All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி - கதை திரி(ரீரன்)

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

எல்லாரும் எப்படியிருக்கீங்க..

இப்போதைக்கு புது கதை தொடங்குவதற்கு இல்லைங்க.. அதனால் என்னுடைய "நிழல் தேடிடும் நிஜம் நீயடி!" கதையை ரீரன் செய்யலாம் என்று இருக்கிறேன்.

எழுதி முடித்த கதை என்பதால் தினமும் யூடி உண்டு.

என்சாய்..
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..

எல்லாரும் புத்தக திருவிழாவிற்கு தயாரா😄😄😄😄

இம்முறை.. டிசம்பர் 27 ஆம் தேதி தொடங்கும் புத்தக திருவிழா ஜனவரி 12 வரை நந்தனம் மைதானத்தில் நடைப்பெற உள்ளது.

எனது வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "குடை வேண்டாமே.. இப்படிக்கு அடைமழை!" கதை புத்தக வடிவில் படிக்கலாம்.

அர்ஜுனோட அதிரடி காதல் அடைமழையாய் அதிராவை திணறடிக்கவும்.. அதை தாங்க முடியாமல் அதிரா தடுமாறுகிறாள். வேண்டாம் என்று மறுக்கிறாள். ஆனால் அர்ஜுன் அவளை விடுவானா?

படித்து தெரிந்து கொள்ளுங்கள்..🥰

இந்த புத்தகம் அருண் பதிப்பகத்தாரால் வெளியிடப் படுகிறது கிடைக்கும் இடம்..

ARUN PATHIPPAGAM
48TH CHENNAI BOOKFAIR
STALL NO 411,412
5th ROW

வாங்கி படித்து மகிழுங்கள்.. மறக்காமல் தங்களது கருத்துக்களை பகிருங்கள்.

இந்த கதையில் இருந்து சின்ன டீசர்:

அர்ஜுன் அவள் மீதிருந்த பார்வையை எடுக்காது.. “ஆனா அதிரா.. உனக்கும் எனக்கும் செட் ஆகுன்னு நினைக்கிறேன்.” என்றான்.

அதிரா திடுக்கிட்டு பார்க்கவும், அர்ஜுன் “உன் கூடப் பேசறது நல்லா தான் இருக்கு! உன் பாஷையில் சொல்லப் போனா.. உன்னை சீண்டி விளையாடுவது நல்லா இருக்கு! நீயும் வாயில்லா பூச்சி இல்லை. சரிக்கு சரி நல்லா பேசறே!” என்றுச் சிரித்தவன், தொடர்ந்து “நாம் இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமா..” என்றுவிட்டு.. ஓட்டுநரின் இருக்கையின் கதவை தட்டினான். அவன் திறக்கவும், அவனது கையில் மேலும் சில கத்தை நோட்டுகளை திணித்தவன், சிறிது நேரம் கழித்து அவர்களது வீட்டிற்கு போனால் போதும் என்றும்.. அதுவரை.. அந்த மலைச்சாலையில் வண்டி பயணித்துக் கொண்டு இருக்கட்டும் என்றுக் கூறினான்.

அதிரா விக்கித்து அமர்ந்திருந்தாள்.

அந்த மினி லாரி.. அதுவரை சென்றுக் கொண்டிருந்த பாதையில் இருந்து மற்றொரு பாதையில் திரும்பி.. அவன் கூறியதை உண்மை என்று நிரூபித்தது.

அதிரா அச்சத்துடன் எழுந்து நின்று “அர்ஜுன்! ப்ளீஸ் வேண்டாம்! வீட்டிற்கு வண்டியை திருப்ப சொல்லுங்க! எனக்கு உங்க கூட இருப்பது அன்ஈஸியா இருக்கு..” என்றாள்.

அர்ஜுன் “அதைச் சரிச் செய்திரலாம் உட்காரு..” என்றான்.

அதிரா “ப்ளீஸ் வண்டியை திருப்ப சொல்லுங்க..” என்று நடக்க முயலவும், அர்ஜுன் “அதிரா விழுந்திருவே! உட்காரு..” என்று எச்சரித்தான். ஆனால் அவள் கேளாது.. ஒட்டுநரை அழைக்க செல்லுகையில் ஒரு வளைவுப்பாதையில்.. வண்டி திரும்பியது. அதனால் அதிரா தடுமாறி.. பக்கவாட்டில் விழப் போனாள். அதற்குள் அர்ஜுன் கையை நீட்டி அவளைப் பற்றியவன், தன் பக்கம் இழுத்தான். அதிராவும் தடுமாறி அவன் மீது விழுந்தான். தன்மேல் விழுந்தவளை.. இரு கரத்தால் வளைத்து இறுக பிடித்துக் கொண்டான்.

இரு மேனிகள் அழுத்தமாக ஒன்றை ஒன்று உணர்ந்த பொழுது.. இரு உள்ளங்களிலும்.. சிறு சிலிர்ப்பு தோன்றின. அந்த சிலிர்ப்பு இருவரையும் ஒரு நிமிடம் உறைய செய்தது.

*********************

இமைக்காமல் அதிரா தன்னைப் பார்ப்பதைப் பார்த்து சிரித்த அர்ஜுன் “வாட் அதிரா?” என்றுக் கேட்டான்.

அதிரா மெல்ல “நல்லா தானே இருந்துச்சு அர்ஜுன்! நீங்க என்னை சீண்டி விளையாடுனீங்க! எனக்கு கோபம் வந்துச்சு.. உங்களை அவாய்ட் செய்ய நினைச்சேன். ஆனா நான் அப்படி அவாய்ட் செய்ய நினைத்த போது.. நீங்க என்னை நெருங்க ஆரம்பிச்சுங்க! அப்பவும்.. நான் அவாய்ட் தானே செய்திருக்கணும். ஏன் உங்களுக்கு ஒகே சொன்னேன். அங்கே இருந்து தான் என் தப்பு ஆரம்பிச்சுது. இல்லை எனக்கு நானே வச்சுக்கிட்ட ஆப்பு என்றுச் சொல்லணுமோ! அப்படி ஒகே சொன்ன நான்.. அதில் ஏன் உங்களை மாதிரி உறுதியா இருக்க முடியலை?” என்று அவனிடமே கேட்டாள்.

பின் தொடர்ந்து “அப்படி நான் உறுதியாக இல்லை என்று தெரிந்ததும்.. நீங்க.. விடாம ஏன் என்னை இப்படி இறுக்கி பிடிக்கறீங்க! இப்படி இறுக்கி பிடிக்க பிடிக்க.. சுமூகமாக உங்களைத் தவிர்க்க நினைச்ச எனக்கு.. உங்க மேலே வெறுப்பு கூடிட்டே போகுது. வெறுப்புடன் ஒதுங்க நினைக்கிறேன். உங்க பொஷஷிவ்னஸ் எனக்கு பயத்தை கொடுக்குது. ஏன் எனக்கு என்னாச்சு? முதலில் வெறுப்பு, அப்பறம் விருப்பம்.. பிறகு மறுபடியும் வெறுப்பு! இப்படியிருக்கிற என்னை.. நீங்க எப்படி இப்படி ஆழமா நேசிக்கறீங்க! எனக்கு நிஜமா புரியலை. அந்தளவிற்கு சுயமரியாதை இல்லாதவங்களா நீங்க?” என்றுக் கேட்டாள்.

அர்ஜுன் “நமக்குள்ள நடந்ததை அழாக சொல்லிட்டே.. உன் அளவுக்கு எனக்கு அழகா பேச வராது. அருமையான செல்ஃப் அனலைஸ்! இதுல ‘உன் தப்பு..’ ‘உனக்கு நீ வச்சுக்கிட்ட ஆப்பு’ என்று வேர்ட்ஸ் யுஸ் செய்தே பார்த்தியா! அதுதான் எனக்கு பிராப்ளம்! நீ என்னை லவ் செய்ய ஆரம்பிச்சதை என் லைஃப்பில் நடந்த எவ்வளவு சந்தோஷமான விசயம்.. என்று நான் நினைச்சுட்டு இருக்கேன் தெரியுமா! ஆனா அது உனக்கு தப்பாகவும் உனக்கு வச்சுக்கிட்ட ஆப்பாகவும் தெரியுதா!” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்கவும், அதிராவிற்கு பக்கென்று இருந்தது.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1


“உலகை இரட்சிக்கும் காமாட்சி தாயே!”

கோவில் பிரஹாகத்தில் பச்சைப் பட்டுத்தி பச்சைக்கல் மூக்குத்தி மூக்கில் மின்ன காட்சியளித்த காமாட்சியம்மனை பார்த்து பரிமளம் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

அப்பொழுது அவளுக்கு அருகில் நின்றிருந்த பரிமளத்தின் பேத்தி மீரா “இன்னைக்கு என்னை ஸ்பெஷலாக இரட்சிக்கணும் தாயே!” என்றுக் கூடுதல் வேண்டுதலை வைத்தாள்.

அவளுடன் நின்றிருந்த அவளது குடும்பத்தினர் அவளைத் திரும்பிப் பார்க்கவும், “கமான் டுடே இஸ் மை பர்த்டே..! சோ எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு வேண்டும். இந்த குளிரில் ஷெரி வேற கட்டியிருக்கிறேன்.” என்று கரங்களைக் குவித்துக் கொண்டு கண்களை மூடியவாறுச் சொல்லவும்.. அவளது பெற்றோர் ஹரிஹரனும், தனலட்சுமியும் சிரித்தனர். பரிமளம் அவளது தலையை வருடிக் கொடுத்தார்.

அதற்கு “அப்படிப் பார்த்தால் உனக்கு வருஷம் முழுக்க பர்த்டே தான், உன்னைத் தானே இவங்க ஸ்பெஷலா கவனிக்கிறாங்க..! அதனால் என்னையும் கொஞ்சம் கவனி தாயே..!” என்று அவளை விட பத்து வருடங்கள் சிறியவனான மாதவ் புலம்பினான். அதற்கு மீரா தொடர்ந்து “இவன் புலம்பலைக் கேட்டால்.. உனக்கு காதில் இருந்து இரத்தமே வந்திரும் தாயே..” என்கவும், அங்கு சிரிப்பலை பரவியது.

அப்பொழுது அர்ச்சகர் தீபாராதனைக் காட்டவும், பரிமளம் “ஷ்ஷ்ஷ்..” என்றுத் தன் குடும்பத்தினரை அடக்கினார். அவர்களும் கடவுளிடம் தங்களது கவனத்தைச் செலுத்தி அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டார்கள்.

பின் வெளியே வந்தவர்கள் திரும்பி நின்று கோபுரத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் மறக்கவில்லை.

பின் வெளியே வந்தவர்கள்.. மூன்றாக பிரிந்தார்கள், பரிமளம் மற்றும் தனலட்சுமி ஒருபக்கமும், மாதவ் மற்றும் ஹரிஹரன் ஒரு பக்கமும், மீரா ஒரு பக்கமும் பிரிந்தார்கள். தனது காரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த மீராவை பார்த்த தனலட்சுமி “மீரா..! சீக்கிரம் வந்திரு..! எல்லாரும் ஏழு மணிக்கு நெய்பர்ஸ் அசம்பள் ஆகிருவாங்க..! உன் கூட வொர்க் செய்கிறவங்களையும் இன்வைட் செய்திரு..! உன் பர்த்டே பார்ட்டிக்கு வருகிறவர்களை நீ முன்னே நின்று வெல்கம் செய்தால் தான் நன்றாக இருக்கும்..” என்றார்.

“யா! யா! ஐ னோ..” என்றவாறு காரின் கதவை திறந்த மீரா.. முழு நீள ஜெர்கின் கோர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டாள், பின் திரும்பி “பை மாம், பை கெரனி, பை டாட் அன்ட் பை மை டியர் எனிமீ மாதவ்..” என்றுச் சிரித்துவிட்டு காரினுள் ஏறினாள்.

அவளது தந்தை ஹரிஹரன் அவசரமாக “ஹவ் எ க்ரேட் டே டியர்..” என்றார். “தேங்க்ஸ் டாட்” கையசைத்து முறுவலித்துவிட்டு காரின் கண்ணாடியை ஏற்றியவளின் கையில் கார் பறந்தது.

அன்று அவளுக்கு சிறந்த நாளா..??

மாம்பழவர்ணப் பட்டில் பச்சை பார்டரும், அதே மாம்பழ வர்ணத்திலேயே கைசட்டையும் அணிந்திருந்த மீராவின் அழகை கண்கள் குளிர பார்த்துக் கொண்டிருந்த பரிமளம், அவள் ஜெர்கின் அணிந்து அவற்றை மறைத்துக் கொண்டு காரில் ஏறியதும்.. பெருமூச்சு விட்டுக் கொண்டு தனது ஜெர்கினை இறுக பற்றியபடி மருமகளுடன் அவளது காரில் ஏறினார். ஹரிஹரனும் மாதவ்வுடன் தனது காரில் ஏறினார்.

ஹரிஹரனின் கார் மாதவ்வை பள்ளியில் விட்டுவிட்டு அவரது அலுவலகத்தை நோக்கியும், தனலட்சுமியின் கார் அவர்களது வீட்டை நோக்கியும், மீராவின் கார் அவள் வேலை செய்யும் தொழிற்சாலையை நோக்கியும்.. ஜெர்மனி நகரில் அமைந்துள்ள ஹம் நகரின் சீரான சாலையில் சீரான வேகத்துடன் சென்றன.

ஹரிஹரன் இருபதைந்து வருடங்களுக்கு முன்பே வேலையின் பொருட்டு மனைவியுடன் ஜெர்மனி வந்துவிட்டார். இங்கு வந்த பின்பே தனலட்சுமி கருவுற்றாள். ஜெர்மனி வந்து முழுவதாக ஒரு வருடம் முடிவுறாத நிலையில் மனைவியை பிரவசத்திற்கு இந்தியாவிற்கு அனுப்ப இயலாது. அண்டை வீட்டுக்காரர்களின் உதவியுடன் அவரே தனலட்சுமியை கவனித்துக் கொண்டார். மீரா பிறந்து வளர்ந்தது ஜெர்மனியில் தான்.. அதன் பின் இரு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவிற்கு வந்துவிட்டுச் சென்றுக் கொண்டிருந்தனர்.

மீராவிற்கு ஒன்பது வயதிருக்கையில் ஹரிஹரனின் தந்தை ராமமூர்த்தி மறைந்துவிடவும், இந்தியாவிற்கு வந்தார்கள். சில நாட்கள் இருந்துவிட்டு வேலையின் நிமித்தம் ஹரிஹரன் செல்ல வேண்டிய கட்டாயமாக இருக்க தந்தையை இழந்த தாயினை விட்டுச் செல்ல ஹரிஹரனுக்கு மனமில்லை. என்னத்தான் தம்பியின் குடும்பம் இருந்தாலும் அவரின் மனம் தன் தாயுடன் இருக்க சொல்லி விளம்பியது. எனவே மகள் மீராவை பரிமளத்திடம் விட்டவர், தனலட்சுமியுடன் ஜெர்மனி திரும்பினார். பின் பரிமளத்தின் உலகம் மீரா என்று ஆனது. ஒரு வருடம் பாட்டியும் பேத்தியுமாக தனி உலகத்தில் லயித்திருந்த வேளையில் தனலட்சுமி மீண்டும் கருவுற்றார். இரு வருடங்கள் பரிமளத்துடன் இருந்த பின் மீராவை மட்டுமல்லாது மீராவின் செல்ல கட்டளையின்படி பரிமளத்தையும் ஜெர்மனிக்கு ஹரிஹரன் வரவழைத்தார். பன்னிரெண்டு வயதே நிரம்பிய மீரா தான் பரிமளத்தை இரு விமானங்கள் மாற்றி பத்திரமாக ஜெர்மனி அழைத்து வந்தாள். பின் அவர்களின் வசம் ஜெர்மனி என்றே ஆனது.

ஜெர்மனி நகரில் அமைந்துள்ள ஹம் நகரில் அவர்களின் வாழ்க்கை ஓடியது. அவர்களின் அண்டை வீட்டுக்காரர்களில் சிலர் இந்தியராவும் அதில் இரு குடும்பங்கள் தமிழ் குடும்பங்களாக இருக்கவும்.. அங்கே இருந்த சில ஜெர்மன் குடும்பத்தினர் என்று அண்டை வீட்டினருடன் இணைந்து அழகாக வாழ்க்கை நடத்தினார்கள். இன்று மீராவிற்கு இருபத்திமூன்றாம் பிறந்தநாள்..! ஹம் நகரில் அமைந்துள்ள காமாட்சியம்மனை தரிசித்துவிட்டு அவரவர் அலுவல்களைப் பார்க்க விரைந்தனர். மாலையில் பிறந்தநாள் விருந்திற்கும் திட்டமிட்டிருந்தனர்.

இவ்வாறு அழகிய ஓடை போன்று சென்றுக் கொண்டிருக்கும் அவர்களது வாழ்வில் ஒருவனால் சலசலப்பு தோன்றுமா..!?!

மித்ரா ஹம் நகரில் உள்ள புகழ்பெற்ற வாகன உற்பத்தி தொழிற்சாலையில் வடிவமைப்பாளராக பணிபுரிகிறாள். அங்கும் அவளுக்கு தமிழ் நண்பர்கள் உண்டு. அதில் கார்த்திக் கொஞ்சம் ஸ்பெஷல்!

கார்த்திக்கை பற்றி நினைக்கையில் அவளது முகத்தில் புன்னகை மலர்ந்தது. கார்த்திக்கை அவளுக்கு ஒரு வருடங்களாக தெரியும். இந்திய நிறுவனத்தில் ஒன்றில் பணிபுரிந்தவனுக்கு இங்கு மாற்றலாகி ஒரு வருடம் முன்பு தான் வந்தான். தமிழ் தெரிந்தவன் என்பதிலேயே இருவரிடமும் முதல் நாளே நட்பு மலர்ந்தது. தினமும் பார்த்து பழகவும்.. அவர்களது நட்பில் உறுதி ஏற்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாதமாக மீராவிற்கு வேறு நினைவு..!

ஒரு மாதத்திற்கு முன் அவர்களது பிரிவில் பணி புரிந்த வடஇந்திய பெண் ஒருத்தி மீராவிடம் வந்து அவள் கார்த்திக்கை காதலிப்பதாகவும், அவள் அதை அவனுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்றுக் கூறவும்.. மீராவிற்கு கோபம் எங்கிருந்து தான் வந்தது என்றுத் தெரியவில்லை. கார்த்திக்கிற்கு அவள் ஏற்றவள் இல்லை என்றுத் திட்டித் துரத்திவிட்டாள். அதை கார்த்திக்கிடம் பொருமலுடன் சொல்லவும்.. நன்றாக சிரித்தவன், அவளின் முகத்திற்கு அருகே குனிந்து “உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான். அந்த குரல் அவளது செவிக்குள் புகுந்து.. உள்ளே செல்வதைத் திகிலுடன் உணர்ந்தவாறு நின்றுவிட்டாள். அவளது முகத்தைப் பார்த்தவன், மீண்டும் சிரித்துவிட்டு அவளது கன்னத்தை நிமிட்டிவிட்டு சென்றுவிட்டான். அன்று மட்டுமல்லாமல் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவனது கிசுகிசுப்பான குரலும், சிரிப்பும் அவளது செவிக்குள் கேட்டது. அன்றிலிருந்து இருவரும் சந்தித்தால்.. வேறு விசயங்களைப் பற்றிப் பேசினாலும்.. சில நொடிகள் அன்று நடந்ததை நினைத்துப் பார்த்து முறுவலித்துக் கொள்வார்கள்.

கார்த்திக்கை அவளது வீட்டினருக்கு முன்பே அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறாள் என்றாலும்.. இன்று அவளது வீட்டில் நடைப்பெறும் விருந்தில் அவனை முதன் முறையாக வீட்டிற்கு அழைக்கிறாள். எதோ முக்கிய நிகழ்வு நிகழப் போவது போல் அவளது உள்ளமெங்கும் குறுகுறுப்பு தோன்றியிருந்தது.

முகத்தில் மாறாத சிரிப்புடன் அலுவலகத்தில் அவள் பணி புரியும் பிரிவிற்குள் சென்ற போது, அங்கு வண்ண பாலூன்கள் தான் அவளது கண்களில் பட்டது. அவள் திகைத்து நிற்கையிலேயே பாலூன்கள் மேலே பறந்து விட்டத்தில் முட்டிக் கொண்டு நின்றன. அவை அகன்றதும்.. அதற்கு பின்னால் நின்றிருந்த அவளது அலுவலக நண்பர்கள் “ஹாப்பி பர்த்டே மீரா..” என்று குதுகலத்துடன் கத்தினார்கள்.

அவர்களைப் பார்த்த மீராவும் குதுகலமடைந்தாள். “தேங்க்யு! தேங்க்யு! தேங்க்யு சோ மச்..” என்றுச் சொல்லியவள், அனைவரையும் அன்று மாலையில் அவளது வீட்டில் நடக்க இருக்கும் பிறந்தநாள் விருந்திற்கு அழைப்பு விடுத்தாள். அனைவரும் அவள் புடவை கட்டியிருப்பதைக் கண்டு அவளது அழகு கூடியிருப்பதாக கூறிப் புகழ்ந்தார்கள். அவளுடன் படமும் எடுத்துக் கொண்டார்கள்.

கடவுளிடம் வேண்டிக் கொண்டது போல் முகம் கொள்ள மகிழ்ச்சியுடன் இருக்கையில் அமர்ந்தவளுக்கு ஏதோ குறையிருந்தது போல் இருந்தது. என்ன என்று யோசித்தவளுக்கு கார்த்திக் இல்லாதிருப்பது தெரிந்தது. அந்த பிரிவில் இருந்த அனைவரும் வாழ்த்து தெரிவிக்கும் பொழுது அவன் மட்டும் இல்லை என்றால் ஒருவேளை இன்று வரவில்லையோ என்ற ஐயம் கொண்டாள். எனவே அருகில் அமர்ந்திருந்தவரிடம் கார்த்திக்கை பற்றி விசாரித்தாள். அதற்கு அவர் கார்த்திக் முன்பே வந்துவிட்டதாகவும், மீரா வர தாமதமாகும் என்று நேற்று முடித்த புது ப்ரோஜட்டை சரிப் பார்க்க சென்றுவிட்டதாக கூறினார்.

மீரா பணிபுரியும் பிரிவில் அவர்களது வேலை... இயந்திரம் மற்றும் காரின் அமைப்பை வரை வடிவமைத்துக் கொடுப்பது. அதன் பின் அடுத்த கட்ட வேலையான தனிதனிப் பாகங்கள் தயாரித்தல், பின் இணைத்தல் என்று ஒவ்வொரு பிரிவிற்காக என்றுச் சென்று இறுதியாக பெயின்ட் அடிக்கும் பணி வரை நடக்கும் பின் சரிப்பார்த்தலுக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் மீண்டும் அனுப்பப்படும். அவ்வாறு ஒவ்வொரு பிரிவிலும் சரிப்பார்க்கப்பட்டு இவர்களது பிரிவில் மூன்று தினங்களுக்கு முன் வந்தது. இரு நாட்களாக மீராவும் அவளது பிரிவின் கீழ் வேலை செய்பவர்கள் அனைவரும் சேர்ந்து சரிப்பார்த்து நேற்றே வேலையை முடித்துவிட்டனர். இனி அடுத்தக்கட்டமாக தேர்ந்த ஒட்டுநர் வாகனத்தை ஓட்டிப் பரிசோதனை செய்வார். அதிலும் சரியாக வந்தால் நிறுவனத்தின் பெயர் எழுதுவது, அதற்கு அழகு சேர்க்க டிசைன்களை சேர்ப்பது போன்ற வேலைகள் நடக்கும். இவ்வாறு இறுதிக் கட்ட பரிசோதனைக்கு அந்நிறுவனத்தின் புது ரக கார் தயாராகி இருந்தது.

ஆனால் நேற்றே முடித்துவிட்ட வேலையை கார்த்திக் மீண்டும் ஏன் செய்கிறான் என்றுத்தான் மீராவிற்கு புரியவில்லை. கார்கள் நிற்க வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சென்றாள்.

அந்த பெரிய ஹாலில் கார்கள் வரிசையாக நிறுத்த வைக்கப்பட்டிருந்தது, அதில் கார்த்திக்கை எவ்வாறுத் தேடுவது செல்பேசியில் அழைக்கலாமா என்று அவள் செல்பேசியை கையில் எடுக்கையிலேயே ஒரு காரின் கதவு திறக்கப்பட்டிருக்க அதனுள் அமர்ந்துக் கொண்டு ஆராய்ந்துக் கொண்டிருந்தான். மீரா அந்த காரின் அருகே செல்லவும், ஆரவாரம் கேட்டு நிமிர்ந்தவனின் பார்வையில் இருந்த வியப்பு நன்றாக தெரிந்தது. மீராவிற்கு அவனது கிசுகிசுப்பான குரல் செவியில் ஒலித்தது. கார்த்திக்கும் அன்றைய நாளை நினைத்துக் கொண்டானோ என்னவோ, தலையை ஆட்டிச் சிரித்துவிட்டு மேலும் கீழும் அவளை மீண்டும் பார்த்தவன்,

மனதை மறையாமல் “வாவ்..!” என்றவாறு காரில் இருந்து இறங்கியவன் மீண்டும் “வாவ்! ரியலி வாவ்…” என்று அவளை மேலும் கீழும் பார்த்தான், பின் “அழகாக இருக்கிற மீரா..” என்று புடவை கட்டி மேலும் மெருகேறிய அழகுடன் இருந்தவளைப் பார்த்து சொன்னான்.

மீராவோ “அவ்வளவுத்தானா..” என்றாள்.

கார்த்திக் சிரித்தவாறு புருவத்தைச் சொறிந்துவிட்டு “இந்த தேவதை பிறந்து இருபத்திமூன்று வருஷமாகிவிட்டது. கண்டிப்பாக கொண்டாட பட வேண்டிய நாள் மட்டுமல்ல பெருமைப்பட வேண்டிய நாள்..! யு ஆர் டிசர்ட்வ் மோர் மீரா..” என்றுச் சிரித்தான்.

அதற்கு மீரா “அவ்வளவுத்தானா..” என்று மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

கார்த்திக் புரிந்தவனாய் “நான் அங்கே இருந்திருந்தால் அவங்க கூட கோரஸ் தான் பாடியிருப்பேன். இப்படித் தனியா விஷ் செய்திருக்க முடியாதே..” என்று பற்களைக் காட்டிச் சிரித்தான்.

உடனே மீரா காது இரண்டிலும் விரல்களை வைத்து அடைத்துக் கொள்ளவும்.. “ஒகே! ஒகே! ஸாரி..” என்று இரு காதுகளையும் பிடித்துக் கொண்டவன், “இன்னைக்கு டெஸ்ட் ட்ரைவ் ஓட்ட போவது என் பிரெண்ட் அதுதான் மறுபடியும் வந்து செக் செய்தேன்.” என்றான்.

அதற்கு மீரா “டெஸ்ட் ட்ரைவ் ஓட்டும் வேலை செய்பவர், உன் பிரெண்டா..!” என்று வியப்புடன் கேட்டாள்.

கார்த்திக் “என்னது வேலை செய்பவனா..! அவன்தான் எனக்கு வேலையே கொடுத்தவன்.. இந்த கம்பெனியோட இந்தியா டீலர் கம்பெனி என் பிரெண்ட் அப்பாவுடையது தான்..” என்றுச் சிரித்தான். மீரா புரியாமல் பார்க்கவும்.. கார்த்திக் “நான் சொல்லியிருக்கிறேனே..! என் வீட்டு எக்னாமிக்ஸ் டவுன்னாக இருப்பதைப் பார்த்து அவனுடைய கம்பெனியில் வொர்க் செய்துட்டு இருந்த என்னை.. ஜெர்மனிக்கு என் பிரெண்ட் அனுப்பினான் என்று..” என்கவும், மீரா “ஆமா ஆமா..” என்று நினைவு வந்தவளாய் தலையை ஆட்டினாள்.

கார்த்திக் “அவன்தான் ஜெர்மனிக்கு நேற்று நைட் தான் வந்திருக்கிறான். நேராக கம்பெனியில் வந்து என்னைப் பார்க்கிறான் என்றுச் சொல்லியிருக்கிறான். கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழித்துப் பார்க்க போகிறேன்.” என்று முகத்தில் மகிழ்ச்சியுடன் சொன்னான்.

மீரா புருவத்தை உயர்த்தியவாறு “ஓ..! என்சாய் வித் யுவர் பிரெண்ட்..! அப்போ ஈவினிங் வரை இங்கே தான் இருக்க போகிறாயா..” என்றவள்.. தொடர்ந்து “ஆனால் ஈவினிங் பர்த்டே பார்ட்டிக்கு வந்து விட வேண்டும்.” என்றாள்.

கார்த்திக் “கண்டிப்பாக…” என்றுச் சிரித்தான். அதற்கு மீரா விரலை நீட்டி எச்சரித்துவிட்டு சிரித்தவாறு சென்றாள்.

அப்பொழுது அவர்களின் பேச்சின் நாயகன் அந்நேரத்தில் அலுவலகத்திற்குள் நுழைந்திருந்தான்.

---------------------------------------------------------

இந்தியாவில் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கொடிக் கட்டி பறந்து இந்தியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாது தங்களது வளர்ச்சியையும் பெருக்கிக் கொண்ட நிறுவனத்திற்கு சொந்தக்காரர் ஜெய்சங்கர்! அவருக்கு ஐந்து பிள்ளைகள்..! ஐந்து பிள்ளைகளுக்காக ஐந்து தொழில்களைத் தோற்றுவித்து அவரது பொருளாதாரத்தை பெருக்கி கொண்டவர். பிள்ளைகளுக்கு சரிசமமாக பிரித்துக் கொடுத்தாலும் அவரிடம் மிகையாக மிஞ்சி கிடந்த சொத்தின் கணக்கு ஏராளம்! சிறிது காலத்தில் அவரது மனைவியும் அவரை விட்டு காலம் சென்றுவிட்ட போது.. அவரது பிள்ளைகள் அவரவர் வீட்டிற்கு அழைத்தனர். ஆனால் அவர் தேர்ந்தெடுத்ததோ அவரது இரண்டாம் மகன் ஆனந்த்சங்கரின் வீடு!

ஆனந்த்சங்கர் அவரது பிள்ளைகளில் திறமைசாலி! தன் தந்தை கொடுத்த சொத்தை ஐந்து வருடங்களில் இரு மடங்காக காட்டியவர். அதில் மகிழ்ந்து அங்கு சென்றார். ஆனால் அங்கு சென்ற சில நாட்களிலேயே தன் மனைவிடம் சென்று விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்!?!

ஆனந்த்சங்கருக்கு மூன்று பிள்ளைகள்..! மூத்தவன் ராஜ்சங்கர்.. அவனுக்கு திருமணம் முடிந்து மனைவி மகள் மற்றும் மகன் உண்டு. அடுத்து பெண் வித்யாசங்கர் அவளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. கணவனுடன் தாய் வீட்டிலேயே இருக்கிறாள். அடுத்து ஆதித்யாசங்கர்..!

ஜெர்மனிக்கு கார் மாதிரியை பார்த்து ஒப்பந்தம் போட வந்திருப்பவன் ஆதித்யா தான்..!

------------------------------------------------------------

கண்களைக் கூச செய்யும் வெயிலின் காரணமாக கண்களுக்கு மேலே கையை வைத்தவாறு பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கின் அருகில் நின்றிருந்த நிர்வாக தலைவரும், அவரின் உதவியாளர்களும், இந்தியாவில் இருந்து வந்திருந்த ஆனந்த்சங்கரின் உதவியாளரும் குழப்பத்துடன் நின்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பார்வை அந்த பெரிய மைதானத்தில் இருந்தது. அங்கு நேற்று அவர்கள் வடிவமைத்த கார் ஒன்று முதலில் நிதானமான வேகத்துடன் கிளம்பியது.

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே சட்டென்று கார் வேகமெடுத்தது. காரின் வேகம் போக போக அதிகரித்தது. அவர்களின் பார்வை அதன் மேல் இருக்கும் பொழுதே அந்த காரின் வேகம் திடுமென குறைந்து அடுத்த நொடியில் அசையாது நின்றது. அவர்கள் என்னவாயிற்று என்றுப் பார்க்கும் பொழுதே.. அது மீண்டும் வேகமெடுத்து கிளம்பியது. நிர்வாக ஊழியர்கள் அருகில் நின்றிருந்த கார்த்திக்கை பார்த்தார்கள். அவன் ஆங்கிலத்தில் “ஸார் பிரேக் செக் செய்கிறார். வேறு ஒன்றுமில்லை..! நம்ம டிரைவரும் இதைத்தானே செய்வார்..?” என்று அவர்களைப் பார்த்து சொல்லி சிரித்துவிட்டு எச்சிலை விழுங்கிக் கொண்டு மீண்டும் மைதானத்தில் பார்வையைச் செலுத்தினான்.

அவனுக்கே அவன் பேசியதில் இருந்த அபத்தம் புரிந்தது. அவர்களின் ஓட்டுநரும் பிரேக் போன்றவற்றை பரிசோதிப்பார் தான்..! ஆனால் இவ்வளவு முரட்டுத்தனமாக செய்ய மாட்டார். ஆனார் கார்த்திக் அவர்களிடம் ஆமாம் அவர் சற்று முரட்டுத்தனமாக தான் காரை ஓட்டுகிறார் என்றுச் சொல்லி அவனது முதலாளியை விட்டுத் தர முடியாது. முதலாளி என்பதற்கும் மேல் நண்பன் ஆகிற்றே..! அதனால் முகத்தில் எதையும் காட்டாது காரில் பார்வையைப் பதித்தவாறு நின்றிருந்தான்.

அடுத்து அந்த கார் சென்ற வேகத்திலேயே நின்ற இடத்தில் இருந்தே வட்டமடித்து நின்று பின் சென்றது. தற்பொழுது அவர்கள் கார்த்திக்கை பார்க்கவும், அவன் முகத்தில் மாறாத அதே அசட்டுச் சிரிப்புடன் “ஸார்! ஸ்டெரிங், கியர், டையர் ஆகியவற்றைப் பரிசோதிக்கிறார்.” என்றுவிட்டு மனதிற்குள் “ஆதி..” என்று முணுமுணுத்தான்.

நேராக பாதையில் சென்றுக் கொண்டிருந்த கார் தற்பொழுது தாறுமாறாக ஓடியது. பாதையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த சிறு சிறு மூட்டைகளின் மேல் ஏறி இறங்கியது. ஒவ்வொரு முறையும் ஏறி இறங்கும் பொழுது குதித்து குதித்து நின்ற காரை பார்த்து இவர்களின் இதயம் மார்புக்கூட்டை விட்டு வெளியே வந்து சென்றது. அடுத்து பெரிய ஒரு தடுப்பின் மேல் ஏறிய பொழுது கார் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. ஆனால் அந்த பயம் காரை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு இல்லை போல..! தொடர்ந்து அடுத்த தடுப்பின் மேல் காரை செலுத்திக் கொண்டிருந்தான். பின் வேகமாக திரும்பிய கார் பின்னாடியே சென்றது. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களுக்கு காரை ஓட்டிக் கொண்டிருப்பவனுக்கு சித்தம் கலங்கி விட்டதோ என்ற ஐயமே ஏற்பட்டது. அடுத்து அந்த கார் வேகமாக நேராக திரும்பி.. தயாரான கார்களை டேன்கர் லாரிகளில் ஏற்வதற்கு பயன்படும் சரிவான பலகையை நோக்கி வேகமாக சென்றது. காரை ஓட்டிக் கொண்டிருப்பவனின் நோக்கம் அங்கிருந்தவர்களுக்கு புரிந்துவிட்டது. நிர்வாக தலைவர் பொறுமையிழந்த குரலில் “தட்ஸ் எனஃப்! ஐ கான்ட் டாலரேட் திஸ் எனி மோர்..! ஸ்டாப் ஹிம்..” என்று இரைந்தார்.

ஆனால் கார்த்திக்கின் பார்வை அந்த காரின் மேலேயே இருந்தது.

கார் அந்த பலகையை நோக்கி செல்ல செல்ல அதன் வேகம் அதிகரித்தது. பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்களும் அகல விரிந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போல்.. கார் அந்த பலகையின் மேல் ஏறிய கார் வானத்தில் பறந்து சிறிது தூரம் சென்று தரையில் இறங்கியது. அது சரியாக தரையில் இறங்கிய பின்னரே கார்த்திக் அதுவரை அடைத்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டான். “ஆதி..” என்று பற்களைக் கடித்துக் கொண்டான். அப்பொழுது தான்.. அவனுக்கு அருகில் நின்றுக் கத்திக் கொண்டிருந்தவரின் கத்தல் காதில் விழுந்தது. “வாட் ஹி தின்க் ஆஃப் ஹிஸ்செல்ஃப்..! இஸ் ஹி டிரைவிங் எ பேமலி கார் ஆர் ரேஸ் கார்..” என்றுக் கத்திக் கொண்டிருந்தார்.

கார்த்திக் சங்கடத்துடன் அந்த காரை பார்த்தான். அடுத்து அங்கு என்ன நடக்கும் என்று அவனுக்கு ஒரு கணிப்பு இருந்தது. சட்டென்று ஒரு பொறி தோன்றியது. ஒருவேளை ஆதித்யாவிற்கு வேண்டியதும் அதுதானோ..! அவன் கணித்தது சரியென்பது போல்.. நிர்வாக தலைவரின் உதவியாளர் இந்தியாவில் இருக்கும் ஆதித்யாவின் தந்தையை தொடர்பு கொள்ள முயன்றுக் கொண்டிருந்தார்.

எனவே மனதிற்குள் ‘ஆதித்யா போதும்டா..! இன்னும் எத்தனை நாட்கள் உன் வாழ்விலேயே நீ விளையாடுவாய்..?’ என்று வருத்தத்துடன் நினைக்கும் பொழுதே.. அன்று அவன் சொன்ன பதிலும் நினைவு வந்தது.

“மற்றவர்கள் என் வாழ்க்கையில் விளையாடும் போது எனக்கு அதற்கு ரைட்ஸ் இல்லையா..”

கார்த்திக்கிற்கு ஆதித்யாவை நினைத்து கோபமும், வருத்தமும் ஒருங்கே தோன்றியது. அடுத்து என்ன செய்ய போகிறானோ என்று குதித்து நின்ற காரை பீதியுடன் பார்த்தான். அவர்களை பயமுறுத்தியது போதும் என்று நினைத்தனோ..! காரின் கதவு திறக்கப்பட தலைக் கவசத்துடன் இறங்கினான் ஆதித்யா..!

இடது கையால் முகவாயிற்கு கீழ் இருந்த பெல்ட்டை அவிழ்த்தவன், அதே கையால் தலைக்கவசத்தைக் கழற்றினான். தலையை குனிந்து வலது கரத்தால் தலைக்கவசம் அணிந்திருந்ததால் படிந்திருந்த சிகையை கலைத்து விட்டவாறு நிமிர்ந்தான். தன்னைப் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தவன், கண்சிமிட்டிச் சிரித்தான். அவனிடம் இருந்து தலைக்கவசத்தை வாங்க கை நீட்டியவனைத் திரும்பியும் கூடப் பார்க்காமல் அதைக் கொடுத்துவிட்டு அவர்களை நோக்கி வந்தான்.

அங்கு அவனை ஒரு மாதிரி பார்த்தவாறு நின்றிருந்த அலுவலக ஊழியர்களைப் பார்த்து சிரித்தவன், கார்த்திக்கிடம் “இவங்க முகத்தைப் பார்த்தால் என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளட்டுமா என்பது போல் இருக்கே கார்த்தி..” என்றுச் சிரித்தான்.

கார்த்திக் “பின்னே என்ன நினைப்பாங்க..! புதிதாக மார்கெட்டிங்கிற்கு வர போகிற காரை முதன் முதலாக நீ ஓட்ட போகிறாய்.. என்று எவ்வளவு ஆசையாக நேற்றிலிருந்து நான் பார்த்து பார்த்து ரெடி செய்தேன் தெரியுமா..! ஆனால் நீ..” என்று அவனை முறைத்தான்.

அதற்கு “நான் டெஸ்ட் டிரைவர் செய்வதைத் தானே செய்தேன்.” என்றுத் தோள்களைக் குலுக்கியவாறுச் சொன்னான்.

கார்த்திக் “அவங்க சாஃப்ட்டா ஒவ்வொரு ஸ்டெப்பாக செய்வதை நீ முரட்டுத்தனமாக செய்து வைத்திருக்கிறே!” என்றுப் பொருமினான்.

அதற்குள் நிர்வாக தலைவர் ஆதித்யாவின் தந்தையிடம் என்ன பேசினாரோ.. ஆதித்யாவை பார்த்து “தேங்க்ஸ் ஃபார் கம்மிங்!” என்றுவிட்டு அவனை எரிச்சலுடன் பார்த்தார்.

அதைப் பார்த்த ஆதித்யா மெல்ல கார்த்திக்கின் அருகில் சரிந்து “அவரோட மைன்ட் வாய்ஸ் என்ன சொல்கிறது என்றுத் தெரியுமா..! உன்னை உள்ளே விட்டதே தப்பு..!” என்று உதட்டில் அடக்கப்பட்ட சிரிப்புடன் ஒற்றைப் புருவத்தை உயர்த்திச் சொன்னான்.

ஆதித்யா கூறியதைக் கேட்ட கார்த்திக்கிற்கு சிரிப்பு பிறீட்டு வந்தது. ஆனாலும் அவனும் ஊழியன் என்பதால் சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றான்.

ஆதித்யா இங்கு வந்த போதே.. காரை பற்றிய முப்பரிமாண விளக்கப்படத்தைக் காட்டி அவனுக்கு விளக்க முற்பட்ட போது.. அதைத் தடுத்தவன் நேராக காரையே பார்த்துவிடலாம் என்றுக் கூறவும், அவர்கள் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்கள். மைதானத்திற்கு வந்த பின் பரிசோதனை ஓட்டத்திற்கு வந்த பொழுது, தானே ஓட்டிப் பார்க்க போவதாக சொன்ன போது.. அவனது பாதுகாப்பைக் குறித்து தான் அவர்கள் கவலைப்பட்டார்கள். அவர்களைச் சமாதானப்படுத்திவிட்டு காரில் ஏறிய பொழுது மகிழ்ச்சியுடன் தான் அனுப்பி வைத்தார்கள். ஆனால் அதை வைத்துக் கொண்டு அவன் செய்த அட்டகாசத்தைப் பார்த்து எரிச்சலும் கோபமும் கொண்டார்கள். நேராக ஆனந்த்சங்கரை அழைத்து.. ஒப்பந்தத்தைப் பற்றியும் மேலும் மார்கெட்டிங் விபரங்களைப் பற்றியும் பேச ஆதித்யா சரியான ஆளாக தெரியவில்லை என்று வெளிப்படையாக சொல்லவும், ஆனந்த்சங்கர் அதை அமைதியாக ஆமோதித்தார். ஆனால் அவரது உள்ளத்தில் தன் மகனை நினைத்து கோபம் எரிமலையாக வெடிக்க தொடங்கியிருந்தது.

நிர்வாகத்தினரை பார்த்து சிரித்த ஆதித்யா “இங்கே வந்ததில் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் மிஸ்டர் ஜாக்க்ஷன்! இந்த காரை பற்றி ஒப்பினியனை என்கிட்ட கேட்க மாட்டிங்க என்பதை விட தேவையில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் ரொம்ப என்சாய் செய்தேன். அதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவர் என் அப்பாவோட ஆஸிஸ்டென்ட்.. இவர்தான் உங்க கூடப் பேச வந்திருக்கிறார். இவரை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..! பை டு ஆல்..” என்றுத் தன்னுடன் வந்திருந்த ஆனந்தசங்கரின் உதவியாளரை கை காட்டினான்.

பின் கார்த்திக்கிடம் திரும்பியவன், “வேலையை முடிச்சுட்டு வாடா..! வெளியில் இருக்கிற காபி கேஃப்பில் வெயிட் செய்கிறேன். இப்போ எனக்கு வேற வேலை இருக்கு, இன்னும் ஃபை செக்ன்ட்ஸில் என் அப்பா கிட்ட இருந்து எனக்கு ஃபோன் வரும் பாறேன்..” என்றுவிட்டு திரும்பியவன், கையை உயர்த்தி ஒவ்வொரு விரல்களாக விரித்தவாறு சென்றான். அவன் ஐந்தாவது விரலை விரித்த போது அவனது சட்டைப் பையில் இருந்த செல்பேசி அழைத்தது. திரும்பி கார்த்திக்கை பார்த்து ‘எப்படி’ என்பது போல் புருவத்தை உயர்த்திக் காட்டிச் சிரித்துவிட்டு செல்பேசியை காதில் வைத்தவாறு சென்றுவிட்டான்.

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் “ராஸ்கல் இவன் மாறவேயில்லை.” என்றுச் சிரித்தவன், தொடர்ந்து “ஆனால் மாறினால் நன்றாக இருக்குமே..” என்றுச் சிறு பெருமூச்சு விட்டான்.

அதன்பின் அங்கு வியாபாரச் சம்பந்தமான விசயங்கள் போன்றவை பேசப்பட்டது. வேறு ஒரு ஓட்டுநர் வரவழைத்து வேறு ஒரு காரை ஓட்டிப் பார்க்க வைத்து அதைப் படம் பிடித்துக் கொண்டனர். அந்த கார் மார்கெட்டிங்கிற்கு தயார் என்ற அறிக்கையை அனைத்து பிரிவிலும் அறிவிக்கப்பட்டது. அவர்கள் அதை கைத்தட்டி ஆரவாரம் செய்து கொண்டாடினர்கள். மீரா வேலை செய்த பிரிவில் அவளது பிறந்தநாள் அன்று கிடைத்த நல்ல செய்தியாக சொல்லி அவளுக்கு தனியாக வாழ்த்து தெரிவித்தார்கள்.

ஆதித்யா ஓட்டியே காரில் அவன் முரட்டுத்தனமாக ஓட்டிய விதத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருக்குமோ என்று ஆராய்ந்தார்கள். அதில் எந்தவித பாதிப்பும் இல்லாதிருக்கவும், அதிசயப்பட்டார்கள். அவன் இலாவகமாக ஓட்டினனா அல்லது அவர்களது தயாரிப்பு உறுதியானதாக இருந்ததா என்று ஆலோசித்தவர்கள்.. முடிவில் அவர்களின் தயாரிப்பு அவ்வளவு உறுதியானது என்று மார்தட்டிக் கொண்டார்கள்.

மாலையில் சொன்னது போல் காபி கேஃப்பிற்கு கார்த்திக் விரைந்தான். அங்கு அவனுக்காக காத்திருந்த ஆதித்யாவை பார்த்ததும் தானே அவனது முகத்தில் முறுவல் மலர்ந்தது.

“ஆதி..” என்று அழைக்கவும், “கார்த்தி..” என்று அவனும் எழவும், இருவரும் கட்டியணைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

முதலில் விலகிய ஆதித்யா அவனது வயிற்றில் சிறு குத்துவிட்டு “அடப்பாவி ஜெர்மன் கிளைமேட்டிற்கு என்னை விட கலராகிட்டே..!” என்றுச் சிரித்தான்.

அதற்கு கார்த்திக் “காய்ந்துப் போயிட்டேன்.. என்றுச் சொல்லு..” என்றுச் சலித்துவிட்டு “என் பேமலில இருக்கிறவங்க எப்படிடா இருக்கிறாங்க, டெய்லி பேசுவேன் என்றாலும்.. நேரில் பார்க்கிற மாதிரி இருக்காதே..” என்று ஆர்வத்துடன் தொடங்கியவன், வருத்தத்துடன் முடித்தான்.

ஆதித்யா “எல்லாரும் செமையா இருக்கிறாங்க, உனக்கு ஸ்பெஷல் மேசேஜ் மட்டுமில்லை, தின்க்ஸ்ம் அனுப்பியிருக்கிறாங்க.. இப்போ என் ரூமிற்கு வா.. எல்லாம் எடுத்துத் தருகிறேன்.” என்றான்.

கார்த்திக் “தேங்க்ஸ்டா..” என்றான். அதற்கு ஆதித்யா “உன் தேங்க்ஸை நான் கேட்டேனா..” என்று முறைக்கவும், கார்த்திக் “ஒகே! ஒகே!” என்றுச் சமாதானப்படுத்தினான்.

பின் கார்த்திக் “என்ன ஆதி நீ! இன்னைக்கு இப்படிப் போட்டு சொதப்பி வைச்சுட்டே..! அவங்க முகத்தைப் பார்க்க பாவமாக இருந்தது. பிஸினஸ் மேட்டராக வந்திருக்கன்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் இங்கேயும் வந்து உன் விளையாட்டைக் காட்டிட்டே..!” என்றுக் குறைப்பட்டான்.

அதற்கு சத்தமாக சிரித்த ஆதித்யா “என்னைப் பற்றியும் என் அப்பாவை பற்றியும் நன்றாக தெரிந்த நீயே இப்படி நினைக்கலாமா..” என்று மீண்டும் சிரித்தான்.

பின் சிரிப்பை கை விட்டவனாய் மேசையில் அலங்காரத்திற்காக வைத்திருந்த பொம்மையை கையில் வைத்து விளையாடியவாறு “என்னை உருப்பட வைக்கணும் என்று நினைச்சுட்டு என்னை மட்டம் தட்டுவது தான் அவரது வேலை..! இங்கே என்னை அவர் ஒப்புக்காக தான் அனுப்பியிருக்கிறார் என்று எனக்கு தெரியும். அவர் ஆரம்பத்தில் இருந்து எல்லா விசயங்களையும் இங்கே கான்டெக்ட் செய்து எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டார். அதே மாதிரி நான் இங்கே வந்து என்ன செய்யணும் என்பதை எனக்கு சொல்லி அனுப்பியதை விட.. அவரோட அஸிஸ்டென்டிடம் தான் நான் என்ன செய்யணும் என்று நிறையா சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆல்ரெடி ஓகேவான மேட்டருக்கு வீணாக நடுவில் நான் எதற்கு..! இவங்க அந்த விளக்கங்களை எனக்கு மறுபடியும் விளக்கி எதற்கு எனர்ஜீயை வேஸ்ட் செய்துக்கணும். அதுதான் முதலில் அவங்க பேசலாமா என்றுக் கேட்ட போது மறுத்துட்டேன்..! நான் ஒன்றும் அவங்க ஆட்டுவிக்கும் பொம்மை இல்லை. சரி அவங்க சொல்வதை நான் கேட்கிறேன் என்றே வை..! அவங்க கொடுக்கிற விளக்கத்தை ஒத்துக் கொள்ளவில்லை என்றால் மாற்றி விடுவாங்களா! இல்லை அந்த விளக்கம் சரித்தான் என்று என்னைத்தான் கன்வின்ஸ் செய்வாங்களா? அதுவும் இல்லை. பின்னே எதற்கு டைம் வேஸ்ட் செய்துட்டு! அதுதான் கொடுக்காத வேலையான காரை செக் செய்ய வேண்டும் என்றுச் சொன்னேன். அங்கே என் அப்பா இது என் பிளனிலேயே இல்லையே என்று தலையைப் பிய்ச்சுகிட்டாரு..! எங்கிருந்துடா இவன் வந்தான் என்று இங்கே இருக்கிறவங்க மண்டையை பிய்ச்சுகிட்டு என் அப்பாவிற்கு ஃபோன் போட்டு கம்பளைன்ட் செய்திருக்காங்க..! அதில் எனக்கு செம குஷி..! ஆனால் ஆனஸ்ட்டா சொல்ல வேண்டுமென்றால் ஐயம் என்சாய்டு குட் ப்ரோடெக்ட் காங்கிராஜ்லேசன்ஸ் கார்த்திக்..” என்றுச் சிரித்தான்.

கார்த்திக்கிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இது ஆதித்யாவின் குடும்ப விவகாரம் இதில் தான் தலையீட்டு கருத்துச் சொல்வது சரியாக இருக்காது என்று எப்பொழுதும் போல் அமைதியாக இருந்தான்.

நண்பனின் மௌனத்தைக் கண்டு “கார்த்தி தேறிட்டே போ..” என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.

அதற்கு கார்த்திக் “எல்லாம் அனுபவம் தான்..! உனக்கு அட்வைஸ் செய்கிறேன் என்று எத்தனைத் தரம் உன் கிட்ட வாங்கிக் கட்டியிருக்கிறேன்.” என்று எரிச்சலுடன் சொன்னான்.

அதற்கு மீண்டும் சிரித்த ஆதித்யா “கார்த்தி நான் இங்கே என்சாய் செய்ய வந்திருக்கிறேன். பழைய காலேஸ் லைஃப்பில் என்சாய் செய்கிற மாதிரி இங்கே நாம் என்சாய் செய்ய போகிறோம். கம்பெனியில் புது ப்ரோஜெட்டை தான் முடிச்சுட்டியே! சோ பர்மிஷன் வாங்கிட்டு என் கூட வருகிறே.. ஒகே..” என்றான்.

“அது..” என்று அவன் இழுக்கவும் ஆதித்யாவிற்கு கோபம் சிறிது எட்டிப் பார்த்தது. “எது..” என்றுப் புருவத்தை உயர்த்தி கேட்டான்.

உடனே கார்த்திக் பேச்சை மாற்ற எண்ணி “முதலில் காபி வாங்கி தாடா..” என்றான். சிரித்தவாறு எழுந்த ஆதித்யா அவனது தலையைப் பிடித்து கீழே அழுத்தி குனிந்த அவனது முதுகில் ஒரு அடி வைத்துவிட்டு சென்றான்.

“பாவி..” என்றுச் சிரித்தவாறு நெளிந்துக் கொண்டு அமர்ந்தவன், “கார்த்திக்..” என்ற அழைப்பில் திரும்பினான். அங்கு மீரா நின்றுக் கொண்டிருந்தாள்.

மீரா “வாட் எ சர்பரைஸ்..! இன்னேரம் குடோனில் இருப்பாய் என்றில்லை நினைத்தேன். எனிவே காங்கிராஜ்லேன்ஸ்! நம்ம ப்ரோஜெக்ட் சக்ஸஸ் ஆகிருச்சு..! அப்பறம் உங்க பிரெண்ட்டை பார்த்தீங்களா..? அவரை நாளைக்கு மீட் செய்துக்கோங்க..!” என்று அவனிடம் கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கு அவன் பதிலளிக்க இடம் கொடுக்காது.. அடுத்த கேள்வியை வரிசையாக கேட்டபடி அவனது இருக்கைக்கு எதிர் இருக்கையில் மீரா அமர்ந்தாள். அவனும் இருக்கையில் நன்றாக சாய்ந்தபடி அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

கையில் இரு காபி கோப்பைகளுடன் வந்த ஆதித்யா தன் நண்பனுடன் இன்னொரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான். தனக்கும் தன் நண்பனுக்கும் என்று எடுத்து வந்ததை இன்னொரு பெண்ணுடன் பகிர்ந்து கொள்ள அவன் விரும்பவில்லை. காபி கோப்பை மட்டுமல்லாது அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட இந்த நேரத்தைக் கூட மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள அவன் விரும்பவில்லை. அவனது நண்பன் கார்த்திக்கிடம் சந்திக்கலாமா என்றுக் கேட்டு இங்கே சொன்னபடி வந்திருப்பதால்.. இதை அவர்களுக்கான நேரம் என்று நினைத்தான். அவ்வாறு சொல்லி வைக்காமல் அந்த பெண்ணுடன் பல மணி நேரம் அமர்ந்து அரட்டை அடித்திருந்தாலும் அவன் பெரிதாக எடுத்திருக்க மாட்டான். தற்பொழுது அந்த பெண்ணின் வருகையைத் தொந்திரவாக கருதினான். சிறு எரிச்சலுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே கார்த்திக் அமர்ந்திருப்பதிற்கு பின்னால் இருந்த கண்ணாடியை பார்த்தவனின் முகத்தில் கோபம் பொங்கியது. எனவே ஒரு நொடி நின்றவன் முகத்தில் அசட்டையான முறுவலுடன் அவர்களை நோக்கி சென்றான். சற்றும் யோசிக்காமல் மீராவின் தோளில் காபி கோப்பையைச் சரித்தான்.



நிஜங்கள் சூழ்ந்த உலகில் நான்..!
நிழல்கள் விரும்பா நிழல் உலகில் நீ..!


 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களது கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்...

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2


மீரா தனது தோளில் காபி கொட்டியதும்.. அன்னிசை செயல் போல் எழுந்துவிட்டாள். மீராவையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கும் இதை எதிர்பார்க்கவில்லை “மீரா..” என்றவாறு அவனும் எழுந்தான்.

மீரா எழுந்ததும் காலியான அந்த இடத்தில் அமர்ந்த ஆதித்யா “வான்ட் சம் டிஷ்யு பேப்பர்..” என்று மேசையில் இருந்த டிஷ்யு பேப்பர் பெட்டியைச் சுட்டிக்காட்டி விட்டு சர்வசாதாரணமாக இன்னொரு கோப்பையில் இருந்த காபியைப் பருக ஆரம்பித்தான்.

மீரா ஜெர்கின் அணிந்திருந்ததால் அதன் மேல் காபி பட்டதில் அதைத் துடைத்துவிட்டால் போதும் என்று நிம்மதியுற்ற கார்த்திக், தன் நண்பனுக்காக மன்னிப்பு கேட்டான். “ஸாரி மீரா! இவன் என் பிரெண்ட் தான்.. ஸாரி தெரியாமல் சிந்திட்டான்...” என்றான்.

ஆனால் மீரா கார்த்திக் பேசியதைக் கவனியாமல் சாகுவசமாக காபி அருந்திக் கொண்டிருந்த ஆதித்யாவின் முன் சென்றவள், “என் மேல் ஏன் காபியை கொட்டினீங்க..?” என்று நேரடியாக கேட்டாள்.

தன்னிடம் கேட்டவளை நிமிர்ந்து பார்த்த ஆதித்யா புருவத்தை சுருக்கினான்.

அதற்கு மீரா “ஹலோ! நான் எனக்கு எதிரே இருந்த மிரரில் நீங்க வேண்டுமென்றே என் மேல் காபியை கொட்டியதைப் பார்த்துட்டேன். இப்போ சொல்லுங்க.. ஏன் கொட்டினீங்க..?” என்றுக் கேட்டாள். கார்த்திக் தற்பொழுது அதிர்ந்தவனாய் தன் நண்பனை பார்த்தான். மீராவிடம் அவன் அவ்வாறு செய்திருக்க மாட்டான் என்று வாதாட தைரியமில்லை. ஏனெனில் ஆதித்யா செய்ய கூடியவன் தான்! ஆனால் முதல் முறையாக பார்த்த பெண்ணிடம் ஏன் என்றுத்தான் புரியாமல் ஆச்சரியமாக பார்த்தான்.

ஆதித்யா “சொல்ல விருப்பமில்லை..” என்றுவிட்டு பருகுவதில் முனைந்தான்.

மீரா அலட்டாமல் “அப்போ ஸாரி சொல்லுங்க..” என்றதும், ஆதித்யா ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவளை வியப்புடன் பார்த்தான்.

ஆதித்யா அமைதியாக இருக்கவும் மீரா “அதுவும் சொல்ல மாட்டிங்களா..” என்று அவளே கேட்டாள். ஆதித்யா மறுப்பாக தலையசைக்கவும், சிறிதும் கூட யோசிக்காமல் அவனது கையில் இருந்த காபி கோப்பையைப் பிடுங்கி அவனது சட்டையின் மேல் ஊற்றினாள்.

பின் ஆதித்யாவை பார்த்து “எனக்கு ரிஷன் இருக்கு..! ஆனாலும் நான் ஸாரி சொல்கிறேன். ஸாரி..! வான்ட் சம் டிஷ்யு பேப்பர்..” என்றவள், “இன்னைக்கு மூட் ஸ்பாயில் ஆக கூடாதுன்னு பார்த்தேன்.” என்றுச் சிறுக் கோபத்துடன் முணுமுணுத்தவாறு தோள்பையை எடுத்து மாட்டிக் கொண்டவள், கார்த்திக்கிடம் திரும்பி “ஈவினிங் பார்ட்டிக்கு மறக்காமல் வந்திரு..” என்று ஆதித்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சொன்னாள். பின் திரும்பியும் கூடப் பார்க்காமல் சென்றாள்.

அவள் செல்வதைச் சிறு சங்கடத்துடன் பார்த்த கார்த்திக்.. “என்ன ஆதி..!” என்றுச் சலித்தவாறு அமர்ந்தான். ஆதித்யாவோ டிஷ்யு கொண்டு ஜெர்கினில் இருந்ததை துடைத்துவிட்டு “என் பர்மிஷன் இல்லாமல் என் டைமில் இன்டர்ப்ட் செய்த மாதிரி இருந்தது. அந்த பெண் கிட்ட ஹலோ என்றுச் சொல்லி இன்டர்டுயுஸ் ஆகிற மூடியில்லை. அதுதான் அந்த பெண்ணை துரத்திவிட அப்படிக் கொட்டினேன். ஆனால் மிரரில் நான் கொட்டியதைப் பார்ப்பாள் என்று நினைக்கவில்லை.” என்றுச் சிரித்தான்.

கார்த்திக் நெற்றியைத் தடவியவாறு “மீராவிற்கு நான் உன் கூடப் பேசிட்டு இருக்கிறேன் என்றுத் தெரியுமா என்ன..! அப்படி நாம் பேசிட்டு இருக்கும் போது வந்தாலும் என்ன தப்பு..?” என்றுக் கேட்டான்.

அதற்கு ஆதித்யா தோளைக் குலுக்கியவாறு “பிகாஸ் ஐயம் நாட் தட் டைப்! என்னை மாதிரியே மற்றவங்களையும் எதிர்பார்க்கிறேன். ஆனால் மற்றவங்க வேற மாதிரி இருக்கிறாங்க.. இதற்கு தான் நான் எங்கேயும் போறதில்லை..! யாருடனும் பேசுவதில்லை..” என்றான்.

ஆதித்யா இவ்வாறுத்தான் பதில் அளிப்பான் என்று கார்த்திற்கு தெரியும். ஆனாலும் நண்பனுக்கு புரிய வைக்க முயன்றான். “ஏன்டா இப்படியிருக்கிறே? எப்படியிருந்த ஆள் நீ..! காலேஜ்ஜில் ஒரு கூட்டமே உன் பின்னாடிச் சுற்றுமே..! இப்போ என்னவென்றால் யாரும் தேவையில்லை, எதுவும் தேவையில்லை என்றுச் சொல்கிறாய்..” என்று ஆதங்கப்பட்டான். அதற்கு ஆதித்யா சிரித்தவாறு வேறுதிசையைப் பார்க்கவும்.. பெருமூச்சு தான் கார்த்திக்கால் விட முடிந்தது.

பின் “எப்படியோ என் கூட குளோஸா இருக்கிறாயே அதுவே போதும்..” என்றுச் சிரித்தான். ஆனால் ஆதித்யாவின் பார்வை எங்கோ இருந்தது. அவனது வாய் மட்டும் முணுமுணுத்தது.

“ஏனென்றால் என்கிட்ட சேன்ஜ்ஸ் தெரிந்து என்னாச்சுடா என்று உண்மையான வருத்தத்துடன் கேட்ட முதல் ஆள் நீ..” என்றான்.

கார்த்திக் வேறு ஒன்றும் பேசவில்லை.. அவனின் நினைவுகளில் கடந்த காலம் வந்துச் சென்றது.

பின் நண்பர்கள் பரிமாறிக் கொள்ள பல விசயங்கள் இருந்தது. கலகலத்தபடி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின் நேரத்தைப் பார்த்த கார்த்திக் “ஒகே ஆதி..! நாளைக்கு பார்க்கலாமா..! மீராவிற்கு உன்னை இன்டர்டுயுஸ் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் நீங்க இரண்டு பேரும்.. வேற மாதிரி இன்டர்டுயுஸ் ஆகிட்டிங்க, சரி விடு நடப்பதைத் தடுக்கவா முடியும். இப்போ கோபமாகவே போயிருக்கா.. பார்ட்டியை மிஸ் செய்துட்டா அவ்வளவுத்தான்..! ஆனால் அவள் கூடப் பழகினால் நீயும் அவ கூட பிரெண்ட் ஆகிருவே..! சச் எ நைஸ் கேர்ள்..” என்றவனின் புன்னகை விரிந்தது.

அதற்கு ஆதித்யா “ஆமா! ஆமா! நைஸ் தான்..! இப்போ கூட காபியை கொட்டிட்டு போனாளே..” என்றான்.

உடனே கார்த்திக் “நீ செய்த காரியம் தெரிந்தும், அவள் முதலில் ரிஷன் கேட்டாள், அட்லீஸ்ட் ஸாரி மட்டும் சொல்ல சொன்னாள். ஆனால் நீ சரியா பதில் தராமல் போகவும் தான் காபியை கொட்டிட்டாள்.” என்று மீராவிற்கு பரிந்துக் கொண்டு பேசினான்.

ஆதித்யா “திமிரா பேசினேன் என்று டைரக்ட்டா சொல்ல வேண்டியது தானே! ஏன் மலுப்புகிறே..” என்றுச் சிரித்தவன், தொடர்ந்து “எனக்கு ஒன்றை மட்டும் டிக்ளம்மர் செய்..! அவள் உனக்கு பிரெண்ட் மட்டும் தானே..” என்றுக் கண்ணடித்து கேட்டான்.

ஆதித்யா கேட்டதில் இருந்த அர்த்தத்தில் முகம் சிவந்தவனாய்.. ஏன் இந்த கேள்வி திணறடிக்கிறது என்றுப் புரியாது “ஹெ ஆதி..! அந்த மாதிரியெல்லாம் இல்லை..! வீணா ஓவர் இமேஜ்ஜின்ஸ்க்கு போகாதே! அந்த மாதிரி பேச்செல்லாம் நாங்க இதுவரை பேசினது இல்லை..” என்றான்.

ஆதித்யா “ஒகே இனி பேசுங்க..” என்கவும், “போடா..” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு சிரித்தவன், “ஒகே ஆதி..! நான் போய் விஷ் செய்துட்டு நேரா ஹோட்டலுக்கே வந்துவிடுகிறேன். நிறையா பேசலாம். அப்பறம் எனக்கு என் பேமலி மெம்பர்ஸ் என்ன கொடுத்திருக்கிறாங்க என்று நான் பார்க்கணும்..” என்றவனின் கண்களில் ஆவலும் அன்பும் நிறைந்திருந்தது.

அதைப் பார்த்து புன்னகை புரிந்த ஆதித்யா “நீ இங்கேயிருந்து அங்கே போய்.. பார்ட்டி முடிந்து, அங்கேயிருந்து இங்கே வருவதற்கு.. ரிஷனை சொல்லி வரவில்லை என்றுச் சொல்லிவிடேன்.” என்றுக் கூறிவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தான். கார்த்திக் முறைக்கவும், சத்தமாக சிரித்த ஆதித்யா “என் காரில் நானே உன் பிரெண்ட் கம் சம்திங் வீட்டு பார்ட்டிக்கு கூட்டிட்டு போகிறேன். அங்கே பார்ட்டி முடியும் வரை வெயிட் செய்து.. முடிந்ததும், என் ரூமிற்கு போகலாம் ஒகேவா..” என்றான்.

அதற்கு கார்த்திக் “பார்ட்டி முடியும் வரை வெயிட் செய்கிறாயா..! உனக்கு ஏன் அலைச்சல்?” என்றுக் கேட்டான்.

அதற்கு சிரித்த ஆதித்யா “எனக்கு வேற எதாவது வேலையிருக்கா என்ன..!” என்றுத் தன்னையே கேலி செய்து சத்தமாக சிரித்தான். கார்த்திக் அவனை வருத்தத்துடன் பார்க்கவும், ஆதித்யா “எனக்கு உன் பிட்டி தேவையில்லை. ஆனால் எனக்கு டவுட்.. ஆர் யு அவாய்டிங் மீ..” என்றுத் தோளைக் குலுக்கவும், கார்த்திக் அவசரமாக மறுத்தான்.

“இப்படியெல்லாம் பேசினால் அப்பறம் பாரு..! நான் பொல்லாதவன் ஆகிடுவேன்.” என்றான். அதைக் கேட்டு சிரித்த ஆதித்யா “நீ குட்டிக்கரணமே போட்டாலும்.. அப்படியெல்லாம் ஆக முடியாது. ஓகே போகலாமா..” என்கவும்.. இருவரும் கிளம்பினார்கள்.

ஜெர்மனியின் வரைப்படம் மற்றும் கார்த்திக்கிற்கும் வழிக்காட்ட ஆதித்யா காரை ஓட்டினான். காரை பரிசோதிக்கிறேன் என்ற பெயரில் ஆதித்யா செய்த அட்டகாசத்தைச் சொல்லி கார்த்திக் சிரிக்கவும், சிரித்து பேசியபடி சென்றார்கள். கார்த்திக் மீராவிற்கு ஏதேனும் பரிசு வாங்க வேண்டும் என்றுச் சொல்லவும், பரிசு பொருட்கள் விற்கும் அங்காடியில் காரை நிறுத்தினான். கடைக்குள் செல்லும் முன் கார்த்திக்கிடம் இதய வடிவில் இருக்கும் பரிசு வாங்குவாயா என்று ஆதித்யா ஓட்டித் தள்ளினான். நண்பனிடம் மறுத்துவிட்டு கடைக்குள் சென்றவனின் கண்களில் காதலைப் பறைச்சாற்றும் பொருட்களே படவும்.. தலையில் சிறு தட்டுத்தட்டி விட்டு மீராவிற்கு அழகிய தோள்பை ஒன்று வாங்கினான். காரில் மீண்டும் ஏறியமர்ந்தவன், தான் வாங்கியதைப் பெருமையாக சொல்லிக் காட்டவும்.. அப்பொழுதும்.. ஆதித்யா “வெகுஜோர்..! உன் நினைவா தோளில் மாட்டிட்டு சுற்ற வைக்க போகிறே..” என்று கிண்டலடித்தான்.

மீரா சொன்ன நேரத்திற்கு அவளது வீட்டை அடைந்த பொழுதே அவளது வீடு அலங்கரிக்கப்பட்டு, விருந்திற்கு சிலர் வந்திருப்பதைக் கண்டனர். காரில் இருந்து இறங்கிய கார்த்திக்கிற்கு ஆதித்யாவை இவ்வாறு வெளியில் விட்டு செல்லவும் மனமில்லை.. அதே சமயம் மீரா அழைத்திராது அவளது வீட்டு விருந்திற்கு அழைத்து செல்வதும் சரியாக படவில்லை எனவே சற்றுத் தயங்கி நின்றான்.

அவனது தயக்கத்தைப் பார்த்து சிரித்த ஆதித்யா “எனக்கு இது பழக்கம் தான்டா..! அப்பா பெருமையா கிளம்பு என்று எதாவது பார்ட்டிக்கு கூட்டிட்டு போவார். அங்கே போனால் எவனும் என்னைக் கண்டுக்க மாட்டான், நான் தனியாக கார் பார்க்கிங் ஏரியாவிலோ, அந்த ஹோட்டல்ல இருக்கிற பார்க்கிலோ சுத்திட்டு இருப்பேன். என் அப்பாவிற்காக வெயிட் செய்வேனாம் உனக்காக செய்ய மாட்டேனா..! நீ போ..” என்று அவனது முதுகில் கை வைத்து மீராவின் வீட்டைநோக்கி தள்ளி விட்டான்.

வேறு வழியில்லாது மீராவின் வீட்டை நோக்கி சென்றவனை வாயிலேயே எதிர்கொண்டு மீரா வரவேற்றாள்.

“வா.. கார்த்தி..” என்று அவனை முகத்தில் மகிழ்ச்சியுடன் வரவேற்றவளின் பார்வை அவனைத் தாண்டிச் சென்றது. காருடன் நின்றிருந்த ஆதித்யாவை பார்த்தவாறு “அங்கே நிற்பது உன் பிரெண்ட் தானே..?” என்றுக் கேட்டாள்.

“ஆமாம் மீரா..!” என்றான்.

“ஏன் அங்கேயே நிற்க வைச்சுட்டே.. கூட கூட்டிட்டு வந்திருக்க வேண்டியது தானே..! டொன்ட் வெர்ரி.. நான் திருப்பி காபியை கொட்ட மாட்டேன்.” என்றுச் சிரித்தாள்.

அதற்கு கார்த்திக் “உன் பர்த்டே பார்ட்டிக்கு நான் எப்படிக் கூப்பிடுவது மீரா..?” என்றுக் கேட்கவும், நாக்கை கடித்துக் கொண்ட மீரா “ஸாரி..! நான்தான் கூப்பிடணும். எங்கே கூப்பிடற மாதிரியா எங்க மீட்டிங் இருந்தது. ஓகே நீ உள்ளே போ..! உன் வீம்பு பிடித்த பிரெண்ட்டை நான் இன்வைட் செய்துட்டு வருகிறேன்.” என்று அவனைத் தாண்டிச் செல்ல முயன்றவளிடம் கார்த்திக் “என்னது வீம்பு பிடித்தவனா..!” என்று முறைக்க முயன்றான்.

அதற்கு மீரா “இல்லையா பின்னே..” சிரித்துவிட்டு இரண்டடி எடுத்து வைத்தவள், திரும்பி “கார்த்தி..! உன் பிரெண்ட் பேர் என்ன..?” என்றுக் கேட்கவும், இடுப்பில் கை வைத்து சிரித்தவன் “நல்லா வந்திருக்கீங்க இரண்டு பேரும்..! எனக்கு பிரெண்ட் என்று..” என்றுத் தலையில் அடித்துக் கொண்டான். பின் “ஆதித்யா..” என்றான்.
“ஓ..” என்றுக் கிரகித்துக் கொண்டவள், காரை நோக்கி நடந்தாள்.

காரை சாத்திவிட்டு சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தவன், “மிஸ்டர் ஆதித்யா..” என்ற அழைப்பில் திரும்பி பார்த்தான்.

பச்சைப் புல்வெளிகள் இருமருங்கும் இருக்க.. கருமையான சாலையின் நடுவே சிவப்பு நிற முழு நீள மேக்ஸியை அணிந்துக் கொண்டு.. அது தரையில் உரசாமல் இருக்க, சற்று உயர்த்தி பிடித்தவாறு நடந்து வந்துக் கொண்டிருந்தாள் மீரா..!

மீராவை என்னையா அழைத்தாய் என்பது போல் பார்த்தான்.

அதற்குள் அருகில் வந்திருந்த மீரா “ஹாய் நான் மீரா! நம்ம முதல் மீட்டிங் சரியில்லை. அது முடிந்து விட்டது விடுங்க..! எனக்கு இன்னைக்கு பர்த்டே என்றுத் தெரிந்திருக்கும். நீங்க கார்த்திக்கிற்கு பிரெண்ட் என்றால் எனக்கும் பிரெண்ட் தான்..! என் பர்த்டே பார்ட்டியில் நீங்களும் வந்து என்சாய் செய்யணும் என்று விரும்புகிறேன். வாங்க..” என்று இன்முகத்துடனே அழைத்தாள்.

அவள் பேசுவதைப் புரியாத மொழியைக் கேட்பது கேட்டவன், அவள் பேசி முடிந்து சில நொடிகள் கடந்தும் பதிலளிக்காமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். மீராவே “ஹலோ மிஸ்டர் ஆதித்யா..” என்று மௌனத்தை கலைத்தாள்.

“விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே..” என்றுவிட்டு காரின் மேல் அமர்ந்துக் கொண்டு தொலைவில் தெரிந்த மலைமுகட்டை மும்மரமாக பார்த்தான். அவனது செய்கையிலேயே அவனது விருப்பமின்மையை மீரா புரிந்துக் கொண்டாள்.

தனது அழைப்பை நிராகரித்துவிட்டவனைச் சற்று கோபத்துடன் பார்த்த மீரா திரும்பியும் கூடப் பார்க்காமல் நடந்தாள். வீட்டை அடைந்த வேளையில் ஏனோ திரும்பிப் பார்க்க தோன்றவும் மெல்ல திரும்பிப் பார்த்தாள். காரின் மேல் அமர்ந்துக் கொண்டு அவளைத்தான் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளது வீட்டில் இருந்து கார் நின்ற இடம் நாற்பது அடி தொலைவு இருக்கும். ஆனால் இங்கிருந்து அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு துல்லியமாக தெரிந்தது. குறையாத கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே சென்றாள்.

உள்ளே வந்தவளை எதிர்கொண்ட கார்த்திக் “அவன் வர மாட்டான்னு எனக்குத் தெரியும்…” என்றுச் சிரித்தான். அதற்கு மீரா “அப்போ நான் போகும் போது தடுத்திருக்க வேண்டியது தானே..” என்று அவனிடம் எகிறியவளிடம் உடம்பு குறைய வேண்டுமா என்றுச் சொல்லி ஒரு அடி வாங்கிக் கொண்டு ஓடினான்.

மீராவின் பிறந்தநாள் விழா விருந்திற்காக அவளின் குடும்பத்தினர் பல ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். முதலில் வருபவர்களை வரவேற்று அமர வைத்தார்கள். மீராவின் குடும்பத்தினர் இன்முகத்துடன் வந்தவர்களுடன் பேசினார்கள். முதலில் வண்ணத்துபூச்சி போன்று வடிவம் கொண்ட பல்வேறு சுவைகளால் ஆன பெரிய ப்ரூட் கேக்கை மீரா வெட்டவும்.. பிறந்தநாள் வாழ்த்து பாடலை அனைவரும் பாடினார்கள். பின் அந்த கேக் அனைவருக்கும் பகிரப்பட்டது. பின் ஆடல் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சிலர் தங்களது பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர். அவர்களுக்காக விளையாட தனியிடத்தை ஒதுக்கியிருந்தார்கள். அங்கு விளையாட்டு பொருட்கள் பல இருக்க அவர்கள் அங்கு லயித்திருந்தனர். பின் பெரியவர்களுக்கு காரோக்கே முறையில் திரையில் பாடல் வரிகள் ஒலிக்க கூடவே சிலர் பாடிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் பெரியவர்களுக்கான வீடியோ கேம் ஏற்பாடு செய்திருக்க சிறுப்பிள்ளைகள் போல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவை எதிலும் கலந்துக் கொள்ளாமல் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தவர்களும் உண்டு.

விருந்திற்கு வந்தவர்களுக்கு எளிதில் செரிமானம் ஆக கூடிய இந்திய உணவுகளான முறுவலான தோசை, அதற்கு காரமும், மாசாலாவும் குறைவாக சாம்பார் மற்றும் சட்டினி, இடியாப்பம் அதற்கு குருமா, பின் அவர்களுக்கு விருப்பமான நூடூல்ஸ், பாஸ்தா உணவுகளும் வைக்கப்பட்டிருந்தது. கூடவே மது விருந்தும் இருந்தது. பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்தவர்கள் இந்திய உணவுகளை ஆவலுடன் சுவைத்து மகிழ்ந்தனர்.

தன்னை வாழ்த்த வந்தவர்களின் மத்தியில் மீரா இளவரசியை போல் உணர்ந்தாள். தனது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்தவர்களின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அவர்களுடன் பங்கேற்றாள். கரோகீ பகுதிக்கு சென்று அவர்களுடன் ஜெர்மன் மற்றும் ஆங்கில பாடலை பாடினாள். சிறுவர் பகுதிக்கு சென்று அவர்களுடன் விளையாடினாள். பின் பாப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் பகுதிக்கு சென்று அங்கு நடனமாடிக் கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து ஆடினாள். பின் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தவர்களுடன் சென்று அவளும் சேர்ந்து விளையாடினாள். பின் ஷோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களிடம் சென்று சிறிது நேரம் பேசினாள்.

பேச்சுகள் அவர்களது காதல் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் பொழுது தான் மீராவிற்கு கார்த்திக்கின் நினைவு வந்தது. அவன் இன்று அவளது குடும்பத்தினரை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று அவள் விரும்பியதின் நோக்கமும் நினைவு வந்தது. உடனே எழுந்து கார்த்திக்கை தேடிச் சென்றாள். அவனோ அவளைத்தான் தேடிக் கொண்டிருந்தான். முதலில் கார்த்திக் தான் மீராவை பார்த்தான். அவளைப் பார்த்ததும் விரைந்து அவளிடம் வந்தவன், “அன்பர்கெட்பிள் டேவாக ஆக்கிட்டே! இன்னைக்கு இன்னும் அழகா இருக்கிறே! இனி உன்னைப் பார்க்கிறே போதெல்லாம் இந்த செலப்பெரேஷனும் நினைவிற்கு வரும். பட் அன்பார்ச்சுட்னெட்லி நான் இப்போ போயாகணும். ஸாரி மீரா..” என்றான்.

மீரா திகைப்புடன் “என்னது! இன்னும் பார்ட்டியே முடியலை அதுக்குள்ள போகிறாயா..! இட்ஸ் நாட் ஃபேர் கார்த்தி..” என்றாள்.

அதற்கு கார்த்திக் “ஆமாம், சரியில்லை தான்! ஆனால் சிட்டிவேஷன் அப்படி என்கிற போது போய் தானே ஆகணும். ப்ளீஸ் யா..” என்றுக் கெஞ்சினான்.

அதற்கு மீரா “நீ பார்ட்டி முடிந்த பிறகும் இருப்பாய், என் பேமலி கூட டைம் ஸ்பென்ட் செய்வேன்னு நினைத்தேனே…!” என்று முகத்தில் ஏமாற்றத்தை அப்பட்டமாக காட்டிக் கொண்டு கேட்டாள். மீராவின் எண்ணம் கார்த்திக்கிற்கு புரிந்தது. அது புரிந்ததும் மெல்லிய சாரல் ஒன்று மனதை நனைப்பதைப் போன்று உணர்ந்தான். ஆனால் வெளியே ஆதித்யாவை காக்க வைத்துவிட்டு இங்கு அவன் கொண்டாடிக் கொண்டிருப்பதும் அவனுக்கு சரியாக படவில்லை. ஆனாலும் பிறந்தநாள் அதுவுமாக மீரா ஏமாற்றம் அடைவதையும் விரும்பவில்லை.

எனவே “மீரா! இப்போ உன் பெரெண்ட்ஸை பார்த்துட்டு போகிறேன். ஆனால் இன்னொரு நாள் வந்து சாகுவசமாக பேசுகிறேனே..” என்றுப் பாவமாய் கேட்கவும்.. மீராவால் அவனை அதற்கு மேல் இரு என்றுச் சொல்வதும் நாகரிகமாக படவில்லை. எனவே “ஒகே கார்த்தி..” என்றுச் சிரித்த முகத்துடன் அழைத்துச் சென்றாள்.

மீராவின் நண்பர்களுடன் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்த ஹரிஹரனிடம் மீரா அழைத்துச் சென்றாள்.

“அப்பா..” என்று அழைத்து அருகில் அமர்ந்தவள், கார்த்திக்கையும் அமர வைத்தவள், ஹரிஹரனிடம் “கார்த்தியை நினைவிருக்காப்பா..?” என்றுக் கேட்டாள்.

அதற்கு ஹரிஹரன் “உன் கூட வேலைச் செய்கிறவர் தானே தெரியும் மீரா..” என்றார்.

உடனே மீரா “அட! அட! என்னவொரு பதில்..! இங்கே வந்தவர்களில் பாதி பேர் என்னுடன் வேலை செய்கிறவர்கள் தான்.! எவ்வளவு அழகா சமாளிக்கறீங்க..” என்கவும், அவர் அசட்டு சிரிப்பு சிரித்தார்.

கார்த்திக் “ஸார்! நீங்க தானே மீராவிற்கு இப்படிச் செல்லம் கொடுத்து வளர்த்திருக்கீங்க..! அதனோட பலனை அனுபவியுங்கள்..” என்றுச் சிரித்தான்.

அதற்கு ஹரிஹரன் “பலனை நான்ஸ்டாப்பா அனுபவிச்சுட்டே தான் இருக்கிறேன் தம்பி! இவளுக்கு என்று ஒரு லைஃப் பார்டனர் கிடைத்தால் அவர்கிட்ட அந்த பதவியை ஒப்படைச்சுட்டு நான் பதவி விலகிக் கொள்வேன்.” என்கவும், கார்த்திக் குபீர் என்றுச் சிரித்துவிட்டான்.

மீரா “இரண்டு பேரும் சிரிக்கிறதை நிறுத்தறீங்களா..” என்றுப் பொருமவும், சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளைப் பார்த்தார்கள்.

மீரா “கார்த்திக்கை பற்றிச் சொல்லியிருக்கிறேனே..! டூ டைம்ஸ் மீட் செய்திருக்கீங்க..! ஒரு தரம் நாம் ஷாப்பிங் போகும் போது.. இன்னொரு தரம் என்னோட கோ வொர்க்கர் ஷெலீனோட வெட்டிங்கில்..!” என்று நினைவுப்படுத்தவும், ஹரிஹரன் நினைவு வந்தவராய்.. “ஓ யெஸ்..! யெஸ்..! ஸாரிபா மறந்துட்டேன். எப்படியிருக்கிறே..?” என்றுப் பேச ஆரம்பித்தவர், கார்த்திக்கிற்கும் தமிழன் என்பதால் அவனது பூர்வீகத்தைப் பற்றி விசாரித்தார்.

கார்த்திக் “சென்னையில் தான் இருக்கிறோம் என்றாலும், அப்பாவோட ஊர்.. தாஞ்சாவூருக்கு பக்கத்தில் இருக்கிறே.. ஆலங்குடி கிராமம்..” என்றான்.

மீராவும் ஹரிஹரனும் அதிசயத்துப் போனார்கள். ஏனெனில் ஹரிஹரனின் தந்தை இராமமூர்த்தியின் ஊரும் அதுதான். அவரது அப்பாவின் பெயர் என்ன, தாத்தாவின் பெயர் என்ன என்று விசாரிக்கையில் ஹரிஹரனுக்கு தெரிந்தவர்களாக இருந்தார்கள். அதிசயத்த ஹரிஹரன் “கார்த்திக் நீ என் அம்மா கூடப் பேசியே ஆகணும். உன் தாத்தாவை என் அப்பாவிற்கு நன்றாக தெரியும்.” என்று மகிழ்ந்து கட்டியணைத்தவர், அவனை பரிமளத்திடம் அழைத்துச் சென்றார்.

பேத்தி கேக் வெட்டும் வரை உடனிருந்த பரிமளம் பின் அனைவரிடம் சொல்லிவிட்டு மாடியறைக்கு சென்றுவிட்டார். விருந்து என்றால் கூத்தும் கும்மாளமும் இருக்கும் என்று அவருக்கு தெரியும். அவருக்கு மகிழ்ச்சி தான் என்றாலும், அவருக்கு இவை ஒத்துக் கொள்வதில்லை. தலைவலி வந்துவிடும். அதனால் மாடிக்கு சென்றுவிட அவரின் ஊர்காரனான கார்த்திக்கை அவரிடம் அறிமுகப்படுத்த ஹரிஹரன் மாடிக்கு அழைத்துச் சென்றார். வயதில் பெரியவரை சந்திக்க அழைக்கவும், மறுக்க இயலாது கார்த்திக் மகிழ்ச்சியுடனே சென்றான். அவர்களுடன் செல்ல மீரா விரும்பினாலும் மற்றவர்களைக் கவனிக்கும் பொருட்டு அவள் கீழேயே இருந்துவிட்டாள்.

மற்றவர்களுடன் ஆடிக் கொண்டு இருந்தவளை ஒருவர் தோள் தொட்டு அழைத்தார். கேள்வியாக திரும்பி பார்த்தவளிடம் கண்ணாடி சன்னலின் வழியாக வெளியே சுட்டிக்காட்டினார். திரும்பிப் பார்த்தவளின் கண்கள் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் விரிந்தது. அவளைத் தொடர்ந்து பார்த்தவர்களுக்கும் அதே நிலை..!

இருட்டாக இருந்த வெளிப்புறத்தில் தெருவிளக்கின் ஒளியால் பார்க்க முடிந்தது. விளக்கின் ஒளியில் சிறு சிறு துளியாக பனித்துளி பெய ஆரம்பித்திருந்தது. பொதுவாக பனிபொழியும் காலத்தை அதுவும் அந்த வருடத்தில் முதலில் பெயும் பனிபொழிவை வெளிநாட்டினர் கொண்டாடி மகிழ்வார்கள். அதுமட்டுமல்லாது அன்றில் இருந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் ஆரம்பித்து விடும். டிசம்பர் இரண்டாம் தேதி பிறந்த மீராவின் பிறந்தநாள் இரவு பெரும்பாலும் பனிபொழியும் இரவாக தான் இருக்கும். ஆனால் அவளது பதிமூன்றாவது பிறந்தநாள் அன்று முதல் பனிமழை பொழிந்தது. அதற்கு பிறகு இன்றுத்தான் வந்திருக்கிறது.

அங்கிருந்தவர்களும் மீராவை கட்டியணைத்து மீண்டும் வாழ்த்து தெரிவித்தார்கள். மீராவும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தாள். பின் வைன் அங்கு பரிமாறப்பட்டது. தாங்க முடியாத குளிரோ தவிர்க்க முடியாத இடத்திலோ தவிர்த்து மது அருந்த கூடாது என்பது ஹரிஹரனின் வீட்டில் எழுத படாத சட்டம்! அவர்களின் பிள்ளைகளும் அதைப் பின்பற்றினார்கள். எனவே மற்றவர்கள் வைன் நிரம்பிய கோப்பையை எடுத்துக் கொண்டு அவளிடம் வரும் பொழுது அவள் அவர்களுக்கு ஹைஃபை தான் கொடுத்தாள். பின் ஒருவர் தோளில் ஒருவர் கையைப் போட்டுக் கொண்டு வட்டமடித்தவாறு பாட ஆரம்பித்தார்கள்.

அவர்களுடன் ஆடிப் பாடியவாறு வெளியே பார்த்தவளின் மனதில் சுருக்கென்று தைத்தது. கார்த்திக்கின் நண்பன் வெளியே தனியாக பனிமழையில் இருக்கிறான் என்ற நினைவு வந்தது. ஆதித்யாவை பற்றி நினைக்கும் பொழுதே கார்த்திக் ஏன் செல்ல அவசரப்பட்டான் என்றும் புரிந்தது. உடனே ஆடிக் கொண்டிருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, மாடிக்கு விரைந்தாள். படி ஏறும் பொழுதே அவளது பாட்டி பரிமளத்தின் சிரிப்பு சத்தம் நன்றாக கேட்டது. சிரித்துப் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் குறுக்கீட விரும்பவில்லை. அவளது கோபம் ஆதித்யாவின் மீது திரும்பியது. ‘அழைக்கும் பொழுதே வந்தால் என்னவாம்..’ என்று பற்களைக் கடித்தாள்.

வெளியே.. சற்று நேரம் காரின் மேல் அமர்ந்துக் கொண்டு தன்னை வினோதமாக பார்த்தவாறு சென்றுக் கொண்டிருந்தவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா.. பின் போரடித்தவனாய் சிறிது தொலைவு தன்போக்கில் நடந்தான். பின் மீண்டும் திரும்பி வந்தவனுக்கு.. எதிரே பூங்கா தெரியவும், அங்கு சென்றான். அவ்விடத்தை நெருங்கும் பொழுதே அணிந்திருந்த ஜெர்கினை மீறி உடலை ஊடுருவும் குளிர்காற்று வீசியது. தோள்களைக் குறுக்கிக் கொண்டு அந்த குளிரை இரசித்தபடி உள்ளே நுழைந்தான். சிறிது நேரம் வீசிய காற்று நின்றுவிட்டது. ஆனால் கன்னங்கள் சில்லிட்டதை உணர்ந்தவனுக்கு, மூச்சு விட சிரமமாக இருந்தது. அந்த அனுபவத்தை அனுபவித்தபடி தெருவிளக்கின் வெளிச்சத்தில் சுற்றியும் பார்த்துக் கொண்டிருந்தவன் விளக்கின் முன் கண்ட காட்சியை நம்ப முடியாமல் பார்த்தான். வெள்ளை முத்துக்கள் ஸ்லோமோஷனில் விழுவது போல் இருந்தது. அன்றே முதன் முறையாக பனிப்பொழிவை காணுகிறான். அவன் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே அவனது கண்கள் முன் அவை விழுந்தது. நின்ற இடத்தில் இருந்தே சுற்றினான். அவன் மேல் பனி மழை பொழிந்து அர்ச்சிப்பது போன்று இருந்தது. தனது கையுறைகளைக் கழற்றியவன், இருகைகளையும் விரித்து வைத்துக் கொண்டு தலையை நிமிர்த்தி மேலே பார்த்தான். விரித்து வைத்திருந்த அவனது உள்ளங்கையில் சில்லுன்று பனித்துளி ஒன்று விழவும், அதை ஆசையுடன் விரல்களை மடக்கி பிடித்துக் கொண்டான். பின் மெல்ல விரல்களைத் திறந்துப் பார்த்தான். பனித்துளியைக் காணவில்லை. அவனது முகத்தில் ஏமாற்றம் பரவியது. உடனே கையுறைகளை வேகமாக சிறு கோபத்துடன் போட்டுக் கொண்டான். தன் உலகில் இருந்து வெளியே வந்ததும், அவனுக்கு சுற்றும் உரைத்தது. தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போன்று உணரவும், சட்டென்று அந்த திசையில் திரும்பிப் பார்த்தான். அங்கு தரையில் உரசும் துணியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு மீரா அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

—--------

முதலில் அவனது கார் நிறுத்தியிருந்த இடத்தில் ஆதித்யாவை தேடிய மீரா அங்கு அவனைக் காணாது, சுற்றிலும் பார்த்தாள். அங்கு பனித்துளிகளை வேடிக்கை பார்த்தவாறு நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் வேகமாக அவனை நோக்கி செல்கையிலேயே ஆதித்யா கையுறையைக் கழற்றியதை வினோதமாக பார்த்தாள். அடுத்து அவன் செய்ததைப் பார்த்து, அசையாது நின்றுவிட்டாள். அவனது செய்கைகளை உன்னிப்பாக கவனித்தவாறு தான் எதற்காக வந்திருக்கிறேன் என்பதை மறந்தவளாய் நின்றுவிட்டாள்.

மீரா தன்னைப் பார்த்தவாறு நின்றிருப்பதைப் பார்த்த ஆதித்யா “நான் எதாவது ஷோ காட்டறேனா..” என்று நக்கலுடன் கேட்டான். அவனது நக்கல் பேச்சு புரியாத மீரா “இதுதான் உங்க பர்ஸ்ட் ஸ்னோபாலிங் எக்ஸ்பீரியன்ஸா..? ரொம்ப இரசிச்சீங்க..” என்றாள்.

அதற்கு ஆதித்யா “இதைச் சொல்வதற்கு தான் பாதி பார்ட்டியில் இருந்து வந்தீங்களா..” என்று மீண்டும் அதே மாறாத நக்கலுடன் கேட்டான்.

அதைக் கேட்டவளுக்கு கோபம் துளிர்த்தது. ஆனால் அதை அடக்கிக் கொண்டு “என்னதான்! பர்ஸ்ட் ஸ்னோபாலிங்கை இரசித்தாலும் இப்படி அதில் ரொம்ப நேரம் நிற்பது முட்டாள்தனமானது, நீங்க என் பர்த்டே பார்ட்டிக்கு வர வேண்டாம். ஆனால் இந்த வெளிநாட்டில் தமிழ் பேசுகிறோம் என்று நாம் ஒன்றாக இருக்கிறோம். அதற்காக கூப்பிடுகிறேன். வரலாமே..” என்றாள்.

அதற்கு சிரித்த ஆதித்யா “நான் நிற்பது முட்டாள்தனம்! ஆனால் என்னதான் இங்கேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், இப்படி ஸ்னோஃபாலிங் டைமில் ஸ்லீவ்லைஸ் ட்ரஸ் போட்டுட்டு நிற்பது புத்திசாலித்தனமா..!” என்றுச் சிரிக்கவும், அப்பொழுதே குளிரை உணர்ந்த.. மீரா குளிரில் தோள்களைக் குறுக்கியவாறு “அது..” என்று இழுத்தாள்.

அவளது பேச்சில் குறுக்கிட்ட ஆதித்யா, தனது ஜெர்கினை கழற்றியவாறு “ஒகே வருகிறேன்..” என்றவன், அந்த ஜெர்கினை அவளது தோளில் சுற்றிப் போட்டவன், அதன் இரு காலர்களையும் பற்றி தன் பக்கம் இழுத்தான்.

அந்த ஜெர்கினோடு வந்தவளின் முகத்தருகே குனிந்து “நீ சொன்னதால் வருகிறேன். அப்பறம் ஏன்டா இவனைக் கூப்பிட்டோம் என்று நீ நொந்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல..” என்றுச் சிரித்தான்.

அவனை இமைக்காது பார்த்த மீரா குழம்பியவளாய் நின்றுவிட்டாள்.

மாயமாய் மறைபவையே எனக்கு சொந்தமாக்க முயல்கிறேன்..!
இது எனக்கென விதிக்கப்பட்ட விதியா..! அல்லது நியதியா..!

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3


ஆதித்யா வீட்டிற்குள் நுழையும் வேளையில் சரியாக கார்த்திக் ஹரிஹரனிடம் கிளம்புவதாக சொல்லிவிட்டு, மீராவிடமும் சொல்ல அவளைத் தேடிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஆதித்யா வரவும்.. ஆச்சரியமடைந்தவன், “ஆதி..” என்றவாறு அவனிடம் சென்றான். கார்த்திற்கு பின்னால் வந்த ஹரிஹரன் ஆதித்யாவை யார் என்பது போல் பார்த்தார். ஹரிஹரனை பார்த்த கார்த்திக் ஆதித்யாவை அறிமுகப்படுத்த முனையும் போது.. ஆதித்யா குறுக்கிட்டான்.

“நீயா.. என்னை இங்கே கூப்பிட்டு வந்தே..? யார் என்னை இங்கே கூப்பிட்டு வந்தாங்களோ அவங்க இன்டர்டூஸ் செய்வது தான் சரி! என்ன ஸார் நான் சொல்வது சரி தானே..” என்று ஹரிஹரனிடமே கருத்துக் கேட்டான்.

ஆதித்யா கேட்ட விதத்தில் ஹரிஹரன் தானே “ஆமாம்..” என்றார்.

ஆதித்யாவின் பின்னால் வந்த மித்ரா அதைக் கேட்டு முன்னால் வந்தவள், “அப்பா..! இவர் கார்த்திக்கோட பிரெண்ட் ஆதித்யா..” என்றாள். ஹரிஹரன் “வெல்கம் மிஸ்டர் ஆதித்யா..” என்று வரவேற்றார்.

அதற்கு ஆதித்யா கார்த்திக்கின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு “கார்த்திக்கின் பிரெண்ட்! இது கூட நல்லா தான் இருக்கு..! இத்தனை நாட்கள் ஆனந்த்சங்கரின் மகன் என்றுக் கேட்டு கேட்டு காது புளித்துப் போயிருந்தது.” என்றான்.

மீராவிற்கும் ஹரிஹரனும் என்ன சொல்கிறான் என்றுப் புரியாமல் விழித்தார்கள். ஆதித்யாவின் பேச்சில் இருந்த வலியை உணர்ந்த கார்த்திக் அவசரமாக இடைப்புகுந்தான்.

ஹரிஹரனிடம் “இவர்தான் மிஸ்டர் ஆதித்யாசங்கர்.. ஒன் ஆஃப் த டைரக்டர் ஆஃப் சங்கர் குரூப் ஆஃப் கம்பெனி! நாங்க வேலை செய்கிறே.. தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கார்களின் தெற்கு ஆசியா முழுவதின் டீலர் இவங்க கம்பெனி தான்..! இப்பொழுது கூட நம்மளோட புது ப்ரோஜெட்டை ஒகே சொல்லி டீலிங் போட தான் வந்திருக்கிறார்.” என்றான். அதற்கு ஆதித்யா கார்த்திக்கிடம் திரும்பி “அப்படியா…” என்றுக் கேட்டு சிரித்தான்.

கார்த்திக் அவன் புறம் சரிந்து “உண்மையைத் தான்டா சொல்கிறேன். அதற்கு தானே வந்திருக்கிறே! என்னதான் உன் அப்பாவோட செக்ரக்ட்டரி எல்லா விசயங்களையும் பார்த்துக்கிட்டாலும் நீ சைன் போட்டால் தானே.. அந்த வேலையே முடியும்.” என்று அவன் காதில் கிசுகிசுத்தான். ஆனால் ஆதித்யா “இந்தளவிற்கு கூட என்னைத் தாங்கி பேசவில்லை என்றால்.. பிரெண்ட் என்பதற்கு அர்த்தமே இல்லையே…” என்றுச் சிரித்தான்.

அப்பொழுது ஹரிஹரன் “ஓ..! க்ளேட் டூ மீட் யு மிஸ்டர் ஆதித்யா..” என்று கைக் குலுக்க கரத்தை நீட்டவும், அவரின் கரத்தைப் பற்றிக் குலுக்கியவன் “மீ டூ ஸார்..” என்றான்.

கார்த்திக் ஆதித்யாவை அறிமுகப்படுத்தியதும், அதற்கு ஆதித்யா அளித்த பதிலையும் கேட்ட மீரா அவர்களிடம் “ஓ.. பழைய படத்தில் வருகிறே மாதிரி..! பட்டங்களோட தான் உன் பிரெண்ட்டை இன்டர்டூஸ் செய்யணுமா..” என்று உண்மைப் புரியாது.. சிறு நக்கலுடன் கேட்டாள்.

அதற்கு ஆதித்யா “எனக்கு பட்டம் கொடுத்திருக்க வேண்டாம், ஆனால் என் லவ்வரோட பிரெண்ட் என்று என்னை இன்டர்டூஸ் செய்திருந்தால் நான் கொஞ்சம் ஸ்பெஷலாக ஃபீல் செய்திருப்பேன் தானே..” என்றுச் சிரித்தான்.

ஆனால் அங்கிருந்த மற்ற மூவரும் அதிர்ந்து நின்றார்கள்.

ஹரிஹரன் மீராவை திரும்பி பார்த்தார், மீரா கார்த்திக்கை பார்த்தாள், கார்த்திக்கோ ஆதித்யாவை பார்த்தான். ஆதித்யா மூவரும் ஏன் அமைதியாகி விட்டார்கள் என்றுப் புரியாது பார்த்தான்.

ஹரிஹரன் “மீரா..?” என்றுக் கேள்வியாக மகளை அழைத்தார்.

மீரா.. மெல்ல கார்த்திக்கை தன் குடும்பத்தினருடன் பேச வைத்து.. ஒருத்தருக்கு ஒருத்தர் எந்தளவிற்கு பிடித்திருக்கு என்றுத் தெரிந்துக் கொள்ள நினைத்தாள். ஏனெனில் அவளுக்கு அவளது குடும்பத்தினர் தான் உலகமே! அவர்களும் கார்த்திக்கின் மேல் நல்ல அபிப்பிராயத்தைக் கொண்டு விட்டால்.. அவளது மனம் செல்லும் வழி சரித்தான் என்று உறுதி அவளுக்கே தோன்றும்.. கார்த்திக்கின் மனம் பற்றி அவளுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. மீராவை பொறுத்த வரை அவனது நிலையை அவள் புரிந்திருந்ததால் தான்.. அவளால் அதைப் பிரதிபலிக்க முடிகிறது என்று மீரா நம்பினாள். இவ்வாறு அவள் படிபடியாக யோசித்து வைத்திருக்க.. ஆதித்யா பானையை பட்டென்று போட்டு உடைப்பது போல் விசயத்த உடைப்பான் என்று அவள் எண்ணிப் பார்க்கவில்லை. இன்னும் திகைப்பு மாறாமல் அவனைப் பார்த்தவள், கார்த்திக் தான் அவனிடம் சொல்லியிருப்பானோ என்றுச் சற்று கோபத்துடன் பார்த்தாள். அப்பொழுது அவளது தந்தை அழைக்கவும், “அப்பா..” என்றவளுக்கும் என்ன சொல்வது என்றுத் தெரியவில்லை.

தன் மகளின் முகத்தைப் பார்த்ததும் சிரித்த ஹரிஹரன் மகளைத் தோளோடு அணைத்து.. “காங்கிராஜ்லேஷன்ஸ் மை டியர்..! அப்பா என்ன சொல்வேனோன்னு பார்க்கிறீயா..! உனக்கு பிடித்தால் எனக்கு ஒகே தான்.. என் பெண் எந்த முடிவு எடுத்தாலும் சரியாக தான் எடுப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்குடா..” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டார். பின் கார்த்திக்கிடம் திரும்பியவர் “கார்த்திக்..! என் பெண் கிட்ட இப்படியொரு ரிலேஷன் கிடைத்த நீங்க தான் லக்கி என்றுச் சொல்வேன். சோ அந்த வகையில் நீங்களும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆகிட்டிங்க..” என்று கார்த்திக்கின் தோளைத் தட்டித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

ஹரிஹரனின் சம்மதத்திற்கும், வாழ்த்திற்கும் பதில் மட்டுமல்லாது, எந்த பிரதிபலிப்பும் கொடுக்காமல் திருதிருவென விழித்துக் கொண்டு இருவரும் நிற்பதைப் பார்த்தவர்... புருவத்தைச் சுருக்கி யோசித்தார். அவருக்கு அப்பொழுது விசயம் புரிய பட சத்தமாக சிரித்தார்.

பின் “ஓ..! இரண்டு பேரும் சீக்ரெட்டாக வைத்திருந்தீங்களா..! அதை ஆதித்யா போட்டு உடைச்சுட்டாரா..” என்று மீண்டும் சிரித்தார். மீரா கார்த்திக்கை குற்றம் சாட்டும் பார்வைப் பார்த்தாள். அதற்கு அவன் மறுப்பாக தலையசைத்தான். ஆதித்யாவிடமே கேட்க எண்ணி திரும்பியவன் அங்கு அவன் இல்லாதிருப்பது கண்டு.. ஆதித்யா எங்கே என்றுப் பார்த்தான். அவனோ சற்றுத் தள்ளி இருந்த மது பரிமாறும் இடத்தில் நின்றுக் கொண்டிருந்தான். கார்த்திக் தன்னைத் தேடவும், கோப்பையை உயர்த்திக் காட்டி மீதியிருந்தவற்றை ஒரே வாயில் கவிழ்த்தான்.

“அடேய்..” என்றுத் தன் நண்பனை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்த கார்த்திக்கின் தோளில் கையைப் போட்ட ஹரிஹரன் “வா கார்த்திக்..! தனா கிட்ட.. அதாவது மீராவோட அம்மா கிட்டயும் மற்றவங்க கிட்டயும் விசயத்தைச் சொல்லலாம்.. எனக்கு ஒகே என்றாலும் அவங்க என்ன சொல்கிறாங்க என்றுப் பார்க்கலாம்.” என்றவர், மீராவிடம் “மீரா.. கார்த்திக்கை மாடிக்கு கூட்டிட்டு வா..! நான் முன்னாடி போய் அவர்களை உட்கார வைக்கிறேன்.” என்றுவிட்டு விருந்தாளியைக் கவனித்துக் கொண்டிருந்த தனலட்சுமியிடம் சென்றார். பின் மீராவின் தம்பி மாதவ்வையும் கூட்டிக் கொண்டு மாடிக்கு சென்றவர், செல்லும் முன் மீராவிடம் மேலே வருமாறு சைகை செய்துவிட்டுச் சென்றார்.

அவர் செல்வதையே இருவரும் வாயைப் பிளந்துப் பார்த்துக் கொண்டிருக்கையில்.. அவர்களுக்கு அருகே வந்த ஆதித்யாவும்.. ஹரிஹரனை பார்த்தவாறு “மகள் மேல் ரொம்ப பிரியம் போல..! போகிற வேகத்தைப் பார்த்தால்.. மகளோட பர்த்டே கிஃப்ட்டா..! மற்றவங்களையும் அவரே கன்வின்ஸ் செய்து மேரேஸ் டேட்டையே பிக்ஸ் செய்திருவார் போல..” என்றுச் சிரித்தான்.

அப்பொழுது “ஸ்டாப் இட்..” என்று சிறு எரிச்சலுடன் குறுக்கிட்டவள், ஆதித்யாவின் புறம் நன்றாக திரும்பி நின்று “நாங்க கேட்டோமா..! எங்க காதலுக்கு தூது போக சொல்லி நாங்க கேட்டோமா..!” என்றுச் சற்றுக் காட்டத்துடன் கேட்டாள்.

கார்த்திக் “மீரா அவனை ஏன் திட்டுகிறே..?” என்று நண்பனுக்கு பரிந்துக் கொண்டு வரவும், மீரா “உன்னைச் சொல்லணும். அவன் கிட்ட நம்மைப் பற்றி என்ன சொன்னே..?” என்று கார்த்திக்கிடம் திரும்பி எரிந்து விழுந்தாள்.

கார்த்திக் “நான் ஒன்றும் சொல்லவில்லை மீரா..” என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது இடைப் புகுந்த ஆதித்யா “ஹலோ..! இப்போ என்ன நடந்தது என்று இப்படி வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கறீங்க? நான் உண்மையைத் தானே சொன்னேன். ஒருவேளை நான் சொன்னது பொய்யா..!” என்றுக் கேட்டான்.

அதற்கு மீரா “அது பொய்யோ! உண்மையோ! ஆனால் அது எங்களோட பர்சனல் விசயம், நீங்க எதற்கு அதில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தீங்க..” என்றுச் சற்றுக் கடுமையாகவே கேட்டாள். மீராவிற்கு அவர்கள் காதலை ஆதித்யா அவர்களுக்கு முன் வெளியிட்டது.. தானாக மலர்கிற மலரை கம்பு கொண்டு அடித்து மலர வைத்துவிட்டது போன்ற உணர்வு!

ஆதித்யாவின் பதில் பட்டென்று வந்தது. “நீ அவனை உண்மையாக லவ் செய்திருந்தால் உன் பெரெண்ட்ஸ் கிட்ட சொல்லியதில் உனக்கு ஏன் இத்தனை கோபம்? ஒருவேளை லவ் செய்தால் எப்படியிருக்கும் என்று ஒரு எக்ஸ்பீரியன்ஸக்காக என் பிரெண்ட்டை லவ் செய்வதாக அவனோட மனதில் ஆசையைக் கிளப்பி விட்டியா..? பிறகு அவனைப் பிடிக்கவில்லை என்று விட்டுட்டு போயிட்டா என் பிரெண்ட்டோட நிலைமை? அதுதான் உன் அப்பா கிட்ட சொல்லி வைச்சுட்டேன். ஆனால் இப்போ நீ இப்படி குதிக்கிறதைப் பார்த்தால்.. என் பிரெண்ட்டிற்கு நீ சரியான ஆளில்லை என்றுத் தெரிகிறது. என் நிலைமை என் பிரெண்ட்டிற்கும் வர விடமாட்டேன். சோ நானே உன் பெரெண்ட்ஸ்க்கு போய் நான் தப்பாக சொல்லிட்டேன் என்றுச் சொல்லிக் கொள்கிறேன். என் பிரெண்ட் உன்கிட்ட இருந்து தப்பிச்சுட்டான்.” என்றுக் கோணல் சிரிப்புடன் சொன்னவன், கார்த்திக்கின் கரத்தைப் பற்றித் தன் பக்கம் இழுத்து மீராவை பார்த்து நெற்றியில் சல்யுட் ஒன்று வைத்தான்.

ஆதித்யா ஆரம்பத்தில் பேசும் போதே கார்த்திக் இடையிட்டு தடுக்க முயன்றான். ஆனால் ஆதித்யா.. அவனது குறுக்கீட்டை பொருட்டாக கொள்ளாது பேசிக் கொண்டே போனான். ஆனால் ஆதித்யாவின் பேச்சு போக போக விபரீதமாக போவதைக் கண்டு.. “ஆதி..” என்றுச் சற்றுப் பலமாக அழைத்து பேச முயல்கையில்.. அதுவரை ஆதித்யா பேசியதை உடலில் இருந்து உள்ளம் வரை எரிய கேட்டுக் கொண்டிருந்த மீரா.. அவன் பேசி முடித்ததும், சட்டென்று முன்னே வந்து கார்த்திக்கின் கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.

அவர்கள் செல்வதைக் கோபத்துடன் ஆதித்யா பார்த்துக் கொண்டிருந்தான்.

மாடிக்கு கார்த்திக்குடன் சென்றவளை பரிமளம் முகத்தில் மகிழ்ச்சி ததும்ப வரவேற்று உச்சி முகர்ந்தார்.

“கார்த்திக்குடன் பேசும் போது.. எனக்கு இப்படியொரு எண்ணம் வந்தது மீராம்மா..! ஆனால் உன் மனசு தெரியாமல்.. இப்படியெல்லாம் நினைக்க கூடாதுன்னு அமைதிப் படுத்திக்கிட்டேன். ஆனால் இந்த பாட்டிக்கு இந்த பேத்தியோட மனசு முதலிலேயே தெரிந்திருக்கு..! அதனால் தான் அந்த மாதிரி தோன்றியிருக்கு.. எனக்கு ரொம்ப சந்தோஷம்டா..” என்றுக் கட்டியணைத்துக் கொண்டார்.

மீராவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவள் விரும்பியதை அவளது பாட்டி சொல்கிறார்.. ஆனால் மனம் ஏனோ மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கவில்லை. அதற்கு ஆதித்யாவின் வார்த்தைகள் தான் காரணமோ..! அவனை நினைத்துப் பார்த்ததும்.. மீராவின் உள்ளம் கொதிகலன் போல் கொதித்தது.

ஒருவகையில் ஹரிஹரனை ஆதித்யா சரியாக தான் கணித்திருக்கிறான். அவன் சொன்னது போல் தான் நடந்தது. தன் குடும்பத்தினரை அழைத்த ஹரிஹரன் அவரே மகளின் காதலைப் பற்றிச் சொல்லும் பொறுப்பை ஏற்றார். கார்த்திக்கிடம் பேசியிருந்தவர்களுக்கு அவனின் மேல் நல்ல அபிப்பிராயம் தோன்றியிருந்தது. அதுமட்டுமில்லாமல் புத்திசாலியான மீரா சரியாக தான் அவளது வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்துப்பாள் என்ற நம்பிக்கையும் கொண்டார்கள். எனவே அவர்களது முழு சம்மதத்தையும் அளித்தார்கள்.

பின் கார்த்திக்கிடம் வந்த ஹரிஹரன் “நீங்க ஒன்றுமே சொல்ல மாட்டேன்கிறீங்க..” என்றுச் சிரிப்புடனேயே கேட்டார்.

கார்த்திக் சிறிது நாணத்துடன் சிரித்துவிட்டு “நடப்பதை எதையும் நம்ப முடியவில்லை. ஆனால் நடப்பதைக் கண்டு சந்தோஷம் அடையாமலும் இருக்க முடியவில்லை. இந்த சந்தோஷத்தை தந்த மீராவை எப்பவும்.. சந்தோஷமாக வைத்துக் கொள்வேன்.” என்கவும் தான் மீராவின் மனதில் நிம்மதி பரவியது. மற்றவர்களின் உள்ளமும் மகிழ்ச்சியில் திளைத்தது. அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு கார்த்திக் மகிழ்ந்தாலும்.. அவனது இன்னொரு உள்ளம் கீழே விட்டு வந்த நண்பனை நினைத்துக் கவலைக் கொண்டது.

ஹரிஹரன் “உங்க வீட்டில் இருக்கிறவங்க கிட்ட எங்க மீரா இன்டர்டூஸ் ஆன பிறகு நான் அவங்க கிட்ட பேசணும். இப்போ கீழே இருக்கிற.. நம்ம பிரெண்ட்ஸ்க்கு சொல்லிவிடலாமா..” என்று அடுத்த கட்டத்திற்கு சென்றார். கார்த்திக்கிற்கும் மீராவிற்கும் திகைப்பு தான் என்றாலும்.. சொல்லித் தானே ஆக வேண்டும் என்று இருந்ததால் மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக மற்றவர்களின் பிரதிபலிப்பை காண ஆவலுடன் சம்மதம் தெரிவித்தனர்.

கீழே சென்றதும்.. கார்த்திக் ஆதித்யாவை தான் தேடினான். அங்கு இல்லாதிருப்பதைக் கண்டு வெளியே செல்ல துடித்த அவனை ஹரிஹரனின் அறிவிப்பு தேக்கியது. மீராவும், கார்த்திக்கும் வாழ்க்கையில் இணைய போகிறார்கள் என்ற செய்தியைக் கேட்டு அனைவரும் குதுகலத்துடன் கத்தி மீராவிற்கும் கார்த்திக்கிற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். திருமணம் எப்பொழுது என்ற கேள்விக்கு ஒரு வருடம் போகட்டும் என்று இருவரும் சேர்ந்து பதிலளித்தார்கள். பிறகு பிறந்தநாள் கொண்டாட்டம்.. இருவரின் காதல் அறிவிப்பு கொண்டாட்டமாக மாறியது. மீண்டும் விருந்து களைக் கட்டியிருக்க.. அதற்கு காரணமானவர்கள்.. ஒருவித குழப்பத்துடன் இருந்தார்கள்.

விரைவிலேயே கார்த்திக் கிளம்புவதாக சொன்னான். மீண்டும் ஒருநாள் வருவதாக கூறிவிட்டு அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பியவனை வழியனுப்ப மீரா வாசல் வரை வந்தாள்.

வாசலில் வந்ததும் மீராவிடம் திரும்பியவனுக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை. மீராவும் அதே நிலையில் இருந்தாள்.

கார்த்திக் தொடர்ந்து திணறவும் மீரா “இப்படி ஸ்டன்னா எல்லாம் நடக்கும் என்று நான் நினைச்சு கூடப் பார்க்கலை.” என்று வருத்தத்துடன் சொன்னாள்.

கார்த்திக் ஒத்துக் கொள்வது போல் தலையசைத்தான். பின் மெதுவாக “நாரதர் குழப்பம் நன்மையில் தான் முடியும் என்றுச் சொல்வாங்க..! அந்த மாதிரி ஆதித்யா ஏதோ கோபத்தில் சொன்னது கூட நல்லதாய் முடிந்திருக்கு தானே..” என்றான்.

அதற்கு மீரா வெடுக்கென்று “உன் பிரெண்ட்டை பற்றி பேசாதே..! அவனால் தான் இத்தனையும்..! நிஜமா சொல்லு..! நம்ம இருவரையும் லவ்வர் என்றுச் சொன்ன போது.. நாம் கொஞ்சம் அன்ஈஸியா ஃபீல் செய்தோம் தானே.. அதுமட்டுமில்லாமல் நான் எப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தேன் தெரியுமா..! உன்கிட்ட சொல்லி என் பெரெண்ட்ஸ் கிட்ட சொல்லி.. அவங்க பதிலுக்காக ஆர்வமும் பயமுமாக வெயிட் செய்வது.. ஒகே சொல்லும் போது.. நமக்கு கிடைக்கிற சந்தோஷம் என்று எத்தனை கற்பனை செய்து வைத்திருந்தேன் தெரியுமா..! உன் பிரெண்டால் இதில் எதையும் நான் அனுபவிக்கலை. வாழ்க்கையில் சிலவற்றை மிஸ் செய்ய கூடாது கார்த்திக்! ஆனால் உன் பிரெண்டால் நான் மிஸ் செய்துட்டேன். அது மட்டுமா சொன்னான்.. நான் ஒரு எக்ஸ்பீரியன்ஸ்க்காக உன்னை லவ் செய்வதாக என்னைக் கேவலமாக திட்டினான் தானே..! அதைக் கேட்டு உனக்கு கோபம் வரலையா..” என்று கோபத்துடன் கேட்டாள்.

கார்த்திக் “வேற யாராவது இதைச் சொல்லியிருந்த.. அவனுக்கு ஒரு அறையாவது கொடுத்திருப்பேன். ஆனால் ஆதியை பற்றி எனக்கு தெரியும் மீரா. அவன் எதைக் கடந்து வந்திருக்கிறான் என்றும் எனக்கு தெரியும். அதற்கு உன்னைப் பற்றி அப்படிச் சொன்னது சரி என்றுச் சொல்ல வரவில்லை. ஆனால் நாம் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே…! இப்போ ஆதி சொல்லவில்லை என்றால் நாம் டிக்ளேர் செய்ய கொஞ்ச நாள் ஆகியிருக்கும். என் வேலையை என் பிரெண்ட் ஈஸியாக்கிட்டான் என்று நினைச்சுக்கோ..” என்றுச் சிரித்தான்.

அதற்கு மீரா இன்னும் கோபம் குறையாமல்.. “உன்னை என் லவ்வர் என்றுச் சொன்னே அதே பிரெண்ட் தான்..! நீ என்கிட்ட இருந்து தப்பிச்சுட்டே..! நான் உனக்கு சரியான ஆளில்லை என்றுச் சொன்னான்.” என்றாள்.

கார்த்திக் “இப்போ என்ன அப்படியா நடந்தது! உன் அப்பா தான் எல்லார்கிட்டயும் அறிவிச்சுட்டாரே! இனி என்னை மீரா லவ்வர் என்று எல்லாரும் கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க..! நீ இப்போ உண்மையா சொல்லு..! அவன் அப்படி கோபம் வர மாதிரி பேசலைன்னா.. நீ உன் பேமலி கிட்ட இப்படி ஓப்பனா ஸ்டெட்மென்ட் கொடுத்திருப்பியா..! யோசிக்கணும் என்று மலுப்பியிருப்ப தானே..” என்றுப் புருவத்தை உயர்த்திக் கேட்டவன், தனது இடது கரத்தை உயர்த்தி மணிக்கட்டை தடவிக் காட்டினான்.

மலர முயன்ற இதழ்களை மடக்கி முறுவலை அடக்கியபடி வேறுபக்கம் பார்த்தவளை.. பார்வையால் பருகியவன், “ஒகே இனி நாம் லவ் செய்ய போகிறோம்.” என்று அறிவித்தான்.

மீரா “ஆமாமில்ல..” என்றுச் சிரித்தாள்.

கார்த்திக் “சரி வருகிறேன்.. மீரா..” என்றவனின் பார்வை தொலைவில் நின்றிருந்த காரிடம் சென்றது. காரின் அருகே தான் ஆதித்யா நின்றிருந்தான். கார்த்திக்கின் பார்வையைத் தொடர்ந்து பார்த்த மீரா.. சட்டென்று கார்த்திக்கின் கைவளைத்திற்குள் தனது கரத்தை விட்டுக் கொண்டு “நான் கார் வரை வந்து பை சொல்கிறேன்..” என்றாள்.

மீராவின் நோக்கம் புரிந்த கார்த்திக் மறுப்பு சொல்லவில்லை.. இருவரும் ஜெர்கின் மற்றும் தலைக்கும் தொப்பி அணிந்துக் கொள்ளவும், கார்த்திக் முறுவலுடன் அவளைக் கூட்டிக் கொண்டு நடந்தான்.

இன்னும் பனிப்பொழிவு இதமாக பொழிந்துக் கொண்டிருந்தது. மார்பின் குறுக்கே கரங்களைக் கட்டிக் கொண்டு காரின் மேல் சாய்ந்தவாறு நின்றிருந்த ஆதித்யா நினைவுகளால் இங்கில்லை. அவன் கண் முன் நடந்த நிகழ்வுகளின் நினைவில் கண்களில் கண்ணீரும், இதயத்தில் இரத்தமும் உறைய நின்றிருந்தான்.

காதல் என்ற வார்த்தையே அவன் வெறுத்துப் போகும் அளவிற்கு நடந்த நிகழ்வுகள் என்று அவனின் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து அவனை நிலைகுலைய வைத்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவன் வெடித்து சிதறிக் கத்த நினைக்கையில் “போகலாமா ஆதி..” என்ற கார்த்திக்கின் அழைப்பில் நடப்பிற்கு வந்தான்.

நிமிர்ந்துப் பார்த்தவன்.. கார்த்திக்கோடு கரத்தைக் கோர்த்தவாறு மீரா நின்றிருப்பதைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான்.

மீரா ஏளனமாக பார்வையுடன் “என்னைப் பற்றித் தப்பாக பேசியதிற்கு நீ ஸாரி கேட்க மாட்டேன்னு தெரியும். ஆனால் சொன்ன மாதிரியே.. உன்னை ஏன்டா இன்வைட் செய்தோன்னு நொந்துப் போக வைச்சுட்டேயில்ல..” என்றாள்.

மீரா பேசியதை முகத்தில் சலனமில்லாமல் கேட்டுக் கொண்டிந்தவன், இறுதியில் அவள் சொல்லியதைக் கேட்டு சத்தமாக சிரித்தான்.

பின் “சோ..! கார்த்திக்கை உன் லவ்வர் என்றுச் சொன்னது தப்பா..? அதைக் கேட்டு ரொம்ப நொந்துப் போயிட்டியா..” என்று மீண்டும் சிரித்தான். அவனின் விஷமம் புரிய மீரா “நான் அப்படிச் சொன்னேனா..” என்று வெடித்தாள்.

உடனே ஆதித்யா “நீ அதற்கு தானே கோவிச்சுட்டே..” என்கவும்,

மீரா “நாங்க சொல்லாமல் நீ சொன்னது தான் தப்பு என்றுச் சொன்னேன்..” என்று அதில் பிடிவாதமாக நின்றாள்.

ஆதித்யா விடாமல் “நான் சொல்லியிருக்காமல் இருந்திருந்தால் நீ சொல்லியிருக்கவே மாட்டே என்றுத்தான் நான் சொல்கிறேன்.” என்றான்.

மீரா “என்னைப் பற்றி என்னை விட உனக்கு ரொம்ப தெரியுமோ..” என்றுத் தார்க்கம் செய்யவும்.. கார்த்திக் இடையில் புகுந்தான்.

“ஹெ..! ஹெ..! எதற்கு இரண்டு பேரும் சண்டைப் போடறீங்க..! அதுவும் என்னை வைத்து விவாதம் செய்வது எனக்கு அன்ஈஸியாக இருக்கு..! லிசன் ஆதி.. மீராவும், நானும் இப்போ கமிட்டர்ட்டு! இனியும் நீ இப்படிப் பேசுவது சரியில்லை என்று நினைக்கிறேன். என் ஃபீலிங்ஸ் தெரிந்து தானே.. நீ மீராவோட அப்பாகிட்ட என்னை அவளோட லவ்வர் என்றுச் சொன்னே..! அதே மாதிரி மீராகிட்ட செம்ஃபீல் இல்லாமல் எனக்கு அவள் மேல் ஈர்ப்பு ஏற்பட்டிருக்காது. இதை நம்புகிறாயா..” என்றுக் கேட்டான்.

ஆதித்யா ஆம் என்றுத் தலையை மட்டும் ஆட்டவும், கார்த்திக் “அப்பறமென்ன விசயம் முடிந்தது. இதற்கு போய் என்னோட பெஸ்ட்டிஸ் இரண்டு பேரும் சண்டைப் போட்டுக் கொள்வது எனக்கு சங்கடமாக இருக்கு..! அதுவும் நல்லா விசயத்தை நீ இல்லை என்கிற மாதிரி சொல்வது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு..! கமான் ஆதித்யா! நான் உன் பெஸ்ட் பிரெண்ட் தானே..! உன் பிரெண்ட் லவ் செய்ய போகிறான். சோ எங்களை விஷ் செய்யலாமே..” என்றான்.

அதற்கு ஆதித்யா இருவரையும் பார்த்துவிட்டு சிறு குறுஞ்சிரிப்புடன் “பெஸ்ட் ஆஃப் லக்..!” என்றுவிட்டு காரில் ஏறினான்.

மீரா கார்த்திக்கிடம் “திமிரைப் பாறேன். பெஸ்ட் ஆஃப் லக் சொல்கிறான்.” என்று முறைத்தாள். ஆதித்யாவை மனதில் திட்டிக் கொண்டிருந்த கார்த்திக் “நாம் ஆல் ஆர் பெஸ்ட் ஆக ஆக்கி விடலாம்.” என்று முறுவலித்தான்.

பின் திடுமென சிரித்தான்.. மீரா காரணம் கேட்கவும்.. “பொதுவாக மாமியார் மருமகளுக்கு தான் சண்டை வரும், நடுவில் அந்த பெண்ணோட கணவன் மாட்டிக்கிட்டு அம்மாவையும் விட்டுத் தர முடியாமல்.. மனைவியையும் விட்டுத் தர முடியாமல் இரண்டு பக்கமும் ஜால்ரா போடுவாங்க.. ஆனால் இங்கே என் பிரெண்ட்க்கும் லவ்வருக்கும் நடுவில் மாட்டிட்டு முழிக்கிறேன்.” என்றதும் மீராவும் கலகலவென சிரித்தாள். அதை முறுவலுடன் பார்த்தவன் அந்த இனிய மனநிலையிலேயே விடைக் கொடுத்தான். “ஒகே நாளைக்கு பார்க்கலாம் பை மீரா..“ என்கவும்.. அவளும் விடைக் கொடுத்தாள்.

கார்த்திக் காரில் ஓட்டுநர் இருக்கையில் ஏறியமர்ந்தது காரை கிளப்பினான். அவனுக்கு அருகே முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஆதித்யா திடுமென சிரித்து “நானும் பிரென்ஞ்சு கிஸ்ஸடிப்பீங்க என்று திரும்பிப் பார்க்க கூடாதுன்னு கன்ட்ரோலாக உட்கார்ந்திருந்தால்.. அப்படியொன்று இருக்கிற மாதிரியே உங்களுக்கு நினைவில்லை போல..” என்றுவிட்டு கார்த்திக்கை பார்த்தான். அவன் முகத்தில் சலனமே இல்லாமல் காரை மும்மரமாக ஓட்டிக் கொண்டிருந்தான்.

ஆதித்யா “ஓ..! நண்பனுக்கு கோபமோ..!” என்றுச் சிரித்தான்.

அதற்கு கார்த்திக் “மீராவின் கோபம் நியாயமானது தான் ஆதி..” என்றான்.

உடனே ஆதித்யா “நான் சொன்னதில் என்ன தப்பிருக்கு..! நிஜமா எனக்கு புரியலை..” என்றான்.

அதற்கு கார்த்திக் சிரித்தவாறு “மீராவின் கோபம் நியாயமானது என்றுத்தான் சொன்னேன். நீ முதலில் சொன்னது தப்பு என்றுச் சொல்லவில்லையே..! ஆனால் அதன் பின் நீ பேசியது ரொம்ப தப்பு ஆதி! ஒருத்தங்களைப் பற்றித் தெரியாமல் அவங்களைப் பற்றி பிளெம் செய்து பேசுவது ரொம்ப தப்பு!” என்று நண்பனை குற்றம் சாட்டினான்.

அதற்கு ஆதித்யா நேரே வெறித்தபடி “நான் அனுபவப்பட்டவன் கார்த்தி..! அதனால் தான் உன்னை எச்சரிக்கிறேன்.” என்றான்

கார்த்திக் மெல்லிய புன்னகையுடன் “உனக்கும் எல்லாம் சீக்கிரம் சரியாகும்.” என்று ஆருடம் கூறினான்.

அதற்கு ஆதித்யா தனது வழக்கமான நக்கல் சிரிப்புடன் “எனக்கு சரியாக வேண்டாம். ஆனால் என்னைப் போல் உனக்கு ஆகாமல் இருந்தால் சரி..! ஆனால் இப்பவும் ஸ்ட்ரான்ங்கா சொல்வேன். அந்த பெண் உன் டைப் ஆஃப் கேர்ள் இல்லை. வீணா ரிஸ்க் எடுக்காதே..” என்றான்.

ஆதித்யா கூறியதைக் கேட்ட கார்த்திக் சத்தமாக சிரித்துவிட்டான். “மீராவை லவ் செய்வது ரிஸ்க்கா..! இதை மட்டும் அவள் கேட்டிருந்தாள். பத்திரகாளி ஆகிருப்பாள்.” என்றுவிட்டு மீண்டும் சிரித்தான்.

அந்த பனி இரவில் தெருவின் விளக்கொளியில் ஜொலித்த ஜெர்மனி வீதிகளை வேடிக்கைப் பார்த்தவாறு வந்த ஆதித்யா.. கார்த்திக் பேசி முடித்ததும் நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.

கார்த்திக் சிரித்தவாறே “நான் சொன்ன ஜோக்கிற்கு சிரிக்கலை என்றுத் தெரிகிறது. எதற்கு சிரித்த ஆதித்யா..?” என்றுக் கேட்டான்.

அதற்கு ஆதித்யா “காரணமா..! உங்களுக்கு பெஸ்ட் ஆஃப் லக் சொன்னேன் தானே..! அது தப்பு பெஸ்ட் ஆஃப் ஃபெட் என்றுச் சொல்லியிருக்கணும். விதி நல்லதாக இருந்தால் நல்லதே நடக்கட்டும்..” என்றுச் சிரிக்கவும், கார்த்திக் “அடேய்..” என்று ஒரு கையால் நண்பனின் தோளில் குத்து ஒன்று வைத்தான். பதிலுக்கு ஆதித்யா மறுதோளைத் திருப்பிக் காட்டினான். இவ்வாறு நண்பர்கள் இருவரும் பேசி சிரித்தவாறு ஆதித்யா தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றனர்.


விதியைக் கணிக்கும்
சித்தர்கள் சொல் வாக்கு எனில்..!
விதியைக் கணிக்கும்
இவன் சொல் சாபம் என்று ஆனதேன்..!






 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4


அன்றிரவு ஆதித்யா தங்கியிருந்த அறையில் நண்பர்கள் இருவரும் விடிய விடிய பேசினார்கள். கார்த்திக்கின் குடும்பத்தினர் அவனுக்காக கொடுத்தனுப்பிய பொருட்களான சமையல் பொடிகள், கடவுள்களின் படங்கள், பூஜைப் பொருட்கள், அவனின் சில பிரத்தேகிய பொருட்கள் ஆகியவற்றை கார்த்திக்கிடம் கொடுத்தான். கார்த்திக்கிற்கு அவனது குடும்பத்தினரை மீண்டும் கண்டுவிட்ட மகிழ்ச்சி உண்டாகியது.

கார்த்திக் அவனது குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தான். ஆதித்யாவை பார்த்ததும் கேட்ட கேள்வித்தான்.. ஆனால் மீண்டும் கேட்டான். ஆதித்யாவால் அப்பொழுது போல் நன்றாக இருக்கிறாங்க என்ற பொதுவான பதிலைச் சொல்ல முடியவில்லை. எனவே உண்மையைச் சொன்னான்.

“கார்த்தி..! நீ ஜெர்மன் கிளம்பும் போது உன் வீட்டிற்கு வந்தேனே.. அதன் பிறகு இப்போ இங்கே கிளம்பி வரும் போது தான் பார்த்தேன். அப்போது தான் இதையெல்லாம் கொடுத்தாங்க..” என்று கண்களை எட்டாத சிரிப்பைச் சிந்தினான்.

நண்பனின் நிலையை அறிந்த கார்த்திக்கிற்கு இதயம் கொதித்தது. ஆனால் அவனது குடும்பம், அவனது உறவுகள் இதில் அவன் எப்படித் தலையிடுவது, அப்படி எதாவது நண்பனுக்கு எதாவது சொல்லித் தேற்றி அனுப்பினாலும், சாண் ஏறி முழம் சறுக்கின கதை தான்..! அது மட்டுமல்லாது அவனுக்கே சில முறை மிரட்டல் வந்திருக்கிறது. கார்த்திக்கின் நிதி நிலை சரிந்ததிற்கே ஆதித்யாவின் குடும்பத்தினர் தான் காரணம்! அதைத் தெரிந்துக் கொண்ட ஆதித்யா அவனுக்கு இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு அவர்களது கம்பெனியில் வேலையில் அமர்த்தினான். ஆனால் ஆதித்யாவின் குடும்பத்தினர்.. அவனை ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தனர். நண்பனிடம் இருந்து தன்னைப் பிரிக்கவே வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள் என்று கார்த்திற்கு தெரிந்துத்தான் இருந்தது. ஆதித்யாவோ வேறு நினைத்தான். அவனுக்கு உதவி எங்கிருந்தும் கிடைக்க கூடாது என்று கார்த்திக்கை அவனிடம் இருந்து பிரித்து தொலைத் தேசத்திற்கு அனுப்புவதாக அவர்கள் திட்டம் போட்டாலும்.. அதன் மூலம் சம்பளம் அதிகமாகி கார்த்திக்கிற்கு நன்மை தான்.. என்று மகிழ்ந்தான்.

இவ்வாறு நண்பர்கள் இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர்.. அன்பு செலுத்தி உதவி செய்துக் கொண்டார்கள். அவர்களின் பேச்சு நள்ளிரவிற்கு மேல் செல்லவும், இருவரும் அங்கேயே உறங்கி விட்டார்கள்..

அடுத்த நாள் காலையில் முதலில் விழித்தது ஆதித்யா தான்..! கைகளை நீட்டி சோம்பல் முறித்தவாறு எழுந்தவன்.. தனது செல்பேசியை எடுத்தான். நேற்று அவனது தந்தை அழைத்த போது எடுத்துப் பேசிய பொழுது அவர் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருக்கவும், பாதியிலேயே அழைப்பைத் துண்டித்தவன்.. ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டான். தற்பொழுது அதை இயக்கவும்.. வரிசையாக அவனது தந்தையிடம் இருந்து அழைப்பும், அவரது உதவியாளரிடம் இருந்து அழைப்பும் வந்திருந்தது. அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலை கூட நிராகரித்துவிட்டு தனி ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்தான். எப்படியும் கார்த்திக்கின் எண்ணை கண்டுபிடித்து அவனுக்கு அழைத்து அவனைப் பற்றி விசாரிப்பார்கள் என்று அவன் எண்ணி கொண்டிருக்கும் பொழுதே கார்த்திக்கின் செல்பேசி ஒலிக்க தொடங்கியது. கார்த்திக்கின் உறக்கம் கலையாததிற்கு முன்.. அதை எடுத்து அழைப்பைத் துண்டித்தவன், கையோடு அந்த எண்ணை பிளாக் செய்தான். பின் படுக்கையில் இருந்து எழுந்தவன்.. பால்கனிக்கு சென்று கதவைச் சாத்திவிட்டு தந்தையை செல்பேசியில் அழைத்தான்.

ஆதித்யாவின் எண்ணைப் பார்த்ததும் கடுப்புடன் அழைப்பை ஏற்று அவர் பேசும் முன் அவரை முந்திக் கொண்ட “அப்பா ப்ளீஸ்! இத்தனை நாட்கள் நீங்க சொன்ன பேச்சை கேட்டேன் தானே..! ஒரு பத்து நாட்களை மட்டும் எனக்காக கொடுங்க.. எங்கேயும் என்னை விடாத நீங்க எதற்காக என்னை அவசரம் அவசரமாக அங்கிருந்து இங்கே என்னை அனுப்பினீங்க என்று எனக்குத் தெரியும். இங்கிருந்தே அதை என்னால் தடுக்கவும் முடியும். ஆனால் உங்க கிட்ட எல்லாம் சண்டை போடுகிறே மூடில் நானில்லை. அதனால் தான் எல்லாம் தெரிந்தும் நான் வந்துட்டேன். நான் இங்கே வந்து தான் இந்த பிஸிசனஸை முடிக்க முடியும் என்றில்லை என்றும் எனக்கு தெரியும். ஆனால் நீங்க சொன்னதும் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் கொஞ்ச நாட்கள் ப்ரீயா என்சாய் செய்ய தான்..! உடனே கார்த்திக் எனக்கு எதாவது போட்டுக் கொடுத்து, நான் மாறிடுவேன் என்று நினைச்சுக்காதீங்க..! இனி நான் மாறி ஒரு பிரொஜனமும் இல்லை என்று எனக்குத் தெரியும். சைன் போடும் போது மட்டும் எனக்கு நீங்க ஃபோன் போட்டுச் சொல்லுங்க.. நான் போய் சைன் போட்டுட்டு வருகிறேன். அதுவரை என்னை ப்ரீயா விடுங்களேன். இங்கே எனக்கு கார்த்திக்கை தவிர வேற யாரையும் தெரியாது. அவன் கூடத் தான் இருப்பேன். அதற்கு அவனுக்கு ஃபோன் போட்டு எச்சரிப்பது, என்னைப் பற்றி விசாரிப்பது போன்ற கீழ்தரமான வேலைகளைச் செய்யாதீங்க..! நான் இங்கே பத்து நாட்கள் இருந்துவிட்டு வருகிறேன். வந்து நீங்க சொன்ன பெண்ணையே மேரேஜ் செய்துக்கிறேன். போதுமா..! இனி ஃபோன் போட்டு தொந்திரவு செய்யாதீங்க..” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன், அதே வேகத்துடன் அருகில் இருந்த இருக்கையில் கையில் இருந்த செல்பேசிகளைப் போட்டான்.

அழைப்பைத் துண்டித்த பிறகும் அதன் தாக்கம் அவனது மனதை விட்டு நீங்கவில்லை. இப்பொழுது மட்டுமில்லை.. எப்பொழுதும் அது அவனை விட்டு நீங்காது என்று அவனுக்கு தெரியும். ஆனால் தற்போதைக்கு சமன் செய்யும் பொருட்டு பால்கனியில் இருந்த தடுப்பு கம்பியில் இரு கைகளையும் ஊன்றி மெல்ல பெருமூச்சுகளை இழுத்துவிட்டுக் கொண்டிருந்தான்.

அப்பொழுது வாட்ஸ்அப் குறுந்தகவலுக்கான சத்தம் கேட்கவும், நின்ற நிலையில் இருந்தபடியே தலையைத் திருப்பிப் பார்த்தான். அப்பொழுது தான் கவனித்தான். அவன் கார்த்திக்கின் செல்பேசியையும் கையோடு எடுத்து வந்திருந்தான். அதில் இருந்து தான் சத்தம் வந்தது. எடுத்துப் பார்த்தவன்.. கார்த்திக்கின் குடும்பத்தினரிடம் இருந்து வந்திருப்பது தெரிந்தது. அதைப் படிப்பது சரியாக இருக்காது என்றுப் புன்னகையுடன் வைக்கப் போனவன்… மீராவிடம் இருந்து குறுந்தகவல் வரவும்.. அதைத் திறக்காமலேயே என்ன அனுப்பியிருக்கிறாள் என்றுத் தெரிந்தது. ‘குட்மார்னிங்’ என்று அனுப்பியிருந்தாள். சிறு சிரிப்புடன் இரு செல்பேசிகளையும் எடுத்துக் கொண்டு உள்ளே சென்ற போது அப்பொழுது தான்.. கார்த்திக் உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்திருந்தான். ஆதித்யாவை பார்த்ததும் “குட்மார்னிங் ஆதி..” என்றான்.

ஆதித்யா “எனக்கு குட்மார்னிங் சொன்ன ஒரே ஜீவன் நீதான்டா! ஆனால் உனக்கு குட்மார்னிங் சொல்ல நிறையா ஆள் இருக்காங்க போலிருக்கு, என் அப்பாவோட செக்ரட்டரி உள்பட..” என்று நமட்டு சிரிப்பு சிரித்தான்.

உறக்கத்தில் இருந்து முழுவதும் தெளியாத கார்த்திக் ஆதித்யா கடைசியாக சொன்னதைக் கேட்டுத் திருதிருவென விழித்தான். ஆதித்யா அவனது செல்பேசியை அவன் புறம் வீசினான். ஆதித்யா வீசுவான் என்று எதிர்பாராத கார்த்திக் தட்டுதடுமாறிப் பிடித்தான்.

பின் ஆதித்யாவே தன்னைப் பற்றி விசாரிக்க அவரது தந்தையின் உதவியாளார் கார்த்திக்கிற்கு அழைத்த விசயத்தைச் சொன்னான். ஆனால் தன் தந்தையிடம் பேசியதைச் சொல்லாமல் விட்டான்.

கார்த்திக் “எதோ உன்னைப் பற்றிக் கேட்கணும் என்றுத் தோன்றியிருக்கே அதுவரை எனக்கு சந்தோஷம் தான்..” என்றுவிட்டு தனது செல்பேசியை ஆராய்ந்தான்.

“ஓ.. அம்மா கரெக்ட்டா மேசேஜ் செய்திருக்காங்களா..! எப்பவும் இந்த நேரத்திற்கு எழுந்திருவேன். அம்மா மேசேஜ் அனுப்பியதும் ஃபோன் செய்வேன். ஆனால் நாம் நேற்று ரொம்ப நேரமா பேசிட்டு தூங்க ரொம்ப லேட்டாகிருச்சே..” என்றுவிட்டு தன் அன்னையிடம் பேசினான். நடுவில் ஆதித்யா தானும் பேசுவதாக கூறி வாங்கி சிறிது நேரம் பேசிவிட்டு கொடுத்தான். பின் கார்த்திக் தனக்கு வந்த மற்ற குறுந்தகவல்களுக்கு பதில் குறுந்தகவல் அனுப்பிவிட்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவனைப் பார்த்து சிரித்துவிட்டு ஆதித்யா குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான். நண்பனின் சிரிப்பிற்கு அர்த்தம் புரியாது விழித்த கார்த்திக் பின் தோளைக் குலுக்கிக் கொண்டான்.

பின் கார்த்திக் ஆதித்யாவிடம் “ஈவினிங் பார்க்கலாம் ஆதி..! இந்த ப்ரொஜெட் முடிந்துவிட்டது. கிறிஸ்துமஸ் ஹாலிடேவும்.. இன்னும் இரண்டு நாளில் தொடங்கிவிடும். அதற்கு பிறகு ஜாலியாக நாம் என்சாய்.. செய்யலாம்.” என்றுச் சொன்னதும்.. ஆதித்யா கட்டை விரலை உயர்த்திக் காட்டி கண்ணடித்தான்.

ஹாம் நகரின் எல்லையில் அமைந்துள்ள அவர்களது கார் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு முன்னால் இருந்த காபி ஷாப்பில் நேற்று போல் மாலை நேரத்தில் ஆதித்யா கார்த்திக்கிற்காக காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் கார்த்திக்கும் அவனுடன் மீராவும் வந்தார்கள்.

கார்த்திக்கும் மீராவும் வெளியே வந்த பொழுதே ஆதித்யா பார்த்துவிட்டான். அதுவும் சிரித்து பேசியவாறு வந்த மீரா ஆதித்யாவை பார்த்ததும்.. அவளின் சிரிப்பின் அளவும் பேச்சின் அளவும் ஒரு நொடி குறைந்து பின் முன்னை விட அதிகமாகியதைப் பார்த்தவனுக்கும் சிரிப்பு பொங்கியது. வேறு திசையைப் பார்த்து தனது சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

முகத்தைத் திருப்பி அவர்களை மீண்டும் பார்க்கும் பொழுது அவர்கள் அருகில் வந்திருந்தார்கள். ஆதித்யா மற்றும் மீராவின் முகங்களை மாறி மாறிப் பார்த்த கார்த்திக்.. இருவரையும் முந்திக் கொண்டு.. “ப்ளீஸ் இது என் டைம் மீராவை ஏன் கூட்டிட்டு வந்தேன்னு நீயும், நாம் தனியாக இருக்கும் பொழுது ஆதி எதற்கு.. நீயும் கேட்டு சண்டையை ஆரம்பித்து விடாதீங்க..! மீரா என் லவ்வர் என்பதையும் நீயும், ஆதி என் பெஸ்ட் பிரெண்ட் என்பதை நீயும் ஏற்றுட்டு ஒன்றாய் இந்த கிறிஸ்துமஸ் ஹாலிடேவை செலபரெட் செய்யலாம்.. ஒகே..” என்று இருவரையும் மாறி மாறிப் பார்த்து கேட்டுக் கொண்டான்.

அதற்கு ஆதித்யா “ஒகே என்சாய் வித் யுவர் லவ்வர்..! நான் தொந்திரவு செய்யவில்லை..! நடுவிலும் வரவில்லை..” என்று எழுந்தான்.

கார்த்திக் “ஆதி..” என்று அலுப்புடன் அழைக்கவும், ஆதித்யா “கார்த்தி..! கோபம் எல்லாம் படலை.. திமிரிலும் பதில் சொல்லலை. நான் சீரியஸாக சொல்கிறேன். நீங்க என்சாய் செய்யுங்க.. நான் தனியாகவே சுற்றிப் பார்த்துக்கிறேன். நான் உனக்காக தான் சொல்கிறேன்.” என்று குரலில் தீவிரத்துடன் சொன்னவன், தொடர்ந்து சிறு சிரிப்புடன், “உன் லவ்வர் என்னை எப்படி முறைக்கிறாங்க பாரு.. இவங்க எப்படி என் கூடச் சேர முடியும்?” என்றுப் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

அதற்கு மீரா “நீயும் தான் என்னைப் பார்த்து நக்கலாய் சிரித்தாய்..” என்று அவனைப் போலவே கேட்டாள்.

அதற்கு கார்த்திக் “அதுதான் ஒரே மாதிரி அடிச்சுக்கிறீங்களே! அதெல்லாம் சேர முடியும்.” என்று இடைப்புகுந்தவன் தொடர்ந்து “கமான் யா..! எனக்காக இரண்டு பேரும் அட்ஜெஸ்ட் செய்ய மாட்டிங்களா..! என் மேல் இவ்வளவுத்தான் மதிப்பா..?” என்று கெஞ்சலுடன் கேட்டான்..

அதைக் கேட்ட மீரா எழுந்து நின்றிருந்த ஆதித்யாவின் புறம் கையை நீட்டி “பிரெண்ட்ஸ்..?” என்றுக் கேட்டாள்.

ஒற்றைப் புருவத்தை உயர்த்தி “சுயர்? இந்த பிரெண்ட்ஸிப் ஆஃபருக்கு பின்னாடி மேட்டர் இருக்கும் போல தெரிகிறதே...” என்றுப் பதில் கேள்வி கேட்டான். கார்த்திக் “ஆதி..” என்றுப் பற்களைக் கடிக்கவும்.. சிரித்தவாறு “ஓகே அசப்ஃட்டர்டு..” என்று அவளது கரத்தைப் பற்றியவன், கரத்தை விடாது “அப்பறம் ஏன்டா பிரெண்ட்ஸ்க்கு என்று கையை நீட்டினேன் என்று வருத்தப்பட மாட்டியே..!” என்று கண்ணடித்தான்.

மீரா ஒரு நிமிடம் திகைத்தாள். பின் மறுப்பாக தலையசைத்து “நீ என்ன பெரிய ரௌடின்னு நினைச்சியா..! என்னை பயமுறுத்துகிறாயா..? ஆமாம் உன் கிட்ட பிரெண்ட்ஸிப் கேட்டதிற்கு மேட்டர் இருக்கு.. நீ பேசியது தப்புன்னு உன் மூக்கை உடைக்கணும், உன்னை ஸாரி சொல்ல வைக்கணும்.” என்றாள்.

அதற்கு முறுவலுடன் அவளது கையை விடுத்தவன், “இப்போ நீதான் ரௌடி மாதிரி பேசுகிறே..” மாறாத முறுவலுடன் இருக்கையில் சாய்ந்தமர்ந்துக் கொண்டு அவளைப் பார்த்தான். கார்த்திக் பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு இருவரையும் பார்த்தவன், “ஏதோ இரண்டு எதிரி நாட்டுத் தலைவர்கள் கைக்குலுக்கிட்டது மாதிரி இருக்கு…” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

பின் அங்கிருந்து மூவரும் ஒன்றாக சென்று ஹாம் நகரின் முக்கிய இடமான மேக்ஸிமில்லியன் பார்க்கிற்கு சென்றார்கள்.

நடுவில் கார்த்திக் நடந்து வர மற்ற இருவரும் இரு பக்கமும் வந்தார்கள். கார்த்திக் மீராவிடம் “கிறிஸ்துமஸ் என்றால் இங்கே முதலிலேயே செலபேரெட் தொடங்கியிரும் என்றுக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் இன்னும் ஒன்றும் காணோம்..” என்றுக் கேட்டான்.

மீரா அவனிடம் திரும்பி.. “ஒ.. நீ போன ஜனவரியில் தானே வந்தே..! பர்ஸ்ட் ஸ்னோ பாலிங்கிற்கு பிறகு தான் எல்லாம் ஆரம்பிக்கும் கார்த்தி..! இன்னும் இரண்டு நாளில் குழந்தைகள் ஷாக்ஸ் நைட் மாட்டி வச்சுப்பாங்க, அதில் நிறையா சாக்லேட்ஸ் போட்டு வைத்திருவோம். காலையில் அவங்களுக்கு அது சர்பரைஸா இருக்கும்.. ஏன் அப்படி என்பதற்கு ஒரு கதையே இருக்கு..! நம்ம ஊரில் எப்படி ஒவ்வொரு பண்டிக்கைக்கும் ஒரு கதை இருக்கிற மாதிரி தான்..! அப்பறம் உண்மையான செலபெரெஷன் அன்ட் பிரிப்பரெஷன் ஆரம்பிக்கும், இது மொத்தம் நான்கு வாரங்கள் நடக்கும். முதலில் வீட்டு கிளினிங் வேலை நடக்கும். பின் கிறிதுஸ்மஸ் ட்ரீ வைப்பாங்க, வீட்டில் ஸ்டார்ஸ் மாட்டி அழகுப்படுத்துவாங்க.. அப்பறம் பெரிய பெரிய பேக்ரட்டரீஸ், ரெஸ்டாரண்ட்டில் பெரிய கேக்ஸ் சாக்லேட்ஸ் செய்ய ஆரம்பிச்சுருவாங்க.. அப்பறமென்ன! கிறிஸ்துமஸ் பர்செஸிங்கும், கொண்டாட்டமும் தொடங்கிரும். நிறையா கடைகள் இருக்கும், பிடித்தவர்களுக்கு கிஃப்ட்ஸ் வாங்கி வைப்பாங்க, என்டர்டெயின்மென்ட்டிற்கு என்று எக்ஸ்போ நடக்கும், டிசம்பர் 24 வாங்கின கிஃப்ட்ஸ் எல்லாம் கொடுத்துடுவாங்க.. கேக் வெட்டி வைன் சாப்பிட்டு ஆட்டமும் பாட்டுமாக இருக்கும். அப்பறம் அடுத்த நாள் சர்ச்சில் ப்ரே செய்வாங்க.. பிறகும் சில நாட்கள் கொண்டாட்டங்கள் தொடரும்..! நான் சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். ஆனால் இதில் நிறையா சந்தோஷங்களும், விசயங்களும், கொண்டாட்டங்களும் அடங்கியிருக்கு..” என்று முடித்தாள்.

கார்த்திக் “அப்போ நாம் சரியான நேரத்திற்கு தான் வந்து சேர்ந்திருக்கிறோம்..” என்று மகிழ்ச்சியுடன் தனது உள்ளங்கையை நீட்டினான். மீரா “எஸ்…” என்று அவனது கரத்தின் மேல் தனது கரத்தை வைத்தாள். அடுத்து ஆதித்யாவும் தன் கரத்தை வைப்பான் என்று இருவரும் எதிர்பார்த்திருக்க.. அவனோ.. அருகில் இருந்த கடையை நோக்கி சென்றான்.

மீரா “திமிரைப் பாறேன், ரொம்ப தான் பிகு செய்கிறான்..! பேசாமல் அவனைக் கழற்றிவிட்டுட்டு நாம் போகலாமா..” என்றுக் கேட்டாள்.

கார்த்திக்கிற்கு சிரிப்பு தான் வந்தது. மீராவிடம் ஆதித்யா வேண்டுமென்றே இவ்வாறு நடந்துக் கொள்கிறான் என்றுத் தெரிந்தது. மீராவும் அவனைக் குற்றம் சாட்டும் நோக்கத்துடனேயே பேசுகிறாள் என்றும் தெரிந்தது. அதற்கு காரணம்.. இருவரின் முதல் சந்திப்பும் அதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் என்றும் புரிந்தது. ஆனால் இருவரும் அவனின் பொருட்டு நாளடைவில் சேர்ந்துவிடுவார்கள் என்று நம்பிக்கையும் கொண்டான். அதனால் இருவரின் செய்கைகளையும், பேச்சுகளையும் பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் சிரிக்க தான் செய்தான். பின் ஆதித்யா எங்கே சென்றான் என்றுப் பார்க்கும் பொழுதே இரு ஐஸ்கிரீம்களுடன் வந்தான், ஒன்றை அவன் சுவைத்துவிட்டு மற்றொன்றை தன் நண்பனிடம் நீட்டினான்.

மீரா “எனக்கு..?” என்றுக் கேட்கவும், ஆதித்யா “நான் உனக்கு எதற்கு வாங்கி தரணும்?” என்றுத் தோள்களைக் குலுக்கி கேட்டான்.

கார்த்திக் “என்ன ஆதி இது?” என்றுச் சலித்துவிட்டு மீராவிடம் “இரு மீரா நான் வாங்கித் தருகிறேன்.” என்றுச் செல்ல திரும்பினான். ஆனால் அவனைத் தடுத்த மீரா “உன் பிரெண்ட் எனக்கு எதற்கு வாங்கி தரணும் என்றுக் கேட்டான் தானே..! அதனால் அவன் வாங்கித் தந்தது தான் வேண்டும்.” என்று கார்த்திக் சுவைக்காமல் கையில் வைத்திருந்ததைப் பிடுங்கி கொண்டாள்.

அதை வாயில் வைத்து சுவைத்தவாறு ‘இப்போ என்ன செய்வே!’ என்பது போல் ஆதித்யாவை பார்த்தாள். அதற்கு ஆதித்யா “நான் வாங்கி தந்தது என்ன.. நான் சாப்பிட்டதே தருகிறேன்.” என்றவன், சட்டென்று அவள் வாயில் வைத்துக் கொண்டிருந்ததைப் பிடுங்கி கொண்டு.. தன் கையில் இருந்ததை அவளது கையில் வைத்ததோடு மட்டுமில்லாது, அவளது இதழில் வைத்து அழுத்தினான்.

மீரா அதிர்ந்தவளாய் தன் கையில் இருந்ததை அருகில் இருந்த ஐஸ்கீரிம்மை குப்பைத் தொட்டியில் போட்டாள். ஆதித்யா அவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் முன்னால் நடக்க ஆரம்பித்தான்.

கல்லூரி படிக்கும் பொழுது.. ஆண் பெண் நட்புகளிடம் இவ்வாறு மாற்றி மாற்றி சாப்பிட்டு கொள்வார்கள் தான்..! ஆனால் அதை மீராவிடம் செய்வான் என்று கார்த்திக் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனவே அவனுமே சற்று சங்கடத்துடன் மீராவை பார்த்தான்.

மீரா கார்த்திக்கிடம் “இதற்கும் உன் பிரெண்ட்டிற்காக எதாவது சாக்கு சொல்ல போகிறே அப்படித்தானே..” என்றுச் சற்று கோபத்துடன் கேட்டாள். கார்த்திக் பதில் சொல்ல முடியாமல் திணறவும்.. “நட..! உன் பிரெண்ட் பார்! லெஃப்ட்டில் போவதற்கு பதில் ரைட் சைடு போகிறான். முதலில் அவனைப் பிடி..” என்று சற்று எரிச்சலுடன் சொன்னாள்.

வேடிக்கைப் பார்த்தபடி நடந்தவாறு சென்றுக் கொண்டிருந்த ஆதித்யாவிடம் சென்ற கார்த்திக், “இந்த பக்கம் போகணும்.. ஆதி..” என்று அவனை நிறுத்தினான். பின் மெல்ல “ஏன்டா அவளைச் சீண்டி விளையாடிட்டே இருக்கிறே?” என்றுச் சற்றுச் சலிப்புடனே கேட்டான்.

அதற்கு ஆதித்யா “விளையாடுகிறேனா..! நோ நெவர்..” என்றவன் தொடர்ந்து “ஐயம் சீரியஸ்..” என்றதும், கார்த்திக் “அடேய்..” என்று அடிக்க கையை ஓங்கவும், ஆதித்யா ஓட.. கார்த்திக் அவனைத் துரத்திக் கொண்டு ஓடினான்.

பின் மூவரும் மீண்டும் இணைந்து நடந்த போது.. ஆதித்யா “ஆசையா இரண்டு ஐஸ்கிரீம் வாங்கினேன். ஒன்றை உன் லவ்வர் வெஸ்ட்பின்னில் போட்டுட்டா இன்னொன்று டேஸ்ட்டே இல்லை. அதனால் நானும் வெஸ்ட்பின்னில் போட்டுட்டேன்.” என்று மீண்டும் வம்புக்கு இழுத்தான். மீரா கோபமாக ஏதோ சொல்லத் தொடங்கவும், கார்த்திக் அவசரமாக இடைப்புகுந்து “சான்டாகிளாஸ் வருவாங்களா.. மீரா..” என்றுக் கேட்டான்.

மீரா “வருவாங்களாவா..! பெரிய பரேட்டே நடக்கும். கோரஸா பாட்டு பாடி டான்ஸ் ஆடுவாங்க செமையா இருக்கும்..” என்றவள் தொடர்ந்து சுற்றிலும் தெரிந்த மரங்களைக் காட்டி.. “கிறிஸ்துமஸிற்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது.. இந்த மரத்திற்கு லைட்டிங்ஸ் போட்டு அசத்துவாங்க..! இந்த இடத்தில் பௌன்டன் கூட வைத்து லைட்டிங்ஸ் போட்டு செமையா இருக்கும்..” என்றாள்.

திடுமென மீரா “என் நெய்பர்ஸ்..” என்று சிலரைப் பார்த்துக் கத்தியவள், அவர்களிடம் விரைந்தாள். அவர்களிடம் பேசிவிட்டு மீண்டும் வந்தாள். வந்தவளிடம் கார்த்திக் “நேற்று நடந்த பார்ட்டியில் அவர்களும் வந்திருந்தார்களா..? என்னைப் பார்த்து சிரித்து கையை ஆட்டினாங்க, நானும் கையசைத்துவிட்டேன்.” என்றுச் சிரிக்கவும், மீரா ஆம் என்று முறுவலுடன் தலையை ஆட்டினாள்.

உடனே கார்த்திக் “நேற்று நான் வந்துட்டு போன பிறகு உன்கிட்ட என்னைப் பற்றி எதாவது சொன்னாங்களா..?” என்றுக் கேட்டான். அப்பொழுது அருகில் நின்றிருந்த ஆதித்யா சத்தமாக கொட்டாவி ஒன்றை விட்டான். மீரா அவனைப் பார்த்து முறைக்கவும்.. கார்த்திக்கிடம் திரும்பியவன், “நீங்க ஆற அமர உட்கார்ந்து பேசுங்க..! நான் அப்படியே சுற்றி இருக்கிற கடைகளைப் பார்த்துவிட்டு வருகிறேன்.” என்று அவர்களை அமர வைத்துவிட்டு சென்றான்.

ஒரு கடையை நோக்கி சென்றவனை முறைத்துப் பார்த்தவாறு அமர்ந்த மீராவிடம் “சொல்லு மீரா..” என்று கார்த்திக் ஊக்கவும், அவன் புறம் திரும்பினாள்.

அவளது குடும்பத்தினர் அவளது முடிவில் உறுதியா என்று மீண்டும் கேட்டதாக கார்த்திக்கிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே.. ஆதித்யா அடுத்த கடைக்கு செல்வதைப் பார்த்தாள். பின் பேச்சைத் தொடர்ந்தாள். பின் கார்த்திக்கின் குடும்பம் அவளின் பாட்டிக்கு எவ்வாறு தெரியும் என்பதைப் பற்றிச் சொன்னார்கள் என்றுச் சொல்லியவள்.. நிமிர்ந்துப் பார்த்தாள். அங்கு ஆதித்யா இல்லை.. சுற்றிலும் விழியைச் சுழற்றியவள்.. அவன் ஒரு சிலையின் அருகில் நின்றுக் கொண்டு சிலையை ஆராய்ந்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவள் பார்ப்பதைக் கண்டதும், தனது ஒற்றைப் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்கவும், அவசரமாக விழிகளைத் திருப்பிக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள். கார்த்திக் சுவராசியமாக கேட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் சிறு வயதில் சந்தித்திருக்கிறார்கள் என்று சிறுத் தகவலைக் கூறவும், கார்த்திக்கிற்கு ஆர்வம் கூடியது. எங்கே எப்பொழுது என்றுக் கேட்கவும், திருமணவிழா ஒன்றில் என்று அதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த மீராவிற்கு ஏதோ உந்தவும் மெல்ல விழிகளைத் திருப்பிப் பார்த்தாள். ஆதித்யா ஒரு கடையின் அருகில் மார்பிற்கு குறுக்கே கரங்களைக் கட்டியவாறு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவசரமாக விழிகளைத் திருப்பிக் கொண்டவளுக்கு எரிச்சல் வந்தது. கார்த்திக்கிடம் “போகலாமா கார்த்திக்..! ரொம்ப நேரமாகிருச்சு.. நாளைக்கு பார்க்கலாம்.” என்கவும், அதுவரை அவள் சொல்லிய நிகழ்வை பற்றி நினைவிற்கு கொண்டு வர முயன்றுக் கொண்டிருந்தவன், “யா போகலாம்..” என்று ஆதித்யாவை தேடினான். தன் கை பையைத் தோளில் போட்டவாறு எழுந்த மீரா கார்த்திக்கிடம் “அவன் அங்கே நிற்கிறான்..” என்றுத் தனக்கு பின்னால் கையைக் காட்டினாள். சிறுவர்கள் விளையாடும் சறுக்கின் அருகே ஆதித்யா நின்றுக் கொண்டு அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கார்த்திக் “ஆதி..” என்று அழைக்கவும், ஆதித்யா நின்ற இடத்தில் இருந்தே அவனை அழைத்தான். கார்த்திக் “வா மீரா..” என்று அழைக்கவும், மீரா “அவன் உன்னைத்தானே கூப்பிட்டான். நீயே போய் என்னவென்று கேட்டுட்டு சீக்கிரம் கூட்டிட்டு வா.. டைமாச்சு..” என்றாள்.

கார்த்திக் “உங்க இரண்டு பேரையும் வச்சுகிட்டு..” என்றுத் தலையை ஆட்டிச் சிரித்துவிட்டு நண்பனிடம் விரைந்தான். கார்த்திக் அருகில் வந்ததும் ஆதித்யா “கார்த்தி..! நான் இந்தியாவிற்கு போகலாம் என்றிருக்கிறேன். டிக்கெட் புக் செய்தால் இந்த சிஸனில் சீக்கிரம் கிடைக்குமா..?” என்றுக் கேட்டான்.

அதைக் கேட்டு அதிர்ந்த கார்த்திக் “ஏன்டா..” என்றுக் கேட்டான்.

ஆதித்யா சற்று தொலைவில் அவர்களை முறைத்தவாறு நின்றுக் கொண்டிருந்த மீராவை பார்த்தவாறு “பிகாஸ்.. ஐ டொன்ட் லைக் ஹர்..” என்றான்.

அதற்கு கார்த்திக் சிரித்தவாறு “உனக்கு என்னதான் ஆச்சு! அவள் அப்படி என்ன செய்துட்டா..! எனக்கு அவளைப் பிடிச்சுக்கு..! உன்னோட விளையாட்டால் அவள் ஹர்ட் ஆகிறா தெரியுமா.. அது எனக்கு கஷ்டமாயிருக்கு..” என்றான்.

ஆதித்யா “நான் விளையாடலை கார்த்தி..! சீரியஸாக தான் இருக்கிறேன். இப்பவும் சொல்கிறேன். அவள் உனக்கு செட்டாக மாட்டாள். அப்பவும்.. அவள் தான் வேண்டும் என்றால் என்னை விட்டுவிடு. இல்லை நான் வேண்டுமென்றால் அவளை விட்டுவிடு..! நான் நாங்க இரண்டு பேரும் ஒன்றாக மட்டும் வேண்டாம்.” என்றான்.

அதைக் கேட்டு சிரித்த கார்த்திக் “அப்போ உங்க இரண்டு பேருக்கும் தான் செட்டாகலை..” என்கவும், சத்தமாக சிரித்த ஆதித்யா ஷ்ஷ்ஷ் என்று வாயின் வழியே காற்றை உள்ளிழுத்து வேகமாக ஊப் என்று வெளியே விட்டவன்,

“லிசன் கேர்புல்லி! அவள் உனக்கு செட்டாக மாட்டாள், அப்படி அவள் உனக்கு செட்டாக வேண்டும் என்றால்.. என்னை விட்டுவிடு..!” என்றான்.

கார்த்திக் அப்பொழுதும் புரியாமல் குழப்பத்துடன் நின்றான்.


பிடிக்காத இடத்தில் பிடித்தம் வருவது விதியோ..!

பிடித்தம் வருவதால் பிடிக்காது போனது தான் விதியோ..!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸாரி பிரெண்ட்ஸ்.. நேத்து யுடி போட முடியலை. அதனால் இன்று இரண்டு யுடிகளாக தருகிறேன். என்சாய் ரீடிங்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5


கார்த்திக் குழப்பத்துடன் “ஆதி..! ப்ளீஸ் என்ன சொல்வதாக இருந்தாலும் ஒப்பனாக சொல்லு! எனக்கு நிஜமா புரியலை. மீராவை பிடிக்கலைன்னு சொல்கிறே..! ஆனால் உன் வீட்டில் இருக்கிறவங்க உனக்கு செய்ததை விடவா கெட்டதை அவள் செய்து விடப் போகிறாள்..” என்றுக் கூறினான்.

ஆதித்யா சிறு அலுப்புடன் “உனக்கு புரியாமலேயே முடியட்டும் என்று விரும்புகிறேன் கார்த்தி..” என்றான்.

கார்த்திக் “ஓ.. நீ இன்னும் மீராவை பற்றி முதலில் சொன்னதை மாற்றிக்கவில்லையா..! அப்படி நீ சொன்ன மாதிரி நடந்துவிட்டாலும் அது என் கவலை ஆதி! இப்போ கிடைத்திருக்கிறே நேரத்தை என்சாய் செய்யாமல்.. அவள் கூட இருக்கிற சின்ன மிஸ் அன்டர்ஸெ்டென்டிங்கை பிடிச்சுட்டு ஏன்டா இப்படித் தொங்குகிறே!” என்று அலுத்துக் கொண்டான்.

அப்பொழுது மீரா அங்கிருந்து.. “பேசிட்டே போகலாமே.. அப்படி என்ன பேசிட்டு இருக்கீங்க..” என்றுக் கேட்டாள்.

கார்த்திக் “ஒன்றுமில்லை மீரா..! இதோ வருகிறோம்.” என்றான்.

ஆனால் ஆதித்யா “எனக்கு உன்னைப் பிடிக்கலை. நீ கூட வந்தால் நான் வர மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தேன். இவன் என்னை கன்வைன்ஸ் செய்ய பார்க்கிறான். ஆனால் என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன்.” என்றான். அதைக் கேட்டு அருகில் நின்றிருந்த கார்த்திக் நெற்றியில் அறைந்துக் கொண்டான்.

மீரா பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டு “என்னை உனக்கு பிடித்தால் என்ன..! பிடிக்காவிட்டால் என்ன..! நீயா என்னை லவ் செய்கிறே..? ஆக்சுவலா கார்த்திக் கூட நீ இருந்தால் எனக்கு தான் அன்ஈஸியா இருக்கு..! ஆனால் நீ என்னைப் பற்றிச் சொன்னது பொய் என்றுக் காட்டி உன்னை ஸாரி சொல்ல வைக்கணும். அதனால் பயந்துட்டு ஓடாதே...!” என்று அவனைப் போல் நக்கலாக கேட்டபடி வந்தாள்.

ஆதித்யா அவனையும் அறியாமல் அவளின் நக்கலுக்கு கட்டுண்டான். “ஒகே இருக்கிறேன். உங்க கூடவும் வருகிறேன். ஆனால் நான் இங்கே இருந்தால் நீ தோற்றுவிடுவே.. மீரா! உண்மையில் நான்j தோற்றால் தான் சரியாக இருக்கும்.” என்றுவிட்டு முன்னால் நடந்தான். புரியாத புதிராக இருந்தவனை இருவரும் பார்த்தார்கள். பின் மூவரும் அவரவர் இடத்திற்கு சென்றார்கள்.

கிறிஸ்துமஸ் விடுமுறை தினங்கள் வருவதால் அடுத்த இரு நாட்கள்.. அவர்கள் பணி புரிந்த தொழிற்சாலையில் வேலை அதிகமாக இருக்கவும், மூவரும் தனியாக வெளியே செல்ல முடியவில்லை. ஆனால் கார்த்திக் அலுவலகத்தில் மீராவையும், மாலையில் ஆதித்யாவை அவன் தங்கியிருந்த ஹோட்டலிலும் பார்த்து பேசிக் கொண்டான்.

இரு நாட்களுக்கு பிறகு ஆதித்யாவின் தங்கியிருந்த அறைக் கதவின் அழைப்பு மணி ஒலித்தது. கார்த்திக் வர நேரமிருக்கே என்று எண்ணியபடி கதவை திறந்தவன், கார்த்திக் நின்றிருப்பதைக் கண்டு “ஹெ நேரத்திலேயே வந்துட்டே..” என்றபடி கட்டியணைத்த போது.. பின்னே மீரா நின்று நகத்தைக் கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

கார்த்திக் “இன்றோட வேலையெல்லாம் முடிஞ்சுருச்சு, இனி ஹாலிடே தான்.. அதுதான் நானும் மீராவும் வந்துட்டோம், எங்காவது ஜாலியாக போயிட்டு வரலாம் வாடா..” என்றபடி நண்பனுடன் உள்ளே வந்தான். ஆதித்யா மீராவை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. மீராவும் அவ்வாறே இருந்தாள். இருவரும் சண்டைப் பிடிக்காததே கார்த்திக்கிற்கு போதுமானதாக இருக்கவும்.. அவனும் அவர்களை வற்புறுத்தவில்லை.

முதலில் மூவரும் திரையரங்கிற்கு சென்றார்கள். சென்று அமர்ந்த பின்னரே கவனித்தார்கள். மீரா நடுவில் அமர்ந்திருக்க.. மற்ற இருவரும் அவளின் இரு புறமும் அமர்ந்திருந்தார்கள். படம் ஆரம்பித்ததும்.. கார்த்திக் அவள் புறம் சரிந்து முன் அமர்ந்திருப்பவர்களைக் காட்டி ஏதோ சொல்லவும், இயல்பு போல்.. அவனிடம் இருந்து சற்று விலகி.. அவன் சொல்லியதைக் கேட்டு மீரா சிரிப்புடன் தலையை ஆட்டினாள். ஆதித்யாவின் புறம் திரும்பி பார்த்த மீரா ஏதோ சொல்ல எதானிக்க நினைத்தவள்.. பின் மீண்டும் நேராக அமர்ந்துக் கொண்டாள். பின் மீண்டும் திரும்பிப் பார்த்தாள். படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன், எரிச்சலுடன் திரும்பி தணிந்த குரலில் “என்ன…!” என்றான்.

அவனின் எரிச்சலைக் கண்டு கோபமுற்ற.. மீரா அதே தணிந்த குரலில் அவன் புறம் சரிந்து “என் பேமலி மெம்பர்ஸ் உன்னைப் பற்றிக் கேட்டாங்க, அன்னைக்கு சரியாக பேசலைன்னு வீட்டிற்கு கூட்டிட்டு வரச் சொன்னாங்க, நானும் சரி என்றுச் சொன்னேன். சரி என்றுச் சொல்வதற்கு பதில் அந்த சிடுமூஞ்சி வர மாட்டான்னு சொல்லியிருக்கணும்.” என்றுவிட்டு நேராக அமர்ந்து படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.

ஆதித்யா மாறாத எரிச்சல் மிகுந்த குரலில் “உனக்கு லேட்டாக தான் புரியுமா..!” என்று நக்கலுடன் சிரித்தான்.

மீரா “யு..” என்று அவன் புறம் திரும்பவும் சட்டென்று ஆதித்யா எழுந்து சென்றான். மீரா அவன் எழுந்து செல்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் வெகு நேரமாகியும் அவன் வராதிருக்கவும்.. கார்த்திக்கிடம் சொன்னாள். கார்த்திக் எதற்கு எழுந்து சென்றான் என்றுக் கேட்டதிற்கு தனக்கு தெரியாது என்று மீரா பொய்யுரைத்தாள். அதை நம்பிய கார்த்திக் செல்பேசியை எடுத்து ஆதித்யாவிற்கு அழைப்பு விடுத்தான். ஆதித்யாவின் செல்பேசி அணைக்கப்பட்டிருப்பதாக சொல்லியது. எனவே வந்து விடுவான் என்று அவளுக்கு மட்டுமல்லாது அவனுக்குமே சொல்லிச் சமாதானம் செய்துக் கொண்டான். ஆனால் அடிக்கடி இருவரும் கதவை பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். வெகு நேரம் ஆகி விடவும், அதற்கு மேல் பொறுக்க முடியாமல்.. கார்த்திக் வெளியே சென்றுப் பார்த்துவிட்டு வருவதாக கூறவும், மீரா தானும் வருவதாக கூறினாள். ஒருவேளை அவன் வெளியே சென்றிருந்த நேரம்.. ஆதித்யா இங்கு வரலாம் என்று அவளை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு சென்றான். முதலில் ஆதித்யா காணாதிருப்பது மட்டுமல்லாது தற்பொழுது கார்த்திக்கிற்கு சென்று விடவும், மீராவிற்கு ஓடிக் கொண்டிருக்கும் படம் மனதில் பதியவில்லை. அவளும் கதவைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

படம் முடிந்தும் கூட வராமல் இருக்கவும், கவலையுடன் எழுந்த பொழுது அங்கு ஆதித்யா வந்தான்.

சர்வ சாதாரணமாக வந்து நின்றவன், “கார்த்தி எங்கே?” என்றுக் கேட்டான்.

ஆதித்யாவை பார்த்ததும் திகைத்த மீராவிற்கு அத்தனை நேரம் இருந்த பயமும் அகன்றது. சிறு மகிழ்ச்சியுடன் எழுந்து நின்றவள், “இத்தனை நேரம் எங்கே போனே?” என்றுக் கேட்டாள்.

அவனோ “உங்க ரோக்கு முன்னாடி இரண்டு ரோ தள்ளி இருக்கிறதில் தான் உட்கார்ந்திருந்தேன்.” என்றான்.

மீரா “வாட்! நீ காணோம் என்று கார்த்தி உன்னை வெளியே தேடிட்டு போயிருக்கிறான். ஏன் இங்கேயே உட்கார்ந்தா என்னவாம்?” என்று எரிந்து விழுந்தாள். அவன் அமைதியாக அவளை முறைக்கவும், அத்தனை நேரம் பட்ட கவலையால் கோபத்துடன் “ஏன் நான் என்ன கடிச்சு தின்று விடப் போகிறேனா..! இல்லை நீ என்கிட்ட மயங்கி விடப் போகிறாயா..” என்றுக் கோபத்துடன் கேட்டாள்.

அதற்கு ஆதித்யா உடனே “நானா! நோ! நெவர்!” என்று பட்டென்று பதிலளித்தவன், அவள் புறம் சற்று குனிந்து அழுத்தமான ஆனால் மெல்லிய குரலில் “ஆனால் நீ என்கிட்ட மயங்கிடுவே..” என்றுவிட்டு நிமிர்ந்தான்.

அந்த குரலும், அவனது அருகாமையும், அவனது பேச்சையும் கேட்ட மீராவிற்கு ஏனோ திக்கென்று இருந்தது. விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள். அவன் ஏளனமாக சிரித்துவிட்டு திரும்பினான். அப்பொழுதே சுயநிலை அடைந்தவளாய், “நானா..! என்ன உளறுகிறாய்..” என்று புருவத்தை நெறித்தபடி கேட்டாள்.

அவனோ சத்தமாக சிரித்தபடி திரும்பினான்.

“இந்த பதிலை நான் சொன்னதும் சொல்லியிருந்தால்.. உன் கோபத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால்..” என்றுச் சிரித்தபடி பேச தொடங்கியவன், கடைசியில் முறைத்துவிட்டுச் சென்றான். மீரா சத்தமாகவே திட்டினாள்,

“திமிர்! திமிர்! உடம்பு புல்லா திமிர்..”

வெளியே சென்ற ஆதித்யா கார்த்திக்கை செல்பேசியில் அழைத்தான். அவனது பெயரை பார்த்ததுமே எடுத்த கார்த்திக் எங்கே இருக்கிறாய் என்றுக் கேட்டான். அவன் நின்றிருந்த இடத்தைச் சொல்லவும், அடுத்த இரண்டே நிமிடத்தில் வந்த கார்த்திக் கோபமும், நிம்மதியுமாய் “போடா..” என்று அவனது மார்பில் கையை வைத்து தள்ளினான்.

பின் கார்த்திக் “இப்போ நான் எங்கேயிருந்து வருகிறேன் தெரியுமா..! இந்த மாலுடைய ஆபிஸில் இருந்து வருகிறேன். சிசிடிவியை செக் செய்ய சொன்னேன். அவங்க இன்வஸ்டிக்கெட் பெட்ரொல் கிட்ட பர்மிஷன் வாங்க சொன்னாங்க..! அவங்களுக்கு ஃபோன் போட போனேன். கரெக்ட்டா நீ கூப்பிட்டுட்டே..! ஃபோனையும் ஆஃப் செய்துட்டு எங்கேடா போனே..?” என்று மீண்டும் கோபத்துடன் கேட்டான்.

ஆதித்யா “நானும் படம் பார்த்துட்டு தான் இருந்தேன்.” என்று சர்வ சாதாரணமாக சொன்னான். கார்த்திக் குழப்பத்துடன் பார்த்த அதே வேளையில் மீராவும்.. அவர்கள் இருந்த இடத்திற்கு வந்து விடவும்.. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உங்களுக்கு பிரைவஸி கொடுக்க நினைத்தேன். ஆனால் நீங்க என்னைத் தேடிட்டு இருந்திருக்கீங்க..” என்றுச் சிரித்தான்.

கார்த்திக் “அடப் போடா..! நீ இருக்க போவது இன்னும் பத்து நாட்கள் தான்.. அதற்கு பிறகு நாங்க மட்டும் தானே தனியாக இருப்போம். நீ எங்களுக்கு பிரைவஸி ஏற்படுத்தி தருகிறாயா..” என்றுக் கோபம் கொண்டான். அதற்கு ஆதித்யா “அங்கே உட்கார பிடிக்காமல் எழுந்து போனேன் என்றுச் சொன்னால் கோபப்படுவே என்றுத்தான் மாற்றி சொன்னேன். ஆனால் நீ என்கிட்ட இருந்து உண்மையை வாங்கித்தான் தீருவேன்னு இருக்கே..” என்றுச் சிரிக்கவும், கார்த்திக் “உண்மையாலுமே உன்னை ஜெர்மனியில் வேண்டுமென்றே தொலைச்சுட்டு, உன் அப்பா கிட்ட எனக்கு தெரியாது என்று பொய் சொல்ல போகிறேன் பாரு..” என்று அடிக்க போக ஆதித்யா அவனின் கைக்கு சிக்காமல் ஓடினான்.

இவ்வாறு நண்பர்கள் விளையாடிக் கொண்டிருக்க மீரா.. ஆதித்யா சொன்னதில் இருந்து மீளா முடியாமல் நின்றாள். முதலிலேயே கார்த்திக்கை விட்டு சென்றுவிடுவாள் என்று அவன் கூறிய பொழுது கடும் கோபம் தான் கொண்டாள். ஆனால் தற்பொழுது அவனிடம் மயங்கி விடுவதாக கூறவும், அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள்.

அன்று அவளே ஆதித்யாவின் அருகே செல்வதையும் அவனைப் பார்ப்பதையும் தவிர்த்தாள். அடுத்த நாள் கார்த்திக் அழைத்த பொழுது வீட்டில் வேலையிருப்பதாக கூறித் தவிர்த்தாள்.

கார்த்திக் சொன்னது போல் ஆதித்யா பத்து நாட்கள் இருந்துவிட்டு சென்றுவிடுவான், அவளைத் தான் அவனுக்கு பிடிக்கவில்லையே பின்னே ஏன் அவன் முன் சென்று நிற்க வேண்டும்.. என்ற முடிவிற்கு வந்தாள். அன்று வீட்டை சுத்தம் செய்வதில் வீட்டினருக்கு உதவி செய்துக் கொண்டிருந்தவளுக்கு ஆதித்யாவின் மீது கோபம் பெருகி கொண்டே போனது.

பொதுவாகவே மீராவிற்கு வீட்டு வேலைகளில் அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. சமையலில் ஆனா ஆவனா கூடத் தெரியாது. அதுபோல் மற்ற எந்த வேலையும் செய்ய பிடிக்காது. ஆனால் இன்று ஆதித்யாவை தவிர்க்கும் பொருட்டு, வீட்டில் இருந்ததிற்கு அவளது அன்னை சுத்தம் செய்யும் வேலையை அவளது தலையில் கட்டிவிட.. அதற்கு ஆதித்யாவை திட்டியபடியே வேலையில் ஈடுபட்டாள்.

சிறிது நேரத்தில் இடுப்பைப் பிடித்து கொண்டு ஷோபாவில் அமர்ந்தவளைப் பார்த்து பரிமளம் “இந்த வேலையை செய்வதற்கே இப்படியா..! நாங்கெல்லாம் அந்த காலத்தில்..” என்று ஆரம்பிக்கவும்.. அங்கிருந்து எழுந்துவிட்டாள்.

உடனே பரிமளம் “எதாவது சொன்னால்.. காதில் வாங்கிறதே இல்லை.” என்றுத் திட்ட ஆரம்பித்தார். வேகமாக தனது அறைக்கு செல்ல தொடங்கியவள், பரிமளம் அடுத்து கேட்ட கேள்வியில் அப்படியே நின்றுவிட்டாள்.

“எத்தனை முறை கார்த்திக்கையும், அவன் பிரெண்ட்டையும் வீட்டிற்கு கூட்டிட்டு வா என்றுச் சொல்லிட்டு இருக்கிறேன். அதையும் காதில் வாங்கிறதில்லை. நீ மட்டுமில்லை நாங்களும் பழகினால் தானே..! எங்களும் ஒரு அன்டர்ஸ்டென்டிங் வரும்..” என்றார்.

மீண்டும் தனது பாட்டியிடம் சென்ற மீரா “நான் சொல்லிட்டேன்.. ஆனால் அவங்க தான் வரலை..” என்றாள்.

அதற்கு பரிமளம் “சங்கோஜமாக இருக்கலாம். நீ சரியா கேட்டிருக்க மாட்டே..! கார்த்திக்கோட பிரெண்ட்டை நான் பார்க்கவே இல்லை. வேற நாட்டில் இருக்கிற நாம்.. தமிழ் பேசுவதால் ஒன்றுத்தானே..!” என்றார்.

மீரா தனது செல்பேசியை எடுத்து கார்த்திக்கிற்கு அழைப்பு விடுத்தாள். பரிமளத்தின் கையில் கொடுத்து “நான் கூப்பிட்டா ரொம்ப பிகு செய்யறாங்க..! நீங்களே கூப்பிடுங்க..” என்றுவிட்டு அவருக்கு அருகே அமர்ந்தாள்.

ஹம் நகரின் வீதியில் நடந்தவாறே ஆதித்யாவுடன் பேசிக் கொண்டிருந்த கார்த்திக் செல்பேசி அழைக்கவும், எடுத்துப் பேசினான். பரிமளம் வசதிப்பட்ட நாளில் வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.

பெரியவரே அழைக்கவும், கார்த்திக் “இப்பவே வருகிறோம் பாட்டி..” என்றான்.

அதற்கு பரிமளம் “இல்லை! இப்போ ஜாலியா சுற்றிப் பார்த்துட்டு இருப்பீங்க..! எப்பவாவது டைம் கிடைத்தால் வந்தால் போதும்.” என்றார். அதற்குள் அருகில் அமர்ந்திருந்த மீரா மெல்லிய குரலில் “அவங்க தான் வரேன்னு சொல்கிறாங்களே, ஏன் பாட்டி தடுக்கறீங்க.. வரட்டும்.” என்றாள்.

கார்த்திக் “சும்மா தான் பேசிட்டு நடந்துட்டு இருக்கிறோம். மீரா வராமல் எங்களுக்கும் போரடிக்குது. அங்கே இன்னும் கால்மணி நேரத்தில் இருப்போம்.” என்று செல்பேசியை அணைத்துவிட்டு ஆதித்யாவை பார்த்தான்.

அவனோ “ஒகே பை கார்த்தி! என்சாய்..” என்றுவிட்டு செல்ல திரும்பினான். அவனின் ஜெர்கின் காலாரை பிடித்து இழுத்து நிறுத்திய கார்த்திக் “உன்னைத்தான் முக்கியமா கூப்பிட்டாங்க..! அன்னைக்கு உன் கூடப் பேசலையாம்..” என்றான்.

அதற்கு ஆதித்யா “அந்த பாட்டி கூட நான் என்ன பேச…? எனக்கு உன் கூடவே சரியா பேச தெரியாது. அன்னைக்கு நான் பேச தெரியாமல் பேசிட்டேன்னு நீயும் சொன்னே தானே..! அதே மாதிரி அந்த பாட்டி கிட்ட எதாவது உளறி வைத்து விடப் போகிறேன். நான் வரலை..” என்றான்.

அதற்கு கார்த்திக் “நீ எல்லார் கிட்டயும் மட்டுமில்லாமல் உன் கிட்டயும் நெகட்டிவிட்டியை தேடாதே..! பாஸிட்டிவிட்டியை தேடு..! நீயும் நல்லதே நினை.. அப்பறம் பாரு.. நீ பழையபடி நன்றாக பேசுவாய்..” என்று நண்பனாய் அறிவுரை கூறினான்.

ஆதித்யாவிடம் இருந்து கசந்த சிரிப்பு ஒன்று வந்தது.

பின் “எனக்கு நல்லதைத் தேடக் கூடப் பிடிக்கலை..” என்றான்.

கார்த்திக் “அதற்கு நான் ஹெல்ப் செய்கிறேன் வா..” என்று மீரா வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

ஆனால் அவனுக்கு தெரியவில்லை.. இருண்ட நீளமான குகைக்குள் தன்னைத் தொலைத்துவிட்டு ஆதித்யா தன்னையே தேடிக் கொண்டிருக்கிறான் என்று..!

இருவரும் விரைவிலேயே மீராவின் வீட்டை அடைந்து விட்டனர். காரில் இருந்து இறங்கிய கார்த்திக்கிடம் ஆதித்யா “இப்போ நாம் எதற்கு இங்கே வந்திருக்கிறோம்?” என்றுக் கேட்டான்.

தெரிந்துக் கொண்டே இதென்ன கேள்வி என்பது போல் அவனைப் பார்த்த கார்த்திக் “பாட்டி நம்மை பார்க்கணும் என்றுச் சொல்லியிருக்கிறாங்க.. அதற்கு பாட்டியை பார்க்க வந்திருக்கிறோம்.” என்றான்.

நமட்டுச் சிரிப்புடன் கார்த்திக்கின் முகவாயைப் பற்றிய ஆதித்யா இருபக்கமும் திருப்பிப் பார்த்துவிட்டு “எந்த ஆன்கிளில் இருந்து பார்த்தாலும் லவ் செய்வதற்கான அடையாளமே உன் முகத்தில் தெரிய மாட்டேன்குதே..” என்றான்.

அதைக் கேட்ட கார்த்திக் பக்கென்று சிரித்துவிட்டான். “நான் என்னடா செய்வது, முதலிலாவது மீராவை பார்த்தால் அவளும் பார்ப்பாள்.. இரண்டு பேருக்கும் கொஞ்சம் சில்லென்று இருக்கும். இப்போ பார்த்தால்.. அவள் உன்னைத்தான் முறைச்சுட்டு இருக்கிறாள், எப்போ சண்டைப் போடுவீங்க என்றே தெரியலை. உங்க இரண்டு பேரையும் சமாதானம் செய்யவே சரியாக இருக்கு..! ப்ளீஸ் இரண்டு பேரும் சண்டைப் போடாமல் இருந்தால் நடுவில் நான் கொஞ்சம் லவ் செய்துப்பேன்.” என்றுச் சிரித்தவாறு அவனுடன் வீட்டினுள் சென்றான்.

முன்னறையிலேயே பரிமளம் அவர்களுக்காக காத்திருந்தார்.

கார்த்திக்கை வரவேற்றவர்.. அவனுக்கு பின்னால் வந்த ஆதித்யாவையும் அன்புடன் அழைத்தார். ஹரிஹரனும் தனலட்சுமியும் உள்ளே இருந்து வந்தார். ஹரிஹரன் “அம்மா இப்போதான் சொல்லிட்டு இருந்தாங்க, ஆனால் அம்மா கூப்பிட்டாங்க என்பதற்காக உடனே வருவீங்க என்று எதிர்பார்க்கலை. தேங்க்யு சோ மச்..!” என்று மகிழ்ச்சியைத் தெரிவித்தார். கார்த்திக் மாதவ்வை பற்றி விசாரிக்கவும்.. இங்கே அருகில் உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாட சென்றுவிட்டதாக கூறினார். பின் மீராவை கேட்டான்.

அதற்கு தனலட்சுமி “இங்கே தான் இருந்தாள், இன்னைக்கு எங்கேயும் வெளியே போகலையா என்றுக் கேட்டதிற்கு போகலை என்றுச் சொன்னாள். சரியென்று வீட்டை கிளின் செய்யலாம் என்று கூப்பிட்டால்.. காலையில் இருந்து ஒரு இடத்தையே துடைச்சுட்டு இருக்கிறாள், இவரும் நானுமே பாதி வீட்டைத் துடைத்து விட்டோம். இங்கேதான் இருந்தாள்.. இப்போ திடீரென்று காணாமல் போயிட்டா..” என்றவர், திரும்பி உள்ளே பார்த்து “மீரா..” என்று அழைத்தார். அவள் வந்தபாடியில்லை.

கார்த்திக் சிரித்தவாறு “விடுங்க ஆன்ட்டி! நேற்று தானே அவளைப் பார்த்தோம். நாம் இப்போ பேசலாம்.” என்றான்.

பரிமளம் கார்த்திக்கிடம் “அன்னைக்கு பிறகு உன்னை மறுபடியும் பார்க்கணும் போல.. இருந்தது, அதே மாதிரி உன் பிரெண்ட்டை நான் பார்க்கவேயில்லை. அதனால் தான் வரச் சொன்னேன்.” என்றவர், ஆதித்யாவை பற்றி விசாரித்தார். அவர் அன்பாக தான் பேசினார். ஆனால் அவனுக்கு தான் அவரின் பேச்சில் ஒன்ற முடியவில்லை. அவர் கேட்கும் கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். கார்த்திக்கிற்கு தன் நண்பனின் விருப்பமின்மை புரிந்துவிட்டது. சற்று முன் பேசியது போல் எடுத்தெறிந்து பேசி விடுவானோ என்று பயந்து ஆதித்யாவிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவன் பதிலளிக்க ஆரம்பித்தான். பின் பேச்சு ஆதித்யாவை பற்றியில் இருந்து கார்த்திக்கிற்கு மாறியது. ஆதித்யாவிற்கு அது நல்லதாகி போய் விட மெல்ல அங்கிருந்து எழுந்தான். வெளியே செல்லலாம் என்று நினைத்தவன், அது சரியாக இருக்காது என்று ஹாலில் மாட்டியிருந்த படங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அப்பொழுது பரிமளம் மீரா தான் அவரே பேசினால் இருவரும் வருவார்கள் என்றுப் பேச வைத்தாக கார்த்திக்கிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட ஆதித்யா உதட்டைக் கடித்துக் கொண்டான். இன்னும் அங்கேயே நின்றால்.. ஏதேனும் பேசி விடுவோம் என்று ஹாலுக்கு அடுத்த இருந்த அறைக்கு சென்றான். அங்கு ஒருபக்கம் இருந்து முணுமுணுப்பாய் சத்தம் வரவும், திரும்பிப் பார்த்தான்.

மீரா சுவற்றில் மாட்டியிருந்த படம் ஒன்றை துடைத்தபடி முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

“வயதில் பெரியவங்க கிட்ட உட்கார்ந்து பேச மாட்டானோ..! ரொம்ப தான் திமிர்..! என்னமோ இவனைப் பார்த்து நான் மயங்கிவிடுவேனாம், உருப்படியா சொல்லிக் கொள்கிறே மாதிரி ஒரு குணமும் இல்லை..” என்று முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பொழுது “எனக்கு திமிர் என்றால் உனக்கு என்ன கொழுப்பா..” என்றுக் கேட்ட குரலில் விதிர்த்து திரும்பினாள்.

“நீ கூப்பிட்டு நான் வரலை என்றதும் எதற்கு உன் பாட்டியை விட்டு கூப்பிட வைத்தே..?” என்றுச் சரியாக கணித்துக் கேட்டான்.

மீரா “பின்னே.. உன்கிட்ட இருந்து தப்பிக்க, வீட்டில் இருந்தால் என்னை வேலை செய்ய சொல்லிட்டாங்க, நான் இங்கே கஷ்டப்பட்டு வேலைச் செய்துட்டு இருக்கும் பொழுது நீங்க ஜாலியாக இருப்பதா என்றுத்தான்.. பாட்டியை விட்டு கூப்பிட்டேன்.” என்றுவிட்டு மெதப்பாக சொன்னாள்.

ஆதித்யாவின் விழிகள் கூர் பெற்றது, அவளுக்கு அருகே நெருங்கியவன்.. “அப்போ என்னைப் பற்றித்தான் நினைச்சுட்டு இருந்திருக்கே..?” என்றுக் கேட்கவும், மீரா எரிச்சலுடன் “ஏன் நினைச்சுட்டு இருந்தேன்னு சொல்லி மேட்டரையே மாற்றுகிறே.. திட்டிட்டு இருந்தேன்னு வேண்டுமென்றால் சொல்..” என்றாள்.

ஆதித்யா பற்களைக் கடித்தபடி “நான் மாற்றிப் பேசுகிறேனா..! நீதான் மாற்றுகிறே..!” என்றவன், பின் “தெரிந்து செய்கிறாயா..! தெரியாமல் செய்கிறாயா என்றுத்தான் தெரியவில்லை..” என்று உதட்டை இளக்காரமாக வளைத்துச் சிரித்தான்.

மீரா “நான் என்ன செய்தேன்..?” என்றுக் குழப்பத்துடன் கேட்டவள், தொடர்ந்து “ஓ..! நான் உன்னை பிளட்டரிங் செய்கிற மாதிரி தோன்றினால் நீ ஒரு முட்டாள்!” என்றாள்.

அதற்கு ஆதித்யா “யார் முட்டாள்! இல்லை யார் முட்டாள்கள் என்று சீக்கிரமே தெரிந்து விடும். அப்படி ஆக வேண்டாம் என்றுத்தான் நான் உன்கிட்ட எரிந்து விழுகிறேன்.” என்றான்.

அப்பொழுது “நீங்க இரண்டு பேரும் இங்கே தான் பேசிட்டு இருக்கீங்களா..!” என்று தனலட்சுமியின் குரலில் இருவரும் இயல்பாக நிற்பது போல் நின்றார்கள்.

“இருங்க.. குடிக்க சூப் எடுத்துட்டு வருகிறேன்.” என்று சமையலறைக்குள் சென்றார்.

தனலட்சுமி உள்ளே சென்றதும், மீரா “என்னமோ நடக்கப் போவதை நன்கு தெரிந்தவன் மாதிரி ரொம்ப பேசாதே..! என்னைப் பொருத்தவரை எனக்கு நிஜமாக ஒன்றும் புரியவில்லை.” என்றதும்.. கோபத்துடன் எதையோ சொல்ல வாயைத் திறந்தவன், அதை நிறுத்திவிட்டு “தெரியாமலேயே போகட்டும் என்றுத்தான் நான் விரும்புகிறேன். அதற்கு தான் நான் கிளம்புகிறேன் என்றுச் சொன்னால் என்னமோ என்கிட்ட சவால் விடுகிறே மாதிரி பேச்சு..” என்று முறைத்துவிட்டு திரும்புகையில் தனலட்சுமி கையில் சூப் நிரப்பிய கோப்பைகளைத் தாங்கிய தட்டுடன் வந்தாள். ஆதித்யாவிடம் ஒன்றை நீட்டவும், எடுத்துக் கொண்டவன், அவரோடு பேசியபடியே ஹாலுக்கு சென்றான். அவர்களின் பின் மீராவும் வந்தாள்.

அவளைப் பார்த்ததும் பரிமளம் “நான் கூப்பிட்ட தான் வருவாங்க என்று என்னைப் பேச சொன்னே.. அவங்களும் வந்திருக்கிறாங்க.. நீ டெய்லி பார்க்கிறவங்க தான் என்றாலும், வீட்டிற்கு வந்தவங்களை வாங்க என்றுக் கூப்பிடணும் தானே..” என்றுத் திட்டினார்.

அதைக் கேட்ட மீரா “பாட்டி! என்ன நீயும் வேற மாதிரி பேசுகிறே…! நீ வரச் சொல்லித் தானே நான் ஃபோன் போட்டு கொடுத்தேன்.” என்றாள். கார்த்திக் “வாவ் பாட்டியும் பேத்தியும் மாறி மாறி எங்களைப் பார்க்க ஆசைப்படறீங்க என்று நினைக்கும் போது சந்தோஷமாக தான் இருக்கு..” என்று அவர்களின் வாக்கு வாதத்தை முடித்து வைத்தான்.

தனக்கு சூப்பை எடுத்துக் கொண்டு அமர்ந்த மீராவிடம் தனலட்சுமி “பிளம்பருக்கு ஃபோன் போட்டியா..?” என்றுக் கேட்டார்.

மீரா “அச்சோ மறந்துட்டேன்.” என்று நாக்கை கடித்தாள்.

கார்த்திக் “ஏன் என்னாச்சு ஆன்ட்டி? எதாவது லிக்கேஜ்ஜா?” என்றுக் கேட்டான்.

தனலட்சுமி “ஆமா கார்த்தி..! பாத்ரூம் பைப்பில் கொஞ்சம் லீக் ஆகிறது. அதைச் சரி செய்யத்தான்..” என்றார்.

ஆதித்யா “வீட்டில் ஸ்டூல்ஸ் கிட் இருக்கா..?” என்றுக் கேட்டான்.

தனலட்சுமி “இருக்குப்பா..! அதை வைத்த இவங்களே சரிச் செய்கிறேன் என்ற பேர்வழிக்கு.. அக்காவும் தம்பியும் சேர்ந்து எதோ செய்து, ட்ரப்ஸா லீக் ஆகிட்டு இருந்ததை.. நன்றாகவே லீக் செய்ய வைச்சுட்டாங்க..” என்று அவர் பெற்ற மக்களை திட்டினார்.

ஆதித்யா “நான் சரிச் செய்கிறேன்..! எங்கே லீக்கேஜ்? என்று எழுந்தான்.

தனலட்சுமி “மீரா.. அவரைக் கூட்டிட்டு போய் காட்டு..” என்றார்.

ஆதித்யா மீரா இருவரும் அதைக் கேட்டு அதிர்ந்தனர்.

மீரா “நானா..!” என்று இழுத்தாள்.

அதைக் கேட்ட தனலட்சுமி “உன் ரூமில் தானே பிராப்பளம் அப்போ நீதானே போகணும். ஆதித்யாவை நிற்க வைச்சுட்டு இதென்ன கேள்வி! திஸ் இஸ் எ வெரி பேட் மேனர் மீரா..” என்றுக் கடிந்துக் கொள்ளவும், ஆதித்யாவை பார்த்தவாறு எழுந்தாள்.

ஆதித்யாவிற்கோ ஏன் செய்துத் தருகிறேன் என்று ஒத்துக் கொண்டேனோ என்று இருந்தது, பேசாமல் அமர்ந்து விடலாம் என்று நினைத்தான். ஆனால் ஒத்துக் கொண்டதால் வேறு வழியில்லாமல் பின்னே சென்றான்.

மீராவின் அறைக்கு செல்லும் வரை இருவரிடமும் பேச்சியில்லை. குளியலறையில் ஒழுகி கொண்டிருந்த குழாயை காட்டினாள். மீராவுடன் தனியாக வந்ததிற்கு முதலிலேயே எரிச்சலுடன் வந்த ஆதித்யா, மீரா குழாயை காட்டியதும், மூண்ட எரிச்சலில் “இதைச் செய்ய முடியாதா..” என்றான்.

சட்டென்று மூண்ட கோபத்துடன் “அதுதானே..! நானே செய்துக்கிறேன். நீங்க போகலாம்.” என்று அவனிடம் இருந்து ஸ்பெனரை வாங்கி.. திருகினாள். தவறுதலான பக்கத்தில் திருகவும், அதிகமாக கழன்று நீர் பிச்சியடித்தது. திடுமென நீர் பிச்சியடித்து அவள் மேல் பட்ட வேகத்தில் மீரா கத்தினாள். அவள் தவறுதலான பக்கத்தில் திருப்புவதைத் தடுக்காமல் நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா.. மீரா கத்தவும், அவளிடத்தில் இருந்து ஸ்பெனரை பிடுங்கி சரியான பக்கத்தில் திருப்பினான்.

மீரா அருகில் நின்றுக் கொண்டு முகத்தில் பட்ட நீரைத் துடைத்தவாறு “நான் எதாவது ஹெல்ப் செய்யட்டுமா..” என்றுக் கேட்டாள். இறுக்கமாக திருப்பிக் கொண்டிருந்த ஆதித்யா.. தன் கவனத்தை அதில் இருந்து திருப்பாது, “இங்கே இருந்து போ அது போதும்..” என்றுக் கடிந்தான்.

உடனே மீரா கோபத்தில் வெடுக்கென்று முகத்தைத் திருப்பி விட்டு குளியலறையில் இருந்து வெளியே சென்றாள். சிறிது அளவு நீர் கூட சொட்டு போடாதவாறு சரி செய்துவிட்டு ஆதித்யா வெளியே வந்த போது.. அவன் வெளியே செல்வதற்காக சாத்தியிருந்த கதவின் உள் தாழ்பாளைத் திறந்துவிட்ட மீரா, பின் ஈரமான கூந்தலைத் துவட்டினாள். அவளைப் பொருட்டாக எடுத்துக் கொள்ளாது வெளியே செல்ல முயன்றவனுக்கு ஏதோ ஒன்று மாறுதல் தெரியவும், திரும்பி நன்றாக அவளைப் பார்த்தான்.

அவனுடன் வரும்பொழுது வெள்ளை நிறத்தில் டீசர்ட் அணிந்திருந்தாள். தற்பொழுது ஊதா நிற டீசர்ட் அணிந்திருந்தாள்.

ஆதித்யா “இப்போ இங்கே ட்ரஸ் சேன்ஜ் செய்தியா..?” என்றுக் கேட்டான்.

என்ன கேள்வி இது என்பது போல் பார்த்த மீரா “ஆமாம்..! ஆனால் ஒரு பெண் கிட்ட என்ன கேட்கணும் என்ற மேனர்ஸ் கூடத் தெரியாதா..” என்று முறைத்தவாறுக் கேட்டாள்.

அதைக் கேட்ட ஆதித்யா “அடிச்சேன்று வை..” என்று கையை ஓங்கிக் கொண்டு வந்தான். தோளைக் குறுக்கிக் கொண்டு அவனைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து “ச்சே..” என்று உயர்த்திய கையை இறக்கியவன், “உனக்கு அறிவு என்பதே இல்லையா..! இல்லை தெரிந்து தான் செய்தியா..! பாத்ரூம் கதவைத் திறந்து வைச்சுட்டு நான் அங்கே இருக்கும் போது இங்கே கதவைச் சாத்திட்டு நீ ட்ரஸ் சேன்ஜ் செய்திருக்கிறே..! இதற்கு என்ன மீனிங்..” என்று கனலைக் கண்களில் கக்கியபடி கேட்டான்.

ஆதித்யா பேசியதைக் கேட்ட மீராவிற்கு திக்கென்று இருந்தது. அவன் குளியலறையில் இருக்கிறான் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் எந்த வித தயக்கமும் இல்லாமல்.. அவன் வருவதற்குள் உடை மாற்றி விட வேண்டும் என்று மட்டும் எவ்வாறு நினைத்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் ஆதித்யா அதைச் சுட்டிக்காட்டி தவறுதலாக அவள் மீது குற்றச்சாட்டு வைக்கவும், கொதித்தெழுந்தாள்.

“நிறுத்து..! எப்பவும் தப்பாக தான் நினைப்பியா..! நீ நினைக்கிற மாதிரி உன்னை மயக்குவதற்காக நான் இந்த மாதிரி செய்யலை. இதற்கு பேர் நம்பிக்கை! நீ வேலை செய்துட்டு இருந்தே.. நீ செய்து முடிப்பதற்குள் இந்த க்ளைமேட்டில் ஈர உடையுடன் நின்று உடம்பை கெடுத்துக் கொள்வதற்கு மாற்றி விடலாம் என்று ப்யுர் ஹார்ட்டுடன் நினைத்து செய்ததை இப்படித் தவறா நினைப்பேன்னு நினைச்சு பார்க்கலை.” என்று கோபத்தில் பெருமூச்சுகளை இழுத்துவிட்டவாறு பொருமினாள்.

அதைக் கேட்ட ஆதித்யா நெற்றியில் அறைந்துக் கொண்டான்.

பின் “இடியட்..! என் மேல் ஏன் இப்படியொரு நம்பிக்கை வந்தது என்றுத்தான் கேட்டேன். நீ என் மேல் நம்பிக்கையில்லாமல் பாத்ரூம் கதவை லாக் போட்டிருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பேன். ஏன் இதற்கு கோபப்படுகிறேன் என்றுக் கேட்காதே..! ஏனென்றால் இந்த நம்பிக்கை உனக்கு கார்த்திக்கின் மேல் இல்லை. அதனால் தான்.. என்னையும் கூடச் சேர்த்துட்டு ஊர் சுற்ற வருகிறே! அவனைத் தொட்டு பேச கூட நீ அலோவ் செய்யறதில்லை. ஆனால் என்கிட்ட நீ விலகின மாதிரி தெரியலை. என் மேல் நம்பிக்கை வைக்கிறேன்னு சொல்கிறே..! சொல்லு.. கார்த்திக்கின் லவ்வர்க்கு என்மேல் எதற்கு இத்தனை நம்பிக்கை, ஈர்ப்பு..” என்று கோபம் குறையாமல் கேட்க மீரா ஸ்தம்பித்து நின்றாள்.

ஆதித்யா தொடர்ந்து அவளுக்கே அறியாத அவளது உள்ளுணர்வு எண்ணங்களை வெளிச்சம் போட்டு காட்டினான்.

மாற்றானின் மங்கை என்று உன் மேல் வெறுப்பில்லை..!

மாற்றானின் மங்கையாக நீயில்லை என்று வெறுக்கிறேன்..!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6


ஆதித்யா “கார்த்திக் கூட நீ இருக்கும் பொழுது மட்டுமில்லை, எப்பவும் உன் அட்டேன்ஷன் என் மேலே தான் இருந்திருக்கு..! அதற்கு நீ என்னை வெறுப்பா பார்த்தேன், முறைத்தேன், கோபமா திட்டிட்டு இருந்தேன்னு பெயர் வச்சுக்கிட்டே..!” என்று இறுகிய குரலில் கூறினான்.

அதைக் கேட்ட மீரா திக்கி திணறிய குரலில் “அப்படியெல்லாம் இல்லை..” என்றாள்.

அதற்கு ஆதித்யா “ஐ ஹோப் சோ..! ஆனால் நான் ஒன்றும் முட்டாளில்லை, ஒன்றுமில்லாததை சொல்வதற்கு உன்கிட்ட உணர்வதைத் தான் சொல்கிறேன். இதுவரை நடந்ததை நன்றாக யோசித்துப் பாரு…! அப்பறமாவது புரிகிறதா என்றுப் பார்க்கலாம். என் பிரெண்ட்டோட லவ்வர் என்கிட்ட இந்த மாதிரி பிஹேவ் செய்கிற பொழுது எனக்கு எப்படி எரிந்தது தெரியுமா! ஆனாலும் நான் உணர்வதெல்லாம் தப்பாக இருக்கட்டும் என்று என்னை நானே திட்டிக்கிட்டேன். ஆனால் ஒவ்வொரு முறையும்.. நான் நினைக்கிறது சரிதான் என்று நீ நிரூபித்தே..! நானும் உன்னைத் திட்டி உன்னை எச்சரிக்கை செய்தால்.. நீ அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கலை.” என்றவன், முகத்தைத் திருப்பி மூச்சை இழுத்துவிட்டு தன் கோபத்தை அடக்கி கொண்டான்.

பின் அவளின் புறம் திரும்பியவன், குரலில் நிதானத்தை வரவழைத்துக் கொண்டு “இப்போ சொல்லு..! கார்த்திக்கை லவ் செய்கிறேன் என்று இன்னும் பொய் சொல்லிட்டு எல்லாரையும் ஏமாற்றப் போகிறாயா.. இல்லையென்றால் எல்லாருடைய விருப்பத்தை ஏற்று, அவனை லவ் செய்து அதற்கு ஹானஸ்டா இருக்க போகிறாயா..! என்னைக் கேட்டால் அவன் பெஸ்ட் மேன், அவனை மேரேஜ் செய்துக்க போகிறவள், லக்கி கேர்ள்..! அந்த பெண்ணாக நீ இரு..! நீ அப்படியிருக்காதது பார்த்து தான் எனக்கு கோபமா வந்துச்சு..! அப்பறம் இன்னொரு விசயம் என் மேல் இருக்கிற க்ரஷ், அட்டெரக்க்ஷன் ஆர் வாட் எவர் அது மட்டும் நடக்காது. நோ யுஸ்..! அதை மட்டும் விட்டுவிடு..” என்றுவிட்டு அறையில் இருந்து வெளியேறினான்.

மீரா ஆதித்யா பேசியதைக் கேட்டு திக்கித்தவளாய் நின்றிருந்தாள். ஆதித்யா சொல்வதை அவளால் நம்ப முடியவில்லை. அவன் கூறிய விசயங்கள் அவளது மூளையில் நர்த்தனம் ஆடியது. அவனைப் பொருத்தவரை சொன்ன விசயங்களை நினைத்துப் பார்த்தவளுக்கு மீண்டும் நெஞ்சில் திக்கென்ற உணர்வு அடிவயிற்றில் தோன்றவும்.. அதற்கு மேல் யோசிக்க பயந்தவளாய் அறையில் இருந்து வெளியேறினாள். அங்கு இருப்பார்களே என்று தயக்கத்துடன் ஹாலுக்கு சென்றவள், ஆனால் அங்கு அவர்களை காணாது திகைத்தாள். அவளது பாட்டி மட்டும் இருப்பதைப் பார்த்தவள், அவரிடம் ஆதித்யாவும், கார்த்திக்கிற்கும் எங்கே என்றுக் கேட்டாள். அவளை வித்தியாசமாக பார்த்தவர், ஆதித்யா கார்த்திக்கிடம் தனக்கு வேலைக்கு இருப்பதாகவும்.. தான் முதலில் செல்வதாக கூறவும்.. அதற்கு கார்த்திக் தானும் வருகிறேன் என்று அவர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு ஆதித்யாவுடன் சென்றதாக கூறினார்.

மீரா மனதிற்குள் பொருமினாள்.

அவளிடம் அத்தனையும் சொன்னவன், அப்பொழுதே அங்கிருந்து செல்வதையும் சொல்லிவிட்டு சென்றால் என்னவாம், அவன் இங்கே இருக்கிறான் என்றுத்தானே அவள் இங்கு தயங்கியபடி வந்தாள்.

அப்பொழுது அவளது முகத்தைப் பார்த்த அவளது பரிமளம் “ஏன்டா முகம் வாடிருச்சு..! கார்த்திக் உன்கிட்ட சொல்லாமல் போயிட்டானா..! ரொம்ப எதிர்பார்க்காதே மீரா, ஆனால் அன்பை மட்டும் கொடு.. அப்பறம் பாரு, அவங்க உன்னைப் பார்ப்பதைப் பார்த்துக் கூட அவ்வளவு சந்தோஷப்படுவாய்..” என்று அவளுக்கு புத்தி சொல்லிக் கொண்டிருந்தார்.

மீராவிற்கோ கார்த்திக்கா..! அவள் ஆதித்யாவை பற்றியெல்லவா நினைத்துக் கொண்டிருந்தாள்.. என்று அதிர்ச்சியடைந்தாள்.

பரிமளம் பேத்தியின் முகத்தைப் பார்த்து பயந்தவராய்.. “ஏன்டி பேயறைஞ்ச மாதிரி முகத்தை வைத்திருக்கிற.. என்னாச்சு..?” என்றுக் கேட்கவும், “ஒன்றுமில்லை பாட்டி..” என்று நெளிந்தாள். பரிமளம் “என்னவோ போ..! அந்த ஆதித்யா பையன் கொஞ்சம் முரடு போல.. ஒட்டவே மாட்டேன்கிறான். ஆனால் அவன் கூடத்தான் இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம் என்றுத் தோன்றுகிறது. அவனுக்கு என்று ஒரு பெண் வரும் பொழுது.. எல்லாம் சரியாகிடும் என்றுத் தோன்றுகிறது.” என்று அவர் ஆதித்யாவை பற்றி பேசிய பொழுது.. அவளையும் அறியாமல் சில்லென்ற ஐஸ்கட்டியை மனதில் ஏற்றியதைப் போன்ற உணர்வு ஏற்பட திகைத்தவளாய் நின்றுவிட்டாள். அவளது முகத்தைப் பார்த்த பரிமளம் எழுந்தே விட்டார்.

“என்னடி ஆச்சு! சொல்லி தொலை.. இப்படி நொடிக்கு ஒரு பாவனை காட்டுக்கிறே..?” என்று பதட்டத்துடன் அவளைப் பிடித்து உலுக்கினார். அவரது உலுக்கலில் சுயநிலை அடைந்த மீரா “ஒன்றுமில்லை பாட்டி..” என்றுவிட்டு தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

படுக்கையில் விழுந்தவளின் இதயம் இரயிலின் வேகத்தை விட வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. ஆதித்யா கூறியதை எல்லாம் மீண்டும் நினைவு கூர்ந்தாள்.

அவள் கார்த்திக்கை காதலிக்கிறாளா என்று அவளது மனதை ஆராய்ந்தாள். அவளின் பிறந்தநாள் அன்று தனது வீட்டினருடன் சந்திக்க வைத்து, அவர்களுக்கு அவனிடம் நல்ல அபிப்பிராயம் தோன்றினால் மட்டுமே கார்த்திக்கிடம் அவளது உணர்வுகளை வெளிப்படையாக சொல்லலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் அதற்குள் ஆதித்யா கார்த்திக்கை அவளது காதலன் என்று அறிமுகப்படுத்தியதும் அவளுக்கு கோபமும் அதிர்ச்சியும் ஏன் வந்தது? அன்று அவளே சொல்லியிருக்க வேண்டிய விசயத்தை ஆதித்யா சொல்லிவிட்டதால் வந்த கோபம் என்று அவள் நினைத்திருந்தாள். இன்று ஆராய்ந்த போது அவளுக்கு கோபத்தை விட என்னது காதலனா என்ற அதிர்ச்சி தான் வந்தது, அதுவும் ஆதித்யாவிடம் இருந்து அந்த வார்த்தைகள் வந்ததால் தான் கோபமுற்றாள் என்றுப் புரிந்தது. தற்பொழுது ஆதித்யாவின் லவ்வர் என்ற பாட்டியின் பேச்சைக் கேட்டு ஆதித்யாவின் காதலியாக அவளது முகம் ஏன் வர வேண்டும்! தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்து விட்டாள்.

அதன் பின் கார்த்திக்கை பார்க்கும் பொழுது அவளது நிலையை நினைத்துப் பார்த்தாள். அதுவரை நண்பனாக எளிதாக பழக முடிந்த அவளால்.. காதலனாக அவனுடன் பழகுவதற்கு எளிதாக முடியவில்லை. அவனிடம் முன்போலும் சிரித்து பேச பழக முடிவதில்லை. அது காதலின் தடுமாற்றம் என்று நினைத்திருந்தாள், ஆனால் அது அந்த காதலே தந்த தடுமாற்றம் என்று தற்பொழுது புரிந்தது.

நண்பனாக கார்த்திக்கை பார்ப்பது வேறு, காதலன் என்றால் வேறாகிற்றே..! அவ்வாறு பழகுவானோ என்ற பயம் கூட அவளுக்கு தோன்றியது. ஆதித்யா கூறியது முற்றிலும் உண்மை அதனாலேயே ஆதித்யா அவர்களுடன் வரவில்லை என்றுச் சொன்ன போதெல்லாம் அவனிடம் வாதம் செய்து அவர்களுடன் தக்க வைத்தாள். ஆதித்யாவிடம் பாதுகாப்பைத் தேடியிருக்கிறாள். இதற்கு என்ன அர்த்தம்..! என்று மீண்டும் விழித்தாள். இன்னும் கார்த்திக் பற்றிய நினைவு அவளுக்கு வர மாட்டேன்கிறதே..! தலையைப் பிடித்துக் கொண்டவள், ஆதித்யா அடுத்து சொன்னதை நினைத்துப் பார்த்தாள்.

அவள் முதலில் எதிர்பார்த்தது போல் அவளது குடும்பத்துடன் கார்த்திக் இணக்கமாகி விட்டான். அவனது குடும்பத்திற்கு பிடித்தமானவன் ஆகிவிட்டான். அந்த காரணத்திற்காக கார்த்திக்கிடம் அவளுக்கு பிடிப்பு ஏற்பட்டு விட்டதா? கார்த்திக்கிடம் இன்னும் காதலை உணரவில்லை என்றாலும் அவளால் கார்த்திக்குடன் தனது வாழ்வை பிணைத்துக் கொள்ள முடியுமா..? அவளது கேள்விக்கு அவளுக்கு பதில் தெரியவில்லை. அடுத்து ஆதித்யா சொல்லியதை நினைத்துப் பார்த்தவளுக்கு நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவனின் மீது அவளுக்கு ஈர்ப்பு உண்டா..! எவ்வாறு இது சாத்தியமாகியது?

அவர்களின் முதல் சந்திப்பு ஒன்றும் அவ்வளவு உவப்பானதில்லை. அதன் பின் நடந்த சந்திப்பிலோ.. அவளைக் கோபப்படுத்தியிருக்கிறான். அது மட்டுமல்லாது அவர்களின் ஒவ்வொரு சந்திப்பிலும் வாக்குவாதமே செய்திருக்கிறார்கள். இதில் அவன் சொல்லியவை எப்படி சாத்தியம்? ஆனாலும் அவன் கூறியதையும் அவளால் மறுக்க முடியவில்லை. ஆனால் அதற்கு அவன் சொன்ன காரணமான ஈர்ப்பை தான் அவளால் நம்ப முடியவில்லை.

அவளது பிறந்தநாள் அன்று.. கார்த்திக் மட்டும் வந்திருக்க.. ஆதித்யா வராதிருக்கவும், அவள் சென்று அழைத்தாள், அதன் பின் பனிபொழிவு பெய்த வேளையில் குளிர் தாங்க மாட்டான் என்று அவள் வருந்தி அழைத்து வந்தாள். பின் ஆதித்யா செய்த செயலால் கோபம் கொண்டாலும் அடுத்த நாள்.. ஏதோ அவளுடன் வருவதை பிடிக்காதவன் போல் பேசியவனிடம் கார்த்திக்கிற்காக நட்பை கேட்டாள். பின்பு கூட அவளை கார்த்திக்குடன் தனியாக விட்டுச் சென்ற போது அவள் அவன் எங்கே செல்கிறான் என்றுப் பார்த்ததிற்கு இப்படியொரு அர்த்தம் இருக்கும் என்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் தான் ஏன் பார்த்தேன் என்று அவளுக்கு உண்மையில் தெரியவில்லை. பின்பு அவள் மேல் அவன் குற்றம் சொன்ன பொழுது கூட அவன் தன்னைத் தொந்திரவாக கருதுகிறான் என்று விலக தான் நினைத்தாள். மேலும் அவன் கூறிய நம்பிக்கை, ஈர்ப்பு போன்றவற்றிற்கு பெயர் காதல் என்று அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. ஏனெனில் அவனை போன்ற ஒரு ஆளுடன் அவள் பழக்கம் கூட வைத்துக் கொள்ள தயங்குவாள். ஒருவேளை அவன் தவறாக நினைத்துக் கொண்டு கூறுகிறானோ..! என்று மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நின்றாள். அப்பொழுது அவளது பாட்டி சொன்னது நினைவு வந்தது,

‘முரடனாக தெரிகிறான்.. ஒதுக்கி போகிறான்.. ஆனால் அவனிடம் தான் பேச வேண்டும் என்றுத் தோன்றுகிறது.’

அதை நினைத்துப் பார்த்ததும்.. ஒருவேளை அவளைப் பிடிக்கவில்லை, வெறுக்கிறேன் என்று ஒதுக்கம் காட்டியவனின் மேல் பிடித்தம் ஏற்பட்டதோ.. என்று அவள் மீண்டும் மனம் தடுமாறினாள். அப்படியென்றால் கார்த்திக்கிடம் அவள் கொண்ட காதல் பொய்யா..! பொய் எனில் ஆரம்பத்திலேயே ஆதித்யா சரியாக தான் கணித்திருக்கிறானா..? எவ்வாறு அவன் அறிந்தான்? அவளது இயல்பான நடவடிக்கையில் எதில் அவன் மீதான காதலைக் கண்டான்? அவனுடான அவளது இயல்பான நடவடிக்கைக்கு பெயர் தான் காதலோ? என்று பலவாறு குழம்பினாள்.

எல்லாவற்றிக்கும் தீர்வு வேண்டுமெனில் கார்த்திக்குடன் நாளைத் தனியாக சந்தித்து பேச வேண்டும் என்றுத் தீர்மானம் செய்த பின்பே அவளால் அமைதியாக இருக்க முடிந்தது.

அடுத்த நாள் கார்த்திக்கிற்கு அழைப்பு விடுக்கவே தயங்கினாள். அவனைச் சந்தித்து அவளது சந்தேகங்கள் மட்டுமின்றி.. சில நேரடிக் கேள்விகளையும் அவள் கேட்க வேண்டியிருந்தது. கார்த்திக் அவளை மனமாற காதலித்திருந்தால்.. அவளின் நிலை மிகவும் கடினமாக இருந்துவிடும். எனவே பல மணி நேரப் போராட்டத்திற்கு பின் மதியவேளையில் கார்த்திக்கிற்கு அழைப்பு விடுத்தாள்.

அவள் அழைத்தவுடனே ஏற்ற கார்த்திக் “ஹாய் மீரா!” என்றான்.

மீரா தயக்கத்துடன் “கார்த்திக் நாம் மீட் செய்யலாமா..” என்றுக் கேட்டாள்.

கார்த்திக் “சுயர் மீரா! அப்பறம் ரொம்ப ஸாரி! நேற்று உன்கிட்ட சொல்லாமலே கிளம்பிட்டோம்..” என்றுக் குற்ற குறுகுறுப்புடன் மன்னிப்பு கேட்டான்.

ஆதித்யா கிளம்புகிறேன் என்றுச் சொன்னதும் அவனைப் பார்த்த கார்த்திக்கிற்கு திக்கென்று இருந்தது. இறுகிய சிலையைப் போன்று இருந்தான். அவனைத் தனியாக அனுப்ப கார்த்திக்கிற்கு மனமில்லை. எனவே அவனும் விடைப்பெற்றுக் கொண்டு சென்றான். அந்த காரணத்தை மீராவிடம் சொல்ல தயங்கினான்.

ஏற்கனவே கார்த்திக்கிடம் அவள் மன்னிப்பு கேட்கலாம் என்றிருந்த போது அவன் மன்னிப்பு கேட்கவும் மீராவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“இல்லை பரவாலை, என் தப்பு தான்..! நான்தான் ஸாரி கேட்கணும்.” என்று உளறியவள், பின் நாக்கை கடித்துக் கொண்டு “கார்த்திக்! நான் உங்க கூடத் தனியாக பேசணும்..” என்றுத் தயக்கத்துடன் சொன்னாள்.

அதற்கு கார்த்திக் “நான் என் ரூமில் தான் இருக்கிறேன் மீரா! ஆதித்யா காலையிலேயே ஃபோன் போட்டு..! கொஞ்சம் டையர்டா இருக்கு..! அதனால் ரூமிலேயே ரெஸ்ட் எடுக்கிறேன்னு சொன்னான், எனக்கு மனசு கேட்காமல் போய் பார்த்துட்டு வந்தேன். சோ இப்போ நான் மட்டும் தான் இருக்கிறேன்.” என்றான்.

ஆதித்யாவின் உடல்நிலைப் பற்றி விசாரிக்க எழுந்த வார்த்தையை முழுங்கிவிட்டு “அங்கே பக்கத்தில் இருக்கிற.. பார்க்கில் மீட் செய்யலாமா” என்றுக் கேட்கவும், “காத்திருக்கிறேன்…” என்றான். அடுத்த அரைமணி நேரத்தில் மீரா அங்கிருந்தாள்.

சிறு மேசை ஒன்று நடுவில் இருக்க.. எதிர் எதிர் இருக்கையில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். மீரா எப்படித் தொடங்குவது என்றுத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் பொருந்துப் பார்த்த கார்த்திக் “என்ன விசயம் மீரா?” என்று அவனே கேட்டான்.

கார்த்திக் கேட்ட பிறகும் சிறிது திணறியவள் பின் “நீங்க என்னை லவ் செய்யறீங்களா கார்த்தி..?” என்று பட்டென்றுக் கேட்டாள்.

கார்த்திக் ஒரு நிமிடம் அவளது கேள்வியில் திகைத்துத் தான் போனான். பின் சிரித்தவாறு “இதென்ன கேள்வி மீரா..! நாம் காதலிக்கிறோம் தானே..” என்றான்.

மீரா “கார்த்திக் ப்ளீஸ் ஓப்பனாக சொல்லுங்க..! நீங்க என்னை லவ் செய்யறீங்களா..?” என்கவும், கார்த்திக் “அஃப்கோர்ஸ் மீரா! யு ஆர் எ அமைஸிங் கேர்ள்! உன்னை காதலிக்க தான் ஆசைப்படுகிறேன். உனக்கு சந்தேகமே வேண்டாம். உன்னை லவ் செய்ய ஆரம்பிச்சுட்டா நான் உன்னை விட மாட்டேன்.” என்றான்.

மீரா “என்ன கார்த்தி எல்லாம் ப்யுச்சர் டென்ஸிலேயே சொல்லறீங்க..” என்றவள் தொடர்ந்து “நான் உன்னை லவ் செய்கிறேனா?” என்று அடுத்துக் கேட்டாள்.

அதைக் கேட்ட கார்த்திக் சிரித்தவாறு “என்னாச்சு மீரா?” என்றுக் கேட்டான். ஆனால் மீரா பதிலுக்காக அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து.. “ஒகே மீரா! ஓப்பனாக சொல்கிறேன். இரண்டு பேருக்கும் இது பொருந்தும், எஸ் நமக்குள்ள சின்ன அட்ரெக்க்ஷன் இருந்தது. ஆனால் நம்மை லவ்வர் என்று இன்டர்டூஸ் செய்த பிறகோ அந்த ஃபீல் குறைந்த மாதிரி இருக்கு..! ஆனால் நம் நாட்டில் எத்தனையோ மேரேஜ் அரென்ஜ்டு மேரேஜ்ஜாக தான் இருந்திருக்கு..! அவங்க லைஃப் நல்லபடியாக தான் அமைந்திருக்கு..! நாம் ஒன்றும் மோசமாக மிஸ்அன்டர்ஸ்டென்டிங் இருக்கிறவங்க இல்லையே! சோ நம்ம லைஃப் நல்லபடியாக தான் இருக்கும்.” என்று முறுவலித்தான்.

மீரா “இதில் ஹன்டர்பர்ஷென்டேஜ் கான்பிடன்டா இருக்கியா கார்த்திக்..?” என்றுக் கேட்டாள். அதற்கு அவளை நேராக பார்த்து “என் நம்பிக்கையின் அளவு உன்னைப் பொருத்து இருக்கு மீரா..” என்றான்.

மீரா “எனக்கு நம்பிக்கை தருவேன்னு பார்த்தால்.. நீ என்னை மாட்டிவிடுகிறே!” என்கவும், நன்றாக சிரித்த கார்த்திக் “மீரா.. பிரான்கா சொல்ல வேண்டும் என்றால் என்னால் உன்னை லவ்வராக பார்க்க முடியலை. ஆனால் உன் பேமலி மெம்பர்ஸிற்கு என்னைப் பிடித்திருக்கு, நமக்கு ஒகே சொன்ன போதுதான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். சொல்ல போனால் கமிட்மென்ட் மாதிரி ஆகிருச்சு..! அது எனக்கு ஒகே தான்..! ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பை பரிமாறுவது தானே காதல்.. அதுதான் உன்கிட்ட இருந்து கிடைக்கும் போது தானாக நடக்கும் என்று நினைத்தேன். அப்போ மாறுவேன்னு நினைத்தேன். ஆதித்யா கூட அடிக்கடி கிண்டல் செய்வான். லவ் செய்கிற முகம் மாதிரியே இல்லைன்னு..!” என்றுச் சிரித்தவன்,

தொடர்ந்து “நம்ம லவ் லைஃப்பை பற்றி உன் நம்பிக்கை ஆட்டம் கழன்று விடும் அளவிற்கு என்ன நடந்தது மீரா? விருப்பப்பட்டால் சொல்லு..! இன்னொரு விசயத்தை கிளியர் செய்து விடுகிறேன். நான் முதலில் சொன்னது தான் என் நம்பிக்கை உன்னைப் பொருத்து இருக்கிறதுதான்.. அதற்கு நம்பிக்கையை நீ தந்தே ஆக வேண்டும் என்று கட்டுப்படுத்தவில்லை, கட்டாயமும் படுத்தவில்லை.. அந்த நம்பிக்கை இப்போ நீ தரவில்லை என்றால் அதற்கு பெயர் துரோகமும் இல்லை! சரியான நேரத்தில் வந்த தெளிவு..!” என்றான்.

கார்த்திக்கின் வார்த்தைகளைக் கேட்ட மீராவின் மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரம் அகன்றது போல் நிம்மதி ஏற்பட்டது.

சிறு பெருமூச்சை இழுத்துவிட்ட மீரா “தேங்க்ஸ் கார்த்திக்! நான் கொஞ்சம் குழப்பத்துடன் வந்தேன். என் குழப்பம் தப்பா சரியா என்பதன் பெரிய குழப்பமா இருந்தது. அது சரிதான் என்றுச் சொல்லி எனக்கு நிம்மதியைத் தந்துட்டே..! இப்போ அந்த குழப்பத்தை நானே தீர்த்து வைக்கிறேன். நான் உனக்கு சரியான ஃபேர் இல்லை. ஒரு பிரெண்டா ஈஸியாக பழகிட்ட என்னால்.. லவ்வர் என்ற ஸ்டேஜ்ஜிற்கு போக முடியலை. உன்னாலும் போக முடியாததிற்கு ரிஷன் நான்தான்..! ஏனென்றால் என்கிட்ட உனக்கான லவ் கிடைக்கலை. ஏனென்றால்..” என்றுவிட்டு நிறுத்தியவள், உதட்டைக் கடித்துக் கொண்டு தலைகுனிந்தாள்.

பின் நிமிர்ந்து “அதை க்ளாரிஃபை செய்துட்டு சொல்கிறேனே..!” என்றவள், தொடர்ந்து “என் மேலே உனக்கு கோபம் வருத்தம் இல்லையே..!” என்றுச் சற்றுத் தயக்கத்துடன் கேட்டாள்.

உடனே கார்த்திக் “ச்சே..! ச்சே..! கண்டிப்பாக இல்லை. சொல்லப் போனால் முதலிலேயே புரிஞ்சுட்டு இந்த டிசைஸின் எடுத்ததிற்கு நான்தான் தேங்க்ஸ் சொல்லணும். இல்லையென்றால் இரண்டு பேரும் கமிட்மென்ட் லவ் தான் செய்திருப்போம். ஆக்சுவாலா… நான்தான் ரொம்ப கில்டியா ஃபீல் செய்துட்டு இருந்தேன். உன் மனசுல ஆசையை வளர்த்திட்டு.. உன்னை ஏமாற்றுகிறேனோ என்று இருந்தது. ஆனால் ஒருத்தருக்கு ஒருத்தர் திணறிட்டு இருந்துகிறோம். ஆனால் நாம் இன்னும் குட் பிரெண்ட்ஸ் தான் ஒகே..” என்று முறுவலித்தான்.

மீரா மகிழ்ச்சியுடன் ஆமாம் என்றுத் தலையை ஆட்டினாள்.

பின் கார்த்திக் அவளை நேராக பார்த்து “அந்த க்ளாரிஃபிகேஷன் ஆதித்யாவா..?” என்றுக் கேட்டான்.

மீரா திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.

கார்த்திக் மேலும் ஏதோ பேசும் முன் மீரா “ப்ளீஸ் வேறு ஒன்றும் கேட்காதே! நான் ஆதித்யா கூடப் பேசிட்டு மற்றதை முடிவு செய்யணும். இப்போ என்னால் தெளிவாக சொல்ல முடியாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.” என்றாள்.

கார்த்திக் முகத்தில் எதையும் காட்டாது.. “கண்டிப்பாக நீ தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்..” என்று மட்டும் சொன்னான். அந்த வேளையில் கார்த்திக்கின் செல்பேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். ஆதித்யா தான் அழைத்திருந்தான். மீராவை பார்த்தவாறு அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

“சொல்லு ஆதி..” என்கவும், சாய்ந்தமர்ந்திருந்த மீரா நிமிர்ந்து அமர்ந்தாள்.

அந்த பக்கம் என்ன சொன்னானோ.. “அங்கேயே இரு.. வருகிறேன் ஆதி..” என்றான்.

தன்னைக் கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த மீராவிடம் “ஆதித்யா பெக்கம் சிட்டியில் இருக்கிறானாம் என்னை வந்து பிக்கப் செய்துக் கொள்ள சொன்னான்.” என்றான்.

உடனே மீரா “நான் போகிறேன்..! ஆதித்யாவின் நம்பர் கொடு..” என்று அவனது செல்பேசி எண்ணை வாங்கிக் கொண்டவள், பெக்கம் நகரில் எங்கே இருக்கிறான் என்பதையும் கேட்டுவிட்டு எழுந்து சென்றாள். எழுந்துச் சென்றவளைப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கின் முகத்தில் மகிழ்ச்சியும் வருத்தமும் ஒருங்கே தோன்றியது. அந்த வருத்தம் நிச்சயம் மீராவை வாழ்க்கை துணையாக அடைய முடியவில்லை என்பதற்காக அல்ல..!

ஹம் நகரில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெக்கம் நகரை நோக்கி தன் காரை செலுத்திக் கொண்டிருந்த மீராவின் எண்ணம் முழுக்க ஆதித்யாவை தனியாக சந்திக்க எடுத்திருக்கும் முடிவு சரியா என்பது தான்..! எப்பொழுதுமே மீராவிற்கு ஹம் நகரைச் சுற்றி காரில் பயணிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். சாலையின் இருமருங்கிலும் தெரிந்த இயற்கைக் காட்சிகளை இரசித்தபடி செல்வாள். தற்பொழுது உறைப்பனிக் காலத்தின் காரணமாக சுற்றிலும் தெரிந்த காட்சிகள் சட்டமிட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் இயற்கைக் காட்சி படங்களைப் போன்று இருந்தது. எதையும் கவனிக்கும் நிலையில் மீரா இல்லை.

கால்மணி நேரத்தில் பெக்கம் நகரைச் சென்றடைந்த மீரா ஆதித்யா காத்திருப்பதாக சொன்ன லின்னின்ஸ்ட்ரேபெப் வீதிக்கு வந்தவளுக்கு அவன் எங்கே இருக்கிறான் என்றுத் தெரியவில்லை. எனவே அவனது எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

“ஹலோ..” என்று ஆதித்யாவின் குரல் கேட்கவும்.. மீரா “நான் மீரா பேசுகிறேன்.” என்றதும் ஆதித்யா அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

அதில் மீராவிற்கு கோபம் ஏற்பட்டது, ஆனால் அவளது குழப்பம் நீங்க அவனுடன் பேச வேண்டியது முக்கியம் என்பதால்.. தனது சுயமரியாதையை விட்டு.. மீண்டும் அவனுக்கு அழைப்பு நினைத்தவள், அவன் எடுக்க மாட்டான் என்றுத் தெரிந்து வாய்ஸ் மேசேஜ் அனுப்பினாள்.

“ஆதித்யா உனக்கு விருப்பம் இருக்கு என்றாலும், இல்லையென்றாலும் நான் உன் கிட்ட நான் பேசணும். இன்னொரு விசயமும் சொல்லி விடுகிறேன். கார்த்திக்கோட பிரெக்அப் செய்துட்டேன். எங்கே இருக்கே சொல்லு..” என்றுப் பேசி அனுப்பி வைத்தாள். அப்பொழுதும் அவனிடம் இருந்து பதில் இல்லாமல் போகவும் ‘கோழை..’ என்று அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.

அவள் அழைப்பை ஏற்றதும்.. ஒரு மதுபான விடுதியின் பெயரைச் சொல்லி.. அங்கு வரச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான். ஆதித்யா சொன்ன மதுபான விடுதியின் முன் முகச்சுளிப்புடன் மீரா சென்று நின்றாள். அவள் இதுவரை இதுப் போன்ற மதுபான விடுதிகளுக்கு சென்றதில்லை. அவளது ஜெர்மன் நண்பர்களும் அவளை இந்த மாதிரி இடத்திற்கு அழைத்ததில்லை. ஆனால் முதன் முறையாக ஒருவன் அழைக்க செல்கிறாள்.

வேண்டா வெறுப்புடன் உள்ளே சென்றவள், அங்கு ஆதித்யா எங்கே என்றுச் சுற்றிலும் பார்த்தாள். மூலை ஒன்றில் போடப்பட்டிருந்த மேசையில் அமர்ந்திருந்தான். சிறு பெருமூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு அங்கு சென்றாள்.

அவள் வந்ததைக் கவனியாமல்.. அங்கிருந்த கோப்பையில் மதுவை ஊற்றிக் கொண்டிருந்தான். அங்கு சென்றமர்ந்தவள்.. “நாம் வெளியே போய் பேசலாமா..” என்றுக் கேட்டாள்.

ஆதித்யா அவளை நிமிர்ந்து கூடப் பாராமல் “ஐயம் நாட் யட் பீனிஷ்டு..” என்றான். மீரா பற்களைக் கடித்துக் கொண்டு கோபத்தை அடக்கி கொண்டாள்.

ஆதித்யா “சோ கார்த்திக்கை கழற்றி விட்டுட்டுட்டே..” என்று அவனுக்கே உரிய நக்கலுடன் கேட்டான்.

உடனே மீரா “நிறுத்து! நீ கேட்பதைப் பார்த்தால்.. நான் கார்த்திக்கிற்கு துரோகம் செய்த மாதிரி இருக்கு..! உண்மை இதுதான் நாங்க இரண்டு பேரும் லவ் செய்யவே இல்லை. உன் மேல் அட்டென்ஷன் வந்ததால்.. என்னால் கார்த்திக்கை லவ் செய்ய முடியவில்லை என்பதெல்லாம் உண்மையில்லை. முதலில் இருந்தே லவ் எங்க கிட்ட தடுமாறியிருக்கு..” என்றாள்.

அதைக் கேட்டு உதட்டை வளைத்து சிரித்த ஆதித்யா “இதைத்தான் நான் அன்னைக்கே சொன்னேன்.” என்றான்.

மீரா “நீங்க இப்படி ஒன்றும் சொல்லவில்லை. என்னைப் பற்றித் தப்பாக சொன்னீங்க..” என்றாள். அதற்கு ஆதித்யா “சொன்னது தானே நடந்தது..” என்று மாறாத ஏளனத்துடன் சொன்னான்.

மீரா “அது மட்டுமில்லை… நான் இயல்பாக செய்ததை எல்லாம் சுட்டிக்காட்டி.. நான் உங்களை லவ் செய்வதாக சொல்லி குழப்பி விட்டுருக்கீங்க..! நான் எதோ உங்க பின்னாடி சுற்றுவது போல் பெருசா பேசியிருக்கீங்க…! ஏன் அப்படிச் சொன்னீங்க..” என்றாள்.

அவனோ கோப்பையின் விளிம்பை வருடியவாறு “நீதான் எனக்கு சொன்னே!” என்றான்.

அதைக் கேட்டு அதிர்ந்த மீரா “என்னது நானா..!” என்றாள்.

“ஆமாம்..” என்றுவிட்டு.. அதுவரை அவளைக் கவனியாது பேசிக் கொண்டிருந்தவன், நிமிர்ந்து அவளைப் பார்த்தான். மேசையில் கையை ஊன்றி அவனுடன் பேசிக் கொண்டிருந்த மீரா.. அவனது நேர்பார்வையில் தடுமாறி இருக்கையின் பின்னே சாய்ந்தாள். அதைப் பார்த்து இகழ்ச்சியாக சிரித்த ஆதித்யா “ஆமாம் நீதான் சொன்னே..! உன் கண்ணும் முகமும் நீ நினைப்பதைச் சரியாக சொல்லிவிடுகிறது.” என்றான்.

அதைக் கேட்டவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆதித்யா தொடர்ந்து “ஆனால் வாய் மட்டும் வேற பேசுகிறது..” என்றுச் சத்தமாக சிரித்தவன், மீதியிருந்த மதுவை கடகடவென ஒரே மூச்சில் குடித்து முடித்ததை கண்ணில் பீதியுடன் பார்த்தாள்.

ஆதித்யா “என்னை மாதிரியான ஆளை நீ பார்ப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். ஹம் ஐ ரைட்..!” என்று புருவத்தை உயர்த்தியவன், “நீ என்னை முதன் முதலாக பார்த்த போதே.. இன்டர்ஸ்டிங்கா தான் என்னைப் பார்த்தே, அப்பறம் உன் பர்த்டேக்கு வந்த போது முதலில் என்னைக் கூப்பிட வந்த போது உன் கண்களில் ஆர்வத்தைப் பார்த்தேன். அப்பறம் செகன்ட் டைம் வந்த போதோ இன்னும் அதிகமாக தெரிந்தது. கார்த்திக் உன்னை லவ் செய்கிற போது இது ரொம்ப தப்பு, அதனால் தான் உன் ஃபாதர் கிட்ட கார்த்திக்கை லவ்வர் என்றுச் சொல்லி உங்க இரண்டு பேரை லவ் கான்பார்ம் செய்ய நினைத்தேன். ஆனால் அதற்கு என்னைப் பார்த்து ஷாக் ஆனதும் நான் ரொம்ப அப்செட், அப்பறம் நீ கோபப்பட்டதும்.. நீ கார்த்திக்கை லவ் செய்யலை என்பது தெரிஞ்சுருச்சு..! நீ வீம்புக்கு கார்த்திக்கை உன் பேமலியிடம் உன் லவ்வர் என்று இன்டர்டுஸ் செய்ததைப் பார்த்து இன்னும் கோபம் வந்துச்சு, அதன் பிறகு அவனிடம் நீ காட்டுவது ஃபேக் ஸ்மைல், ஃபேக் லவ், ஃபேக் குளோஸ்..” என்றவனின் கண்களில் வெறுப்பு உமிழ்ந்தது.

பின் பேசியவனின் குரலில் இருந்த கனலில் மீரா அதிர்ந்து தான் போனாள்.

“அவன் கிட்ட லவ் என்றுச் சொல்லிட்டு என்னை சைட் அடிக்கிறவளை நான் என்னவென்றுச் சொல்வது..! உன் அட்டெஷன் என்கிட்டவே தான் இருக்கு, என்னைப் பற்றி நினைச்சுட்டே இருக்கிறே, போதாக்குறைக்கு என்னை வச்சுட்டு ட்ரஸ் சேன்ஜ் செய்கிறே..! இப்போ வந்து நான் என்ன செய்தேன்னு என்கிட்டவே கேட்கிறீயா..! இத்தோட நிறுத்திக்கோ..! ஏனென்றால் உன் ஃபீலிங்க்ஸிக்கு என்கிட்ட பதில் மட்டுமில்லை, ரியாக்க்ஷனும் கிடைக்காது. அட்லீஸ்ட் கார்த்திக்கிடம் உண்மையை ஒத்துக்கிட்டு விலகிட்டியே அதற்கு பிக் தேங்க்ஸ்..! அவ்வளவுத்தான் பை..” என்றுத் தள்ளாடியபடி எழுந்தான்.

ஆதித்யா எழுந்ததும் மீரா நெற்றியை கையில் தாங்கியபடி அமர்ந்துவிட்டாள். அவளது மனம் போக்கை கண்டு அவளே அவளை வெறுத்தாள். ஆதித்யா சொல்ல சொல்ல அந்நிகழ்வுகளுக்கு சென்றவளுக்கு அன்று அவளே அறியதா உணர்வுகளுக்கு அர்த்தம் கிடைத்தது. ஆதித்யாவை பார்க்கும் பொழுதும் பேசும் பொழுதும்.. மனதில் ஒரு ஓரத்தில் ஆர்வமும், உற்சாகமும் தோன்றியதிற்கு அர்த்தம் புரிந்தது. அன்று அவள் அதை புதிய மனிதனுடன் வந்த கோபத்தின் காரணமாக தோன்றிய உணர்வு என்று நினைத்திருந்தாள். ஆனால் அது அவளது மனதில் சலனத்தை ஏற்படுத்தியவனால் தோன்றியது என்று இன்றுப் புரிந்தது. அவனிடம் தோன்றிய கோபமும், சண்டையும் அவனின் கவனத்தைக் கவர்வதற்காக வந்திருக்கிறது.. இது தெரியாமல் இருந்த தனது அறிவீனத்தைக் கண்டு கடிந்துக் கொண்டாள். ஆனால் அவளது உணர்வுகளை அவள் வெறுக்கவில்லை. கசந்த சிரிப்பைத் தான் சிந்தினாள். தனது உணர்வுகள் மதிப்பில்லா இடத்தில் தான் செல்ல வேண்டுமா.. என்று வருந்தினாள்.

காதல் என்று கைப்பிடிக்க இருந்தவனுக்கு துரோகம் செய்யும் முன் தெளிந்து விட்டதை எண்ணி நிம்மதியடைந்தாள். ஆனால் கார்த்திக் அவளுடையவனாக ஆகவில்லை என்பதற்கு வருத்தம் மட்டும் கொள்ளவில்லை. இருவருக்கும் தடுமாற்றம் தரும்.. காதல் என்ற சொல்லை அகற்றிய பின் நட்பு என்னும் உண்மையில் நிம்மதி கொண்டாள். ஆனால் ஒன்று அவளுக்கு இன்னும் புரியவில்லை.

ஆதித்யா அதைத் தெளியவித்தனா..! அல்லது அவளது மனதைக் குழப்பிவிட்டனா..!

ஆனால் ஒன்றில் மட்டும் முடிவாக இருந்தாள்.. ஆதித்யாவிடம் தோன்றிய அவளது சின்ன காதலோ! ஈர்ப்போ! எதோ ஒன்று இனி அவளிடம் இருக்காது.

ஒரு முடிவிற்கு வந்த பின்பே சுற்றுபுறம் உரைக்கவும், அவசரமாக எழுந்தாள். மதுபானவிடுதியில் இருந்து வெளியே வந்தவள் பார்த்தது தள்ளாடியபடி நடந்து சென்ற ஆதித்யாவை தான்..!

“குட்பை..” என்று மனதிற்குள் முணுமுணுத்துவிட்டு திரும்பி அவனுக்கு எதிர் திசையில் நடந்தாள்.

வேகமாக நடந்தவளுக்கு அப்பொழுதே நினைவு வந்தது. ஆதித்யாவால் முடியாததால் தான்.. கார்த்திக்கை வந்து அழைத்து செல்லுமாறுக் கேட்டிருக்கிறான். கார்த்திக்கை தடுத்துவிட்டு தான் வந்துவிட்டு, அவனை அப்படியே விட்டுச் செல்வது சரியாக படவில்லை. எனவே மெல்ல திரும்பிப் பார்த்தாள்.


தெளியவித்தவனின் தேவை என்னவோ..!

தெளிவு பெற்றவளின் காதல் தேவையில்லையோ..!
 
Status
Not open for further replies.
Top