All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எண்ண அலைகள்.......

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அற்புதமான வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தும் கவிதை வரிகள்... ஒவ்வொரு எழுத்தும் பொன் வரிகள்.. அபாரம் செல்வி...
நன்றி சாந்தி
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா!ஹா! அற்புதம்! ஆம்! காதலை மட்டும் தான் நித்தமும் ரசித்து கொண்டே இருக்கிறோம் தன்னை மறந்து...
நன்றி சாந்தி. எது வாடினாலும் காதல் வாடாதது
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பப்பா! நிதர்சனத்தை எவ்வளவு அழகாக தங்கள் பாணியில் சொல்லி விட்டீர்கள்... ஆம்! அகமே முகம் பார்க்கும் கண்ணாடி....
சூப்பர் மித்ரா...... செம


காதல் புதிராகி விடைக்காக போராடுவாள்...
நிச்சயமாக எண்ணம் போலவே வாழ்க்கை அமைகிறது... மறுக்க முடியாத உண்மை..
அற்புதம் செல்வி... அபாரமான சிந்தனை... தங்கள் கவித்திறன் நாளுக்கு நான் மெருகேறி கொண்டே வருகிறது... வாழ்த்துக்கள்...
அப்பப்பா! நிதர்சனத்தை எவ்வளவு அழகாக தங்கள் பாணியில் சொல்லி விட்டீர்கள்... ஆம்! அகமே முகம் பார்க்கும் கண்ணாடி....
நன்றி சாந்தி. ஸ்ரீ கதை பெயர்கள் வைத்து ஒரு கவிதை போட்டிருக்கிறேன் பாருங்கள். சிம்மு கருத்து திரியில்
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேரின்பம்......

பேரின்பம் அது........
மழலை மொழி கேட்கும் போதும்;
ஊர் கூடி திருவிழா கொண்டாடும் போதும்;
உறவு சேர்ந்து பண்டிகைகளில் மகிழும் போதும்;
என்றென்றும் கிடைக்கும் சுகமே!

அதனினும் பெரிது உண்டெனில் அது-
இல்லாதவனுக்கு கொடுக்கும் போது காணும் அவன் மகிழ்ச்சி;
தெரியாதவனுக்கு சொல்லிக் கொடுக்கும் போது தோன்றும் ஒரு தெளிச்சி;
புரியாததை புரிய வைக்கும் போது கிடைக்கும் ஒரு பயிர்ச்சி;
உணராதவனுக்கு உணர்த்தும் போது வரும் ஒரு மன முதிர்ச்சி;
அதுவே உன் ஆத்ம திருப்தி!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பணத்தின் பின்....



பணத்தின் பின்-
ஓடுகிறாயே ஒவ்வொரு நாளும் என்று
உன் தகப்பனை நீ கேட்டிருந்தால்
உன் உயிர் வாழ ஓர் வீடு உனக்கு ஏது?

பணத்தின் பின்-
ஓடுகிறாயே ஒவ்வொரு நாளும் என்று
உன் தாயை நீ கேட்டிருந்தால்
உன் சுகம் காண ஓர் குடும்பம் உனக்கு ஏது?

பணத்தின் பின்-
ஓடுகிறாயே ஒவ்வொரு நாளும் என்று
உன் தமயனை நீ கேட்டிருந்தால்
உன் சொந்தம் கொண்டாட ஓர் உறவு உனக்கு ஏது?

பணத்தின் பின்-
ஓடுகிறாயே ஒவ்வொரு நாளும் என்று
உன் கணவனை நீ கேட்டிருந்தால்
உன் நலம் பேண ஓர் துணைவன் உனக்கு ஏது?

பணத்தின் பின்-
ஓடுகிறாயே ஒவ்வொரு நாளும் என்று
உன் பிள்ளையை நீ கேட்டிருந்தால்
நீ மரபு வாழ ஓர் வம்சம் உனக்கு ஏது?

பணத்தோடு நல்ல குணம் இருந்தால்
உன் வாழ்க்கை உன் கையில்
மறவாதே! மனிதா உன் வாழ்விலே!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிறந்தது எது?

உலகில் சிறந்தது கல்வியா? கேள்வியா?
அழகில் சிறந்தது குழந்தையா? குமரியா?

மண்ணில் சிறந்தது மணமா? மனிதனா?
விண்ணில் சிறந்தது விண்மீனா? குளிர் நிலவா?

குணத்தில் சிறந்தது அன்பா? கருணையா?
மணத்தில் சிறந்தது மண் வாசமா? மலர் வாசமா?

எத்தனை சிறந்தது இருந்தாலும் மனிதா நீ ஏன்
எதை எதையோ தேடி ஓடி-
அழிகின்றாய்....
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீயே உனக்கு நிகர்!

தாயே உனக்குத்தான் எத்தனை உருவங்கள்?
தாயாய், துனைவியாய், மகளாய், மருமகளாய்,
அத்தையாய், சித்தியாய், பெரியம்மாவாய், பாட்டியாய்....

உனை நான் எல்லா உருவதிலும் பார்த்து பார்த்து வியக்கின்றேன்-
எத்தனை பொறுமை,
எத்தனை கடமை,
எத்தனை பொறுப்பு,
எத்தனை பணிவு,
எத்தனை பரிவு,
எத்தனை அன்பு,

தாயே உனக்கு நிகர் யார்?
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செய்....!

பல்லாண்டு பலகோடி புண்ணியம் நீ செய்தால்

பல்லாண்டு உன் பெயர் தான் உயிர் வாழுமே!

இவ்வாண்டு சிலநூறு கண்ணியம் நீ காத்தால்

இப்போதே உன் பெயர் தான் உலகாளுமே!

எனவே மகனே செய்ய நினைப்பதை

இன்றே செய்!

இப்போதே செய்!

இனிதே செய்!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெண்மை......


பெண்மையன்றோ!

அன்பின் ஆழத்தை ஊட்டியது.
பெண்மையன்றோ!
கருணையின் புனிதத்தை காட்டியது.

பெண்மையன்றோ!
உயிரில் உணர்வை இயற்றியது.
பெண்மையன்றோ!
அறியாமை தீயை அகற்றியது.

பெண்மையன்றோ!
உரிமையின் மேன்மையை வலியுறுத்தியது.
பெண்மையன்றோ!
கடமையின் பொருளை அறிவுறுத்தியது.

பெண்மையன்றோ!
உறவின் பெருமையை போற்றியது.
பெண்மையன்றோ!
மடமையின் மூடத்தனத்தை தூற்றியது.

பெண்மையே! இத்துனை பெருமை கொண்ட

நீ இல்லையேல் வாழ்வேது இப்பூவுலகிலே?
 
Last edited:
Top