All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மனதோடு மௌனமொழி" கதை திரி

Status
Not open for further replies.

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மனதோடு மௌனமொழி" கதை இனி இங்கே படிக்கலாம் மக்கா ❤️❤️❤️

நன்றி

அருணா
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1:

இரவு பத்து மணி இருக்கும்.. தன் ஹோட்டல் அறை பால்கனியில் நின்று டீ குடித்து கொண்டிருந்தான் நரேந்திரன்..
வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, ஏதோ நினைவில் இருந்தவன், தன் நினைவு கலைந்து வந்து கதவை திறந்தான்..

வாசலில் ஒரு ஆணும் பெண்ணும் நின்றிருந்தனர்..
அந்த பெண்ணை ஒரு முறை முகம் சுருங்க பார்த்தவன், "கம் இன் ரமேஷ்" என வழி விட, ரமேஷ் என்பவன் அந்த பெண்ணுடன் உள்ளே வந்தான்..
ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்ட நரேந்திரன், எதிர் சோபாவை காட்ட, அதில் இருவரும் அமர்ந்தனர்..

"நீங்க கேட்ட டீடெயில்ஸ்.. எம்.டி சார் கொடுத்து விட்டு வர சொன்னார்.." என ரமேஷ் ஒரு பைலை நீட்ட, அதை வாங்கி கொண்ட நரேந்திரன், அதை அப்போதைக்கு மேலோட்டமாக பார்த்து விட்டு மூடி வைத்தான்..

"நான் ஸ்டெடி பண்ணிக்கறேன்.. நாளை காலை பேசிக்கலாம்.. தென்...?" என கேட்டுக்கொண்டே குடித்து முடித்திருந்த டீ கப்பை வைத்துவிட்டு அவர்களை பார்த்தான் நரேந்திரன்..
"சார் வந்து... இந்த பொண்ணு...." என ரமேஷ் இழுக்க, அவன் முகத்தை பார்த்து கொண்டிருந்த நரேந்திரனுக்கு அவன் சொல்ல வந்தது புரிந்து விட்டது..
இருந்தும் எதுவும் காண்பித்து கொள்ளாமல், 'நீயே சொல்' என்பது போல் அமைதியாகவே அமர்ந்திருந்தான்..

"சார் இன்னிக்கு நைட் உங்களுக்கு கம்பெனிக்கு கூட்டிட்டு வந்தேன்.... ஜாலியா இருக்கலாமே...!" என ரமேஷ் இழுக்க,

"கெட் அப்" என்று கூறிக்கொண்டே நரேந்திரன் எழுந்துவிட, ரமேஷும் எழுந்தான்..
அவன் எழுந்து நின்ற நொடி, அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது..
அதில் தடுமாறி சோபாவிலேயே விழுந்தவன், அதிர்ச்சியுடன் நரேந்திரனை பார்த்து கொண்டே எழுந்து நிற்க, "நான்சென்ஸ் பீப்பிள்" என சத்தமாகவே சீறினான் நரேந்திரன்..
"பிஸ்னஸில் வெற்றி பெற வேண்டுமென்றால் வேலையை ஒழுங்கா பாருங்க.. இந்த டெக்னிக் எல்லாம் என்னிடம் வேலைக்காகாது.. உங்கள் பைல் ஒழுங்காக இருந்தால் மட்டுமே பிஸ்னஸ் கொடுப்பேன்.. இது லாஸ்ட் வார்னிங்.. இனி ஒரு முறை இப்படி முயற்சித்தால், நான் மட்டும் இல்லை, யாருமே உங்களிடம் பிஸ்னஸ் வைத்துக்கொள்ளாமல் செய்து விட முடியும்.. காட் இட்.. அவுட் நவ்.." அழுத்தம் திருத்தமாக நிமிர்ந்து நின்று அவன் பேசியதில், ரமேஷிற்கு வெளிப்படையாகவே உடல் நடுங்கி விட்டது..

"ச.. சாரி சார்.." என முனகியவன், தான் அழைத்து வந்திருந்த பெண்ணை இழுத்து கொண்டு வேகமாக வெளியேறி விட்டான்..

அவன் சென்றதும் எரிச்சலுடன் சோபாவில் அமர்ந்தான் நரேந்திரன்..
இதெல்லாம் அவனுக்கு சுத்தமாக பிடிக்காத விஷயங்கள்..
குறுக்கு வழியில் வெற்றிபெற நினைப்பவர்களை பார்த்தாலே அவனுக்கு பிடிக்காது..
அதிலும் அவனிடம் முயற்சித்தால் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டியது தான்..
அவனை பற்றி அவன் துறையில் பலருக்கு தெரியும்.. சரியாக தெரியாமல் அரைகுறையாக கேள்வி பட்டு விட்டு இது போல் செய்து தான் ஒரு சிலர் அடிவாங்குவது..
'எல்லாம் அவனால் வந்தது..!' என மனதிற்குள் நரேந்திரன் இதற்கு காரணமானவனை திட்டி கொண்டிருக்கும் போதே, அவன் போன் அடித்தது..
புது எண்ணில் இருந்து வந்த அழைப்பாக இருக்க, யோசனையுடன் அதை எடுத்தான் நரேந்திரன்..
அந்த பக்கம் சொன்ன செய்தியை கேட்டவன் முகம் மேலும் குழப்பத்துடன் சுருங்கி போயிற்று..
"நான் என்ன செய்ய முடியும்...?"
"...."
"ப்ச் அழாமல் பேசு.. இதில் நான் தலையிடுவது நல்லா இருக்காது மா.."
அந்த பக்கம் மேலும் என்ன சொன்னார்களோ, சில நொடிகள் நரேந்திரன் அமைதியாக இருந்தான்..
"ஓகே நான் பார்க்கறேன்"

"...."

"ஓகே... ஓகே.. போதும்.. பார்த்துக்கறேன்.. கல்யாணம் நிற்பதற்கு நான் பொறுப்பு..." என அவன் கூறியதும் தான், அந்த பக்கம் இருந்து போன் வைக்கப்பட்டது..
போனை தானும் கட்டிலில் தூக்கி எறிந்தவன், பெரும் குழப்பதுடன் அந்த அறையை அளந்தான்..
ஏதோ பாவம் பார்த்து வாக்கு கொடுத்துவிட்டான்..
சொன்ன வாக்கை காப்பாற்றாமல் இருப்பது அவனுக்கு பிடிக்காத விஷயம்..! இதை செய்ய அவனுக்கு விருப்பம் சுத்தமாக இல்லாவிட்டாலும், வேறு வழி இல்லாமல் செய்ய முடிவெடுத்தான்..
டைம் பார்த்தவனுக்கு ஏற்கனவே நேரம் ஆகிவிட்டது தெரிந்தது..
இப்போது கிளம்பினால் தான் அவன் நேரத்துடன் போய் சேர முடியும்..
அவசரத்திற்கு பிளைட் டிக்கெட் கூட முயற்சி செய்து பார்த்தான்.. அதுவும் கிடைக்கவில்லை.. அவன் காரில் தான் போயாக வேண்டும்..

முதலில் ரமேஷிற்கு அழைத்தவன், "பிஸ்னஸ் மீட்டிங்கை இரண்டு நாள் கழித்து வைத்துக்கொள்ளலாம்.." என்று கூற,

"ஐயோ சார் ப்ளீஸ்.. இனி இப்படி செய்ய மாட்டோம்.." என அவன் வேறு பதறி கெஞ்சினான்..
அதில் எரிச்சலுடன், "எக்ஸ்கியுஸ் மீ" என இடைமறித்த நரேந்திரன்,
"எனக்கு பர்சனல் ப்ராப்ளம்.. நான் உடனடியாக சென்னை கிளம்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.. ஒரு டூ ஆர் த்ரீ டேஸில் வரேன்.. உங்கள் ப்ரபோசல் சரியா இருந்தால், கண்டிப்பா ப்ராஜெக்ட் உங்களுக்கு தான்.. சோ டோன்ட் வொரி.." என அவனை சமாதானம் செய்துவிட்டே நரேந்திரன் கிளம்பினான்...

**************

காலை ஆறு மணி..
சென்னையில் இருந்த பெரிய கல்யாண மண்டபம், அந்த நேரத்திற்கே உரிய பெரும் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது..

மணமகன் அறையில் இருந்த சுரேந்தர் பட்டு வேஷ்டி சட்டையில் தயாராகி கண்ணாடியை பார்த்து தலை வாரி கொண்டிருந்தான்..

"நீ இப்படி கல்யாணம் எல்லாம் செய்து கொள்வாய் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை மச்சி.. வித்தியாசமா இருக்க டா.." என சுரேந்தர் நண்பன் விஷ்ணு கூற,
"டேய் நான் என்னமோ அப்படியே காலம் காலமா கல்யாண பந்தத்தில் இருக்க போவது மாதிரி பேசற...! இது சும்மா கண் துடைப்புக்கு தான் டா.. எப்படியும் ஒரு கல்யாணம் என்று ஒன்று பண்ண தான் போறாங்க.. நம்மை போலவே சுற்றும் பெண்ணை பார்த்தால் சரி வராது விஷ்ணு.. டைவர்ஸ் அது இது என்று போகும்.. எதுக்கு வம்பு.. இப்படி ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால், அழகுக்கு அழகும் ஆச்சு, நம்மிடம் அடங்கியும் இருப்பாங்க.. நாம் எப்போதும் போல் சுத்தலாம்.. எல்லாம் யோசித்து தான் டா முடிவு செய்தேன்.." அசால்டாக கூறிக்கொண்டே சுரேந்தர் அமர, அவனை ஆச்சர்யமாக பார்த்தான் விஷ்ணு..

"இதில் இத்தனை விஷயம் இருக்கா டா..? நீ என்னவோ பார்கவியை லவ் பண்ணி கல்யாணம் செய்து கொள்கிறாய் என்று தானே எல்லாரும் நினைச்சுட்டு இருக்கோம்.. அப்போ லவ் எல்லாம் பொய்யா டா..?"

"அட ச்சி வாயை மூடு.." பெரிதாக வாயை பிளந்து கொண்டு கேட்ட நண்பனை கிண்டல் செய்து விட்டே சுரேந்தர் தொடர்ந்து பதில் கூறினான்..

"காதல் கத்திரிக்காய் எல்லாம் ஒன்றும் இல்லை.. அவளை பிடித்திருந்தது.. சும்மா டேட்டிங் வா என்று கூப்பிட்டால் வரும் ரகம் அவள் இல்லை விஷ்ணு.. யோசித்து பார்த்தேன், கல்யாணம் என்று ஆகிவிட்டால் பெயருக்கு பொண்டாட்டியும் ஆகிவிடும், அப்படியே நம் வாழ்க்கையும் ஜாலியா தொடரும்.. எப்படி என் சாமர்த்தியம்..!" என அவன் காலரை தூக்கி விட,
"நீ வேற லெவல் தான்.. ஆனால் பார்கவி உன் வாழ்க்கை முறை பிடிக்காமல் சண்டை போட மாட்டாளா...?" என்றான் விஷ்ணு.

"அப்படியே சண்டை போட்டாலும் அத்தனை சுலபமாக அவள் எங்கும் போக முடியாது விஷ்ணு.. அவள் அண்ணா என் கையில்.. அவளுக்கு என்ன குறை இருக்க போகிறது..? இத்தனை பணக்கார வாழ்க்கையை அவள் கற்பனை கூட செய்திருக்க மாட்டாள்.. இதை எல்லாம் அனுபவிக்க தொடங்கி விட்டால், ஒழுக்கம் எல்லாம் காற்று வாங்க போய்விடும்.. அவளுக்கு வளமான ஒரு எதிர்காலம் தர போகிறேன்.. அதுக்கு பதிலா கொஞ்சமே கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்க போறேன்.. அவ்வளவு தான்.. இது எப்படி பார்த்தாலும் வின் வின் பிஸ்னஸ் தானே டா..!" என்று கூறி சுரேந்தர் கண்ணடிக்க, விஷ்ணுவும் சிரித்து கொண்டான்..

உண்மையாகவே சுரேந்தர் அதிகம் யோசிக்க கூடியவன் இல்லை..
தனக்கு சரி என்று பட்டதை மட்டுமே செய்து பழக்கப்பட்டவன்..
அடுத்தவர்களுக்கு மனம் என்று ஒன்று இருக்கும் என்று அவன் யோசித்த நாளே கிடையாது..
தன் மனதை தவிர எதற்குமே மரியாதை கொடுக்கவும் அவனுக்கு தெரியாது..
உயிருள்ள ஒரு பெண்ணை வெறும் பணம் கொண்டு மிக சுலபமாக பயன்படுத்திக்கொள்ள எந்த குற்ற உணர்வும் இல்லாமல் முடிவெடுத்திருந்தான்..

அதே நேரம் தன் அறையில் அலங்காரம் எல்லாம் முடிந்து அங்கிருந்த கட்டிலில் காலை மடக்கி கொண்டு அமர்ந்திருந்தாள் பார்கவி..

அவள் அருகில் அவள் அண்ணி அஞ்சனாவும் அமர்ந்திருந்தாள்..
"அண்ணி எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாதா..? அவனை கல்யாணம் செய்து கொள்வதும், நான் தற்கொலை செய்து கொள்வதும் ஒன்று தான் அண்ணி.. என்றைக்கானாலும் அது தான் நடக்க போகிறது.. அப்படி நடந்தால் கூட அண்ணா வந்து இரண்டு சொட்டு கண்ணீர் விட்டுட்டு போய்டுவாரா..?" வெறுமையாக அவள் கேட்க,
"என்ன வார்த்தை டா பேசுகிறாய்..?" என வேகமாக அவள் வாயை மூடினாள் அஞ்சனா..
பார்கவியோ அப்போதும் அவளை வெறுமையாக தான் பார்த்தாள்..
"நான் பேசி பார்த்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறாயா பார்கவி மா..! எவ்வளவோ சொன்னேன் டா.. உன் அண்ணா கேட்கவே இல்லை.." மெதுவாக அஞ்சனா புலம்ப, அவள் தோளில் சாய்ந்து கொண்டாள் பார்கவி..

"உங்களை பற்றி எனக்கு தெரியாதா அண்ணி..? விடுங்க.. என் விதி அவ்வளவு தான்.. அம்மா அப்பா இல்லை என்றால் இப்படி தான் ஆகும் போல்..!" என மெதுவாக கூறி கொண்டாள் பார்கவி.
"அஞ்சனா..." என்ற தீபனின் குரலில் பெண்கள் இருவரும் நிமிர்ந்தனர்..
"அட டா பார்கவி தயாரா..? எவ்வளவு நகை..! ரொம்ப அழகாக இருக்கிறாயே டா..!" என தீபன் கூற, அவனை இரு பெண்களுமே வெறுமையாக பார்த்தனர்..
இருவர் கண்களும் கலங்கி இருப்பதையே தீபன் அப்போது தான் கவனித்தான்..
அதில் அவன் முகமும் இறுகி போயிற்று..

"இப்போதும் உட்கார்ந்து அழுதுட்டு இருக்கீங்களா என்ன..? பார்கவி மா உன்னை பிடித்து பிச்சைக்காரனுக்கா கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..? ஊரிலேயே மிக பெரிய பணக்காரன்.. அவரிடம் வேலைக்கு போக போகும் எனக்கே ஒன்றரை லட்சம் சம்பளம் தருவதாக சொல்லி இருக்கிறார்.. அப்போது முதலாளியான அவர் கையில் எத்தனை பணம் புழங்கும்..! நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வாழ்க்கை பார்கவி.. சந்தோசமாக இருப்பதை விட்டுவிட்டு என்ன இது..!" என அவன் கடிந்துகொள்ள,

"பணம் போதுமா ண்ணா..?" என்றாள் பார்கவி மெதுவாக.

"வேறு என்ன வேண்டும் என்கிறாய் பார்கவி..? தம் தண்ணி அடிப்பதெல்லாம் இந்த காலத்தில் ஒரு பிரச்சனையே இல்லை.. எல்லா கெட்ட பழக்கமும் எனக்கும் இருந்தது.. நான் மாறி விடவில்லையா..! அவரும் மாறிடுவார் டா.." மெதுவாக தங்கை தலை கோதி கூறினான் தீபன்..
"அது மட்டும் என்றால் கூட பரவாயில்லை ண்ணா.. அவன் ஒழுக்கமானவன் இல்லை ண்ணா.. பல பெண்களுடன் சுற்றி நானே பார்த்திருக்கேன்.. என்னால் முடியலை ண்ணா.. நான் அவனிடம் வேலை பார்த்தவள்.. எனக்கு அவனை பற்றி நன்றாக தெரியும் ண்ணா.."
"பார்கவி மா அதெல்லாம் வெறும் ப்ரண்ட்ஸ் என்று சுரேந்தர் சொல்லிட்டார்.. சும்மா உன் கற்பனைக்கு தீனி போட்டு எல்லார் வாழ்க்கையையும் கெடுக்காதே.. ஏற்கனவே சொன்னது தான்.. மீண்டும் சொல்கிறேன், எனக்கென்று ஒரு குழந்தை பிறக்க போகிறது.. அம்மா அப்பா இறந்த பின்பும், உன்னை நல்லா படிக்க வைத்து ஒரு வேலையும் வாங்கி கொடுத்துவிட்டேன்.. இப்போது தான் எங்களுக்கென்று வாழவே தொடங்கி இருக்கோம்.. எங்கள் குழந்தைக்கு வரும் நல்ல எதிர்காலத்தை உன் வீண் கற்பனை பயத்தால் கெடுப்பாயா..?" கண்டிப்புடன் தீபன் பேசும் போதே பார்கவியின் கண்கள் அஞ்சனாவின் வயிற்றுக்கு தான் சென்றது..
ஆறு மாதம் ஆகி இருந்ததால், நன்றாகவே வயிறு தெரிந்தது..
இந்த ஒரே ஒரு காரணத்திற்காக தானே பார்கவி மனதை தேற்றிக்கொண்டு மணமேடை வரை வந்தது..

சுரேந்தர் பற்றி அவளுக்கு தெரிந்த அளவு தீபனுக்கு தெரியாது..
'உங்கள் தங்கையை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. உங்களுக்கு நல்ல வேலை தரேன்.. அவளை கல்யாணம் பண்ணி கொடுங்க..' என தீபனிடம் கேட்டிருந்தவன்,
'மற்ற பெண்களுடன் தப்பான பழக்கம் இல்லை' என்று வாய் கூசாமல் பொய் சொல்லி அவனை நம்பவும் வைத்திருந்தான்..

தீபனுமே கல்லூரி காலத்தில், தண்ணி அடிப்பது, தம் அடிப்பது என்று இருந்ததால், அவனுக்கு அதெல்லாம் கெட்ட பழக்கமாகவே தெரியவில்லை..
அவனையும் தவறு சொல்ல முடியாது..
சரியாக பார்கவி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, அவர்கள் அன்னை இறந்து விட்டார்..
ஏற்கனவே அவர்கள் சிறு வயதிலேயே தந்தையையும் இழந்திருந்தனர்..
போராட்டமான வாழ்க்கை தான்.. அன்னையும் இழந்த பின், மொத்த பொறுப்பும் தீபன் கையில் தான் வந்தது..

அப்போது தான் அவனுக்கு கல்யாணம் ஆகி இருந்த புதிது.. இருந்தும் உடனடியாக தானும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என பார்கவி படிப்பை முடிக்க வைத்தான்..
பார்கவி வேலைக்கு போன பின் தான், அஞ்சனாவும் தீபனும் குழந்தை பெற்றுக்கொள்ளவே முடிவே எடுத்தனர்..

குழந்தை பிறக்க போகும் நேரம் அதிர்ஷ்டம் வந்திருப்பதாக திடமாக நம்பிய தீபன் கண்களை, வளமான வாழ்க்கைக்கான ஆசை மறைத்து விட்டது..

அவனுக்கு புரிய வைக்க போராடி அஞ்சனாவும் பார்கவியும் தோற்று தான் விட்டனர்..
தீபன் வெளியே சென்றதும், "பெண்ணை கூப்பிடறாங்க" என ஒரு பெண்மணி வந்து அழைத்தார்..
ஒரு முறை ஆழ்ந்த மூச்செடுத்து கொண்ட பார்கவி, "போகலாம் அண்ணி" என்றாள் அஞ்சனாவிடம்.
"இப்போது கூட ஒன்றும் கெட்டு போகவில்லை பார்கவி மா, பேசாமல் அப்படியே ஓடி விடு.. நான் பார்த்துக்கறேன்.." என அஞ்சனா கூற, அவளை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள் பார்கவி..
"ஒருவேளை அண்ணா சொல்வது கூட உண்மையாக இருக்கலாம் அண்ணி.. நான் கூட தப்பா பார்த்திருக்கலாம் இல்லையா..! பார்த்துக்கலாம், வாங்க அண்ணி.." என்றவள் தன் முகத்தை விவரமாக அண்ணிக்கு காட்டாமல் நகர்ந்து விட்டாள்..

அஞ்சனாவை சமாதானம் செய்ய தான் அவள் பேசியது..
மற்றபடி அவளுக்கு சுரேந்தரை பற்றி நன்றாக தெரியும்..
தன்னை பேருக்கு மனைவி என்று வைத்துக்கொள்ள தான் அவன் திருமணம் செய்து கொள்கிறான் என்னும் வரை அவள் சரியாகவே கணித்திருந்தாள்..
அவன் கை அவள் மேல் பட்டால் கூட அவள் உயிர் போக போவது உறுதி..
உயிர் கொல்லும் இடம் என்று தெரிந்தே வேறு வழி இல்லாமல் மணமேடை நோக்கி நடந்தாள் பார்கவி..

அவ்வளவு தான்.. அவள் வாழ்நாட்கள் எண்ணப்பட போகிறது.. சீக்கிரமே முடியவும் போகிறது..
அவள் அண்ணி குழந்தையை கூட பார்க்க இருப்பாளோ..! என்னவோ..!
கடைசியாக அண்ணா அண்ணியை ஒரு முறை பார்த்துகொள்ள வேண்டும் போல் இருந்தது..
மனமேடையில் அமர்ந்தவள் பக்கத்தில் இருந்த சுரேந்தரை கவனிக்கவே இல்லை..
மெதுவாக திரும்பி பார்த்தவள், தீபனையும் அஞ்சனாவையும் ஒரு முறை பார்த்து கொண்டாள்..
"கெட்டிமேளம்... கெட்டிமேளம்..." என்ற சத்தம் கேட்க, அவள் உடல் பெரிதாக இறுகி போனது..
தலை குனிந்து அமர்ந்திருந்தவள், நிமிரவே இல்லை..

எதையும் கண்கொண்டு பார்க்கும் தைரியம் அவளுக்கு இருக்கவில்லை..
தாலியை எடுத்து அய்யர் சுரேந்தரிடம் நீட்ட, அவன் அதை வாங்க கை நீட்டிய நொடி, வேறு ஒரு கை அந்த தாலியை பறித்திருந்தது..

"ஏய்...!" என்ற சுரேந்தர் குரலில் குழப்பத்துடன் பார்கவி நிமிர, தீபன் அருகில் நின்றிருந்த புதியவன், தன் கையில் இருந்த தாலியை நொடியில் பார்கவி கழுத்தில் கட்டி விட்டான்..
அவன் செயலில், "நரேன்..." என பெரும் அதிர்ச்சியுடன் சுரேந்தர் கத்த,
"சாரி மேன்" என அசால்டாக கூறி கொண்டே நிமிர்ந்தான் நரேந்திரன்..
அவன் செயலில் மொத்த மண்டபமும் ஸ்தம்பித்து தான் நின்று விட்டது..

தொடரும்..

 
Status
Not open for further replies.
Top