All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

தன்னால் பேசும்
தன்னார்வ வித்தையில்
மழைமகள் பார்வையில்
கடலவன் பேச...
காருண்யம் வீசும்
சாகரம் கண்டு
சாயாத மனமும்
சாய்ந்தாடுதே!

கண்ணால் பேசும்
கண்கட்டு வித்தையில்
கடலவன் பார்வையில்
மழைச்சாரல் பேச...
மதுச்சாரல் வீசும்
சாமரம் கண்டு
சாயாத மனமும்
சாய்ந்தாடுதே!

மலையோடு பாதையில்
மலைக்கின்ற மனதில்
மழைமகள் பாட்டும்
மதுர ராகமே!
விழியோடு பாதையில்
விதைக்கின்ற விதையில்
கருவான மெட்டும்
ஏகாந்தமே!

இயற்கையின் நேர்த்தியில்
செயற்கையின் பூர்த்தியில்
காடு வளர்த்த காவலன் - இவன்
நாடு போற்றும் நல்லவன்!

பசுமையில் பாலையாய்
படர்ந்திட்ட காடாய்
பரிதவிக்கும் இயற்கையே...!
உன் ...
பரிமாணம் மாற்ற
பகுமானம் போற்ற
அவதரித்தானோ சாகரனே!

கதையோடு கருவாய்
காடு வளர்க்கும் காவியமே! - இது
நாட்டை உயிர்க்கும் ஓவியமே!

கழுகு மூக்குப் பாறையில்
பூத்துக் குலுங்கும்
பூம்பாறை ஏக்கம்...!
சாகர சங்கமத்தில்
சாஸ்வதமாகுமோ....
சமரசமாக்கம்...!

அருவிப் பாட்டில் ஆலோலம் பாட...
ஆசையில் பாய்ந்த மழையே! - உன்
அதிரடி கண்டு கை தொட்ட கடலின்
அதிர்வலை புரியுமோ சகியே!

படபடத்த நெஞ்சத்தில்
தடதடத்த உள்ளத்தில்
சடசடத்த மழையே...!
வெடவெடக்கும் கடலின்
தாகம் தான் தீர...
அடி எடுக்குமோ இனியே!


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:

தாமரை

தாமரை
எல்லாரும் பூம்பாறை kalamburaanga..... இந்த rohith David அண்ணா kita semma bulb வாங்குன பொங்கல் ku துணை வடை ah maa.... அவரு avanga ஊருக்கு பொங்கல் எல்லாம் thairiya சாலினி sollitaaru 😊😊😊😊😊...... David கொடுத்த Apple 🍏 semma..... Kalambitaanga enna enna அலப்பறை panra maa ava சினிமா heroine நினைப்பு மேடம் ku..... Kutty யானை ku avala அடையாளம் theriyuthu ஒரே குஷி avaluku...... Thottam semma maa... இப்போ அவன் vechi irukara thottam அரசாங்கத்துக்கு சொந்தமானது naala avan தாத்தா இடத்துல thottam veikkanum nu நினைச்சி kitu இருக்கான் மேலும் அங்க irukara மரம் எல்லாம் அந்த Birithish காரனுக namba manvalathayum thannir valathayum aazhikka antha maari செடி மரம் எல்லாம் vethachittu poitaanga.... Athai thaan azhichittu புதுசா ஒரு thottam poodanum nu இருக்கான் karun..... Paakamal avan ஆசை sikiram நடக்கணும்...... Udhay kita avan manasula ullathai sollitaan..... கழுகு பாறை avanuku romba romba pidicha இடம் போல அங்க பூ thottam poodanum ஆசை padraan.... Vasi யாமே paaruda... Just miss அவன் மட்டும் avala பிடிச்சி இழுக்க la naa enna aagi irukkum அவசரம் அவசரம் ellaathalayum....... Avanodaya அண்மை thodugai என்னமோ pannuthu avala..... Silent ah anga இருந்து vanthutaa... Super Super maa... Semma semma episode
சித்தூ மா 🥰🥰🥰🥰😍😍😍😍😍💖💖💖💖💖💝💝💝💝💝💝 வழக்கம் போல , you nailed all pins💟💖💟💖

ஆமா மா.. ஆனா கருண் தோட்டம் அவனது தான்.. அவன் புதுசா உருவாக்க நினைக்கிறது தான் தாத்தா சொல்லி அவன் பண்ண நினைக்கிறது எல்லாமே அவனின் தாத்தா அவனுக்கு கற்றுக் கொடுத்தது, அவன் தாத்தாவை ரொம்பவே மதிப்பான்.. அதனால தான் அதிலேருந்து அவனால சுலபத்தில மீற முடியல.

ஹீ ஹீ.. கொஞ்ச நாளாவே. வஷீ ன்னு தானே கூப்பிடுட்டு இருக்கான். நீங்க கவனிக்கலையா..🤭🤭🤭


ஆமா இருவருக்கும் நட்பு, பிடித்தம் இருந்தது.. அதிலே இருந்து..அடுத்த நிலைக்கு மூவ் ஆகிறாங்க.. பார்ப்போம்..
 

தாமரை

தாமரை
ஒவ்வொரு விதத்திலும்
கருண் மது ரெண்டு பேரும்
கவர்ந்து இழுத்துட்டே இருக்காங்க

விஷ்ணு ஹசீ சந்துல சிந்து
பாடுவது அழகு
கருண் பார்வையை அங்க
இருக்கற எல்லாருமே
சரியா படிக்கிறாங்க🤔😳🙄

அண்ணங்காரன் தம்பிய
புரிஞ்சுக்க முயற்சி
செய்றானா😏😔
ரொம்ப அருமையான பதிவு
நன்றி நன்றி சரோஜா மா🥰😍🥰😍🥰😍🥰

உங்களின் ரசனை எனது மகிழ்வு..

கருண் பார்வைக்கு அவ்ளோ பவர்😜😜😜😜

உதயன் புரிஞ்சிக்கலைன்னா.. நம்ம புரிய வச்சிடுவோம்.. சரோஜா மா..
 

தாமரை

தாமரை
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

தன்னால் பேசும்
தன்னார்வ வித்தையில்
மழைமகள் பார்வையில்
கடலவன் பேச...
காருண்யம் வீசும்
சாகரம் கண்டு
சாயாத மனமும்
சாய்ந்தாடுதே!

கண்ணால் பேசும்
கண்கட்டு வித்தையில்
கடலவன் பார்வையில்
மழைச்சாரல் பேச...
மதுச்சாரல் வீசும்
சாமரம் கண்டு
சாயாத மனமும்
சாய்ந்தாடுதே!

மலையோடு பாதையில்
மலைக்கின்ற மனதில்
மழைமகள் பாட்டும்
மதுர ராகமே!
விழியோடு பாதையில்
விதைக்கின்ற விதையில்
கருவான மெட்டும்
ஏகாந்தமே!

இயற்கையின் நேர்த்தியில்
செயற்கையின் பூர்த்தியில்
காடு வளர்த்த காவலன் - இவன்
நாடு போற்றும் நல்லவன்!

பசுமையில் பாலையாய்
படர்ந்திட்ட காடாய்
பரிதவிக்கும் இயற்கையே...!
உன் ...
பரிமாணம் மாற்ற
பகுமானம் போற்ற
அவதரித்தானோ சாகரனே!

கதையோடு கருவாய்
காடு வளர்க்கும் காவியமே! - இது
நாட்டை உயிர்க்கும் ஓவியமே!

கழுகு மூக்குப் பாறையில்
பூத்துக் குலுங்கும்
பூம்பாறை ஏக்கம்...!
சாகர சங்கமத்தில்
சாஸ்வதமாகுமோ....
சமரசமாக்கம்...!

அருவிப் பாட்டில் ஆலோலம் பாட...
ஆசையில் பாய்ந்த மழையே! - உன்
அதிரடி கண்டு கை தொட்ட கடலின்
அதிர்வலை புரியுமோ சகியே!

படபடத்த நெஞ்சத்தில்
தடதடத்த உள்ளத்தில்
சடசடத்த மழையே...!
வெடவெடக்கும் கடலின்
தாகம் தான் தீர...
அடி எடுக்குமோ இனியே!


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
:smile1::smiley15::smiley18::smiley3::smiley14:



செல்விமா..

உங்களின் கவித் தென்றல்.. நன் புயலாய் மாறி..
சாயாத உள்ளதைதயும் சாய்ந்தாட வைக்கும்..
பசுமையில் பாலையாய்
படர்ந்திட்ட காடாய்
பரிதவிக்கும் இயற்கையே...!
உன் ...
பரிமாணம் மாற்ற
பகுமானம் போற்ற
அவதரித்தானோ சாகரனே!


காடு வளர்த்த காவலன் - இவன்
நாடு போற்றும் நல்லவன்!

இதுதான் இதுதான் அவன்.. கருண் சாகரன் போன்ற இளைஞர்கள் தான் இப்போ இந்த பூமிக்கு காவலர்களாத் தேவை.. வெட்டிப் பேச்சு பேசாமல் செயலில் காட்டும் வீரர்கள்..

ஆசையில் பாய்ந்த மழையே! - உன்
அதிரடி கண்டு கை தொட்ட கடலின்
அதிர்வலை புரியுமோ சகியே!

படபடத்த நெஞ்சத்தில்
தடதடத்த உள்ளத்தில்
சடசடத்த மழையே...!
வெடவெடக்கும் கடலின்
தாகம் தான் தீர...
அடி எடுக்குமோ இனியே!


மழையின் இயல்பாய் நடக்கும் பெண்ணவள்.. சாரலாய், தூறலாய், அடைமழையாய் எதுவாய் ஆனாலும்.. அவளால் சிரமங்கள் தொல்லைகள் இருந்தாலும், அவள் வருவது நன்மைக்குத்தான்..

மழையின்றி கடல் கடுத்துப் போகும்.. உயிர் வாழத் தகுதி அற்றதாய் மாறும்.. அவ்வாறு ஆக அவள் விடுவாளா..கலந்தே தீருவாள்.. சேருமிடம் சீர்தூக்கும். பெண் இனம் அவள். செய்தே தீருவாள்..🙂🙂🙂🙂💟💝💟💝💟💝
 

JoRam

Active member
தோழி தோழர்களின் கலாட்டா என்று ரசித்து வாசித்து கொண்டுருந்த நான் பசுமை பாலைவனங்கள் என்று இருந்த பத்தியை வாசித்ததும் அதிர்ந்தேன். நம்ப முடியாத உண்மைகள்.

இதை அறிந்ததும் மக்கள் புரிந்து கொள்வார்களா இல்லை சுற்று சூழல் ஆர்வலர்கள் மற்றும் பசுமை விரும்பிகள் மட்டும் தான் அக்கறை கொள்வார்களா என்ற ஏக்கம் தான் எழுந்தது.

இன்றைய பதிவு அருமையோ அருமைமா.
 

தாமரை

தாமரை
Pasumai palaivanam... Ketkave shocka iruku. Ithu pola natla enga enga iruko athayallam find panii change pannanum. Save nature is to day very important one thamarai ma
உண்மை உண்மை மா, அதை விட அதிர்ச்சி தந்தது இது அரசிற்கும் தெரியும், ஆனாலும் சீரமைக்க பெயரளவில் திட்டங்கள் வகுக்கப் பெற்று, நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாக இருபபது.

இதே போலத்தான்.. சமவெளிகளில், கண்மாய்களில்.. கருவேலமும் பார்த்தீனியமும்.. பரவிக் கிடக்கிறது..
 

தாமரை

தாமரை
எபி சூப்பர் தாமரை சிஸ்... காடுகள் பற்றிய தகவல்கள் அருமை...
நன்றி நன்றி வேணீ மா🙂🙂🙂🙏🙏🙏🙏 படித்ததை பகிர்ந்தேன் அவ்வளவே..
 

தாமரை

தாமரை
தோழி தோழர்களின் கலாட்டா என்று ரசித்து வாசித்து கொண்டுருந்த நான் பசுமை பாலைவனங்கள் என்று இருந்த பத்தியை வாசித்ததும் அதிர்ந்தேன். நம்ப முடியாத உண்மைகள்.

இதை அறிந்ததும் மக்கள் புரிந்து கொள்வார்களா இல்லை சுற்று சூழல் ஆர்வலர்கள் மற்றும் பசுமை விரும்பிகள் மட்டும் தான் அக்கறை கொள்வார்களா என்ற ஏக்கம் தான் எழுந்தது.

இன்றைய பதிவு அருமையோ அருமைமா.

நன்றி நன்றி ஜோ மா..
இம்மண்ணில் வாழும் மைந்தர்கள் அனைவரும் அறிய வேண்டிய உண்மைகள் இவை.. அரசாங்கமும் ஆர்வலர்களும் செய்யும் போது, அரசியல்வாதிகளும், மக்களும் தோள் கொடுக்க வேண்டம் .. நம் பூமி மீண்டும் உயிர் பெறும், வாழும் உயிர்களுக்கு, நமக்கு நன்மைகள் பெருகும்..
 
Top