All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆழி உன் கையில் துளியாக! - கதை திரி

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த நல்ல நாளில் புது கதை தொடங்கியிருக்கேன். கதை என்று பார்த்தால்.. சாதாரணமான கதை தான்!

வழக்கமான பார்முலா கதை தான்! உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

பொறுமையாக என் கதைக்காக காத்திருப்பவர்களுக்கு நன்றி ☺️

இனி இந்த கதையின் மூலம் சந்திக்கலாம்.

வாரம் இருமுறை யூடிகள் வரும்.

செவ்வாய் கிழமை மற்றும் சனிக்கிழமை யூடிகள் தருகிறேன்.

முதல் யூடி இன்று தருகிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆழி உன் கையில் துளியாக!!


அத்தியாயம் 1

“யஷ்வந்த்!” என்று ராகவனும் கவிதாவும் அழைத்தவாறு பின்னே ஓடி வந்தார்‌கள்.

ஆனால் அவர்களது அழைப்பு மட்டுமில்லை.. சுற்றும் சுழலும் என்று எதுவும் கருத்தில் கொள்ளாது.. கையில் போடப்பட்டிருந்த ட்ரீப்ஸை பிடுங்கியதால்.. வெளி வந்த இரத்தம் சொட்டு சொட்டாக ஒழுகி கொண்டிருக்க.. அதைப் பற்றியும் கவலைப்படாமல் யஷ்வந்த் அந்த மருத்துவமனை வளாகத்தில் கால்கள் ஒத்துழைத்த வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான்.

‘நர்ஸ் ஸ்டேஷனில்’ அமர்ந்திருந்த செவிலிய பெண்.. நோயாளி ஒருவர் அறையில் இருந்து வெளியே ஓடி வருவதைப் பார்த்து.. அவனைப் பிடிக்க ஓடி வந்தார். கூடவே அங்கு நோயாளிகளை பார்க்க வந்திருந்த மற்றவர்களும்.. திகைப்புடன் அவனைப் பார்த்தார்கள்.

தற்பொழுது தான்.. மூன்று நாட்கள் மயக்க நிலையில் இருந்து.. சுயநினைவிற்கு வந்த யஷ்வந்திற்கு.. கண்கள் சொருக.. காலில் இருந்து பூமி நழுவி விழுந்துவிடும் போன்று இருந்தது. எனவே கால்கள் தடுமாறி விழப் போனான்.

அப்பொழுது அவனை யாரோ தாங்கி பிடித்து.. அவனது உடல் கனம் தாங்காது.. அவனோடு கீழே விழுந்தது தெரிந்தது.

“ஸார் ஆர் யூ ஒகே!” என்று அவனது தோள்களை மெதுவாக உலுக்கியவாறு குரல் கேட்கவும், யஷ்வந்த்.. பசையென ஒட்டியிருந்த இமைகளை சிரமத்துடன் பிரித்து பார்த்தான்.

இளம்பெண் ஒருத்தி.. அவனோடு விழுந்து அவனை தனது மடியில் தாங்கியிருந்தாள்.

அவளைப் பார்த்த யஷ்வந்தின் கரம் ஒன்று மெல்ல உயர்ந்து.. அவளது முகத்தருகே சென்றது. அவனது உலர்ந்த உதடுகளை மெல்ல பிரித்தவன்.. “அ.. அ.. பர்ணா” என்று காற்றாய் போன குரலில் அழைத்துவிட்டு.. அவனது கரம் அவளது முகத்தை தீண்டாமலேயே சரிந்து விழுந்தது. அவனும் சுயவுணர்வு இழந்தான்.

அதற்குள் அவனுக்கு அருகில் வந்துவிட்ட செவிலியர்கள் அவனை மெல்ல தூக்கி.. கொண்டு வரப்பட்ட ஸ்டெக்ச்சரில் வைத்தனர். பின் அவனை மருத்துவப்பணியாளர்கள் தூக்கிக் கொண்டு.. அவசரப் சிகிச்சை பிரிவிற்கு.. விரைந்தார்கள். அவர்களது பின்னோடு யஷ்வந்தின் தந்தை ராகவனும் அன்னை கவிதாவும் கிட்டத்தட்ட ஓடினார்.

“ஷம்ருதா” என்று தோளைத் தொட்டு அவளது அன்னை அழைக்கவும், திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

“கையை கழுவிட்டு வாம்மா! அத்தையை பார்க்க போகலாம்.” என்றார்.

அதன் பின்பே தனது கரங்களைப் பார்த்தாள். சற்றுமுன் அவள் தாங்கி பிடித்தவனின் கையில் இருந்து வழிந்த இரத்தம் அவளது கரங்களிலும் அவள் அணிந்திருந்த க்ரேப் டாப்பிலும் ஆகியிருந்தது.

“மை பேவரெட் டாப்..” என்றவாறு எழவும்,

“இப்போதைக்கு கழுவி.. மஃப்லரில் மறைச்சுக்கோ! பக்கத்துல எதாவது ஷோரூம் இருந்தா.. வேற வாங்கி மாத்திக்கலாம்!” என்றார்.

உதடுகளை பிதுக்கியவாறு அங்கிருந்த செவிலியரிடம் கேட்டு.. கை கழுவும் பகுதிக்கு சென்றாள்.

அங்கு கரங்களையும் ஆடையும் சுத்தமாக கழுவிக் கொண்டிருந்த பொழுது.. இருவர் பேசிக் கொண்டிருந்தது கேட்டது‌.

மருத்துவ துப்புரவு பணியாளர்கள் இருவர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இவர் கூட ஆக்ஸிடென்ட் ஆனாவங்க தான்.. இங்கே வரும் போதே.. இறந்துட்டாங்களே! அது இவருக்கு தெரியாது போல பாவம்!”

“ஆமா! அபர்ணானு அந்த பொண்ணை கூப்பிட்டாரே.. அது அந்த பொண்ணோட பேரு தான்! பாவம் இரண்டு பேரும் லவ்வர்ஸ்.. சந்தோஷமா வாழ நினைச்சுருப்பாங்க‌‌! அதுக்குள்ள இப்படி ஆகியிருக்க கூடாது.”

“அந்த பொண்ணு.. அந்த அபர்ணா மாதிரி தான் கொஞ்சம் பார்க்கிறதுக்கு இருந்தாங்க! அதுதான் அப்படி கூப்பிட்டுருக்காங்க!”

“அப்படியா! அன்னைக்கு நான் சரியா பார்க்கலை.”

“ரூம் நம்பர் த்ரீ ஃபை‌ ஜீரோல பேசன்ட் வாமிட் செய்திருக்காங்க.. போய் கிளின் பண்ணிருங்க அக்கா!” என்கவும்.. இருவரும் கலைந்து சென்றார்கள்.

ஷம்ருதா கண்ணாடியில் தெரிந்த தனது முகத்தை இடப்பக்கமும் வலப்பக்கமும் திருப்பிப் பார்த்தவள், பின் தோள்களை குலுக்கி விட்டு அகன்றாள்.

அதன் பின் அவள் அந்த சம்பவத்தை மறந்தே விட்டாள்.

ஆனால் ஒரு ஜீவன் அந்த சம்பவத்தை மறக்க முடியாமல் தவிக்க போவதை அவள் அறிந்திருக்கவில்லை.

யஷ்வந்த்!

தென்னிந்தியாவில் முதல் ஐந்து பணக்காரர்களில் ஒருவரான ராகவனின் ஒரே மகன்!

செல்வங்களில் புரண்டு வளர்ந்தவனுக்கு.. அந்த திமிரும் அதிகாரமும் சிறிதும் அவனிடம் இல்லை! தனது செல்வ நிலை குறிப்பிட்டு அவன் எங்கேயும் பேசியதும் இல்லை. நடந்து கொண்டதும் இல்லை. வெளிநாட்டில் படிக்க வைக்க வாய்ப்பும்.. செல்வமும் இருந்தும்‌.. தனது ஒரே‌ பிள்ளையை பிரிந்திருக்க மனமில்லாது.. சென்னையிலேயே பள்ளிப்படிப்பையும்‌.. புகழ்பெற்ற வேலூர் ஐடி கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடிக்க வைத்தார். நண்பர்கள் பல கொண்ட யஷ்வந்த் இதுவரை.. தனக்கு இவை வேண்டும் என்று‌ எதையும் கேட்டதில்லை. அவனது பெற்றோரும் அந்த நிலை வரை கொண்டு வந்தது இல்லை. அவனுக்கு எளிமையும் கற்றுக் கொடுத்தனர். பணத்தின் அருமையும் கற்றுக் கொடுத்தனர். தொழிலையும் கற்றுக் கொடுத்தனர். யஷ்வந்தும்.. திறமையும் ஒழுக்கமும் கொண்டவனாய் வளர்ந்து முப்பதாம் அகவையில் நிற்கிறான்.

அவனிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம். நினைத்தை சாதிக்கும் இரகம் அவன்! ஒன்றை நினைத்து விட்டால்.. அவன் விரும்பியது நடக்க எதை வேண்டுமென்றாலும் செய்வான். அதற்காக அவனது குணங்கள் கூட மாறும். நினைத்தது நடக்காத வரை.. அவனை நெருங்க முடியாது. இதுவரை அந்த சூழ்நிலை வரை.. அவனது வாழ்வு சென்றது இல்லை. அவனது பெற்றோர்கள் விட்டதும் இல்லை.

எனவே மற்றபடி எவ்வித பிரச்சினைகளும் இல்லாது வாழ்த்துக் கொண்டிருந்தவன் அபர்ணாவை கைக்கடிகாரம் வாங்கும் கடையில் தான் முதலில் பார்த்தான்.

அவளது அழகில் ஈர்க்கப்பட்ட அவன்! அவள் பேசும் அழகில் மயங்கி.. வேண்டுமென்றே பேரம் பேசினான். அவன் பெரும் பணக்காரன் என்று அறியாத அந்த பேதையும்.. அவனுடன் மல்லுக்கட்டினாள்.

அந்த கடையின் முதலாளி வந்து அவன் யார் என்று கூறவும் அபர்ணா தர்மசங்கடத்துடன் அங்கிருந்து ஓடி விட்டாள்.

புன்னகைத்தவாறு.. அங்கிருந்து அகன்ற.. யஷ்வந்திற்கு.. அவளை நினைவுகளில் இருந்து அகல முடியவில்லை. அவள் மீது காதல் கொண்டதை கண்டு கொண்டான். அடுத்த நாளே.. அவள் முன் சென்று தனது காதலை வெளிப்படுத்தினான். ஆனால் அவனது பொருளாதார நிலை கண்டு.. அபர்ணா அஞ்சி மறுத்துவிடவும், தொடர்ந்து தினமும் அவளை சந்தித்து.. தனது காதலை உணர்த்திக் கொண்டே இருந்தான்.

முடிவில் அவனது காதலை அவன் அடையும் வேளையில்.. அந்த விபத்து நிகழ்ந்தது. யஷ்வந்த் தான் காரை ஓட்டிக் கொண்டு சென்றான். ஆனால் எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று வந்து இடித்ததில்.. அபர்ணாவின் உயிர் அங்கேயே பிரிந்து விட.. தற்காப்பு பலூனின் மூலம் யஷ்வந்த் உயிர் தப்பினான்‌.

ஆனால் சுயநிலை வந்த பின்.. அவன் தெரிந்துக் கொண்ட விசயம்.. அவனின் உயிரை அறுத்தது‌. அபர்ணாவுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்று அவன் கண்ட கற்பனைகள் தவிடு பொடி ஆனதில்.. வெறும் கூடாய் சுற்றினான். அபர்ணாவின் உயிரை பறித்த லாரி ஓட்டுநர் சிறையில் அடைக்கப்பட்டு.. சித்திரவதை செய்யப்பட்ட போதும்.. அவனுக்கு திருப்தியை தரவில்லை.

ஆளே மாறிப் போனான். கலகலப்பாக பேசும் அவன்.. அமைதியாக வலம் வந்தான். நண்பர்களுடன் அரட்டையில் அமளிப்படுத்தும் அவன் எதையோ இழந்துவிட்ட தோற்றத்தில் இருந்தான்.

அவனை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள.. அவனது நண்பர்களும் பெற்றோர்களும் செய்த முயற்சி வீணாய் போனது.

அப்படியொரு இரவில் உறக்கம் வராமல் புரண்டு படுத்தவனுக்கு‌.. அவனையும் மீறி.. விபத்து நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். பின் அவனுக்கு அபர்ணா இறந்துவிட்ட செய்தியை அவனது பெற்றோர் கூறியதை நினைத்து பார்த்தான். அவனும் அது கேட்டு.. என்ன செய்கிறோம் என்ற நினைவில்லாது. கையில் ஏறிக் கொண்டிருந்த ட்ரீப்ஸை பிடுங்கி எறிந்துவிட்டு ஓடியதை நினைத்துப் பார்த்தான்.

அந்த நினைவுகளின் கோர்வையில் அபர்ணாவின் முகம் வந்தது.

உடனே விருக்கென்று எழுந்து அமர்ந்தான்.

இல்லை! அவள் அபர்ணா இல்லை!

ஆனால்??

அதற்கு பின் அவனால் உறக்கம் கொள்ளவில்லை.‌ எப்பொழுது விடியும்‌‌ என்று நேரத்தை ஓட்டியவன், விடிந்ததும்.. ஆறு மாதங்களுக்கு முன் அவன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு விரைந்தான்.

அவனை அங்கு நன்கு அடையாளம் காணப்பட்டு.. அவனுக்குரிய மரியாதையும் தரப்பட்டது.

யஷ்வந்த் அவர்களிடம் ஆறு மாதங்களுக்கு முன்.. அவனுக்கு விபத்து நடந்த மூன்று நாட்களுக்கு பின்.. அவன் அறையை விட்டு வெளியே ஓடி வந்த பொழுது.. பதிவான சிசிடிவி காட்சியை பார்க்க வேண்டும் என்றுக் கேட்டான்.

அவர்கள் விழித்தாலும்.. மருத்துவமனையின் சிசிடிவி பதிவுகளை தனி நபருக்கு தருவதில்லை என்றனர்‌.

அங்கு அவன் தன் வாழ்வில் முதன்முறையாக தனது செல்வநிலையையும்.. அதிகாரத்தையும் காட்டினான்.

அதற்கு அடிப்பணிந்து அவர்கள்.. ஆறு மாதங்களுக்கு முன்.. எடுத்த பதிவுகளை தேடி அவனுக்கு காட்டினர்.

அவனுக்கு தேதி நன்றாக நினைவிருந்ததால்.. தேடி எடுப்பதில் சிரமம் ஏற்படவில்லை.

அந்த காட்சி ஒளிப்பரப்பானது. யஷ்வந்த் படபடக்கும் இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது அறையில் இருந்து ஓடி வந்தவன்.. சிறிது தூரம் ஓடியதுமே கால்கள் தடுமாற சரிய போனான். அப்பொழுது சரிய போனவனை இரு கரங்கள் தாங்க முயன்றது. ஆனால் அவனை தாங்க முடியாது.. அவனோடு சரிந்து விழுந்தாள். உடனே சுதாரித்து எழுந்தவள், விழுந்தவனை தனது மடியில் தாங்கி அமர்ந்த பொழுது‌‌.. அவளது முகம் நன்றாக தெரிந்தது.

ஆம்‌.. அபர்ணாவின் ஒத்த சாயல் கொண்டிருந்தாள்.

அபர்ணாவின் வெள்ளை நிறம் இல்லை. அவளைப் போல் மெலிவும் இல்லை. அபர்ணாவிற்கு இருக்கும் நீண்ட கூந்தலும் இல்லை. அவளுக்கு இருப்பது போல்.. நேரான கூர்மூக்கு இல்லை. சுடிதாரும் அணிந்திருக்கவில்லை‌.

ஆனால் அந்த முகவெட்டு, கண்கள், இதழ்கள் அனைத்தும் அபர்ணாவை ஒத்திருந்தது. மேலும் எதோ ஒன்று அவளை மெருகூட்டியிருந்தது.

அந்த பதிவில் அவளை தொட முயன்றவன், மூர்ச்சையாகி சரிந்துவிட்டதை பார்த்தவன், பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தான்.

பின் தொடர்ந்து காட்சிகளை பார்த்தான். அந்த பெண்.. எழுந்து சென்று கை கழுவிவிட்டு வந்து ஒரு பெண்மணியுடன் இணைந்து கொண்டாள். பின் இருவரும் ஒரு நோயாளியின் அறைக்குள் சென்றார்கள்.

உன்னிப்பாக பார்த்துக் கொண்டு வந்த யஷ்வந்த் அடுத்து கேட்ட கேள்வியில் அலுவலர்கள் ஆடிப் போனார்கள்.

இருவரும் நுழைந்த அறையில் இருந்த நோயாளியின் முகவரியை கேட்டான்.

நோயாளியின் விபரங்களை கூறுவது.. சட்டத்திற்கு புறம்பானது.. என்று அவர்கள்‌ மறுத்த பொழுது.. அங்கு பணம் விளையாடியது. அவன் கேட்ட விபரங்கள் கையில் கிடைத்தது.

பின் துப்பறியும் நிறுவனத்தை அணுகி.. அந்த நோயாளியின் முகவரியை கொடுத்தவன், அபர்ணாவின் ஒத்த சாயல் கொண்ட பெண்ணின் காணொளியையும் காட்டினான்.

“இந்த அட்ரஸில் இருப்பவரின் பெண்ணாக இருக்கலாம் அல்லது இவரது உறவினர்களில் யாரோ ஒருவராக இந்த பெண் இருக்கலாம்! யார் என்று கண்டுப்பிடித்து அவளைப் பற்றிய விபரங்கள் வேண்டும்.” என்றுக் கூறினான்.

அடுத்த நான்கு நாட்களில் அவன் கேட்ட விபரங்களுடன் அவளது படங்களும் அவனது கம்ப்யூட்டருக்கு வந்தன.

மெல்ல ஆட்காட்டி‌ விரலை உயர்த்தி அவளது முகவடிவை அளந்தான். பின் விபரங்களை பார்த்தான்.

பெயர் : ஷம்ருதா
வயது : இருபத்திநான்கு
படிப்பு : விஷுவல் கம்யூனிகேஷன்
ஸ்ட்டெட்டஸ் : சின்கிள்

அவளது முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது.

புன்முறுவலுடன் பார்த்தவன், உடனே அங்கு செல்ல மனம் பரபரக்க‌.. கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான். நேரம் இரவு ஒன்பதை காட்டவும், நாளை செல்ல முடிவெடுத்தான்.

பின்பே அவனுக்கு அன்று.. நண்பர்களுடன் கெட் டு கெதர் பார்ட்டி ஏற்பாடு செய்திருப்பது நினைவிற்கு வந்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்பு.. கூட அவனது நண்பன் விமல் அழைத்து நினைவுப்படுத்தினான். ஆனால் இந்த ஒரு மணி நேரம்.. அவன் வேறு உலகத்திற்குள் இருந்திருக்கிறான். புன்சிரிப்புடன் கணிணியை மூடி‌ வைத்துவிட்டு.. அவர்கள் ஏற்பாடு செய்திருந்த.. ரெஸ்டாரன்ட்டிற்கு சென்றான்.

அங்கு பதிவு செய்து வைத்திருந்த மேசையில் அவனது நண்பர்கள் விமல், விதார்த், ரஞ்சித் மற்றும் ஸ்ரீராம் அமர்ந்திருந்தார்கள். கூடவே விமல் திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் பெண் ப்ரீத்தி! ஸ்ரீராமின் காதலி கன்னிகா, ரஞ்சித்தின் மனைவி சாருமதியும் அமர்ந்திருந்தார்கள்.

இந்த நான்கு பேரும்.. பள்ளிப் படிப்பில் இருந்து ஒன்றாக படித்த உயிர் தோழர்கள்!

அன்று.. விபத்து நடந்த பொழுது.. தனது காதலியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க தான்.. வந்துக் கொண்டிருந்தான். அதற்குள் விபத்து நிகழ்ந்து விட.. பதட்டத்துடன் ஓடி வந்தார்கள்.

நண்பன் அறிமுகம் செய்து வைக்காத அவனின் காதலியை விட.. அவர்களுக்கு.. யஷ்வந்தின் நலம் தான் முக்கியமாக பட.. முடிந்தளவு அவனை பழையபடி துறுதுறுப்பாக வைத்துக் கொள்ள தங்களால் ஆனா முயற்சிகள் செய்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

இதோ இப்பொழுது கூட.. பத்து நாட்கள் கழித்து வரும் யஷ்வந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை பற்றி திட்டம் போட தான் கூடியிருக்கிறார்கள்.

யஷ்வந்த் வருவதை பார்த்தவர்கள்‌ உற்சாகத்துடன் கையை ஆட்டி வரவேற்றார்கள். புன்னகையுடன் வந்த யஷ்வந்தை பார்த்தவர்களின் கண்கள் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் விரிந்தது.

“ஹாய் பிரெண்ட்ஸ்..” என்று வந்த யஷ்வந்த் அவர்களின் முகத்தைப் பார்த்து சிரித்தான்.

விமல் “என்னாச்சு! உன் முகத்துல பல்பு எரியுது.” என்று வழக்கம் போல ஓட்டினான்.

அதற்கு யஷ்வந்த் “ரியலி!” என்று அதற்கும் முறுவலித்தான்.

விதார்த் “நாங்க என்ன விசயம் என்றுக் கேட்காமலேயே நீயே சொல்லுவேனு நினைக்கிறேன்.” என்கவும், யஷ்வந்தின் முகம் சிறுத்தது.

பின் “சொல்வதற்கு விசயம் இருக்கணும் விதார்த்! எனக்கே இன்னும் அந்த மேட்டர்.. நிச்சயமா என்று தெரியலை. அப்படி அந்த மேட்டரில் கிளியர் ஆகிற போது.. உங்களுக்கு சொல்கிறேன்.” என்றான்.

ரஞ்சித் தனது தலையில் கையை வைத்து.. “நீ சொல்றது எனக்கு சத்தியமா புரியலை!” என்றான்.

அதற்கு விமல் சிரித்தவாறு “உனக்கு எதாவது விசயம் புரிந்தால் தான் அதிசயம்..” என்றான்.

பின் விமல் யஷ்வந்தை பார்த்து “யஷ்வந்த்! ரியலி நீ ஒகே தானே?” என்றுக் கேட்டான்.

அதற்கு யஷ்வந்த் “ஐயம் நாட் ஒகே! ப்ரீத்தியை பார்க்கிற போதெல்லாம் கில்டியா இருக்கு.. எதுக்கு உன் மேரேஜ்ஜை நிறுத்தினே?” என்றுக் கேட்டான்.

அதற்கு விமல் “உனக்கு ஆக்ஸிடென்ட் ஆகி.. நீ ஹஸ்பெட்டல இருக்கும் போது.. எப்படி நான் மேரேஜ் செய்துக் கொள்வது?” என்றுக் கேட்டான்.

ப்ரீத்தி “யஷ்வந்த்! எங்களுக்கு பிரச்சனையே இல்லை. நாங்க மேரேஜ்ஜை நிறுத்தலையே தள்ளி தானே போட்டிருக்கோம். அப்போ தான் மேரேஜ் இன்வடேஷன் கொடுக்க ஆரம்பித்திருந்தோம். அதனால் பெருசா.. எந்த நஷ்டமும் வரலை. நீங்க ப்ளீஸ் ப்ரீயா விடுங்க..” என்றான்.

அதற்கு யஷ்வந்த் “அதுமட்டுமா.. என்னைப் பார்த்தா.. நீங்க ஜோடியா சுத்துவதைப் பார்த்து பொறாமை படர மாதிரியோ.. ஃபீல் பண்ர மாதிரியோவா இருக்கு! நீ மேரேஜ்ஜை நிறுத்தி வச்சுருக்கே! அவன் என் முன்னாடி வைஃப் கிட்ட‌ பேசரது இல்லை. அவன் லவ்வரை கண்ணுலேயே காட்டுவது இல்லை. அதனால் தான் எல்லாரையும் இன்னைக்கு கூட்டிட்டு வரச் சொன்னேன்.” என்றான்.

ஸ்ரீராம் “அப்படியில்லை டா” என்கவும், யஷ்வந்த் “அஃகோர்ஸ் அபர்ணாவை நான் இழந்திருக்க கூடாது. அவ கூட வாழர வாழ்க்கை பற்றி நிறையா கற்பனை செய்து வச்சுருந்தேன். அதெல்லாம் ஒண்ணுமே இல்லாம போனதாலே அப்செட் ஆனது உண்மை தான்! இன்னும் அதுல இருந்து என்னால் வெளியே வர முடியலை தான்! பட் எஸ்.. அதுல இருந்து வெளி வர ட்ரை செய்கிறேன் டா..” என்றவனுக்கு.. சிசிடிவியில் பார்த்த ஷம்ருதா நினைவிற்கு வந்தாள்.

பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்த்தவன்.. அனைவரும் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள்.

யஷ்வந்த் “வா.‌. வாட்!” என்கவும்.. அனைவரும் “ஹெ..” என்ற கத்தலுடன் அவனை அணைத்துக் கொண்டார்கள்.

பின் வழக்கமான கலகலப்பு இல்லை என்றாலும்.. சிரிப்பு சத்தம் அங்கே கேட்டது. விரும்பிய உணவை தருவித்து சாப்பிட ஆரம்பித்தனர்.

ஸ்ரீராம் அடுத்த பேச்சை ஆரம்பித்து வைத்தான்.

“ஒகே லெட்ஸ் கம் டு திஸ் மேட்டர்! இன்னும் டென் டேஸில் வருகிற உன் பர்த்டேக்கு எங்களுக்கு செம ட்ரீட் வந்தாகணும். யஷ்வந்த்! எங்கே போகலாம். கோவா, குலுமாணலி, தாய்லாந்து, இலண்டன்..” என்று அடுக்கி கொண்டே போனான்.

அதற்கு யஷ்வந்த் “யூவர்ஸ் விஷ்!” என்றுப்‌ புன்னகைத்தான்.

நண்பனின் பட்டும் படாமல் வந்த பதில்.. மற்றவர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும்.. வெகுநாட்களுக்கு பின்.. முகத்தில் சோக ரேகை இல்லாமல்.. இதற்கு சம்மதம் தெரிவித்ததே மகிழ்ச்சி கொண்டார்கள்.

ஸ்ரீராம் தாய்லாந்து என்றும் ரஞ்சித் குலுமணாலி என்றும்.. ஆளுக்கு ஒன்றை சொல்லி வாதிட்டு கொண்டிருந்தார்கள்.

அதில் விதார்த் அடிக்கடி கைக்கடிகாரத்தையும்..‌ செல்பேசியையும் வாசலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைக் கவனித்த யஷ்வந்த் “ஆர் யூ எக்ஸ்பெக்ட்டிங் சம்ஒன்?” என்றுக் கேட்டான்.

அதற்கு விதார்த் அசட்டு சிரிப்புடன் “ஆக்சுவலி உனக்கு சர்பரைஸ்டா! சர்பரைஸிற்கு விபரம் கேட்க கூடாது.” என்கவும், யஷ்வந்த் சத்தமாகவே சிரித்தான்.

உடனே மற்றவர்கள் “என்னது மறுபடியும் சர்பரைஸா!” என்று‌ அதிர்ச்சி போல் கேட்டு கண்ணடித்தார்கள்.

அவர்களது கிண்டல் புரிந்த விதார்த் அலறியவனாய் “மறுபடியும் ஒரு சர்பரைஸை கொண்டு வந்தால்.. எனக்கு தர்ம‌அடி கன்பார்ம்! இரண்டு நாளுக்கு முன்னாடி உங்களுக்கு சொன்ன அதே சர்பரைஸை தான் இப்போ காட்ட போறேன்.” என்று அறிவித்தான்.

மற்றவர்கள் “ஹெ சூப்பர்!” என்று‌ மேசையை தட்டி அர்ப்பரித்தார்கள்.

அப்பொழுது.. பலமாகவும் அழுத்தமாகவும் படபடவென மேசையை தட்டி.. ஆர்ப்பரிப்பை அடக்கிய யஷ்வந்த் “என்ன விசயம் என்று சொல்லுலைன்னா.. உங்களை நான் துரத்தியடிப்பது உறுதி!” என்றான்.

அப்பொழுது விதார்த்தின் செல்பேசி ஒலிக்கவும், “எஸ்! எஸ்! இங்கே தான் இருக்கோம். ஆஃப் அன்‌ ஹவுரா வெயிட் செய்றோம். டேபிள் நம்பர் சிக்ஸ்டின்ல இருக்கோம். லெல்ஃப்ட் சைட் ஆஃப் த டொர்” என்று‌ யாருக்கோ விபரம் கூறினான்.

வருவது ஒரு நபர் என்பது வரை தெரிந்த யஷ்வந்த் அசட்டையுடன் வாசல் கதவை பார்த்தான். அங்கு காதில் செல்பேசியுடன் வந்து நின்ற பெண்ணை பார்த்ததும்.. சில்லென்ற அவனது இதயம் உறைந்தது.

எந்த பெண்ணால்.. அவனது முகத்தில் மீண்டும்.. தெளிவு வந்ததோ! எந்த பெண்ணை நாளை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தானோ! அந்த பெண்.. ஷம்ருதா அங்கே நின்றிருந்தாள்.

விதார்த் எழுந்து கையசைக்கவும், அவளும் முறுவலுடன் கையசைத்துவிட்டு.. அவர்களை நோக்கி நடந்து வந்தாள்.

யஷ்வந்த் இன்னும் உறைந்தவனாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மனதில் பல வண்ண எண்ணங்கள்‌ ஓடிக் கொண்டிருந்தன.

அவன் இந்த பெண்ணை சந்திக்க விரும்பியதை அறிந்து அவனது நண்பர்கள் ‘சர்பரைஸாக’ சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார்களோ!

அவர்கள்‌ எப்படி அறிவார்கள்?

அவனது மனதையும் அறிவார்களா?

அபர்ணாவை இவர்கள் பார்க்கவில்லையே.. பின் எதற்கு இவளை நான் சந்திக்க விரும்பினேன் என்று அறிவார்களோ?

அவனது மனதில் இத்தனை கேள்விகள்‌ ஓடிக் கொண்டிருந்தாலும்.. இமைகளை கூட அசைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

எதற்கு இவளை சந்திக்க விரும்பினான்.. என்றுக் கேட்டால்.. அவனிடம் பதிலில்லை. அபர்ணாவை ஒத்த சாயல் கொண்டதால்.. இவளிடம் அபர்ணாவை தேடுகிறானா.. என்று கேட்டால் அதற்கும் பதிலில்லை. அவனுக்கு வேண்டியது.. சிறு சந்திப்பு மட்டுமே.. அந்த சந்திப்பு எதில் கொண்டு போய் முடியும் என்று அவனுக்கு தெரியாது.

அவனுக்கு வேண்டியது என்ன!

அபர்ணாவை ஒத்த சாயலை கொண்டவளிடம் சிறு ஆறுதலா! சிறு கருத்து பரிமாற்றமா! காதலா! நிறைவேறாத விருப்பதையா!

எதை எதிர்பார்க்கிறான் என்று அவனுக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் தற்பொழுது அவன் இருக்கும் இடத்திற்கு அவளே வருவாள்‌ என்று எதிர்பார்க்கவில்லை. அவனது மனதில் தானாக தோன்றிய படபடப்பையும் அவனால் அடக்க முடியவில்லை.

அதற்குள் அருகில் வந்துவிட்டவளை எழுந்து நின்று விதார்த் ஒரு கட்டியணைப்புடன் வரவேற்கவும், யஷ்வந்தின் புருவம் யோசனையில் சுருங்கியது.

மற்றவர்களும் எழுந்து நின்று.. அவளிடம் கரத்தை குலுக்கி வாழ்த்தினர்.

யஷ்வந்தின் உள்மனது ஏதோ சரியில்லை என்றுக் கூறியது.

புன்னகையுடன் யஷ்வந்தின் புறம் திரும்பிய விதார்த் “யஷ்வந்த்! இவ ஷம்ருதா! என்னோட வுட் பீ!” என்று‌ அறிமுகம் செய்தான்.

யஷ்வந்தின் புருவம் மேலும் சுருங்கியது.

அவனும் புன்னகையுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவிப்பான் என்று ஷம்ருதா காத்திருக்க.. யஷ்வந்தோ “டேக் யுவர் சீட்!” என்று இன்டர்வீயூக்கு வந்தவர்களை அமர கூறுவது போல் கூறினான்.

அதைக் கேட்டு ஷம்ருதாவின் முகம் சுருங்கியது.

மற்றவர்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை போல!

அவர்கள் விதார்த்திடம் ஜோடி பொருத்தத்தை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ரஞ்சித் ஷம்ருதாவிடம் “இவன் சரியான ஆளு! உங்களைப்‌ பற்றி ரிவால்வ் செய்ய.. பந்தா காட்டினான் தெரியுமா! புது படம் ரீலிஸ் ஆகிறதுக்கு முன்னாடி.. முதல்ல போஸ்டர் ரீலிஸ் செய்வாங்க.. அடுத்தது கிளிம்ப்ஸ்.. அடுத்து லீரிக்ஸ் வீடியோ.. அடுத்து ஆடியோ லன்ச்.. அப்பறமா படம் ரீலிஸ் மாதிரி செய்தான். முதல்ல வீட்டுல பொண்ணு பார்க்கிறாங்கனு சொன்னான். அப்பறம் மீட் செய்தோம் என்று சொன்னான். அப்பறம் மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சுனு சொன்னான். அப்பறம் பேரை சொன்னான். இன்னைக்கு தான் ஆளையே காட்டியிருக்கிறான்.” என்றான்.

உடனே ஷம்ருதா “ஹெ.. சும்மா விதார்த்தை ஓட்டாதீங்க.. அவன் வீட்டுல பொண்ணு பார்க்கிறாங்கனு சொன்ன போதும் சரி.. பிக்ஸ் ஆகிடுச்சுனு சொன்ன போதும் சரி.. நீங்க யாரும் நம்பலை தானே!” என்றாள்.

விமல் “பின்னே இவனை மாதிரி ஒரு ஆளு வீட்டுல பார்த்த பொண்ணை மேரேஜ் செய்துக்க போகிறான் என்றுச் சொன்னா எப்படி நம்புவது!” என்றுச் சிரித்தான்.

விதார்த் “ஹெ.. என் அப்பாவும் இவ அப்பாவும் பிரெண்ட்ஸ்! நாங்க எப்போதாவது எதாவது பார்ட்டியில பார்த்துப்போம் அவ்வளவு தான் ஷம்ருதா கூட பழக்கம்! அவங்க தான் பேசி.. இந்த சம்பந்ததை முடிச்சாங்க.. எங்களுக்கு ஒகே! அவ்வளவு தான்!” என்றவன், பின் தொடர்ந்து “அப்பறம்.. இவ லேசுப்பட்ட ஆளில்லை. இவ இன்டர்நேஷனல் ஸ்விம்மிங் சேம்பியன்! சிங்கப்பூர்ல நடந்த போட்டியில் கோல்ட் மெடல் வாங்கியிருக்கா‌‌!” என்றதும்.. அனைவரும் கைத்தட்டி வாழ்த்தினர்.

“தேங்க்யூ! தேங்க்யூ! தேங்க்யூ!” என்று தலையை ஆட்டி வாழ்த்தை ஏற்றவள்.. அப்பொழுதே இவர்களின் எந்த பேச்சிலும் கலந்து கொள்ளாது.. யஷ்வந்த் அவளையே‌ பார்த்துக் கொண்டிருப்பதைக் பார்த்தாள்.

அதைப் பார்த்த ஷம்ருதாவிற்கு கடுப்பானாது.

விமல் “சரி பேசியதை கன்டினியூ செய்யலாமா! இந்த வேகேஷன் ப்ளஸ் யஷ்வந்த் பர்த்டே செலபேரேஷனுக்கு எங்கே போகலாம்?” என்றுக் கேட்டான்.

அதற்கு ரஞ்சித் “இன்றைய ஸ்பெஷல் மூமென்ட்டுக்கு காரணமான நம்ம விதார்த் பியான்ஸியை டிசைட் செய்ய சொல்லலாமா?” என்றுச் கேட்டான்.

மற்றவர்கள் எஸ் என்று ஆமோதித்தவாறு கை தட்டினார்கள்.

அப்பொழுது யஷ்வந்த் அழுத்தமான குரலில் “வெகேஷன் வராதவங்க கிட்ட எதுக்கு ஒப்பீனியன் கேட்கணும். நீங்க டிசைட் செய்யுங்க!” என்றுக் கூறினான்.

ஏனோ யஷ்வந்திற்கு உள்ளே எரிவது போன்று இருந்தது.

அவன் ஷம்ருதாவை சந்தித்த பின்.. அவளைப் பொருத்தவரை அவனது நிலை என்ன என்றுத் தெரிந்த பின்.. இன்னொருவருக்கு சொந்தமாக போகிறாள்.. என்று தெரிந்திருந்தால்.. ஒன்றும் தோன்றியிருக்காது. ஆனால் திடுமென இன்னொருவனுக்கு சொந்தமானவள் என்று நிற்கவும்.. யஷ்வந்திற்கு ஏனோ அவனது விசயத்தை அவனது அனுமதியின்றி.. மற்றவர்கள் தீர்மானம் செய்து விட்டது போன்று இருந்தது. கூடவே நினைத்தது நடக்க வேண்டும்.. என்ற குணம் கொண்டவனுக்கு.. அபர்ணாவுடனான அவனது வாழ்வு என்றும் நிறைவேறாத விசயமாக ஆகிவிட்டதால் வந்த இறுக்கம் கொண்டிருந்தான். தற்பொழுது‌‌.. இதுவும் அவன் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக போய்விடுமோ.. என்று மேலும் கல் என இறுகி நின்றான். எனவே வார்த்தைகளும் கடினமாக வந்தது.

மற்றவர்கள் நண்பனுக்கு மனைவியாக போகிறவளை யஷ்வந்த் சீண்டி விளையாடுகிறான் என்று நினைத்தார்கள்.

ஆனால் முதலிலேயே யஷ்வந்த் தன்னை அவமரியாதை செய்துவிட்டது போன்ற எண்ணத்தில் இருந்த ஷம்ருதாவிற்கு..‌‌ யஷ்வந்த் அவளை ஒதுக்கி பேசியது மேலும் கடுப்பை ஏற்றியது.

“இனி விதார்த் நானில்லாமல் எங்கேயும் போக மாட்டான். ஆனா விதார்த் உங்களோட பெஸ்ட் பிரெண்ட்.. உங்க கூட வெகேஷனுக்கு கண்டிப்பா வருவான். இப்போ நான் பேசியதின் அர்த்தம் புரியுதா!” என்றுக் கேட்டாள்.

விதார்த் முகம் பிரகாசம் ஆக‌‌.. “ஹெ ஷம்ருதா! நிஜமா சொல்றீயா! எங்க கூட வரீயா! வீட்டுல ஒத்துக்குவாங்களா?” என்று‌ ஆசையும் மகிழச்சியுமாக கேட்டான்.

அதற்கு ஷம்ருதா “உன் கூட தானே வரப் போறேன். இதுல அவங்க எதுக்கு நோ சொல்ல போறாங்க..” என்று வாயில் கையை வைத்துச் சிரித்து கண்ணடிக்கவும், புரிந்த விட்ட நண்பர்கள் “ஹெ!” கத்தினார்கள்.

ஷம்ருதா சிரித்தவாறு “அவரோட பிரெண்ட்ஸ் குரூப் நீங்களெல்லாம் கூட வரீங்க என்கிற போது.. என் பெரெண்ட்ஸ் ஒகே தான் சொல்வாங்க..” என்றாள்.

அப்பொழுது யஷ்வந்த் “உங்களுக்கு கொடுத்த டைம் ஓவர்! பிளஸை நானே டிசைன் செய்கிறேன். நாம வெகேஷனுக்கு மாலத்தீவு போகிறோம். என்னோட ஷீப்ல தான் போகப் போகிறோம் டாட்” என்று முடித்து வைத்தான்.

மற்றவர்கள் “வாவ் சூப்பர்! செம பிளன்! ஹவர் யஷ்வந்த் இஸ் பேக்!” என்று மேசையில் தட்டி தங்களது சந்தோஷத்தை தெரிவித்தார்கள்‌.

பின் ஒருத்தரை ஒருத்தர் காலை வாரியவாறும் புதிதாக அவர்களது குழுவில் இணைந்திருக்கும்.. ஷம்ருதாவை பற்றி விசாரித்தவாறு சாப்பிட்டு முடித்தார்கள்.

இந்த பேச்சில் யஷ்வந்த் கலந்து கொள்ளவில்லை என்றாலும்.. அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

சாப்பிட்டு முடித்ததும்.. அவனது சிறு சொகுசு கப்பல்.. அரபி கடலில் பயணம் செய்ய அரசிடம் அனுமதி வாங்கியதும்.. இரு நாட்களில் கிளம்பலாம். அனைவரையும் தயாராக இருக்கமாறு யஷ்வந்த் கூறினான். பின் அனைவரும் கலைந்தார்கள்.

கார் பார்க்கிங்கில் லாக் கீயை அழுத்தியவாறு.. யஷ்வந்த் சென்றுக் கொண்டிருந்த பொழுது “எக்ஸ்க்யூஸ் மீ!” என்ற குரலில் திரும்பிப் பார்த்தான்.

அங்கு ஷம்ருதா நின்றிருந்தாள்.

யஷ்வந்த் திரும்பி பார்த்ததும்.‌. அவனை நோக்கி வந்தவள் எடுத்த எடுப்பில் “என்னை உங்களுக்கு தெரியுமா!” என்றுக் கேட்டாள்.

யஷ்வந்த் அமைதியாக புருவத்தை சுருக்கவும், “முதலிலேயே நாம் மீட் செய்திருக்கோமா?” என்று அடுத்த கேள்வியை கேட்டாள்.

ஷம்ருதா தொடர்ந்து “இப்படி சைலன்டா இருந்தால் ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுக்காதீங்க! உங்களுக்கு நான் இங்கே வந்தது பிடிக்கலைனு கிளியரா தெரியுது.” என்றாள்.

அப்பொழுதும் யஷ்வந்த் அமைதியாக இருக்கவும்.. ஷம்ருதா “உங்களுக்கு பிடிக்காத ஏதோ விசயத்தை.. நான் செய்துட்டேன் போல..” என்கையில் யஷ்வந்த் குறுக்கிட்டான்‌.

“எஸ்”

உடனே ஷம்ருதா மார்பிற்கு குறுக்கே கரங்களை கட்டிக் கொண்டு “அப்படியா! அப்படி நான் என்ன செய்தேன்?” என்று கேட்ட மறுகணம் யஷ்வந்திடம் இருந்து பதில் வந்தது.

“விதார்த்துடன் மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்க கூடாது. என் கூட உன் லைஃப் இணைந்திருக்கணும்.”















 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2

“ஹவ் டேமிட்! என்ன பார்த்ததும் லவ்வா!” என்ற ஷம்ருதா நக்கல் சிரிப்புடன் “இந்த மாதிரி கதையெல்லாம் ஓல்டு ஃபேஷன்! படத்துல வந்தா கூட ட்ரோல் செய்வாங்க! சோ டொன்ட் தின்க் ஃபுலீஷ்!” என்று கடுமையான வார்த்தைகளை உபயோகித்தாள்.

யஷ்வந்தின் விழிகள் இடுக்கியது.

அவளிடம் நெருங்கியவன் “உன்னை லவ் செய்கிறேன்னு எப்போதாவது சொன்னேனா..” என்றுக் கேட்டான்.

“அப்போ நீ சொன்னதிற்கு என்ன அர்த்தம்!” என்றுக் காட்டத்துடன் கேட்டாள்.

“யூ ஆர் மைன்!”

“வாட்!”

யஷ்வந்த் தோள்களை குலுக்கினான்.

ஷம்ருதா கோபத்துடன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு “வாட் யூ மீன்!” என்றாள்.

“நான் என்ன ஃபீல் செய்கிறேனோ அதைத் தான் சொன்னேன். நீ விதார்த்திற்கு பதிலாக என்னை லவ் செய்திருக்கலாம்.” என்றான்.

ஷம்ருதா “ஆர் யூ மேட்! நோ யூ ஆர் டெஃப்னல்டி எ‌ மேட்! உன்கிட்ட வந்து பேசினது என் தப்பு! நீ தனியா புலம்பிட்டே போ! நான் என் வழியை ஐ மீன் என் லைஃப்பை பார்க்கிறேன். நான் இந்த வெகேஷனுக்கு வரலை. உன்னை வெறுப்பேத்த தான் வருவதா சொன்னேன். குட்பை!” என்று சின்னதாக ஒரு சல்யூட் வைத்துவிட்டு அகல முயன்றாள்.

யஷ்வந்த் “உன்னை வரவழைச்சுட்டா!” என்றுக் கேட்டான்.

அதற்கு வாயை ஒரு பக்கமாக இழுத்து நக்கலாக சிரித்தவாறு அவனைப் பார்த்த ஷம்ருதா “என் டிஷிசன்.. என் கையில தான் இருக்கும். காட் இட்!” என்றுவிட்டு திரும்பியும் கூடப் பார்க்காமல் செல்ல முயன்றாள்.

அப்பொழுது விதார்த் “ஹெ‌! ஹெ! என்னாச்சு!” என்றவாறு ஷம்ருதாவிடம் வந்தான்.

சற்று தொலைவில் அவர்களைப் பார்த்தவாறு வந்த விதார்த்திற்கு.. இருவரும்.. பேசியது கேட்கவில்லை என்றாலும்.. குறிப்பாக ஷம்ருதா யஷ்வந்திடம் ஏதோ விவாதம் செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். எனவே என்னவாகிற்று என்று விபரம் கேட்டான்.

ஷம்ருதா “உன் பிரெண்ட் லிமிட்டை க்ராஸ் செய்து பேசறேன். எப்படி இவனை பிரெண்ட்டா வச்சுகிட்ட! மை காட்!” என்றாள்.

விதார்த் மீண்டும் புரியாது “என்னாச்சு?” என்று இருவரையும் பார்த்து கேட்டான்.

ஷம்ருதா கோபத்துடன் கூறப் போகையில் குறுக்கிட்ட யஷ்வந்த் “விதார்த்! செமையா மாட்டிக்கிட்டே! வாழ்த்துக்கள்” என்றுச் சிரித்தான்.

ஷம்ருதா குழப்பமும் கோபமுமாக பார்க்கையில் யஷ்வந்த் தொடர்ந்து “சின்னதா சீண்டி விளையாடியதிற்கே எண்ணெய்ல போட்ட கடுகு மாதிரி வெடிக்கிறாங்க..” என்று மீண்டும் சிரித்தான்.

தற்பொழுது ஷம்ருதா “வாட்!” என்றுவிட்டு “நோ விதார்த்! டொன்ட் ட்ரஸ்ட் ஹிம்! யு ஆர் மைன், விதார்த்திற்கு பதிலாக என்னை லவ் செய்திருக்கணும் என்றுச் சொன்னான். அது பொய் இல்லை!” என்றாள்.

விதார்த் குழப்பத்துடன் யஷ்வந்தை பார்க்கவும், சட்டென்று.. விதார்த்தின் கழுத்தை தனது கரத்தால் வளைத்து தன் பக்கம் குனிய வைத்து யஷ்வந்த் “மற்றவங்களுக்கு முதலிலேயே விசயத்தை சொல்லியிருக்க.. என்கிட்ட இப்போ தான் இந்த நீயூஸ் சொல்றீயா! ஏன் முதலிலேயே சொல்லுலை!” என்று இருக்கவும், “ஸாரிடா! ஸாரிடா! எனக்கு சங்கடமா இருந்துச்சு!” என்று யஷ்வந்தின் கை வளையத்துக்குள் இருந்து தனது தலையை விடுவிக்க போராடியபடி மன்னிப்பு கேட்டான்.

அவனுக்கு விடுதலை அளித்த யஷ்வந்த் “என்னடா சங்கடம் வேண்டி கிடக்கு! என்னைப் பார்த்த உங்களைப் பார்த்து பொறாமைப்படர ஆள்‌ மாதிரி இருக்கா.. இல்லை உன் லவ்வரை நான் ரூட் போட்டு வளைச்சு போடுகிற ஆள் மாதிரி இருக்கா! அதுதான் அவ கிட்ட அப்படி விளையாடினேன். பாவம் செம டென்ஷன் ஆகிட்டா..” என்றுச் சிரித்தான்.

தற்பொழுது ஷம்ருதாவிற்கு விசயம் புரிய பட “வாட் விளையாடினீங்களா! எதோ உங்கள் நல்ல காலம்.. நான் நல்ல மூடில் இருந்தேன். வேற மாதிரி மூடில் இருந்திருந்த‌‌.. பளார்னு ஒண்ணு விட்டிருப்பேன்.” என்றான்.

யஷ்வந்த் புருவத்தை உயர்த்தி பார்க்க.. விதார்த் அவசரமாக அவளுக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டான்.

“ஸாரி யஷ்வந்த்! அவளும் விளையாட்டாய் தான் சொல்றா..” என்றான்.

ஷம்ருதா “இல்லை விதார்த் நான் உண்மையை தான் சொல்றேன்.” என்றாள்.

விதார்த் “ப்ச் பேசாம வா ஷம்ரு!” என்று‌ அடிக்குரலில் அவளிடம் கெஞ்சியவன், “நாளைக்கு பார்க்கலாம் யஷ்வந்த்!” என்று தலையை ஆட்டி விடைப்பெற்றுக் கொண்டு.. கிட்டத்தட்ட ஷம்ருதாவை இழுத்துக் கொண்டு சென்றான்.

அவள் செல்வதையே முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்த யஷ்வந்தின் முகத்தில் முறுவல் மறைந்து கடினம் தோன்றியது.

காரில் ஏறி அமர்ந்தும் ஷம்ருதா “ஏ எதுக்கு என்னை இழுத்துட்டு வந்தே.. இதெல்லாம் எனக்கு பிடிக்காது.” என்றாள்.

விதார்த் “ப்ச்! அவனைப் பற்றி தெரியாம பேசிட்டு இருக்கியேனு தான் இழுத்துட்டு வந்தேன்.” என்றான்.

“என்ன விசயம்! எல்லாரும் ஏன் அவனை அப்படி தாங்கறீங்க?” என்றுக் கேட்டாள்.

விதார்த் யஷ்வந்தின் காதலை பற்றியும்.. ஆறு மாதத்திற்கு முன்.. நடந்த விபத்தில் தனது காதலியை இழந்ததைப் பற்றியும் கூறினான்.

“அதுக்கு பிறகு.. ரொம்ப சைலண்ட் ஆகிட்டான். எதிலுமே பிடிப்பே இல்லாம இருந்தான். இன்னைக்கு தான் பழைய மாதிரி கொஞ்சம் கலகலப்பாக பேசினான்.”

“ஸாரி! இப்போ புரியுது. முதல்ல ஒரு மாதிரி ஏன் சைலன்ட்டா இருந்தார். நீங்களும்‌‌.. அதைக் கண்டுக்காத மாதிரி உட்கார்ந்திருந்தீங்க! நான் திமிர்னு நினைச்சுட்டேன். எல்லாரும்.. உங்களோட காதல் விசயம் அவருக்கு சங்கடம் வரக் கூடாதுனு மறைச்சு கடுப்பை கிளப்பியிருக்கீங்க..” என்றாள்.

விதார்த் “அப்படித்தான் போல..” என்று என்று அசட்டுச்சிரிப்பு சிரித்தான்.

உடனே ஷம்ருதா “அதுக்கு நான்தான் கிடைச்சேனா.. அவருக்கு உங்க மேலே தானே கடுப்பு.. உங்களை பளார்னு ரெண்டு அறை கூட விட்டுருக்களாமே.. எதுக்கு என்னை கலாய்த்தார்!” என்கவும், விதார்த் சிரித்தவாறு “யஷ்வந்த் சரியாக தான் சொல்லியிருக்கான். சரியான ஆன்கரி பேர்ட் கிட்ட மாட்டிட்டேன் போல..” என்றான்.

பின் அவனது முகத்தில் சிரிப்பு மறைந்தது.

“ஷம்ரு! உனக்கு சில விசயங்கள் எல்லாம் பிடிக்காதுனு சொன்னே தானே! எனக்கும் சில விசயங்கள் பிடிக்காது. எனக்கு மனைவியா வரப் போகிறவ.. சாஃப்ட் டைப்பா இருக்கணும் என்று எதிர்பார்க்கிறேன். இப்படி ஆட்டிட்யூடு காட்ட கூடாது.” என்று உணர்ச்சிகளற்ற குரலில் கூறினான்.

அவனுக்கு பதில் வாயை திறந்த பொழுது.. அவளது செல்பேசிக்கு அழைப்பு வரவும், அதை ஏற்று பேசினாள்.

அதனால் அங்கு அவர்களிடையே முதல் விவாதம் தடைப்பட்டது.

விதார்த் அவன் கூறியதும்.. ஷம்ருதா அமைதியாகி விட்டதாக நினைத்தான்.

வீட்டிற்கு சென்ற யஷ்வந்த்.. ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தந்தையும் தாயையும் கவனியாது நேராக தனது அறைக்கு சென்றான். இழுத்து கதவை சாத்தியவன், அருகில் கைக்கு அகப்பட்ட பூச்சாடியை எடுத்து ஓங்கி தரையில் அடித்தான். அவனுக்கு அவனை நினைத்தே கோபமாக இருந்தது‌.

அவனது தோழனை திருமணம் செய்துக் கொள்ள போகும் பெண்ணிடம் பேசும் முறை அல்ல.. என்று அவனுக்கு தெரியும். ஆனாலும்.. அவனால் தன்னைக் கட்டுப்படுத்தி கொள்ள முடியவில்லை.

விதார்த் வந்ததும்.. தான் பேசியதிற்கு வேறு கூறி சமாளித்தவன், மன்னிப்பு கேட்கலாம் என்று நினைக்கையில்.. விதார்த் உரிமையுடன் அவளது கரத்தை பற்றி இழுத்து சென்றதை கண்டு மீண்டும்.. இதயம் கடினமுற்றது.

ஏனோ அவனுக்கு சொந்தமானவளை எப்படி அவன் உரிமையுடன் கரம் பற்றி இழுத்து செல்லலாம் என்ற ஆத்திரம் தான் தோன்றியது. அது தவறு என்றும் புரிந்தது.

இவை அவனது மனதை பொருத்தவரை.. அவனது நிலை! ஆனால் நிதர்சனமும் அவனுக்கு புரிந்து தான் இருந்தது‌.

ஷம்ருதா அவனது காதலி அல்ல! விதார்த்திற்கு மணம் முடிக்க பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட பெண்! அன்று மருத்துவமனையில் பார்த்த பின் இன்று தான் அவளைக் காணுகிறான். அவளுக்கும் அவனுக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை!

ஆனால்?!

ஆம் ஆனால் தான்.. அவளை சந்திக்க நினைத்திருந்தவன், அவளைச் சந்தித்த பின்.. இந்த சூழ்நிலை தெரிந்திருந்தால் அவளுடன் எந்த தொடர்பும் வேண்டாம் என்பது அவனது முடிவாக இருக்க வேண்டும். ஆனால் இந்த விதியின் விளையாட்டை வெறுத்தான்.

அப்பொழுது அவனது செல்பேசி அழைக்கவும், எடுத்து பார்த்தான்.. அவனது தந்தை அழைத்திருந்தார்.

“சொல்லுங்கப்பா!”

“என்னாச்சு யஷ்வந்த்! எத்தனை நாட்கள் இப்படி இருக்க போறே! நீ ஒன்றும் சின்னப்பிள்ளை இல்லைடா!”

“ஐயம் ஒகேப்பா! கொஞ்சம் அப்செட் ஆச்சு! பட் நான் சரியாகிருவேன். நீங்க வெர்ரி பண்ணிக்காதீங்க! இன்னும் டென் மினிட்ஸில் வரேன்.” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.

பின் பெருமூச்சுடன் குளியலறைக்குள் புகுந்தான், அங்கு இருந்த சின்கில் இரு கரங்களையும் ஊன்றி.. எதிரே இருந்த கண்ணாடியில் தனது பிம்பத்தை வெறித்து பார்த்தான்.

அன்று நடந்தவை அப்படியே மனதிற்குள் படமாக ஓடியது.

அபர்ணா கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழுதவாறு நின்றிருந்தாள்.

“அபர்ணா ப்ளீஸ் அழாதே! ஏன்.. அபர்ணா என் காதலை ஏத்துக்கிறதில் உனக்கு என்ன தடை?” என்றுக் கேட்டான்.

“ப்ளீஸ் என்னை விட்டுருங்க! எனக்கு இந்த காதல் எல்லாம் வேண்டாம். என் அக்கா.. காதல் செய்து வீட்டை விட்டு ஓடிப் போனதே போதும்.‌ என் பெரெண்ட்ஸ் ஒத்துக்க மாட்டாங்க! உங்களுக்கு ஒகே சொல்லி.. என் பெரெண்ட்ஸிற்கு கஷ்டத்தை நான் கொடுக்க மாட்டேன். நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் என்னால் முடியாது.” என்று விசும்பல்களிடையே கூறினாள்.

யஷ்வந்த் “ஓ.. மை காட்! இதுதான் விசயமா! இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே! நான் டைரக்ட்டா உன் பெரெண்ட்ஸ் கிட்டவே போயிருப்பேன். என் பெரெண்ட்ஸை கூட்டிட்டு நாளைக்கே உன் வீட்டுக்கு வரேன். உன் பெரெண்ட்ஸ் ஒகே சொன்னா.. உனக்கு ஒகே தானே! அதை மட்டும் சொல்லு!”

மெதுவாக நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் ஆச்சரியம் மிகுந்து இருந்தது.

அதைப் பார்த்து சிரித்த யஷ்வந்த் “ஏ.. என்னைப் பற்றி என்ன நினைத்தே.. காதல் என்கிற பெயரில் பழகி.. விட்டுட்டு போகிற ஆளுனு நினைச்சுட்டியா!”

அவளது விழிகளில் தெரிந்த சிறு குன்றலே.. அப்படித்தான் நினைத்திருக்கிறாள்.. என்பதை பறைச்சாற்றியது.

அதைப் பார்த்து அவனுக்கு கோபம் வரவில்லை சிரிப்பு தான் வந்தது.

“இப்போதாவது நம்பறீயா?”

அவள் தலைகுனிந்து மௌனம் காத்தாள்.

மெல்ல ஒரு எட்டு அவளை நோக்கி எடுத்து வைக்கவும், அவள் அவசரமாக நான்கு எட்டுக்கள் பின்னே நகர்ந்தாள்.

“ஒகே ஒகே.. ஈஸி ஈஸி! பக்கத்துல வரலை. ஆனா என் மேலே நம்பிக்கை இருக்கில்ல!”

அதற்கும் அமைதி காத்தாள்.

சிறு பெருமூச்சை இழுத்து விட்டு யஷ்வந்த் “சோ உன்னோட சாவி என் பெரெண்ட்ஸ் கிட்ட தான் இருக்கு! ஆல்ரைட் அவங்க கிட்டவே வாங்கிக்கிறேன்.”

குனிந்திருந்தவளின் இதழ்கள் சிரிப்பில் விரிந்தது.

யஷ்வந்த் “என் பிரெண்ட்ஸ் கிட்ட இன்னைக்கு தான் என் லவ்வை பற்றிச் சொன்னேன். அவங்க உன்னைப் பார்க்கணும் என்றுச் சொன்னாங்க! போய் பார்த்துட்டு வந்தரலாமா!” என்றுக் கேட்டான்.

அவள் மிரட்சியுடன் நிமிரவும்.. யஷ்வந்த் ஏமாற்றத்துடன் திரும்பினான்.

அப்பொழுது அவளது குரல் கேட்டது.

“வரேன்! உங்க மேலே நம்பிக்கை இருக்கு!”

தனது நண்பர்களிடம் தனது காதலியை அறிமுகப்படுத்த குதுகலத்துடன் சென்ற போது தான் அந்த அந்த கோர விபத்து நடந்தது. அபர்ணாவை அவன் இழந்தான்.

அவளுடன் வாழும் வாழ்வை பற்றி அவன் கட்டிய கற்பனை கோட்டை தவிடு பொடியாகியது. அவன் நினைத்த வாழ்வு வாழ முடியவில்லை.

வேகமாக நீரை அள்ளி முகத்தில் அடித்து.. அந்த நினைவுகளை கலைய முயன்றான்.

நிமிர்ந்து கண்ணாடியில் தனது முகத்தை பார்த்தவன், “அவள் யாரோ நீ யாரோ.. அவள் அபர்ணா ஆக முடியாது என்று உனக்கு நன்றாக தெரியும். ஜஸ்ட் லீவ் இட் யஷ்வந்த்!” என்றான்.

பின் தாங்கியில் மாட்டியிருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்தவன், மீண்டும் தனது முகத்தை பார்த்து “அப்பவும் உன்னால் கன்ட்ரோல் செய்ய முடியலைன்னா.. ஜஸ்ட் டு இட்!” என்றுவிட்டு சிரித்தான்.

நான்கு நாட்கள் கழித்து கொல்லம் கடற்கரையில் யஷ்வந்திற்கு சொந்தமான இரு அடுக்குகள் கொண்ட சிறு சொகுசு கப்பல் அவர்களுக்காக காத்திருந்தது.

நண்பர்களிடம் கூறியபடி.. அன்றே அரசிடம் அனுமதிக்காக விண்ணப்பித்து.. அவர்கள் வந்து.. சோதனை செய்து சரிப்பார்த்துவிட்டு அனுமதி கொடுத்தார்கள்.

குறிப்பிட்ட நாளில் நண்பர்கள் சிறு துறைமுகத்தில் கூடியிருந்தார்கள். அங்கு நான்கைந்து சொகுசு கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

ரஞ்சித் தனது மனைவியுடனும்.. ஸ்ரீராம் மற்றும் விமல் தங்களது காதலிகளுடனும் வந்திருந்தார்கள். இன்னும் விதார்த்தும் ஷம்ருதாவும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

விமல் “அனேகமாக விதார்த் தனியாக தான் வருவான்னு நினைக்கிறேன்.”

ரஞ்சித் “எஸ் நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.” என்றான்.

ப்ரீத்தி “ஏன்.. என்னாச்சு! ஷம்ருதா வீட்டுல பர்மிஷன் வரலையா?” என்றுக் கேட்டாள்.

அதற்கு ஸ்ரீராம் “ப்ரீத்தி போன தரம் நாங்க மீட் செய்த போது.. நீங்க வந்திருந்தா தெரிந்திருக்கும்.” என்றான்.

ப்ரீத்தி “ஏன் அப்படி என்ன நடந்தது?” என்றுக் கேட்டாள்.

விமல் “விதார்த்துக்கும் ஷம்ருதாவிற்கும் பயங்கர சண்டை! ஷம்ருதா கோவிச்சுட்டு எழுந்து போயிட்டாங்க!” என்றான்.

ப்ரீத்தி “அச்சோ! அப்படி என்ன சண்டை? நீங்க சமாதானப்படுத்தி இருக்க வேண்டியது தானே!” என்றாள்.

ரஞ்சித் “என்ன விசயமினு தெரியலை. நேத்து வரும் போதே.. ஒருத்தர் ஒருத்தர் முகத்தை திருப்பிட்டு தான் வந்தாங்க! எதோ பேசிட்டு இருக்கும் போது.. விதார்த் ஆரம்பித்தான். உனக்கு பொறுமை என்பதே கிடையாதா.. அவன் தான் பேசிட்டு இருக்கானே.. நடுவுல எதுக்கு பேசறேன்னு.. திட்டிட்டான். உடனே ஷம்ருதா நான் நடுவுல பேசறேனோ.. கடைசில பேசறேனோ.. அது என்னோட பழக்கம் என்னோட உரிமை! அதை அப்படி செய்.. இப்படி செய்.. மாத்திக்கோ என்று நீ சொல்லாதே! என்றாள். அப்பறமென்ன விதார்த்திற்கு கோபம் வந்துருச்சு. அவளோட கேரக்டரை தப்புன்னு சொல்லி.. மறுபடியும் திட்டினான். அவ விசுக்குனு எழுந்து திரும்பியும் கூடப் பார்க்காம போயிட்டா! பாவம் விதார்த்தோட முகத்தை பார்க்க முடியலை. இந்த இரண்டு நாள்ல என்னாச்சுனு விசாரிக்க கூட கஷ்டமா இருந்துச்சு!” என்றான்.

அப்பொழுது ஒரு வாடகை கார் வந்து நின்றது. அதில் இருந்து விதார்த் இறங்கினான். பரிதாபமாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அடுத்த பக்கம் இருந்த கதவை திறந்து கொண்டு ஷம்ருதா இறங்கினாள்.

நண்பர்கள் அவசரமாக தங்களது பரிதாபப் பார்வையை மாற்றிக் கொண்டார்கள். அனைவரையும் பார்த்து ப்ரீத்தி முறைக்க.. அவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்து அசடு வழிந்தார்கள்.

ப்ரீத்தி “லவ்வர்ஸிற்கு நடுவில் வரும் சண்டையும் புருஷன் பொண்டாட்டி சண்டை மாதிரி தான் என்றுத் தெரியாதா!” என்று விமலை பார்த்து சிறு கோபத்துடன் திட்டினாள்.

பின் அனைவரும் அவர்களை நோக்கி சென்றார்கள். விதார்த்திடம் மெல்ல கண்ணடித்து ஜாடை காட்டவும், அவன் மெல்லிய குரலில் “இப்போதைக்கு சமாதானம் ஆகியிருக்கோம்.” என்று தலையை சொறிந்தவாறு கூறினான்.

உடனே ரஞ்சித் “இனி இதைப் பழக்கப்படுத்திக்கோடா.. இந்த மாதிரி சண்டை இனி அடிக்கடி வரும்.. நீதான் போய் சமாதானம் செய்யணும்.” என்றுத் தன் மனைவி சாருமதியை பார்த்து சிரித்தான்.

அதற்கு விதார்த் “நான் எதுக்கு சமாதானம் செய்யணும். அவளோட அப்பா தான் வந்து பேசினார். இப்படித்தான் வெடுக்கென்று பேசி விடுவா.. ஆனா.. ஒருத்தர் மேலே அன்பு வச்சுட்டா‌‌.. கையில கூட தாங்குவா.. போக போக சரியாகிருன்னு சொன்னார். சரின்னு நானும் அவளை மன்னிச்சுட்டேன்.” என்றான்.

ஸ்ரீராம் மெல்ல ஷம்ருதாவை திரும்பிப் பார்த்தான். நல்லவேளை அவள் இவன் பேசியது கேட்காத தூரத்தில் நின்றுக் கொண்டு.. கன்னிகாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

விதார்த் “யஷ்வந்த் எங்கே?” என்றுக் கேட்டான்.

“அவன் கப்பலில் நமக்காக வெயிட் செய்கிறான். அங்கே கடைசி கட்ட சோதனை நடந்துட்டு இருக்கு! அதனால் ஆபிஸர்ஸ் கூட இருக்கான்.”

“கடைசி கட்ட சோதனையா?”

“ம்ம்! ஸ்மங்லிங் கரெப்ஷன் ஆபிஸர்ஸ் கிளம்ப போறதுக்கு முன்.. ஒருதரம் செக் செய்வாங்க..” என்றான்.

“ஒகே! ஒகே!”

அப்பொழுது யஷ்வந்தின் உதவியாளர் சர்வேஷ் வந்து.. அவர்களை அருகில் இருந்த சோதனைச்சாவடிக்கு அழைத்து சென்றான்.

ஒவ்வொருவராய் தனியாக அழைத்து சோதனை செய்து.‌. அப்படியே கப்பலுக்கு அனுப்பப்பட்டார்கள்.

முதலில் ரஞ்சித் பின் அவனது மனைவி சாருமதி, அடுத்து ஸ்ரீராம், பின் விமல், அடுத்து ஷம்ருதா, ப்ரீத்தி, விதார்த், அடுத்து ஸ்ரீராமின் காதலி கன்னிகா என்று வரிசையாக சென்றார்கள்.

ஒருவருடைய உடைமைகளை சோதித்து.. அவரையும் சோதிக்க என்று ஒருவருக்கு சோதனை முடிய கால் மணி நேரம் ஆனது. தனியாருக்கு சொந்தமான கப்பல் மற்றும் தனிப்பட்ட முறையில் அவர்கள் பயணம் செய்வதால் இத்தனை கெடுபிடிகளை விதித்தனர்.

ஒருவருக்கு கால்மணி நேரம் ஆனதால்.. அடுத்து வருபவர்களுக்காக காத்திராமல் அவர் கப்பலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவ்வாறு சோதனை முடிந்ததும்.. தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு சென்ற.. ஷம்ருதா.. கோபத்தில் முணுமுணுத்தவாறே சென்றாள்.

தன்னை சமாதானப்படுத்தி.. விதார்த்துடன் அனுப்பி வைத்த தனது பெற்றோர்களை திட்டியவாறு கப்பலுக்குள் செல்ல.. வைத்திருந்த தற்காலிக பாலத்தில் ஏறி.. கப்பலுக்குள் நுழைந்தாள். அங்கு இரு பணியாளர்கள் மட்டும் அவளை வரவேற்பதற்காக காத்துக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

“அவனை‌ மாதிரியே அவனோட பிரெண்ட்ஸையும் பிடிச்சுருக்கான். வெயிட் பண்ண வேண்டியது தானே!” என்று முணுமுணுத்தாள்.

பணியாளர்கள் இருவரும் அவளைப் பார்த்து இடுப்பு வரை குனிந்து வரவேற்றார்கள். பின் ஒருவர் அவள் தள்ளிக் கொண்டு வந்த சக்கர சூட்கேஸையும் முதுகில் போட்டிருந்த இன்னொரு பையையும் வாங்கி கொண்டான். இன்னொருவன் “ப்ளீஸ் கம் மேம்..!” என்று அவளை வழி நடத்தி சென்றான்.

முன்னே ஒருவர் பின்னே ஒருவர் என்று அவளுடன் வர.. தோளில் சிறு கை பையுடன் ஒய்யாரமாக நடந்த ஷம்ருதாவிற்கு நன்றாக தான் இருந்தது.

அவளை லிப்டிற்கு அழைத்து சென்றனர். அது கீழ் தளத்திற்கு அழைத்து சென்றது‌.

கப்பலில் பொதுவாக அறைகள் கீழே தான் இருக்கும் என்றுத் தெரிந்தாலும்.. முதன் முறையாக கப்பல் பயணம் மேற்கொள்ளும் ஷம்ருதாவிற்கு அடிவயிற்றில் தோன்றிய குறுகுறுப்பை அடக்க முடியவில்லை.

கீழ் தளத்தில் வந்ததும் அங்கு வரிசையாக அறைகள் இருப்பதை பார்த்தாள்.

அவரவர்கள் அறைக்கு சென்றுவிட்டார்கள்‌ போல.. அவர்கள்‌ வெளியே வருவதற்குள்.. தனது அறைக்குள் முடங்கி விட நினைத்தாள்.

அன்று விதார்த்தின் நண்பர்களின் முன் அவன் சண்டையிட்டு திட்டியது.. அவளுக்கு தர்மசங்கடத்தை கொடுத்தது.

முன்னே சென்ற பணியாளன்.. ஒரு அறையின் கதவை திறந்துவிட்டான்.

உள்ளே நுழைந்த ஷம்ருதா ஆச்சரியத்தில் வாயை பிளந்தாள்.

இந்த இடத்தில் பை ஸ்டார் ஹோட்டல் அறையின் தரத்தில் அறையை எதிர்பார்க்கவில்லை.

பார்வையால் மெச்சிய படி சுற்றிலும் பார்த்தவளிடம் அவளுடன் வந்த பணியாள் “மேம்! உங்களுக்கு இந்த மிடில் ரூம் அலர்ட் செய்திருக்கிறோம். இது உங்களோட பர்ஸ்ட் ஷிப் ட்ரவல் என்கிறதாலே இந்த ரூம்! எதாவது வேண்டும் என்றால் ஃகால் செய்யுங்க! இந்த ஷிப் இன்னும் பை மினிட்ஸில் கிளம்பிரும். ஸ்டே இன் ஒன் பிளெஸ் அட்லீஸ்ட் பை மினிட்ஸ் ஃபார் யுவர் ஷெக்! ஃபீல் ப்ரீ! அன்ட் என்சாய் த ஜெர்னி மேம்!” என்றுவிட்டு சென்றார்கள்.

அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது.. கப்பல் நகருவதை உணரவும், படார் என்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு அவ்வளவு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.

‘டிரெயினில் போவது போல தான் இருந்தது. இதற்கு எதற்கு இத்தனை அட்வைஸ் செய்து அனுப்பினாங்க!’ என்று அசால்ட்டாக நினைத்தாலும்.. அமைதியாக அமர்ந்தவள், அவளது அறையில் இருந்த ஜன்னலின் வழியாக கரையை விட்டு கப்பல் நகர்ந்து கொண்டிருப்பதை பார்த்தாள்.

விடியற்காலையில் விமானம் ஏறி.. அங்கிந்து கொல்லம் வந்து.. பின் துறைமுகம் வரை.‌ கார் பயணம் என்று.. பயணங்களால் சோர்வுற்றிருந்த ஷம்ருதா அப்படியே படுக்கையில் சாய்ந்து உறங்கி விட்டாள்‌.

பத்தே நிமிடத்தில் அவளது செல்பேசி ஒலிக்கவும், திடுக்கிட்டு எழுந்தவள்.. அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

விதார்த்தின் குரல் கேட்டது.

“ஷம்ரு! இட்ஸ் நாட் ஃபேர்! எல்லாரும்.. ஒண்ணா ட்ரவல் செய்ய வந்திருக்கோம். நீ மட்டும் ரூமில் இருப்பது சரியில்லை ஷம்ரு! வெளியே வா! டென் மினிட்ஸ் பேசிட்டு அப்பறம் போய் ரெஸ்ட் எடுத்துக்கோ! யாருக்காக எல்லாரும் இங்கே வந்தோமோ.. அந்த யஷ்வந்த் அர்ஜென்ட் வொர்க் வந்ததுனு.. போயிட்டான். பிளைட்டில் மாலத்தீவில் வந்து ஜாயின்ட் ஆகிக்கிறேன்னு சொன்னான். சோ இங்கே நாம் மட்டும் தான் இருக்கோம். வா!” என்று அழைத்தான்.

அதற்கு ஷம்ருதா “இப்படி மெதுவா.. அனுசரணையா பேசினா.. நீ சொல்ற‌ பேச்சை கேட்பேன். அதிகாரம் செய்தால் தான் எனக்கு பிடிக்காது. ஒகே கிவ் மீ டு‌ மினிட்ஸ்!” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவள், குளியலறைக்கு சென்று தன்னை ஃபிரஷ் செய்துவிட்டு அறையில் இருந்து செல்பேசியுடன் வெளியே வந்தாள்.

அங்கு யாருமில்லாது அமைதியாக இருக்கவும் தனது செல்பேசியை எடுத்தவள் விதார்த்தை அழைத்து “எந்த ரூமில் இருக்கீங்க?” என்றுக் கேட்டாள்.

“உனக்கு ஃபோன் போட்டதும் வெளியே வந்துட்டேனே! இப்போ எல்லாரும் வெளியே தான் இருக்கோம். நீயும் வா.. கப்பலை சுத்தி பார்த்துட்டு வரலாம். எல்லாரும் உனக்காக தான் வெயிட் செய்யறாங்க..”

“வெயிட்! வெயிட்! எல்லாரும் ரூமுக்கு வெளியே நிற்கறீங்களா! இங்கே யாரும் இல்லையே நானும் ரூமுக்கு வெளியே தான் நிற்கிறேன்.”

“வாட்!” என்று விதார்த் அதிரவும், விதார்த் விளையாடுகிறானோ.. என்று ஷம்ருதா “டொன்ட் பிளே விதார்த்! நான் ரொம்ப டையர்ட்டா இருக்கேன்.” என்று சலித்து கொண்டாள்.

விதார்த் “இதை நான் சொல்லலாம் என்று நினைச்சேன். அப்போ நீ விளையாடுலையா! ரூமுக்கு வெளியே தான் நிற்கறீயா.‌.” என்று மீண்டும் வரிசையாக இருந்த அறைகளை பார்த்தான்.

மற்றவர்கள் என்னவாயிற்று என்றுக் கேட்கவும், விதார்த் “ஷம்ருதா! இந்த கப்பலோட வேற ப்ளோரில் இருக்கும் ரூமுக்கு போயிட்டா போல! பார்த்துட்டு வரேன்.” என்று காதில் செல்பேசியுடன் நகர்ந்தான்.

அந்த பக்கம் கேட்டுக் கொண்டிருந்த ஷம்ருதா “நான் கீழ் ஃபோளோரில் இருக்கேன். நீ எங்கே இருக்கே.. நானே வரேன்.” என்றாள்.

நடந்துக் கொண்டிருந்த விதார்த் அவள் கூறியதைக் கேட்டு நின்றுவிட்டான்.

“நாங்களும் கீழே தான் இருக்கோம்.”

“வாட்! ஒருவேளை உங்க ரூம்ஸ் வேற லைன்னில் இருக்கோ! அப்போ எனக்கு மட்டும் ஏன் தனியா ரூம் போட்டுருக்கு! ஒருவேளை எனக்கு ட்ரவல் சிக்னஸ் இருக்கிறதாலா” என்று எரிச்சலுடன் கூறியவாறு அந்த பகுதியில் இருந்து வெளியே வந்தாள்.

“இருக்கலாம்!” என்று அவனும் அந்த பகுதியை விட்டு வெளியே வந்தான்.

வரிசையாக அறைகள் இருக்கும் பகுதியை தேடி‌.. அடுத்த பகுதிக்கு ஷம்ருதா சென்றாள். கப்பலை இயக்கும் இயந்திரங்கள் கொண்ட பகுதியாக இருந்தது. அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு.. மீண்டும் அவளது அறையை தாண்டி கப்பலின் மறுபகுதிக்கு சென்றாள். அங்கு சமையல் பகுதி தான் இருந்தது.

குழப்பமுற்ற ஷம்ருதா அவர்களிடம் இங்கு தங்குவதற்கு வேறு அறைகள் எங்கு இருக்கிறது என்றுக் கேட்டாள்.

அதற்கு அவர்கள் இந்த கீழ்பகுதியில் மட்டும் தான் தங்குவதற்கு அறைகள் இருக்கிறது என்றும்.. இதற்கு மேல் தளத்தில் கடல் அழகை இரசிக்க லாபியும்.. அமர்ந்து சாப்பிடும் பகுதியும்.. தியேட்டர் பகுதியும் உள்ளது என்றும்.. அதற்கு மேல் டான்ஸ் பார் மற்றும் கிளப்பும்.. அதற்கு மேல் இருக்கும் திறந்தவெளி மேல் தளத்தில் சிறு நீச்சல் குளமும்.. இன்டோர் கேம் விளையாடும் இடங்களும் இருப்பதாக இந்த கப்பல்களின் பகுதிகளைப் பற்றி விவரித்தார்.

அவர்கள் கூறியதைக் கேட்டு அயர்ந்து நின்ற.. ஷம்ருதாவிற்கு சற்று நேரம் மூளை வேலை நிறுத்தம் செய்தது.

அதற்குள் அவளது கையில் இருந்த செல்பேசியில் விதார்த் கத்தினான்.

“ஷம்ருதா! நீ எங்கே இருக்கே! இங்கே வேற ரூம்ஸே இல்லை.” என்று திகைப்பு நிறைந்த குரலில் கேட்டான்.

அதிர்ந்து நின்றிருந்த ஷம்ருதா அவனுக்கு பதில் அளிக்காது. அழைப்பை துண்டித்துவிட்டு வேகமாக மேல் தளத்திற்கு செல்லும் படியில் ஏறினாள்.

பரந்த வெளியில் இருந்து வந்த வெளிச்சம் கண்களை கூச செய்ய.. கண்களுக்கு மேலே கையை வைத்துக் கொண்டு பார்த்தாள்.

பரந்த வானமும் கடலும் நீல வண்ணத்தில் ஒன்றானது போல்.. அவளுக்கு காட்சியளித்தது. மெல்ல சுற்றிலும் பார்த்தாள். அந்த பெரிய லாபியில் அவள் மட்டும் நின்றிருந்தாள்.

விதார்த்தும் உண்மையை தான் கூறுகிறான். ஆனால் இந்த கப்பலில்.. இன்னொரு அறைகள் கொண்ட பகுதி இல்லை. அவனும் கப்பலில் தான் இருக்கிறான். ஆனால் இங்கே இல்லை. இங்கே என்ன நடக்கிறது. நான் எங்கே இருக்கிறேன். ஒருவேளை இது கனவா!

“ரொம்ப குழம்ப வேண்டாம்! அது உடம்புக்கு நல்லதில்லை.” என்ற குரலில் வெடுக்கென்று திரும்பிப் பார்த்தாள்‌.

அங்கு விதார்த்தின் நண்பன் யஷ்வந்த் நின்றிருந்தான்.

“இந்த கப்பலில் விதார்த் இல்லை. அவன் இருப்பது வேற கப்பல்! அதோ அங்கே போயிட்டு இருக்கு..” என்று‌ ஒரு திசையை சுட்டிக்காட்டினான்.

அவன் சுட்டிக்காட்டிய திசையில் திரும்பி பார்த்த ஷம்ருதா திகைத்தாள்.

ஏனெனில் சற்று தூரத்தில் புள்ளியாக ஒரு கப்பல் சென்றுக் கொண்டிருந்தது.

அதிர்ச்சியும் குழப்பமுமாக யஷ்வந்தை திரும்பிப் பார்த்தாள்.

“டொன்ட் வெர்ரி அந்த கப்பலும் மாலத்தீவிற்கு தான் போகுது. இந்த கப்பலும் மாலத்தீவிற்கு தான் போகுது. ஆனா தனித்தனியாக!”

ஷம்ருதா கேள்வியும் திகைப்புமுமாக அவனைப் பார்க்கவும்.. யஷ்வந்த் “அதுவரை நாம கொஞ்சம் பழகலாமா?” என்றுக் கேட்டான்.





 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 3

யஷ்வந்த் கூறியதை நம்ப முடியாமல் ஷம்ருதா நின்றது ஒரு நிமிடம் தான்.. பின் சுய நிலை அடைந்தவளாய் “ஹவ் டேர் யூ! என்னை கடத்திட்டு வந்து என்ன செய்ய போறே! யூ ராஸ்கல்! பக்கத்துல வந்தே ஐ வில் கில் யூ!” என்று ஆத்திரத்தில் கத்தினாள். கடற்காற்றின் இரைச்சலுடன் அவளது குரல் ஓங்கி ஒலித்தது.

“ஹெ ரிலேக்ஸ்! கண்டிப்பா அந்த மாதிரி தப்பான எண்ணத்தில் உன்னை இங்கே கூட்டிட்டு வரலை. அதை முதல்ல கிளியர் செய்துறேன். நீயும் மனசுல பதிச்சுக்கோ!” என்றவன், பின் தொடர்ந்து “ஒன் செக்ன்ட்!” என்றுவிட்டு திரும்பி நடந்தவாறு ஒலித்துக் கொண்டிருந்த செல்பேசியை ஆன் செய்தான்.

“ஹெ விதார்த்! இப்போ தான் என்னோட இன்னொரு ஷிப் மேனேஜர் ஃபோன் போட்டார். ஷம்ருதா தவறுதலா அந்த ஷிப்பில் ஏறிவிட்டாளாம். டொன்ட் வெர்ரி! அந்த கப்பல் ஸ்பெஷல் பேசேன்ஜர்ஸிற்காக நாங்க ஏற்பாடு செய்திருக்கும் கப்பல் தான்! அங்கே அவ அவங்களோட தான் இருக்கா.. நான் நல்லபடியா கூட்டிட்டு வரச் சொல்றேன். அவ பத்திரமா வந்துருவா! அப்பறம் இன்னொரு இன்பர்மெஷன் இப்போ நடந்தது அதைச் சொல்ல சொன்னார்‌. ஷாக்கில் அவளோட ஃபோனை கீழே போட்டுட்டா.. அதுனால ஃபோன் கொஞ்சம் ரிப்பேர் ஆகிடுச்சு! அவளை கான்டெக்ட் செய்ய முடியாது. இப்போ ஒரு முக்கிய வேலையா இருக்கேன். அது முடிந்ததும்.. கான்டெக்ட் நம்பர் வாங்கி தரேன்‌. ஷம்ருதா கிட்ட பேசு! நவ் பை..” என்று வேகமாக பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

யஷ்வந்த் விதார்த்திடம் ஷம்ருதா தவறுதலாக இந்த கப்பலில் ஏறிவிட்டாள்.. என்று பொய்யுரைப்பதை திகைப்புடன் கேட்ட ஷம்ருதா அவன் தொடர்ந்து கூறியதைக் கேட்டு.‌. “ஹெ..” என்றவாறு அவனை நோக்கி ஓடி போவதற்குள் அவன் பேசி முடித்திருந்தான்.

அவனை நெருங்கிவிட்டவள், அவன் கடைசியாக பேசியதைக் கேட்ட ஷம்ருதா.. அவசரமாக தனது செல்பேசியில் விதார்த்தை அழைக்க முற்பட்டாள். அதற்குள் செல்பேசியை அணைத்துவிட்டு யஷ்வந்த் திரும்பவும், ஷம்ருதா சட்டென்று தனது கையில் இருந்த செல்பேசியை முதுகுக்கு பின்னால் மறைத்துக் கொண்டாள்.

அதைப் பார்த்து சிரித்த யஷ்வந்த் “ஸ்மார்ட்” என்றுச் சிரித்தவாறு அருகில் வந்தவன், அவளுக்கு பின்னால் கையை நீட்டி சட்டென்று.. செல்பேசியை பறித்தவன், “ஸாரி ஷம்ருதா! நீ இங்கே இருக்கிற வரை யாரும் உன்னை கான்டெக்ட் செய்ய கூடாது.” என்று செல்பேசியை மேற்கூரையில் வீசினான்.

நொடியில் நிகழ்ந்து விட்ட இந்த சம்பவத்தில்.. ஷம்ருதா மேலும் அதிர்ந்தவளாய் “ஹெ என்ன செய்யறே!” என்று கடற்காற்றை மீறி கத்தினாள்.

யஷ்வந்த் “ஒரு பை மினிட்ஸ் டைம் கொடு.. உன்னை ஏன் கூட்டிட்டு வந்தேன்னு எக்ஸ்பிளைன் செய்யறேன்.” என்றான்.

ஷம்ருதா “முடியாது.. மரியாதையா என்னை திருப்பிக் கொண்டு போய் விட்டுரு! இல்லைன்னா.‌‌. கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன். கடல்ல குதிச்சுருவேன்..” என்று ஆக்ரோத்துடன் கூறினாள்.

யஷ்வந்த் “ஷம்ருதா! நீ இந்தளவுக்கு டென்ஷன் ஆக தேவையில்லை. அமைதியாக இரு! என்னை பேச விடு‌..” என்கவும், ஆத்திரம் கொண்ட ஷம்ருதா அவனைத் தாண்டி கப்பலின் விளிம்பை நோக்கி ஓடினாள்.

சட்டென்று “ஷம்ருதா நில்லு!” என்றவாறு அவளது பின்னே ஓடியவன், விரைவிலேயே அவளைப் பின்னால் இருந்து பற்றினான்‌.

“ஷம்ருதா! லிசன்!” என்று ஓங்கிய குரலில் அவளை அடக்க முயன்றான்.

ஆனால் அவனிடம் இருந்து அவள் திணறவும், அவளை தூக்கி கொண்டு உள்ளே போக முற்பட்டான். அதில் பயந்த ஷம்ருதா தனது முழு பலத்துடன் திமிறினாள்.

யஷ்வந்த் “விசயத்தை ரொம்ப காம்பளீகேட் ஆக்காதே ஷம்ருதா! சொன்னால் கேளு‌..” என்றுக் கூறி அமைதிப்படுத்த முயன்றான். ஆனால் எதையும் காதில் வாங்காது.. ஷம்ருதா திமிறவும், யஷ்வந்த் அவளோடு கீழே விழுந்தான்.

விழும்பொழுது.. அவளது முழு எடையையும் தாங்கிக் கொண்டு விழுந்தவனுக்கு தோள்பட்டையில் நல்ல அடி விழுந்தது. அதனால் அவனது பிடி தளரவும், அவனிடம் இருந்து விடுபட்ட ஷம்ருதா சற்று தள்ளி.. இரும்பு கம்பி ஒன்று இருப்பதை பார்த்தாள்.

அதை எடுத்தவள், அடிக்க கையை ஓங்கினாள். அதற்குள் சத்தம் கேட்டு வந்த ஊழியர்கள்.. விரைந்து வந்து ஷம்ருதாவின் கையை பிடித்தார்கள்.

இரண்டு மூன்று பேர் அவளைப் பிடிப்பதைப் பார்த்ததும்.. ஷம்ருதா மிரட்சியுடன் மற்றவர்களைப் பார்த்தாள்.

அப்பொழுது யஷ்வந்த் “அவளை விடுங்க..” என்றுவிட்டு.. எழுந்து வந்தவன், மிரட்சி மாறாமல் நின்றிருந்த ஷம்ருதாவின் கையில் இருந்த.. கம்பியை பிடுங்கினான்.

“ரொம்ப காம்பளீகேட் ஆக்காதேனு சொன்னேனில்ல!” என்றவன், “உன் லவ்வர் கிட்ட ஃபோன் செய்து.. என்னோட ஷிப்ல பாதுகாப்பா தான் இருக்கிற என்றுச் சொல்லிட்டு உன்கிட்ட தப்பா.. நடந்து மாட்டிக்க நான் என்ன முட்டாளா!” என்றுச் காட்டத்துடன் கேட்டான்.

ஷம்ருதா “அப்போ எதுக்கு என்னை..” என்று முடிப்பதற்குள்.. யஷ்வந்த் “அதைத் தான்.. எங்கே சொல்ல விட்டே.. பை மினிட்ஸ் பேசணும் என்றுச் சொல்றேன் தானே!” என்றுவிட்டு கம்பியை விட்டேறிந்தான்.

அது ஒரு மூலையில் சென்று விழுந்தது.

தற்போதைக்கு அவள் எதிர்பார்த்த ஆபத்து இல்லை.. என்ற தெரிந்த பின்.. அவளது மனதில் சிறு தைரியம் தோன்றியது.

எனவே ஷம்ருதா “எங்கே சொல்லுங்க பார்க்கலாம்.. என்னை கடத்திட்டு வந்ததிற்கு.. என்ன நியாயமான காரணம் சொல்லறேனு பார்க்கலாம்.” என்று மார்பிற்கு குறுக்கே கரங்களைக் கட்டியவாறு நின்றாள்.

கடற்காற்றில் தாறுமாறாக பறந்த அவளது கூந்தல் அவளது உள்ளம் கொதித்து கொண்டிருப்பதை சுட்டிக் காட்டுவது போல் இருந்தது. அதை அடக்கி.. சுருட்டி காதிற்கு பின்னால் சொருகிவிட்டு அவனை கோபத்துடன் முறைத்தாள்.

யஷ்வந்த் “அதற்கு முன்.. ஒண்ணு சொல்ல விரும்பறேன். உன்கிட்ட உன் சம்மதமின்றி.. யாரும் தப்பா நடந்துக்க முடியாது. ஆள் பார்க்க தான்.. மெலிவா இருக்கே! ஆனா ஸ்டெரென்த்தும் ஜாஸ்தி, தைரியமும் ஜாஸ்தி! பிளஷர் ஆஃப் மைன்ட்டும் நல்லா வொர்க் ஆகுது. ஐ தின்க் நீ செல்ஃபோனை ஒரு மணி நேரம் வச்சுட்டு உட்கார்ந்திருக்கிற ஆளில்லை‌. சுறுசுறுப்பாக எதையாவது செய்துக் கொண்டிருக்கும் ஆள் ரைட்டா! குட்!” என்று மெச்சினான்.

ஷம்ருதா எரிச்சல் மாறாமல் “என்ன செய்ய.. ஆல்வேஸ் பெண்கள் தான் அலர்ட்டா இருக்க வேண்டியது இருக்கு! புல் அட்வைஸ்‌ எல்லாம் அவங்களுக்கு தான்.. ஆனா ஆண்கள் திருத்த மாட்டாங்க! நாங்க தான் அவங்களை அவாய்ட் செய்யணும். கவனமா இருக்கணுமா! ஐயம் சிக் ஆஃப் திஸ் சம் பீப்பிள்ஸ் மென்டாலட்டி!” என்று கொதிப்புடன் முடித்தாள்.

யஷ்வந்த் பெருமூச்சுடன் “நியாயமான ஆதங்கம் தான்! சம்மதமில்லாத பெண்ணை தப்பா பார்த்தாலே.. அவனோட பிரைவேட் பாடி பார்ட் வெடித்து போகிற மாதிரி.. கடவுள் ஆண்களை படைச்சுருந்தா நல்லாயிருந்திருக்கும்.” என்றவனின் முகத்திலும் சிறு கோபம் எட்டிப் பார்த்தது.

சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.

அந்த மௌனத்தை ஷம்ருதாவே கலைத்தாள்.

“சொல்வதற்கு விசயம் இல்லைன்னா.. கப்பலை திருப்பலாமே! இத்தனை நியாயம் பேசுகிற நீ.. இப்போ நீ செய்த அநியாயத்தை எப்படி நியாயப்படுத்த போகிறேன்னு நான் பார்க்கணும்.” என்று சிறு இளக்காரத்துடன் கேட்டாள்.

யஷ்வந்த் “ஒகே சொல்கிறேன்! விதார்த் என் லைஃப்ல சமீபத்தில் நடந்த இன்சிடன்ஸ் பற்றி சொல்லியிருப்பான் என்று நினைக்கிறேன்.” என்றான்.

ஷம்ருதா ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

யஷ்வந்த் “அபர்ணாவை என் பிரெண்ட்ஸ் பார்த்தது இல்லை. அவங்க கூட இன்டர்டுயூஸ் செய்ய வரும் போது தான் ஆக்ஸிடென்ட் ஆச்சு!” என்ற பின் சில கணங்கள் அமைதியானான்.

பின் தொடர்ந்து “அபர்ணா அழகா இருப்பா! அபர்ணா பார்ப்பதற்கு கொஞ்சம் உன் சாயல்!” என்றதும்.. ஷம்ருதா நடுவில் குறுக்கிட்டாள்.

“ஓ மை காட்! ஐ கான்ட் பீலிவ் திஸ்! உன் லவ்வர் மாதிரி நான் இருக்கிறேன் என்பதற்காக என்னை கடத்திட்டு வந்துருக்கியா! புல் ஷீட்! இந்த உலகத்திலே.. ஒருத்தர் மாதிரி ஏழு பேர் இருப்பார்களாம். மீதி ஐந்து பேரையும் கண்டுப்பிடிச்சு கடத்திட்டு வரப்‌ போறீயா! உனக்கே இது புலீஸ்ஸா இல்லையா! உன் லவ்வர் மாதிரி இருக்கிற நான்.. எப்படி உன்னை லவ் செய்வேன் என்று எதிர்பார்க்கலாம். அதுவும் நான் உன் பிரெண்டிற்கு மனைவியாக போகிறவள் நான், கொஞ்சமாவது எத்தீக்ஸோட பேசு!” என்று வெடித்தாள்.

யஷ்வந்த் “நான் எப்போ உன்னை லவ் செய்கிறேன்.. நீயும் என்னை லவ் செய் என்றுச் சொன்னேன்.” என்றவன் தொடர்ந்து “பழகலாம் என்றுத் தானே கேட்டேன்.” என்றான்.

ஷம்ருதா “வாட்! வாட் டு யூ மீன்?” என்று இருவரும் கடற்காற்றை மீறி சற்று கத்தி பேசினார்கள்.

யஷ்வந்த் “நீயும் நானும் முதலிலேயே மீட் செய்திருக்கோம் தெரியுமா?” என்றுக் கூறியவன், அவனே பதிலும் கூறினான்.

“ஆறு மாசத்துக்கு முன்னாடி உன்னோட ஆன்ட்டி கிரிஜா.. சுபம் ஹாஸ்பெட்டல அட்மிட் ஆகிருந்தாங்க தானே! அவங்களை பார்க்க உன் அம்மாவோட வரும்போது.. கட்டுடன் ஓடி வந்த ஒருவனை நீ தாங்கி பிடிச்சுருக்கே.. அப்போ அவன் உன்னைப் பார்த்து..” என்றுக் கூறுகையில் ஷம்ருதா “அபர்ணானு சொன்னான்.. அதாவது நீ சொன்னே!” என்று புருவங்களும் கண்களும் விரிய கேட்டாள்.

பின் ஷம்ருதா “சோ?” என்கவும், யஷ்வந்த் “அபர்ணா மாதிரி இருக்கிற உன்னை மீட் செய்ய நினைச்சேன். அது ஒரு ஆத்ம திருப்திக்காக தான்! பட் அதுக்குள்ள நீ என்னோட பிரெண்ட்டோட பியான்ஸியா மீட் செய்யவும், டிஸ்அப்பாயின்மென்ட்டாகவும், அப்செட்டாகவும் இருந்துச்சு! உன் கூட இன்னொருத்தருக்கு சொந்தமானவளா.. பழக பிடிக்கலை. அதனால் இது.. நீ ஷம்ருதாவா.. நான் யஷ்வந்த்தா ஒரு ஜென்யூன் மீட்டிங் அவ்வளவு தான்!” என்றான்.

அதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்ட ஷம்ருதா “இதை சென்னையிலேயே கேட்டிருந்தால்.. நாம் தனியா மீட் செய்து பேசியிருக்கலாமே! எதுக்கு இந்த பிளான்!” என்றாள்.

அதற்கு யஷ்வந்த் “உன்னைப் பற்றி உனக்கே நல்லா தெரியும் தானே! நீ நிஜமா ஒத்துருப்பாயா என்ன! விதார்த் பற்றி எனக்கு நல்லா தெரியும். அவன் ஒத்துக்குவான் என்று நினைக்கிறாயா! அவன் என்றில்லை.. எவனும்.. தனக்கு மனைவியாக வரப் போகிறவளை.. இன்னொருத்தன் அவன் நண்பனாக இருந்தாலும்.. தனியா மீட் செய்ய..‌ அனுமதிக்க மாட்டாங்க! நானும் ஓப்பனா சொல்றேன். உன்னை சிஸ்டராக எல்லாம் என்னால் பார்க்க முடியாது. அதனால் தான் இங்கே இப்படிக் கூட்டிட்டு வந்தேன். விதார்த்திற்கு ஃபோன் போட்டு.. நீ ஷேப்பாக இருப்பதையும் சொல்லிட்டேன். எனக்கு முக்கியமான பிஸினஸ் மீட்டிங் இருப்பது போலவும்.. அதில் நான் கலந்துட்டது போலவும் செட் பண்ணியாச்சு! என்ன இந்த விளக்கம் போதுமா! யூ னோ ஒன் தின்க்.. இதுவரை நான் யாருக்கும்.. நான் செய்வதற்கு விளக்கம் கொடுத்தது கிடையாது. எல்லாரும் நான் என்ன செய்தாலும் சரியாக தான் இருக்கும் என்று நம்புவாங்க..” என்றான்.

ஷம்ருதா பலத்த யோசனையில் இருந்தாள்.

பின் “என் சேஃப்டி விசயத்தில் இன்னும் உன்னை நம்ப முடியலை. இங்கே இருக்கிறவங்க எல்லாம் உன் ஆட்கள்!” என்று சற்று பயத்துடன் சுற்றியும் பார்த்தாள்.

‘எப்படி நம்பிக்கை கொடுப்பது?’ என்றுப் புரியாமல் கடலை பார்த்தவாறு யோசித்தவன், பின் ஷம்ருதாவிடம் திரும்பி “ஒகே! இப்போ உன் ஃபோன் எடுத்து தருகிறேன். அதில் ஒரு வீடியோ எடுக்கலாம். அதுல நீ என் கூட தான் இருக்கிறே என்று என்னையும் கவர் பண்ணி சொல்லு! நானும் அதில் உனக்கு எதாவது ஆச்சு என்றால் நான்தான் காரணம் என்றுச் சொல்கிறேன். அதை உன்னோட வீட்டில் இருக்கிற உன்னோட சிஸ்டத்திற்கும் அனுப்பலாம். நீ ஆபத்து என்று நினைப்பது எதுவும்.. இங்கே நடக்கலைன்னா.. நீ உன் ஃபோனில் இருக்கிற வீடியோவையும்.. வீட்டிற்கு போய்.. உன் சிஸ்டத்தில் இருக்கிற வீடியோவையும் டெலிட் செய்! அதுவரை.. உன் சேஃப்டிக்காக இருக்கட்டும். நீ என்னை நம்பியாகணும். அதே போல்.. நானும் உன்னை நம்பலாம் தானே! அந்த வீடியோவை வேற யாருக்கும் அனுப்பி விடக் கூடாது. ஒகே வா! உன் ஃபோனையும் உன் கையில் கொடுத்திருவேன். பட் உன் ஃபோனில் இருக்கிற சிம் என்கிட்ட இருக்கட்டும். அதே மாதிரி.. அதில் இருக்கும் டேட்டாவையும் கட் செய்திருவேன்.” என்றான்.

பெரிய மூச்சை இழுத்து விட்ட ஷம்ருதா “லைஃப்ல சில சமயம் ஸ்டெரேன்ஞ் ஆனா விசயம் நடக்குமாம். எனக்கு இப்படி நடந்திருக்கு.. ஒகே! லெட் சீ!‌ என் ஃபோன் எடுத்து கொடு..” என்று கையை நீட்டினாள்.

யஷ்வந்த் கூப்பிட்டால் கேட்கும் தூரத்தில் நின்றிருந்த பணியாளரை அழைத்து.. மேற்கூரையில் அவன் வீசிய செல்பேசியை எடுத்து தரக் கூறினான்.

“எவ்வளவு ஃபோர்ஸா வீசினே! என்‌ ஃபோனுக்கு என்ன ஆச்சோ!” என்றவாறு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த பணியாளன் செல்பேசியை எடுத்து.. கையை நீட்டிக் கொண்டிருந்த ஷம்ருதாவை தாண்டி யஷ்ந்தின் கையில் கொடுத்தான்.

ஷம்ருதா கோபத்துடன் பார்க்கவும், யஷ்வந்த் சிரிப்புடன் “நான் தானே எடுத்துட்டு வரச் சொன்னேன்.” என்றான்.

பின் அதை ஷம்ருதாவிடம் தரவும்.. அவளும் அவனும் யஷ்வந்த் கூறியது போல் காணொளியை பதிவு செய்தனர். பின் அதை அவளுடைய ஈமெயிலுக்கு அனுப்பினாள். அவள் அனுப்பியதும்.. யஷ்வந்த் கரத்தை நீட்டவும், ஷம்ருதா சிறு முறைப்புடன் அவனது கரத்தில் செல்பேசியை வைத்தாள்.

யஷ்வந்த் கூறியது போல்.. அதில் இருந்த சிம் கார்ட்டை எடுத்தவன், மற்றும் டேட்டா ஆப்ஷனையும் அழித்தான். பின் அதை ஷம்ருதாவிடம் கொடுக்கவும், வாங்கி கொண்டாள்.

பின் மார்பிற்கு குறுக்கே கரங்களை கட்டிக் கொண்ட ஷம்ருதா “எதோ என்கிட்ட பேசணும், பழகணும் என்றுச் சொன்னே தானே கமான் பேசு! என்ன பேசணும்!” என்றுக் கேட்கவும், யஷ்வந்த் குபீர் என்றுச் சிரித்து விட்டான்.

பின் “அதுக்கு முன்னாடி.. நீ விதார்த் கிட்டப் பேச வேண்டாமா!” என்றுக் கேட்டவன், விதார்த்தின் செல்பேசிக்கு.. கப்பல் கேப்டனின் செல்பேசி எண்ணை குறுந்தகவல் மூலம் அனுப்பினான்.

அடுத்த நிமிடமே விதார்த் கப்பல் கேப்டனை அழைத்தான். அதை ஏற்று காதில் வைத்த‌ அவர் அச்சு பிசகாமல் யஷ்வந்த் சொல்லி கொடுத்தது போல்.. ஷம்ருதா தவறுதலாக இந்த கப்பலில் ஏறி விட்டதையும்.. இங்கு அவள் மட்டுமில்லாமல்.. வேறு சில பயணிகளும் குடும்பத்துடன் இருப்பதாகவும் கூறினார்.

அவர் கூறிய பொய்யை வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்த ஷம்ருதாவிடம் யஷ்வந்த் “அடுத்து அவன் உன்கிட்ட தான் பேசணும் என்றுச் சொல்வான். அப்போ தான் அவனுக்கு திருப்தி கிடைக்கும். உனக்கு என்ன பேசணும் என்றுத் தெரியும் தானே!” என்றுப் புருவத்தை உயர்த்தி கேட்டான்.

ஷம்ருதா சிறு துடுக்குடன் “நான் இங்கே நடப்பதையும்.. நீ பேசியதையும்.. சொல்லிட்டா..” என்றுக் கேட்டாள்.

அதற்கு யஷ்வந்த் முறுவலுடன் “அப்படி நீ சொல்லிட்டா.. நீ முதலில் நினைத்து பயந்தது நடக்கும்.” என்று சர்வ சாதாரணமாக கூறினான்.

“என்ன மிரட்டலா?”

“நீயும் தான் மிரட்டறே!”

அதற்கு பதில் பேச அவள் வாயை திறக்கையில்.. கப்பலின் கேப்டன் அவளிடம் செல்பேசியை நீட்டினார்.

யஷ்வந்தை பார்த்தவாறு வாங்கிய ஷம்ருதா.. அவனது மீதிருந்து பார்வை எடுக்காமலேயே “ஹலோ விதார்த்!” என்றாள்.

“.....”

“ஆமா விதார்த்! கப்பல் மாறி ஏறிட்டேன். “

“....”

“நான் என்ன செய்ய! தனித்தனியாக செக் செய்து அனுப்பியதால் வந்த வினை இது!”

“...”

“வாட்! என்ன சொல்றே! அவங்கெல்லாம்… இன்னொருத்தருக்கு வெயிட் செய்து ஒண்ணா.. கப்பலுக்கு போனாங்களா! அதெப்படி எனக்கு தெரியும். எல்லாரும் அவங்கவங்க ரூமிற்கு போயிருப்பாங்கனு நினைச்சேன்.”

“....”

“ஹெ ஸ்டாப் இட் விதார்த்! அதுதான் தப்பா ஏறிட்டேன்னு நானே.. சொல்லி வருத்தப்பட்டு.. தப்பை ஒத்துக்கிட்டேன் தானே! திருப்பி திருப்பி.. அதைச் சொல்லி காட்டி என்ன யூஸ்! வெர்ரி பண்ணாதேனு எனக்கு தைரியம் சொல்வேனு பார்த்தா! திட்டிட்டே இருக்கே!”

“...”

“ஒகே! ஒகே! புரியுது. நீயும் டென்ஷன் ஆகிட்டே! நான் நல்லா தான் இருக்கேன். டொன்ட் வெர்ரி! இங்கே எனக்கு எந்த பிராப்பளமும் இல்லை.”

“....”

“வாட்! ஷிப்பை நீங்க இருக்கிற ஷிப்பிற்கு திருப்ப சொல்வதா!” என்று யஷ்வந்தை பார்த்தாள்.

யஷ்வந்த் கப்பல் கேப்டனை பார்க்கவும், அவர் ஷம்ருதாவிடம் இருந்து செல்பேசியை வாங்கி “ஸாரி ஸார்! ஷிப் சில ஐலென்ட்டிற்கு போய்.. அங்கே பேசேன்ஜர்ஸை இறக்கி விட்டுட்டு.. நாளைக்கு தான் மாலத்தீவ்ஸிற்கு வரும். இவங்க எங்க ஓனரோட பிரென்ட்! அதனால் நாங்க பத்திரமா பார்த்துக்குவோம்‌. உங்களுக்கு அவங்க கூடப் பேசணும் என்றால்‌‌.. இந்த நம்பருக்கு ஃபோன் போடுங்க! கொடுக்கிறேன். இப்போ கட் செய்கிறேன் ஸார்! ஸாரி! நான் என் வொர்க்கை பார்க்கணும்.” என்று அழைப்பை துண்டித்தார்.

ஷம்ருதா “ஹெ! பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லணும். விதார்த்திற்கு இந்த கப்பல் தெரியுமே!” என்று சற்றுமுன் பார்த்த திசையை பார்த்து அதிர்ந்தாள். விரைந்து சென்று.. கப்பலின் விளிம்பு கம்பியை பிடித்தவாறு பார்த்தாள்.

அங்கு அப்பொழுது சிறு புள்ளியாக தெரிந்த கப்பல் தற்பொழுது இல்லை. கேள்வியாக யஷ்வந்தை பார்க்கவும், அவன் “அந்த கப்பல் வேற டைரக்ஷன்ல போகுது.. இந்த கப்பல் வேற டைரக்ஷன்ல போகுது. கேப்டன் சொன்னது உண்மை தான்.. வேற ஜலென்ட்ஸ் வழியாக போய்.. அப்பறம் தான் மாலத்தீவிற்கு போகும். பட் எஸ் பேசேன்ஸர்ஸை இறக்கி விடுவதற்கு என்றுச் சொன்னது பொய்!” என்றான்.

இதற்கு என்ன பதில் கூறுவது என்றுத் தெரியாமல்.. கடலைப் பார்த்தவாறு திரும்பி நின்றாள். அவள்‌ எதாவது கூறினாலும்.. அதற்கு நியாயமான பதில் ஒன்றை வைத்திருக்கிறான். ஆனால் அவன் செய்வது நியாயமற்ற செயல் என்று அவனுக்கு தெரியவில்லையா! அல்லது தெரிய தேவையில்லையா!

இரண்டாவதாக தான் இருக்க வேண்டும்.. என்று நினைத்தவள், அவனைப்‌ பற்றி நினைப்பு தனக்கு எதற்கு.. என்றுத் தோள்களைக் குலுக்கினாள்.

மனதில் இருந்த குழப்பங்களை ஓரம் தள்ளிவிட்டு.. கடலை பார்த்தவளுக்கு.. அதன் அழகு இரசிக்க வைத்தது. அவளது முதல் கடற்பயணம் என்ற சிலிர்ப்பு தோன்றவும், மனம் படபடக்க.. இதழ்கள் புன்னகையில் விரிய.. பார்த்துக் கொண்டிருந்தாள்.

அங்கிருந்து பார்வையை எடுக்காமலேயே “கப்பல்ல போவது என்றால் நீர் தளும்பலுக்கு ஏற்ப.. ஆடி ஆடி போகுன்னு நினைச்சேன். இது ரோட்டுல போகிற கார் மாதிரி ஸ்லோவாக தான் என்றாலும் சீராக போகுது‌.!” என்று தனது சந்தேகத்தை கேட்டாள்.

அதற்கு யஷ்வந்த் “ஸ்கூல்ல பிஷிக்ஸ் படிச்சது ஞாபகம் இல்லையா! சின்னதை நீரில் போட்டால் அதிகமாக தளும்பும்.. ஆனால் பெரிய பொருளை நீரில் போட்டால் அதிகம் தளும்பாது.” என்றான்.

ஷம்ருதா “ஓ..” என்றுவிட்டு மெல்ல குனிந்து பார்க்க முயன்றாள். அவளுக்கு தலை சுத்துவது போன்று இருந்தது.

அப்பொழுது “நான் சொன்ன பிறகு தான்.. உனக்கு ஹஸ்பெட்டல நடந்தது ஞாபகம் வந்துச்சா!” என்று‌ யஷ்வந்தின் குரல் இடையிட்டது.

இயற்கையில் லயித்திருந்தவளுக்கு யஷ்வந்தின் குரல் நாராசமாய் கேட்டது. திரும்பி அவனை முறைத்தவள், பின் நன்றாக அவனைப் பார்த்த மாதிரி நின்று “அது ஒரு இன்ஸிடன்டா ஞாபகம் இருந்துச்சு! இரத்தகறையோட ரூமை விட்டு ஓடி வந்த பேசன்ட்டை பிடிச்சது சாதாரண விசயம் இல்லை தானே! ஆனா நிஜமா உன் முகம் ஞாபகம் இல்லை. அப்படி ஞாபகம் இருந்திருந்தா.. உன்னைப் பார்த்ததும் கேட்டிருப்பேன்.” என்றாள்.

யஷ்வந்த் “ஏன் அப்படி ஓடினேன்னு எனக்கு தான் தெரியும். ஆனா அதுக்கு பிறகு.. எனக்கும் அது ஞாபகம் இல்லை. அபர்ணா கூட வாழ முடியாதது என் மைன்டை ரொம்பவே டிஸ்டர்ப் செய்திருச்சு! அதுனால கொஞ்சம் ஒரு மாதிரி சுத்திட்டு இருந்தேன். அப்போ ஒருநாள்.. அந்த சம்பவம் நினைவு வந்த போது தான்! அபர்ணா மாதிரி பெண்ணை பார்த்தது ஞாபகத்திற்கு வந்துச்சு! அப்பறம் உன் அட்ரஸை தேடி கண்டுப்பிடிச்சு.. உன் முன்னாடி வந்து நிற்கலாம் என்றுப் பார்த்தா.. நீயே வந்து நின்றாய்! ஆனா.. என் பிரெண்ட்டிற்கு மனைவியாக போகிறவ என்ற அறிமுகத்தோட வந்தே! அதனால் என்னால ப்ரீயா பேச முடியலை. சோ!” என்று கையை விரித்து காட்டி தோள்களை குலுக்கினான்.

அவளும் தோள்களை குலுக்கி “எப்படிப்‌ பேசியிருந்தாலும் நோ யூஸ்! அடுத்தது என்ன நடக்கும் என்றுக் கூட எனக்கு தெரியும். நான் உன் கூடப் பழக விரும்புகிறேன் அதனால் தான் கூட்டிட்டு வந்தேன். நீ எந்த பிரச்சனையும் இல்லாம போய் சேரலாமினு.. நீ எப்படி பூசி மொழுகி சொன்னாலும்.. கடைசில உன் மேலே காதல் வந்துருச்சு.. என்னை காதலி என் காதலி என்று வசனம் பேசப் போறே!” என்றாள்.

அதைக் கேட்டு நன்றாக சிரித்த யஷ்வந்த் “ஏன் அப்படி?” என்றுக் கேட்டான்.

அதற்கு ஷம்ருதா “உங்களை மாதிரி ஆட்களை எவ்வளவு பேரை பார்த்திருக்கேன். வேணும்ன்னா கடைசில பாரு.. உன்னை லவ் செய்கிறேன்.. என்று வந்து தான் நிற்க போறே! ஆனா என்கிட்ட அது பலிக்காது.” என்றாள்.

அதற்கு யஷ்வந்த் “ஏன் நான்தான் லவ் செய்கிறேன்னு வந்து நிற்பேனா.. நீ வந்து நிற்க மாட்டியா!” என்றுக் கேட்டான்.

“வாட்! நோ வே!”

“ஒருவேளை உனக்கு என் மேலே லவ் தோன்றிருச்சுன்னா!” என்று மீண்டும் கேட்டான்‌.

உடனே ஷம்ருதா “அதுதான் நடக்காதுனு சொல்றேனே!” என்று சீறினாள்.

யஷ்வந்த் “ஏ ரிலேக்ஸ்! எதுக்கு இந்த கோபம்! நீ மட்டும்.. நான் இப்படித்தான் செய்ய போறேன்னு கெஸ்ஸா சொல்லலாம். ஆனா நான் சொல்ல கூடாதா!” என்றுக் கேட்ட மறு வினாடி ஷம்ருதா “சொல்ல கூடாது!” என்றாள்.

யஷ்வந்திற்கு சிரிப்பு தான் வந்தது “ஒய்?” என்றுக் காரணம் கேட்டான்.

“பிகாஸ்! இங்கே நான்தான் விக்டம்! அதாவது நான்தான் பாதிக்கப்பட்டிருக்கேன்.”

“சோ?”

“சோ! நான் என்ன வேணுன்னாலும் பேசுவேன். ஆனா நீ பேசக் கூடாது.” என்றாள்.

அதைக் கேட்டு யஷ்வந்த் நன்றாகவே சிரித்தான்.

ஷம்ருதா “உனக்கு சிரிப்பா இருக்கா! சிரி! சிரி! சோ நீ இந்த மாதிரி சில சமயம்‌.. லூஸ் மாதிரி பேசுவதை சகிச்சுக்கணும். அதைத் தவிர வேற எந்த பிராப்ளமும் நடக்காது தானே!” என்றுக் கேட்டாள்.

“அப்சலூட்லி நாட்!” என்று யஷ்வந்த் கூறிய மறுகணம் சிறிய சுழல்காற்று ஒன்று அடிக்கவும்.. அதில் சிக்கி கொண்ட கப்பல் சுழற்காற்றினால் ஏற்பட்ட அலையில் ஏறி இறங்கியது. அதனால் யஷ்வந்திற்கு நேராக நின்றிருந்த ஷம்ருதா தடுமாறவும், அவளைத் தாங்கி பிடித்த யஷ்வந்தும் தடுமாறி, அவளுடன் அவன் விழுந்தான்.

ஷம்ருதா திகைப்புடன் தளத்தின் தரையில் கிடக்க.. அவளது இரு பக்கமும் கரங்களை ஊன்றியவாறு.. அவளது மேல் யஷ்வந்த் விழுந்திருந்தான்.

அவனது முகத்திலும் திகைப்பு காணப்பட்டது.

கப்பலும் அவர்களது திகைப்பை பிரிதிபலிக்க இன்னும் சிறிது ஆட்டம் போட்டது.








 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4


ஷம்ருதா அவசரமாக எழ முற்படவும்.. யஷ்வந்தே மெல்ல எழுந்தான். அவளையும் எழுப்பி விட கையை நீட்ட எதானித்தவன், அவள் தவறாக நினைத்து கொள்வாளோ என்று.. நீட்டிய கரத்தால்.. தனது சட்டையில் இல்லாத தூசியை தட்டுவது போல் மாற்றிக் கொண்டான்.

இன்னும் லேசாக ஆடிக் கொண்டிருந்த கப்பல் தளத்தை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த ஷம்ருதாவிடம் யஷ்வந்த் “கப்பல் ஆடியதால் உன் மேலே விழுந்ததை தவறா எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நீ முட்டாள் இல்லை என்று நினைக்கிறேன்.” என்றான்.

ஆனால் அவளோ “இந்த மாதிரி பெரிய அலைகள் வந்தால் இந்த கப்பல் கவிழ்ந்திருமோ?” என்று கண்களில் பீதியுடன் கேட்டாள்.

அதற்கு யஷ்வந்த் சிரிப்புடன் “அதுதான் நீ ஸ்விம்மர் ஆச்சே! நீந்தி தப்பிச்சுருவே!” என்றான்.

அதற்கு ஷம்ருதா “ப்ச்! நான் எல்லார் பற்றியும் கவலைப்படுகிறேன். உன்னளவில் என்னோட பாதுகாப்பிற்கு கெரண்டி கொடுத்தியே! இந்த கப்பல் என்னை உயிரோடு கொண்டு போய் சேர்க்குமா?” என்றுக் கேட்டாள்.

அதைக் கேட்ட யஷ்வந்த் தனது விளையாட்டை கை விட்டவனாய் “கம்பிளீட்டிலி சேஃப் தான் ஷம்ருதா! நீ போட்ட கூச்சலில் அவங்க வொர்க்கை விட்டுட்டு வந்ததால்.. வெதர் வார்னிங்கை கவனிச்சுருக்க மாட்டாங்க! பரந்த இந்த மாதிரி கடலில்.. இந்த மாதிரி சின்ன சின்ன சுழற்காற்றுகள் வருவது சகஜம் தான்!” என்றுப் பேசியவாறு.. இன்னும் தரையில் அமர்ந்திருந்த ஷம்ருதாவிற்கு இயல்பு போல் கரத்தை நீட்டவும், அவளும் அக்கரத்தை பற்றி எழுந்தாள்.

“என்ன சொன்னே! சின்ன சின்ன சுழற்காற்றா! அதுக்கே இப்படி ஆட்டம் காட்டுச்சு! இது சின்ன சுழற்காற்று என்றால்.. பெரியதை நீ பார்த்திருக்கியா! அதுல சிக்கியிருக்கியா?” என்று கண்கள் விரிய கேட்டாள்

அதற்கு யஷ்வந்த் “நிறையா பார்த்திருக்கேன். ஒரே ஒருதரம் சிக்கியிருக்கேன்.” என்றான்.

“ஓ! பயங்கரமா இருந்திருக்குமே!”

“அப்கோர்ஸ்! ஆனா.. சின்ன ஃபோட்டில் வருகிறவங்க.. அசலாட்டாய்.. இந்த சுழற்காற்றில்.. ஓட்டி போவதை பார்த்திருக்கேன். அதனால் பெரிசா பயப்படலை.” என்றான்.

ஷம்ருதா “கடவுளே! எப்படி போய் சேரப் போறேனோ! நான் பிளைட்டில் வந்து ஜாயின்ட் செய்துக்கிறேன்னு சொன்னேன். விதார்த்தும் சரியினு சொன்னான். ஆனா திடீர்னு மூட் மாறி.. நானும் கப்பல்ல வரேன்னு சொல்லிட்டு.. இங்கே வந்து மாட்டிட்டு இருக்கேன்.” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

அப்பொழுது யஷ்வந்த் திடுமென “நீ விதார்த்தை விரும்பி தான் மேரேஜ்ஜிற்கு ஒத்துக்கிட்டியா?” என்றுக் கேட்டான்.

அதற்கு ஷம்ருதா “என்ன கேள்வி இது! ஆஃகோர்ஸ்.. என் பெரெண்ட்ஸ் மாப்பிள்ளை இவன்தான் என்று கைக் காட்டி என்கிட்ட சம்மதம் கேட்டாங்க! இரண்டு தரம் மீட் செய்தோம்.. எனக்கு பிடிச்சுருந்துச்சு! ஒத்துக்கிட்டேன்.” என்றவள், தொடர்ந்து “தெரியும்! எதுக்கு இந்த கேள்வி கேட்டேன்னு எனக்கு தெரியும்.” என்றாள்.

யஷ்வந்த் “எதுக்கு என்று கெஸ் செய்கிறே!” என்றுக் கேட்டான்.

ஷம்ருதா “நானும்.. விதார்த்தும்.. அடிக்கடி சண்டை போட்டுக்கிறோம்.. அதை வச்சு தானே கேட்கிறே! நாங்க சண்டை போடுவோம்.. சேர்ந்துப்போம். உனக்கு என்ன பிரச்சனை!” என்றுக் கேட்டாள்.

அதற்கு யஷ்வந்த் “என் பிரெண்ட் மேலே இருக்கிற அக்கறை தான் காரணம்!” என்றான்.

“புரியலை!”

“என்னால் டைரக்டா ஆன்சர் செய்ய முடியாது. அது சரியா இருக்காது.” என்றுச் சிரித்தான்.

“ஏன்?”

“என் பிரெண்ட் மேரேஜ் செய்துக்கிற ஆள் அவனுக்கு மேட்சா இல்லை.. என்று எப்படி உன்கிட்டவே சொல்வேன்.” என்றான்.

“என்ன! என்ன! என்ன சொன்னே! நான் அவனுக்கு சரியான ஆள் இல்லையா! தப்பு தப்பு.. அவன்தான் எனக்கு சரியான ஆள் இல்லை.. தெரியுமா! சும்மா திட்டிட்டே இருக்கான்.” என்று மூச்சு வாங்க கூறினாள்.

அதைக் கேட்ட யஷ்வந்த் திடுமென கடகடவென சிரிக்க ஆரம்பித்தான். சிரிக்க ஆரம்பித்தவனால் நிறுத்த முடியவில்லை.

ஷம்ருதாவிற்கு சிறிது நேரத்திற்கு பின்னே அவள் செய்த தவறு புரிந்தது.

நாக்கை கடித்துக் கொண்டவள், “மறுபடியும் அதே கேள்வி தான் கேட்க போகிறேன். நாங்க எப்படியிருந்தா.. உனக்கு என்ன வந்துச்சு! அதெல்லாம் நாங்க நல்லா இருப்போம்.” என்றாள்.

அதற்கு தோள்களை குலுக்கிய யஷ்வந்த் “உங்க வாழ்க்கை உங்க இஷ்டம்! நல்லா இருந்தா சந்தோஷம் தான்!” என்றான்.

அவனை வினோதமாக பார்த்த ஷம்ருதா “நீ பார்த்த வில்லன் வேலைக்கும்.. இந்த பேச்சுக்கும்.. கொஞ்சம் கூட சம்மதமில்லையே!” என்றாள்.

யஷ்வந்த் சிரிப்புனிடையே “என்னது! என்ன சொன்ன! வில்லன் வேலையா!” என்றுக் கேட்டான்.

“இல்லையா பின்னே! என்னைக் கடத்திட்டு தானே வந்திருக்கே!”

“அதுதான் நானும் தெளிவா சொல்லிட்டேனே! உன்னை என் சொந்தமாக்கி கொள்ள ஒன்றும் நான் உன்னை இங்கே வரவழைக்கலை.” என்றான்.

அதற்கு அவனைப் போல் தோள்களை குலுக்கிய ஷம்ருதா “நானும்.. அதை நம்புவதற்கு இல்லை என்றுச் சொன்னேனே..” என்றாள்.

அப்பொழுது அவர்களை நோக்கி வந்த ஒருவன்.. அவர்கள் பேச்சு கேட்காத தொலைவில் நின்று.. பேச அனுமதி வேண்டி நின்றான்.

அவனைப் பார்த்த யஷ்வந்த் விபரம் கேட்கவும், அவனது அருகில் வந்தவன் யஷ்வந்திடம் ஏதோ கூறவும், அவன் ஷம்ருதாவிடம் “சாப்பிட போகலாமா!” என்றுக் கேட்டான்.

அவன் கேட்கவும், அது வரை தெரியாது இருந்த பசி அப்பொழுது தெரிந்தது. அதனால் எவ்வித கூச்சமும் இன்றி.. பலமாக தலையை ஆட்டினாள்.

சிறு முறுவலுடன் யஷ்வந்த முன்னே செல்ல ஷம்ருதா அவனது பின்னோடு சென்றாள்.

கிட்டத்தட்ட ஐம்பது பேர் தராளமாக அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு வட்ட மேசைகள் நாற்காலிகள் போடப்பட்டு சாப்பிடும் அறை பெரிதாக இருந்தது. நடுநடுவில் நீருற்றுகளும்.. அமைந்திருந்தது. அனைத்திற்கும் நடுநயமாக வட்ட வடிமாக விளிம்பு கம்பிகளுடன் காலியிடம் இருக்கவும், ஷம்ருதா ஆர்வத்துடன் சென்று அதைப் பிடித்து எட்டிப் பார்த்தாள்.

அவளது கண்கள் விரிப்பில் வியந்தது.

ஊடுருவும் கண்ணாடிகளால் ஆன பகுதியின் வழியாக கடல் நீர் தெரிந்தது.

கப்பலில் நின்றுக் கொண்டு கடந்து செல்லும் கடல்நீரை பார்ப்பதே பெரும்.. சிலிர்ப்பை ஏற்படுத்தியிருக்க.. இவ்வாறு தனக்கு கீழ் நகரும் கடலை பார்க்கவும், மேலும் சிலிர்ப்பை உணர்ந்தாள். இவ்வளவு தெளிவாக கடல் நீர் தெரிவதற்கு காரணம்.. அங்கு விளக்கு ஏதேனும் பொருத்தப்பட்டிருக்கிறதா.. என்று அவள் எட்டிப் பார்த்த பொழுது.. அவளது தோளைத் தட்டி அழைத்த யஷ்வந்த் மேலே சுட்டிக் காட்டினான்.

என்ன என்பது போல்.. மேலே பார்த்தவளுக்கு.. கப்பலுக்கு அடியில் செல்லும்.. கடல் நீர் தெளிவாக தெரிந்தற்கு காரணம் புரிந்தது. கீழே எவ்வாறு வட்டவடிவில் அமைந்த பகுதி கடல் நீரை காட்டியதோ.. அதே போல் மேலே.. வட்ட வடிவமாக தெரிந்த பகுதியின் வழியாக வானம் தெரிந்தது.

சூரியனின் வெயில் கண்களை கூசச் செய்ய.. கண்களை சுருக்கி சிரித்தவள், கீழே பார்த்தாள். பின் மேலே பார்த்தாள். ஏனோ அவளுக்கு.. வானையும் கடலையும்.. தனக்கு மேலேயும் கீழேயும்.. அடக்கி விட்டது போன்று இருந்தது.

தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள.. அங்கு இருந்தவனிடம் திரும்பி சந்தோஷம் மாறாமல் சிரித்தாள். அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முகத்தில் தென்பட்ட சந்தோஷம் அவனையும் தொற்றிக் கொண்டது.

ஷம்ருதா “சூப்பரா இருக்கு! யாரோட ஐடியா இது?” என்றுக் கேட்டாள்.

யஷ்வந்த் “என்னோடது தான்! ஆனா புது ஐடியா எல்லாம் இல்லை.. பழைய ஐடியா தான்! அதை நான் சுட்டுட்டேன்.” என்றான்.

“என்னது!”

“ஆமா ஷம்ருதா! நீ பழைய தொட்டி வீடு என்றுச் சொல்வாங்க அதைப் பார்த்திருக்கியா! வெயில் வீட்டுக்குள்ள வரணும் என்பதற்காக அப்படிக் கட்டியிருப்பாங்க! இது அந்த மாதிரி தான்!” என்றான்.

ஷம்ருதா “ஆமாமில்ல! ஆனா அதை கப்பலில் கொண்டு வந்திருப்பது எக்ஸ்லென்ட் ஐடியா!” என்று உண்மையாக பாராட்டினாள்.

“தேங்க்யூ சோ மச்! இந்த பாராட்டில் பாதி.. நான் சொன்ன மாதிரி டிசைன் செய்து தந்தவங்களுக்கு போய் சேரும்.”

“கண்டிப்பா..” என்று ஷம்ருதா ஒத்துக் கொண்டாள்.

பின் இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.

மேசையில்.. பல்வேறு வண்ணங்களில்.. இதுவரை அவள் பார்த்திராத உணவு பதார்த்தங்கள் மணம் கமழ வைக்கப்பட்டிருந்தன. பார்க்கும் பொழுதே ஷம்ருதாவிற்கு நாவில் எச்சில் ஊறியது. ஆனால் தயக்கத்துடன் விழித்தவாறு அமர்ந்திருந்தாள்.

அவளது தயக்கத்திற்கு அர்த்தம் புரிந்து சிரித்த யஷ்வந்த்!

“டொன்ட் வெர்ரி ஷம்ருதா! எல்லாமே லைட்டா புட் வெரைட்டிஸ் தான்! அதாவது ஈஸியா டைஜிஸ்ட் ஆகிற மாதிரியான புட் ஐட்டம்ஸ்! நீ எந்த வித தயக்கம் இல்லாம எது பிடிக்குதோ அதைச் சாப்பிடலாம். மேசையில் இருக்கிறது புல்லா சாப்பிடணும் என்ற கட்டாயம் இல்லை. அளவா சாப்பிடணும் என்று அத்லெடிக்ஸ் ஆன உங்களுக்கு தெரிந்திருக்கும்.” என்ற அடுத்த கணம்.. ஷம்ருதா சாப்பிட தொடங்கியிருந்தாள்.

ஆர்வத்துடன் ஷம்ருதா சாப்பிடவும், சிறு முறுவலுடன் அவளிடம் பேச்சு கொடுக்காமல் யஷ்வந்த் அமைதியாக சாப்பிட்டான்.

திருப்தியாக சாப்பிட்ட முடித்த பின் நிமிர்ந்த ஷம்ருதா யஷ்வந்த் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை அப்பொழுது தான் பார்த்தாள்.

டிஷ்ஷு கொண்டு வாயை துடைத்தவாறு “இதுக்கு முன்னாடி பொண்ணுங்க சாப்பிடுவதை பார்த்தது இல்லையா!” என்றுக் கேட்டாள்.

அதற்கு சிரித்த யஷ்வந்த் “அப்படியில்லை ஷம்ருதா! நிஜமா சொல்றேன். நான் சாப்பிட்டதை விட.. நீ சாப்பிட்டதை பார்த்த பொழுது தான் எனக்கு வயிறு நிரம்பின மாதிரி இருக்கு! பாடி ஷேப்பா இருக்கணும்.. அப்படினு வேற வழியில்லாமல் டையட்டில் இருக்கிறவ நீ என்று நினைக்கிறேன்.” என்றான்.

ஷம்ருதா அசடு வழிவதை அவனுக்கு காட்டாதிருக்க.. முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அதற்குள்.. அவர்களது மேசையில் இருந்ததை சுத்தம் செய்த பணியாளர்கள்.. அடுத்த ஐஸ்கீரிமை பரிமாறினார்கள்.

அதைச் சாப்பிடாமல் தற்பொழுது ஷம்ருதா அவனையே பார்த்துக் கொண்டிருக்கவும், யஷ்வந்த் நன்றாகவே சிரித்து “என்ன ஷம்ருதா! நான் சாப்பிடுவதைப் பார்த்து நீ வயிற்றை நிரப்ப போறீயா!” என்றான்.

உடனே ஷம்ருதா “நீ சாப்பிட்டா என் வயிறு எப்படி நிறையும்.. நான் சாப்பிட்ட தான் நிறையும். இந்த டையலாக் எல்லாம் புலீஷா இருக்கு!” என்றவாறு பெரிய ஸ்புனில் அதிகமாக எடுத்து வாயில் திணித்தாள்.

உதட்டில் வழிய சாப்பிட்டவளைப் பார்த்த யஷ்வந்த் டிஷ்ஷுவை எடுத்துக் கொடுத்து “சரி! வேற என்ன யோசிச்ச?” என்றுக் கேட்டான்.

அதற்கு ஷம்ருதா “அதை எதற்கு சொல்லணும்! நான் என்ன சொன்னாலும் அதுக்கு சரியான பதிலை.. அதாவது நான் பேசியது தவறு நீ சொன்னது தான் சரி என்கிற மாதிரியான பதிலை வச்சுருப்பே!” என்றாள்.

அதைக் கேட்டு நன்றாகவே சிரித்த யஷ்வந்த் “பரவாலை! அது என்னவென்று சொல்லு! ப்ளீஸ்!” என்றவன், தொடர்ந்து “யு னோ ஒன் தின்க்! ரொம்ப நாட்களுக்கு பிறகு.. இன்னைக்கு தான் சிரிச்சுட்டே இருக்கேன்.” என்றான்.

உடனே ஷம்ருதா “இதைத் தான்! இதைத் தான் சொல்ல வரேன். ஆனா நீ ஒத்துக்க மாட்டே!” என்றாள்.

யஷ்வந்த் புரியாமல் “அதுதான் ஒத்துக்கிட்டேனே!” என்றான்.

அதற்கு ஷம்ருதா “இதே விசயம் இல்லை! இந்த மாதிரி தான் அந்த விசயம்! அதாவது நானே என் லவ்வை சொல்லணும்.. என்று நீ.. இந்த மாதிரி டையலாக் பேசி.. என்னை இம்பரஸ் பண்ண பார்க்கிறே!” என்றாள்.

அதற்கு யஷ்வந்த் “நானா!” என்று தன்னைச் சுட்டிக்காட்டினான்.

ஷம்ருதா “ஆமா! கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி.. நான் சாப்பிடுவதை இரசிக்கிற மாதிரி ஆக்டிங் செய்தே! இப்போ உன்னைப் பார்த்த பிறகு தான்.. சிரிச்சுட்டே இருக்கேன்னு.. இந்த மாதிரி டையலாக் எல்லாம் பேசுவதை என்னவென்று சொல்லுவது! இதெல்லாம் என்னை இம்பரஸ் செய்ய தானே! இரண்டு கப்பலுக்கு சொந்தக்காரன், ஜென்டிலா பேசுபவன், தன்னோட பணத்தின் செழுமையை இதோ சாப்பாட்டு மேசையில் கூட காட்டுபவன்.. என்று பலவிதமா என்னை நீ கவர பார்க்கிற! அதாவது இதையெல்லாம் பார்த்து.. நான் உன்கிட்ட மயங்குவேன் என்று எதிர்பார்க்கிறே! நானே வந்து என்னை காதலிக்கறீங்களா என்றுக் கேட்க வைக்க நினைக்கிறே!” என்றாள்.

யஷ்வந்த் “வாட்!” என்றுச் சிரிக்கவும்,

முதலில் முறைத்த ஷம்ருதா.. பின் தொடர்ந்து “அதுதான் ஸார்! நான் உன்னை லவ் செய்ய மாட்டேன்.. என்று கெத்தா சொல்லியிருக்கீங்களே! அது எதுக்கு என்றால்.. நானே வந்து உங்களைப் பார்த்து ஐ லவ் யு சொல்லணும். அதற்கு தானே!” என்றாள்.

யஷ்வந்த் “வாட்! உனக்கு ஏன் இப்படித் தோணுது!” என்றுச் சிரித்தான்.

“எனக்கு தோன்றலை ஸார்! இது நீங்க சொன்னது!”

“நான் சொன்னேனா!?”

“ஆமா! ஒருவேளை நீ என்னை லவ் செய்துட்டானு கேட்டே தானே!”

“ஓ அதுவா! அது சும்மா! உனக்கு சரிக்கு சரி பேசணும் என்றுச் சொல்லியது! ஆனா வாயடிக்கிறதில்.. உன்னை யாரும் மிஞ்ச முடியாது.” என்றுச் சிரித்தான்.

பின் தொடர்ந்து “மறுபடியும் கேட்கிறேன். உனக்கு ஏன் அப்படித் தோன்றுது. நான்தான் உன்கிட்ட எந்த மாதிரியும் தப்பா நடந்துக்கலையே! ஏன் தப்பா கூடப் பார்க்கலை.” என்றான்.

“நீ நடிக்கிறே!”

“அது சரி.. உன்கிட்ட பேசி ஜெயிக்கிறது தான் கஷ்டம் என்று நினைச்சேன். ஆனா உனக்கு புரிய வைக்கிறதும் ரொம்ப கஷ்டம் போல!” என்று வருத்தம் போல பேசியவன், பின் அடக்க மாட்டாமல் சிரித்தான்.

ஷம்ருதா தோள்களை குலுக்கிக் கொண்டு “நான் தப்பா நினைக்கிறதாவே இருக்கட்டும். நீ சொல்வது தப்பு! நீ சொல்வது நடக்காதுனு.. நீ சிம்பிளா நிரூபிக்கலாமே!” என்றுக் கேட்டாள்.

கண்கள் இடுங்க யஷ்வந்த் “எப்படி?” என்றுக் கேட்டான்.

“சீக்கிரம்.. விதார்த் இருக்கிற கப்பலில் தான் என்றில்லை. என்னை இந்த கப்பலில் இருந்து வெளியே விட்டுருலாமே! எனக்கு ஒரு சின்ன ஃபோர்ட் அரென்ஞ் செய்துக் கொடுங்க! நான் என் போக்கில் போயிருவேன். நீங்களும் நான் சொல்லியது தப்பு என்று நிரூபிச்சரலாம்.” என்றாள்.

யஷ்வந்த் டிஷ்ஷு கொண்டு வாயைத் துடைத்தவாறு “உன் வீட்டில் உனக்கு ஒரு காரியம் ஆகணும் என்றால்.. ஓடி ஓடி வேலை செய்து.. ஐஸ் வைத்து.. காரியத்தை சாதிக்கிற ஆள் என்று நினைக்கிறேன்.” என்றுச் சம்பந்தம் இல்லாமல் பேசினான்.

ஷம்ருதா குழப்பத்துடன் பார்க்கவும், யஷ்வந்த் “உன் பேச்சில் திடீர் மரியாதை வந்துச்சு! என்னடானு பார்த்தா.. அந்த மரியாதை உன்னை இங்கிருந்து அனுப்புவதற்காக வந்திருக்கு..” என்றுச் சிரித்தான்.

அசடு வழிவதை அவனுக்கு காட்டாதிருக்கும் பொருட்டு.. முயன்று கோபத்தை வரவழைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

“எதுக்கு பேச்சை மாத்துக்கிறே!”

யஷ்வந்த் “சரி நான் வேற மாதிரி.. கெளெரிஃபை செய்யட்டுமா!” என்றுக் கேட்டவன், தொடர்ந்து..

“உன்னை இங்கே காதலிக்கவோ.. காதலிக்க வைக்கவோ.. கூட்டிட்டு வரலை. முதல்ல சொன்ன மாதிரி.. என்னோட சேட்டிஸ்ஃபைக்காக ஒரு மீட்டிங் அவ்வளவுத்தான்! ஒருவேளை உன்கிட்ட மனசுவிட்டு பேசாம இருந்துட்டா! உன்கிட்ட பேசியிருக்கலாமோ என்று மனசை உறுத்த கூடாது.. அதற்காக தான் இப்படிக் கூட்டிட்டு வந்தேன்.”

“அதாவது நீ ஒரு பாதை வழியாக போயிட்டு இருக்கிற போது.. போகிற வழியில்.. குறுக்கு பாதை ஒன்றை பார்க்கிறே! அது நீ போகிற இடத்திற்கு சேர்க்குமா.. இல்லை வேற இடத்திற்கு சேர்க்குமா என்று உனக்கு தெரியாது. ஆனா நீ க்ரஸ் செய்து போயிட்டு இருக்கும் போது.. ரொம்ப டையர்டா ஆகிறே! அப்போ.. உன் மனசுல அந்த குறுக்கு பாதையில போயிருக்கலாம்.. என்று நினைச்சு ஃபீல் செய்துவிடக் கூடாது. சோ அந்த பாதை.. நீ போகிற இடத்திற்கு சேர்க்குதோ இல்லையோ.. சேர்க்கும் என்றால்.. உன் அதிர்ஷ்டம்! அப்படியில்லை என்றால்.. ஒரு பிராப்ளமும் இல்லை. திரும்பி வந்துடலாம். அந்த பாதை ஒரு சான்ஸ் அவ்வளவு தான்! அதே மாதிரி தான் நீயும்!“

“நீயும் ஒரு சான்ஸ் மாதிரி தான்! இந்த மீட்டிங்கை மிஸ் செய்துட்டு.. ஒருவேளை நாம் மீட் செய்திருந்தா என்ன நடந்திருக்கும்.. என்று நினைச்சு கற்பனை செய்து.. புலம்பறதுக்கு.. பதில் இது பெட்டர்! என் சேட்டிஸ்ஃபைக்கா நான் எதை வேண்டுமென்றாலும் செய்வேன். இதோ உன்னைக் கூட்டிட்டு வந்துட்டேன்.”

“உன் கூடப் பேசிட்டு இருக்கேன். நீ பேசுவதை கேட்கிறதுக்கு இன்டர்ஸ்டிங்கா இருக்கு! நல்லா சிரிக்கிறேன். நீ கோபப்பட்டு பேசுவதைப் பார்க்கிற போது.. கூடச் சிரிப்பு தான் வருது! சோ க்யுட்.. என்றுத் தோணுது. மற்றபடி எனக்கு எதுவும் உன்கிட்ட தோணுலை. அப்படித் தோன்றினா.. நான் இப்படி தள்ளி உட்கார்ந்து பேசிட்டு இருந்திருக்க மாட்டேன்.” என்றான்.

யஷ்வந்த் கூறி முடிக்கும் வரை.. எதுவும் பேசாமல் அவனை வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்த ஷம்ருதா அவன் பேசி முடித்ததும் ஷம்ருதா “சோ நான் ஒரு சாய்ஸ் மட்டும் தான்! மற்றபடி.. என்னை ஒரு மனுஷியா தெரியலை. இன்னும் தெளிவா சொல்லணும் என்றால்.. நீ வச்சு விளையாட்டிட்டு ஒகே தான் என்றுவிட்டு.. தள்ளி வைக்கிற பொருள்!” என்றாள்.

யஷ்வந்த் “ஹெ! என்ன நீ! பெரிய வார்த்தை எல்லாம் பேசுகிறே! பசங்க பொண்ணுங்க வாழ்க்கையில் விளையாடுவது என்றால் வேற மாதிரி பொருள் தரும்.” என்றுச் சிரித்தான்.

உடனே ஷம்ருதா சுருதி ஏற “அதுவே கேவலமானது.. ஆனா நீ இப்போ செய்துட்டு இருக்கிறது அதை விட கேவலமானது. என்னவொரு திமிர்! ஹெவ் டேர் யு ராஸ்கல்!” என்று சீறியவாறு எழுந்தாள்.

யஷ்வந்த் அமைதியாக “சோ! உனக்கு இந்த மாதிரியும் கோபம் வரும்!” என்றவன், தொடர்ந்து “நீ கண்டதை எல்லாம் என்னைப் பற்றி நினைச்சு குழம்புகிறே.. என்றுத் தான் உனக்கு விளக்கம் கொடுக்கிறதுக்காக சொன்னேன். ஒருவேளை உனக்கு என் நிலையை விளக்கமா சொல்லியிருக்க கூடாதோ! நான் தான் டீசன்டா முதல்ல ஒரு விளக்கம் கொடுத்தேனே.. அத்தோட விட்டுருக்கலாம் தானே! அதை நம்பாம எதேதோ பேசிட்டு என் வாயை கிண்டி உண்மையை வாங்கிட்டு.. இப்போ கோபப்பட்டு என்ன யுஸ்!” என்றுச் சிரித்தவன், “இப்போ என்ன கப்பலை திருப்பணுமா! ஸாரி ஷம்ருதா! முடியாது.” என்றான்.

ஆனால் ஷம்ருதா கரங்களை மார்பிற்கு குறுக்கே கட்டிக் கொண்டு “கண்டது என்று எதைச் சொல்கிறே! ஓ உன்னோட பணத்திலும் அக்கறையா பார்த்துக்கிறதையும்.. பார்த்து.. எனக்கு காதல் வந்திரும் என்றுச் சொன்னதை சொல்கிறாயா?” என்றுக் கேட்டாள்.

யஷ்வந்த் அமைதியாக சிரிக்கவும், தீர்க்கமாக அவனைப் பார்த்தவளின் முகத்தில் சிறு முறுவல் மலர்ந்தது. அதைக் கண்டு யஷ்வந்தின் முகத்தில் யோசனை தோன்றியது.

ஷம்ருதா “சோ இது உன்னோட லைஃப்பில் நடக்கிற ஒரு சான்ஸ் இன் த நேம் ஆஃப் மீட்டிங்! ரைட்!” என்றாள்.

அதற்கு யஷ்வந்த் அமைதியான முறுவலுடன் ஆமோத்தித்தான்.

தற்பொழுது ஷம்ருதா அவனை கூர்விழிகளால் துளையிட்டவாறு “இந்த சான்ஸ் ஆஃப் மீட்டிங் உன்னோட லைஃப்பில் மறக்க முடியாத.. கடந்து செல்ல முடியாத இன்ஸிடன்டா ஆகிட்டா?!” என்றுக் கேட்டாள்.

யஷ்வந்த் விழிகள் இடுக “வாட் யு மீன்?” என்றுக் கேட்டான்.

ஷம்ருதா “நீ என்னை லவ் செய்ய மாட்டேன்னு சொன்னே தானே! உன்னை என்னை லவ் செய்ய வச்சுட்டா!” என்று புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

யஷ்வந்த் யோசனை மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஷம்ருதா “திமிரா! உன்னை லவ் செய்ய மாட்டேன்னு சொன்னே தானே! என் முன்னாடி மண்டிப் போட்டு உன் காதலை சொல்ல வச்சுட்டா!”

“என் பின்னாடியே.. காதல் என்று சுத்த வச்சுட்டா!”

“என்கிட்ட உன் காதலை சொல்லி.. மன்றாடும் போது.. அதை தூசு தட்டற மாதிரி நான் தட்டி விட்டுட்டு போயிட்டே இருப்பேன். நீ என்னை மறக்க முடியாம.. உன்னோட காதலுக்காக என்கிட்ட கெஞ்ச வைக்கட்டுமா!” என்று சவாலிட்டாள்.

மெதுவாக எழுந்து நின்றவன், தன் முன் இருந்த மேசையில் இரு கைகளையும் ஊன்றி.. “இது உன் சவாலா! இல்லை உன் ஆசையா!” என்று கண்களில் குறுஞ்சிரிப்பும், உதட்டில்.. நக்கல் சிரிப்புமாக கேட்டான்.

இந்த இரண்டு சிரிப்பும் அவளை வெறியுட்ட “தெரியும்! நீ இப்படித்தான் கேட்பே என்றுத் தெரியும். ஆனா இப்படிக் கேட்டா.. நீ நான் சொன்னதை சரியாக கவனிக்கலை என்றுத் தான் தெரிகிறது.” என்று அவனை விடவும் நக்கலாக சிரித்து உதட்டை ஒரு பக்கமாக வளைத்தாள்.

யஷ்வந்த் கண்கள் சுருங்க பார்க்கவும், ஷம்ருதா “நீ அப்படி என்கிட்ட உன் காதலை சொல்லி நிற்கும் பொழுது.. நான் அதை ஒதுக்கி தள்ளிட்டு போயிட்டு இருப்பேன் என்றுச் சொன்னேன் தானே! சோ நக்கலா ஒன்றும் கேட்டியில்ல! ஆசையா என்று அதற்கு பதில் கிடைச்சுருச்சா! இது சவால் என்று நினைத்தால்.. சவாலாகவே வச்சுக்கோ! ஆனா என்னைப் பொருத்தவரை.. உன்னோட திமிருக்கு பதிலடி!” என்றாள்.

யஷ்வந்த் மும்மரமாக தனது கைக்கடிகாரத்தை பார்த்து “ஓ மை காட்! அப்போ உன் சவாலில் ஜெயிக்கிறதுக்கு உனக்கு இருபத்திநான்கு மணி நேரம் தான் இருக்கு! டைம் இப்போ நைன் த்ர்ட்டி! நாளைக்கு காலையில் நைன் த்ர்ட்டிக்கு தான் மாலத்தீவ்ஸிற்கு போய் சேருவோம்.. அதுக்குள்ள நீ போட்ட சவாலில் ஜெயிக்கணுமே..” என்று அவளுக்காக கவலைப்படுபவன் போல் கூறினான்.

ஷம்ருதா அசட்டையாக “போதும்! போதும்! உனக்கு இதுவே அதிகம்!” என்றாள்.

“அப்படியா!” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டவனின் கண்களில் சுவாரசியம் மின்னியது.

அதைப் பார்த்து எரிச்சலடைந்த ஷம்ருதா “என்கிட்ட தோற்க விரும்பலைன்னா! பெட்டர் இஸ் யு ஸ்டே அவே ப்ரம் மீ!” என்றுவிட்டு திரும்பி நடந்தாள்.

சென்றுக் கொண்டிருந்தவளைப் பார்த்தவனின் வாய் தானே முணுமுணுத்தது.

“வெரி ஸ்மார்ட்! ஆனா ஜெயிச்சுருவேனு.. ரொம்ப தலைக்கனம் ஆகாது ஷம்ருதா! என்னைப் பற்றி உனக்கு தெரியாது.” என்றுச் சிரித்தான்.

கப்பலின் பின் பகுதியின் விளிம்பிற்கு அருகில் நாற்காலியை ஒன்று இழுத்துப் போட்டு.. அந்த விளிம்பில் தனது இருகரங்களையும் வைத்து.. அதில் தனது முகவாயை வைத்துக் கொண்டு.. கப்பல் பின்னோகி செல்வதால்.. கடலில் அளவு பெரிதாகி கொண்டே போவது போன்ற காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது மனம் கொதிகலனாய் கொதித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது அவளுக்கு அருகே யாரோ வந்து நிற்கவும், திரும்பிப் பார்க்காமலேயே அது யார் என்று ஷம்ருதாவிற்கு தெரிந்தது. எனவே அசையாது கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

யஷ்வந்த் “என்ன ஷம்ருதா! என்னை மயக்கி.. உன்கிட்ட ஐ லவ் யு சொல்ல வைக்கிறேன்னு சொல்லிட்டு.. இப்படி அமைதியா வந்து உட்கார்ந்திருந்தா எப்படி! உனக்கு இருக்கிற இருபத்திநான்கு மணி நேரத்தில் ஏழு நிமிஷம் போயிருச்சே!” என்று வம்புக்கு இழுத்தான்.

ஷம்ருதா அமைதியாக இருக்கவும், யஷ்வந்த் “என்னை எப்படி உன் பக்கம் இழுக்க போகிறே ஷம்ருதா! டு பீஸ் ட்ரஸ் போட்டுட்டு.. செக்ஸியா டான்ஸ் ஆடப் போகிறீயா!” என்றுவிட்டு.. அடக்கமாட்டாமல் சிரித்தான்.

ஷம்ருதா தனது பார்வையை அகற்றாமல் கடலை பார்த்தபடி “நான் உன்னை மயக்குவேன் என்றுச் சொல்லுலை. நீயே மயங்குவே என்றுத் தான் சொன்னேன்.” என்று நிதானமான குரலில் கூறினாள்.

அதற்கு யஷ்வந்த் “நான் பேசிட்டு இருக்கும் போது.. அதுக்கு ரெஸ்பான்ஸ் செய்யாம.. கடலை வெறிச்சு பார்த்துட்டு இருக்கிற பெண் மேலே எனக்கு லவ் வராது ஷம்ருதா!” என்று தனது பான்ட் பாக்கெட்டில் இரு கரங்களை விட்டபடி தெனாவெட்டாக கூறினான்.

ஷம்ருதா அப்பொழுதும் தனது பார்வையை அகற்றாமல் “அதெல்லாம் வரும். அதுக்கு எக்ஸாம்பிள் இதோ! நீயே என்னைத் தேடி வந்து பேசறீயே!” என்று அதே நிதானமான குரலில் கூறினாள்.

தற்பொழுது யஷ்வந்த் சத்தமாகவே கூறினான்.

“வெரி ஸ்மார்ட்!”






 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னைக்கு என் பிறந்தநாள்.. அதனால் சர்பரைஸ் யுடி! நாளை தர வேண்டியதை .இன்றே தருகிறேன். என்சாய்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5


யஷ்வந்த் ஷம்ருதாவை புத்திசாலி என்றதும்.. ஷம்ருதாவின் பதில் உடனே வந்தது.

“அது எனக்கே தெரியும்! ஆனா நீ பைத்தியம் ஆகி விடாதே! சும்மா சிரிச்சுட்டே இருந்தால்.. அப்படித்தான் சொல்லுவாங்க..”

இதற்கு யஷ்வந்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

பின் யஷ்வந்த் “சிரிச்சுட்டே இருந்தால்.. பைத்தியம் என்றுச் சொல்லுவாங்க சரி! முறைச்சுட்டே இருந்தால் என்ன சொல்வாங்க!” என்றவன், தொடர்ந்து “நீ என்ன சொன்னாலும் சரிக்கு சரி பேச வேண்டும் என்றுத் தோணுது ஷம்ருதா! நீ இந்த கப்பலை விட்டு போகும் போது.. என்னை லவ் சொல்ல வைக்கறீயோ இல்லையோ.. ஆனா உன்னை மாதிரி என்னை வாயடிக்க வைக்க போவது உறுதி!” என்றான்.

கப்பலின் விளிம்பில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு.. அவளைப் பார்த்தவாறு பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்து நன்றாக திரும்பி அமர்ந்த ஷம்ருதா “ரொம்ப உறுதியோ!” என்று வெறுமனே கூறினாள்.

யஷ்வந்த் எதற்கு என்றுக் கேட்கவில்லை. அவளைக் காதலித்து விட மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறாயா என்றுத் தான் கேட்கிறாள்.. என்று அவனுக்கு புரிந்தது.

எனவே “என் உணர்வுகளைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்.” என்று அவனும் நிதானமாக பதிலளித்தான்.

ஷம்ருதா கோபத்தில் உதட்டை கடித்தாள்.

அவளும் கோபத்தில் தான்.. அவன் காதல் எல்லாம் இல்லை.. என்று திமிராக கூறியதால்.. அவனை வீழ்த்த அந்த காதலை நீ கண்டிப்பா செய்வாய்.. என்று சவாலிட்டாள்.

ஆனால் அவளுக்கு அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று உண்மையாக தெரியவில்லை.

எந்த உறுதியில்.. அவனை அப்படிச் சொன்னாள்.. என்றுக் கேட்டால்.. அவளிடமே பதிலில்லை.

அவளது குழப்பம் முகத்தில் தெள்ள தெளிவாக தெரிந்துவிட்டதோ என்னவோ.. யஷ்வந்த் அவளைப் பார்த்து சிரித்தான்.

அந்த சிரிப்பு அவளை வெறியேற்றவும், ஷம்ருதா “என்கிட்ட பேசுவது சுவாரசியமாக இருக்கிறது என்றுச் சொன்னியே! அப்படி என்ன சுவாரசியம்!” என்று வேண்டுமென்றே அவளைப் பற்றி அவனிடம் கேட்டாள்.

யஷ்வந்த் “ம்ம்! சுவாரசியம் தான்! நீ முதலில் இருந்து என்கிட்ட பேசியது எல்லாமே.. ஆக்சுவலா பலருக்கு மூளையில் தான் தோன்றும். அதை வார்த்தைகளாக கொட்டாமல் செயலில் தான் காட்டுவார்கள். ஆனால் உனக்கு மூளையில் விசயம் தங்காமல் வாய் வழியாக வார்த்தைகள் வந்து விடுகிறது. அதாவது ஒரு காமெடி வருமே.. ‘ஸார் நீங்க மைன்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசிட்டிங்க’ என்று! அது உனக்கு நன்றாக பொருந்தும்.. உனக்கு முகத்தில் மட்டுமில்லை. தலையிலும் வாய் இருக்கு!” என்றுச் சிரித்தான்.

யஷ்வந்த் சொன்ன உவமானத்தை நினைத்துப் பார்த்த ஷம்ருதாவிற்கு குபீர் என்றுச் சிரிப்பு பொங்கியது.

அவன் கூறிய உவமானம் சரி என்பது போல்.. உடனே அருகில் இருந்த யஷ்வந்திடம் அவள் நினைத்ததை கூறினாள்.

“ஹா.. ஹா.. என்ன சொன்னே! தலையில் வாயா! ஹா ஹா.. அதை நினைச்சு பார்த்தேனா.. என்னால சிரிப்பை அடக்க முடியலை. ஹரிபாட்டரில் வருவது போல்.. எனக்கு தலையில் வாயா.. ஹா ஹா..” என்றுச் சிரிக்கவும், அவள் கூறிய கற்பனை அப்பொழுதே நினைத்துப் பார்த்த யஷ்வந்திற்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

இருவரும் விலா எலும்பை பிடித்தவாறு மூச்சு வாங்க.. தங்களை அமைதிப்படுத்தி சிரிப்பை அடக்கினார்கள்.

இன்னும் சிரிப்பின் சாயலுடன் நின்றிருந்த ஷம்ருதாவை பார்த்த யஷ்வந்த் “இதைத் தான் சொன்னேன்! யு ஆர் சோ இன்டர்ஸ்டிங்!” என்றான்.

உடனே ஷம்ருதாவின் சிரிப்பு உதட்டிலேயே உறைந்தது.

பின் தனது ஒரு புருவத்தை உயர்த்தியவாறு அவனைப் பார்த்தவள் “எனக்கு ஒரு டவுட்! கேட்கலாமா!” என்றுக் கேட்டாள்.

அதற்கு யஷ்வந்த் “என்னது இது! ஷம்ருதா.. ஒருத்தர் கிட்ட பர்மிஷன் கேட்கிறாளா! இது அதிசயம் ஆச்சே!” என்று போலியாய் வியந்தான்.

அவள் முறைக்கவும், யஷ்வந்த் “கமான் கேளு!” என்றான்.

“நீ பொய் சொல்றீயோனு டவுட்! அப்படியில்லைன்னா.. இனி பொய் சொல்லுவியோனு டவுட்!”

“நான் என்ன பொய் சொன்னேன்.. என்ன பொய் சொல்ல போறேன் என்று தெளிவாக சொல்லேன்.” என்றுக் கேட்டான்.

“நீயே கெஸ் செய்யலாம். ஆல்ரெடி நீ என்னை லவ் செய்து தான்.. இங்கே கூட்டிட்டு வந்திருக்கே! ஆனா அப்படி இல்லைன்னு பொய் சொல்றே! அப்படி அது பொய் இல்லை என்றால்.. இனிமேல் என்னை லவ் செய்ய ஆரம்பிச்சுட்டா.. அதை மறைத்து நான் உன்னை லவ் செய்யலைனு பொய் சொல்ல போறே!” என்றாள்.

ஷம்ருதா கூறியதைக் கேட்டு சிரித்த யஷ்வந்த் “நான் சில விசயங்களில் பொய் சொல்வதில்லை ஷம்ருதா! அதில் இந்த விசயமும் அடங்கும். வேணுன்னா.. நான் பிராமிஸ் செய்கிறேன். ஒருவேளை உன்னை லவ் செய்துட்டா.. அதை உன்கிட்ட ஒத்துக்குவேன். எனக்கு உணர்வுகளை மறைக்க தெரியாது. பிடிக்கவும் பிடிக்காது.” என்றான்.

ஷம்ருதா “ஒகே நம்புகிறேன். இந்த கேள்வியை நான் ஏன் கேட்டேன்.. என்றுக் கேட்க மாட்டியா!” என்றுக் கேட்டாள்.

“ஒகே கேட்கிறேன். ஒய்?”

“பிகாஸ்!” என்று இழுத்தவள், அவனை நெருங்கி.. அவனது முகத்தை பார்த்தாள். இன்னும் அவளது முகம் அவனது முகத்தருகே நெருங்கியது. யஷ்வந்த் அசையாது.. நின்றிருந்தான்.

தற்பொழுது ஷம்ருதா மீண்டும் “பிகாஸ்..” என்று இழுத்துவிட்டு “உன் கண்ணில் காதல் அப்பட்டமா தெரியுது. அதுவும்.. என் மேலே தான் காதல் என்றும் தெரியுது. நான் பொய் சொல்லுலை. உன் கண்ணில் நான்தான் தெரிகிறேன். அப்போ நான்தானே உன்னோட காதலி..” என்று அப்பாவி போல்.. கூறிவிட்டு குபீர் என்றுச் சிரித்தவாறு விலகினாள்.

பின் சிரிப்பினிடையே “பழைய சினிமாவில் எல்லாம்.. இந்த மாதிரி டையலாக்கை எப்படி சிரிக்காமல் பேசறாங்க.. என்னால சிரிப்பை அடக்க முடியலை.” என்றுவிட்டு மேலும் சிரித்தாள்.

அவள் சிரிப்பதை ஒருவித இரசிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்த ஷம்ருதா “ஹலோ மிஸ்டர்! ஞாபகம் இருக்கட்டும். உங்களைப் பொருத்தவரை.. நான் ஒரு சாய்ஸ் அவ்வளவு தான்! இப்படி சைட் அடிச்சு.. என்னை ஈஸியா ஜெயிக்க வச்சுருவே போல! கொஞ்சம் டஃப் பைட் கொடுங்க பாஸ்!” என்றாள்.

அதைக் கேட்டு சிரித்த யஷ்வந்த் “கிடைச்ச சாய்ஸை இரசிக்கிறது தப்பில்லையே! ஆனா அதுல தலைகுப்புற தான் விழக் கூடாது.” என்றான்.

அதற்கு ஷம்ருதா “கூடிய சீக்கிரம் விழத் தான் போறே! அப்போ நான் தூக்கி எல்லாம் விட்டுட்டு இருக்க மாட்டேன். நான் என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருப்பேன். நான் என்ன சொல்கிறேன் என்றுப் புரிகிறது தானே!” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

அவளுக்கு அருகே நெருங்கி வந்த யஷ்வந்த் “நான் தலைகுப்பற விழுவது என்பது நடக்கவே நடக்காது ஷம்ருதா! ஒருவேளை.. இரண்டு சதவீதம்.. அதற்கு சான்ஸ் இருந்தால்.. உன்னையும் சேர்த்து தான் விழ வைப்பேன். உன்னை விட மாட்டேன். என்ன நான் சொல்வது புரிந்ததா!” என்று அவன் அவளைப் பார்த்து முறுவலுடன் கூறினான்.

ஷம்ருதா திகைத்து போய் நிற்கவும், யஷ்வந்த் “இரண்டு சதவீதத்திற்கே இப்படி நின்றுட்டா எப்படி! மீதி நைன்ட்டி எயிட் பர்சென்டேஜ் உனக்கு சாதகமாக தானே இருக்கு! ஆனா இதுல என்ன ப்யூட்டி என்றால்.. அந்த இரண்டு சதவீதம் தான் உன்னோட வெற்றி சான்ஸ்! உன்னோட வெற்றி என்னோட வெற்றியாகவும் ஆகலாம். மீதி நையன்டி பர்ஸ்சேன்டேஜ் உன்னோட தோல்வியும் எனக்கு வெற்றி ஆகலாம். இப்போ சொல்லு.. உனக்கு இரண்டு சதவீதம் வேணுமா! மீதி நைன்ட்டி எயிட் சதவீதம் வேணுமா!” என்றுக் கேட்டான்.

ஷம்ருதாவின் பதிலும் சலிக்காமல் வந்தது.

“கண்டிப்பா டு பர்சேன்டேஜ் தான்! நீ இப்படி பேச பேச தான்.. எனக்கு உன் திமிரை அடக்கணும் என்றுத் தோணுது. ஆனா அதுல நீ சொன்ன மாதிரி நடக்காது.” என்றாள்.

அதற்கு யஷ்வந்த் “பெஸ்ட் ஆஃப் லக் ஷம்ருதா!” என்றான்.

“பெஸ்ட் ஆஃப் லக் இல்லை.. ஃபெக்ட்! விதி அதோட விளையாட்டை காட்டும்.” என்றாள்.

“அதெப்படி.. அவ்வளவு கான்பிடென்ட்டா சொல்றா.. நீ ஒரு சாய்ஸ்.. அதனால் உன் கூட பழக ஆசைப்படுகிறேன்.. அதனால் தான் கூட்டிட்டு வந்தேன் என்றுத் தான் நான் ஓப்பனா சொல்லிட்டேனே!”

“அப்படின்னு நீ நினைச்சுட்டு இருக்கிறே!”

அதைக் கேட்டு சிரித்த யஷ்வந்த் “நான் முன்னே சொன்னதிற்கு முழு விளக்கம் இன்னும் புரியலையா ஷம்ருதா! அப்படி அது காதலாக இருந்தால்.. நீ முதலில் எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்தேன்னு நினைச்சுட்டு பயந்தியோ அது நடக்கலாம்.” என்றாள்.

ஷம்ருதா “நான் விரும்பாதது எதுவும் நடக்காது என்று எனக்கு நீ பிராமிஸ் செய்திருக்கே!” என்றாள்.

அதற்கு யஷ்வந்த் “எப்போ நீ.. நான் உன்னை கண்டிப்பாக காதலிப்பேன்.. என்று சவால் விட்டியோ.. அப்பவே நான் கொடுத்த பிராமிஸ்.. கலாவதி ஆகிடுச்சு ஷம்ருதா!”

“வாட்!”

“எஸ்! ஒரு பாட்டே வருமே.. கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை.”

ஒரு கணம் அவனை அழுத்தமாக பார்த்த ஷம்ருதா “நீ விதண்டாவாதம் செய்கிறே!” என்றாள்.

அதைக் கேட்டு சத்தமாக சிரித்த யஷ்வந்த் “அது புரிந்தால் சரி!” என்றவன், தொடர்ந்து “என்ன இப்படி பேசிட்டு இங்கேயே தான் இருக்க போறீயா! எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஐயம் என்சாயிங்!” என்றான்.

அவனை வெட்டும் பார்வை பார்த்துவிட்டு.. ஷம்ருதா முன்னே நடந்தாள். அவளது பின்னோடு யஷ்வந்த் வந்தான்.

ஷம்ருதா கப்பலின் மேல் தளங்களை பார்க்க நிமிர்ந்தாள். கண்கள் கூசவும், கண்களுக்கு மேல் கையை வைத்துப் பார்த்தாள்.

அவளுக்கு பின்னால் வந்துக் கொண்டிருந்த யஷ்வந்த் அதைக் கவனித்துவிட்டு “கூட ஆள் அனுப்புகிறேன்.. மேலே போய் சுற்றிப் பார்க்கறீயா ஷம்ருதா?” என்றுக் கேட்டான்.

அதற்கு மறுப்பாக ஷம்ருதா தலையசைக்கவும், யஷ்வந்த் “நிஜமா எனக்கு ஒரு ஃபிவ்ட்டின் மினிட்ஸ் வொர்க் இருக்கு.. உனக்கு சுற்றி காட்ட வேற ஆளை அனுப்புகிறேன்.” என்று அவளை குறுஞ்சிரிப்புடன் பார்த்தான்.

அவள் அதற்கு ஒத்துக் கொள்ளுவாள்.. என்று நினைத்தான். ஆனால் அதற்கு மறுப்பாக தலையசைத்த ஷம்ருதா அவனைத் திரும்பிப் பார்த்து.. “நீயும் வருகிறாயா என்றால்.. போகலாம்.. இல்லைன்னா.. நான் ரூமிற்கு போகிறேன். நீ வொர்க் முடிச்சுட்டு சொல்லு..” என்றுவிட்டு முன்னே நடந்தவள், திரும்பி அவனைப் பார்த்து.. “என் ரூம் எங்கே இருக்கு! அப்போது.. ஒரு அவசரத்துல ஓடி வந்தேன். ஸ்டெப்ஸ் ஏறி வந்தேன்.. என்று நினைக்கிறேன். ஆனா என்னை கூட்டிட்டு போகும் போது.. லிப்ட் வழியா கூட்டிட்டு போனாங்க..” என்றாள்.

அவளை விசித்திரமாக பார்த்த யஷ்வந்த் “ஒகே உன் ரூமில் இரு! நான் வேலையை முடிச்சுட்டு வந்து கூட்டிட்டு போறேன்.” என்றவன், சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்த பணியாள் ஒருவனை அழைத்து.. ஷம்ருதாவை அவளது அறைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டான். ஷம்ருதா கண்களில் இருந்து மறையும் வரை.. அவள் செல்வதைப் பார்த்துவிட்டு.. தனது வேலையை பார்க்க சென்றான்.

சொன்னது போல்.. விரைவிலேயே வேலையை முடித்துவிட்டு.. ஷம்ருதாவின் அறையை நோக்கி சென்றவனுக்கு சற்றுமுன் அவர்களுக்கு இடையே நடந்த உரையாடலை நினைத்து சிரிப்பு தான் வந்தது.

அங்கு அறையில் அமர்ந்திருந்த ஷம்ருதா.. பலத்த யோசனையில் இருந்தாள்.

யஷ்வந்த் என்னும் மனிதன்.. அவளை ஆட்டுவித்துக் கொண்டிருப்பது போன்று இருக்கவும், அவளுக்கு உள்ளம் மேனி எங்கும் எரிந்தது. அவளுக்கு மிகவும்.. கோபத்தை ஏற்படுத்தியது யாதெனில்.. தப்புகளை வரிசையாக செய்துவிட்டு அதற்கு சிறிதும் கூட வருத்தப்படாது.. அவளிடம் சிரித்து பேசுவது தான்! அவளிடம் சற்று கோபமாகவோ.. முரடனாகவோ பேசியிருந்தால்.. அடச் சே.. என்று அவள் ஒதுக்கி விடுவாள் அல்லது ஒதுங்கி விடுவாள். ஆனால்.. அவன் இயல்பாக பேசி சிரிப்பது அவளுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. அதுவும்.. அவளை வெறும் வாய்ப்பாக அலட்சியமாக பேசியது.. அவளது கோபத்திற்கு தணலை அள்ளி போட்டது போன்று இருந்தது.

எனவே தான்.. அவனை அவனது வழியில் வீழ்த்த.. அவ்வாறு சவாலிட்டாள். காதலிக்க மாட்டேன்.. என்று உறுதியாக கூறியவனுக்கு.. அந்த நேரத்தில் அதுதான் அவனுக்கு சரியான தண்டனையாக கருதினாள். எனவே அவ்வாறு கூறினாள். ஆனால் அவன் அதையும் அலட்சியமாக கருதி.. அதை வைத்து பேசி.. அவளை வம்பிழுப்பது அவளுக்கு.. பெரும் வெறியை கிளப்பியது. எனவே யஷ்வந்தின் முகத்தில் என்னேரமும் ஒட்டியிருக்கும் சிரிப்பை எவ்வாறு அழிப்பது என்று பலத்த யோசனையில் இருந்தாள். முடிவில் எதுவும் தோன்றது போகவும், தலையை பிடித்தவாறு அமர்ந்து விட்டாள்.

அந்த நேரத்தில்.. அவளின் அறை கதவு தட்டப்பட்டது.

அவசரம் காட்டாது.. மெல்ல சென்று கதவை திறந்தாள். அங்கு யஷ்வந்த் முறுவலுடன் நின்றிருந்தான்.

ஷம்ருதா கதவை திறந்ததும்..

“போகலாமா ஷம்ருதா!” என்றுக் கேட்டான்.

“போகலாம்..” என்று இழுத்தவள், அசையாது நின்றிருந்தாள்.

“ஒகே! லெட்ஸ் கோ..” என்றுத் திரும்பி நடந்தவன், சில எட்டுக்கள் வைத்த பின்பே.. ஷம்ருதா அவனை தொடராது நின்றிருப்பதை உணர்ந்தான்.

எனவே “ஹெ என்னாச்சு! கமான்!” என்று தலையை ஆட்டி உற்சாகத்துடன் அழைத்தான்.

அதற்கு ஷம்ருதா “போவதற்கு முன்னாடி.. எனக்கு சின்ன ஹெல்ப் வேணும். யாராவது லேடீஸ் இருக்காங்களா?” என்றுக் கேட்டாள்.

உடனே யஷ்வந்த் “சுயர்! வரச் சொல்றேன்.” என்றுவிட்டு.. தனது செல்பேசியை எடுத்தவன், பெண் பணியாளரை அனுப்ப உத்தரவிட்டான்.

“டு மினிட்ஸ்ல வந்திருவாங்க..” என்று ஷம்ருதாவை பார்த்துக் கூறினான்.

“தேங்க்ஸ்! ஆனா நீ என்ன விசயம்? என்னாச்சு? என்றுக் கேட்பேனு நினைச்சேன்.”

“நீ இதுதான் மேட்டர்! அதனால லேடீஸ் வேண்டுமென்று சொல்லியிருக்கணும். ஆனா.. நீ அப்படிச் சொல்லாமல் வெறும் லேடீஸ் வேண்டும் என்றுக் கேட்ட பின்.. எதுக்குனு கேட்பது ரொம்ப அநாகரிகமான விசயம்!” என்றான்.

அதைக் கேட்ட ஷம்ருதாவின் உதட்டில் மெல்லிய முறுவல் மலர்ந்தது.

“கொஞ்சம் கூட.. மேனர்ஸே இல்லாம.. ஒரு பெண் கிட்ட சம்மதம் கேட்காம கூட்டிட்டு வந்துட்டு.. அந்த பெண்ணிற்கு பர்சனல் ஸ்பேஸ் கொடுக்கிறதை.. பாவக் கணக்கில் எழுதுவதா.. புண்ணிய கணக்கில் எழுதுவதா.. எந்த கணக்கில் அந்த ஆண்டவன் எழுதுவான் மிஸ்டர் யஷ்வந்த்! அந்த கடவுளையே நீங்க ரொம்ப குழப்பறீங்க..” என்றதும்.. யஷ்வந்த் பக்கென்று சிரித்துவிட்டான்.

அதற்குள்.. யஷ்வந்த் அழைத்திருந்த பெண்.. வரவும், ஷம்ருதா அவளை அழைத்துக் கொண்டு.. உள்ளே சென்று கதவைத் தாழிட்டாள். சிறிது நேரத்திலேயே ஷம்ருதா நன்றி கூறியவாறு வெளியே வரவும், அந்த பெண்ணும்.. அவளுக்கு வெல்கம் கூறிவிட்டு.. யஷ்வந்த் பார்த்து.. இடுப்பை வளைத்து குனிந்து.. மரியாதை செலுத்தவிட்டு.. அகன்றாள்.

யஷ்வந்த் தற்பொழுது “போகலாமா!” என்றவாறு முன்னே செல்லவும், ஷம்ருதா அவனோடு பின்னே சென்றவாறு “என்னோட முதுகில் சின்ன காயம் இருக்கு! இங்கே வரும் போது.. அம்மா காயத்தை சுத்தப்படுத்தி மருந்து போட்டு விட்டாங்க! நீ பின்னாடி இருந்து பிடிச்ச தானே.. அதுல.. பிளாஸ்டர் நகர்ந்திருச்சு! அதைத் தான் அவங்க மறுபடியும் கிளின் செய்து மருந்து போட்டு போறாங்க..” என்றாள்.

ஷம்ருதா முதுகில் காயம் இருப்பதாக கூறியதுமே.. நடந்துக் கொண்டிருந்த யஷ்வந்த் நின்றுவிட்டான்.

“வாட்! ஓ ஸாரி! ரியலி ஸாரி! ரொம்ப வலிச்சுதா! பெயின் கில்லர் இருக்கா! இங்கே கப்பலில் டாக்டர் இருக்காங்க! செக் செய்துக்கிறியா! ஐயம் ரியலி ஸாரி! எப்படியாச்சு? எப்போ ஆச்சு?” என்று வருத்தத்துடன் கேட்டான்.

“நேத்து பாத்ரூமில் வழுக்கி பின்னால் இருந்த செல்ஃபில் இடிச்சுட்டேன். நடு முதுகில்.. கம்பி கிறீடுச்சு!”

“ஓ மை குட்னஸ்! நல்லவேளை கீழே விழுந்து பலமாக வேற எங்கேயும் ஆபத்தான இடத்தில் அடிப்படலைனு நினைச்சுக்கோங்க!” என்றுச் சிறு பதட்டத்துடன் கூறினான்.

உடனே ஷம்ருதா “என் பாட்டியும் இதைத் தான் சொன்னாங்க..” என்று கண்கள் பளபளக்க கூறினாள்.

அவளது மலர்ந்த முகத்தை பார்த்த யஷ்வந்த் “உங்க பாட்டியை உனக்கு ரொம்ப பிடிக்குமா!”

“பிடிக்குமாவா! மை க்ரெனி பெஸ்ட் க்ரெனி இன் த வேர்ல்ட்!” என்று தனது கரங்களை கொண்டு தன்னையே கட்டிக் கொண்டாள். அவளுக்கு அவளது பாட்டியை கட்டிப்பிடிப்பது போன்று இருந்தது.

அவளது செய்கை கண்டு யஷ்வந்தின் முகத்தில் முறுவல் மலர்ந்தது. இருவரும் இரண்டாம் தளத்திற்கு வந்திருந்தார்கள். அங்கு.. பர்பிள் மற்றும்.. ஆகாய நீலத்தில் சுவர்களும் தரைகளும் கொண்ட அந்த கேளிக்கை பகுதி.. ஷம்ருதாவின் கண்களை வியப்பில் விரிய செய்தது.

எப்பொழுதும் போல்.. தனது கருத்தை.. அருகில் இருந்தவனிடம் சொல்ல திரும்பிய பொழுது.. யஷ்வந்தின் செல்பேசி ஒலித்தது.

எடுத்து காதில் வைத்தவனின் முகம் மாறியது.

“வாட் த ஹெல்! நீங்க எவ்வளவு முறை வற்புறுத்தினாலும்.. என்னால் உங்க கூட டீலிங் வச்சுக்க முடியாது மிஸ்டர் கண்ணபிரான்! உங்களோட பல ப்ரோஜெக்ட்ஸ் ஃபெயிலியர் ஆகிருக்கு! உங்க கூட டீலிங் வச்சுக்கிட்டவங்க.. பலத்த நஷ்டம் அடைஞ்சுருக்காங்க! ஆல்மோஸ்ட் உங்க கம்பெனி முடிந்தது என்ற நிலைமையில் இருக்குது. இந்த நிலைமையில் இருக்கும் உங்க கூட டீலிங் வச்சுக்க.. நான் என்ன முட்டாளா!” என்று எரிந்து விழுந்தான்.

“...”

அந்த பக்கம் என்ன கூறினார்களோ.. அதைக் கேட்ட யஷ்வந்த் மேலும் ஆத்திரத்துடன் “என் நெற்றியில் ஆபத்துபாண்டவன் என்று எழுதி ஒன்றும் வைக்கவில்லை மிஸ்டர் கண்ணபிரான்! நான் எதற்கு உங்க கூட டீலிங் வச்சு.. உங்க கம்பெனி மேலே வர ஹெல்ப் செய்யணும்?” என்று நக்கலுடன் முடித்தான்.

“...”

“ஹலோ கண்ணபிரான்! எஸ் உண்மை தான்! தொடர்ந்து லாஸில் போயிட்டு இருந்த ஈஸ்வரன் ஸாரோட கம்பெனி கூட போன முறை டீலிங் வச்சுக்கிட்டோம். அதற்கு அவங்க உண்மையா இருந்தாங்க.. உண்மையா உழைத்தாங்க… அதற்கான பலனை.. அதாவது இலாபத்தை அனுபவித்தாங்க! அந்த உண்மையும் உழைப்பும் உங்க கிட்ட எதிர்பார்க்க முடியாது. நீங்க.. முழு வேலையும் எங்க முதுகில் கட்டிட்டு.. விரலை கூட அசைக்காமல்.. டீலிங் வச்சுக்கிட்டோம் என்பதற்காக.. இலாபத்துல பங்கு போடலாம் என்று நினைக்கறீங்க! அதாவது எங்களோட உழைப்பில் பணம் பார்க்க நினைக்கறீங்க! என்ன உங்களோட எண்ணம் எனக்கு தெரியாது என்று நினைச்சுட்டிங்களா! அதனால் தான்.. என் அப்பாவோட ரெக்மென்டேஷனோட வந்தாலும்.. நான் ஒத்துக்கலை.” என்றான்.

“...”

“நீங்க என்ன கெஞ்சினாலும் என் பதில் நோ தான்.. மிஸ்டர் கண்ணபிரான்..” என்று கோபத்துடன் கூறினான்.

அப்பொழுது யஷ்வந்திற்கு அருகில் வந்த கப்பல் கேப்டன் “அப்போ அவங்களுக்கு எஸ் சொல்கிற வரை.. நீங்க இங்கிருந்து போக முடியாது ஸார்!” என்று தமிழில் கூறியவாறு வந்தான்.

யஷ்வந்த் இத்தனை நேரம் பேசியதை புரிந்தும் புரியாமலும் சிறு சலிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த ஷம்ருதா கூட அதிர்ந்து நின்றாள்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Really sorry friends 😔 😐

நாலு நாளா சளிக்காய்ச்சல்‌.. செம டையர்டா இருக்கு.. தீபாவளி கொண்டாட்டம் வேற.. அதனால் யூடி டைப் செய்யலை பிரெண்ட்ஸ்.

சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை யூடியுடன் வருகிறேன்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
 
Status
Not open for further replies.
Top