Sonythiru
Suthisha
அத்தியாயம்-27
அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.அதை தேவலோகமாக மாற்றி இருந்தனர் மதுவந்தியின் அண்ணன்மார்கள். தந்தைமார்களோ அங்கும் இங்கும் பம்பரமாக சுற்றி மகளின் திருமணத்திற்கு வேலை செய்து கொண்டிருந்தனர்.ஆனால் அன்றைய நாயகியோ கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தாள்.
தோழிகள் நால்வரில் ப்ரீத்தி புலம்பி கொண்டு இருந்தாள் “என்னடி புடவை இது என் இடுப்புல நிக்கவே மாட்டிக்கிது இறங்கி இறங்கி வருது, அப்படியே சுடிதார் பேண்ட் போட்டுக்கற மாதிரி இருந்தா நல்லா இருக்கும்”என்க மற்றவர்கள் அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர்.
அபி, “உன்னோட புடவைக்கு எவனோ சூனியம் வச்சுட்டான் அதான் நிக்க மாட்டிக்கிது”
பூஜா, ப்ரீத்தியின் அருகில் சென்றவள் “யூ டூ டா மீக்கும் நிக்க மாட்டிக்கிது.இந்த புடவைய கண்டுபிடிச்சவன் கைல கிடைச்சான் செத்தான்.அவன்பாட்டுக்கு பொறுப்பில்லாம கண்டு பிடிச்சுட்டு போய்ட்டான் இங்க கஷ்டப்படறது யாரு எல்லாம் இந்த மந்தினாலதான்”என்று மதுவை திட்டி கொண்டிருந்தாள்.
ஆம், மதுவின் பிடிவாதத்தாலேயே நால்வரும் மெல்லிய சரிகை வைத்த புடவையை கட்டி இருந்தனர்.அழகான காக்ரா சோலி அணிந்து வந்தவர்களை பார்த்தவள் “நான் மட்டும் புடவை கட்டி இருக்கேன்ல நீங்களும் புடவை கட்டுங்கடி”என்று பிடிவாதம் பிடிக்க இன்றைய நாயகி அவள்தான் என்பதால் அவள் விருப்பப்படி தோழிகளும் புடவை அணிந்தனர்.
சூர்யா, அபி இருவருக்கும் புடவை பாந்தமாக பொருந்தி போக மற்ற இருவரும் சேர்ந்து மதுவை வசை பாடி கொண்டிருந்தனர்.
மது, “ஏன்டி நானே இங்க கவலையில இருக்கேன் நீங்க வேற என்னை திட்டுறீங்க நானே பாவம்”என்றாள்.
சூர்யாவோ வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு “ஆமா இப்போ உனக்கு என்ன கவலை” என்று கேட்க, அபி, “ஆமாண்டி எவ்வளவு பிரம்மாண்டமா உனக்கு மேரேஜ் பண்றாங்க, மாப்பிள்ளையும் உனக்கு பிடிச்சவருதான்,வெளிய போய் பாரு மண்டபத்தை எவ்வளோ அழகா டெக்கரேட் பண்ணி இருக்காங்கன்னு” என்று சொல்ல,
மதுவந்தி, “அது எல்லாம் சரிதான், ஆனால் வெளிய இருக்க போர்டுல என்ன பேரு எழுதி இருக்காங்கனு பார்த்தீங்களா” என்று கேட்க,
துள்ளிக் குதித்து வந்த பூஜா கிண்டல் சிரிப்புடன் அவள் இரு கன்னத்தையும் வலித்து நெட்டி முறிப்பது போல் செய்து ‘ஆண்டாள் அழகு நாச்சியார்’ என்று சொல்ல,
மது காதில் கை வைத்து கொண்டு “சொல்லாதடி சொல்லாத இன்னொரு வாட்டி அந்த பேரை சொல்லாத, தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன் அந்த பேர பத்திரிக்கைல போடாதிங்கனு யார் கேட்டா,அதெல்லாம் முடியாது ஜாதகத்தில் இருக்க பேர் போட்டாதான் வாழ்வாங்கு வாழ்வனு சொல்லி இப்படி என்னை துக்கப்பட வச்சுட்டாங்களே” என்று புலம்ப அவளை பார்த்து பாவப்பட்ட ப்ரீத்தி “ஏன்டி நான் வேணா வெளிய போய் பொண்ணுக்கு கவலையா இருக்காம் கல்யாணத்தை நிப்பாட்டுங்கன்னு சொல்லிட்டு வரவா” என்க, அவள் தலையில் கொட்டிய சூர்யா “அபசகுனமா பேசாதடி” என்றாள்.
ப்ரீத்தி, “நல்லா சேர்ந்தாங்க பாரு ரெண்டு பேரும் சீனியருதான் தலைல கொட்டறாருனு பார்த்தா இவளும் கொட்டுறா” என்று மெலிதாக முனகியவள், “அவதானடி சொன்னா அதனால்தான் கேட்டேன்” என்றாள் சத்தமாக.
உடனே அபி “ரெண்டு பேரும் சண்டையை நிப்பாட்டுறீங்களா, அடியே மது மூஞ்ச கொஞ்சம் சிரிச்ச மாதிரி வச்சுக்கோ இல்லைனா நாங்கதான் ஏதோ சொல்லிட்டோம்ன்னு அந்த ஓல்டு லேடி எங்கள முறைக்கும்”என்றாள்.
ப்ரீத்தி, “நல்லாதான் இருக்குது பேரு ஆனா பெருசா இருக்கு ஆண்டாள் அழகு நாச்சியார்” என்க, கோபமான மது அங்கிருந்த ஒரு ஆப்பிளை எடுத்து கொண்டு அவளை அடிக்கத் துரத்தினாள்.
அந்த ரூமையே இருவரும் சுத்தி சுத்தி வந்து கொண்டிருக்க, மற்றவர்கள் அவர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர்.அப்போது “பெண்ணை அழைச்சுட்டு வாங்கோ….” என்ற ஐயரின் குரலில் அப்படியே நின்றவள் அபியிடம் திரும்பி “எனக்கு பயமா இருக்குடி”என்று சொல்லும்போதே பிரபாவின் அக்கா அவளை அழைத்து செல்ல வந்துவிட தோழிகள் பட்டாளம் வேறு எதுவும் பேச முடியாமல் போனது.
பச்சைபட்டுடுத்தி மனதுக்கு பிடித்த மணாளனையே மணக்க போகிறோம் என்ற பூரிப்புடன் குனிந்த தலை நிமிராமல் தேவதையென வந்தவளின், வரவை எதிர் பார்த்து வழி மேல் விழி வைத்து அமர்ந்திருந்த பிரபா கண் இமைக்காமல் பார்த்திருந்தான்.
அவன் காதருகில் குனிந்த பூஜா “கண்ட்ரோல் பிரோ….. கண்ட்ரோல் சத்தியம்…. சத்தியம் அதை நியாபகம் வச்சுட்டு, நல்ல பையனா அந்த பக்கம் ஓபன் ஆகி இருக்க வாட்டர் பால்ஸ்ஸ கிளோஸ் பண்ணுங்க பார்ப்போம்” என்றாள்.
உடனே அவளை முறைத்தவன் “ஒரே வார்த்தையையே எதுக்கு ரெண்டு டைம் சொல்லிட்டு இருக்க அந்த பக்கம் தள்ளி போ, மத்ததுதான் கூடாது.என் பொண்டாட்டிய சைட் அடிக்க கூட கூடாதா அது எல்லாம் முடியாது ரொம்ப பேசுனா நைட்டே சத்தியம் சமாதி ஆகிடும் போ போ”என்று விட்டு தன் தேவதையையே பார்த்து ஜொள்ளுவிட்டு கொண்டிருந்தான்.
தன் அருகில் அமர்ந்தவளை இமைக்காமல் பார்த்தவன் அவளை நெருங்கி அமர போக அவன் தோளில் கை வைத்து தடுத்த பூஜா “சத்தியம் சத்தியம்”என்று மெதுவாக கூற, அது மற்றவர் பார்வைக்கு பிரபா தோளில் இருந்த தூசியை தட்டுவது போல்தான் இருந்தது.
உடனே பல்லை கடித்த பிரபா “உன்னை எல்லாம் ஸ்டேஜ்ல நிக்க சொல்லி யார் சொன்னா போ அங்க ஐஸ் கிரீம் தரங்களாம் போ”என்க, அவளோ கிண்டல் சிரிப்புடன் “சத்தமா சொல்லாதீங்க ப்ரோ உங்க ஆளுக்கு ஐஸ் கிரீம்னா உயிர், எந்திரிச்சு ஓடிட போறா”என்றாள்.
பூஜா சொன்ன பின்தான் மாலில் மது இரண்டு ஐஸ் கிரீமுடன் நின்றது நினைவு வர “அட கடவுளே என்னை ஏன் இந்த கும்பல்ல கோத்துவிட்ட”என்று வானத்தை பார்த்தவாறு மனதிற்குள் புலம்ப அவன் காதருகில் குனிந்த அபி “என்ன பண்றது ப்ரோ எல்லாம் விதி”என்றாள். அதில் அதிர்ந்த பிரபா “அவ்வளவு சத்தமாவ கேட்டுச்சு”என்க, அவளும் அப்பாவியான முகத்துடன் “ஆமாம்”என்று தலையசைத்தாள்.
இவை அனைத்தும் மற்றவர்கள் பார்வைக்கு மதுவிடம் குனிந்து பேசுவது போல் இருந்தாலும் வார்த்தை முழுவதும் பிரபாவிற்கு என்று அங்கிருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அபியின் பேச்சில் மது சிரிக்க அவளை முறைத்தவன் “சிரிக்காத” என்று சொல்ல அப்போதுதான் அவளுக்கு அதிகமாக சிரிப்பு வந்தது, அப்போது அவனை முறைத்த அபி “பொண்டாட்டி சிரிக்கறதை பார்த்து ரசிக்கணும் இப்படி திட்ட கூடாது”என்று சொல்ல,அவனோ என்ன பதில் சொல்வது அதுவும் மேடையில் இப்படி அமர்ந்து கொண்டு என்று யோசித்தவன் செய்வதறியாது விழிக்க ஆரம்பித்தான்.
அவனின் முக பாவனை மதுவிற்கு மேலும் சிரிப்பையே உருவாக்கியது. அதனால் தலையை குனிந்து கொண்டு உடல் குலுங்க சிரிக்க ஆரம்பித்தாள், அதை பார்த்த மதுவின் பாட்டி தன் மகனிடம் அங்க “பாருங்கடா ஆண்டாளு நம்ம விட்டு பிரிய போறோமேங்கற கவலைல அழுது”என்று சொல்லி அழ அந்த பாசக்கார தந்தையின் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது.
இப்படி பல கலாட்டாக்களுடன் மதுவின் கழுத்தில் மங்கள நாணை பூட்டி தன் வாழ்வின் சரி பாதியாக ஏற்று கொண்டான் பிரபா.அதன் பின் உறவுகளுடன் அவர்கள் நேரம் செல்ல மது தோழிகளை போட்டோ எடுக்க அழைக்க அவர்களோ “முடியவே முடியாது” என்றுவிட்டனர்.ஏன் என்று கேட்டவளின் அருகில் வந்த அபி “அதோ இருக்கு பாரு பாத்ரூம் அங்க நின்னு போட்டோ எடுத்தாலும் எடுப்போம், ஆனா ஆண்டாளுன்ற உன்னோட பேருக்கு முன்னாடி நிக்க மாட்டோம்”என்றாள்.
மற்றவர்களும் “ஆமாம்….ஆமாம்”என்க வேறு வழி இல்லாமல் மதுவின் அண்ணன்மார்கள் கையில் பூங்கொத்துக்களை வைத்து பேரை மறைத்து நிற்க பூக்களின் பின்னோடான பேக் ரவுண்டில் தோழிகள் வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர்.
ஆதர்ஷ், “இவளுக்கு அண்ணனா பொறந்ததுக்கு பேசாம வாசல்ல இருக்க பன்னீர் பொம்மையா பொறந்துருக்கலாம்” என்று புலம்பி கொண்டு இருந்தான்.
ஒருவழியாக மதுவின் திருமணம் தோழிகளின் கிண்டல் கலாட்டாவினோடும்,மதுவின் பயத்தோடான வெட்கத்தோடும், பிரபாவின் ஜொல்லோடும் சிறப்பாக முடிய.அன்று மாலையே அவர்களுக்கான ரிசப்ஷன் தயார் செய்யப்பட்டிருந்தது.மதிய வேளையில் சற்று நேரம் ஓய்வு எடுத்தவர்கள் மீண்டும் மாலை தயாராக ஆரம்பித்தனர்.
மாலையும் மது தோழிகளை பிடிவாதம் பிடித்து சேரிகட்ட சொல்ல, இப்போவும் புடவையா என்ற முணுமுணுப்புடனே ஒரே போல் டிசைனர் சேலையை உடுத்தினர்.
அப்போது பூஜாவின் பிளவுசை பார்த்த அபி “ஏன்டி உங்க அப்பாதான் பெரிய பிசினஸ்மேன் ஆச்சே, ஒரு பிளவுஸ் துணி எடுக்க உனக்கு காசு இல்லையா, கஞ்சத்தனமா முதுகுல ஒரே ஒரு கயிறு மட்டும் தான் இருக்கு,கொஞ்சம் தாராளமா துணிவிட்டு தச்சாதான் என்ன”என்று கேட்டாள்.
உடனே அவளை முறைத்த பூஜா “அடியே நான் புடவை கட்டி இருக்கிறதே பெருசு இதுல அதை பண்ணு இதை பண்ணுனு ரூல்ஸ் பேசிட்டு இருந்த ஜீன்ஸ் எடுத்து மாட்டிட்டு வந்துடுவேன் பாத்துக்கோ”என்று சொல்லி கொண்டிருக்கும் பொழுதே அவள் போனுக்கு அர்ஜுனிடம் இருந்து அழைப்பு வந்தது.
அவள் போன் பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே சூர்யாவை தவிர மற்ற மூவருக்கும் அவரவர் நாயகர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.
ஆதி அபியுடன் பேசிய அடுத்த நாளே அவனை தோழிகளின் முன் கொண்டு வந்து நிறுத்தி, முதல் நாள் நடந்ததில் சொல்லவேண்டியதை மட்டும் சொல்ல மற்றவர்களுக்கு ஆச்சரியமாக போனது.
சூர்யா, பூஜா இருவருக்கும் ஆதியை பற்றி தெரிந்ததால். “ஓகே” சொல்லிவிட ப்ரீத்தியும், மதுவும்தான் கோக்குமாக்கான கேள்வியை கேட்டு பின் “ஓகே” சொன்னார்கள்.சூர்யா மனத்தினுள்ளே “அந்த லூச கியூட் சார்மிங்னா சொல்ற இப்போ பாரு”என்று கருவி கொண்டவள் ஆதியை பார்த்து “அப்புறம் மாம்ஸ் எல்லா டெஸ்ட்லயும் செலக்ட் ஆகிட்டீங்க எப்போ ட்ரீட்”என்று கேட்க, அபியோ, “எது……மாம்ஸா…….” என்று அதிர, அவளும் “ஆமாம்” என்றுவிட்டு அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் ஆதியுடன் பேச ஆரம்பித்தாள்.
மற்றவர்களோ “இவ யாருகிட்டயும் இப்படி பேசலையே” என்று யோசிக்க, அபிக்கு அப்போதுதான் மண்டையில் பல்ப் எரிந்தது உடனே மூவரிடம் திரும்பியவள் மெதுவான குரலில் “ஹேய் திருனேஷ நான் கியூட் சார்மிங்ன்னு கூப்பிட்டன்ல, அதான் மேடம் என்னை வெறுப்பேத்த ஆதியை மாம்ஸ்னு கூப்பிடறா”என்க மற்றவர்களோ அவளை “அட அல்ப்பமே” என்பது போல் பார்த்து “நீ என்ன வெறுப்பேத்தினாலும் சீனியர் எங்களோட பர்ஸ்ட் சைட்தான்” என்ற பார்வையை சூர்யாவின் புறம் பார்க்க அவள் புரிந்தாலும் கண்டு கொள்ளாதவள் போல் திரும்பி கொண்டாள்..அதன் பின் அபியின் காதலும் அழகான நீரோடையாக சென்று கொண்டு இருக்க இப்போது மதுவின் திருமணத்திற்கு சென்றிருப்பவளை போனில் அழைத்து பேச ஆரம்பித்தான் ஆதி.
மூவரும் போனை எடுத்துக் கொண்டு அந்த அறையின் ஆளுக்கு ஒரு மூலையில் நின்று பேசிக்கொண்டு இருக்க, சூர்யாவோ தன் போனில் கேன்டி கிரஷ் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் எதிரில் வந்து நின்ற பூஜா “வெட்டியா தானே உட்கார்ந்து இருக்க இந்த போன புடி” என்று போனை அவள் கையில் திணித்து சற்று தள்ளி நின்று கொண்டு “இந்த சேரி எப்படி இருக்கு அஜூ எனக்கு நல்லா இருக்கா”என்று சுற்றிகாட்டி கேட்க,
போனில் தெரியும் தன்னவளின் பிம்பத்தை கண்கள் தெறித்து விடும் அளவிற்கு விழித்தவன் “அடியே என்னடி சேரி இது ஒழுங்கா எதாவது எடுத்து மூடுடி மூடு”என்று கத்த, தன்னை விளையாட விடவில்லை என்ற கடுப்பில் இருந்த சூர்யா “ம்… …அடுத்த ரூம்ல தேங்க கொட்டி வைக்கற கோணி இருக்கு அது எடுத்து தரவா”என்க, அவளை முறைத்தவன் பூஜாவின் புறம் கண்களை திரும்ப அவளோ முகம் வாடி நின்றிருந்தாள் உடனே அவளை சமாதானபடுத்த நினைத்தவன் “என்ன டியர் ஆச்சு” என்றான்.
பூஜா, “டேய் முட்ட கண்ணா என்னை டியர்னு கூப்பிடாதனு சொல்லிருக்கன்ல” என்று சொல்லி மல்லுக்கு நிற்க, அர்ஜுனோ “ஹப்பாடா முன்னாடி சொன்னதை மறந்துட்டா”என்று நிம்மதி பெரு மூச்சு விட்டவன், அவளை பார்த்து சிரித்துவிட்டு மேலும் உடையைபற்றி எதுவும் பேசாமல் “கிளம்பிட்டேன் இன்னும் ஹாஃப் அண்ட் ஹவர்ல அங்க இருப்பேன்”என்றுவிட்டு கட் செய்தான்.
அப்போது அவர்கள் அறை கதவை யாரோ தட்ட அனைவரும் தங்கள் போனை கட் செய்துவிட்டு யார் என்று பார்க்க மதுவின் பெரியம்மாதான் வந்திருந்தார். “அம்மா ஆண்டாளு உன்னோட அண்ணே, அந்த ஆதர்ஷ் பையன பாத்தியா, டெக்கரேட் பண்றதெல்லாம் நான் மேல் பார்வை பாக்கறேன்னு சொல்லிட்டு ஆளயே காணோம் உன்னோட பெரியப்பா திட்டிட்டே இருக்காரு இன்னும் கொஞ்ச நேரத்துல ரிசப்ஷன் ஆரம்பிச்சுடும் இந்தப் பையன் எங்க போனான்னு தெரியலையே” என்று புலம்பினார்.
சூர்யா, “நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்கம்மா, நாங்க எல்லாத்தையும் பாத்துக்கறோம்” என்று சொல்லி தோழிகளை பார்க்க அவர்களோ அவளை வெட்டவா… குத்தவா என்பது போல் முறைத்துக் கொண்டு இருந்தனர். “நீங்க எப்படிமா…….” என்று தயங்கியவரை “கவலைப்படாம போங்கம்மா நாங்க இருக்கோம்” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
அவர் வெளியே சென்றவுடன் சூர்யாவின் அருகில் வந்த பூஜா “என்னடி நினச்சிட்டு இருக்க, நானே ஒன் ஹவர் கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு இருக்கேன், ஓடியாடி வேலை செஞ்சா வேர்த்து மேக்கப் எல்லாம் கலஞ்சிடும் நான் அதெல்லாம் செய்ய மாட்டேன் என்றாள்.
ப்ரீத்தி, “ஆமா இவங்க வாசன் ஐ கேர்ல வேலை செய்யற டாக்டர் நாங்க இருக்கோம்னு உத்திரவாதம் குடுக்கறா, அவ அவ இந்த சேரில நடக்கறதே பெரிய சாதனையா நினைச்சுட்டு இருக்கா, இவ என்னனா என்னை வேலை செய்ய சொல்றா முடியாதுடா முடியாது முடியவே முடியாது,”.
சூர்யா, “நம்ம ஃபிரண்டு கல்யாணத்துல நாம தானடி வேலை செய்யணும்” என்று வியாக்கியானம் பேச அவர்கள் அருகில் வந்த அபி “ஐயோ போதும் நிறுத்துங்கடி உங்க பேச்சை”என்றுவிட்டு ப்ரீத்தியின் புறம் திரும்பியவள் “பேசாம வாங்கடி போய் வேலைய ஆரம்பிப்போம், இவ பேசுவதை கேக்கறதுக்கு பதிலா அந்த வேலையவே jசெஞ்சுடலாம்”என்று சொல்லி இருவரையும் இழுத்து கொண்டு வெளியில் சென்றாள்.
சூர்யா அவர்கள் செயலில் சிரித்தவள் தானும் சென்று சாப்பாட்டு அறையில் நின்று மேற் பார்வை பார்த்து கொண்டிருந்தாள்.
விருந்தாளிகள் அனைவரையும் சூர்யா உபசரித்துக் கொண்டிருக்க, மற்ற மூவரும் தங்களது பங்கிற்கு தோழியின் திருமணத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்துகொண்டிருந்தனர்.இதை வெகுநேரமாக கவனித்துக்கொண்டிருந்த மதுவின் மாமியார் “மருமகளோட பிரண்ட்ஸே இவ்ளோ பொறுப்பா இருக்காங்கனா, நம்ம மருமகள் எவ்வளவு பொறுப்பாக இருப்பா”என்று மனதில் எண்ணிக் கொண்டவர் “சரி அவங்ககிட்ட பேசிப் பார்ப்போம்” என்று முடிவு செய்துகொண்டு செல்ல மதுவின் நல்ல நேரமோ இல்லை அவளது மாமியாரின் கெட்ட நேரமோ அவர் பேச சென்றது சூர்யாவிடம்.
விருந்தினர்களை சிரித்த முகமாக உபசரித்து கொண்டிருந்தவள் அருகில் சென்றவர், “அம்மாடி……” என்று அழைக்க, உடனே திரும்பியவள் அங்கு நின்றிருந்த பிரபாவின் தாய் சாரதாவை கண்டு “ஆன்ட்டி என்ன இங்க வந்து நிக்கிறீங்க, உட்காருங்களேன் பார்க்க ரொம்ப டயர்டா தெரியரீங்க,காபி, டீ எதாவது குடிக்கறீங்களா” என்று கேட்க அவரோ மனதுக்குள் குளிர்ந்து போனவர் “பரவாயில்லையே எல்லா பிள்ளைகளும் பொறுப்பான பிள்ளைகளாதான் இருக்கு,ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்னு சொல்லுவாங்க இந்த பொண்ணுட்ட பேசுனதுலையே தெரியுது தோழிகள் ஐவரும் எவளோ பொறுப்பானவங்கனு” என்று மகிழ்ந்தவர், அவளிடம் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், தனது மாமியார் அறையில் இருப்பதாகவும் அவருக்கு உடம்பு முடியாமல் இருப்பதால், அறைக்கு உணவை கொண்டு சென்று கொடுத்துவிட்டு வர வேண்டும் என்று சொல்ல, சூர்யாவும் “சரி ஆண்ட்டி, நான் போய் குடுத்துட்டு வரேன்” என்றவள், சாப்பாட்டை எடுத்து கொண்டு பாட்டியின் அறை நோக்கி சென்றாள்.
அங்கு ‘குக்கூ…. குக்கூ.. .’ என்ற பாடலை யாரோ சத்தமாக வைத்து கேட்டு கொண்டிருந்தனர்.
சூர்யா, “என்னடா இது உடம்பு முடியாம இருக்கவங்கள வச்சுக்கிட்டு சத்தமாக பாட்டு கேட்டிட்டு இருக்காங்க வயசானவங்களுக்கு டிஸ்டர்பா இருக்கும்னு கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டாங்க போல” என்று திட்டி கொண்டே அங்கிருந்த ஜன்னல் வழியாக எட்டி பார்க்க அங்கு கண்ட காட்சியில் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனாள்.
ஏனென்றால் அந்த பாட்டை போட்டு கைகளை அசைத்து ஆடிக்கொண்டிருந்தது சாட்சாத் பிரபாவின் பாட்டியேதான், வாயில் கை வைத்தவள் “அடப்பாவி கிழவி உடம்பு சரி இல்லனு எல்லார்ட்டையும் சொல்லிட்டு இப்போ குக்கூ கேக்குதா உனக்கு குக்கூ”என்று கருவியவள், வேகமாக தோழிகளையும் இழுத்து வந்து காட்ட பாட்டியின் நடனத்தை பார்த்து அதிர்ச்சியானர்கள்.
அபி, “நினச்சேன்டி நினைச்சேன் மதுவை பாக்க வரும்போதே இந்த கிழவி நல்லா தெளிவாதானே இருக்கு, அப்புறம் உடம்பு சரி இல்லைன்னு சொல்றாங்களே நினைச்சேன், அதே மாதிரி ஆயிடுச்சு பாத்தியா”
பூஜா, “அதான் பாருடி குக்கூவாமுல்ல குக்கூ”
இவர்கள் பாட்டியின் ஆட்டத்தை கண்டு காண்டாக, அவர்களை கண்டுகொள்ளாத பாட்டியோ “அல்லி மலர் கொடி அஞ்சுகமே…… .”என்று பாடி ஆடி கொண்டிருந்தவரையும் தன் கையில் இருந்த உணவையும் பார்த்த சூர்யா மற்றவர்கள் புறம் திரும்பி என்ன இருந்தாலும் நம்ம மதுவுக்காக விட்டுறலாம் ஆனா பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாதுன்னு பெரியவா சொல்லி இருக்காங்க அதனால கிழவிக்கு புவா லேது என்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
பின் ரிசப்ஷன் ஆரம்பித்துவிட, வேலைகளை முடித்த தோழிகள் நால்வரும் லேசான டச் அப் செய்துவிட்டு வந்தனர்,பிரபாவின் கண்களோ தன்னவளையே கள்ளுண்ட வண்டாக சுற்றி வந்து கொண்டிருந்தது.
மதுவிற்கு துணையாக நின்றிருந்தனர் தோழிகள்.அப்போது உள்ளே வந்த அர்ஜுனை பூஜா கை ஆட்டி அழைக்க,”யாரை இவ கூப்பிடறா” என்று திரும்பிய சூர்யா அர்ஜூனுடன் வந்த திருனேஷை கண்டு அதிர்ந்து முகத்தில் மண்டிய எரிச்சலோடு “இவன் எதுக்கு இங்க வந்திருக்கான்” என்று எண்ணிக் கொண்டே மதுவிடம் திரும்பியவள் “இவன எதுக்குடி வர சொன்ன” என்றாள்.
மதுவோ “இங்க பாருடி என்ன இருந்தாலும் அவன் எங்களோட பஸ்ட் சைட் அதனால அவனையும் கூப்பிட தான் செய்வேன்,எப்படி நீ ஏன் வந்தானு கேட்கலாம்” என்று கேட்டவள் மற்றவர்களை பார்த்து “என்னங்கடி” என்று கேட்க,அவர்களும் கிண்டல் சிரிப்புடன் “ஆமா……ஆமா…..கரெக்ட் தான்” என்றனர்.
அதில் மேலும் கோபமுற்ற சூர்யா “உங்களையெல்லாம் திருத்தவே முடியாது போங்கடி”என்றுவிட்டு கோபமாக அங்கிருந்து அகன்று விட, மற்றவர்கள் தங்களுக்குள் சிரித்தபடி அவள் செல்வதை பார்த்திருந்தனர்.
அழைத்த உறவினர்களும் நண்பர்களும் அனைவரும் வர ஆரம்பித்து விட, ஆதியும் மதுவின் அழைப்பின் பேரில் வந்திருந்தான்.அவ்வளவு நேரம் முகத்தை தூக்கி வைத்து கொண்டிருந்த சூர்யா ஆதியை பார்த்தவுடன் வேண்டுமென்றே “ஹாய் மாம்ஸ்”என்று பேச ஆரம்பிக்க அபிக்கோ இங்கு காதில் புகை வர ஆரம்பித்தது “பக்கி பய வந்த உடனே என்னை பார்க்கணும்னு தோணுச்சா அவகிட்ட என்ன பேச்சு”என்று கருவ, மறு பக்கம் திருவும் அதே கடுப்புடன்தான் நின்று கொண்டிருந்தான். அவனை கிண்டலாக பார்த்த அர்ஜுன் “என்னப்பா இங்க பயங்கரமா புகையற ஸ்மெல் வருது”என்க, அவனை முறைத்த திரு “அவளுக்கு கொழுப்ப பாருடா என்ன பார்த்த உடனே அந்த மூஞ்சுல்ல எள்ளும் கொள்ளும் வெடிச்சுது, இப்போ ஆதி ப்ரோகிட்ட மட்டும் பல்லை காட்டி பேசறா இவளை……”என்று பல்லை கடிக்க மட்டுமே அவனால் முடிந்தது.
ஆதியிடம் பேசி அபியை வெறுப்பேத்திய பிறகே ஓரளவு சமாதானம் ஆன சூர்யா பின் தோழிகளுடன் ஐக்கியமாகி கொண்டாள்.ஐவரும் சேர்ந்தால் ஏற்படும் கலகலப்பை சொல்ல வேண்டுமா என்ன, மற்றவர்களை கேலி கிண்டல் செய்து கொண்டும்,அங்கு வந்திருக்கும் தங்கள் இணைகளோடு நேரத்தை செலவழித்து கொண்டும் இருந்தனர்.
உணவிற்குப்பின் அர்ஜுன் பூஜாவிற்காக ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வருவதாக சென்றுவிட,இங்கு ப்ரீத்தியோ “ஐஸ்கிரீம் வாங்கற இடத்துல எவ்வளவு கூட்டம் பாரேன்” என்று கூறி சோகமாக முகத்தை வைத்து கொண்டு அமர்ந்திருக்க அவள் முன் ஒரு ஐஸ் கிரீம் நீட்டப்பட்டது.
வேற யாரு நம்ம கிருஷ்தான் ப்ரீத்திக்காக ஐஸ் கிரீம் கொண்டு வந்து கொடுத்து பேச இழுத்து சென்றுவிட்டான்.(என்ன பேச போறானோ)அபி வேறு ஏற்கனவே ஆதியுடன் பேச சென்றுவிட இப்போது பூஜாவும் சூர்யாவும் மட்டுமே அங்கு அமர்ந்திருந்தனர்.
அர்ஜுன் ஐஸ்கிரீமுடன் பூஜாவின் அருகில் வருவதை கண்ட சூர்யா, திருனேஷினால் உண்டான கடுப்பில் அவனை வெறுப்பேற்ற நினைத்து பூஜாவிடம் “ஆனாலும் பூஜா திரு அழகுதான் இல்ல” என்க,அவளை ஏற இறங்க பார்த்த பூஜா “நீயா பேசியது நீயா பேசியது”என்று கேலியாக கேட்டவள், பின் சூர்யாவின் பின் நின்றிருந்த திருனேஷை பார்த்து நமுட்டு சிரிப்புடன் “ஆமாம் ஆமாம் அதுவும் உண்மைதான் ஆள் செம ஹாண்ட்சம்”என்று கூறியவள் தனக்கு பின் நின்றிருந்த அர்ஜுனை கவனிக்கவில்லை.
இரு தோழிகளின் பின்னும் அவரவர் இணைகள் நிற்க, அர்ஜுனை காண்டாக்க என்றே திருவைபற்றி சூர்யா பேச,இதை அறியாத பூஜா உண்மையாகவே அவனை பார்த்து சைட் அடித்து கொண்டிருந்தாள்.அவளின் உள் மனம் “இது தப்புடி அவன் உன்னோட பிரண்டோட ஆளு” என்று எடுத்து சொல்ல, அதை முறைத்தவள் “அழகை ரசிக்கலாம் தப்பில்ல பேசாம இரு”என்று அடக்கிவிட்டு தன் ஜொல்லுவிடும் வேலையை தொடர்ந்தாள்.
சூர்யா, “அவன் செம கலர் இல்லை” என்று கேட்க, பூஜாவும், “ஆமா…. ஆமா….” என்று அவளுக்கு ஒத்து ஊதினாள். “அவனோட லிப்ஸ் இருக்கே” என்று ஆரம்பித்தவள் அவனை தன் மனதிற்குள் எவ்வாறு ரசித்தாள் என்பதை அப்படியே பூஜாவிடம் புகழ்ந்து சொல்ல, பூஜாவும் “ஆமாம் சாமி…..”போட்டு கொண்டிருந்தாள்.
அர்ஜுன் அவர்கள் அருகில் வரும்போதே திருவை பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டவன், சூர்யாவின் முகத்தில் இருந்த குரும்பை கண்டு கொண்டு “அடிப்பாவி என்ன வெறுப்பேத்தனு அவ பேசறானா இவளும் கூட ஆமா ஆமானு ஒத்து ஊதறாளே இவளை….. “என்று பல்லை கடித்தவன் “இதுக்கு என்னதான் எண்டுனு பார்க்கலாம்” என்று அவர்கள் பேசுவதை தொடர்ந்து கேட்க ஆர்பித்தான்.
பூஜா சொல்வதை எல்லாம் கேட்டு கடுப்பானவன் “என்ன பத்தி பேச சொன்னா கூட, இவ்ளோ ரசிச்சு சொல்ல மாட்டா போல, எல்லாம் என் தலை எழுத்து” தன் தலை எழுத்தை நொந்தபடி இருக்க,அவளோ இது மட்டும் இல்ல ராசா உன்னை டேமேஜ் பண்ண இன்னும் இருக்கு என்பது போல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் பூஜா.
சூர்யா, “ஆனாலும் அவன் அளவுக்கு உன் ஆள் கலர் இல்லை” என்று கூற, பூஜாவோ “இல்ல இல்ல அப்படி எல்லாம் இல்ல” என்று மறுத்தால் அதை கேட்ட அர்ஜுனோ “அப்பா நல்ல வேலை நம்மள டேமேஜ் பண்ண விடாம காப்பாத்திட்டா”என்று மனதிற்குள் நிம்மதிப் பெருமூச்சுவிட அந்த நிம்மதிக்கு காலம் வெகு சில நொடிகள்தான் என்பது போல் பூஜா “என்ன இருந்தாலும் அவன் பர்சனாலிடியோட கம்பேர்பண்ணும் போது என் ஆளு கொஞ்சம் கம்மிதான்.என் ஆளுங்கறத்துக்காக நான் பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்” என்றாள்.
அதில் காண்டான அர்ஜுன் சூர்யாவின் பின்னால் நின்ற திருவை முறைக்க, அவனோ அஜூவை பார்த்து வாயெல்லாம் பல்லாக சிரித்து கண்ணடித்தான்.அது ஏற்கனவே கடுப்பில் இருந்த அர்ஜுனை மேலும் கடுப்பாக்க வேகமாக பூஜாவின் அருகில் சென்றவன் அவளை முறைத்த படி நிற்க அவளோ அவனை அங்கு எதிர்பார்க்காததால் அசடு வழிய “ஈஈஈ…….. “ சிரித்தாள்.
அர்ஜுனோ தன்னை பார்த்தவுடன் சமாளிப்பதற்காகவாவது ‘சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் அஜூ’ என்று சொல்வாள் என அவன் எதிர் பார்க்க அவளோ அசடு வழிய சிரித்து வைத்தாள்.அதில் கடுப்பானவன் மனதினுள் “இவளை இப்படியே விட்டா வேலைக்கு ஆகாது.இனிமே அவ யாரையும் சைட் அடிக்க விட கூடாது” என்று முடிவெடுத்து கொண்டவன், முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு தன் கையில் இருந்த ஐஸ்கிரீமை சூர்யாவின் கையில் திணித்து விட்டு எதுவும் பேசாமல் விறு விறுவென்று வெளியே சென்றான்.அவன் பின்னோடு பதட்டமாக சென்ற பூஜா “அஜூ சொல்றதை கேளு சும்மா……”என்ற வார்த்தை காற்றோடுதான் கலந்துதான் போனது.
இது அனைத்தையும் பார்த்து சிரித்து கொண்டிருந்த சூர்யாவின் அருகில் வந்த அபி “என்ன நாரதா செயலை சிறப்பாக செய்து முடித்துவிட்டாய் போல” என்று கேட்க, அவளோ தோள்களை குலுக்கி உதட்டை பிதுக்கி காட்டியவள் “பின்ன என்னடி அந்த அர்ஜுன் வேணும்னே என்ன வெறுப்பேத்தறான் அதான் ஒரு சின்ன ஷாக் ட்ரீட்மண்ட் எப்புடி….. .”என்க.
அபியோ கிண்டலான குரலில் உனக்கு ஒரு ஷாக் டிரீட்மென்ட் தரட்டுமா என்க, அவளோ புரியாமல் “எனக்கா என்ன” என்று கேட்க அவளை லேசாக திருப்பிய அபி “அங்க பாரு செல்லக்குட்டி” என்றாள்.
“பின்னாடி என்ன” என்று கூறியபடி அசட்டையாக திரும்பியவள் அங்கு தன்னையே விழுங்குவது போல் பார்த்து கொண்டிருந்த திருவின் காதல் பார்வையில் கட்டுண்டு உறைந்து போனாள்.
Last edited: