Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!
ஹாய் தாமரை!
கடலின் தீர்க்கம் - அது
காதலின் தீரத்தில்
மழையின் தீர்க்கமோ - அதன்
கூதலின் தூரத்தில்...!
கண்ணாமூச்சி
ஆடிய சாரலில்
கண்ணேறு பட்டதோ
காதலின் தூறலில்...!
தயக்கத்தில் ஓடிய
மழையவள் கண்டு...
மயக்கங்கள் கூடிய
கடலவன் கண்டு ...
இயக்கங்கள் நின்றதோ
ஆர்வலர் நெஞ்சம்!
பூக்கள் விடும் தூதில்...
மதுமகள் மயக்கம்
உயிர்த்திட்ட வேகம்...
சாகரனவனின்
சாகச விவேகம்!
படபடக்கும் பட்டாம் பூச்சி
தடதடக்கும் பட்டுப் பூச்சியாய்
பெண்மையின் நளினம்
காட்டிய எழிலில்...
பூத்திட்ட கண்களை
என்னவென்று நான் சொல்ல...!
பூஜை புனஸ்காரம்
தடபுடலாய் நடந்தாலும்,
முறுக்கும் துடுக்கும்
தடாலடியாய் உடைந்தாலும்,
நட்பின் நம்பிக்கை
நவரசத்தில் நர்த்தனமே!
காவிய நாயகன்
மலை நாட்டு மன்னவன்
சாகச சாகரன்
காரியக் கள்வன்
மிடுக்காய் இருந்தாலும்
எடுப்பாய் நிமிர்ந்தாலும்
வெடுப்பாய் திரிந்தாலும்
அடுக்கடுக்காய் ஆசைகளை
ஆழியாய் சுருட்டிய அழகு...
காப்பியப் பேரழகு!
கடல் கொண்ட மழையை
கண்கட்டு வித்தையாய்
நிச்சயித்த நிமிடம்...
ஒற்றைச் சொல்லில்
சால மஞ்சிகா இஷ்டமாயிந்தே!
சாகரம் தேடிய சாரல் மொழியில்,
சமரசம் பேசிய சாரல் வழியில்,
அஞ்சலி செய்த அஞ்சன விழிகள்...
மதுமகள் மனதை கொள்ளையிட்ட அழகு...
சாகரன் அவனின் பிரவாகப் பேரழகு!
உயர உயரப் பறந்தாலும்
உயர்வு நவிற்சியாய் வாழ்ந்தாலும்
உற்றவன் பார்வையில்
உருகும் பெண்மைக்கு...
இலக்கணம் எழுத
எத்தனை இலக்கியம்
ஏத்தமாய் வந்தாலும்
தாளாத தாகத்தில்
தவிக்க வைக்கும் தமிழே...!
உன் இலக்கிய மோகம்
தீராத மோகத்தில்
தகிக்க வைக்கும் எழிலே...!
கடல் தாகம் தீர்த்த
மழைத்துளி இன்று...
மன தாகம் தீர்த்த
தேன்துளி கண்டு...
தாமரை மகளை
வாழ்த்திடுவோமே!
தமிழ் அதன் பெருமை
போற்றிடுவோமே...!
ஆரம்பித்த நாள் முதல் தேடித் தேடி காக்க வைத்த நடையில், மனம் விதிர்த்தது.
கண் முன்னே காட்சிகள் ஓடி ஓடி பூக்க வைத்த நடையில், மனம் சிலிர்த்தது.
படபடப் பேச்சும், துறு துறு செயலும், கலகல நட்பும், நவரசம் சேர்த்த நடையில், மனம் சிரித்தது.
இலை மறைவாய் காதல் பயிர் வளர்த்த கடலின் பிரவாகம், மழையின் நிதானம், மனிதம் பேசிய கருவில், மனம் முதிர்ந்தது. எல்லாம் அழகு, அழகு பேரழகு!
இன்னும் இது போல் பல அருமையான கதைகள் நம் மனம் நிறைக்க என்றும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தித்து, வாழ்வாதாரம் எது என்ற கருவை, மனம் சிரிக்க வைத்த நடையில் வழங்கிய கதாசிரியருக்கு என் தாழ்மையான வணக்கங்களை செலுத்துகிறேன்.
தாமரை, என்றும் உங்கள் நல் வாழ்வுக்கும், நல்ல கருத்துள்ள கதைகளுக்கும், நல்ல நட்புக்கும் வாழ்த்துக்கள் தாமரை, நன்றி.

Last edited: