All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எண்ண அலைகள்.......

Shanthigopal

Well-known member
எண்ண அலைகள்.......

எண்ணத்தின் அலைகள் எண்ணில் அடங்காது - அதன்
வண்ணத்தின் நிலைகள் உன்னில் அடங்காது!


எண்ணத்தின் வண்ணங்கள்
வாழ்க்கையின் சின்னங்கள் .....!


எண்ணத்தின் அழகில் எல்லாம் அழகு!


இனி வரும் காலம் எண்ணத்தின் ஏட்டில் வண்ணம் தீட்டட்டும்.

இசை மீட்டும் எண்ணத்தில் எதிர்காலம் சிறக்கட்டும்.

எண்ணம் போல் வாழ்க்கை!
நிச்சயமாக எண்ணம் போலவே வாழ்க்கை அமைகிறது... மறுக்க முடியாத உண்மை..
 

Shanthigopal

Well-known member
நல்லவை அறிவோம்......
நினை
உன் நினைவுகள் சுகமானால் மகிழ்ச்சி
நினை
உன் நினைவுகள் சோகமானால் வீழ்ச்சி

பார்
உன் பார்வைகள் சரியானால் மகிழ்ச்சி
பார்
உன் பார்வைகள் பிழையானால் வீழ்ச்சி

கேள்
உன் கேள்விகள் பதிலானால் மகிழ்ச்சி
கேள்
உன் கேள்விகள் அணர்த்தமானால் வீழ்ச்சி

சொல்
உன் சொற்கள் உழியானால் மகிழ்ச்சி
சொல்
உன் சொற்கள் பழுதானால் வீழ்ச்சி

கேட்பதும், பார்ப்பதும், நினைப்பதும், சொல்வதும்
நல்லதாக இருப்பின் - அறிவோம்
மனதிற்கு வீழ்வில்லை.
மகிழ்ச்சிக்கு குறைவில்லை.
அற்புதம் செல்வி... அபாரமான சிந்தனை... தங்கள் கவித்திறன் நாளுக்கு நான் மெருகேறி கொண்டே வருகிறது... வாழ்த்துக்கள்...
 

Shanthigopal

Well-known member
முக லட்சணம்.......
இல்லை முக லட்சணம்
என்பது
வெண்மை நிற அழகில் தெரிகிறதா?


இல்லை முக லட்சணம்
என்பது
கருமை நிற முடியில் தெரிகிறதா?


இல்லை முக லட்சணம்
என்பது
நீல நிற விழியில் தெரிகிறதா?


இல்லவே இல்லை -
முகம் காட்டும் லட்சணம் உன் அகம் சொல்லும் - ஆம்


உன் அகம் சிரித்தால் உன் முகம் சிரிக்கும்
உன் அகம் அழுதால் உன் முகம் அழுகும்
நீயே முடிவு செய் உன் முக லட்சணத்தை
அகத்தை சந்தோசமாக வைத்துக்கொள்ள பழகிக்கொள்.


எல்லா வீட்டிலும் பிரச்சனை உண்டு
எல்லா இடத்திலும் பிரச்சனை உண்டு
நீயே முடிவு செய் உன் பிரச்சனைகளை
மனத்தை பிரச்சனைகளை எதிர் கொள்ள பழக்கிக்கொள்.


நீ நிச்சயம் வென்றுவிடுவாயடா!
அப்பப்பா! நிதர்சனத்தை எவ்வளவு அழகாக தங்கள் பாணியில் சொல்லி விட்டீர்கள்... ஆம்! அகமே முகம் பார்க்கும் கண்ணாடி....
 

Shanthigopal

Well-known member
காதல்.....

வயதாகையிலே
பூக்களும் வாடுதே ஓர் நாளிலே!
ஈக்களும் சாகுதே சில நாளிலே!


ஓவியமும் மங்கியதே சில ஆண்டிலே!
காகிதமும் கசங்கியதே சில ஆண்டிலே!


பெருமைகளும் ஒழிந்ததே நூற்றாண்டிலே!
பசுமைகளும் அழிந்ததே நூற்றாண்டிலே!


வறுமைகளும் குறையவில்லை பல்லாண்டிலே!
சிறுமைகளும் குறையவில்லை பல்லாண்டிலே!


காதலே!
உனக்கு மட்டும் அழிவில்லை புவிவாழ்விலே!


எப்படி இது சாத்தியம் என்கிறாயா?

ஊரிலும், உலகிலும்,
வீட்டிலும், நாட்டிலும்,
ஏட்டிலும், எழுத்திலும்,
அகத்திலும், புறத்திலும்
எங்கும், எதிலும்


நுழைந்திட்ட உன்னை ரசிக்கத்தான் முடிகிறது, வெறுக்க முடியவில்லை.
ஹா!ஹா! அற்புதம்! ஆம்! காதலை மட்டும் தான் நித்தமும் ரசித்து கொண்டே இருக்கிறோம் தன்னை மறந்து...
 

Shanthigopal

Well-known member
ஓட்டம்.....

அதிகாலை ஓட்டம் - அது
அழகான தோட்டம்!
இளங்காலை ஓட்டம் - அது
இடம் மாறும் காட்டம்!
முன் பகல் ஓட்டம் -அது
முடிவில்லா கூட்டம்!
அந்தி மாலை ஓட்டம் - அது
அமைதியில்லா நாட்டம்!
பின் இரவு ஓட்டம் - அது
பிணை தீர்க்கும் வாட்டம்!
நடுச் சாம ஓட்டம் - அது
நலிவான பாட்டம்!
ஓடி ஓடி ஓய்ந்து போனால் - அது
கலியுகத்தின் ஆட்டம்!
அற்புதமான வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தும் கவிதை வரிகள்... ஒவ்வொரு எழுத்தும் பொன் வரிகள்.. அபாரம் செல்வி...
 

Shanthigopal

Well-known member
சாதனை சாத்தியமா....?

சாதிப்பேன் சாதிப்பேன் என்று சொல்லும் போது
உள்ளத்தில் தோன்றும் உவகை
உனக்கு உத்வேகத்தை கொடுத்தால் நீ சாதிப்பாய்.


என்ன சாதிப்பாய்? எதை சாதிப்பாய்?
முடிவு செய்தாயா? இல்லையா?
எப்போது முடிவெடுக்கப் போகிறாய்?


வேகமாய் முடிவெடு -
ஏனென்றால்
காலம் என்னும் கடிகாரம் யார் தடுத்தும் நிற்காது.
மெருகேறி கூர் வாளை போல் தங்கள் சிந்தனை கவிதை வரிகளை என்னவென்று சொல்ல!!! அற்புதம் செல்வி....
 

Shanthigopal

Well-known member
நீ யார்......

நானும் என்றவுடன் வருவது
எனக்கு என்ற உணர்வு.


நீயும் என்றவுடன் வருவது
உனக்கு என்ற உணர்வு.


நானும் நீயும் சேரும் போது
நாமென்றானோம்.


நாம் என்றவுடன் வருவது
நமக்கு என்ற உணர்வு.
பகிர்ந்து கொள் என்ற உணர்வு.
பற்றிக்கொள் என்ற உணர்வு.


உன்னுடையதை பகிர்ந்து கொள் என்று
சொல்லிக் கொடுங்கள் தாயே!
உறவுகளை பற்றிக் கொள் என்று
சொல்லிக் கொடுங்கள் தந்தைகளே!


நாம் என்ற உணர்வை
நாம் உணர்த்த தவறிவிட்டால்,
நாளைய இளம் சமுதாயம்
நம்மையே கேள்வி கேட்கும், நீ யார் என்று
?
கத்தி முனை வரிகள்... நம் சமுதாயத்திற்கு மிக மிக அவசியம் நாம் என்ற சிந்தனை...
 

Shanthigopal

Well-known member
கலியுகத் தாய்.......
மகனே-
நீ பிறந்தாய் ,
பூரித்தேன் உன் உருவம் பார்த்து.
நீ சிரித்தாய்,
சிதறினேன் உன் முகம் பார்த்து.
நீ அழுதாய்,
அழுதேன் உன் வலி பார்த்து.
நீ தவழ்ந்தாய்,
தவித்தேன் உன் அறியாமை பார்த்து.
நீ நடந்தாய்,
நெகிழ்ந்தேன் உன் தளிர்னடை பார்த்து.
நீ ஓடினாய்,
ஓய்ந்தேன் உன் வேகம் பார்த்து.
நீ படித்தாய்,
பயின்றேன் உன் வாய்மொழி பார்த்து.
நீ பாடினாய்,
பரவசமானேன் உன் இனிய குரல் பார்த்து.
நீ ஆடினாய்,
அகமகிழ்ந்தேன் உன் நடனம் பார்த்து.
நீ வளர்ந்தாய்,
வியந்தேன் உன் வளர்ச்சி பார்த்து .
நீ மணந்தாய்,
மகிழ்ந்தேன் உன் மணக்கோலம் பார்த்து.
நீ தந்தையானாய்,
திழைத்தேன் உன் மகனை பார்த்து.
நீ இயந்திரமானாய்,
தளர்ந்தேன் உன் சோர்வை பார்த்து.
நீ ஊர் போற்றும் பெரிய மனிதனானாய்,
தனியானேன் உன் உயரம் பார்த்து.
தனிமை மிகவும் கொடுமை!
முதுமையில் தனிமை மிக மிக கொடுமை!
என்பவளே…….
ஒற்றை பிள்ளையை பெற்ற கலியுகத் தாய்!
என் நிலையும் இது தானோ! கடைசி வரிகளில் சிந்தை இழந்தேன் தோழி... கண் மனம் கலங்கி தவிக்க செய்கிறது... தவறு செய்து விட்டேனோ... என்ன செய்வது காலம் கடந்த ஞானோதயம்... அற்புதம் செல்வி....
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் நிலையும் இது தானோ! கடைசி வரிகளில் சிந்தை இழந்தேன் தோழி... கண் மனம் கலங்கி தவிக்க செய்கிறது... தவறு செய்து விட்டேனோ... என்ன செய்வது காலம் கடந்த ஞானோதயம்... அற்புதம் செல்வி....
இனிய காலை வணக்கம் தோழி. உங்கள் பெயர் பார்த்தவுடன் தோன்றிய உற்சாகம், உங்கள் பதிலை பார்த்து அடங்கிவிட்டது. கலக்கம் ஏன் தோழி. நம் பிள்ளை நம்மை காக்கும். நான் எழுதியது முதுமையில் தனிமை ஏன் என்ற எண்ணத்தில். தனிமையை மாற்றலாம். இங்கு இன்னொரு கருத்தும் உண்டு. நாம் மட்டும் தனிமையில் இல்லை, நம் பிள்ளையும் தனிமையிலே வாழும். கூடப் பிறந்த உறவுகள் மட்டுமே இன்றைய துணை. மாற்றம் வரும். கலங்க வேண்டாம்
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கத்தி முனை வரிகள்... நம் சமுதாயத்திற்கு மிக மிக அவசியம் நாம் என்ற சிந்தனை...
நன்றி சாந்தி. உங்கள் FB அக்கௌண்ட் இருக்கா?
 
Top