All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஊட்டி செல்லும் பாதையில் மழை காரணமாக மண் சரிந்து கிடந்தது, அதை சரி செய்வதற்காக, போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்தனர்.

வேகமாக வந்த சத்யாதேவி , ஊட்டிக்கு செல்ல முடியாமல், போக்குவரத்து நிறுத்தியதில் மாட்டிக்கொண்டார்.

அவர் என்னவென விசாரித்து அறிவதற்கு முன் அவரின் பின்னாலும் வாகனங்கள் நின்றதில் அவரால் பின்னாலும் செல்ல இயலாது போனது.

மகனுக்காக அல்லது மருமகளுக்காகவா? யாருக்காக கடவுளை வேண்டுவது என தெரியாமல் தவித்தபடி, காரில் அமர்ந்திருந்தார். ஓயாது பவித்ரனுக்கும், ரஞ்சனிக்கும், வீட்டிற்கும் செல்லில் அழைத்தார். ஆனால் அழைப்பு தடைபட்டிருந்தது.

மகன் பிடிவாதக்காரன், மருமகள் கோபக்காரி இதில் யாரால் யாருக்கு அபத்து வருமோ என்ற எண்ணமே அவரது இதயத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்தது.

பவித்ரன் இரவு உணவிற்காக ரஞ்சனியை அழைத்தான். அவளுக்கு மலரைப் பற்றிய நினைவுகள் அதிகம் வாட்ட, இதயம் கனத்திருந்ததில் எதுவும் வேண்டாம் என மறுத்துவிட்டாள்.

சாப்பிட வா, இது என்ன சின்னப்பிள்ளமாதிரி என கடிந்தான்.

எனக்கு வேண்டாம், நீங்க சாப்பிடுங்க.. என்றாள்.

அவன் கட்டாயப்படுத்தி அழைக்க, தேவையில்லை, ஒருவேலை பட்டிணியால ஒன்னுமாகாது, என்னப் படுத்தாம போங்க என சீறினாள்.


அவனோ பக்கத்தில் வந்தமர்ந்து, என்னாச்சு ரஞ்சி, ஆர் யூ ஆல் ரைட் என்றான்.


இல்ல, எதுவும் ரைட் இல்ல, நீங்க, நமக்குள்ள இருக்குற உறவுமுறை, என்னை உங்க நண்பன் மேலுள்ள பற்றால், பலியிட்டு உங்க கடமையை, நட்பை சரிகட்டத் துடிக்கிற உங்க எண்ணம் எதுவும்.. எல்லாமே ...சரியே இல்லை.

ஆனந்தை பத்தி பேசாத....

பேசுவேன், கட்டாயம் பேசியாகனும். அவனப்பத்தி பேசி இதத்தீர்க்காம நமக்குள்ள எதுவும் சரிவராது.


என்ன பேசவிடுங்க...

சரி பேசு, ஆனா அதுக்கு முன்னாடி, நீ ஒன்னு செய்யணும் ...

என்ன செய்யணும்..

என்னாலும் இரண்டு மனமா போராட முடியல, உன்னையும் விடமுடியல, என் நண்பனையும் விட முடியல, அதுக்காக நான் ஒரு தீர்மானத்துக்கு வந்துட்டேன். அது நீ என் நண்பனை மனதளவில் காயப்படுத்தியதற்கு, அவனிடம் மனதார மண்ணிப்பு கேள்.

வா என பவித்ரன் ரஞ்சனியை ஆனந்தின்( நந்து) புகைப்படம் இருக்கும் அறைக்கு இழுத்துச் சென்றான்.

நான் அவனப்பத்தி உங்ககிட்ட சொல்லீடுறேன், அப்பறமா நீங்க முடிவு பண்ணுங்க , என்றாள் ரஞ்சனி.

முதல்ல மன்னிப்பு கேள், அப்பறமா எதையும் பேசு....


முடியாது.. இந்த கேவலமானவன்ட என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்றவள் கோப மிகுதியில் ஆனந்தின் புகைப்படத்தை ஆணியிலிருந்து எடுத்து தூர எறிந்தாள்.

அது மூலையில் விழுந்து சில்லு சில்லாய் சிதறியது.

பவித்ரன் ரஞ்சனியை, ஓங்கி அறைந்துவிட்டான்.

ரஞ்சனி கன்னத்தை பிடித்துக்கொண்டே முறைத்தாள். போட்டோ இருந்தாத்தான, மன்னிப்பும், மண்ணாங்கட்டியும், இப்போ நான் சொல்றத கேப்பீங்கல்ல என்றாள்.

ஊட்டியில் குளிர்மிகுதியில் அனைத்து வேலையாட்களும் வேலையை முடித்துவிட்டு உறங்கும் சமயம், கீழ் தளத்தின் நிசப்தத்தில் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது அவர்கள் மாடியில் போடும் சண்டை.


அவன் கேவலமானவனா? அப்போ நீ அவனை சாகும் வரை துன்புருத்திய நீ..., நல்லவள், மிக நல்லவள் இல்லையா?


இல்லை கெட்டவள் தான், அவனை கொல்லும் வாய்ப்பு கிடைத்தும் பிழைத்துப்போகவிட்ட நான் கெட்டவள் தான். அவனால் என் கண்முன்னே ஒரு மலர் கருகி உருவம் குழைந்து, செயலிழந்து சாவதைப் பார்த்தும் அவனை உயிருடன் விட்டவள் நான் நல்லவள் இல்லை.

புரியவில்லை.... என் நண்பன் ஒரு பெண்ணை கொன்றான் அப்படியா? ... நீ தப்பிக்க பொய், அதுவும் உண்மை போலவே... என்றவன்.. வாயைமூடு என அதட்டினான்.


முடியாது. நாசூக்காக சண்டையிடாமல் அனைத்தையும் உங்களுக்கு புரிய வைத்து விட வேண்டும் என்று நான் முயன்றேன். இப்போது இந்த சந்தர்ப்பமும் விட்டால் அடுத்து வாய்ப்பகள் அமைவது கடினம். சொல்லிவிடுகிறேன் என்றவள் வாயை அடுத்த நொடி அவளது கழுத்தில் இருந்த வெண் துப்பட்டாவால் கட்டினான்.

அவளை அலேக்காக தூக்கியவன் அவளது எதிர்ப்பை கண்டு கொள்ளாமல் தோட்டத்தில் இருந்ந கம்பத்தில் கட்டினான்.


அவள் கண்கள் ரௌதிரம் கக்க பேச்சற்று நின்றாள். இது போட்டோவை உடைத்ததற்கும், ஆனத்தை , ஒரு இறந்தவனை கேவலப்படுத்தியதற்கும், என்றவன் மடமடவென நடந்து வீட்டினுள் சென்றுவிட்டான்.


உள்ளே வந்த பவித்ரன் ஒருநிலையில் இல்லை, அவளுக்கு குளிர் பனி ஒத்துக்கொள்ளாதோ என தோன்ற, தன் மனதின் இருபக்க போராட்டத்தை நினைத்து தன்னையே வெறுத்தான்.


அவள் பேசிய பேச்சு எவ்வளவு அபத்தமானது என அவளுக்கு புரிய வேண்டும். இனி ஒருமுறை ஆனந்தை கேவலமாகப்பேசும் எண்ணம் வரக்கூடாது என எண்ணியவன், தான் சென்று கட்டை அவிழ்த்து விட்டுவிடுவோமோ என்ற எண்ணத்தில் இரண்டு தூக்கமாத்திரையை உண்டு படுக்கையில் கிடந்தான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஊட்டியின் பனி இருட்டில் தனித்து கயிற்றில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தாள். ரஞ்சனிக்கு தான் செயலிழந்து பேச்சிழந்து இப்போது இருக்கும் நிலையில் தான் மலரும் இருந்தாள் என எண்ணினாள்.

மலரின் பேச்சுக்கள் மீண்டும் அவள் காதில் விழுந்தது.

மலருக்கு எங்கேயும் வெளியில் செல்ல அனுமதி இல்லை. வீட்டிலும் அவளறையைத் தவிர வெளியில் வருவது அபூர்வமாகிப்போனது. மாதம் ஒருமுறை மருத்துவமனை செக்கப் தவிர எங்கேயும் கணவனுடன் செல்வது இல்லை. சாருநேசன் மலருடன் பேசுவதே பஞ்சமாகிப் போனது.


மலர் மன ஆறுதவலுக்காக பக்கத்திலிருந்த கோவிலுக்குச் சென்றாள். மலரின் அத்தை வேலையாக இருந்ததால் தனியாக போகவேண்டாம் பக்கத்துவீட்டுனன சிறுமியையும் துணைக்கு அழைத்துச் செல்லச் சொன்னார்.


சிறுமி எனக்குத் துணையா என மனதில் நினைத்தவள், தனியாக கோவிலுக்குச் சென்றாள். எப்படி புரிய வைப்பது , எப்படி நந்துவை விரட்டுவது என நீண்ட நேரம் யோசித்தவளுக்கு விடை கிடைக்கவில்லை, தலைவலிதான் கிடைத்தது.


அவள் பிரகாரத்தில் அமர்ந்திருக்கையில், இரு பாதங்கள் அவளருகே வந்து நின்றது. அவள் யாரென நிமிர்ந்து பார்க்க, அது நந்து.

இவனா ! சை என நினைத்தவள் முகத்தை திருப்பிக்கொண்டாள். அவனோ விடாது அவள் முகத்தை திருப்பிய பக்கம் வந்தமர்ந்தான்.

ம்.. கோபமா! என்னிடமா? என்றவன், மலர் டார்லிங் நீ உண்மையில் கோபப் பட வேண்டியது சாரு மீதும், உன் மாமியார் மீதும், உன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க நினைக்கும் என்மீதல்ல, புரிந்ததா என்றான்.

நான் வீட்டுக்கு போகிறேன், என்றவள் எழுந்து கொண்டாள். என்னிடம் பேசத்தானே சந்தர்பம் எதிர்பார்க்கிறாய். நானே வந்துள்ளேன், போகிறாயா என்றான் நந்து.

நானா? உன்னிடம் பேசுவதற்கா! சை என்றவள் மடமட வென அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.


அவளின் கை பிடித்து நிறுத்தியவன், எனக்கும் உன்னை கஷ்டப்படுத்துவது மிக மிக கஷ்டமாகத்தான் உள்ளது என்றவன் கண்களில் ததும்பிய கண்ணீர் அவனது நரிக்கண்களை அவளிடமிருந்து மறைத்தது.


அவளின் பேதைமனது இரக்கம் கொண்டது. சரி சொல்லுங்க, என்றாள்


நடந்து கொண்டே பேசுவோம் என்றவன் , அவனது காருக்கு அழைத்துச் சென்றான். நீ என்னிடம் பேசுவதற்கும், என்னை விட்டுப் போன உன் நிலையை விளக்கவும், நான் உனக்கு சந்தர்ப்பம் தரவில்லை. என்மீதும் தவறுள்ளது. நான் முதலில் உன் தரப்பு நியாயத்தை கேட்டுவிட்டு பின் உன்னிடம் சண்டையிட்டுருக்க வேண்டும். இப்போதாவது சொல் என்னானது என்றான் நந்து.


மலர் எதைச் சொல்வது என யோசிக்கும் தருவாயில், காரில் ஏறு இப்படி வெளியில் நின்று கொண்டை பேசுவது , யாராவது பார்க்கப்போகிறார்கள் என்றான்.

மலர் இருந்த குழப்ப மனநிலையி காரில் ஏறிவிட்டாள். வண்டி நிற்காமல் பறந்தது.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம்...

நான் கிட்டத்தட்ட ஒருமாதம் கழித்து பதிவிடுகிறேன். இந்த ஒருமாதத்தில் என்னையும், என்கதையையும் மறக்காமல் இருந்ததற்கு நன்றி....
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களின் கருத்துக்களை கருந்துப் பகுதியில் பதிவிட்டால், உங்களைப்போன்ற கதை வாசிப்பாளருக்கும் , அலுவல்களுக்கும் உதவியாக இருக்கும்.

கருத்துக்களை அதனிடத்தில் பதிவிடவும்....

நன்றி
 
Top