All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!
இனிய தோழி,
கீதை சொன்னவன்
கிருஷ்ணன் என்றால்...
ராதை மாதவனும்
கிருஷ்ணனே!
கிருஷ்ண லீலைகள்
பாடும் நேரம்...
ராதை கோமகள்
காதல் தீரம்!
கிருஷ்ணனின் வழியில்
அர்ஜுனன் குறி...
காவிய ஓட்டத்தில்
இடுகுறி அன்றோ...!
வில்லாளன்...
ஹாய் தாமரை,
மழைச் சாரலின் துள்ளலில்
மதி மயங்கிப் போனாலும்,
கபடறியா கிள்ளை மொழியில்
கருத்தாழம் கருதானோ!
மலை மூடிய பனியில்
சுதி மாறிப் போனாலும்
சுவடறியா பிள்ளை மொழியில்
எகத்தாளம் உருதானோ!
வார்த்தை வழக்கில்
பெண்ணவள் வாணி!
நட்பின் வழக்கில்
சின்னவள் தேனி!
வாழ்க்கை வழக்கில்
அன்னவள் ஞானியோ...
ஹாய் தாமரை,
கடல் தாகம் தீர்க்க வந்த மழைத்துளியே!
உன் வேகத்தில் விவேகம்!
உன் தாகத்தில் உத்வேகம்!
வேகம் கண்ட கண்கள்
விவேகத்தில் சிலிர்க்க...
உத்வேகத்தில் உயிர்க்க...
தொண்டைமான் அவன் கடல் என்றால்...
வர்ஷினி அவள் மழைத்துளியே!
பாப்பாவின் பாவத்தில்
பரவசம் கூடினாலும்
நவரசம் ஆடினாலும்
விகடத்தின்...
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!
இனிய தோழி,
அர்ஜுனன் தேவியவள்
மாயவன் சோதரி!
காவியம் கண்ட
காதல் பைங்கிளி!
பாசத்தின் பிடியில்
பாவத்தின் பிரதி நிதி!
சுபாவத்தின் பிடியில்
சுழன்றிடும் சுந்தரி!
ஆழ்மனம் புரியா
அன்பின் எதிரொளி! - இது
ஆழிப் பேரலையில்...
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!
இனிய தோழி,
பெண்ணே!
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்!
கொல்லாமல் கொன்று விட்டு
கொள்ளாமல் தவிப்பதென்ன...!
உயிரை மீட்க
உற்றவளும் வந்ததென்ன...
உணர்வை மீட்க
உரிமையுடன் நின்றதென்ன....
காலத்தின் கோலத்தில்...
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!
இனிய தோழி,
கண்ணன் அவன்
தேவனும் அல்ல!
மாயக்காரனோ...?
கிருஷ்ணன் அவன்
ராமனும் அல்ல!
தந்திரக்காரனோ...?
ராதை அவள்
பேதையும் அல்ல!
நவீன நர்த்தகி
நவரசம் காட்டும்
காதல் யோகியோ...
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!
இனிய தோழி,
ராமன் அவன் ராவணனாய்...
அரிதாரம் பூசினால்
அவதாரம் முடியுமோ...?
கேள்விகள் என்றும் தொடர்கதை!
பதில்கள் என்றும் விடுகதை!
விடுகதையாய் வாழ்க்கை
விடை தருமோ யாக்கை!
காதலைத் தீர்த்த காமம் - இது
ஆதி கேசவனின் நாமம்...
இனிய தோழி,
சபிக்கப் பட்டவள்
பாதையில்...
வீறு கொண்ட மன்னவன்
போதையில்...!
உயிர்க்கப் பட்டவன்
போதையில்...
மாறி நின்ற பெண்ணவள்
வாதையில்...!
ராதைக் கேற்ற ராவணன் - இவன்
ராதே கிருஷ்ணன்!
கோதைக் கேற்ற கோமகன் - இவன்
கோகுலக் கிருஷ்ணன்!
காலத்தின் கையில்
துரோகியாய் போனது
காணாமல் போன பெண் மனது...
இனிய தோழி,
அனுராகம் பாடியவள்
அலைபாயும் நெஞ்சில்
அலையாய் சுழன்றடிக்கும்
ஆழிப் பேரலையே...
உன் ஆவேசம் கண்டு
ஆட்டம் காணும் உள்ளம்,
கண்ணோட்டம் பார்த்தால்
இனங்காணும் கள்ளம்...!
சில்வண்டின் ரீங்காரம் - அது
காரியத்தின் அரிதாரம்;
காரியக் கள்வனுக்கு
புரியாதோ அவன் தாரம்...!
ராவணனாய் மாறியவன்...
இனிய தோழி,
ராதைக்கேற்ற ராவணன்...!
காதல் ராதையின் உயிர் மூச்சில்
கலக்க வரும் காவிய நாயகன்...
காத்திருந்து காத்திருந்து
கரம் வைத்த காரிய மாயவன்...!
குறி வைத்து தகர்ப்பதில்
வெற்றி வீரன் வில்லாளன்
குறியாய் போன காதல் மானோ...
காவியத்து நாயகியோ...?
சூழ்ச்சியில் வீழ்ந்தவன்
எழுச்சியில் வீழ்பவள்
காதலை...
இனிய தோழி,
அத்தை மகனோ!
மாமன் மகனோ!
முறையான பெண்ணை
பிணையாகக் கேட்டால்...
திரையான வாழ்வில்
நிறைகாணல் வருமோ...?
அழகான ஆரம்பம்...
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.