All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எண்ண அலைகள்.......

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எண்ணம்....

எண்ணம் என்ற சோலையில்..
வண்ணம் எனற காலையில்...
காதலாய் வந்தது பூந்தென்றலே...!

எண்ணம் என்ற ஏட்டினில்...
வண்ணம் என்ற பாட்டினில்...
பாசமாய் வந்தது பசுஞ்சோலையே...!

எண்ணம் என்ற சூழற்சியில்....
வண்ணம் என்ற எழுச்சியில்...
ஏக்கமாய் வந்தது ஏகாந்தமே.....!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாப்பா பாட்டு...!

பாப்பா பாட்டு பாடிய -
பாரதம் கண்ட முண்டாசுக் கவிஞனே...!

பாப்பாவின் பாட்டு
பாரெல்லாம் கேட்டு
பாடித்திரிந்த கூட்டினிலே....
பாசங்கள் உண்டு
பந்தங்கள் உண்டு
பாடித்திரிந்த நாட்டினிலே...!

மழலை சிரிப்பில்
மயக்கங்கள் கொண்டு
மயங்கி நின்ற காலம் அன்று..!
மழலை கூட
விலையாய் போன
பரிதாபமான காலம் இன்று..!

குழந்தை வடிவில்
தெய்வங்கள் கண்ட
தெய்வத் திரு நாட்டினிலே...
குழந்தை சிரிப்பில்
இன்பங்கள் கண்ட
இனிய பரத கண்டத்திலே...
குழந்தை கூட
சதையாய்ப் போன
பரிதாபக் கோலம் ஏனடியோ...?

கிள்ளை மொழியில் உற்சாகமாய்,
பிள்ளைத் தமிழில் உத்வேகமாய்,
அன்ன நடையில் ஓய்யாரமாய்,
சின்னச் சிரிப்பில் சந்தோசமாய்,
கூடு தோறும் கூடி நின்று
குலுங்கிச் சிரித்த குடும்பத்தில்
குன்றென நிமிர்ந்தது குலக் கொழுந்து!

பதின் வயதின் பழக்கமெல்லாம்
பருவம் பார்த்து பகிர்ந்தளித்தால்
பக்குவமாய் பல விஷயம்
பாருக்குள்ளே பரவுமன்றோ...?

பாசம் என்றால் என்னவென்று
நேசம் என்றால் என்னவென்று
புனிதம் என்றால் என்னவென்று
மனிதம் என்றால் என்னவென்று
கண்ணியங்கள் காட்டி விட்டால்
புண்ணியங்கள் மீட்டி வந்து
மனிதம் எல்லாம் வாழும் வென்றே!

காலம் இது கலிகாலம்
கோலம் அது கொடுங்கோலம்
காணக் காண நெஞ்சமெல்லாம்
கதறிக் கண்ணீர் வடிக்குதம்மா....!

உத்தமராய் வாழ்வதற்கு
உன்மத்தம் வேண்டுமம்மா...!
உன்மத்தம் அடைவதற்கு
உத்வேகம் வேண்டுமம்மா...!
உத்வேகம் கொடுப்பதற்கு
உன் கைகள் வேண்டுமம்மா...!
அம்மா....!
உன் கைகள் வேண்டும்..!ஆம்...,
தாயே.....!
உன் கை கொடு தாயே...!
உன் மெய் கொடு தாயே...!
உய்வெய்திடும் சேயே...!
உயர்வாகிடும் நாடே...!


பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு!

பாரதி பாட்டு,
பாரெல்லாம் கேட்டு!
பரவட்டும் மெட்டு,
மலரட்டும் மொட்டு!

இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்! நன்றி
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புத்தாண்டே....

புதிதாய் பிறந்த புத்தாண்டே
புன்னகையை சொல்லிக் கொடு...!

அரிதாய் பிறந்த புத்தாண்டே
அன்பை அள்ளிக் கொடு...!

பரிதியாய் பிறந்த புத்தாண்டே
பண்பை சொல்லிக் கொடு...!

மதிப்பாய் பிறந்த புத்தாண்டே
மரபைச் அள்ளிக் கொடு...!

தித்திப்பாய் பிறந்த புத்தாண்டே
திறமையைச் சொல்லிக் கொடு...!

கனவாய் பிறந்த புத்தாண்டே
கருணையை அள்ளிக் கொடு...!

கருத்தாய் பிறந்த புத்தாண்டே
கடமையை சொல்லிக் கொடு...!

மணமாய் பிறந்த புத்தாண்டே
மகிழ்ச்சியை அள்ளிக் கொடு...!


புன்னகையின் மொழியில்
அன்பின் அழகில்
பண்பின் பரிவில்
மரபின் தெளிவில்
திறமையின் நிமிர்வில்
கருணையின் ஒளியில்
கடமையின் வழியில்
மகிழ்ச்சியின் கடலில்
பிறந்திட்ட புத்தாண்டே....
உன் வருங்காலம் எம் வசந்தகாலம் அன்றோ...?

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொங்கல்.....

பாசமாய் பொங்கிய பால் பொங்கலில்
பாந்தமாய் ஆடிய பாலகரெல்லாம்....
பசுமையாய் பொங்கிய வைகறை காற்றில்
பந்தமாய் ஆடிய பாலகரெல்லாம்...
பொங்கலோ பொங்கலென்று கூவிய மெட்டில்
தெம்மாங்கு பாட்டும் தேனாறாய் மீட்டி...
காலங்கள் மாறி கோலங்கள் மாறி
காணாமல் போன தடயங்கள் தேட....
புதிதாய் பிறந்திட்ட தை மகளே.....!
உன் வாசத்தில் உதித்த நெல்மணியெல்லாம்
எம் தேசத்தில் விதைத்த நல்மணியன்றோ...?
நஞ்சையும் புஞ்சையும் நாசமாய் போனாலும்
நேசமாய் கைகோர்த்த நெஞ்சங்களின்
பாசமாய் வந்ததோ பொங்கலோ...பொங்கல்....!

பொங்கும் வெள்ளத்தில் போகமாய் செழித்து நிற்கும்
வயற்காட்டின் நெல்மணியும் நெஞ்சமெல்லாம் அலைமோத
தமிழரின் திரு நாளாம், தை பொங்கலை
தமிழால் வரவேற்று...
பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்துவமே! வாழ்த்துவமே...!

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...!

அன்புடன்,


செல்வி சிவானந்தம்.
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெண்களே....

நீ ஏட்டின் கரு என்றால்...
ஏளனம் ஒழியட்டும்!

நீ பாட்டின் கரு என்றால்...
பார்வைகள் துலங்கட்டும்!

நீ காட்டின் கரு என்றால்....
காரணம் விளங்கட்டும்!

நீ கூட்டின் கரு என்றால்....
கூனரும் நிமிரட்டும்!

நீ நாட்டின் கரு என்றால்....
நானிலம் செழிக்கட்டும்!

நீ வீட்டின் கரு என்றால்....
வீணர்கள் அழியட்டும்!

ஏளனம் ஒழிய,
பார்வைகள் துலங்க,
காரணம் விளங்க,
கூனரும் நிமிர,
நானிலம் செழிக்க,
வீணர்கள் அழிய,
புதிய பாரதம் புன்னகை வீச...
பூமித்தாயும் பூவாய் மலர....
பெண்களின் கைகள் பின்னலாய் அணைக்க
உலகம் உய்யும் காலமும் சுகமே...!

தோழிகள் அனைவருக்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள், நன்றி



 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு......

அன்பெனும் அரிச்சுவட்டில்
அந்தம் கூட அற்புதமாகும்...!
அன்பெனும் அருமருந்தில்
அங்கம் கூட அடைக்கலமாகும்...!
அன்பெனும் அணிவகுப்பில்
அர்த்தம் கூட அணிகலனாகும்...!
அன்பெனும் அலைக்களிப்பில்
அன்பும் கூட அனுபவமாகும்...!
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்...!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் நீ...?

எட்டாத உயரத்தை
எட்டிப் பிடிக்கும் ஏணி..!
கிட்டாத திரவத்தை
கட்டி இழுக்கும் கேணி...!
கட்டாத கூட்டை
கட்டி முடிக்கும் தேனீ...!
நட்டாத மரத்தை
வெட்டி முறிக்கும் ஞானி...
மானுடா...! ஏன் நீ...?
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே...!

சிந்தனை வானில்
சிறகடிக்கும் நாளில்
சிறகொடிந்த போதும்
சிதறாத நட்பு...!

பல்சுவை மனதில்
பகை மீறும் நாளில்
பலமிழந்த போதும்
பதறாத நட்பு...!

இன்னிசை மழையில்
இசைபாடும் நாளில்
இயலாத போதும்
இசைந்தாடும் நட்பு...!

புன்னகை பூக்கள்
பூவிதழ் இரண்டும்
விரிகின்ற அழகில்
சிரிக்கும் நட்பு...!

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழிகளே!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உறவின் மரபுகள்...!

உறவுக்கு பாலங்கள்
மரபுக்கு ஞாலங்கள்
தவறுக்கு ஜாலங்கள் - அது
காலத்தின் கோலங்கள்....!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பெனும் அஞ்சனத்தில்
மலரவிருக்கும் புத்தாண்டில்...
அன்பெனும் மொழியில்
புலரவிருக்கும் புத்தாண்டில்...
அன்பெனும் அருவியில்
சிலிர்க்க வைக்கும் புத்தாண்டில்...
அன்பெனும் கருவியில்
தளிர்க்க வைக்கும் புத்தாண்டில்...
அன்பெனும் கருவில்
உயிர்க்க வைக்கும் புத்தாண்டில்...
அன்பெனும் உருவில்
துளிர்க்க வைக்கும் புத்தாண்டில்...
அன்பை விதைத்து
அறிவை புதைத்து
அருஞ்சுவை படைத்து
அகிலம் காக்கும்
அன்னையாய் துடித்து
அரவணைக்கும் வீட்டில்
ஆயுள் முட்டும் அக மகிழ்வன்றோ...?



அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 
Top