All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாப காதலா 4

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
4 கலாப காதலா
பூர்ணி சென்னை அடியெடுத்து வைத்தாள் முதன்முறை தனது ஊரை தனது குடும்பத்தை பிரிந்து வருவது....
தனது காலேஜ் அருகில் உள்ள ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தாள் இவர்களின் காலேஜ் சென்னைக்கு ஔடர் ல் உள்ளதால் அங்கயே உள்ள ஹாஸ்டலில் சேர்ந்திருந்தால்...
பூர்ணி " ஹாய் இங்க ரூம் நம்பர் 35 எங்க இருக்கு "
" அந்த ரூம் எதுக்கு மா உனக்கு "
பூர்ணி " இல்ல எனக்கு அந்த ரூம் தான் ஆலார்ட் பண்ணிருக்காங்க அதான் "
" ஓஓஓ அது நீ தானா எனிவேஸ் ஐ யம் பீர்த்தி உன் ரூம் தான் வா பேசிட்டே போலாம் "
பூர்ணி " என் பேரு பூர்ணிமா இங்க தான் திருச்சி பக்கம் "
பீர்த்தி " பூர்ணிமா இது என்ன பழைய பேரா இருக்கு "
பூர்ணி " ம்ம் பாட்டி பேரு அவங்க நியாபகமா வைச்சாங்க "
பீர்த்தி " பாட்டி பேரா நீயும் பாட்டி மாதிரி தான் இருக்க "
என சொல்லிவிட்டு சிரிக்க
பூர்ணி முகமே சொல்லியது அவள் அதனை ரசிக்கவில்லை என..
பீர்த்தி " ஏய் ஜெஸ்ட் ஃபார் பன் டோன்ட் டேக் சீரியஸ் "
ஏனோ பீர்த்தி பேச்சு பழகும் விதம் எதும் பூர்ணிக்கு பிடிக்கவில்லை இருந்தும் இந்த இரண்டு வருடம் அவளுடன் தான் இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் மனதளவில் ஓத்து கொண்டாள்...
அறையினுள் சென்றபின் அங்கு அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணை காட்டி
" ஆங் பூர்ணி இவளும் நம்ப ரூம் தான் "
" ஹாய் ஐ யம் பிரியா "
பூர்ணி " ஐ யம் பூர்ணி "
பிரியா " நீ எந்த ஊரு "
பூர்ணி " நான் திருச்சி பக்கம் நீங்க "
பிரியா " நான் கடலூர் அப்புறம் "
பீர்த்தி " ஓகே ஓகே இரண்டு வருசம் நாம சேர்ந்து தான் இருக்க போறோம் அப்ப மத்த கதைலா பேசிக்கலாம் இப்ப லைட்ட ஆஃப் பண்ணிட்டு தூங்குங்க "
பிரியாவும் பூர்ணியும் சிரித்து கொண்டு விடியலை நோக்கி காத்திருந்தனர்.....
" ஏன் சித் என்ன அவாய்ட் பண்ணுற "
சித் " யாத்ரா பிளிஸ் புரிஞ்சுக்கோ உன்மேல எனக்கு எந்த ஃபீலிங் ம் இல்ல "
யாத்ரா அழகும் அறிவும் கொண்ட இன்றைய நாகரிக பெண் அன்று பப் வாசலில் சித்தார்திற்காக காத்திருந்த பெண்....
யாத்ரா " அதான் ஏன்னு கேக்குறேன் ‌"
" ஒரு வருசம் இரண்டு வருசம் இல்ல ஐஞ்சு வருசமா நீ தான் வேணும்னு உன் பின்னாடியே சுத்துறேன் உனக்கு ஏன் என் காதல் புரியல "
சித் " யாத்ரா லவ் அப்படிங்குறது ஒரு ஃபீலிங் ஏன் வரல ஏன் வரல கேட்டா நான் என்ன பதில் சொல்லுறது அதுமட்டுமில்ல நீ என்னோட......
நீ அவன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு உன்ன போய் நான் எப்படி "
யாத்ரா " ஐய்யோ சித் பிளிஸ் அப்படி சொல்லாத நான் என்னைக்கும் அவன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் எனக்கு நீ தான் வேணும் நீ மட்டும் தான் வேணும் ஐ லவ் யூ சித் ஐ லவ் யூ சோ மச் "
என அவனை கட்டி கொண்டு தனது காதலை அவனுக்கு புரிய வைக்க முயன்றாள்...
சித் " யாத்ரா யாத்ரா என்ன பண்ணுற விடு "
என அவளிடம் விலகி கொள்ள முயற்சிக்க தன் பலம் கொண்டு அவளை ஒரே பிடியே நகர்த்தினான்...
அந்நேரம் சரியாக அங்கு வந்த அஜய்
" மச்சான் என்னடா "
சித் " ஆங் மச்சி வந்துடியா வா போகலாம் "
யாத்ரா " சித் நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் நீ அவன் கூட போறேனு சொல்லுற "
அஜய் " என்னா பேசிட்டு இருப்பா விருப்பமே இல்லாத ஒருத்தன் கிட்ட லவ் பண்ணு லவ் பண்ணு உயிர வாங்கிட்டு இருப்பா "
யாத்ரா " அஜய் மைண்ட் யூவர் வோர்ட்ஸ் நான் உன்கிட்ட பேசல "
அஜய் " என்ன மைண்ட் பண்ணணும் நீ மொதல மைண்ட்ல வைச்சுக்கோ அவனுக்கு உன்மேல லவ் இல்ல சும்மா வெக்கமே இல்லாம அவன்கிட்ட கெஞ்சிட்டு இருக்காத "
அவனின் கோபத்தின் அளவை கண்ட சித்
" மச்சான் மச்சான் கண்ட்ரோல் யூவர் செல்ஃப் நீ வா நாம போலாம் யாத்ரா நீ சேஃப் ஆ வீட்டுக்கு போ "
என அஜயை இழுத்து கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்...
வெறுப்புடன் கால்களை உதைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள் யாத்ரா...
வண்டியை எடுத்தவன்
சித் " நீ ஏன்டா இவ்வளவு டென்ஷன் ஆகுற "
அஜய் " ஏய் நம்பலா காலேஜ் படிக்கும் போதே எனக்கு அவள சுத்தமா பிடிக்காது அவள பார்த்தாலே கடுப்பு தான் வருது "
சித் " ஐய் சும்மா சொல்லாத சூப்பர் ஃபிகர் உனக்கு பிரோபோஸ் பண்ணாம என்ன லவ் பண்ணுறான்னு உனக்கு காண்டு அதான் எப்ப பாரு அவள திட்டுற "
அஜய் " நீயே இப்படியும் பேச அப்புறம் நித்யா கிட்ட போட்டும் கொடுப்ப உன்ன நம்பி நான் வாய் உட மாட்டேன் பா "
இருவரும் சிரித்து கொள்ள...
அங்கு யாத்ராவின் அத்தை பானு
" யாத்ரா எங்க மா போயிட்டு வர "
யாத்ரா " அத்த நான் பிஸினஸ் விஷயமா ஒருதர பாக்க போயிருந்தேன் "
" அவருகூட உனக்கு ரோட்ல மீட்டிங்கா யாத்ரா "
என கேட்டபடி அங்கு வந்தான் விக்ரம்....
ஆறடி உயரத்துடன் அழகாக உருவத்துடன் படியில் இருந்த இறங்கி வந்தான் ஆண்மகன்.....
தொடரும்.....
 

Chitra Balaji

Bronze Winner
சென்னை vanthutaala...... Yaathra avana love 😍 panrala but avan accept pannikala appram ஏன் தொல்லை panra.... Vikram yaaru
 
Top