All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி தில்லையின் “மாயாவி” - கதைத் திரி

Status
Not open for further replies.

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 9





சென்னையில் உள்ள பிரபலமான சட்டக்கல்லூரி , அதிலும் அங்கே மாணவர்களுக்குள் நடக்கும் ஜாதி கலவரத்துக்கு பெயர் போனது , அக்கல்லூரியின் அருகில் இருந்த டீ கடையில் தன் நண்பர்களுடன் ஒரு கையில் டீயும் மற்றொரு கையில் சிகரெட்டுமாய் கதை அடித்துக்கொண்டிருந்தான் ஸ்ரீதர். டீ கப்பை ஒரு சுழற்று சுழட்டி ஒரு வாய் டீயை பருகுவதும் , அதன்பின் சிகரெட்டை இழுத்து வெளியே வளையம் வளையமாய் விடுவதும் , ஏதோ கஞ்சா அடித்து போதையில் மிதப்பன் போல் கண்களை மூடி தனி உலகத்தில் சஞ்சரித்தவன் பின் கண்களை திறந்து , தன் நண்பர்களை பார்த்து





"டேய் மச்சான் டீயும் தம்மும் செம்ம காம்பினேஷன்டா ..... சொர்கத்துக்கே போன பீல்" என்றவன் திரும்பவும் கண்களை மூடும் வேளையில் ,





அவன் நண்பன் விச்சு , "அப்போ மஞ்சு " என்றதும் கண்களை திறந்தவன்,





"ச்சீச்சீ மஞ்சுவால கூட அந்த போதையை கொடுக்கமுடியாதுடா... மஞ்சு முக்கியமா ... இல்ல டீ தம்மு முக்கியமானு கேட்டா தயங்காம டீ & தம்முதான் சொல்லுவேன்" என்றவன் திரும்பவும் டீ கப்பை சுழட்டி வாயில் வைக்கும் வேலையில் , "மஞ்ச காட்டு மைனா" என்று அவன் செல்லில் ஒலித்த ரிங்க்டோனை கேட்டவனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் பல்ப் போல பிரகாசித்தது , போனினை ஆன் செய்தவன் ,





"மஞ்ச காட்டு மைனா , என்னை கொஞ்சி கொஞ்சி போனா " என்று மயக்கும் குரலில் பாடியவனிற்கு , எதிர் புறம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக ,’என்னாச்சு இவளுக்கு ..... எப்போ இந்தமாதிரி பாடினா ....போங்க அத்தான் கொஞ்சுவாளே ,சம்திங் ராங் 'என்று மதில் நினைத்தவன் ,





"மஞ்சுமா ....அத்தானை கொஞ்சுமா " என்று பிட்டை மாத்திப்போட்டு பார்த்தவனுக்கு மீண்டும் அமைதியே பதிலாக வர , மீண்டு





"என் மஞ்சு செல்லத்துக்கு என்ன கோவம் ...நேத்துகூட என் மஞ்சுமாக்கு புடிச்ச பாய் கடை சிக்கன் பிரியாணி அதுவும் லெக் பீஸ் ஓட வாங்கி கொடுத்துட்டு செல்லதோட ஆரஞ்சு சுளைக்கு தேவையான சத்து தந்துட்டுதானே வந்தேன்" என்றவனை பார்த்த விச்சு ,





"டேய் இவன் ஆரம்பிச்சுட்டான் ...இப்போதைக்கு நிப்பாட்ட மாட்டான் ....வீணா இந்த கன்னிப்பையன் மனசு வேற அலைபாயும் ....நான் கிளம்புகிறேன் மச்சான்ஸ்" என்றவன் ஸ்ரீயை முறைத்தபடி பைக்கை வேகமாக கிளப்பி சென்றான்.





மத்த இரு நண்பர்களும் கண்டுக்காத மாதிரி இருந்தாலும் அவர்களின் காது இரண்டும் ஸ்ரீ சுத்தியே நீண்டுகிட்டு இருந்தது கூடவே டீ மாஸ்டர் காதும் , இது எப்பவும் நடக்கிற ஒன்னு , ஸ்ரீயின் காதல் பாஷைகளை திருட்டுத்தனமா கேட்பதுற்கே அங்கே ஒரு கூட்டம் அலையும் , பின்னே ஓசியில் பிட்டு படம் பார்த்த எபக்ட் கிடைக்கும் அவன் மஞ்சுவிடம் கொஞ்சுவது.





ஸ்ரீ ஆரஞ்சு சுளையை பத்தி பேசியதை கேட்ட மஞ்சு ,





"இனி நீங்க அதுக்கு உரம் போடா வேணாம் ....உங்களுக்குத்தான் போதை தருகிறதுக்கு டீயும் சிகரெட்டும் போதும்...." அவள் முடிப்பதற்குள் , இடைமறித்தவன்





"மஞ்சு மஞ்சு மஞ்சு மஞ்சுமா ....அது ஏதோ ப்லொவ்ல சொன்னதுடா ... உனக்கு தெரியாதா அத்தான் உன்கிட்ட எப்படி மயங்கி கிடக்கிறேன் " என்று தன் நண்பர்களை நோக்கி வந்தவன் அவர்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் ஸ்டூலை உதைத்து அவர்களை கீழே தள்ளியிருந்தான் ,பின்பு அவர்களை நோக்கி விரலை நீட்டி எச்சரித்தவன் பத்திரம் என்றும் மிரட்டினான்.





"இனி விளையாட்டுக்கு கூட நான் சொல்லமாட்டேன் ஓகேவா " என்று குழைந்தவன்





"மஞ்சுமா ....இப்போ அத்தானை கொஞ்சுமா" என்று சிணுங்கியவனை கண்டு முகம் சிவந்தவள் , "போங்க அத்தான் " என்று சிணுங்கலாக வந்த பதிலில் தன் உடல் சிலிர்ப்பதை கண்டவன் ,





" மஞ்சு செல்லம் ... அத்தான்க்கு பச்சை நரம்பு முறுக்கிட்டு நிக்குது ... ஸ்ட்ரோங் உம்மா கொடுத்து நார்மல் மோடுக்கு மாத்துடா செல்லக்குட்டி" என்று கொஞ்சி குழைந்தான் , எட்டி ஸ்ரீயின் கையை பார்த்த நண்பன் , பின்பு மற்றொரு நண்பனை பார்த்து 'பொய்' என்று வாயசைத்தான் , இதை கவனித்த ஸ்ரீ அவர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பதுற்குள் , கும்பிடு போட்ட நண்பர்கள் இனி வாயை திறக்கமாட்டோம் என்பதை போல சைகை செய்தனர் .





"முடியாது அத்தான் நீங்க என்ன கீழ இறக்கி பேசியதற்கு பனிஷ்மென்ட் ....நோ உம்மா ....எனக்கு எப்போ கோபம் போகுதோ அப்போ வாங்கிக்குங்க ....இப்போ போன கட் பண்ணப்போறேன் " என்று மஞ்சு கூறியதை கேட்ட ஸ்ரீ ,





"நோ... மஞ்சுமா ப்ளீஸ் அத்தான் மனசு தாங்காது ...இந்த அழுத்தம் தாங்காம வெடிச்சு செதறிடும் மஞ்சுமா ...ப்ளீஸ் ப்ளீஸ் ...ப்ளீஸ்" என்று கெஞ்சியவனை பார்த்து கொஞ்சலாக சிரித்தவள் ,





"ஓகே அத்தான் உங்களை பார்க்க பாவமா இருக்கு ...நேத்து மாதிரியே இன்னைக்கும் பாய் கடை பிரியாணியும் கூடவே பெப்ஸியும் வாங்கிட்டு வாங்க ...முடிஞ்சா கன்சிடர் பண்ணுறேன் ...அதுவும் இன்னைக்கு மிஸ் பண்ணீங்க ஒன் மன்துகு நோ உம்மா "





"என்ன ....ஒரு மாசத்துக்கு நோ கிச்சா " என்று அதிர்ந்தவன் ,





"இப்பவே அத்தான் கிளம்பிட்டேன் " என்று கூறியபடி போனினை அணைத்து பாக்கெட்டில் போட்டவன் பைக்கை நெருங்கும் வேளையில் , சிலர் கல்லூரிக்குள் திபுதிபு என்று ஓடுவதை பார்த்து யோசனையாக புருவம் சுருக்கியவன் பின் தன் நண்பர்களிடம் ,





"டேய் அவங்க வேலையே காட்ட ஆரம்பிச்சுட்டாங்க ....எவனாவது உள்ளே போனீங்க காலை வெட்டிடுவேன்"என்றவன் டீ மாஸ்டர்யிடம் ,





" மாஸ்டர் காலைல போட்ட ஆனியன் போண்டா இருக்கா " என்றவனிடம் , போண்டா நிரம்பிய ஒரு தட்டை தூக்கி அவனிடம் கொடுத்தார் டீமாஸ்டர் , அதை வாங்கியவன் ,





"டேய் ஆளுக்கு ஒன்னு எடுத்துக்குங்க ரொம்ப பிரச்னை ஆகிடுச்சுனா , இந்த போண்டாவை தூக்கி அங்க இருக்கவங்க மண்டையை குறி பார்த்து தூக்கி எறிங்க ....கன்போர்ம் ஒன்னு மண்டை உடையும் இல்ல போண்டா உடையும் , எது ஒடைஞ்சாலும் நல்லதுதான் அதுலயும் போண்டா ஒடஞ்சுது அதுல இருக்குற விஷ வாயுவு தாக்கி எல்லாரும் கிளோஸ் ஆகிடுவாங்க " என்றவனை பார்த்து நண்பர்கள் சத்தம் போட்டு சிரிக்க , மாஸ்டர் முறைத்துக்கொண்டே வந்து போண்டா தட்டை அவன் கையிலிருந்து பிடுங்கி கொண்டார் .





"சரிங்கடா ...எல்லாரும் கிளம்புவோம் இங்க இருந்தா தேவையில்லாத பிரச்சனை எல்லாம் வரும்" என்றவன் அப்பொழுதுதான் அருள் தங்களுடன் இல்லை என்பதை உணர்ந்த ஸ்ரீ ,





"டேய் அருள் பைக் கி எடுக்க போனவன் இன்னும் வரலைடா ....நீங்க கிளம்புங்க நான் போய் பார்த்துட்டு வரேன் " என்றவனிடம் ,





"இல்லடா நாங்களும் வரோம் ..."என்றவர்களை இடைமறித்தவன் ,





"வேணாம் ....தேவை இல்லாத பிரச்சனைல நாம இன்வால்வ் ஆகா வேணாம் ...நீங்க கிளம்புங்க" என்றவன் தன் கல்லூரியை நோக்கி சென்றான்.





இதுதான் ஸ்ரீதர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன் தேவை இல்லாத பிரச்சனைகளில் அதுவும் ஜாதிக்காக நடக்கும் சண்டைகளில் அறவே தலையிட மாட்டான் , தன் நண்பர்களையும் பிரச்சனை அருகில் விட மாட்டான். அவனிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் மஞ்சு போன் பேச ஆரம்பித்தால் , யார் இருந்தாலும் இல்லை என்றாலும் அவன் பேச்சு A + தாண்டி A +++++..... போய்கிட்டே இருக்கும் அருகில் இருப்பவர்கள் முகம் சிவந்து ஏங்கும் அளவுக்கு போய்விடும்.





கல்லூரியின் உள்ளே சென்றவன் , சுத்தியும் முத்தியும் பார்க்க அங்கே கும்பல் கும்பலாக அடிதடியில் ஈடுபட்டிருந்தனர் , இன்னும் இந்த பிரச்சனை தீவிரம் அடையவில்லை என்பதை உணர்ந்தவன் , அதற்குள் அருளை நெருங்கி விடவேண்டும் என்று நினைத்தான். இப்பொழுது நடைபெறும் பிரச்னை கூட ரெண்டு ஜாதிக்குள் நடக்கும் மோதல் தான் , 'எங்கே போயிருப்பான் ...ஒரு வேலை இவனையும் அவன் ஆளுங்க பிரச்னை பண்ண போயிருப்பாங்களா 'என்று மனதில் நினைத்தான் வேகமாக தங்களின் வகுப்புரைக்கு வந்தவன் அங்கே அருள் இல்லமால் போகவே , அவன் இதயம் வேகமாக அடித்து கொண்டது , சுற்றும் முற்றியும் பார்த்தவன் "அருள் அருள்" என்று குரல் கொடுத்தப்படி வந்தவனை நெருங்கியது ஒரு கும்பல் ,





அவர்கள் அனைவரும் மதுரையை சேர்ந்தவர்கள் அதிலும் அங்கே மையமாய் இருக்கும் ஜாதி பிரிவை சேர்ந்தவர்கள் , அவர்களுக்கு ஸ்ரீ அருள் நட்பை கண்டு பொறாமை , நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஸ்ரீயிடம் ,





"ஏன் ஸ்ரீ உங்க ஆளுங்க கூட பிரெண்ட்ஷிப் வச்சுக்க மாட்டியா ...இவனை எல்லாம் வளர்த்து விட்ட, பின்னாடி உன்னை சுத்தமா மதிக்க மாட்டான் " என்பதற்கு பதில் சொல்லாமல் இடத்தை காலி செய்துவிடுவான் ஸ்ரீ.





இப்பொழுது அவர்கள் தான் ஸ்ரீயை நெருங்கி இருந்தனர் ,





"என்ன ஸ்ரீ தனியா இருக்க எங்க உன்னோட அல்லக்கை "என்று ஒருவன் கேலி பேச , ஸ்ரீ எதுவும் சொல்லமால் அந்த இடத்தை விட்டு விலக முயன்றான் , அதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ,





"மச்சான் அருளை அல்லக்கைனு சொல்லாதலே ...ஒரு வேளை ஸ்ரீ ஓட ..."என்று தொடங்கியவனை பார்த்து ஸ்ரீ முறைத்த முறைப்பில் வாயை மூடி கொண்டனர் . ஸ்ரீ வட மாவட்டத்தில் அதிகம் உள்ள ஜாதிப்பிரிவை சேர்ந்தவன் , அதுவும் அவனோடேயே குடும்பம் கடலூர் மாவட்டத்திலேயே பெயர் பெற்றது ,அவனோட தாய்மாமன் ஜாதிக்கட்சியில் பெரியபொறுப்பில் இருப்பவர் , இவர்கள் தயவால் அமைச்சர் ஆனவர்கள் இன்னும் முக்கிய இலாக்களில் இருக்கின்றனர் ,ஸ்ரீயும் எந்த வம்புக்கு போகாததால் ஸ்ரீயிடம் எப்பொழுதும் ஒதுங்கியே இருந்தனர். ஆனால் இன்று அருள் அவன் கூட இல்லை என்பதே அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வர பிரசாதம்.





இவர்கள் அனைவரும் இறுதியாண்டு வகுப்பில் இருந்தனர் , இதுவரை தங்களுக்கு சரிசமமாக நடத்தப்பட்ட அருளை படிப்பில் முதலில் வந்த அருளை எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்தவர்களுக்கு இன்று இருவரும் ஒன்றாக இல்லாததை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக எண்ணியவர்கள் ,





" டேய் வாங்கடா பலி ஆடு எங்கயோ தனியா மாட்டிருக்கு" என்று தங்களுக்குள் பேசியபடி ஸ்ரீயை நக்கலாக பார்த்துக்கொண்டே அவனை கடந்து சென்றனர்.





ஸ்ரீக்கு நன்கு தெரியும் அவர்கள் அருளை கண்டால் கண்டிப்பாக வெளுத்துவிடுவார்கள் என்று , அருளாலும் தன்னாலும் கூட இந்த கும்பலை சமாளிக்க முடியாது என்று உணர்ந்தவனுக்கு வியர்வை ஊற்று போல் பெருக்கெடுத்தது, அவர்கள் நெருங்கும் முன் அருளை கண்டுபிடித்து எப்படியாவது யார் கண்ணிலும் படாமல் சென்றுவிட வேண்டும் என்று எண்ணியவன் , வேகமா இறங்கி கிரவுண்டில் ஓடினான் ,இன்னும் பிரச்சனை பெரிதாக வெடிக்காத காரணத்தால் , அங்கொன்றும் இங்கொன்றுமாக அடித்து கொண்டிருந்தனர் , நிறைய மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறி கொண்டிருந்தனர் . அப்பொழுது அவனை முறைத்தபடி ஒருகும்பல் வந்து கொண்டிருந்தது, அவர்கள் அனைவரும் அருள் சமூகத்தை சேர்ந்தவர்கள் , அவர்களை நெருங்கிய ஸ்ரீ ,





"ரமேஷ் ... அருளை பார்த்தியா "என்றதற்கு பதில் கூறாமல் சென்றவனை பார்த்து கோபம் தலைக்கு ஏற ,





"டேய் உன்னைத்தானே கேட்கிறேன் ....பார்த்தியா இல்லையா "என்றதற்கு , ஸ்ரீயை விட கோபமாய் ,





"அவனை பத்தி எங்க கிட்ட ஏன் கேட்கிற ...அவனைத்தான் நீ பிரிச்சு வச்சிருக்கியே ....எங்க உரிமைக்காக போராட கூட அவனை நீ விட்டது இல்லை ...இப்போ கூட எங்களை மிரட்டி அடிச்சு விரட்டி விட்டுட்டான் ...இச்சை ...அவ என்ன மனுஷன் தன்மானம் இல்லாம உன்கால்ல விழுந்து கிடக்கிறான்" என்றதுதான் தாமோதம் ,





"நீ படிக்கச் வந்திருக்கிய ...இல்ல போராட வந்திருக்கிய , படிச்சு முடிச்சுட்டு போய் போராடுடா யாரு வேணான்னு சொன்ன "என்றவன் "இது எனக்கு தேவை இல்லாதது ...இப்போ அருள் எங்க இருக்கான்னு சொல்ல போறியா இல்லையா "என்றவனை மதிக்காமல் கடந்து சென்றது அக்கும்பல் , அவரவர்களுக்கு தங்கள் பிரச்சனையே பெரிதாக பட்டது , அடக்க நினைக்கிற ஒரு கும்பலும் , அதனால் தன் மானம் சீண்டப்பட்டு அந்த காலம் போல் நாங்கள் இல்லை என்று உலகிற்கு சொல்ல துடிக்கிற ஒரு கூட்டமும் ,அதிலும் அவர்களுக்கு தேவையான உதவி செய்வதாய் சொல்லி பிரச்சனை மூட்டி குளிர் காய்கிற அரசியல் கட்சிகளுக்கும் நடுவே மாட்டி கொண்டது ஸ்ரீ அருள் போல உள்ளவர்கள்தான்.





ஸ்ரீக்கு அய்யோ என்றிருந்தது , எப்படி அருளிடம் செல்வது என்று புரியாமல் முழித்து கொண்டிருந்தவனுக்கு ரமேஷ் கும்பலில் இருந்த ஒருவன் ஸ்ரீயை திரும்பி பார்த்து மூன்று விரல்களை தூக்கி காட்டியவன் அவனுக்கு நேரே இருந்த கட்டிடத்தை சுட்டிக்காட்டி அங்கே போ என்று சைகை செய்தவன் திரும்பி நடக்கலானான்.





ஸ்ரீ குழப்புத்துடனே "ஏன் இவன் தேர்ட் இயர்க்கு போனான்" என்று வாய்விட்டு புலம்பியவன் , வேகமாக அக்கட்டிடத்தை நெருங்கி தேர்ட் இயர் தளத்தை நெருங்கியவன் ,





"அருள் ...அருள் ..அருள் "என்று குரல் கொடுத்தவாறே அந்த தளத்தை முழுதாக அலசியவனின் காதில் , "ஸ்ரீ ..." என்று அருள் அழைக்கும் திசை நோக்கி சென்றவன் அதிர்ந்து நின்றான் ஏன் என்றால் அவன் சென்ற இடம் பெண்கள் கழிப்பறை ,





"டேய் அருள் இங்க என்ன பண்ணுற , வெளில வாடா "என்று கோபமாய் அழைத்தவனை பார்த்து சிரித்தபடி வந்த அருளை கண்டு மீண்டும் அதிர்ந்தான் ஸ்ரீ , வெறும் பேண்ட் மற்றும் உள் பணியனோடு இருந்தவனை பார்த்து , சந்தேகமா ,





"டேய் எங்கடா உன் ஷர்ட் ...இங்க என்ன பண்ணிட்டு இருக்க ... " என்றவனின் பேச்சு பாதியில் நின்றது கழிவறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த பெண்ணை பார்த்து அதுவும் அருளின் ஷிர்ட்டை அணிந்த இருந்தவளை வாய் பிளக்க பார்த்து கொண்டிருந்தான் ஸ்ரீ .




 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 10





கழிவறையில் இருந்து வெளியே வந்த பெண்ணை பார்த்தவன் அதுவும் அருளின் ஷிர்ட்டை போட்டுருப்பதைபார்த்து அதிர்ந்த ஸ்ரீ , அருளை சந்தேகத்தோடு பார்க்க , அவசரமா சிரித்த அருள் ,





“ டேய் ... டேய் ... நான் ஸ்ரீ இல்லடா” என்று சிரித்தவன் “இப்படி சந்தேகத்தோடு பார்க்காதடா... இந்த பொண்ணுயாருன்னு கூட தெரியாதுடா” என்றவன் மேலும் , “ நான் கி எடுக்க போகும் போது , அந்த ரமேஷ் காங் என்கிட்டவந்து சப்போர்டுக்கு வர சொன்னாங்கடா” என்றதும்தான் தாமோதம் , “ டேய் உன்கிட்ட ஏதாவது பிரச்சனைபண்ணங்களா” என்று பதட்டமாக கேட்ட ஸ்ரீயை பார்த்து கண்ணடித்தவன் ,





“டேய் நம்மகிட்ட வால் ஆட்டயாருக்குடா தையிரியும் இருக்கு” என்ற அருளை பார்த்து பெரிதாக சிரித்த ஸ்ரீ , “அதானே“ என்றவனுக்கு அருள் , “நான் கீ எடுத்துட்டு வரும் போது , அவங்க எல்லாம் தோர்ட் இயர் போறதை பார்த்தேன் , அவங்க காங்க்லஇருக்கிற தேவா இருக்கான்ல .... என்னை கண்டிப்பா தேர்ட் இயர் வரணும் இல்லைனா பெரிய பிரச்சனையாபோயிடும்னு.... யாருக்கும் தெரியாம வார்ன் பண்ணிட்டு போனான், அதான் கொஞ்சம் நேரம் கழிச்சு போய்பார்த்தா இந்த பொண்ணை ரவுண்டு கட்டிட்டு நிக்கிறாங்கடா” என்றவனை இடைமறித்த ஸ்ரீ அப்பெண்ணை பார்த்து,





“ உன்கிட்ட ஏதாவது வாலாட்டினங்களா“ என்று கோவமா கேட்டவனை பார்த்து மெல்லிதாக சிரித்த அப்பெண் ,





“இல்லைன்னா ,அப்போதான் அவங்க என் கிட்ட மிரட்ட ஆரம்பிச்சாங்க” என்றவள் அருளை சுட்டி காட்டி“இவங்க சரியான நேரத்துல வந்துட்டாங்க” என்றதும் நண்பனை பெருமையாக பார்த்த ஸ்ரீ ,





“சரி அதுக்கும் இவன் ஷர்ட் உன்கிட்ட வந்ததுக்கு என்ன சம்பந்தம்” என்றவனை பார்த்து அசடு வழிந்தவள்மெல்லிய குரலில் ,





“ அது ...அது வந்து ஹாஸ்டல் கிளம்பும் போது கதவுல நீட்டிக்கிட்டு இருந்த ஆணில மாட்டி ... டிரஸ் கிழிஞ்சுச்சு... நான் கப்போர்டுல இன்னொரு செட் டிரஸ் வச்சிருந்தேன் , அத எடுத்துட்டு வரும்


போதுதான் ....அவிங்க வம்பு பண்ணாங்க” என்று தயங்கி தயங்கி கூறியவளை பார்த்த ஸ்ரீ ,





“இம்ம்....இப்போ எங்க அந்த டிரஸ் நான் போய் எடுத்துட்டு வரேன் ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது“ என்றவனுக்கு ,





“ பதட்டத்துல கிளாஸ்லேயே விட்டுட்டு வந்துட்டேன்னா” ” என்றவளை பார்த்து தலைஅசைத்தவன் ,





“அருள் பத்திரம் ரெண்டு பேரும் வெளில வந்துடாதீங்க நான் சீக்கிரம் எடுத்துட்டு வந்துடுறேன் ”என்று அருளிடம் கூறியபடி வெளியேறினான் ஸ்ரீ.





அருளின் அருகில் நின்றிருந்தவளின் மனமோ அருளை சுற்றியே வட்டம் அடித்தது , நல்ல வாட்டம் சாட்டமா முறுக்கேறிய புஜங்களுடன் இருந்தவனை பார்க்க பார்க்க மனதில் ஏதோ புது விதமான உணர்வுகள்தோன்றுவதை அவளால் தடுக்க இயலவில்லை , மனதில் ‘இது என்னடா மதுரைக்காரிக்கு வந்த சோதனை‘ என்று எண்ணியவள் , அவள் அறியாமலே அவனோடய சட்டையை முகத்தருகே கொண்டு வந்து நுகர்ந்து மூச்சை உள்ளே இழுத்தவளின் இதயம் வேகமாக துடித்து , உடல் எங்கும் சிலிர்த்து உள்ளத்தில் ஒருவித குறுகுறுப்பு உண்டாகியது , அவளை சுற்றி அவனின் வேர்வை மனமே நிரம்பி வழிந்ததை போல உணர்ந்தவள் கண்மூடி அதைரசிக்க ஆனாள்.





தன்னை ஒருத்தி அணுஅணுவாய் ரசிப்பதை அறியாத அருள் , ஸ்ரீ சென்ற திசையை பார்த்தபடி பதட்டமாக நின்றிருந்தான் , அவனை கண்களால் விழுங்கியவள் மெல்ல மெல்ல தன்னோட இதயத்தில் அருளின் பிம்பத்தை பதித்து கொண்டாள் அவன் அறியாமலே.





சற்று நேரத்தில் அங்கே வந்த ஸ்ரீ அப்பெண்ணிடம் அவள் உடை அடங்கிய கவரை நீட்ட , அதை வாங்க மறுத்தவள் ,





"அன்னே , அத அவங்க கிட்ட கொடுங்க ... அது அவங்களுக்குத்தான் " என்றவளை ஸ்ரீ அதிர்ச்சியுடன் பார்த்து எதுவும் பேசாதே என்பதை போல தலை அசைத்தான்,





ஆனால் அருளோ குழப்பத்துடன் அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் ,





"ஸ்ரீ .......இந்த பொண்ணு என்ன சொல்லுது" என்க ,





"இது உங்களுக்காக நான் எடுத்த டிரஸ் பிடிச்சிருக்கா பாருங்க " என்றவள் ஸ்ரீயிடம் இருந்த கவரை பறித்து அருளிடம் நீட்டினாள் .





"ஸ்ரீ இங்க என்ன நடக்குது .....யாரு இந்த பொண்ணு" ஸ்ரீயிடம் சீரிய அருளை பார்த்தவள் பின்பு மெதுவாக தலையை ஆட்டி,





"மூணு வருஷம் ....அம்மாடியோ 1095 நாட்கள் , உங்கபின்னாடிதான் சுத்திக்கிட்டே இருந்தேன் ... என்னை யாருன்னு தெரியலை " என்று பெருமூச்சு விட்டவள் ,





"என்னோட பேரு ..." என்று தொடங்கியவளை இடைமறித்த அருள்





"இங்கபாரும்மா நான் உன்கிட்ட எதுவும் கேட்கலை ... நீ வாயை மூடிக்கிட்டு இருக்கிறது நல்லது " என்று கோபத்துடன் கூறிய அருளை பார்த்து முழித்த ஸ்ரீ ,





"அமுதா கொஞ்சம் நேரம் பேசாம இருக்கியா ... அப்போ பொய் சொல்லித்தான் ஷிர்ட்டை அவன் கிட்ட இருந்து வாங்கினியா "என்ற ஸ்ரீயை பார்த்து வேகமாக தலையை ஆட்டியவள் ,





"இல்லைனா இதோ இந்த இடத்தில கிழுஞ்சிருக்குணா , வேணும்னா சட்டையை கழட்டி காட்டுறேன் பாத்துக்கோங்க" என்றவளை கண்டு பதறிய ஸ்ரீ ,





"ஏய் என்ன இப்படி பேசுற " என்றவனை பார்த்து ,





"அதானே நான் என்ன ஸ்ரீ அண்ணாவா ஊருக்கே என்னோட படத்தை ஒட்டுறதுக்கு , நீங்க திரும்பிகிங்க நான் இவங்க கிட்ட மட்டும் காட்டுறேன் " என்று கூறியபடி தன்னிடம் நெருங்கியவளை பார்த்த அருள் ,





"ஸ்ரீஇஇ"என்று கோபத்துடன் கத்தியவனை பார்த்து பதறிய ஸ்ரீ ,





"டேய் இப்போ எதுக்கு கத்துற .... " என்றவன் அமுதாவை பார்த்து ,





"ஏம்மா இது விளையாடுற நேரம் இல்லை ....உனக்கே தெரியும் உன்னோட அத்தை பையன் பாண்டி எங்களை எதுலயாவது மாட்டிவிடலாம்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையுறான் ....நீவேற தேவ இல்லாம பிரச்சனையை கிளப்பாதே" என்று சற்று கோபமாகவே கூறியவன் ,





"அவன் ஷிர்ட்டை கழட்டி கொடு" என்றதற்கு , முடியாது என்பதை போல தலை அசைத்தவளை பார்த்து ஆத்திரம் அதிகமாக அருள் அவளை நெருங்கி ,





"இப்போ ஷிர்ட்டை கழட்டி தரப்போறியா இல்லையா "என்றவாறே அவளை பார்த்தவன் அதிர்ந்து நின்றான் அவள் கண்கள் காட்டிய ஜாலத்தில் , மனதிலோ 'எம்மாடி கண்ணாலே ரேப் பண்ணுறாளே' என்று நினைத்தவன், திடிர்யென்று 'அய்யோ இதுங்க வேற அவ பார்வையில சிலிர்த்துக்கிட்டு நிக்குதுங்களே' என்று நினைத்தவாறே அவள் பார்வையில் சிலிர்த்து நின்ற தன் கைமுடிகளை தடவியபடி மனதில் அலறினான் ,மீண்டும் ' இவகிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது' என்று நினைத்தவன், பரிதாபமாக ஸ்ரீயை பார்க்க , அவனும் இவன் முகத்தில் வந்துபோன உணர்வுகளை மனதிற்குள் உள்வாங்கியபடி பார்த்து கொண்டிருந்தான்.





ஒரு முடிவு எடுத்தவனாக ஸ்ரீ அமுதாவை பார்த்து , " அமுதா கண்டிப்பா நாளைக்கு நீ அருள்கிட்ட உன் மனசுல இருக்கிறதை பத்தி பேசலாம் , இதுக்கு நான் கேரண்டி ....இப்போ பிரச்னை பண்ணாம ஷிர்ட்டை கழட்டி கொடுத்துடுமா" என்று தன்மையாக பேசியவனை பார்த்தவள் பின்பு பெருமூச்சு விட்டு ,





"எப்பவும் போல இப்போவும் உங்களை நன்புறேன் "என்றவள் சட்டையை கழட்டி அருளிடம் நீட்டினாள் ,





கோபத்துடன் வெடுக்கென்று அவள் கையில் இருந்து ஷிர்ட்டை பறித்தவன் , மளமள என்று அதை அணிந்து கொண்டு முகத்தில் பூத்திருந்த வியர்வையை தன் ஷிர்டில் துடைக்க முயன்றவன் ஷாக் அடித்தபடி திகைத்து நின்றிருந்தான் , அவன் ஷிர்டில் அவன் வேர்வையும் அவள் வேர்வையும் கலந்திருந்ததை நுகர்ந்தவனின் இதயம் குதிரையின் வேகத்தை விட வேகமா துடிக்க ஆரம்பித்தது, சற்றென்று அவன் ரத்தம் சூடானது போல உணர்ந்தவன் அவளை பார்க்க , அவளோ அவனை கண்களால் விழுங்கியபடி பார்த்திருந்தவளின் உதடுகள் புன்னகையில் விரிந்திருந்தன.





வெளியே பார்த்திருந்த ஸ்ரீ , "டேய் அருள் கலவரம் ரொம்ப முத்திடுச்சுடா , இப்போ எப்படி அமுதாவை வெளில அனுப்புறது , அந்த பாண்டி பையன் உன்னையும் அமுதாவையும் சேர்த்து பார்த்தான் பிரச்னை வேற திசையை நோக்கி போய்டும்டா ....என்னடா பண்ணலாம் " கவலையாக கேட்டவனுக்கு , அமுதா





"அண்ணா என்ன பின் பக்கம் உள்ள காம்பௌன்ட் கிட்ட கூட்டிட்டு போய்டுங்க ,அங்கே இருக்கிற மரத்தை பிடிச்சு அந்த பக்கம் போய்டுவேன்" என்றவளை இருவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர் ,





"அண்ணா ஷாக்ஐ குறைங்க ....நாங்க இப்படி பலதடவை வெளில போயிருக்கோம் "என்றவளுக்கு திகைத்தவாறே தலை ஆட்டியவர்கள் , அவள் கூறிய இடத்திற்கு அழைத்துப்போய் விட்டதும்தான் தாமோதம் , சறுசறு என்று மரத்தில் ஏறியவள் , அதன் கிளையை பற்றியவாறே காம்பொன்ட் சுவரை அடைந்து வெளியே குதித்திருந்தாள்.





அவள் குதித்ததும் இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர் ,பின்பு ஸ்ரீ அருளிடம் , "அருள் அமுதா யாருன்னு கேட்க மாட்டியா " என்றவனுக்கு , "இப்போ ரொம்ப முக்கியமடா .....நானே எப்படி சேதாரம்இல்லாம வெளில போறதுன்னு கவலையில் இருக்கேன் , பேசாம வா ஸ்ரீ" என்றவன் சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்தவனை பார்த்து தோள்களை குலுக்கிய ஸ்ரீ தன் நண்பனை பாலோவ் செய்தான்.





சிறிது தூரம் சென்றவர்களை வழிமறித்தது பாண்டி கும்பல் , "வாவ் வாவ் வாவ் வசமா ரெண்டு பலியாடும் இன்னைக்கு மாட்டிக்கிச்சுங்க " என்ற பாண்டி , "டேய் ஸ்ரீ ....இந்த நாளுக்குதான்டா காத்துகிட்டு இருந்தேன் .... ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ....தோ இந்த நாயும் "என்றவன் அருளை சுட்டிக்காட்டியவன் , "என்கிட்ட வாலாட்டிச்சு , அதை பார்த்து நீயும் ரசிச்சதானே "என்றவன் கடகட என்று சிரித்தவன் ,





"இப்போ நாங்க உங்களை பிரிச்சு மேஞ்ச .....வெளில போய் சொல்லுவீங்க .....ச்சீ ச்சீ ச்சீ ....அது உனக்குத்தான் அசிங்கம்டா "என்றவனை பார்த்து ஸ்ரீ ,





"பாண்டி ....வீணா பிரச்னை பண்ணாத ...ஒழுங்கா வழியை விடு ....அப்புறம் அவன் நாய்னா நீ சேத்துல பெறலுற பண்ணிடா" என்றவனை வெறிகொண்ட மட்டும் கையில் இருந்த இரும்பு பைப்பால் ஓங்கி மண்டையில் அடித்திருந்தான் பாண்டி , அதில் பொறிகளங்க சற்று நேரம் என்ன நடக்கின்றது என்று புரியாமல் தலை சுற்ற நின்றிருந்தான் ஸ்ரீ , இதை சற்றும் எதிர் பார்க்காத அருள், "டேய்ய்ய் " என்று வெறிகொண்டவன் போல பாண்டியை நோக்கி வந்தவனை , பாண்டி அருகில் இருந்தவன் அருள் மண்டையை பதம் பார்க்க முயல தன் கைகளால் அதை தடுத்தவனின் கை எலும்பு முறிந்தது , அவன் சுதாரித்து நிமிரும் வேளையில் ஸ்ரீ மயங்கி சரிந்தான் , அதைக்கண்டு பதறிய அருள் , "ஸ்ரீ "என்று கதறியபடி அவன் அருகில் செல்ல முயன்றவனை நாலா புறம் இருந்தும் தாக்க துடங்கினர் .





ஸ்ரீயின் கண்கள் சிறிது சிறிதாக தன் நண்பனை பார்த்தபடி மூடிக்கொண்டது , அதை பார்த்த அருளும் "ஸ்ரீ" என்றவாறே மயங்கி சரிந்தான்.





அவர்கள் கீழே விழுந்ததை பார்த்த பாண்டி ,அடிக்கலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான், அதை பார்த்த அவன் நண்பர்களில் ஒருவன் ,





"பாண்டி வேணாம் இப்பவே மயங்கி கிடக்குறாங்க ...வெளில போலீஸ் வந்தது போலவும் இருக்கு , வா போய்டலாம் " என்றவனை முறைத்துப் பார்த்தவன், வாயில் எதையோ முணுமுணுத்தபடி வெளிப்புறத்தை பார்க்க அங்கே போலீஸ் வந்ததற்கான அறிகுறிகள் தெரிய ஆவேசமாக இருவரையும் உதைத்தவன் , அமுதா சென்ற அதே பின்பக்கம் வழியே வெளியேறினர்.





சிறிது நேரம் சென்றதும் மெதுவாக தலையை தூக்கி பார்த்த அருள் , "ஸ்ரீ அந்த பண்ணி பயலுவோ போய்ட்டாங்க ....எழுந்துக்கோ "என்றான் , தலையை தாங்கி பிடித்தபடி எழுந்த ஸ்ரீ ,கண்களை இறுக மூடி வலியை பொறுத்தவன் , பின்பு தலை குலுக்கி வலியை விரட்டுவதை போல செய்தவனை கவலையாக பார்த்த அருள் ,





"ஸ்ரீ ரொம்ப வலிக்குதாடா " என்றதற்கு , "அந்தளவுக்கு இல்ல ....ஆனா வலிக்குதுடா , சரி வா இந்த இடத்தை விட்டு போவோம் " என்றபடி எழுந்தவன் அருள் எழுவதற்கு உதவி செய்தான் .





சிறிது தூரம் எதுவும் பேசாமல் நடந்தவர்களின் மௌனத்தை கலைத்தான் ஸ்ரீ , "அருளு ....டேய் அருள் " என்றவனுக்கு எதுவும் பேசாமல் வந்தவனை பார்த்து , "டேய் உன்னதான்டா கூப்பிடுறேன் "என்றவனுக்கு , "என்னடா நானே நடக்க முடியாம நடக்குறேன் சும்மா சும்மா நொய்ங் நொய்ங்னுட்டு வர "தாங்கி தூங்கி நடந்தவாறே சுல் என்று எரிந்து விழுந்தான் அருள் , இருந்தும் விடாமல்





"அருளு எனக்கு ஒரு டவுட் டா ",





"என்னடா ....சீக்கிரம் சொல்லி தொலை " என்றான் அருள் ,





"அதுவந்துடா .....படத்தில ஹீரோகிட்ட 20 பேர் வந்தாக்கூட அசால்ட்டா பயிட் பண்ணுறான் ....நம்மால ஏண்டா முடில ....அவங்க அடிக்கு பயந்துட்டு மயங்கினது போல நடிச்சுதானே எஸ்கேப் ஆகிருக்கோம் " என்றவனுக்கு ,





"டேய் அவங்க ஹீரோடா ....நாம அப்படியா "என்றவனை இடைமறித்த ஸ்ரீ ,





"டேய் இந்த கதைல நான்தான்டா ஹீரோ" என்றவனை பார்த்து ,





"ஏதோ எழுத தெரியாதது எழுதுது போல ...கவலையை விடு ஸ்ரீ கதை முடியும் போது இதைவிட பல மடங்கு அது வாங்கும் " என்றவனை சந்தோசத்துடன்பார்த்தான் , சிறிது தூரம் சென்றதும் அருள் ,





"ஸ்ரீ ...இதுக்குதானேடா நாம எந்த வம்புக்கு போகாம இருந்தோம் " என்றதற்கு





"ஆமாண்டா அருளு ...."





"டேய் ஸ்ரீ ....எவ்வளவு பில்ட்டப் எல்லாம் கொடுத்து வச்சுருந்தோம்... வம்புக்கு போகமாட்டோம் ...வந்த வம்பை விடமாட்டோம்னு "





"அந்த பில்ட்டப்பை நம்பி ....இந்த பசங்க எல்லாம் நம்மளை தலை மேல தூக்கி வச்சுருந்தாங்களேடா"





"நல்ல வேல ஸ்ரீ நீ அந்த விச்சுவை கூட்டிட்டு வரலை ...இல்லனா நம்ம மானம் கப்பல் ஏறிருக்கும் ஸ்ரீ "





"அருளு இங்க நடந்ததை வெளில சொல்லுவா "





"சண்டையை விலக்கும் போது அடிபட்டுருச்சு ...சரியாடா " என்று அருள் கேட்டதற்கு ,





"இம்ம் "என்றவன் , "முதல் வேலையா உடம்பு சரியான பிறகு என்ன பண்ணுவ அருளு "





"அந்த பாண்டி ..."என்று பல்லை கடித்தவனை பார்த்து ஸ்ரீ , "அருள் " என்க





"அந்த பன்னிப்பய முன்னாடி போகவே மாட்டேண்டா " என்றான் ,





அவர்கள் பேசியபடி கேட் அருகில் நெருங்கவும், அங்கே காத்திருந்த ஆம்புலன்ஸில் ஏறி அமர்ந்தனர் , உள்ளே இருந்த சில அடிபட்ட மாணவர்கள் இவர்களை பார்த்து மிரண்டு ஒதுங்கி உட்கார இடம் கொடுத்தனர். கெத்தாக உட்கார்ந்தவர்கள் எதிரே இருந்தவர்களை முறைத்தபடி வர , அந்த மாணவர்கள் ,





"டேய் எவனோ செம்மயா ஸ்ரீ கிட்டயும் அருள் கிட்டயும் மாட்டிருக்கான் போல சும்மா பிரிச்சு மேஞ்சுட்டாங்க போலடா " என்று தங்களுக்குள்ளே கிசுகிசுத்தனர்.

 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 11





மருத்துவமனை கட்டிலில் தலையில் கட்டு போட்டிருந்த ஸ்ரீக்கும் , கை காலில் கட்டுடன் இருந்த அருளுக்கும் காதுகளில் இருந்து இரத்தம் இதோ இப்போ வந்துடுவேன் என்று மிரட்டியதாக எண்ணியவர்கள் , அதையே அருளும் ஸ்ரீவிடம் கூறினான் ,





“டேய் ஸ்ரீ சித்தப்பா அடுத்த வார்த்தை பேசினார்னா, என் காதுல இருந்து பிளட் கன்போர்ம்டா” நொந்தபடி கூறியவனை பரிதாபமாக பார்த்த ஸ்ரீ,





“டேய் அருளு எனக்கு ஏற்கனவே வந்துருச்சு போலடா ....காதுல ஊறுற பீலிங்டா” என்றவன் காதை குடைந்தபடி ,





“சித்தப்பா அந்த பஞ்சை எடுத்துக் கொடுங்களேன்” என்று தன்னையும் அருளையும் எண்ணெயில் பொரித்துகொண்டிருந்த தன் சித்தப்பாவிடம் கேட்டான்.





வந்ததில் இருந்து உடம்பில் கட்டுகளுடன் இருந்தவர்களை பார்த்து கோபம் தலைக்கு ஏற , அவர்கள் காதில் ரத்தம் வரும் அளவுக்கு திட்டி தீட்டியவர் , ஸ்ரீ பஞ்சு கேட்டவுடன் பதறியவராக,





“ என்ன ஸ்ரீ ரத்தம் வருதா“ என்றவரை பார்த்து ஆமாம் என்று தலை ஆட்டியவனை வேதனையுடன் பார்த்தவர் ,பஞ்சை கையில் எடுத்தபடி,





“எங்கன்னு காட்டு நான் துடைச்சி விடுறேன்” என்ற சேகர் அவன் அருகில் செல்லவும்


“வேணாம் வேணாம் , நானே துடைச்சிக்கிறேன்” என்ற ஸ்ரீ அவரிடம்இருந்து பஞ்சை வாங்கியவன் அதைரெண்டாகா பிரித்து ஒரு பாதியை அருளிடம் கொடுத்தவன், தன்னிடம் இருந்ததை இரண்டு காதுகளிலும்அடைத்துக்கொண்டு அருளை பார்க்க அவனும் ஸ்ரீயைபின்பற்றினான்.





ஸ்ரீயும் அருளும் பஞ்சை காதில் அடைத்ததை பார்த்த சேகருக்கு ஆத்திரம் தலைக்கு ஏற கையில் இருந்த பஞ்சுகட்டை அவர்கள் மீது வீசி எறிந்தவர் ,





“உருப்படாத ஜென்மம் .... படிக்கச் அனுப்பினா ரௌடிசம் பண்ணிக்கிட்டு அடிதடில நிக்கிறீங்க .....டேய் அருளுஇவன் கூட சேர்ந்த வீணா போய்டுவா , ஒழுங்கு மரியாதையா வாலை சுருட்டிக்கிட்டு படிச்சு


முடிச்சு ஊர் வந்துசேரப்பாரு” என்றவர் கோவமாக அந்த இடத்தை விட்டு அகன்றார் .





சேகர் ரூமை விட்டு சென்றவுடன் கட்டிலில் இருந்து இறங்கிய அருள்அங்கே மாட்டி இருந்த கண்ணாடியின்அருகில் சென்றவன் , தன்முகத்தை நன்றாக உத்துபாத்தவன் எதையோ நினைத்தபடி உதட்டை பிதுக்கி தலையை ஆட்டியபடி ஸ்ரீயை பார்த்து ,





“நான் என்ன அவ்வளவு டெரர்ராவா இருக்கேன் ” என்றவனை பார்த்து இல்லை என்று தலை அசைத்த ஸ்ரீ , தன்மூஞ்சை அப்பாவி போல வைத்துக்கொண்டு





“நானுடா” என்க , அருகில் வந்த அருள் ஸ்ரீயின் மூஞ்சை அப்படியும்இப்படியும் திருப்பி பார்த்தவன்,





“டேய் அப்படியே காபிதூள் சக்கரை இருந்தா இதுல கலந்து ஒரே மடக்கா குடிச்சுடலாம்டா , அவ்வளவு கறந்த பால்போல இருக்கு உன்னோட மூஞ்சு” என்றவனை பெருமை பொங்க பார்த்து சிரித்த ஸ்ரீ ,





“நாமாலே அடிவாங்கி மண்டை ஒடைஞ்சி ...கை கால்லுல கட்டு போட்டுட்டு இங்க இருக்கோம் இன்னும் ஊரு நம்மளை டெரர் பீஸ்னு தானே நம்பிகிட்டு இருக்கு” என்றவன் தொடர்ந்து





“இதுவும் நல்லாத்தான் இருக்கு அருளு“என்று வாயெல்லாம் பல்லாக கூறியவனை அங்கே இருந்த டூட்டி நர்ஸ் திரும்பி பார்த்து முறைத்ததை பார்த்த நண்பர்கள் தங்களுக்குள் கண்ணடித்து கொண்டார்கள்.





‘இஸ் இஸ்’ என்ற சத்தத்தை தொடர்ந்து முறைப்புடன் திரும்பி பார்த்த நர்ஸ் அங்கே ஸ்ரீ தன்னை தலையை ஆட்டிஅழைப்பதை பார்த்து கோபம் கொண்டவர் , வேகமாக அவன் அருகில் வந்து





“ஹலோ அதுயென்ன இஸ் இஸ்னு கூப்பிடுறிங்க ....ஒழுங்கா சிஸ்டர்ன்னு சொல்லுங்க“ என்றுகடுப்படித்தவளை , ஸ்ரீ





“ சாரி அழகான பொண்ணுங்களை இந்த ஸ்ரீ சிஸ்டர்ன்னு என்னைக்கும் சொல்ல மாட்டான்” என்றவனைகொலைவெறியுடன் பார்த்த நர்ஸ் ,





“வாயை கொஞ்சம் அடக்கி வச்சிருந்திங்கனா சீக்கிரம் குணம் ஆகி போய்டலாம்” முறைத்தபடி கூறியவளைபார்த்த ஸ்ரீ ,





“வாயை அடக்கத்தான் உங்களை கூப்பிட்டேன்” ஒரு மார்க்கமாக கூறியவனை பார்த்து அதிர்ந்த நர்ஸ், புருவம்சுருக்கி ,





“என்ன சொல்லுறீங்க ...” என்றவளிடம்





“அதுவந்து..... வாய் எல்லாம் நம நமன்னு இருக்கு...” உதடை தடவியபடி தயங்கியவனை பார்த்து , கோபம்சுறுசுறு என்று ஏற





அவனை பார்த்து “அதுக்கு ” என்று கடுமையாக கேட்ட நர்ஸை பார்த்து , தயங்கியவாறே,





“ நீங்க....நீங்க ...ஒ...ஒரு....” என்றவனை வேகமாக இடைமறித்த நர்ஸ்இடுப்பில் கைவைத்தபடி





“ ஒரு...இம்ம் ...சொல்லுங்க” என்றவளை பார்த்து அருளுக்கு சிரிப்பு வர திரும்பி படுத்து சிரித்தவன் அதிர்ந்துபோனான், அவசரமாக திரும்பி ஸ்ரீயை பார்த்து ,





“இஸ்ஸ்...இஸ்ஸ்” என்க , அருளை திரும்பியும் பார்க்காத ஸ்ரீ





“இருடா இவங்கதானே வாயை அடக்க சொன்னாங்க அதான் அவங்க கிட்டயே ஹெல்ப் கேட்குறேன்“ அலட்டாமல் கூறிய ஸ்ரீயை பார்த்து அருள் ,





“உன்கதை முடியும் நேரம் இது.... ” என்று சம்பந்தமே இல்லாமல் பாடியவன் அங்கிருந்து தாங்கி தாங்கி வெளியேறினான் , இவன் எதுக்கு தேவையில்லாம பாடிட்டு போறேன் என்று யோசித்த ஸ்ரீ இருந்தும்





"ஒரு ...நச்சுனு ..." திரும்பவும் வாயை குழைத்தவன்





"ஒரு தம்மு கிடைச்சா நல்லா இருக்கும் " என்றவனை பார்த்து சத்தமாக சிரித்த நர்ஸ்





"இதுக்கா இவ்வளவு பில்ட்டப் கொடுத்தீங்க" என்றவளை பாத்து கண்ணடித்து சிரித்தவன்





"எதுலயும் ஒரு கிக் வேணும் பியூட்டி" என்றவன் எதோச்சையாக திரும்பி வாயிலை பார்க்க , பார்த்தவனுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது ,





"சிஸ்டர் மயக்கம் வரமாதிரி இருக்கு"என்றபடி போர்வையை எடுத்து போர்த்திக்கொண்டு படுத்துகொண்டான்.





இவ்வளவு நேரம் தன்னிடம் வாயடித்தவன் திடிரென்று சிஸ்டர் என்று கூறியதும் புருவம் சுருக்கி பார்த்தவள் யோசனையுடன் திரும்பி வாயிலை பார்க்க அங்கே காளி அவதாரம் எடுத்தபடி கோவமாக நின்றிருந்த பெண்ணை பார்த்தவளுக்கு ஏதோ புரியுது போல இருக்க , தன்னை டென்ஷன் படுத்தியவனை வம்பு இழுக்கும் பொருட்டு அவன் அருகில் சென்றவள் , போர்வையை விலக்கியவள் ,





"ஹாய் ...ஹாண்ட்ஸாம் நீங்க கேட்டதை" என்றவள் அவனைப்போல வாயை குழைத்தவள் , "டூட்டி முடிச்சுட்டு போகும் போது தரேன்" என்றவள் "பை" என்று ஒருமாதிரியாக கூறியவள் அங்கிருந்து இருந்து சிரித்தபடி வெளியேறினாள் .





அவள் சென்றும் 10 நிமிடம் ஆகியும் எந்த சத்தமும் கேட்கவில்லை என்றவுடன் ஒரு வேலை கோச்சுக்கிட்டு போய்ட்டாலோ என்று நினைத்தவன் , மெதுவாக தலையை தூக்கி பார்க்க அங்கே யாரும் இல்லை என்றவுடன் , "அப்பாடி" என்று நிம்மதி பெருமூச்சு விட்டவன் திரும்பி அருள் படுத்திருந்த கட்டிலை பார்த்து ,





"அய்ய்யோ ...ஆத்தாடிஇஇஇஇ" என்று அதிர்ந்து கத்தினான்.





தன்னை பார்த்து அதிர்ந்து கத்தியவனை கண்டு கடுப்பானவள் , கோபமாக அங்கிருந்து போக நினைத்து எழுந்தவளின் எண்ணம் புரிந்து அவளை அப்படியே அக்கட்டிலில் சாய்த்தவன் , அவள் மேல் பட்டும் படாமலும் படர்ந்து அவசரமாக அவளின் இதழ்களை சிறை செய்திருந்தான் ஸ்ரீ . முதலில் அவன் செய்கையில் திகைத்தவள், திமிறி தன் உதடுகளை அவனிடம் இருந்து பிரித்தவள் , ஆத்திரம் அதிகம் ஆகா பேச வார்த்தை வரமால், உதடுகள் துடிக்க கண்களில் கண்ணீருடன் அவனை ஏறிட்டு பார்த்தாள் மஞ்சு . அதில் துணுக்குற்றவன்,





"என்னடா செல்லம் ...உன்னோட அத்தானை பத்தி தெரியாத ...... அந்த நர்ஸ் என்னையும் அருளையும் மொறச்சுகிட்டே இருந்துச்சா அதான் கொஞ்சம் கலாய்ச்சி விட்டேண்டா செல்லம்.... ப்ளீஸ்...ப்ளீஸ் ... என் மஞ்ச காட்டு மைனா அழுதா....அத்தானுக்கு வலிக்கும்னு தெரியும்ல" என்றவனிடம் ,





"என்னோட அத்தானை பத்தி எனக்கு தெரியும் ... அவங்க என்ன தவிர வேற யாரையும் தப்பாகூட தொடமாட்டாங்க" விசும்பியபடி கூறியவளை அள்ளி தன் மீது சாய்த்தவன் , நிமிர்ந்து அமர்ந்து கொண்டு அவளை அணைத்தபடி அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து சிறிது நேரம் அவள் அருகாமையை ரசித்த ஸ்ரீ , பின்பு நிமிர்ந்து அவளின் முகத்தை தன் கைகளில் பற்றி ,





"மஞ்சுமா ...எந்த நிலையிலயும் இந்த நம்பிக்கையை விட்டுடாத ...உன் மேல எப்போ லவ் வந்துச்சுனு தெரில ஆனா என் மனசு புல்லா நீதாண்டா இருக்க.....உன்னோட சந்தோஷத்துக்காக இந்த அத்தான் எந்த எல்லைக்கும் போகுவேன்......ஏன்னா நீதாண்டா என்னோட உயிர்" என்றவன் அவளை இறுக்கி அணைத்து அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்தவன் பின்பு சிரித்தபடி,





"அப்புறம் எதுக்கு கண்ணுல டாம் திறந்து விட பார்த்தியாம் " அவள் தாடையை ஆட்டியபடி கேட்டவனை பார்த்தவள் திரும்பவும் கண்களில் கண்ணீர் பூக்க அவன் தலையில் இருந்த கட்டை வருடி விட்டவாறே ,





"ரொம்ப வலிக்குதா அத்தான்"





"இல்லடா...டாக்டர் செக் பண்ணிட்டாங்க ஒன்னும் பிரச்சனை இல்லைனு சொல்லிட்டாங்க" என்றவனை பார்த்து தலை ஆட்டியவள், பின்பு எதையோ யோசித்தவளாக ,





"நீங்க போன் பண்ணும் போது காலேஜ் விட்டு வந்துடீங்க ...அப்புறம் எதுக்கு உள்ள போய் சண்டை போட்டீங்க"





"ஏய் செல்லக்குட்டி அத்தானுக்கு சண்டைனா அல்ர்ஜினு உனக்கு தெரியாது ...நான் எங்க போனேன் ,இந்த அருள் பையன் காலேஜ் உள்ள மாட்டிகிட்டான்....." அவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே இடை மறித்தவள் .





"ஒஹ் ..இதுக்கு எல்லாம் காரணம் அவனா" என்று இகழ்ச்சையாக கூறியவளை தடுத்த ஶ்ரீ ,





"சொல்லுறதை முழுசா சொல்லவிடு மஞ்சு...அவனை குத்தம் சொல்லாத" என்று கோவமாக கத்தியவனை பார்த்தவள், எப்பவும் போல தன்னைவிட அந்த அருளுக்கே சப்போர்ட் பண்ணுபவனை கண்டு கடுப்பானவள்





"நீங்க எதுவும் சொல்லவேணா....என்னைவிட உங்களுக்கு அந்த அருள் தானே எப்பவும் முக்கியம்... எனக்கு தெரியும் அவனாலதான் உங்களுக்கு தலைல அடிபட்டுருக்கு" புரியாமல் பேசுபவளை பார்த்து கடுப்பான ஸ்ரீ ,





"அவன் இவன் பேசாதனு எத்தனை தடவை சொல்லிருக்கேன் , உன்னோட வயசுல பெரியவன் ...இன்னும் மூணு மாசத்துல காலேஜ் முடியப்போகுது ...அவனும் லா பிராட்டிக்ஸ் பண்ணப்போறான்....புரிஞ்சு நடந்துக்கோ" மீண்டும் சத்தம் போட்டவனை பார்த்தவளுக்கு அருள் மீது கொலை வெறியே வந்தது , ஏற்கனவே ஸ்ரீ அருளிடம் நெருங்கி பழகுவது அவளுக்கு பிடிக்காது இன்று ஸ்ரீ தன்னை அருளுக்காக திட்டுவதை பார்த்தவள் பொறுக்கமுடியாமல் ,





"அவன் கலெக்டர் ஆனாலும் அவன் நம்ம வீட்டுல மாடு மேய்க்கிற முனியன் பையன் தானே" என்றததுதான் தாமோதம் , அவளை பிடித்து கீழே தள்ளிவிட்டிருந்தான் ஸ்ரீ ,





"இச்சி ...வெளில போடி என் கண்ணுமுன்னால நிக்காத ...போய்டு" என்றவன் தன் கட்டிலில் உட்கார்ந்து முகத்தை திருப்பி கொண்டான்.





கட்டிலில் உட்கார்ந்து இருந்தவனின் மனமும் கீழே விழுந்து இருந்தவள் மனமும் கொதித்து கொண்டிருந்தது , அவன் மனோமோ ,'எப்படி அருளை அவள் கேவலம் படுத்தலாம் , படிச்ச இவளே இப்படி பேசும்போது ...மத்தவங்களுக்கு சொல்லவா வேணும் 'என்று மனதில் நொந்தான் , அவளோ , 'இதுவரை இப்படி முரட்டுத்தனமா நடக்காத அத்தான் அந்த அருளுக்காக தன்னை தள்ளி விட்டதை தாங்க முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்' சிறிது நேரம் சென்று அவளை பார்த்தவன் தான் தள்ளி விட்ட இடத்திலேயே அசையாமல் இருந்தவளை பார்த்து கடுப்பானவன் ,





"உன்ன வெளில போக சொன்னேன்" என்று உறும , ஆத்திரம் மிகுதியாக , "அவனுக்காக என்னை புடிச்சு தள்ளிட்டீங்கள....நான் என்ன இல்லாததைய சொன்னேன்..."என்றவளை இடைமறித்த ஶ்ரீ ,





"வேணாம்டீ செம்ம கோவத்துல இருக்கேன் கையை நீட்டிடப்போறேன் போய்டு" என்று கூற இது மேலும் அவளுக்கு என்னை ஊற்றியதை போல ஆகா ,





" அத்தான் எதுக்கு எடுத்தாலும் அருள் அருள் சொல்லிக்கிட்டு இருக்கிங்கள....அவனால நம்ம வாழ்க்கையை இழந்துட்டு நிக்கப்போறம் பாருங்க...அப்போ நினைச்சாலும் பழைய வாழ்க்கைக்கு போக முடியாது" ஆத்திரமாக கூறியவளை நோக்கி கையை ஓங்கியபடி வந்தவனை , இவர்கள் சண்டை போடும் போதே வந்துவிட்ட அருள், உள்ளே செல்வது நாகரிகம் இல்லை என்பதால் வெளியில் நின்றிந்தவன் பாய்ந்து வந்து ஸ்ரீயின் கையை பிடித்தவாறே ,





"மஞ்சுமா ... நீங்க போங்க ,ஸ்ரீக்கு தலைல அடிபட்டதால ...லேசா கொழம்பிற்கு அதான் புது பழக்கமா கையை ஓங்கிட்டு வரான்..."என்று தன்மையாக பேசிய அருளை பார்த்த மஞ்சு ,





"நீயே சொல்லு அருளு ...உங்கப்பா எங்க வீட்டுல மாடுதான் மேச்சிகிட்டு இருக்காரு , அது சொன்ன தப்பா"விசும்பியபடி சொல்லியவளை பார்த்த ஸ்ரீ,


“மஞ்சுஉஉஉஉ"என்று பல்லைக்கடித்தான் , அவனை திரும்பி பார்த்து முறைத்த அருள் , "


“டேய் மஞ்சுமா இல்லாததைய சொல்லுறாங்க ,இப்போ நீ எதுக்கு தேவ இல்லாம நாங்க பேசும் போது உள்ள வர"என்ற அருள் திரும்பி மஞ்சுவை பார்த்து புன்னைகை செய்தவன் ,





"மஞ்சுமா..நீங்க சொன்னது தப்பே இல்ல...நீங்க இப்போ கிளம்புங்க நாளைக்கு அவனே உங்களை பார்க்க வருவான் அப்போ கோபத்துல இருந்து லேசுல எறங்காதீங்க" என்றவனை பார்த்து ஸ்ரீ முறைத்தான் என்றால் , மஞ்சுவோ உதடு பிதுங்க





"பாரு அருளு ...அத்தானுக்கு அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்காங்களேன்னு , அவங்களுக்கு புடிச்ச மாதிரி ரெட் கலர்ல லோ ஹிப் வச்சு புடவை கட்டிக்கிட்டு மல்லிப்பூ வச்சுக்கிட்டு ஆசையா வந்தா இங்கே நர்ஸ் கிட்ட கொஞ்சிகிட்டு இருக்காங்க...என்ன புடிச்சும் தள்ளிவிட்டுட்டாங்க ...அவங்களே வந்து கெஞ்சினாலும் ... நான் இனிமே பேசமாட்டேன்" என்றவளை பார்த்து அருள் ,'அய்யோ லோ ஹிப் வச்சு கட்டினத என்கிட்ட சொல்லியே ஆவனுமா 'என்றபடி சங்கடமா நெளிய , அங்கே ஸ்ரீயின் நிலையோ பரிதாபமாக இருந்தது .





வந்ததில் இருந்து அவளை சரியாக கவனிக்காதவன் ,அவள் சொல்லிய பின்புதான் புடவையில் வந்தது புத்தியில் உரைத்தது , கண்கள் மின்ன"மஞ்சுஊஊஊஊ ..." என்று சரசமாக அழைத்தபடி அவசரமாக தன்னோடைய பார்வையை அவள் இடுப்பின் புறம் திருப்பியவனை அறிந்தவள் புடவை இழுத்துவிட்டு இடுப்பை மறைத்தபடி அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.





வாயெல்லாம் பல்லாக"சாரிடா மஞ்சு செல்லம்" அத்தான் கிட்ட வா, புடிச்சு தள்ளி விட்டதுல இடுப்பு சுளிக்கிருக்கான்னு பாக்கலாம் ..வா ..வா" அசடு வழிந்தபடி தன் அருகில் இருந்த இடத்தை தட்டியபடி கூறியவனை பார்த்து அருளுக்கு வந்த சிரிப்பை அடக்குவது பெரும் பாடாக இருந்தது,





"அருள் நான் கிளம்புறேன்" என்றவள் திரும்பி ஸ்ரீயை முறைத்துக்கொண்டே அவன் அருகில் சென்று , சடுதியில் அவன் இதழில் அழுத்தமான முத்தத்தை கொடுத்தவள், அவன் உணரும் முன்னரே அவ்விடத்தை விட்டு சென்றிருந்தாள்.





ஸ்ரீக்கு யாரோ தன்னிடம் ஒரு சிப் டீ பருக கொடுத்து, ஒரு இழு தம்மு புடித்து வெளியே விடுவதுற்குள் புடிங்கி விட்டதை போல உணர்ந்தான் , அவள் சென்ற திசையே ஏக்கமாக பார்த்திருந்தவன் பின்பு பரிதாபமாக அருளை பார்க்க , இவ்வளவு நேரம் கட்டுப்படுத்திய சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தான் அருள்.





"விடுடா மஞ்சுமா கோபத்தை பத்திதான் தெரியுமே உனக்கு ...நாளைக்கு போய் வட்டியும் முதலுமா வாங்கிடு" என்ற நண்பனை பார்த்த ஸ்ரீ ஏக்க பெருமூச்சு விட , அப்பொழுதுதான் நினைவு வந்தவனாக அருள் ,





"உள்ள வாங்க"என்று யாரையோ அழைத்ததை பார்த்து யோசனையோடு வாயிலை பார்த்த ஸ்ரீயின் முகம் புன்னகையில் மலர்ந்தது ,





" அமுதா" என்ற ஶ்ரீ "இவ்வளவு நேரம் வெளியிலயா இருந்த" என்று கேட்டவனுக்கு கண்ணீர் மல்க ஆமாம் என்று தலையை ஆட்டியவள் ,





"சாரி அண்ணா நேத்து நான் லேட் பண்ணதாலதானே ,உங்களுக்கு இப்படி ஆச்சு" என்று அழ ஆரம்பித்தவளிடம் ,





"இல்லடா ...உன்னால ஒன்னும் கிடையாது ,இது சின்ன அடித்தான் சரி ஆகிடும் பீல் பண்ணாத" என்றவனை பார்த்து புன்னகை புரிந்தவள் , அருளை பார்த்து ,





"நீ...நீ ...ங்க எப்படி இருக்கீங்க , வலிக்குதா" என்று பரிதவிப்புடன் கேட்டவளை புருவம் சுருக்கி பார்த்தவன் ,"எதுக்கு இங்க வந்த"என்றவனை அதிர்ச்சியுடன் அமுதா பார்க்க ஸ்ரீயோ ,





"அருள் "என்றவனை பார்த்து கையை தூக்கி தடுத்தவன் , அமுதாவை பார்த்து ,





"நீங்க வெளில இருந்து மஞ்சுமா பேசியதை கேட்டிங்கதானே , அதான் நான் மாடு மேய்கிறவரோட பையன் ...ஓஹ் சாரி நீங்கதான் என் பின்னாடி மூணுவருஷமா சுத்திகிட்டு இருந்துருக்கீங்க , எண்ணப்பத்தி ஐ மீன் நான் எந்த ஜாதி எப்படி பட்டவன் எல்லாம் உங்களுக்கு அத்துப்படியாதான் இருக்கும்" என்ற அருள்சிறிது இடைவேளி விட்டு ,





"உங்களுக்கு என் மேல ட்ரு லவ்வா கூட இருக்கலாம் , அதை நான் கொச்சை படுத்த விரும்பல....லவ்னா என்ன , ஊரைவிட்டு ஓடிவந்து யாருக்கும் தெரியாம நம்மை பெற்றவங்க சாபத்தோட , யாரு எப்படி போனா என்ன எனக்கு வேண்டியது கிடைச்சுட்டது அது போதும் என்று சுயநலமா யோசிச்சு , நம்ம காதலால ரெண்டு குடும்பத்துக்குள்ள நடக்கிற மோதல் ,அந்தமோதல் அதையும் தாண்டி ஜாதி கலவரமா வெடிச்சு ,யாருன்னே தெரியாத அப்பாவி மக்கள் நமக்கு சம்பந்தமே இல்லாதவங்க உயிரை கொடுக்கிறதும் , அந்த கலவரத்தால பொதுவுடைமையை சேத படுத்தறதையும் ,நடக்குற எல்லாத்தையும் பார்த்துகிட்டு எனக்கு இதனால ஒரு ம --இம் இல்லை நான் காதலிச்ச பொண்ணுகூட சந்தோசமா இருந்தா போதும்ன்னு கொஞ்ச நாள் வாழ்ந்துட்டு , அந்த பெண் ஜாதிக்காரன் கையால வெட்டு பட்டு உயிரை விட்டு ,பேப்பர்ல என்னோட குடும்பத்தை பத்தியும் ,என்னோட காதல் பத்தியும் கேவலமா செய்தியாவந்து , அதை பலபேர் விமர்சனம் பண்ணுற காதல் எனக்கு வேண்டாங்க ,நீங்க என்ன கல்யாணம் பண்ணனும் நினைச்சாலே இந்தாங்க நடக்கும் , ப்ளீஸ் தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க ... உங்க காதல் உங்க குடும்பத்தையும் ஏன் குடும்பத்தையும் வாழவைக்கிற காதலா இருக்கட்டும்" என்று நீண்ட பேச்சினை முடித்த அருள் அமுதாவின் முகத்தை பார்க்க அவள் முகத்தில் குழப்ப ரேகைகள் ,அதை பார்த்தவன் முகத்தில் புன்னகை யோசிக்கிறா என்று நினைத்த அருள், திரும்பி ஸ்ரீயை பார்க்க அவன் இவனை முறைத்து கொண்டே பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டலை எடுத்து அருளிடம் நீட்டினான்.





சிறிது நேரம் யோசித்த அமுதா ,முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு ,





"இப்போ நீங்க பேசினது எந்த படத்தோட டயலாக் ...நானும் மூளையை தட்டி தட்டி யோசிக்கிறேன் நியாபகம் வர மாட்டிங்குது" திரும்பவும் எதையோ யோசித்தபடி கூறியதை கேட்டு , தண்ணீர் குடித்திருந்த அருளுக்கு புரை ஏறியது என்றால் ஸ்ரீக்கு சிரித்து சிரித்து புரை ஏறியது,





"அண்ணா உங்களுக்கு ஞாபகம் இருக்க எந்தப்படம்னுன் ...டயலாக் செம்மையை இருந்துச்சுன்னா" என்றவளை பார்த்து பெரிதாக சிரித்த ஸ்ரீ ,





"ஹாஹா ...அது ஒரு படத்தோட ...ஹாஹா....டயலாக் இல்லாம எல்லா படத்திலிருந்தும் பயபுள்ள சுட்டுருக்கு....அதுக்காவது நீ கொஞ்சம் எமோஷனலா பேசியிருக்கலாம்" என்றவனை ,





"அதானே நாம என்னைக்கு உருப்புடுற போல யோசிச்சுருக்கோம் மத்தவங்களுக்கு புரியவைக்க"என்றபடி உள்ளே வந்தார் சேகர்.





நேராக அருளிடம் சென்றவர் அருளை கட்டிப்பிடித்து முதுகில் தட்டி கொடுத்து ,





"அருளு உன்னை நெனைச்சு பெருமையா இருக்குது என்ன ஒரு முதிர்ச்சியான சிந்தனை ...சில தருதலைக்கு இது எல்லாம் புரியாது , எப்போடா கேப்பு கிடைக்கும் எப்படி மஞ்சுவா கரெக்ட் பண்ணலாம்னு சுத்திகிட்டு இருக்கிறவங்களுக்கு உன்னோட கருத்து புரியாது" என்றவர் திரும்பி அமுதாவை நன்றாக உத்துபார்த்தவர் ,





"உங்க அண்ணன் அந்த கட்சில மாவட்ட தலைவர்தானே" என்றத்துக்கு ஆமாம் என்று தலை ஆட்டியவளை பார்த்து பெருமூச்சு விட்டவர் ,





"இங்க பாருமா ...நீங்க ரெண்டு பெரும் கல்யாணம் பண்ண அருள் சொன்னது கண்டிப்பா நடக்கும் தயவு செஞ்சு நிலைமையை புரிஞ்சுக்கோ ,எல்லாருக்கும் ஆசை பட்ட வாழ்க்கை கிடைக்காது , படிப்புல கவனத்தை செலுத்து உன்னோடையது உண்மையான காதலா இருந்தா ,அவனை நிம்மதியா இருக்கவிடு" என்றவர் அருளை பார்த்து"அருள் வா டாக்டர் கிட்ட டிஸ்சார்ஜ் பத்தி கேட்டுட்டு வருவோம்"





அவர்கள் சென்றவுடன் முகத்தை தொங்க போட்டபடி அமர்ந்து இருந்தவளை பார்த்து ஸ்ரீ ,





"இப்போ என்ன ஆச்சுன்னு நீ மூஞ்சை தொங்கபோட்டுட்டு இருக்க ,இந்த அண்ணனை நம்புற தானே"என்றதற்கு அவள் தலையை ஆட்ட ,





"அவன் நேத்து புல்லா அந்த ட்ரெஸ்ஸுல மூக்கை மூக்க தொடைச்சுக்கிட்டு இருந்தான் ஏன் தெரியுமா" என்று கிண்டலாக கேட்டவனை பார்த்து மலர்ந்தவள் , "உண்மையாவா அண்ணா"என்றதற்கு ,





"ஆமா டா இந்த அண்ணன் இருக்கேன் கவலை படாத , லவ் ஜாதி பார்த்து வரது கிடையாது புரியுதா எங்க சித்தப்பா ஓல்ட் மேன் ...அதான் இப்படி பேசிகிட்டு போறாரு அருளுக்கு உள்ளுக்குள்ள உன் மேல ஆசை இருக்கு ...இந்த மூணு வருசமா இருந்ததை போலவே இனிமேலும் இரு...உன்னால எப்ப இதுக்கு மேல முடியாதுனு தோணுதோ அப்போ இந்த அண்ணனை தேடி பண்ருட்டிக்கு வந்துடு, கடலூர் நம்ப கோட்டைடா அங்க நம்மளை மீறி எவனும் வர முடியாது புரியுதா" என்று கர்வமாக கூறியவனை அண்ணா'' என்று சந்தோசத்துடன் அவனை அணைத்து கொண்டாள் .





ரூமிற்குள் நுழைந்த நர்ஸ் அங்கே ஸ்ரீ ஒரு பெண்ணை அணைத்தபடி இருப்பதை பார்த்தவள் அவள் போட்டிருந்த உடையை கண்டு திடுக்கிட்டாள் ,காலைல வந்த பொண்ணு புடவை கட்டிருந்ததே இந்த பொண்ணு சுடிதார் போட்டுருக்கு என்று குழப்புத்துடன் அவர்களையே பார்த்திருந்தவளை கண்டு கொண்ட ஸ்ரீ , அந்த நர்ஸ்சை தலையாட்டிஅழைத்தவன் ,தன்னோடைய இடதுபுறத்து தோள் வளைவில் அமுதா இருப்பதால் , வலது புறத்து மார்பை காட்டி வந்து சாஞ்சுக்கோ என்று சைகை செய்தவனை பார்த்து அரண்டுபோன நர்ஸ் ,அந்த அறையை விட்டு வேகமா வெளியேறியவள் பின்னாடி


நின்றிருந்த அருள் மீது மோதி கொண்டவள் அந்த இடத்தை விட்டு பேய்யை கண்டதை போல வெளியேறினாள் ,





இதையெல்லாம் பார்த்த ஸ்ரீக்கு சிரிப்பு வர அருளை பார்க்க அவனும் இவனைத்தான் பார்த்திருந்தான் பின்பு இருவரும் கண்ணடித்து சத்தமில்லாமல் சிரிக்க ஆரம்பித்தனர், கூடவே விதியும்.










 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 12





இன்னும் கல்லூரி முடிய மூன்று மாதங்களே என்ற நிலையில் ஸ்ரீயும் , அருளும் படிப்பில் கவனம் செலுத்தினர். ஆனால் பாண்டியோ அன்று நடந்த நிகழ்வுக்கு பிறகு அவர்களை வெளிப்படையாக சீண்டுவதும், பெறுப்பேத்துவதுமாக இருந்தவனை அவர்கள் இருவரும் சிறிதும் சட்டைபண்ணவில்லை.





அமுதாவும் ஸ்ரீயின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தவள் , அருளிடம் அதற்கு பிறகு பேச முயற்சி செய்யவில்லை ஆனால் அவனை கண்களால் பருகுவதை மட்டும் விடவில்லை. இப்படியே நாட்கள் செல்ல இறுதி தேர்வும் எழுதி , தேர்வு முடிவுகளும் அறிவித்து , பட்டம் வாங்கும் நாளும் வந்தது.





பாண்டி தன்னோட நண்பர்கள் சூழ அரட்டை அடித்து கொண்டிருந்தான் , அவனை நோக்கி தயங்கி தயங்கி வந்த அமுதாவை பார்த்தவன் , என்ன என்று கேட்க ,





“பாண்டி .... கொஞ்சம் அங்க வந்து பாரேன்” என்று பதட்டத்துடன் கூறியவளை யோசனையாக பார்த்தவன், எதுவும் கூறாமல் அவளை பின் தொடர்ந்து சென்றான் ,





“ஏய் புள்ள பேசாம உங்கக்காவை கட்டிக்கறதுக்கு பதிலா உன்ன கட்டிக்கிலாம் போல ....புடவைல பொண்ணு போலத்தான் தெரியுற” என்று ஏதோ நகைச்சுவையை கூறியதை போல சத்தம் போட்டு சிரித்தவனை முறைத்தாள் அமுதா.





“கட்டிக்கிலாம் கட்டிக்கிலாம் ... அப்புறம் நீ இப்படி பல்லு காட்டி சிரிக்க பல்லு இருக்காது பரவாலாய” என்றவளை குறும்பாய் பார்த்தவன் ,





“இந்த வாய் இருக்கே வாய் அது வாயே இல்ல ..என்ன இருந்தாலும் உங்க அக்கா போல வருமா போடி” என்றவனை பார்த்து திரும்பவும் முறைத்தவள் சற்றென்று முகத்தை அழுவதை போல வைத்துக்கொண்டு ,





“பாண்டி அங்க பாரு ....” என்று கையை ஓர் இடத்தில் நீட்ட அங்கே உள்ள சுவற்றில் அமுதா அமுதா என்று எழுதியது மட்டும் இல்லாமல் அம்பு குறியும் போட்டுருந்ததை பார்த்த பாண்டிக்கு ரத்தம் சூடாக ,





“யார் இத செஞ்சது” என்று உறுமியவன் அந்த உள் அரங்கு விளையாட்டு அரங்கத்தை சுற்றியும் பார்வையில் ஸ்ரீயும் அருளும் பட்டனர். வேகமாக அவர்கள் அருகில் சென்றவன் ,





“என்ன தையிரியும் இருந்தா அமுதா பேரை சுவற்றில் எழுதிருப்பட” என்றபடி அவர்களை அடிக்க கைகளை ஓங்கியவனின் கையை புடித்து தடுத்த ஸ்ரீ ,





“ஹாஹா .... அருளு ஆடு தானா வந்து என்ன வெட்டு வெட்டுன்னு தலையை கொடுக்குது ...ஹாஹா ...ஹாஹா ” சத்தம்போட்டு சிரித்தவன் , சுவற்றில் எழுந்திருந்த அமுதா என்ற பேரை அழிக்க ஆரம்பித்தான்.





மிரட்சியுடன் அவர்களையே பார்த்திருந்த அமுதா அருகில் வந்த அருள் ,





“ ஏய் பாப்பா நீ எடுத்த காலி பண்ணு .... உன்ன வச்சுதான் இவனை வரவச்சோம் ... போ போ ...நிக்காத” என்றவன் வாயிலை நோக்கி கையை காட்ட , அதில் கோவம் கொண்டவள்





“யாருடா பாப்பா...என்ன பார்த்தா பாப்பா போலாய இருக்கு” என்று எகிறிட்டு வந்தவளை பார்த்த பாண்டி





“அமுதா இந்த பயலுவ கிட்ட உனக்கு என்ன பேச்சு .... ஏற்கனவே என்கிட்ட வாங்கி கட்டினவங்க...திரும்பவும் வாங்கணும் போல நீ போ” என்றவனை தொடர்ந்து அருளும்





“என்ன லுக்கு ...அதான் அவனே சொல்லிட்டான்ல ...கிளம்பு கிளம்பு ...” என்று சத்தமாக கூறியவன் “மனசுல பெரிய உலக அழகின்னு நினைப்பு” என்று முணுமுணுக்க அதை காதில் வாங்கியவள் அவனை திரும்பி பார்த்து முறைத்தபடி வெளியே செல்ல , அருள் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தமர்ந்தது, இதை பார்த்தவளின் முகத்திலும் சிறுநகை பூத்தது.


“அப்புறம் மச்சான் உனக்கு செட்டில் பண்ண வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு ...அத கொடுக்கத்தான் உன்ன இங்க வரவச்சோம்” என்ற ஸ்ரீயை நக்கல் பார்வை பார்த்தவன் ,





“அன்னைக்கு மண்டை ஒடஞ்சது பத்தலை போல” என்றவனை ஓங்கி மிதித்திருந்தான் அருள் ,





“டேய் விளக்கெண்ணை ....நாங்க என்ன சூப்பர் ஹீரோவா கூட்டமா ஆயுதத்தோடு வரவங்களை சமாளிக்க ...இப்போவாடா ஒத்தைக்கு ஒத்தை” என்ற ஸ்ரீ , பாண்டியை சராமாரியாக தாக்க ஆரம்பித்திருந்தான் , கூடவே அருளும் சேர்ந்து கொள்ள பாண்டியால் சமாளிக்க முடியாமல் தடுமாறியவனுக்கு கை கொடுப்பது போல அவன் நண்பர்களும் சண்டையில் கலந்து கொண்டனர்.





பாண்டி மீது கொலை வெறியில் இருந்த அருளும் ஸ்ரீயும் அவனையும் அவன் நண்பர்களையும் வெளியே தெரியாத அளவுக்கு உள் காயம் வரும் படி அடித்து வெளுத்திருந்தனர்.


தங்களின் சட்டையை நீவி விட்ட ஸ்ரீ ,





“டேய் பாண்டி வெளில போய் எங்க கிட்ட அடிவாங்கினேன்னு சொன்ன உனக்குத்தான் அசிங்கம் ... வரட்டா மாப்பிளை” என்றவன் விசிலடித்தபடி வெளியேறினான் அவனை தொடர்ந்து அருளும் ,





“டேய் பங்காளி .... இப்போ கொடுத்தது உன்னோட மூளைல இருந்து எப்பவும் மறைய கூடாது .... இனி நாம எப்பவும் சந்திக்காம இருக்கிறதுதான் உனக்கு நல்லது வரட்டா” என்றவனும் விசிலடித்தபடி வெளி ஏறினான்.





அவர்கள் போவதையே பார்த்திருந்த பாண்டியின் மனதில் அவர்களை ஒழிக்கும் வெறி உண்டானது , ‘சமயம் வரும் போது நான் யாருனு காட்டுறேண்டா‘ என்று மனதி கருவியவன் தாங்கி தாங்கி வெளியேறிருந்தான். பட்டம் வாங்க அவன் முறை வந்ததும் , சிறு தடுமாற்றத்துடன் மேடை எறியவனை பார்த்து ஸ்ரீயும் அருளும் எழுந்து நின்று கை தட்டினர் , இதை பார்த்த பாண்டி முடிவே கட்டினான் அவர்கள் அழிவு தன் கையால்தான் என்று.





இப்படியே சில காலங்கள்வருடங்கள் உருண்டோட அருளும் ஸ்ரீயும் சேகரிடம் ஜூனியராக ப்ராசிட்டிஸ் செய்து கொண்டிருந்தனர் , அவர்களின் புகழ நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே சென்றது.





ஸ்ரீக்கும் மஞ்சுக்கும் திருமணம் செய்ய எண்ணிய பெரியவர்கள் அவர்கள் இருவர் ஜாதகமும் பார்க்க மஞ்சுக்கு 28 வயதில் திருமணம் பண்ணினால்தான் மாங்கல்ய பலம் நன்றாக இருக்கும் என்று ஜோசியர் கூறியதை கேட்டவர்கள் , சிறிது காலம் சென்றபின் திருமணம் நடத்த முடிவு செய்தனர் , இதனால் மஞ்சு மேலே படிக்கச் சென்னை சென்றுவிட்டாள்.





ஒருநாள் இரவு ஸ்ரீயிடம் வந்து சேர்ந்தாள் அமுதா , தன்னால் இனிமேல் அங்கே தாக்குப்பிடிக்க முடியாது என்றும் , தனக்கு கல்யாண ஏற்பாடு நடப்பதாக கூறியவள் தனக்கும் அருளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்குமாறு ஸ்ரீயிடும் கெஞ்சியவளை பார்த்த ஸ்ரீ , விரைவாக கல்யாணத்தை நடத்தும் முடிவுக்கு வந்தவன் படாதபாடு பட்டு அருளை சம்மதிக்க வைத்து தன் சித்தப்பாவையும் சமாளித்து பல பேர் எதிர்ப்பை மீறி ஓர் நல்ல நாளில் அருள் அமுதா திருமணத்தையும் முடித்திருந்தான். ஸ்ரீயையும் அமுதாவையும் தவிர யார் முகத்திலயும் துளிகூட மகிழ்ச்சி என்பது இல்லமால் போனது.





அருளுடன் ஆனா அமுதாவின் கல்யாணத்தை கேள்வி பட்ட பாண்டி வெகுண்டு எழுந்தான் , தங்கள் ஜாதிக்கே ஏற்பட்ட இழுக்காக எண்ணியவன் அப்பொழுதே அருளையும் அமுதாவையும் போட்டு தள்ள முடிவு செய்தவனால் அதை செயல் படுத்த முடியாமல் தடுமாறினான் , அவனால் அவர்கள் அருகில் நெருங்க கூட முடியவில்லை. இது மேலும் ஏரியிற தீயில் என்னைவிடுவது போல ஆக அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான்.





இதற்கிடையில் முதலில் முரண்டு பிடித்த அருள் அமுதாவின் காதலில் கரைந்து போனவன் “அம்மு ...அம்மு ” என்று அவள் பின்னையே சுற்ற ஆரம்பித்தான் , அதன் விளைவாக சீக்கிரமே கருவுற்றாள் அமுதா.





சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனான் அருள் , அமுதாவை உள்ளங்கையில் வைத்து தங்கினான் , தான் மாமா ஆகா போறதாக எல்லாரிடம் பெருமை அடித்த ஸ்ரீ ஊரே வியக்கும் அளவுக்கு வெகு விமர்சியாக வளைகாப்பை நடத்தி முடித்திருந்தான்.





வளைகாப்பு நடத்திய சில நாட்களிலே அமுதாவுக்கு பிரசவ வலி எடுத்து , அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் . அந்த குட்டி தேவதையின் வரவை சந்தோசத்தோடு வரவேற்றனர் அவ்மூவரும். அவர்களை பழிவாங்க காத்து கொண்டிருந்த பாண்டிக்கு அவர்களை போட்டுத்தள்ளும் வாய்ப்பும் வந்தது.





எங்கயோ விடாமல் செல் போன் அடிப்பதில் கலைந்த ஸ்ரீ , சுற்றும் முற்றியும் பார்க்க தான் இருக்கும் இடம் உணர்ந்தவன் , சற்று முன்பு நடந்ததையும் நினைத்து பார்த்தவனின் கவனத்தை மறுபடியும் கலைத்தது மொபைலின் அழைப்பு , கடுப்புடன் எடுத்தவன் காதில் வைக்க,





“ஸ்ரீ... எங்க இருக்க” என்ற ஹரியின் கேள்விக்கு பதில் சொல்லமால் தூரத்தை வெறித்திருந்தான் ஸ்ரீ , மீண்டும் பொறுமை இழந்த குரலில் ஹரி ,





“ஸ்ரீஇஇஇ ... எங்க இருக்க...” அழுத்தமாய் வந்த கேள்வியில் சலித்தவன் ,





“இப்போ எதுக்கு கத்துற ... கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா.. ம...மஞ்சு...எப்படி இருக்கா” தயங்கியபடி கேட்டவனுக்கு ,





“முதல நீ எங்க இருக்க ....இனி என்னோட பொண்டாட்டியை பத்தி நீ கவலை படாத... உன்னோட பொண்டாட்டி எங்க இருக்காங்கனு தெரியுமா” காட்டமாக கேட்டவனுக்கு ,





“முந்திரி தோப்புல இருக்கேன் ....சாரி போலீஸ்கார் இனி உன்னோட பொண்டாட்டியை பத்தி கேட்க மாட்டேன்” என்றவன் கடகட என்று பெரும் குரலெடுத்து சிரிக்க ஆரம்பித்தான் ,பின்பு





“என் பொண்டாட்டியா ...யாருப்பா அது ....ஓஹ் அந்த கிறுக்கிய சொல்லுறியா... ஹாஹா ...எங்களுக்கு நடந்தது கிறுக்கு கல்யாணம் பிரதர் ...அந்த கிறுக்கிக்கிட்ட அந்த மஞ்ச கயிறை கழட்டிதான்னு கேட்டா , மறு பேச்சு பேசாம கழட்டி கொடுத்துடுவா... ஹாஹா..”





ஏதோ சாகசம் பண்ணிட்டவன் போல பெருமையாக கூறி சிரித்தவனை கேட்டு ஹரியால் பல்லை மட்டும்தான் கடிக்க முடிந்தது ,





“ஸ்ரீ.... அங்க ரொம்ப நேரம் இருக்காதா .. நீ பண்ண நினைக்கிறது மகா பாவம்டா ... அதுவும் கரெக்டா சிந்திக்க கூட அவங்களால முடியாது ... நீதான் ஹெல்ப்புல்ல இருக்கணும்” என்றவனுக்கு





“தம்பி எங்களுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு ... நீங்க உங்க லைப்ப மட்டும் பாருங்க” என்றவன் போனை கட் பண்ணி பாக்கெட்டில் போட்டவன் திரும்பி நின்று அருகில் இருந்த மரத்தை தடவியவன்,





“ அருள்... உன்கிட்ட சொன்னதை எதையும் என்னால பண்ண முடிலடா... இனியும் பண்ண முடியும்னு தெரில ஏன்னா நானே இப்போ செல்லா காசா நிக்கிறேண்டா...மஞ்சுவை.... வி..வி..விட்டுட்டேன்டா” என்று தொண்டை அடைக்க கூறியவன் , மேலே வானத்தை பார்த்து ,





“பை டா அருள்... நான் ஹாப்பியாதான் இருக்கேன் ... நீ அங்க அம்மு கூட சந்தோசமா இரு... இனி இந்த இடத்துக்கு வர முடியும்னு தோணல” என்றவன் திரும்பவும் ஏக்கத்துடன் அந்த மரத்தை வருடியவன் அந்த இடத்தை விட்டு வேகமா விலகி காரை கிளப்பிகொண்டு சென்றான்.





நேரே தங்கி இருந்த ஹோட்டல்க்கு வந்தவனை இடைமறித்த ரிஸ்ப்ஷனிஸ்ட்,





“அண்ணா அண்ணி சாவி இல்லாம வந்தாங்க , மாஸ்டர் கீ போட்டு துறந்து விட்டேன்” என்றவனை பார்த்து சிரித்தவன் ,





“லஞ்ச் எங்கயாவது ஆர்டர் பண்ணி ரூமுக்கு அனுப்பி வைக்கிறியா” என்றவன் வேக நடைகளோடு தன் அறைக்குள் நுழைந்தான்.





ரூம்குள் நுழைந்தவன் அங்கே கட்டிலில் படுத்திருந்தவளை பார்த்து தலையை ஆட்டியவன் ,


“எப்படி தூங்குது பாரு” முணுமுணுத்தவன் , குளிப்பதற்காக பாத்ரூமில் நுழைந்தான். குளித்து முடித்து வெளியே வரவும் சாப்பாடு வரவும் சரியாக இருக்க , பசி வயிற்றை கிள்ள அவசரமாக இலையை விரித்து சாதம் போட்டு சாம்பார் ஊற்றியவன் தேவையான அளவு பொரியலையும் எடுத்தவன் திரும்பி திவியை பார்க்க அடித்து போட்டதை போல தூங்கி கொண்டிருந்தாள்.


அவசர அவசரமாக சாப்பிட்டவன் மறுசாதம் போட்டு குழம்பு ஊற்றி பிசைந்தவன் வாய்க்கு கொண்டு போகும் வேளையில் அதை திருப்பி தன் வாயிற்குள் வைத்துக்கொண்டாள் திவி, அவளை முறைத்தவன்,





“அது எப்படி இப்ப மட்டும் எழுந்துகிட்ட” என்றவனை பார்த்து சிரித்தவள் ,





“வத்தக்குழம்பு நல்லா வாசனையா இருக்கு ...எனக்கு வத்தக்குழம்பு ரொம்ப பிடிக்கும்” என்றவள் அவன் இலையில் இருந்து உணவு உன்ன ஆரம்பித்தாள் , அதை கவனித்த ஸ்ரீ கண்டுகொள்ளாமல் அவனும் சாப்பிடுவதில் மும்முரம் காட்டினான்.





சிறிது நேரத்தில் அறையை காலி செய்தவன் , காரை மிதமான ஸ்பீடில் ஓட்டியபடி அவளை நோட்டம் விட்டு கொண்டே வந்தான் , காரில் எறியதில் இருந்து பலத்த சிந்தனையில் இருந்தவள் மறந்தும் அவன் புறம் திரும்பவே இல்லை , பாண்டியை தாண்டியதும் காரை கடற்கரை சாலை ஓரத்தில் நிறுத்தியவன் அவளையே சிறிது நேரம் பார்த்திருந்தான் , பின்பு தொண்டையை கனைத்தபடி





“திவி” என்ற அழைப்பிற்கு பதில் ஏதும் இல்லமால் போகவே , மீண்டும் அழுத்தமாக





“திவி....” என்றதில் தன் உணர்வு பெற்றவள் அவனை என்ன என்பதுபோல ஒரு பார்வை பார்த்தாள்.





“திவிக்குட்டி... அந்த கயிறை கழட்டி கடல்ல தூக்கி போட்டுட்டு வரலாமா” என்றவனை புருவம் சுருக்கி பார்த்தவள் ,





“எந்த கயிறை...” என்று கேட்டவளின் கழுத்தை நெறிக்கும் ஆவல் வந்தாலும் பொறுமை காத்தவன் ,





“அதான் இன்னைக்கு காலைல சும்மா கட்டினேன்ல அந்த மஞ்ச கயித்தை கழட்டி கொடு” இப்பொழுது கொஞ்சம் சூடாகவே கேட்டான் ஸ்ரீ .





“ இது மஞ்ச கயிறு இல்ல தாலி கயிறு ... “ என்றவளை அதிர்ச்சியாக பார்த்தவன் ,





“அப்படி இல்லடா திவிக்குட்டி... தாலி கட்டிருந்தாதான் அதுக்கு பேரு தாலிக்கயிறு ...இதுல வெறும் ஒரு ரூபாய்க்கு மஞ்சள் கோர்த்து கட்டியிறுக்கு இதுக்கு பேரு சாமி கயிறு...புரியுதா” பரிதாபமாக அவள் முகத்தை பார்த்து கூறியவனை கண்டு புன்னகைத்தவள் ,





“இம்ம்.. புரியுது இது தங்கம் கோர்க்காத சுத்தமான ஒரிஜினல் தாலி கயிறு ...” என்றவள் மேலும்





“இதை நான் கழட்டி தரமாட்டேன்... “ என்றபடி அதை எடுத்து சுடிதார்க்குள் மறைத்து கொண்டாள்.





‘இது என்னடா ஸ்ரீக்கு வந்த சோதனை ... வெளில போன ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள நானே விட்டுக்கிட்டேன் போலயே’ என்று மனதில் நொந்தவன் ,





“திவிக்குட்டி... உங்க அத்தானை மறந்துட்டு பேசுற... இப்போ இத நீ கழட்டி தருவியாம்” என்றவுடன் அவள் முகம் யோசனையில் சுருங்கியது , ‘யோசிக்கிற ...யோசிக்கிற...’ என்று மனதில் நினைத்தவன் எதிர்பார்ப்புடன் அவள் முகத்தை பார்த்திருந்தான்.


சிறிது நேரம் யோசித்தவளின் முகம் வேதனையில் சுருங்கியது பின்பு அவனை கலங்கிய கண்களோடு பார்த்தவள் ,





“நோ...” என்றதும் அதில் ஆத்திரம் அதிகம் ஆக ,





“நோனா ....என்ன அர்த்தம் ” என்றதற்கு , தீர்க்கமாய்





“நோ மீன்ஸ் நோ” என்றவளை திகைத்து பார்த்திருந்தான் ஸ்ரீ.

 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 13



“நோ மீன்ஸ் நோ” என்றவளை முதலில் திகைத்து போய் பார்த்தவன் ,பின்பு கிறுக்கி போல இருந்துட்டு என்ன பேச்சு பேசுறா என்று கோபம் தலைக்கு மேல ஏற,



“ஏய் .... என்ன நக்கலா இல்ல நக்கலானு கேட்குறேன் ... இப்படியே ஒன்னு வுட்டேன் வை மூஞ்சு மோரை எல்லாம் பேத்துக்கும்... அடச்சீ அந்த கயிறை கழட்டி கொடு” என்று கத்தியவனை , பயப்பார்வை பார்த்தவள் , தாலியை இறுக்கி பிடித்தபடி முடியாது என்பதை போல தலை ஆட்டியவளை பார்க்க பார்க்க ஆத்திரம் அதிகம் ஆகா, என்ன பேசுவது என்று தெரியாமல் ,



“ என்னடி... காலை வரைக்கும் அத்தான் பொத்தானு உருகிட்டு...இப்போ பத்தினி வேஷம் போடுறயா” என்றவன் தலையை அழுந்த கோதிய படி ,



“திவி...பி சீரியஸ்... விளையாடாத... நானே உன்ன அந்த மலை உச்சிக்கு கூட்டிட்டு போய் தள்ளி விடுறேன் சரியா... உன்னோட ஆசை அதானே ... என்ன பத்தி உனக்கு என்ன தெரியும் சொல்லு ... கல்யாணம் பண்ணுறதா இருந்தா நான் மஞ்சுவ கல்யாணம் பண்ணிருக்க மாட்டேனா... ப்ளீஸ் கழட்டி கொடு” சிறு பிள்ளைக்கு சொல்லுவது போல பொறுமையாக அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.



சிறிது நேரம் அவனையே கண் கலங்க பார்த்தவள் தாலியை மறுபடியும் இறுக்கி பிடித்தபடி,

“எனக்கு...அத்தான் உயிர்தான் ...ஆனாலும் ” என்று ஏதோ கூற வந்தவளை தடுத்து நிறுத்தியவன் ,

“பாரு...திவிக்குட்டி எனக்கு தெரியும் உங்க அத்தானை மறக்க முடியாதுனு..” என்றவன் அவள் முகத்தை பார்க்க அங்கே குழப்ப ரேகைகள் சூழுந்திருந்தது மேலும் அவள் கண்களில் இருந்து அருவியாய் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது, இதை எல்லாம் பார்த்தவன் குழம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும் என்று முடிவு பண்ணியவன் மேலும் அவளை குழப்புவதாக நினைத்து அவள் மனதில் மறைந்து இருந்த ரணங்களை கிளற ஆரம்பித்தான்.



“இங்கபாரு...அன்னைக்கு உன் கண் முன்னாடிதானே உங்க சிஸ்டரும் உன்னோட அத்தானும் ஹனிமூனுக்கு வந்துருந்தாங்க” அந்த உன் அத்தான் என்பதில் அழுத்தம் கொடுத்து சொல்லியவனின் மனசாட்சி,



‘வேணாம்டா ஸ்ரீ அவங்க ஹனிமூன்க்கா வந்தாங்க ...நீ போன் போட்டு வர சொன்னதாலதானே வந்தாங்க... இப்படி அநியாயமா இந்த அப்பாவி பொண்ண ஏமாத்தாதே’ என்ற மனசாட்சியின் புலம்பலுக்கு செவி சாய்க்காதவன் ,



‘எனக்கு யாரு பத்தியும் கவலை இல்லை ... இவ எக்கேடு கெட்டாலும் ஒன்னும் இல்ல ... நான் கட்டுனது அவ கழுத்துல இருக்க கூடாது ...எனக்கு யாரும் வேணாம்’ என்று மனதில் அலறியவன் , அவள் முகத்தையே பார்க்க அங்கே கோபத்தின் சாயல் தெரிந்ததை மேலும் அதிக படுத்த எண்ணி,



“திவி...உன்னோட வாழ்க்கையைத்தான் உன் சிஸ்டர் வாழுந்துட்டு இருக்கா ... நீ அவங்களுக்கு யாருன்னு ப்ரோவ் பண்ண வேண்ணாம் ... உன் கழுத்துல நான் கட்டினது இருந்துச்சுன்னா , உனக்கு ஒரு குற்ற உணர்ச்சியை கொடுக்கும் அதை பேசாம கழட்டி வீசி எரிஞ்சுடு... யாரை பத்தியும் கவலை படாதே இது கலியுகம்... உன்னோட இஷ்ட படி நடக்கலாம் ...உன்ன கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை” மூச்சு விடாமல் பேசியவன் , ‘அடேய் ஸ்ரீ இந்த மாதிரி வசனத்தை எல்லாம் கோர்ட்ல பேசிருந்தன ...இந்நேரம் டாப் லெவல் வக்கீல் ஆயிருப்ப ...நீ இவளவு கஷ்ட பட்டு பேசுனது எல்லாத்தையும் சீரியஸ்சா கேட்ட மாதிரி மூஞ்சை வச்சுருக்காளே இப்போ என்ன சொல்லுவானு நீயே பாரு ‘ என்ற மனசாட்சியின் கேலியை புறம் தள்ளியவன் , அவளையே பார்த்திருக்க , ரொம்ப நேரம் சிந்தித்தவள் ஒரு முடிவு எடுத்தவளாக பெருமூச்சை வெளியே விட்டு நிமிர்ந்து உட்கார்ந்து அவனை பார்த்தபடி,



“இந்த ஜென்மத்துல ... எங்க அத்தான் எனக்கு கிடையாது...” தேம்பியபடி கூறியவள் மேலும்



“எங்க அத்தான் நினைவோடவே நீங்க இருக்கிற வரைக்கும் உயிரோடு இருந்துக்குவேன்... அப்புறம் உங்க கூடவே நானும் மேல வந்துடுவன்”



“என் கூட மேல வரியா ...எங்க” என்று எரிச்சலுடன் கேட்டவனை புரியாமல் பார்த்தவள், அவனை முறைத்தபடி,



“நீங்கதான் இன்னும் கொஞ்ச நாள்ல செத்து போய்டுவிங்கள... அப்போ நானும் உங்க கூடவே வரேன் ... அதுவரைக்கும் உங்ககூட ஒய்பா இருந்துட்டு போறேன்” கடுப்பாக கூறியவளை பார்த்து அதிர்ந்து விழித்தவன் , ‘ இவளே என்னை அனுப்பிடுவா போலயே..இவகிட்ட கேன்சர்னு சொன்னது பொய்ன்னு சொல்லிடலாமா’ என்று மனதில் நினைத்தவன் அந்த எண்ணத்தை உதறி எறிந்தான்.



“எப்புடி எப்புடி ... நான் கட்டுன கயிற்றை கழுத்துல வச்சுக்கிட்டே உங்க அத்தானை நினைச்சுகிட்டே காலத்தை தள்ளிடுவ அப்படித்தானே ... நானும் நம்மதானே சாக போறமே ... இருந்துட்டு போகட்டும்னு விட்டுட்டு ... வாயை பொத்திகிட்டு கண்டுக்காத மாறியே போய்கிட்டு இருக்கணும் அப்படித்தானே” என்று ஒரு மாதிரி குரலில் கூறியவனை கண்டு பதில் ஏதும் சொல்லாமல் திரு திரு என்று முழித்தவளை பார்த்தவனுக்கு வெறி ஏற,



“ஓஹ்... அப்போ அப்படித்தானா” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டவனை பார்த்து எதுவும் கூறாமல் தலை குனிந்து இருந்தவளின் கன்னத்தை வலிக்க பற்றி நிமிர்த்தியவன்,



“வேணாம் டீ ...என்ன கோப படுத்தி பாக்காத அடிச்சே கொன்னுடுவேன் ... என்ன என்ன கையாலாகாத நினைச்சுட்டியா ... மரியாதையா தாலியை கழட்டி கொடுத்துட்டு போய்டு...” கடுமையாக கூறியவனின் பிடியில் இருந்து திமிறி விடுவித்தவள்,



“விடுங்க ...நான் குடுக்க மாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தவளிடம் இருந்து வலிக்க கயிற்றை பற்ற முனைந்தவனை திவியின் குரல் தடுத்தது,



“ நான் குடுக்க மாட்டேன் மீறி எடுத்தா ... மஞ்சு கிட்ட போய் எல்லாத்தையும் சொல்லிடுவன்” என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தவன் ,



“என்னடி கிறுக்கி என்னையே மிரட்டுரையா” என்றபடி அவள் கழுத்தை நெறிக்க முயன்றவனின் கைகளை நறுக்கென்று கடித்து வைத்தவள், அழுகையுடன்



“ உண்மையிலேயே அவங்க கிட்ட உண்மையை சொல்லி ஹரி கூட வாழ விடமாட்டேன் ...இது முருக்ஸ் மேல சத்தியம்” என்று கூறியவளை பார்த்து ச்சை என்று தள்ளி விட்டவன் , அதன் இருக்கையில் நிமிர்ந்து கடலை வெறிக்க ஆரம்பித்தான்.



பல்வேறு சிந்தனைகளில் சிக்கி தவித்தவன் பின்பு ஒரு முடிவு எடுத்தவனாக, அவளை திரும்பி பார்த்து



“சோ இனிமே என்னோட பொண்டாட்டிய இருக்கலாம்னு முடிவு பண்ணிட்ட… அப்படித்தானே” என்றவனை பார்த்து வேகமாக தலையை ஆட்டி ,



“ இம்ம்..இம்ம்..” என்ற திவியை ‘இருடி... உன்ன கதறிக்கிட்டு ஓடவிடுறேன்’ என்று மனதில் நினைத்தவன் அவளை பார்த்து கோணல் சிரிப்பு சிரித்தபடி,



“அப்போ இன்னைக்கு நைட் மஜாதான்” என்று கண்ணடித்தபடி கூறியவனை அதிர்ச்சியுடன் பார்த்த திவி, முகத்தை அவசரமாக வெளிப்புறம் திருப்ப அதை பார்த்த ஸ்ரீ சத்தம்போட்டு சிரித்தபடி,



“நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை

மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை...

இன்று முதல் இரவு...

இன்று முதல் இரவு... நீ என் இளமைக்கு உணவு”



என்று சரசமாக பாடியவனை கண்டு திடுக்கிட்டு திரும்பிய திவி , அவனை திருத்திரு என்று முழித்தபடி பார்த்திருக்க அதை கண்டு மீண்டும் சிரித்தவன் ,



“மேடம் ... ஏதோ சொல்ல வரீங்க ... பயப்படாம சொல்லுங்க ..இப்போதான் நாம புருஷன் பொண்டாட்டியா ஆகிட்டோம் ...இன்னும் மாமா கிட்ட என்ன தயக்கம்” என்றவனை தயக்கமாய் பார்த்தவள்,



“ஒன்னும் இல்லை” என்றவள் மீண்டும் முகத்தை திருப்பி கொண்டு வெளியே வெறிக்க ஆரம்பித்தாள்.



அவள் குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை கண்டுகொண்ட ஸ்ரீ மேலும் அவளை பயமுறுத்தி , ஓட வைக்கவேண்டும் என்று முடியெடுத்தவன் , மொபைலில் எதையோ நோண்டியவன் , அதை தனது அருகில் வைத்தபடி அவளையே பார்த்திருக்க,



“ கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா

கட்டில் வரி போட போறேண்டா

வரியை கட்டிவிட்டு கட்டிப்புடிடா

கட்டில் வரை முத்தம்தானடா

வரியை மிச்சம் இன்றி கட்டிமுடிடா

கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா”



என்று ஹை டெசிபெலில் அலறியது அவனுடைய போன். அதிகமான சத்தத்தில் திடுக்கிட்டவள் வேகமாக திரும்பி அவனை அதிர்ந்து பார்க்க அவனோ கண்களில் மோகப்பார்வையை படரவிட்டவாறே வைத்தகண் வாங்காமல் பார்த்திருந்தான்.



இதுவரை அவனை இப்படி பார்த்திராதவள் எச்சியை முழுங்கியபடி சிறு உதறலுடன் அவனையே கண்கள் விரிய பார்த்துகொண்டிருந்தவளை திடுக்கிட வைத்தது,



”தங்கிட திணைக்கு தின்ன

தா திணைக்கு தின

தங்கிட திணைக்கு தின்ன

தா திணைக்கு தின”

என்று கருணகொடூரமாய் பாடியபடி முகத்தில் பல விதமான ஜாலத்தை காட்டியவனை பார்த்து .

அவள் மேல் இருந்து பயத்தில் வேர்வைகள் பூக்க ஆரம்பித்ததை பார்த்தவன் தனக்குள்ளே சிரித்து கொண்டான்.



“இ...இ ... இன்னைக்கு கண்டிப்பா கசமுசா நடக்குமா” என்று பரிதாபமாக கேட்டவளை பார்த்து சிரித்தவன்,



“ கண்டிப்பா... உன்னோட கசமுசா என்னோட மஜா ரெண்டும் சேர்ந்து கஜமுஜா கண்டிப்பா நடக்கும்..அப்புறம் புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்தா அதுக்கு பேரு கசமுசா கிடையாது ... அது சங்கமம் ” என்றவனை , ‘அதுபேரு சங்கமமா ஸ்ரீ’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்லாமல்,



“32 வருசமா நான் கட்டி காத்த கற்பை , உனக்கு காணிக்கை செலுத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன் திவிக்குட்டி” என்றவனை பார்த்து



“ 32 வருஷமா...அப்போ ஸ்கூல் படிக்கும் போதே மேட்டர் பண்ணனும்னு நினைச்சீங்களா” முக்கியமான சந்தேகத்தை ஸ்ரீயிடம் கேட்டவளை பார்த்து முறைத்தவன் ,



“ஆமா இப்போ மட்டும் நல்ல விவரமா இருக்க” என்று முறைத்த ஶ்ரீ ,



“சரி 20 வயசுல இருந்து வச்சுக்கோ...12 வருஷம் பாதுகாத்த கற்பு உன்னால கெட்டு போக போகுது” என்று பெருமூச்சு விட்டவனை பார்த்து ,



“ பொண்டாட்டிகிட்ட மேட்டர் பண்ணா கற்பு போகாது” என்றவளை வெட்டவா குத்தவன்னு பார்த்தவன்,



‘என்ன இவ நமக்கு கவுண்டர் கொடுக்கிற... நோ ஸ்ரீ ரூட்டை மாத்து’ மனதில் புலம்பியவன்,



“ அதைவிடு...நல்லா தூங்கினியா ... திருப்தியா வத்த குழம்பு சாப்பிட்டியா” என்றதற்கு,

ஆமாம் என்று தலை ஆட்டியவளை பார்த்து கண்ணடித்தவன் ,



“நான் வேற ரொம்ப நாள் காஞ்சு போய் கிடக்கிறனா, கண்டிப்பா இன்னைக்கு நைட் உன்ன ஸ்வாகா பண்ணாம விட மாட்டேன் “ என்று சிரித்தவன்,



“நல்லா தெம்பா இருந்தாதான்... மாமா பார்த்த அடல்ட் மூவிஸ் வித்தை எல்லாம் உன்கிட்ட காட்ட முடியும்” என்றதுதான் தாமதம் ,



நன்றாக நகர்ந்து கார் ஓரம் நெருக்கி அமர்ந்தவள் பய பார்வை பார்க்க, முகம் கொள்ள சிரிப்புடன்



“ இதுக்கேவா...” என்றவன்



“ என்னோட பர்ஸ்ட் நைட் ஆசையை சொல்லுறேன் கேட்டுக்கோ”



“ நீ ரூம்குள்ள பால் டம்ளர் எடுத்துட்டு என் காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும் , அப்போ நான் உன்னை தூக்கும் போது கை அங்க இங்க டச் ஆகும்,.. அதுல நீ உதட்டை கடிச்சுட்டு “இஸ்“ என்று சத்தம் போடணும், அதை பார்த்து நான் உன்னோட உதட்டை எடுத்து விடணும்” என்று கூறியபடி அவள் அருகில் நெருங்கியவன் , ரெண்டு விரல்களை குவித்தபடி அவள் உதடு அருகில் எடுத்து சென்றவன் அவளை தொடாமலே , விரல்களால் உதடை வெளியே எடுப்பதை போல செய்தவன் ,



“இப்படித்தான்” என்று கூறியவனை பார்த்தவளின் நெஞ்சுக்குழி வேகமாக ஏறிஇறங்கியது , வேர்வையும் அருவி போல கொட்ட ஆரம்பித்தது.



அப்புறம் உன் கழுத்துல இருக்குற செயினை கழட்டுற சாக்குல , உன் கழுத்தையும் தோளையும் மயில் இறகில் வருடுவது போல லைட்டா வருடுனும்” என்றவன் கையை அவள் கழுத்து அருகில் எடுத்து சென்று , கழுத்தில் படாமல் உரசுவது போல செய்தவன் ,



“உன்கிட்ட வேற செயின் இல்லல்ல ...சரி போகும் போது டுப்லிகேட் செயின் வாங்கிக்கலாம்... அப்புறம்” என்றவன் கையை கழுத்தில் இருந்து நேரே இறக்கியவான்...நேராக வயிற்று பகுதியில் நிறுத்தி,



“புடவை கேப்ல இங்க தெரியிற இடம் இருக்கே இடம் அதுக்கு என்னோட சொத்தையே எழுதி வச்சுடுவேன் திவிக்குட்டி... மாமாக்கு புடிச்ச இடம் அதுதான்” என்று கூறி முடித்ததும் அவசரமாக சுடிதார் டாப்ஸை இழுத்து விட்டு கொண்டாள். அதை பார்த்து சத்தம் போட்டு சிரிச்சவன்,



“ஏய் செல்லக்குட்டி நைட் இப்படி எல்லாம் நீ என் கிட்ட மறைக்க முடியாது... மாமாக்கு பலநாள் கனவு ஆசை எல்லாம் நிறை வேற போகுது” மேலும் ,



“இப்படி மாமாக்கு பல ஆசைகள் உண்டு ... டோன்ட் ஒர்ரி நான் கத்துத்தறேன்” என்றவன் அவளை பார்த்து



“உனக்கு எதாவது முன் அனுபவம் இருக்கா முத்தம் கொடுத்து ...சாரி... சாரி...” என்று சத்தம் போட்டு சிரித்தவன் ,



“உன் மூஞ்சை பார்த்தாலே தெரியுது நீ ஒரு க்ரீன்சாண்டுன்னு ... முத்தத்துக்கே வழி இருக்காது போல மத்ததுக்கு எங்க தெரிய போகுது” என்று சலித்த ஶ்ரீ



“கடவுளே... இப்படி கிறுக்கி கூட முதல் ராத்திரி கொண்டாட விட்டுட்டியே... இங்க பாருடி கிறுக்கி ... மாமா கொலை பட்டினி கிடந்திருக்கேன் ... ஒரே பாச்சல் தான் ... நல்லா யோசிச்சுக்கோ ... உனக்கும் எதுவும் தெரியாது வேற” என்றவனை பார்த்தவள்,



“இருக்கு” என்று தலையை ஆட்ட , புரியாமல் முழித்த ஸ்ரீ ,



“எதுக்கு...இருக்கு” என்று கூறியவனை பார்த்து



“முதல் ராத்திரில என்ன நடக்கும்னு முன் அனுபவம் இருக்கு ...பாதி கிணறு அதுல தாண்டிருக்கேன்” என்று அசால்டாய் கூறியவளை திகைத்து போய் பேச்சு இழந்து வாய் பிளந்து பார்த்திருந்தான் ஸ்ரீ



அவள் கூறியதை கேட்டு திடுக்கிட்டு விழித்தவன், சற்றென்று அவனோடயே வக்கீல் மூளை விழித்து கொள்ள ,



“ஒஹ்ஹ் ... உங்க சிஸ்டர்க்கு பதில் நீ பர்ஸ்ட் நைட் ரூம்குள்ள போனியா” என்று கோபத்துடன் கேட்டவனை பார்த்தவள் தயங்கியவாறே, ஆமாம் என்று தலையை ஆட்ட , ஸ்ரீக்கு சுர் என்று கோபம் தலைக்கு ஏறியது அவனால் இந்த விசயத்தை ஜீரணிக்க முடியாமல் தடுமாறியவன் ,

“ஒஹ்... உன்னோட வீணா போன அந்த அத்தான்க்கு தான் காதலிச்சு தாலி கட்டின பொண்டாட்டி யாரு மச்சினிச்சி யாருனு கண்டுபுடிக்க முடியாம... உன்னோட பாதி கிணறு தாண்டினானா” என்றவனை பார்த்து கோபமாய் விரல் நீட்டி,



“எங்க அத்தானை பத்தி தப்பா பேசாதீங்க...அவருதான் அது தேவா இல்லனு கண்டு புடிச்சாரு.... ஆஅ... இஸ் ...ஆஹ்” சொல்லிக்கொண்டே வந்தவள் வலியில் துடித்தபடி பேசுவதை நிறுத்தி கண்ணீருடன் அவனை பார்த்திருந்தாள் , அவனோ அவள் நீட்டிய விரலை பலம் கொண்டமட்டும் இருக்கும் ஆத்திரத்தில் வளைத்திருந்தான்.



“வலிக்குது...விடுங்க...ப்ளீஸ்” என்று வலியில் அவள் கதறியும் விடாதவன்,



“இன்னொரு... வார்த்தை அத்தான்ன்னு உன் வாயில இருந்து வந்தது...தொலைச்சிப்புடுவேன் தொலைச்சி” என்றவன் அருவெறுப்புடன் அவள் விரலை உதறி தள்ளினான் ,



“நீ எல்லாம் பொண்ணாடி... என்ன ஜென்மம்...த்தூ” என்று துப்பி, காரில் இருந்து இறங்கி வெளியே வந்தவன் தலையை கோதி கொடுத்தபடி இங்கும் அங்கும் சிறிது நடந்த ஶ்ரீயின் மனம் அவள் கூறியதை கேட்டு நிலை இல்லாமல் தவித்தது, எப்படி இவ அவன் கூட அப்படி நடந்துருக்கலாம் என்று பொறுமியவன் , அடேய் அத்தான் மவனே என் கைல மட்டும் நீ மாட்டுன நீ செத்தடா கருவியபடி இங்கும் அங்கும் நடந்தான்.



மனசு அடங்காதவன் அவள் பக்கம் கார் ஜன்னலை தட்டி வெளியே வரும் படி சொன்னவன் , அவளை முறைத்து கொண்டே நின்றிருந்தான்.



“ பாதி கிணறுன்னு... எதுவரைக்கும் போயிருக்கிங்க... என்ன நடந்துச்சு... இப்போ என்கிட்ட சொல்லு” என்று அதிகாரமாய் உத்தரவு இட்டவனை பார்த்து தயங்கியவள் தலையை குனிந்தபடி இருக்க,



“இம்ம்” என்றான் உறுமலாய் தயங்கி தயங்கி,



“கிஸ் பண்ணிக்கிட்டோம்... அப்புறம் டச்சிங் டச்சிங் பண்ணிக்கிட்டோம் ..அவ்வளவுதான்” என்றவளை சந்தேகமாக பார்த்தவனை கண்டு வேகமாக தலை ஆட்டியவள் ,



“முருக்ஸ் மேல சத்தியமா ...இதான் நடந்துச்சு” பரிதாபமாக கூறியவளை பார்த்த ஶ்ரீ,



“ உன்ன நினைச்சே உனக்கு கேவலமா இல்ல... அப்புறம் எப்புடி டி என்னோட தாலியை கழுத்துல கட்டிருக்க... வெட்கமா இல்ல உனக்கு” என்று கூறியவனை பார்த்து மறுப்பாக தலை ஆட்டியவள்,



“இல்ல..வெட்கமா இல்ல ... எல்லார் முன்னாடியும் மஞ்சு உங்களை கிஸ் பண்ணும் போது ... கண்ண மூடிக்கிட்டு ரசிச்சுகிட்டு நின்னுட்டு இருந்திங்களே... அப்போ நீங்க வெட்க பட்டிங்களா.. கிஸ் வாங்கிட்டுதானே எனக்கு தாலி காட்டுனீங்க ...” என்று திருப்பி கேட்டவளை பார்த்து திரும்பவும் பேச்சடைத்து போய் நின்றிருந்தான் ஸ்ரீ.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 14





“தன்னை பார்த்து உனக்கு வெட்கமா இருந்ததா என்று கேள்வி கேட்டவளை பார்த்து முதலில் திகைத்தவன் , என்னை கேள்வி கேட்க இவள் யார் , நான் சரியான நேரத்துக்கு இவளை தடுக்கலைனா இந்நேரம் அவ ஆசை படி ஆவியா கூட அலைஞ்சுக்கிட்டு இருந்திருப்பா இவ என்ன பார்த்து வெட்க படுறியான்னு கேட்டதும் இல்லாம திமிரா நிக்கிறா என்று மனதில் அகங்காரத்துடுன் நினைத்தவன். அதே கோபத்துடுன் ,





“ஏய்... நான் ஆம்புளடி... நான் எப்படி வேணா இருப்பேன்...என்ன கேட்க யாருக்கும் ரைட்ஸ் இல்ல” என்றவனை ஒரு மாதிரியாக பார்த்தவள் , பின்பு அவனை சுற்றி வந்து,





“ என் கண்ணுக்கு எதுவும் வித்தியாசம் தெரில... ஒரு வேலை உங்க வாலை சுருட்டி எங்கயாவது ஒழிச்சு வச்சுருக்கீங்களா ” என்றவளை பார்த்தவனுக்கு கோபம் தலைக்கு ஏற,





“ என்ன நக்கலா...பாக்க கிறுக்கி மாதிரி மூஞ்சை வச்சு நல்லா ஏமாத்திருக்க... மஞ்சுவ என்ன இன்னும் ஆயிரம் பேரை கூட கட்டி புடிச்சு முத்தம் குடுப்பேன்...ஒண்ணுக்கு பத்து கல்யாணம் கூட பண்ணிக்குவேன்... ” மீசையை முறுகியபடி கூறியவனை அவள் பார்த்த பார்வை,





‘ நீ வெறும் பேச்சுதான் நான் செஞ்சே காட்டிடுவேன்’ என்பதை போல இருந்ததை பார்த்தவனுக்கு மீண்டும் மீண்டும் இவ கிட்ட அசிங்க படுறோமே என்ற எண்ணம் தோன்ற , வெறுப்புடன்





“ நீ எல்லாம் பொண்ணுதானான்னு சந்தேகமே வருது...உனக்கு சொல்லுற விதத்துல சொன்னாதான் புரியும்... வா” என்றவன் அவள் கைகளை பிடித்து தரதர என்று இழுத்து சென்றவன் , சிறிது தூரத்தில் தனியாக நின்றியிருந்த பெண் அருகில் சென்று நின்றான்.





அந்தப்பெண் அவனையும் திவியும் ஒரு மாதிரி பார்த்தவள் பின்பு என்ன என்பதைப்போல ஸ்ரீயை பார்த்தாள்,





“ ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு” என்றவனை முதலில் புரியாமல் பார்த்தவள் பின்பு அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தாள், அந்த பெண்ணும் திவியைத்தான் பார்த்து கொண்டிருந்தாள் , பின்பு நக்கல் சிரிப்பு சிரித்தபடி,





“ ஒரு மணி நேரத்துக்கு... இவ்வளவு ரேட் ... மற்றது...” என்று கூறி முடித்தவளின் பார்வை சிறிதும் திவியை விட்டு விலகவில்லை.





“கேட்டுக்கிட்டிய... வா போலாம்” என்றவன் திரும்பி நடக்க முயலுகையில்,





“ஹலோ...யோவ் நில்லுயா... இப்போ எதுக்கு இங்க வந்த... ரேட் கேட்ட... நீ பாட்டுக்கு கிளம்பி போய்கிட்டே இருக்க... என்னய்யா...நக்கலா” என்று அந்த பெண் கோவத்துடுன் ஸ்ரீயை பார்த்து கேட்கவும்,





“அடிங்... பண்ணுறது கேவலம்...என்ன கேள்வி கேட்கிறிய...உயிர் மேல ஆசை இருந்தா ஓடிடு” என்று கர்ஜித்தவனை பார்த்து பயந்த அந்த பெண்,





“ போயா...அந்த பொண்ண மடக்க பாத்துருப்ப...அது மடங்களை...அதான் என்கிட்ட வந்து சீன் போடுற” என்றவளை பார்த்து,





கையை ஓங்கியபடி அவளை அடிக்க பாய்ந்தவனை பார்த்து பயந்தவள் அங்கிருந்து ஓடிருந்தாள்.





“பாத்தியா...அந்த தொழில் செய்யுற பொண்ணுக்கு பேரு...———..... பட் ஆம்பளை அவ கிட்ட போனா அவனுக்கு அந்த பேர் கிடையாது...திமிறுல ஆடுறான், அப்படித்தான் சொல்லுவாங்க.... உன்னால நான் போய் கேட்டது போல கேட்க முடியுமா ...இப்போ புரியுதா ...பொம்பளை பொம்பளையா நடந்தகுனும் , எல்லா விஷயத்துலயும் போட்டி போட்டுட்டு வர கூடாது ... ஆனா நீ


கல்யாணத்துக்கு முன்னாடியே ச்சீச்சீ ... இதுல என்ன கேள்வி வேற கேட்கிறியா... உன் கூடனா என்னால வாழ முடியாது தாலியை கழட்டி கொடுத்துட்டு போ” திமிருடன் கூறியவனை புருவம் சுருக்கி பார்த்தவள், சுற்றி முற்றியும் பார்வையை சுழல விட்டவளின் பார்வை வட்டத்திற்குள் ஒருவன் தனியாக நின்றிருந்தது பட்டது, எதை பற்றியும் யோசிக்காமல் அவனை நோக்கி சென்றவளை வழக்கம் போல அதிர்ச்சியுடுன் பார்த்திருந்தான் ஸ்ரீ.





வேகவேகமா சென்றவள் அங்கே நின்றிருந்தவனிடம் சென்று அவன் முகத்தையே உத்து உத்து பார்க்க , தன் அருகில் அழகான பெண் தானாகவே வந்து நின்றதும் இல்லாமல் உத்து உத்து பார்க்கவும் , அவனை சுற்றி வெள்ளை உடை அனிந்த பெண்கள் லாலா பாக்கிரௌண்டில் பாடுவதுபோல கற்பனை பண்ணியவன் ,வாய் எல்லாம் பல்லாக ,





"ஈஈஈ...சொல்லுங்க...எவ்வளவு" என்று அவன் சர்வசாதாரணமாக கேட்கவும் , திவிக்கு பக் என்று ஆனது ,





தலையை மறுப்பாக வேகமாக ஆட்டியபடி , "இல்ல...தெரிஞ்சவங்க போல இருந்தீங்க ...அதான் உத்து உத்து பார்த்தேன்" என்றவள் அந்த இடத்தை விட்டு விலக முயலகையில் ,அவள் சுதாரிக்கும் முன்னர் அவள் கைகளை பற்றி பிடித்தவன் ,





"எவ்வளவு தானே கேட்டேன் எதுக்குன்னு சொல்லலையே , நீயா கரெக்டா எப்படி புரிஞ்சுகிட்டு... அப்போ அந்த தொழில் செய்யுறவதான்னே" என்றவன்





"எவ்வளவு கேட்டாலும் கொடுக்கிறேன் ...சொல்லு" என்றவனிடம் இருந்து தன் கைகளை விடுவிக்க போராடியவள் ,





"விடுடா..."என்றவாறே திரும்பி ஸ்ரீ இருக்கிறானா என்று தேடியவளுக்கு தொலைவில் இவர்களையே பார்த்தபடி நின்றிருந்தவனை பார்க்க பார்க்க கோபம் வர ,கோபம் வெறியாக மாறியது ,





" விடுன்னு சொல்லுறேன்ல ...விடுடா" ஒருமாதிரி குரலில் அழுத்தமாக கூறியவளின் வேறுபாட்டை அறியாதவனோ ,





"ஏய்...என்ன ரொம்ப துள்ளுற ...உன்ன மாதிரி பொம்பளைக்கு கோவம் வேற வருதா...பெரிய பத்தினிமாதிரி கையை புடிச்சதுக்கு இந்த குதி குதிக்கிற" என்றதில் அந்த மாறி பொம்பளை , பத்தினி ஆகிய சொற்கள் அவளை பலமாக தாக்கியதால் , அவளுடைய மனநிலை முற்றிலும் மாறியது ,





"... ஆமாடா ...ஆமா ...நான்...நான்...நான் நல்லவளே இல்ல ...ரொம்ப மோசமானவள் ... கேடுகெட்டவள்" என்று வெறி கொண்டு தன் கைகளை பலம் கொண்டு மட்டும் உதறி தள்ளியவளின் வேகத்தில் தூர போய் விழுந்தான் அவன் .





அவன் விழுந்ததும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஸ்ரீ அவர்களை நோக்கி செல்ல நினைக்கையில் , திவி திடீர் என்று தண்ணீரை நோக்கி ஓடவும் ,ஒரு நிமிடம் ஸதம்பித்து நின்றவன் மிக வேகமாக அவளை நோக்கி ஓடினான் . சிறிது தூரத்தில் அவளை பிடித்தவன் ,அவளின் செய்கையில் ஆத்திரம் அதிகமாக ,





"ஏய் அறிவு கெட்டவளே ... இப்போ எதுக்கு தண்ணிகிட்ட ஓடுற ... முழு பைத்தியமாவே மாறிட்டியா... அதுக்கு அந்த மலை உட்சில இருந்து குதிச்சுருக்குனும்... இப்போ நீ தண்ணீர்ல விழுந்து என்ன மாட்டி விட பாக்கிறியா "மேலும் அவன் பங்குக்கு அவளை நோகடித்தான்.





“இல்ல நான் ரொம்ப மோசமானவள் ..."என்று தேம்பியவள் , "நான்... நான் கேவலமான பிறவி... தேவாவை ரெண்டு தடவை கொலை பண்ண பார்த்துருக்கேன்” என்று தடுமாறியபடி கூறியவள் , “ஆனா...ஆனா...உலகத்தையே பார்க்காத உயிரை கொன்னுட்டேன்...உனக்கு தெரியுமா... சொல்லு உனக்கு தெரியுமா ...நான் இல்ல அந்த அம்மாக்கு சொய்ங்ன்னு ஊசி போட்டேனா... அப்புறம் அந்த பாப்பா போய்டுச்சு அவ்வளவுதான் ..நான் கொன்னுட்டேன்" என்று சிறுபிள்ளை போல கைகளை ஆட்டி ஆட்டி பேசியவள் சற்றென்று தன் இரண்டு காதுகளை கைகளால் பொத்திய படி,





“அய்யோ...அந்த அம்மா அழறாங்களே இல்ல இல்ல தெரியாம பண்ணிட்டேன் ... ப்ளீஸ் ... ப்ளீஸ் ... கத்தாதீங்க ... கத்தாதீங்க ... அய்யோ தெரியாம பண்ணிட்டேன்... நான் உயிரோடவே இருக்க கூடாது" என்றவள் ஸ்ரீயை பார்த்து "எனக்கு சாக பயமா இருக்கு... ப்ளீஸ் ..ஹெல்ப் மீ ” என்று கூறியபடி ஸ்ரீயின் கையை பிடித்தவள் ,





"உங்களுக்கும் என்னை புடிக்கல ... முருக்ஸ் உங்களை கையை காட்டினாரா ,அதான் விடாம உங்ககூடவே வந்துகிட்டு இருக்கேன் ... எல்லாருக்கும் என்னால கஷ்டம் ...நான் உயிரோடு இருக்க வேணாம் ... என்ன கார்லா இருந்து உருட்டி விட்டுடுறிங்களா சொல்லுங்க உருட்டி விடுறிங்களா ...ப்ளீஸ் ... ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க"





"அப்பவும் நான் தாலியை கழட்ட மாட்டேன் ... கழட்டினா நான் இன்னும் கெட்ட பொண்ண போய்டுவேன் அப்படித்தானே ...இம்ம்கூம் ...நான் மாட்டேன்..." தன்னிடமே கேள்வி கேட்டவளை பார்க்க பார்க்க ஸ்ரீக்கு அய்யோ என்று இருந்தது , ரெண்டுநாள் கொஞ்சம் நல்லா இருந்தா, பேசி அவளை இன்னும் மோசமான மனநிலைக்கு கொண்டு போயிட்டேனே என்று நொந்தவன் ,





"திவி... இங்க பாரு...நீ .நல்லவடா" என்று தொடங்கியவனின் கையை உதறி தள்ளியவள் ,





"இல்ல...நான் உங்கள நம்ப மாட்டேன் ...நீங்க ஹெல்ப் பண்ண மாட்டிங்க ... நானே போய்க்கிறேன் ... நான் இருக்க கூடாது"என்றவள் மீண்டும் கடலை நோக்கி ஓட தொடங்கியவளின் கைகளை இறுக்க பற்றியவன் ,





"ஹேய்...இங்க பாரு ...என்னோட மூஞ்ச பாரு"தன் முகம் பார்க்க விரும்பாமல் திரும்பி நின்றவளின் முகத்தை வலுக்கட்டாயமாக திருப்பியவன் ,





"இங்க பாரு நீ ...வெளி உலகத்தை பார்க்காத உயிரைத்தான் கொன்னுருக்க ...ஆனா நான் ஒரு பாமிலியே அழிய காரணமா இருந்துருக்கேன் ... அப்புறம் என் மஞ்சுக்கு துரோகம் பண்ணிருக்கேன்" என்றவனின் பேச்சை இடை மரித்தவள் ,





"உங்க மஞ்சு இல்ல ஹரியோட மஞ்சு ... இனி நான் மட்டும்தான் உங்க திவி...புரியுதா" என்றவள்





"இப்போ சொல்லுங்க என் திவின்னு ..." என்றவளை நீயா பேசியது என்பதை போல பார்த்தவனை பார்த்து "சொல்லுங்க" என்று மிரட்டியவளை திகைத்து பார்த்தவன் , அடப்பாவி சாவ போறேன் சீன் போட்டுட்டு இருந்தவளா இவ என்று மனதில் நினைத்தவன் , பேசாம அவ சொல்லுறதையே சொல்லிடுவோம் இல்லனா அந்நியன் அவதாரம் எடுத்துடுவா என்று முடிவு பண்ணியவன் ,





"எ...ன்.... ப்மச்சு.... எ...ன்...தி ...திவி" என்று தட்டு தடுமாறி கூறியவனை பார்த்து ,இல்லை என்பது போல தலை ஆட்டியவள் ,





"இப்படி இல்ல ...சேர்த்து ...பீல் ஓட சொல்லுங்க , கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேட் பேட் டாக்கிங் பண்ணிங்கள ...அப்படி" என்றவளை திரும்பவும் சந்தேக கண்ணோடு பார்த்தவன் ,மனதை திடப்படுத்தி ,





"இக்கும்" என்று தாடியை தடவியபடி , அவளை பார்த்து பெரிதாக புன்னகைத்தபடி ,





"என் திவிஈஈஈ " என்று பல்லை காட்டியவனை பார்த்தவளின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது , அதே மலர்ச்சியுடுன் காரை நோக்கி செல்பவளையே பார்த்திருந்தவனின் மனதில் தற்கொலை பண்ணிக்கிறேன் சொன்னது பொய்யா இல்லையா என்று பற்றிமன்றம் தொடங்கியது.





காரில் ஏறி அமர்ந்தவளை தொலைவில் இருந்து பார்த்தவனின் மனசாட்சி ,கேலியாக சிரித்தது ,





"அடேய் ஸ்ரீ பையா ...இப்படி ஆகிடுச்சே உன்னோட நிலைமை" என்று கொக்கரித்து மனசாட்சியை உள்ளே தள்ளுவதை போல நினைத்தவன் ,தன் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி ,





"நாதாரிப்பயலே உள்ள போடாஆஆஆ" யாரையோ தள்ளுவதை போல தள்ளுபவனை பார்த்த சிலர் வினோதமாக அவனை பார்க்க ,எதையும் கண்டு கொள்ளும் நிலையில் இல்லாதவனை திரும்பவும் ,





'இப்போ உன்னோட நிலைமை குரங்கு கையில் கிடைச்ச பூமாலை போல டா'கேலிபேசிய மனசாட்சியை கண்டு கோபம் கொண்டவன் ,தன் நெஞ்சில் குதித்தபடி ,





"யாரு குரங்கு... நானா .."என்று கோபமாக கேட்டவனை பார்த்து சிரித்த மனசாட்சி ,





"நீ அவ்வளவு பெரிய அப்பா டக்கர் கிடையாது திவிதான் குரங்கு ...ஹாஹா ...நீ பூமாலை , இல்லனா இப்படியும் சொல்லலாம் , கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்ததை போல ...ஹாஹா..இதுல நீதான் கிளி ...ஹாஹா 'என்று அசிங்க படுத்திய மனசாட்சியின் கேலி அவனை வெறியேற்றியது , தன தலையை பிடித்தபடி தன் கையாலாகாத தனத்தை நினைத்து ஆத்திரம் அடைந்தவனாக ,





"ஆஆஆஆ" என்று சத்தம் போட்டு கத்தியவனை அங்கிருந்தவர்கள் மனநிலை பாதிக்க பட்டவனாகவே நினைத்து , அவன் அருகில் வந்தவர்களை





"தம்பி ...பையித்தியும் ...அது கிட்ட போகாதீங்க ...ரொம்ப நேரமா தன்னையே அடிச்சுகிட்டு கத்திக்கிட்டு இருக்கு" என்று மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கி கொண்டிருந்தனர்.





(இம்ம் கிறுக்கி கிறுக்கி சொன்னவ ஜம்முன்னு போய் உட்கார்ந்துட்டா ..போற போக்க பார்த்த நீ கிறுக்கனா ஆகிடுவ போல ஸ்ரீ)

 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 15





தன்னோட கவலைகளில் மூழ்கி இருந்தவன் சுற்றுப்புறத்தை நினைக்க மறந்தான் , மேலும் மேலும் தன்னை திட்டியும் தன் தலையில் தட்டியும் தனக்குள் பேசியவனை பார்த்திருந்த அருகில் இருந்தோர் அவனை முழு மனநலம் பாதிக்க பட்டவனாகேவே நினைத்து அருகில் செல்ல பயந்து காவல்நிலையத்திற்கு தகவல் கூறினர். இதை எதும் அறியாதவனோ,





“அருள் முடிலடா ... இந்த ரெண்டு வருஷமா... கையாலாகாதவன இருக்கேண்டா...” என்று தன் கைகளில் முகத்தை மூடி புலம்பியவன் , திடீர் என்று,





“ஏன்டா என்ன விட்டு போன... இப்போ மஞ்சுவும் போய்ட்டா...ரொம்ப வலிக்குது அருள் யார்கிட்டயும் சொல்லி அழ கூட முடிலடா... ஏண்டா போனாஆஆஆ” சத்தம் போட்டு கத்தியவன் அழுத்தம் தாங்காமல், முடியை தன் கைகளால் பற்றி இழுத்து வலியை உண்டாக்கியவன் தன் மன வலியை போக்க முயன்றான். சிறிது நேரம் வானத்தை வெறித்தவன் ,





“அருளு... மஞ்சு...மஞ்சுடா...விட்டுட்டேன்... அவளை முழுசா ஹரி கிட்ட விட்டுட்டேன்...அவ எனக்கு இல்லடா” அதற்கு மேல் பேச முடியாமல் திணறியவன்,





“ஏன்டா அருளு நமக்கு மட்டும் இப்படி ஆச்சு... அய்யோ முடியலடா... எனக்கு அவ வேணும்டா , மஞ்சு வேணும்டா” என்றவனின் கண்களில் இருந்து கண்ணீர் கோடாக இறங்க ஆரம்பித்தது.





கல்யாணம் முடிந்தது முதல் திவியுடன் இருந்ததால் அவனுக்கு மஞ்சுவின் இழப்பு பெரிதாக தெரியவில்லை மேலும் திவியுடன் முக்கால்வாசி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவனால் மஞ்சுவை நினைக்க முடியவில்லை ஆனால் இப்போது அவள் தன் அருகில் இல்லாதால் மஞ்சுவின் இழப்பு அவனை வாட்டி வதைத்தது .





பைத்தியக்காரன் போல புலம்பி தவித்தவனை நெருங்கிய அந்த காவல்துறையை சேர்ந்தவர் ,


மிகவும் எச்சரிக்கையுடன் அவன் தோள் தொட்டு திருப்பி பார்க்க அங்கே ஸ்ரீ இருந்த கோலம் கண்டு அதிர்ந்து





“ஸ்ரீ... என்னடா இது கோலம்... இங்க என்ன பண்ணுற” என்று கூறியபடி அங்கே குழுமி இருந்த கூட்டத்தை பார்த்து,





“ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க நினைக்கிற மாதிரி இவர் கிடையாது நான் பார்த்துகிறேன்” என்றவன் அவர்களின் பதிலுக்கு காத்திராமல் ஸ்ரீயின் கையை பிடித்து இழுத்து அங்கிருந்து விலகி சென்றான்.





“ஸ்ரீ என்னடா ஆச்சு” என்றதற்கு பதில் இல்லாமல் போகவே , அவன் கன்னத்தை வேகமாக தட்டி தன் யோசனையிலேயே சுழன்றவனை நடப்புக்கு கொண்டு வந்தான் ஹரியின் நண்பன் சந்தோஷ். சந்தோஷை பார்த்ததும் உற்சாகமான ஸ்ரீ





“சந்தோஷ்... உன் போன்ல இருந்து ஹரிக்கு கால் பண்ணுடா ப்ளீஸ்” என்று படபடப்புடன் கூறிய ஸ்ரீயை சந்தேகத்துடன் பார்த்த சந்தோஷ், ஹரிக்கு கால் செய்திருந்தான், மறுமுனை எடுக்கப்பட்டு ,





“சொல்லு சந்தோஷ்... எதாவது ப்ரொப்லெம்மா” என்ற ஹரியை இடைமறித்த ஸ்ரீ ,





“ஹரி...” என்று ஸ்ரீயின் குரலை கேட்டதும் டென்ஷன் ஆனா ஹரி,





“டேய் ஸ்ரீ ஏதாவது பிரச்சனையா... எங்க இருக்க”





“ஹரி ப்ரோப்லேம் ஒன்னும் இல்ல.. மஞ்சு எப்படி இருக்கா ... அழுறாளா... அவள தனியா விடாதடா” என்றதற்கு ஹரியிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை, சிறிது பொறுத்து பார்த்த ஸ்ரீ,





“ஹரி ... மஞ்சு..” என்றதுதான் தாமதம்,





“ஸ்ரீஇஇஇ... இதுக்குதான் என்ன மஞ்சுவ கல்யாணம் பண்ணிக்க சொல்லி போர்ஸ் பண்ணியா ... உனக்கு நினைப்பு வரும் நேரம் எல்லாம் என்கிட்ட அவள பத்தி கேட்டு அவ நினைப்பிலயே வாழுந்து முடிச்சுடலாம்னு பிளான் பண்ணிருக்கியா“ காட்டமாக கேட்ட ஹரியின் கேள்விக்கு பதில் சொல்லாமல்,


“மஞ்சு...எப்...”





“ஸ்ரீஇஇஇஇ... நான் சொன்னது உன் காதுல ஏறுச்சா இல்லையா... என்னோட பொண்டாட்டி பேரு உன் வாயில இருந்து வர கூடாதுடா... புரிஞ்சுச்சா... எனக்கு அருவருப்பா இருக்கு ஸ்ரீ ... அவளை பத்தி நீ நினைச்சு பீல் பண்ணுறது” என்று காட்டமாக கத்தியவனிடம்,





“இல்லடா ...இனி பேச மாட்டேன் ..இப்போ அவ எப்படி இருக்கான்னு சொல்லுடா ...ப்ளீஸ் ஹரி ... ரொம்ப பீல் பண்ணுறாளா” என்றதற்கு பதில் கூறாமல் போணை கட் செய்திருந்தான் ஹரி. கட்டாகி போன போனை சிறிது நேரம் வெறித்து பார்த்தவன் அதை சந்தோஷிடம் திருப்பி கொடுக்கும் வேலையில் ஹரியிடம் இருந்து மெசேஜ் ஒன்று வந்திருந்தது , அவசரமாக ஸ்ரீயின் கையில் இருந்து போணை பறித்த சந்தோஷ் , அதை படிக்கலானான்,





“ஸ்ரீ மன அழுத்தத்தில் இருக்கான் , அவனையும் அவன் மனைவியும் பக்கத்துல இருக்கிற நல்ல ஹோட்டலில் தங்க வச்சுடு” என்றிருந்தது.





“என்ன சந்தோஷ்” என்று ஸ்ரீ கேட்டதிற்கு , அந்த மெசஜை அவனிடம் காட்டிய ஹரி ,





“வா ஸ்ரீ” என்றவன் அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான். சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை,





“என்ன சந்தோஷ்... என்ன பார்க்க பைத்தியக்காரன் போல இருக்கா” என்ற ஸ்ரீயை


பார்த்து பெருமூச்சு விட்ட சந்தோஷ்





“ஏன்டா ஸ்ரீ இப்படி மாறிப்போன... உன்ன பார்க்கவே ஒரு மாதிரியா இருக்குடா” வருத்தத்துடன் கூறியவனை கசந்த முறுவலுடன் பார்த்த ஸ்ரீ,





“தெரிலடா... ஆனா கூடிய சீக்கிரம் பைத்தியம் புடிச்சுடும் போல” என்றவன் மேலும்





“அதை விடு...டேய் அருள் கேஸை ஒன்னும் பண்ண முடியாதடா...” என்று ஆதங்கத்துடுன் கேட்டவனை நம்பாத பார்வை பார்த்த சந்தோஷ்,





“ஸ்ரீ நீ ஒரு லாயர்...நீயே இப்படி பேசலாமா... ப்ரூவ் பண்ண முடியாம ஆக்ஸிடென்ட் சொல்லி கிளோஸ் பண்ணியாச்சு...அதுல இருந்து வெளில வந்து உன் லைப்ப வாழ பாருடா”





“ கிளோஸ் பண்ணியாச்சு..”என்று அவனை போலவே சொல்லி பழிப்பு காட்டியவன்,





“இத சொல்ல உனக்கும் ஹரிக்கும் வெட்கமா இல்ல ... எப்படிடா மனசாட்சி இல்லாம பேசுறீங்க ... அவன்தாண்டா மாட்டிகிட்டு இருந்த என்ன காப்பாத்துனது ...இல்லனா நான் இந்நேரம் உயிரோடவே இல்ல” என்றவன் ஆக்ரோஷமாக கைகளால் காற்றில்ஒரு குத்து விட்டவன்,





“அவன் கத்துறது இன்னும் என் காதில் கேட்குது...’ஸ்ரீ...ஸ்ரீ...கண்ணு முழிச்சி பாருடா ... அம்மு நம்மள விட்டு போய்ட்டாட... நீயும் போயிடாத... என்ன பாருடா’ இப்படித்தான் என்ன தட்டி தட்டி எழுப்புனான்” , என்றவன் தன் கன்னத்தை வலிக்கும் மட்டும் அறைந்து கொண்டான்.


“ஆனா... ஹாஸ்பிடல்ல ஒரு வாரம் கழிச்சு நான் கண்ணு முழிச்சு பார்த்தா ... அவன் ஸ்பாட் அவுட்னு சொல்லிடீங்களாடா... சொல்லு ... உனக்கு தெரியாது எது உண்மைன்னு... ஏன்டா இப்படி பண்ணீங்க” வெறிவந்தவன் போல கத்தியவனை பார்த்து கசந்த புன்னகையுடுன்,





“ ஸ்ரீ...உங்க கிட்ட இல்லாத ஆள் பலமா ...இல்ல பணத்துக்குத்தான் பஞ்சமா... ஏன் உன்னால ஒன்னும் செய்ய முடில...உன்னால மட்டும் இல்ல நம்மள போல பழி பாவத்துக்கு அஞ்சுருவங்க ஒன்னும் புடுங்க முடியாது ... சட்டத்து முன்னால அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்கணும்னு நினைச்ச இப்போ அந்த சட்டமே உன்னை கழுத்தை புடிச்சு வெளில தள்ளிருச்சு” வேதனையுடன் கூறிய சந்தோஷை பார்த்து விரக்தி புன்னகை சிந்திய ஸ்ரீ,





“கரெக்ட்...வா போலாம்” என்றவன் அவனை கார் அருகில் கூட்டி சென்றான். அங்கே நிம்மதியாக தூங்கி கொண்டிருந்த திவியை காட்டி





“பாரு இருக்கிற பிரச்சனை போதாதுன்னு ...இந்த சனியனையும் கூட சேர்த்துக்கிட்டு அலையுறேன்” என்றவன் வேகமாக கார் கதவை திறந்து மூட , அதில் திடுக்கிட்டு கண் விழித்தவள் தூக்கம் கலைந்ததால் கடுப்பாகி ஸ்ரீயை எரித்து விடுவதை போல பார்த்துக்கொண்டிருந்தாள்





“இப்போ எதுக்கு அடிச்சு கதவை சாத்துறீங்க” என்று கோபமாக கேட்டவளை பார்த்து





“நேத்து வரைக்கும் புள்ளப்பூச்சி போல இருந்துட்டு ...கழுத்துல தாலி ஏறுனதும்... புள்ளபூச்சிக்கு கொடுக்கு முளைச்சிருச்சு போல” என்று நக்கல் அடித்தவனை முகம் எங்கும் சந்தோசத்தோடு,





“அப்போ நீங்க கட்டினதை தாலின்னு ஓத்துகிரீங்களா” என்றவளை கடுப்புடன் பார்த்தவன் , ஏதோ சொல்ல வருவதற்குள் ,





“ஸ்ரீ...இவங்க யாருன்னு இன்ட்ரோ பண்ண மாட்டியா” என்று சந்தோஷ் இடை புகுந்தான்,


“சொல்லிக்கிற அளவுக்கு முக்கி...” முடிப்பதற்குள்,





“ஹலோ...நான் மிஸஸ்.திவ்யதர்ஷினி ஸ்ரீ...” என்று இழுத்தவளை நக்கலாக பார்த்த ஸ்ரீ,





“மிஸஸ்.திவ்யதர்ஷினி ஸ்ரீராம்” என்று சத்தம்போட்டு சிரித்தான். அவன் சிரிப்பதையே அதிசயமாக பார்த்த சந்தோஷ்,





‘இவானா ... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பைத்தியக்காரன் போல புலம்பினவன்’ மனதில் நினைத்தபடியே திவியை ஆர்வத்தோடு பார்த்தவனை கண்டு அழகாக சிரித்த திவி ,





“மிஸஸ்.திவ்யதர்ஷினி ஸ்ரீதர்” என்று கூறியவள் ஸ்ரீயை பார்த்து எப்பூடி என்று பார்வை பார்த்தவளை பார்த்து பழிப்பு காட்டியபடி மீண்டும் சத்தம்போட்டு சிரித்தான் ஸ்ரீ.





அதே இலகுவான மனநிலையிலேயே ஸ்ரீயையும் திவியும் அழைத்து கொண்டு சென்ற சந்தோஷ் அவர்களை இரவு உணவு உண்ண வைத்தவன் நல்ல ஹோட்டலில் ரூம் புக் செய்து அவர்கள் இருவரையும் அங்கே விட்டுவிட்டு சென்றான்.


இருவருக்கும் நல்ல அலுப்பாக இருந்ததால் , அலுப்பு தீர வெந்நீரில் குளித்தவர்கள் வேறு உடை மாற்றிகொண்டு படுக்க ஆயுத்தம் ஆனார்கள்.





“இங்கபாரு ரெண்டு நாளா கார் ஓட்டிட்டு இருக்கேன் ...மன உளைச்சல் வேறு... செம்ம காண்டுல இருக்கன் புரியுதா...ஒழுங்கா சத்தம் போடாம தூங்குற” என்று அவளை மிரட்டியபடி கட்டில் விழுந்தான் ஸ்ரீ. அவன் பேசியதற்கு எதுவும் பதில் கூறாமல் முறைத்தவளை பார்த்து,





.”என்னடி...ஆவுனா முறைக்கிற.. கழுத்துல தாலி ...ச்சி ச்சி ... மஞ்ச கையுரு இருக்கிற தையிரியமா... அப்படியே ஓங்கி மிதிச்சேன் வச்சுக்கோ தரையோடு தரையா சட்னி ஆகிடுவ” என்றவன் மேலும் ,





“ இதான் சாக்குன்னு மேல உழுந்து புரளாத...இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கு .. நாளைக்கு நான் பண்ணுற டார்ச்சர்ல அந்த கயிற்றை கழட்டி கொடுத்துட்டு ஓடிடுவா பாரு” நக்கலாக கூறியவன் கட்டிலின் நகர்ந்து படுத்தவன் சிறிது நேரத்திலேயே உறங்கியும் விட்டிருந்தான்.





தூங்குகின்றவனையே சிறிது நேரம் பார்த்தவள் , “முடிக்குள்ள தும்மத்துண்டு மூஞ்சை வச்சுக்கிட்டு பேசுற பேச்சை பாரு , மனசுல பெரிய மன்மதன்னு நினைப்பு” என்று உதட்டை பிதுக்கி பழிப்பு காட்டியவள்,





‘ஏண்டி திவி இவன் சொல்லுறது போல உனக்கு வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு ... இல்லனா தெளிஞ்சுட்டியா’ என்று தனக்குள் கேள்வி கேட்டபடி ஸ்ரீயை நெருங்கி அமர்ந்து அவன் தாடியை உத்து உத்து பார்த்தவள்





“ தாடி இல்லாம மூஞ்சு எப்படி இருக்கும்னு தெரியலையே, பேசாம நாமளே சேவ் பண்ணி விடுவோமா “ தனக்குள் கேள்வி கேட்டவள் ,





“வேணாம் வேணாம்... அப்புறம் நீ தரையில சட்னியா தான் இருப்ப” அவன் மிரட்டியதை நினைத்து பார்த்தவள் எதற்கு வம்பு என்று நினைத்தவாறே தூங்கியும் போனாள்.





ஆழந்த உறக்கத்தில் இருந்த ஸ்ரீக்கு யாரோ கதவை விடாமல் தட்டும் ஓசை கேட்டதால் தூக்கம் கலைந்ததால் , எழுந்து சென்று கதவை திறந்தவன் அதிர்ந்து நின்றான் , அங்கே





“ஸ்ரீ... ஏன்டா இப்படி பண்ண” கண்களில் வலியுடன் கேட்டபடி நின்றிருந்தான் அருள், சற்று தள்ளி





“அண்ணா...எங்களை கை விட்டுட்டியே அண்ணா” அழுதபடி நின்றிருந்தாள் அமுதா, இன்னும் சிறிது தள்ளி,





“ஏமாத்தீட்டீங்களே...அத்தான்” என்றவாறே முகத்தை மூடியபடி அழுது கொண்டிருந்தாள் மஞ்சு.





“அய்யோ...மஞ்சுமா... இல்ல... நான் உனக்கு நல்லதுதான் பண்ணிருக்கேன்...அத்தானை மன்னிச்சுடுடா” என்றவாறே வேகமாக எழுந்து கதவை திறந்து வெளியே சென்றவன் , சுற்றும் முற்றும் பார்க்க அங்கே ஒருவரும் இல்லை.





பின்புதான் அவன் இருக்கும் இடம் நினைவுக்கு வந்ததும் ,தான் கண்டது கனவு என்று உணர்ந்தவன் பெரும் வலியுடன் ரூமுக்குள் நுழைய , அதற்காகவே காத்திருந்தார் போல திவி அவன் அருகில் வந்து அவன் கைகளை பற்றியபடி,





“என்ன ஆச்சு ஏன் திடிர்னு டென்ஷன் ஆகிட்டிங்க” என்றவளை பிடித்து பலமாக தள்ளியவன்





“இச்சி சனியன் புடிச்சவளே எங்க இருந்தடி வந்து சேர்ந்த ... இருக்கிற கொஞ்சம் உயிரையும் எடுக்க வந்துருக்கியா... என் கண்ணுமுன்னாடி வந்த தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை” என்று விரல் நீட்டி எச்சரித்தவன், பின்பு எதையோ நினைத்தவனாக ,மேஜையை நோக்கி ஓடியவன் அங்கிருந்த தன் போனை எடுத்து ஹரிக்கு அழைத்திருந்தான், மறுமுனை நீண்ட அழைப்புக்கு பின் எடுக்க பட்டதும்





“ஹரி... ஹரி ...ப்ளீஸ் டா ... கோச்சுக்காத... மஞ்சு எப்படிடா இருக்கா ...என் கனவுல வந்து அழுதாட... எதாவது பண்ணிக்கப்போறா ... எப்படி இருக்கான்னு மட்டும் சொல்லேன்” என்று கெஞ்சியவனுக்கு பதில் எதுவும் கூறாமல் அமைதி காத்தவன் , பின்





“உண்மையிலேயே வெட்க படுறேன் அவளை கல்யாணம் பண்ணினத்துக்கு, ஸ்ரீ நான் எதுவும் பேச விரும்புல உன்னோட உடம்புல நம்ம குடும்ப ரத்தம்தான் ஓடுறது உண்மைனா இனி நீ எனக்கு போன் பண்ண கூடாது...” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே போனை துண்டித்திருந்தான் ஸ்ரீ.





ஸ்ரீக்கு மனம் ரணமாக வலித்தது, ‘என்ன வார்த்தை சொல்லிட்டான்...அவனுக்கு என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சிருந்தும் இப்படி பேசிட்டானே’ என்று மனதில் திரும்ப திரும்ப அதையே நினைத்தவன் மனம் திரும்பவும் நிலைகொள்ளாமல் தவிக்க ஆரம்பித்தது .





தன் சட்டையை கிழிச்சு கொண்டு சத்தம் போட்டு கத்தியபடி ஓட வேண்டும் என்ற எண்ணத்தை கஷ்ட பட்டு அடக்கியவன் , எதோச்சையாக திரும்பி பார்க்க அங்கே இவனையே பயந்தபடி பார்த்திருந்த திவி கண்ணில் பட்டால்.





“ஏய்... என்ன இங்க பார்வை வேண்டிகிடக்கு... இங்க என்ன நான் எதாவது ஷோ காட்டிட்டு இருக்கேனா... ஒழுங்கா இழுத்து போத்திகிட்டு தூங்கு... எதாவது வாயை கொடுத்த... இருக்கிற வெறிக்கு கன்பார்ம் கொலைதான்” என்று கத்தியவன் கோபத்துடன் ரூமை விட்டு வெளியேறி இருந்தான்.





ஸ்ரீ வெளியே சென்றதை பார்த்தவளுக்கு அழுகை வர, அவசரமாக பாத்ரூம்குள் நுழைந்து கொண்டவள் ஆத்திரம் தீரும் மட்டும் அழுது தீர்த்தவள் , மூஞ்சை நன்றாக தண்ணீரால் அடித்து கழுவி முடித்தவள் நிமிர்ந்து கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை பார்த்தபடி,





“திவி ... அவன் என்ன பெரிய யோக்கியனா ...அவன் கிடக்கிறான் லூசு பய... இவ்வளவு அசிங்கபட்டு அவன் கூட இருந்து ஆகணும்னு என்ன தலைவிதி... டேய் கரடி மூஞ்சு நீ என்னடா என்ன விரட்டி விடுறது , காலைல இருக்குடா உனக்கு உன் மூஞ்சிலயே அந்த தாலியை வீசி எறிஞ்சுட்டு போறேன்“ என்று தீர்மானம் எடுத்தவள் நிம்மதியாக விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்.





நல்ல உறக்கத்தில் இருந்த தன்னை யாரு உலுக்குவது போல உணர்ந்த திவி , கண்ணை திறக்கலாமா, வேணாமா என்று யோசனையில் மூழ்கியிருந்தவளை,





“டிவி...ஏ...ய்...தி…விக்குட்டி” என்ற குரலில் அடிச்சு பிடித்து எழுந்தவள் தன் முன்னே நின்றிருந்த ஸ்ரீயின் கோலத்தை கண்டு திடுக்கிட்டு போய் அவனையே பயத்தோடு பார்த்திருந்தாள்.





முகம் வேர்வையில் குளித்துருக்க , தலைமுடி கலைந்திருக்க,கண்கள் சிவந்து இமைகள் பாதி மூடியபடி , நிதானம் இல்லாமல் போதையில் தள்ளாடியபடி நின்றிந்தவனை பார்க்க பார்க்க அவளுக்கு வயற்றில் பயப்பந்து உருள ஆரம்பித்தது.





அவள் கை பற்றி கட்டிலில் அமர வைத்தவன் , அவள் மடியில் முகம் புதைத்தவன் , சிறிது நேரம் எதுவும் பேசவில்லை, திவிக்கோ தன் இதயம் தாறுமாறாக துடிப்பதை நன்கு உணர்ந்தவள் , இன்னும் சற்று நேரத்தில் அவன் எழவில்லை என்றால் தன் இதயம் வெளியே வந்து குதித்துடும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, தலையை நிமிர்த்தியவன், முகத்தை பாவமாக வைத்தபடி,





“ திவி ...குட்டி ...எனக்கு ...மஞ்சு வேணும்டி” என்று உதடு துடிக்க சிறு பிள்ளை போல அடம்பிடிப்பவனை பார்த்து செய்வதறியாது திகைத்து விழித்தாள் திவி.




 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 16





தன்னிடம் எனக்கு மஞ்சு வேணும் என்று கூறியவனை அதிர்ச்சியுடன் பார்த்தவளுக்கு மெல்ல மெல்ல கோபம் ஏறியது , தன்னை மட்டும் நீயெல்லாம் பெண்ணா என்று கேட்டதையும் , அத்தான் சொன்ன வாயை உடைப்பேன் சொன்னதையும் நினைத்து பார்த்தவள் இவனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என்று சிலிர்த்து கொண்டு , அவனை பிடித்து கீழே தள்ளிவிட எத்தனித்து கையை உயர்த்தியவள் சிறிது நிதானித்தாள்.





இதுவரை அவன் தன்னிடம் முகம் கொடுத்தே பேசியது கிடையாது , எப்பவும் திட்டிக்கொண்டோ இல்ல அட்வைஸ் பண்ணிக்கிட்டுதான் இருந்திருக்கான், இப்போ இப்படி பிஹவ் பண்ணுறான் என்றால் கண்டிப்பா அவன் அவனா இல்லை , குடிச்சுருக்கான் வேற இந்த நேரத்துல நாம ஏதாவது சொன்ன பிரச்னை வேற மாதிரி போகும் என்று நினைத்தவள், தூக்கிய கையை அவன் தலையில் வைத்து அவன் தலையை கோதி விட்டதும்தான் தாமதம், அவள் கையை தன் கரங்களால் பற்றி ,





“திவி...என்னால மஞ்சுவ மறக்க முடிலடி ... நினைக்க கூடாதுன்னுதான் நினைக்கிறேன்... முடில ... எதையோ இழந்தது போல இருக்கு திவி ... ஏதாச்சும் பண்ணு... ப்ளீஸ். ... நெஞ்ச என்னமோ பண்ணுது திவி ...மஞ்சு...மஞ்சு .“ அவள் கைகளில் முகம் புதைத்து புலம்பியவனை பார்த்தவளுக்கு அய்யோ என்று இருந்தது,





“ உனக்கு தெரியமா திவி... அவளை 15 வருசமா இங்க வச்சுருக்கேன்” என்றவன் தன் நெஞ்சை தொட்டுக்காட்டியவன் ,சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்





“நீயே சொல்லு திவி ,ஒரே நாள்ல அவளை எப்படி திவி தூக்கி போட முடியும் ..அவ என்னோட உயிர் ... என்...என்னால சத்தியமா முடில திவி... அவ நல்லா இருக்காளா இல்ல ஏதாவது தப்பா முடிவு எடுத்துற போறான்னு தானே ஹரிக்கு போன் பண்ணேன்...ஆனா அந்த ஹரி ராஸ்கல் என்ன பத்தி எல்லா தெரிஞ்சுருந்தும்...என்னோட பொறப்பயே அசிங்க படுத்தி பேசிட்டான் ”” என்றவன்





“உனக்கு தெரியாது திவி ...இந்த நாளுக்கு நாங்க எவ்வளவு நாள் ஆசையா காத்துகிட்டு இருந்தோம் தெரியுமா ... கனவுல கூட நினைச்சு பாக்கல இப்படி ஆகும்ன்னு ...”





“ திவி ...உனக்கு ...புரியாது என்னோட பீலிங்ஸ் ...நான் ....நான் ... மஞ்சு... என்ன மன்னிச்சுடுமா... இந்த அத்தானை மன்னிச்சுடு” என்றவன் அவள் மடியில் முகம் புதைத்து புலம்ப ஆரம்பித்தான் ,





“மஞ்சு...என்ன மன்னிச்சுடு மஞ்சு ...சாரிமா...அத்தான் உன் நல்லதுக்குதான் பண்ணேன்...இந்த அத்தானை புரிஞ்சுபியா மஞ்சு.. .”





“உனக்கு தெரியுமா திவி... அருள் போன பின்ன சுயபுத்தியோடு இல்லாம இருந்த என்ன திரும்பவும் பழையபடி ஆக்குனது மஞ்சுதான் ..அவளுக்கு நான் துரோகம் பண்ணிட்டேனே திவி ..”





“இந்த அத்தானை நீ கல்யாணம் பண்ணிருந்தா...நீ .....—————“ தொடர்ந்து அவன் புலம்பியதை கேட்டவள் அதிர்ந்து போனாள் , அவள் கைகள் வெளிப்படையாக நடுங்க ஆரம்பித்தது, அவளுடைய முதுகுத்தண்டு பயத்தில் ஜில்லிட்டது, என்ன சொல்லுறான் இவன் ,ஒருவேளை தான் தவறா கேட்டுவிட்டோமா என்று எண்ணியவன் மீண்டும் அவன் புலம்புவதை கவனிக்க தொடங்கினாள்.





மீண்டும் அவன் அதையே சொல்லி புலம்பவும் , அவளுக்கு சப்தநாடியும் நடுங்கியது , அவள் நெஞ்சில் எதுவோ அடைத்ததை போல உணர்ந்தவள் திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்தாள், ஸ்ரீயோ விடாமல் புலம்பியவன் ஒரு கட்டத்திற்கு மேல் அழுத்தம் பொறுக்க முடியாமல் , விருட்டென்று எழுந்தவன் மீண்டும் மதுவை நாடினான். பாட்டிலை காலி செய்தவன் , அதை இரண்டாக மேஜையில் உடைத்திருந்தான் , சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பியவள் அங்கே ஸ்ரீ உடைந்த கூர்மையான பகுதியை தன் நெஞ்சை நோக்கி உயரே தூக்கி பிடித்தவன் அதை எந்நேரமும் அதை இதயத்தில் இறக்க தயாராக இருந்தான்.





அதை பார்த்து பதறியவள் ஓடி சென்று அவன் கைகளை இருக்க பற்றியபடி ,


“என்ன பண்ணுறீங்க விடுங்க ... சொல்லுறேன்ல விடுங்க” என்றவளாள் சிறிதும் அவனிடம் இருந்து பறிக்கமுடியவில்லை.





ஏ...இய் ...வி..டு...டீ ...நா...நா..என் ... உய்..ரோடு இ...இருக்க ...கூடாது ..விடு என்ன.. வி... டு ... ” குளறியபடி கூறியவன் அவளை ஆவேசமாக பிடித்து கீழே தள்ளினான்.





“ஓகே...குத்திக்குங்க ...உங்களுக்கு மஞ்சு கிடைக்கலன்னு , மஞ்சுவும் ஹரி சாரும


நிம்மதியா வாழ கூடாதுன்னு நினைக்கிறீங்க ...அதானே ...நல்லா இதோ இந்த இடத்தில குத்திக்குங்க“ என்று கத்தியவளை நோக்கிதள்ளாடியபடி கோபமாக வந்தவன், அவள் கைகளை அழுத்தமாக பிடித்து எழுப்பியவன்,





“எ...யென்ன ...சொன்ன ...ன ” போதையில் கண்கள் சிவக்க வெறியுடன் கேட்டவனை பார்த்தவளுக்கு பயம் பிடித்தாலும் ,





“ஆமா...நீங்க குத்திக்கிட்டு செத்து போனீங்கன்னா... மஞ்சுவும் ஹரிசார்ரும் குற்றஉணர்ச்சியில... கொஞ்சம் கொஞ்சமா அவங்க வாழ்க்கையும் அழிச்சுப்பாங்க...இதானே வேணும் உங்களுக்கு” என்றதும் தான் தாமதம் , பற்றென்று கையில் இருந்ததை கீழே போட்டவன் , திவியை இறுக அணைத்து கொண்டான்.





“அய்யயோ ..அப்படிலாம் இல்ல திவி... வேணாம் வேணாம் அவங்க நல்லா வாழனும்... சொல்லுடி... நல்லா வாழ்வாங்களா” என்றவனை அழைத்து கொண்டு கட்டிலுக்கு சென்றவள் தன் மடியில் அவனை தலை சாய்க்க வைத்து படுக்க செய்தவள் அவன் தலையை மெதுவாக கோதி கொடுத்தாள் . அவள் மடியில் தலைவைத்து படுத்தவனோ,





“என்ன நம்பிவந்த அம்முவையும்...கைவிட்டுடேன் ... மஞ்சுவையும் கைகழுவிட்டேன்... ஆனா மஞ்சுவ ஹரி பார்த்துப்பான் ... அருள் சாவுக்கு தான் என்னால ஒன்னும் பண்ண முடியலதிவி” என்றவன்





” ... அருள் மன்னிச்சுடுடா... என்னாலதான் முடியாம போச்சு ... என்னோட மகன் வந்து நியாயம் செய்வான் நினைச்சேனே ..அதுக்கும் வழி இல்லாம போச்சே... சாரிடா அருள், போச்சு அருள்... எல்லாமே போச்சு ... நீயும் போயிட்ட... இப்போ மஞ்சுவும் என்ன விட்டுட்டு போய்ட்டா ... எனக்குன்னு யாரும் இல்லடா அருளு... யாரும் இல்ல...என்னால முடில திவி...” திரும்ப திரும்ப அதையே சொல்லியவனின் முதுகு குலுங்கியது அவனோடேயே மௌனமான அழுகையால்.





மன உளைச்சல் மற்றும் அளவுக்கு அதிகமான போதையாலும் திவியின் தலை வருடலாலும் , புலம்பியபடி உறங்கி போனான் ஸ்ரீ. அவன் ஆழுந்த உறக்கத்திற்கு சென்றதை உறுதி படுத்தியவள் , மெதுவாக அவன் தலையை எடுத்து தலைகாணியில் வைத்து போர்வையால் போர்த்திவிட்டு எழுந்தவள், தன் கைப்பையை எடுத்து அதில் உள்ளே இருந்த முருகர் படத்தை எடுத்து வெளியை வைத்து அதையே வெறிக்க ஆரம்பித்தாள்.





திவிக்கு மனசே ஆறவில்லை , அவனை இப்படி பாக்கவே அவளால் முடியவில்லை எப்படி இருந்தவன் , யாரையும் மதிக்காமல் திமிரா வலம்வந்தவன் இங்கே அழுது புலம்புவது கண் கொண்டே காண முடியவில்லை திவியால்.


“ஏன் இப்படி பண்ண...உன்கிட்ட நான் என்ன கேட்டேன்...நீ என்ன பண்ணி வச்சுருக்க... எதுக்கு அவனை என் கண்ணுல காட்டுன ...சொல்லு பதில் சொல்லு” என்று மனதில் முருகரிடம் கேள்வி கேட்டவளின் கண்களில் இருந்து விடாமல் கண்ணீர் வழிந்தது.





“என்ன நிம்மதியா அப்பவே மேல கூப்பிட்டுருக்கலாமே ... இப்போ எதுக்கு இவன் கூட சேர்த்து விட்ட...அவன் துடிக்கறத பாக்க முடியலையே ...அதுவும்... அதுவும் அவன் சொன்னதை என்னால தாங்க முடியலையே...” என்றவள் கைகளில் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்தாள்.





“நீ பேச மாட்ட எல்லாரும் சொல்லுறது போல நீ கல்லுதான் ..உன்ன நம்புனவங்களை கஷ்டப்டுத்தி பாக்குறதுதான் உனக்கு பொழுதுபோக்கே... சொல்லு என் இப்படி பண்ண ... என்ன காரணத்துக்காக எங்க ரெண்டு பேரையும் சேர்த்துவச்ச” என்றவள் அந்த போட்டோவை தூக்கி தூர போட்டாள், மனம் கேட்காமல் போட்டோவை திரும்பவும் கையில் எடுத்தவள்,





“ இங்க பாரு தூங்கிறவன் நாளைக்கு காலையில் தான் கண்ணு முழிக்கணும்... அப்படி இல்லாம நடுவுல முழிச்சா .. எங்க வாழ்க்கையின் அர்த்தமே இந்த ராத்திரிதான்னு முடிவு பண்ணி என்னோட இஷ்டப்படிதான் நடப்பேன்...பாப்போம் நீ எங்க ரெண்டு பேருக்கு என்ன வச்சுருக்கனு” என்று மனதில் பொறுமியவள் , சண்முக கவசத்தை மனதினில் கூற ஆரம்பித்தாள்.


மூன்றாவது முறையாக சண்முக கவசத்தை மனதில் சொல்ல ஆரம்பித்தவளின் காதில் “திவி”...”திவி” என்று ஸ்ரீ அழைக்கும் குரல் கேட்டது,





“அய்யோ...கூப்பிடாத ...தூங்கிடு.. போய் தூங்கிடு...என்ன தப்பு பண்ண வைக்காதா போய்டு... போய்டு” என்று மனதில் அரற்றியவளின் வேண்டுதல் பயனற்று போயின. சோபாவில் அமர்ந்து இருந்தவளின் அருகில் அமர்ந்தவன் ,





“ஏய்... திவி... என்ன பண்ணுற” என்றபடி அவள் கையில் இருந்த போட்டோவை பார்த்து கடகட என்று சிரித்தவன் ,





“திவி இவரை திரும்பவும் தொல்லை பண்ண ஆரம்பிச்சுட்டியா ... உன் தொல்லை தாங்காமாதான்.. என்ன உன்கூட கோர்த்து விட்டுட்டாரு ...அவரை நம்பாத ...திவி...சரியான ஏமாத்துக்காரர்” என்று மீண்டும் சிரித்தவன் முகத்தையே உற்று பார்த்தவளை பார்த்து ,





“என்ன” என்பது போல தலை அசைத்தவனை பார்த்து ஒன்றும் இல்லை என்றவளை பார்த்து பளிச் என்று சிரித்தவன் , எழுந்து மீண்டும் மதுவை நாடினான்,





“என்ன பண்ணுறீங்க.. ஏற்கனவே நல்ல போதைல இருக்கீங்க ...குடிக்காதீங்க ப்ளீஸ் ” என்று தடுத்தவளை





“நோ கிட்டவராத ... மனசு மஞ்சு மஞ்சுன்னு அடிச்சிக்குது ...நீயே பாரு பாதி தூக்கத்துல எழுஞ்சுட்டேன்... எனக்கு இப்போ அவளை மறக்கணும் ...யார் சொன்னாலும் நான் குடிப்பேன் தான்... போ இங்கிருந்து” கோபமாக கூறியவன் பாட்டிலை வாயில் கவுத்தான்.





“புல்ஷிட்... நானும் போனா போகட்டும்னு பார்த்தா ஓவர்ரா மஞ்சு...மஞ்சுன்னு புலம்பிட்டு இருக்கீங்க ...இன்னொரு தடவை அவ பேர் வாயில வரட்டும்...என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” கை நீட்டி எச்சரித்தவளை பார்த்து கோபம் படுவதற்கு பதில் சிரிப்பு வந்தது ஸ்ரீக்கு.





“சொன்ன என்னடி பண்ணுவ” திமிராய் கேட்டவனை பார்த்து





“வாயை கடிச்சு வச்சுடுவேன்” சீரியஸ்சாக சொன்னவளை பார்த்து மீண்டும் சிரித்தவன் தள்ளாடியபடி அவள் அருகில் வந்து,





“மஞ்சு...மஞ்சு ...மஞ்சுமா ...மஞ்சு” என்று விதவிதமாக மஞ்சுவை அழைத்தவனை பார்த்தவளுக்கு , வெறி ஏற சொல்லியபடியே பாய்ந்து சென்று அவன் வாயை கடித்திருந்தாள்.





“இஸ்ஸ்...அம்மா...ராட்சஸி ...பொண்ணாடி நீ...பிசாசு ...வலிக்குது எருமை” வலியில் கத்தியவனை சிந்திக்க விடாமல் அடுத்த தாக்குதலை ஆரம்பித்தாள் திவி, அங்கே





“ஏய்...என்ன பண்ணுற”





“விடுடி...திவி ... வேணாம்டி”





“திவி...தப்புடி ...தள்ளிப்போ” என்ற ஸ்ரீயின் அலறல் தான் அரை முழுதும் எதிரொலித்தது.





மெல்ல மெல்ல உறக்கம் கலைந்து கண் விழித்த திவிக்கு , எங்கே இருக்கிறோம் என்பதை நினைவு படுத்தவே சில நொடிகள் பிடித்தது , பின்பு ஒன்றன் பின் ஒன்றாக அவளுடைய நினைவுகளில் நேற்று நடந்த சம்பவம் நியாபகம் வந்ததும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள் , அங்கே ஸ்ரீ மிக நெருக்கமாக அவள் அருகில் படுத்திருந்ததை பாத்து அதிர்ந்து போனவளுக்கு பின் முதுகு ஜில்லிட்டது , உடம்போ பயத்தில் வெளிப்படையாக நடுங்கவும் ஆரம்பித்தது , உள்ளுக்குள் சுளீர் என்ற உணர்வு பரவுவதை உணர்ந்தவள் பயத்தில் உடம்பு சூடாவதையம் அதிர்ச்சியுடுன் கண்டுகொண்டவள் ,





அவன் தூக்கம் கலையாத வண்ணம் படுக்கையில் இருந்து எழுந்தவள் பூனை நடை நடந்து பாத்ரூம்குள் புகுந்து கொண்டால்.





பாத்ரூம்குள் நுழைந்த திவி சுவர் மூலையில் கால்களை குறுக்கியபடி அமர்ந்து அழ ஆரம்பித்தாள், ‘அய்யோ என்ன பண்ணிருக்கேன் நான்...அவன் முகத்துல எப்படி முழிப்பேன் ..அவன் சொல்லுறபடி நான் மோசமான பொண்ணுதான் போல... முருக்ஸ் இத பாக்கத்தான் என்ன உயிரோடு விட்டு வச்சியா” என்று முகத்தில் அறைந்தபடி கதறினாள் .





“அவனுக்கு தெரிஞ்சுதுன்னா... என்ன கேவலமா பேசியே கொன்னுடுவானே... இதுக்குதான் அவன் கூட என்ன சேர்த்து வச்சியா..இப்போ நான் என்ன பண்ணுவேன்” என்று கண்ணீர் வற்றும் அளவுக்கு அழுத திவி பின்பு எதையோ தீவிரமாக யோசித்தவள் , ஒரு முடிவு எடுத்தவளாக,





“திவி...ஏண்டி அழுற...இத நீ தெரியாம பண்ணலயே... இப்போதைக்கு பிரீயா விடு... அவன் போதையில இருந்தான் ...அவனுக்கு நியாபகம் இருக்காது ...போய் ஆகா வேண்டியதை பாரு” என்று தனக்குத்தானே திடப்படுத்தி கொண்டவள் , அவசரமாக குளித்து முடித்து வெளியே வந்து, அங்கே எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தியவள் , கடைசியில் ஸ்ரீ மேல் அவளுடைய பாடிஸ்பிரேயை அவன் விழிக்காதவாறு அடித்துவிட்டாள்.





பின்பு நினைவு வந்தவளாக அவன் மொபைலில் நேற்று எதற்கும் இருக்கட்டும் என்று அவள் ஸ்ரீக்கு தெரியாமல் எடுத்த போட்டோசை டெலீட் பண்ணுவதற்காக , எட்டி மொபைலை எடுத்தவள் ஸ்ரீ அருகில் அமர்ந்து அவன் மீது ஒரு பார்வை வைத்தபடி ,





“எங்க இருக்கு...இச்சு ...எங்க இருக்குன்னு தெரியலையே“ என்று புலம்பியபடி பதட்டத்துடன் மொபைலை ஆராய்ந்தவள் , உள்ளுணர்வு உந்த நிமிர்ந்து ஸ்ரீயை பார்க்க , அங்கே நேற்று அடித்த போதையின் வீரியம் குறையாமல் கண்கள் சிவக்க முகத்தில் கோபம் தாண்டவமாட அவளை உக்கிர பார்வை பார்த்தவனை பார்த்து விதிர் விதிர்த்து போனாள் திவி.

 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 17





தூக்க கலக்கத்தில் கண்கள் சிவந்திருக்க ருத்ர மூர்த்தியாக தன்னை உருத்து விழத்தவனை பார்த்தவளுக்கு கிலி பிடித்தது, தன்னிச்சை செயல் போல கையில் இருந்த செல்லை நடுங்கியபடி அவனை நோக்கி நீட்டினாள் திவி. அவள் முகத்தில் இருந்து பார்வையை சிறு சுளிப்புடன் செல்லை நோக்கி நகர்த்தி ,





“என் போன்ல என்ன நோண்டிட்டு இருக்க” ஆவேசமாக வந்த வார்த்தையில் வெளிப்படையாக அதிர்ந்தவள்,





“அது..அது” எச்சில் முழுங்கியபடி தயங்கியவளிடம் இருந்து வெடுக்கு என்று செல்லை பறித்தவன்,





“கேட்கிறேன்ல..என்ன பார்த்த ..சொல்லு” கேட்டபடி அதில் ஒவொன்றாய் ஆராய ஆரம்பித்தான்.





“அது... தாடி இல்லாம உங்க போட்டோ இருக்கான்னு..தேடி பார்த்தேன்” என்றவளை நம்பாத பார்வை பார்த்தவன், அப்பொழுதுதான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தான் , அதை உறுதிப்படுத்திக்கொள்ள தன் கையை மூக்கு அருகில் கொண்டுவந்து நன்கு மூச்சை இழுத்து நுகர்ந்தவன் , திகைத்து போனான் பெண்கள் யூஸ் பண்ணும் பெர்பியும் அவன் மேல் அடித்ததில் , நிமிர்ந்து அவளை பார்க்க அவள் முகத்தில் பயத்தின் சாயல் அப்பட்டமாக தெரிந்தது , அவன் மனமோ ,





‘எதுவோ சரி இல்லை’ என்று அடித்து சொல்லியது ,





“ஏய்..,என்ன நடந்துச்சு... என் மேல அந்த பெர்பியும் வாசனை எப்படி வந்துச்சு” பதில் தெரிந்துகொள்ளும் தீவிரத்துடன் கேட்டவனை பார்த்து அதிர்ந்தவள்,





“அது...அது...நான் ...” என்று வார்த்தைகள் தந்தி அடிக்க சொல்லமுடியாமல் தவித்தவளின் கையை முரட்டுத்தனமாக பற்றி பின்புறமாக மடக்கியவன்,





“ஏன் நீ டென்ஷன்னா இருக்க ...ஒழுங்கு மரியாதையா என்ன ஆச்சு... என்ன பண்ண சொல்லு” என்று கையை வலிக்க முறுக்கியவனை பார்த்து பயத்துடன், கண்களில் கண்ணீருடன்





“நான்...ஒன்னும் பண்ணல... உங்க ...மேலிருந்து... ட்ரிங்க்ஸ் ...ஸ்மெல் வந்துச்சு ...வொமிட் வரமாதிரி இருந்துச்சு அதான் அடிச்சுட்டேன்“ என்று தயங்கித்தயங்கி கூறியவளை பார்த்து சந்தேகமாக தலை அசைத்தவன்,





“பொய் சொல்லாதடி...நீ என்னமோ பண்ணிருக்க...” என்று கூறியவன் அவளை பிடித்திருந்த கைகளை விட்டுவிட்டு தலைத்தட்டி யோசனையில் மூழ்கினான் , அவள் இதுதான் சாக்கு என்று அங்கிருந்து எழுந்து சோபாவில் அமர்ந்தவள் முருகரை கையில் வைத்தபடி மீண்டும் ஷண்முக கவசம் மனதினில் சொல்ல ஆரம்பித்தாள்.





ஸ்ரீயோ மண்டையை போட்டு குழப்பி கொண்டிருந்தான் , என்ன நடந்தது என்று தெரியாமல், சிறிது நேரம் கண்களை இறுக மூடி யோசனையில் முழ்கியவன் ,





குடிக்க போனது ... திரும்ப வந்தது ...திவியிடம் புலம்பியது...மறுபடியும் குடிக்க போனது...வரை நியாபகம் வந்தது.





‘அய்யோ...என்னடா ஸ்ரீ இப்படி பண்ணிட்ட ...இவகிட்ட போய் புலம்பிருக்க...என்ன சொன்னேன் தெரியலையே’ என்று மனதில் புலம்பியவன்,





‘ ச்சை உனக்குத்தான் ஓவர்ரா குடிச்சா மட்டை ஆகிடுவ நியாபகமே இருக்காது...அருள் ஹரி தான் உன்ன பார்த்துப்பாங்க... என்ன பண்ணி தொலைச்சேன் தெரியலையே’ என்று நினைத்தவன், திவியை பார்க்க அமைதியாக அமர்ந்து இருந்தவளை பார்த்து,





‘இவளை நம்ப முடியாது... கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி பதட்டமா இருந்தா...ஏதோ நடந்துருக்கு...’ என்று நினைத்தபடி , தன் உடம்பை நன்கு ஆராய்ந்து பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை ,





‘ இவ கேடிடா ஸ்ரீ...கண்டுபுடி...என்ன நடந்துச்சுன்னு கண்டுபுடிக்கிற...உன்னால முடியும் நீ ஒரு கிரிமினல் லாயார் மறந்துடாத...அவளை சீண்டி பாரு ...டென்ஷன்ல ... உளறிடுவா’ மனதில் தீர்மானித்தவன், எழுந்து குளிக்க பாத்ரூம் நோக்கி செல்பவனை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்தவள் , அவனும் தன்னையே பார்ப்பதை அறிந்து திடுக்கிட்டு சற்றென்று குனிந்து கொண்டாள்.





அவளின் அந்த செயலே அவனுக்கு சந்தேகத்தை மேலும் வலுக்க செய்தது,


பாத்ரூம் கதவு அருகில் நின்றவன்,





“திவி” என்று அழைக்க, பதட்டத்துடன் நிமிர்ந்து பார்த்தவளை , புருவம் முடிச்சுட,





“ நீ ...என்ன...ரே ...” என்று சொல்லவந்தவன் சற்று தயங்கி,


“நான் போதையில இருக்கும் போது என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டியா” என்று அவன் கூறியதும் அவள் பதட்டத்தில் கையில் இருந்த முருகர் படத்தை நழுவ விட்டவள், குனிந்து எடுக்கும் வினாடியில் தன்னை சுதாரித்து கொண்டாள்,





“இப்படி எல்லாம் பேசுற வேல வச்சுக்காதீங்க ... நீங்கதான் ...மஞ்சு மஞ்சுன்னு புலம்பிட்டு என்ன தூங்கவிடலை ...என்னைபார்த்த ...எப்படி தெரியுது...கல்யாண மண்டபத்துல வாங்கினது பத்தலயா ” கோபத்துடன் சீரியவளை சந்தேகத்துடன் பார்த்து,





“இங்கபாரு...அப்படி மட்டும் நடந்துருச்சுனு தெரிஞ்சுது..உன்னையும் கார்லா ஏத்திக்கிட்டு போய் நேரா லாரில கொடுத்துடுவேன் ... ஜாக்கிரதை” விரல் நீட்டி எச்சரித்தவன் பாத்ரூம் உள்ளே சென்று கதவை அடைத்து கொண்டான்.





திவிக்கோ அய்யோ என்று இருந்தது , இவனுக்கு இன்னும் நியாபகம் வரலை நாம எதுவும் சொல்ல கூடாது , அவன் எப்படி கேட்டாலும் சமாளிக்கணும் , இது நானா ஏற்படுத்தி கொண்டது , அவன் என்ன சொன்னாலும் பீல் பண்ண கூடாது, பின்னாடி வர்ரதை அப்புறம் பாத்துக்கலாம் என்று முடிவு எடுத்தவள், அவனை எதிர்கொள்ள தயாரானாள்.





அங்கே ஸ்ரீயின் நிலையோ பரிதாபமாக இருந்தது, ‘இல்ல எதுவோ நடந்துருக்கு அடேய் மானங்கெட்ட மனசாட்சியே தேவ இல்லாத நேரத்துல எல்லாம் ஆஜர் ஆகுவியே, இப்போ வந்து சொல்லுடா என்ன ஆச்சுன்னு’ என்று மனசாட்சியுடன் சண்டை போட்டவனின் மூலையில் பல்பு எரிய ஷவ்ர்ரை திறந்துவிட்டு அதில் போய் நின்றுகொண்டான் , பின்பு ஒருவித எதிர்பார்ப்புடன் சிறிது நேரம் நின்றவன் சற்றுநேரம் கழித்து அதை நிறுத்தியவன்,





“என்னடா இது தண்ணி பாட்டோடனே உடம்பு எல்லாம் எரியுற மாதிரிதானே படத்துலயும் கதைலயும் பார்த்துருக்கோம் ...நமக்கு எரியும்னு பார்த்தா , சுகமா இருக்கு ஒரு வேல நமக்கு ஒன்னும் நடக்கலையோ ” என்று புலம்பியவன் முன் தோன்றிய மனசாட்சி,





‘அடேய் மனங்கெட்டவனே...அவகிட்ட போய் வம்புபண்ணி பாருன்னா லூசுப்பைய போல உன்னையே சோதிச்சுக்கிட்டு இருக்க ...அந்த படத்துல வரது கதைல வரது எல்லாம் பொண்ணுகளுக்குத்தான் ...உன்ன மாதிரி எருமை மாட்டுக்கு இல்ல’ என்று கேலி பேசியபடி மறைந்தது .





“இது என்னடா கொடுமையா இருக்கு இப்போ எப்படி நான் கற்போடு இருக்கேனா இல்லையானு கண்டுபுடிக்கிறது...அடிய்யே திவி...வரேண்டி ...உண்மை மட்டும் தெரியட்டும் உன்ன கழுத்தை நெறிச்சு கொன்னுட்டு நானும் என் கதையை முடிச்சுகிறேன் ” என்று கருவியவன் குளித்துமுடித்து வெளியே வந்தான்.





வெளியே வந்தவனின் கண்களில் கட்டிலில் குனிந்து கலைந்திருந்த பெட்ஷீட்டை நேராக்கி கொண்டிருந்த திவி பட்டாள் , அவன் புத்தியில் பளிச் என்று யோசனை தோன்ற , மெல்ல பூனை நடை நடந்து வந்தவன் சத்தம் போடாமல் அவளை பின்புறமாக அனைத்திருந்தான். அதில் அதிர்ந்து போன திவி அவனை பிடித்து ஒரே தள்ளாக கட்டிலில் தள்ளிவிட்டவள் , பேச வார்த்தை வராததால் விரல் நீட்டி ஜாக்கிரதை என்று எச்சரித்தவளின் கையை பிடித்து இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டான்,


“ஏய் என்னடி கோவ படுறமாதிரி நடிக்கிற நேத்து மட்டும்.. என்ன அந்த பாடுபடுத்தின” என்றவன்முரட்டுத்தனமாய் அவளை அணைக்க முயல , அவன் உண்மையை கண்டுகொண்டானோ என்ற சந்தேகத்தில் , படபடப்பில் அவனை அறைந்திருந்தாள்.





அவன் கன்னத்தை தடவிய பின்தான் உணர்ந்தாள் தான் அறைந்து விட்டதை , ஒருவித பயத்துடன் அவனை பார்க்க அவனோ கன்னத்தை தடவியபடி , ‘ஒரு வேல ஒன்னும் இல்லையோ நாமதான் தேவ இல்லாம நடந்துகிறோமா‘ என்று நினைத்தவன் தன் பிடியை விட்டிருந்தான், அவன் விட்டதும் பாத்ரூம்குள் நுழைந்த திவி ஒரு மூச்சு அழுது தீர்த்தாள், அவனை ஏமாற்றுவதை நினைத்தும் தன் நிலை நினைத்தும்.





ஸ்ரீகோ மனதில் எதுவோ உறுத்திக்கொண்டே இருந்தது அவனுக்கு உண்மை தெரியவில்லை என்றால் மண்டை வெடித்துவிடும் நிலையில் இருந்தான்.அவள் வெளியே வந்ததும்,





“எல்லாத்தையும் பாக் பண்ணு கிளம்பனும்” என்று கூறியவன் தன்னோடதையும் பையில் எடுத்து வைத்தவன் எதற்கோ பர்ஸை திறக்க அதில் இருந்து மஞ்சுவின் புகைப்படம் சிலது கீழே விழுந்தது.





அதை சிறிது நேரம் அசைவற்று பார்த்திருந்தான் பின் பெருமூச்சை விட்டபடி கீழே விழுந்ததையும் பர்சில் மீதி உள்ள எல்லாத்தையும் வெளியே எடுத்தவன் , ஒருநொடி தயங்கி பின் தலையை குலுக்கியபடி அனைத்தையும் சுக்கல் நூராக கிழித்து டாய்லெட்இல் போட்டு ப்ளஷ் செய்துவிட்டு இறுகிய முகத்துடன் வெளியே வந்தவன் தன் பையை எடுத்து கொண்டு ரூமை விட்டு வெளியேறியிருந்தான்.





அவன் செயலையே ஆச்சரியத்துடன் வாய் பிளந்து பார்த்தவளின் மனதில் சந்தோச சாரல் , முகத்தில் புன்னகையுடன் அவனை தொடர்ந்து வெளியே சென்றவள் , தங்களின் கார் அருகில் சென்று நின்று கொண்டாள். வரவேற்பறையில் இருந்து திவியை பார்த்த ஸ்ரீ இங்கிருந்த படியே கார் கதவை ரிமோட் மூலம் ஓபன் செய்தான், அதில் மேலும் மகிழுந்து போன திவி மனம் நிறைய சந்தோசத்துடன் ஏறி அமர்ந்தவள் சீட்டில் சாய்ந்து கண்மூடி இந்த தருணத்தை ரசித்தாள்.





பில் செட்டில் செய்து காருக்கு திரும்பிய ஸ்ரீயின் மனதில் நேற்று இருந்த குழப்பமோ தடுமாற்றமோ ஏமாற்றமோ இல்லை மனதில் ஓரத்தில் சிறு வலி இருந்து கொண்டே இருந்தாலும் நேற்று போல மஞ்சு மஞ்சு என்று மனம் ஓலம் இடாமல் அமைதியாக இருந்ததை நினைத்து அவனுக்கே ஆச்சிரியமாக இருந்தது. ஒருவேளை நேற்று திவியிடம் மனதில் இருந்ததை கொட்டியாதாலும் , இல்லை அவள் கொடுத்த ஆறுதலாலோ எதுவோ ஒன்று அவனை சாந்த படுத்தி இருந்தது.





காரை ஓட்டி கொண்டிருந்தவன் சிறுது தூரம் சென்ற பின்தான் திவி உறங்குவதை அறிந்தான்,





“ஏன் இந்த நேரத்துல தூங்குறா ஒரு வேல ...” என்று மீண்டும் சந்தேகம் கொண்டவன் காரை ஓரமாக நிறுத்தி அவள் புறம் திரும்பியவன் ,





“ஏய் திவி ... “ என்ற அழைப்புக்கு பதில் இல்லாமல் போகவே , மீண்டும் சத்தமாக


“திவிஈஈ...” என்றழைத்தான் , சிறிதும் அசையாமல் உறங்கியவளை பார்த்தவன், அவள் தோள்களை பிடித்து வேகமாக உலுக்கியபடி ,





“ஏய்...இங்க பாருடி எழுந்திரு...திவி” என்று கோபத்துடன் கத்தியவனின் கத்தலில் கண் விழித்தவள் , சலிப்புடன்





“என்ன” என்றவளை





“ஏன் தூங்கிட்டு வர...” என்றவனை புரியாமல் பார்த்தவள் ,





““நேத்து நைட் சரியா தூங்கலை... இப்போ தூக்கம் வருது” என்றவளை பார்த்து அதிர்ந்தவன் ,





“ஏன் நைட் தூங்கல”





“நீங்க எங்க தூங்க விட்டிங்க...மஞ்சு மஞ்சுன்னு ஒரே புலம்பல்...இதுல தூக்கம் எங்கிருந்து வரும்” என்று கூறியவளை சந்தேகத்துடன் பார்த்தவன் ,





“திவிக்குட்டி ...என் கிட்ட எதையும் மறைக்கல தானே” என்றவனை முறைத்தவள்





“உங்க மேல உங்களுக்கு அவ்வளவுதானா நம்பிக்கை... நிதானம் தவறினா நீங்க தப்பு பண்ணிடுவீங்களா “ என்று கேள்வி கேட்டவளை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவன் நிம்மதியுடன் காரை ஓட்டலானான்.





கார் சென்ற திசையை புருவ முடிச்சுடன் பார்த்தவள் அவன் அண்ணாநகர் நோக்கி காரை திருப்பவும் பதறியவள்,





“இங்க எங்க போறிங்க...” என்று அதிர்ச்சியுடன் கேட்டவளை சிறிதும் சட்டை செய்யாமல் அவன் போக்கில் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான்.





கார் குறிப்பிட்ட தெருவை அடைந்து அதன் உள்ளே நுழையவும் டென்ஷன் ஆனவள்,





“ப்ளீஸ்...அங்க போக வேணாம் ... வண்டியை திருப்புங்க..ப்ளீஸ்” என்று கூறியவளின் குரலில் அப்பட்டமான நடுக்கம் தெரிந்தது ,





“சொன்ன கேளுங்க அங்க நான் வரமாட்டேன்” ஸ்ரீயின் கையை பிடித்து கெஞ்சியவளை பார்த்து பற்கள் தெரிய சிரித்தவன்,





“ஏய்...எதுக்கு டென்ஷன் ஆகுற நான் இருக்கேன் கவல படமா வா” அவள் கையை தட்டியபடி கூறியவன் குறிப்பிட்ட வீட்டை அடைந்ததும், செல்லில் யாருக்கோ அழைத்தவன்,





“நாங்க வந்துட்டோம் கதவை திறக்க சொல்லுங்க” என்றவன் மீண்டும் திவியை பார்த்து கண்ணடித்தபடி வசிகரமாக சிரித்தான்.





திவியோ முள்ளின் மேல் உட்கார்ந்து இருப்பதை போல உணர்ந்தாள் , அவள் இதயமோ படக்கப்படக் என்று வேகமாக அடித்தது , பயத்தில் அவளுக்கு வேர்வை வழிய ஆரம்பித்தது , இதை எல்லாம் கண்டும் காணாததை போல இருந்தான் ஸ்ரீ.





காரை வீட்டிற்குள் நுழைத்த ஸ்ரீ போர்டிகோவில் நிறுத்தியவன் கதவை திறந்து வெளியேறி மறுபுறம் வந்தவன் திவி பக்கம் உள்ள கதவையும் திறக்க , அங்கே முகத்தை இறுக்கமாக வைத்தபடி பிவாதமாக அமர்ந்து இருந்த திவியை நக்கலாக பார்த்தவன் , அவள் எதிர் பார்க்காத வேளையில் கையை பிடித்து இழுத்து வெளியே நிற்க வைத்திருந்தான்.





கார் சத்தம் கேட்டு வெளிய வந்தவர்களை பார்த்து ஸ்ரீ புன்னகைக்க , பதிலுக்கு அவர்கள் புன்னகைக்கவில்லை மாறாக திவியை முறைத்து கொண்டிருந்தனர் , திவியோ தன் முன்னே நின்றிருந்த தன் தந்தை அன்னை அக்கா மற்றும் அத்தானை பார்த்து பதறியவள் பயந்து ஸ்ரீயின் பின்னே ஒழிந்து கொண்டாள்.





அவளின் செயல் ஆத்திரத்தை கிளப்ப கோபத்துடனும் அவளை நெருங்கிய திவியின் தந்தையை வழி மறித்த ஸ்ரீயை உக்கிரத்துடன் பார்த்தவர்,





“யாருடா நீ ...என்ன பண்ண அவளை ... எங்களை விட உன்னை நம்புறா” என்றவர் அவனை நெட்டி தள்ள முயல,





“மனோ...அவர்தான் நம்ம பொண்ண காப்பாத்திருக்கார் ...இப்போ மட்டுமில்லை ...ரெண்டு மாசத்துக்கு முன்னாடியும் ஹாஸ்பிடல்ல பிரச்சனை வந்தப்போ இவர்தான் திவியை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார்...இவர் ஸ்ரீதர்... லாயார்” என்ற பானுமதியை தீப்பார்வை பார்த்த மனோ,





“யாராவேனா இருந்துட்டு போகட்டும் ...பாக்க பொறுக்கி போல இருக்கான் இவன் கூட உன்பொண்ணு ஒருவாரம இருந்திருக்கா ... இப்போ இவனை பத்தி கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்க“ என்றவர் “தள்ளுடா“ என்றபடி வேகமாக ஸ்ரீயை பிடித்து தள்ள அதில் கோபம் உற்றவன்





“மனோசார் நான் பாக்கத்தான் பொறுக்கி போல இருக்கேன்...ஆனா நீங்க ஒரு பொறுக்கியே பொண்ண பெத்து வச்சிருக்கீங்க...அக்காக்கு ஏற்பாடு செய்திருந்த பர்ஸ்ட் நைட் ரூம்குள்ள போய் , இதோ இங்க நிக்கிறார் இந்த சார் கூட எல்லை மீற பாத்திருக்க ..இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த பொண்ண பெத்துட்டு என்ன பொறுக்கின்னு சொல்லுறீங்க ...உங்க ரத்தம் தானே அவளுக்கு ஓடுது அப்போ நீங்க கேவலமான ஜென்மமா” என்று நக்கல் அடித்தவனை பார்த்து திகைத்து போய் பார்த்திருந்தார் மனோ , திவியோ ஸ்ரீ இப்படி பேசுவான் என்று எதிர் பார்க்காதவள் நெஞ்சில் அடிவாங்கியதை போல துடித்து போனாள்.





“ஸ்ரீதர் ...” என்று அதட்டிய பானுமதியை பார்த்து தலையை ஆட்டிய ஸ்ரீ,





“சாரி மேடம் ...உங்க பொண்ணு வாழ்க்கையை காப்பாத்தி கூட்டிட்டு வந்த எனக்கு நல்ல மரியாதை கொடுத்துட்டார் உங்க வீட்டுக்காரர்... நான் மட்டும் சரியான சமயத்துல போலான உங்க பொண்ணு இந்நேரம் ஆவியா அலைஞ்சுக்கிட்டு இருந்திருப்பா...நன்றி கூட வேணாங்க ... ஒரு மனுசனா அவர் மதிச்சாரா” என்று கோபத்துடன் கேட்டவன் ,





“சரி விடுங்க ...எதுக்கு தேவையில்லாததை பேசிகிட்டு ...உங்க பொண்ணு எப்படி என்கிட்ட வந்தாலோ அப்படியே உங்ககிட்ட ஒப்படைச்சுட்டேன் ...தப்பா ஒரு பார்வை கூட பார்க்கல ... சொல்லுங்க உங்க வீட்டுக்காரர் கிட்ட என்னால அவளுக்கு ஒரு கெடுதலும் நடக்கலைன்னு” என்றவன் அதே கோபத்துடன் திவியின் பக்கம் திரும்பியவன்,





“ஏய்...உங்க அப்பாகிட்ட சொல்லு ... நான் உன்னை எதுவும் பண்ணலைன்னு” என்று கத்திய ஸ்ரீயின் அருகில் சென்றவள் அவன் சட்டையை பிடித்து கொண்டு,





“என்ன உங்ககூட கூட்டிட்டு போய்டுங்க ... நான் இங்க இருக்க மாட்டேன்” என்றவளை பார்த்து ஆத்திரம் தலைக்கு ஏற,





“முந்தாநேத்து வரைக்கும் அத்தான் பைத்தியம் ...நேத்துல இருந்து மாமா பைத்தியம் பிடிச்சுடுச்சா...உனக்கு என்ன எப்பவும் யார் மேலயாவது பைத்தியம் புடிச்சு இருக்கணுமா”


என்றதை சட்டை செய்யாதவள்,





“எனக்கு தெரியாது... நீங்க என்ன கூட்டிட்டு போறீங்க ...நான் உங்க கூடத்தான் வருவேன் .. நீங்க எனக்கு தாலி கட்டிருக்கீங்க” ஒருவித தீவிரத்துடன் கூறியவளை பார்த்து சத்தம்போட்டு சிரித்த ஸ்ரீ ,





“அப்படியா...ஓ ..இதான் மஞ்சள்கயிறு மாஜிக்கா” என்றவன் கன்னத்தை தட்டி யோசிப்பது போல நடித்தவன்,





“அப்போ..இதுக்கு வைத்தியம் பார்த்திட வேண்டியதுதான்” என்று கூறியபடி அவள் அருகில் நெருங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் கழுத்தில் இருந்து மஞ்சள் கயிறை கழட்டியவன் , அவள் பதறி துடித்து அதை பற்றும் முன்னர் அவளை பிடித்து அவள் தந்தைபுறம் தள்ளிவிட்டவன் , கழற்றிய கயிற்றை சுருட்டி பலம்கொண்டு மட்டும் தூரத்தில் வீசி எறிந்தான் , பின்பு யாரையும் திரும்பி பார்க்காமல் காரில் ஏறி மறைந்திருந்தான்.

 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 18





தன் அறையின் பால்கனியில் அமர்ந்து இருந்த திவியின் கண்கள் தொலைவில் எங்கயோ இலக்கில்லாமல் வெறித்து கொண்டிருந்தது, ஆனால் மனமோ கடல் அலைகள் போல சுழண்டு சுழண்டு அடித்து அவளையே கேள்விகள் பல கேட்டன.





இங்கே வந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது இன்னும் அவன் எங்கே இருக்கிறான் , என்ன பண்ணுறான் இல்ல உயிரோடுதான் இருக்கானா என்று யாருக்கும் தெரியவில்லை ஹரி உள்பட . ஸ்ரீயை பத்தி நினைத்தவுடன் திவியின் கண்களில் இருந்து கண்ணீர் சுரந்தது , அதை துடைக்க கூட தோன்றாமல் , அவளுக்குள்ளே புலம்பி கொண்டிருந்தாள் திவி,





‘ஏன்டா என் வாழ்க்கையில் நுழைஞ்ச... நானா கூப்பிட்டேன் ... நீயா திடிர்னு வந்த ... நாளைக்கு மீட் பண்ணுவோம்னு சொல்லி மறைஞ்ச ... உன்ன பார்த்த உடனே ஏண்டா உன்கூடத்தான் என்னோட இறுதி பயணம்ன்னு எனக்கு எதுக்கு தோணுச்சு ... முருக்ஸ் அனுப்பி வச்ச வழிகாட்டியத்தானே உன்ன பார்த்தேன்... நானா உன்ன தேடி வந்தப்போ.. என்ன வெரட்டி விடாமா எதுக்கு உன்னோட காரியத்துக்கு யூஸ் பண்ணிக்கிட்ட... அயோக்கிய ராஸ்கல் யாரை கேட்டு எனக்கு தாலி கட்டுன... இப்போ...என்ன டாஷ்க்கு இங்க விட்டுட்டு போயிருக்க... டேய்ய்ய்ய்ய் ஸ்ரீஈஈஈ... இந்த திவியை பத்தி உனக்கு சரியா தெரியலடா... எப்படி நான் உனக்கு கிறுக்கியா...ஆமாடா எவ்வளவு பெரிய கிறுக்கியா இருந்துருக்கேன் இப்போதானே தெரியுது... நான் வேலைல பண்ண தப்பு... இல்லாத ஒன்னை இருக்குன்னு நினைச்சு பலநாள் கனவு உலகத்துல சுத்துனது இது எல்லாம் சேர்ந்துதான் என்ன பைத்தியக்காரியா சுத்தவிட்டுருக்கு... இப்போ நான் அப்படி இல்ல... உனக்கு தெரியுமா ஸ்ரீபய்யா... நான் கவுன்சலிங் போறேன் ... இப்போ நான் முன்னமாதிரி கிடையாது... நீ மட்டும் என் கைல கிடைச்சா... நோ நோ சாந்தாமேடம் அமைதியா இருக்க சொல்லிருக்காங்க ... தேவ இல்லாததை நினைக்க கூடாது...ரிலாக்ஸ் ரிலாக்ஸ்... அவன் தேவ இல்லாதவனா... இல்ல...இல்லவே இல்ல ...”





“ஆஹ்ஹா ... ஏண்டா அன்னைக்கு குடிச்சுட்டு உளறின ... பாரு இப்போ நான்தானே மறுபடியும் பைத்தியக்காரி போல புலம்பிட்டு இருக்கேன்... நோ நோ ரிலாக்ஸ் நீ அமைதியா இருந்தாதான் அவங்க நல்லா இருப்பாங்க... கூல் கூல்’ என்று மனதில் புலம்பியவள் டாக்டர் கூறிய அறிவுரை படி அவளுக்கு பிடித்தமான ஷண்முக கவசத்தை கேட்க ஆரம்பித்தாள் , சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் தன் பிரச்சனைகளை சற்றுநேரம் மறந்து இசையில் மூழ்கினாள் திவி .





இதுதான் திவியின் நிலை கடந்த மூன்று மாதங்களாக , கவுன்சிலிங் , மெடிடேஷன் எல்லாம் பண்ணியும் தனிமையில் இருக்கும் போது இப்படி அடிக்கடி உள்ளுக்குள் புலம்புவது அவளுக்கு வழக்கம் ஆனது, இசையில் லயித்து இருந்தவளின் நினைவுகள் அவளை மீறி நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்ததை நினைத்துப்பார்க்க தொடங்கியது.





நொடியில் தன்னிடம் இருந்த தாலியை பறித்தவனை பார்த்து பதறி தடுக்கும் வேளையில் தன்னை பிடித்து தன் தந்தைபுறம் தள்ளிவிட்டு வேகமாக மறைந்தவனை கண்டு சுதாரித்து அவன் பின் செல்ல தொடங்கிய தன்னை தடுத்த தந்தையை பார்த்து ,





“விடுங்கஆஆ... அவர் போறாரு... நானும் போகணும்” ஆத்திரத்துடுன் கத்தி , திமிறி அவரோடைய இரும்பு பிடியில் இருந்து விலக போராடியவளை பார்த்து அவளைவிட ஆத்திரத்துடுன்,





“யாரு அவன்... கழுத்துல இருந்து என்னத்த கழட்டி தூக்கி போட்டான்“ கோபம் கொப்பளிக்க கேட்டவரை கண்டு கொள்ளாமல்,





“என்னது... தூக்கி போட்டானா...ஐயோ... எங்க போட்டான்... அப்பா... அப்பா அது விழுந்த இடத்தை நீங்க பாத்தீங்களா” என்று துடித்தவளை பார்த்து மேலும் கோபம் வர , தன்னை கட்டு படுத்தியவர் தனக்கு தோன்றிய சந்தேகத்தை தெளிவு படுத்தி கொள்ள , நிதானமாக ,





“பார்த்தேண்டா...அது என்னன்னு சொல்லு...அப்பா தேடித்தறேன்” என்றதும்தான் தாமதம், பலநாள் பிறகு தன்னிடம் பாசமாக தன்மையாக பேசும் தந்தையை பார்த்து,


“ அப்பா..அப்பா...அது...அது... என்னோட தாலிபா... அவன்தான்பா... கட்டினான் , அவனே கழட்டிட்டான்...எனக்கு அந்த தாலி வேணும்பா எங்க இருக்குன்னு தேடிதாங்கா ... ப்ளீஸ்” என்று சிறு விசும்பலுடன் கூறியவளை அதிர்ச்சியுடன் பேச்சிழந்து பார்த்திருந்தார் மனோ,


ஆனால் பானுமதிக்கோ திவி கூறியதில் அதிர்ச்சி ஏற்பட்டாலும் , சடுதியில் தன் நிலை திரும்பியவர், திவியின் அருகில் வந்து அவளின் கைகளை தன் கணவரிடம் இருந்து பிரித்து எடுத்து அவளை தள்ளி நிறுத்தி ,





“என்னடி சொல்லுற... நீ வீட்டை விட்டு போய் ஒருவாரம் கூட ஆகல... அதுக்குள்ள எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட ... மறைக்காம உண்மையை சொல்லுடி” என்று அவளை போட்டு உலுக்கியவரை , ஆத்திரத்துடன் உறுத்துவிழித்தவள் , அவரை பிடித்து பலம் கொண்டுமட்டும் பிடித்து தள்ளியபடி,





“இதுக்கு எல்லாம் காரணம் நீதான்... எவ்வளவு கெஞ்சிருப்பேன் ... அத்...” என்று தொடங்கியவள் பின் ஸ்ரீயின் மிரட்டல் நியாபகம் வர, தன் அத்தானை சுட்டிக்காட்டி ,





“அந்த ஆளை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுன்னு ... காதுல வாங்கினியா...எப்பவும் உனக்கு அவதானே முக்கியம்... நீ என்னோட ஆசையை குழிதோண்டி புதைச்சிட்ட... இப்போ என்கிட்ட என்ன நடந்துச்சுன்னு கேட்கிறியா...சொல்ல முடியாது...நான் ஆசை பட்டவனை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கல...அதான் எனக்கு புடிச்சவனா பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று சொல்லி முடிப்பதற்குள் அவளை அறைந்திருந்தார் மனோ.





தன்னை இதுவரை கை நீட்டி அடித்திராத தந்தை , தான் போனவாரம் பண்ண இழிவு செயலை பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருந்தாரே தவிர தன்னை அடிக்காதவர் இன்று அறைந்ததை அவளால் தாங்கி கொள்ள முடியாமல் போகவும் , அதோடு ஸ்ரீயின் பிரிவு தாலி இல்லாதது, நேற்று இரவு ஸ்ரீயிடம் அத்துமீறியது என்று , எல்லாம் சேர்ந்து கடந்த நான்கு நாட்களால் தெளிந்திருந்த புத்தி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும் அவள் கோபம் எல்லாம் தேவாவின் மேல் பாய்ந்தது.





“இவ்வளவுக்கும் காரணம் நீதாண்டி... நீ மட்டும் குறுக்கே வரமா இருந்திருந்தா... இந்நேரம் நான் பைத்தியகாரிய ...ஒரு கொலை பண்ணிட்டேன் குற்ற உணர்ச்சியில் சுத்திகிட்டு இருந்துருக்கு மாட்டேன்...கொடைக்கானல்ல தள்ளி விட்டும் நீ பொழிச்சிகிட்ட...உன்னை” என்று ஆங்காரமாய் கத்தியபடி அவள் மீதுபாய்ந்து கழுத்தை நெருக்க ஆரம்பித்தாள் திவி.





அவள் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் இருந்தனர் அனைவரும் , எல்லோர் மனதிலும் ‘ என்ன கொடைக்கானல்ல இவளா தள்ளியது’ என்ற கேள்வியே சுழன்றது , அங்கே தேவாவோ மூச்சுவிட சிரமப்பட்டு அவளிடம் இருந்து விடுபட முயற்சி செய்தபடி அருகில் இருந்த பூந்தொட்டியை ஒரு உதை விட அந்த சத்தத்தில் தங்கள் சிந்தனையில் இருந்து கலைந்தார்கள் , அங்கே தேவாவின் நிலை கண்டு பதறியடித்து அவளிடம் ஓடினான் பார்த்திபன் , தேவாவின் கணவன்.





“விடு ...விடு திவி...விடுன்னு சொல்லுறேன்ல” என்ற பார்த்தி திவியை தேவாவிடம் இருந்து கஷ்ட பட்டு பிரித்தவன் , அவளை கீழே தள்ளி விட்டு , தேவாவை அணைத்தபடி அவள் கழுத்தை மென்மையாக வருடிவிட்டுக்கொண்டே ,


“ஒன்னும் இல்லடா டிடி...ஒன்னும் இல்ல... பதட்டப்படாம மூச்சை நல்லா இழுத்து விடுடா டிடி” என்று தேவாவை சமாதானம் படித்தியவனை பார்த்தவளுக்கு தன் தலையில் இடி விழுந்ததை போல ,





‘என்ன..டிடியா ... அப்போ இவ்வளவு நாள் என்ன கூப்பிட்டது எல்லாம் தேவான்னு என்ன நினைச்சு கூப்பிட்டுருக்கான... அய்யோ...அப்போ நான் டிடி இல்லையா .. இல்ல இப்போ கூட விடு திவின்னு தானே சொன்னான்’ என்று எண்ணியவளுக்கு தனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமே இல்லை என்ற கழிவிரகத்தில் அவளுக்கு கண்ணீர் பொத்துக்கொண்டு வர , சில விஷயங்களும் அவளுக்கு புலப்பட ஆரம்பித்தது அதை நம்ப மனம் மறுப்பதை கண்டவளுக்கு தன் மீதே வெறுப்பும் ஆத்திரமும் வரவும், சுற்றும் முற்றும் பார்க்க அவள் கண்களுக்கு செடிகளை வெட்ட வைத்திருந்த கத்திரிக்கோல் பட வேகமாய் அதை நோக்கி சென்று , அதை கையில் எடுத்தபடி தேவாவை பார்க்க அங்கே எல்லோரும் அவளுக்கு ஆறுதல் கூறி கொண்டிருப்பதை பார்த்து விரக்தியாக சிரித்தவள் ,





தான் உயிரோடு இருப்பதே இழுக்கு என்று எண்ணியபடி , தன் வயிற்றில் கத்திரிக்கோலை ஓங்கி இறக்கும் வேலையில் ஸ்ரீயின் அழுத முகமும் அவன் போதையில் தன்னிடம் புலம்பியதையும் நினைத்து பார்த்தவளின் கைகள் அந்தரத்தில் நின்றது ,





‘இல்ல என்னோட வாழ்க்கை அவனுக்காகத்தான் , நான் சாக மாட்டேன் ‘ என்று மனதில் உறுதி எடுத்தவளை நோக்கி ஓடிவந்த பானுமதி , அவள் கையில் இருந்ததை பிடுங்கி தூக்கி தூர வீசியவர் , அவள் கன்னத்தில் மாறிமாறி அறைந்தபடி ,





“ ஏண்டி... இப்படி பைத்தியக்காரி மாதிரி பிஹவ் பண்ணுற... இதுக்காடி உன்ன ஆசையா அருமைபெருமையா வளர்த்தோம்... பாருடி உங்க அப்பாவை ... உன்ன எப்படி தலைல வச்சு தூக்கிட்டு சுத்துனாரு... கடைசில இப்படி வாயடைச்சு நிக்க வச்சுட்டியே” தன்னை அணைத்துக்கொண்டு கதறிய அன்னையை பதிலுக்கு இறுக அணைத்து , தன் தந்தையை பார்க்க அவரோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் இவளையே சிறிது நேரம் பார்த்தவர் பின்பு விடுவிடு என்று வீட்டுக்குள் நுழைந்து கொண்டார்.





தன்னை நோக்கி தயங்கியபடி வந்த தேவாவையும் பார்த்தியையும் பார்க்க பிடிக்காதவளாக முகத்தை திருப்பிய திவியின் தாடையை பிடித்து தன்னை நோக்கி திருப்பிய பானுமதி ,





“திவி.. நீ போனதும் ...” என்று சொல்ல தொடங்கியவரை பார்த்து எதையும் சொல்லாதீங்க என்பதை போல தலையசைத்தவள் ,சற்றென்று அவர் காலில் விழுந்து





“அம்மா... ப்ளீஸ்மா ... என்னை எப்படியாவது சரிபண்ணுமா .... நான் ரொம்ப கெட்டவளா மாறிட்டேன்... என்ன சைக்கிரியாடிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போமா ... எனக்கு பயமா இருக்கு.. நான் ...இவ...” என்று தேவாவை நோக்கி கையை காட்டியவள் ,





“இவளை ... ஏதாவது பண்ணிடுவேனோனு பயமா இருக்குமா... ப்ளீஸ் ஏதாவது பண்ணுமா” என்று தன் கால் பிடித்து கதறும் திவியை காண சகிக்காத பானுமதி அவளை எழுப்பி அணைத்துக்கொண்டு கதறிவிட்டார்.








அவர்கள் இருவரையும் பார்த்த தேவாவுக்கும் பார்த்திக்குமே கண்கள் கலங்க , அவள் அருகில் செல்ல துணிவு இல்லாமல் அங்கேயே நின்றிந்தனர். பார்த்திக்கோ, தான் அறியாமல் செய்த சிறுசிறு தவறுகளால்தான் திவியின் தற்போதைய நிலைமைக்கு காரணம் என்பதை உணர்ந்தவன் குற்றஉணர்ச்சியில் துடித்துப்போனான், அவன் மனதை புரிந்தாற்போல் , அவன் கையை பற்றிய தேவா அதை மென்மையாக வருடி கொடுத்தவாறே,





“எல்லாம் சரி ஆகிடும் அத்தான் ... அவளை பழைய படி மாத்திடலாம் ... கொஞ்சநாள் அவளுக்கு நம்மை புரியவைக்க டைம் கொடுப்போம் அதுவரைக்கும் அவ கண்ணு முன்னாடிபோக வேணாம் ... அது அவள் ஆத்திரத்தை குறைக்கும் ” எப்பவும் போல தன் மனதை புரிந்து நடப்பவளை பார்த்து உள்ளுக்குள் பெருமிதம் கொண்டவன் , அவளைப்பார்த்து புரிந்ததாக தலையை ஆட்டியவன் அவளையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றான்.





தங்கள் துக்கத்தை அழுகையில் கரைத்தனர் தாயும் மகளும் ,சிறிது நேரம் சென்றபின் முதலில் தெளிந்த பானுமதி , திவியை அழைத்து கொண்டு ஸ்ரீ தாலியை விட்டெரிந்த பக்கம் சென்று தேடலானார். பத்து நிமிடம் தேடியும் கிடைக்காததால் சோர்ந்த பானுமதியை , திவியின் குளம் கட்டிய கண்கள் ஏக்கத்தோடு பார்த்தது, அவர் மனமோ





‘அய்யோ முருகா உன்னையே சுத்திசுத்தி வருவாளே .. அவளுக்கு இப்படியா சோதனை கொடுப்ப... போதும்யா ...என் பொண்ண நிம்மதியா வாழ விடு’ என்று மனதில் முருகரிடம் வேண்டுதல் வைத்தவர் , திவியை பார்த்து புன்னகைத்தபடி,





“வாடா உள்ள போலாம் இங்கதான் இருக்கும் ...அவசரத்துல தேடுனா கிடைக்காது ... அப்புறமா தேடலாம் வா” என்றவர் அவள் பதிலுக்கு காத்திராமல் அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.





வீட்டிற்குள் நுழைந்தவுடனே , திவியின் உடல் இறுகுவதை கண்ட பானுமதி , அவள் தோளை அணைத்தபடி ,





“என்னடா ...பழச எதுவும் நினைக்காத...சரியா அம்மா இருக்கேன் நான் பாத்துக்கிறேன்... சரியாடா” என்ற அன்னையை பார்த்து கண்கள் கலங்க தலையசைத்தவள், பின்பு தயங்கியபடி,





“அம்மா...நான் ...உங்ககிட்ட ...” என்றவளை இடைமறித்த பானுமதி ,





“நீ...இப்போ எதுவும் சொல்ல வேணா ...எல்லாத்தையும் அப்புறம் பேசிக்கலாம் போய் உன் ரூம்ல ரெஸ்ட் எடு... அம்மா உனக்கு எதாச்சும் சாப்பிட எடுத்துட்டு வரேன்” என்றவரை பார்த்து மறுபடியும் தலை அசைத்தவள், மீண்டும்





“அம்மா ...அப்பா கிட்ட பேசிட்டு போகட்டா” என்று தன்னிடம் அனுமதி கேட்கும் மகளை பார்த்து உள்ளம் கலக்கியவர் ,





“வேணாம் திவி ... அப்பா ...கொஞ்சம் கோபத்துல இருக்காங்க ... கொஞ்சநாள் போகட்டும் ... அப்புறம் பேசிக்கலாம்” என்று கூறியபடி அவளையும் தன்னோடு அழைத்து கொண்டு அவள் அறைக்கு சென்றார் பானுமதி.





வீட்டிற்கு வந்து ஐந்து வாரங்கள் ஆகியும் , தன் அன்னையை தவிர வேறு யாரிடமும் பேசாத திவி முக்கால் வாசி நேரங்களை தன் அன்னையிடம் செலவழித்தாள் , மற்ற நேரங்களில் தன் அறையில் அடைந்து கிடப்பவள் மறந்தும் தேவா பார்த்தி பக்கம் திரும்பவில்லை, சில நாட்கள் தன் தந்தையிடம் பேச முயற்சி செய்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இதை பார்த்த பானுமதிக்கு மனோ மேல் கோபம் வரவே அவரிடம் நேராகவே சென்று கண்டித்ததை சிறிதும் சட்டை செய்யாத மனோ , திவியை ஊதாசனம் படுத்த ஆரம்பித்தார்.





இதற்கு நடுவில் திவியை நன்கு அறிந்த தன் தோழியான சைக்கிரியாரிஸ்ட் சாந்தாவிடம் கூட்டி சென்றார் பானுமதி , அவரிடம் செல்ல தொடங்கியா நாட்களில் இருந்து திவியின் மனநிலையில் மெல்ல முன்னற்றம் தெரிய ஆரம்பித்தது , நடுநடுவே தியான வகுப்பிலும் திவியை அழைத்து சென்றார் , மொத்தத்தில் திவிக்கு எல்லாமும் ஆனார் பானுமதி , தன் வேலைக்கு ஒரு மாதம் விடுப்பு எடுத்தவர் , தான் முன்பே சரி பண்ணாமல் விட்ட தவுறுகளால் ஏற்பட்ட துன்பத்திற்கு பிராயச்சித்தமாக தன் நாளின் முக்கால் வாசி நேரத்தை திவியுடம் செலவழித்தார் பானுமதி.





பகல் முழுவதும் தன் அன்னையிடம் பொழுதை செலவழிக்கும் திவி இரவு ஆனதும் தனிமையில் எதையோ இழந்ததை போல உணர ஆரம்பித்தாள், ஆரம்பத்தில் பானுமதி திவி உடன் தான் படுத்து கொண்டார் , இவள் தூக்கம் வராமல் பாதி ராத்திரியில் எழுந்து உலாவதை கண்டு அவரும் விழித்து கொண்டு அமர்ந்திருப்பார் , அவளுடைய ஒவ்வொரு அசைவுக்கும் அவர் பதறி அடித்து விழிப்பதை பார்த்து பரிதாபம் கொண்டம் திவி , அவரை வலுக்கட்டாயமாக அவர் அறையில் படுக்க அனுப்பிவைத்தாள், அவரும் அவளிடம் பல சத்தியங்கள் வாங்கியபின்னே தன் அறையில் படுக்க ஆரம்பித்தார்.





தன் அறையில் தனிமையில் படுத்திருக்கும் திவிக்கோ ஸ்ரீயின் நியாபகமே , இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருப்பான் , குடிப்பானா , சோகமா இருப்பானா , நல்லா இருக்கானா இல்ல விரக்தியில் தற்கொலை பண்ணிகிட்டானா , என்பதுபோல பல சிந்தனைகள் அவளை வாட்டும். சில நேரம் அழுத்தம் தாங்காமல் கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவனை அர்ச்சனை செய்பவள் , பொறுக்க முடியாமல் போகும் போது தன் பையில் வைத்திருந்த அவனோடேயே ஷிர்டை , (ரூமை காலி பண்ணும் போது பாத்ரூமில் அவன் விட்டதை, அவசரத்தில் தன் பையில் சொருகி கொண்டதை அவனிடம் கொடுக்க மறந்திருந்தாள்) எடுத்து தலைகாணிக்கு போட்டு அதை ஆசைதீர குத்தி மிதித்து ஓரத்தில் தூக்கி வீசிய பின்தான் அவளுக்கு அன்றைய பொழுதில் தூக்கமே வரும், இதை இரவில் வாடிக்கையாகி கொண்டாள் திவி .





ஒவ்வொரு நாளும் தன் தந்தை தன்னிடம் பேசுவார் பேசுவார் என்று எதிர் பார்த்த திவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது , ஒருநாள் பொறுமை இழந்தவள் காலை உணவை உட்கொண்டவரிடம் நேரே சென்று நின்றாள் திவி. வந்திருப்பது திவி என்பதை உணர்ந்த மனோ அவளை சட்டை செய்யாமல் உணவு உண்பதில் மும்முரம் காட்டினார் , அதை பார்த்து அருகில் சாப்பிட்டு கொண்டிருந்த தேவா ,





“அப்பா” என்ற அழைக்க அவர் முறைத்த முறைப்பில் , அவசரமாக தலையை குனிந்து கொண்டு உணவு சாப்பிட ஆரம்பித்தவள் உள்ளுணர்வு உந்த நிமிர்ந்து பார்க்க அதிர்ந்து போனாள் , அங்கே கண்கள் சிவக்க இவளை சக்தி இருந்தால் பொசுக்கி விடும் ஆத்திரத்தில் முறைத்து கொண்டிருந்தாள் திவி.





சற்றென்று கீழே குனிந்து திரும்பவும் உணவு உண்பதை போல பாவலா காட்டியபடி என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தாள் தேவா. திவியின் மனமோ ‘அது எப்படி இவ எனக்கு ரெகமெண்ட் பண்ணலாம் ... எப்பவும் நான்தானே அவளுக்கு வேண்டியதை அப்பா கிட்ட சொல்லி வாங்கி தருவேன்... அப்பா எப்பவும் என்னோட அப்பாதான்...அவர் கோபமா இருந்தா அப்படியே விட்டுடுறதா ...நோ திவி விடாதா ... என்னதான் பண்ணுறாருனு பாரு’ என்று மனதில் நினைத்தவள் , ஒரு முடிவு எடுத்தவளாக , அவர் அருகில் நெருங்கி நின்று கொண்டு அவர் அடுத்த வாய் தோசையை சட்னியில் நனைத்து தன் வாய் அருகில் கொண்டு செல்லும் வேலையில் , அவசரமாக அவர் கையை தன்புறம் திரும்பியவள் , அந்த தோசை துண்டை தன் வாயிற்குள் நுழைத்து கொண்டாள், அவரை பார்த்து அழகாக சிரித்தும் வைத்தாள்.





அவளுடைய சிரிப்பில் கண்கள் கலங்க அவர் முகத்திலும் புன்னகை தானாகே வந்து அமர்ந்தது , அதோடு இல்லாமால் அடுத்த வாய் தோசையையும் அவளுக்கு இயல்பாய் ஊட்ட ஆரம்பித்தார் மனோ.





கண்களில் கண்ணீர் சுரக்க முகத்தில் புன்னகை பூக்க ஆவலுடன் அவர் கையால் தோசை சாப்பிட ஆரம்பித்த திவிக்கு மூன்று வாய் சாப்பிட்ட பின் குமட்டிக்கொண்டு வருவதை போல இருக்க , வாயை கையால் பொத்தியபடி அவசரமாக பாத்ரூம் நோக்கி ஓடியவள் , சாப்பிட்டதை எல்லாத்தையும் வெளியே வாந்தியாக எடுத்திருந்தாள்.





அதற்குள் மனோவும் தேவாவும் பதறி அடித்து ஓடி வந்தவர்கள் பாத்ரூம் அருகில் நின்றிருந்தபடி குரல் கொடுத்தனர், உள்ளே திவிக்கோ சற்று முன்பு வரை இருந்த தைரியும் ஆட்டம் காண ஆரம்பித்தது, அவள் மனது அடித்து சொன்னது அதுதான் என்று , அவள் கைகள் நடுங்க தன்னை சுத்தம் படுத்தியவள் தயங்கியபடி மெல்ல வெளியே வந்தாள், அவளை பார்த்ததும் வேகமாக அவள் அருகில் வந்த மனோ , அவளை தோளோடு அணைத்தபடி,





“ஆர் யு ஓகே ... திவிக்குட்டி ” என்று கேட்டவரை பார்த்து கண்கள் கலங்க ஆமாம் என்று தலையசைத்தவளை பார்த்து , பின் கனிவாக , பயத்தில் அவள் முகத்தில் பூத்திருந்த வேர்வைகளை பொறுமையாக துடைத்தவர், அவள் தலைமுடியை ஒதுக்கி விட்டவாறே,





“என்னடா பண்ணுது... ஏன் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க... டாக்டர் கிட்ட போவோமா ... பாரு வீட்டுலயே இத்தனை டாக்டர்ஸ் இருக்காங்கா ... ஏய் பானு என்ன திரு திருன்னு முழிக்கிற... வந்து என் பொண்ணுக்கு என்ன பிரச்சனைன்னு பாரு ... ” என்றவர் பின்பு





“வேணாம் வேணாம்...இவ பிரசவம் பாக்க மட்டும்தான் லாயக்கு ... நான் என் பொண்ண பெரிய டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்... என்னடா போலாமா” என்றவரை பார்த்து எச்சில் முழுங்கியபடி வேணாம் என்று தலையசைத்தவள் , பின் அவர் முகத்தை பார்த்தபடி தயங்கி தயங்கி அந்த வார்த்தையை கூறினாள்.





“ ஐ திங்க்... ஐ...ஐ...ஐ அம் ...பிர...பிர.. .பிரகனட்”.

 
Status
Not open for further replies.
Top