All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மனமே.....
உன் அமைதியில் தெளிவில்லை!
உன் ஆன்மாவில் நிம்மதியில்லை!
உன் இன்பத்தில் இனிமையில்லை!
உன் ஈகையில் ஈர்ப்பில்லை!
உன் உவகையில் உயிர்ப்பில்லை!
உன் ஊணில் உறக்கமில்லை!
உன் எண்ணத்தில் ஏற்றமில்லை!
உன் ஏக்கத்தில் ஏகாந்தமில்லை!
உன் ஐயத்தில் ஐக்கியமில்லை!
உன் ஒப்புமையில் ஒருங்கிணைப்பில்லை!
உன்...
வணக்கம் தோழிகளே!
பூவிதழ் விரித்த
புன்னகைச் சாரலில்....
பூபாளம் பாடும்
புதிதான விடியலில்......
பூத்திட்ட காலையே
உன் ரீங்காரம்
சங்கீதமே.....!
அழகிய காலையின் ஆனந்த கீதம் அற்புதமாய் இசைக்கட்டும். இனிய காலை வணக்கம்.
உச்சம்....!
வாசம் வீசும் மலர் கூட்டம்!
நேசம் பேசும் மலழைக் கூட்டம்!
பாசம் காட்டும் உறவுக் கூட்டம்!
வேசம் போடும் மனிதர் கூட்டம்!
கூட்டம் கூடினால்
கூச்சல் கூடும்!
கூச்சலும் கும்மாளமும்
சந்தோசத்தின் உச்சம்!
தொல்லைகள்.....
தொல்லை என்று உன் செல்லை
நீ சொல்ல வில்லை!
தொல்லை என்று உன் நட்பை
நீ சொல்ல வில்லை!
தொல்லை என்று உன் காதலை
நீ சொல்ல வில்லை!
தொல்லை என்று உன் தாய்தந்தையை
நீ சொல்வதேனோ?
உன்னை பெற்றதற்கா?
உன்னை வளர்த்ததற்கா?
உன்னை படிக்க வைத்ததற்கா?
உன்னை தலை நிமிர்த்தி நடக்க வைத்ததற்கா?
உனக்காக வழிமேல்...
தொல்லைகள்.....
தொல்லை என்று உன் செல்லை
நீ சொல்ல வில்லை!
தொல்லை என்று உன் நட்பை
நீ சொல்ல வில்லை!
தொல்லை என்று உன் காதலை
நீ சொல்ல வில்லை!
தொல்லை என்று உன் தாய்தந்தையை
நீ சொல்வதேனோ?
உன்னை பெற்றதற்கா?
உன்னை வளர்த்ததற்கா?
உன்னை படிக்க வைத்ததற்கா?
உன்னை தலை நிமிர்த்தி நடக்க வைத்ததற்கா?
உனக்காக வழிமேல்...
மரணத்தின் ஓலம்.....
காப்பாற்று காப்பாற்று என்று கை தொழுதோம்
இறையடி சேர அந் நாளிலே!
காப்பாற்று காப்பாற்று என்று கை தொழுதோம்
மனையடி சேர இந் நாளிலே!
விரட்டும் வாகனங்களின் வேகத்திடமா?
அச்சுறுத்தும் நோய்களின் வேதனையிடமா?
மிரட்டும் மரணத்தின் ஓலத்திடமா?
ஹாய் மதி,
கற்றுக் கொடுக்கும் மழலைகளும்,
தித்திக்கும் முதல் இரவும்,
மனிதத்தில் அவளும் நானும்
திகிலூட்டும் ஆற்று பங்களாக்களும்
கதையாய் வந்து பிறந்த
நிஜத்தின் நிகழ்வுகளே!
நிஜங்கள் புரிந்து விட்டால்
நிழல்கள் மறையுமன்றோ...?
நிழல் நிஜமாகும் காண்!
வாழ்த்துக்கள் மதி, நன்றி
ஹாய் மதி,
மதியின் அழகு - அவள்
மதியின் அழகு!
கதையின் அழகு - அவள்
கருத்தின் அழகு!
முதலில் என் இனிய நல் வாழ்த்துக்கள் மதி, அருமை யான் கதைகள். நான் கவனிக்க வில்லை. காம்ப் போயிருந்தேன். அப்புறம் உடல் நலம் இல்லை. வந்து பார்த்தால், நம் மதி. அற்புதம் உன் வாழ்வில் வந்த அழகிய ஒரு ஆரம்பம் என்றும்...
ஹாய் ராஜி,
தேடித் தொலைத்த நெஞ்சங்கள்
நாடிக் கொண்டது தஞ்சங்கள்!
தேடிய காதலில்
ஓடிய மோதலில்
கண்டு கொண்டது
கற்பனைக் கெட்டா
நற்சுனை ஊற்றுக்கள்!
காதல் சுனை
வற்றாத ஜீவனதியாய்....
வாழ்க்கையின் தேடலின்
வேட்கையை தீர்த்த
அருஞ்சுனை தேனாய்
பாய்ந்திட்ட அழகே...
உன் கதை சொல்லும் வேகத்தில்
உன் நடை சொல்லும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.