அருமையான கதை நயனிமா
. அந்தமில்லாரியன்-ஆர்யன் ஐந்து வயதில் தந்தையை இழந்து, பதினெட்டு வயதில் தாயின் உடல்நிலை காரணமாக தொழிற்சாலையை தனியே நடத்தி வெற்றி கண்டவன். தாயின் வளர்ப்பில் ராமனாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் வளர்ந்தவன். முன்கோபக்காரன் ,தவறுகளை விரும்பாதவன்.
மேல்படிப்புக்காக கனடா செல்பவன் சாருத்தமையை கண்டதும் காதல் கொண்டு ,அவளை மணந்து கொள்கிறான்.திருமணம் முடிந்த பிறகு சாருத்தமை , ஷ்யாமின் மனைவி என்றும் ,பணத்திற்க்காக அவனை மணந்து கொண்டது தெரிந்து அவள் செய்த துரோகத்தை மன்னிக்க முடியாமல் விலகி செல்கிறான். போகும் போதும்அவளுக்கு தேவையான பணத்தை கொடுத்து(வீசி)விட்டு செல்வதுடன் இதற்க்காக இன்னொருவனை ஏமாற்றாதே என கூறினாலும், அவன் காதலித்தவள் பணத்துக்காக கஷ்டப்படுவதை விரும்பாததே காரணம்.
மூன்று வருடங்களுக்கு பின் சாருத்தமை, தேவகியின் அண்ணன் மகளாக அவன் வீட்டிற்க்கே வருவதும்,அவளை பார்த்ததில் இருந்து அவள் செய்த துரோகத்தை மறக்கவும் முடியாமல்,அவள் மன்னிப்பை ஏற்கவும் முடியாமல் தவிப்பதும்,துடிப்பதும் உமையை வார்த்தைகளால் வதைப்பதும்,அவள் மனவருத்தத்தை கண்டு கண்கலங்குவதும்,உமை இறந்து விட்டதாக எண்ணி அவளுக்கு முன்னே உயிர் விட நினைப்பது என ஆர்யனின் உணர்வு போராட்டத்தை கொண்டு சென்ற விதம் அருமை
.
சாருத்தமை பணக்காரியாக பிறந்தவள்.பணத்தையும்,தாயையும் இழந்து,காதல் என்ற பெயரில் அயோக்கியனை திருமணம் செய்து கொண்டு,அவளிடம் பணம் இல்லை என தெரிந்த பின் ஷ்யாமிடம் அவள் படும் துன்பங்கள் கொஞ்சமல்ல,நண்பனின் உதவியுடன் ஷ்யாமை போலிஸில் சிக்க வைத்தாலும், சிறையிலிருந்து வெளியே வருபவன் மிருகமாக நடந்து கொள்வது மனதை கலங்க வைக்கிறது
.ராஜ் மட்டுமே சாருவுக்கு உற்ற நண்பனாய் கடைசி வரை இருந்தது ஒன்றே ஆறுதலானது☺☺☺☺.
தேவகி கனடாவுக்கு சென்ற ஆர்யன் திரும்பி வரும் போது அவனிடம் ஏற்பட்ட மாற்றங்களை கண்டு காரணம் தெரியாமல் தவிப்பதும், உண்மை தெரிந்த பின் வருண்,நாயகி,அமந்தி இவர்கள் உதவியுடன் ஆர்யன், சாருத்தமையை சேர்த்து வைக்க செய்யும் முயற்ச்சிகள் கலக்கல்
.
சாருத்தமை உண்மை சொல்வதற்க்கு முன்பே ஆர்யன்அவளை ஏற்றுக்கொண்டது அவன் சாருத்தமையின் மேல் கொண்ட மாறாத காதலை சொல்கிறது
. விசு அருமையான நண்பன். ஆர்யன், விசு இருவரின் சாபமும் பலித்ததா என காண முடியாதது வருத்தம்
.
இழப்புகள் கூட அழகை கொடுக்குமா,குதுகாலிக்க வைக்குமா,ரசிக்க வைக்குமா என இலையுதிர்கால பூக்கள், மரங்கள்,இலைகள் என வர்ணித்ததும், நயாகரா அருவியை வர்ணனை செய்த விதமும் அத்தனை அழகு மனதை கொள்ளை கொண்டது
.இறுதி பதிவு மிகவும் அருமை
.
அழகான காதல் கதை.நிறைவான ,இனிமையான முடிவு. வாழ்த்துக்கள் நயனிமா
.