All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி - கதை திரி(ரீரன்)

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7


தள்ளாடியவாறு நடந்துக் கொண்டிருந்த ஆதித்யாவிற்கு மீராவின் மேல் இருந்த கோபம் இன்னும் அடங்கவில்லை. அவனது வாழ்வில் காதலின் பல வினைகளைப் பார்த்து வெறுத்துவிட்டான். அனைத்தையும் மறந்து சில நாட்கள் இருக்கலாம் என்று வந்திருந்த இடத்திலும்.. மீராவின் மூலம் இன்னும் அவனது வாழ்வில் விளையாடவும், எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நிகழ்கிறது.. என்று விதியைத் திட்டியவாறு நடந்துக் கொண்டிருந்தான். அப்பொழுது “நீங்க தங்கியிருக்கிற ஹோட்டலில் விட்டு விடட்டுமா..” என்று தனக்கு அருகில் கேட்ட குரலில் திரும்பிப் பார்த்தான்.

மீரா தான் எங்கேயோ பார்த்தவாறு அவனிடம் கேட்டிருந்தாள். திரும்பி அவளைப் பார்த்தவன், பதிலளிக்காது தன் நடையைத் தொடர்ந்தான்.

ஆதித்யா நடக்கவும், அவனுடன் நடந்த மீரா “கார்த்திக்கை நீங்க உங்களை பிக்கப் செய்ய கூப்பிட்டிருக்கீங்க, ஆனால் நான்தான் உங்க கூடப் பேசணும் என்று அவனைத் தடுத்துட்டு வந்துட்டேன். அப்போ உன் பிரெண்ட் செய்திருக்க வேண்டியதை நான் செய்யணும். அதற்குதான் நானே கொண்டு போய் விடுகிறேன் என்றுச் சொன்னேன்.. வேறு ஒன்றுமில்லை.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையில் இடைப்புகுந்த ஆதித்யா “கார்த்திக் செய்ய வேண்டியதைச் செய்யறீயா.. அப்போ அவன் வந்திருந்தால், என் கூட கட்டிங் அடிச்சுருப்பான், நீ கம்பெனி கொடுக்கறீயா..! இன்னொரு ரவுண்ட் அடிக்கலாம்.” என்று இளக்காரமாக சொல்லிவிட்டு முன்னே நடந்தான்.

அவள் உதவியாக செய்ய நினைத்ததை கிண்டலடிக்கவும், கோபம் கொண்ட மீரா அப்படியே நின்றுவிட்டாள். இதழைக் கடித்துத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், வேகமாக எட்டுக்களை வைத்து நடந்தவள்.. அவனைத் தாண்டிச் சென்று வழியை மறித்து நின்றாள், “உன்னை மாதிரி சிக் மைன்ட் பர்ஷனை நான் பார்த்ததே இல்லை..! உன் மேல் எனக்கு க்ரஷ் வந்ததைக் கண்டுபிடித்தவனால்.. நீ இப்படிப் பேசுவதால் நான் எவ்வளவு ஹர்ட் ஆகிறேன் என்றும் தெரிந்திருக்கும், அதைத் தெரிந்தும் இப்படிப் பேசும் நீ மனுசனே இல்லை. நான் செய்ய போகிற தப்பைச் சுட்டிக்காட்டினாய் திட்டினாய், அதற்கு தேங்க்ஸ்..! அதை ஒத்துக்கிறேன். ஆனால் அதற்காக நீ என்னைப் பற்றி என்ன வேண்டுமென்றாலும் இளக்காரமாக பேசுவதற்கு உனக்கு ரைட்ஸ் இல்லை..! நீ என் ஃபீலிங்கிற்கு மட்டுமில்லை என்னைத் திட்டுவதற்கு கூடத் தகுதியானவன் இல்லை. உன்னைப் பார்த்து கொஞ்சம் தடுமாறினேன் தான் ஒத்துக்கிறேன். அப்போ தெரியலை.. இப்போ புரிகிறது. ஆனால் உன்னைப் போல் ஒருவன் ஏன்.. என்றுத்தான் புரியவில்லை. அதற்காக உன் பின்னாடி பைத்தியம் மாதிரி சுற்றுவேன் என்று நினைக்காதே..! இன்னும் இப்படிப்பட்ட உன்னைப் போல் ஒருவனிடம் எனக்கு அந்த மாதிரி உணர்வுகள் தோன்றியது என்று அதிர்ச்சியாக இருக்கு..! இனி உன்னைப் பார்க்க கூட விரும்பலை. குட்பை” என்றுவிட்டு திரும்பிச் சென்றாள்.

அவள் பேசியதை அவன் கவனித்த மாதிரியே தெரியவில்லை. அவள் அகன்றதும் தோள்களைக் குலுக்கிவிட்டு தொடர்ந்து நடந்தவனுக்கு அருந்திய மது மூளைக்கு ஏறவும்.. தலைச் சுற்றியது, எனவே சிறு தள்ளாட்டத்துடன் நடைப்பாதையில் போட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான். தனது ஜெர்கின் பாக்கெட்டில் இருந்த செல்பேசியை எடுத்தவனின் கை அதிகப்படியாக மது அருந்தியதால் நடுங்கியது. அதனால் செல்பேசியை தவற விட்டான். கீழே விழுந்த செல்பேசியை குனிந்து எடுக்க போனவனின் நிலைத் தடுமாறி விழப் போனான். தரையில் கையூன்றி சமாளித்து செல்பேசியை எடுத்து நிமிர்ந்தவன், கார்த்திக்கை அழைத்து.. இங்கு வரச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான். ஜெர்மனியின் உறைப்பனி குளிர் தேகத்தை நடுங்க செய்ய.. ஜெர்கினில் இருந்த தலைக்கு போட்டுக் கொள்ளும் குல்லாவை போட்டுக் கொண்டான்.

அப்பொழுது.. ஒரு பெண் அவன் இருக்குமிடத்திற்கு வந்தார். கண்ணில் கருப்பு கண்ணாடியும், காது மற்றும் மூக்கில் வளையங்களைப் போட்டுக் கொண்டு.. ஜெர்கினில் மேல் ஜீப்பை போடாது இருந்தாள். அவளும் நல்ல போதை மயக்கத்தில் இருக்கிறாள் என்பது நன்றாகவே தெரிந்தது. அதுவரை கால்களை அகற்றி வைத்து.. இருக்கையில் தன் கரங்களை ஊன்றி தளர்வாக அமர்ந்திருந்த ஆதித்யா அந்த பெண்ணைப் பார்த்ததும் சரியாக அமர்ந்தான். அந்த பெண் அமர்ந்திருந்த ஆதித்யாவை கவனியாது அவனுக்கு அருகே வந்து தலையைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த ஆதித்யா “டிட் யு மிஸ் சம்திங்..?” என்றுக் கேட்டான்.

அவள் “யா! ஐ மிஸ் மை கார் கீ..! ப்யு மினிட்ஸ் பிஃபோர் ஐ சிட் இயர்..” என்றாள். உடனே ஆதித்யா தேடிப் பார்க்க எழுந்தான். அவன் எழுந்ததும் அதன் மேல் அவன் அமர்ந்திருப்பது தெரியவும், சிரித்தவாறு அதை எடுத்துக் கொடுக்க அவளும் அவனை அணைத்து நன்றிச் சொல்லிவிட்டு சென்றாள்.

அதன் பின் அங்கேயே அமர்ந்துக் கொண்டு வேடிக்கை பார்த்தவாறு கார்த்திக்கிற்காக காத்திருந்தான். அப்பொழுது ஏதோ ஒன்று உறுத்துவது போன்று இருக்கவும், தலையைத் திருப்பிப் பார்த்தவனால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. எனவே அமைதியாக மீண்டும் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான். சிறிது நேரம் சென்றதும்.. டிப்டாப்பாக உடையணிந்துக் கொண்டு ஆண் ஒருவன் ஒரு பெண்ணுடன் தாழ்ந்த குரலில் முகத்தில் எந்தவித பாவனையும் காட்டாது பேசியவாறு வந்தான். அவன் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டு வந்தாலும், அவன் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு வருகிறான் என்று அவனது வாயசைவிலும், கண்களில் தெரிந்த இகழ்ச்சியிலும் தெரிந்துக் கொண்ட ஆதித்யா, அவர்கள் அவனைக் கடந்து செல்லும் வரை காத்திருந்தான். அவன் தன்னைத் தாண்டும் வேளையில் சரியாக தன் கால் கொண்டு அவனது காலை இடறி விட்டான். அதில் அவன் தலைக்குப்பற விழுந்தான். அவனுடன் வந்தவள், பதறியவாறு அவனைப் பற்றி எழுப்பினாள். அதற்குள் அவன் ஆதித்யாவை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தான். பின் எழுந்ததும் ஆதித்யாவின் ஜெர்கின் காலாரை கொத்தாக பற்றி உலுக்கி மேலும் திட்டினான். பின் ஆதித்யாவின் முகத்தில் குத்த கையை ஓங்கிய வேளையில் சரியான நேரத்தில் வந்த கார்த்திக் அவனின் கையில் இருந்து தன் நண்பனை விடுவித்தான்.

மேலும் அவன் தாக்க வருகையில் அவர்களுக்கிடையே வந்து நின்ற கார்த்திக் அவனை முறைத்தான். அதில் அவன் சிறு தயங்கவும்.. அவனுடன் வந்த பெண் அவனை அழைத்துச் சென்றாள். பின் நின்றுக் கொண்டிருந்த ஆதித்யாவிடம் கார்த்திக் திரும்பவும் ஆதித்யா “எனக்கு அவனை அடிக்க தெரியாதா என்று நினைத்தாய்! ஆனால் நான் கை வைத்தால்.. என் முகத்தோற்றத்தை வைத்து ஆசியன் என்று கணிப்பவர்கள் மொத்த பழியையும் இஸ்லாமியர்களின் மேல் போடுவார்கள்..” என்றுக் கசந்த சிரிப்பைச் சிந்தினான். கார்த்திக்கிற்கு ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு, “அவனின் காலை ஏன்டா தட்டிவிட்டே..?” என்றுக் கடிந்துவிட்டு “நீ முதலில் இந்த டாக்ஸில் ஏறு ஆதி..” என்று அருகில் நின்றிருந்த காரில் ஏற்றினான்.

ஆதித்யாவும் அதில் ஏறியமர்ந்து இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். கார்த்திக் ஏறியதும்.. கண்களைத் திறவாமலேயே “அவன்.. கூட வந்த பெண்ணைத் திட்டிட்டே வந்தான்டா..! அது எனக்கு பிடிக்கலை. அதனால் தட்டிவிட்டேன்.” என்றான்.

கார்த்திக் “யார் எப்படியிருந்தால் உனக்கென்ன நீ உன் வேலையைப் பார்க்க வேண்டியது தானே..!” என்றான்.

அதற்கு தலையை நன்றாக சாய்த்தவாறு அமர்ந்திருந்த ஆதித்யா அமர்ந்திருந்த நிலை மாறாது.. கண்களை மட்டும் திறந்து, “என்னால் அப்படி இருக்க முடியவில்லை கார்த்தி..! மற்றவர்களைப் பார்த்தே வளர்ந்துட்டேன். மற்றவர்களைப் பார்த்தே என் லைஃப்பும் மாறியிருச்சு…” என்றுச் சிரித்தான். பின் கார்த்திக்கை பார்த்து நன்றாக திரும்பி அமர்ந்து “காங்கிராஜ்லேஷன்ஸ்..! மீரா உன்கிட்ட நோ சொல்லிட்டா..” என்றுச் சிரித்தான்.

அதற்கு கார்த்திக் “அடப்பாவி வாழ்த்துகிறாயா..! நான் மீராவை காதலித்திருந்தால்.. என் நிலைமையை நினைச்சு பார்த்தியா..” என்றுச் சிரித்தான்.

ஆதித்யாவோ “நீ அவளை லவ் செய்யவேயில்லை. க்யுட் க்ரஷ் தான் இருந்தது. அதை லவ்வாக கொண்டு போயிருந்திருக்கலாம். ஆனால் அதற்குள் அவள் என்னை சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டா.. அப்பொழுதும் உனக்கு ஹெல்ப் செய்ய தான் நினைத்தேன். என்னை விட்டுவிடச் சொன்னேன். இரண்டு பேரும் கேட்கலை. அதனால் காதலே செய்யாமல் பிரெக்அப் செய்திருக்கீங்க..!” என்றுச் சிரித்தவன், தொடர்ந்து “ஆக்சுவலா உனக்கு அவங்க பேமலியை தான் ரொம்ப பிடிச்சுருக்கு..! அவங்களைத் தான் ரொம்ப லவ் செய்கிறே..! அவங்களுக்காக தான் மீராவை லைஃப் பார்டனரா வர ரொம்ப எதிர்பார்த்தே..! ஒருவேளை நான் அவங்க கிட்ட இருந்து உன்னைப் பிரித்திருந்தால்.. உன் முதல் எதிரி நானாக தான் இருப்பேன்.” என்றுச் சிரிக்கவும், அவனது தோளில் சிறு குத்துவிட்டு கார்த்திக் சிரித்தான்.

பின் கார்த்திக் “மீராவிற்கு என்ன குறைச்சல்! அவள் நல்ல பெண்டா! அவளுக்கு உன்னைப் பிடித்திருக்கு என்ற ஒரே ரிஷனுக்காக அவளை நீ வெறுப்பது சரியில்லை.” என்றான்.

ஆதித்யா “என்னைப் பிடித்திருக்கு என்பதால் நான் வெறுக்கலை. உனக்கு ஒகே சொல்கிறே ஸ்டேஜில் இருந்துட்டு என்னை சைட் அடிச்சுது தான் தப்பு என்றுச் சொல்கிறேன்.” என்றான்.

கார்த்திக் விடாமல் “அவள் என்னை லவ் செய்திருந்தால்.. உன் பக்கமே திரும்பியிருக்க மாட்டாள். சோ அவள் எனக்கும் ஹானஸ்டா தான் இருந்திருக்கிறாள், உன்னை லவ் செய்கிறாள் என்று அவள் உணர்ந்ததும் என்கிட்ட சொல்லிட்டு.. உன்கிட்ட கன்பார்ம் செய்ய வந்திருக்கிறாள்.. சோ உன் மேல் வைத்திருக்கிற லவ்விற்கும் ஹானஸ்டா தான் இருந்திருக்கிறாள்.” என்றான்.

ஆதித்யா மாறாத ஏளனத்துடன் “எது ஹானஸ்ட்..! அவள் உன்னை விட்டு போயிருவாள் என்று நான் சொன்னேன் என்ற வீம்பிற்காக வேண்டுமென்றே அவளோட பேமலி கிட்ட கூட்டிட்டு போய் உன்னை லவ்வர் என்று இன்டர்டுஸ் செய்ததா..!” என்று புருவத்தை உயர்த்தி கேட்டான்.

அதற்கு சிரித்த கார்த்திக் “ஏன் ஆதி! திமிரை மொத்தமாக நீ மட்டும் குத்தகைக்கு எடுத்துக்கிட்டியா..! அது வேறு யாருக்கும் இருக்க கூடாதா..” என்றுக் கேட்கவும், நன்றாக சிரித்த ஆதித்யா “கார்த்தி! மீரா நமக்கு டிரைவர் வேலை பார்க்கிறாள் என்பதற்காக அவளுக்கு சப்போர்ட்டாக நீ பேசியாகணுமா..!” என்று நமட்டுச்சிரிப்பு சிரிக்கவும், கார்த்திக் வியப்புடன் அவனைப் பார்த்தான்.

முகத்தை நன்றாக மறைத்தவாறு தொப்பி போட்டுக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்த மீரா.. ஒரு கையால் ஸ்டெரீங்கை பிடித்துக் கொண்டு மறுகையால் தொப்பியைக் கழற்றியவள், கண்களில் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

ஆதித்யாவிடம் வெறுத்து பேசிவிட்டு வேகமாக எட்டுக்களை வைத்து சென்ற மீராவால் தொடர்ந்து வேகமாக மட்டுமில்லை, நடக்க கூட முடியவில்லை. எனவே அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டாள். தலையை கைகளால் தாங்கியவாறு அமர்ந்திருந்தவளால் ஆதித்யா போன்ற ஒருவனா தன் மனதில் சலனத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று மீண்டும் மனம் வெம்பினாள். கண்களில் இருந்து கண்ணீரும் தான் இருப்பதைத் தெரிவித்தது. சிறு எரிச்சலுடன் கண்ணீரைத் தட்டிவிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள்.

சற்று தொலைவில் ஆதித்யா தடுமாறியவாறு அமர்வது தெரிந்தது. தற்பொழுது நன்றாகவே பெருமூச்சு விட்டாள்.

அப்பொழுது ஒரு பெண் அவனிடம் வந்து பேசியது தெரிந்தது. அந்த பெண்ணைப் பார்த்ததும் ஆதித்யா சரியாக அமர்வதும் தெரிந்தது. பின் இருவரும் பேசுவதைப் பார்த்தவளின் மனம் தானாக ‘என்கிட்ட மட்டும் தான் நக்கலா பேசுவான் போல..’ என்று எண்ணவும், தன் தலையில் தானே கொட்டிக் கொண்டு அவர்களைக் கவனித்தாள். தற்பொழுது ஆதித்யா எழவும், அந்த பெண் இருக்கையில் இருந்து எதையோ எடுத்தாள். பின் இருவரும் சிரித்தவாறு அணைத்தார்கள். பின் அந்த பெண் சென்றுவிட ஆதித்யா மீண்டும் அமர்ந்தான்.

அவனிடம் இருந்து தன் கவனத்தைத் திருப்ப வேண்டும் என்றுத் தன்னையே திட்டிக் கொண்டிருக்கும் பொழுது தனக்கருகில் குரல் கேட்கவும், அவசரமாக முகத்தைச் சரிப்படுத்திக் கொண்டு வேடிக்கை பார்ப்பதைப் போல் அமர்ந்தாள். அவளுக்கு அருகில் ஒரு பெண்ணும்.. சிறுமியும் வந்தமர்ந்தார்கள். அவர்கள் ஜெர்மனில் பேசுவது மீராவிற்கு நன்றாக புரிந்தது.

அந்த சிறுமி தன் தாயிடம் அடம் பிடித்துக் கொண்டிருக்க.. அவளது அன்னை சிறுமியைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“சொன்னால் கேள்..! அது ரொம்ப கஷ்டமான விளையாட்டு, விளையாடுவது ரொம்ப கஷ்டம் நான் சொன்னதை வாங்கிக்கோ.. அந்த விளையாட்டு ஈஸியானது. நீ இன்னும் கொஞ்சம் பெரியதானதும் அந்த விளையாட்டு பொருளை வாங்கித் தருகிறேன்.”

“இல்லை..! எனக்கு அதுதான் வேண்டும். எனக்கு அதுதான் பிடித்திருக்கு..” என்று அந்த சிறுமி அழுது அடம்பிடித்தாள். அருகில் ஒரு பெண் அமர்ந்திருக்க, தனது பிள்ளை அடம் பிடித்து அழுவது அந்த பெண்ணிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது போல.. தனது பிள்ளையை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள். ஆனால் மீராவோ.. திக்கித்தவளாய் அமர்ந்திருந்தாள்.

இது அவளுக்கு பழக்கமான ஒன்று..! அவளது வீட்டில் அவளுக்கு வைக்கப்படும் திட்டுக்கள் அவை..!

சிறு வயதில் இருந்தே மீரா கடினமானதைத் தான் தேர்ந்தெடுப்பாள். அவளுக்கு வாங்கி கொடுத்த பர்பி பொம்மைகளை விட.. பக்கத்து வீட்டு பையன் வைத்திருந்த வீடியோகேம் தான் அவளுக்கு பிடித்திருந்தது. சைக்கிளில் சாலையில் வழியாக பயணிப்பதை விட.. கரடுமுரடான பாதையில் செல்வது தான் மீராவிற்கு பிடிக்கும். மீராவை ஆடைகள் வடிவமைப்பைப் படிக்க சொன்ன பொழுது.. அவள் வாகன வடிவமைப்பை பாடமாக எடுத்துப் படித்தாள். அதுபோல் அவளது பாட்டி அன்று சொன்னது போல்.. அவளை ஒதுக்கிய முரடனிடம் அவளுக்கு லயிப்பு தோன்றியதோ..! என்று எண்ணியவளுக்கு அன்றைய நாளின் நினைவு வந்தது.

அன்று காபி ஷாப்பில் கார்த்திக்கிடம் பேசியவாறு நிமிர்ந்தவள் திகைத்துத்தான் போனாள். மாலை வெயிலின் கதிர்கள் ஒரு பக்கம் பட்டிருக்க கிரேக்க சிலைப் போல் இருந்த ஒருவன் அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். அவளால் அவனிடம் இருந்து பார்வையை அகற்ற முடியவில்லை. ஏன் என்று அவள் உணரும் முன் அவளது மேல் காபியை சரித்தான். அதில் கோபம் கொண்டு அவனிடம் சண்டையிட்ட பொழுது.. அவன் மன்னிப்பு கேட்டிருந்தாலோ.. அல்லது அவளிடம் சண்டையிட்டிருந்தாலோ.. அவளுக்கு ஒன்றும் தோன்றியிருக்காது. ஆனால் அவனின் அலட்சியம் அவளை உசுப்பேற்றியது. அவளுக்கு கோபம் தான் இருந்தது. ஆனால் அதற்கு காரணம் அவன் அவளை ஒரு வகையில் ஈர்த்திருக்கிறான் என்பதை அறியவில்லை. அதன் பின் நடந்த சம்பவங்களில் ஆதித்யா சொன்னது முற்றிலும் உண்மையே..! அவளையும் மீறி அவளது கவனமும், எண்ணங்களும் அவனிடம் தான் இருந்திருக்கிறது. அவ்வேளைகளில் அவளின் நெஞ்சோரத்தில் சிறு சில்லென்ற உணர்வு ஏற்பட்டதும் உண்மையே. அது புது மனிதனைப் பார்த்ததால் வந்தது என்று நினைத்திருந்ததும் தவறு என்றும் புரிந்தது. அது அவனிடம் தோன்றிய லயிப்பே..!

அவளின் மனம் அவனிடம் சென்றதிற்கு காரணமும் தெரிந்துவிட.. கடைசி குழப்பமும் அகன்றது. சிறு பெருமூச்சை இழுத்துவிட்டவளுக்கு.. அவளின் முதல் காதல் தோல்வியா என்று கசந்த சிரிப்பு சிரித்தாள். பின் நன்றாக மனதில் இருந்து வெளிப்படையாக சிரித்தாள். மனதில் ஒரு தெளிவு ஏற்பட எழுந்து செல்லலாம் என்று எழ நினைத்தவள் மீண்டும் ஆதித்யாவை பார்த்தாள். அவன் அங்கேயே தான் அமர்ந்திருந்தான். மிகுதியாக மது அருந்திய நிலையில் அவனை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல் கார்த்திக்கை அழைத்தாள். முதல் அழைப்பிலேயே அழைப்பை ஏற்றவன், அங்கே தான் வந்துக் கொண்டிருப்பதாக சொல்லவும், கார்த்திக் வந்த பிறகு போகலாம் என்று அங்கேயே அமர்ந்து விட்டாள்.

முதலில் அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் இருந்த கடைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் ஆதித்யாவை பார்த்தாள். இருக்கையில் அமர்ந்திருந்தவன் கரங்களை முழங்காலில் ஊன்றியவாறு அமர்ந்து அவ்வழியாக சென்றுக் கொண்டிருப்பவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். இங்கிருந்து பார்க்கும் போது அவனது பக்கவாட்டுத் தோற்றம் நன்றாக தெரிந்தது. அந்த தோற்றம் அவளது மனதில் அழுத்தமாக பதியவும், திடுக்கிட்டு தன் பார்வையை அகற்றிக் கொள்ள முயன்றாள். ஆனால் முடியாமல் அவளது பார்வை அவன் மீதே இருந்தது. அவளுக்கு அன்று பிறந்தநாள் அன்று அழைத்த போது மறுத்துவிட்டு காரின் மேல் ஏறியமர்ந்துக் கொண்டு அவளைப் பார்த்தது நினைவு வந்தது. பின் திரையரங்கில் திரையில் இருந்து வந்த ஒளியில் பார்த்த அவனது பக்கவாட்டுத் தோற்றம் நினைவிற்கு வந்தது. சட்டென்று பார்வையை அவனிடம் இருந்துத் திருப்பிக் கொண்டாள். தலையை உலுக்கிக் கொண்டாள். ஆனால் அவளது கண்கள் அவள் பேச்சைக் கேளாது. அவனிடம் சென்றது..!

தற்பொழுது குளிர் மிகுதியால் இரு கரங்களையும் கோர்த்துக் கொண்டு இரு கால்களுக்கிடையே வைத்துக் கொண்டு குறுக்கி அமர்ந்தான். பின் அடக்க முடியாது.. கொட்டாவி விட்டான். அதைப் பார்த்த மீராவின் முகத்தில் அவளையும் அறியாது புன்சிரிப்பு தோன்றியது. அன்று பனி மழையில் நின்றிருந்தவனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும், பின் அதைப்பிடித்து கையில் வைத்தவன், பனித்துளி காணாமல் போனதும்.. அவனது முகத்தில் வந்த ஏமாற்றமும் நன்றாக நினைவில் இருந்தது. அந்த சிரிப்பும் சிறுப்பிள்ளையாய் பனியைப் பிடிக்க நினைத்தவனின் செயலும் அவளிடம் வன்மையாக நடந்துக் கொண்டதும் எப்படி ஒத்துப் போகும் என்றுக் குழம்பினாள். அதுமட்டுமில்லாது, அன்று அவனது ஜெர்கினை எடுத்து அவளுக்கு போட்டுவிட்டு அருகில் இழுத்த போது.. அவளது உடலில் தோன்றிய சிலிர்ப்பும்..! மீண்டும் அதே சிலிர்ப்பை உணர்ந்தவள், மார்பிற்கு குறுக்கே கரங்களைக் கட்டிக் கொண்டாள். கண்களை மூடி தலையை குனிந்து அமர்ந்திருந்தவளின் மனதில் முழுவதையும் ஆதித்யாவே ஆக்கிரமித்திருந்தான். பின் மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் சற்றுத் திகைத்து தான் போனாள்.

ஆதித்யா அமர்ந்திருந்த இருக்கையின் ஓரத்தில் கால்களை மடக்கி வைத்து அதைக் கட்டிக் கொண்டு அமர்ந்தவாறு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். இம்முறை தெரிந்த அந்த தோற்றத்தை அழுத்தமாக மனதில் பதிய வைத்துக் கொண்டாள். இமைக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின் தன் செல்பேசியை எடுத்து கார்த்திக்கை அழைத்தாள்.

அவன் அழைப்பை ஏற்ற கார்த்திக் “ஐயம் ஆல்மோஸ்ட் தெர் மீரா..! எனிதின்க் பிராப்பளம்?” என்றுக் கேட்டான். ஆனால் மீரா அவன் கேட்டதிற்கு பதிலளிக்காமல் “கார்த்திக்! ஆதித்யாவை பார்க்கிறதிற்கு முன்னாடி நான் உன்னை மீட் செய்யணும். நான் ஆதித்யா இருக்கிற பிளட்பாரத்தில் கடைசி டர்னிங்கில் தான் இருக்கிறேன். முதலில் நான் இருக்கிற இடத்திற்கு வா..” என்றாள்.

கார்த்திக் அங்கு தான் இருந்திருப்பான் போல.. அடுத்த சில நிமிடத்திலேயே அங்கு வந்துவிட்டான். வாடகை காரில் இருந்து இறங்கி அவளை நோக்கி வந்தாலும்.. ஆதித்யா எங்கே என்றுத் தேடியவாறு தான் வந்தான். அருகில் வந்து நின்றவனிடம் பத்து பதினைந்து கடைகள் தள்ளி இருந்த இருக்கையில் ஆதித்யா அமர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டினாள்.

பின் கார்த்திக்கிடம் “என்னோட க்ளாரிபிகேஷன் முடிஞ்சுருச்சு.. கார்த்தி! முதலில் ஆதித்யா கூடப் பேசிய போது.. நான் அவனை லவ் செய்வதாக எதை வைத்துச் சொல்கிறான் என்றுக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். அது ட்ரூ தான்! அப்பவும் அவன் வேண்டாம் என்றுத்தான் இருந்தேன். அடுத்து.. நான் எப்படி இப்படிப்பட்டவனை லவ் செய்தேன் என்றுத் தெரிஞ்சுகிட்டேன். அந்த தெளிவு வந்த பிறகும் அவன் வேண்டாம் என்ற முடிவெடுத்தேன். ஆனால் இப்போ இன்னும் ஆதித்யாவை லவ் செய்துட்டு தான் இருக்கிறேன் என்றுத் தெரிஞ்சுகிட்டேன். என்னால் அவனை விட முடியுமா என்றுத் தெரியவில்லை கார்த்தி..” என்றுக் கடகடவென சொல்லி முடித்தாள்.

மீரா கூறி முடிக்கும் வரை முழுவதும் கேட்ட கார்த்திக்.. அவள் பேசி முடித்ததும், அவளது கையை மகிழ்ச்சியுடன் பற்றிக் கொண்டான். “தேங்க்ஸ் மீரா! ரியலி தேங்க்ஸ்! நீ என்ன முடிவு எடுப்பியோ என்றுப் பயந்துட்டே இருந்தேன். ஆதித்யாவிற்கு வாழ்க்கை துணையாக நீ இருந்தால் கண்டிப்பாக அவன் பழையபடி அவன் மாறிவிடுவான். ஆனால் நீ என்ன முடிவு எடுத்திருந்தாலும் உனக்கு சப்போர்ட் செய்திருப்பேன் மீரா!” என்று தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.

மீரா கண்களை எட்டாத சிரிப்பைச் சிரித்து “உன் பிரெண்ட் பற்றித் தெரிந்தும் எனக்கு விஷ் செய்யறீயே” என்றாள்.

அதற்கு கார்த்திக் “அவனைப் பற்றித் தெரிந்ததால் தான்.. இப்படிச் சொல்கிறேன். ஆனால் நீ உன் முடிவில் கன்பார்ம் தானே…! ப்ளீஸ் பின் வாங்கி விடாதே! அவன்தான் வேண்டும் என்றால் அதில் உறுதியாக இரு..” என்று மீண்டும் கேட்டான்.

மீரா “நான் அவனை லவ் செய்வது கன்பார்ம் தான்.. ஆனால் ஆதித்யாவிற்கு என்னைப் பிடிக்கலை என்கிற போது என்ன செய்ய..! அவன் என்னை வெறுத்துவிட்டால்.. ஒகே என் லவ் ஸ்டோரி இதுதான் என்று நான் அமைதியாக சென்றுவிடுவேன். நான் ஆதித்யா என்கிறவனை லவ் செய்திருக்கிறேன் என்பது என் லைஃப்பில் ஒரு மறக்க முடியாத மாற்ற முடியாத விசயமாக இருக்கும். என் முதல் காதல் தோல்வி என்று அதை ஏற்றுக் கொள்வேன். ஆனால் அவனுக்கு என் மேல் சின்ன அட்டென்ஷன் இருந்தால் கூட.. என்னால் அவனை விட முடியாது. அவன்கிட்ட என் லவ்வை சொல்லி ஏற்றுக் கொள்ள சொல்ல நான் ரெடி..! அதைத் தெரிந்துக் கொள்ள தான்.. உன்னைக் கூப்பிட்டேன்.” என்றாள்.

கார்த்திக்கிற்கு மீரா சொல்வதும் சரியாக இருந்தது. பிடிப்பு இல்லாத இடத்தில் அவளுக்கு தோன்றிய காதலும் பரிதாபத்திற்குரியதே! அதனால் தான் மீரா எந்த முடிவு எடுத்தாலும் அவனுக்கு சரிதான் என்று ஆரம்பத்திலேயே சொன்னான். தற்பொழுது மீரா ஆதித்யாவிடம் சிறு கவனத்தைக் கூட எதிர்பார்க்கிறாள் என்கிற பொழுது.. என்ன செய்ய வேண்டும் என்றுக் கேட்டான். மீரா அவன் வந்த வாடகை அனுப்பி விடச் சொன்னாள். தன்னுடைய காரை வாடகை கார் என்றுச் சொல்லி ஆதித்யாவை அழைத்துச் செல்லலாம் என்றும்.. அவள் தனது முகத்தை மறைத்துக் கொண்டு காரை ஓட்டுவதாக கூறினாள். போகும் பொழுது மெல்ல பேச்சு கொடுத்து மீராவை பற்றி அவன் என்ன நினைக்கிறான் என்றுத் தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டாள். கார்த்திக்கிற்கும் மீரா சொல்லியதைச் செய்ய ஒத்துக் கொண்டு தான் வந்த வாடகை காரை கட்டணத்தைக் கொடுத்து அனுப்பினான்.

கூந்தலை அள்ளி கொண்டையிட்டு, தொப்பியைக் கொண்டு கழுத்தில் இருந்து முன் நெற்றி வரை மறைத்தவாறு அணிந்துக் கொண்டிருந்த மீராவிற்கு ஆதித்யா.. முற்றிலும் தன்மேல் வெறுப்பு கொண்டவனாக இருப்பானோ என்ற அச்சம் தோன்றியது. தான் ஏன் இதைத் தெரிந்துக் கொள்ள இவ்வளவு ஆர்வம் காட்டுகிறேன் என்றுத் தன்னை நினைத்து வியப்புடன் எண்ணினாள். அவளுக்கு அவளது பாட்டி பரிமளம் சொன்னது நினைவிற்கு வந்தது.

“ரொம்ப எதிர்பார்க்காதே மீரா, ஆனால் அன்பை மட்டும் கொடு.. அப்பறம் பாரு, அவங்க உன்னைப் பார்ப்பதைப் பார்த்துக் கூட அவ்வளவு சந்தோஷப்படுவாய்..”

முகத்தில் புன்னகை தோன்ற.. மனதிற்குள் ‘அதற்கு மட்டுமில்லை பாட்டி! சிறு நம்பிக்கை கிடைக்க தான்..’ என்றாள். பின் கார்த்திக் காரின் பின் இருக்கையில் அமர்ந்துக் கொள்ள மீரா காரை ஆதித்யா இருக்கும் இடத்தை நோக்கி செலுத்தினாள்.

அப்பொழுது தான் ஆதித்யா ஒருவனின் காலை இடறிவிட்டு அவன் இவனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த கார்த்திக் கார் முழுவதும் சரியாக நிற்பதற்குள் கதவை திறந்துக் கொண்டு இறங்கி ஆதித்யாவை அவனிடம் இருந்து விடுவித்தான். பின் அவனை காரில் ஏற்றியவன்.. மெல்ல பேச்சு கொடுத்து அதில் மீராவின் பெயரை கொண்டு வந்தான். இவ்வாறு கார்த்திக்கிடம் இருந்து அவள் பிரிந்த பின் அவளைப் பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்க நினைத்திருந்தான். ஆனால் ஆதித்யா மாறாத நக்கல் பேச்சு பேசியது மட்டுமில்லாது மீரா தான் காரை ஓட்டுவதையும் கண்டுக் கொண்டான். எனவே கார்த்திக்கிற்கு வியப்பாக இருக்க.. மீராவிற்கோ மகிழ்ச்சியாக இருந்தது.

பின் நேராக சாலையைப் பார்த்து ஓட்டியவாறு மீரா “வாவ் ஆதித்யா! இப்படி போதையிலும் உங்க அப்சரவ்விங் மைன்ட் அமைஸிங்..” என்றாள்.

சற்றுத் திடுக்குற்று நிமிர்ந்த ஆதித்யா கார்த்திக்கிடம் திரும்பி “உன் பிரெண்ட் டர்ன்டு லவ்வர் டர்ன்டு பிரெண்ட் எப்போ டிரைவர் வேலையும் பார்க்க ஆரம்பித்தாங்க..” என்றுச் சம்பந்தமே இல்லாமல் கேட்டான்.

மீரா அதற்கு பதிலளித்தாள்.

“என் கண்ணில் இருக்கிற லவ் உங்களுக்கானது என்றுக் கண்டுபிடித்தது மட்டுமில்லாது ஆம்பளை மாதிரி தெரிவதற்கு கார்த்திக்கோட பெரிய ஜெர்கின் போட்டுட்டு பிலோ மேலே உட்கார்ந்து, முகத்தை மறைச்சுட்டு, பேக்வியு க்ளாஸை கூடத் திருப்பிட்டு டிரைவ் செய்தேன். அப்பவும் என்னைக் கண்டுபிடிச்சுட்டிங்க..! நான் அந்தளவிற்கு உங்க மைன்ட்ல பிக்ஸ் ஆகிட்டேனா..” என்றுக் கேட்டுச் சிரித்தாள்.

அதற்கு சத்தமாக சிரித்த ஆதித்யா “இத்தனை பிரிப்பேர் செய்த நீ கார்த்திக்கிற்கும் நடிக்க கத்துக் கொடுத்திருக்கலாம். அவன் அடிக்கடி உன்னைப் பார்த்து பேசியதில் இருந்தே கண்டுபிடிச்சுட்டேன். பேசாமல் காரை ஓட்டுவது என்றால் ஓட்டிட்டு அதற்கான பணத்தை வாங்கிக்கோ..! இல்லையென்றால் காரை நிறுத்து..” என்றுக் கத்தினான்.

மீரா அமைதியாக காரை ஓட்டினாள். அதன் பின் பேசவில்லை. ஆதித்யா தங்கியிருந்த ஹோட்டலில் காரை நிறுத்தவும், காரில் இருந்து ஆதித்யாவும், கார்த்திக்கும் இறங்கி.. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த மீராவிடம் வந்தார்கள். கண்ணாடியை இறக்கிவிட்டு மீரா அவர்களைப் பார்க்கவும். ஆதித்யா அவளுக்கு பணம் தர வாலெட்டை எடுத்தான். கார்த்திக் “ச்சு என்னடா இது!” என்றுத் தடுத்தான்.

மீரா “விடுங்க கார்த்தி! தரட்டும்..” என்று ஆதித்யாவின் முன் கரத்தை நீட்டினாள்.

ஆனால் அவனிடம் ஜெர்மனி பணமாக இல்லை.. கார்ட்ஸ் தான் வைத்திருந்தான். அவன் தள்ளாடியபடியே தேடுவதைப் பார்த்த மீரா “கார்ட்ஸ் நாட் அசெப்ட்டர்டு..” என்றாள். அவளை நிமிர்ந்துப் பார்த்த ஆதித்யா கார்த்திக்கிடம் பணம் கேட்பதற்காக திரும்பவும், மீரா “நீங்க தான் தருகிறேன்னு சொன்னீங்க, அப்போ நீங்க தான் தர வேண்டும்.” என்றுப் பிடிவாதமாக கூறினாள்.

ஆதித்யாவின் பார்வை கூர்ப்பெற்றது.

மீரா ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

“அன்னைக்கு நீங்க வாங்கிட்டு வந்த.. ஐஸ்கிரீம் தான் வேண்டும் என்று உரிமையாய் கேட்டு.. கார்த்திக்கிடம் நீங்க கொடுத்ததைப் பிடுங்கி சாப்பிடும் போது எனக்கு தெரியலை. நான் உங்க கிட்ட உரிமையைக் கேட்டுருக்கிறேன்..” என்றுச் சிரித்தவள், தொடர்ந்து “இப்போ என் மேலான உரிமையை உங்க கிட்ட கொடுத்துட்டேன். உங்கள் மேலான என் உரிமையைக் கேட்கிறேன்.” என்றுத் தன் காதலை அழகான வார்த்தைகளால் வெளிப்படுத்தினாள்.

அவளை ஆழ்ந்துப் பார்த்த ஆதித்யா குனிந்து “அழகா தான் பேசுகிறே..! ஆனால் என்கிட்ட வார்த்தையை விடாதே..! அப்பறம் நீ கொடுத்த உரிமையை எடுத்துட்டு.. என் மேலே உனக்கு எந்த உரிமையையும் இல்லை என்றுச் சொல்லிட்டு போயிருவேன்.” என்று கோணல் சிரிப்பு சிரித்தான்.

மீரா புரியாமல் பார்க்கவும், ஆதித்யா தனது வாலெட்டை கீழே போட்டான். நண்பன் தவற விட்டுவிட்டான் என்று கார்த்திக் அதைக் குனிந்து எடுக்கும் பொழுது சட்டென்று மீராவின் பின்னங்கழுத்தில் கரத்தை வைத்து இழுத்து அவளது இதழில் அழுத்த தனது வலிய உதடுகளைப் பதித்துவிட்டு நிமிர்ந்தான்.

இதை எதிர்பாராத மீரா திகைத்து இருக்கையிலேயே.. அங்கிருந்து அகன்றான்.

குனிந்து வாலெட்டை எடுத்த கார்த்திக் நிமிர்ந்து தன் நண்பனிடம் நீட்டினான். அதை வாங்கியவன், அவனிடம் கூடச் சொல்லாது செல்லவும்.. கார்த்திக் அவசரமாக மீராவிடம் சொல்லிவிட்டு அவன் பின் விரைந்தான். அறைக்கு செல்லும் வரை ஒன்றும் பேசாது சென்ற ஆதித்யா.. அறையைச் சென்றடைந்ததும் கார்த்திக்கிடம் திரும்பி தன்னைத் தனியே விடுமாறுக் கேட்டுக் கொண்டான். கார்த்திக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் “ப்ளீஸ் ஆதி! எதையும் நினைக்காதே..! அமைதியாக படுத்து தூங்க ட்ரை செய்..” என்றான். அதற்கு ஆதித்யா சரி என்று தலையை மட்டும் அசைக்கவும், மீண்டும் ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு மனமே இல்லாமல் சென்றான்.

கார்த்திக் சென்றதும் கதவை சாத்திய ஆதித்யா “ஆ..” என்ற கத்தலுடன் சுவற்றில் ஓங்கி குத்தினான். மீண்டும் மீண்டும் குத்தியவாறு.. “ஒரு பெண்ணிடம் இப்படித்தான் பிஹேவ் செய்வியா...” என்றுக் கத்தினான்.



காதலை ஆராய்ந்தவள்.. அவனையும் ஆராய்வாளோ..!

ஆராய்ச்சியின் முடிவில் அவள் கேட்டதைப் பெறுவாளோ..!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

இந்த புத்தக திருவிழா வெளியீடான "குடை வேண்டாமே இப்படிக்கு அடைமழை!" புத்தகம் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அருண் பதிப்பகத்தின் ஸ்டாலுக்கு வந்துவிடும்.

ARUN PATHIPPAGAM
48TH CHENNAI BOOKFAIR
STALL NO 411,412
5th ROW

அதுவரை இந்த டீசரை படிங்க😁😁😁

********************

சிகைத்திருத்தம்‌ செய்த பின்.. முகச்சவரம் செய்ய நுரையை அவனது முகவாயில் தடவியவள் “அப்போ உங்க சிஸ்டர் மேலே மட்டும் தான் அக்கறை போல! நான் யாரோ பொண்ணு தானே! என்னை இந்த புதைக்குழிக்குள் நீங்களே தள்ளி விடறீங்களே!” என்று.. அவன் கூறியதை வைத்தே.. மடக்க முயன்றாள்.

அது புரிந்து சிரித்த அர்ஜுன் “அகிலா என்னோட சிஸ்டர்.. அவ மேலே இருக்கிற அக்கறையில் தான்.. அவளை இங்கே இருந்து போக சொன்னேன். நீ நான் விரும்பற பெண்.. உன் மேலே இருக்கிற விருப்பத்தால்.. உன்னை என் கிட்டவே வச்சுக்க ஆசைப்படறேன்.” என்றுச் சிரித்தான்.

அவனுக்கு முகச்சவரம் செய்ய கத்தியை எடுத்திருந்த அதிரா “என்ன சொன்னீங்க..” என்றவாறு அவனது கழுத்தில் கத்தியை வைத்தாள். அவளது செய்கைக்கு மாறாக சிரிப்பை அடக்க அவளது உதடுகள் பெரும்பாடு பட்டது. அர்ஜுனின் பார்வை அவளது இதழ்களில் தான் இருந்தது.

“டு இட்!” என்றான்.

அதிரா “என்ன வெட்டிரவா!” என்றுக் கேட்டாள்.

அதற்கு அர்ஜுன் “வெட்டினாலும் ஒகே! சிரிச்சாலும் ஒகே!” என்றான்.

அதைக் கேட்டு இதழ்களை மடித்துக் கொண்டு சிரிப்பை அடக்கிய அதிராவிற்கு அவளை நினைத்தே கோபமாக இருந்தது. அவளால் ஏன் அவனிடம் கோபத்தையும் வெறுப்பையும் முழுமையாக காட்ட முடியவில்லை என்றுத் தெரியவில்லை.

முகச்சவரம் செய்கையில்.. அவளது முகம் அவனது முகத்தருகே குனிந்திருக்க.. அவளது பார்வை சவரம் செய்வதில் கவனமாக இருந்தது. ஆனால் நெருங்கியிருந்த அவளது முகத்தை மென்மையாக அவன் பார்த்த பார்வை.. அவளைத் தொல்லை செய்தது. எச்சில் இடறு விழுங்கியவாறு தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். அவனது பார்வையோ.. எச்சில் விழுங்கிய பொழுது ஏற்படும் தொண்டை குழி அசைவை கூட விட்டு வைக்கவில்லை.

சவரம் செய்த பின்.. துண்டு கொண்டு அவனது முகவாயை அழுத்த துடைத்தவளுக்கு.. அவனது எடுப்பான முகவாய் சிறு பித்தம் கொள்ள வைத்தது. ஆஃப்டர் லோஷனை எடுத்து அவனது கன்னத்தில் இருந்து முகவாய் வரை தடவியவளின் விரல்கள் சிறு நடுக்கம் கொண்டது. வேண்டுமென்றே தன்னை வரவழைத்து இந்நிலையில் நிறுத்தியிருக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.

அதிராவின் கண்களில் காணப்பட்ட பித்தமும்.. விரல்களில் ஓடிய நடுக்கத்தையும் அர்ஜுன் உணர்ந்து தான் இருந்தான். அது அவனின் இரத்தவோட்டத்தை அதிகம் செய்து மூச்சு வாங்கியது.

தனது வேலையை முடித்துவிட்டு சிறு பெருமூச்சுடன் அதிரா நிமிரவும், தனது மேலிருந்த துண்டை வீசி எறிந்துவிட்டு எழுந்த அர்ஜுன் “யு ட்ரைவ் மீ க்ரேஸி அதி! எஸ்.. எல்லாத்துக்கும் நீதான் காரணம்! இப்போ இதுக்கு கூட நீதான் காரணம்.” என்றுவிட்டு அவளது பின்னந்தலையில் கையை வைத்து.. இழுத்து அவளது இதழ்களில் அழுத்த தனது வலிய உதடுகளை கலக்க விட்டான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8


மீரா ஆதித்யாவை காதலிப்பதைத் தெரிந்து கார்த்திக் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ஆனால் ஆதித்யாவின் நிலைக் கண்டு வருத்தமுற்றான். மீராவின் காதலை ஆதித்யா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுதலையும் வைத்தான். யோசனையுடன் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த கார்த்திக்கின் செல்பேசி ஒலித்தது. எடுத்து அழைப்பை ஏற்றதும், மீரா “கார்த்திக், நான் கார் பார்க்கிங்கில் வெயிட் செய்கிறேன். நீ போகும் முன் எனக்கு இன்பார்ம் செய்..! நான் கூடப் பேசணும்.” என்றாள்.

கார்த்திக் “நான் வெளியே தான் இருக்கிறேன் மீரா..! இப்பவே அங்கே வருகிறேன்.” என்றான்.

மீரா “என்ன ஆதி கூடப் போகலையா..!” என்றுத் திகைப்புடன் கேட்டாள்.

கார்த்திக் “இல்லை மீரா! ஆதி ரெஸ்ட் எடுக்கணும் என்றுப் போக சொல்லிட்டான். அவன் ரூமிற்கு போன பிறகு தான் வருகிறேன்.” என்றான்.

மீரா “ஓ..! ஓகே அப்போ இங்கிருக்கிற காபி கேஃபில் மீட் செய்யலாம்.” என்று அழைப்பைத் துண்டித்தாள். மீரா அங்கு செல்வதற்குள் கார்த்திக் அங்கு அவளுக்காக காத்திருந்தான்.

இருவரும் எதிர் எதிராக அமர்ந்ததும்.. மீரா நேரடியாக விசயத்திற்கு வந்தாள்.

“கார்த்தி! ஆதித்யாவை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் என்று ஒருதரம் சொன்னீங்க, இன்னொரு தரம் அவன் மாறி விடுவான் என்றுச் சொன்னீங்க..! அப்போ முதலில் எப்படியிருந்தான்? ஏன் மாறிவிட்டான்? ஏனென்றால் ஆதித்யாவை நான் லவ் செய்கிறேன் என்று ரியலையஸ் செய்த போது பிரான்கா சொல்கிறேன். ஆதித்யா போன்ற ஒரு ஆளிடமா எனக்கு லவ் வரணும்.. என்றுத்தான் வருத்தப்பட்டேன். ஆனால் நீங்க சொல்லியதை வைத்தும், பார்த்ததை வைத்தும் பார்க்கும் போது.. நான் ரைட்டனான பர்ஷனை தான் லவ் செய்திருக்கிறேனோ என்றுச் சின்ன சந்தோஷம் வருகிறது. ப்ளீஸ் சொல்லுங்க..” என்றாள்.

கார்த்திக் “என்ன பார்த்தாய்..?” என்றுக் கேட்டான்.

மீரா “ஆதித்யா முரடன் தான் என்றாலும், என்கிட்ட ஆரம்பத்தில் இருந்தே அவன் கண்ணியமாக தான் பிஹெவ் செய்தான். அவனை லவ் செய்துட்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்பது தான்.. அவனின் கோபமே..! அதே மாதிரி இப்போ உனக்காக வெயிட் செய்துட்டு இருந்த போது.. ஒரு பெண்ணுடன் பேசியதைப் பார்த்தேன். அந்த பெண்ணுடைய தோற்றத்தை வைத்துப் பார்த்தால்.. இங்கேயே யாரும் அந்த மாதிரி பெண் கூடப் பேச மாட்டாங்க, ஆனால் எந்த தயக்கமுமின்றி நார்மலாக அவன் பேசிட்டு இருந்தான். அப்பறம் ஒருத்தனின் காலைத் தட்டிவிட்டான் தானே..! நானும் வீணாக வம்பு செய்கிறான் என்று நினைத்தான். ஆனால் காரில் வந்து அமர்ந்ததும் விளக்கம் சொன்னதைக் கேட்டு வியப்பாக தான் இருந்தது. இப்போ கூட உன்னை குனிந்து வாலெட்டை எடுக்க சொல்லிட்டு… சரி அதை விடுங்க! ஆனால் முதலில் நாங்க பார்த்த போது.. என் மேல் காபி கொட்டியதிற்கு காரணம்..” என்றுச் சொல்லிக் கொண்டே வந்தவள், சிறு குன்றலுடன் “நான் ஆதித்யாவை தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதனால் தான் என் மேல் காபியை கொட்டியிருக்கிறான் என்றுத் தோன்றுகிறது.” என்று அசடு வழியவும், கார்த்திக் சிரித்தான்.

பின் கார்த்திக் “மீரா நீ சரியான ஆளைத் தான் லவ் செய்திருக்கிற..! சொல்ல போனால் நீ லக்கி என்றுத் தான் சொல்லணும். நீ லவ்வராக கிடைத்தால் அவனும் லக்கி தான் என்று நான் சொல்வேன். என்னை விட அவனுக்கு ரொம்ப சப்போர்ட்டாக பேசுகிறே..” என்கவும், மீரா நாணத்துடன் சிரித்தாள். பின் கேள்வியாய் அவனது முகத்தை ஏறிடவும்.. கார்த்திக் “அவனைப் பற்றி எனக்கு தெரிந்ததைச் சொல்கிறேன் மீரா! ஏனெனில் எனக்கு கூடத் தெரியாத பல விசயங்களை உள்ளடங்கியவன், அவன் இப்படி விரக்தியாக இருக்க அவைகள் தான் காரணம்! அவன் என் சிஸ்டரோட காலேஜ்மேட்..” என்றான்.

அவர்கள் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த மீரா.. திகைப்படைந்தாள். கார்த்திக் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தான்.

“நான் மெக்கனிக்கல் என்ஜீனியரிங் முடிச்சுட்டு வீட்டில் இரு வருடங்கள் சும்மா தான் இருந்தேன். அப்பொழுது தான் ஆதித்யாவை முதன் முதலாக பார்த்தேன். என் சிஸ்டர் காவ்யா எம்.பி.ஏ. படிச்சுட்டு இருந்தாள். அவளுக்கும் எனக்கும் இரண்டு வருஷம் தான் டிப்ரன்ஸ்! என் அப்பா ரியல் எஸ்டேட் பிஸினஸில் கொடிக் கட்டிப் பறந்துக் கொண்டிருந்தார். என் சிஸ்டர் பிறந்த பின் தான் வசதிகள் வந்ததால் என் சிஸ்டர் என் வீட்டில் ரொம்ப செல்லம்! எனக்கும் செல்லம் தான்..! நாங்க சண்டையும் போடுவோம். நிறையா விசயங்களைப் பேசுவோம். அவளது காலேஜ் பற்றிய பேச்சில் அதிகம் அடிப்படும் பெயர் ஆதித்யா தான்..! அவனைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டாள். அவளோட ஏஜ் அப்படி என்று நானும் விட்டுட்டேன். ஒருநாள் அவளோட காலேஜ்ஜிற்கு போக வேண்டியிருந்தது. அப்போ கூட எனக்கு ஆதித்யாவின் நினைவு வரவில்லை. காவ்யாவுடன் நின்றுட்டு இருந்தப்போ திடீரென காவ்யா என்னைப் பிடித்து உலுக்கினாள்.

“கார்த்தி! கார்த்தி! அங்கே பாரு..” என்றுக் கத்தினாள்.

கார்த்திக் “என்னடி!” என்றுச் சலித்துக் கொண்டான்.

“அங்கே பாரு..! அவன்தான் ஆதித்யா..” என்று குதுகலத்துடன் ஒரு இடத்தில் சுட்டிக்காட்டினாள்.

ஆதித்யாவின் பெயரைச் சொன்னதும் கார்த்திக்கும் ஆர்வத்துடன் காவ்யா சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தான்.

கிரிக்கெட் மைதானத்தில் சிலர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதில் ஆதித்யா யார் என்று அவனுக்கு எப்படித் தெரியும்! அவர்களில் யார் என்றுக் கேட்க காவ்யாவிடம் திரும்புகையிலேயே.. பீல்டிங் செய்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் அவர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு.. பின் ஆட்டத்தில் கவனம் செலுத்தினான். காவ்யா சொல்லாமலேயே அவன்தான் ஆதித்யா என்றுத் தெரிந்துவிட்டது. காவ்யா ‘ஆதித்யா’ என்று புராணம் பாடுவதில் தவறில்லை என்றே தோன்றியது. அந்தளவிற்கு உடற்பயிற்சி செய்த உடற்கட்டுடன் ஆள் மாடலிங் செய்யலாம் என்கிற அளவிற்கு இருந்தான். தோற்றத்தைக் கண்டு தன் தங்கை வீழ்ந்து விடக் கூடாது என்று கார்த்திக் எச்சரிக்கையாக இருந்தான். எனவே காவ்யா ஆதித்யாவின் பீலிட்டிங் திறனைப் புகழ ஆரம்பித்ததும்.. காதில் வாங்காதவனாய், தான் இன்னொரு இடத்திற்கு போக வேண்டும் என்றுக் காரணம் காட்டி.. அவளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வந்தவன், வந்த வேலை காரணமாக அலுவலகத்தினரிடம் பேசிவிட்டு காவ்யாவிடம் விடைப் பெற்றான். விடைப் பெறும் பொழுது..

“காவ்யா! சும்மா சொல்லக் கூடாது.. அந்த ஆதித்யா பார்க்க நல்லா தான் இருக்கிறான். இதை நான் ஒத்துக்கிட்டேன் தானே! அப்போ நான் சொல்வதையும் ஒத்துக்கொள்..! நீ மட்டும் தான் ஆதித்யா மேல் க்ரேஸா இருக்கிறே என்று நினைச்சுராதே..! உன்னை மாதிரி நிறையா பேர் இருப்பாங்க, ஆதித்யாவின் காதல் ஜாக்பாட் இல்லை..! அதிர்ஷ்டசாலிகளுக்கு கிடைப்பாங்க என்பதற்கு..! லவ்விற்கு மீனிங்கே வேற..! அதனால் ஜாக்கிரதையா இரு..! ஆனால் என்ஜாய் செய்..” என்று முறுவலித்துவிட்டு சென்றான்.

திடுமென கார்த்திக் இதைப் பற்றிப் பேசவும் காவ்யா அமைதியாக கேட்டுக் கொண்டு நின்றாள். அவளது தலையைச் சிலுப்பி விட்டு வகுப்பறைக்கு போக சொன்னவன், கார் நிற்க வைத்த இடத்திற்கு சென்றான். காரின் கதவைத் திறக்கையில் “ஹலோ..” என்ற கத்தலில் திரும்பிப் பார்த்தான். ஆதித்யா தான் அவனை நோக்கி ஓடி வந்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் கார்த்திக்கிற்கு எரிச்சல் வந்தது. தனது தங்கையை பிடித்திருக்கு என்றுத் தன்னிடமே சொல்வானோ என்று எரிச்சல் கொண்டான். அவன் அவ்வாறுச் சொன்னால்.. தன்னிடம் அறை வாங்குவது நிச்சயம் என்றுச் சற்றுக் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

வேகமாக ஓடி வந்த ஆதித்யா கார்த்திக்கின் அருகில் வந்ததும்.. அங்கிருந்து ஓடி வந்ததால் முழங்காலில் கையை வைத்து மூச்சு வாங்கினான். கார்த்திக் பொறுமையாக காத்திருந்தான். விரைவிலேயே நிமிர்ந்த ஆதித்யா “நீங்க காவ்யாவோட ரிலேட்டிவ்வா?” என்று வினாவினான்.

கார்த்திக் ஆமோதிப்பாய் தலையை ஆட்டவும், ஆதித்யா “ப்ளீஸ் காவ்யா கிட்ட சொல்லுங்க, நான் பலமுறை நோ சொல்லிட்டேன். ஆனால் அவள் அடிக்கடி என்கிட்ட லவ் ப்ரோபோஸ் செய்துட்டே இருக்கா..!” என்றான்.

கார்த்திக்கிற்கு இந்த விசயம் அதிர்ச்சியாகவும், சிறு அவமானமாகவும் இருந்தது. அதற்கு ஒரு அண்ணனாக கார்த்திக்கிற்கு கோபம் தான் வந்தது. எனவே ஆதித்யாவிடம் “இதில் உங்களுக்கு பெருமையாக இருக்கில்லை. ஒரு பெண் உன் பின்னாடி சுற்றுவதை எத்தனைப் பேரிடம் டம்பட்டம் அடித்தாய்..?” என்றுக் குறையாத கோபத்துடன் கேட்டான்.

அவனைப் புரியாது பார்த்த ஆதித்யாவிற்கு பின்பே கார்த்திக் பேசியது புரிய முகத்தில் ஏமாற்றம் பரவியது. பின் தனது முகத்தைச் சரியாக வைத்துக் கொண்டு.. “ஒகே ஸாரி ஸார்! நீங்க ரைட்டான பர்ஷன் என்று தப்பாக நினைத்து சொல்ல வந்துட்டேன்.” என்றுவிட்டு திரும்பி நடந்தான்.

ஆதித்யாவின் முகத்தில் நொடிப்பொழுது தோன்றிய ஏமாற்றத்தைக் கண்டு கார்த்திக்கிற்கு தான் ஒரு மாதிரியாகி விட்டது. பின்போ அவன் எதோ தன்னிடம் பேச வந்தது தவறு என்பது போல் சொல்லிவிட்டு செல்லவும், அவனைப் பார்த்து கார்த்திக் புன்னகைத்தான்.

காரில் ஏறியமர்ந்து வீட்டிற்கு காரை செலுத்திய கார்த்திக்கிற்கு ஆதித்யா சொல்ல வந்ததை சரியாக கேட்காமல் விட்டுவிட்டோமோ என்ற குற்றவுணர்வு ஏற்பட்டது. அவனது தங்கை காவ்யாவும், இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தெளிவாக பேசிவிட்டு வந்துருக்க வேண்டுமோ என்ற எண்ணமும் ஏற்பட்டது.

எனவே மீண்டும் காரை திருப்பினான்.

அவன் சென்ற பொழுது.. வகுப்பு நேரம் முடித்து செல்லும் நேரமாக இருந்தது. காவ்யா அவளது ஹோன்டாவில் செல்வது தெரிந்தது. காவ்யாவிடம் பேசும் முன் ஆதித்யாவிடம் பேசுவது சரியே எனப்படவே.. கல்லூரி வாளகத்திற்குள் காரை விட்டான். காரை நிறுத்தியவன், பைக் எடுக்க வந்த ஒரு மாணவனிடம் ஆதித்யா சென்று விட்டானா என்றுக் கேட்டான். அவன் ஆதித்யா செல்லும் கார் அங்கு நிற்பதைச் சுட்டிக்காட்டி “இன்னும் போகவில்லை போல.. அது அவனோட கார் தான்..” என்றுவிட்டுச் சென்றான். கார்த்திக் அந்த காரிடம் சென்ற பொழுது.. அங்கே டிரைவர் இருப்பது தெரிந்தது. அவர் ஆதித்யாவிற்காக காத்திருப்பது தெரிந்தது. இந்த பெரிய வாளகத்தில் தேடுவதற்கு பதில்.. எப்படியும் இங்கே தானே வருவான் என்று அவனும் அங்கு காத்திருந்தான்.

வெகு நேரமாகியும் ஆதித்யா வராதிருக்கவும், அதற்குள் குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்த ஓட்டுனரை எழுப்பி கேட்டான். கார்த்திக் எழுப்பியதும்.. சிறு எரிச்சலுடன் எழுந்த அவர் “ஸார் எப்போ வந்தால் என்ன! வரும் போது கூப்பிட்டு போகணும்.. அவ்வளவுத்தான்!” என்றுவிட்டு திரும்பி படுத்துக் கொண்டார். அவரின் பதில் கார்த்திக்கிற்கு அதிர்ச்சி அளித்தது. இனி இவரிடம் கேட்டு பயனில்லை என்று அவனே தேடிப் பார்க்க சென்றான். தன்னிடம் பேசிவிட்டு ஆதித்யா மைதானம் இருக்கும் திசையை நோக்கி சென்றது நினைவு வரவும், அங்கு சென்றான்.

மைதானத்தில் சிலரே விளையாடிக் கொண்டிருக்க.. அதில் ஆதித்யாவை காணாது திகைத்தான். ஒருவேளை வகுப்பறைக்கு சென்றிருப்பானோ என்று நினைத்த கார்த்திக், இப்படி அவனைத் தேடுவதற்கு காவ்யாவிடமே ஆதித்யா சொல்வது உண்மையா என்றுக் கேட்டிருக்கலாம் என்று எண்ணி திரும்பிய பொழுது ஆதித்யாவை பார்த்தவன், திகைத்தான்.

ஏனெனில் மைதானத்தின் ஒரு மூலையில் இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டு கையில் வைத்திருந்த பந்தினை அருகில் இருந்த சுவற்றில் அடித்துப் போட்டு பிடித்துக் கொண்டிருந்தான். அவன் விளையாடிக் கொண்டிருந்தால் அவனுக்கு வித்தியாசமாக தெரிந்திருக்காது. ஆனால் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு அமைதியாக இருப்பதைப் பார்க்க ஒரு மாதிரியாக இருக்க.. அவன் இருக்குமிடத்திற்கு சென்றான்.

கார்த்திக் “ஆதி..” என்று அழைக்கவும், திரும்பி பார்த்தவன்.. அவனுக்கு பின்னால் பார்த்தான். கார்த்திக்கும் எதைப் பார்க்கிறான் என்றுத் தனக்கு பின்னால் பார்த்தான். ஆதித்யா “என்னை அடிக்க அடியாட்களை கூப்பிட்டு வந்திருப்பீங்க என்று நினைத்தேன்.” என்றுவிட்டு மீண்டும் பந்தை சுவற்றில் அடித்துப் பிடிக்க ஆரம்பித்தான்.

ஆதித்யா கூறியதைக் கேட்டு சிரித்த கார்த்திக் “ஒகே ஆதித்யா! என் தங்கை உன்கிட்ட அப்படி நடந்துக் கொள்வது நிஜமா..? இல்லை அவள் க்ரஷால் ஓவரா எக்ஸைட்டா பேசுவதைத் தவறா நினைச்சுட்டு பேசுகிறாயோ?” என்றுக் கேட்டான்.

அதற்கு ஆதித்யா பந்தை அடித்து பிடித்தவாறே “ஸாரி ஸார்! நான் சொல்ல வந்த போது நீங்க கேட்கிற மூடியில்லை. ஆனால் இப்போ நீங்க கேட்கும் போது எனக்கு சொல்கிறே மூடியில்லை.” என்றான்.

கார்த்திக்கிற்கு ஏனோ சிரிப்பது தான் வந்தது.

ஆனாலும் “நீ சொன்னது என் சிஸ்டரை பற்றி..! அப்போ எனக்கு கோபம் வருவது நியாயம் தானே..!” என்றான்.

அதற்கு ஆதித்யா “நீங்க கோபப்பட்டு என்னைத் திட்டியிருந்தாலோ ஏன் அடித்திருந்தலோ எனக்கு ஒகே தான்..! ஆனால் நீங்க என்னைப் பற்றித் தப்பாக சொன்னீங்க தானே..!” என்கவும், கார்த்திக் தழைந்து போனான்.

“ஒகே ஸாரி..! இப்போ கேட்கிறேன் சொல்லு ஆதித்யா..” என்றான்.

ஆதித்யா “சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு..” என்றுத் தோளைக் குலுக்கினான்.

கார்த்திக் சிரித்தவாறு அந்த நீண்ட இருக்கையில் அவனுக்கு அருகே அமர்ந்தான்.

“லெட்ஸ் பீ பிரெண்டஸ்” என்று கரத்தை நீட்டவும், திரும்பி அவனைப் பார்த்தவன், “என்னதிது முதல் மீட்டிங்கில் காதல் என்பது போல் முதல் மீட்டிங்கில் பிரெண்ட்ஸ்ஷிப்பா?” என்றுச் சிரித்தவன், தொடர்ந்து “என்னோட பிரெண்ட்ஸை நான் வாடா போடா என்றுத்தான் கூப்பிடுவேன்.” என்றான்.

கார்த்திக் “காவ்யா! என்னை விட இரண்டு வயது சின்னவள்..! அவ அப்படித்தான் கூப்பிடுவா..! சோ எனக்கு பிராப்பளமில்லை.” என்றான்.

அதற்கு திரும்பி அவனது கரத்தைப் பற்றி குலுக்கி “என் பிரெண்ட்டை நான் பேர் சொல்லியும் கூப்பிடுவேன்.” என்று அவனைக் கேள்வியாக பார்க்கவும், கார்த்திக் தனது பெயரை சொன்னான்.

பின் நன்றாக கார்த்திக்கின் புறம் திரும்பி அமர்ந்த ஆதித்யா “நான் அப்போது சொன்னது தான் கார்த்திக்! காவ்யா என்கிட்ட லவ் யு என்றுச் சொல்லிட்டே இருக்கிறாள். நானும் முதலில் க்ரஷ் காரணமா ஓவரா ரியாக்ட் செய்கிறாள் என்றுக் கண்டுக்காமல் இருந்தேன். என்கிட்ட வந்து ப்ரோபோஸ் செய்த போது, ஸாரி என்று மறுத்துட்டேன். பிறகும் வந்த போதும் பொறுமையாக எடுத்துச் சொல்லித்தான் மறுத்தேன். ஆனால் அவள் தொடர்ந்து வந்துட்டே இருந்தாள். அதனால் நான் கண்டுக்காமல் விட்டுட்டேன். ஆனால் நான் அமைதியாக இருக்கவும், அதையே அட்வான்டேஜ்ஜா எடுத்துட்டு.. இந்த காலேஜ் புல்லா நான் அவளைக் காதலிக்கிறேன் என்று செய்தியைப் பரப்பி விட்டுட்டாள். இது பெரிய விசயமாக முடிந்துவிடும். அதனால் ப்ளீஸ் காவ்யா கிட்ட சொல்லி விட்டுவிடச் சொல்லு..” என்றான்.

கார்த்திக் “க்ரஷை லவ் என்று நினைச்சுட்டு காவ்யா இப்படி ஓவராக ரியாக்ட் செய்வது தப்புத்தான்! ஆனால் தீவிரமான லவ்வாக இருந்தால்.. அவளை விட்டுவிடச் சொல்வது முடியாத விசயம்! ஏனென்றால் அவ ரொம்ப பிடிவாதக்காரி..! அதனால் அவளையும் விசாரிக்கணும்.” என்றான்.

அதற்கு ஆதித்யா உதட்டை வளைத்து சிரித்தவாறு “அவ உண்மையா லவ் செய்திருந்தால்.. நான் ஃபீல் செய்திருப்பேன். ஆனால் அவகிட்ட இருந்து அந்த ஃபீலே நான் உணரலை.” என்றான்.

கார்த்திக் “உனக்கு அவள் மேல் விருப்பமில்லை என்பதால் அவளோட காதலை உணர்ந்திருக்க மாட்டே..” என்கவும், ஆதித்யா சிரித்தான். பின் “கார்த்திக்! அவள் கிட்ட காதல் இல்லை என்பதால் தான் அவளோட ப்ரோபோஸை என்னால் மறுக்க முடிந்தது.” என்று மீண்டும் சொன்னான்.

கார்த்திக் ஆதித்யாவிடம் இருந்து வந்த தீர்க்கமான பேச்சைக் கேட்டு திகைத்துத்தான் போனான். “ஒகே! அவள் கிட்ட பேசிப் பார்க்கிறேன். நானும் அது க்ரஷாக இருக்கணும், அவளும் மனம் மாறணும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் அவள் மனம் மாறவில்லை என்றால் உன் பதில் என்ன..?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

அதற்கு ஆதித்யா “நான் இத்தனைத்தரம் மறுத்தும் அவள் மனதை மாற்றவில்லை என்றால்.. அவளுக்கு உண்மையான காதல் என்றுத்தானே அர்த்தம், அப்படிப்பட்டவளை விட நான் என்ன இடியட்டா..! அவள் கிட்ட இருந்து எனக்கும் அந்த லவ் ட்ரான்பர்மெஷன் ஆகட்டும்.” என்றுச் சிரித்தான்.

உடனே கார்த்திக் “அப்போ உனக்கு முதல் எதிரி நான்தான்..” என்று மார்பிற்கு குறுக்கே கையைக் கட்டிக் கொண்டு ஆதித்யாவை முறைக்க முயன்றான். ஆதித்யாவிற்கும் சிரிப்பு தான் வந்தது.

கார்த்திக் தொடர்ந்து “பின்னே இந்த வயதில் படிப்பு தானே முக்கியம், அதுமட்டுமில்லாமல் நீ எப்படிப்பட்டவன், உன் பேமலி பேக்ரவுண்ட் பற்றியெல்லாம் விசாரித்து.. எனக்கு திருப்தியளிக்க வேண்டும் தானே..” என்றுச் சிரித்தான்.

ஆதித்யா “உன் சிஸ்டர் கூட எனக்கு செட்டாகுமோ என்னவோ.. ஒரு பிரெண்டாக உன் கூட நல்லா செட்டாகுது.” என்று அவனுக்கு ஐஃபை கொடுத்தான்.

பின் கார்த்திக் “உன் பேமலி பேக்ரவுண்ட் எக்னாமிக்ஸை பொருத்தவரை பெரிது என்றுத் தெரியும் ஆதி..” என்கவும், ஆதித்யா சிரித்தவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

கார்த்திக் “யாருக்காவது வெயிட் செய்கிறாயா..?” என்றுக் கேட்டான்.

ஆதித்யா “இல்லை..” என்கவும், “பின்னே வீட்டிற்கு போகலையா..” என்றுக் கேட்டான்.

அதற்கு ஆதித்யா “அங்கே போனாலும்.. இப்படித் தனியாக தான் என் ரூமில் உட்கார்ந்திருப்பேன். அதற்கு இங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகிறேனே..” என்றான்.

ஆதித்யா பேசியது கார்த்திக்கிற்கு புரியவில்லை. கார்த்திக்கின் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்து சிரித்த ஆதித்யா “என் வீட்டில் எல்லாரும் பிஸி அதைத்தான் அப்படிச் சொன்னேன்.” என்றான்.

கார்த்திக் வீட்டிற்கு செல்ல எழவும் ஆதித்யாவும் எழுந்தான். இருவரும் விடைப்பெற்றுக் கொண்டு சென்றார்கள். கார்த்திக் முதலில் விசாரித்த ஆதித்யாவின் கார் ஓட்டுனர் தற்பொழுது ஆதித்யாவை பார்த்ததும் அடித்துபிடித்து எழுந்து கூழை கும்பிடு போட்டு காரை எடுப்பதைப் பார்த்து சிரித்தவாறு அவனும் காரில் ஏறினான். வீட்டிற்கு சென்றதும் காவ்யாவை தனியாக அழைத்த கார்த்திக் ஆதித்யாவை காதலிக்கிறாயா என்றுக் கேட்டான். அவளும் குதுகலத்துடன் ஆம் என்றுத் தலையை ஆட்டினாள். ஆனால் கார்த்திக் ஆதித்யா மறுத்தததைச் சொல்லி எச்சரிக்கவும், காவ்யா “ஆதியும் என்னைக் காதலிக்கிறான் கார்த்திக்! அதனால் தான் மறுக்கிறான்னே தவிர வெறுக்கலை. சீக்கிரமே மறுப்பு காதலாக மாறும்.” என்றுச் சிரித்தாள்.

ஆனால் ஆதித்யா பொறுமையாக இருப்பதாகவும், அமைதியாக இருப்பதைச் சொன்னது நினைவிற்கு வந்தது. அதற்கு பின் ஏதேனும் காரணம் இருக்குமோ என்றுத் தோன்றியது. எனவே காவ்யாவை எச்சரித்தவன், “தொடர்ந்து மறுப்பு வந்த இடத்தில் வெறுப்பு தோன்றலாம், அந்த வெறுப்பைப் பார்ப்பதற்கு முன் நீயே விலகிவிடுவது உனக்குத்தான் கௌரவம் காவ்யா!” என்று கடைசியாக எச்சரித்தவன், .அதன் பின் அதைப் பற்றிப் பேசவில்லை. தொடர்ந்து மறுப்பு தெரிவித்தால்.. அது அவளது பிடிவாதத்தைத் துண்டியது போல் ஆகிவிடும் என்று எண்ணினான். எனவே அவர்களது இயல்பிற்கு என்ன நடக்குமோ நடக்கட்டும் என்று விட்டுவிட்டான். இருவரின் மேலும் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. என்ன விசயமென்றாலும் அவனிடம் சொல்வார்கள் என்று நம்பினான். ஒரு பக்கம் ஆதித்யா மற்றும் கார்த்திக்கின் நட்பு தொடர்ந்தது.

வகுப்பு நேரம் முடிந்ததும் கார்த்திக்கின் தனது நண்பர்கள் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வருவான், ஆதித்யா தனது நண்பர்கள் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வருவான், அருகில் எங்காவது செல்வார்கள். ஆனால் நண்பர்கள் கோவா, பெங்களூர், காஷ்மீர் என்றுத் திட்டம் போட்டால்.. ஆதித்யா கழன்றுக் கொள்வான், நண்பர்களுடன் இருக்கும் வரை கலகலவென பேசும் ஆதித்யா வீட்டிற்கு செல்லும் போது மட்டும் அமைதியாகி விடுவான்.

ஒருநாள் கார்த்திக்கும் ஆதித்யாவும் மட்டும் சந்தித்துக் கொண்ட பொழுது ஒரு அண்ணனாக... காவ்யா இன்னும் அவனிடம் காதலைச் சொல்கிறாளா என்றுக் கேட்டான். அதற்கு சிரித்தவாறு ஆதித்யா “நான் என்ன பதில் சொல்லட்டும்!” என்று அவனிடமே கேட்டான்.

கார்த்திக் “உனக்கு என்ன தோன்றுதோ..! அதைச் சொல்லு! ஆனால் மறுத்தாய் என்றால் நாசுக்கு பார்க்காமல் ஸ்ட்ரான்ங்கா மறுத்திரு! அவள் உன்னை நினைத்துக் கொண்டே இருக்க போகிறாள்.” என்று வருந்தினான். கார்த்திக் உள்ளுர ஆதித்யா தனது தங்கைக்கு வாழ்க்கைத்துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினான். ஆனால் இது படிக்கிற காலம் என்பதால் அமைதி காத்தான். கார்த்திக் கூறியதற்கும் ஆதித்யா சிரித்தவாறு சரி என்பது போல் தலையசைத்தவன், “இப்படியொரு மச்சானுக்காக ஒத்துக்கலாம் போல இருக்கு..” என்றுச் சிரித்தான்.

அதற்கு கார்த்திக் இரண்டு அடிப் போட்டு “வேண்டாம்டா சாமி! அப்பறம் காவ்யாவோட முதல் எதிரி நானாக தான் இருப்பேன்.” என்றான்.

தொடர்ந்து நண்பர்கள் கேலியாக பேசிக் கொண்டார்கள். ஆதித்யா மேலும் சிரித்தவாறு “காவ்யாவோட லவ்வை நான் அக்செப்ட் செய்திக்கிறேன். ஆனால் ஒரு கண்டிஷன் கார்த்தி! என்னை வீட்டோட மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ளணும்.” என்றுச் சிரித்தான். ஆனால் கார்த்திக் சிரிக்கவில்லை.

கார்த்திக் “நான் உன்கிட்ட ரொம்ப நாள் கேட்கணும் என்று இருந்தேன் விருப்பம் இருந்தால் சொல்..” என்று பீடிகையுடன் தொடங்கினான். “நீ உன் வீட்டில் அவ்வளவு ஒட்டுதல் இல்லாமல் பேசுகிறாய். நாம் பிரெண்டாகிய இந்த ஒரு வருடத்தில் நீ அவ்வளவாக உன் பேமலியை பற்றி பேசியதில்லை. வீட்டிற்கும் கூட்டிட்டுப் போனதில்லை. அதே மாதிரி அவர்களை விட்டும் வந்ததில்லை. டெய்லி வீட்டிற்கு போய் விடுகிறாய். இது நான் சொல்லும் போது சாதாரண விசயமாக தான் தெரிகிறது. பெரிய இடம் அதனால் அப்படித்தான் கட்டுப்படாக இருப்பாங்களா..! உன்னை மாதிரி ஒரு பர்ஷனுக்கு இது ரொம்ப கஷ்டமாச்சே!” என்றான்.

ஆதித்யா சிறு புன்னகையுடன் திரும்பி “சரியாக தான் எல்லாம் சொல்லியிருக்கிறே! ஆமாமில்லை சாதாரணமாக விசயம்தான்! ஆனால் எனக்கு ஏன் வித்தியாசமாக படுகிறது என்றுத்தான் தெரியலை.” என்றுத் தோள்களைக் குலுக்கினான்.

பின் கடலையை வெறித்தபடி “நான் சின்ன வயதில் அம்மா செல்லம், அவங்க கூடவே ஒட்டிட்டு சுற்றுவேன். அக்கா அண்ணா எல்லாம் கொஞ்சம் பெரியவங்க, ஸ்கூல் முடிந்து வந்தால் ஸ்பெஷல் கிளாஸ் என்று பிஸியாகிருவாங்க, அதனால் நான் அம்மா கூட ஒட்டிட்டு சுற்றுவேன். ஆனால் எனக்கு ஆறு வயதிருக்கும் போது.. அவங்க தங்கை சாந்தி சித்தி கிட்ட என்னைக் கொடுத்து கொஞ்ச நாள் அவங்களை வளர்க்க சொல்லிட்டாங்க, அவங்க பேமலி ஜப்பானில் இருக்கிறாங்க, எனக்கு இன்னும் நல்லா நினைவிருக்கு, நான் போக மாட்டேன் என்று அம்மாவோட கழுத்தைக் கட்டிட்டு அழுதேன். அம்மாவும் ரொம்ப அழுந்தாங்க, அழுதுட்டே தான் என்னை சித்தி கிட்ட கொடுத்தாங்க, சாந்தி சித்திக்கும் ராகவன் சித்தாப்பாவிற்கும் குழந்தைகள் இல்லை. ஜப்பானுக்கு போன நான் அம்மா நினைவில் அழுத்துட்டே இருந்தேன். அவங்க தான் என்னை கொஞ்சி சமாதானப்படுத்துவாங்க, அவங்க பெரிய டிப்பார்மென்டால் ஸ்டோர் வைத்திருக்கிறாங்க. என்னைத் தனியாக வீட்டில் விட்டுட்டு போக மனமில்லாமல் என்னையும் கூட்டிட்டு போவங்க, அங்கே என்னை ஆபிஸில் ரூமில் விட்டுட்டு கஸ்டமரை பார்க்க போயிருவாங்க, அவங்களோட ஆபிஸ் ரூம் பர்ஸ்ட் ப்ளோரில் இருக்கும். புல்லா கண்ணாடி ரூமில் ஆனது. அதனால் அதன் வழியாக கடைக்கு கீழ்தளத்திற்கு வருவர்களை வேடிக்கை பார்த்தவாறு பொழுதைக் கழித்தேன். ஜப்பான் ஸ்கூலில் சேர்த்தி விட்டாங்க, ஆனால் அந்த மொழியைப் புரிந்து அந்த சின்ன வயதில் என்னால் படிக்க முடியலைன்னு விட்டுட்டாங்க, அவங்க கூட கொஞ்ச நாள் இருக்கலாம் என்பது நான்கு வருஷமாகிருச்சு, அந்த நான்கு வருஷமும் எனக்கு வேலை வேடிக்கை பார்ப்பது தான்! அப்பறம் சாந்தி சித்தி கர்ப்பமானதும், அங்கே பார்த்துக் கொள்ள முடியாமல் என்னை என் வீட்டிலும்.. சாந்தி சித்தியை பாட்டி வீட்டிலும் விட்டுட்டு சித்தப்பா திரும்பி ஜப்பான் போயிட்டார். வீட்டுக்கு வந்தால் நான்தான் அங்கே புதுசா தெரிந்தேன். நான் பழகுவதற்குள்.. என்னை போர்டிங் ஸ்கூலில் விட்டாங்க, அங்கே போனதும்.. புது நண்பர்கள் கிடைத்ததும் நான் ஆளே மாறினேன். அங்கே ஒரு நாலு வருஷம் இருந்துட்டு வந்தால்.. இங்கே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தாங்க..” என்றவனிடம் சிறு அமைதி ஏற்பட்டது.

பின் பெருமூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு தொடர்ந்தான். “ஆனால் அவங்களை ஆட்டிவிக்கும் கயிறு என் அப்பா கிட்ட இருந்தது. சரி என்று நானும் ஒரு வாழ்க்கை வாழ்ந்தேன். ஆனால் என்னை ஆட்டிவிக்கும் கயிற்றை இன்னும் என் அப்பாவிற்கு தரலை. தரவும் மாட்டேன். ஐயம் தி ஹீரோ, ஐயம் தி கிங், ஐயம் தி பாஸ்..” என்றுச் சிரித்தான்.


எவரின் கைப்பாவை ஆக மாட்டேன் என்று சூளுரைத்தவனின்

சூழ்நிலை என்னவோ.. கைதியாகி நிற்கிறான்..!

கைதி எனில் தண்டனையோ…!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9


ஆதித்யா மேம்போக்காக ஆனால் அவனது வீட்டில் நடந்ததைச் சொல்லியதைக் கேட்ட கார்த்திக்கிற்கு ஏனோ பல விசயங்களை அவன் நாசுக்காக தவிர்த்து விட்டது போல் இருந்தது. ஆனால் இந்தளவிற்கு இறங்கி வந்து சொன்னதே பெரிய விசயமாகப் பட தன் நண்பனை அணைத்துக் கொண்டான். அதன்பின் கார்த்திக் அவனது வீட்டைப் பற்றிக் கேட்கவில்லை.

ஒருநாள் காவ்யா கார்த்திக்கை தனியாக அழைத்து ஆதித்யாவை திமிர் பிடித்தவன் என்றுத் திட்டித் தீர்த்தாள். இனி அவன் பின்னாடி போகப் போவதில்லை என்றும் அவனது சங்காத்தமே வேண்டாம் பொருமினாள். நண்பன் அவளிடம் தவறாக நடந்துக் கொண்டானோ என்றுச் சிறு அச்சமும், கோபமும் தோன்ற அதை வெளிப்படையாக கேட்டான். ஆனால் காவ்யாவோ அவன் தன்னை நெருங்க முடியாது தான் அந்த விசயத்தில் நெருப்பு என்கவும். ஒரு அண்ணனாக கார்த்திக்கிற்கு மகிழ்வாக தான் இருந்தது. ஆனாலும் திடுமென ஆதித்யாவின் மேல் குற்றம் சாட்டுவதற்கு காரணத்தைக் கேட்டான். அதற்கு காவ்யா தன்னை இத்தனை நாட்கள் வேண்டுமென்றே அலைய வைத்தது தான் காரணம் என்றுவிட்டுச் சென்றாள். கார்த்திக்கிற்கு சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.

ஆதித்யாவா தன் பின்னால் அலைய சொன்னான். முன்பே மறுத்தவன் தானே தற்பொழுது காவ்யாவின் பொறுமை போனதிற்கு அவன் என்ன செய்வான், ஆனால் ஆதித்யாவிற்கு ஆதரவாக பேசி காவ்யாவின் கோபத்தைக் கிளப்பாமல் இத்துடன் இந்த விசயம் முடிந்ததிற்கு சந்தோஷம் கொண்டான். எனவே ஆதித்யாவிடம் பேச எண்ணியவன், அவனை செல்பேசியில் அழைத்தான். ஆனால் அந்த பக்கம் எடுக்கப்படவில்லை.

காவ்யா கார்த்திக்கிடம் பேசிய பின் அவனால் அதற்கு பின் ஆதித்யாவை பார்க்க முடியாது போனது. ஏதேனும் வேலையாக இருக்கும் என்று கார்த்திக்.. புது ஆட்டோ மொபைல் கம்பெனி தொடங்குவதில் மும்மரமாக இருந்தான். ஆனாலும் நடுவில் நண்பனின் நினைவு வரவும், அழைத்துப் பார்த்தான். ஆனால் அவனது செல்பேசி எடுக்கப்படாமலேயே முழுவதுமாக ஒலித்து நின்றது. இவ்வாறு இரண்டு மூன்று முறை நடக்கவும், காவ்யாவை விடும் சாக்கில் கல்லூரிக்கு சென்றான். அங்கு ஆதித்யாவை அவனது நண்பர்களிடம் கேட்கவும், அவர்கள் சொன்ன செய்தி கார்த்திக்கிற்கு அதிர்ச்சி அளித்தது. ஆதித்யா கல்லூரி படிப்பில் இருந்து விலகி விட்டதாக சொன்னார்கள். ஏன் என்று காரணம் கேட்டதிற்கு அவர்களுக்கு தெரியாது என்றும், அவர்களும் அவனுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்துக் கொண்டு தான் இருப்பதாக கூறினார்கள். அன்று வீட்டுக்கு வந்த காவ்யாவிடம் கேட்டதிற்கு.. அன்றைக்கு பிறகு நான் அவனைப் பார்க்கவில்லை, நீ சொல்லித்தான் விலகியதும் தெரியும் என்றுத் தோள்களைக் குலுக்கிக் கொண்டு சொன்னாள். கார்த்திக்கிற்கு அவளைப் பிடித்து நிறுத்தி அறையலாம் என்றுக் கூடத் தோன்றியது. யாரிடம் ஆதித்யாவை பற்றி விசாரிப்பது என்றுத் தெரியாது. ஒருமுறை அவனது வீட்டிற்கே சென்றுப் பார்க்கலாமா என்று எண்ணி பார்த்துவிட்டு பின் அதை கைவிட்டான்.

இவ்வாறு தவிக்க வைத்துவிட்டு பத்து நாட்களுக்கு பின் வேறொரு எண்ணில் இருந்து ஆதித்யா அவனை அழைத்தான். ஒன்றும் நடவாது போன்று குசலம் விசாரித்த ஆதித்யாவிடம் இத்தனை நாட்கள் தொடர்பு கொள்ள முடியாததிற்கு காரணம் கேட்டான். அந்த பக்கம் ஒரு நொடி அமைதி நிலவியது. பின் மெதுவாக கேட்டான்.

“காவ்யா எதாவது சொன்னாளா?” என்றுக் கேட்கவும், அன்று அவள் சொல்லியதை அனைத்தையும் சொன்னான். குறுக்கிடாமல் கேட்ட ஆதித்யா சத்தமாக சிரித்தான்.

இந்த பக்கம் செல்பேசியை காதில் வைத்திருந்த கார்த்திக்கிற்கு கிலி பிடித்துக் கொண்டது. அவனிடம் பழகிய இந்த ஒரு வருடத்தில் அவன் இவ்வாறு சிரித்து கார்த்திக் கேட்டதில்லை.

எனவே “ஆதி..” என்று மெதுவாக அழைக்கவும், ஆதித்யா “ஆமாம் கார்த்தி! லவ் செய்கிறேன்னு பின்னாடியே சுற்றினாள், நான் லவ் செய்கிறாயா என்றுக் கேட்டதிற்கு.. இல்லை என்றுவிட்டு வந்துவிட்டாள். அதனால் கொஞ்சம் அப்செட்! அதுதான் வேறொன்றுமில்லை..” என்றுச் சிரித்தான்.

கார்த்திக் “நீ காவ்யாவை லவ் செய்தியா ஆதி?” என்றுக் கேட்டான்.

அதற்கு ஏளனத்துடன் சிரித்த ஆதித்யா “லவ் இல்லாத இடத்தில் எனக்கு எப்படி லவ் வரும் கார்த்தி? அப்படி நான் காவ்யாவை லவ் செய்திருந்தால்.. அவளை அப்படிப் போக விட்டிருக்க மாட்டேன் கார்த்தி! அவள் என்னை லவ் செய்யலை என்றாலும் என்னால் அவளை விட்டிருக்க முடியாது. ஆனால் எனக்கு லவ் காவ்யா மேலே மட்டுமில்லை யாரிடமும் வராது.” என்றான்.

பின் கார்த்திக் “நேரில் மீட் செய்யலாமா?” என்றுக் கேட்டதிற்கு சிரித்த ஆதித்யா மெல்ல “என்னை ஆட்டுவிக்கும் கயிற்றை என் அப்பா கிட்ட கொடுத்துட்டேன் கார்த்தி! அதனால் நானும் இனி பிஸி..” என்றுச் சிரித்துவிட்டு செல்பேசியைத் துண்டித்தான்.

கார்த்திக்கிற்கு ஆதித்யா ஏதோ தன்னிடம் மறைப்பது போன்று இருந்தது. ஆனால் அவர்களது குடும்ப விசயத்தில் அவன் அதிகமாக விசாரிக்க கூடாது என்று அமைதியானான். காவ்யாவிடம் மட்டும் மீண்டும் என்ன நடந்தது என்றுக் கேட்டு அவளது எரிச்சலான பதிலைத் தான் பெற்றுக் கொண்டான். பின் ஒரு வாரம் கழித்து.. அவன் தொடங்க போகும் கனரகங்கள் தாயாரிக்கும் தொழிற்சாலைக்கு என்று மலேசியாவில் இருந்து இயந்திரங்கள் கப்பல் மூலம் துறைமுகத்தில் வந்திறங்கியது. அதை மேற்பார்வையிட கார்த்திக் சென்றிருந்தான்.

அப்பொழுது “கார்த்தி..” என்ற உற்சாக அழைப்பில் திரும்பிப் பார்த்தான். ஆதித்யா அவனைப் பார்த்து வருவது தெரிந்தது. இவனும் அவனைப் பார்த்த மகிழ்ச்சியுடன் சென்றான்.

“டேய் வாட் எ சர்பரைஸ்..” என்றுக் கட்டிக் கொண்டான்.

கார்த்திக் தான் வந்த காரணத்தைச் சொன்னான். அதற்கு ஆதித்யா “வாவ் வாழ்த்துக்கள்! நான் இங்கே எதற்கு வந்திருக்கிறேன் என்றே தெரியாது. காரில் ஏற சொன்னாங்க ஏறிட்டேன்.” என்றுச் சிரித்தான்.

கார்த்திக்கிற்கு அவனது பதிலைக் கேட்டு ஏமாற்றமாக இருந்தது. எனவே “ஆதி! நீ உன் ஸ்டெடிஸை கன்டினீயு செய்யலையா..?” என்றுக் கேட்டான். அதற்கு ஆதித்யா தோள்களைக் குலுக்கி சிரித்தான்.

கார்த்திக் பொறுமையிழந்தவனாய் “என்னதான் ஆச்சு ஆதி! வீட்டில் இருக்கிறவங்க சொன்னாங்க என்று ஸ்டெடிஸை நிறுத்தலாமா..! கயிறு என்கிறே! ஆட்டுவிப்பாங்கன்னு சொல்கிறே! அவங்க சொன்னாங்க செய்கிறேன்னு சொல்கிறே! நீ ஒன்றும் சொன்னதைச் செய்யும் ஆளில்லை, உனக்கும் சுயஅறிவு இருக்கு என்று எனக்கு தெரியும். ஆனால் சுயமரியாதையே இல்லாதவன் போல் ஏன் இருக்கிறே! ஏன் என்னாச்சு, ஐயம் தி பாஸ் என்றுச் சொன்ன ஆதித்யாவிற்கு என்னாச்சு? முதலிலேயே நீ வீடு என்றாலே ஒரு மாதிரிதான் இருப்பே! இப்போ இன்னும் ஒரு மாதிரி இருக்கிறே! நீ உன் சொந்த வீட்டு மனிதர்களைப் பற்றிப் பேசுகிற மாதிரியில்லை. உனக்கு ஒரு விசயம் தெரியுமா..! காவ்யா விசயத்தைப் பொருத்தவரை அவள் மேல் தான் முழு தப்பு ஆனாலும் நான்.. அவளை விட்டுத் தராமல் தான் உன்கிட்ட பேசினேன்..” என்றான்.

தன்னைப் பற்றி கார்த்திக் புலம்புவதை முகத்தில் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தவன், பின் நினைவு வந்தவனாய் பரபரப்புடன் பின்னால் திரும்பிப் பார்த்த ஆதித்யா கார்த்திக்கின் பேச்சை நிறுத்த முயன்றான். ஆனால் கார்த்திக் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்தான். ஆதித்யா அவனைப் பார்த்து “என்ன கார்த்தி?” என்றுச் சலித்துக் கொண்டான்.

அப்பொழுது தான் ஆதித்யாவிற்கு பின்னால் சற்று தொலைவில் ஆதித்யாவின் ஜாடையுடன் ஒருவன் நிற்பதைப் பார்த்தான். கார்த்திக் பார்ப்பதைப் பார்த்த ஆதித்யா முகத்தில் நக்கலான சிரிப்புடன் “அவர் என் பிரதர்! அவர் உன் கூட எல்லாம் பேச மாட்டார், அவரை விட ரிச் பர்ஷன் கூடத்தான் பேசுவார்.” என்றுச் சிரித்தவன், “ஒகே கார்த்தி! ஐ ஹவ் டு கோ..” என்றவன், மீண்டும் கார்த்திக்கை கட்டியணைத்தவன், அவனின் காதில் “கேர்புல்..” என்றுவிட்டு கிசுகிசுத்துவிட்டு சென்றான்.

ஏன் அவன் அவ்வாறு சொன்னான் என்று அப்பொழுது கார்த்திக்கிற்கு புரியவில்லை. அடுத்த வாரம்.. காவ்யா அவர்களது சொந்த ஊருக்கு அவசர அவசரமாக அனுப்பப்பட்டாள். படிப்பை ஏன் பாதியில் நிறுத்திவிட்டு அவளை அனுப்பறீர்கள் என்று அவன் கேட்டதிற்கு காவ்யாவிற்கு சில ரௌடிகள் தொந்திரவு தருகிறார்கள் என்று அவனது அன்னை அழுகையுடன் சொன்னார். உடனே கொதித்தெழுந்தவனின் கையில் சில ஜாதகங்களைக் கொடுத்து காவ்யாவிற்கு பார்த்து முதலில் திருமணம் முடித்து வைப்பது தான் முக்கியம் என்கவும், அவனால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. புதிதாக தொழில் தொடங்கியிருந்த நிலையில் எவ்வாறு சமாளிப்பது என்று யோசித்தாலும், தாய் தந்தை சொல்லைத் தட்டாது திருமண வேலையில் இறங்கினான். அதே நேரத்தில் கார்த்திக்கின் தந்தை தொழிலில் கமிஷன் தராமல் இழுத்தடித்தார்கள். பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டார்கள். இவ்வாறு அவருக்கு தொழிலில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டது. நல்ல இடத்தில் காவ்யாவிற்கு திருமணம் நிச்சயமாகியிருந்த வேளையில் இந்த பொருளாதார நெருக்கடியால் திருமணத்தில் எந்தவித தடையும் வந்துவிடக் கூடாது என்று அவர்களின் சில சொத்துக்கள் விற்க ஏற்பாடு செய்யப்பட்டது. காவ்யாவும் இந்த திருமணத்தை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தாள். தந்தையும், அண்ணனும் இரவில் களைப்புடன் வருவதைப் பீதியுடன் பார்த்தாள். அவளுக்கு கார்த்திக் தான் தைரியம் சொன்னான். காவ்யாவின் திருமண அழைப்பிதழை ஆதித்யாவிற்கு கொடுக்க அங்கு சென்றான். ஆனால் அவனைப் பார்க்க கூட அனுமதிக்கவில்லை. எனவே அவமானத்துடன் திரும்பி வந்தான். ஆதித்யாவை செல்பேசியில் தொடர்பு கொண்ட பொழுது செல்பேசியும் எடுக்கப்படவில்லை. காவ்யாவின் திருமணம் நல்லபடியாக முடிந்த வேளையில் கார்த்திக் தொடங்கிய புதிய தொழில் தொடங்கிய சில மாதங்களிலேயே நலிவுற்றது. அதனால் மேலும் கடன் சுமையை ஏறவும், கௌரவம் தான் முக்கியம் என்று அனைத்து சொத்துக்களையும் விற்று கடனை அடைத்தான். அவன் தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்களைப் பாதி விலைக்கு விற்றான்.

இவ்வாறு ஒருநாள் இரவில் கார்த்திக்கின் வீட்டில் அடுத்து எதாவது செய்ய வேண்டும், குறைந்த முதலீடு செய்ய வங்கியில் கடன் வாங்கலாமா என்றுப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நெற்றியில் வழிந்த இரத்தத்தோடு ஆதித்யா வந்தான். கார்த்திக் பதறியவாறு எழுந்தான். புயல் என வந்த ஆதித்யா, அவனை கடைசியாக சந்தித்த நாலு மாதங்களுக்கு பிறகு என்ன நடந்தது என்று ஆத்திரத்துடன் கேட்டான். கார்த்திக் அவனை அமைதியாக அமர சொல்லியதை அவன் கவனித்த மாதிரியே தெரியவில்லை. எனவே சிறு பெருமூச்சு எடுத்துவிட்டு நடந்ததை அனைத்தையும் சொன்னவன், விதிபடி தான் நடக்கும் என்றுச் சொல்லி நண்பனை சாமாதனப்படுத்தினான். ஆனால் கார்த்திக் கூறியதை முழுவதையும் கேட்ட ஆதித்யா ஆத்திரத்துடன் அருகில் இருந்த நாற்காலியை ஓங்கி எட்டி உதைத்தான்.

பின் தனது சிகையில் கரங்களை நுழைந்தவன் ஆத்திரத்துடன் கத்தினான். “என்கிட்ட உன் கூட கான்டெக்ட் வைக்காமல் இருந்தால் உனக்கு தொந்திரவு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு இங்கே அவங்க வேலையைக் காட்டியிருக்கிறாங்க..” என்றான்.

அதைக் கேட்டு கார்த்திக் அதிர்ந்து நின்றான்.

அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி சூழ்நிலை காரணமாக நிகழ்ந்தது என்று நினைத்துக் கொண்டிருக்க அது ஆதித்யாவின் குடும்பத்தினாரால் நிகழ்ந்தப்பட்ட சதி என்றுத் தெரியவும், அவனால் நம்ப முடியவில்லை. இவ்வாறு அவர்களை வீழ்த்தும் அளவிற்கு அவன் என்ன செய்தான் என்றும் புரியவில்லை.

அவனின் முகத்தைப் பார்த்து சிரித்த ஆதித்யா “நீ என்னை யோசிக்க சொல்லி, இப்படியிருக்க கூடாது என்று அட்வைஸ் செய்த தானே, அதுதான் அவர்களைப் பொருத்தவரை நீ செய்த தவறு..” என்றவனின் முகம் இறுகியது. பின் ஆதித்யாவின் காயத்திற்கு மருந்து போட்ட பின்பே கார்த்திக் அவனை அனுப்பினான்.

அடுத்த நாள் புனேயில் உள்ள ஆதித்யா குடும்பத்தினருக்கு சொந்தமான தொழிற்சாலையில் பார்டனராக ஆதித்யா சொல்லியதின் பெயரில் கான்ரெக்டில் கையெழுத்து போட வருமாறு அழைப்பு வந்தது, கார்த்திக் திகைப்போடு தன் தந்தையோடு சென்றான். அங்கு ஆதித்யாவும் இல்லை, அவனின் குடும்பத்தினர் எவரும் இல்லை. அதற்கு பதிலாக சில ஜெய்சங்கரின் உதவியாளர் தான் இருந்தார்.

“ஆதித்யா உங்களை புனேயில் உள்ள எங்களோட ஆட்டோ மொபைல் பேக்ட்டரியில் பார்டனராக சேர்க்க சொன்னார். சேர்மன் ஸார்! அதற்கு ஒகே சொல்லிட்டார், ஆனால் ஒரு கண்டிஷன் அதில் நான்கு மாதத்திற்குள் லாபத்தை கொண்டு வரச் சொன்னார். அவ்வாறு உங்களால் முடியவில்லை என்றால் நீங்க ஜெர்மனியில் உள்ள பேக்ட்டரியில் ஜாப்பிற்கு சென்றுவிட வேண்டும். அதற்கு ஒகே என்றால்.. சைன் போடச் சொன்னார்.” என்றார்.

தொழில்ரீதியாக தனக்கு வைத்த சவால் என்று கார்த்திக் ஒத்துக் கொண்டான். ஆனால் அது அவனுக்கு விரித்த மற்றொரு வலை என்றுத் தெரியாமல் விட்டுட்டான். அவன் அந்த கம்பெனியில் பொறுப்பேற்றதும், பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. ஆனாலும் முயன்றவனால் தொழில் சதிராட்டத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுடன் போட்டி போட முடியவில்லை. நான்கு மாதத்தில் நஷ்டத்தை சந்திக்கவும், ஒப்பு கொண்டதைப் போல் ஜெர்மன் செல்ல தயாராகினான்.

அதைக் கேள்விப்பட்டு ஆதித்யா அவனைப் பார்க்க வந்தான். அப்பொழுதும் பாதுகாவலர் என்ற பெயரில் அவனைக் கண்காணிக்க ஆட்களுடன் தான் வந்தான்.

வேண்டுவதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவனிடம் “ஒரு பேக்ட்டரிக்கு நீ முதலாளி ஆகணும், என்று நினைத்தேன் கார்த்தி..” என்றான்.

இரு மாதங்களிலேயே வேண்டுமென்றே தன்னை சாய்க்க பார்க்கிறார்கள் என்று கார்த்திக்கிற்கு தெரிந்துவிட்டது. அதை ஆதித்யாவிடம் இருந்து மறைத்த கார்த்திக் “அந்த தகுதி இன்னும் எனக்கு வரலை என்று நினைக்கிறேன் ஆதி! அதற்கு தான் வேலை செய்து தகுதியை வளர்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்..” என்றுச் சொன்னதும் ஆதித்யா வாழ்த்தி தான் அனுப்பினான்.

அதன் பின் ஆதித்யா ஜெர்மனுக்கு வரும் முன் தான் கார்த்திக்கை தொடர்பு கொண்டான்.

ஆதித்யாவை சந்ததித்தில் இருந்து அவனுக்கு தெரிந்த அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு மீராவை பார்த்தான்.

மீராவின் முகம் யோசனையில் ஆழ்ந்திருந்தது.

பின் மெல்ல மீரா “சோ ஆதித்யாவிற்கு பிராப்பளம் அவர்கள் வீட்டில் தான் இருக்கிறது. அப்படி வீட்டில் ஒட்டுதலே இல்லாதளவிற்கு அப்படி என்ன நடந்தது?” என்று அவனிடமே கேட்டாள்.

பின் அவளே பதிலளித்தாள்.

“ஆறு வயதில் ஏன் ஆதியை அனுப்பினாங்க? பின்னே வந்த போது வீட்டிலேயே விட்டிருக்கணும், போர்டிங் ஸ்கூலில் அனுப்பியது ரொம்ப தப்பு, அப்பறம் வந்த போது எல்லாரும் ரொம்ப ஒட்டுதல் இல்லாமல் போயிட்டாங்க போல..! அதுதான் இப்படி இருக்கிறான். ஆனால் அவனை ஏன் வீட்டில் கைதி மாதிரி வைத்திருக்கிறாங்க? அதுவும் காவ்யா ஆதித்யாவை வேண்டாம் என்றுச் சொன்ன பிறகு தான் அப்படி வைத்திருக்கிறாங்க, அப்படி அன்னைக்கு என்ன நடந்தது? ஆதித்யாவும், காவ்யாவும் எதையோ மறைக்கறாங்க என்று நினைக்கிறேன். ஆதித்யா காவ்யாவை லவ் செய்ததால் தான் இப்படியாகி விட்டது என்று நினைப்பதற்கும் வழியில்லை. ஆதித்யாவே அதற்கு பதில் சொல்லிட்டான். ஆனால் ஏன் அவன் வீட்டில் அப்படி நடந்துக்கிறாங்க? நீ அவனுக்கு அட்வைஸ் செய்தேன்னு உன் குடும்பத்தின் எக்னாமிக்ஸை அழித்து, உன்னை இன்னொரு நாட்டிற்கே கடத்திட்டாங்க, ஏன் இவ்வளவு வன்மம்? இதெல்லாம் ஆதித்யாவை சுற்றி அவனுக்கு தெரிந்தே தான் நடக்குது, ஆதித்யா மாதிரி ஒரு ஆளுமையான ஆண் எப்படி இதற்கெல்லாம் கட்டுப்பட்டு நிற்கிறான்?” என்றுத் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டவள், முடிவில் குழப்பத்துடன் கூந்தலுக்குள் விரல்களை விட்டு தலையைத் தாங்கியவாறு அமர்ந்து விட்டாள்.

சிரிப்பு சத்தம் கேட்டு நிமிர்நதுப் பார்த்தாள், கார்த்திக் தான் சிரித்துக் கொண்டிருந்தான். மீரா முறைக்கவும், கார்த்திக் “இதுவரை ஆதித்யாவை நினைத்து நான் மட்டும் தான் புலம்பிட்டு இருந்தேன். இப்போ என் கூட புலம்ப ஒரு ஆள் இருக்கு என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கு..” என்று மேலும் சிரித்தான்.

பின் சிரிப்பை நிறுத்தியவனாய் “இப்போ சொல்லு மீரா! ஆதித்யாவை சுற்றி இத்தனை குழப்பம் இருக்கு, இன்னும் அவனை லவ் செய்கிறாயா..? லவ் என்பது அத்தோடு நிற்காது என்பது என்னை உன் பேமலிக்கு இன்டர்டுஸ் செய்து அவங்க ஒகே சொன்ன மட்டும் அடுத்த நிலைக்கு போகலாம் என்று நினைத்த உனக்கு ரொம்ப நன்றாக தெரிந்திருக்கும், அவனது குடும்பத்தைப் பற்றி தெரிந்த பிறகும் அவனை லவ் செய்கிறாயா..? இன்னொரு விசயத்தையும் தெளிவுப்படுத்தி விடுகிறேன். அவன் உன்னை இதுவரை லவ் செய்யவில்லை, அப்படி லவ் செய்திருந்தால்.. உன்னை விட்டிருக்க மாட்டான். அதே மாதிரி அவன் அந்த குடும்பத்திற்கு கட்டுப்பட்டு தான் நிற்பான், அவங்க கிட்ட இருந்த பிரிந்து வந்து உன் கூட வாழ்வான் என்றும் எனக்கு தோன்றவில்லை.” என்றுவிட்டு மீராவின் பதிலுக்காக காத்திருந்தான்.

மேசையில் நகத்தால் கீறிக் கொண்டு யோசனையில் இருந்த மீரா திடுமென சிரித்தாள். கார்த்திக் குழப்பமும் திகைப்புமாக பார்க்கவும் நிமிர்ந்தவள், “கார்த்தி..! முதலில் ஆதித்யாவை நான் லவ்வே செய்யலை என்று நினைத்தேன். பின் லவ் செய்திருக்கிறேன் என்றுத் தெரிந்த பின்.. இவனை லவ் செய்திருக்கிறேனே என்று நினைத்தேன். பிறகோ சரியாக தான் லவ் செய்திருக்கிறேன் என்றுத் தோன்றியது. அப்பறம் அவன் எப்படிப்பட்டவானாக இருந்தாலும் அவனுக்கு என் மேல் அட்டென்ஷன் இருக்கான்னு தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டேன். அது தெரிந்த பின்போ அவன் முரடன், முசடாக இருந்தாலும்.. கெட்டவனில்லை என்றுச் சந்தோஷப்பட்டேன். இப்படி அவனைப் பற்றி என் ஆராய்ச்சி தொடர்ந்து போயிட்டே தான் இருக்குமே தவிர விடமாட்டேன் என்றுத் தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சரியாகிட்டே வரும் என்றுத்தான் தோன்றுகிறது. அப்படி உன் பிரெண்ட் என்ன மேஜீக் செய்துட்டான்.” என்றுச் சிரிக்கவும், கார்த்திக் “ஓஹோ! முத்திப் போச்சு..” என்றுக் கிண்டல் அடித்தாலும் நிறைவான மகிழ்ச்சியில் மீண்டும் தனது வாழ்த்தைத் தெரிவித்தான்.

மீரா “அதற்கு முன் நான் முடிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம் இருக்கு..” என்று சங்கடத்துடன் நெளிந்தாள்.

கார்த்திக் சற்று கவலையுடன் “என் வீட்டில் உன்னைத் தானே என்னோட லவ்வர் என்று நினைச்சுட்டு இருக்காங்க..” என்கவும், கார்த்திக் மீதியிருந்த காபியை ஒரே மூச்சில் குடித்துவிட்டு “ஆமாம்! ஆமாம்! அவங்க கிட்ட உண்மையைச் சொல்லி கிளியர் செய்திரு மீரா..! குளிர் தாங்கலை, நான் ரூமிற்கு போகிறேன். நாளைக்கு மீட் செய்யலாம்.” என்றுவிட்டு அவசரமாக எழுந்து சென்றான்.

மீரா “அடப்பாவி! அதை என் தலையில் கட்டிட்டு நீ கழன்றுக் கொள்ள பார்க்கிறாயா..” என்றுக் கோபத்தில் பற்களைக் கடித்தாள். அதைக் கேட்க கார்த்திக் அங்கே இல்லை. ஆதித்யாவிடம் இன்னொரு தரம் பேசிய பின் தனது மனதை வீட்டினருக்கு வெளிப்படுத்தலாம் என்று அப்போதைக்கு தள்ளிப் போட்டாள்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்த மீராவிற்கு அன்று ஒருநாள் நடந்ததை நம்பவே முடியவில்லை. அன்று மட்டுமா.. என்று ஆதித்யாவை சந்தித்தாலோ அன்றே அவளது வாழ்வே மாறிவிட்டது போன்ற உணர்வு!

அவள் வெளியே வந்த நேரம் சரியாக பனிமழை பொழிய சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்டாள். அன்று பனிபொழிவை இரசித்த ஆதித்யா தான் நினைவிற்கு வந்தான். அவனும் அவளுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுத் தோன்றியது. காரில் ஏற அவசரம் காட்டாமல் சற்று நேரம் அந்த வீதியில் உலாவினாள்.

மீண்டும் அவளது மனம் நிகழ்த்திய விசித்திரங்களைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். ஆதித்யாவை போன்ற விசித்திரமானவனிடம் மனம் சென்றது மட்டுமல்லாது, அவன்தான் வேண்டும் என்று எப்படி நினைக்க தோன்றுகிறது. தனது காதல் எந்தளவிற்கு வெற்றி பெறும், அவனின் மனதை அவளால் வெல்ல முடியுமா! அவனுக்கு அவளிடம் வெறுப்பில்லை என்பதற்கு அவன் இட்ட இதழ் முத்திரை சாட்சி! ஆதித்யா போன்ற ஒருவனால் பெண்ணை துச்சமாக மதித்து முத்தமிட முடியாது..! அவன் அந்த வகையைச் சேர்ந்தவன் அல்ல! அதற்கு போதையில் வந்த பெண்ணிடம் மதிப்பாக பேசியதும், அவனுக்கு காதல் தொல்லை கொடுத்த காவ்யாவை பொறுத்து போனதுமே சாட்சி! எதோ ஒரு வகையில் அவள் அவனைப் பாதித்திருக்கிறாள். அவளுக்கு அதுவே போதும். அதைப் பற்றிக் கொண்டு அவனது மனதையும் நிரப்பி விடுவாள் என்று நம்பிக்கை கொண்டாள். அவனது வீட்டின் நிலைமை மீண்டும் மண்டைக்குள் குடையவும், தற்போதைக்கு ஆதித்யா தான் முக்கியம் என்று மற்றவையை மனதில் இருந்து அகற்றினாள். மீண்டும் ஆதித்யாவுடன் இருந்த தருணங்களில் அவனது கோபம், அருகாமை, சலிப்பு போன்றவையை நினைத்தவளுக்கு சில சமயம்.. சிறிதாக மலரும் புன்னகையை ஆகியவற்றை நினைத்தவாறு நடந்தாள்.

ஒரு விசயத்தை நோக்கி நம் மனதைச் செலுத்தினால்.. அதைப் பற்றி இருக்கும் நல்லவைகள் மட்டுமே தெரியுமாம். அதுபோல் மீராவிற்கு அப்பொழுது இருந்த மனநிலையில் ஆதித்யாவிடம் அவள் உணர்ந்த நல்லவைகளை மட்டும் நினைத்துக் கொண்டு காதல் என்னும் உலகத்திற்குள் துள்ளி குதித்து மகிழ்ந்தாள்.

வீட்டிற்கு வந்தவள் மற்றவர்கள் விசாரிக்கும் முன் அறைக்குள் சென்றுத் தாளிட்டுக் கொண்டாள்.

அடுத்த நாள் காலையில் ஆதித்யா தன் அறையில் இருந்த கண்ணாடியில் தன்னை முறைத்துக் கொண்டிருந்தான். மீரா வெளிப்படையாக தன்னிடம் காதலைச் சொல்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் உதவி செய்கிறேன் என்றுச் சொன்ன போது.. மறுத்து கேலி செய்யவும், கோபித்துக் கொண்டு போனவள், திரும்பி வந்து மீண்டும் காதலைச் சொல்வாள்.. என்றும் நினைக்கவில்லை. ஆதித்யாவிற்கு சிரிப்பு தான் வந்தது. தேவையில்லாதது ஏமாற்றம் தான் மிஞ்சும் என்று ஏளனமாக தான் எண்ணினான். நக்கல் பார்வையும் பேச்சுமாக அவளைக் குத்திக்காட்டி தன்னைப் பற்றி நினைப்பது வீண் என்றுச் சொல்லிக் காட்டினான். ஆனால் கடைசியில் செல்லும் பொழுது அவள் தனது காதலைக் கூறிய விதத்தில் கோபம் கொண்டு.. அதற்கு சரியான பதிலைத் தருவதாக எண்ணி மீராவை முத்தமிட்டதைத் தான் அவனாலேயே ஏற்றுக் கொள்ள முடியலை. எவ்வளவு போதை என்றாலும், அவனது உடல் தடுமாறுமே தவிர.. அவனது வார்த்தைகளும் செயல்களும் அவனது கட்டுப்பட்டுக்குள் தான் இருக்கும். ஆனால் அவ்வாறு செய்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

அவனது மனமும் மீண்டும் மீண்டும் மீராவை முத்தமிட்டது தான் நினைத்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் நினைக்கும் போது.. அவனது உடலில் தோன்றும் இராசயான மாற்றத்தைத் தான் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஜீரணிக்கவும் முடியவில்லை. அதற்கு தான் தன்னையே திட்டிக் கொண்டிருந்தான்.

அப்பொழுது கதவின் அழைப்பு மணி ஒலிக்கவும், கார்த்திக்காக இருக்கும் என்று நினைத்து கதவைத் திறந்தவன், அங்கு மீரா நின்றிருப்பதைப் பார்த்து முதலிலேயே கோபம் கொண்டிருந்தவன் எரிச்சல் தான் கொண்டான். எனவே கதவை பிடித்துக் கொண்டு நின்றிருந்தவன், கதவை ஓங்கி அறைத்து சாத்தினான். அதே நேரத்தில் மீரா “ஆதி” என்றவாறு முன்னே ஒரு அடி வைத்தாள்.

கதவைச் சாத்தியதும், கேட்ட அலறலில் திடுக்கிட்டவனாய் அவரசமாக கதவைத் திறந்தான். அதிர்ச்சியுடன் மீரா நின்றுக் கொண்டிருந்தாள். அவளை மேலும் கீழும் பார்த்தவன் பரபரப்புடன் “டிட் யு ஹர்ட்..” என்றுக் கேட்டான். மீரா மெல்ல மறுப்பாக தலையசைத்தாள்.

பின் அதிர்ச்சி மாறாத குரலில் “ஆனால் என் முகத்திற்கும் கதவிற்கும் ஒரு சென்டிமீட்டர் டிஸ்டன்ஸ் தான் இருந்திருக்கும்..” என்றாள். அவளுக்கு அடிப்படவில்லை என்று நிம்மதி கொண்ட ஆதித்யாவிற்கு மீண்டும் போன கோபம் மீண்டும் வந்தது.

“வாட் யு வான்ட்..” என்று எரிச்சலுடன் கேட்டான்.

“நீங்க ட்ரஸ் சேன்ஜ் செய்துட்டு வாங்க..! நான் கீழே வெயிட் செய்கிறேன்.” என்றுத் திரும்பி செல்ல முயன்றாள்.

ஏனெனில் கையில்லா பனியனை அணிந்துக் கொண்டு நின்றிருந்தான். முதலில் கதவை திறந்த பொழுது கவனித்திராத மீரா தற்பொழுது தான் கவனித்தாள். ஏன் என்று தெரியாது நாணம் அவளைத் தேடி வந்தது. எனவே கீழே சந்திக்கலாம் என்றுச் சொல்லிவிட்டு செல்ல திரும்பினாள். அப்பொழுது ஆதித்யா தன் கரத்தை நீட்டி அவளது இடுப்பை வளைத்தவன், “நீ நான் இருக்கும் பொழுது ட்ரஸ் செய்தே தானே.. இப்போ மட்டும் என்ன பிராப்பளம்?” என்றவன், அவளை தனது அறைக்குள் இழுத்துக் கொண்டவன், கதவை சாத்தினான்.


புதிரானவனுக்கு தன் காதலைப் புரிய வைப்பாளா..!

புதிரானவனின் புதிரை விடுவிப்பாளா..!


 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்😍😍
Wish all a very happy new year 🥳 🎊

விற்பனைக்கு வந்தாச்சு!

புத்தக கண்காட்சியில் அருண் பதிப்பகத்தின் ஸ்டாலில் பெற்றிடுங்கள்..


"குடை வேண்டாமே இப்படிக்கு அடைமழை!" கதை புத்தகம் விற்பனைக்கு வந்தாச்சு!



கடந்த நான்கு நாட்களாக வாங்க சென்று ஏமாற்றமடைந்தவர்களுக்கு ஸாரி!



கதையை எந்த மாதிரி முடித்திருப்பேன்? அர்ஜுன் காதலை அதி ஏற்றுக் கொண்டாளா? அர்ஜுன் வந்த காரியம் முடிந்ததா? அர்ஜுனின் வெறித்தனமான காதல் எந்தளவிற்கு செல்லும்? என்பதை இந்த கதையில் காணலாம்.



வாங்கி படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க..😍😍😍



இந்த கதை புத்தகம் கிடைக்கும் இடம்



ARUN PATHIPPAGAM

48TH CHENNAI BOOKFAIR

STALL NO 411,412

5th ROW



சின்ன டீசர்:



கையை ஏந்தினால் போல் அர்ஜுன் வைத்திருக்கவும், மெல்ல மறுப்பாக தலையசைத்தாள்.



அர்ஜுன் “ஓ! பெட்டில் உட்கார்ந்துட்டு கூப்பிடரதாலே பயந்துட்டியா!” என்றுச் சிரித்தவன், எழுந்து நின்று.. மீண்டும் கையை நீட்டினான்.



அதிரா மெல்ல தனது கரங்களை பின்னால் கட்டிக் கொண்டு “வேண்டாங்க!‌ போதும் இந்த காதலை விட்டுரலாம்.” என்று திக்கி திணறிக் கூறினாள்.



அர்ஜுன் “அதுசரி! மறுபடியும் கண்டதை நினைச்சு மனசை போட்டு குழப்பிட்டியா! இதுக்கு தான் என் பக்கத்திலேயே இருக்கணும் என்றுச் சொல்வது! உன்னோட குழப்பத்திற்கு சரியான ட்ரீட்மெண்ட் சொல்லட்டுமா! மூன்று‌ ஸ்டெப் முன்னே எடுத்து வை! உன்னோட ரைட் ஹென்ட்டை‌ எடுத்து என் கையில் வை! மீதியை நான் பார்த்துக்கிறேன்.” என்றுச் சிரித்தான்.



அதற்கு மறுப்பாக தலையசைத்த அதிரா “நான் முதல்ல எடுத்த முடிவில் இருந்து மாறியிருக்க கூடாது. ஆனா இந்த மனசுக்கு கேட்கலை. ஆசையை அடக்க முடியலை. அதனால் உங்களுக்கு ஒகே சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். இந்த லவ் வேண்டாங்க! அதுக்கு உங்க லவ்வை நான் குத்தம் சொல்லுலை. நீங்க என்னை ரொம்ப லவ் செய்யறீங்க! அதற்கு இப்போ நீங்க என்னைப் பார்க்க வந்ததே சாட்சி! ஆனா பெயிலியரான லவ் மட்டும் இல்லை.. சில உண்மையான லவ்வும் சேராது. அது மாதிரி நினைச்சுக்கலாம். ப்ளீஸ் இத்தோட விட்டுரலாம்.” என்றாள்.
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸாரி பிரெண்ட்ஸ்..

நான் வெளியூர் வந்திருக்கேன்.. இன்றும் "நிழல் தேடிடும் நிஜம் நீயடி!" யூடி தருவது இயலாது.

நாளை யூடிகளுடன் வருகிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10


மீராவின் இடையைக் கரத்தால் வளைத்து உள்ளுக்குள் இழுத்து கதவை சாத்தியவன், கதவிற்கருகில் இருந்த சுவற்றில் அவளைச் சாய்த்து நிறுத்தினான். அவளின் இடையை வளைத்த போது.. அவள் ஜெர்கின் அணிந்திருந்த போதும், அவனது கரம் அவளது மேனியைத் தீண்டிய உணர்வு ஏற்பட்டது. ஜெர்மனியின் குளிரை மீறி.. அவனது உடலில் வெம்மையை உணர்ந்தது.

ஆதித்யா தன்னை திடுமென இழுத்ததும்.. அதை எதிர்பாராத மீரா அவனின் இழுத்த இழுப்பிற்கு அவனோடு வந்தாள். அவளைப் பற்றி சுவற்றில் சாய்த்ததும் சுயவுணர்விற்கு வந்தவள், மீண்டும் அன்று தன் நிலைப் பற்றி தெளிவுப்படுத்த முயன்றாள்.

“அன்னைக்கு நீ வருவதற்குள் ட்ரஸ் சேன்ஜ் செய்திர வேண்டும் என்று நினைத்தேனே தவிர.. நீ அடிக்கடி குத்திக்காட்டுகிறே எண்ணத்தில் இல்லை..”

அதற்கு ஆதித்யா அவள் புறம் குனிந்து அவளது காதில் “அப்படித்தான் இருக்கட்டுமே..” என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தான். மீரா என்ன என்று திகைக்கவும்.. அவளிடம் இருந்து அகன்றவன், டீசர்ட்டை எடுத்து தலை வழியாக அணிந்தான். பின் “என்ன பேசணும்? என்னை லவ் செய்கிறேன்னு சொல்ல போகிறாயா..?” என்று ஏளனத்துடன் கேட்டான்.

மீரா மறுப்பாக தலையசைத்து “நான் உன்னை லவ் செய்வது எனக்கு முன்பே உனக்கு தெரியும்.” என்கவும், சட்டென்று திரும்பிய ஆதித்யா “அதற்கு என்ன செய்ய சொல்கிறே?” என்று அலட்சியத்துடன் கேட்டான்.

மீரா “என் லவ்வை ஏற்றுக் கொள்வதில் என்ன தப்பு?” என்றுக் கேட்டாள்.

அதற்கு ஆதித்யா “நீ கார்த்திக்கை லவ் செய்கிறேன்னு சொல்லிட்டு என்னைப் பார்த்ததும், டைவர்ட் ஆனது தான் தப்பு..” என்றான்.

உடனே மீரா “நீ வந்தாலும், வரலைன்னாலும் நாங்க லவ் ஒன்றும் செய்திருக்க மாட்டோம். அது உனக்கும் தெரியும். நீதான்.. நான் கார்த்திக் கிட்ட குளோஸா பழக முடியாது என்பதையும் எனக்கு முன்னாடியே கண்டுப்பிடிச்சுட்டியே நீயே இப்படிச் சொல்லலாமா..! சோ என் ரூட் கிளியர், நீயும் யாரையும் லவ் செய்யலை என்றுத் தெரியும். அப்பறம் எதற்கு மறுக்கணும்?” என்று அவனையே மடக்கினாள்.

ஆதித்யா காவ்யாவை பற்றி கார்த்திக்கிடம் பேசிய பொழுது.. அவன் மறுத்தும் தொடர்ந்து காதலிப்பதாக சொன்னால் அந்த காதலை ஏற்றுக் கொள்வேன் என்றுக் கூறியதை பிடிமானமாக பிடித்துக் கொண்டாள். அதனால் தனது காதலை ஏற்றுக் கொள்வான் என்று நம்பிக்கை கொண்டாள்.

ஜெர்கினை எடுத்து அணிந்த ஆதித்யா அவளை நேராக பார்த்து, “சரி.. உனக்கு பொறுமையாகவே சொல்கிறேன். உன்னோட சில ஆக்ட்டிவிட்டிஸால் எனக்கு உன்னைப் பிடிக்காமல் போயிருச்சு.. பிடிக்காத உன்னோட லவ்வை நான் ஏன் ஏற்றுக்கணும்? இன்னும் மூன்று நாட்களில் நான் இந்தியாவிற்கு போய் விடுவேன் அதனால்.. உன்னோட எனர்ஜீ எல்லாம் வேஸ்ட் தான்! அப்பறம் எதற்கு இந்த குட்டி லவ்..?” என்றுப் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

இப்படிக் கேட்பவனுக்கு என்ன பதில் தருவது என்றுத் தெரியாமல் விழித்த மீரா பின் சுதாரித்து “நான் லவ் செய்யும் போது உனக்கும் அது தானாக வந்திரும் என்று நம்பிக்கை தான்..” என்கவும், சிரித்தவாறு “எனக்கு அந்த நம்பிக்கை இல்லை! கான்வெர்ஷெஷன் ஓவர்..! நீ போகலாம்.” என்றான்.

ஆதித்யாவின் அலட்சியம் மீராவை பாதித்தது, சுவற்றில் சாய்ந்திருந்தவள், கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு அதில் சாய்ந்தவாறு மெல்லிய குரலில் “அப்போ ஏன் என்னை கிஸ்ஸடிச்சே..?” என்றுக் கேட்டாள்.

செல்பேசி, வாலெட் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவனின் கை அசையாது நின்றது. எதை நினைத்து அவனையே திட்டிக் கொண்டிருந்தானோ.. அந்த கேள்வியை மீரா கேட்டதும் அவன் திணறினான்.

அவனுக்கு பதில் தெரியாமல் இல்லை.. அவன் அவளை முத்தமிட்டதில் நிச்சயம் காதலில்லை என்று அவனுக்கு தெரியும். ஒரு பெண்ணிடம் காதலில்லாமல் தோன்றும் இத்தகைய உணர்விற்கு பெயர் மோகம் என்றும் தெரியும்..! ஆதித்யா ஒன்றும் பார்க்கும் எல்லா அழகான பெண்களில் மேல் மோகம் கொள்ளும் காமூகன் இல்லை. அப்படியிருக்க.. மீராவிடம் அத்தகைய உணர்வு தோன்றுவதற்கு காரணம் தான் தெரியாமல் தான் திணறியவன், கண்களை அழுத்த மூடித் திறந்தான்.

அப்பொழுது மீரா “நீயும் என்னை லவ் செய்கிறே..! அதுதான் காரணம்..” என்றாள்.

அவளிடம் திரும்பி “நான் கெட்டவன் அதுதான் ரிஷன்! என்கிட்ட தனியாக இந்த ரூமில் மாட்டியிருக்கிறே தெரியும் தானே..! கெட்அவுட்” என்றுக் கத்தினான்.

அவனது கத்தலில் கோபம் கொண்ட மீரா, சரிந்திருந்த தனது தோள் பையை சரியாக போட்டுக் கொண்டு, “என்னை நல்லா யோசிக்க சொன்ன தானே..! இப்போ நீ நல்லா யோசி! உனக்கு என் மேலே தனி அட்டென்ஷன் இருக்கு, உனக்கு என் மேல் லவ் இல்லாமல் நான் உன்னை லவ் செய்கிறேன் என்பதை உன்னால் கண்டுப்பிடித்திருக்க முடியாது. உனக்கும் தான் வாய் ஒன்று பேசுகிறது, உள்ளம் ஒன்று பேசுகிறது. மனசுக்குள்ள இருக்கிற காதலோட உந்துதல் காரணமாக தான் நீ என்னை கிஸ்ஸடித்தே..! நீ நன்றாக உன் மனதை ஆராய்ந்து பார் உனக்கே புரியும். இது உன் டர்ன்..! உனக்கு யோசிக்க டைம் கொடுக்கிறேன்.” என்று மிடுக்காக சொல்லிவிட்டு திரும்பி கதவின் மேல் கையை வைத்தாள்.

இரண்டே எட்டில் அவளைப் பற்றி திருப்பிய ஆதித்யா “என்னைப் பற்றி என்ன தெரியும் என்று நீ இப்படி உளறுகிறே! ஒரு விசயம் சொல்லட்டுமா.. இப்போ நீ சொன்ன ஒன்று கூட கரெக்ட் இல்லை. என்ன சொன்னே..! உன் மேல் இருக்கிற காதலில் கிஸ்ஸடித்தேனா..! உன்னைப் பொருத்த வரை இதுதான் லவ் என்றால் அந்த லவ்வை இந்த மூன்று நாட்களுக்கு தர நான் ரெடி..” என்றுக் கண்ணடித்தான்.

மீராவின் மனதிற்குள் ஏதோ ஒன்று நொறுங்குவது போல் இருந்தது. கண்களை முட்டிக் கொண்டு வரும் கண்ணீரை அவனுக்கு காட்டாதிருக்க இமைகளைத் தட்டி சிரமப்பட்டாள்.

அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனின் உதடுகள் இகழ்ச்சியாக வளைந்தது. “உண்மையை ஏற்றுக்கொள் மீரா..! உண்மை பக்கமே இருந்திரு..! என் நிழல் பக்கம் வந்துவிடாதே..” என்றுவிட்டு கதவை திறந்து வெளியே கையைக் காட்டினான்.

ஆதித்யாவை நிமிர்ந்து கூடப் பார்க்காது.. மீரா வெளியேறினாள்.

ஹோட்டலை விட்டு எப்படியோ வெளியே வந்தவளுக்கு காரை எடுக்க மனமில்லை. எனவே வெளியே இருந்த சாலையோர நடைப்பாதையில் நடைப் போட்டாள். நேற்று இரவும்.. இதே இடத்தில் தான் நடந்தாள், ஆனால் நேற்று நம்பிக்கையும் காதலுமாய் இருந்த நிலைக்கு மாறான மனநிலையில் தற்பொழுது இருந்தாள்.

சுற்றிலும் இருந்த கடையில் கிறிஸ்துமஸ் விழாவிற்கான கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கியிருந்தன. வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டு மக்களை அவர்கள் பக்கம் கவர ஒவ்வொரு கடை வியாபாரிகள் போட்டிப் போட்டிக் கொண்டிருந்தார்கள். அவை எதுவும் அவளது கருத்தில் ஏதுவும் படவில்லை. ஆதித்யாவின் பேச்சில் அவளது நம்பிக்கை ஆட்டம் கண்டவளாய் இருந்தவளுக்கு அது இத்தகைய நடுக்கத்தை உடல் முழுவதும் கொடுக்குமா என்று அதிர்ந்தாள். ஏனோ நெஞ்சில் பாரம் ஏற்றியது போல் இருக்கவும், கால்கள் தடுமாறி அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

இருபக்கம் கையை ஊன்றி அமர்ந்திருந்தவளுக்கு, தன்னை வெறுத்து ஒதுக்கும் ஆதித்யாவின் மீதிருந்த காதல் மட்டும் குறையவில்லை. அவளை எவ்வாறு அவன் இப்படிக் கவர்ந்தான் என்றுக் கேட்டால் அவளிடம் பதிலில்லை. அவனைப் பற்றி கார்த்திக் கூறியதைக் கேட்ட பிறகோ அப்படி அவனுக்கு என்னவாயிற்று என்று பரிதவிக்கும் மனதை இன்னும் அடக்க முடியவில்லை. ஆனால் அவனது சில சுடும் வார்த்ததைகள் தரும் வடு தரும் வலியையும் தாங்கி கொள்ள முடியவில்லை. ஆதித்யா தனக்கானவன் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தவளுக்கு அவனைப் புரிந்துக் கொள்ளவும் முடியவில்லை. அவனைக் கவரவும் தெரியவில்லை.

அனைத்தையும் நினைத்துப் பார்த்தவளுக்கு எத்தனை இல்லைகள்..! என்றுத்தான் முதலில் தோன்றியது. இந்த காதல் தேவையா என்று நினைத்துப் பார்த்தாலும் அவளால் அவன் மேல் கொண்ட காதலில் இருந்து மட்டும் வெளியே வர முடியாது என்பதில் உறுதியாக இருந்தாள். அவன் மேல் கொண்ட காதல் அவனிடம் இருந்து பிரிக்க முடியாது அவளுக்கே போட்ட அரண் போல் இருந்தது. மனதில் திடம் தோன்றவும்.. தெளிவு பெற்றவள், கார்த்திக்கை அழைத்து சந்திக்க வேண்டும் என்றுச் சொன்னாள். ஒரு நொடி தயங்கியதைப் போல் இருந்த கார்த்திக் அடுத்த நொடியே ஒரு இடத்தின் பெயரைச் சொல்லி அங்கே வரச் சொன்னான்.

மீராவை வரச் சொன்ன இடத்தில் கார்த்திக் காத்திருந்தான். அவனது மனம் சற்று முன் நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆதித்யாவை பார்க்க கிளம்பி கொண்டிருந்தவனை ஆதித்யா செல்பேசியில் அழைத்தான். தான் அவன் இருக்கும் இடத்திற்கு வருவதாக சொன்னான். கார்த்திக் அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் இருந்த காபி ஷாப்பில் கிறிஸ்துமஸை முன்னிட்டு பிரம்மாண்ட சாக்லேட் தாயரிக்க தொடங்க போவதற்கான ஆயுத்த விழா நடைப் பெறப் போவதால் அங்கு வரச் சொன்னான். ஆதித்யா வருவதாக சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்த வேளையில் மீரா அழைத்தாள். அவனைச் சந்தித்து பேச வேண்டும் என்றுச் சொன்னதும் ஒரு நொடி யோசித்தவன், ஆதித்யாவை வரச் சொன்ன அதே இடத்திற்கு வரச் சொல்லிவிட்டான்.

தற்பொழுது அவர்களுக்காக காத்திருந்த கார்த்திக்கிற்கு யார் முதலில் வரப் போவது என்றுத் தெரியவில்லை. இருவரின் குரலும் சரியில்லாததை கார்த்திக் கண்டுக் கொண்டான். எனவே ஒருவரிடம் மற்றவர் வருவதை மறைத்தான். ஒருவர் வருகிறார் என்று இன்னொருவருக்கு தெரியாது, அப்படியிருக்கும் பொழுது இருவரும் எதிர்பாராத விதமாக சந்தித்தால் ஏற்படும் இருவரின் பிரதிபலிப்பை பார்க்க எண்ணினான்.

முதலில் ஆதித்யா தான் வந்தான், கார்த்திக் அமர்ந்திருந்த மேசைக்கு வந்து அவனுக்கு நேர் எதிர் வந்து அமர்ந்த ஆதித்யா எடுத்த எடுப்பிலேயே “எனக்கு ஏற்பாடு செய்திருக்கிறே மேரேஜ்ஜை நிறுத்தி விடலாம் என்று இருக்கிறேன்.” என்றான்.

ஆதித்யாவிற்கு திருமணம் உறுதி செய்திருக்கிற விசயமே கார்த்திக்கிற்கு தற்பொழுது தான் தெரிந்திருக்க.. அதை ஆதித்யா நிறுத்திவிடுவதாக கூறியதைக் கேட்டு மேலும் அதிர்ந்தான்.

கார்த்திக் அதிர்ச்சி மாறாமலேயே “ஆதி! என்ன சொல்கிறே..? மேரேஜ் பிக்ஸ் ஆகிருச்சா..!” என்றுக் கேட்டான்.

ஆதித்யா ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினான். கார்த்திக் தொடர்ந்து “முதலிலேயே ஏன் சொல்லுலை?” என்றுக் கேட்டான்.

“இங்கே வந்து தான் ஒகே சொன்னேன். பொம்மை மாதிரி இதற்கும் தலையை ஆட்டி கமிட்மென்ட் மேரேஜ்ஜிற்கு ரெடியாகிட்டேன் என்றுச் சொல்லிக் கொள்ள விருப்பமில்லை.” என்றான்.

கார்த்திக் “ஓ! அதனால் தான் மீராவோட லவ்வை ஏற்றுக் கொள்ள மாட்டேன்னு சொல்லிட்டியா..!” என்றுச் சொல்லும் பொழுதே அவனது விழிகள் மகிழ்ச்சியில் விரிந்தது. மகிழ்ச்சியுடன் “ஆதி! மீராவிற்காக மேரேஜ்ஜை நிறுத்த நினைக்கிறியா..” என்றுக் கேட்டான்.

நண்பனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைப் பார்த்து சிரித்த ஆதித்யா மறுப்பாக தலையசைத்து விட்டு “மீராவிற்காக என்பது வரை ஒகே ஆனால் நீ நினைக்கிற ரிஷன் இல்லை கார்த்தி..” என்றான்.

கார்த்திக் குழப்பத்துடன் பார்க்கவும், ஆதித்யா தலையைத் தாழ்த்தியவாறு சிறு குன்றலுடன் “மனைவி கிட்ட மட்டும் தோன்றும் உணர்வுகள் இன்னொரு பெண் கிட்ட தோன்றியிருப்பது தவறு கார்த்தி! அதுதான் மேரேஜ்ஜை நிறுத்தி விடலாம் என்றுப் பார்க்கிறேன்.” என்றான்.

கார்த்திக் “அந்த இன்னொரு பெண் யார்..?” என்றுக் கூர்மையான பார்வையுடன் கேட்டான்.

அதைக் கேட்டு மெல்ல சிரித்தவாறு நிமிர்ந்த ஆதித்யா “நீ யாரை நினைத்திருக்கயோ..! அவள்தான்..” என்றவன், அவன் கூறியதைக் கேட்டு கார்த்திக் ஆவலுடன் வாயைத் திறக்கவும், அவனை முந்திக் கொண்டு “மீரா மாதிரி முட்டாள்தனமாக நீயும், அதுதான் லவ் என்றுச் சொல்ல மாட்டே என்று நினைக்கிறேன்.” என்று அவனை விட கூர்மையாக பார்க்கவும், கார்த்திக் கப்பென்று வாயை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டான்.

கார்த்திக் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த ஆதித்யா சிரித்தவாறு “ஏன் கார்த்தி அமைதியாகிட்டே..?” என்றுக் கேட்டான். கார்த்திக் அமைதியாகவே முறைக்கவும், “நான் மேரேஜ்ஜை நிறுத்தி விடலாம் என்று எடுத்த முடிவு சரிதானே..?” என்றுக் கேட்டான்.

அதற்கு கார்த்திக் “உன் ஃபீலிங்க்ஸ் உனக்குத்தான் தெரியும்.” என்றான். உடனே ஆதித்யா “எக்ஸாட்லி..” என்றுச் சிரித்தான். பின் கார்த்திக் “ஆனால் உன் பேமலியில் ஒத்துப்பாங்களா..?” என்றுச் சந்தேகத்துடன் கேட்டான். அதற்கு சத்தமாக சிரித்த ஆதித்யா “கண்டிப்பாக மாட்டாங்க!” என்றவன், தலைக்கு பின்னால் கையைக் கோர்த்தவாறு சாய்ந்தமர்ந்தான். அவனின் முகத்தில் பலத்த யோசனை பரவியது.

அருகில் கேட்ட சலசலப்பு சத்தத்தில் நண்பர்கள் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு பெரிய சாக்லேட் செய்ய தேவையான பொருட்களை எடுத்து குவித்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து நண்பர்கள் இருவரும் முறுவலித்தனர். பின் ஆதித்யா “சாக்லேட் காபி வாங்கிட்டு வருகிறேன்.” என்றுவிட்டு எழுந்துச் சென்றான். செல்லும் நண்பனை பார்த்து கார்த்திக் பெருமூச்சு விட்டான்.

பின் நேராக அமர்ந்த போது.. மீரா வருவது தெரிந்தது. உடனே கார்த்திக் எழுந்து நின்று கையசைத்து தான் இருக்கும் இடத்தைத் தெரிவித்தான். அதைப் பார்த்து புன்னகையுடன் மீரா அவனை நோக்கி வந்தாள்.

‘ஆதித்யா எழுந்து சென்ற நேரம் வந்திருக்கிறாளா.. இருக்கும் போது வந்திருக்கலாம், தற்பொழுது மீரா அவனுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்து ஆதித்யா.. சென்றுவிடுவானோ..’ என்று நினைத்தவன், தன் முன் அமர்ந்த மீராவை பார்த்து சிரிப்ப முயன்றவன், அவளது முகத்தைப் பார்த்து அமைதியானான். அவளே சொல்லட்டும் என்று நினைத்தான்.

தனது தோள்பையின் வேலைப்பாட்டை மிக கவனமாக ஆராய்ந்தவள், பின் நிமிர்ந்து பார்த்து முறுவலிக்க முயன்றாள். கார்த்திக் சிறு புன்னகை செய்து “ஆதித்யாவின் அன்பை பெறுவது கடினமில்லை மீரா..! பொறுத்திரு..! அவன் மனம் நோக பேசுகிறான் என்று மனம் தளர்ந்து விடாதே..” என்றுச் சிரித்தான்.

மீரா “அவன் பேசுவதைக் கேட்டு ஹர்ட் ஆகலைன்னா நான் மனுஷியே கிடையாது. அவன் அப்படித்தான் என்று எனக்கு தெரியும். அவன் வேஷம் போட்டு முகமூடி எல்லாம் போடலை, மனதிற்கு கவசம் தான் போட்டிருக்கிறான். அது கூட யாரும் அவனை நெருங்க கூடாது என்பதற்கு தான், ஆனால் அவன் ஈஸியா அதில் இருந்து வெளியே வந்துவிடுவான். நாம் தான் நெருங்க கஷ்டப்படணும்..” என்றுச் சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு திரும்பி பார்க்க சொல்லி உள்ளுணர்வு உந்தவும், கடைசி வார்த்தைப் பேசியவாறு திரும்பியவளின் தோளின் சூடான சாக்லேட் காபி சரிந்தது.

கையில் இரு காபி கோப்பையுடன் நின்றிருந்த ஆதித்யா “டிஷ்யு பேப்பர் எடுத்துட்டு, இடத்தை காலி செய்..” என்றவாறு கார்த்திக்கிற்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். மீரா ஆதித்யாவை அங்கு எதிர்பார்க்கவில்லை, கார்த்திக் ஏன் சொல்லவில்லை என்றுக் குழப்பத்துடன் டிஷ்யு பேப்பரை எடுத்துத் துடைக்க போனாள்.

ஆதித்யா காபியை பருகியவாறு ஏளனத்துடன் “இன்னொரு கப் காபியை எடுத்து என் மேலே ஊற்றுவாய் என்று நினைத்தேன். லவ் உன்னை அவ்வளவு பலவீனமாக மாற்றியிருச்சா..! இவ்வளவு சுயமரியாதை இல்லாதவளாக இருக்கிறாயே..!” என்றான்.

அதற்கு மீரா துடைத்தவாறு “பலவீனமாக்கவில்லை! புத்திசாலியாக இருக்கணும் என்றுச் சொல்லிக் கொடுத்திருக்கு..! எனக்கான மரியாதையும் எனக்கு கிடைச்சாச்சு...” என்று முறுவலித்தாள்..

ஆதித்யா “இங்கே அப்படி என்ன புத்திசாலித்தனத்தை சாதிச்சுட்டே..?” என்று மாறாத ஏளனத்துடன் கேட்டான்.

“காபியை வேஸ்ட் செய்யலை..! அது புத்திசாலித்தனம்..” என்றவள் தொடர்ந்து “தப்பு செய்துட்டு கூலாக நீயும் என்மேல் கொட்டுவாய் என்று எதிர்பார்த்தேன் என்று என்கிட்ட கேட்கிறாய் பாரு, அது நீ எனக்கு கொடுக்கிற மரியாதை..” என்று முறுவலித்தாள்.

ஆதித்யா இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு “நன்றாக தான் பேசுகிறே..! ஆனால் இன்னும் நானும் உன்னை லவ் செய்வேன் என்று நினைச்சுட்டு இருக்கே பார்த்தியா.. அதில் தான் முட்டாளாக இருக்கிறே..” என்றவன், சட்டென்று முன்னால் அவள் புறம் சரிந்து “என்னைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். உன் மேல் ஒரு துளி அளவு கூட லவ் வாரது.” என்றுவிட்டு நிமிர்ந்தான்.

மீராவிற்கு திக்கென்று இருந்தாலும், சற்று முன் கார்த்திக்கிற்கு சொல்லிய வார்த்தைகளைத் தனக்கே சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

ஆதித்யா அப்பொழுது தான் கவனித்தான், கார்த்திக் அங்கு இல்லை. எங்கே என்றுப் பார்த்தான்.

சாக்லெட் தாயாரிக்க தேவையான பொருட்களை மக்கள் கையில் கோப்பையில் கொடுத்து போடச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கிறிஸ்துமஸ் சாக்லெட்டில் தங்களின் பங்களிப்பைத் தர ஆர்வத்துடன் வரிசையில் நின்றிருந்தார்கள். அந்த வரிசையில் கார்த்திக் நின்றிருந்தான். அவனைப் பார்த்து சிரித்து மண்டையில் அடித்துவிட்டு திரும்பியவனின் பார்வை மீராவின் விரல்களின் மேல் நிலைத்திருந்தது. ஏனெனில் மீராவின் விரல்கள் ஜெர்கினின் ஜீப்பை கீழே இறக்கிக் கொண்டிருந்தது.

ஆதித்யா சரித்த காபி மீராவின் தோளுக்கு பின்னாலும் வழிந்துவிட்டதால் துடைத்துக் கொண்டிருந்த மீராவிற்கு அந்த பக்கம் எட்டவில்லை, அதனால் ஜெர்கினை கழற்றித் துடைக்க எண்ணினாள். எனவே ஜெர்கினை கழற்ற முயன்றாள்.

தனது பார்வை அத்துமீறி செல்வதை உணர்ந்த ஆதித்யா, சட்டென்று அவளது விரல்களைப் பற்றி ஜீப்பை வேகமாக மேலே ஏற்றிவிட்டான். கழுத்திற்கு சற்று கீழ் வரை தான் முன்பு மீரா ஜீப் போட்டிருந்தாள். தற்பொழுது ஆதித்யா கோபத்தில் வேகமாக இழுத்துவிட்டதில் அது கழுத்தின் முழுவதையும் மறைத்து அவளது முகவாயை இடித்துக் கொண்டிருந்தது. மேலும் கழுத்தை நெருக்கியதால் தொண்டைக் கமறவும், இருமறியவாறு “ஆதி..” என்றுத் திணறினாள்.

அப்பொழுதே அவனது செயலின் முரட்டுத்தனம் புரிந்தவனாய், தனது கையை அகற்றியவன், “சட்..” என்று மேசையில் தட்டிவிட்டு எழுந்துச் சென்றான். ஆதித்யா ஏன் அவ்வாறு செய்தான்.. என்றுப் புரியாது மீரா திகைப்புடன் அமர்ந்திருந்தாள்.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள கார்த்திக்கிடம் சென்று அவனது தோளில் கையைப் போட்ட ஆதித்யா “என்ன எங்களுக்கு பிரைவஸி கொடுக்கறீயா இடியட்..! அந்தளவிற்கு நான் வொர்த் இல்லை..” என்றுச் சிரித்தான்.

கார்த்திக் “உன்னைப் போய் லவ் செய்கிறாள் பார்.. அவளைச் சொல்லணும்.” என்று மீராவை பார்த்தான், அவள் அவர்களைத் தான் குறிப்பாக ஆதித்யாவை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கார்த்திக் அவளையும் அழைக்கவும், அவள் எழுந்து வந்தாள், ஆனால் ஆதித்யா “இரு வந்து விடுகிறேன்..” என்று அகன்றான். கார்த்திக் பெருமூச்சு விட்டவாறு நின்றான்.

பெரிய டின் போன்வற்றில் இருந்த சாக்லெட் பவுடரை வரிசையாக நின்றிருந்தவர்களின் கையில் கொடுத்ததை ஆளுக்கொரு வேண்டுதல் வைத்துக் கொண்டு போட்டார்கள். அவர்களது முகத்தில் அத்தனை மகிழ்ச்சி! கார்த்திக் மற்றும் மீராவின் முறை வரும் பொழுது.. கார்த்திக் மகிழ்ச்சியுடன் தங்களது பங்களிப்பாக சாக்லேட் பவுடரை கொட்டினான். மீராவை கொட்டச் சொல்லும் பொழுது அவளது கவனம் அங்கு இல்லாததைக் கண்டு, அவளை அழைத்தான். மீரா அவனது அழைப்பிற்கு ம்ம் கொட்டியவாறு ஆதித்யா எங்கே என்றுத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு அவனைக் காணாது திகைத்தவள், கார்த்திக்கிடம் சொல்லவும் அவன் ஆதித்யாவை செல்பேசியில் தொடர்பு கொண்டவன், முகத்தில் டன் கணக்காய் அசடு வழிய செல்பேசியை வைத்தான்.

மீரா ஆதித்யா என்ன சொன்னான் என்றுக் கேட்கவும், “போ மீரா! திட்டுகிறான்.” என்றான்.

மீரா அவனை முறைத்தபடி “உன்னை விட சின்னவன் தானே, என்னை விட ஒரு வயது தான் பெரியவன், அவனை அதட்ட தெரியாதா..” என்று கார்த்திக்கை திட்டினாள்.

அதற்கு கார்த்திக் “பார்த்தியா நீயும் திட்டுகிறே..” என்கவும், தலையில் அடித்துக் கொண்டு கார்த்திக் தடுத்தும் கேளாது ஆதித்யாவை தேடிச் சென்றாள்.

கார்த்திக் அறை எடுத்து தங்கியிருப்பது ஹம் நகரின் எல்லைப்புறமாகும், அவன் தங்கியிருந்த பகுதியைச் சுற்றி அடர்ந்த காடுகள் நிறைந்திருந்தது. மரங்களும் செடிகளும் உறைப்பனி காரணமாக அசையாத சிற்பம் போல் காணப்பட்டது. ஆனால் அதன் அழகு குறையவில்லை. அந்த காபி ஷாப்பிற்கு பின்னால் இருந்த அந்த காட்டை தான் ஆதித்யா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று கார்த்திக்கிடம் போகிறேன் என்று முடிவெடுத்து சொன்ன பொழுதே சென்றிருக்கலாம் என்றுத் தோன்றியது. சட்டென்று திரும்பியவன் அவனுக்கு பின்னால் சற்று தள்ளி மீரா நின்றிருப்பதைப் பார்த்ததும் எரிச்சலுடன் காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தான்.

மீரா “ஆதி..” என்றவாறு பின்தொடர்ந்தாள்.

அந்த காபி ஷாப் சிறு குன்றின் சரிவில் அமைந்திருந்தது. மீராவை பார்த்ததும் ஆதித்யா எரிச்சலுடன் அந்த குன்றின் மேல் ஏறத் தொடங்கினான். ஆனால் மீரா விடாது அவனை அழைக்கவும், மாறாத எரிச்சலுடன் திரும்பியவன், “உனக்கு எத்தனைத் தரம் சொன்னாலும் புரியாதா..! உன்னைப் பிடிக்கலை, உன்னை லவ் செய்யலை என்றுச் சொல்கிறவன் பின்னால் எப்படி உன்னால் சுற்ற முடிகிறது. ஆண் ஒரு பெண்ணின் பின்னால் லவ் செய் என்றுச் சுற்றுவது தப்பு, முட்டாள்தனம் என்றால்.. நீ செய்வதும் தப்பு தானே..” என்று பான்ட் பாக்கெட்டிற்குள் கரங்களை விட்டவாறுச் சொன்னான்.

ஆதித்யா குன்றின் மேல் ஏறிக் கொண்டிருந்ததால் உயரமான இடத்தில் நின்றிருந்ததால் நிமிர்ந்து அவனைப் பார்த்த மீரா “தப்புத்தான் ஆதி! உனக்கு ஒரு விசயம் தெரியுமா! நான் உன்னை லவ் செய்கிறேன் என்றுத் தெரிந்த பின்பும், உன்னை விட்டு போக தான் நினைத்தேன். உன்கிட்ட என் காதலை சொல்லணும் என்றெல்லாம் தோன்றவில்லை. ஆனால் உன் அட்டென்ஷன் என்கிட்ட இருக்கு.. என்றுத் தெரிந்த பின் தான் என்னால் உன்னை விட முடியும் என்றுத் தோன்றலை. உன்கிட்ட வெறுப்பு மட்டும் இருந்திருந்தால் நான் என் வழியில் போயிருப்பேன். ஆனால் என் மேல் உனக்கு வெறுப்பு, பிடிக்கலை என்பது என்பதோடு எதோ பிடிப்பும் இருக்கு..! அதுதான் என்னை உன் பின்னால் வரச் சொல்கிறது. அதனால் நான் இப்படி வருவதிற்கு நீதான் காரணம் ஆதி..! இப்போ கூட திரும்பி பார்க்காமலேயே நான்தான் வந்திருக்கிறேன் என்று நீ எப்படிக் கண்டுப்பிடிச்சே..” என்றுக் கேட்டாள்..

மீரா கூறியதை முழுவதையும் கேட்ட ஆதித்யா “எஸ் ஒத்துக்கிறேன்! பிடிப்பு இருக்கு, ஐ பிஸிக்கலி நீட் யு..! உனக்கு ஒகேவா..” என்று இரக்கமே இல்லாமல் கேட்டான்.


காதல் இல்லாமல் கலவியுண்டா..?

உண்டெனில் அதற்கு பெயர் வேறல்லவா..!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11


ஆதித்யா கேட்டதில் மீராவின் மனதில் மீண்டும் திக்கென்ற உணர்வு தோன்றியது. அவளது முகத்தை பார்த்த ஆதித்யா சத்தமாக சிரித்தான். அந்த சிரிப்பு அவளைப் பலவீனமாக்குவதற்கு பதில் பலத்தைக் கொடுத்தது.

‘இல்லை! இவன் மீண்டும் தன்னை நிலை குலைய செய்து விலக்க முயல்கிறான். ஹோட்டலிலும் இந்த வார்த்தைகளைச் சொல்லித்தான் அவளை விரட்டினான். அவனின் உணர்வுகளை அவனே கொச்சைப் படுத்திக் காட்ட முயல்கிறான். அவளது உள்ளுணர்வுகள் சொல்வது உண்மையெனில் அவளுக்கு சரியான வாழ்க்கை துணை அவன்தான்…!’

இவ்வாறு சொல்லித் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா “என்ன நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்கட்டுமா..” என்று வேகமாக கீழிறங்கி வந்தான். என்ன நிரூபிக்க போகிறான் என்று அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அருகில் வந்தவன், அவளைப் பற்றி இதழணைத்தான்.

இதை எதிர்பாராத மீரா திடுக்கிட்டு விலக முயன்றாள். ஆனால் அவளால் இன்ச் கூட நகர முடியவில்லை. வன்மையாக தொடங்கிய அவனது இதழணைப்பு.. மென்மையாகியது. வன்மையை கையில் எடுத்தவன் அவளது மென்மையில் அவன் குலைந்து.. மென்மையாக கையாண்டான். வன்மையாக இதழணைப்பில் ஆண் மகனின் உணர்வுகளைத் தாங்கி கொள்ள முடியாது திணறிய மீரா பின் அவனது மென்மையான அணுகலில் உருகி தான் கரைந்தாள். அவளது உருகலை உணர்ந்த ஆதித்யா திடுக்கிட்டு.. சட்டென்று விலகினான்.

அவளோ இன்னும் அவ்வுணர்வுகளின் சதிராட்டத்தில் இருந்து வெளி வர இயலாதவளாய் தடுமாறி மண்டியிட்டு அமர்ந்துவிட்டாள்.

திரும்பி நின்று சிகையைக் கட்டுப்படுத்த முயன்ற ஆதித்யாவால் அது முடியாமல் போகவும், அந்த கோபத்தை அவள் மேல் காட்டினான்.

மண்டியிட்டு அமர்ந்திருந்தவளிடம், “என்ன பிடித்திருக்கிறா! இன்னைக்கு நைட் என் ரூமிற்கு வருகிறாயா..” என்று கோணல் சிரிப்புடன் கேட்டான். அதைக் கேட்டு அமர்ந்த நிலையிலேயே நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “நமக்கு மேரேஜ் ஆனால் அன்று நைட் கண்டிப்பாக வருகிறேன்.” என்றாள்.


அதைக் கேட்டு “மேரேஜ்ஜா..” என்று இகழ்ச்சியாக சிரித்துவிட்டு மறுபடியும் குன்றில் ஏறினான்.

மீரா எழுந்து “ஆதி..” என்று அழைத்தவாறு அவனது பின்னால் சென்றவள், “ஆதி..!” என்று மீண்டும் அழைக்கவும், சடார் என்றுத் திரும்பியவன், “உன்கிட்ட எனக்கு என்ன பிடித்திருக்கு என்று நிரூபித்த பிறகும் பின்னாலேயே வருகிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா..! ஆனால் எனக்கு உன்னைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கு..” என்று முகத்தைச் சுளித்தான்.

அவனது வார்த்தை சரியாக அவளைத் தாக்கியது. கண்களை மூடி கண்ணீரை அடக்கியவாறு நிற்கவும், ஏளனத்துடன் திரும்பி சென்றான். அவன் செல்வதைப் பார்த்து மீரா மீண்டும் பின்னால் ஏறியவாறு, “என் பாட்டி என் தாத்தாவை லவ் செய்து ஒன்றும் மேரேஜ் செய்யலை. ஆனால் முதல் வருட கல்யாண நாளை மூன்று மாத குழந்தையுடன் தான் கொண்டாடினாங்க, முப்பது வருடம் தான் அவர்கள் தம்பதிகளாக வாழ்ந்தாங்க, என் தாத்தா இறக்கும் பொழுது, என் பாட்டியோட கையை பிடிச்சுட்டு.. உன் கூட இன்னும் வாழணும் என்ற ஆசை இருக்கே பரிமளம் என்று அழுதார். என் தாத்தா இறந்ததும்.. என் பாட்டி ரொம்ப டிப்ரெஷனுக்கு போயிட்டாங்க, அதனால் என் அப்பா என்னை பாட்டி கிட்ட இந்தியாவிலேயே விட்டுட்டு வந்துட்டாங்க, அங்கே இருக்கும் பொழுது.. என் பாட்டி எவ்வளவு பொறுமைசாலி என்றும் என் தாத்தா எவ்வளவு கோபக்காரர் என்றும் தெரிந்தது. அப்போ கண்ணில் பார்த்தது, காதில் கேட்டதிற்கு சரியாக அர்த்தம் புரியவில்லை. இப்போ யோசிக்கும் பொழுது.. எல்லாவற்றிக்கும் அர்த்தம் புரிகிறது. தாத்தா இறந்த சமயம் துக்கம் விசாரிக்க என்று வீட்டு வருகிறவங்க, பாட்டியை பெருமையாக பேசுவதாக நினைத்து.. தாத்தா மாதிரி புரிந்துக் கொள்ள முடியாதவரிடம் குடும்பம் நடத்தியதைப் பெருமையாக சொல்வாங்க, ஆனால் பாட்டி எந்த இடத்திலும்.. தாத்தாவை விட்டுத் தர மாட்டாங்க, எல்லாரும் ஒரே மாதிரி இருந்து விட முடியாது, அவர் அப்படித்தான் இருப்பார், ஆனால் அவரையும் புரிந்துக் கொண்டு வாழ்ந்த அவர் மனதில் இடம் பிடித்த நான்! இப்போ அவரை இழந்த துர்பாக்கியசாலியாக இருக்கிறேன் என்று அழுவாங்க..! அப்பறமும் பாட்டி தாத்தாவுடன் வாழ்ந்ததைப் பற்றி நிறையா சொல்வாங்க, இன்று வரை சொல்லிட்டு இருக்கிறாங்க, அதெல்லாம் கேட்டு வளர்ந்த எனக்கு அவங்க தான் ஐடியல் கப்பிளாக தெரிந்தாங்க..! அந்த மாதிரி நாமும் வாழலாம் ஆதி..” என்று சொன்னவளுக்கு.. அப்பொழுது ஆதித்யாவுடனான காதலுக்கு மேலும் ஒரு தெளிவு ஏற்பட்டது.

எனவே குன்றின் மேல் ஏறியவாறு பேசியதால் மூச்சு வாங்கியவாறு “ஆமா ஆதி! நானும் உன்னை வெறுக்க தான் நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும், உன்னை லவ் செய்வது சரித்தான் என்பதற்கான காரணங்கள் கூடிட்டே போகுது..” என்றாள்.

பான்ட் பாக்கெட்டில் இருகரங்களையும் விட்டபடி மீரா பேசியதைக் கேட்டவாறு ஏறியவனுக்கு ஏளனச்சிரிப்பு தான் வந்தது. அவன் நிற்காது செல்லவும், மீரா சற்று சத்தமாக “உன்னை எனக்கு பிடிக்காமல் போவதற்கு வழியாவது சொல்லிட்டு போ..! எனக்குமே இப்படி உன்கிட்ட கெஞ்சுவது பிடிக்கலை.” என்றாள்.

ஆதித்யா நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான். நின்ற இடத்தில் இருந்து உயரமான இடத்தில் ஆதித்யா நின்றுக் கொண்டிருந்ததால், தலை நிமிர்த்தி அவனை மூச்சு வாங்க பார்த்தாள்.

ஆதித்யா நிதானமாக “நான் என்பது என் பேரும், என் உருவம் மட்டும் இல்லை. அதனால் வீணா மனம் நோகாமல்.. வந்த வழியே திரும்பி போயிரு..” என்றுவிட்டு செல்ல தொடங்கினான்.

உடனே மீரா “ஆதி! நீ சின்ன வயதில் இருந்து குடும்பத்தில் இருந்து தனியாகவே வாழ்ந்ததால்.. நீ தனியாக இருப்பது போல், மற்றவங்க உன்னைத் தனிமைப்படுத்துவது போல் தோன்றுகிறது. ஆனால் நீ தனியாக இல்லை என்று உணர்ந்துவிட்டால் சரியாகிரும் ஆதி! முதலிலேயே உன் வீட்டில் நீ ஒட்டாமல் இருக்கிற பொழுது.. காவ்யாவை நீ காதலிக்கிறேன் என்றுச் சொன்னதிற்கு உன் வீட்டில் ஒத்துக்கலையா..! அதுதான் இப்படியாகிட்டே என்று நினைக்கிறேன். நான் எல்லாவற்றிக்கும் சேர்த்து.. அன்பைத் தருகிறேன் ஆதி..!” என்றாள்.

மீரா பேசியதைக் கூர்மையான பார்வையுடன் கேட்டவன், “கார்த்திக் கிட்ட என்னைப் பற்றி துண்டி துருவியிருப்ப போல..” என்றுச் சிரித்தான். பின் “அவனுக்கு தெரியாத பல விசயங்கள் என்கிட்ட இருக்கு..! அவனுக்கே என்னைப் பற்றி பாதி தான் தெரியும். நீ அவனிடம் இருந்து தெரிந்துக் கொண்டது இன்னும் பாதி தான்..! இதை வச்சுட்டு என்னைப் பற்றித் தெரிந்தவள் மாதிரி பேசுகிற பாரு..! நிஜமா எனக்கு சிரிப்பாக வருது. வீணா வந்து மாட்டிக்காதே..! போய் விடு..! இனியும் என் பின்னாடி வந்தால்.. ஒரு பெண் என்றுக் கூடப் பாராமல் அறைந்து விடுவேன். உன் பேமலி முன்னாடி கூட்டிட்டு போய் மானத்தை வாங்கி விடுவேன், என்ன சொல்வேன் என்றுக் கேட்காதே ரொம்ப மோசமா சொல்லிவிடுவேன். இதை வார்னிங் மாதிரி எடுத்துக்கோ..” என்றுவிட்டு அகன்றான்.

ஆதித்யா பேசியதைக் கேட்ட மீராவிற்கு அப்பொழுதும் ஏன் இப்படித் தன்னைத் தவிர்க்கிறான் என்றுத்தான் வருத்தமாக இருந்தது. எப்படியும் ஆதித்யாவிடம் பேசிவிட்டு தனது குடும்பத்தினரிடம் பேச வேண்டும் என்று அவள் முடிவு செய்திருந்தாள் தான்..! தற்பொழுது ஆதித்யாவின் தொடர்ந்த வெறுப்பால்.. கார்த்திக்கை தவிர்த்ததை எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று அஞ்சினாள். கண்களை மூடியவாறு நின்றவளுக்கு மூடிய இமைகளின் வழியாக கண்ணீர் வழிந்தது. மெல்ல அவன் சொன்னதை மீண்டும் நினைத்துப் பார்த்தாள். அவளை விலக தான் சொல்கிறான், அதற்கு என்ன அர்த்தம்? அவளைப் பிடிக்கவில்லை என்பதா! அல்லது அவளுக்கு துன்பம் வந்துவிடக் கூடாது என்பதா! அதற்கான விடையை அறிந்தாள், உடனே இமைகளைத் திறந்தால்.. அவனுக்கு அறிவுரை கூறியதால் கார்த்திக்கின் பொருளாதாரத்தில் இறக்கம்! காவ்யா அவனை காதலிக்கிறாள் என்றுத் தெரிந்ததால் அவளது வாயாலேயே இல்லை என்றுச் சொல்ல வைத்ததோடு மட்டுமல்லாது, ரௌடிகளின் மூலம் தொல்லை என்று மிரட்டியிருக்கிறார்கள். அதுபோல் அவளுக்கும் துன்பம் வரக் கூடாது என்றுத்தான் தன்னை விலக்குகிறானோ என்ற நம்பிக்கை தோன்றியதும், அதைப் பிடித்துக் கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்துப் பார்த்தாள். ஆதித்யா அங்கு இல்லை. உடனே பரபரப்புடன் ஏறினாள். குன்றின் மேல் ஏறியவளுக்கு அதற்கு அந்த பக்கம் அடர்ந்த காடு தான் காணப்பட்டது. அதற்குள் சென்றிருப்பானோ அவனது பெயரை அழைத்தவாறு அதற்குள் சென்றாள்.

“ஆதி..” என்று நடுங்கிய பற்களைக் கடித்துக் கொண்டு அழைத்த மீராவிற்கு ஜெர்மனியின் குளிர் தோலைத் தாண்டி எலும்புகள் ஊடுருவி ஊசிகளால் குத்தியது போல் இருந்தது. ஆனால் அவன் இல்லாமல் சென்று விட மட்டும் தோன்றவில்லை. அடர்ந்த கிளைகள் கொண்ட மரங்களால் சூழ்ந்திருந்த இடத்தில் சூரியனை பனிமேகங்கள் மறைத்து இருந்ததால் வெளிச்சம் கூட நுழையாமல் இருண்ட காடு போல் காணப்பட்டது. கண்களை நன்றாக விரித்து மீண்டும் சுற்றிலும் தேடினாள். ஒரு மரத்திற்கு அடியில் யாரோ அமர்ந்திருப்பது போன்று தோன்றவும், சூழ்ந்திருந்த பனியைப் பொருட்படுத்தாதது முடிந்த வரை வேகமாக சென்றாள்.

நெருங்க நெருங்கவே.. அமர்ந்திருப்பது ஆதித்யா என்று தெரிந்துவிடவும், அவனுக்கு அருகே சென்றதும் வேகமாக வந்ததால் மூச்சு வாங்கியவாறு நின்றாள். அவள் வந்து நின்றது தெரிந்தாலும் திரும்பியும் கூடப் பாராமல் “நீ சொன்ன கேட்க மாட்டியா..! ஏன் பின்னாடியே சுற்றறே..? இங்கே இருந்து போயிரு..” என்றான்.

அதற்கு மீரா “நீங்க தானே உங்க பின்னாடி சுற்ற வைத்தீங்க..! இப்போ போயிரு என்றால் எப்படிப் போவேன். முடியாது..” என்றுத் திடமாக பதிலளித்தாள்.

அதற்கு ஆதித்யா தன் பார்வையைத் திருப்பாது.. இளக்காரத்துடன் “எத்தனை நாட்கள் உன்னால் இப்படி என்கிட்ட உன் காதலை வலியுறுத்திட்டே இருக்க முடியும். நான் இந்தியாவிற்கு போனதும் என்ன செய்வே? பின்னாடியே வருவேன் என்று முட்டாள்தனமாக பதில் சொல்ல மாட்டேன்னு நினைக்கிறேன்.” என்றுச் சிரித்தான்.

மீரா “ஆமா ஆதி! லவ் என்கிற என்னோட ஃபீலிங்ஸ் உன்னை விட மாட்டேன் என்கிறது. நீ சொன்ன மாதிரி பைத்தியக்காரத்தனமாக தான் தெரிகிறது. ஆனால் என்னால் விட முடியலை, ஏன் என்றுத் தெரியலை. சம்திங் எதோ ஒன்று என்னை உன்பக்கம் இழுத்துட்டே இருக்கு, உன்னை விட்டு விடலாம் என்று நினைத்தாலும், அதை நோக்கி என் மனம் செல்ல மாட்டேன் என்கிறது. அதற்கு பதிலாக உன்மேல் இப்படி பைத்தியமாக இருப்பது சரிதான் என்று உணர்த்துவது போல் எதாவது ஒரு விசயம் வந்துட்டே இருக்கு. ஆனால் உன்னோட பர்சனலுக்குள்ள என்னை அலோவ் செய்யலைன்னா தொடர்ந்து வற்புறுத்துவதால் பயனில்லை என்றுத் தெரியும் ஆதி! அது சரியுமில்லை, அதனால் நான் அதற்கு பிறகு உன் பின்னாடி சுற்ற மாட்டேன். ஆனால் என்னால் உன்னை மறக்க முடியும் என்றுத் தோன்றலை. உன்னை மறக்க முடியும் என்கிற வரை நான் உன்னை நினைச்சுட்டு தான் இருப்பேன்.. என்னுடைய லைஃப்பில் இந்த பார்ட் ரொம்ப முக்கியமானது. என் அப்பா, அம்மா மாதிரி என் லவ்வர் என்ற உன்னோட உறவும் முக்கியமானது, அழகானது. அது அப்படியே தான் இருக்கும் ஆதி! ஆனால் என் லவ்வை தெரிவிக்க இப்போ சான்ஸ் இருக்கும் போது விட மாட்டேன்.” என்றாள்.

“சோ நீ போக மாட்டே..” என்றவாறு பென்ட்டில் ஒட்டியிருந்த பனியைத் தட்டியவாறு எழுந்தவன், அவளைப் பார்த்தபடி மரத்தில் ஒரு கையை ஊன்றி நின்றான்.

பின் கோணல் சிரிப்பு சிரித்தவன், “அப்பறம் என்கிட்ட ஏன்டா வந்தோமின்னு புலம்ப கூடாது..” என்று முடிக்கும் பொழுது அவனது முகம் இறுகியிருந்தது.

மீரா மறுப்பாக தலையசைத்த மறுகணம் அவனது இறுகிய அணைப்பில் அவள் இருந்தாள். அவனது இடியென சிரித்த சிரிப்பு சத்தம் பனியையும் மீறி அவளது மனதிற்குள் ஊசியென ஊடுருவியது. அவளது அச்சத்தையும் மீறி ஆதித்யா அவளை அணைத்திருப்பதை உணர்ந்தாள். அவனது இறுக்கமான அணைப்பில் தோன்றிய வலி மற்றும் அச்சத்தைப் போக்க அவனிடமே அடைக்கலமானாள். அவளும் அவளால் முடிந்த மட்டும் இறுக அணைத்தாள். அவளது அச்சம் மறைந்து அவனை மட்டுமே அவள் உணர்ந்தாள். அந்த வேளையில் மீராவை தன்னிடம் இருந்து பிரித்து.. அருகில் இருந்த மரத்தில் சாய்த்து நிறுத்தியவன், “என்னை மேரேஜ் செய்துட்டு என் கூட வர ரெடியா..?” என்றுக் கேட்டான்.

ஆதித்யா திடுமென கேட்கவும், மீரா திகைத்தாள். அவளது திகைத்த முகத்தைப் பார்த்து சிரித்த ஆதி “லவ் என்றால் என்ன! கூடச் சேர்ந்து வாழ்வது தானே, மனைவி என்ற ரிலேஷனோட முதல் ஸ்டேஜ் தானே அதைக் கேட்டதிற்கு ஏன் இப்படித் திகைக்கிறே!” என்றுச் சிரித்தான்.

உடனே மீரா “நாம் மேரேஜ் செய்துக்கலாம் ஆதி..” என்று வேகமாக தலையை ஆட்டினாள்.

அதைப் பார்த்தது உதட்டை எட்டாத சிறு முறுவலை பதிலாக தந்தவன், அவளது ஒருபுறம் தனது இடதுகரத்தை அவள் சாய்ந்திருந்த மரத்தில் ஊன்றியவாறு “ஆல்ரைட்! இப்பவே சொல்லி விடுகிறேன். என் கிட்ட இருந்து ரொம்ப எதிர்பார்த்து விடாதே! நம்பிக்கையையும் வைத்து விடாதே! அப்பறம் நீ ஏமாற்றம் அடைத்தால் நான் பொறுப்பில்லை. அதாவது அன்பே! ஆருயிரே! என் உலகமே நீதான் என்று உன் பின்னால் சுற்றி வழிய மாட்டேன், நீயில்லாமல் நானில்லை என்று வசனம் பேச மாட்டேன். ஏன் இதெல்லாம் சொல்கிறேன் என்றால் உன் பாட்டி தாத்தாவை பார்த்துட்டு நாம் இரண்டு பேரும் அப்படித்தான் இருக்க போகிறோம் என்றுச் சொன்னாய் பார்! நான் என்னால் சிரிப்பைத் தாங்க முடியலை. அந்த மாதிரி உன் அப்பா, அம்மா, பக்கத்து வீட்டுக்காரங்க என்று எல்லாரையும் பார்த்துட்டு அதே மாதிரியான வாழ்க்கையை என்னுடன் எதிர்பார்த்து விடாதே! அப்பறம் என் வீடு..! கார்த்திக் சொல்லியதை வைத்து கொஞ்சம் கணித்திருக்கலாம், ஆனால் நீ கணித்தது பாதி தான்! அதனால் அங்கே வந்து என்கிட்ட என்ன எது என்றுத் துண்டி துருவி என் எரிச்சலை சம்பாதித்து கொள்ளாதே..! பிளான்க் மைன்ட்டோட வந்தால் அந்த லைஃப்பிற்கு ஏற்ற மாதிரி வாழ்ந்துக்கலாம். அப்பறம் இன்னொரு விசயம் நீ எப்போ போக வேண்டும் என்று நினைத்தாலும் தாராளமாக போகலாம். அதற்கு தான் இதில் வந்து மாட்டாதே என்றுச் சொன்னேன். ஆனால் நீ கேட்கலை.” என்று கேலியாக சிரித்தான்.

வழக்கம் போல் புதிராக பேசியவனை பார்த்தவள், “நீங்க சொன்னதில் ஒன்று மட்டும் ரொம்ப பிடித்தது. பிளான்க் மைன்ட்டோட உன் கூட வாழ்க்கையைத் தொடங்க விரும்புகிறேன். ஆனால் எனக்கு இரண்டு பிராமிஸ் மட்டும் செய்வியா!” என்றுக் கேட்டாள்.

தலையைச் சரித்துப் பார்த்து சிரித்தானே தவிர அவன் பதில் பேசவில்லை. எனவே அவளே சொன்னாள்.

“நான் உன்னுடையவள், உனக்கு சொந்தமானவள் என்ற எண்ணம் இருக்கணும். அடுத்து என்னை கடைசி வரை கைவிட்டு விடக் கூடாது.” என்றாள்.

ஆதித்யா “முதலாவதை வேண்டுமென்றால் ஒத்துக்கிறேன். ஆனால் இரண்டாவதிற்கு நான் முதலிலேயே சொல்லிட்டேன். நீ போக விரும்பினால்..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே இடைப் புகுந்த மீரா “நான் போக விரும்பவில்லை என்றால் நீங்க என்னைப் போகச் சொல்ல கூடாது.” என்றுத் தீர்க்கமாக சொன்னாள்.

அவளைத் தன் கூர்விழியால் கூறுப் போட்டவன், பின் உதட்டில் குறுநகை மின்ன “ஒகே..” என்றவனின் கண்களில் பளபளப்பு கூடியது. அவளது இதழைப் பார்த்தவாறு.. “என்னை ரொம்ப டிஸ்டர்ப் செய்கிறது.” என்றுவிட்டு அவளது இதழை நோக்கி குனிந்தவன், அவளது இதழைச் சிறை செய்தான். அவனது சிறையெடுப்பில் மீரா தன் சுயநிலை மறந்தாள். நீண்ட காலமாக தோன்றிய சில நிமிடங்களுக்கு பின் மூச்சு வாங்கியவாறு நிமிர்ந்தவன், “லெட்ஸ் மூவ்! இட்ஸ் நாட் ரைட் பிளெஸ்..” என்றுச் சிரித்துவிட்டு முன்னால் நடந்தான்.

ஆதித்யா பிரிந்த பின்பும், இன்னும் அவனுள் இருந்து விடுபட முடியாமல் நின்றவள், அப்பொழுதே தனது ஜெர்கின் கீழே கிடக்க, தலைமுடி தாறுமாறாக இருக்க, கலைந்த ஓவியம் போல் இருப்பதை உணர்ந்தாள். அவசரமாக ஜெர்கினை எடுத்துப் போட்டுக் கொண்டு தலைமுடியை கோதி சரி செய்தவாறு ஆதித்யாவை பார்த்தாள். அவன் அவளைப் பார்த்தவாறு பின்னால் வைத்த எட்டுகளுடன் குறுநகை புரிந்துக் கொண்டிருந்தான். அந்த சிரிப்பு அவளை நாணமுற செய்தது. கன்னங்கள் சிவக்க தலைகுனிந்தவள், நிமிர்ந்த போது ஆதித்யா திரும்பி நடந்துக் கொண்டிருந்தான்.

உடனே மீரா “ஆதி…” என்று அவனுக்கு பின்னால் ஓடினாள். ஆதித்யா குன்றில் இருந்து இறங்கிக் கொண்டிருக்க, மீரா அழைத்ததும் திரும்பிப் பார்த்தான்.

மீரா “நீ உயிரே, அழகே என்று கொஞ்ச வேண்டாம், ஆனால் கையைப் பிடிச்சுட்டு போகலாம் தானே..! என்னை கைவிட மாட்டேன் என்றுச் சொல்லியிருக்கிற தானே..” என்றாள்.

அதைக் கேட்டு சிரித்த ஆதித்யா தன் கரத்தை அவள் புறம் நீட்டியவன், “நீதான் இறங்கி வரணும்..” என்கவும், விரைந்து வந்து அவனது கையில் தனது கரத்தை வைத்தாள். அடுத்த நொடி அவள் இழுக்கப்பட அவனது மார்பில் வந்து விழுந்தாள். அவளது தோளை தனது கரத்தால் வளைத்து தன்னுடன் நடத்தி சென்றான். சற்று முன் இங்கே வந்ததிற்கும்.. தற்பொழுது செல்வதிற்கும் இருக்கும் வித்தியாசத்தை அவளால் நம்ப முடியவில்லை. அவனது முகத்தைத் திரும்பிப் பார்த்தாள்.

நேராக பார்த்தவாறு நடந்துக் கொண்டிருந்த ஆதித்யா சிறு சிரிப்பு சிரித்து அவளைத் திரும்பிப் பார்த்தவன், புருவத்தை உயர்த்தி என்ன என்றுக் கேட்டான்.

மீரா “இத்தனை நேரம் அடம் பிடித்துக் கொண்டிருந்தே.. ஆனால் தீடீரென்று சரியென்று சொல்லிட்டே.” என்றுத் தயங்கியவாறுக் கேட்டாள்.

அதற்கு ஆதித்யா “நீ கெஸ் செய் பார்க்கலாம்..” என்றான்.

மீரா “பாவம் என்று நினைச்சியா..!” என்று அவனைப் பார்த்தாள், அவன் பதிலளிக்கவில்லை.

“எப்படியிருந்தாலும் மேரேஜ் செய்துக்கணும், அதற்கு உன்னைப் பிடித்திருக்கு என்றுச் சொன்னே.. நானே பெட்டர் என்று நினைச்சுட்டியா?” என்றுக் கேட்டாள்.

அதற்கும் அவன் சிரிப்பைத் தான் பதிலாக தந்தான்.

பின் சற்றுத் தயக்கத்துடன் “கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி சொன்ன மாதிரி பிஸிக்கல் நீட்டுக்காவா..?” என்றுக் கேட்டாள்.

அப்பொழுதும் ஆதித்யா பதிலளிக்காமல் இருக்கவும், “இல்லையென்றால் சம்திங் தோன்றியதாலா..” என்றுக் கேட்டு அவனது முகத்தைப் பதிலுக்காக பார்த்தாள்.

ஆதித்யா இம்முறை “வாவ்! வாவ்! நீ கெஸ் செய்தது எல்லாமே ஆல்மோஸ்ட் கரெக்ட்!” என்றான். பின் தொடர்ந்து “தேங்க்ஸ் டு யு..! பேருக்காக கூட நீ லவ் என்ற வார்த்தையை யுஸ் செய்யலை.” என்றான்.

அதற்கு மீரா கசந்த சிரிப்புடன் “அப்படிச் சொல்லியிருந்தால் அது பொய்யாச்சே..” என்றாள்.

ஆதித்யா “இப்பவே அலுத்துக் கொள்கிறே மாதிரி தெரிகிறது.” என்றவன், அவளைத் தன்னோடு மேலும் அணைத்துக் கொண்டவன், “நான் எப்பவும் எதை நினைக்கிறேனோ.. அதை நேரடியாக சொல்லி விடுவேன். உன்னைப் பிடித்திருக்க இன்னொரு காரணமும் இருக்கு..! நீ நன்றாக பேசுகிறாய், அப்பறம் இன்னொன்று இருக்கு..! அதற்கு நீதான் காரணம்.. என்னைப் பார்க்கும் போதெல்லாம்… உன் அட்டென்ஷனை என் மேலேயே வைத்து, என்னை டிஸ்டர்ப் செய்கிறே! அதுதான் உன்னைக் கூடவே வச்சுக்க தீர்மானிச்சுட்டேன்.” என்கவும், மீராவிற்கு அதுவே போதுமானதாக இருந்தது. நிம்மதியுடன் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

கையில் செல்பேசியை வைத்துக் கொண்டு இருவரையும் அழைக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த கார்த்திக் இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியுமாக பார்த்தான்.

கார்த்திக்கை பார்த்து சிரித்த ஆதித்யா “தொல்லை தாங்கலை. அதுதான் ஒத்துக்கிட்டேன். ஆனால் எத்தனை நாட்கள் தாக்கு பிடிப்பாள் என்றுத்தான் தெரியலை. காவ்யா… ஒருதரம் கேட்டதிற்கே ஓடிட்டா..!” என்றுச் சிரித்தான்.

அதைக் கேட்ட கார்த்திக்கின் முகம் சுருங்கியது.

பின் கார்த்திக் “உனக்கு நல்ல துணையாக இருப்பாள்டா! எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு..! இனி எல்லாம் சரியாகிரும் பாரு..” என்று ஆருடம் சொன்னான்.

அதைக் கேட்டு சிரித்த ஆதித்யா “சரியாக வேண்டாம், இன்னும் கெடாமல் இருந்தால் சரி..” என்றான்.

மீரா “நல்லதா பேசலாமே..” என்கவும், ஆதித்யா “நாளைக்கு மேரேஜ் ரெடியாக இரு..” என்றான்.

மீரா திகைத்து தான் போனாள்.

பின் “திடீர் என்று இப்படிச் சொன்னால் எப்படி.. நான் என் வீட்டில் சொல்லணும், அவங்களை கன்வின்ஸ் செய்யணும். அவங்க உங்க வீட்டில் இருக்கிறவங்க கிட்ட பேசணும்…” என்றுக் கூறிக் கொண்டிருக்கையிலேயே குறுக்கிட்ட ஆதித்யா “நடுவில் வேறு ஒருவன் வருவான், அவன் என்னை விட பெட்டராக தெரிவான், இல்லையென்றால் உன் வீட்டில் என்னைப் பிடிக்கலைன்னு சொல்வாங்க, உடனே என்கிட்ட வந்து அழுதுட்டு உன்னை மறக்க முடியலை, ஆனால் வீட்டில் ஒத்துக்க மாட்டேன்கிறாங்க என்று சீன் போடுவே, இல்லையென்றால் இதையெல்லாம் தாண்டி வந்து என் வீட்டில் கேட்கும் போது அவங்க மிரட்டினாங்க, அவமானப்படுத்தினாங்க.. என்று பயந்துட்டோ கோபப்பட்டு விலகியிருவே, இது எல்லாவற்றையும் விட என் முடிவை மாற்றினாலும் மாற்றி விடுவேன். நாளைக்கு மேரேஜ் நடக்கவில்லை என்றால் இதில் எதாவது ஒன்றுத்தான் நடக்கும். பரவாலையா..” என்றுச் சிரித்தான்.

திருமணம் செய்துக் கொள்ள போகும் பெண்ணிடம், உன்னை நன்றாக வைத்துக் கொள்வேன், காலம் முழுவதும் வைத்து காப்பாற்றுவேன், யார் மறுத்தாலும் உன்னை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது.. என்றுப் பேசினால் பரவாயில்லை.. இப்படிப் பேசும் நண்பனைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட கார்த்திக் அவர்கள் பேசிக் கொள்ள தனிமையைக் கொடுத்துவிட்டு சற்று விலகி நின்றான்.

ஆதித்யா பேசியதை முழுவதும் அடக்கப்பட்ட பொறுமையுடன் கேட்ட அவன் பேசி முடித்ததும் அடுத்த நொடி மீரா “ஒகே ஆதி! நாளைக்கு மேரேஜ் செய்துக்கலாம்.” என்றாள்.

அதற்கு ஆதித்யா “குட்! நான் இப்பவே உன் வீட்டிற்கு வந்து சொல்கிறேன்.” என்கவும், மீரா அவசரமாக மறுத்தாள். அவன் கூர்மையாக பார்க்கவும்.. மீரா கசந்த சிரிப்பு சிரித்து “என் மேல் நம்பிக்கை இல்லையா..! நீ சொல்ல வேண்டாம் என்றதற்கு காரணம் நீ அதிரடியாக போட்டு உடைப்பே.. அவங்க தாங்க மாட்டாங்க, அடுத்தது அவங்க உன்னை மறுத்துட்டா, நான் அவங்களை மீறி உன்னை மேரேஜ் செய்ய வேண்டியது வரும். அது எனக்கு விருப்பமில்லை. அதனால் மேரேஜ் செய்துட்டே அவங்க கிட்ட நானே சொல்கிறேன்.” என்றாள்.

அதைக் கேட்டு புன்முறுவலுடன் நன்றாக இருக்கையில் சாய்ந்தமர்ந்த ஆதித்யா “அப்பறம்” என்கவும், மீரா என்ன என்பது போல் பார்த்தவள், நாக்கை கடித்துக் கொண்டு.. “இப்போ டிக்கெட் புக் செய்தாலும் கிடைப்பதற்கு எப்படியும் இருபது நாட்கள் ஆகிவிடும். உன்னுடையதையும் தள்ளிப் போட முடியுமா என்றுப் பார்க்கலாம்.” என்றாள்.

அதற்கு மறுப்பாக தலையசைத்த ஆதித்யா “நான் நாளை மறுநாள் கிளம்பி விடுவேன். நான் போயாக வேண்டும்.” என்றவன், தொடர்ந்து “மீரா இத்தனை கஷ்டங்கள், சங்கடங்கள் தேவையா..! கடைசியாக நல்லா யோசிச்சுக்கோ..” என்றான்.

ஆனால் மீராவோ “இப்போ தான் என்னை முதன் முறையா பேர் சொல்லிக் கூப்பிட்டு இருக்கிறே..” என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

ஆதித்யாவிற்கே ஆச்சரியமாக இருந்தது அப்படியா என்றுக் கேட்டான். பின் கார்த்திக்கை அழைத்து இருவரும் நாளைக்கு திருமணம் செய்துக் கொள்ள போவதாக அறிவித்தனர். அதைக் கேட்ட கார்த்திக் அதிர்ந்தான்.

மீராவிடம் மெதுவாக “நேரடியா மேரேஜ் ஏன்? இரண்டு பேரும் முதலில் நன்றாக பழகுங்க..” என்றவன், பின் மீராவை பார்த்து “உன் வீட்டில்..” என்று இழுக்கவும், ஆதித்யா “இன்னும் உன்னைத்தான் மாப்பிள்ளை என்று நினைச்சுட்டு இருப்பாங்க… ஆனால் மீரா வீட்டில் பர்மிஷன் வாங்கி பின் மேரேஜ் செய்வதற்கு எல்லாம் எனக்கு நேரமில்லை. அப்பறம் நான் மீராவிடம் பை சொல்லிவிட்டு என் வழியைப் பார்த்துட்டு போக வேண்டியது தான்..” என்கவும், கார்த்திக் அவனை அழுத்தமாக பார்த்தான். பின் கார்த்திக் “ஆமாம், இப்போ உங்க இருவருக்கும் மேரேஜ் நடக்கலைன்னா எப்பவும் நடக்காது.” என்றான். தற்பொழுது அதிர்வது மீராவின் முறையாகிற்று. ஆதித்யா சத்தமாக சிரித்தான்.

பின் அன்றே நாளை நடக்க இருக்கும், திருமணத்திற்கு வேண்டிய மாங்கல்யம் வாங்குவது, காமாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சகரை பார்த்து பேசுவது போன்ற வேலைகளை மூவரும் சேர்ந்து முடித்தார்கள். அர்ச்சகர் மார்கழி மாதத்தில் திருமணம் முடிக்க கூடாது என்கவும் கார்த்திக் தயங்கினான். ஆனால் மீரா தெய்வத்தின் முன் நடப்பதால் தங்களது வாழ்வு நன்றாகவே இருக்கும் என்று நம்பிக்கை கொண்டாள். பெரும்பாலும் மீராவும், கார்த்திக்கும் செய்ய ஆதித்யா வேடிக்கை தான் பார்த்தான். கோவிலில் அனைத்து ஏற்பாட்டையும் செய்து முடித்த பின் கிளம்புகையில் அந்த அர்ச்சகர் மீராவிடம் “சில நாட்களுக்கு முன் நீங்க இங்கே வந்திருக்கேளா..! பார்த்த மாதிரி இருக்கு..” என்றுக் கேட்டார். மீரா அப்படியில்லாமல் இப்படியில்லாமல் தலையை ஆட்டிவிட்டு வந்தாள்.

இரவு வீட்டிற்கு சென்ற மீராவிற்கு அவர்களின் முகத்தைப் பார்த்துப் பேச முடியவில்லை. அவளின் முகத்தைப் பார்த்தே என்ன விசயம் என்றுக் கேட்டவர்களிடம் உண்மையைச் சொல்லி விடுவோமோ என்று பயத்தில் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

தனது வாழ்வின் முக்கியமான நிகழ்வை, தனக்கு உயிர் தந்து வளர்த்திய தனது குடும்பத்தினரிடம் சொல்லாமல் செய்வதை தன் வாழ்வின் பெரும் குற்றமாக கருதி மருகினாள்.

அவர்களிடம் சொல்லி அவர்கள் மறுத்துவிட்டால் தன்னால் அதை மீற முடியாது என்பதும் ஆதித்யாவை திருமணம் முடிக்க இருப்பதை மறைக்க காரணமாக இருந்தது. இவ்வாறு உறக்கம் வராமல் புரண்டு அந்த இரவு கழிய திருமணநாளும் விடிந்தது.

தீபாவளி அன்று அவளுக்கு எடுத்து தந்த பட்டுப்புடவையை கட்டாமல் வைத்திருந்தாள். கண்ணில் பெருகிய கண்ணீருடன் அதைக் கட்டினாள். அடுத்து ஹரிஹரன் மற்றும் தனலட்சுமியிடம் சென்றவள், தோழியின் திருமணத்திற்கு செல்வதாக கூறினாள். அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள், கூடவே அவள் கேளாமலேயே உனக்கும் இப்படியொரு மங்கள காரியம் நடக்கட்டும் என்றவர்கள், கார்த்திக் பெயரை சொல்லும் பொழுது அதைக் கவனியாதவள் போல் சென்றாள். பரிமளத்திடம் ஆசீர்வாதம் செய்ய சொல்லி வாங்கி கொண்டவள்.. அவர் காரணம் கேட்கும் முன் அங்கிருந்து அகன்றாள். ஒருபக்கம் மகிழ்ச்சியும், ஒரு பக்கம் மனதில் ஏற்றிய பாரமுமாக காமாட்சியம்மனின் திருகோவிலை வந்தடைந்தாள். அவளுக்கு முன் வந்து ஆதித்யாவும், கார்த்திக்கும் காத்திருந்தார்கள்.

அணிந்திருந்த ஜெர்கினை காரிலேயே கழற்றி வைத்துவிட்டு காரில் இருந்து இறங்கியவள், மனதில் சிறு சஞ்சலத்துடன் கோவிலை நோக்கி வந்தாள். பெற்றோர்களிடம் மறைக்கிறோமே என்ற குற்றவுணர்வும், திருமணம் என்ற உறவின் மூலம் புதிதாக கிடைக்க போகும் புதிரான ஆதித்யாவை நினைத்து சிறு குறுகுறுப்புமாக தயக்க நடையுடன் வந்தாள்.

கோவிலின் படிக்கட்டியில் தழைய தழைய கட்டியிருந்த புடவையை உயர்த்தி பிடித்து வெண்பாதங்களை வைத்தவள், “மீரா..” என்ற அழைப்பில் நிமிர்ந்தாள். ஆதித்யா அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். அவளுக்கருகே வந்தவன், தனது கரத்தைத் தாங்கலாக நீட்டினான். அவனைப் பார்த்தவாறு அவனது கரத்தில் தனது மென்கரத்தை வைத்தவள்.. அத்தனை நேரம் அவளுக்கு இருந்த சஞ்சலமும், குறுகுறுப்பும் மறைவதை உணர்ந்தாள்.

அம்மனின் சன்னதி வரை கரம்பற்றி அழைத்து வந்தவன், அதன் பின்பும் கையை விடவில்லை. மகிழ்ச்சியும், நாணமுமாக அவனை ஏறிட்டு பார்த்தவள்.. அவனது கண்களில் இருந்த வெறுமையைப் பார்த்து திகைத்தாள்.

அப்பொழுது மட்டுமில்லாமல் அதன் பின் அர்ச்சகர் செய்ய சொன்ன சடங்குகளை இயந்திரத்தனத்துடன் தான் செய்தான். மீரா சிறிது ஏமாற்றம் அடைந்தாலும் ‘தன்னிடம் எதையும் எதிர்பார்க்காதே..’ என்று அவன் முன்பே சொல்லியதை வருத்தத்துடன் நினைத்துப் பார்த்துக் கொண்டாள். கடைசியாக மாங்கல்யத்தை அவளது சங்கு கழுத்தில் அணிவித்த பொழுது கூட அவனின் பார்வையில் உணர்ச்சியில்லை. அவள் அவளை ஏக்கத்துடன் பார்ப்பதைப் பார்த்து கோணல் சிரிப்பை மட்டுமே தந்தான்.

இவ்வாறாக ஆதித்யாவும், மீராவும் வாழ்க்கையில் தங்களைப் பிணைத்துக் கொண்டார்கள்.

கார்த்திக் அவர்களை மனமாற வாழ்த்தினான். அவனது வாழ்த்தில் அவ்வாறே நடக்கட்டும் என்று மீரா மகிழ்ச்சியும், நம்பிக்கையும் கொண்டாள்.

மாலையும் கழுத்துமாக இருவரும் படியிறங்கி வந்தார்கள். கணவன் என்ற புது உறவாய் மாறியவனை மெல்ல திரும்பி பார்த்தாள். அவனோ அவசரம் அவசரமாக மாலையைக் கழற்றிக் கொண்டிருந்தான்.

மீரா திகைத்து நிற்கையிலேயே அவளது கையில் கொடுத்தவன், கார்த்திக்கிடம் திரும்பி “போகலாமா..” என்றுக் கேட்டான். அதைக் கேட்டு மேலும் அதிர்ந்த மீரா கார்த்திக்கை கேள்வியாக பார்த்தாள். கார்த்திக் ஆதித்யாவே தனது மனைவியிடம் காரணத்தைச் சொல்வான், என்று எதிர்பார்த்தான். ஆனால் அவனோ காரை நோக்கி நடந்துக் கொண்டிருந்தான். எனவே அவனும் அவசர அவசரமாக “மீரா! இன்னைக்கு ஆதி சைன் போடணும். அந்த செக்ரட்டரி பத்து கால் பண்ணியாச்சு..! கண்டிப்பாக போயாகணும்..” என்றான்.

மீரா ஆதித்யாவை பார்த்தவாறு “ஓ.. சரி!” என்றாள். அவள் ஆதித்யா சொல்லிக்கலாம் என்று எதிர்பார்க்கிறாள் என்று கார்த்திக்கிற்கு புரிந்தது. ஆனால் ஆதித்யா முதலிலேயே வித்தியாசமானவன், தனிப்பட்டவன் அதன் பிறகு என்ன நடந்ததோ அது அவனை மேலும் தனிமைப்படுத்தி விட்டது என்று கார்த்திக்கிற்கு தெரியும், ஆனால் மீராவிற்கு தெரியாதே! அவனை சிறிது சிறிதாக சரிப்படுத்துவது அவளின் கையில் தான் உள்ளது. ஆனால் புது பெண்ணாய் அவளது ஏக்கமும் நியாயமே.. என்று அவளைப் பாவமாக பார்த்தவாறு ஆதித்யாவின் பின்னால் சென்றான்.

காரின் கதவை திறந்தவன், திரும்பி ஏறுகையில் ஆதித்யா மீராவிடம்.. “அப்பறம் ஃபோன் செய்கிறேன்.” என்று அவளை நிமிர்ந்து கூடப் பாராது சொல்லிவிட்டு ஏறிக் கொண்டான். கார் அகன்று சில நிமிடங்கள் ஆன பின்பும் அதே இடத்தில் நின்றிருந்த மீரா பின் சிறு பெருமூச்சுடன் கையில் இருந்த மாலைகளைக் கவனமாக எடுத்துக் கொண்டு அவளது காரில் கொண்டு வைத்தாள்.

காரில் அமர்ந்து ஜெர்கினை அணிந்து அதன் ஜிப்பை போட குனிந்தவளின் கண்களில் மஞ்சள் மணத்துடன் காணப்பட்ட மாங்கல்யம் கண்ணில் பட்டது. அவளது வெறுமையையும் மீறி சில்லென்ற உணர்வு தோன்ற மனதில் உற்சாகம் பிறீட்டது. வீட்டிற்கு செல்ல மனமில்லை அவளது முகத்தில் தோன்றிய பளபளப்பிற்கு காரணம் கேட்டால் பதிலுமில்லை என்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக தொடங்கப்பட்ட அருங்காட்சியகத்திற்கு சென்று மற்றவர்களின் கொண்டாட்டங்களையும் மகிழ்ச்சியையும் பார்த்து மகிழ்ந்தாள்.

ஆதித்யா செல்பேசியில் அழைப்பேன் என்றுச் சொன்னதால் அவனின் அழைப்பிற்காக காத்திருந்தவாறு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளது வீட்டினரிடம் இருந்து தான் பல முறைகள் அழைப்புகள் வந்துவிட்டது.

இரவு நெருங்கையில் வீட்டிற்கும் செல்ல முடியாமல் ஆதித்யாவையும் தொடர்பு கொள்ள முடியாமல் நடைப்பாதையில் குளிரைத் தாங்க முடியாமல் நடந்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளது செல்பேசி ஒலித்தது. பல முறை போல் இம்முறையும் வீட்டினராக தான் இருக்கும் எவ்வாறு அவர்களுக்கு பதில் சொல்வது என்றுத் தயக்கத்துடன் எடுத்துப் பார்த்தாள். ஆதித்யாவிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. மகிழ்ச்சியுடன் எடுத்து காதில் வைத்தாள்.

ஆதித்யா “என் ரூமிற்கு வா..” என்றுவிட்டு வைத்துவிட்டான்.

அவ்வளவுத்தானா.. என்பது போல் செல்பேசியை பார்த்துவிட்டு ஆதித்யா தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்ல காரை நோக்கி விரைந்தாள்.

ஆதித்யா தங்கியிருந்த அறைக்கு முன்னால் நின்றிருந்த மீராவிற்கு அறுப்பட்ட அவளது திருமண கொண்டாட்டம் தொடர்வதைப் போல் இருந்தது. மீராவிற்கு அவளது தோழிகளின் திருமணவிழாவில் அவர்களை கேலி செய்து ஒரு வழியாக்கியது நினைவு வந்தது. தற்பொழுது அவர்களின் திருமணத்திற்கு ஒரே சாட்சி கார்த்திக் தான். அவன் தங்களைக் கேலி செய்து ஓட்டுவானோ என்று நாணம் கொண்டாள். அந்நேரத்தில் கதவு திறக்க ஆதித்யா நின்றிருந்தான். அவன் வழி விட உள்ளே வந்தவள், அறையில் யாரும் இல்லாதிருப்பதைக் கண்டு ஆதித்யாவிடம் “கார்த்தி எங்கே ஆதி?” என்றுக் கேட்டாள்.

அதற்கு ஆதித்யா கதவை சாத்தியவாறு “கார்த்தியா? அவன் எதற்கு இப்போது..!” என்றுச் சிரித்தான்.

மீரா “கார்த்தி உன் கூடத் தான் இ..இ..இ..ரு..ந்தான்…” என்று முடிகையிலேயே அவளது குரல் நலிந்து ஆதித்யாவின் சிரிப்பிற்கு அர்த்தம் புரிந்தது. தானாக அவளது முகம் சிவக்க, வார்த்தைகள் தடுமாறியது.

அவளது முகம் காட்டிய வர்ணஜாலங்களை இரசித்தவன், “இப்படியெல்லாம் செய்யாதே மீரா! அப்பறம் காய்ந்த மாடு மாதிரி பாய்ந்து விடப் போகிறேன்.” என்றுச் சிரித்தான். அவன் சொன்ன விதத்தில் மேலும் நாணமுற தலைகுனிந்தவள், என்ன எது என்று அறியும் முன் அவனது அணைப்பில் கிடந்தாள். அதன் பின் அவளது அன்றிரவு முழுவதும் அவளது இருப்பிடம் அவனது அணைப்பே என்று ஆனது. அவனும் அவளுக்குமான வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றவன்.. அங்கு அவளை ஆண்டான். அவளோ அவனது ஆளுமைக்கு கட்டுண்டு கிறக்கினாள்.

கிறக்கத்தில் இருந்தவளுக்கு அதில் இருந்து வர விருப்பமில்லை. ஆனால் ஆழுத்தமாக நெற்றியில் பதித்த திறவுகோல் போன்ற முத்தத்தில் விழிகளை மலர்த்தியவள், ஆதித்யா வெளியே செல்ல தாயாராக உடையணிந்துக் கொண்டு நின்றிருந்தான்.

அடிப்பிடித்து எழ முயன்றவள், வெட்கம் கொண்டு போர்வைக்குள் புகுந்துக் கொண்டாள். அதைப் பார்த்து சத்தமாக சிரித்த ஆதித்யா, குனிந்து அவளது பட்டிதழில் அழுத்தமாக முத்திரை ஒன்றைப் பதித்து விட்டு, “இந்த மோகம் போவதற்குள் சீக்கிரம் வந்து சேருடி என் பொண்டாட்டி..” என்று நிமிர்ந்தான்.

அவனது பேச்சில் மீரா திகைத்துப் பார்க்கவும், அவளது பார்வைக்கு அர்த்தம் புரிந்தவன்.. “எஸ் மீரா! ஐ ஹவ் டு கோ..! இன்று இரவு வரை இந்த ரூம் புக் செய்திருக்கிறேன். நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வீட்டிற்கு போய் எனக்கு பொண்டாட்டி ஆகிட்டே என்றுச் சொல்லிரு..! பின் இருபது நாளில் வந்து சேரு..! இப்போ பை..” என்றுவிட்டு அறையின் கதவைத் திறந்துக் கொண்டு சென்றான்.

மீரா ஒன்றும் புரியாது விழித்தவாறு அமர்ந்திருந்தாள்.


உறவேன ஆனவன்..!
உறவாடியவன்..!
உறவாய் திகழ்வானா..!

உறவாடிக் கொல்(ள்)வானோ..!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12


நேற்று அவனது மார்பில் வந்து அவள் அடைக்கலமானதில் இருந்து சற்று முன் வரை அவள் இருந்த நிலையும், அதன் பின் ஆதித்யா விட்டுச் சென்றதையும் என்று ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் இருப்பதை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள். ஆதித்யா இன்று கிளம்புவான் என்றுத் தெரியும், அவன் சொல்லிவிட்டு சென்றதும் புரிந்தது. ஆனால் ஏனோ அவளது மூளை ஏற்றுக் கொள்ளாது மரத்து போய் இருந்தாள். அந்த இனிய நினைவுகளில் இருந்து மீளா விரும்பாதவளாய்.. மீண்டும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டாள். கண்களை மூடிப் படுத்தவளின் நினைவில் ஆதித்யா ஆண்டான். ஆனால் நனவில் நனைந்தவளுக்கு இந்த கனவு.. திருப்தியளிக்கவில்லை. எனவே எழுந்து குளியலறையில் புகுந்துக் கொண்டவள். நீருடன் தன் கண்ணீரையும் கழுவிக் கொண்டாள். பின் வெளியே வந்தவள் ஆதித்யாவிற்கு செல்பேசியில் அழைப்பு விடுத்தாள். செல்பேசியின் ஒலி நீண்ட நேரம் ஒலிக்கவும், அச்சம் கொண்டாள். அவளை சிறிது பயமுறுத்தி விட்டு அழைப்பை ஏற்றான்.

“ஆதி…” என்று அவள் வாயைத் திறக்கவும், ஆதித்யா “மீரா..! ப்ளீஸ் எதாவது விசயம் இருந்தால் மட்டும் ஃபோன் செய்! ஐ மிஸ் யு! ஐ லவ் யு! நானும் வருகிறேன் என்று பார்மலிட்டிஸ் வார்த்தைகளைச் சொல்ல ஃபோன் போட்டு எனக்கு எரிச்சலை கிளப்பாதே!” என்றான்.

இவன் இப்படித்தான் என்றுத் தெரிந்தும்.. அவனது இம்மாதிரியான பேச்சு அவளுக்கு சிறிது ஏமாற்றம் தந்தது. ஆனாலும் தனது ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு “என் கையில் கல் வைத்த இரண்டு வளையல்கள் என்று மொத்தம் நான்கு வளையல்கள் போட்டிருந்தேன். அது எங்க பாட்டி தந்தது. அது எங்கே?” என்றுக் கேட்டாள்.

திருமணம் செய்துக் கொண்ட பெண்களிடம் இருந்து இத்தகைய அனாவசிய கேள்விகள் தான் வரும்.. என்று அவற்றைக் கேட்காதே என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு காத்திருந்த ஆதித்யாவிற்கு மீரா கேட்டதைக் கேட்டு சிரிப்புத்தான் வந்தது. கூடவே அந்த ஆண் மகனுக்கு சிறிது நாணமும் வந்தது. கையில் வைத்திருந்த செல்பேசியில் தனது முகத்தை வைத்து சிரித்துவிட்டு “பெட் பக்கத்தில் இருக்கிற, டெபிள் ட்ராயரில் இருக்கு..! டிஸ்டர்ப்பாக இருந்தது அதுதான் கழற்றிட்டேன்.” என்றுக் கூறியவனுக்கு மேலும் நாணத்தால் சிரிப்போங்க.. அதைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு வெட்கத்தால் முகம் சிவந்தது. பின் தன்னைச் சமாளித்துக் கொண்டவள், “என்னை ரெஸ்ட் எடு என்றுச் சொல்வதற்கு உரிமை இருக்கு என்றால்.. சேஃப் ஜர்னி என்றுச் சொல்வதற்கு எனக்கு உரிமை இருக்கு..” என்று மிடுக்குடன் சொன்னாள்.

ஆதித்யாவின் புன்னகை மேலும் விரிந்தது.

“சொல்..” என்றான்.

மீராவும் புன்னகையுடன் “சேஃப் ஜர்னி..” என்றாள்.

பின் ஆதித்யா “என்ன மீரா! நேற்று காலையில் தாலி கட்டினேன், நைட் பர்ஸ்ட் நைட் முடிச்சுட்டேன். அந்த மயக்கம் நீ தெளியாதிருக்கும் பொழுதே பை சொல்லிட்டு கிளம்பிட்டேனே, நான் உன்னை கை விட்டு விடுவேனோ என்று பயம் இல்லையா..! என்ன என் மேல் ரொம்ப நம்பிக்கையா?” என்றுச் சிரித்தவாறுக் கேட்டான்.

அதற்கு மீராவும் சிரித்தபடி “உனக்கு உன் மேல் இருக்கும் நம்பிக்கை தான் காரணம்..” என்றாள்.

ஆதித்யா புரியாது “வாட்..!” என்கவும், “என்னை கை விட மாட்டேன்னு நீ சொல்லியிருக்கியே..” என்றுச் சொல்லி அவனைப் போல் நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

“ஓ..! யா…” என்றவனுக்கும் ஏனோ சிரிப்பு தான் வந்தது. அதற்குள் பயணிகளை அழைக்கும் அறிவிப்பு வந்தது. அதை மீராவும் கேட்டாள்.

ஆதித்யா “ஓகே பை மீரா..” என்றான்.

மீரா “பை..” என்று மட்டும் சொன்னாள். ஆனால் அந்த ஒரு வார்த்தையில் ஆதித்யா முன்பு சொல்லி எரிச்சலடைந்த வார்த்தைகள் அனைத்தும் அடங்கியிருந்ததை உணர்ந்தான்.

மனைவி ஒரு கணவனிடம் அவளது உணர்வுகளை வார்த்தைகளால் மட்டுமல்லாது உணர்வுகளின் மூலமும் உணர்த்தலாம் என்று அவன் உணர்ந்தான். எனவே முறுவலுடன் செல்பேசியின் அழைப்பைத் துண்டித்து விட்டு எழுந்தான்.

ஆதித்யாவிற்கு தெரியும்.. மீராவை திருமணம் செய்துக் கொண்டதால் இந்தியாவில் அவன் முன்பை விட நெருக்கடிகளையும், மனஅழுத்தங்களையும் சந்திக்க போகிறான் என்று..! ஆனால் அவன் எதிர்பார்த்ததையும் விட அதிகமாக அவனுக்கு காத்திருக்கிறது என்று.. பாவம் அவன் அறிந்திருக்கவில்லை!

ஆதித்யாவிடம் பேசிவிட்டு செல்பேசியை ஆராய்ந்தவள், அவளது வாட்ஸ்அப்பில் இருந்து ஆதித்யா அவளது தந்தைக்கு தகவல் அனுப்பி இருப்பதைப் பார்த்தாள். நேற்று இரவு தோழி வீட்டில் தங்கியிருப்பதாக தகவல் அனுப்பியிருந்தான். இதை எப்பொழுது அனுப்பினான் என்று யோசித்து பார்த்து நினைவு வராமல் அதை கைவிட்டாள். செல்பேசியை வைக்க போகும் வேளையில் கார்த்திக்கிடம் இருந்து தகவல் வந்தது. மாலையில் சந்திக்கலாம் என்று அனுப்பியிருந்தான். உடனே மீரா அவனை அழைத்தாள்.

உடனே அழைப்பை ஏற்ற கார்த்திக் “மீரா!” என்றான்.

“கார்த்திக்! இப்போ நான் ப்ரீ தான்! நீ எங்கே இருக்கிற?” என்றுக் கேட்டாள்.

கார்த்திக் “இப்போ தான் ஆதித்யாவை ஏரோட்ரேமில் விட்டு வருகிறேன். ஆதித்யா உன்னை வீட்டில் கொண்டு போய் விடச் சொன்னான். அதுதான் மேசேஜ் செய்தேன். ஆதி இன்னேரம் பிளைட்டில் ஏறியிருப்பான்..” என்றுச் சொல்லி முடிக்கையில் மீரா “தெரியும்..” என்று முந்திக் கொண்டு சொன்னாள்.

உடனே கார்த்திக் “ஷப்பா! மேரேஜ் ஆனவங்களுக்கு எப்படித்தான் ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு இப்படியொரு தனக்கு தான் முதல் உரிமை என்ற எண்ணம் வருகிறதோ..!” என்றுச் சிரித்தான்.

அதற்கு மீரா “அது உண்மைத்தானே..” என்கவும், கார்த்திக் “உண்மைத்தான்! உண்மைத்தான்!” என்று ஒத்துக் கொண்டான். பின் மீரா கார்த்திக்கிடம் மாலையில் சந்திக்கலாம் என்றுவிட்டு செல்பேசியை அணைத்துவிட்டு, மீண்டும் படுக்கையில் விழுந்தவள், ஆதித்யாவின் நினைவுகளில் ஆழ்ந்தாள்.

மீரா சொல்லிய நேரத்திற்கு சரியாக வந்த கார்த்திக்.. காலியான மேசையைப் பார்த்து அமர்ந்த அடுத்த நொடி “கார்த்திக்” என்ற மீராவின் அழைப்பில் திரும்பினான். அவளைப் பார்த்தவனுக்கு அவளிடம் எதோ வித்தியாசம் தென்பட்டது. முறுவலுடன் அவனுக்கு எதிரே அமர்ந்த மீரா கார்த்திக் தன்னை வித்தியாசமாக பார்ப்பதைப் பார்த்து.. “வாட் கார்த்தி!” என்றுக் கேட்டாள்.

கார்த்திக் “மிஸஸ் மீராஹரிஹரன் ஆதித்யா! உங்க அழகு கூடிட்ட மாதிரி இருக்கு!” என்றுச் சிரித்தான்.

மீரா “அப்போ இன்னும் நாளுக்கு நாள் அழகு கூடும்..” என்றுச் சிரிக்கவும்.. கார்த்திக் “அப்போ இப்பவே மருமகளுக்கோ, மருமகனுக்கோ இப்பவே புக் செய்து வைத்து விட வேண்டியது தான்..” என்றான். அதைக் கேட்ட மீரா அவனுக்கு ஒரு அடிப் போட்டு “அதற்கு முதல்ல ஒரு பொண்ணைப் பார்த்து மேரேஜ் செய்துக்கணும். இப்படியிருந்தால் என்னமோ நான் உன்னை ஏமாத்திட்டு ஆதித்யாவை மேரேஜ் செய்துகிட்ட மாதிரி நினைப்பாங்க, ஆனால் எனக்குத்தான் தெரியும். என்னை லவ் செய்கிறேன் என்று வந்துட்டு என் பாட்டி கிட்ட கடலை போட்டுட்டு இருந்தே..! ஆனால் உன் பிரெண்ட் அப்படியில்லை! நான் ப்ரபோஸ் செய்ததும்.. உன்னை வச்சுட்டே..” என்றுச் சொல்லிக் கொண்டு போனவள், நாக்கை கடித்து பேச்சை நிறுத்தினாள்.

கார்த்திக் “அடப்பாவிகளா..! என்னை வச்சுட்டு இரண்டு பேரும் என்ன செய்தீங்க..” என்று வாயைத் திறந்தான். அவனது வாயில் அருகில் இருந்த டிஷ்யு பேப்பரை எடுத்து அடைத்தாள்.

பின் மீரா “எனக்கு இந்தியாவிற்கு போவதற்கு டிக்கெட்..?” என்றுக் கேட்கவும், கார்த்திக் “புக் செய்தாச்சு! எப்போ இந்தியாவிற்கு போக போகிறே தெரியுமா! சரியாக பொங்கல் அன்னைக்கு இந்தியாவில் இருப்பே..” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். ஆனால் மீரா முகத்தில் எந்த வித பிரதிபலிப்பும் இல்லை.

கார்த்திக் “மீரா..” என்று அழைக்கவும், சிறு சிரிப்புடன் நிமிர்ந்த மீரா “என் வீட்டுக்கு தெரியாமல் எப்படி இப்படிச் செய்தேன் என்றுத் தெரியலை கார்த்தி! மிக பெரிய தப்பு செய்திருக்கிறேன். எனக்கு பிடித்திருந்தால் ஒகே சொல்வாங்க.. என்று எனக்கு நம்பிக்கை இருக்கு! ஆனால் ஒரு வாரத்திற்கு முன் ஆதி செய்த குளறுபடியால் உன்னை லவ்வர் என்றுச் சொல்லிட்டு அடுத்த வாரமே இன்னொருத்தனை லவ் செய்கிறேன் என்றுச் சொன்னால் ஒத்துப்பாங்களா! அவங்களுக்கு என் மனதைப் புரிய வைக்கணும். அவங்களை கன்வின்ஸ் செய்வதற்குள் ஆதி எனக்கு இல்லாமல் போய் விடுவானோ என்று ஒரு பயமும் தோன்றிருச்சு! என் பெரெண்ட்ஸ் எப்படியும் மீட் செய்யணும்.. என்றுச் சொல்வாங்க, அப்போ ஆதித்யா அவங்க கிட்ட மீரா தான் என்னை லவ் செய்கிறாள்.. அதனால் தான் ஒத்துக்கிட்டேன் என்று ஓப்பனா சொல்லி வைத்தால் அவ்வளவுத்தான்..! அப்பறம் ஆதி எனக்கு கிடைக்கவே மாட்டான். அதனால் தான் அவங்க கிட்ட முதலில் சொல்ல தயங்கினேன்.” என்றுவிட்டு முகத்தைச் சுணக்கத்துடன் வைத்துக் கொண்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

பின் திடுமென மீராவே “அப்படியென்ன ஆதி ரொம்ப ஸ்பெஷல்! பெரெண்ட்ஸ் கிட்ட இருந்து மறைத்து அவனை மேரேஜ் செய்கிற அளவிற்கு அதற்குள் எனக்கு ரொம்ப முக்கியமானவனா ஆகிட்டானா..! இதற்கும் அவன் ஒன்றும் என்னை உருகி உருகி லவ் செய்யலை.” என்றுப் பொருமினாள். பின் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், பின் கார்த்திக்கை பார்த்து “ஆதிக்கு ஒன்றும் என்னை சுத்தமாக பிடிக்கலை என்றுச் சொல்லி விட முடியாது. என்கிட்ட இருக்கிற சம்திங் அவனைத் தடுக்கிறது. அதே மாதிரி என்கிட்ட இருக்கிற சம்திங் அவனை ஈர்க்கிறது. நிச்சயம் நாங்க அருமையா வாழப் போகிறோம். அதற்கு என் பேமலியோட பிளஸ்ஸிங் வேண்டும். ஆனால் நான் செய்திக்கிற காரியத்திற்கு அவங்க எனக்கு சாபம் போடாமல் இருந்தால் சரி..! அவங்க என்னைத் திட்டினாலும் ஏற்றுக்க வேண்டியது தான்! ஏனென்றால் நான் செய்த தப்பு அப்படி! நல்லவேளை ஆதி இந்தியாவிற்கு கிளம்பிட்டான். இல்லையென்றால் அவனுக்கு சேர்ந்து திட்டு விழுந்திருக்கும், அதனால் அவனுக்கு எனக்கு என்று மனசங்கடம் வந்திருக்கும். இது எதுவும் நடக்கலை. அடுத்த மாதம் தானே இந்தியாவிற்கு போக போகிறேன். அதுக்குள்ள இவங்களை கன்வின்ஸ் செய்து சம்மதம் வாங்குவதற்கு சரியா இருக்கும்..!” என்றுக் குனிந்தவளுக்கு அவளது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த புது தாலி கயிறு பட்டது.

உடனே “எப்படி நடந்திருக்க வேண்டியது என்னோட மேரேஜ்! ஆனால் இப்படி நடந்திருக்கு! இங்கே நான் மட்டும் தனியாக புலம்பிட்டு இருக்கிறேன். அவன்பாட்டிற்கு ஜாலியாக இந்தியாவிற்கு போயிட்டான்.” என்று மேசையில் கவிழ்ந்து அழ ஆரம்பித்தாள்.

சிரிப்பு சத்தம் கேட்கவும், நிமிர்ந்து பார்த்தாள்.

கார்த்திக் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

கண்ணீரை வேகமாக துடைத்த மீரா “நான் இங்கே புலம்பி அழுதுட்டு இருக்கிறேன், என் பிரெண்டான நீ ஆறுதல் சொல்லாமல் சிரிக்கவா செய்கிறே..” என்று முறைத்தாள்.

அதற்கு கார்த்திக் சிரித்தவாறு “மீரா! நீ வெயிலும், மழையும் ஒன்றாய் வந்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு மனநிலையில் இருக்கிறாய்..! லவ் செய்தவன் கூடவே மேரேஜ் நடந்திருச்சு என்றுச் சந்தோஷமாகவும் இருக்கிறே.. பெரெண்ட்ஸ் கிட்ட சொல்லாமல் செய்துட்டோமே என்று குற்றவுணர்வும் இருக்கு! ஆதி உன் கூட இருந்திருந்தால் இப்படிப் புலம்பியிருக்க மாட்டே! உன் பெரெண்ட்ஸ் கிட்ட சொல்லிவிட்டாலும் புலம்ப மாட்டே..! அதனால் எதாவது ஒன்றைச் செய்..! வா போகலாம்” என்று எழுந்தான்.

மீரா “ஆமா! சொல்லித்தான் ஆகணும்.” என்று எழுந்தாள்.

கார்த்திக் “யு டொன்ட் வெர்ரி மீரா! உன் பெரெண்ட்ஸ் கிட்ட நான் சொல்கிறேன். நீங்க இரண்டு பேரும் தான் பொருந்தும் என்றும் ஆதி பார்க்க தான் முரடன் என்றாலும் அவன் எவ்வளவு நல்லவன் என்று நான் அவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்கிறேன்.” என்றான்.

அதற்கு மீரா மறுப்பாக தலையசைத்து “வேண்டாம் கார்த்தி! நீ வர வேண்டாம். நீ நாளைக்கு நான் சொல்லும் பொழுது வா! இது நான் அமைத்துக் கொண்ட வாழ்க்கை.. அதனால் நான் எக்ஸ்பிளைன் செய்தால் தான் சரியாக இருக்கும். அதுதான் சரியும் கூட..” என்றாள்.

மீரா கூறியது சரியாகப்படவும், கார்த்திக் ஆமோதிப்பாய் தலையசைத்தவன், “ஆதி.. ரொம்ப லக்கி மீரா!” என்று மட்டும் சொல்லிவிட்டு விடைப்பெற்று சென்றான்.

கார்த்திக்கின் கூறியது மீராவிற்கு மேலும் தெம்பு தரவும், தனது காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி சென்றாள்.

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் இதுபோல் சில சமயம் மீரா தங்கி விடுவாள், அதைப் போல் நினைத்து அவளது பெற்றோர்களும் கவலையில்லாமல் இருந்தனர். அந்த நம்பிக்கைத் தகர்த்து விட்டோமே என்றுத்தான் மீரா கவலையுற்றாள். வீட்டை அடைந்தவளுக்கு காரை விட்டு இறங்க மனம் வரவில்லை.

என்னதான் மகள் சொல்லிவிட்டு சென்றாலும், அடுத்த நாள் மாலை வரை மீரா வராதிருக்கவும், சற்று கவலையுற்றார்கள். செல்பேசியில் அழைக்கலாமா என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது மீராவின் கார் வந்து நிற்கவும்.. நிம்மதியுற்றவர்களாய் அமர்ந்திருந்தார்கள். கார் நின்றும் மீரா இறங்கி வராதிருக்கவும், தனலட்சுமி வெளியே வந்தார்.

தன் அன்னையை பார்த்ததும்.. மீரா இறங்கி வந்தாள்.

முகத்தில் பளபளப்பும், தவிப்புமாக வந்த மகளைப் பார்த்த தனலட்சுமிக்கு உள்ளுணர்வு எதோ ஒன்று உணர்த்தியதோ.. அவருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்தது. மீரா அவரது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தவாறு வந்தவள், உள்ளே வந்து யார் முகத்தையும் ஏறிட்டு பாராது அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்தாள். அங்கிருந்த ஹரிஹரன் மற்றும் பரிமளம் இவளுக்கு என்னவாயிற்று என்பது போல் பார்த்தார்கள்.

அனைவரும் கேள்வியாக அவளைப் பார்ப்பதை உணர்ந்த மீராவிற்கு குற்றவுணர்வு மேலோங்கியது. கண்களை மூடியவளின் இமைக்குள் ஆதித்யா வந்து சிரித்தான். “நான் கைவிட மாட்டேன்.” என்ற அவனது வார்த்தை அழுத்தமாக அவளது நெஞ்சில் பதியவும்.. அவனது வாக்குறுதி திருமண வாழ்க்கைக்கு தேவையான அனைத்து மாயங்களையும் செய்யும் என்ற நம்பிக்கை உண்டானது. மனதில் சிறு தெம்பும் துளிர்த்தது. தற்பொழுது இமைகளைத் திறந்தவனின் முகம் தெளிவுற்று இருந்தது. தடுமாற்றம் இல்லாது வார்த்தைகளும் வெளி வந்தது.

“எனக்கும் ஆதித்யாவிற்கும் நேற்று மேரேஜ் நடந்து முடிந்து விட்டது. எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள். உங்க கிட்ட சொல்லாமல் செய்தது மிகப் பெரிய தப்புத்தான். ஆனால் உங்க கிட்ட சொன்னால் நீங்க மறுத்து விடுவீங்க, அப்பறம் உங்க வார்த்தையை மீறி என்னால் போக முடியாது. அவர் இந்தியாவிற்கு இன்று போயாகணும், அதனால் உங்களிடம் சொல்லி கன்வின்ஸ் செய்து, உங்க ஆசீர்வாதத்துடன் செய்வதற்கும் நேரமில்லை. உங்க கிட்ட மறைத்ததிற்கு இதுதான் காரணம்..” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

தனது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வை பெற்றவர்களிடம் மறைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்வில் மனதில் பாரம் ஏற்றி விட்டது போல் இருந்த மீராவிற்கு தற்பொழுது தான் நிம்மதி ஏற்பட்டது. மற்றவர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்களோ என்று அனைவரின் முகத்தைப் பார்த்தாள். ஆனால் அவர்கள் முகத்தில் எந்தவித பிரதிபலிப்பும் இன்றி மீராவை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைவார்கள், கோபப்படுவார்கள், திட்டுவார்கள் என்று அவள் நினைத்திருக்க.. அவர்கள் அமைதியாக இருந்தது.. அவளுக்கு பீதியைக் கிளப்பியது.

தனலட்சுமி மெல்ல “மீரா! இப்போ என்ன சொன்ன?” என்றுக் கேட்டார்.

மீரா மன்னிப்பை வேண்டும் குரலில் “ரியலி ஸாரிமா..! இந்த விசயத்தில் இப்படி தீர்க்கமாக, தீவிரமாக இருப்பேன் என்று எனக்கே தெரியாது.” என்றாள்.

தனலட்சுமி “ப்ச்! யாரை மேரேஜ் செய்தே என்றுச் சொன்னே..” என்றுக் கோபத்துடன் கேட்டார். அவர் கேட்க வருவது புரியவும்.. உதட்டைக் கடித்துக் கொண்டு “ஆமாம்! நான் ஆதித்யாவை லவ் செய்து மேரேஜ்ஜும் செய்துட்டேன்.” என்றாள்.

மீரா சொல்லி முடித்ததும்.. தனலட்சுமி தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார். ஹரிஹரன் கையில் வைத்திருந்த காகித சுருளை ஓங்கி முன்னிருந்த மேசையில் அடித்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். பரிமளம் இன்னும் நம்ப முடியாமல் தன் பேத்தியை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

எச்சிலை விழுங்கிக் கொண்டு மீரா மீண்டும் பேச முற்படுகையில் தனலட்சுமி “கார்த்திக்கிற்கு துரோகம் செய்திருக்கியா.. மீரா..” என்று கடும் கோபத்துடன் கேட்டார்.

மீரா பதட்டத்துடன் “இல்லைமா..! சத்தியமா இல்லை! நானும் கார்த்திக்கை லவ் செய்யலை. அவனும் லவ் செய்யலை.” என்றதும்.. தற்பொழுது அவளைக் குழப்பத்துடன் பார்த்தார்கள். அவர்களது பார்வையில் தடுமாறிய மீராவிற்கு தற்பொழுது ஆதித்யா அவள் மேல் முதலில் ஏன் அத்தனை கோபப்பட்டான் என்றுப் புரிந்தது. எத்தகைய தவறை அவள் புரிந்துக் கொண்டிருந்திருக்கிறாள். நல்லவேளை கார்த்திக்கிடம் அவளது மனதை முழுவதும் திறந்துச் சொல்லிவிட்டாள்.

தனது குடும்பத்தினரிடமும் தெளிவுப்படுத்தினால் தன்னைப் புரிந்துக் கொள்வார்கள் என்றுச் சொல்ல எதானித்தவள், அவனது தம்பி மாதவ் எங்கே என்றுப் பார்த்தாள். அவளது தேடும் பார்வைக்கு விடையை தனலட்சுமி கொடுத்தார்.

“மாது! பிரெண்ட்ஸ் கூட தீம் பார்க் போயிருக்கான்.” என்றார்.

அதைக் கேட்டு சற்று நிம்மதியுற்றவளாய் “நான் முதலில் இருந்து சொல்கிறேன். அப்போ தான் நான் எப்படி என்னைப் போட்டு குழப்பி தெளிவான முடிவு எடுத்திருக்கிறேன் என்று உங்களுக்கு புரியும்.” என்றுச் சொல்ல ஆரம்பித்தாள்.

கார்த்திக்கிடம் முதலில் இருந்த சிறு ஈர்ப்பு அதனால் அடுத்தக்கட்டமாக அவளது குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்ய அழைத்திருந்தது. பின் ஆதித்யாவை பார்த்ததும் அவளையும் அறியாது வந்த சலனம், அதைத் தெரிந்துக் கொண்ட ஆதித்யா, கார்த்திக்கை அவள் காதலித்து பின் ஏமாற்றி விடக் கூடும் என்று.. அவர்களை முந்திக் கொண்டு அவர்கள் காதலிப்பதாக ஹரிஹரனிடம் சொன்னது. கார்த்திக் நல்லவிதமாக முதலிலேயே அவர்கள் குடும்பத்தில் பெயர் எடுத்துவிட்டதால்.. ஹரிஹரனும் அவளது குடும்பத்தினரும்.. அவர்களது காதலுக்கு ஒத்துக் கொண்டது. தான் சொல்ல வேண்டியதை.. ஆதித்யா முந்திக் கொண்டு சொன்னதில் மீரா கோபப்பட்டதிற்கு.. ஆதித்யா அப்பொழுதே, மீராவிற்கு கார்த்திக்கிடம் காதல் இல்லை கூறியது, அதைக் கேட்ட அவள் தன்னைப் பற்றி தவறாக ஆதித்யா குற்றம் சாட்டுவதாக கோபப்பட்டு அவளே கார்த்திக்கை அவளது காதலனாக அறிவித்தது. பின் கார்த்திக்கை அவளது குடும்பத்தினருக்கு பிடித்துப் போகவும்.. மனம் வழி சென்று முடிவெடுக்க தவறியது. பின் கார்த்திக்குடன் இருக்கும் பொழுது.. அவளையும் அறியாமல் ஆதித்யா அவளது கவனத்தை மட்டுமல்லாது மனதையும் கவர்ந்தது, அதைச் சுட்டிக்காட்டி ஆதித்யா எச்சரிக்கை செய்த பொழுது அவள் தடுமாறியது. பின் ஆதித்யா அவளிடம் வெளிப்படையாக அவளது மனம் சென்ற விசித்திரத்தைக் உணர்த்தியது.. என்பது வரைக் கோர்வையாக சொல்லிக் கொண்டு வந்தவள், தனலட்சுமியின் முகம் சென்ற விதத்தைக் கண்டு பேச்சை நிறுத்தினாள்.

மீரா “அம்மா! எனக்கே ஷாக்காக தான் இருந்தது. என்னாலும் நம்ப முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியலை.. அவனைப் பார்க்கும் பொழுது.. என் உள்ளத்தில் தோன்றிய சிறு சில்லென்ற உணர்விற்கு காரணம் வேறு என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படியே என் உள்ளுணர்வைச் சொன்னதும் என்னால் மறுக்க முடியவில்லை. நீங்க சொன்ன மாதிரி கார்த்திக்கிற்கு துரோகம் செய்துட்டேனோ என்று எனக்கே சங்கடமாக இருந்தது. நான் நேராக கார்த்திக் கிட்ட தான் போனேன். ஆதித்யாவிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருப்பதைச் சொல்லாமல்.. எங்க ரிலேஷன்ஷிப்பை பற்றி ஓப்பனாக கேட்டேன். கார்த்திக்கும் ஒப்பனாக மனதில் இருப்பதைச் சொல்லிட்டான். அவனுக்கு நீங்க அவனை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டது ரொம்ப பிடித்திருக்காம், ஆனால் அதற்கு பிறகு முன்னே மாதிரி லவ்வரா என் கூட பழக முடியலைன்னு சொன்னான். அப்போ ரொம்ப நிம்மதியாக இருந்தது. கார்த்திக்கை ஏமாற்றவில்லை, துரோகம் செய்யலைன்னு மகிழ்ந்தேன். அதற்கு பிறகு தான் ஆதித்யாவை பார்க்க போனேன். அப்பவும்.. என்னையும் அறியாமல் என் மனதில் தோன்றிய சிறு சலனத்திற்கு மன்னிப்பு கேட்டுட்டு.. இனி இந்த தவறு செய்ய மாட்டேன்.. என்றுச் சொல்ல தான் போனேன். ஆனால் ஆதித்யா கூடப் பேசிய பிறகும், என் மனதை ஆராய்ந்த பிறகும் என்னால் ஆதித்யாவை விட முடியாது என்றுத் தெரிந்து விட்டது. எனக்கு என்றவன் அவன்தான் என்றுப் புரிந்திருச்சு! அதனால் அவன் கிட்ட என் லவ்வை சொன்னேன். அதற்கு அவன் அப்போ நாம் மேரேஜ் செய்துக்கலாமா என்றுக் கேட்ட பிறகு என்னால் மறுக்க முடியலை. உங்க கிட்ட சொல்லாததிற்கு ரிஷன் முதலிலேயே சொல்லிட்டேன். ப்ளீஸ் என்னை மன்னிச்சு நல்லா இருக்கணும் என்று விஷ் செய்யுங்க..” என்று வேண்டினாள்.

ஹரிஹரன் இன்னும் அடங்கா கோபத்துடன் “நீ முதலில் சொன்னது.. உன் மனது சம்பந்தப்பட்டது சரி! ஆனால் ஆதித்யாவும், நீயும் லவ்வை டிக்கௌர் செய்ததும் எங்க கிட்ட வந்து சொல்லியிருக்கணுமே! மேரேஜ் செய்துக் கொள்ள அப்படியென்ன அவசரம் வேண்டிக் கிடக்கு..? நேற்று மேரேஜ் செய்துக்கிட்டிங்க என்று நினைக்கிறேன். சரி முதலில் நாங்க மறுத்துட்டா நீ மீற முடியாது என்றுச் சொன்னே..! மேரேஜ் முடிந்த பிறகு இரண்டு பேரும் வந்துச் சொல்லியிருக்கணும் தானே..! அந்த மரியாதை இல்லாமல்.. ஸார் இந்தியாவிற்கு கிளம்பிட்டாரா..! என்னதிது..?” என்று இகழ்ந்தார்.

மீரா அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள். ஆதித்யா அவளது வீட்டிற்கு வந்துச் சொல்கிறேன் என்றுத்தான் சொன்னான். ஆனால் அவன் மீராவை காதலிக்கவில்லை என்று அதிரடியாக பேசி விடுவான் என்றுத்தான்.. மறுத்துவிட்டாள். திருமணம் செய்துக் கொள்ளலாமா என்றுக் கேட்பான் என்று அவளும் தான் எதிர்பார்க்கவில்லை. காதல் என்பது திருமணத்தில் தானே முடியும் என்பதால் அவள் மகிழ தான் செய்தாள். அவ்வளவு அவசரமாக திருமணம் ஏன் செய்துக் கொண்டான் என்று அவளுமே அறியாதா ஒன்று! ஆதித்யாவை பற்றிக் கேட்டால்.. அவளுக்கே புரியாத புதிர் அவன்..! இப்படியிருக்க தனது தந்தை கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

மீரா பதில் சொல்ல முடியாமல் திணறலுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தவளுக்கு கோபம் வந்தாலும்.. அதையும் மீறி தங்களது ஒரே மகள் என்ற துக்கம் தான் வந்தது.

மீராவே “ப்ளீஸ் அப்பா! அவரை தப்பாக பேசாதீங்க..! அவர் என்னை ஏமாற்ற மாட்டார். அவர் மேலே எனக்கு முழு நம்பிக்கை இருக்கு..! அதே மாதிரி அவர் கொஞ்சம் முரடு தான்..! ஆனால் அருமையான மனிதர்! உங்க பெண்ணின் செலக்க்ஷனில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..? அவர் இந்தியாவில் பெரும் பணக்காரர்..! அவங்க பொருளாதாரத்தை வைத்து பார்க்கும் போது.. நாம் குறைவு தானே..! அவங்க வீட்டில் ஒத்துக்க மாட்டாங்க என்று நினைக்கிறேன் அதனால் தான் அவசரமாக மேரேஜ் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.” என்றாள்.

அதைக் கேட்ட தனலட்சுமியின் உள்ளம் இன்னும் பதறியது. “அச்சோ கடவுளே! எனக்கு எதேதோ தப்பா நினைக்க தோன்றுகிறதே..! கல்யாணம் என்ற பெயரில் அந்த பையன் கிட்ட ஏமாந்துட்டியா..!” என்ற அழவும்.. மீரா அவசரமாக குறுக்கிட்டாள்.

“ஆதியை பற்றி தயவுசெய்து அப்படித் தப்பாக நினைக்காதீங்க! நீங்க என்னையும் சேர்த்து தப்பா நினைக்கிற மாதிரி இருக்கு! அப்பவும் எங்க மேல் நம்பிக்கை இல்லைன்னா கார்த்திக்கை கூப்பிட்டு கேளுங்க..! அவன்தான் எங்க மேரேஜ்ஜிற்கு விட்னஸ், ஃபோட்டோஸ் கூட எடுத்துக்கிட்டோம். தாலி கட்டி முடித்த கையோடு மாலையைக் கூட கழற்றாமல் அந்த கோவிலில் இருக்கிற சிஸ்டத்தில் அன்றைய ப்ரோகிராமாக எங்க மேரேஜ்ஜை ஆதியே கையோடு அப்லோட் செய்தார். இன்னாருடைய மகன், மகள் என்றெல்லாம் கூட டைப் செய்து போட்டார். அந்த காப்பி.. என் மெயிலுக்கு கூட உடனே அனுப்பினார். என்னை ஏமாற்ற நினைப்பவர் இப்படிச் செய்வாரா..? சொல்லுங்க..” என்றாள்.

மீரா கூறியதைக் கேட்டு அவர்கள் மேலும் குழம்பினார்கள். ஹரிஹரன் மீராவை முறைத்துவிட்டு எழுந்து சென்றார். தனலட்சுமி நிதானாமான குரலில் “நீ என்ன சொன்னாலும்.. எங்க ஒரே மகள் எங்க கிட்ட சொல்லாமல் மேரேஜ் செய்துக்கிட்ட என்பதை எங்களால் ஜீரணிக்க முடியலை மீரா! அதே மாதிரி அந்த ஆதித்யாவிடம் நாங்க பேசாமல் எந்த முடிவிற்கும் வர முடியாது.” என்றுவிட்டு பொங்கிய அழுகையை அடக்கியவாறு எழுந்து சென்றார். மீரா அதுவரை எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த பரிமளத்தை பார்த்து “பாட்டி…” என்று அழைக்கவும்.. அவர் அவளது முகத்தைக் கூடப் பார்க்க விருப்பமில்லாமல் எழுந்து சென்றார்.

மீரா அந்த இடத்தை விட்டு அசையவில்லை. அவளது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.


-------------------------------------------------------------


ஆனந்த்சங்கர் அறைந்ததில் முகத்தைத் திருப்பிய ஆதித்யா.. அதே நிலையில் இருந்து அசையாது கண்களை மூடி பற்களைக் கடித்து தாடை இறுக நின்றான். அந்த பெரிய விசாலமான அறையில் ஆதித்யாவின் குடும்பத்தினர் அனைவரும் இருந்தார்கள். ஆனால் ஒருவர் முகத்திலும் சலனமில்லை. வேடிக்கை பார்க்கும் மனநிலையில் தான் இருந்தார்கள்.

ஆனந்த்சங்கர் “என்ன காரியம் செய்துட்டு வந்திருக்கிற ஆதி..” என்று உச்சதாயில் கத்தினார்.

மெதுவாக நிமிர்ந்து அவரைப் பார்த்த ஆதித்யா பின் தந்தையின் முகத்தைப் பார்க்க விருப்பமில்லாது.. எங்கோ பார்த்தவாறு “இந்த குடும்பத்திற்கு இன்னொரு பொம்மை வேண்டாம் என்று சொந்தமாக உணர்வும் கொண்ட பெண் வேண்டும் என்றும் உண்மையான காதலைக் கொண்டிருக்கும் பெண் வேண்டும் என்றுத்தான் நல்ல காரியத்தைச் செய்துட்டு வந்திருக்கிறேன்.” என்று நிதானமாக சொன்னான்.

ஆதித்யா சொன்னதை சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு கேட்டுக் கொண்டிருந்த ஜெய்சங்கரின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.


நிழல் எனும் அவன்..

தேடிடும் நிஜமாக அவள் இருப்பாளா..!



 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 13


நாளை சங்கர் குரூப் ஆஃப் கம்பெனியின் சேர்மன் ஆனந்த்சங்கரின் மகன் ஆதித்யாசங்கருக்கும், லால் குரூப் ஆஃப் கம்பெனியின் சேர்மன் சாவன்லாலின் மகள் கீர்த்திலாலிற்கும் நடக்க இருக்கும் நிச்சயதார்த்த விழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் தனக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று வந்து நின்றதோடு மட்டுமில்லாது.. அதற்கு திமிராய் காரணத்தைச் சொன்ன ஆதித்யாவை ஆத்திரத்துடன் ஆனந்த்சங்கர் பார்த்தார்.

ஆதித்யாவின் அருகில் சென்றவர் கொத்தாக சட்டையைப் பற்றி.. “என் மேல் இருக்கிற கோபத்தில்.. என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த காரியத்தைச் செய்துட்டு வந்திருக்கிற அதுதானே காரணம், சொல்! அதுதானே காரணம்..” என்றுக் கர்ஜீத்தார்.

அதற்கு ஆதித்யா “இல்லை டாடி! நானும் இந்த பேமலியில் ஒருவன்! நானே அப்படிச் செய்வேனா..! நான் இந்த பேமலியில் சரியாக பொருந்திட்டேன். உங்களை மாதிரி பொய் சிரிப்பு சிரிக்க கத்துக்கிட்டேன். நம் வீட்டிற்குள் இருக்கிற இன்னொரு யாரும் பார்க்க விரும்பாத பக்கத்தை யாருக்கும் காட்டாமல் இருக்கிறேன். இரவானால் நன்றாக மது அருந்திவிட்டு சுயநிலை இருந்து கிடக்கிறேன். வீட்டை விட்டு வெளியே சென்றால் ஒரு இராஜாவை போல் இருக்கிறேன். தரம் அறிந்து ஐ மீன்.. நம்மை போன்ற பெரிய பிஸினஸ் மேக்னட்களுடன் பந்தாவாக பேசுகிறேன். தொழிலில் லாஸான பழைய பிஸினஸ்மேன்களுடன் பேசவே மாட்டேன். நமக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் நன்றாக பேசுவது போல் பாவனை செய்கிறேன். வீட்டிற்கு வந்துவிட்டால் இங்கே யாருடனும் நான் பேச மாட்டேன். என் அறையில் அடைந்துக் கொள்வேன். என் அறையில் அடைந்துக் கொள்ளும் அந்த நேரத்தில் மட்டும்.. என் மனைவியுடன் நார்மலாக வாழ்கிறேனே..! அங்கேயும் பொய்யாக வாழ்க்கை நடத்தினால் நான் வெறுத்து விடுவேன் ப்ளீஸ் டாடி..!” என்றான்.

ஆதித்யா பேசியதைக் கேட்ட ஆனந்த்சங்கர் அவனுக்கு மற்றொரு அறையை விட்டார். “இந்த கொழுப்பு மட்டும் அடங்க மாட்டேன் என்கிறது.” என்றவர் சற்று தள்ளி நின்றிருந்த மனைவி கீதாவிடம் திரும்பி “எல்லாம் இவளைச் சொல்ல வேண்டும். முதலில் உன் தங்கச்சி குழந்தை இல்லாமல் தவிச்சுட்டு இருக்கிறாள் என்று இவன் கொஞ்ச நாள் இருக்கட்டும் என்று அனுப்பி வைத்தாய், அந்த கொஞ்ச நாட்கள் நான்கு வருடமாகி விட்டது. அப்பறம் வந்தவனை ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டே.. அதனால் வந்த வினையைப் பார்த்தாயா..! அப்பா என்கிற மரியாதை இல்லை. குடும்பம் கௌரவம் என்பதைப் பற்றி ஒரு எண்ணமும் இல்லை. என்ன திமிராக பதில் சொல்கிறான் பார்த்தாயா..! நான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சொத்தில் இவன் சொகுசாக வாழ்ந்துட்டு என்கிட்டவே திமிரா பேசுகிறான். என் மானத்தை வாங்குகிறான். அப்படியெல்லாம் இல்லை என்று எப்படித் திமிரா பதில் சொல்கிறான் என்றுப் பார்த்தாயா..” என்று இரைந்தவர், அவருக்கு பின்னால் இருந்த மேசையில் இருந்த அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சிறு பெட்டியை எடுத்து ஆதித்யாவின் மேல் விசிறியடித்தார்.

அந்த சிறு பெட்டி ஆதித்யாவின் மார்பில் பட்டு கீழே விழுந்தது. கீழே விழுந்ததில் அந்த பெட்டி திறந்து அதில் இருந்த பொருட்கள் சிதறி விழுந்தது. வெள்ளியால் ஆன கற்கள் பதிக்கப்பட்ட தகடு.. அதில் இன்னா இன்னாருக்கு திருமணம் என்றுக் குறிப்பிட்டு இருந்தது. அது திருமணம் நடைப்பெறும் நாள், நேரம், இடம் போன்றவைக் குறிப்பிட்ட திருமண அழைப்பிதழ் ஆகும். அதனருகில் திருமணம் நடைப்பெறும் நாளுக்கு முன் இருநாட்களுக்கு முன்னிருந்து தொடங்கி திருமணம் முடிந்து அடுத்த நாள் வரையிலான நிகழ்ச்சி நிரல்களைப் பற்றிய குறிப்புகள் கொண்ட அழகிய சிறு புத்தகம். அதில் வண்ண வண்ண புகைப்படங்கள், செயற்கை மலர்கள், அதற்கருகில் ஆனந்த்சங்கரின் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து எடுத்த பல புகைப்படங்கள் கொண்ட ஆல்பம், பின் கற்கள் பதிப்பட்ட தங்கமூலாம் பூசப்பட்ட வெள்ளிக் குங்குமச் சிமிழ், அதற்கருகில் பட்டுத்துணிகளால் ஆன நான்கு முடிப்புகள், அந்த முடிப்புகளில் ஆண்களுக்கு கோர்ட்டில் அலங்காரத்திற்கு மாட்டப்படும் வேலைப்பாடு மிகுந்த பதக்கம், பெண்களுக்கு காதணிகள் மற்றும் வளையல்கள், வாசனைத் திரவியங்கள், சிறு விநாயகர் சிலை போன்றவை இருந்தன.

அது கேட்பாரற்று கீழே கிடக்க ஆனந்தசங்கர் ஆதித்யாவை பார்த்து “மானத்தை வாங்கவில்லை என்றால்.. இதற்கு என்ன அர்த்தம்? நாளைக்கு நிச்சயதார்த்தம் என்று அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறதே அதற்கு என்ன அர்த்தம்? அது நின்றுப் போனால் நம் வீட்டுல ஒரு பங்ஷன் நின்றுப் போச்சு என்று மட்டும் இருக்காது. அது ஒரு பரபரப்பான செய்தி தெரியுமா..” என்று ஆத்திரத்துடன் கத்தியவர், பின் அவனுக்கு அருகில் வந்து “ஒருவேளை.. ஒரு பெண்ணுடன் காதல் என்று ஒரு தரம் சொன்னாய், ஆனால் அந்த பெண் இல்லை என்றுச் சொல்லிட்டு ஓடிருச்சு.. அந்த பெண் மாதிரி இந்த பெண்ணும் மேரேஜ் செய்யலை என்றுச் சொல்லிட்டு ஓடிருவாளா..” என்றவாறு ஆதித்யாவை கூர்மையும் சிறு இளக்காரமுமாக பார்த்தார்.

அதுவரை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பின்னால் கையைக் கட்டியவாறு ஆதித்யா நின்றிருந்தாலும் அவனது தந்தையைப் பார்ப்பதைத் தவிர்க்கும் பொருட்டு விழியைத் தாழ்த்தி நின்றிருந்தான். ஆனந்த்சங்கர் ‘ஒருவேளை’ என்று இழுக்கவும் விழியை உயர்த்தி அவரைத் தீர்க்கமாக பார்த்தான். அந்த தீர்க்கத்தைத் தாங்கிக் கொள்ள இயலாதவராய் முகத்தைத் திருப்பிய ஆனந்த்சங்கர் “கேட்டதிற்கு பதில் சொல்..” என்றுக் கத்தினார்.

ஆதித்யா சற்றும் தயங்காது “இந்த என்கேஜ்மென்ட் நடந்த பின்.. எனக்கு மேரேஜ் ஆன விசயம்.. எல்லாருக்கும் தெரிந்தால் அதுதான் மானம் போகிற விசயம் டாடி! மற்றவங்களுக்கு தெரிந்து கேள்வி கேட்கும் முன் நாமே நிறுத்தி விடுவது நல்லது என்றுத்தான் சொல்கிறேன்..” என்றுத் தெளிவாக சொன்னான்.

ஆதித்யாவின் மீது கூர்மையான பார்வையைச் செலுத்திய ஆனந்த்சங்கர்.. “அப்போ.. உனக்கு என்கேஜ்மென்ட் நடந்தால் அந்த விசயம் வெளிப்படுகிற மாதிரி எதையோ செய்திருக்கிறே..” என்றுச் சந்தேகத்துடன் கேட்டார்.

சிறு முறுவலுடன் ஆம் என்றுத் தலையை ஆட்டியவன், “ஸாரி டாடி! எனக்கு வேறு வழித் தெரியவில்லை. நீங்க என் மேரேஜ் விசயமாக பேசுவதோடு மட்டுமல்லாது.. அவங்க கூட சில தொழில் தொடர்பாக பேசும் போது நான் இடைஞ்சலாக இருப்பேன் மறுப்பு தெரிவிப்பேன் என்றுத்தான் என்னை ஜெர்மனிக்கு அனுப்பனீங்க என்றுத் தெரியும். ஆனால் மறுக்காமல் ஒத்துக் கொண்டேன் தானே..! ஆனால்..” என்று மேலும் பேசும் முன்.. ஆனந்த்சங்கர் இடையிட்டார்.

“இப்போ குரங்கு மாதிரி புத்தி ஏன் மாறுச்சு..?” என்று எரிந்து விழுந்தார்.

“பிகாஸ் ஆஃப் லவ்..” என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னான். அதில் மீராவின் காதல் மட்டும் அடங்கியிருந்தது. அவளின் காதலை ஏற்றுக் கொண்டு திருமணம் முடித்தேன் என்பதை மறைத்தான்.

பின் தொடர்ந்து “எனக்கு என்று என் அறை, என் ஆடை, என் படிப்பு என்று இருப்பது போல் என்னை நேசிக்கும் பெண் எனக்கே எனக்கு என்று வேண்டும். எனக்கு சொந்தமான உறவு என்று ஒன்று வேண்டும். அம்மாவை நீங்க மேரேஜ் செய்துட்டதால்.. நீங்க எனக்கு என் பெரெண்ட்ஸ், நீங்க எனக்கு பெரெண்ட்ஸ் என்பதால் இவங்க..” என்று அங்கிருந்தவர்களைச் சுற்றிக் காட்டி “என் ரிலேசன்ஸ் என்று இல்லாமல்.. ஒரு ரிலேஷன் வேண்டும். அதுதான் எனக்கு வாழ்க்கைத் துணைவியாக போகிறவளை நானே தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.” என்றான்.

ஆனந்த்சங்கர் தற்பொழுது ஆதித்யாவிற்கு நேருக்கு நேர் நின்றுக் கொண்டு “எந்த மாதிரி ஒரு குடும்பத்தில் பிறந்துட்டு.. நாளைக்கு என்கேஜ்மென்ட் வைச்சுகிட்டு.. லவ் என்று எனக்கு ஒரு உறவு என்றுப் பிணாத்துகிறே பார்..! இந்த மாதிரி விசயங்களை வைத்துத்தான் உன்னை முட்டாள் என்றுச் சொல்கிறேன். ஏன் கீர்த்தி உன்னை லவ் செய்ய மாட்டாளா..! அவள் உனக்கு உறவில்லையா..?” என்றுப் புரியாதவனுக்கு சொல்வது போல் சொல்லவும், கசந்த சிரிப்பை ஒன்றைச் சிந்திய ஆதித்யா “நீங்க வாங்கி தருவது ஆர்டிபிஷியல் லவ்.. எனக்கு நெச்சரல் வேண்டும். இல்லை என்றால் எனக்கு ஒன்றுமே வேண்டாம்.” என்று உறுதியாக சொன்னான்.

அவனை உறுத்து விழித்த ஆனந்த்சங்கர் “ஆர்டிபிஷல், நெச்சரல் என்று என்ன உளறல் இது! இதற்கு ஒன்றுத்தான் காரணமாக இருக்கும். உனக்கு புத்தி பேதலிச்சது இன்னும் சரியாகலை. மாதம் ஒரு முறை மென்டல் செக்கப்பும்.. ட்ரீட்மென்ட்டும் இன்னும் உனக்கு நடந்துட்டு தானே இருக்கிறது.” என்று வன்மத்துடன் சிரித்தார்.

ஆதித்யாவின் தலைத் தானே கவிழ்ந்தது.

ஆனந்த்சங்கர் இளக்காரத்துடன் “பிஸிசனஸ் விசயமாக போன இடத்தில் கல்யாணத்தை செய்துட்டு வந்து என்கேஜ்மென்ட்டை நிறுத்துங்க என்றுச் சொல்வதும்.. இன்னும் நீ குணமாவில்லை என்பதற்கு சாட்சி தானே..” என்கவும், நிமிர்ந்த ஆதித்யா மறுப்பாக தலையசைத்தவன், “என் லைஃப்பில் நான் எடுத்த தெளிவான முடிவு..” என்றான்.

“டேய்..” என்று மீண்டும் அடிக்க கையை உயர்த்தவும், கண்களை மூடி அடியை வாங்க தயாராக நின்றான்.

கண்களில் அடக்கி வைத்த கண்ணீருடன் அதுவரை அமைதியாக நின்றிருந்த ஆதித்யாவின் அன்னை கீதா “வேண்டாங்க..! அவனை அடிப்பதால் எந்த பிரோஜனமும் இல்லை. அவன் எதையும் யோசிக்காமல் இப்படிச் செய்துட்டு வந்துட்டான்.” என்று மகனுக்காக பேசினார்.

“அதற்கு அப்படியே விட்டுவிடச் சொல்கிறாயா..! நாளைக்கு பங்ஷனை நிறுத்திட்டோம் என்றுச் சொன்னால் என்ன நடக்கும் என்றுத் தெரியும் தானே..” என்று கீதாவிடம் சீறினார்.

அதற்கு கீதா மேலும் மெல்லிய குரலில் “ஆதி சில விசயங்களில் அடம் பிடித்தால்.. விட மாட்டான் என்று உங்களுக்கு தெரியும் தானே..” என்றார்.

ஆனந்த்சங்கர் பலமாக சிரித்து “அதைத்தான் முட்டாள்தனம் என்கிறேன்.” என்றார்.

கீதா “திருப்பி திருப்பி முட்டாள் என்றுச் சொல்லாதீங்க..” என்றுக் கண்ணீர் குரலில் கூறினார்.

உடனே ஆனந்த்சங்கர் “அப்போ பைத்தியக்காரன் என்றுச் சொல்லட்டுமா..” என்கவும், “ஏன்ங்க..” என்று கீதா அழுதே விட்டாள்.

ஆதித்யா அதே நிலையில் நின்றவாறு யார் முகத்தையும் பார்க்காமல் “ப்ளீஸ்..! எனக்காக யாரும் இங்கே பேச வேண்டாம். இத்தனை நேரம்.. இல்லை இல்லை இத்தனை நாட்கள் எப்படியிருந்தீங்களோ அப்படியே இருங்க..” என்றான். அதைக் கேட்ட அவனது அன்னை கீதா விம்பி துடித்து பொங்கிய அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு மகனின் முகத்தைப் பார்க்க தைரியமில்லாது தலையைக் கவிழ்த்துக் கொண்டார்.

ஆனந்த்சங்கர் “முடிவாக என்னத்தான் சொல்கிறாய்..?” என்று ஆதித்யாவை பார்த்துக் கேட்டார்.

ஆதித்யா “ஐயம் மேரிடு..! இன்னும் சிறிது நாளில் அவளுக்கும் விசா கிடைத்து இங்கே வந்து விடுவாள்.” என்றான்.

அதற்கு அவர் “அந்த பெண் வராமல் போனால்..” என்று இளக்காரமாக சிரிக்கவும்.. ஆதித்யா முகத்தில் சலனமில்லாமல் “அவள் வராமல் போனாலும்.. நாளைக்கு என்கேஜ்மென்ட் என்னையும் மீறி நடைப்பெற்றாலும்.. எனக்கு திருமணமான விசயத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் சொல்லிவிடுவேன். என்னால் வேறு யாரையும் மணக்க முடியாது. நான் இப்படியே தனியாக இருந்துக் கொள்வேன்.” என்றான்.

அவர்களது அந்த பெண்ணை மிரட்டி இங்கே வர விடாமல் செய்து, திருமண பந்தத்தில் இருந்து விடப்பட செய்தால் வேறு வழியிராது ஆதித்யா.. நாளைய விழாவில் பங்கு கொள்வான் என்றுக் கணக்கிட்டு பார்த்தார். ஆனால் ஆதித்யா அவள் வராமல் போனாலும்.. விழா நடக்காது என்றுச் சொன்னது அவருக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. ஆனால் அவர் வியாபாரத்தில் தந்திரத்தில் இத்தனை நாட்கள் இருந்து பழம் தின்றுக் கொட்டையைப் போட்டவர் அவர்..! எனவே ஆதித்யா சொன்னதை உன்னிப்பாக கேட்டவரின் முகத்தில் வன்சிரிப்பு பரவியது.

பின் “உனக்கு என்கேஜ்மென்ட் நடைப்பெற்றால் மட்டும் தானே.. நீ மேரிடு என்கிற விசயம் வெளிவரும் அப்படித்தானே?” என்று ஆதித்யாவின் முகத்தைப் பார்த்தவாறுக் கேட்டார்.

அதைக் கேட்டுச் சிரித்த ஆதித்யா “எஸ் டாடி! சரியாக புரிஞ்சுகிட்டிங்க..! எனக்கு இந்த மேரேஜ் வேண்டாம்.” என்றான்.

ஆனந்த்சங்கர் உடனே “அப்போ மேரேஜ்ஜை நிறுத்த திட்டம் போட்டு தான் இந்த காரியத்தைச் செய்துட்டு வந்திருக்கிறாயா..” என்றுக் கர்ஜீத்தார். ஆதித்யா அதற்கு நிதானமாக “நிச்சயமாக பிளன் போட்டு மீராவை மேரேஜ் செய்துக் கொள்ளவில்லை. நான் முதலில் சொன்ன மாதிரி லவ் தான் காரணம்..! என் என்கேஜ்மென்ட் நின்றுவிட்டால் போதும்.. யாருக்கும் நான் மேரிடு என்பதைத் தெரிவிக்க மாட்டேன். ஆனால் என் மனைவி என்னுடன் இருக்க வேண்டும்.” என்றான்.

மகனை தீர்க்கமாக பார்த்த ஆனந்த்சங்கருக்கு தன் மகனைப் பார்க்க பார்க்க ஆத்திரமாக இருந்தது. ஆனாலும் அவனை வேறுவிதமாக கையாள நினைத்தார்.

எனவே பலமாக சிரித்த ஆனந்த்சங்கர் “டன்..” என்று அவனிடம் சொன்னவர் மற்றவர்களிடம் திரும்பி.. “இவன் செய்த காரியத்தைப் பற்றிச் சொல்ல தான் உங்களை எல்லாம் கூப்பிட்டேன். இப்போ நாளைக்கு என்ன நடக்கும் என்று முடிவு செய்தாச்சு..! நாளைக்கு என்கேஜ்மென்ட் கேன்சல்டு..! எல்லாரும் போங்க..” என்றுக் கத்தினார்.

அதுவரை ஆனந்த்சங்கர் மற்றும் ஆதித்யாவிற்கு இடையேயான வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்தவாறு நின்றிருந்தவர்கள்.. முடிவில் ஆனந்த்சங்கர் கூறியதைக் கேட்டு அதிர்ந்தார்கள். அவர் அவ்வளவு எளிதில் எதையும் விட்டுத் தருகிறவர் இல்லை. தொட்ட எல்லாத்திலும் வெற்றி என்பது அவரது தாராக மந்திரம்..! அப்படிப்பட்டவர் நாளைக்கு நடைப்பெறுவதாக இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விடுகிறேன் என்றுச் சொன்னது மற்றவர்களும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது.

அவர் சொன்னது போல்.. அவர்களது வீட்டில் நடக்கும் விழா நின்றுவிட்டால் அது விசயமில்லை.. பரபரப்பான செய்தி ஆகும். அவர்களை நோக்கி கேள்விகள் பல தொடுக்கப்படலாம். பெண் வீட்டினர் இதற்கு ஒத்துக் கொள்வார்களா.. ஏன் என்றுக் கேள்விக் கேட்கப்படும் பொழுது ஆதித்யாவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்றுச் சொன்னால் கௌரவம் பாதிக்கப்படும் அல்லவா..! இத்தகைய இக்கட்டத்தில் தங்களது தந்தையை நிற்க வைத்துவிட்ட ஆதித்யாவை வெறுப்பும் கோபமுமாக ராஜ் சங்கரும், வித்யாவும் பார்த்தார்கள். வித்யாவின் கணவன் ஸ்ரீதரும், ராஜ்சங்கரின் மனைவி மாதவியும் கூட அங்கு தான் நின்றிருந்தார்கள்.

ராஜ்சங்கர் முன்னால் வந்து “அப்பா அவன்தான் சொல்கிறான் என்றால் நீங்களும் கேட்டுட்டு.. அந்த பெண் எங்கே என்று விசாரித்து இரண்டு மிரட்டு மிரட்டி விட்டால் போதும்.. அப்பறம் அவன் வெளியிட சொன்ன வீடியோ, ஃபோட்டோஸ் மற்றும் ஆதாரங்கள் வெளி வந்தால் பொய்யான செய்தி என்றுச் சொல்லி விடலாம். அந்த பெண் பணம் பறிக்க இவ்வாறுச் செய்திருக்கிறாள் என்றுச் சொல்லிவிடலாம்.” என்று ஆவேசமாக கூறினான்.

அந்த வயதிலும் கம்பீரமாக எழுந்து நின்ற ஆனந்த்சங்கர் “என்ன செய்ய வேண்டும் என்று நீ எனக்கு சொல்லித் தருகிறாயா..! மிரட்டுவதா..! எதாவது ஒன்றைச் சொல்லித் தந்தால்.. அதையே பிடித்துக் கொண்டு தொங்க தான் உனக்கு தெரியும்..! அதுதான் உனக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசம்! என் பிள்ளைகளான உங்களுக்கு என்னில் ஐம்பது பர்சென்டேஜ் அறிவாவது இருக்க வேண்டாமா..! எல்லாரும் தத்திகளாக வந்து பிறந்திருக்கு..! இதை எப்படி ஹன்டில் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். எல்லாரும் அவங்கவங்க வேலையைப் பார்த்துட்டு போங்க..! நாளைக்கு எப்படி இந்த விசயத்தை ஹான்டில் செய்கிறேன் என்றுப் பார்த்தாவது கற்றுக்கோங்க..” என்றுக் கத்தவும்.. ராஜ்சங்கர் மட்டுமல்லாது அனைவரும் அமைதியாக அங்கிருந்து கலைந்தனர். அவர்களின் மனதில் நாளை நடைப்பெறும் விழா நின்றுவிட்டால் அனைவரும் வேறு மாதிரியாக பேசுவார்களே என்ற கவலைத்தான் இருந்தது.

ஆதித்யா மட்டும் செல்லாது அவரை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

கோபத்தில் பெருமூச்சுகளை விட்டவாறு குறுக்கும் நெடுக்குமாக ஆனந்த்சங்கர் நடைப் போட்டுக் கொண்டிருந்தார். அவரின் ஆஸ்தான உதவியாளரான விஜய் பயத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆதித்யா தன்னைப் பார்த்தவாறு நின்றிருப்பதைப் பார்த்து நடையை நிறுத்தி என்ன விசயம் என்பது போல் பார்த்தார்.

“கேம் சேன்ஞர்! லயன்! வின்னர்! என்றுப் பெயரெடுத்த நீங்க.. என் விசயத்தில் எப்பொழுதும் தோல்வி தான் அடையறீங்க டாடி..!” என்றுச் சிரித்தான்.

ஆனந்த்சங்கரின் முகம் மாறியது.

ஆதித்யா தொடர்ந்து “ஆனால் இதில் விசித்திரம் என்னவென்றால் வெற்றி பெற்ற நான்தான் ஒவ்வொரு சமயமும் பாதிக்கப்படுகிறேன் டாடி!” என்று விரக்தியுடன் சிரித்தவனுக்கு.. அவன் சந்தித்த அனுபவங்கள் அனைத்தும் அவனது கண்களின் முன் நிழலாடிச் சென்றது.

அதற்கு ஆனந்த்சங்கர் “உன் விசயத்தில் எனக்கு கிடைப்பது தோல்வியில்லை ஆதி..! அதன் பெயர் சறுக்கல்! எப்படி எழ வேண்டும் என்று எனக்கு தெரியும்.” என்று மதர்ப்புடன் சொன்னார்.

ஆதித்யா “எஸ்! மற்றவர்களின் கையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளித்தானே.. நீங்க எழுந்திருப்பீங்க..” என்றான்.

அதைக் கேட்ட ஆனந்த்சங்கர் “ஆதி…” என்று ஓங்கிய குரலில் கத்தி அவனை அடக்கினார்.

ஆனந்த்சங்கர் கத்தவும்.. ஆதித்யா அமைதியானான். பின் ஆனந்த்சங்கர் “இந்த விசயத்தில் நான் வெற்றி பெற்றுக் காட்டுகிறேன்.” என்றுச் சவால் விட்டார்.

ஆதித்யா ஒற்றைப் புருவத்தை உயர்த்திப் பார்த்தான்.

ஆனந்த்சங்கர் “அந்த பெண்.. உன்னை விட்டுச் சென்றுவிட்டால்.. நான் நிச்சயத்த பெண்ணை எந்த வித மறுப்பும் சொல்லாமல் நீ மேரேஜ் செய்துக்க வேண்டும்.” என்றவர், சத்தமாக சிரித்தவாறு “உன்னைப் பற்றி முழு விபரங்கள் தெரிந்தால் கண்டிப்பாக அந்த பெண் ஓடிவிடுவாள்.” என்றார்.

அதற்கு ஆதித்யா “என்னைப் பற்றி முழுவதும் தெரிந்தால் அந்த கீர்த்தி ஓட மாட்டாளா..” என்கவும்.. ஆனந்த்சங்கர் “அதற்கு தான் மேரேஜ் என்கிற கிடுக்கு பிடி போடப் போகிறேன்.” என்றுச் சிரித்தார்.

ஆதித்யா “நானும் மேரேஜ் தான் டாட் செய்திருக்கிறேன்.” என்றான். அதைக் கேட்ட ஆனந்த்சங்கர் “என் மகனாய், தொழில் முறை ஒப்பந்தங்களுடன்.. ஊரறிய விழாவாக கொண்டாடப்பட்டு உலகமே பேசப்பட்டு நான் நடத்தி வைக்கும் திருமணத்திற்கும்.. ஒரு பெண்ணைத் தனியாக சந்தித்து மயக்கம் கொண்டு அதற்கு பெயர் காதல் தான் என்றுப் பெயர் சூட்டி.. அந்த பெண்ணும் உன் அந்தஸ்த்தின் மேல் மயக்கம் கொண்டு செய்துக் கொண்ட திருமணத்திற்கும் நிறையா வித்தியாசம் இருக்கு ஆதி! அது தெரியாதவனாக இருக்கிறாயே, நான் வியாபாரத்தில் மட்டுமில்லை. மற்றவர்களின் குணங்களையும் கணக்கீடுவதில் வல்லவன்..” என்றார்.

ஆதித்யா முகத்தில் மெல்லிய கீற்றாய் சிரிப்பு தோன்றி மறைந்தது.

அதைப் பார்த்து முகம் கடுத்த ஆனந்த்சங்கர் “நான் கேட்டதிற்கு பதில் சொல்.. உன்னுடைய லவ் லைஃப் பெயிலியர் ஆனால் நான் சொல்லிய பெண்ணை மணந்துக் கொள்வாயா..” என்றுக் கேட்டார்.

அதற்கு ஆதித்யா சம்மதமாக தலையசைத்தான்.

ஆனந்த்சங்கர் தொடர்ந்து “நீ சொன்ன மாதிரி.. அந்த பெண் உன் மனைவி என்று வெளியுலகதிற்கு தெரியக் கூடாது.” என்றார். ஆதித்யா அதற்கும் சம்மதமாக தலையசைத்தான்.

ஆனந்த்சங்கர் “ஒகே அந்த பெண்ணை வரச் சொல்..! நானும் பார்க்கிறேன். எனக்கும் சவால்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் ஆதி! ஏன் என்றுத் தெரியுமா.. சவாலில் எனக்கு வெற்றி கிடைக்கும். அந்த வெற்றி வரும் பொழுது வரும் சந்தோஷத்திற்கு ஈடு இந்த உலகத்தில் எதுவும் இல்லை. அதுவும் உன்கிட்ட எந்த தைரியத்தில் அந்த பெண் உன்னுடன் இருப்பாள் என்றுச் சொல்கிறே ஆதி! அந்த பெண்ணின் மேல் என்ன அப்படியொரு நம்பிக்கை! உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் என்றுச் சொன்னதை வைத்து நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்றுச் சொன்னால் நீ கண்டிப்பாக முட்டாள் தான்..!” என்றுச் சிரித்தார்.

அவர் சிரித்து முடிக்கும் வரை பொறுத்துவிட்டு அவர் சிரித்து முடித்ததும் “பைத்தியக்காரன் என்றுச் சொல்லுங்க…” என்றான்.

அதைக் கேட்டு ஆனந்த்சங்கர் கோபத்துடன் “நான் உன் அப்பாடா..! நீங்கெல்லாம் என்னை மாதிரி இல்லையே என்றுத்தான் எனக்கு கோபமாக இருக்கிறது. என்னுடன் போட்டிப் போட வேண்டாம். எனக்கு சமமாகவாவது நிற்க வேண்டும் தானே..! உன் அண்ணனிற்கு ஒன்றும் தெரிவதில்லை. உன் அக்கா அதைவிட அவளது புருஷனை நம் தொழிலுக்குள் இறக்க பார்த்தாள். ஆனால் நான் அவள் போக்கிலேயே போய் மாப்பிள்ளைக்கு வேலை கொடுத்து.. எனக்கு கீழ் வைத்துக் கொண்டேன். நீ என்னவென்றால் உன் போக்கில் நீ நினைத்ததைச் செய்கிறாய்..! ஒவ்வொரு விசயத்திலும் உன்னை மீட்டெடுத்து வருவதற்கே எனக்கு பெரும்பாடாக இருக்கிறது. நான் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். அது உங்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது. அதுவும் நீ என்னை மாதிரி குணங்களும், திமிரும் கொண்டிருக்கிறே.. ஆனால் என்னை மாதிரியான எண்ணங்களும், கருத்தும் உன்கிட்ட இல்லை. என்னை விரோதி மாதிரி பார்க்கிறே..! என்னைப் பார்த்தாலே ஒதுங்கிப் போகிறே..! பிஸிசனஸ் பார்க்க வா.. என்றால் அதற்கும் வேண்டாம். எங்களுடன் எதாவது பார்ட்டிக்கு வா என்றாலும்.. அதற்கும் மாட்டேன் என்றுச் சொல்கிறே..! சரி நீயே எதாவது செய் என்றால் அதற்கும் வேண்டாம் என்கிறாய்..! திருமண வயது வந்துவிட்டது.. உன் மனமாற்றத்திற்காக மேரேஜ் பிக்ஸ் செய்தால்.. அதிலும் இப்படியொரு குளறுபடி செய்துட்டு வந்து அடம் பிடிக்கிறே..! என்னை இப்படியே விடுங்க என்று எப்போ பார்த்தாலும் புலம்புகிறாய்..! ஆம்பிளை பையன் மாதிரியா நடந்துக் கொள்கிறாய்.. கோழை மாதிரி இருக்கிறே..! என்னத்தான் உன் மனசுல நினைச்சுட்டு இருக்கிறே..! காரணங்களைச் சொல்லு..” என்று மூச்சிரைக்க பேசினார்.

அவர் பேசி முடித்ததும்.. “டாட்! எங்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை என்பதை விட நாங்கள் என்ன செய்தாலும் உங்களுக்கு திருப்தி இல்லை என்றுச் சொல்லுங்க..! உங்களுக்கு உங்க பிள்ளைகள் மேல் நம்பிக்கை இல்லை. அதுதான் உண்மையான காரணம்! நீங்க உங்க பிள்ளைகளுக்கு அப்பாவாக இல்லை சர்வாதிகாரி மாதிரி இருக்கீங்க.. உங்க பேமலி உங்கள் கட்டுப்பாட்டில் இருந்து போய் விடுமோ என்றுப் பயப்படறீங்க.. அதுதான் காரணம்! கண்டிப்பாக நேர்மையாக உழைத்து சேர்த்தது தான்.. இத்தனை சொத்தும்! ஆனால் அதை நாங்க பிடுங்கிக் கொண்டு போகிறோம் என்று நீங்க நினைக்கறீங்க பாருங்க அதுதான் காரணம்! பணக்காரர் என்று ஆகிவிட்டால் சில ரூல்ஸ் இருக்கிற மாதிரி நடந்துக்கறீங்க.. அதுதான் காரணம்! எல்லாவற்றையும் விட..” என்றவன் கண்களை இறுக்க மூடியபடி தாடை இறுக நின்றான். அவனது மனக் கண்ணில் அவன் நினைத்துக் கூடப் பார்க்காத நினைவுகள் வந்துச் சென்றது.

பின் இமைகளைத் திறந்தவனின் விழிகள் கோவை பழமாய் சிவந்திருந்தது.

“யு ஆர் எ பேட் டாட்! யு ஆர் எ பேட் மேன்! யு ஆர் எ சேடிஷ்ட்..” என்றுக் கத்தியவன், அவரைத் திரும்பியும் கூடப் பாராமல் அறையை விட்டு வெளியேறினான்.

ஆதித்யா கத்தியதைக் கேட்ட ஆனந்த்சங்கர் திடுக்கிட்டு நின்றார். அவரது நினைவில் ஆதித்யா மூன்று வெவ்வேறு சம்பவங்களில் வந்து நின்று கத்தியது வந்து சென்றது.

அதிர்ந்து நின்றவர்.. அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். தனது உதவியாளர் விஜய் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரியவும்.. தன்னைச் சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தார்.

“விஜய்! என்னிடம் எதாவது கேட்கணுமா..?” என்றுக் கேட்டார்.

விஜய் அவசரமாக “எஸ் ஸார்..! நான் எதாவது செய்ய வேண்டுமா ஸார்..?” என்று அவருக்கு விசுவாகமாக உழைக்கும் அவன் கேட்டான்.

அவனது பதிலில் முறுவலித்த ஆனந்த்சங்கரின் கம்பீரம் மீண்டும் வந்தது.

ஆனந்த்சங்கர் “ஆதித்யாவிடம் நீ பேசி பாறேன்..! அப்படியே அந்த பரத்தை வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்திரு..! ஆதித்யா கார்த்திக்குடன் தான் இருந்தான், ஆனால் ஒரு பெண்ணுடன் பழக்கம் எப்படி ஏற்பட்டது என்று எனக்கு தெரியாது என்கிறான். ஆனால் ஆதி லவ் செய்து விட்னஸோடு மேரேஜ்ஜே செய்துட்டு வந்திருக்கிறான். இந்த மேரேஜ் கூட என்கேஜ்மென்ட்டை நிறுத்த ஆதி போட்ட பிளனோ என்று டவுட்.. ஆனால் ஆதி பொய் சொல்ல மாட்டான். அதுவும் குழப்புகிறது. நீ அவனிடம் பேசி பாரு..” என்றான்.

விஜய் “எஸ் ஸார்..” என்றான்.

பின் ஆனந்த்சங்கர் “அதற்கு முன்னாடி இன்னொரு வேலையிருக்கு..! க்ரைம் டிப்பார்ட்மென்ட்டில் வேலை செய்யும் நம்ம ஆள் சேகருக்கு ஃபோன் போட்டு நாளைக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருந்த இடத்திற்கு பாம்பிளாஸ்ட் த்ரெட்டன் ஃபோன் வந்து அதை அவன் ட்ரெஷ் செய்த போது அந்த மிரட்டலை கேட்ட மாதிரி செட்டப் செய்து செய்தியைப் பரப்பி விட்டு.. அதனால் பங்ஷன் நின்ற மாதிரி காட்டிவிடு..” என்றார்.

அவரை விட சிறு வயதான விஜயினால் ஆனந்த்சங்கரின் சாமர்த்தியத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. நடைப்பெற இருந்த விழாவும் ஆதித்யாவிற்கு அளித்த வாக்கின்படி நிற்க போகிறது. விழா நின்றதற்கான காரணத்தால் குடும்ப கௌரவமும் கெடாது. மாறாக இன்னும் பரபரப்பாக தான் பேசப்படும். எனவே பெருமையும் வியப்புமாக ஆனந்த்சங்கரை பார்த்தான்.

நரைமுடி எட்டிப் பார்த்த தனது மீசையை முறுக்கிக் கொண்ட அவர்.. “நான் சொன்ன வேலைகளைப் பார்க்கும் எண்ணம் இல்லையா..” என்றுக் கேட்கவும்.. “இதோ ஸார்..” என்று விஜய் அங்கிருந்து வெளியேறினானா்.

விஜய் வெளியேறியதும் அவர் பழைய நினைவுகளில் ஆழ்ந்தார்.

விஜய் ஆனந்த்சங்கர் சொன்ன விசயங்களை செல்பேசியிலேயே முடித்துக் கொண்டவன், நேராக ஆதித்யாவை தேடிச் சென்றான். அவனது பகுதிக்கு சென்று தகவல் அனுப்பிட்டு காத்திருந்தான். வரலாம் என்ற பதில் தகவல் வரவும் உள்ளே சென்றான். அங்கு ஆதித்யா மதுபானங்களின் வகைகளுடன் அமர்ந்திருந்தான்.

விஜயை பார்த்ததும் கையில் இருந்த கோப்பையை அவனிடம் உயர்த்தி காட்டிய ஆதித்யா “நீங்க வருவீங்க என்று எதிர்பார்த்தேன் விஜய் ஸார்! பட் டொன்ட் வெர்ரி! நானே ட்ரீங்ஸ் அடிச்சுட்டு தான் இருக்கிறேன். நீங்க ஊற்றித் தர தேலையில்லை.” என்றுச் சிரித்தான்.

உடனே விஜய் “என்ன ஸார்! இப்படிச் சொல்லறீங்க..! அன்னைக்கு ரொம்ப டிஸ்டர்ப்பாக இருந்தீங்க.. அதனால் இதைச் சாப்பிட்டால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவிங்க என்று ஒருநாள் உங்களுக்கு ஊற்றிக் கொடுத்தேன். அதற்கு இப்பவும் அதற்கு தான் வந்திருக்கிறேன் என்றுச் சொல்லறீங்களே! ரொம்ப குடித்தால் உங்க உடல் கெட்டுப் போகும் என்ற கவலை எனக்கு இருக்கிறது.” என்றுச் சொல்லிக் கொண்டுப் போகவும் ஆதித்யா “இப்போ எதற்கு வந்தீங்க..?” என்றுக் குறுக்கிட்டான்.

விஜய் மெல்ல “அவங்க எப்போ வருவாங்க..! அவங்களைப் பார்க்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். உங்களைக் கவர்ந்தவங்க நிச்சயம் சம்திங் ஸ்பெஷலா தான் இருப்பாங்க..!” என்றவாறு ஆதித்யாவிற்கு அருகில் வந்தான்.

ஆதித்யா நிதானமாக கையில் மற்றொரு கோப்பையில் மதுவை ஊற்றி அவனுக்கு கொடுத்தான். அவனும் அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டான். பின் விஜய் தொடர்ந்து “ஏன் ஸார்! முதலாளியோட கோபத்தைக் கிளப்பி விடறீங்க..! முதலிலேயே அவர் உங்க மேலே கொஞ்சம் கோபத்தில் இருக்கிறார். அவர் கூட கொஞ்சம் இணக்கமாக நடந்துகிட்ட உங்களுக்கு தான் ஆதாயம்! அவர் சற்று முன் பேசியதைக் கவனித்தீர்களா..! நீங்க அவரை மாதிரியே இருக்கீங்க என்று அவருக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால் சொல்கிற பேச்சை கேட்க மாட்டேன் என்கறீங்க.. என்றுத்தான் கோபம்! ஆனாலும் உங்களால் அவங்களை விட முடியாது. எனக்கு புரிகிறது ஸார்! எல்லாம் காதல் படுத்தும் பாடு..! ஆனால் நீங்க அவங்களை கைவிடவும் வேண்டாம். அதே சமயம் அப்பா சொல்கிறபடியும் கேட்கலாம்.” என்று அசட்டுப் புன்னகைப் புரிந்தான்.

அதுவரை விஜய் சொல்வதை கேட்டபடி.. கையில் வைத்திருந்த கோப்பை சிறிது ஆட்டி அது தளும்பி ஆடி அடங்குவதை வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தவன்.. விஜய் கடைசியாக கூறியதைக் கேட்டு விழிகளை மட்டும் உயர்த்திப் பார்த்தான்.

விஜய் தொடர்ந்து சொன்னான். “ஆமா ஸார்..! அந்த பெண்ணை இன்னொரு வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். முதலாளி சொல்கிற பெண்ணை ஊரறிய முறைப்படி மேரேஜ் செய்துக்கோங்க..” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்.. மேசையில் இருந்த மதுபாட்டிலை கையில் எடுத்தவாறு எழுந்த ஆதித்யா விஜயின் கையில் இருந்த கோப்பையைத் தட்டிவிட்டு “இதை முழுவதும் ஒரே மூச்சில் குடி..” என்று அவனது கையில் திணித்தான்.

விஜய் திருதிருவென விழிக்கவும் “ட்ரீங் இட் மேன்! ப்ளடி இட்ஸ் மை ஆர்டர்..” என்றுக் கத்தினான். விஜய் அப்பொழுதும் விழிக்கவும், அவனது வாயில் பாட்டிலை வைத்து அழுத்தி உயர பிடித்தான். விஜய் மூச்சு திணற “ஸார்..” என்று திணறவும்.. ஆதித்யா தனது பிடியைத் தளர்த்தினான்.

விஜய் சற்றுத் தள்ளி நின்று மூச்சு வாங்கவும்.. ஆதித்யா “உன் முதலாளி கிட்டப் போய்.. நான் அப்பா மாதிரி இருக்கிறேன்னு அவருக்கு சந்தோஷம் என்றுச் சொன்னே தானே..! அவன் ஒன்றும் அவன் அப்பா மாதிரி இல்லை.. அவன் ஒரு பைத்தியக்காரன் என்றுச் சொல்லு..” என்றுக் கத்தவும்.. விஜய் அடித்துப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

விஜய் வெளியேறிய பின்பும் ஆதித்யா ஆத்திரம் அடங்காமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

இது அவனுக்கும் அங்கே இருப்பவர்களும் எப்பொழுதும் நடக்கும் போர் போன்றது தான்..! அவன் வாழ்நாள் முழுவதும் இதில் இருந்து அவனால் விடப்பட முடியாது என்று அவனுக்கு தெரியும். ஆனந்த்சங்கர் எதாவது சொல்வதும்.. அதற்கு ஆதித்யா மறுப்பு தெரிவிப்பதும்.. அதன் பின் சில நாட்கள் அதன் தாக்கம் அவனைத் தொடரும் என்பதும் எப்பொழுதும் நடப்பது தான்..! ஆனால் இம்முறை அவனோடு மீராவும் வந்து மாட்டிக் கொண்டதைத் தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தன்னால் இன்னொருத்தர் பாதிக்கப்படுவதை அவனால் தாங்க முடியவில்லை. இதற்காக தான்.. அவளுக்கு அவனிடம் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்ததில் இருந்து அவளை வெறுத்து அவளிடம் இருந்து விலகினான். ஆனால் எத்தனை முறை சொன்னாலும்.. விடாது தொடர்ந்து, அவளது காதலில் உறுதியாக நின்று.. அதனால் அவளின் மேல் அவனுக்கு உரிமை உணர்வை ஏற்படுத்தி, அவளைத் தவிர வேறு எவரையும் துணையாக ஏற்றுக் கொள்ள முடியாதவாறு செய்து.. இறுதியில் அவனையே மணம் முடித்து விட்டவளின் மேல் அவனுக்கு கோபமாக வந்தது.

தற்பொழுது அவளும் அவனுடன் சிறைவாசம் செய்ய போகிறாள். சமூகத்திற்கு அறிவிக்காமல் அவனுக்கு மட்டும் மனைவியாக இருக்க போகிறாள். இதற்கு அவள் சம்மதிப்பாளா..! அவனோடு பொருந்தி வாழ்வாளா..! அவனுக்கே உறுதியில்லை அதனால் தான் மணம் முடிக்க கேட்ட அன்றே அவளை அந்த மணவாழ்கையை விட்டு விலக நினைத்தால் தாராளமாக விலகலாம் என்று அனுமதி கொடுத்தான். ஆனால் இன்று தன்னிடம் இருந்து ஆனந்த்சங்கர் தந்திரமாக வாங்கிய வாக்குறுதியை நினைத்துப் பார்த்தவனுக்கு தன்நிலையை கண்டே தன்னிரக்கம் கொண்டான். மீரா விலகி சென்றுவிட்டால்.. அவன் ஆனந்த்சங்கர் பார்த்த பெண்ணை மணம் முடித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பெண்ணிடம் வாழ்ந்துவிட்டு அவனால் எப்படி இன்னொரு பெண்ணை மணக்க முடியும். அதையும் வாக்குறுதியாக கேட்ட அவரின் மேல் இன்னும் கோபம் ஏறியது.

மீரா இவற்றில் இருந்து தன்னை மீட்பாளா..! அல்லது அவளும் பாதிக்கப்படுவாளா..! என்றுத் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

கூண்டில் என்னுடன் அடைப்பட கைகோர்த்தாயோ..!

என் நிலை அறிந்து கைவிலகி செல்வாயோ..!

அல்லது பற்றிய கையை விடாது என்னை மீட்பாயோ..!



 
Status
Not open for further replies.
Top