கலியுகத் தாய்.......
மகனே-
நீ பிறந்தாய் ,
பூரித்தேன் உன் உருவம் பார்த்து.
நீ சிரித்தாய்,
சிதறினேன் உன் முகம் பார்த்து.
நீ அழுதாய்,
அழுதேன் உன் வலி பார்த்து.
நீ தவழ்ந்தாய்,
தவித்தேன் உன் அறியாமை பார்த்து.
நீ நடந்தாய்,
நெகிழ்ந்தேன் உன் தளிர்னடை பார்த்து.
நீ ஓடினாய்,
ஓய்ந்தேன் உன் வேகம் பார்த்து.
நீ படித்தாய்,
பயின்றேன் உன் வாய்மொழி பார்த்து.
நீ பாடினாய்,
பரவசமானேன் உன் இனிய குரல் பார்த்து.
நீ ஆடினாய்,
அகமகிழ்ந்தேன் உன் நடனம் பார்த்து.
நீ வளர்ந்தாய்,
வியந்தேன் உன் வளர்ச்சி பார்த்து .
நீ மணந்தாய்,
மகிழ்ந்தேன் உன் மணக்கோலம் பார்த்து.
நீ தந்தையானாய்,
திழைத்தேன் உன் மகனை பார்த்து.
நீ இயந்திரமானாய்,
தளர்ந்தேன் உன் சோர்வை பார்த்து.
நீ ஊர் போற்றும் பெரிய மனிதனானாய்,
தனியானேன் உன் உயரம் பார்த்து.
தனிமை மிகவும் கொடுமை!
முதுமையில் தனிமை மிக மிக கொடுமை!
என்பவளே…….
ஒற்றை பிள்ளையை பெற்ற கலியுகத் தாய்!