தாமரை
தாமரை
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!
ஹாய் தாமரை!
சாரல் சாமரம் வீச...
கடல் தாகம் ஏற்றிய காதையோ...!
கருணையில் கடல் அலை
நுரையாய் ததும்ப...
ஆழ்மனத் தேடலில்
ஆழ்கடலின் ஆரோகணம்!
உதயத்தில் கடல் அலை
செம்மையாய் துலங்க...
ஆண்மனத் தேடலில்
நீலக்கடலின் ஆரவாரம்!
தேடிய நேரத்தில்
நாடாத சொந்தம்,
வாடிய நேரத்தில்
வாராத பந்தம்,
கூடியே வந்தாலும்
கூடாதோ அந்தம்!
மூத்தவர் சொல்லை
முன்னின்று செய்ய
மூர்க்கமாய் நின்றாலும்
முடங்கும் கடலே...!
உன் தேடலின் பாடல்
புரியாத வீட்டில்...
உன் ஊடலின் தேடல்
முடிந்ததோ கூட்டில்!
காட்டில் வேங்கையாய்
விஸ்வரூபம் காட்டியவன்...
வீட்டில் அதிரூபமாய்
அவதாரம் தீட்டியவன்...
நாட்டில் நரசிம்மனாய்
இரணியரை வதைத்தானோ...?
கடலரசன் பிரவாகத்தில்
கண்ணிலே மின்னலாய்...
கற்பனையாய் விரிந்தாலும்
மழை சாரல் மெய் தீண்ட
மது மயக்கம் தீராதோ...?
வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
கருணின் நிலையை கவிதையாய் சொல்லிட்டீங்க செல்வி மா.. மிக மிக அழகு..
மயக்கமும் கலக்கமும் என்றுமே அவனுக்கு இல்லை.. கரைதல்தான் இருக்கும்.. செய்வான்..☺☺☺