All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "இளைப்பாற நிழல் தாராய்" கதை திரி 🌳🌳

Status
Not open for further replies.

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Int 20:

இரவு ஒன்பது மணிக்கு ஒரு ஜூஸ் கடையில் சிவதேவ்வும் காவியாவும் நின்றிருந்தனர்.

"சூடா காஃபி வாங்கி தரேன் ஸ்ரீ. இந்த நேரத்துக்கு ஊட்டியில் யாராவது ஜூஸ் குடிப்பாங்களா..? படுத்தாத டி..!" என கெஞ்சி கொண்டிருந்தான் சிவதேவ்.

"அதெல்லாம் முடியாது. நீ வாங்கு.." என்றவள் முகத்தை மூடி இருந்த ஷாலை இன்னும் நன்றாக இழுத்து மூடி கொண்டாள்.

"நாளைக்கு உடம்புக்கு ஏதாவது ஆகட்டும்.. இருக்கு உனக்கு..!" என்று திட்டிக்கொண்டே தான் சிவதேவ் ஜூஸ் ஆர்டர் செய்தான்.

சென்னையை பொறுத்தவரை அவர்களுக்கு ஆஸ்தான ஜூஸ் கடை ஒன்று உண்டு.

இரவு நேரங்களில் சந்திக்கும் போது, அங்கே சென்று விடுவார்கள்.

அங்கிருக்கும் பருவநிலைக்கு ஒரு பிரெச்சனையும் இல்லை.

இங்கு குளிரில் அவள் அடம் பிடிப்பது தான் சிவதேவ்விற்கு பயமாக இருந்தது.

ஜூஸ் வாங்கி வந்தவன் வழக்கம் போல் முதலில் தனக்கானதை அவளிடம் கொடுக்க, அவளும் அதை கொஞ்சம் குடித்து விட்டு தன்னுடையதை வாங்கி கொண்டாள்.

"ஐஸ் எல்லாம் இல்லாமல் எப்படி தான் குடிக்கரையோ போ..!"

"இந்த குளிரில் பைத்தியம் தான் ஐஸ் போட்டு குடிக்கும்.." சிரிக்காமல் அவன் கூற, அதற்கும் அசராமல், "பரவாயில்லை" என நொடித்துக்கொண்டாள் அவனவள்.

சிவதேவ் போன் அடிக்க, அவன் அதை எடுத்தான்.

"சொல்லு விஷ்ணு"

"நீ ரூமில் இல்லையா சிவா..?"

"இல்ல விஷ்ணு. ஏன்..?"

"ஒரு சீன் தோணிச்சு. உன் கூட டிஸ்கஸ் பண்ணனும்.."

"ஓகே. ஒரு டென் மினிட்ஸ். அங்க இருப்பேன்.." என்றுவிட்டு சிவதேவ் போனை வைத்து விட்டான்.

அவன் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த காவியா, "காலையில் பேச கூடாதா டா..? நாம டைம் ஸ்பென்ட் பண்ணுறதே கொஞ்ச நேரம் தான். அதிலும் டிஸ்டர்பன்ஸ்னா எப்படி..!" என்றாள் கவலையுடன்.

"ரிஸ்க் வேண்டாம் ஸ்ரீ. நீயும் நானும் சேர்ந்து வந்திருக்கிறது யாருக்கும் தெரியாது. காசிப்க்கு வழி வகுக்க வேண்டாம். போலாம்." என்றுவிட்டான் சிவதேவ்.

காவியாவும் முனகிக்கொண்டே தான் கிளம்பினாள்.

ஷூட்டிங் என ஊட்டி வந்து ஒரு மாதம் ஓடி இருந்தது.

வந்த நாளில் இருந்து வேலையே சரியாக இருந்தது. ஏதோ இன்று தான் இருவரும் அமைதியாக வெளியே வந்திருந்தனர். அதுவும் கெடுகிறதே என்ற வருத்தம் அவளுக்கு.

இன்னும் ஒரு வாரத்தில் ஷூட்டிங் வேறு முடிந்து விடும்..

காவியாவை தனியாக ஹோட்டலில் இறக்கி விட்டுட்டு, சிறிது நேரம் கழித்தே சிவதேவ் சென்றான்.

************

இரவு நன்றாக உறங்கி கொண்டிருந்த காவியா, தன் போன் அடிக்கும் சத்தத்தில் தான் எழுந்தாள்.

"என்ன டா..?" என தூக்கம் கலையாமல் அவள் கேட்க,

"வெளிய வா" என்றான் சிவதேவ்.

"தூக்கம் வருது தேவ்.."

"நாளைக்கு மதியம் தான் ஷூட். மார்னிங் தூங்கிக்கலாம். இப்போ வா."

"படுத்துவ டா நீ..!" என புலம்பி கொண்டவள், எழுந்து சென்று முகம் அலம்பி வெளியே வந்தாள்.

அந்த ஹோட்டல் முழுவதும் பெரும் அமைதியில் இருந்தது.

அவர்கள் இருவர் மட்டுமே அந்த இடத்தில் நடந்தனர்.

கீழே சிவதேவ் ஒரு பைக் ஏற்பாடு செய்திருந்தான்.

"ஏறு" என அவன் கூற, அவளும் அவன் பின்னால் ஏறி அவனை அழுத்தமாக அணைத்து கொண்டாள்.

"திரும்ப தூக்கம் வருது டா"

சிவதேவ் வண்டியை எடுத்ததுமே அவள் சுகமாக அவன் முதுகில் சாய்ந்துகொள்ள, "நான் திருப்பி எழுப்புவேனே..!" என்றான் அவன்.

"சரியான சேடிஸ்ட் டா நீ..!"

"ஆமா டி. உன்னை கடிச்சு சாப்பிட போறேன்.."

"நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்ட தல..!" அவள் கலகலவென சிரிக்க,

"எனக்கு தேவை தான் டி" என புலம்பி கொண்டவன் உதட்டிலும், புன்னகையே உறைந்திருந்தது.

ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தியவன், இறங்கி கை நீட்ட, அவளும் அவன் கையை பிடித்து கொண்டாள்.

நின்ற இடத்தில் இருந்து காட்டு பகுதி போல் இருந்த இடத்தில் சிறிது தூரம் சிவதேவ் நடக்க, அவளும் அவனை ஒன்றி கொண்டே நடந்தாள்.

இருவரும் சென்று நின்ற இடம், ஒரு அழகான குன்று போல் இருந்தது.

அன்று முழு நிலவு வேறு.

நன்றாக குளிர தொடங்க, தன்னவன் கையை அழுத்தமாக அணைத்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் காவியா.

"அழகா இருக்கு தேவ் இந்த இடம்"

"ம்ம். உனக்காக தேடி கண்டுபிடிச்சேன். எனக்கு ஒன்னும் கிப்ட் கிடையாதா..?"

"நானே பெரிய கிப்ட் தான் டா உனக்கு" அவனை நிமிர்ந்து பார்த்து அவள் கண்ணடிக்க, "அப்போ உன்னையே தரியா?" என்றான் அவன் மென்குரலில்.

"உனக்கு இல்லாமையா..! எடுத்துக்கோ.." என அவள் சட்டென கூறி விட,

"பயமே இல்ல டி உனக்கு" என அவள் நெற்றியில் முட்டினான் சிவதேவ்.

"உன்கிட்ட என்ன பயம் தேவ். என்னிக்கென்றாலும் நான் உனக்கு தான். தாலி எல்லாம் வெறும் பார்மாலிட்டி தான்." அவள் பதிலில் மனம் நெகிழ்ந்து விட, அவளை மேலும் தனக்குள் இறுக்கி கொண்டான் சிவதேவ்.

மலை முகட்டில் முழு நிலவுடனான அந்த அமைதியான இரவு, இருவருக்குள்ளும் அழகான நினைவாக பதிந்து போனது.

"சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாமா ஸ்ரீ..?" திடீரென சிவதேவ் கேட்க,

"உன் இஷ்டம் தான் தேவ்" என்றாள் அவள்.

"லேட் ஆகட்டும்னு கேட்டயே டி..!"

"உனக்கு லேட் ஆக வேண்டாம்னு தோணினா, எனக்கு ஓகே தான்.."

"உன் இஷ்டத்துக்கு வேணும்னு சண்டை எதுவும் போட மாட்டியா...?" அவள் பக்கம் திரும்பி அவன் கேட்க, அவளோ வேகமாக மறுப்பாக தலையசைத்தாள்.

"இப்படி ஒரு வைப் யாருக்கு கிடைக்கும்..!"

அவன் பெருமைபட்டுக்கொள்ள, "ரொம்ப சந்தோசப்படாத கண்ணா. எல்லாத்துக்கும் இப்படி சொல்ல மாட்டேன். நான் அடம் பிடிச்சா நீ தாங்க மாட்ட."

"அதெல்லாம் தாங்குவேன்"

வீராப்பாக அவன் கூறியதில், இருவரும் சிரித்து கொண்டனர்.

*************

அந்த பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போதே சுகந்திக்கும் விஷ்ணுவிற்கும் காதல் மலர்ந்து விட்டது.

சிவதேவ் காவியா போல் அவர்கள் பெரிதாக தங்கள் காதலை மறைக்கவில்லை.

இருவரும் வெளிப்படையாகவே பழகினர்.

விஷ்ணு கூட ஒரு முறை சிவதேவ்விடம் அவனும், காவியாவும் காதலிக்கிறார்களா என்று கேட்டு பார்த்தான்.

"ஏதாவது நல்ல விஷயம் என்றால் நானே சொல்லுவேன் விஷ்ணு" என சிவதேவ் முடித்துவிட, அதற்கு மேல் விஷ்ணுவும் அவனை வற்புறுத்தவில்லை.

நல்ல நட்பு அனைவருக்குள்ளும் ஏற்பட்டு விட்டதால், அந்த படம் முடியும் வரை நாட்கள் மிக அழகாகவே சென்றது.

விஷ்ணு படத்தின் ஷூட்டிங் டப்பிங் எல்லாம் முடிந்திருந்த நிலையில், அவார்ட் பங்க்ஷன் ஒன்று அறிவித்தனர்.

இந்த வருடம் சிறந்த நடிகனாக சிவதேவ்வும், சிறந்த நடிகையாக காவியாவும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

சிவதேவ் சென்ற வருடமே விருது வாங்கி இருந்தான். இப்போது மீண்டும் அவனுக்கு தான் கிடைத்திருந்தது.

அவன் நடிப்பு திறமை, அவன் தேர்ந்தெடுக்கும் கதைகள் என அனைத்தும் சேர்ந்து அவனை உச்ச நட்சத்திரமாக அமர வைத்திருந்தது.

அன்று அவார்ட் பங்க்ஷன்.

அதற்கு சேர்ந்து வந்தால் ஊரே பார்க்கும் என்பதால், சிவதேவ்வும் காவியாவும் தனி தனியாக தான் சென்றனர்.

சிவதேவ் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து நான்கு சீட் தள்ளி காவியா அமர்ந்திருந்தாள்.

சிவதேவ் கண்கள் வந்ததுமே அவளை தான் தேடியது.

ஒரே ஒரு நொடி அவன் அவளை பார்க்க, சரியாக அவளும் அவனை பார்த்தாள்.

யார் கவனத்தையும் கவராமல் சிவதேவ் கண்ணடிக்க, அவளும் பதிலுக்கு குறும்புடன் புன்னகைத்தாள்.

பங்க்ஷன் தொடங்கியதும் அனைவர் கவனமும் அதில் திரும்பியது.

"ஹாய் சிவதேவ்.." என்ற குரலில் சிவதேவ் திரும்பி பார்த்தான்.

அவன் பக்கத்தில் ராகவன் அமர்ந்திருந்தான்.

எப்போது வந்து அமர்ந்தான் என்று கூட சிவதேவ்விற்கு தெரியவில்லை.

பிரபல நடிகன், விஷ்ணுவின் அண்ணன் என்னும் அளவு சிவதேவ்விற்கு அவனை பற்றி தெரியும்.

"ஹாய்" சிவதேவ்வும் மறுக்காமல் கைகொடுத்தான்.

"பல வருஷமா நான் தக்க வைத்திருந்த இடத்தை ரொம்ப சுலபமா பிடிச்சுடீங்களே சிவதேவ்..!" சிரித்து கொண்டே கூறினாலும் ராகவன் குரலில் ஏதோ ஒன்று சிவதேவ்விற்கு உறுத்தியது.

"சுலபமா எதுவுமே கிடைக்காது ராகவன். உயிரை கொடுத்து உழைச்சிருக்கேன்..!" அழுத்தமாக சிவதேவ் கூற,

"ம்ம்.. ஆமா.. ஆமா.." என்ற ராகவன் ஒரு மாதிரி சிரித்து கொண்டான்.

சிவதேவ்விற்கு விருது வழங்க ராகவனை தான் மேடைக்கு அழைத்தனர்.

முதலில் ராகவன் கையில் விருதை கொடுத்துவிட்டு, சிவதேவ்வை மேடைக்கு அழைத்தனர்.

சிவதேவ் மேடை ஏறிய தருணம், அந்த அரங்கம் முழுவதும் கைதட்டலும் கூச்சலுமாக அதிர்ந்தது.

தன் கையில் இருந்த விருதை சிவதேவ் கையில் கொடுத்த ராகவன், "அடுத்த வருஷம் இது என்னிடமே வந்துடும் சிவதேவ்" என அடிக்குரலில் கூற,

"வாழ்த்துக்கள் ராகவன்" என்றான் சிவதேவ் நிதானமாக.

அவனுக்கு தன் உழைப்பின் மேல் நம்பிக்கை இருந்தது.

தந்தை பணத்தில் வந்த ராகவனோ, அந்த நம்பிக்கை இல்லாமல் எரிச்சலில் இருந்தான்.

இருந்தும் இருவரும் முகத்தை மட்டும் சிரிப்பது போலவே வைத்து கொண்டனர்.

அதன் பின் காவியாவிற்கும் அவார்ட் கொடுத்தனர்.

அன்று பாதி நிகழ்வு மட்டுமே முடிந்திருந்தது.

கடைசியாக அனைவரும் சாப்பிடும் இடத்திற்கு சென்று விட்டனர்.

விஷ்ணுவை ராகவன் தனியாக அழைத்து சென்றான்.

"அந்த சிவதேவ் வச்சு படம் எடுத்திருக்கயா டா..?" என அவன் தம்பியிடம் கேட்க, "ஆமா" என்றான் அவன்.

"அவனை எல்லாம் ஏன் டா வளர்த்து விடற..? நேத்து வந்த பய..!" என ராகவன் திட்ட தொடங்க, விஷ்ணு கவனமோ சற்றே தள்ளி நின்றிருந்த சுகந்தி மேல் தான் இருந்தது.

"என் விஷயத்தில் தலையிடாதே ராகவ்" என்றுவிட்டு விஷ்ணு நகர்ந்து சென்று விட்டான்.

தம்பியை முறைத்த ராகவன், சிவதேவ்வை தேட, அவனோ காவியாவுடன் நின்றிருந்தான்.

இருவரும் சிரித்து பேசி கொண்டிருந்ததை பார்த்து அவனுக்கும் இன்னும் வயிறு எரிந்தது

இப்போதைக்கு தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஹீரோயின். அவளும் இவனுடன் பேசுவதா..!

'ம்ஹ்ம்! விட கூடாது..' என ராகவன் மனம் கருவிக்கொண்டது.

இங்கு காவியாவும் சிவதேவ்விடம் ராகவன் பற்றி தான் கேட்டாள்.

"அந்த ராகவன் என்னவோ மாதிரி இருந்தாரே..! எதுவும் பிரெச்சனையா தேவ்..?" என அவள் கேட்க,

"அதெல்லாம் ஒன்னும் இல்லை ஸ்ரீ. அவனுக்கு தலைவலியாம்.." என சிவதேவ் சமாளித்துவிட்டான்..

அப்போதைக்கு ராகவனை சிவதேவ் தேவையில்லாத டாப்பிக்காக தான் பார்த்தான்.

அவன் ஒரு விஷப்பாம்பு என அப்போது யாருமே கவனிக்கவில்லை.

சிவதேவ்வையே பார்த்து கொண்டிருந்த ராகவன் கண்கள், பெரும் கோபத்திலும் பொறாமையிலும் சிவந்து போனது.

'உன்னை மொத்தமா ஒழிக்கறேன் பாரு டா!' என மனதில் அழுத்தமாக சபதம் எடுத்து கொண்டான் ராகவன்..

இளைப்பாறும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Int 21:

நாட்கள் அதன் போக்கில் வேகமாக நகர்ந்தது.

விஷ்ணு எடுத்த படம் ரிலீஸ் ஆக, அதுவும் பெரும் வெற்றியடைந்தது.

அன்று ஒரு புது பட பூஜை முடித்துக்கொண்டு சிவதேவ் தன் வீட்டிற்கு வந்தான்.

மாலை போல் அவன் வந்து சேர்ந்த நேரம், காவியா அவன் வீட்டில் தான் இருந்தாள்.

பர்வதம் ஏதோ டிபன் செய்து கொடுத்திருக்க, அவள் ரங்கநாதனுடன் பேசி கொண்டே அதை கொறித்து கொண்டிருந்தாள்.

"என்ன மேடம், காத்து இந்த பக்கம் வீசுது..!" கிண்டலாக கேட்டுக்கொண்டே சிவதேவ் வர,

"நான் என் ஆண்ட்டியை பார்க்க வந்தேன். உனக்கு என்ன..?" என்றாள் அவள் வீராப்பாக.

"ஓஹோ! ஆண்ட்டி மேல் பாசமா..! நம்பிட்டேன்.. நம்பிட்டேன்.."

"டேய் அவ நிஜமாவே எங்களை பார்க்க தான் வந்தா.. ஏன் உன்னை பார்க்க மட்டும் தான் வரணுமா..?" ரங்கநாதனும் சேர்ந்து வம்பிழுக்க,

"நான் இல்ல பா.." என சரண்டர் ஆகி விட்டான் சிவதேவ்.

உள்ளே சென்று ப்ரெஷ் ஆகி வந்தவன், காவியா தட்டில் இருந்த பஜ்ஜியை எடுக்க, "ஆண்ட்டி இவன் என் பஜ்ஜியை திருடரான்.." என சத்தமாக கத்தி வைத்தாள் காவியா.

"சிவா உனக்கு வேற தரேன். கவி கிட்ட இருந்து எடுக்காத.." என உள்ளிருந்து குரல் வர,

"ஒரு பஜ்ஜி சாப்பிட கூட இந்த வீட்டில் எனக்கு உரிமை இல்லாமல் போச்சு..! இதை கேட்க ஆளே இல்லையா..!" என போர்க்கொடி தூக்கினான் சிவதேவ்.

"ஆளே இல்லையாம்!" என காவியா நொடிக்கொள்ள, அவள் தலையில் வலிக்காமல் கொட்டி வைத்தான் அவன்.

அதற்குள் பர்வதம் அவனுக்கும் ஒரு தட்டில் பஜ்ஜி எடுத்து வர, "நீங்களும் உட்காருங்க மா" என்றான் சிவதேவ்.

"இன்னும் கொஞ்சம் இருக்கு டா. போட்டுட்டு வரேன்."

"வேலைகாரங்க எங்க?"

"கிளம்பிட்டாங்க டா"

"இந்த கிட்சனை மட்டும் விட்டே கொடுக்க மாட்டீங்களே..! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் என்ன..?"

"இருக்கட்டும் டா.. என்ன இருந்தாலும் என் கையால் செய்வது போல் வருமா..!"

"அதானே" என காவியாவும் சேர்ந்துகொள்ள,

"சரியான சாப்பாட்டு ராமி" என தலையில் அடித்துக்கொண்டான் சிவதேவ்.

"நீ வேற வெறுப்பேத்தாத தேவ். ஏற்கனவே ரெண்டு மாசமா டையட் என்னும் பெயரில் கொலை பட்டினி. இன்னிக்கு தான் சீட் டே தெரியுமா..! அதான் இங்க வந்துட்டேன். ஆண்ட்டி கை மனம் வேற எங்க கிடைக்கும்..!" சாதாரணமாக சொல்லிக்கொண்டே அவள் சப்புக்கொட்டி சாப்பிட, சிவதேவ் முகம் ஏதோ யோசனையுடன் இறுகி போயிற்று.

"கொஞ்சம் என்னுடன் வா ஸ்ரீ" என்றுவிட்டு அவன் எழுந்துவிட, ரங்கநாதனிடம் ஒரு தலையசைப்புடன் அவள் எழுந்து விட்டாள்.

சிறுவர்கள் இருவரையும் அவர் தடுப்பதில்லை.

இதுவரை அவர்கள் இருவரும் காதல் என்று வீட்டில் சொல்லாவிட்டாலும், காதல் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளும் நிலையில் தான் பெரியவர்கள் இருந்தனர்.

கையில் ஒரு பஜ்ஜியுடனே வந்திருந்த காவியா, வெளியில் இருந்த ஊஞ்சலில் வந்து அமர்ந்து சாப்பிடும் வேலையை தொடர்ந்தாள்.

சிவதேவ்வும் அவள் அருகில் அமர்ந்தான்.

"எத்தனை படத்தில் கமிட் ஆகி இருக்க ஸ்ரீ..?"

"மூணு"

"ம்ம். இதுக்கு மேல கொஞ்ச நாளைக்கு கமிட் ஆகாத ஸ்ரீ. இந்த படங்கள் நீ முடிக்கும் போது நானும் கமிட் ஆன படங்கள் முடிச்சுடுவேன். கல்யாணம் பண்ணிட்டு அடுத்த படம் பண்ணிப்போம்."

அவன் கூற்றில் ஆச்சர்யமாக அவனை பார்த்தவள், "என்ன திடீர்னு..?" என்றாள்.

"நீ கஷ்டப்பட்டு உழைச்சது போதும் டி. இனி ப்ரீயா இரு. உனக்கு பிடிச்சதை சாப்பிடு. கொஞ்சம் குண்டானால் பரவாயில்லை. நடிப்பிற்கு ஸ்கோப் இருக்கும் படங்கள் பண்ணிக்கலாம். ராஜலக்ஷ்மி அம்மாவும் இனி என் பொறுப்பு. நான் பாத்துக்கறேன். நீ ஜாலியா இரு. அது போதும்." தெளிவாக அவன் கூற காவியா அவனையே கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள்.

"என்ன மா, பார்வை எல்லாம் பலமா இருக்கே..!" என்றவன், அவளை பிடித்து தன் அருகில் இழுக்க, அவளும் மறுக்காமல் அவன் மேல் வந்து விழுந்தாள்.

"லவ் யு டா" என்றவள் அவனை இறுக்கமாக அணைத்துக்கொள்ள, அவனும் அவளை தனக்குள் இறுக்கி கொண்டான்.

"நீ சொல்ல மாட்டியா..?"

"சொன்னால் தான் ஒத்துப்பயா..?"

"போடா.." என முறுக்கிக்கொண்டவள், அமைதியாக அவன் நெஞ்சில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்.

*****

அன்று சிவதேவ் ஒரு பிரெஸ் மீட்டில் இருந்தான்.

புதிதாக வெளியாகி இருந்த அவன் படத்தை பற்றிய பேட்டி ஒன்று நடந்து கொண்டிருந்தது.

"எப்படி எந்த காசிப்பிலும் சிக்காமல் இருக்கீங்க...?" என பேட்டி எடுக்கும் பெண் கேட்க,

"உங்களுக்கு ஏன் மா இந்த விபரீத ஆசை..?" என அவன் சிரித்து கூறிக்கொண்டிருந்தான்.

சரியாக அந்த நேரம் வேகவேகமாக சில போலீஸ் உள்ளே வர, லைவ்வாக போய் கொண்டிருந்த நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவர்கள் நேராக சிவதேவ் அருகில் தான் வந்து நின்றனர்.

"உங்களை அர்ரெஸ்ட் பண்ணுறோம் மிஸ்டர் சிவதேவ்" என ஒரு இன்ஸ்பெக்டர் கூற,

"எதுக்கு சார்..?" என்றான் அவன் ஒன்றும் புரியாமல்.

அதற்குள் அந்த நிகழ்ச்சி இயக்குனரும் அங்கு வந்து விட்டார்.

"என்ன ஆச்சு சார்..?" என அவரும் பதட்டத்துடன் கேட்க,

"இவர் தன் கூட நடிக்கும் பெண்ணிடம் தப்பா நடந்திருக்காரு. பிசிக்கலா அபியுஸ் பண்ணி இருக்காருன்னு அந்த பொண்ணு கேஸ் கொடுத்திருக்கு. விசாரணைக்கு வந்தே ஆகணும்." அனைத்து கேமராக்களும் ஓடி கொண்டிருந்த போதே அவர் கூறி விட்டார்.

சிவதேவ்விற்க்கு ஒன்றும் புரியாத நிலை.

"சார் இது அபாண்டமான பழி. நான் அப்படி எதுவும் பண்ணவே இல்ல சார்.. எல்லாம் பொய்.." தடுமாறி சிவதேவ் கூற,

"அதை கோர்ட் தான் சொல்லணும் மிஸ்டர். நீங்களே வந்துடீங்க என்றால் மரியாதை. நான் இழுத்து போனால் நல்லா இருக்காது." அழுத்தம் திருத்தமாக அவர் கூற, இன்னுமும் சிவதேவ்வால் அவர் சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை.

"சார் நீங்க ஏதோ தப்பா வந்திருக்கீங்க..." என அவன் கத்த,

"உங்களுக்கு சீரியஸ்னஸ் புரியலை சிவதேவ்" என நிதானமாக கூறிய இன்ஸ்பெக்டர், அவன் கையை அழுத்தமாக பிடித்தார்.

சில அடிகள் அவனை இழுத்து கொண்டு அவர் நடந்ததும் தான், அவனுக்கு சுயநினைவே வந்தது.

சுற்றிலும் குழுமி இருந்த மக்களை பார்த்தவனுக்கு மெதுவாக தன் நிலை புரிந்தது.

"நானே வரேன்" என அவன் மெதுவாக கூற, இன்ஸ்பெக்டரும் அவன் கையை விட்டு விட்டார்.

அவனோ குனிந்த தலையுடன் நடந்து சென்று ஜீப்பில் ஏறி விட்டான்.

அவன் மனம் முழுவதும் 'இங்க என்ன நடக்குது?' என்ற கேள்வி தான் ஓடி கொண்டிருந்தது.

அவன் மீது போய் யார் இப்படி கேஸ் கொடுத்தது!

இந்த குழப்பதிலேயே இருந்தவன், நடந்த மற்றோரு விபரீதத்தை கவனிக்கவில்லை.

அங்கு நடந்த அனைத்தும் லைவாக சமூக வலைத்தளத்தில் வந்திருந்தது.

அதற்கு மேல் மக்கள் வாய்க்கு கேட்கவும் வேண்டுமா..! அடுத்த அரை மணி நேரத்தில் சிவதேவ் பெரும் காமுகன் என பட்டமே கட்டி விட்டனர்.

அவனோ அப்போது தான் ஸ்டேஷனே போய் சேர்ந்தான்.

அங்கு அவன் மீது கம்பளைண்ட் கொடுத்த பெண்ணை பார்த்தவனுக்கு, முதலில் அவளை சரியாக அடையாளம் கூட தெரியவில்லை.

"ஏய் யாரு நீ...?" என அவன் முகம் சுருங்க கேட்க, அவளோ, "ஐயோ! இப்படி நடிக்கிறாரே!" என ஒப்பாரி வைத்தாள்.

அவள் குரலில் தான் அவனுக்கு அவளை நினைவு வந்தது.

அவன் புதிதாக நடிக்க ஆரம்பித்திருக்கும் படத்தில் ஒரு துணை நடிகை.

அவளுக்கு இவன் மேல் என்ன பகை..!

சிவதேவ் ஒன்றும் புரியாமல் நின்று விட, "உள்ள வாங்க சிவதேவ்" என்றார் இன்ஸ்பெக்டர்.

அவனும் அமைதியாக சென்று அவர் எதிரில் அமர்ந்தான்.

"நடிகன் என்றால் என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா..? மாட்டவே மாட்டீங்கன்னு நினைப்போ..?" கோபத்துடன் அவர் கேட்க,

"சார், அந்த பொண்ணை எனக்கு அடையாளம் கூட தெரியல. இங்க என்ன நடக்குதுன்னு எனக்கே புரியல." என்றான் அவன் குழப்பத்துடன்.

"எல்லாம் எங்க காஸ்டெடிக்கு கீழ் வந்தால் தன்னால் புரியும் மிஸ்டர். கான்ஸ்டபிள் இவர் மேல் எப். ஐ.ஆர் பைல் பண்ணுங்க.." என அவர் நேரடியாக கூறி விட,

"சார் என்ன பண்ணுறீங்க..?" என சிவதேவ் அதிர்ந்து கத்தும் போதே,

"தேவ்" என்ற அவனவள் குரல் கேட்டு விட்டது.

அதில் திரும்பியவன், பின்னால் நின்றிருந்த காவியாவை பார்த்தான்.

அவளும் வேகமாக அவனிடம் தான் வந்தாள்.

"என்ன சார் ஒன்னும் விசாரிக்காமல் நீங்க பாட்டுக்கு முடிவெடுக்கறீங்க..! எங்க வக்கீல் வந்துட்டே இருக்காரு. இந்த லேடி பத்தி விசாரிக்க ஆள் அனுப்பி இருக்கோம். நியாயப்படி நீங்களே பண்ணி இருக்கணும். வெயிட் பண்ணுங்க சார். மீறி ஏதாவது பண்ணினால் மீடியாவில் உங்களை நாறடிச்சுருவேன். இங்க நான் பேசும் எல்லாம் லைவா ரெகார்ட் ஆகிட்டு இருக்கு." என அவள் தன் போனை காட்ட, அந்த இன்ஸ்பெக்டர் சற்றே தயங்கி அமர்ந்தார்.

"அந்த பொண்ணு எதுக்கு பொய் சொல்ல போகுது..!" கடுப்புடன் அவர் கேட்க,

"கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சுடும்" என்றாள் அவள் அமர்தலாக.

"இங்க என்ன நடக்குது ஸ்ரீ..?" சிவதேவ் அவளிடம் கேட்க,

"தெரியல தேவ். ஆனால் கண்டுபிடிக்க ஏற்பாடு பண்ணிட்டு தான் வந்தேன். நீ உட்காரு.." என்றாள் அவள்.

அவள் திடம் தான் இப்போது அவனையும் திடப்படுத்தியது.

அவள் இருக்கும் போது அவனுக்கு யானை பலம் வந்தது என்றால் மிகையாகாது.

இப்போது அவனும் நிதானமாக அமர்ந்து விட்டான்.

சில நிமிடங்களில் வக்கீலும் வந்து விட்டார்.

அவர் வரும் போதே சில ஆதாரங்கள் திரட்டி வந்திருந்தார்.

அதாவது கம்பளைண்ட் செய்த பெண்ணின் குடும்பத்தில் இருந்தவர்களை அழைத்து வந்து விட்டார்.

அந்த பெண்ணோ தன் குடும்பத்தை பார்த்ததும் பெரிதாக பதறி போனாள்.

"நடிக்க போறேன்னு சொல்லிட்டு என்ன டி பண்ணிட்டு இருக்க..!" என அவள் தந்தை அறைந்த அறையில், சிறிது நேரத்தில் உண்மை அங்கேயே வெளிவந்து விட்டது.

தனது நண்பன் ஒருவனுக்கு கிடைக்க இருந்த வாய்ப்பு சிவதேவ்விற்கு போய் விட்டதால், அவனை பழிவாங்க இப்படி செய்ததாக ஒத்துக்கொண்டவள், சிவதேவ் காவியா இருவர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டாள்.

சிவதேவ் அமைதியாக நிற்க, காவியா அந்த பெண்ணை மன்னிக்க தயாராக இருக்கவில்லை.

"சார் இவ மேல கேஸ் நான் கொடுக்கறேன்.." என்றவள் நின்று கேஸ் கொடுத்துவிட்டு தான் வந்தாள்.

வக்கீலுக்கு நன்றி சொல்லி அவர் பீஸ் கொடுத்துவிட்டு அவர்கள் வெளியே வந்த போது, விஷ்ணுவும் சுகந்தியும் அங்கு வந்து விட்டனர்.

"எல்லாம் ஓகே தானே காவியா..?" என விஷ்ணு கேட்க,

"ம்ம் சரியா போச்சு விஷ்ணு" என்றவள், "விஷ்ணு தான் எல்லா ஹெல்ப்பும் பண்ணினார் தேவ்" என்றாள் சிவதேவ்விடம்.

"தேங்க்ஸ் டா" என சிவதேவ் வெறுமையாக கூற,

"டேய், ப்ரீயா விடு. ஏதோ கெட்ட நேரம். விடு டா.." என்ற விஷ்ணு, அவனை ஆறுதலாக அணைத்துக்கொள்ள, சிவதேவ்வும் அவனை அணைத்து விடுவித்தான்.

நால்வரும் ஒரே காரில் போகலாம் என முடிவு செய்ய, காவியா தன் காரை டிரைவரை எடுத்துச்செல்ல சொல்லி விட்டாள்.

விஷ்ணு காரை எடுக்க, சிவதேவ் தன் போனை எடுத்தான்.

அவன் போனை எடுப்பதை பார்த்த காவியா அவன் கையை பிடித்து தடுத்தாள்.

சிவதேவ் அவளை பார்க்க, "இப்போ வேண்டாம் தேவ்" என்றாள் அவன் மென்மையாக.

"என்ன நடந்திருக்கும்னு தெரியும் ஸ்ரீ. விடு.." என்றவன் போனை பார்த்தான்.

அவன் எதிர்பார்த்தது போலவே தான் நடந்திருந்தது.

அவனை திட்டி அத்தனை செய்திகள் பரவி இருந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் அதை படிக்க முடியாமல் போனை அனைத்தவன், அமைதியாக கண் மூடி சீட்டில் சாய்ந்து விட்டான்.

அவன் நிலை உணர்ந்து காவியா மனம் தான் அடித்து கொண்டது.

அவள் ஆறுதலாக அவன் கையை பிடித்துக்கொள்ள, அவனும் அவள் கையை அழுத்தமாக பிடித்து கொண்டான்.

விஷ்ணு நேராக வீட்டுக்கு போகாமல் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் காரை நிறுத்தினான்.

"ஒரு காஃபி குடிச்சுட்டு போகலாம். இறங்குங்க." என விஷ்ணு திரும்பி கூற, சிவதேவ்வோ மூடிய கண்களை திறக்கவே இல்லை.

காவியா தான் அவனை மெலிதாக பிடித்து அசைத்தாள்.

"காஃபி குடிச்சுட்டு போகலாம் தேவ்" என அவள் கூற,

"எனக்கு வேண்டாம் ஸ்ரீ. நீங்க குடிச்சுட்டு வாங்க. நான் இங்கயே இருக்கேன்." என்றான் அவன்.

"ஒரு பொய் கேஸுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்காத சிவா. இதுக்கெல்லாம் டல் ஆனால் இந்த பீலடில் இருக்க முடியாது. ஒழுங்கா வா.." என்ற விஷ்ணு, தான் இறங்கி வந்து அவனையும் பிடித்து அழைத்து சென்றான்.

சிவதேவ்விற்கும் புரிந்தது. மனம் தான் அவன் பார்த்த தரக்குறைவான வார்த்தைகளிலேயே உழன்று கொண்டிருந்தது.

எத்தனை பேரிடம் அவனால் நிரூபித்து விட முடியும்..! எப்படி நிரூபிக்க முடியும்..! விடை தெரியாத கேள்வி அவன் நிம்மதியை குழைத்து கொண்டே இருந்தது.

காவியா அவன் மனம் புரிந்தவளாக, அவனுடனே இருந்தாள்.

ஒரு இடத்தில் அமர்ந்ததும் விஷ்ணு நால்வருக்கும் காஃபி கூறினான்.

"எல்லாம் சரியா போகும் ண்ணா. ஒரு பிரெஸ் மீட் கொடுப்போம். சாட்சியுடன் எல்லாம் ஏற்கனவே மீடியாவில் சொல்லியாச்சு. கவலை படாதீங்க."என சுகந்தியும் கூற,

"அப்படியே எல்லாரும் நம்பிடுவாங்களா மா..?" என்றான் சிவதேவ்.

நம்பமாட்டார்கள் தான். எதிர்மறை செய்திக்கு இருக்கும் வேகம் இந்த காலத்தில் நல்ல உண்மைகளுக்கு இல்லை தான்.

"கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் மாறும் சிவா" என விஷ்ணு கூறிக்கொண்டிருந்த போதே,

"ஏன் இவங்களை எல்லாம் ஹோட்டலில் விடறீங்க..? இப்போ தான் நியூஸ் பார்த்தோம். பேமிலி இங்க வர வேண்டாமா..?" என யாரோ கத்த, நால்வர் கவனமும் அந்த பக்கம் திரும்பியது.

கத்தியவன் சிவதேவ்வை காண்பித்து தான் கத்தி கொண்டிருந்தான்.

அதை பார்த்ததுமே சிவதேவ் முகம் இறுகி விட, "ஹலோ மிஸ்டர், உங்களுக்கு என்ன தெரியும்..?" என காவியா எகிறி கொண்டு எழுந்து விட்டாள்.

சிவதேவ் தான் அவள் கையை வேகமாக பிடித்தான்.

"அவங்களுக்கு உண்மையாவே ஒன்னும் தெரியாது ஸ்ரீ. ப்ளீஸ். கத்தினால் இன்னும் அசிங்கமாகிடும். உட்காரு." என அவன் மென்குரலில் கூற, அவனுக்காக மட்டுமே அவள் அமர்ந்தாள்.

"நா.. நான் போறேன்.. நீங்க வாங்க.." என்றவன் கார் சாவியை கூட வாங்காமல் வேகமாக நகர்ந்து விட்டான்.

"சிவா இரு" என கத்திய விஷ்ணு,

"சுகா பில் பே பண்ணிட்டு வா" என்றுவிட்டு நண்பன் பின்னால் ஓட, காவியாவும் சுகந்திக்கு கண் காண்பித்து விட்டு ஓடினாள்.

வெளியே வந்தவன் அப்போது தான் கார் சாவி இல்லாதது உணர்ந்து எரிச்சலுடன் தரையை உதைக்க, அவனை நோக்கி வந்துகொண்டிருந்த விஷ்ணு, கையில் இருந்த சாவியை வைத்து காரை திறந்து விட்டான்.

கார் திறந்த நொடி எதுவும் யோசிக்காமல், சிவதேவ் உள்ளே ஏறி அமர்ந்து விட்டான்.

அவன் பின்னால் காவியா ஏறி விட, சுகந்தியும் வந்ததும் காரை எடுத்தனர்.

நேராக சிவதேவ் வீட்டிற்கே விஷ்ணு சென்று விட்டான்.

காவியா ஏற்கனவே ரங்கநாதன் பர்வதத்திடம் போனில் எல்லாம் சொல்லி இருந்தாள்.

மகன் நண்பர்களுடன் இருக்கிறான் என்று தெரிந்ததும் தான் அவர்களுக்கும் நிம்மதியாக இருந்தது.

தன் வீட்டில் கார் நின்றதும் இறங்கிய சிவதேவ், "காலையில் பேசிக்கலாம் டா. மூணு பேருக்கும் ரொம்ப தேங்க்ஸ். இப்போ கொஞ்சம் தனிமை வேணும்.." என்றவன் காவியாவிடம் மட்டும் கண்களாலேயே மன்னிப்பு கேட்டுவிட்டு சென்று விட்டான்.

காவியாவிற்கு அவனுடனே இருக்க வேண்டும் என்று இருந்தது தான்.

ஆனால் அப்போதைக்கு காட்சி பொருள் ஆக விருப்பமில்லாமல், அமைதியாக இருந்து விட்டாள்.

வீட்டிற்குள் வந்த சிவதேவ்வை பர்வதமும் ரங்கநாதனும் பதட்டத்துடன் தான் பார்த்தனர்.

"என்ன என்னவோ சொல்லுறாங்களே சிவா..! உனக்கு ஒன்னும் இல்லை தானே..?" மகனை ஆராய்ந்து கொண்டே பர்வதம் கேட்க,

"ஒன்னும் இல்லை மா. வெறும் புரளி. அவ்வளவு தான். அதுக்கெல்லாம் மரியாதை கொடுக்க தேவை இல்லை.." என புன்னகைத்தான் சிவதேவ்.

அவன் புன்னகை கண்களை எட்டியதா என இருவருக்கும்
சந்தேகமாக தான் இருந்தது.

"உண்மையாவே பிரெச்சனை இல்லையா சிவா..?" என ரங்கநாதனும் கேட்க,

"இல்ல பா. எல்லாம் ஓகே தான். டயர்டா மட்டும் இருக்கு.. தூங்கவா..?" என்றான் அவன்.

"சாப்பிட்டுட்டு படுக்கலாம் கண்ணா"

"இல்ல மா. வரும் வழியில் சாப்பிட்டுட்டோம்." என்றவன் அதற்க்கு மேல் நிற்காமல் தன் அறைக்கு சென்று விட்டான்.

அவன் கொஞ்சம் தெளிவாகவே பேசியதால், அவர்களும் அதிகம் பதட்டம் இல்லாமல் படுத்தனர்...

இளைப்பாறும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Int 22:

தன் அறையில் வந்து அமர்ந்த சிவதேவ் மனம், ஒரு நிலையில் இருக்கவில்லை.

நடந்து முடிந்த எதுவும் சிறிய விஷயம் இல்லை.

அதுவும் இந்த காலத்தில் மீடியா வாயை யாராலும் மூடி விட முடியாது.

இன்னும் என்ன வேண்டுமானாலும் கிளம்பும்..! ஒவ்வொருத்தரிடமும் சொல்லி புரிய வைக்கவா முடியும்..! யாரோ என்னவோ நினைக்கட்டும் என கடந்து விட அவனும் முயன்றான் தான். மனம் தான் ஒரு மாதிரி வலித்து கொண்டே இருந்தது.

கண் மூடி சோபாவில் அமர்ந்திருந்தவன், போன் அடித்த சத்தத்தில் தான் கண்ணையே திறந்தான்.

இடையில் இரண்டு மணி நேரம் எப்படி ஓடியது என்றே அவனுக்கு தெரியவில்லை.

காவியா தான் அழைத்திருந்தாள்.

"சொல்லு ஸ்ரீ" என அவன் கூற,

"கொஞ்சம் பால்கனி கதவை திற" என்றாள் அவள்.

அவள் கூற்றில் ஒன்றும் புரியாமல் எழுந்தவன், வேகமாக வந்து பால்கனி கதவை திறந்தான்.

அங்கு நின்றிருந்தவளை பார்த்தவன், "ஏய்! எப்படி டி வந்த...?" என அவளை தாண்டி பார்க்க,

"பின்பக்கம் மதில் சுவர் வேலை நடக்குதுல்ல, அதில் ஏறி குதிச்சு, அப்படியே வெளி படி வழியா ஏறி, இந்த பக்கம் சுவர் ஏறி குதிச்சு வந்தேன்.." என பெரிதாக கதை சொன்னாள் காவியா.

பின்பக்கம் மதில் சுவர் வேலை நடந்து கொண்டு தான் இருந்தது.

அன்றே முடிந்திருக்க வேண்டியது. ஒரு நாள் தாமதமாகி இருந்தது. அதை தான் காவியா உபயோகப்படுத்தி இருந்தாள்.

"எதுக்கு ஸ்ரீ இப்படி குரங்கு வேலை எல்லாம் பாக்குற..! ஒழுங்கா வாசல் பக்கம் வர வேண்டியது தான..? உன்னை யார் உள்ள விட மாட்டேன்னு சொல்ல போறா..! எதுவும் அடி படலையே..?" என்றவன் அவளை ஆராய,

"அதெல்லாம் ஒன்னும் இல்லை டா. லைட்டா அழுக்கு தான் பட்டுடுச்சு. துவைச்சுக்கலாம்.." என்றவள் பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தாள்.

"எதுக்கு இந்த திருட்டு வேல..?"

"அப்புறம் நைட் நேரம் என்னனு சொல்லிட்டு உன் ரூமுக்கு வர..! ஹாலில் உக்காந்து டீசெண்டா பேச எல்லாம் நான் ரெடியா இல்ல..!" அவளை முகத்தை சுளித்த அழகில் தன்னை அறியாமல் சிரித்தவன், அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

"இன்டீசெண்டா என்ன பண்ணனும் உனக்கு..?"

அவளை அணைத்து அவன் கேட்க, "நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்ட டா. சும்மா இப்படி உட்காந்துட்டாவது இருக்கலாமேன்னு தான் வந்தேன்." என்றாள் அவள் கிண்டலாக.

"நான் சரிப்பட்டு வர மாட்டேனா டி..! உனக்கு ரொம்ப தெரியுமோ..!" கிறக்கமாக கேட்டவன் கைகள் அவள் உடலில் அத்துமீற தொடங்க,

"எனக்கு எல்லாம் தெரியும்" என வீம்புடன் கூறியவள் குரலும் கிசுகிசுத்து தான் ஒலித்தது.

"சரிப்பட்டு வரேனா இல்லையானு பார்ப்போமா..!" என்றவன் அவள் இதழ்களை அழுத்தமாக சிறை செய்ய, அவளும் விரும்பிய அவனுடன் ஒன்றினாள்.

அவன் கவலைகளுக்கு, வலிக்கும் வடிகாலாக அவள் இதழ்களை நினைத்தான் போல். வெகு நேரம் அவன் அவளை விட்டு விலகவில்லை.

இதழ் தீண்டலில் என்ன தேடினானோ, அவன் தேடுதல் நீண்டுகொண்டே போனது.

அவள் தலையை பிடித்திருந்த அவன் கைகளில் இறுக்கமும் கூட, லேசாக வலித்தாலும் காவியா பொறுத்து கொண்டாள்.

அவளும் தன் அணைப்பை அதிகமாக்க, அவன் வேட்கை மேலும் அதிகரித்து தான் போனது.

அடுத்த நிலைக்கு அவன் செல்ல துணிந்த கடைசி நொடியில், அவன் போன் அடிக்க, சட்டென சிவதேவ் விலகி விட்டான்.

தான் செய்ய துணிந்த காரியம் நினைத்து ஒரு நிமிடம் அவனுக்கே அசிங்கமாக போய் விட்டது.

"சா.. சாரி ஸ்ரீ.." என தலை கோதி கொண்டே அவள் முகம் பார்க்காமல் அவன் கூற, அவளோ மெல்லிய சிரிப்புடன் மீண்டும் அவன் அருகில் வந்தாள்.

"நான் தானே டா..!" மென்மையாக அவள் கூற,

"இல்ல ஸ்ரீ. என் கவலைக்கு வடிகாலா உன்னை யூஸ் பண்ண பார்த்தேன். தப்பு தான். சாரி டா.." என்றவன் இப்போது தானும் அவளை அணைத்து கொண்டான்.

இந்த அணைப்பில் காமம் இருக்கவில்லை. காதல் மட்டுமே இருந்தது.

"உனக்கு என்னிடம் எல்லா உரிமையும் இருக்கு தேவ்.."

"நீ கொடுக்கும் உரிமைக்கு நான் மரியாதை தரணும் ஸ்ரீ. உனக்கு நான் எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி தான் எனக்கு நீயும் முக்கியம். தேங்க்ஸ் சொல்லி உன்னை பிரிச்சு பார்க்க முடியல டி. என் வாழ்க்கை முழுக்க உனக்காக மட்டுமே வாழனும். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் ஸ்ரீ. நீ உரிமையுடன் எனக்கு வேணும்.." அவன் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

"பண்ணிக்கலாம் டா. அதுக்கு முன்னாடி இப்போ விஷ்ணு கால் பண்ணி இருக்காரு. பேசு.." என்றவள், அவன் போனை அவனிடம் நீட்டினாள்.

அவனும் விஷ்ணுவிடம் பேசினான்.

விஷ்ணு தூங்கும் படி வலியுறுத்த, சிவதேவ் தெளிவாக பதில் பேசியதில் அவனும் நிம்மதியுடன் போனை வைத்தான்.

"தூங்கலாமா..?" அவன் வைத்ததுமே காவியா கேட்க,

"நீ கிளம்பு ஸ்ரீ. வாசல் வழியாவே போகலாம். குரங்கு சேட்டை எல்லாம் வேண்டாம். வா.." என எழுந்தான் சிவதேவ்.

அவன் கூற்றில் எழுந்துகொள்ளாமல் அமர்ந்திருந்தவள், "போலாம் டா. கொஞ்ச நேரம் கழிச்சு போறேன். இப்போ நீ வா." என அவனை
மீண்டும் இழுத்து அமர வைத்தாள்.

"நேரம் ஆகுது ஸ்ரீ. நீ தூங்க வேண்டாமா..?"

"தூங்கிக்கலாம்" என்றவள், இறங்கி கீழே அமர, அவனும் அவளை புரியாமல் பார்த்து கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்.

"படு தேவ்" என்றவள் தன் மடியை காட்ட,

"தூங்கிடுவேன் ஸ்ரீ. அப்புறம் நீ தூங்க முடியாது." என்றான் அவன் யோசனையாக.

"நீ படு" என்றவள் அவனை பிடித்து இழுக்க, அவளுக்கு சிரமம் வைக்காமல் அவன் படுத்து கொண்டான்.

அவனுக்கு கசக்கவா போகிறது..! காவியா மெலிதாக அவன் தலை கோதி கொடுக்க, சில நிமிடங்களில் அவன் கண்கள் மூடி விட்டது.

எப்படி தூங்கினான் என்று கேட்டால் அவனுக்கு ஒன்றும் தெரியாது.

ஆனால் அவள் மடி சுகமோ! அவள் வாசமோ! அன்போ! காதலோ! ஏதோ ஒன்று அவன் மனதை அமைதிப்படுத்தி இருந்தது.

இறுக்கம் தளர்ந்து உறங்குபவனை வாஞ்சையுடன் பார்த்திருந்த காவியா, தானும் அப்படியே கண்ணை மூடி சுவரில் சாய்ந்து விட்டாள்.

கிட்டத்தட்ட விடியற் காலை மூன்று மணிக்கு தான் சிவதேவ் எழுந்தான்.

அவன் காவியாவை பார்க்க, அவளோ அமர்ந்த வாக்கிலே உறங்கி கொண்டிருந்தாள்.

அவளை பார்த்தவன் மனம் பெரிதாக நெகிழ்ந்து போயிற்று.

அந்த நொடி அவளை தன் வாழ்வில் தந்த கடவுளுக்கு அவன் மனதார நன்றி கூறினான்.

காவியா அருகில் அமர்ந்தவன், அவள் தூக்கம் கலையாதவாறு அவளை தன் மடியில் படுக்க வைத்து கொண்டான்.

மேலும் ஒரு மணி நேரம் சென்றே காவியா எழுந்தாள்.

"எப்போ எழுந்த தேவ்..?" என கேட்டுக்கொண்டே அவள் அமர,

"இப்போ தான் டா. நீ தூங்கு. அதுக்குள்ள எங்க எழுந்துக்கற..?" என்றவன் மீண்டும் அவளை படுக்க வைக்க முயன்றான்.

"இல்ல டா. திருட்டு தனமா வந்திருக்கேன். விடியறதுக்குள்ள கிளம்பறேன். பத்து மணிக்கு மேல் கிளம்பி வா. வெளிய மீட் பண்ணிக்கலாம்." என்றவள் எழுந்து விட, அவனும் உடன் எழுந்தான்.

"நான் டிராப் பண்ணுறேன் ஸ்ரீ"

"என் கார் இருக்கு டா. சத்தம் இல்லாமல் போவோம்.." என்றவள் முகத்தை மட்டும் அலம்பி கொண்டு கிளம்பி விட்டாள்.

பர்வதம், ரங்கநாதன் இன்னும் எழுந்துகொள்ளவில்லை என்பதால், அவள் சுலபமாக கிளம்பி விட்டாள்.

சிவதேவ் கார் வரை வந்து விட்டான்.

முன்பக்கம் செக்யூரிட்டி இருந்ததால், பின் பக்க இருந்த வழியாக தான் இருவரும் வந்தனர்.

"இப்படி திருரட்டுத்தனமா வருவது கூட ஜாலியா இருக்கு டா" என காவியா கூற,

"தேவையே இல்லாத திருட்டுத்தனம் ஸ்ரீ.." என்றான் சிவதேவ் மென் புன்னகையுடன்.

"ஓகே. ஓகே. போய் ரெஸ்ட் எடு. பை.." என்றவள், அவனுக்கு ஒரு அவசர முத்தத்தை கொடுத்துவிட்டு கிளம்பி விட்டாள்.

அந்த நேரம் எல்லாம் நன்றாக தான் சென்றது.

ஆனால் மீண்டும் சிவதேவ் ஷூட்டிங் செல்ல தொடங்கிய போது தான், அடுத்த பிரெச்சனை ஆரம்பம் ஆனது.

அவன் மேல் பழிபோட்ட பெண்ணை படத்தை விட்டு நீக்கி விட்டார்கள் தான்.

அவனை பற்றி சரியாக தெரியாத சில புது முக நடிகர்கள், அவன் முதுகுக்கு பின்னால் பேச தான் செய்தனர்.

அதிலும் சில புது பெண்கள் அவனை பார்த்ததும் வேகமாக விலகிய போது, மனதில் சுள்ளென குத்திய வலியை அவனால் தாங்க தான் முடியவில்லை.

அன்றைய காட்சியில் அவனுடன் நடிக்க வேண்டிய துணை நடிகை, ஷாட் எடுத்த போதே அவனை பயத்துடன் பார்க்க, அதற்கு மேல் சிவதேவ்வால் நடிக்க முடியவில்லை.

வழக்கத்திற்கு மாறாக அவன் ஐந்து டேக் மேல் எடுத்துவிட, இயக்குனர் டேக் எடுப்பதை நிறுத்தி விட்டார்.

"என்ன ஆச்சு சிவா உங்களுக்கு..? என்ன பிரெச்சனை..?" என அவர் நேரடியாக கேட்க,

"சாரி சார்" என்றான் சிவதேவ்.

"இட்ஸ் ஓகே சிவா. பட் என்ன ப்ராப்லம்..?"

"ஒன்னும் இல்ல சார். ஒரு டென் மினிட்ஸ் கொடுங்க ப்ளீஸ்..!" என்றவன் போனை எடுத்து கொண்டு நகர்ந்து விட்டான்.

அவன் நேராக அழைத்தது காவியாவிற்கு தான்.

"சொல்லு தேவ்" என அவள் தொடங்க,

"ஏதாவது பேசு டி" என்றான் அவன்.

அவன் குரலில் இருந்தே ஏதோ சரி இல்லை என புரிந்து கொண்டவள், "என்ன ஆச்சுன்னு சொல்லுறையா தேவ்..?" என்றாள்.

தன் நிலையை மறைக்காமல் கூறியவன், "ஐ நீட் ஹெல்ப் ஸ்ரீ. ஏதாவது பேசு. நான் சரியாகிடுவேன்.." என நிறுத்த, அந்த பக்கம் கலங்கி போனவளோ தன் கலக்கத்தை அவனிடம் காட்டவில்லை.

அவள் கலகலப்பாக ஏதோ பேச, அவன் மனமும் மாறியது.

"நடிச்சுட்டு வந்து கூப்பிடறேன் ஸ்ரீ" என்றுவிட்டு போனவன், இந்த முறை எதையும் மனதில் எடுத்துக்கொள்ளாமல் ஒழுங்காக நடித்தான்.

அடுத்து வந்த நாட்களில் இது தொடர் கதை ஆகி போனது.

அவன் தேற்றிக்கொள்வதும், யாராவது அந்த சம்பவத்தை நினைவுபடுத்துவதுமாகவே சென்று கொண்டிருந்தது.

இடையில் அவன் மேல் பொய் பழி போட்ட பெண்ணிற்கு தண்டனை கிடைத்துவிட்டதாக நியூஸ் வந்தது.

அதற்கும் சிலர் அவனை தான் இகழ்ந்தனர். பணம் படைத்தவன் ஒன்றும் தெரியாத பெண்ணின் வாழ்க்கையில் விளையாண்டு விட்டான் என்றெல்லாம் பரப்பினர்.

சிவதேவ் முழுதாக தெளிவடையாமலே தான் பல நாள் சுற்றி கொண்டிருந்தான்.

அவன் நடிக்க ஆரம்பித்த படத்தில் அவன் போர்ஷன்ஸ் முடிந்ததும் , ஒரு இடைவெளி அவனுக்கு கிடைத்தது.

சரியாக அதே நேரம் காவியாவிற்கும் இடைவெளி கிடைத்திருந்தது.

அன்று காவியா சிவதேவ் வீட்டிற்கே வந்து விட்டாள்.

பொது இடங்களுக்கு சென்றால் யாராவது ஏதாவது பேசி காயப்படுத்தி விடுவார்களோ என்ற பயம் சிவதேவ்வ்விற்கு லேசாக இருந்தது.

அது புரிந்து காவியா இப்போதெல்லாம் அவனை பார்க்க வீட்டிற்கே வந்து விடுகிறாள்.

பர்வதம் ரங்கநாதனிடம் சில நிமிடங்கள் கலகலப்பாக பேசியவள், அவர்களிடம் கூறிக்கொண்டு சிவதேவ்வை தேடி அவன் அறைக்கு வந்தாள்.

பொதுவாக விடியற் காலையில் எழுந்து விடுபவன், அன்று பத்து மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை.

அறை கதவை வெறுமென அவன் சாத்தி வைத்திருந்ததால், அவளும் திறந்து கொண்டு உள்ளே வந்து விட்டாள்.

ஒரு கையால் முகத்தை மூடி கொண்டு அவன் தூங்கி கொண்டிருக்க, அவன் தலை அருகில் அமர்ந்தாள் காவியா.

அவள் வரவை உணர்ந்தானோ என்னவோ, சிவதேவ் சட்டென விழித்து விட்டான்.

"தூங்கு தேவ். சாரி, டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?" என காவியா மென்மையாக கேட்க,

ஒரு நொடி கதவை பார்த்தவன், "இல்ல டா. சும்மா தான் படுத்திருந்தேன்.." என்றுவிட்டு அவள் மடியில் தலை வைத்து கொண்டான்.

"எப்போ எழுந்து ப்ரெஷ் ஆவதா உத்தேசம்..?"

"நீ சொன்னா உடனே ஆகிடலாம்.."

"ம்ம். போ ப்ரெஷ் ஆகிட்டு வா.." என காவியா கூற, அவனும் சிரித்து கொண்டே எழுந்து சென்றான்.

மீண்டும் வந்தவன் சோபாவில் அமர, காவியாவும் அதற்குள் கீழே சென்று அவனுக்கு காஃபி எடுத்து வந்திருந்தாள்.

"இவ்வளவு நேரம் தூங்க மாட்டியே தேவ்..?" என கேட்டுக்கொண்டே அவள் காப்பியை நீட்ட,

"நைட் தூங்க லேட் ஆகிடுச்சு ஸ்ரீ." என்றான் அவன்.

"ஏன்..?"

"ப்ச். தெரியல.." என அவன் தோளை குலுக்க, அவன் மனநிலை அவளுக்கு புரிந்தது.

"எங்கயாவது போலாமா தேவ்..?"

"எங்க போகணும்..?"

"சும்மா வெளிய போலாம். பாண்டிச்சேரி போலாமா..?"

"எங்க வேணும்னாலும் போலாம் ஸ்ரீ. ஆனா நீயும் நானும் சேர்ந்து மீடியாவில் மாட்ட கூடாது. இப்போ இருக்கும் நிலைமையில் இஷ்டத்துக்கு இன்னொரு கதை கட்டுவாங்க.."

"அதுவும் சரி தான் தனி. தனியா போய்டலாம். நைட் சேர்ந்து சுத்துவோம்."

"ம்ம் ஓகே. நான் முதலில் ரூம் புக் பண்ணிட்டு போறேன். யாருக்கும் சொல்ல கூடாதுனு சொல்லிடறேன். நீ நாளைக்கு கிளம்பி வா. ஷூட்டிங் பர்பஸ்ஸ்னு சொல்லு. நான் இருப்பது தெரிந்த மாதிரி காட்டிக்காத. யாருக்கும் தெரியாமல் திருட்டு லவ் பண்ணுவோம்.." என சிவதேவ் கண்ணடிக்க,

"எப்பவும் போல்" என்றாள் அவளும் குதூகலமாக.

அவள் புன்னகை அவனையும் ஒட்டி கொண்டது..

இளைப்பாறும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Int 23:

திட்டமிட்டது போலவே சிவதேவ் முதலில் கிளம்பி சென்று விட்டான்.

அவன் பின்னால் ஒரு கார் விடாமல் தொடர்ந்ததை அவன் கவனிக்கவில்லை.

நேராக தான் புக் செய்திருந்த ஹோட்டலுக்கு வந்தவன், அங்கு செக் இன் செய்து விட்டு காவியாவிற்கு அழைத்தான்.

"வந்துட்டேன் ஸ்ரீ" என சிவதேவ் கூற,

"பேசாமல் ரெஸ்ட் எடு தேவ். நான் ஈவினிங் வந்துர்றேன். நைட் நாம மீட் பண்ணலாம்." என்றாள் அவள்.

"ம்ம். இப்போ என்ன பண்ணுற..?"

"சமையல் தான்"

"என்ன ஸ்பெஷல்..?"

"சொல்ல மாட்டேனே..!"

"அப்போ எனக்காக ஏதாவது பண்ணுரையா..?"

"சொல்ல மாட்டேன்னு சொன்னால், டீசெண்டா அடுத்த கேள்வி கேட்க கூடாது மிஸ்டர் சிவதேவ்.."

அவள் அழுத்தமாக கூறியதில், அவன் சிரித்து கொண்டான்.

"நீ சொன்னால் சரி மா" பவ்யமாக அவன் கூறியதில், அவள் உதட்டிலும் புன்னகை தோன்றியது.

மேலும் சிறிது நேரம் இருவரும் வேறு கதைகள் பேசி கொண்டிருந்தனர்.

ஒருவாறு வேறு யாரோ அழைக்கவும் தான் சிவதேவ் போனை வைத்தான்.

சிறிது நேரம் தூங்கி எழுந்தவன், பின் வெளியே கிளம்பி சென்றான்.

பக்கத்தில் இருந்த ஒரு கடைக்கு சென்றவன், காவியாவிற்காக தங்க ஜிமிக்கி ஒன்று வாங்கினான்.

பிரச்சனை எல்லாம் நடக்கும் முன், ஒரு ஜிமிக்கி வாங்க வேண்டும் என்று அவள் கூறி கொண்டிருந்தாள்.

அது இப்போது நினைவு வந்ததால் தான் வாங்கி கொண்டான்.

அதோடு அவளுக்கு பிடித்த சாக்லேட், ரோஸ் என அனைத்தும் வாங்கி கொண்டு தான் அவன் மீண்டும் ஹோட்டலுக்கு வந்தான்.

தங்கி இருந்த ஹோட்டலிலேயே அவன் இரவு உணவை முடித்த போது, தானும் வந்து சேர்ந்து விட்டதாக காவியா போன் செய்தாள்.

"சரியா ஒரு மணிக்கு கீழே இருக்கும் கார் பார்க்கிங் வந்துடு தேவ். நானும் வந்துர்றேன்.." என அவள் கூற, "ஓகே டா. கொஞ்ச நேரம் தூங்கு." என்றான் அவன்.

"நீயும் தான். ஒழுங்கா தூங்கி எழுந்து வா. அப்புறம் ஊர் சுத்தும் போது தூங்கி வழிஞ்சா, உதை வாங்குவ.."

"அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் டி" என சிரித்து கொண்டே தான் சிவதேவ் போனை வைத்தான்.

அவள் சொன்னது போலவே அவனுக்கு சரியாக தூக்கம் வரவில்லை தான்.

ஆனால் அது கவலையில் இல்லை.

அவளை பார்க்க வேண்டும் என அவன் மனம் ஒவ்வொரு நொடியும் ஆர்ப்பரித்தது. தன்னவளை தேடி தேடி அலைந்த மனம் நிம்மதியான தூக்கத்தை அவனுக்கு விட்டுவைக்கவில்லை.

அரைகுறையாக தூங்கி எழுந்தவன், ஒரு மணிக்கு சரியாக கீழே வந்து விட்டான்.

சுற்றிலும் ஒரு சத்தம் இல்லை. அந்த இடம் அத்தனை நிசப்தமாக இருந்தது.

சில நொடிகளில் காவியாவும் வேகமாக வந்து காரில் ஏறினாள்.

"என்ன அவசரம் ஸ்ரீ..?" என சிவதேவ் கடிய,

"யாரும் வந்துர கூடாதுல்ல..! இனி ஓகே.." என்றவள் வாகாக அமர்ந்து கொண்டாள்.

அந்த கரை பொறுத்தவரை வெளியில் இருந்து பார்த்தால் உள்ளுக்குள் ஒன்றும் தெரியாது.

அதனால் இருவரும் நிம்மதியாகவே அமர்ந்தனர்.

காவியா அமர்ந்ததும் அவளை பிடித்து இழுத்த சிவதேவ், எதுவும் பேசாமல் அவள் இதழ்களை சிறை செய்ய, ஒரு நொடி அதிர்ந்தவள், பின் சுதாரித்து அவனுடன் ஒன்றி போனாள்.

சில நிமிடங்களில் விலகியவன், "சாரி டி" என்று குறும்பு சிரிப்புடன் கூற,

"டேய் நீ கிஸ் பண்ணுறது கூட ஓகே. சாரி கேட்டேனா கொன்னுடுவேன் பாத்துக்கோ..!" என்றாள் கோபம் போல்.

அவள் கோபத்தில் அவன் சத்தமாக சிரித்து விட, அவளும் அமைதியாக அவன் புன்னகையை ரசித்தாள்.

தான் வாங்கி வந்திருந்த ஜிமிக்கி, ரோஸ், சாக்கலேட் எல்லாம் அவளிடம் கொடுத்து விட்டே சிவதேவ் காரை எடுத்தான்.

"அட! ஜிமிக்கி வாங்கினயா..! நானே மறந்துட்டேன்..." என்றவள் உடனடியாக அதை போட்டு பார்த்தாள்.

"ஞாபகம் வந்துச்சு ஸ்ரீ. அதான் உடனே போய் வாங்கிட்டேன். பிடிச்சிருக்கா..?" என அவன் கேட்க,

"ஓ! சூப்பரா இருக்கு..!" என்றவள்,

"நீ சொல்லு. அழகா இருக்கேனா..?" என தலையை இருபக்கமும் ஆட்டி கேட்க,

"உனக்கு என்ன குறைச்சல் ஸ்ரீ! அழகா இருக்க.." என்றவன் அவள் தலையை மென்மையாக கோதி கொடுத்தான்.

எந்த இலக்கும் இல்லாமல் தான் சிவதேவ் காரை ஓட்டினான்.

"எங்க டா போறோம்..?" என ஒரு கட்டத்தில் காவியா கேட்க,

"தெரியல ஸ்ரீ. சும்மா ஓட்டறேன். வழி பார்த்துட்டு தான் வரேன். அப்படியே திரும்பி போய்டலாம்." என்றான் சிவதேவ்.

"ம்ம். கொஞ்சம் ஓரமா நிறுத்து.." என அவள் கூற, அவனும் நிறுத்தினான்.

தான் கொண்டு வந்திருந்த பேக்கை எடுத்தவள், அதில் இருந்து ஒரு டப்பாவை எடுத்தாள்.

அதை திறந்து அவள் நீட்ட, அதில் இருந்த ப்ரவ்னியை சிவதேவ் எடுத்து கொண்டான்.

"எந்த கடையில் வாங்கின...? இவ்வளவு சுமாரா இருக்கு..!" கண்களில் மட்டுமே குறும்பை தேக்கி அவன் கேட்க,

"நல்லா இல்லையா..?" என்றவள் முகம் சுருங்கி போனது.

"ஏய் லூசு, சும்மா சொன்னேன். அதுக்குள்ள முகத்தை தூக்கணுமா..! சூப்பரா இருக்கு.. என் ஸ்ரீ எனக்காக ஆசையா பண்ணியது, நல்லா இல்லாமல் போகுமா என்ன..!" கண்ணடித்து அவன் கேட்க,

"எப்படி கண்டு பிடிச்ச?" என்றாள் அவள் ஆச்சர்யத்துடன்.

"எனக்கு தெரியாதா ஸ்ரீ..!" என்றவன் ஒரு பீஸை அவளுக்கும் ஊட்ட,

"ம்ம். நல்லா தான் வந்திருக்கு.." என்றாள் அவளும் சப்பு கொட்டி கொண்டே.

அதை முழுதாக உண்டு முடித்ததும் தான் சிவதேவ் மீண்டும் காரை எடுத்தான்.

அங்கிருந்து சிறிது தூரம் தான் வந்திருப்பான்.

திடீரென்று எதிரில் ஒரு பெரிய வேன் இவர்கள் காரை நோக்கி முழு வேகத்துடன் வந்தது.

காவியாவிடம் ஏதோ பேசி சிரித்து கொண்டிருந்த சிவதேவ், எதிரில் வந்த வேனை கவனித்து விட்டான்.

தவறான திசையில் அந்த வண்டி முழு வேகத்துடன் வருவதை கவனித்தவன், நொடியில் சுதாரித்து வண்டியை திருப்ப முயன்றான்.

அதே நேரம் வேன் கிட்டத்தட்ட மோத வந்து விட, கடைசி நொடியில் காவியா பக்கம் இருந்த கதவை அவன் திறக்க முயன்ற போது, பெரும் சத்தத்துடன் அந்த வேன் அவன் காரை பக்கவாட்டில் இடித்து தள்ளி விட்டது.

பக்கத்தில் இருந்த சிறிய பள்ளத்தில் கார் உருண்டு செல்ல, காவியா பக்கம் இருந்த கதவு திறந்து, அவள் தள்ளி ஒரு பக்கம் போய் விழுந்து விட்டாள்.

எக்குத்தப்பாக மாட்டி இருந்த சிவதேவ்விற்கு தான், பலமாக பல அடிகள்.

ஒருவாறு எங்கேயோ விழுந்து கார் நிற்க, சிவதேவ் உயிர் போகும் வலியுடன் சுயநினைவை இலக்காமலே இருந்தான்.

அத்தனை வலியிலும் அவன் கண்கள் காவியாவை தான் தேடியது.

உடலை அசைக்க அவன் முயற்சிக்க, அதே நேரம், "இவன் இன்னும் சாகலை சார்" என யாரோ கத்தியது அவன் காதில் மெலிதாக விழுந்தது.

அடுத்த நிமிடம் யாரோ இருவர் அவனை அழுத்தமாக பிடித்து வெளியே இழுத்தனர்.

ஏற்கனவே அடிபட்டிருந்த உடலில் வலி உயிர் போனது.

கத்தும் தெம்பு தான் அவனுக்கு இருக்கவில்லை.

தரையில் வீசப்பட்ட வேகத்தில், லேசாக சிவதேவ்விற்கு சுயநினைவு வந்தது.

அதே நேரம் வேறு பக்கம் விழுந்திருந்த காவியாவும் மெதுவாக எழுந்தாள்.

அவளுக்கு வெளி காயங்கள் தான் அதிகமாக இருந்தது.

மிகவும் முயன்று மெதுவாக எழுந்தவள், "ஆஆஆ..." என சத்தமாக கேட்ட தன்னவன் அலறலில் பயந்து வேகமாக நடக்க முயன்றாள்.

ஒரேடியாக கால் ஒத்துழைக்காமல் படுத்த, ஒரு மரத்தை பிடித்து கொண்டு நின்றவளுக்கு, சற்றே தள்ளி இருந்த ஆட்கள் தெரிந்தனர்.

உற்று பார்த்த போது ராகவனை மட்டும் அவளுக்கு அடையாளம் தெரிந்தது.

அவள் பார்த்து கொண்டிருந்த போதே, தன் கையில் இருந்த கட்டையால் சிவதேவ் பின்னந்தலையில் பலமாக ஒரு அடி அடித்தான் ராகவன்.

அதை பார்த்ததும் கத்த வாய் திறந்தவள், சட்டென வாயை மூடி கொண்டாள்.

அவளும் மாட்டிக்கொண்டாள் அவனை காப்பாற்ற வழியே இல்லாமல் போய் விடும் என புரிந்து, நொடியில் சுதாரித்து அமைதியாகி விட்டாள்.

சிவதேவ் கடைசி கட்ட நினைவுகளில் தான் இருந்தான்.

யாரையும் எதிர்க்கும் அளவு அவனிடம் தெம்பு மிச்சம் இருக்கவில்லை.

இருந்த கொஞ்ச நஞ்ச நினைவிலும், அவன் காவியாவை மட்டும் தான் அமைதியாக தேடி கொண்டிருந்தான்.

"நீ ஒழிஞ்சே தொலைய மாட்டியா டா..? எவ்ளோ கஷ்டப்பட்டு பிளான் பண்ணி உன்னை அந்த பொண்ணு கேசில் மாட்டி விட்டேன். ஜெயிலுக்கு போய்டுவேன்னு பார்த்தா, தப்பிச்சு தொலைச்சுட்ட. அதுவும் நீ கெட்ட கேட்டுக்கு உன்னை காவியா காப்பாத்தி இருக்கா. உன்னால் என் மார்க்கெட்டே போச்சு டா. செத்து தொலை.." என்றவன் மீண்டும் ஓங்கி அடிக்க, அவன் கூற்றை கேட்ட அதிர்ச்சியுடன் சிவதேவ் தன் கடைசி சொட்டு நினைவை இழந்து விட்டான்.

காவியாவிற்கும் பெரும் அதிர்ச்சி தான்.

இப்படி ஒரு வில்லன் இருந்ததே அவர்களுக்கு தெரியாமல் போய் விட்டதே..!

"இவனை தூக்கி அந்த ட்ரேயின் ட்ராக்கில் போடுங்க டா" என ராகவன் கூற,

"செத்துட்டானான்னு பாரு டா" என்றான் ஒருவன்.

"சரி பா" என ராகவன் கூறியதும் தான், உடன் அவன் தந்தையும் இருந்ததை காவியா கவனித்தாள்.

"மூச்சு இல்ல பா. இன்னும் கொஞ்ச நேரத்தில் ட்ரெயின் வரும். இங்க யாரும் வர மாட்டாங்க. போட்டுட்டு போய்டலாம். நம்மை யாராவது பார்த்தால் வம்பு.." என்றான் ராகவன்.

அவன் சொன்னது போலவே அடியாட்கள் சிவதேவ்வை தூக்கி ட்ரெக்கில் போட்டுவிட்டு வந்தனர்.

சுற்றிலும் பார்த்து விட்டு அவர்கள் அனைவரும் கிளம்பி விட, அதுவரை மறைவில் இருந்த காவியா வேகமாக வெளியே வந்தாள்.

கார்கள் கிளம்பி ஒரு பக்கம் சென்று விட, கடைசி நொடியில் அவர்களுக்கு வந்த பயம் மட்டுமே அவளுக்கு சாதகமாக அமைந்தது.

முக்கியமாக காரில் அவள் இருந்தது யாருக்கும் தெரியாமல் போனது நல்லதாக போனது.

நேராக சிவதேவ்விடம் ஓடியவள், "தேவ்.. தேவ்..." என அவனை பிடித்து உலுக்கி கொண்டே கதற, அதே நேரம் தூரத்தில் ட்ரெயின் வரும் சத்தம் கேட்டது.

அதில் மேலும் பதறிபோனவளுக்கு, மனம் விட்டு அழ கூட நேரம் இல்லை என புரிந்தது.

வேகமாக எழுந்தவள், தன் முழு பலம் கொண்டு அவனை இழுத்தாள்.

கஷ்டமாக இருந்தது தான். ஒரு இன்ச் அவனை அசைக்கவே, அவள் உடல் முழுவதும் வலித்தது தான். ஆனால் விட்டுக்கொடுக்க அவள் தயாராக இல்லை. உயிரே போனாலும், அது தன்னவனை காப்பாற்றிய பின் தான் போக வேண்டும் என அவள் உறுதியாக இருந்தாள்.

மெதுமெதுவாக அவனை பிடித்து இழுத்தவள், சரியாக ட்ரெயின் நெருங்கும் போது எப்படியோ அவனை இழுத்து வெளியே போட்டு விட்டாள்.

அடுத்த நொடி ட்ரெயின் முழு சத்தத்துடன் அந்த இடத்தை கடந்தது.

இங்கு சிவதேவ்வை இழுத்து போட்டிருந்தவளோ, பெரிதாக மூச்சு வாங்க அவன் அருகில் அமர்ந்தாள்.

"தேவ் எழுந்துக்கோ டா. உனக்கு ஒன்னும் இல்ல. நான் இருக்கேன் டா. ப்ளீஸ், எழுந்துக்கோ.." என உதட்டை கடித்து கதறியவள், தன்னால் முடிந்தவரை அவனை பிடித்து உலுக்கினாள்.

"ப்ளீஸ் தேவ். உனக்கு ஒன்னும் இல்ல தேவ். ஒன்னும் ஆகாது. நீ இல்லைனா நானும் இருக்க மாட்டேன்னு தெரியும் தானே டா..! விட்டுறாத டா.. ப்ளீஸ்.."

கண்ணில் விடாமல் வழிந்த கண்ணீரையோ, ஒரேடியாக அடைத்த தொண்டையையோ, உடல் முழுவதும் ஏற்பட்டிருந்தது வலியையோ அவள் பொருட்படுத்தவே இல்லை.

அவள் கவனம் முழுவதும் அவன் மீது தான் இருந்தது.

அவள் போராட்டத்தின் விளைவாக, ஒரே ஒரு நொடி அவன் அசைய, அவன் உயிருடன் இருப்பது தெரிந்ததும் தான் அவள் மூச்சே சீராக வந்தது.

அடுத்த நொடி அவனை விட்டுவிட்டு எழுந்தவள், வேகமாக கார் விழுந்து கிடந்திருந்த இடத்திற்கு ஓடினாள்.

காரின் பின் சீட்டில் இருந்த தன் ஹேண்ட் பேக்கிற்குள் ஒரு போன் எப்போதும் அவள் தனியாக வைத்திருப்பாள்.

அதை தேடி தான் ஓடினாள்.

நசுங்கி கிடந்த காரில் கை அடிபடுவதை பொருட்படுத்தாமல் பேக்கை தேடி எடுத்தவள், போனை எடுத்து பார்த்தாள்.

நல்லவேளையாக அது உபயோகிக்கும் நிலையில் தான் இருந்தது.

ஒரு நொடி யோசித்தவள், தனக்கு மிகவும் தெரிந்த குடும்ப மருத்துவரான தங்கராஜ்ஜிற்கே அழைத்து விட்டாள்.

அவரை பல வருடமாக அவளுக்கு தெரியும்.

அதிலும் நடிகை ஆன பின், டொனேஷன் என்னும் பெயரில் அவர் மருத்துவமனைக்கு பல லட்சங்களை அவள் கொடுத்திருக்கிறாள்.

அந்த பணம் தான் இப்போது வேலை செய்தது.

அவரிடம் விஷயத்தை கூறியவள் கூடவே, ஒரு உதவியும் கேட்டாள்.

"சிவதேவ் உயிரோடு இருப்பது இப்போ வெளிய தெரிய கூடாது டாக்டர். மீண்டும் கொலை முயற்சி பண்ண நிறைய வாய்ப்பிருக்கு. தேவ் வயசில் ஒரு பிணம் மட்டும் ஏற்பாடு பண்ணுங்க டாக்டர். ப்ளீஸ். எவ்வளவு செலவானாலும் நான் பாத்துக்கறேன்.."

வேக வேகமாக அவள் கூற, "என்ன மா விளையாடறையா..! எவ்வளவு பெரிய விஷயத்தை சுலபமா சொல்லிட்டு இருக்க..!" என அவர் கத்த தான் செய்தார்.

"ஒரு உயிரை காப்பாத்த தான் கேட்கறேன் டாக்டர். இப்போ அவன் பிழைச்சுட்டான்னு தெரிஞ்சா, திரும்ப காப்பாத்தவே முடியாது. புரிஞ்சுக்கோங்க டாக்டர். ப்ளீஸ் கெஞ்சி கேட்கறேன்.." என்றவள், மேலும் சில நொடிகள் கெஞ்சியதில் அவரும் ஒத்து கொண்டார்.

"முதலில் உடனே பக்கத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ் அனுப்பறேன். அப்புறம் இதுக்கு ஏற்பாடு பண்ணுறேன்.." என்றுவிட்டு போனை வைத்தார் அவர்.

காவியா மீண்டும் சிவதேவ் அருகில் வந்து அமர்ந்தாள்.

அவனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டவள், அழுகையுடன் ஏதோ பேச்சு கொடுத்துக்கொண்டே தான் இருந்தாள்.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து விட, அதில் அவனை ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

தங்கராஜ் கூறி இருந்ததால் ரகசியமாகவே அவனுக்கு முதலுதவி கொடுக்கபட்டது.

இன்னொரு பக்கம் சிவதேவ் உடைகள் மற்றும் பொருட்களுடன், ஒரு பிணமும் அதே ட்ரெக்கில் முகம் சிதைந்த நிலையில் விடியற் காலைக்குள் போட்டு விட்டனர்.

தங்கராஜிற்கு தெரிந்த ஆம்புலன்ஸ் டிரைவரே உதவினார்.

மொத்தமே காவியா, தங்கராஜ், அந்த டிரைவர், சிகிச்சை கொடுத்த மருத்துவர் தவிர வேறு யாருக்கும் சிவதேவ் உயிருடன் இருந்தது தெரியாது.

மார்ச்சுரி செக்கியூரிட்டிக்கு காசு கொடுத்து விஷயத்தை கூறாமல் அவன் வாயை அடைத்து விட்டனர்.

மறுநாள் காலை சிவதேவ் இறந்துவிட்டதாக செய்தி பரவ, இங்கு பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு காவியா சிவதேவ் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

விபத்து என கேசை முடித்து விட்டனர்.

ஒரேடியாக கதறி துடித்த பர்வதம் ரங்கநாதனை பார்த்து தான் அவளுக்கு குற்ற உணர்வாக இருந்தது.

என்ன செய்ய! இப்போதைக்கு அவளால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அவர்களிடம் சொல்லி அவர்கள் அசந்து மறந்து வாயை விட்டால் கூட, ஆபத்தாகி விடுமே.

பர்வதம் மயங்கி விட, "அவரை பார்த்துக்கொள்ளவேனும் நீங்க நல்லா இருக்கணும்" என்றே அவள் ரங்கநாதனை தேற்றி வைத்தாள்.

சிவதேவ் கொஞ்சம் சரியானதும் அவனை தங்கராஜ் கோவையில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு மாற்றி விட்டார்.

அங்கு தங்கராஜிற்கு தெரிந்த சித்தா க்ளினிக் ஒன்று இருந்தது.

அங்கு தான் அதிகம் யாரும் வரமாட்டார்கள் என்பதால், அங்கு மாற்றினார்.

அங்கு தான் வனராஜனும் மூலிகை மருந்துகள் கொடுப்பார்.

அந்த மருந்துகள் சிவதேவ்விற்கு நன்றாக வேலை செய்ய, அதுவும் கொடுத்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து கண் விழித்தவனுக்கு, ஒன்றும் நினைவில்லை.

காவியா போய் நின்ற போதும், அவளை புரியாத பார்வை தான் பார்த்தான்.

அவன் விழித்த போது உடன் நந்தினி இருந்ததால், அவளுடன் கொஞ்சம் பழகி இருந்தவன், "இது யாரு நந்தினி..?" என காவியாவை காண்பித்து கேட்க,

"உங்களை காப்பாத்தினவங்க" என்று மட்டுமே அவள் கூறினாள்.

காவியாவிற்கோ ஒன்றும் புரியவில்லை.

ஓடி சென்று அவனை அணைக்க அவள் கைகள் பரபரக்க தான் செய்தது.

ஆனால் சிவதேவ் அருகிலேயே நந்தினியும் வனராஜனும் நின்றிருந்ததால், அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவள் தங்கராஜிடம் கேட்க, அவரோ, "இப்போதைக்கு எதுவும் நினைவு படுத்த வேண்டாம். அவன் தாங்க மாட்டான்." என்று கூறி அவள் கையை கட்டிப்போட்டு விட்டார்.

சில நாட்களில் குடும்ப பிரெச்சனை காரணமாக தங்கராஜ் கோவையிலேயே புது மருத்துவமனை திறந்து அங்கேயே தங்கி விட்டார்.

காவியாவிற்கும் அதுவும் பெரிய நிம்மதியாக தான் இருந்தது.

அவள் சிவதேவ்விற்கு எப்போது சரியாகும் என காத்திருக்க, அடுத்த முறை அவள் சென்ற போது நந்தினி அவள் தலையில் பெரிய இடியை இறக்க காத்திருந்தாள்..

இளைப்பாறும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Int 24:

சமீபமாக சிவதேவ்வை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து, வனராஜன் வீட்டிற்கே அழைத்து சென்றிருந்தனர்.

தங்கராஜ் சிவதேவ்விற்கு உடல் நிலை சரியாகிவிட்டது என்று கூறியதும், காவியா தான் அவனை மலை கிராமத்திற்கு அழைத்து செல்ல கூறி விட்டாள்.

அவன் யார் கண்ணிலும் இப்போதைக்கு படாமல் இருப்பது தான் நல்லது என்று தான் அவள் கூறினாள்.

ஆனால் அதன் பின்விளைவை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

சிவதேவ் கிராமத்திற்கு சென்று சில நாட்கள் கழித்து தான் காவியாவாள் அங்கு செல்ல முடிந்தது.

தங்கராஜ் செக் அப் முடித்த பின், காவியா சிவதேவ் அருகில் சென்றாள்.

"தேவ் இப்போ எப்படி இருக்கு..?" என அவள் கேட்க,

"ம்ம் ஓகே.. நீங்க யாரு..? உங்களுக்கு எப்படி என்னை தெரியும்..? நான் யாரு..? இது தான் என் ஊரா..? எனக்கு பேரன்ட்ஸ் இல்லையா..?" என வரிசையாக கேள்விகளை அடுக்கினான் அவன்.

அவளுக்கோ அவனை விட்டு இரண்டு அடி தள்ளி நின்று கொண்டிருப்பதே பெரும் கொடுமையாக இருந்தது.

அவனுடன் இருந்தாலே அவன் கை வளைவிற்குள் இருந்து தானே அவளுக்கு பழக்கம்.

"தேவ்.." என அவள் ஏதோ சொல்ல வர,

"உங்களை ஸ்ட்ரையின் பண்ண கூடாதுனு டாக்டர் சொன்னாரு சிவா. எல்லாம் பொறுமையா சொல்லுறாராம். இப்போ ரெஸ்ட் எடுப்பீங்களாம்.." என்று கூறிக்கொண்டே நந்தினி வந்து விட்டாள்.

அவளுக்கு சிவதேவ் நடிகன் என்று தெரியும் தான். ஆனால் இப்போதைய அவன் நிலை வைத்து மட்டுமே நந்தினி அவனை பார்த்திருந்தாள்.

எதுவும் நினைவில்லாமல் சாதாரணமாக அவர்களுடன் பொருந்தி போன சிவதேவிடம், அவள் மனம் முழுதாக விழுந்திருந்தது.

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என நந்தினி காவியாவிடம் கூற,

"ம்ம். வா.." என்றுவிட்டு காவியா வெளியே வந்தாள்.

அப்போதும் அவள் சிவதேவ்வை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே தான் நடந்தாள்.

வெளியே தனியாக ஒரு இடத்தில் வந்து நின்றதும், "நீங்க சிவாவை லவ் பண்ணுறீங்களா..?" என்று தான் முதல் கேள்வியே நந்தினி கேட்டாள்.

அவள் கேள்வியில் அவளை முகம் சுருங்க பார்த்த காவியா, "ஏன் அப்படி கேக்கற..?" என்று யோசனையுடன் கேட்க, "பதில் சொல்லுங்களேன்" என்றாள் நந்தினி.

"ம்ஹ்ம். நீ முதலில் காரணத்தை சொல்லு.." வெகு அழுத்தமாக பேசிய காவியா முன், நந்தினியின் அழுத்தம் நிற்கவில்லை.

"ஓகே. நானே சொல்லுறேன். ஒருவேளை உங்களுக்கு காதல் கீதல்ன்னு ஏதாவது இருந்தால், அப்படியே மறந்துடுங்க. இப்போ நானும் சிவாவும் லவ் பண்ணுறோம். கொஞ்ச நாளில் கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவரே சொல்லி இருக்காரு. பழைய வாழ்க்கை எதுவா இருந்தாலும் வேண்டாம்னு சொல்லிட்டாரு. டாக்டரும் அவருக்கு ஞாபகம் வருவது கஷ்டம்னு தான் சொன்னாரு. நீங்களும் அவருக்கு வெளிய ஆபத்து இருக்குனு சொல்லுறீங்க. அவரை இப்படியே விட்டுருங்க. நாங்க இங்க நிம்மதியா வாழ்ந்துக்கறோம்.." பெரிதாக நந்தினி பேசி முடிக்க,

"தேவ் உன்னை விரும்பறானா..?" என்று மட்டுமே காவியா கேட்டாள்.

உடனடியாக அந்த சிறு பெண் பேச்சை நம்ப அவள் தயாராக இல்லை.

அதே நேரம் மனம் ஒரு பக்கம் அவள் வார்த்தைகளில் பெரும் அடியும் வாங்கி இருந்தது தான். அதில் மாற்று இல்லை..!

"இவ்ளோ சொல்லியும் இப்படி கேக்கறீங்க..! சிவா என்னை தான் நேசிக்கிறார். என்னை மட்டும் தான்.." அழுத்தமாக வந்து விழுந்த நந்தினி வார்த்தையில், காவியா தடுமாறிய போதே, சிவதேவ் "நந்தினி மா" என அழைத்தான்.

அவன் குரலில் நந்தினி அடித்து பிடித்துக்கொண்டு ஓட, காவியாவோ அதே இடத்தில் உறைந்து நின்று அவர்களை பார்த்து கொண்டிருந்தாள்.

வேகமாக வந்த நந்தினியை பார்த்து மெலிதாக புன்னகைத்த சிவதேவ், அவள் கையை பிடித்து அவளை நிறுத்தினான்.

சாதாரணமாக அந்த செயலை பார்த்திருந்தால் காவியாவிற்கு ஒன்றும் தோன்றி இருக்காது தான். ஆனால் நந்தினி காதல் என்று கூறிய பின், அவன் செயல்கள் அனைத்தையும் அவள் மனம் அதனுடன் ஒப்பிட தொடங்கி விட்டது.

உள்ளே சென்ற நந்தினி அவன் உடைகளை அவனிடம் எடுத்து வந்து கொடுத்தாள்.

குளிக்க கேட்டிருப்பான் போல். அவள் ஏதோ கூற, அவனோ புன்னகை மாறாமல் அவள் தலையில் கொட்டிவிட்டு சென்றான்.

காவியாவோ அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்னும் நிலையில் தான் இருந்தாள்.

சிவதேவ் சென்றதும் காவியா அருகில் வந்த நந்தினி, "எங்களை இப்படியே விட்டுடுங்க காவியா. சிவா என்கூட நிம்மதியா சந்தோசமா இருப்பாரு. இடையில் ஏதாவது குழப்பம் பண்ணினீங்கனா, அவர் தான் கஷ்டப்படுவாரு." என்றாள் நிதானமாக.

காவியா எதுவும் பேசவில்லை. அவள் மனம் பெரும் குழப்பத்தில் தவித்து கொண்டிருந்தது.

எதுவும் பேசும் நிலையில் அவள் இருக்கவில்லை.

குளித்துவிட்டு வந்த சிவதேவ் மீண்டும் எதற்கோ, "நந்தினி" என அழைத்து வைக்க, 'ஸ்ரீ.. ஸ்ரீ..' என அழைத்துக்கொண்டிருந்தவன் வாயில் இருந்து அத்தனை முறை வேறு பெண் பெயரை கேட்கவும், அவள் மனம் பலமாக அடிவாங்கி போனது.

நந்தினி பொய் சொல்லி இருப்பாள் என யோசிக்க முடியாதது போல் சூழ்நிலையும் அமைந்து போனது.

காவியா சிவதேவ்வை விரும்புகிறாளோ என்ற சந்தேகம் நந்தினிக்கு இருந்தது.

அவள் மனதில் சிவதேவ் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தான். அதனால் தான் காவியாவிற்கு ஆசை இருந்தாலும் அது வளர கூடாது என்று நினைத்து நந்தினி பொய் கூறி விட்டாள்.

மற்றபடி காவியா சிவதேவ் வாழ்க்கை பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாதே..!

கடைசி நப்பாசையாக காவியா தங்கராஜிடம் சிவதேவ்விற்கு சரியாகுமா என்றும் கேட்டு பார்த்தாள்.

அவரும், "எதுவும் உறுதியா சொல்ல முடியாது மா. அப்படியே இருந்து விடவும் வாய்ப்பிருக்கு. பார்க்கலாம்" என்று மட்டுமே கூறி அவளது கொஞ்சநஞ்ச மனதையும் கொன்று விட்டிருந்தார்.

வீட்டிற்கு வரும் வரை வெறுமையாக இருந்த காவியா, தன் அறைக்கு வந்ததும் கதவை சாற்றிவிட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

ஷவரை திறந்து கொண்டு அதன் அடியில் நின்றவள் மனம், கொஞ்சம் கொஞ்சமாக மரணித்து கொண்டிருந்தது.

அவள் தேவ் இல்லாமல் அவளுக்கு என்ன வாழ்க்கை இருந்து விட போகிறது..!

தப்பு செய்து விட்டோமோ என அவள் மனம் பெரிதாக அடித்து கொண்டது.

அவனுக்கு கொஞ்சம் சரியானதும் அவனை அழைத்து கொண்டு எங்காவது கண்காணாத இடத்திற்கு சென்றிருக்கலாமோ..! இப்படி யாரையும் நம்பி விட்டிருக்க கூடாதோ..!

மொத்தமாக அவனை இழக்கும் நிலை வரும் என அவள் கனவிலும் நினைக்கவில்லையே..!

'நந்தினி' என்ற அவன் குரல் அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க, காதை அழுத்தமாக மூடி அதை குறைக்க முயன்றாள் காவியா.

அந்தோ பரிதாபம்! அவள் மனக்குரல் அதிகரித்து அவளை வதைக்க தான் செய்தது.

அவன் இல்லாத வாழ்வை யோசிக்க முடியாமல் அவள் உடலும் மனமும் நிலையில்லாமல் திணற, "ஐயோ! முடியல.. அம்மாமாமாமா..." என தலையில் அடித்துக்கொண்டு கதறியவள், சரிந்து அமர்ந்து விட்டாள்.

ராஜலட்சுமி கோவிலுக்கு போய் இருந்ததால், அவளை தொந்தரவு செய்யவும் யாரும் உடனடியாக இருக்கவில்லை.

எத்தனை நேரம் அழுது கொண்டிருந்தாளோ! அவளுக்கு ஒன்றும் தெரியாது.

ஒரு கட்டத்தில் கண்ணீரும் வற்றி, மனமும் வெறுத்து போனது.

மெதுவாக எழுந்தவள், கொஞ்சமும் ஒத்துழைக்காத உடலை வருத்திக்கொண்டு தான் வெளியே வந்தாள்.

உடை மாற்றியவள் சிவதேவ் கொடுத்த அந்த சிறிய பொம்மையை தன் காபிபோர்டில் இருந்து எடுத்து கொண்டு, கட்டிலில் வந்து அமர்ந்தாள்.

கண் எல்லாம் சிவந்து, முடியில் இருந்த ஈரத்தால் தலை வலி வந்திருந்தது.

எதையும் முழுதாக உணரும் நிலையில் தான் அவள் இருக்கவில்லை.

"நான் இனி என்ன பண்ண தேவ்..! நீ இல்லாமல் என்ன டா வாழுறது..! இப்போவே செத்துரனும் போல இருக்கு தேவ்..! உனக்கு என்னிக்காவது நினைவு வந்தால் நீயும் தாங்குவாயா டா..? அதற்குள் உனக்கு கல்யாணம் ஆகி குழந்தை எல்லாம் பிறந்துடும். என்னை மறப்பது மட்டும் தான் உனக்கு ஒரே வழியா இருக்கும். ஆனா நான் இப்படியே இருந்தால் உன்னாலும் அது முடியாது..! அம்மா பாவம் டா. நான் இல்லாம என்ன பண்ணுவாங்க..! ஒரேடியா போய்ட்டா உன்னை தள்ளி இருந்து பார்க்கும் சந்தோசம் கூட இல்லாம போய்டுமே. உயிர் போகும் வரை உன் முகமாவது பார்த்துட்டு இருக்கணும் தேவ். உன்னை யார் விரும்பினா என்ன! என் அளவு உன்னை நேசிக்க யாராலும் முடியாது. என் காதல் எதுக்காகவும் யாருக்காகவும் மாறாது டா. மாறவே மாறாது." ஒரு வித அழுத்தத்துடன் கூறி கொண்டவள், அந்த பொம்மையை கைகளுக்குள் அழுத்தமாக அணைத்து கொண்டாள்.

மெதுவாக தான் அவளுக்கு ராகவன் நினைவு வந்தது.

அவள் வாழ்க்கை ஒன்றும் இல்லை என்று ஆகி விட்டது. ஆனால் அவளவனை கொல்ல நினைத்தவனை சும்மா விடுவதா..! அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்காமல் அவள் வாழ்க்கை முடிந்து விட கூடாது.

ராகவன் சிவதேவ்வை அடித்த அடி கண்முன் தோன்ற, அவள் உடல் பெரும் கோபத்துடன் இறுகி போனது.

அந்த நொடி தன்னவன் பட்ட வலிகள் அனைத்தையும் இரு மடங்காக ராகவனுக்கு கொடுக்க அவள் முடிவு செய்தாள்.

அவளாகவே தனக்கு கதை சொன்ன ஒரு இயக்கினரிடம் ராகவனை நாயகனாக போட சொன்னாள்..

அந்த படப்பிடிப்பில் இருவரும் பழக, அவள் எதிர்பார்த்தது போலவே ராகவன் அவன் வளையில் விழுந்தான்.

அவன் காதல் சொன்ன போது, அவள் மறுக்காமல் ஏற்று கொண்டாள்.

திருமணத்திற்கு முன் அவன் மேல் பொய் பழி போட அவள் விரும்பவில்லை.

அவள் கன்னிப்பெண் என்று தெரிந்தால், கேஸ் நிற்காதே..!

அதனாலேயே திருமணம் செய்து அவனுடன் வாழ்ந்த பின்பே, அவன் மேல் கேஸ் கொடுத்தாள்.

அவனை போலீஸ் அர்ரெஸ்ட் செய்த நொடி, அவமானப்பட்டு அவள் தேவ் தவித்த தவிப்பு தான் அவள் கண்முன் வந்தது.

முழுதாக அவனை ஜெயிலில் தள்ளிய பின் தான், அவளுக்கு நிம்மதி ஆனது.

அவள் எதிர்பார்க்காத ஒரே விஷயம் மீண்டும் சிவதேவ் வந்தது தான்.

அவள் தன் வாழ்க்கை முடிந்தது என்று நினைத்திருந்த போது, அவள் உயிரானவனே வந்து எதுவும் முடியவில்லை என்கிறான்.

அவனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்திருந்தால், அவள் மறுக்கவா போகிறாள்..!

அவள் நிலை தான் மேலும் மோசமாகி இருந்ததே.

எந்த முடிவும் எடுக்க முடியாமல் பெரிதாக திணறி கொண்டிருந்தாள் பாவையவள்..

இளைப்பாறும்.


 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Imt 25:

நினைவுகளின் பிடியில் இருந்து மீண்ட இருவருக்குமே மனதில் பாரம் தான் ஏறி போனது.

யார் யார் சுயநலத்திற்கோ அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டதே..!

இனியும் எந்த தவறும் நடக்க கூடாது என்பதில் சிவதேவ் உறுதியாக இருந்தான்.

எப்போதும் எதிலும் உறுதியாக இருக்கும் காவியா தான், மனதிற்கும் மூளைக்கும் இடையில் சிக்கி தவித்து கொண்டிருந்தாள்.

விஷ்ணு காவியாவை பார்க்க வந்திருந்தான்.

சிறிது நேரம் பொதுவாக பேசிய பின், அடுத்த படம் அவள் நடிக்க வேண்டும் என்று அவன் கேட்க, அவளோ உடனடியாக பதில் சொல்லாமல் யோசித்தாள்.

"நான் ஊரை விட்டு போய்டலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன் விஷ்ணு. எந்த படமும் கமிட் ஆகலை. இனியும் ஆகணுமான்னு யோசிக்கறேன். வேண்டாமே..!" குழப்பத்துடன் அவள் கூற,

"இப்போ ஓடி ஒழியும் படி என்ன ஆகிடுச்சு காவியா..? தப்பு பண்ணினவனுக்கு ஊரறிய தண்டனை வாங்கி கொடுத்த பொண்ணு நீதானான்னு எனக்கே சந்தேகமா இருக்கு.." விஷ்ணு சற்றே கோபத்துடன் தான் பேசினான்.

அவள் பயம் எல்லாம் அவளவனை நினைத்து தான். எதையும் விஷ்ணுவிடம் அவளால் தெளிவாக சொல்ல முடியவில்லை.

அவள் கையை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்த போது, அவள் எண்ணங்களுக்கு காரணமானவனே வந்து நின்றான்.

"என்ன டா ஊரை விட்டு ஓட போராளாமா..?" என கேட்டுக்கொண்டே சிவதேவ் வர,

"ஆமா டா" என்றான் விஷ்ணு சலிப்புடன்.

அவன் குரல் கேட்டு வேலையாள் வர, "ஒரு காஃபி கா" என்று கூறிவிட்டு காவியா அருகில் சென்று அமர்ந்தான்.

அனிச்சை செயலாக அவள் சற்றே தள்ளி அமர, அதையும் சிவதேவ் கவனித்து கொண்டான்.

"அம்மா எங்க..?" என சிவதேவ் கேட்க,

"தூங்கறாங்க" என்றாள் காவியா.

"ம்ம். எங்க ஓட போற..?"

"ஓடவெல்லாம் இல்ல தேவ். ஒரு வேலை கேட்டிருந்தேன். தரேன்னு சொல்லிட்டாங்க. அதான் போய்டலாம்னு பாக்கறேன். இனி நடிக்க முடியும்னு தோணலை." தெளிவாக பேச தான் அவள் முயன்றாள்.

"ஓஹோ..! ஏனோ..?" நக்கலாக கேட்டவன், சோபாவில் ஆயாசமாக சாய்ந்து அமர்ந்தான்.

"என் இஷ்டம்" சட்டென அவள் கூறிவிட, சிவதேவ் மெலிதாக சிரித்து கொண்டான்.

அதற்குள் காஃபி வர, அதையும் வாங்கி கொண்டவன், அதை குடித்துக்கொண்டே தான் பேசினான்.

"நீ எப்போ இவ்வளவு கோழையான ஸ்ரீ..?"

"கொஞ்ச நாளா தான்" மனதில் இருந்ததை அவள் பட்டென கூறிவிட, அவனும் அலட்சியம் மறைந்து அவளை நெகிழ்வுடன் பார்த்தான்.

"ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்க்கை துரத்தும் தான் ஸ்ரீ. அதுக்காக பயந்து ஓடிட்டா, சரியா போய்டுமா..? எவ்வளவு பெரிய பிரெச்சனையில் இருந்து என்னை சுலபமா மீட்டு எடுத்தவ நீ. உனக்கு நான் சொல்லனுமா டி..! உன்னை இப்படி பார்க்கவே முடியல ஸ்ரீ. உனக்கு ஏதோ கஷ்டம் இருக்குனு புரியுது. எதுனாலும் எதிர்த்து போராடுவோம் ஸ்ரீ. எல்லாமே சரி ஆகிடும். சரி பண்ணிக்கலாம்.." பேசிக்கொண்டே வந்தவன், அவள் கையை தன் ஒரு கையால் மென்மையாக பிடித்து, மற்றைய கையால் அவள் முகத்தை பிடித்து தன்னை பார்க்க வைத்தான்.

"நீ இல்லாமல் நான் என்ன டி பண்ணுவேன்..! செத்தவனை எதுக்கு போராடி காப்பித்தன..? இப்படி விட்டுட்டு போய் மறுபடியும் கொலை பண்ணவா..? உனக்கு உண்மையாவே புரியலையா டி! ஒவ்வொன்னும் நான் சொல்லனுமா! எதுவுமே மாறல ஸ்ரீ. மாறவும் மாறாது. உனக்கு வேணும்னா என் ஞாபகம் மட்டும் போதுமானதா இருக்கலாம். எனக்கு ஞாபகம் எல்லாம் பத்தாது. நீ வேணும். உயிரும் உணர்வுமா நீ வேணும். நீ என் வாழ்க்கையில் இல்லாமல் போனால் நானே இல்லாமல் போய்டுவேன். எல்லாம் தெரிஞ்சும் போக தான் போறியா..? யோசிச்சுக்கோ. முடிவு நீயே எடு. என்ன ஆனாலும் நான் வேண்டாம்னு நினைச்சேன்னா கிளம்பு. ஒரே விஷயம் தான். உண்மையா நாம் செத்துட்டேன்னு செய்தி வந்தா, தாங்க தயாரா இருந்துக்கோ."

அவள் கண்களை பார்த்து பேசிக்கொண்டிருந்தவன், அதற்கு மேல் அவளை விட்டுவிட்டான்.

அவள் கண்கள் கலங்குவதை அவனால் பார்க்க முடியவில்லை.

அங்கு சில நிமிடங்கள் அமைதி தான் நிலவியது.

காவியா ஏதோ யோசித்தாள்.

மற்ற இரு ஆண்களும் அமைதியாகி விட்டனர்.

சிவதேவ் கூறிய எதுவும் அவளுக்கு தெரியாமல் இல்லை. எல்லாம் அவளுக்கு தெரியும் தான். குழம்பி இருந்த அவள் மனதிற்கு ஒரு தெளிவு கொடுக்க தான் அவன் மீண்டும் அனைத்தும் எடுத்து கூறினான்.

அவன் காதலில் ஒரு மாற்றமும் இல்லை. அவள் தான் மாற வேண்டும். அவன் ஸ்ரீயாக மாற வேண்டும். அவளால் முடியுமா..! அந்த கேள்வி தான் அவளை குடைந்தது.

அவள் திரும்பி சிவதேவ்வை பார்க்க, அவனும் அவளை தான் பார்த்தான்.

அவன் கண்களில் அத்தனை காதல். அவன் பார்வையில் அத்தனை ஆறுதல். அவன் கைகளுக்குள் சென்றுவிட்டாள் எல்லாம் சரியாகிவிடுமோ என்று தான் அந்த நொடி அவளுக்கு தோன்றியது.

அதற்கு முன் அவள் பிரெச்சனை சரியாக வேண்டுமே..! அவளுக்கு கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. அதை சிவதேவ் நிச்சயம் தருவான். அவன் ஒதுங்கி அமர்ந்திருப்பதே அதுக்கு சாட்சி.

ஓரளவு தெளிந்தவள், "என் கூட இவன் தான் ஹீரோவா பண்ண போறானா..?" என சிவதேவ்வை காண்பித்து கேட்க,

"அஃப்கோர்ஸ்" என்றான் சிவதேவ்.

அவள் ஒற்றை கேள்வியில் அவன் மனம் துள்ளி குதித்திருந்தது.

"கதை நல்லா இருந்தா தான் பண்ணுவேன்" என அவள் பேரம் பேசியதில், விஷ்ணுவும் சிரித்து விட்டான்.

"எல்லாம் நேரம் மா. கதை சொல்லுறேன். ரெண்டு பேரும் சேர்ந்தே கேளுங்க.." என்றவன், சொல்ல தொடங்கினான்.

இரண்டாம் பாதியில் அவள் கர்ப்பமாக இருப்பது போலவே கதை நகர்ந்ததில், அவளுக்கு இருந்த சிறு குழப்பமும் தீர்ந்தது.

கதையும் அருமையாக இருந்தது. அதில் எல்லாம் விஷ்ணுவை அடித்துக்கொள்ள முடியாது.

"நல்லா இருக்கு விஷ்ணு. நான் பண்ணுறேன்.." என்றவள் சிவதேவ்வை திரும்பி பார்க்க,

"தேவியார் மனம் இறங்கிட்டாங்க. நல்ல நேரத்தில் புக் பண்ணிடு.." என்றான் சிவதேவ் கிண்டலாக.

"எல்லாம் பிளான் பண்ணி பண்ணிட்டு நக்கல் வேற..!" என அவள் நொடித்துக்கொள்ள,

"உங்களுக்கு நடுவில் என்னை உருட்டாதீங்க டா. நாளைக்கு பிரோடியூசேர் பார்க்க போறோம். ரெடியா இருங்க. பூஜையை போட்டுட்டு படத்தை ஆரம்பிப்போம். நான் இப்போ கிளம்பறேன்." என்றவன் எழுந்து விட்டான்.

காவியாவும் சிவதேவ்வும் வாசல் வரை வந்து அவனை வழியனுப்பி விட்டு அங்கேயே நின்றனர்.

"எல்லாம் உன் வேலை தான..?" சிவதேவ்வை பார்த்து காவியா கேட்க,

"ஆமா. இதில் இன்னுமா உனக்கு சந்தேகம்..!" என தோளை குலுக்கினான் அவன்.

"எ.. என்னால் பழைய ஸ்ரீயா முழுசா மாற முடியுமான்னு தெரியல தேவ்.." மென் குரலில் அவள் கூற,

"மாற வைக்காமல் நானும் ஓய மாட்டேன் ஸ்ரீ" என்றான் அவனும் அழுத்தமாக.

"ஆல் தி பெஸ்ட்" என அவள் மெலிதாக புன்னகைக்க, அது அவனுக்கும் ஒட்டி கொண்டது.

"வரேன் டா.. போய் ரெஸ்ட் எடு.." என்றவன், மெலிதாக அவள் தலை கோதிவிட்டு கிளம்பி விட்டான்.

அவளோ அவன் சென்ற பின்பும் அவன் சென்ற திசையை பார்த்து கொண்டே நின்றிருந்தாள்.

அவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.

சிவதேவ் அவளை விட போவதில்லை. அவளாலும் அவனை பிரிந்து இருக்க முடிய போவதில்லை..!

அவனிடம் வீராப்பாக ஊரை விட்டு போவதாக கூறினாள் தான். ஆனால் சில நொடிகள் அவன் கண்களை பார்த்ததிலேயே, அவள் முடிவு மாறி விட்டது.

அவனை வருத்திவிட்டு அவள் என்ன நிம்மதியாக இருந்து விட போகிறாள்..!

அவள் இல்லாமல் அவனும் தான் எப்படி மகிழ்ச்சியாக இருப்பான்..! இப்போது அவளுக்கு இருப்பது அவள் ஏற்படுத்திக்கொண்ட பிரெச்சனை. அதற்காக அவனை வருத்துவதா..! அது அவளால் என்றுமே முடியாது.

அவள் தேவ் என்றுமே மகிழ்ச்சியாக மட்டும் தான் இருக்க வேண்டும். அதற்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள்.

அந்த நொடி தேவின் ஸ்ரீ மீண்டிருந்தாள்.

தன் மனதை எப்படியேனும் சரி செய்து அவன் ஸ்ரீயாக முழுதாக மாறிவிட வேண்டும் என அவள் மனம் தெளிவாக முடிவெடுத்தது.

அதற்கு அவள் முதலில் செய்ய வேண்டிய விஷயம் ஒரு மனநல மருத்துவரை பார்ப்பது.

உடனடியாக காவியா மருத்துவமனைக்கு அழைத்து அப்பாயின்மென்ட் போட்டு விட்டாள்.

***************

அடுத்த வந்த நாட்களில் காவியா கோபப்படுவது குறைந்திருந்ததை சிவதேவ்வும் கவனித்து கொண்டு தான் இருந்தான்.

தினமும் அவளை சென்று பார்த்து அவளுடன் நேரம் செலவழிப்பதை அவன் வாடிக்கையாக வைத்திருந்தான்.

அவளால் முன்பு போல் கலகலப்பாக பேச முடியாவிட்டாலும், கோபப்பட்டு கத்தாமல் சாதாரணமாக இருக்க முயன்றாள்.

அவன் அன்பை உணர முயன்றாள். தன் அன்பை காண்பிக்கவும் முயன்றாள்.

ஒரு முறை சிவதேவ் விளையாட்டு போல் அவளிடம் கேட்டும் விட்டான்.

"என்ன மேடம் இப்போ எல்லாம் கோபம் வருவதில்லையே..! எதுவும் தியான க்ளாசில் சேர்ந்திருக்கீங்களா..?" அவள் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்த போது அவன் கேட்க,

"கோவப்படணும்னு ஆசையா இருந்தா சொல்லு. நல்லா திட்டறேன்." என்றாள் அவளும் சிறு புன்னகையுடன்.

"ஐய்யோ! வேண்டாம் மா. திரும்ப முதலில் இருந்து முடியாது. இது எவ்வளவோ மேல்.." என்றான் அவன் பயந்தவன் போல்.

அவன் செயலில் அவள் புன்னகை மேலும் விரிந்தது.

ராஜலக்ஷ்மி வந்து இருவரையும் உண்ண அழைக்க, இருவரும் எழுந்து சென்றனர்.

சாப்பிட அமர்ந்த காவியாவாள் நிம்மதியாக சாப்பிட தான் முடியவில்லை.

இப்போதெல்லாம் அதிகம் குமட்டி தொலைத்தது.

நாலு வாய் சாப்பிட்டவள், வேகமாக எழுந்து ஓடி விட, சிவதேவ்வும் அவள் பின்னாலேயே ஓடினான்.

வாஷ் பேசினில் அவள் வாந்தி எடுக்க, சிவதேவ் அவள் தலையை அழுத்தமாக பிடித்து கொண்டான்.

உண்ட உணவு மொத்தமும் வெளியே வந்து விட, காவியா சோர்ந்து தான் போனாள்.

அவள் கையை விடாமல் சிவதேவ் அழைத்து வந்தான்.

அதற்குள் ராஜலக்ஷ்மி ஜூஸ் போட்டு எடுத்து வந்திருந்தார்.

"இதையாவது குடி மா" என அவர் கொடுக்க,

"வேண்டாமே மா" என்றாள் காவியா சோர்வுடன்.

"குடுங்க மா. நான் குடிக்க வைக்கிறேன்.." என்ற சிவதேவ் ஜூஸ் கிளாஸை கையில் வாங்கிக்கொள்ள, இனி அவன் பார்த்துக்கொள்வான் என்ற நிம்மதியுடன் அவர் நகர்ந்து விட்டார்.

நிதானமாக ஒவ்வொரு வாயாக சிவதேவ் ஜூஸை கொடுக்க, காவியாவும் மெதுவாக குடித்தாள்.

ஒரு கட்டத்தில் அவன் முகத்தையே காவியா பார்த்து கொண்டிருக்க, "என்ன டி..?" என்றான் அவன்.

"நமக்கு கல்யாணம் ஆகி உன் குழந்தைக்கு நீ இப்படி எல்லாம் என்னை தாங்கி இருக்கணும் தேவ். ப்ச் எல்லாம் போச்சு..!" மறைக்க முடியாத வேதனையுடன் அவள் கூற, அவள் தலையை மெலிதாக கோதி கொடுத்தான் சிவதேவ்.

"உனக்கு எத்தனை தடவை தான் சொல்லுறது ஸ்ரீ..! இது நம்ம குழந்தை தான். மத்த எண்ணங்களை தயவு செஞ்சு விட்டுரு டி. அது நல்லதுக்கில்லை. நீ எப்போதில் இருந்து இப்படி தாலி செண்டிமெண்ட் எல்லாம் பாக்க ஆரம்பிச்ச..! நல்லாவே இல்ல..!" விளையாட்டு போல் அவன் முகம் சுருக்கியதில், அவள் மெலிதாக சிரித்தாள்.

"நானும் மனுஷி தானே தேவ்..!"

"ம்ஹ்ம். நீ என் தேவதை.."

"கிரிஞ்சா பேசாத டா"

"நீ பேசறதை விடவா..?"

அவன் கேள்வியில் இருவருக்குமே சிரிப்பு வந்து விட்டது.

பேசிக்கொண்டே ஜூஸையும் அவன் கொடுத்து முடித்திருந்தான்.

"கொஞ்ச நேரம் போய் தூங்கு. நான் வெளியில் போயிட்டு வரேன்.." என சிவதேவ் எழுந்து விட,

"தூக்கம் வரல" என கூறிக்கொண்டே காவியாவும் எழுந்தாள்.

"அப்போ ஏதாவது படம் பாரு. இல்ல புக்ஸ் படி. கொஞ்சம் வேலை இருக்கு டா. முடிச்சுட்டு வந்துறேன்."

"ம்ம். ஓகே பை.." என்றுவிட்டு அவள் உள்ளே சென்றுவிட, சிவதேவ்வும் ஒரு பெருமூச்சுடன் சமையல் அறைக்குள் சென்றான்.

ஜூஸ் டம்பளரை அவன் சிங்கிள் வைக்க, "நான் ஒன்னு கேக்கவா தம்பி..?" என்றார் ராஜலக்ஷ்மி.

"சொல்லுங்க மா"

"காவியாவை நீங்க கல்யாணம் பண்ணிடுவீங்க தானே..! அவ சந்தோசமா ஒரு வாழ்க்கை வாழனும் தம்பி. எனக்கு பயமா இருக்கு."

"உங்க பொண்ணு என் மனைவி ஆகி வருஷக்கணக்காச்சு மா. அவளால் என்னை விட்டு எங்கயும் போக முடியாது. ஊர் கண்ணுக்கு தான் கல்யாணம். அதுவும் என் ஸ்ரீ சம்மதத்தோட சீக்கிரமே நடக்கும். நீங்க கவலையே படாதீங்க." அழுத்தம் திருத்தமாக அவன் கூற, அவரும் நிம்மதியுடன் தன் வேலையை தொடர்ந்தார்..

இளைப்பாறும்..


 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Int 26:

படப்பிடிப்பு தொடங்கி இருந்தது.

ஒரு பக்கம் காவியாவும் சிவதேவ்வும் மீண்டும் இனைந்து நடிப்பதில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருந்தாலும், மற்றோரு பக்கம் இஷ்டத்திற்கு கதை கட்டும் கூட்டமும் இருக்க தான் செய்தது.

இந்த முறை இருவருமே எதையும் கண்டுகொள்ளவில்லை.

காவியாவிற்கு தான் அடிக்கடி வாந்தி தலைசுத்தல் என உடல் படுத்தி கொண்டிருந்தது.

ஷூட்டிங்கில் அனைவருமே தெரிந்தவர்கள் என்பதால், அவள் உடல் நிலை புரிந்து நடந்து கொண்டனர்.

அன்றும் அப்படி தான். நல்ல வெயிலில் ஒரு ஷாட் முடித்துவிட்டு கேரவனுக்குள் வந்து அமர்ந்திருந்த காவியாவிற்கு, தலை சுற்றி கொண்டு மயக்கம் வரும் போல் ஆகி விட்டது.

அமைதியாக அங்கிருந்த சோபாவில் படுத்துவிட்டாள்.

அடுத்த சில நொடிகளில் தன் ஷாட் முடித்துவிட்டு சிவதேவ் அவளை தேடி வந்து விட்டான்.

"என்ன பண்ணுது ஸ்ரீ..?" என அவள் அருகில் அமர்ந்து சிவதேவ் கேட்க,

"தல சுத்துது டா" என்றாள் அவள் கண்ணை திறக்காமலே.

"சரி படு. நான் ஜூஸ் வாங்கிட்டு வரேன்.." என்றவன், அவள் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டான்.

அவன் மீண்டும் வந்த போது காவியா நன்றாக உறங்கி இருந்தாள்.

விஷ்ணு அவள் கேரவன் வாசலில் தான் நின்றிருந்தான்.

அவனை பார்த்ததும், "என்ன ஆச்சு டா..?" என சிவதேவ் கேட்க,

"காவியா தூங்கறா சிவா. அடுத்த சீன் எடுக்கணும். இன்னும் மூன்று மணி நேரத்தில் லைட் போய்டும். அதான் என்ன பண்ணுறதுனு யோசிக்கறேன். இந்த ஏரியா பெர்மிஸ்ஸின் இன்னியோட முடியுது." என்றான் அவன் யோசனையுடன்.

அவன் நிலை சிவதேவ்விற்கு புரிந்தது.

"ஒரு ஒன் ஹவர் மட்டும் விட்டுருவோம் டா. தூங்கட்டும். அப்புறம் வேணா எழுப்பிக்கலாம். அதுவரை மத்த சீன்ஸ் எடுப்போம்." என சிவதேவ் கூறிவிட,

"ம்ம். ஓகே சிவா. வா.." என்றுவிட்டு நகர்ந்தான் விஷ்ணு.

சிவதேவ்வும் தான் வாங்கி வந்த ஜுஸை கேரவேனுக்குள் வைத்துவிட்டு, சென்று நடித்தான்.

ஒரு மணி நேரம் சென்றும் காவியா எழுந்து வரவில்லை.

சிவதேவ் தான் அவளை தேடி சென்றான்.

அவளும் தூக்கம் களையும் நிலையில் இருப்பதை கவனித்தவன், அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

"ஸ்ரீ எழுந்துக்கறயா..?" என அவன் மென்மையாக கேட்க,

"ம்ஹ்ம். முடியாது போ டா.." என்றவள், தூக்கத்திலேயே அவன் மடியில் படுத்து விட, அவனுக்கு தான் ஒரு நொடி உடல் அதிர்ந்து போனது.

எத்தனை நாட்கள் ஆயிற்று அவள் ஸ்பரிசத்தை உணர்ந்து..!

அவள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து ஒதுங்கியே இருந்தான். இன்று அவளே நெருங்கவும் அவளை அள்ளி அணைத்துக்கொள்ள அவன் கைகள் பரபரக்க தான் செய்தது.

ஒரு பெருமூச்செடுத்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டவன், மென்மையாக அவள் தலையை கோதி கொடுத்தான்.

"ரெண்டு சீன் தான் இருக்கு ஸ்ரீ. நடிச்சுட்டு வந்து ரெஸ்ட் எடுத்துக்கலாம். லைட் போய்டும் டா. எழுந்துக்கறயா..?" என அவன் கேட்க,

"ம்ம் வரேன்" என்றவள் சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்தாள்.

அவள் அவன் மடியில் படுத்ததை எல்லாம் தனியாக உணர்ந்ததாகவே தெரியவில்லை.

அனிச்சை செயல் போல் சாதாரணமாகவே இருந்தாள்.

சிவதேவ்வும் எதுவும் காண்பித்து கொள்ளவில்லை.

அவள் எழுந்து வந்ததும் இருவரும், வாங்கி இருந்த ஜூஸை குடித்துவிட்டு, சென்று அடுத்த காட்சிகளை நடித்து முடித்தனர்.

அடுத்து வந்த நாட்களும் அதே போல் தான் சென்றது.

காவியா சோர்ந்து அமர்ந்த போதெல்லாம் சிவதேவ்வும் விஷ்ணுவும் அவளை நன்றாக பார்த்து கொண்டனர்.

மருத்துவரும் அவள் நன்றாகவே இருப்பதாக கூற, அதற்கு பின் தான் சிவதேவ்விற்கு நிம்மதியாக இருந்தது.

படத்தின் முதல் ஷெடியூல் முடிந்திருந்தது.

முதல் கட்ட படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்ததை கொண்டாட, படத்தின் தயாரிப்பாளர் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்.

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவிற்கு இரவு உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

காவியா வீட்டில் இருந்து கிளம்பும் முன் சிவதேவ்விற்கு அழைத்தாள்.

"பார்ட்டிக்கு கிளம்பிட்டயா தேவ்..?" என அவள் கேட்க,

"ம்ம். நான் கிளம்பிட்டேன் ஸ்ரீ. போயிட்டு இருக்கேன். நீ கிளம்பிட்டயா..?" என்றான் அவன்.

அவளுக்கோ அவன் பதிலில் முகம் சுருங்கி போயிற்று.

"என்னை கூட்டிட்டு போகாம தனியா போறியா..?" அவள் பட்டென கேட்டுவிட, இந்த பக்கம் சிவதேவ் சிரித்து கொண்டான்.

"நான் எதுக்கு மேடம் உங்களை கூட்டிட்டு போகணும்..? உங்ககிட்ட இல்லாத காரா..!" கிண்டலாக அவன் கேட்க, அவளோ கோபத்துடன் பதில் கூறாமல் போனை வைத்து விட்டாள்.

'எதுக்கு இப்போ விட்டுட்டு போறான்!' என அவள் மனம் அடித்துக்கொள்ள தான் செய்தது.

அதை உடனடியாக உணர்ந்தது போல் சிவதேவ் நம்பரில் இருந்து அவளுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

"காரணமா தான் தனியா போறேன். மூஞ்சியை ஏழு முலத்துக்கு தூக்காமல், வந்து சேரு.." என செய்தி இருக்க, அடுத்த நொடி அவள் மனம் சமன் அடைந்து விட்டது.

இருந்தாலும் பொய் கோபத்தை விடாமல் தான் சென்றாள்.

ஹோட்டலுக்கு சென்ற பின்பும் சிவதேவ் அருகிலேயே வராமல் அவள் சுற்றி கொண்டிருக்க, அவள் செயலை கவனித்து தனக்குள் சிரித்துக்கொண்டவனும், விஷ்ணுவுடனே நேரத்தை செலவிட்டான்.

அந்த ஹோட்டலில் இருந்த ஒரு பெரிய ஹாலில் தான் அனைவரும் கூடி இருந்தனர்.

சாப்பிடும் போது சிவதேவ் காவியா அருகில் வந்தான்.

அவள் தட்டில் எடுத்திருந்த உணவை பார்த்தவன், அவளுக்கு ஒத்துக்கொள்ளாது என்பதை மட்டும் எடுத்து விட்டான்.

"எனக்கு வேணும் டா" என அவள் முறைக்க, "நோ" என அழுத்தமாக கூறியவன் நகர்ந்து விட, அவள் முறைப்பு அவனை தொடர்ந்தது.

உணவு முடிந்து காவியா தன்னுடன் நின்ற பெண்ணிடம் பேசி கொண்டிருக்க, "ஒன் மினிட் அட்டென்சன் ப்ளீஸ் கைஸ்" என்ற சிவதேவ் குரல் அனைவர் கவனத்தையும் அவன் புறம் திருப்பியது.

காவியாவும் அவனை திரும்பி பார்த்தாள்.

"உங்க எல்லார் முன்னாடியும் ஒரு விஷயம் சொல்லணும்னு ஆசைப்படறேன்." என்றவன், இப்போது காவியாவை பார்த்தான்.

"இங்க வா ஸ்ரீ" என அவன் மென்மையாக அழைக்க, அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை.

விஷ்ணுவிற்கு சிவதேவ் செயல் புரிந்து விட்டது.

காவியா அருகில் சென்றவன், "போ மா" என அவள் தோளை தட்டி கூற, அதில் சுயநினைவு வந்தவள், மெதுவாக சிவதேவ் அருகில் சென்றாள்.

"ஊரறிய சொல்லணும்னு தான் எனக்கும் ஆசை. இப்போதைக்கு நம்ம படக்குழு அறிய சொல்லுறேன். ஐ லவ் யு ஸ்ரீ. லவ் யு.." என மென்புன்னகையுடன் கூறிய சிவதேவ், அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து தான் வாங்கி வந்திருந்த மோதிரத்தையும் நீட்டினான்.

"இனி இந்த வாழ்க்கை எனக்கும் உனக்கும் மட்டுமேயானது ஸ்ரீ. வெறும் சந்தோசத்தை மட்டும் உனக்கு தரணும்னு நினைக்கறேன். என் வாழ்க்கையின் கடைசி நொடி வரை உன் முகத்தில் சிரிப்பை மட்டுமே பாக்கணும்னு நினைக்கறேன். என்னை நம்பி ஏத்துப்பயா..?" கேள்வியுடன் நிறுத்தி அவள் முகம் பார்த்தான் சிவதேவ்.

காவியாவிற்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை.

அவள் கேட்டபோதெல்லாம் இந்த காதல் என்னும் வார்த்தையை அவன் சொன்னதே இல்லை.
தேவையா என வாக்குவாதம் செய்வான்.

இன்று எந்த குறையுமே இருக்க கூடாது என்று நினைத்தான் போல்..! பல பேர் முன்னிலையில் காதலை வார்த்தைகளால் கூறி விட்டான்.

"அக்செப்ட் பண்ணு காவியா" என விஷ்ணு சத்தமாக கூற, அவனை திரும்பி பார்த்தவள், இப்போது சிவதேவ்வை பார்த்தாள்.

அவனும் கண்ணடிக்க, ஒருவாறு நடப்பு அவளுக்கு உரைத்தது.

மெதுவாக அவள் கை நீட்ட, சிவதேவ் மலர்ந்த புன்னகையுடன் மோதிரத்தை அவள் விரலில் போட்டு விட்டான்.

காவியா ஏற்றுக்கொண்டதும், அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

இங்கு நடந்ததை சிலர் வீடியோ எடுப்பதையும் கவனித்து கொண்டே தான் சிவதேவ் எழுந்தான்.

காவியாவை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டவன், "இது எங்க வாழ்க்கை. நாங்க சந்தோசமா வாழுவோம். மனதார வாழ்த்தரவங்களுக்கு ரொம்ப நன்றி. வன்மத்தோட பேசறவங்களுக்கு நோ கமெண்ட்ஸ். சீக்கிரம் கல்யாண தேதி சொல்லுறேன். கண்டிப்பா எல்லாரும் வரனும்.." புன்னகை மாறாமலே அவன் முடிக்க,

"கண்டிப்பா வந்துருவோம் சிவா.."

"சிவா ட்ரீட் வைங்க" என பலரும் வாழ்த்து கூறினார்.

காவியாவாள் தான் அதிகம் பேச முடியவில்லை.

அவளுக்கு அழுகை தான் வந்து தொலைத்தது.

அவன் கையிலேயே அவள் முகம் புதைத்து கொள்ள, சிவதேவ்வும் அவளை அணைத்து கொண்டான்.

"இப்போ தான் லவ் யு சொல்லணும்னு தோணிச்சா டா..?" மென்குரலில் அவள் கேட்க,

அவள் அருகில் குனிந்தவன், "இப்போ கண்டிப்பா சொல்லணும்னு தோணிச்சு ஸ்ரீ." என்றான்.

அவளுக்கு புரிந்தது.

அவள் மேலும் அவனுடன் ஒன்ற, அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தவன்,

"கூல் டா" என்றுவிட்டு தனக்கு வாழ்த்து கூற வந்தவர்களிடம் திரும்பி விட்டான்.

விஷ்ணு அங்கு எடுத்த வீடியோவை சுகந்திக்கு அனுப்ப, அவள் உடனடியாக காவியாவிற்கு அழைத்து விட்டாள்.

"இப்போ தான் டி நிம்மதியா இருக்கு. ரொம்ப சந்தோசம்.." என அவளும் கூற,

"தேங்க்ஸ் சுகி" என்றாள் காவியா.

"எதுவும் யோசிக்காதே கவி. சிவாவும் நீயும் தான் சேரணும். அது தான் விதி. அதை யாராலும் மாத்த முடியாது. புரிஞ்சுக்கோ." அழுத்தமாக சுகந்தி கூற,

"ம்ம் புரியுது டி. இனி நானும் மாத்த நினைக்க மாட்டேன்." காவியா தெளிவாக பதில் கூறியதில், சுகந்தியும் நிம்மதியுடன் போனை வைத்தாள்.

பார்ட்டி முடிந்து கிளம்பும் போது காவியா வந்த காரை சிவதேவ் தனியாக அனுப்பி விட்டான்.

தன்னுடனே அவளை அழைத்து சென்றான்.

காரில் ஏறியதும் தான் இருவருக்கும் தனிமை கிடைத்தது.

"இதுக்கு தான் தனியா வர சொன்னியா...?" என காவியா கேட்க,

"ஆமா டி. சேர்ந்தே வந்துட்டு ப்ரொபோஸ் பண்ணினா, எல்லாம் பிளான் பண்ணி பண்ணுறோம்னு நினைச்சுட மாட்டாங்களா..! நச்சுரலா இருக்கணும்னு தான் தனியா வர சொன்னேன்." என தோளை குலுக்கினான் அவன்.

"இப்போ எப்படி கல்யாணம் பண்ணுறது..!" என அவள் அடுத்த சந்தேகம் கேட்க,

"உன் சைகார்டிஸ்ட் டாக்டர் என்ன சொல்லுறாங்க...?" என்றான் சிவதேவ்.

அவன் கேள்வியில் காவியா தான் பெரிதாக அதிர்ந்து போனாள்.

இத்தனை நாள் இந்த விஷயம் அவனுக்கு தெரியாது என்றல்லவா அவள் நினைத்து கொண்டிருந்தாள்..!

"உ.. உனக்கு எப்படி தெரியும் தேவ்..?" தடுமாற்றத்துடன் அவள் கேட்க, அவளை திரும்பி வெறுமையாக பார்த்தவன், காரை ஓரமாக நிறுத்தி விட்டான்.

"நான் உன் உடம்புக்கு தான் அலையறேன்னு முடிவே பண்ணிட்ட தான டி நீ..!" என கேட்டவன் குரலில் இப்போது அத்தனை கோபம் இருந்தது..

இளைப்பாறும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Int 27: (fnl)

காவியா எதுவும் பேசாமல் அவனை பார்க்க, "பதில் சொல்லு ஸ்ரீ" என்ற சிவதேவ் குரலில் அதிகம் ஆற்றாமையே இருந்தது.

"உனக்கு எப்படி தெரியும் தேவ்..?" மெதுவாக அவள் கேட்க,

"நீ மனசளவில் பாதிக்கப்பட்டிருக்கன்னு எனக்கு தெரியும் ஸ்ரீ. தெரிஞ்சுக்கிட்டே நான் சும்மா இருப்பேனா..! உன் ஒவ்வொரு அசைவையும் கவனிச்சுட்டு தான் இருக்கேன். என் மேல் நம்பிக்கை இல்லையா டி..? கல்யாணம் ஆனா உன் மேல் பாயவா போறேன்..!" முகம் கசங்க அவன் முடிக்க, அவள் கண்கள் மெலிதாக கலங்கியது.

அதை அவன் கைகள் உடனடியாக துடைத்து விட்டது.

"நீ காலம் முழுக்க எனக்காக காத்திருப்ப டா. உன் கூட அழகான வாழ்க்கை காத்திருக்கும் போது, தப்பே பண்ணாத நாம ஏன் தண்டனை அனுபவிக்கனும் தேவ். உன்னை மாதிரி ஒரு பையன் வேண்டாமா..!" அவன் கண்களை நேராக பார்த்து கேட்டவள் குரல் கரகரத்து ஒலித்தது.

"ஆனால் நீ பக்கத்தில் வந்தாலே என் உடல் அனிச்சை செயலா ஒடுங்கி போச்சு டா. எல்லாம் நானா ஏற்படுத்திகிட்டது தான். அந்த ராகவன் தொட்டபோதெல்லாம் உடம்பெல்லாம் அப்படி கூசும். ஒரு மாதிரி அவன் கைபட்டாலே உள்ளுக்குள் கூசி போய்டும். அதை காட்டவும் முடியாது. தனியா பாத்ரூமில் தான் அழுவேன். ஒரு மாதிரி உடம்பே இறுகி போச்சு டா. நீ வந்ததும் நீ பக்கத்தில் வரும் போதும் ஒரு மாதிரி ஆச்சு. அதை உணர்ந்த நொடி ரெண்டாவது முறை செத்தேன் தேவ்." கையை இறுக மூடிக்கொண்டு அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு அவள் பேச, சிவதேவ் மெதுவாக அவள் கையை பிரித்து விட்டான்.

அவன் கண்களும் கலங்கி தான் இருந்தது.

"அழுதுடு டி" என்று மட்டுமே அவன் கூற, அவளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

அவன் நெஞ்சில் சாய்ந்து கதறி விட்டாள்.

அவளை அழுத்தமாக அணைத்துக்கொண்ட அவனும், அவள் வலியை உணர்ந்தது போல் மௌனமாக கண்ணீர் வடித்தான்.

"எனக்கு எதுவுமே புரியல தேவ். ரொம்ப குழம்பிட்டேன். சாரி டா. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்." அழுது கொண்டே அவள் மன்னிப்பு வேண்ட,

"ஷு.. விட்டுரு ஸ்ரீ. போதும் டா.." என அவள் முதுகை மெதுவாக நீவி கொடுத்தான் சிவதேவ்.

அவளும் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானமானாள்.

"நான் இப்போ முழுசா ஓகே டா. உன் ஸ்ரீ மட்டும் தான்." கண்ணை துடைத்து கொண்டு அவள் நிமிர்வாக கூற, "தெரியும் டி" என்றான் அவன் மென்மையாக.

"இந்த குழந்தை பெண் குழந்தையா தான் டா பிறக்கும். என்னை மாதிரி மட்டுமே இருக்கும்." திடீரென ஒருவித தீவிரத்துடன் அவள் கூற,

"எந்த குழந்தையா இருந்தாலும், எப்படி இருந்தாலும் அது நம் குழந்தை தான் ஸ்ரீ. புதுசா எதுவும் யோசிச்சு குழப்பிக்காத டி." என்றான் சிவதேவ் வேகமாக.

ராகவன் உருவில் பிறந்தாலும் அவனுக்கு ஒன்றும் இல்லை. குழந்தை என்ன செய்யும்..! அதை வேறு அவள் யோசிக்க கூடாதே என்று தான் அவன் அவசரமாக கூறினான்.

அவள் கேட்டுவிட்டாலும்..!

"ம்ஹ்ம். நீ வேணா பாரு. பொண்ணு தான் பிறக்கும்.." என்றாள் அவள் மீண்டும் அழுத்தமாக.

"ஸ்ரீ இதை நினைச்சு நீ குழப்பிக்க கூடாது.." அழுத்தமாக சிவதேவ் கூற, அவனை திரும்பி பார்த்தவள், அவன் பயம் உணர்ந்து மெலிதாக புன்னகைத்தாள்.

"என் ஆசையை மட்டும் தான் டா சொன்னேன்" என அவள் கூறியதில் தான், அவன் நிம்மதி அடைந்தான்.

"எப்போ கல்யாணம் பண்ணிக்க போறோம்..?" ஒருவாறு முதல் கேள்வியை அவள் மீண்டும் கேட்க,

"ஒரு மாசத்தில்" என்றான் சிவதேவ்.

"அதுக்குள்ள முடியுமா டா..?

"விஷ்ணு சுகந்தி எல்லாரும் ஹெல்ப் பண்ணுவாங்க. பண்ணிடலாம்.." உறுதியாக அவன் கூற, அவன் இஷ்டம் என காவியா விட்டுவிட்டாள்.

அவள் அமைதியாக அவன் தோளில் சாய்ந்து விட, அவள் நெற்றியில் மென்மையாக இதழ் ஒற்றிவிட்டு சிவதேவ் காரை எடுத்தான்.

*************

ஒரு மாதத்தில் திருமணம் என சிவதேவ் கூறிய போது, ஏதோ சிம்பிளாக செய்வான் என்று தான் காவியா நினைத்திருந்தாள்.

அவனோ கிராண்டாகவே ஏற்பாடு செய்தான்.

தனியாக லோன் எடுத்து அவன் செய்வது தெரிய, காவியா அவனை கண்டிக்கவும் செய்தாள்.

"எதுக்கு டா லோன் எல்லாம் எடுத்து இவ்வளவு விமர்சையா ஏற்பாடு பண்ணிட்டு இருக்க..? பணம் என்கிட்ட இருக்கு தேவ்.".

"இருக்கட்டும் ஸ்ரீ. இது நான் செய்யணும்னு ஆசைப்படறேன். ரெண்டு படம் நடிச்சா லோன் முடிஞ்சுடும். சோ ப்ரீயா விடு. தேவைப்பட்டா உன் கிட்ட தானே கேக்க போறேன்..! எதுவும் தடுக்காத டி." கெஞ்சலாக அவன் கேட்ட போது, அவளால் மறுக்க முடியவில்லை.

அவன் ஆசைக்கே விட்டுவிட்டாள்.

எப்படியோ சிவதேவ் அனைத்தும் ஏற்பாடு செய்து விட்டான்.

நந்தினி வனராஜனுக்கு பத்திரிகை வைக்க, காவியா, சிவதேவ் இருவருமே சென்றனர்.

வனராஜன் முழுமனதுடன் வாழ்த்த, நந்தினி தான் சங்கடத்துடன் இருந்தாள்.

வனராஜன் உள்ளே சென்றிருந்த போது, நந்தினி இருவரிடமும் மன்னிப்பு கேட்டாள்.

"ரொம்ப சாரி. ஏதோ முட்டாள் தனமா பண்ணிட்டேன். பெரிய தப்பு தான். எப்படி சரி பண்ணுறது, என்ன பண்ணுறது ஒன்னும் புரியல. மன்னிச்சுடுங்க ப்ளீஸ்." கைகூப்பி மென்குரலில் அவள் கேட்க,

"முடிஞ்சதை விடு. நல்லா படி. கல்யாணத்துக்கு வா." என்றான் சிவதேவ்.

"இனி எதுவும் தெரியாம, யோசிக்காம எதுவும் பேசாத நந்தினி.." என்றதோடு காவியாவும் அந்த பேச்சை நிறுத்தி விட்டாள்.

கிளம்பும் போது நந்தினிக்கு சிறு புன்னகையுடன் இருவரும் விடை கொடுத்துவிட்டு கிளம்பினர்.

திருமணத்திற்கு முன்பு, மெஹந்தி பன்க்ஷனில் இருந்து அனைத்தும் கோலாகலமாக நடந்தது.

காவியாவிற்கு வயிறு இன்னும் தெரிய தொடங்கவில்லை.

அதனால் அந்த கவலையும் இருக்கவில்லை.

திரை உலக நண்பர்கள் அனைவரும் வந்து வாழ்த்தினர்.

திருமண நாளும் அழகாக விடிந்தது.

ஒரு பக்கம் பெரியவர்களான ராஜலக்ஷ்மி, பர்வதம், ரங்கநாதன் என அனைவரும் மகிழ்ச்சியுடன் சுற்றி கொண்டிருந்தனர்.

விஷ்ணுவும் சுகந்தியும் ஆளுக்கொரு பொறுப்பை எடுத்து பார்த்துக்கொள்ள, சௌமியா பெரியவர்களுடன் இணைந்து கொண்டார்.

அவர் முகத்தில் வெளிப்படையாக தெரிந்த மகிழ்ச்சியால், யாரும் புறணி பேச முடியாமல் போனது.

"என்ன இருந்தாலும் உங்க மருமக கல்யாணம்...!" என்று வந்த சிலரிடமும், "அவள் எனக்கு மகள்.." என்று கூறி அவர்கள் வாயை சௌமியா அடைத்து விட்டார்.

சிவதேவ் மணமேடையில் தான் அமர்ந்திருந்தான்.

காவியா வருவதை உணர்ந்து திரும்பியவன், ஒரு நொடி அவள் அழகில் ஸ்தமித்து தான் விட்டான்.

இளஞ்சிவப்பு நிற பட்டு புடவை, அதற்கு பொருத்தமாக வெள்ளை கற்கள் பதித்த நகைகள், மெல்லிய அலங்காரம் என தேவதையாக ஜொலித்தாள் காவியா.

சிவதேவ் அருகில் அமர்ந்தவள், "ஜொள்ளு விடாத டா. தெரியுது.." என கிசுகிசுக்க,

"அப்படி தான் டி பார்ப்பேன்" என்றவன், யார் இருப்பதையும் பொருட்படுத்தாமல் அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான்.

அவன் செய்கை அனைவர் முகத்திலும் ஒரு புன்னகையை தோற்று வைத்தது.

ஐயர் தாலியை கொடுக்க, தன் உயிரானவளை முழுதாக தனக்கு சொந்தமாக்கி கொண்டான் சிவதேவ்.

காவியா நிலை தெரியும் என்பதால், முதலிரவு ஏற்பாடெல்லாம் ஒன்றும் செய்யவில்லை.

வீட்டிற்கு வந்ததும் இருவருக்கும் பால் பழம் கொடுத்ததோடு முடித்து கொண்டனர்.

சௌமியா, விஷ்ணு, சுகந்தி அனைவரும் மாலை போல் கிளம்பி விட்டனர்.

சிவதேவ் ஏற்கனவே ராஜலக்ஷ்மி தங்களுடன் தான் இருக்க வேண்டும் என கூறி நிரந்தரமாக அழைத்து வந்து விட்டான்.

இரவு உணவு முடிந்ததும், சிவதேவ் கையோடு காவியாவை அவர்கள் அறைக்கு அழைத்து வந்து விட்டான்.

இருவரும் கட்டிலில் அமர, "தூங்கு ஸ்ரீ" என்றான் சிவதேவ்.

"நமக்கு இன்னிக்கு பர்ஸ்ட் நைட் டா.." என காவியா குறும்பு சிரிப்புடன் கூற,

"அதுக்கு நாள் இருக்கு டி. முதலில் குழந்தை நல்லபடியா பிறக்கட்டும்." என்றான் அவன்.

"இப்படி விரதம் இருக்க தான் அவசரமா கல்யாணம் பண்ணினாயா..?"

"கல்யாணம் அவசரமா பண்ணினது நம்ம குழந்தைக்காக தான். நாளைக்கு குழந்தையை யாரும் தப்பா பேசிட கூடாது. மத்தபடி நீ எங்க போய்ட போற..! எங்க போனாலும் தூக்கிட்டு வர எனக்கு தெரியும்." அசால்டாக அவன் கூற,

"சரி தான் போ டா" என்றவள் உரிமையுடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

"உனக்கு முழுசா சரியாகிடுச்சா டி..?" அவளை அணைத்துக்கொண்டே சிவதேவ் கேட்க,

"சரியாகலைனா இந்நேரம் உனக்கு நாலு அரை விழுந்திருக்கும் டா.." என்றாள் அவள் கிண்டலாக.

"அடிச்சாலும் பரவாயில்ல டி. எதுக்காகவும் என்னை பிரியணும்னு இனி நினைக்காத. கொஞ்ச நாளா இருந்தாலும், அந்த நாட்களை கடக்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.." இறுக்கமான குரலில் அவன் கூற, அதில் இருந்த வலி அவளுக்கு புரிந்தது.

"சாரி டா.. சாரி.." என்றவள் அவன் கண்களை நேராக பார்க்க, அதில் தெரிந்த அதீத காதலில் அவள் கட்டுண்டு தான் போனாள்.

அவன் நிலை புரிந்தவள், அடுத்த நொடி அவன் இதழ்களை சிறை செய்ய, உடனடியாக அவன் செயலை தனதாக்கி கொண்டான் சிவதேவ்.

நீண்ட இதழ் யுத்தம் ஒன்று அங்கு நடந்தது.

இருவரின் ஆற்றாமைக்கும் வேதனைக்கும் ஆறுதல் கிடைக்கும் வரை இருவரும் பிரியவில்லை.

தன்னவள் உடலை சொந்தமாக்கிக்கொள்ள சிவதேவ் அவசரப்படவில்லை.

ஆனால் அவள் மனதை முழுதாக சொந்தமாக்கி கொண்டான்.

*************

ஐந்து வருடங்களுக்கு பிறகு...

"அப்பா.. அப்பா..." என்ற மழலை குரல் சத்தமாக கேட்க,

"வரேன் டா.. வரேன்.." என முதல் தளத்தில் இருந்து குரல் கொடுத்தான் சிவதேவ்.

"தேவ்" என அடுத்து அவன் மனைவி குரல் வர, "ஒரு நிமிஷம்" என கத்தியவன், படி அருகில் வந்திருந்தான்.

அவன் இரு கைகளையும் அவன் இரு மகள்களும் பிடித்திருந்தனர்.

ஆம் காவியாவிற்கு முதல் பிரசவத்தில் இரட்டை பெண்களும், அடுத்த ஒன்றரை வருடத்தில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது.

இரு பெண்களும் பட்டுபாவாடையில் சிவதேவ் கைவண்ணத்தில் ஜொலித்தனர்.

"வர்ஷா குட்டி சீக்கிரம் வாங்க" என காவியா அழைக்க,

"வா நிஷா" என தன் உடன் பிறப்பை அழைத்து கொண்டு ஓடினாள் சிறுமி.

"பார்த்து போங்க டி" என கத்திகொண்டே சிவதேவ் பின்னால் வந்தான்.

"அப்பா நானும் வேஷ்டி" என சிறுவன் தேவேந்திரன் கைதூக்க,

"என்னை விட உனக்கு தான் டா அழகா இருக்கு.." மகனை தூக்கி கொண்டான் சிவதேவ்.

"சீக்கிரம் கோவிலுக்கு போயிட்டு வாங்க சிவா.." என கூறிக்கொண்டே பர்வதம் வர,

"எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க மா" என சிவதேவ்வும், காவியாவும் பெரியவர்கள் காலில் விழுந்தனர்.

இன்று அவர்கள் திருமண நாள்.

அதான் காலையில் இத்தனை ஆர்ப்பாட்டம்.

ராஜலக்ஷ்மியிடமும் அவர்கள் ஆசிர்வதம் வாங்கி நிமிர, சிறுவர்களும் அவர்களை பார்த்து அதே போல் செய்தனர்.

"வந்துறோம்.." என்றிட்டு சிவதேவ் காவியா குடும்பத்துடன் கோவிலுக்கு கிளம்ப, அவர்களை பார்த்த பெரியவர்கள் மனம் முழுதாக நிறைந்திருந்தது..

******** சுபம் *******

 
Status
Not open for further replies.
Top