All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தித்தித்திட செய்வாய்! - கதை திரி

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தித்தித்திட செய்வாய் 10


வித்யாவிற்கு புரிந்த விசயம் உகுந்ததாக இல்லை. எனவே செந்திலை பார்த்தாள். ஆனால் அவனோ அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு தனது பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

கனகவேல் தொடர்ந்து பேசினார்.

"அப்போ இனி கல்யாண வேலையை கடகடனு தொடங்கிரலாமா! பத்திரிக்கை எழுத கொடுத்திட்டா.. கல்யாணத்துக்கு மாங்கல்யம் செய்ய தங்கம் கொடுக்கிறது.. முகூர்த்த புடவை வேட்டி சட்டை எடுக்கிறதுனு.. அடுத்த வேலைகளை பத்திரிக்கை அச்சு அடிச்சு வரதுக்குள்ள முடிச்சுட்டணும். அப்பறம் பத்திரம் மாத்திர வேலையையும் கையோட தொடங்கிட்டா பத்திரிக்கை கொடுத்துட்டே அந்த வேலையையும் பார்த்திரலாம். என்னங்க நான் சொல்றது சரிதானே..” என்றுக் கேட்டார்.

கந்தசாமி மெதுவாக செந்திலை பார்த்தார். கந்தசாமியின் பார்வை செந்திலிடம் திரும்பியதைக் கவனித்த கனகவேலுக்கு யாரிடம் இருந்து இந்த குடும்பத்தில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றுத் தெரிந்துக் கொண்டார்.

எனவே அவரே இன்னும் இரு நாட்கள் கழித்து வீட்டிற்கு வாருங்கள்.. பத்திரிக்கை எழுதுவது பற்றிப் பேசலாம் என்றார். பிறகு கனகவேலின் குடும்பத்தினர் அனைவரும் எழுந்தனர். அப்பொழுது அவரது இரண்டாவது மகன் வேகமாக வெளியே சென்று.. தனது மனைவியை அழைத்துக் கொண்டு வந்தான். அந்த பெண்ணும் பேருக்கு அனைவரையும் பார்த்து முறுவலித்தாள். அனைவரும் விடைப் பெற்றனர். செந்தில் அவர்களுடன் கார் வரை வந்து வழியனுப்ப சென்றான்.

தங்கம் வித்யாவிடம் செந்திலுடன் செல்ல கூறவும், புகுந்த வீட்டினர்.. அவளிடம் இருந்து மறைத்த விசயத்தை நினைத்து கோபத்தில் இருந்தவளுக்கு.. முடியாது என்றுச் சொல்லிவிடலாம் என்றுத் தோன்றியது. ஆனால் பெரியவர்கள் எதாவது கூறினால் தட்டக் கூடாது என்றுச் சொல்லி வளர்க்கப்பட்டதால்.. அவளும் வேறு வழியிராது அவனுடன் சென்றாள்.

கனகவேல் ஏற கார் கதவைத் திறந்து விடவும், அவனது தோளில் அன்பாக கையைப் போட்டவர் “செந்திலு! உன்னைப் பார்த்த சின்ன வயசுல என்னைப் பார்க்கிற மாதிரியே இருக்கு..! நானும் என் வீட்டில் நடு பையன் தான்! ஆனா என்ன முடிவு எடுக்கிறதுன்னாலும் என்னைக் கேட்டுட்டு தான் எடுப்பாங்க! நான் சரியான முடிவு எடுப்பேன்னு நம்புவாங்க! அதனால.. எனக்கு என்ற குடும்பத்துல மட்டுமில்ல.. சொந்தங்க கிட்டயும் மதிப்பும் மரியாதையும் பயமும் இருக்கு..! முக்கியமான விசயம் என்ன தெரியுமா கண்ணு! அதை தக்க வச்சுக்கணும். இந்த மரியாதை பயம் எல்லாம் கொடுக்காம இருந்திருந்தா கூடத் தெரிஞ்சுருக்காது. ஆனா மரியாதை கொடுத்தவங்க.. நாளைக்கு உன்னை மதிக்காம போன.. கஷ்டமா இருக்கும். அதுவரைக்கும் கொண்டு வந்திராதே..” என்று அவனது தோளைத் தட்டிக் கொடுத்தார்.

இவர் புகழ்வது போல்.. புகழ்ந்து, அவர் மேலே மரியாதை வர வைத்து தன்னையும் அவருக்கு கட்டுப்பட்டவனாக ஆக்க முயல்கிறார் என்று செந்திலுக்கு புரிந்தது.

எனவே சிறுச் சிரிப்புடன் “எடுக்கிற காரியத்தை சரியாக முடிச்சா.. எல்லாரோட மதிப்பையும் மரியாதையையும் கிடைக்கணுமினு நெனைச்சுட்டு இருந்தேன்ங்க.. ஆனா ஒருத்தரை பாராட்டி பேசி கூட.. அதை வாங்கிக்கலான்னு சொல்லிக் கொடுத்திருக்கீங்க! உங்களை மாதிரி நாலு நல்லது கெட்டது மட்டுமில்லை.. சூது வாதும் தெரிந்த பெரியவங்க வாயில இருந்து ஆசீர்வாதம் கிடைச்சா போதுங்க நான் நல்லா இருப்பேன்.” என்றான்.

அதற்கு அவர் அவனது தோளில் தட்டிக் கொடுக்கவும், செந்தில் தொடர்ந்து “இரண்டு நாள்ல பத்திரிக்கை எழுத கூப்பிட்டிங்க.. ஆனா நாளைக்கு குலத் தெய்வ கோவிலுக்கு போகணும். என்னோட கல்யாண வேலைங்க.. இப்போ தான் முடிஞ்சுது. உடனே அடுத்த வேலையைத் தொடங்கிறது.. கஷ்டங்க.. கொஞ்சம் ஒய்வு எடுத்துட்டு பழைய வேலையெல்லாம் கிடப்பில் போட்டிருக்கோம். அதையெல்லாம் சரிப் பார்த்துட்டு ஒரு பத்து நாள் கழிச்சு வரோங்க..! அப்பறம் என்ன.. கால்ல சக்கரம் கட்டிவிட்ட மாதிரி கல்யாண வேலைகளைச் செய்யலாங்க! உங்க வேகத்துக்கு நாங்க ஈடு கொடுத்தாலே போதும்.. விரசா வேலை முடிஞ்சுரும். கல்யாணத்தை ஊர் மெச்சுற அளவிற்கு ஜமாய்ச்சிடலாங்க..” என்றான்.

அதைக் கேட்ட கனகவேல் “சரித்தான் செந்தில்..” என்று அவனது தோளில் மீண்டும் தட்டிவிட்டு.. வித்யாவை பார்த்து புன்னகையுடன் தலையசைத்துவிட்டு காரில் ஏறினார்.

அந்த கனகவேல் புகழ்ந்து.. செந்திலையும் தன் வலைக்குள் விழ வைக்க நினைத்திருக்க.. ஆனால் அவர் விரித்த வலையில் அவரையே விழ வைத்து.. அவன் கூறியதிற்கு அந்த பெரியவரை தலையை ஆட்ட வைத்து விட்ட செந்திலின் சமார்த்தியத்தைக் கண்டு வித்யா வியந்தாள்.

கார் மறையும் வரை நின்றுவிட்டு திரும்பியவனை முறைத்தவாறு வித்யா எதிர் கொண்டாள்.

செந்தில் திரும்பியதும் வித்யா பொரிய ஆரம்பித்தாள்.

“குடும்பமே சேர்ந்து எங்களை ஏமாந்திட்டிங்கில்ல..” என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.

அதற்கு செந்தில் “பெரிய வார்த்தை எல்லாம் பேசாதே! இதுக்கு தான் உள்ளே போன்னு சொன்னேன். ஆனா கேட்காம உட்கார்ந்துட்டு.. கேட்க கூடாதெல்லாம் கேட்டுட்டே..! நல்லவேளை வாயைத் திறந்து பேசாம இருந்தே..! சரி வா உள்ளே போய் பேசலாம்.” என்று முன்னால் நடந்தான்.

வித்யா அவனது பின்னால் வந்தவாறு “நான் எல்லார் கிட்டயும் நிற்க வச்சு கேள்வி கேட்பேன். என்னமோ பெருசா உங்க குடும்ப கௌரவத்தை நாங்க வாங்கிட்ட மாதிரி.. என் ரிலேட்டிவ்ஸ் கிட்ட அப்படி கோபமா பேசனீங்க..! நீங்க என்ன காரியம் செய்து வச்சுருக்கீங்க..” என்றுக் கோப மூச்சுக்களை இழுத்துவிட்டவாறு கேட்டாள்.

அவள் புறம் திரும்பிய செந்தில் “தலையில அடிப்பட்ட காலுக்கு மருந்து போடுவியா..” என்றுச் சம்பந்தமில்லாமல் கேட்டான்.

வித்யா புரியாமல் பார்க்கவும், செந்தில் “நான் தானே உங்க வீட்டு ஆளுங்க கூடச் சண்ட போட்டேன். நான் தானே சொத்து வேணுன்னு கேட்டேன்.. அப்போ என்ன கேட்கிறது இருந்தாலும் என்கிட்ட கேளு..” என்றுக் குரலில் சிறு கண்டிப்புடன் கூறினான்.

அதற்கு வித்யா “அதைத்தான் செய்துட்டு இருக்கேன். ஆனா அவங்களுக்கு தெரியாம இதைச் செய்திருக்க மாட்டிங்க..! அதுனால அவங்களும் எனக்கு பதில் சொல்லியாகணும்..” என்கையில் அவளது கரத்தைப் பற்றிய செந்தில்.. அவளை இழுத்துக் கொண்டு இடப்பக்கம் வழியாக வீட்டை சுற்றி.. பின்கொல்லைக்கு இழுத்துச் சென்றான். அங்கிருந்த கதவின் வழியாக உள்ளே அழைத்துச் சென்றவன், அவர்களது அறைக்கு அழைத்துச் சென்று.. கதவை உயர்த்தி அழுத்தமாக சாத்தினான்.

“இப்போ கேளு!” என்றான்.

வித்யா “வாவ்! உங்க மானம் போயிர கூடாதுனு எப்படி ஒளிஞ்சு அவங்களுக்கு தெரியாம பின் வழியா கூட்டிட்டு வரீங்க!” என்று இளக்காரமாக கேட்டாள்.

அதற்கு செந்தில் “உன் மானம் போயிர கூடாதுனு தான் வித்யா! என் கிட்ட இப்படிப் பேசறதை மற்றவங்க பார்த்தா.. என்னை இளப்பமா பார்க்க மாட்டாங்க.. உன்னைத் தான் இளப்பமா பார்ப்பாங்க..! இப்போ உனக்கு என்ன தெரியணும்? நான் சொத்துக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தெரிஞ்ச விசயம் தானே! அப்பறம் இப்போ எதுக்கு புதுசா கோபப்படறே..” என்றுக் கேட்டான்.

வித்யா முற்றிலும் நொறுங்கியவளாய் “என்னது! எதுக்கு கோபப்படறேனா! ஒரு பெண்ணை இதுக்கு மேலே அவமானப்படுத்த முடியாதுங்க! என்னை சொத்துக்காக கல்யாணம் செய்தீங்க என்கிறதே கேவலமான விசயம். ஆனா அதுலயாவது உங்களுக்கு சொத்து தேவைப்பட்டதுனு உங்களுக்கு நான் தேவைப்பட்டிருப்பேன். ஆனா.. உங்க தங்கச்சிக்கு கல்யாணம் செய்யறதுக்காக சொத்து வேணும். அதுக்காக நான் வேணுன்னா எனக்கு எப்படியிருக்கு தெரியுமா..” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தோடியது.

ஆனால் செந்திலோ அலமாரியில் மடித்து வைக்கப்பட்டிருந்த துண்டை எடுத்து படுக்கையில் அமர்ந்திருந்த அவளது மடியில் வீசி “கண்களை துடை!” என்றான்.

ஆனால் அதை வெறுப்புடன் பார்த்த வித்யா அதைத் தட்டிவிட்டாள்.

பின் அவனது முகத்தை கூடப் பார்க்காது “முதல்ல எனக்கு பிடித்த மாதிரி இருந்தது பொய் என்றுத் தெரிஞ்ச போதே நான் நொந்துட்டேன். அடுத்து எப்படித்தான் கல்யாணம் செய்தாலும் உங்களுக்கு என் மேலே அன்போ காதலோ இல்லைன்னு தெரிந்ததும்.. இன்னமும் நொந்துட்டேன். சொத்துக்காக தான் என்னை கல்யாணம் செய்தீங்கனு தெரிஞ்ச போது.. வாழ்க்கையில பெரிய ஃபெயிலியரான ஆன ஃபீல்! அப்பறம் என் ரிலேட்டிவ்ஸ் கிட்ட சண்டை போட்டு அவங்களை வருத்தப்பட வச்சுக்கீங்க பாருங்க! இனி உங்க கூட எப்படி வாழப் போறேன்னு எனக்கு பயம் வந்துருச்சு! ஆனா என்னோட வாழ்க்கை போன என்ன.. உங்களோட வாழ்க்கையில் உங்களுக்கு ஏத்த மாதிரி வாழலானு முடிவு செஞ்சேன். இந்த முடிவை எப்படி எடுத்தேன்னு எனக்கே தெரியலை. ஆனா இப்போ அது எல்லாத்தை விட.. பெரிசா.. இந்த உங்க தங்கச்சி கல்யாணத்திற்கு சொத்துக்காக தான் என்னை கல்ணாயம் செய்தீங்கனு தெரிஞ்சதும் என்னால சுத்தமா முடியலைங்க..” என்று கண்களை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

,மூடிய‌ விழிகளுக்குள் அவளுக்கு எங்கோ பாதாளத்தில் விழுவது போன்று இருந்தது. பயத்துடன் இமைகளைத் திறக்க எதானிக்கையில் அவளது பின்னந்தலையில் அழுத்தமாக படிந்த கரம் அவளை இழுத்து இன்னும் அழுத்தமாக கதகதப்பான இடத்தில் வைத்து அழுத்தியது. அவளுக்கு அவளது தாயின் மடி தான் நினைவிற்கு வந்தது.

எனவே அவளது கரங்கள் தானே உயர்ந்து கட்டிக் கொண்டன. ஆனால் அடுத்த நிமிடமே.. அவளது தாய் அல்லவே இது.. அவளது தந்தையும் இல்லை. பின்னே.. என்று யோசித்தவளுக்கு விடையாக வந்தவனின் முகத்தை மூடிய இமைக்குள் கண்டதும்.. வெடுக்கென்று கரங்களை அகற்றிக் கொண்டாள்.

மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.

செந்தில் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முகத்தை நிமிர்த்திப் பார்க்கவும், அதற்கு தான் காத்துக் கொண்டிருந்தவன் போல் குனிந்து அவளது இதழில் அழுத்த முத்தமிட்டவன், “நீ நெனைக்கிற அளவுக்கு நான் மோசமானவனும் இல்ல. நம்ம வாழ்வும் மோசமா போகாது. என்னை நம்பு..” என்றுவிட்டு அவளது முகத்தைப் பற்றிய இருகரங்களின் கட்டை விரலால் அவளது கண்ணீரை துடைத்தவன், கன்னத்தை சிறுத் தட்டுத் தட்டிவிட்டு கதவை திறந்துக் கொண்டு சென்றான்.

வித்யா திகைத்தவளாய் அவன் சென்ற பின்பும் சாத்திய கதவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது கணவனுக்கு இவ்வாறு இதமாக ஆறுதல் தர தெரியுமா! இதழணைக்க தெரியுமா!

வியப்புடன் தனது இதழை தொட்டுப் பார்த்தவள், வெட்கத்துடன் தலையாணியில் முகத்தை புதைத்துக் கொண்டாள். மீண்டும் அவளது நினைவில் செந்தில் முத்தமிட்டது நினைவிற்கு வந்து சென்றது. அவளது முகத்தைப் பற்றி இதமாக அவன் மீது அழுத்தியதும் நினைவிற்கு வந்தது. தாயின் அரவணைப்புடன் அவனது அணைப்பை ஒப்பிட்டு பார்த்த தனது மனதை நினைத்து அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் அழுதது தாங்காது அணைத்திருக்கிறான் என்று அவளது எண்ணப்போக்கு செல்லவும், ஏன் அழுதாள் என்று நினைத்துப் பார்த்தாள். ஏன் அழுதாள் என்று நினைவிற்கு வந்ததும் விருக்கென்று எழுந்தமர்ந்தாள்.

ஏனெனில் அவள் அழுதத்திற்கு காரணகர்த்தாவே அவளது கணவன் தான்!

அவளது தங்கையின் திருமணத்திற்கு சொத்து சேர்ப்பதற்கு.. அவளைத் திருமணம் செய்திருக்கிறான். எவ்வளவு கேவலமான செயல்.. இம்மாதிரி செயலைச் செய்துவிட்டு.. அதற்கு அவள் கேள்விக் கேட்டதிற்கு.. பதிலைத் தராமல் அணைத்திருக்கிறான், முத்தமிட்டு இருக்கிறான். ஆறுதல் வார்த்தைகள் வேறு..

ஆறுதல் வார்த்தைகள் வேறு என்று ஆத்திரத்துடன் நினைக்கையில் அவன் கூறியது நன்றாகவே நினைவிற்கு வந்தது.

‘நீ நெனைக்கிற அளவுக்கு நான் மோசமானவனும் இல்ல. நம்ம வாழ்வும் மோசமா போகாது. என்னை நம்பு..’

தற்பொழுதும் அந்த குரல் அவளது காதில் விழுந்தன.

அந்த குரலில் இருந்த உண்மை தன்மை பொய்யில்லை.

அவளை அவன் ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறான்.

அதுவும் பொய்யில்லை.

ஆனால் ஒன்றுக்கு ஒன்று எத்தனை முரண்!

இது இரண்டும் எவ்வாறு ஒன்றாகும்.

என்று பலவாறு யோசித்து தலையைப் பிடித்தவாறே உறங்கி விட்டாள்.

வித்யாவிடம் பேசிவிட்டு சிறு யோசனையுடன் வேட்டியை மடித்துக் கட்டியவாறு செந்தில் முன் கூடத்திற்கு வரவும்.. அவனது அன்னை தங்கம் அவனை அதிசயமாக பார்த்து “என்ன செந்திலு! இப்படிகா போன.. இப்போ இப்படி வந்திருக்கே!” என்றவர், தொடர்ந்து “வித்யா கண்ணு எங்கே செந்திலு! காபி டீ அவளுக்கு எது வேணும்.” என்று செல்ல தொடங்கியவரை செந்தில் தடுத்தான்.

“அம்மா! கொஞ்ச நேரம் கழிச்சு போ..” என்றான்.

தங்கம் “ஏன்டா..” என்கவும், செந்தில் “தோப்புல அவளைப் பற்றி அப்படி நீங்க பேசி வச்சுருக்கீங்க..” என்றான்.

தங்கம் “அப்படி என்னடா பேசினே..” என்று அவனையே கேட்கவும், செந்தில் சிரித்தான்.

உடனே கோபமுற்ற தங்கம் “அப்போ ஏதோ வாய்க்கு வந்ததைப் பேசியிருப்பேன். அத வித்யா கூட பெருசா எடுத்துக்கலை போல..! ஆனா நீதான் சொல்லிக் காட்டுற..! விட்டா உன் பொஞ்சாதிக்கு எடுத்து கொடுப்பே போல..” என்றார்.

அதற்கும் செந்திலுக்கு சிரிப்பு தான் வந்தது. பின் அவரிடம் தந்தை எங்கே என்றுக் கேட்டுவிட்டு முன் தாழ்வாரத்திற்கு சென்றான். அங்கு கந்தசாமி வடிவேலுடன் அமர்ந்து திருமண பத்திரிக்கை எழுதுவதைப் பற்றி ஏதோ சொல்ல அவன் எழுதிக் கொண்டிருந்தான். செந்திலை பார்த்ததும் கந்தசாமி “செந்திலு! எழுதின வரை சரியானு பாரு..” என்று வடிவேலுவிடம் இருந்து வாங்கி இளைய மகனிடம் நீட்டினார்.

அதை வாங்கிய செந்தில் படித்தும் கூடப் பாராமல் மடித்து பாக்கெட்டில் சொருகினான்.

கந்தசாமியும் வடிவேலும் திகைப்புடன் அவனைப் பார்க்கவும், செந்தில் “பத்து நாள் போகட்டும். அப்பறம் பார்த்துக்கலாம்.” என்று அசட்டையாக கூறினான்.

அதற்கு கந்தசாமி “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க.. ரெண்டு நாள் கழிச்சு வரச் சொல்லியிருக்காங்க..” என்கவும், செந்தில் “அதெல்லாம் நான் அவங்க கிட்ட பேசிட்டேன். அவரும் சரினு சொல்லிட்டார்.” என்றான்.

கந்தசாமி திகைப்பு மாறாமல் பார்க்கவும், செந்தில் “எதுக்கு அவர் கூடப் பேசிட்டு இருக்கும் போது.. ஓரக் கண்ணுல என்னைப் பார்க்கறீங்க?” என்று எரிச்சலுடன் கேட்டான்.

கந்தசாமி “நீதான் எல்லா முடிவையும் எடுப்பே..” என்றார்.

செந்தில் “அத நேரா.. கருத்து கேட்கிற மாதிரி கேட்க வேண்டியது தானே! என்னமோ திருடங்க கண்ணுல பேசிக்கிற மாதிரி.. இருக்கு..” என்கவும், வடிவேலு சத்தமாக சிரித்துவிட்டான்.

பின் வடிவேல் “ஏன்டா! பத்து நாள் டைம் கேட்டே..” என்றுக் கேட்டான்.

அதற்கு செந்தில் “ம்ம்! முதல்ல வூட்டு பிரச்சினையை தீர்க்கணும். அதுக்கு தான்..” என்றான்.

இருவரும் என்ன என்பது கேள்வியாய் பார்க்கவும், செந்தில் “வித்யாக்கு எல்லாம் தெரிஞ்சுருச்சு!” என்றான்.

இருவரிடமும் பதிலில்லை. சங்கடத்துடன் நெளிந்தார்கள்.

பின் கந்தசாமி “நீதானே இப்படி செய்யலான்னு சொன்னே! கல்யாணத்துக்கு முன்னாடியே விபரத்தை மருமக கிட்ட சொல்லியிருக்கணும். நான் சொல்லவானு கேட்டதுக்கும் வேண்டானு சொல்லிட்டே! புருஷனுக்கு தான் சொத்துனு நினைச்சுட்டு இருந்த மருமகளுக்கு அதிர்ச்சியா இருந்திருக்கும். அத்தோட நின்றிருக்கும். ஆனா உன்ன யாரு தோப்புல.. அவளோட சொந்தக்காரங்களோட சண்ட போடச் சொன்னது? மருமக அந்த கோபத்துல இருந்திருப்பா..” என்று மருமகளுக்கு வக்காளத்து வாங்கினார்.

அதற்கு செந்தில் “இப்போ வித்யா கேட்கிற கேள்வியை.. அப்போ அந்த குடும்பமே கேட்கும் பரவாலையா..” என்றுக் கேட்கவும், மற்ற இருவரும் கப்சிப் என்று ஆனார்கள்.

செந்திலின் முன் நிற்க முடியாமல் இருவரும் பேசியவாறு வீட்டிற்குள் சென்றுவிட.. செந்தில் கைகளை உயர்த்தி அந்த தாழ்வாரத்தில் தாளமிட்டவாறு “வித்யா..” என்று முணுமுணுத்தான்.




 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தித்தித்திட செய்வாய் 11


ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு மாலையில் கிளம்பிய செந்தில்.. குடோனுக்கு சென்று.. அவனது திருமண வேலைகளின் காரணமாக ஒரு வாரமாக செல்லாததால்.. வந்த வரவு செலவு.. ஏற்றுமதி இறக்குமதியான காய்கறிகள் கணக்கை அனைத்தையும் பார்த்துவிட்டு.. இரவு பத்து மணி நெருங்கையிலேயே வீட்டிற்கு வந்தான்.

தங்கமும், கந்தசாமியும் தாழ்வாரத்தில் அமர்ந்துக் கொண்டு கல்யாணத்தில் நடந்தவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திண்ணையில் வடிவேலுவின் பிள்ளைகள்.. மதியமே உறங்கி எழுந்துவிட்டதால்.. விளையாடிக் கொண்டிருந்தார்கள். சுமதி கொட்டாவி விட்டவாறு அவர்களைக் கிட்டத்தட்ட உள்ளே இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தாள்.

செந்தில் வந்ததும் “சித்தப்பா..” என்று அவனிடம் ஓடிச் சென்றவர்கள்.. வண்டியில் ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம் என்று ஏற முயன்றார்கள். ஆனால் வண்டியில் இருந்து இறங்கிய செந்தில்.. இருவரையும் இரு கையில் அள்ளிக் கொண்டு “நைட் ரொம்ப லேட்டாச்சு! பேசமா போய் படுங்க! காலைல சீக்கிரமா எழுந்தா.. கூட்டிட்டு போறேன்.” என்று.. பிள்ளைகளை அவனது அண்ணி சுமதியின் கையில் கொடுத்தான்.

சுமதி “என்னது! சீக்கிரம் எழுந்திருக்கிறதா! வேண்டாம் குலோத்துனாரே! இப்போ போனதும் இவங்க என்ன தூங்க போறாங்களா.. விளையாடிட்டு தான் இருக்க போறாங்க! காலைல மெதுவாவே எழுந்திருக்கட்டும். அப்போ தான் என் வேலை நடக்கும்.” என்றுவிட்டு.. அவர்களை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

செந்தில் பார்த்ததும் தங்கம் "செந்திலு! எங்கடா போயிருந்தே? உன் மாமனார் ஃபோன் போட்டுருந்தாரு. நாங்கெல்லாம் பேசினோம்." என்றார்.

செந்தில் "பேசிட்டிங்கில்ல.." என்றவாறு தாழ்வாரத்திற்கு வந்தான்.

தங்கம் "அவரு உன் கூடப் பேசணுன்னு சொன்னாரு செந்திலு.." என்றார்.

செந்தில் "யாருக்கு ஃபோன் போட்டார்?" என்றுக் கேட்டான்.

தங்கம் "வித்யாக்கு தான் ஃபோன் போட்டாரு. அவ கிட்ட பேசிட்டு உன் கிட்ட பேசனுன்னு சொன்னாராம். உன்னை கேட்டா.. நீ எங்கே போனேன்னு எனக்கு தெரியலையா. நாங்க மட்டும் பேசினோம்." என்றார்.

செந்தில் "என்ன சொன்னார்?" என்றுக் கேட்டான்.

தங்கம் “மதிய நடந்த வாய் தகராறை பத்தி பேசி வருத்தப்பட்டார். அவரோட பொண்ணை நல்லபடியா பார்த்துக்க சொன்னாரு..” என்றார்.

செந்தில் “ம்ம் அப்பறம்!” என்றவாறு உள்ளே செல்லவும், தங்கமும் எழுந்து பின்னோடு சென்றார்.

தங்கம் “அப்பறம் உன் கூடப் பேசணும் மட்டும் தான் திருப்பிச் சொன்னாரு..” என்றார்.

செந்தில் “இன்னேரத்திற்கு மேலே வேண்டாம் நாளைக்கு பேசிக்கிறேன்.” என்றான்.

தங்கம் மெதுவாக “வித்யா கோபமா இருக்க போல.. சாப்பிட கூப்பிட்டா வரலை. வித்யா எடுத்துக் கொண்டு போய் ரூமில் வச்சுட்டு வந்தா..” என்றதும், சட்டென்று அன்னையின் புறம் திரும்பியன் “ஏன் போய் ஊட்டி விட்டுட்டு வர வேண்டியது தானே..” என்றான்.

தங்கம் “என்னடா! பாவம் புது இடம்! போதாகுறைக்கு பிரச்சினை வேற..! அவளுக்கும் கோபம் இருக்குமில்ல..” என்றார்.

அதைக் கேட்டு முறுவலித்த செந்தில் “பேருக்கு ஏத்த மாதிரி இருக்கே அம்மா!” என்றான். அதற்குள் அவர்கள் நடந்தவாறு பின்கூடத்திற்கு வந்திருந்தார்கள்.

தங்கம் சங்கோஜத்துடன் “போடா..” என்றுவிட்டு சமையலறைக்குள் செல்ல போனவரை செந்தில் அழைத்து தேக்கினான்.

“அம்மா! எங்கே போறீங்க?”

தங்கம் “உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறதுக்கு..” என்கவும், செந்தில் “வித்யாவை வரச் சொல்லுங்க..” என்றவாறு கையையும் காலையும் கழுவிக் கொண்டு சாப்பிட அமர்ந்தான்.

தங்கம் “அவ சாப்பிட்டாளான்னு பார்க்க எட்டிப் பார்த்தப்போ.. தூங்கிட்டு இருந்தாடா..” என்றார்.

செந்தில் “சாப்பிட்டிருந்தாளா..” என்றுக் கேட்டான்.

தங்கம் “ம்ம்! ஆனா அரை இட்லி வச்சுட்டா..” என்றார்.

செந்தில் சிறுக் கோபத்துடன் “உட்கார்ந்த இடத்துலேயே சாப்பிட்டு கை கழுவி வச்சுருப்பா.. நீங்க போய் அதை எடுத்துட்டு வந்தீங்களா..” என்று முறைத்தான்.

அவனது முறைப்பில் தயக்கத்துடன் ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினார்.

செந்தில் கோபத்துடன் “அவ வேலையெல்லாம் இனி நீங்க செய்துட்டு இருந்தின்னா பாருங்க! சாப்பிட்டவளுக்கு சாப்பிட்ட எச்சி தட்டை எடுக்கணும் என்றுத் தெரியாதா! அதென்ன பழக்கம் சாப்பிட்டு அப்படியே படுக்கிறது. மருமகளை நல்லா பார்த்துக்கிறேன்னு பேர்வழிக்கு.. இந்த மாதிரியெல்லாம் செஞ்சு வச்சு.. அவளை சோம்பேறி ஆக்காதீங்க!” என்றுக் கடுமையான குரலில் கூறினான்.

தங்கம் அசடு வழிந்தவாறு “அது.. சம்பந்தி பொண்ணை நல்லபடியா பார்த்துக்க சொன்னாரா.. அதுதான்” என்கவும், செந்தில் “தெரியும் இப்படித்தான்னு..” என்று முறைத்தவன், எழுந்தான்.

தங்கம் பதறியவராய் “இனி இந்த மாதிரி செய்ய மாட்டேன். நீ ஏன் எழுந்துட்டே! உட்காரு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” என்றார்.

அதற்கு செந்தில் தனது அறையை நோக்கி சென்றவாறு “வித்யாவை எழுப்பி விட்டுட்டு வரேன்.” என்றவன், நின்று திரும்பி அவரைப் பார்த்து "வந்தவுடனே சொல்லணுன்னு நெனைச்சேன் மறந்துட்டேன். நாளைக்கு கொத்தனாரையும்‌ மேஸ்திரியையும் வரச் சொல்லிருக்கேன்." என்றான்.

தங்கம் "எதுக்கு செந்திலு.." என்றுக் கேட்கவும், செந்தில் "உங்களுது, அப்பாவுது, வேலு அப்பறம் என்னோட ரூமுக்கு பின்னாடி சின்னதா.. காற்றாட இருக்கிற தாழ்வாரத்துல எட்டுக்கு எட்டுக்கு வர மாதிரி பாத்ரூம் கட்டலானு இருக்கேன். அப்பாட்ட சொல்லிருங்க.." என்றான்‌.

அதற்கு தங்கம் "வெளிக்கு போறதுக்கு எதுக்கு வூட்டுக்குள்ள ரூம்ல கட்டரே.." என்று புருவத்தை சுருக்கியவாறு கேட்டார்.

அதற்கு சிரித்த செந்தில் "பத்துக்கு பன்னிரெண்டு அடி இருக்குமா.. அந்த தாழ்வாரம்! வெளிப்புறம் பார்க்கிறதுக்கு கட்டியிருந்த தாழ்வாரத்துல தானே கட்டப்‌ போறேன். தனித்தனியா ரூமோட பாத்ரூம் வச்சுக்கிறது நல்லதும்மா! யோசிச்சு பார்த்தா உங்களுக்கே சரின்னு படும்." என்றான்.

தங்கம் “ஆனா செலவு இழுக்குமேடா! இப்போ தான் கல்யாணத்தை முடிச்சோம். அடுத்த கல்யாணத்துக்கு வேற தயாராகணும். இப்போ போய்.. இதெல்லாம் தேவையா..” என்று குடும்ப தலைவியாய் வரவு செலவிற்காக பார்த்தார்.

செந்தில் “இப்போ தான் செய்தாகணும். கல்யாண வேலையை ஆரம்பிச்சுட்டா.. இதை தொட முடியாது.” என்றுவிட்டு தனது அறைக்குள் நுழைந்தான்.

ஒருக்களித்து படுத்தவாறு உறங்கிக் கொண்டிருந்த வித்யாவிடம் சென்று அவளது தோளைத் தட்டி எழுப்பினான். வித்யா மெல்ல இமை திறந்து பார்த்தாள். அவள் விழித்துவிட்டாள் என்றுத் தெரிந்ததும் செந்தில் “வந்து சாப்பாடு எடுத்து வை..” என்றுவிட்டு.. சட்டையை கழற்றி தாங்கியில் மாட்டிவிட்டு வெளியே சென்றான்.

செந்தில் எழுப்பவும்.. திகைப்புடன் கண்விழித்த வித்யாவிற்கு.. அவன் சாப்பாடு எடுத்து வை என்றுவிட்டு.. சென்றதைக் கண்டு கடும்கோபத்தில் இருந்தாள்.

‘அதென்ன தூங்கிட்டு இருக்கிறவங்களை எழுப்பறது.. ஏன் நான் சாப்பாடு போட்டா தான் சாப்பிடுவாரா! இல்லைன்னா பட்டினியா கிடப்பாரா! இல்லை பொண்டாட்டியை பணிவிடை செய்ய வச்சுட்டேன்னு மார்தட்டிக்கணுமா..’ என்று மனதிற்குள் பொருமியவாறு வெளியே வந்தாள்.

அங்கே தங்கம் சிறு குடத்தை இடுப்பில் வைத்திருக்க.. கையில் சொம்பும், டம்பளருமாக நின்றிருந்தார்.

உடனே அவரை நோக்கி வேகமாக வேட்டியை மடித்து காட்டியவாறு வந்த செந்திலிடம் “நாளைக்கே வந்து வேலையை தொடங்கிருவாங்கனுங்களா..” என்றுக் கேட்டார்.

செந்தில்.. அந்த எவர்சில்வர் குடத்தை வாங்கி.. தோளில் வைத்துக் கொண்டு “ஆமாம்மா!” என்றான்.

தங்கம் “நாளைக்கு மளிகை கடையை தொறங்கலான்னு இருந்தேன்.” என்கவும், செந்தில் “ஆமா! நானே சொல்லலாணு இருந்தேன். நாம கடை மூடிட்டதாலே அடுத்த தெரு மளிகை கடை நல்லா கல்லா கட்டிட்டாங்க! அதுவும் இதுதான் சாக்குனு விலையை ஏத்தி சமானம், காய் எல்லாம் வித்துருக்கான். சாயந்திரம் கிளம்பரப்போ.. எதிர்வீட்டு மாரி யக்கா புலம்பி தள்ளிட்டாங்க.." என்றவாறு தங்கத்துடன் முன்கூடத்திற்கு சென்றான்.

வித்யா தூக்க கலக்கமும் கோபமும் அடங்காதவளாய் அங்கேயே நின்றிருந்தாள். விரைவிலேயே வந்த செந்தில் கதவை தாழிட்டுவிட்டு "எடுத்து வை வித்யா.." என்றவாறு சம்மணமிட்டு அமர்ந்தான்.

வித்யா "இந்த வீட்டில் மனுஷன் நிம்மதியா தூங்க கூட கூடாதா! கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா.. இப்படியா தூங்கிட்டு இருந்தவளை எழுப்பி விடுவீங்க!" என்று சண்டைக்கு நின்றாள்.

செந்தில் "டைம் பத்தாச்சு! குடோனுக்கு போய்.. விட்டுப்‌ போன வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்திருக்கேன். எனக்கு பசிக்குது." என்றான்.

உடனே அவனை‌ப் பார்த்து முறைத்த வித்யா “அப்போ எடுத்து வச்சு சாப்பிட வேண்டியது தானே! நான்தான் வந்து சாப்பாடு போடணுமா! இதென்ன பொண்டாட்டி ஆகிட்டா வச்சுருக்க ரூல்ஸா! கிராமத்து ஆளை கல்யாணம் கட்டிக்கிட்ட இந்த மாதிரியெல்லாம் நடக்குனு தெரியும். ஆனா நான் அதையெல்லாம் மாத்தி காட்டறேன்னு என் பிரெண்ட்ஸ் கிட்ட பெருமை பேசிட்டு வந்தேன். ஆனா இங்கே நின்னு சண்டை போட்டுட்டு இருக்கேன்.” என்று மூச்சு வாங்க பேசினாள்.

செந்தில் கடுமையான குரலில் “ஏ நிறுத்து! ஒத்தையா நின்னுட்டு கத்திட்டு இருந்தா.. அதுக்கு பேரு சண்டையில்லை. என்னமோ பெருசா மேனர்ஸ் இல்லை.. ரூல்சானு பேணத்திட்டு இருக்கியே! உனக்கு விவஸ்தை இல்லையா! உன்னைத் தேடி ஒருத்தர் சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுத்ததை கூட மன்னிச்சுருவேன். ஆனா சாப்பிட்ட தட்டை உன்னால எடுத்து வந்து கழுவி வைக்க முடியாதா! அப்படியே போட்டுட்டா படுப்பே! பொண்டாட்டி டூட்டியானு கேட்டே தானே.. ஏன் உன்ன எழுப்பினேன்னு போக போக தெரியும்.” என்றான்.

உடனே வித்யாவின் சுருதி குறைந்தது.

“அது சாப்பிட சாப்பிடவே செம தூக்கம் வந்துச்சு! கொஞ்சம் நேரம் படுத்துட்டு.. அப்பறம் எல்லாம் எடுத்து வைக்கலான்னு.. படுத்தேன். எப்போ தூங்கினேன்னு எனக்கே தெரியாது. என்ன போக போக தெரியுமோ.. என் சுயமரியாதை கொஞ்சம் கொஞ்சமா போறது தான் எனக்கு தெரியுது.” என்று புலம்பியவாறு சமையலறைக்குள் நுழைந்தாள்.

வித்யா செல்லவும், அவளைப் பார்த்துக் கொண்டிருந்த செந்திலின் முகத்தில் இருந்த கடுமை மறைந்து புன்னகை மலர்ந்தது.

பாத்திரத்தை உருட்டுகின்ற சத்தம் கேட்டதே தவிர்த்து வித்யா இன்னும் வராதிருக்கவும்.. செந்தில் “வித்யா..” என்று அழைக்கவும், உள்ளே இருந்து வித்யா சற்று கோபத்துடன் குரல் கொடுத்தாள்.

“சூடு செய்துட்டு எடுத்துட்டு வருவேனில்ல! அதுக்குள்ள ஏன் கத்தறீங்க..” என்றாள்.

செந்தில் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருந்தவன், பின் வேண்டுமென்றே வம்பிழுக்க “என் கிட்ட கத்திட்டு உன் பாஷையில் சண்ட போட்டுட்டு இருந்த நேரம் இதைச் செய்திருக்கலாம். நீ சூடு பண்ணி வரதுக்குள்ள எனக்கு பசி போயிரும் போல..” என்றான்.

உடனே தொப்பு தொப்பு என்று எட்டுக்களை வைத்தவாறு ஒரு கையில் தட்டும், ஒரு கையில் தண்ணீர் நிறைந்த சொம்புமாக வித்யா அவனை நோக்கி வந்தவள், அதே வேகத்துடன் தட்டையும், சொம்பையும் அவன் முன் வைத்துவிட்டு சென்றாள். அவள் வைத்த வேகத்தில் சொம்பில் இருந்த நீர் தளும்பி சரிந்தது.

அடுத்து சாப்பாட்டை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள்.

குனிந்து வைத்துவிட்டு நிமிர்ந்தவள், தனது இடுப்பைப் பிடித்துக் கொண்டு “இனி குழம்பு, பொரியல், இரசம் என்று ஒவ்வொண்ணா எடுத்துட்டு வரணுமா! பேசாம டைனிங் டேபிள் ஒன்றை வாங்கிப் போடுவது தானே..” என்றாள்.

அதற்கு செந்தில் “தரையில சம்மணங்கால் போட்டு உட்கார்ந்து சாப்பிடறது தான் நல்லது. நல்லா ஜீரணமாகும்.” என்றான்.

அதற்கு வித்யா தற்பொழுது வயிற்றைத் தடவியவாறு “நான் பசியில இருக்கேன். நீங்க கருத்தை சொல்லாதீங்க..” என்றாள்.

செந்தில் புருவத்தை உயர்த்திப் பார்க்கவும், வித்யா “தூங்கி எழுந்ததுலே.. முன்னே சாப்பிட்டது ஜீரணமாகிருச்சு போல..” என்றுவிட்டு.. உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்கினாள்.

செந்தில் “பால் இருக்குமே! அண்ணன் புள்ளைகளுக்கு கொடுக்க ஹார்லீக்ஸ் கூட இருக்கும்.” என்றான்.

வித்யா “ம்ம்!” என்று உறுமிவிட்டு உள்ளே சென்றாள்.

பின் குழம்பையும் இரசத்தையும் கொண்டு வந்து வைத்தவள், அடுத்து ஒரு கையில் பால் டம்ளரும், மறுகையில் பொரியல் அடங்கிய சிறு பாத்திரமுமாக வந்தாள்.

செந்திலின் முன் பொரியல் பாத்திரத்தை வைத்துவிட்டு.. சூடான பாலை ஊதி குடிக்க ஆரம்பித்தாள். சிறு பெருமூச்சுடன் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு.. தானே சாதத்தை எடுத்து தட்டில் போட்டுக் கொண்டான். பின் குழம்பை எடுத்து ஊற்றினான்.

அப்பொழுது வித்யா “அட! அட! நிறுத்துங்க! வெறும் குழம்பை மட்டும் ஊற்றரீங்க! இதுக்கு தான் அத்தை உங்களுக்காக சாப்பாடு, குழம்பு, இரசம், பொரியல்னு தனியா வச்சாங்களா! இன்னைக்கு தான் மதியம் வீட்டுல சமைக்கலனு தெரியும் தானே! எல்லாருக்கும் செய்த டிபனையே சாப்பிட வேண்டியது தானே! எதுக்கு இந்த வயசுல அத்தைக்கு அதிகப்படி வேலை கொடுத்திருக்கீங்க! இதுல அவங்களுக்கு குடம் எடுத்துட்டு வந்து ஹெல்ப் செய்யறீங்களாம். எதுக்கு இந்த ஆக்டிங்..” என்றவாறு அவனிடம் இருந்து கரண்டியை பிடுங்கி.. குழம்பில் இருந்த காயோடு ஊற்றினாள்.

செந்தில் “நானா இத்தனையும் செய்ய சொன்னேன். நா வெறும் இரசம் சாப்பாடு தான் வைக்க சொன்னேன். தொட்டுக்க ஊறுகாய் கூட போதும். நாளைக்கு என் அம்மா கிட்டப் பேசிக்கிறேன். உன்கிட்ட எல்லாம் வசவு வாங்க வச்சுட்டாங்க இல்ல.” என்றவாறு சாப்பிட ஆரம்பித்தான்.

அதற்கு வித்யா “நாளைக்கு அத்தைக்கு தேங்க்ஸ் சொல்லணும். உங்களைத் திட்ட எனக்கு சான்ஸ் கொடுத்திருக்காங்க இல்ல..” என்று முறுவலித்தவாறு பாலை ஒரு மிடறு அருத்தினாள்.

செந்தில் “வாயாடி..” என்றுப் புன்னகைத்தான்.

தற்பொழுது செந்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. அவனருகே அமர்ந்துக் கொண்டு அவனுக்கு வேண்டியதைப் பரிமாறியவாறு பால் அருந்திக் கொண்டிருந்தாள்.

செந்தில் “உன் அப்பா ஃபோன் போட்டாராம். என்ன சொன்னார்?” என்றுக் கேட்டான்.

வித்யா “நீங்க செய்த தப்பிற்கு அவர் ரொம்ப வருத்தப்படறார். அவங்க மேலே இன்னும் நீங்க கோபமாக இருக்கிங்களானு என்றுக் கேட்டார். நான் அப்படியெல்லாம் இல்லைனு சொல்லிட்டேன். உங்க கிட்ட பேசணுன்னு சொன்னார். நீங்க வீட்டில் இல்லைனு சொன்னதும்.. நாளைக்கு காலைல ஃபோன் பேசறேன்னு சொன்னார். ஆனா எனக்கு புரியலை. நீங்க செய்த தப்பிற்கு அவர் எதுக்கு வருத்தப்படணும். நீங்க தான் புது பொண்டாட்டியோட அப்பா கிட்ட சண்டை போட்டுட்டோன்னு.. ஸாரி சொல்லணும்.” என்று முறைத்தாள்.

அதற்கு செந்தில் “வேற என்ன பேசனீங்க?” என்றுக் கேட்டார்.

வித்யா “எல்லார் கிட்டயும் பேசினேன்.. எல்லாரும் என்னோட வெல்விஷ்ஷர்ஸ்.. அதைப் பற்றித் தான் பேசினாங்க! நீங்க என்கிட்ட கோபமா இருக்கீங்களானும் என்றுக் கேட்டாங்க..” என்றாள்.

செந்தில் “நீ என்ன சொன்னே?” என்றுக் கேட்டான்.

வித்யா “நான்தான் கோபமா இருக்கேன்னு சொன்னேன். என் அம்மா செம ஷார்ப்.. என் வாய்ஸை வச்சு.. அழுதியான்னு கேட்டாங்க! இல்லம்மானு சமாளிச்சேன். ஆனா அவங்க என்னை நம்பலை. என்னைச் சமாதானப்படுத்தினாங்க! என்னை இந்தளவிற்கு கொண்டு வந்திட்டிங்கில்ல! எல்லாரும் என்னை பாவமா பார்க்கிறாங்க..! கடைசில நான் நல்லா தான் இருக்கேன்னு கத்திட்டு வச்சுட்டேன்.” என்றாள்.

செந்தில் “கடைசில நீ உண்மையைத் தான் சொன்னே!” என்றான்.

வித்யா “அது உண்மையாகுமா?” என்று அழுத்தமான பார்வையுடன் கேட்டாள்.

அதற்கு செந்தில் “கண்டிப்பா..” என்று மட்டும் கூறியவன், “அப்பறம்..” என்று மெல்ல கேட்டான். ஏனெனில் வளர்மதி திருமணத்திற்கு அவர்கள் செந்திலுக்கு எழுதிக் கொடுத்த தோப்பை கொடுக்க போவதாக பேசிக் கொண்டதை வித்யா அவளது பெற்றோர்களிடம் கூறியிருப்பாளோ.. என்றுக் கேட்டான்.

ஆனால் வித்யா வேறு கூறினாள்.

வித்யா “வரதட்சணை வாங்கி மேரேஜ் செய்துட்டதாலே.. உங்க மேலே புகார் கொடுக்க சொன்னேன். அனேகமா நாளைக்கு போலீஸ் வீட்டுக்கு வருன்னு நினைக்கிறேன்.” என்று பொங்கிய சிரிப்பை அடங்கியபடி கூறினாள்.

செந்தில் மும்மரமாக சாப்பிட்டவாறு “ஹனிமூனுக்கு டிக்கெட் புக் செய்ய சொல்வேன்னு நினைச்சேன்.” என்கவும், வித்யாவிற்கு வெட்கம் பிடுங்கி தள்ளியது.

ஆனால் அதைச் சமாளித்துக் கொண்டு குழம்பில் இருந்த கரண்டியை எடுத்து அடிக்க ஓங்கியவாறு “புது பொண்டாட்டியை நடத்திற இலட்சணத்திற்கு அது ஒண்ணு தான் கெடு..” என்றுவிட்டு மீண்டும் கரண்டியை குழம்பில் போட்டாள்.

வித்யா “நாளைக்கு என் அப்பா கிட்ட பேசும் போது ஸாரி கேட்டுருங்க..” என்றாள்.

அதற்கு செந்தில் “நாளைக்கு கண்டிப்பா பேசுவேன்.” என்று மட்டும் கூறினான்.

வித்யா “ஸாரி கேட்பீங்க தானே..” என்கவும், செந்தில் “நான் பேசுவேனு சொல்லிட்டேன் தானே! அப்பறம் என்ன தொணதொணன்னு! நான் என்ன பேசனாலும் உன்கிட்ட இதைப் பேசறேனு சொல்லிட்டு தான் பேசணுமா! இல்ல யார் கிட்டயாவது எதாவது பேசின.. என்ன பேசினேன்னு உன்கிட்ட வந்து ஒப்புவிக்கணுமா..” என்றான்.

உடனே வித்யா கோபத்துடன் “இதுதான்! இதுதான்.. இப்படி சட்டுனு விட்டேறியா பேசறீங்க பார்த்தீங்களா.. இது சுத்தமா எனக்கு பிடிக்கலை. கல்யாணமாவது ஒண்ணாவதுனு இங்கிருந்து ஓடிப் போயிரலாமானு இருக்கு..” என்றாள்.

செந்தில் நிதானமாக சாப்பிட்டவாறு “உன்னால் போக முடியாது.” என்றுக் கூறினான்.

அதற்கு வித்யா “என்ன தாலி கயிற்றால் என் காலையா கட்டிட்டிங்க..” என்று இளக்காரத்துடன் கேட்டாள்.

செந்தில் மறுப்பாக தலையசைத்தான்.

வித்யா “பின்னே.. என்ன தாலிகயிறு மேஜீக் இல்லைன்னா கல்லானாலும் கணவன்.. அப்படியும் இல்லைன்னா.. உங்களை எனக்கு பிடிச்சுருக்கு.. அதனால தான் இங்கே இருக்கேன்னு சொல்லப் போறீங்களா..?” என்று நக்கலாக கேட்டாலும்.. அவளது கை அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாதத்தில் இரசத்தை ஊற்றிக் கொண்டிருந்தது.

செந்தில் இரசத்தை சாதத்துடன் பிசைந்தவாறு “நீ இங்கே இருக்கிறதுக்கு காரணம்.. எனக்கு உன்னைப் பிடிச்சுருக்கு என்கிறதாலே தான்..” என்றான்.

வித்யா திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.

பின் “தேள் கொட்டற மாதிரி.. சில நேரம் வார்த்தைகளை விடறீங்க! உங்க ஊர்ல பிடிச்சிருந்தா.. இப்படித்தான் திட்டுவாங்களா! ரொம்ப நல்லாயிருக்கு..” என்றாள்.

அவள் கூறிய விதத்தில் சிரித்த செந்தில் “அதுதான் உனக்கு கோபம்! பிடிச்சவளைத் தான் இப்படித் திட்டுணுமான்னு..” என்றான்.

வித்யா “புரியலை..” என்கவும், செந்தில் “நான் முதன் முதலா உன்னை மாமா எனக்கு கட்டிக் கொடுப்பாரா என்றுக் கேட்டது தானே உனக்கு என்னைப் பிடிக்க காரணம்?” என்றுப் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

வித்யா “நான் அதைக் கேட்கலை. பிடிச்சவளை திட்டறது தான் எனக்கு கோபமினு சொன்னீங்க.. அதுதான் புரியலை.” என்றுக் கேட்கவும், செந்தில் “அது இப்போ உனக்கு புரிய வேணாம். புரிஞ்சுடுச்சுன்னா தலை மேலே ஏறி உட்கார்ந்துக்குவே..” என்றுச் சிரித்தான்.

வித்யா “உங்க கிட்ட பேசறதுன்னா.. தனி டிக்ஸ்னரி வச்சுக்கணும்.” என்று நொடித்துக் கொண்டாள்.

அதற்கு செந்தில் “யு டொன்ட் நீட் டிக்ஸ்னரி டு ரீட் மை மைன்ட். ஆல் தட் யு ஹவ் டு டூ இஸ்.. ஸ்டே காம் அன்ட் பீலிவ் மீ. ஜஸ்ட் பீ மை சைட்!” என்றான்.

வித்யா திகைப்புடன் “இப்போ நீங்க இங்கிலீஷ் பேசனீங்க..” என்றாள்.

செந்தில் “ஆமா..” என்றான்.

வித்யா “நீங்க என்ன படிச்சிருக்கீங்க? எங்க கிட்ட வேணுன்னே பொய் சொன்னீங்களா! நல்ல பையனா பொய்யா நடிச்ச மாதிரி.. கம்மியா படிச்சிருக்கீங்கன்னு பொய் சொன்னீங்களா..” என்றுப் பரபரப்புடன் கேட்டாள்.

செந்தில் நிமிர்ந்து “பிளஸ் டு படிச்சிருக்கேன்.” என்றான்.

வித்யா “பொய்! நல்லா இங்கிலீஷ் பேசனீங்க..” என்றாள்.

அதற்கு செந்தில் “ஏன் பிளஸ் டு படிச்சவன் இங்கிலீஷ் பேசக் கூடாதா! நல்லா படிச்சிருந்தா.. ஏழாவது வரை படிச்சவன் கூட இங்கிலீஷ் பேசலாம். அதென்னவோ டிகிரி வாங்கினவன்.. பெத்த மேதாவியா பார்க்கறீங்க! பிளஸ் டு படிச்சவனை படிக்காதவன் ரேன்ஜ்க்கு பார்க்கறீங்க! ஆனா ஒண்ணு உண்மைத்தான் பிளஸ் டு வரை அடிப்படை கல்வி தான் கத்துக் கொடுப்பாங்க! அதுக்கு மேலே எதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து.. அதுல இன்னும் ஆழமா படிப்பாங்க! ஆனா பிளஸ் டு படிச்சவனுக்கு ஒண்ணும் தெரியாதுனு நினைச்சிராதீங்க..” என்றுச் சிரித்தான்.

வித்யா அமைதியாக டம்பளரை கிட்டத்தட்ட தனது முகத்தில் கவிழ்த்து பாலை பருகியவாறு அமர்ந்திருந்தாள்.

செந்தில் “பால் இல்லாத டம்ளரை எத்தனை நேரம் வாயில் கவுத்துட்டு இருப்பே..” என்றுக் கேட்கவும், சிறு முறைப்புடன் அதை டங் என்ற சத்தத்துடன் கீழே வைத்தவள், “என்னை ரொம்ப ஓட்டறீங்க..” என்றாள்.

அவனது பார்வை சேலை விலகியதால்.. தெரிந்த அவளது இடுப்பில் படியவும், சட்டென்று சேலையை இழுத்துவிட்ட வித்யா “நைட்டி போட்டுக்கலான்னு.. இருந்தேன். மறந்துட்டு தூங்கிட்டேன்.” என்று முணுமுணுத்தாள்.

அதற்கு செந்தில் “போட்டுக்கோ! அது இன்னும் வசதி..” என்று கண்ணடித்தான்.

வித்யாவிற்கு ஜிவ்வென்று இரத்தம் உச்சந்தலைக்கு பாய்வது போன்று இருந்தது. செந்திலும் அதை உணர்ந்தானோ.. வாயிருகே கொண்டு போன கவள சாப்பாட்டை சாப்பிட முடியாமல்.. தட்டிலேயே போட்டுவிட்டு தலையை ஆட்டிச் சிரித்தான்.

வித்யாவோ சங்கடத்துடன் நெளிந்தவாறு சுற்றிலும் பார்த்தாள். அங்கு யாரும் இல்லை. ஏனோ அவளுக்கு திக்கென்று இருந்தது.

செந்தில் மெல்லிய குரலில் “நீ கேட்ட பிரைவேஸி இதுதான் வித்யா..” என்றான்.

வித்யா என்ன என்பது போல் பார்க்கவும், செந்தில் “அம்மாக்கு என்கிட்ட கேட்கிறதுக்கு நிறையா விசயம் கிடக்கு. ஆனா உன்னை சாப்பாடு போடச் சொன்னதும்.. அவங்களே.. நைட் தாகம் எடுத்தா தண்ணி வேணுன்னு.. எல்லாருக்கும் சேர்த்து எடுத்துட்டு நம்மைத் தனியா விட்டுட்டு போயிட்டாங்க! அவங்களுக்கு தெரியும்.. இது நமக்கான நேரமின்னு! ரூம்ல தனியா இருக்கிறது பிரைவேஸி இல்லை. நமக்கான நேரம்.. நமக்கான விசயம் என்று.. அவங்க தானே ஒதுங்குவது தான் பிரைவேஸி..” என்றான்.

வித்யா மெல்ல “ஆக மொத்தத்தில் நான் கிராமத்து மாப்பிள்ளை, கிராமத்து ஆட்கள், கிராமத்து கல்யாண வாழ்க்கை என்று இதைப் பற்றியெல்லாம் நான் நினைச்சது தப்புன்னு சொல்ல போறீங்களா..” என்று நேரடியாக கேட்டாள்.

அதற்கு செந்தில் “உனக்கு இதைப் பற்றியெல்லாம்.. பாடம் எடுக்க எனக்கு நேரமில்ல.” என்று குறிப்பாக அவளது இதழ்களைப் பார்த்தான்.

வித்யா அவசரமாக “சாப்பிட்டாச்சா! நான் இதையெல்லாம் எடுத்து வைக்கிறேன்.” என்று கையில் கிடைத்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் விரைந்தவளுக்கு.. ஏனோ மூச்சு வாங்கியது.

செந்தில் “வித்யா! இந்த பாத்திரங்களையும் எடுத்து வச்சுரு..” என்றுக் குரல் கொடுக்கவும், மெதுவாக எட்டிப் பார்த்தாள். அங்கு செந்தில் தான் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு கழுவ சென்றதைப் பார்த்தவள், விரைவாக வந்து.. மற்ற பாத்திரங்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

சமையல் மேடை பிடித்தவாறு நின்றிருந்தவளுக்கு.. செந்தில் பின்னால் வரும் காலடி சத்தம் கேட்டது. ஆனால் அசையாமல் நின்றிருந்தாள். அவளது அருகே வந்தவன், அவளது முந்தானை எடுத்து கையை துடைத்தான்.

அந்த சுயமரியாதை திலகத்திற்கு.. சாப்பிட்டு கழுவிய கையை துடைக்க.. என் முந்தானை தான் கை துடைக்கிற துண்டா என்றுக் கேட்க தோன்றவில்லை. புடவையின் பின் சரியாக குத்தியிருக்கேனா.. என்றுத்தான் தோன்றியது.

கையைத் துடைத்தவனும்.. அருகில் வந்து துடைக்கவில்லை. சற்று எட்ட இருந்து தான் கையைத் துடைத்தான். துடைத்து விட்டு விடுவான் என்று அவள் நினைக்கவில்லை. ஆனால் அதற்கு மேல் நினைத்து பார்க்கவும், பயந்தாள்.

அவள் எண்ணியது போல்.. தனது கையில் இருந்த முந்தானையை பற்றியவாறு வந்தவன், அவளைப் பின்னால் இருந்து கட்டியணைத்தான்.

உடனே வித்யா துள்ளலுடன் அவனிடம் இருந்து விடுபட எண்ணினாள். ஆனால் அவளை அடக்கியவன், குனிந்து அவளை தூக்கி கையில் ஏந்திக் கொண்டு தனது அறையை நோக்கி நடந்தான்.

வித்யா “உடனே வேண்டாமே! எனக்கு பயமா இருக்கு..” என்றாள்.

அதற்கு செந்தில் “நானும் அப்படித்தான் நெனைச்சேன். என்னாலும் சட்டுன்னு இப்படி நடந்துக்க முடியாதுனு நெனைச்சேன். ஆனா.. என்னை நீ கிளப்பி விட்டுட்டே.. மத்த விசயத்தில் எப்படியோ.. ஒரு விசயத்துல.. நீ நெனைச்சபடி தான் நடக்க போகுது.. அதை ஒத்துக்கிறேன். இந்த விசயத்துல.. நான் உன் பின்னாடியே சுத்த போறேன்.” என்றவன், அவர்களது அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினான்.


 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தித்தித்திட செய்வாய் 12


யாரோ அவளை எழுப்புவது போன்று இருந்தது.. ஆனால் வித்யாவின் இமைகளைத் திறக்க கூட முடியவில்லை. “ம்ம்” என்று சிணுங்கலுடன் திரும்பி படுத்தவளுக்கு வெம்மையான தலையாணி கிடைக்கவும், அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்து உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

அப்பொழுது கரகரப்பான குரல் அவளது காதில் கேட்டது. கூடவே அவளது காதில் எதையோ வைத்து குறுகுறுப்புமூட்டியது.

“கண்ணம்மா ப்ளீஸ்! என்னைப் படுத்ததாதே! குலதெய்வ கோவிலுக்கு போகணும்.”

செந்திலின் குரலில் விருக்கென்று வித்யா நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள். ஏனெனில் அவனது மார்பில் அவள் தலையை வைத்து படுத்திருந்தாள். அவனது மீசை தான் அவளது காதில் குறுகுறுப்பு செய்திருந்தது. பதட்டத்துடன் எழுந்தவள், இன்னும் அதிர்ந்தவளாய் போர்வைக்குள் புகுந்துக் கொண்டாள்.

செந்தில்குமரன் மென்மையான குரலில் “நான் வெளியே நிற்கிறேன். நீ முதலில் குளிக்க ஏற்பாடும் செய்யறேன். குளிக்கிறதுக்கு வேண்டியதை எடுத்துட்டு வா..” என்றுவிட்டு அகன்றான்.

கதவை சாத்தும் சத்தம் கேட்ட பிறகே.. வித்யா மெல்ல போர்வையை விலக்கி பார்த்தாள். கதவு நன்றாக சாத்தப்பட்டிருந்தது. நிம்மதியுற்றவளுக்கு.. இரவு நடந்தவை போட்டி போட்டுக் கொண்டு நினைவிற்கு வந்தது. அதில் இரத்தமென அவளது முகம் சிவந்தது.

அவனுக்கு இத்தனை ஆசை இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை. அவளும் இசைந்து கொடுத்தது தான் வித்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இந்த இரு நாட்களாக அவர்கள் இருவர்களிடையே வாக்குவாதம் முற்றியிருந்தது. அதுவும் குடும்பமே சொத்திற்காக அவளை ஏமாற்றியிருக்கிறது. அவனும் காதலுடன் அவளை மணக்கவில்லை. ஒரு காரியத்திற்காக மணத்திருக்கிறான். இவ்வாறு இருவரும் முட்டி மோதிக் கொள்ள இத்தனைக் காரணங்கள் இருந்தும்.. அவர்களால் எவ்வாறு சந்தோஷமாக இருக்க முடிந்தது என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தளவிற்கு இருவரும் ரோஷம் கெட்டு போய் விட்டோமா.. இல்லை.. ஒருவரை ஒருவர் நாடினோமா என்றுக் கூடத் தோன்றவும் தலையில் அடித்துக் கொண்டாள்.

பின் செந்தில் கோவிலுக்கு போக வேண்டும் என்றுக் கூறியது நினைவிற்கு வரவும்.. அவசரமாக நைட்டி மாறினாள். வேண்டியதை எடுத்துக் கொண்டு பின் மெதுவாக கதவு திறக்கவும், சமையலறையில் இருந்து வெளியே வந்த தங்கம் வித்யாவை பார்த்து.. "கண்ணு எழுந்துட்டியா! பொடகாளில அடுப்புல தண்ணி வச்சுருக்கேன். சூடாக ஆகிருக்கும். எடுத்து ஊத்தி குளிச்சுரு. அடுத்து மலருக்கும் தண்ணி வச்சுரு.." என்று விட்டு முன் கூடத்திற்கு விரைந்தார்.

அவரை நிமிர்ந்து கூடப் பாராமல் தலையாட்டி விட்டு பின்வாசலை நோக்கி விரைந்தாள்.

நேரம் நான்கே ஆகிருக்க.. மங்கிய குண்டு பல்பின் வெளிச்சம்.. அந்த பின்வாசலை இன்னும் பயமுறுத்தவும், வித்யா அச்சத்துடன் நின்றாள்.

"வா வித்யா.." என்ற குரல் கேட்கவும், அந்த திசையை பார்த்தாள். அங்கு செந்தில் பின் மதிற்சுவரில் இருந்த சிறு மரக்கதவை திறந்து வந்தான்.

யாருமில்லா அந்த இருட்டில் செந்திலை பார்த்தும் சிறிது தைரியம் பெற்றாள். பிறகு இருவரின் கண்களும் சந்தித்து கொண்ட பொழுது.. நேற்றிரவின் நினைவுகளே வரவும்.. இருவரும் பார்வையைத் திருப்பிக் கொண்டார்கள்.

குளியலறையில் வேண்டியதை வைத்துவிட்டு.. சூடு எடுக்க வாளியோடு வந்தவளுக்கு.. அவ்வளவு பெரிய சூடான பாத்திரத்தை துணி கொண்டு எடுக்க முடியவில்லை. அவள் சிரமப்படுவதைப் பார்த்த செந்தில் "தள்ளு வித்யா! பெரிய போஸியா இருக்கு.. அதுவும் சூடா இருக்கு! நான் தூக்கி ஊத்தரேன்." என்றவன், அவள் கொண்டு வந்த வாளியில் ஊற்றிவிட்டு.. அந்த பாத்திரத்தில் வேறு நீர் நிரப்பி அடுத்தவருக்கு குளிக்க அடுப்பில் வைத்தான். அதற்குள் வித்யா தூக்க முயலவும் "விடு வித்யா! நான் தூக்கிட்டு வரேன்." என்றுத் தூக்கிக் கொண்டு சென்றான்.

வித்யாவின் இயல்பான துடுக்குத்தனம் தானே வெளிவந்தது.

"அத்தை எனக்கு சாப்பாடு எடுத்து வச்சதிற்கு திட்டனீங்க! இப்போ நீங்க எனக்காக வேலை செய்யறீங்க! அத்தை செய்தா தப்பு.. நீங்க செய்தால் ஒகேவா! அதாவது மற்றவங்களை அதிகாரம் செய்துட்டே இருக்கணுமா" என்றுக் கேட்டவாறு அவனது பின்னோடு சென்றாள்.

அதற்குள் குளியலறைக்குள் வந்திருந்த செந்தில் வெந்நீரை அங்கிருந்த பெரிய வாளியில் ஊற்றிவிட்டு.. அவள் புறம் திரும்பியவன், "அது சோம்பேறித்தனம்! இது ஹெல்ப்.." என்றவன், தொடர்ந்து குரலைத் தணித்து "ரொம்ப டையர்ட்டா இருக்கா..?" என்றுக் கேட்டான்.

செந்தில் எதைப் பற்றிக் கேட்கிறான் என்றுப் புரிந்ததும்.. வித்யாவின் முகம் ஜிவ்வென்று இரத்தமென சிவந்தது. வெட்கம் தாங்காமல் பின்னால் இருந்த சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

அவளது வெட்கத்தினை பார்த்ததும் செந்தலின் இரத்தம் சூடேறியது.

செந்தில் "நீ தூங்கும் போதே.. டைம் பன்னிரெண்டுக்கு மேலே இருக்கும். நான்கு மணிக்கே எழுப்பி விட்டுட்டேன்." என்றவனின் தணிந்த குரல் மேலும்.. அவளுக்கு மேலும் வெட்கத்தைக் கிளப்பவும், பதிலளிக்காமல் அமைதியாக இருந்தாள்.

யாருமில்லா தனிமையும் வெட்கப்படும் மனைவியும் செந்திலை கிளப்பவும்.. மெல்ல அவளை நெருங்கி.. அவளது சிவந்த கன்னத்தை நோக்கி குனியவும், வித்யா அவனது மார்பில் கரத்தை வைத்து தள்ளிவிட்டாள். செந்தில் சிரித்துக் கொண்டே குளியலறையில் இருந்து வெளியேறினான்.

வித்யா தலையை உலர்த்திக் கொண்டு வருகையில் அந்நேரத்தில் வீடு அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது.

தங்கம் அந்நேரத்திலேயே சமையல் அறையில் மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் இன்னும் கிளம்பவில்லை. வித்யாவை பார்த்ததும் “மலரு! அண்ணி குளிச்சுட்டு வந்தாச்சு! சீக்கிரம் நீயும் போ..” என்றவர், சுமதியிடம் திரும்பி “பசங்களை குளிக்க வச்சாச்சா சுமதி..” என்றுக் கேட்டார்.

சுமதி “எங்கே அத்தை! இரண்டு பேரும் எழுந்தாச்சு! குளிங்க வாங்கன்னா.. இப்போ தான் மும்மரமாக கூடத்துல கிரிக்கெட் விளையாடிட்டு இருக்காங்க..” என்றாள்.

தங்கம் “புள்ளைங்கன்னா அப்படித்தான் இருக்கும். வாங்கனு கூட்டிட்டு போய்.. குளிக்க வைக்கணும். எதைக் கேட்டாலும்.. இல்லை லொல்லைனு பதில் சொல்லிட்டு..” என்றுத் திட்டினார். பின் “வடிவேலு என்ன செய்யறான்?” என்றுக் கேட்டார்.

மாமியார் திட்டியதில் முகம் சுருங்க நின்ற சுமதி “தூங்கிட்டு இருக்கிறாரு..” என்று அங்கிருந்து சென்றவாறு பதிலளித்தாள். தன்னைத் திட்டிய மாமியாருக்கு அவள் கொடுக்கும் மரியாதை அவ்வளவுத்தான்!

சென்றுக் கொண்டிருந்தவளைப் பெருமூச்சுடன் பார்த்துவிட்டு கந்தசாமியை பார்க்க சென்றார். அங்கே அவரும் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட தங்கம் “செந்திலு..” என்றவாறு தாழ்வாரத்தில் இருந்த குளியலறையை நோக்கி சென்றார். அதற்குள் அவனே தலையை துவட்டியவாறு வந்துக் கொண்டிருந்தான்.

தன் அன்னையை எதிரே பார்க்கவும், “வித்யா வந்துட்டாளா.. மலரு குளிக்க ரெடியாகிட்டாளா?” என்றுக் கேட்டான்.

தங்கம் “வித்யா குளிச்சுட்டா.. இப்போ தான் மலரை அனுப்பினே..” என்றுக் கூறிக் கொண்டிருக்கையில்.. வளர்மதி.. அவளது அண்ணன் மகன்களுடன் சரிக்கு சரி விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.

தங்கம் சங்கடத்துடன் செந்திலை பார்க்கவும், செந்தில் சிறுச் சிரிப்புடன் “அது அவுட்! அவ்வளவுத்தான் ஆட்டம் முடிஞ்சுது.” என்று அவர்களது விளையாட்டை முடித்து வைத்தவன், “மலரு டைமாச்சு! எத எந்தந்த நேரத்தில் செய்யணுமோ.. அத அந்த நேரத்தில் தான் செய்யணும். அதுதான் பக்குவம்! நீ எப்படி..” என்றுக் கேட்டதும்.. வளர்மதி தலையை கூட நிமிராது குளியலறையை நோக்கி விரைந்தாள்.

பின் தனது அண்ணன் பசங்களிடம் “மை பாய்ஸ்! சீக்கிரம் ரெடியான நான் வேற பேட் வாங்கி தருவேன்.” என்றதும்.. ஏழு வயதும், ஐந்து வயதும் நிரம்பிய.. அவர்கள் “ஹெ புது பேட்..” என்று கத்தியவாறு முன் தாழ்வாரத்தில் இருந்த குளியலறையை நோக்கி ஓடினார்கள்.

பின் செந்தில் தங்கத்திடம் திரும்பி “அப்பா எழுந்துட்டாரா? அவருக்கு.. குடிக்கிறதுக்கு டீ கொடுத்திங்கன்னா.. நீங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு வர வரை.. கடையில உட்காருந்திருப்பார் தானே..” என்றான்.

தங்கம் மெதுவாக “அவரு இன்னும் எழுந்திரிக்கலை செந்திலு..” என்றார்.

உடனே செந்தில் சற்று குரலை உயர்த்தி “கடையை திறக்கணுனு சொல்லி.. அப்பாவை எழுப்பிவிட்டா அவர் எழுந்திருக்க போறாரு..” என்ற இரண்டாவது நிமிடத்தில் கலைந்த தலையுடன் “கடையை திறந்திரலாம் செந்திலு..” என்று உறக்கக்கலக்கம் கலையாமல் வந்து நிற்கவும், தங்கம் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.

தன் தந்தையிடம் சென்ற செந்தில் தொகையை கொடுத்து “இந்த இரண்டு நாள் காலைல நான் இருக்க மாட்டேன். அதனால ரெண்டு நாளுக்கு.. பாலுக்கும், காய்கறிக்கும்.. வச்சுக்கோங்க! கல்லா பணத்தை எடுக்காதீங்க..” என்றுவிட்டு அன்னையிடம் வந்தான்.

ஏனெனில் அன்று காலை மளிகை கடையை திறந்து விட்டார்கள். எனவே செந்தில் காலையில் கோவிலுக்கு கிளம்பும் முன்.. பால் கம்பெனிக்கும், காய்கறி மண்டிக்கும்.. ஃபோன் போட்டு.. கடைக்கு வழக்கம் போல்.. காய்கறிகள் மற்றும் பால் பாக்கெட்டை கொண்டு வந்து வைக்க கூறி விட்டான். தந்தையிடம் அதற்கான தொகையை கொடுத்துவிட்டு சென்றான். அதற்கு அன்னையிடம் “எப்பவும் என்கிட்ட தான் கொடுப்பே செந்திலு! அவரு பேரம் பேசாம கேட்ட பணத்தை கொடுத்திருவாரு..” முறைப்பை வேறு பெற்றான்.

லேசாக முறுவலித்த செந்தில் “பணத்தை செலவு செய்ய மட்டும் அவருக்கு தெரிந்திருக்கு.. பணத்தோட அருமை எப்போ தான் புரிய போகுது. நாளைக்கும் சேர்த்துனு சொல்லி பணத்தை கொடுத்திருக்கேன். பார்க்கலாம் நாளைக்கு மிச்சம் வைக்கிறாரா இல்லை இன்னைக்கே எல்லாத்தையும் முடிச்சுடுரானு! அப்படி முடிச்சுட்டா.. நாளைக்கு காய் இல்லாம இருந்தா.. கடையை அவர் நடத்துட்டும். அப்போ தான் புரியும்.” என்றவன், தொடர்ந்து “நான் போற வழியில் கீரை கொடுக்கிற அக்கா கிட்ட வழக்கம் போல.. கீரை கட்டு கட்டிக் கொண்டு வரச் சொல்லிட்டு போறேன்.” என்றான்.

பின் தனது அண்ணன் வடிவேலுவிடம் வந்தவன், “அண்ணா!” என்றதும்.. படுக்கையில் இருந்து மெல்ல எழுந்து அமர்ந்தான். அவனிடம் செந்தில் “உங்க ரூம், வளர்மதி ரூம்.. அப்பறம் எங்க ரூமிற்கு.. பின்னாடி இருக்கிற தாழ்வாரத்தில் இருக்கிற இடத்துல உள்ளுக்குள்ள கதவு வர மாதிரி.. சின்னதா பாத்ரூம் கட்டலான்னு இருக்கேன். அதுக்கு வேலை செய்ய மேஸ்திரி கொத்தனார் சரியா ஏழு மணிக்கு எல்லாம் வந்திருவாங்க! அவங்க கூட நின்னு.. வேலை சரியாக நடக்குதுன்னா பாருங்க..” என்றான்.

வடிவேல் “நானா! டாக்டர் என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கார்.” என்றான்.

செந்தில் “தெரியும். அதனால தான்.. வீட்டில் சேரில் உட்கார்ந்துட்டு பார்க்கிற வேலையைக் கொடுத்திருக்கேன். நான் விபரம் எல்லாம் சொல்லிட்டேன். நீ வீட்டு ஆளா பார்த்தா போதும்..” என்று அவன் மறுவார்த்தை பேசுவதற்கு இடம் கொடுக்காது கூறிவிட்டு சென்றான்.

கடை திறக்கும் நாட்களில்.. செந்தில் சீக்கிரமாக எழுந்து.. கடை திறந்து விடுவான். அவனது மதியத்திற்கும் சேர்த்து சமையல் வேலைகளை முடித்து வைத்து.. அவர் தயாராகி வரும் வரை.. கடையை பார்த்துக் கொள்வான். அவர் பத்து மணி வாக்கில் வந்ததும்.. செந்தில் தயாராகி முதலில் தோட்டத்திற்கு சென்றுவிட்டு.. பின் மாலையில் காய்கறி மண்டிக்கு சென்று கணக்கு வழக்கு பார்ப்பான். பின் எட்டு மணி வாக்கில் வந்தால்.. இரவு கடை சாத்தும் வரை.. அவன்தான் கடையை பார்த்துக் கொள்வான்.

இன்று குல தெய்வ கோவிலுக்கு.. செந்தில், வித்யா, வளர்மதி, வடிவேலுவின் மகன்கள் மட்டும் செல்ல போகிறார்கள். எனவே ஆளுக்கு ஒரு வேலையைப் பிரித்துக் கொடுத்துவிட்டுக் கிளம்ப சென்றான்.

இதை அனைத்தையும் பார்த்த வித்யாவிற்கு.. நேற்று வளர்மதியின் வருங்கால மாமனார் செந்திலை பற்றி கணித்ததிற்கு தான் நினைவிற்கு வந்தது. இந்த வீட்டில் அனைத்து முடிவுகளை மட்டுமின்றி.. அனைவரையும் என்ன செய்ய வேண்டும் என்று ஆட்டியும் வைக்கிறான். அதற்கு தகுந்தாற் போன்று.. யாரும்.. சுயமாக சரியான முடிவுகளை எடுக்கிறவர்களாக தெரியவில்லை. நேற்று கூட வளர்மதியின் திருமண செலவில் கந்தசாமி வாயை விட்டு.. செலவு முழுவதையும்.. தங்களது தலையில் கட்டி விட்டார்.

அவளது மாமியாரும் அப்படித்தான் செந்தில் செந்தில் என்று அவனைத் தான் நாடுகிறார். செந்திலின் அண்ணனோ.. ஹார்ட் அட்டேக் வந்ததை சாக்கு சொல்லி.. எதையும் செய்யாமல் அமர்ந்திருக்கிறார். அவனது மனைவிக்கு.. அவளது இரு பிள்ளைகளை பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது. என்ன குடும்பம் இது! யாருக்கும் இது நம் குடும்பம்.. நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போன்றே தெரியலை.

அறையிற்குள் வந்து உடையை மாற்றியவனிடம்.. "அப்போ வரதட்சணையா தோப்பை கேட்டது உங்க முடிவு தான்.." என்றுக் கேட்டாள்.

சிறு சலிப்புடன் அவள் புறம் திரும்பிய செந்தில் "நீ எத்தனைத் தரம் கேட்டு சண்டை போட்டாலும் என் பதில் இதுதான்! கண்டதை எல்லாம் மனசுல போட்டு குழப்பாம.. பொறுமையா இரு! நாம நல்லா இருப்போம். இப்படி பேசிட்டே இருந்தா.. என்னைப் பார்த்தாலே நீயே மறந்திருந்தாலும் அட இந்த கேள்வி கேட்கணுமேனு வான்ட்டர்டா கேட்பே.." என்றான்.

வித்யா "என்ன ஜோக்கா!” என்று முறைத்தாள்.

அதற்கு செந்தில் “இல்லை உண்மை! என் மேலே இருக்கிற கோபத்தை ஓரத்தில் வச்சுக்கோ.. அதுக்கு பதில் தானா தெரியும்.” என்றான்.

அதற்கு வித்யா “கடவுளே இன்னும் இருக்கா! நான் நினைச்சதிற்கு அப்படியே டொட்டலா நீங்க இருக்கிறதை கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்கிட்டதே எனக்கு போதும்.. இன்னும் தெரிய வேண்டாம். இப்போ உங்க மேலே கோபமா இருக்கிறது அப்பறம் வெறுப்பா மாறிட போகுது.” என்றாள்.

செந்தில் அதற்கு சிரிப்பையே பதிலாக அளித்தான். பின் அவளுக்கு அருகில் வந்து.. “உன்னைப் பிடிச்சுருக்கானு அன்னைக்கு கேட்டே தானே! அதுக்கு பதில் சொல்லட்டுமா!” என்றுக் கேட்டான்.

வித்யா படபடக்கும் இதயத்துடன் அவனைப் பார்த்தாள். செந்தில் “வளர்மதிக்கு வரதட்சணையா.. அவ பேர்ல நிலம் இருக்கணும் என்றுக் கேட்டாங்க! வழக்கம் போல என் அப்பா ஜம்பமா ஒத்துக்கிட்டார். அவர் இந்த வீடு இருக்கிற நிலத்தை ஞாபத்தில் வச்சுட்டு சொல்லியிருக்கார். இதுல பாதி எழுதி வைக்க போகிறாராம். நாங்க குடியிருக்கிற இந்த நிலத்தை எழுதி கொடுக்க நான் ரெடியா இருந்தேன். ஆனா அண்ணன் வடிவேலும் அண்ணியும் தயாரா இல்லை. அதுவும் நியாயம் தான்! அந்த சமயத்தில்.. நீங்களே தேடி வந்தீங்க! நாங்க பார்த்துட்டு இருக்கிற தென்னந்தோப்பு சொத்துக்காக தான் மேரேஜ் செய்துட்டேன். உன் கூட எப்படியாவது நல்லா வாழ்ந்திரலாம் என்று நினைச்சேன். ஆனா இப்போ எப்படியாவது வாழ்வதை விட.. நல்லபடியா வாழ போறேன்னு சந்தோஷமா இருக்கு! எப்படி நீ எதிர்பார்த்ததை விட.. நான் கொஞ்சம் கொஞ்சமா வேற மாதிரி தெரியறேனு சொன்ன தானே.. அதே மாதிரி.. நான் எதிர்பார்த்ததை விட.. நீயும் கொஞ்சம் கொஞ்சமா வேற மாதிரி தெரியறே! தேங்க்ஸ்டி பொண்டாட்டி!” என்று அவளது கன்னத்தைப் பிடித்து லேசாக கிள்ளி ஆடியவன் “இப்போ கிளம்பலாமா..” என்றுவிட்டு முன்னே செல்லவும், வித்யா தனது கன்னத்தைப் பிடித்துப்படி திகைப்புடன் நின்றுவிட்டாள்.

நேற்றிரவு அவளுடன் ஆசையாக சங்கமித்ததை விட.. தற்பொழுது மேலும் தனக்கு நெருக்கமாகி விட்டதைப் போன்று உணர்ந்தாள்.

ஆம் வித்யா இப்படியொரு லவ்வர் பாய் செந்திலை எதிர்பார்க்கவில்லை
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 13


செந்தில்குமரனின் குடும்பத்தினரின் குல தெய்வ கோவிலுக்கு சென்ற வித்யாவிற்கு ஏனோ மனம் மிகவும் நிறைந்திருந்தது. அவளுக்கு செந்திலை பற்றி பல கேள்விகள் சுணக்கங்கள், எதிர்கருத்துக்கள் இருக்கிறது தான்.. ஆனால் அதை எல்லாவற்றையும் தாண்டி எப்படி அவனைப் பிடித்திருக்கிறது என்று அவளுக்கு தெரியவில்லை. உடலாலும் உள்ளத்தாலும்.. ஒன்றி அவனுடன் வாழ தயாராகிவிட்டதை நிறைவுடன் உணர்ந்தாள்.

மிகவும் பயப்பக்தியுடன் கும்பிட்ட மனைவியாளை வித்தியாசமாக பார்த்த செந்தில்.. அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை விருப்பத்துடன் வித்யாவின் நெற்றியுச்சியில் வைத்தான்.

பின் வளர்மதி வடிவேலுவின் பிள்ளைகளுடன் முன்னால் நடந்துக் கொண்டிருக்க.. செந்திலும் வித்யாவும் பின்னால் நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள்.

திடுமென செந்தில் "என்ன தான் புத்திசாலியா சுயமரியாதையா இருந்தாலும்.. அவங்களோட ஜோடி.. அவங்க மேலே விருப்பமும் நல்ல அபிப்பிராயமும் வச்சுருக்காங்க என்றுத் தெரிஞ்சுட்டா.. எல்லாத்தையும் தூக்கி ஏறிஞ்சறாங்க இல்ல..! லாஜீக்கே இல்லாதது ஆனா உண்மை.." என்றுச் சிரித்தான்.

அதைக் கேட்ட வித்யா "நீங்க என்னைக் கிண்டல் செய்யறீங்களா?" என்றுக் கேட்டாள்.

அதற்கு செந்தில் "நான் என்னைச் சொன்னே.. என் பொஞ்சாதிக்கு என் மேலே கொஞ்சம் பிரியம் இருக்கு.." என்றுச் சிரித்தான்.

உடனே அவனது வழியை மறித்து நின்ற வித்யா "நீங்க காலைல சொன்ன மாதிரி.. உங்களைப் பார்த்தாலே நீங்க என்னை ஏமாத்தி மேரேஜ் செய்தது தான் ஞாபகம் வருது.. உங்களைப் பார்த்தாலே.. அந்த கேள்வி கேட்கிறேன். இதுல எங்கே காதலை பார்த்தீங்க..!" என்றவள்.. சிறு திணறலுடன் "ஒருவேளை நேத்து நைட் இருந்ததைச் சொல்றீங்களா? அத மட்டும் வச்சு நம்மளுக்குள்ள.. ஒரு பான்ட் உருவாகிருச்சுனு சொல்லுகிற அளவுக்கு நீங்க முட்டாள் இல்லை." என்றாள்.

அதற்கு மென்முறுவல் பூத்த செந்தில் "அதுதான் நீயே முட்டாள் இல்லைனு சொல்லிட்டியே! அப்பறம் என்ன..” என்றுச் சிரித்தவன், “நமக்காக வெயிட் செய்துட்டு இருக்காங்க..” என்று காரை சுட்டிக் காட்டவும், அங்கு காரின் மேல் ஏற முயன்றுக் கொண்டிருந்த வடிவேலுவின் மகன்களை வளர்மதி சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

வித்யா “ஓ மை காட்!” என்று அவளை நோக்கி விரைகையில்.. செந்திலும் உடன் சேர்ந்தான். அவளது கூடவே வேகமாக நடந்தபடி “அப்போ நீயும் சுயமரியாதை உன் பிடிவாதம் எல்லாத்தையும் எனக்காக வீசிட்டியா?” என்றுக் கேட்டுவிட்டு.. பதிலுக்கு காத்திராமல் வேகமாக எட்டுக்களை வைத்துச் சென்று.. வடிவேலுவின் மகன்கள் இருவரையும் கொத்தாக அள்ளி காரின் முன்னிருக்கையில் போட்டான்.

வித்யா வளர்மதியிடம் “எங்களைக் கூப்பிட்டு இருக்கலாமே..” என்றாள். அதற்கு வளர்மதி “அதெப்படி அண்ணி! நீங்களும் அண்ணாவும் சிரிச்சு பேசிட்டு இருந்தீங்க! நடுவுல பேசறது தப்பாச்சே..” என்று வெட்கம் கலந்த குரலில் கூறிவிட்டு காரிற்குள் ஏறினாள்.

சங்கடத்துடன் வித்யா நிற்கையில் இன்னும் காரில் ஏறாமல் நின்றிருந்த.. செந்தில் அவளைப் பார்த்து பிரத்யேகமாக முறுவலித்துவிட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் வீட்டில் இருந்தார்கள். பத்து மணி வாக்கில் வீட்டை அடைந்ததும்.. செந்தில் நேராக குளியலறை கட்டும் வேலை நடைப்பெறும் இடத்திற்கு சென்றான்.

வித்யா வேகமாக தனது அறைக்கு சென்றுப் பார்த்தாள். அங்கு அவளது படுக்கை மற்றும்.. இதர பொருட்களின் மீது பழைய புடவை கொண்டு மூடியிருந்தது. சிட்அவுட் போன்று இருந்த கதவருகே.. சுவற்றை இடித்துக் கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு சிறு வேலை வரை கவனித்து செய்திருக்கிறான் என்று அவளால் சிலேகிக்காமல் இருக்க முடியவில்லை. அப்பொழுது வித்யா என்றுக் கூப்பிடவும் திரும்பிப் பார்த்தாள். அவளருகே வந்த.. செந்தில் “வளர்மதி கூடப் போய் சாப்பிட்டுட்டு.. ஸ்டோர் ரூம் கிளினா தான் இருக்கும்.. அங்கே சமான்களை கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு.. பெட் போட்டு படுத்து தூங்குங்க! காலையில் நேரத்துல எழுந்தீங்க தானே..” என்றவன், சிறிது குரலைத் தணித்து “டையர்டா வேற இருப்பே..” என்றான்.

உடனே வித்யாவின் முகம் சிவந்தது.

அதை மறைத்துக் கொண்டு வித்யா “நீங்க தூங்கலையா..” என்றுக் கேட்டாள்.

அதற்கு செந்தில் வேலை செய்பவர்களைப் பார்த்தபடி “எனக்கு இது பழக்கம் தான்..” என்றான்.

வித்யா “எது!” என்றுத் திகைப்புடன் கேட்கவும், அவளது திகைப்பு குரலில் திரும்பிப் பார்த்த செந்திலுக்கு பின்பே தான் கூறியது நினைவிற்கு வரவும், செந்தில் அவசரமாக “நான் சீக்கிரம் எழுவதைச் சொன்னேன்.” என்றுவிட்டு.. பதைப்புடன் அவளைப் பார்த்தான்.

வித்யாவிற்கு அவன் சீக்கிரம் எழுந்ததைத் தான் சொல்கிறான் என்றுத் தெரிந்தது. ஆனால் வேண்டுமென கேட்டாள். எனவே அவனை முறைக்க முயன்று வெள்ளி சதக்கையாக சிரிக்கவும், அவள் சிரிப்பதை இரசிப்புடன் பார்த்தவன், தணிந்த மெல்லிய குரலில் “அப்போ அதை டெய்லி பழக்கமா மாத்திரலாமா..” என்றுக் கேட்டுவிட்டு கண்ணடித்துவிட்டு சென்றான்.

வித்யா எதை என்றுக் கேட்கவில்லை. சிவந்த கன்னத்தைத் தொட்டு பார்த்தவள், அது வெதுவெதுப்பாக இருப்பதைக் கண்டு வியந்தாள்.

பின் செந்தில் கூறியபடி சமையலறைக்கு சென்றாள். அங்கு வளர்மதி அவளுக்கும் சாப்பிட எடுத்து வைத்துவிட்டு.. அவளுக்காக காத்திருந்தாள். அவளைப் பார்த்ததும் அழகா முறுவலித்தவளைப் பார்த்த வித்யாவிற்கு.. இவ்வளவு அனுசரிக்கும் குணமும்.. பொறுமையும், அன்பாக பழகும்.. இவள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று இருந்தது.

இவ்வாறு எண்ணமிட்டவாறு சாப்பிட அமர்ந்தவளுக்கு.. தனது எண்ணப்போக்கு கண்டு தனக்கே வியப்பாக இருந்தது. அவளே இப்பொழுது தான் திருமணம் ஆகி புது பெண்ணாய் இந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள். அவள் பெரியவளாய்.. அவளது கொழுந்தியா உறவு கொண்ட பெண்ணை நல்லபடியா திருமணம் செய்து முடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுவதா.. அதுவும்.. அவர்களது வாழ்விற்கு அவளது அன்னை கொடுத்த தோப்பை.. கொடுக்க இருக்கிறார்கள். அதற்கு அவள் சாதகமாக நினைப்பதா! என்று ஆச்சரியமாக இருந்தது. அவளோட கணவன் எதோ.. சொக்கு பொடி போட்டுட்டான் என்றுத் திட்டியவாறு சாப்பிட தொடங்கினாள்.

பின் இருவரும் ஸ்டோர் ரூமில் சென்றுப் படுத்தார்கள். செந்திலை திட்ட எண்ணியவளுக்கு அவளது கரிசனமே.. முன்னே வந்தது. அதை எண்ணியவாறு உறங்கி விட்டாள்.

வித்யா கண் விழிக்கையில்.. நேரம் ஒன்றைக் காட்டியது. மதியம் வரை உறங்கியிருக்கிறாளா என்று எழுந்தவள், திரும்பி வளர்மதியை பார்த்தாள். அவள் இல்லாதிருக்கவும், வெட்கத்துடன் எழுந்து சென்றாள். அங்கு செல்கையில் அவளது பெயர் அடிப்படவும், திரும்பிப் பார்த்தாள். அங்கு செந்தில் செல்பேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

ஆர்வத்துடன் அங்கு சென்றாள். அவளைப் பார்த்ததும் முறுவலித்தவன், பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தான். அவள் எதிர்பார்த்தது போன்று அவளது தந்தை கணேஷனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

செந்தில் “நேத்து நான் கோபப்பட்டதை இப்போவும் தப்புனு சொல்ல மாட்டேன்ங்க! ஆனா.. அதுக்காக உங்களை வெளியே போகச் சொன்னதை வேணுன்னா தப்புனு ஒத்துக்கிறேன். மன்னிப்பும் கேட்டுக்கிறேன். ஆனா நான் சொல்ல வந்தது இதுதான்.. உங்க சொந்தக்காரங்க எல்லாம்.. தோப்பை வரதட்சணையா வாங்கினதை.. கேலியும் பொறாமையுமாக தான் பேசுனாங்க! ஒருநாள் இதுக்கெல்லாம் அவங்க கண்டிப்பா வருத்தப்பட போறாங்க! அப்போ அவங்களுக்கு பதில் சொல்லிக்கிறேன். ஆனா அங்கேயே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு நின்னுட்டு இருந்தா இன்னும் மனஸ்தாபம் அதிகமாகும். அதுக்கு தான் போக சொன்னேன். என்ன தான் இருந்தாலும்.. நீங்கெல்லாம் என் பொஞ்சாதியோட சொந்தங்கள்.. என்னோட சொந்தங்களை அவளோட சொந்தங்களா ஏத்துக்கிட்டு மரியாதை கொடுக்கிறப்போ.. நானும் அதைச் செய்யணுங்க..” என்றான்.

அந்த பக்கம் என்ன சொன்னாரோ.. செந்திலின் முகத்தில் பழைய அதிகார தோரணை வந்தது.

“என் பொஞ்சாதியை நான் நல்லவே பார்த்துப்பேன். நான் ஒண்ணும் மனைவி என்கிற பேர்ல எனக்கு அடிமையை கல்யாணம் செய்துட்டு வரலை. நான் காட்டுமிராண்டியும் இல்லை. வீட்டுல இருக்கிற எல்லார் கிட்டயும்.. வித்யாவை பார்த்துக்க சொல்லியிருக்கீங்க! நேத்து என் கோபத்தைப் பார்த்து.. இப்படிப் பேசியிருப்பீங்க என்கிறதாலே பேசாம இருக்கேன். வித்யாவை பார்த்தா நல்லாயிருக்கியானு கேளுங்க! அதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு! ஆனா மாப்பிள்ளை உன்னை நல்லா வச்சுருக்கிறாரானு கேட்டராதீங்க! அது சுயமரியாதைக்கு நீங்க மதிப்பு கொடுக்காதது மாதிரி இருக்கும். உங்களோட சாய்ஸை நீங்களே நம்பிக்கை இல்லாம பேசற மாதிரி இருக்கு..” என்று எச்சரிக்கையில் முடித்தான்.

அதுவரை.. செந்தில் பேசியதை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த வித்யா அவன் தோரணை மாறி.. பேசவும், கோபத்துடன் அவனைப் பார்த்தாள்.

வித்யா முறைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்த செந்தில்… காதில் இருந்து ஃபோனை எடுக்காது “வித்யா எழுந்துட்டா.. அவ கிட்ட ஃபோனை கொடுக்கிறேன்.” என்று அவளிடம் நீட்டினான். வெடுக்கென்று அவனது கையில் இருந்து ஃபோனை பறித்து காதில் வைத்த வித்யா “ஹலோ” என்றாள்.

அவளின் குரலை கேட்ட கணேஷன் “அப்பா கிட்ட கோபமாடா..” என்றார்.

அவசரமாக மறுத்த வித்யா தனது தந்தையின் பேச்சில் கவனம் செலுத்தினாள். அடுத்து அவளது தந்தை கேட்ட கேள்வியில் தனது கணவனை அனல் தெறிக்க பார்த்தாள். அதில் என்னுடைய அப்பாவையே ஆட்டி வைக்க பார்க்கறீயா என்று இருந்தது. ஏனெனில் கணேஷன் “நல்ல இருக்கீயா..” என்று மட்டும் தான் கேட்டார். நேற்று பேசிய பொழுது.. “மாப்பிள்ளை நல்லபடியா பார்த்துக்கிறாரா” என்றுத் தான் கேட்டார்.

சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு குளியலறை கட்டும் வேலைகளை மேற்பார்வையிட்டு கொண்டிருந்த.. செந்திலிடம் சிறு முறைப்புடன் செல்பேசியை கொடுத்துவிட்டு வரவும், வளர்மதி புன்னகையுடன் சாப்பிட அழைத்தாள்.

காலையில் வளர்மதியை பற்றித் தோன்றிய எண்ணம் அவளுக்கு மீண்டும் தோன்றியது. செந்திலின் மீது இருந்த கோபம் மறைந்தது.

சாப்பிட்டு விட்டு வந்தவளிடம் வந்த சுமதி “வித்யா! அத்தை உன்னைக் கூப்பிடறாங்க..” என்றாள்.

வித்யா “அத்தை எங்கே?” என்றுக் கேட்கவும், சுமதி “முன்னாடி கடையில தான் இருக்காங்க! வேற எங்கே..” என்று அசட்டையாக பதில் கூறிவிட்டு சென்றாள்.

சுமதிக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று சிறு ஐயம் ஏற்பட்டது.

முன் கேட் அருகே மதிற்சுவரை ஒட்டிக் கட்டப்பட்டிருந்த மளிகை கடைக்கு.. பின்னால் சிறு கதவு இருந்தது. அதைத் திறந்துக் கொண்டு கடையிற்குள் சென்றாள். மளிகை கடைக்கு வெளியே இருந்து தான் இதுவரை பார்த்திருக்கிறாள். தற்பொழுது உள்ளே நுழையவும் சுற்றிலும் இருந்த அலமாரிகளில் பல சரக்கு சமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தவாறு வந்தாள். அதற்குரிய நெடியும்.. சணல் மூட்டையின் நெடியும் அவளது மூக்கை துளைத்தது. ஏனோ அந்த வாசனை அவளுக்கு பிடித்திருந்தது. எனவே ஆழ மூச்சை உள்ளே இழுத்தவள், அடுத்த நிமிடமே “அச்சூ! அச்சூ!” என்றுப் பலமுறை தும்ம ஆரம்பித்தாள்.

அந்த சத்தத்தில் திரும்பிய தங்கம் பதட்டத்துடன் எழுந்தார்.

உடனே வித்யா “எனக்கு சளி எல்லாம் இல்லை அத்தை! இந்த ஸ்மெல் அலர்ஜீல தும்மிட்டேன்.” என்றாள்.

ஆனால் தங்கமோ “சமைக்கிற சமான்கள் இருக்கிற இடத்துல தும்மினா.. யாராவது சமான்கள் வாங்குவாங்களா! பட்டணத்துல வளர்ந்த புள்ளைக்கு.. சுத்தம் பற்றித் தெரியாதா! அதுவும் தும்மினா இருமினா.. புதுசு புதுசா நோயெல்லாம் வருது. நல்லவேளை கடைக்கு யாரும் வரலை.” என்றுவிட்டு அவளுக்கு அருகில் வந்தவர், அவளது முந்தானை எடுத்து கையில் கொடுத்தார்.

“இதுல தும்மு.. இருமு..” என்றுவிட்டு கதவிடம் சென்றவர், திரும்பியும் கூடப் பார்க்காமல் “நான் சாப்பிட்டு வர வரைக்கும் கடையை பார்த்துக்கோ..” என்கவும், வித்யா திகைத்தாள்.

“அத்தை! என்ன சொல்றீங்க! நானா.. எனக்கு இதெல்லாம் எவ்வளவு விலைனு தெரியாது. யாராவது கடைக்கு வந்துக் கேட்டா நான் என்ன செய்ய?” என்று அதிர்ந்தாள்.

அதற்கு தங்கம் “டைம் ரெண்டுக்கு மேலே ஆச்சு கண்ணு! எல்லாரும் சமையலை முடிச்சு சாப்பிட உட்கார்ந்திருப்பாங்க! அதுனால பெருசா சமான்கள் வாங்க வர மாட்டாங்க..! அப்படி வந்தாலும் ஃபோன் போடு கண்ணு..” என்றுவிட்டு சென்றார்.

வித்யா திகைப்புடன் சுற்றிலும் பார்த்தவாறு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். கம்யூட்டர் சூழ அமர்ந்து அவளுக்கு கிடைத்த வேலை தான் அவளுக்கு நினைவிற்கு வந்தது. ஆனால் அவளது தந்தை தான் வேலைக்கு செல்ல மறுத்து விட்டார். தற்பொழுது.. மளிகைச் சாமன்கள் சூழ அமர்ந்திருந்த தற்பொழுது நிலையை நினைத்துப் பார்த்தவள், குபீர் என்றுச் சிரித்துவிட்டாள்.

ஒன்று தோன்ற கையில் வைத்திருந்த செல்பேசியால்.. செல்ஃபி எடுத்தவள், அந்த படத்தை.. அவளது குடும்ப உறுப்பினர்கள் கொண்ட.. வாட்ஸ்அப் குரூப் மற்றும் அவளது நட்புகளுக்கு என்று இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பிலும்.. அதைப் பகிர்ந்தாள்.

அடுத்த கணமே ஆச்சரியம், அதிர்ச்சி, சிரிப்பு கொண்ட ஸ்மைலிகள் வரிசையாக வந்தன. மீமீஸிம் வந்தன. அனைத்துக்கும் சிரிப்பையே பதிலாக தந்தாள். சிலர் முழுவதுமாக செந்தில்குமரனின் மனைவியாக அவதாரம் எடுத்த வித்யாவை பார்.. என்று கிண்டலடித்து கருத்துக்களைப்‌ பதிவிட்டிருந்தார்கள்.

முதலில் சிரிப்புடன் படித்துக் கொண்டிருந்தவளுக்கு.. அவர்களது கேலி தொடரவும் சுள்ளென்று கோபம்‌ பொங்கியது. முதலில் கேலி பேசியது விளையாட்டு.. அதையே தொடர்ந்தால் அது மட்டம் தட்டுவது போல் அல்லவா!

எனவே வடிவேலுவின் மீமீ ஒன்றை தேடிப்‌ போட்டு அதன் கீழ் என்று கேப்ஷன் எழுதி போட்டாள். அதைப் படித்தவர்களுக்கு அவர்களைத் தான் மறைமுகமாக திட்டி‌ கிண்டலடித்திருக்கிறாள்.‌.‌‌ என்றுப்‌ புரிந்தது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் சிரித்து‌ வைத்தார்கள்.

அதை வெற்றி சிரிப்புடன் வித்யா படித்துக் கொண்டிருந்த பொழுது.. "ஊறுகா பாக்கெட் கொடுக்கா.." என்ற குரலில் திகைத்து நிமிர்ந்தாள்.

அந்த பெண்ணும் வித்யாவை அங்கு பார்த்து திகைத்து தான் போனார்.

"தங்கம் அக்கா புது மருமவளா! கல்யாணத்துல பட்டு புடவை அலங்காரத்துல பார்த்ததா.. இப்படி‌ பார்க்கவும்.. அடையாளம் தெரியலை." என்று‌ பற்களைக் காட்டிச் சிரித்தவர், "ஏன் கண்ணு! எங்க ஊரை‌ பிடிச்சிருக்கா..‌ எங்க தம்பி செந்திலை பிடிச்சிருக்கா.." என்று விசாரிக்க ஆரம்பித்தாள்.

வித்யா “ஆங்! பிடிச்சுருக்குங்க..” என்றாள்.

அந்த பெண் தான் வாங்க வேண்டியதை மறந்துவிட்டு “வுட்டுல எல்லாரும் அனுசரியா நடந்துக்கிறாங்களா! ஜம்முனு வளந்த பொண்ணு! இந்த வுடு பிடிச்சிருக்கா! உன்ற அப்பா கல்யாணத்தை ஜாம் ஜாமுனு நடத்தினாரு. இதுவரைக்கு கல்யாணத்துல.. கப் ஐஸு தான் சாப்பிட்டுருக்கோம். ஆனா உன்ற கல்யாணத்துல நிறையா பாதம் போட்டு குல்பி கொடுத்தீங்க.. ரொம்ப நல்லா இருந்துச்சு!” என்றுப் பேச்சை வளர்க்க ஆரம்பித்தார்.

வித்யா “தேங்க்ஸ்! உங்களுக்கு என்ன வேணும்?” என்றுக் கேட்டாள்.

அதற்கு அந்த பெண் “அந்த மாதிரி குல்பி.. இந்த கடையில விற்பியா கண்ணு!” என்றுக் கேட்டார்.

அதைக் கேட்ட வித்யாவிற்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.

‘என்னது நான் குல்பி விற்க தான் இங்கே வந்தேனா!’

வித்யா “அஹ்! கூடிய சீக்கிரம் விற்பாங்க! இப்போ உங்களுக்கு என்ன வேணும்.” என்றுக் கேட்டாள்.

அதற்கு அந்த பெண் “கொஞ்சம் உடம்பு முடியலனு.. வெறும் தக்காளி சாப்பாட்டை தாளிச்சு வச்சேன். அவருக்கு தொட்டுக்க எதாவது வேணுமாம். மாங்கா ஊறுகா கொடுமா..” என்று ஒரு ரூபாயை நீட்டினார்.

வித்யா எங்கே இருக்கும் என்றுத் தேடினாள். அதற்கு அந்த பெண் “அங்கே தொங்குது பாரு கண்ணு! அட அங்கே பாருமா.. உன்னோட சோத்தாங் கை பக்கம்..! ம்ம் அதே தான்..” என்றார்.

வித்யா அதைப் பிய்த்து அவரிடம் கொடுத்தார். அவர் ஒரு ரூபாயை நீட்டவும், வித்யா மனதிற்குள் ‘என் கை ராசி ஒரு ரூபாய் தானா’ என்றுவிட்டு வாங்கி எங்கே வைப்பது என்றுத் தேடவும், அந்த பெண் “அதோ அங்கே கல்லா பெட்டி இருக்கு கண்ணு..” என்றார்.

வித்யா மேசையில் இருந்த இழுப்பறையை இழுக்கவும், அங்கு பணத்தாள்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஒரு டப்பாவில் சில்லறை நாணயங்கள் போடப்பட்டிருந்தன. அதில் ஒரு ரூபாயை போட்டாள்.

அதற்குள் அந்த பெண் “தங்கம் அக்கா! ஒண்ணுமே சொல்லித் தரலையா! வீட்டுக்கு வந்த மருமவளுக்கு.. கடையை எப்படி நடத்தணும் எங்கே என்னென்னு இருக்குனு கூடச் சொல்ல மாட்டாங்களா! என்ன மாமியாரோ.. அப்போ சோறு ஆக்கி போடரதுக்கு தான் கூட்டிட்டு வந்தங்களா” என்று தங்கத்தை பற்றிப் புரளி பேச ஆரம்பித்தார்.

உடனே வித்யா “வெயிட்! வெயிட்! நான் இங்கே வந்தே மூணு நாள் தான் ஆச்சு! அதுக்குள்ள வீட்டுக்கு வந்த மருமகளை யாராவது கடையில் உட்கார வைப்பார்களா..! என் அத்தை என்னை நல்லபடியா தான் பார்த்துக்கிறாங்க! சாப்பிட போயிருக்காங்க! அதனால என்னை விட்டுட்டு போயிருக்காங்க! இதற்கும் இந்த கடையை பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியாது. ஆனா என்னை நம்பி விட்டுட்டு போயிருக்காங்க! சோ என் அத்தை பேருக்கு ஏற்ற மாதிரியானவங்க தான்!” என்று தனது மாமியாரை தாங்கி பேசினாள்.

வித்யா பேசியதைக் கேட்ட அந்த பெண் “தெரியாதனமா சொல்லிட்டேன். உன் மாமியார் பேருக்கு ஏத்த மாதிரி தான் இருக்காங்க..” என்றுவிட்டு போகும் போது முணுமுணுத்தவாறு சென்றார்.

“டவுன் புள்ளைய புடிச்சாலும்.. நல்ல புள்ளையா தான் புடிச்சுருக்காங்க.. தங்கம் அக்கா கொடுத்து வச்சவங்க தான்..”

வித்யாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவளுக்கு இன்னும் தொடர்ந்து குறுந்தகவல்கள் வந்துக் கொண்டிருக்கவும், அதைப் பார்த்துக் கொண்டிருந்தவள், “அரை கிலோ தக்காளி, அரை கிலோ வெங்காயம், கால் கிலோ கேரட், கால் கிலோ பீன்ஸ், இரண்டு முருங்ககாய் வேணும்.” என்ற பரிச்சயமான குரலில் நிமிர்ந்து பார்த்தாள்.

செந்தில் முறுவலுடன் கடைக்கு முன் நின்றிருந்தான்.

வித்யா “என்ன விளையாடறீங்களா?” என்றாள்.

செந்தில் “இல்ல சீரியஸா கேட்குறேன். ஒண்ணும் தெரியாம ஜம்பமா கடையில எதுக்கு வந்து உட்கார்ந்திருக்கே!” என்று வம்புக்கு இழுத்தான்.

முதலில் என்றால்.. தன்னை மட்டம் தட்டி.. உதாசீனப்படுத்துகிறான் என்று நினைத்திருப்பாள். ஆனால் தற்பொழுது செந்திலின் இன்னொரு முகத்தைப் பார்த்தவளால் ஆகிற்றே. எனவே “ஏன் நான் இங்கே வந்து உட்கார கூடாதா? உங்களுக்கு பொண்டாட்டி என்கிற ரைட்ஸ் மட்டும் தான் கிடைச்சுருக்கா.. இந்த கடையில வந்து உட்காரதுக்கு ரைட்ஸ் இல்லையா. நீங்க என்ன கொடுக்கிறது. நானே எடுத்துட்டேன் போங்க..” என்றுத் துடுக்குத்தனத்துடன் கூறினாள்.

முதலில் என்றால்.. வித்யாவின் பேச்சு செந்திலிற்கு திமிராக தெரிந்திருக்கும்.. ஆனால் தற்பொழுது வித்யாவை நன்கு புரிந்தவன் ஆகிற்றே! அவளது துடுக்குத்தனத்தை இரசித்தான். ஒருவரை ஒருவர் பார்த்து முறுவலித்தபடி இருவரும் நின்றிருந்தார்கள்.

அப்பொழுது “அட! அட! பொண்டாட்டி கடையில உட்கார்ந்ததும்.. கடைக்கு முன்னாடி வந்து நின்னுட்டியா செந்திலு! கடையில இருந்து என்ன வேணும்? உன்ற பொண்டாட்டியா?” என்று கிண்டலடித்தவாறு ஒரு பெண்.. வரவும், இருவரும் சுயநிலைக்கு வந்தார்கள்.

செந்தில் “ஏன் உமாக்கா! சும்மா வந்து நின்னே..” என்றான்.

அதற்கு அந்த உமா என்ற பெண் “இத நாங்க நம்பணுமாக்கும். வுட்டுல பொண்டாட்டி எங்கேனு தேடியிருக்கே.. அவ அங்கே இல்லைன்னதும்.. விசாரிச்சு வந்து இருக்கே..” என்றார்.

செந்தில் “அட போங்கக்கா!” என்றான்.

அப்பொழுது கடைக்கு பின்னால் இருந்த கதவை திறந்துக் கொண்டு வந்த தங்கம் “என்ற செந்திலு! வித்யா எங்கேனு கேட்டே.. கடையில இருக்கானு சொன்னதும்.. போற வேகத்தை பார்த்தால்.. அவளுக்கு உதவியா இருக்க தான் போயிருப்பேனு பார்த்தா.. கடைக்கு முன்னாடி நின்னுட்டு.. அந்த உமா புள்ள கூட வாயடிச்சுட்டு நிற்கிறே..” என்கவும், வித்யாவும், உமாவும் குபீர் என்றுச் சிரித்துவிட்டார்கள்.

உடனே செந்தில் மடித்திருந்த வேட்டியை அவிழ்த்து மீண்டும் மடித்து கட்டியவாறு “எனக்கு வேற வேல இல்லையா! தலைக்கு மேலே ஆயிரம் வேல கிடக்கு..” என்றவாறு அங்கிருந்து அகன்றான்.

ஆனால் வித்யாவினால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸாரி பிரெண்ட்ஸ்.. இந்த முறை யுடி தர லேட் ஆகிருச்சு! இந்த கதை இன்னும் இரண்டு யுடிகளில் முடிந்துவிடும் என்பதால்.. தினமும் யுடி உண்டு..

படித்துவிட்டு மறக்காமல் தங்களது கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.. உங்கள் கருத்தக்கள் தான் எனக்கு எனர்ஜீ ட்ரீங் மாதிரி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 14


செந்தில் சென்ற பின் தங்கம் வித்யாவை விடவில்லை. உடனேயே அமர்ந்திக் கொண்டு.. மளிகை கடையில் இன்னென்ன பொருட்கள்.. இருக்கும் இடத்தை விளக்கினார். அதன் விலையையும் விளக்கினார். வித்யாவும் கேட்டுக் கொண்டாள். ஏனெனில் தனது தலைக்கு மேல் தொங்கிய ஊறுகாயை கூடத் தெரியாமல்.. அந்த பெண் சொல்லி தான் எடுத்துக் கொடுத்ததை அவமானமாக கருதினாள். எனவே முழு நேரம் இந்த கடையில் உட்காரவில்லை என்றாலும்.. எப்பொழுதாவது இங்கே வந்தால்.. வாடிக்கையாளர்கள் கேட்டால்.. எடுத்துக் கொடுக்க தெரிந்திருக்க வேண்டும் என்றுக் கருதினாள். மளிகை கடையில் அமர்ந்து வியாபாரம் செய்வதை அவள் அவமானமாக கருதவில்லை. முதலில் எவ்வாறு நினைத்திருப்பாளோ என்னவோ அவளது உறவுகள் கேலி செய்து.. அவளது தன்மானத்தை தட்டிவிடவும், இதில் என்ன இருக்கு.. எல்லாம் தொழில் தான்.. என்று அவளது மாமியாருடன் தொழில் கற்க ஆரம்பித்தாள்..

மாலையில் செந்தில் அவனது வேலையை பார்க்க சென்றுவிட.. இரவு பத்து மணியளவில் வந்தான். அவன் வருகையில் கடையில் இருந்த தங்கத்தை தவிர அனைவரும் முன் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

குளியலறை கட்டும் பணி நடந்திருந்ததால்.. அவரவர் அறையில் இருந்த தூசி மற்றும் செங்கல் சிமெண்ட்.. குப்பைகளை வளர்மதி, சுமதி, வித்யா சுத்தம் செய்தார்கள். செந்தில் கூறியபடி குளியலறையுடன் கூடிய கழிவறை செங்கல் வைத்து.. கட்டி முடித்திருந்தார்கள். ஆனால் சாக்கடை இணைப்பு, சிமெண்ட் பூசுவது, தரையில் டைல்ஸ் பதிக்க வேண்டும் போன்ற வேலை எல்லாம் முடிந்து உபயோகிக்க.. நான்கு நாட்களாவது ஆகும். அதனால் நாளையும் வேலை நடக்கும் அப்பொழுதும் அசுத்தம் ஆகும். அதனால் முக்கியமான பொருட்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு.. மேலேட்டமாக சுத்தம் செய்திருந்தால்.. அறையில் படுத்து உறங்க முடியாது எனவே தான் அனைவரும் கூடத்தில் குழுமியிருந்தனர்.

ஆனால் வித்யா அலுப்பு கொள்ளவில்லை. அவளது அசௌகரியத்தை கருதி.. உடனே இந்த வேலை நடந்திருக்கிறது என்பதே.. அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

தனது அன்னை அங்கு இல்லை என்றதும்.. வழக்கம் போல் நேராக கடைக்கு சென்றான். அதற்கு அவனது அன்னை கடிந்துக் கொண்டார்.

“என்ன செந்திலு! இங்கே எதுக்கு வந்தே! இன்னும் ஒரு அரை மணி நேரம் கடையை திறந்து வச்சுட்டு.. நான் கடையை மூடிட்டு வந்தறேன். இன்னும் பழைய மாதிரினு நினைச்சுட்டு இருக்கியா! வித்யா காத்துட்டு இருப்பா போ..”

ஆனால் செந்தில் “இந்நேரத்திற்கு யார் என்ன வாங்க வருவாங்கனு எனக்கு தான் தெரியும். வழக்கம் போல.. கடையில இருக்கேன். நீங்க போய் சாப்பிட்டுட்டு.. தூங்குங்க! அதுவும் எல்லாரும் கூடத்துல தான் தூங்கணும்.” என்று அன்னையை அனுப்பி வைத்த மறுகணம் “அண்ணா சில்லுனு தண்ணி பாட்டிலும், பிளாஸ்டிக் டம்ளர் ரெண்டும் கொடுங்க அண்ணா..” என்று ஒரு இளைஞன் ஒருவன் வந்தான். செந்தில் இறுகிய முகத்துடன் அவன் கேட்டதை எடுத்துக் கொடுத்தான்.

பதினொரு மணியளவில் கடை சாத்திவிட்டு செந்தில் வீட்டிற்கு வந்தான். முன் கூடத்தில் கந்தசாமி, வடிவேலுவின் குடும்பம், வளர்மதி என்று பெண்கள் ஒரு பக்கமும் ஆண்கள் ஒரு பக்கமும் படுத்திருந்தார்கள். முறுவலுடன் செந்தில் அடுத்த கூடத்தின் கதவை திறக்க.. அங்கு தங்கம் எதோ கூறிக் கொண்டிருக்க.. கால்களைக் கட்டிக் கொண்டு வித்யா கேட்டுக் கொண்டிருந்தாள்.

செந்திலை பார்த்தும்.. தங்கம் எழுந்து முன் கூடத்திற்கு செல்லவும், செந்தில் அந்த கதவைத் தாளிட்டான். தாளிட்டு விட்டு திரும்பிய பொழுது.. வித்யா அவனுக்கு சாப்பிட எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். நேற்று அவள் கூறியது நினைவு வரவும், எப்பொழுதும் கை கழுவி வந்து அமர்ந்து விடுபவன், தற்பொழுது வித்யாவுடன் அவனுக்கு வேண்டியதை எடுத்து வைத்தான். வியந்து பார்த்த வித்யா முறுவலிக்கவும், செந்தில் "உனக்கும் பால் கலக்கிக்கோ வித்யா.." என்றுவிட்டு பொரியல் இருந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சென்றான்.

பால் கலக்கி கொண்டு வந்த வித்யா நேற்று போல் அவனது முன்னால் அமரவும், செந்தில் "இன்னும் நாலு நாள் பொறுத்துக்கோ.. பாத்ரூம் ரெடியாகிரும். இன்னைக்கு ஒருநாள் பொறுத்துக்கிட்டா நாளைக்கு ரூம் ரெடியாகிரும்.” என்றான்.

வித்யா “தெரியுங்க! பரவாலை. அட்ஜெஸ்ட் செய்துக்கலாம் பிரச்சினை இல்லை.” என்றாள். பின் அவர்களது பேச்சு.. அன்று நடந்த சம்பவங்களைப் பற்றிச் சென்றது. முந்தைய நாளை விட இருவரும் மனதால் நெருங்கியிருப்பதை உணர்ந்தார்கள். எனவே இருவருக்கும் எந்த தடையும் இல்லை. எனவே வித்யா தனது எண்ணத்தை வெளியிட்டாள்.

“சுமதி அக்காவுக்கு என்னை பிடிக்கலைனு நினைக்கிறேன்.” என்றாள்.

அதற்கு செந்தில் “அப்படியெல்லாம் இல்லை கண்ணம்மா! இத்தன நாள் வரை.. அவங்க மட்டும் மருமகனு இருந்தாங்க! இப்போ இன்னொருத்தர் வரவும்.. அவங்களைக் கவனிக்கலையோனு நினைச்சுருப்பாங்க! புதுசா வந்த உன்னைச் சரியா கவனிக்கணுன்னு.. உன் மேலே அதிகப்படி அக்கறை காட்டியிருப்பாங்க! அது அவங்களை ஒதுக்கி வச்ச மாதிரி காட்டியிருக்கும். ஆனா கொஞ்ச நாள்ல சரியா போயிரும். ஏன்னா என் அம்மா கொஞ்ச நாள்ல உன்னைக் கண்டுக்க மாட்டாங்க! அவங்களுக்கு வந்த இரண்டாவது மருமக நீ இந்த குடும்பத்துல ஒருத்தி! அவங்களைப் பொருத்தவரை அவ்வளவுத்தான்!” என்கவும், வித்யா பாலை குடிக்காமல் அவன் கூறியதை வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின் அவர்களது பேச்சு.. வேறு விசயத்தைப் பற்றிச் சென்றது. வித்யா அவனைப் பார்த்தாலே தென்னந்தோப்பை வரதட்சணையாக பொய் கூறிப் பெற்றுக் கொண்டதைச் சுட்டிக்காட்டவில்லை. ஏனெனில் அவளது மனதிலும் வளர்மதிக்கு கொடுக்கலாம் என்ற எண்ணம் வந்த பிறகு.. அதைப் பற்றிக் கேட்க தோன்றவில்லை.

செந்தில் சாப்பிட்டு விட்டு எழுந்ததும்.. வித்யா பாத்திரங்களை ஒதுக்கி வைத்தாள். செந்திலும் அதற்கு உதவி செய்தான். பின் செந்தில் “தூங்கலாமா..” என்றுச் சிரிப்புடன் கேட்டான்.

செந்தில் கேட்ட விதத்தில் உடல் சில்லென்று ஆனது.

வித்யா காற்றாய் போன குரலில் “இங்கேயேவா..?!” என்றுக் கேட்டாள்.

செந்தில் “இங்கே தான்! முதல் நாள் சொன்ன மாதிரி.. இந்த இடம் புல்லா நமக்கு தான் டூயட்டே பாடலாம்.” என்றுக் கண்ணடிக்கவும், வித்யா சிவந்த முகத்தை மறைக்க முயல்கையில்.. செந்தில் அவளை இழுத்து அணைத்தான்.

அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் காலைப் பொழுது விடிந்தது.

செந்தில் கூறியது போல்.. கந்தசாமியிடம் நேற்று கொடுத்த பணத்தில் முக்கால்வாசி பணத்தை முடித்திருந்தார். எனவே இன்று பணம் மற்றும் காய்கறி வாங்க பணம் போதவில்லை. செந்தில் கடையில் காலையிலேயே வந்து உட்கார்ந்துவிட்டதால்.. கல்லாவில் இருந்து பணத்தையும் எடுக்க முடியவில்லை. எனவே என்ன செய்வது என்றுத் திணறியவர், வேறு வழியின்றி செந்திலின் முன் தலைகுனிந்து நின்றார்.

செந்தில் “இப்படித் தலைகுனிச்சு நிற்கிறதில் ப்ரோஜனம் இல்லப்பா! எதாவது வழியை சொல்லுங்க.. ஏற்றுக்கிறேன்.” என்றான்.

என்ன சொல்வது என்று யோசித்தவருக்கு.. சட்டென்று ஒன்றுத் தோன்றவும், “செந்திலு! இன்னைக்கு புதன்கிழமை.. கறிகடை திறந்திருப்பாங்க, அதனால் காய்கறி வாங்கறவங்க குறைவா தான் இருப்பாங்க, இப்போ வந்த கீரையும், நேத்து கடை மூடும் போது.. நீ பிரிட்ஜ்ஜில் எடுத்து வச்ச காய்கறி போதும்னு நினைக்கிறேன்.” என்றார்.

அதற்கு செந்தில் “அவ்வளவுத்தான்பா! என்ன செலவு செய்யறதுன்னாலும்.. என்ன பேசறதுன்னாலும் நாலு முறை யோசிங்க! அது போதும்.. இனி நானும் குடும்பஸ்தன்!” என்றுச் சிரித்தவன், தொடர்ந்து “வளர்மதிக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை வீட்டுல.. எல்லா செலவும் ஏற்றுக்கிற மாதிரி தானே சொல்லி வச்சுருக்கீங்க..! அதுக்கு எதாவது வேறு வழியிருக்கானு யோசிங்க! கண்டிப்பா வழி கிடைக்கும். அதாவது.. என் மாமனார் மாதிரி நல்லா செலவு செய்து கல்யாணம் முடிச்சதை எப்படி.. என் தங்கையை கொடுக்கிற எடுத்துல சொல்லி காட்டினாங்களோ.. அந்த மாதிரி உங்க சொந்தத்துல அதைத்தான் சொல்லி பெருமைப் படுவாங்கனு சொன்னா போதும்.. அந்த தன்மான மாமா.. பாதி செலவை ஏற்றுக்க வருவாரு.." என்று வழியையும் சொல்லிக் கொடுத்தான்.

பின் தங்கம் தனது வேலையை முடித்துவிட்டு கடைக்குள் வரவும், செந்தில் எழுந்தான். ஆனால் தங்கத்துடன் வித்யா வருவதைப் பார்த்ததும்.. அமர்ந்துவிடவும், தங்கம் அவனது முதுகில் செல்லமாக தட்டி அனுப்பி வைத்தான். பின் குளியலறைக்கு மீதி வேலையை முடிக்க ஆட்கள் வந்தனர். செந்தில் கூறாமலேயே வடிவேலு மேற்பார்வையிட வந்தான். அதைப் பார்த்து முறுவலித்துவிட்டு.. நிதானமாக குளியலை முடித்துவிட்டு.. சாப்பிட வரவும், வளர்மதி அவனுக்கு எடுத்து வைக்க எதானித்தாள். ஆனால் அதைத் தடுத்த செந்தில்.. “இப்படி நான் உட்கார்ந்து.. மற்றவங்க எனக்கு சாப்பிட எடுத்து வைப்பதை உன் அண்ணி பார்த்தா.. முறைக்கிற முறைப்பில் ஆள் பஸ்பம் ஆகிருவேன்.” என்றுச் சிரிக்கவும், வளர்மதி உடன் சிரித்தாள்.

செந்தில் நிதானமாக உணவருந்துவதை பார்த்த வளர்மதி “இப்படி உன்னைப் பார்க்கிறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா! இந்த குடும்பத்திற்காக நீ ஓடா தேஞ்சு போறதைப் பார்த்து வளர்ந்தவ நான்! இப்போ இந்த ரெண்டு நாளா.. அண்ணி வந்ததில் இருந்து ஆளே மாறிட்டிங்க! இல்லை பழைய மாதிரி ஆகிட்டிங்க!” என்றாள்.

அதைக் கேட்டு செந்தில் முறுவலித்தபடி சாப்பிட்டான்.

வளர்மதி தொடர்ந்து “அண்ணி உங்க மேலே ரொம்ப பாசம் வச்சுருக்காங்க! உங்களை நல்லா பார்த்துக்கிறாங்க..” என்கவும், சாப்பிட்டு கொண்டிருந்த செந்திலுக்கு புரையேறியது.

அவனுக்கு தானே தெரியும். திருமணம் ஆனதில் இருந்து அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம்! ஆனால் ஒன்றை ஒத்துக் கொள்ள தான் வேண்டும். வித்யா வந்த பின்பு தான்.. செந்தில் சந்தோஷமாக இருக்கிறான். முதலில் அனைவரையும் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.. மற்றவர்கள் எதையும் சரியாக செய்ய மாட்டார்கள். அதனால் அனைத்து வேலையும் தன் தலையில் மீது போட்டுக் கொள்வான். மற்றவர்கள் அவனைச் சார்ந்து இருப்பதால்.. அவன்தான் அவர்களுக்கு வேண்டுவதை செய்ய வேண்டும் என்று இருந்தான்.

செந்திலும் மற்ற இளைஞர்களை போல்.. ஆட்டமும் பாட்டமுமாக பள்ளி படிப்பு முடியும் வரை சுற்றிக் கொண்டிருந்தான். செந்தில் மேற்படிப்பிற்கு பெற்றோர்களிடம் கேட்ட பொழுதே.. அவனின் குடும்பத்தின் பொருளாதார நிலை புரிந்தது. எனவே படிப்பை விட்டவன், அவர்களது நிலத்தில் பாடுப்பட்டான். வடிவேலுவிற்கு இருபதைந்து வயதிலேயே திருமணம் முடிக்க பட்டது. இந்நிலையில் கடன் சுமை ஏறி.. அதைத் தீர்க்க கந்தசாமி அவர்களது வயலை சிறிது சிறிதாக விற்ற பொழுதே.. செந்தில் சுதாரித்து குடும்பத்தின் பொறுப்பை தலையில் ஏற்றான். அந்நிலையில் வடிவேலுவிற்கு ஹார்ட் அட்டேக் வந்தது.

குடும்பத்தின் நிலை சரியவும்.. வீட்டிற்கு முன்.. மளிகை வைத்து நடத்தலாம் என்று யோசனை கூறினான். பின் டவுனில் இருந்த பானுமதி அத்தையின் நிலம் அவர்களது நிலத்திற்கு அருகில் இருக்கிறது. அதை அவர்கள் விற்க போவதாக செய்தி கேள்விப்பட்டு.. அதை விற்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக குத்ததைக்கு கொடுத்தால்.. அவர்கள் உழைத்து வரும் பணத்தில் அறுபது சதவீதம்.. அவர்களுக்கு தந்து விடுவதாக பேரம் பேசி குத்தகைக்கு எடுத்து மேலும் குடும்ப வருமானத்திற்கு வருமானம் சேர்த்தான். அத்துடன் செந்தில் நிற்கவில்லை. காய்கறி மண்டியில் ஏற்றுமதி இறக்குமதி கணக்கும் பார்த்தான். அதனால் அவர்களது வங்கி கணக்கிலும் பணம் சேர்க்க முடிந்தது.

இவ்வாறு அனைத்து முடிவுகளை எடுப்பது மட்டுமின்றி.. தற்பொழுது அவர்களது குடும்பம் எவ்வித சறுக்கலுமின்றி.. செல்வதற்கு செந்திலே காரணம் என்பதால்.. குடும்பத்தினர் அவனைச் சார்ந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

இவ்வாறு இருக்கையில்.. செந்திலுக்கு திருமணம் நடந்தது. வித்யாவை சில காரணங்களுக்காக மணந்துக் கொண்டான். அப்பொழுது சரி என்றுப் பட்டது. வித்யா ஏன் என்றுக் கேள்விக் கேட்ட பின்பே தான் புரிந்தது தவறாக பட்டது. அதனால் வித்யாவுடன் சுமூகமாக வாழ நினைத்தான். அதனால் அவனது கவனம் வித்யாவிடம் திரும்பியதும்.. வளர்மதி கூறியது போல்.. அவனுள் மாற்றம் என்பதை விட.. வளர்மதி கூறியது போல் இத்தனை வருடங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த செந்தில் வெளியே வந்தான்.

 
Status
Not open for further replies.
Top