Sonythiru
Suthisha
அத்தியாயம் -17
பூஜா தோழிகளிடம் கத்திவிட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி, முகத்தை உரென்று வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க,அவ்வளவு நேரமும் எதற்கு அவள் கத்துகிறாள் என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்த நால்வரும் “ஹப்பாடா முடிச்சுட்டா” என்ற நிம்மதி பெரு மூச்சுவிட்டனர்.
அபிதான் முதலில் பூஜாவிடம் "என்னாச்சுடி" என்று கேட்க,அவள் கேள்வியில் கடுப்பான பூஜா "ம்.........னொன்னாச்சு அந்த லூசுங்க இருக்காங்கல்ல,அதுங்க என்ன சொல்லுதுங்க தெரியுமா, அவங்க ரெண்டு பேரும் சூப்பர் பேராம், அவங்களுக்குள்ள இருக்க கெமிஸ்ட்ரி செம்மையா இருக்காம், அவங்க ஒரிஜினல் பேர் ஆனா கூட நல்லா இருக்கும்னு பேசிக்குதுங்க. டான்ஸ் ஒன்ன ஆடுறதுனால மட்டும் அர்ஜுனும், அந்த பொண்ணும் நல்ல பேர் ஆகிடுவாங்களா,எனக்கு வர கோவத்துக்கு .......” என்று பல்லை கடித்தவள் பின் “ஒன்னா டான்ஸ் ஆடறவங்கள எல்லாம் பேர்னா சொல்லுவாங்க, கூட ஆடறவங்கனு சொன்னா ஆகாதா" என்று கேட்க,மதுவோ "காலம் காலமா அப்படி தான்டி சொல்லிட்டு வராங்க" என்றாள்.
அவளை முறைத்த பூஜா "கூட டான்ஸ் ஆடுறவங்க பேர் இல்லை. நானும் அர்ஜுனும் தான் பேர்”என்று மிடுக்காக கூறினாள். உடனே ப்ரீத்தி “நீ எங்களோட பிரண்டுங்கரத்துக்காக எல்லாம் எங்காளால பொய் சொல்ல முடியாது. கூட ஆடறவங்கள பேர்னுதான் சொல்லுவாங்க,நீ நம்பலாட்டியும் அதான் நெசம்" என்று சொல்ல ,அபியும் “ஆமா ஆமா அவங்கதான் பேர்.என்னடி அப்படிதானே”என்று சூர்யாவிடம் கேட்டாள்.
இவர்களின் பேச்சு எதிலும் கலந்து கொள்ளாமல் திருவைபற்றி யோசித்து கொண்டிருந்த சூர்யா,அபி ஏதோ கேட்கவும் முதலில் விழித்தவள் பின் “ம்..... ஆ. ஆ.ஆமா..... ஆமா” என்று தலையாட்டி வைத்தாள்.
சூர்யாவின் பதிலிலேயே அவள் தங்களுடைய பேச்சை கவனிக்கவில்லை என்பதை புரிந்து கொண்ட அபி “என்னடி ஆச்சு ஏன் சோகமா இருக்க, நேத்துல இருந்தே நீ சரி இல்லையே ” என்று கேட்க அவளோ மலுப்பாலாக “இல்லைடி ஒன்னும் இல்ல” என்றாள். அவளை அனைவரும் நம்பாத பார்வை பார்க்க, பூஜாவோ “இல்லடி என்னமோ இருக்கு, இவ நம்மகிட்ட மறைக்கிறா.” என்றாள்.அவள் சொல்வதை கேட்டு சூர்யாவை யோசனையாக பார்த்த மது “சோ............... எங்ககிட்ட மறைக்கிற அளவுக்கு ஏதோ ஒரு பெரிய விஷயம் இருக்கு அப்படிதானே” என்று கேட்க, அவர்களின் பேச்சை இடை நிறுத்திய அபி,சூர்யாவை ஆராயும் பார்வை பார்த்தவள் “இப்போ உன்னால சொல்ல முடியுமா, முடியாதா” என்று அழுத்தமாக கேட்டாள்.அவள் கேள்வியில் தலை குனிந்தவள் பின் இதை மறைத்து பயனில்லை என்ற முடிவிற்கு வந்தவளாக, ஒரு பெரு மூச்சுடன்,திருனேஷ் பற்றிய அனைத்தையும் சொல்லிவிட்டாள். ஆனால்,ஏனோ லிப்டில் நடந்த விஷயத்தையும்,அவன் தான் ஸ்கூல் படிக்கும் போது காதலை சொன்னவன் என்பதையும் கவனமாக மறைத்துவிட்டாள்.
சூர்யா சொல்வதை கேட்ட அபி மற்றும் பூஜாவிற்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது.
அபி, “எவன்டி அது.அவன் இவளோ பேசற வரை நீ அமைதியா கேட்டுட்டு இருந்தியா,அங்கேயே ஓங்கி ஒரு அரை அரைஞ்சுட்டு வரமாட்ட”என்று திட்ட,சூர்யாவோ ‘அவன் பக்கத்துல போனாலே படபடப்பாகி எனக்கு பேச்சே வர மாட்டேங்குது , இதுல எப்படி அறைய’என்று யோசித்து கொண்டு இருந்தாள்
அப்போது பூஜா, “இவ எங்க அடிக்க போறா இவ வீரம் எல்லாம் நம்மகிட்டதான், மத்தவங்ககிட்ட பேசினா வாயில இருக்க முத்து உதிர்ந்துடும் அப்படிதானே. ஏன்டி இதை முன்னாடியே எங்ககிட்ட சொல்றதுக்கு என்ன . இப்போவும் அபி அழுத்தி கேட்கவும் தான் சொல்லிருக்க”என்று திட்டி கொண்டிருக்கும்போதே, சரியாக அங்கு வந்து சேர்ந்தான் அர்ஜுன்.“ஹாய் என்ன எல்லோரும் சீரியசா பேசிட்டு இருக்கீங்க. ஏதாவது ப்ரோப்லம்மா” என்று கேட்க, பூஜாதான் அவனிடம் அனைத்தையும் தெரிவித்தாள்.
அவள் சொல்வதை யோசனையோடு கேட்ட அர்ஜுன் “யார் அவன்”என்று கேட்க, அனைவரும் இப்போது சூர்யாவை பார்த்தனர். ஏனென்றால் அவன் யாரென்று அவர்களுக்கும் சூர்யா சொல்லியிருக்கவில்லை .
தோழிகளின் பார்வையை உணர்ந்தவள். அவன் இங்குதான் இருக்கிறான் என்ற சூர்யாவின் உள் உணர்வு சொல்ல திருனேஷை அடையாளம் காட்ட எண்ணி கண்களை சுழலவிட்டாள். அவள் எண்ணத்தை பொய் ஆக்காமல் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் நின்று யாருடனோ பேசி கொண்டு இருந்தான் திருனேஷ்.
உடனே கைகளை உயர்த்தி “அதோ அந்த பிளாக் ஷர்ட்........... அவன்தான்” என்று சொல்ல, அனைவரின் பார்வையும் அவள் கை காட்டிய பக்கம் திரும்பியது.
அர்ஜுன் அங்கு நின்றிருந்த திருனேஷை வெறித்து பார்த்தபடி இருக்க,பூஜாவோ “போ அஜூ அன்னைக்கு என்னைய அசிங்கமா பேசுனவங்கள எப்படி வெளுத்து வாங்குனியோ அது மாதிரி அவனை புரட்டி எடு”என்று சொல்ல,அபியும்”ஆமா அர்ஜுன் நீங்க அடிக்கற அடில இனி அவன் சூர்யா இருக்கற பக்கம்கூட திரும்ப கூடாது”என்றாள். ஆனால் அவனோ மறுப்பாக தலையசைத்து “என்னால அவன்கிட்ட பேச முடியாது. நான் எதுவும் யார்கிட்டயும் கேட்க மாட்டேன்”என்றான். அதில் கடுப்பான சூர்யா “யாரும் எனக்காக பேச வேண்டாம். என் பிரச்சனையை , நானே பாத்துக்கறேன்” என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, மற்றவர்கள் அனைவரும் அதிர்ந்து “ஹேய் சூர்யா”என்று அவள் பின்னோடு செல்ல முயற்சிக்க, அவர்களின் புறம் திரும்பியவள் “நான் கொஞ்சம் தனியா இருக்கணும் என்னை விடுங்க” என்றவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அவள் செல்வதை பார்த்து கொண்டிருந்த அர்ஜுனை மற்ற மூவரும் முறைக்க அவர்களை சிறு சலிப்புடன் பார்த்தவன் பூஜாவை பார்க்க அவளும் அவனைதான் முறைத்து கொண்டிருந்தாள். அதில் மேலும் கடுப்பானவன் “ அவதான் உண்மை புரியாம கத்திட்டு போறானா நீங்களும் எதுக்கு என்னை முறைக்கிறீங்க”என்றான்.
அர்ஜுன் சொல்வதை புரியாமல் பார்த்த அபி “என்ன உண்மை”என்று கேட்க,அர்ஜுனோ, “சூர்யா சொன்ன திருனேஷ் யாரு தெரியுமா ஸ்கூல்ல அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணி, . அதில் பிரச்சனை ஆகி டீ சி வாங்கிட்டுபோனவன்”என்று சொல்ல நால்வரும் அதிர்ச்சிச்சியுடன் ஒரே நேரத்தில் “வாட்”என்று கத்தினர். அவர்களின் அதிர்ச்சியை பார்த்து வந்த சிரிப்பை அடக்கியவன்,’ஆமாம்’ என்னும் விதமாக தலையை மட்டும் ஆட்டினான்.
உடனே மது பேசிக்கொண்டிருந்த அனைத்தையும் மறந்தவளாக “அப்படினா நாம அவர்கிட்ட பேசியே ஆகணும் வாங்க போலாம்” என்று சொல்ல பூஜாவை தவிர்த்து மற்ற மூவரும் திருனேஷை சந்திக்க சென்றுவிட்டனர்.
பூஜா மட்டும் அர்ஜுனை முறைத்து கொண்டே “நீ சொல்றது உண்மைதானா,இது எப்படி உனக்கு தெரியும்.அது மட்டும் இல்லாம அவர்தான் அந்த பையன்னு நீ எப்படி கன்பார்மா சொல்ற ” என்று ஒரே கேள்வியையே வெவ்வேறு விதமாக கேட்க, அவனும் பெரு மூச்சுடன் பள்ளியில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.
அர்ஜுன், “பாரு பேபி அவனும் நானும் சின்ன வயசுல இருந்தே பெஸ்ட் பிரண்ட்ஸ், எங்களுக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருந்தது இல்லை, நாங்க லெவந்த் படிக்கும்போதுதான் அவன் சூர்யாவை லவ் பண்ண ஆரம்பிச்சான்.அதை என்கிட்டயும் சொன்னான். நான்தான் அதுக்கான வயசு உனக்கும் இல்லை அந்த பொண்ணுக்கும் இல்லை,இது ஒரு வேலை பாஸ்ஸிங் கிளவுட்ஸ் மாதிரி மறஞ்சு போகவும் வாய்ப்பிருக்கு, அதுவும் இல்லாம ஏய்த் படிக்கற குட்டி பொண்ணு அது . நீ போய் சொல்லி அதோட படிப்பும் வீணாக கூடாதுனு சொல்லி இருந்தேன். அப்போ எல்லாம் சரி சரினு மண்டைய ஆட்டிட்டு அப்புறம் வந்து ப்ரொபோசும் பண்ணிட்டு என்கிட்டே கூட சொல்லாம டீசி வாங்கிட்டே போய்ட்டான். அதுக்கு அப்புறம் எங்களுக்குள்ள எந்த காண்டாக்ட்டும் இல்லை. அவனை மீட் பண்ணலாம்னுதான் அவங்க காலேஜ்லையே சேர்ந்தேன். ஆனா நான் சொன்னதை கேக்கலையேனு ஒரு கோபம் அதான் பேசல. ஆனாலும் சின்ன வயசுல இருந்து இருக்க நட்பு, இப்போ இல்லைனு நினைக்கும்போது மனசு கஷ்டமா இருக்கு”என்றான் நண்பனை இழந்த உண்மையான கவலையோடு.
பூஜா, அவன் மனதை புரிந்து கொண்டு ஆறுதலாக அவன் கையை பற்றி“எல்லாம் சரியாகும். சீக்கிரமே ரெண்டு பேரும் முதல்ல மாதிரி ஒன்னா சுத்துவீங்க பாருங்க” என்று சமாதானமாக பேசியவள் பின் அவன் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு வேறு பேச்சு பேச ஆரம்பித்தாள். அர்ஜுனும் ஓரளவு தன்னை சமாளித்து கொண்டு அவள் பேச்சில் இணைந்து கொண்டான். நேரம் காலம் தெரியாமல் இளங்காதலர்கள் இருவரும் ஸ்வீட் நதிங்ஸ் பல பேசினர்..
அங்கு திருனேஷை சந்திக்க சென்றவர்கள், அவன் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருக்க, மூவரும் அவனை சுற்றி முறைத்து கொண்டு நின்றனர். அவர்களை பார்த்து சிறு சிரிப்புடன் போனை கட் செய்தவன். “என்ன ஆச்சு ஏன் என்னை முறைக்கிறீங்க”என்று கேட்க, முதலில் ப்ரீத்திதான் “ஏன் சீனியர் நீங்க என்கிட்ட சொல்லல, ஸ்கூல்ல பண்ணுனதுக்குதான் பழி வாங்க என்னை கொட்டுனீங்களா” என்றாள்.
ப்ரீத்தி சொல்வதை கேட்டவன் மற்ற இருவரையும் பார்த்து “ஒருவழியா உண்மை தெரிஞ்சுடுச்சு போல”என்று கேட்டான். மதுவும், அபியும் ஒரே மாதிரி தலையாட்ட அவர்களின் செயலில் சிரித்தவன் “அப்புறம் எங்க உங்க கும்பல்ல எண்ணிக்கை கம்மியா இருக்கு”என்று கேட்டான்.
அபியோ “நாங்க எதுக்கு வந்துருக்கோம்னு கேக்காம உங்க ஆளை காணோமேணு மட்டும் கேக்குறீங்க”என்று புருவம் உயர்த்தினாள்.
உடனே ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தவன் “ஓகே கேக்குறேன். எதுக்கு வந்தீங்கனு சொல்லுங்க”.
அபி, எங்களுக்கு சில டவுட் இருக்கு அது எல்லாம் கிளியர் பண்ணிக்கணும்.
திருனேஷ், “என்ன டவுட்.....”.
அபி,கேன்டீன்ல போய் பேசலாமே எவ்வளவு நேரம் இங்க நின்னுட்டே பேசறது”என்றவள் சொல்ல, ப்ரீத்தியும் “ஆமாம் ஆமாம் அங்க போனாதான் சாப்பிட்டுகிட்டே பேச முடியும்” என்று சொல்லியபடி முன்னால் சென்றாள்.
மற்றவர்களும் கேன்டீன் சென்று அங்கியிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.திருனேஷை ஆராய்ச்சியாக பார்த்த அபி, “நாங்க விளையாட்டா இருந்தாலும் தப்பு பண்ண மாட்டோம்,அதே மாதிரி பிரண்ட்ஸ விட்டு குடுக்கவும் மாட்டோம்.நீங்க சூர்யாகிட்ட சொன்னதை எங்ககிட்டயும் சொன்னாள், அது மட்டும் இல்லாம ஸ்கூல்ல பிரப்போஸ் பண்ணுனவரு நீங்கதான்னு எங்களுக்கு இப்போதான் தெரியும், உண்மையாலுமே நீங்க அவளை லவ் பண்றீங்களா இல்லை டைம் பாஸ்பண்ண அப்படி சொன்னீங்களா? எங்க பிரண்டு லைப் எங்களுக்கு முக்கியம்”என்றாள்.
மது, ஆமாம் உங்களால அவ ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா,நேத்துல இருந்து அவ நார்மலாவே இல்லை என்று சொல்ல.ப்ரீத்தியும் “ஆமாம் சீனியர் நீங்க என்னை கொட்டுனாலும் பரவால்லை, இதை சொல்லியே தீருவேன் அவ ஜாலியா பேசுனாலும் சுத்துனாலும் சில பல விஷயங்கல்ல நீதிடா, நேர்மைடா, நியாயம்டானு சொல்றவ, இப்படித்தான் இருக்கணும்னு பெரிய ரூல்ஸ் லிஸ்ட்டே வச்சிருக்கா, அந்த லிஸ்ட்ல முதல்ல இருக்கறதே நோ லவ்தான். வீட்ல பார்க்கற பையன மேரேஜ் பண்ணிட்டு நிம்மதியா இருக்கணும்கராதுதான்.அதனால நீங்க டைம் பாஸ் பண்ண வேற பொண்ண பாத்துக்கோங்க என்றாள்.
மூவர் பேசுவதையும் பொறுமையாக கேட்ட திருனேஷ் “ம்..... பரவால்லை உங்களை சேட்டைபண்ற விளையாட்டுதனமான பொண்ணுங்கனுதான் நினைச்சேன். ஆனா பிரண்டு லைப் அப்புடின்னு வந்துட்டா ரொம்ப விவரமாதான் இருக்கீங்க. உங்க பேச்சு மேலோட்டமா பார்த்தா விளையாட்டுதனமா தெரிஞ்சாலும் அதுல முழுக்க முழுக்க உங்க பிரண்டு மேல இருக்க அக்கறைதான் எனக்கு தெரியுது. சூர்யாவ நான் லவ் பன்னினேன், பண்றேன், இதுக்கு அப்புறமும் பண்ணுவேன். அவ என்னோட வைப்”என்று சொல்ல, மற்ற மூவரும் அதிர்ந்து “வாட்”என்று கத்தி இருந்தனர்.
அவர்களின் அதிர்ச்சிச்சியான முகத்தை பார்த்த திரு சிரிப்புடன் “ஷாக்க குறைங்க.... ஷாக்க குறைங்க நீங்க எல்லாம் இல்லாமையா எங்க மேரேஜ் நடக்க போகுது. நான் ஸ்கூல்லயே முடிவு பண்ணிட்டேன் அவதான் என் பொண்டாட்டினு, அந்த நினைப்புலதான் நான் இன்னமும் இருக்கேன்” என்றான் அழுத்தமாகவும் தெளிவாகவும்.
திருவின் தெளிவான பேச்சு மூவருக்கும் அவன் மேல் நம்பிக்கையை ஏற்படுத்த முதலில் அபி “என்ன சீனியர் இப்படி வந்து மாட்டிக்கீட்டங்க அவளை லவ் பண்ண வைக்கறது ரொம்ப கஷ்டம் ஆச்சே என்ன பண்ண போறீங்க”என்றாள்.
மூவரையும் பாவமாக பார்த்த திரு அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க கும்பிடுவது போல் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி தெய்வமே நீங்கதான் எனக்கு உதவனும்”என்று சொல்ல, அவனை பார்த்து சிரித்த ப்ரீத்தி “ஹை நானும் உங்களுக்கு தெய்வமா சீனியர், சாமிய யாரும் கொட்ட கூடாது அப்போ இனிமே நீங்க என்னை கொட்ட மாட்டிங்கதானே சீனியர்”என்று கேட்க, திருவோ அபியையும், மதுவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ப்ரீத்தி அருகில் வந்தவன் அவள் தலையில் டபுள் கொட்டாக கொட்டிவிட்டு “உன்னாலதான் என்னோட லவ் ஸ்கூல்ல பிரிஞ்சுது அதனால உன்னோட கோட்டா வழக்கம்போல் உண்டு” என்றான் நக்கல் சிரிப்புடன்.
திருனேஷ் கொட்டியதால் உண்டான வலியில் முகம் சுருக்கி தலையை தேய்த்து கொண்டே “இது எல்லாம் அநியாயம் சீனியர் ஸ்கூல்ல நடந்தது ஸ்கூலோட முடிஞ்சு போச்சு.நான் வேணா உங்க லவ்க்கு ஹெல்ப் பண்றேன் எல்லா கோட்டையும் அழிங்க பர்ஸ்ட்ல இருந்து கோடு போடலாம் மீ பாவம் சீனியர்” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல அவனும் சற்று நேரம் யோசித்தவன் “சரி போ இனி ஏதாவது லூசுதனமா செஞ்ச கோடாவது ஒன்னாவது அப்புறம் கொட்டுதான்“ என்றான்.
இவர்கள் பேசியதை சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்த மது திருவிடம் “எச்சுச்சுமி சீனியர் நல்ல யோசிச்சு சொல்லுங்க அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா”என்று கேட்க, அவனும் அசடு வழிய சிரித்தவன் “ஆமாம்” என்னும் விதமாக தலையாட்ட “மூவரும் கோராசாக விதி வலியது”என்று சொல்ல,அதை கேட்டு பாவமாகவே அவர்களை பார்த்திருந்தான். பின் அபிதான் சரி விடுங்க சீனியர் எவளோவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா நாங்க ஹெல்ப் பன்றோம்” என்றுவிட்டு “சந்தேகத்தோட வந்தோம் இப்போ கிளியர் ஆகிடுச்சு சந்தோஷமா கிளம்பறோம் ”என்றவர்கள் அவனின் மொபைல் நம்பரை வாங்கி கொண்டு சென்றனர்.
திருவும் மூவரும் உதவுவதாக சொன்ன மகிழ்ச்சியில் முகம் முழுவதும் புன்னகையுடன் வகுப்பிற்கு சென்றான்.
அர்ஜுன் பூஜா இருவரும் பேசி கொண்டிருக்க அவ்விடம் வந்த மூவரையும் பார்த்து பூஜா “என்ன ஆச்சு”என்று கேட்க,அவர்களும் அங்கு நடந்த அனைத்தையும் கூறினர். பூஜாவும் சற்று நேரம் யோசித்தவள் “ஓகே அவருக்கு ஹெல்ப் பண்ணாம வேற யாருக்கு பண்ண போறோம் டன் டன்” என்றாள்.
அதன்பின் அர்ஜுன் அங்கிருந்து கிளம்பிவிட, அதன் பின் பூஜா அர்ஜுன் கூறிய அனைத்தையும் சொன்னாள்.உடனே அபி “விடுடி விடுடி நாமளும் பிரண்ட்ஸ் அது மாதிரி நமக்கு வர்றவங்களும் பிரண்டாதான் இருக்கணும் நாம அவர்களை சேர்த்து வைப்போம், இல்லை முடியாது அப்படினு அவங்க பிடிவாதமா இருந்தாங்கனா அவங்க நமக்கு தேவை இல்லை. நட்பு முக்கியம் பிகிலு........ நட்புக்காக தியாகம் பண்றது தப்பு இல்லை ” என்று சொல்ல, பூஜாவோ “ஹையையோ ஒருத்தி லவ்வுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு வந்துட்டு நம்ம லவ்க்கு சங்கு ஊதிட்டுவாங்க போலயே. தியாகமா.....அபசகுணமா பேசறாளுங்களே , உங்களுக்கு எல்லாம் எவனும் செட் ஆகலைங்கர தைரியத்துல தியாகம்னு சொல்லறீங்களேடி அது எனக்குதான்டி சோகம் ”என்று மனதில் புலம்பி கொண்டாள்.
மது,“ஆனாலும் வளச்சு வளச்சு சைட் அடிச்ச நமக்கு இல்லை சும்மா மிச்சர் சாப்பிட்டு இருந்த அவளுக்கு அமைஞ்சுருக்கு பாரு”என்று சூர்யாவை கிண்டல் செய்து அங்காலய்க்க மற்றவர்களும் “ஆமாம்” என்பது போல் தலையசைத்தனர். பின் பூஜாதான் “சரி வாங்கடி ஒருத்தி கோவமா போய் இருக்கா அவளை சமாதானப்படுத்தலாம்”என்க,
ப்ரீத்தியோ “அவ எங்கடி போய் இருப்பா” என்றாள்.
மதுவோ “கழுதை கெட்டா குட்டி சுவரு எங்க இருப்பா லைப்ரரிலதான் இருப்பா வாங்க”என்று சொல்ல நால்வரும் லைப்ரரி நோக்கி சென்றனர்.
அங்கு சூர்யாவோ புக்கை விரித்து வைத்துவிட்டு சுவரை வெறித்து கொண்டு அமர்ந்து இருந்தாள். மனதிலோ “அதுதான் இனி அவனைப்பத்தி யோசிக்க கூடாது பார்க்க கூடாதுனு முடிவு பண்ணியாச்சுல அப்புறம் ஏன் நான் அதையே நினைச்சுட்டு இருக்கேன். ச்ச.... அவன் பண்ணுன வேலைய என்னால எத்துக்க முடியல அதுதான் அவனை நினைக்க காரணம் மத்த படி லவ் என்னோட லைப்ல இல்லை, லவ்வா நானா நெவர்”என்று யோசித்து கொண்டு இருக்க, அவளுக்கு வெகு அருகில் சென்ற ப்ரீத்தி “என்ன தெரிகிறது”என்று கேட்க, அப்போதுதான் நினைவுலகத்துக்கு வந்தவள் அவர்களை “என்ன”என்பது போல் பார்த்தாள்.
அவளை முறைத்த அபி “என்னடி நீ பாட்டுக்கு பொறுப்பில்லாம இங்க வந்து உட்கார்ந்து இருக்க அங்க பூஜா எங்ககிட்ட அவ பாடறத்துக்கு பாட்டு செலக்ட் பண்ணி தர சொல்லி படுத்தி எடுத்திட்டு இருக்கா, ஒழுங்கா எந்திரிச்சு வெளிய வந்து இதுல இருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லு இல்லை மது அந்த ஹெட் செட்ட குடு இவ அந்த பாட்டை கேட்கட்டும்” என்று சொல்ல சூர்யாவோ பதறி போனவள் “வேண்டாம் வேண்டாம் வாங்க வெளிய போய் யோசிக்கலாம்”என்று வெளியே ஓடி.அவர்களின் பேவரட்டானா இடத்தில் அமர்ந்தனர். பின் நால்வரும் கலகலப்பாக பேசி சூர்யாவின் மன நிலையை மாற்றிய, பின் பூஜா முதலில் புலம்பியதை மீண்டும் ஒரு முறை புலம்பிவிட்டு, தனக்கு ஒரு பாடலை செலக்ட் செய்து தர சொல்ல, நால்வரும் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தனர்.
யோசனையில் ஆழ்ந்திருந்த தோழிகளை மகிழ்ச்சி பொங்க பார்த்த பூஜா தான் பாடுவாதற்கான பாடலைதான் அவர்கள் யோசிக்கிறார்கள் என்று நினைக்க, ஆனால் அவர்களோ இவள் பாடுவதை தடுப்பதற்கான வழியை யோசித்து கொண்டு இருந்தனர்.
வெகுநேரமாக யோசித்த சூர்யா ஏதோயோசனை வந்தவளாக முகம் பளிச்சிட அபி மது மற்றும் ப்ரீத்தி மூவரையும் அருகில் இழுத்து அவர்கள் காதில் ஏதோ ஒன்று கூற முதலில் சாதாரணமாக இருந்த அவர்களது முகங்கள் பின் பிரகாசமாக மாறியது. அந்த சந்தோஷத்தில் நால்வரும் hi-fi கொடுத்துக்கொள்ள பூஜா அவர்களை புரியாமல் பார்த்து பின் முறைத்து கொண்டே “இங்க என்ன நடக்குது நாலு பேரும் என்னை விட்டுட்டு என்ன பேசுறீங்க என்று கேட்டாள்.
அவள் கேள்வியில் திரு திருவென விழித்த ப்ரீத்தி “ஒன்னும் இல்லையே, ஒன்னுமே இல்லையே” என்று சொல்ல, அவளை முறைத்த பூஜா “ஒழுங்கா சொல்லிருங்க என்ன?” என்று கேட்க,அபியோ தனக்கு வந்த சிரிப்பை அடக்கியபடி “அது ஒன்னுமில்லடி நீ பாடி எல்லாரையும் என்டெர்டைன் பண்றதுக்கு பதிலா அர்ஜூனோட ஆடி ஏன் என்டர்டைன் பண்ண கூடாது” கேட்டாள்.
அவள் சொல்வதை பற்றி சற்று நேரம் யோசித்த பூஜா “ஆடலாம் ஆனாலும் என்னோட பாட்டு திறமை இந்த காலேஜுக்கு தெரியாமல் போய்விடுமே” என்று சொல்ல, அதற்கு மதுவோ பதறியடித்துக்கொண்டு “அது தெரியாமல் போன போயிட்டு போது உனக்கு அர்ஜுன் வேணுமா வேண்டாமா” என்று கேட்க பூஜா வேகமாக “ஆமாம்” என்று தலையாட்டியவள்,”வேணும் வேணும் நான் டான்ஸே ஆடுறேன்” என்று அவள் சொன்ன பின்புதான் நால்வருக்கும் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.ஆனால் அந்த நிம்மதி வெகு நேரம் நீடிக்க விடாத பூஜா “ஆனால் எப்படி நான் அர்ஜுன்கூட பேர்ரா ஆடறது,அதுதான் வேற பொண்ணு ஆடுதே” என்று கேட்க, உடனே வேகமாக மதுவும், ப்ரீத்தியும் கோரசாக “அதை பத்தி நீ கவலைப்படாத அந்த பொண்ணு காலை ஒடச்சாவது, உன்ன ஆட வைக்கிறோம்,அது எங்க பொறுப்பு. நாங்க இருக்கோம். நீ சூப்பரா ஆடினா மட்டும் போதும்” என்று சொல்ல, அபியும் பூஜாவும் அவர்கள் சொல்வதை கேட்டு அதிர்ந்து நோக்கினர்.
பூஜாவோ பரவாலையே நம்ம பிரண்ட்ஸ்ங்க அர்ஜுன் கூட என்னை ஆட வைக்க எவளோ கஷ்ட படறாங்க என்று நினைத்து சந்தோஷத்தில் அவர்களை அணைத்து கொண்டு “நண்பேன்டா” என்றாள்.
தோழிகள் நால்வரும் பூஜாவை பாட விடாமல் செய்த சந்தோஷத்தில் மகிழ்ச்சியுடன் அவளை அணைத்து கொண்டனர். பின் அபியின் தலைமையில் அர்ஜுனுடன் ஆடும் பெண்ணின் காலை உடைப்பதர்க்கான பிளான் போடப்பட்டது.
இதை எல்லாம் பார்த்த சூர்யா பிளான் ஓகே இதை எப்போ எக்ஸிகியூட் பண்ண போறோம் என்று கேட்க, பூஜாவோ வேகமாக “ஒன்றே செய், நன்றே செய், அதையும் இன்றே செய்னு ஸ்கூல்ல படிச்சுருக்கோம்ல அதனால இன்னைக்கே உடைங்க நாளைக்கு நான்தான் அஜூக்கூட டான்ஸ் பிராக்டிஸ் பண்ணனும்” என்று சொல்ல மற்றவர்களும் வீராவேசமாக அந்த பெண் இருக்கும் இடத்தை நோக்கி சென்றனர்.
வீரமாக அந்த பெண் இருக்கும் இடத்திற்கு செல்லும் இந்த ரவுடிகளிடம் மாட்டி அந்த பெண் என்ன பாடு படபோகிறாளோ..... அதை அடுத்த எபில பார்க்கலாம்.......
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே....
அஜ்வந்தியின் 'வண்ணங்களின் வசந்தம்' - கருத்துத் திரி
செம காமெடியான பதிவு சகோ :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
www.srikalatamilnovel.com