன்
மலை நாட்டு மன்னவன்
சாகச சாகரன்
காரியக் கள்வன்
மிடுக்காய் இருந்தாலும்
எடுப்பாய் நிமிர்ந்தாலும்
வெடுப்பாய் திரிந்தாலும்
அடுக்கடுக்காய் ஆசைகளை
ஆழியாய் சுருட்டிய அழகு...
காப்பியப் பேரழகு!
கடல் கொண்ட மழையை
கண்கட்டு வித்தையாய்
நிச்சயித்த நிமிடம்...
ஒற்றைச் சொல்லில்
சால மஞ்சிகா இஷ்டமாயிந்தே!
சாகரம் தேடிய சாரல் மொழியில்,
சமரசம் பேசிய சாரல் வழியில்,
அஞ்சலி செய்த அஞ்சன விழிகள்...
மதுமகள் மனதை கொள்ளையிட்ட அழகு...
சாகரன் அவனின் பிரவாகப் பேரழகு!
உயர உயரப் பறந்தாலும்
உயர்வு நவிற்சியாய் வாழ்ந்தாலும்
உற்றவன் பார்வையில்
உருகும் பெண்மைக்கு...
இலக்கணம் எழுத
எத்தனை இலக்கியம்
ஏத்தமாய் வந்தாலும்
தாளாத தாகத்தில்
தவிக்க வைக்கும் தமிழே...!
உன் இலக்கிய மோகம்
தீராத மோகத்தில்
தகிக்க வைக்கும் எழிலே...!
கடல் தாகம் தீர்த்த
மழைத்துளி இன்று...
மன தாகம் தீர்த்த
தேன்துளி கண்டு...
தாமரை மகளை
வாழ்த்திடுவோமே!
தமிழ் அதன் பெருமை
போற்றிடுவோமே...!
ஆரம்பித்த நாள் முதல் தேடித் தேடி காக்க வைத்த நடையில், மனம் விதிர்த்தது.
கண் முன்னே காட்சிகள் ஓடி ஓடி பூக்க வைத்த நடையில், மனம் சிலிர்த்தது.
படபடப் பேச்சும், துறு துறு செயலும், கலகல நட்பும், நவரசம் சேர்த்த நடையில், மனம் சிரித்தது.
இலை மறைவாய் காதல் பயிர் வளர்த்த கடலின் பிரவாகம், மழையின் நிதானம், மனிதம் பேசிய கருவில், மனம் முதிர்ந்தது. எல்லாம் அழகு, அழகு பேரழகு!
இன்னும் இது போல் பல அருமையான கதைகள் நம் மனம் நிறைக்க என்றும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தித்து, வாழ்வாதாரம் எது என்ற கருவை, மனம் சிரிக்க வைத்த நடையில் வழங்கிய கதாசிரியருக்கு என் தாழ்மையான வணக்கங்களை செலுத்துகிறேன்.
தாமரை, என்றும் உங்கள் நல் வாழ்வுக்கும், நல்ல கருத்துள்ள கதைகளுக்கும், நல்ல நட்புக்கும் வாழ்த்துக்கள் தாமரை, நன்றி.
நன்றி நன்றி ப்ரியாமா.. உங்க கமெண்ட்ஸ்.. தரும் பாஸிடிவ் வைப்ஸ்Mam romba arumaiyaaga irunthachu kathai... Romba alaga konduponenga kathaiyoda suvarashyam entha idathulayum konjam kooda kuraiyave illa... Enga thalai ya ithukku appram eppa pakkarathu... I miss karun & Mathu sweety...but story romba seekirama mudinja mathri oru feel... Na eppadiyum innum oru 4 to 5 uds varum nu ninaichen mam..... Ungaloda stories yum ungaloda reply yum romba miss pannuven... Eppa thirumba varuvenga nu romba aavalaga ullen sisss.... Engalukkaga konjam seekirama vaanga... Thank you for the lovely story.... ❤
ஓ.. சூப்பர் எல்லா பெயர்களும் அழகா இருக்கு மா..தாமரை ma my name s Swapna. User name en daughter name la irukku.. her name is ஸ்ராவணி .. if dere s epilogue happy... KS romance innum paakka aasaiya irukku... or Ada 2nd parta kudutha kooda me happy