அத்தியாயம் 3
யஷ்வந்த் கூறியதை நம்ப முடியாமல் ஷம்ருதா நின்றது ஒரு நிமிடம் தான்.. பின் சுய நிலை அடைந்தவளாய் “ஹவ் டேர் யூ! என்னை கடத்திட்டு வந்து என்ன செய்ய போறே! யூ ராஸ்கல்! பக்கத்துல வந்தே ஐ வில் கில் யூ!” என்று ஆத்திரத்தில் கத்தினாள். கடற்காற்றின் இரைச்சலுடன் அவளது குரல் ஓங்கி ஒலித்தது.
“ஹெ ரிலேக்ஸ்! கண்டிப்பா அந்த மாதிரி தப்பான எண்ணத்தில் உன்னை இங்கே கூட்டிட்டு வரலை. அதை முதல்ல கிளியர் செய்துறேன். நீயும் மனசுல பதிச்சுக்கோ!” என்றவன், பின் தொடர்ந்து “ஒன் செக்ன்ட்!” என்றுவிட்டு திரும்பி நடந்தவாறு ஒலித்துக் கொண்டிருந்த செல்பேசியை ஆன் செய்தான்.
“ஹெ விதார்த்! இப்போ தான் என்னோட இன்னொரு ஷிப் மேனேஜர் ஃபோன் போட்டார். ஷம்ருதா தவறுதலா அந்த ஷிப்பில் ஏறிவிட்டாளாம். டொன்ட் வெர்ரி! அந்த கப்பல் ஸ்பெஷல் பேசேன்ஜர்ஸிற்காக நாங்க ஏற்பாடு செய்திருக்கும் கப்பல் தான்! அங்கே அவ அவங்களோட தான் இருக்கா.. நான் நல்லபடியா கூட்டிட்டு வரச் சொல்றேன். அவ பத்திரமா வந்துருவா! அப்பறம் இன்னொரு இன்பர்மெஷன் இப்போ நடந்தது அதைச் சொல்ல சொன்னார். ஷாக்கில் அவளோட ஃபோனை கீழே போட்டுட்டா.. அதுனால ஃபோன் கொஞ்சம் ரிப்பேர் ஆகிடுச்சு! அவளை கான்டெக்ட் செய்ய முடியாது. இப்போ ஒரு முக்கிய வேலையா இருக்கேன். அது முடிந்ததும்.. கான்டெக்ட் நம்பர் வாங்கி தரேன். ஷம்ருதா கிட்ட பேசு! நவ் பை..” என்று வேகமாக பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
யஷ்வந்த் விதார்த்திடம் ஷம்ருதா தவறுதலாக இந்த கப்பலில் ஏறிவிட்டாள்.. என்று பொய்யுரைப்பதை திகைப்புடன் கேட்ட ஷம்ருதா அவன் தொடர்ந்து கூறியதைக் கேட்டு.. “ஹெ..” என்றவாறு அவனை நோக்கி ஓடி போவதற்குள் அவன் பேசி முடித்திருந்தான்.
அவனை நெருங்கிவிட்டவள், அவன் கடைசியாக பேசியதைக் கேட்ட ஷம்ருதா.. அவசரமாக தனது செல்பேசியில் விதார்த்தை அழைக்க முற்பட்டாள். அதற்குள் செல்பேசியை அணைத்துவிட்டு யஷ்வந்த் திரும்பவும், ஷம்ருதா சட்டென்று தனது கையில் இருந்த செல்பேசியை முதுகுக்கு பின்னால் மறைத்துக் கொண்டாள்.
அதைப் பார்த்து சிரித்த யஷ்வந்த் “ஸ்மார்ட்” என்றுச் சிரித்தவாறு அருகில் வந்தவன், அவளுக்கு பின்னால் கையை நீட்டி சட்டென்று.. செல்பேசியை பறித்தவன், “ஸாரி ஷம்ருதா! நீ இங்கே இருக்கிற வரை யாரும் உன்னை கான்டெக்ட் செய்ய கூடாது.” என்று செல்பேசியை மேற்கூரையில் வீசினான்.
நொடியில் நிகழ்ந்து விட்ட இந்த சம்பவத்தில்.. ஷம்ருதா மேலும் அதிர்ந்தவளாய் “ஹெ என்ன செய்யறே!” என்று கடற்காற்றை மீறி கத்தினாள்.
யஷ்வந்த் “ஒரு பை மினிட்ஸ் டைம் கொடு.. உன்னை ஏன் கூட்டிட்டு வந்தேன்னு எக்ஸ்பிளைன் செய்யறேன்.” என்றான்.
ஷம்ருதா “முடியாது.. மரியாதையா என்னை திருப்பிக் கொண்டு போய் விட்டுரு! இல்லைன்னா.. கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன். கடல்ல குதிச்சுருவேன்..” என்று ஆக்ரோத்துடன் கூறினாள்.
யஷ்வந்த் “ஷம்ருதா! நீ இந்தளவுக்கு டென்ஷன் ஆக தேவையில்லை. அமைதியாக இரு! என்னை பேச விடு..” என்கவும், ஆத்திரம் கொண்ட ஷம்ருதா அவனைத் தாண்டி கப்பலின் விளிம்பை நோக்கி ஓடினாள்.
சட்டென்று “ஷம்ருதா நில்லு!” என்றவாறு அவளது பின்னே ஓடியவன், விரைவிலேயே அவளைப் பின்னால் இருந்து பற்றினான்.
“ஷம்ருதா! லிசன்!” என்று ஓங்கிய குரலில் அவளை அடக்க முயன்றான்.
ஆனால் அவனிடம் இருந்து அவள் திணறவும், அவளை தூக்கி கொண்டு உள்ளே போக முற்பட்டான். அதில் பயந்த ஷம்ருதா தனது முழு பலத்துடன் திமிறினாள்.
யஷ்வந்த் “விசயத்தை ரொம்ப காம்பளீகேட் ஆக்காதே ஷம்ருதா! சொன்னால் கேளு..” என்றுக் கூறி அமைதிப்படுத்த முயன்றான். ஆனால் எதையும் காதில் வாங்காது.. ஷம்ருதா திமிறவும், யஷ்வந்த் அவளோடு கீழே விழுந்தான்.
விழும்பொழுது.. அவளது முழு எடையையும் தாங்கிக் கொண்டு விழுந்தவனுக்கு தோள்பட்டையில் நல்ல அடி விழுந்தது. அதனால் அவனது பிடி தளரவும், அவனிடம் இருந்து விடுபட்ட ஷம்ருதா சற்று தள்ளி.. இரும்பு கம்பி ஒன்று இருப்பதை பார்த்தாள்.
அதை எடுத்தவள், அடிக்க கையை ஓங்கினாள். அதற்குள் சத்தம் கேட்டு வந்த ஊழியர்கள்.. விரைந்து வந்து ஷம்ருதாவின் கையை பிடித்தார்கள்.
இரண்டு மூன்று பேர் அவளைப் பிடிப்பதைப் பார்த்ததும்.. ஷம்ருதா மிரட்சியுடன் மற்றவர்களைப் பார்த்தாள்.
அப்பொழுது யஷ்வந்த் “அவளை விடுங்க..” என்றுவிட்டு.. எழுந்து வந்தவன், மிரட்சி மாறாமல் நின்றிருந்த ஷம்ருதாவின் கையில் இருந்த.. கம்பியை பிடுங்கினான்.
“ரொம்ப காம்பளீகேட் ஆக்காதேனு சொன்னேனில்ல!” என்றவன், “உன் லவ்வர் கிட்ட ஃபோன் செய்து.. என்னோட ஷிப்ல பாதுகாப்பா தான் இருக்கிற என்றுச் சொல்லிட்டு உன்கிட்ட தப்பா.. நடந்து மாட்டிக்க நான் என்ன முட்டாளா!” என்றுச் காட்டத்துடன் கேட்டான்.
ஷம்ருதா “அப்போ எதுக்கு என்னை..” என்று முடிப்பதற்குள்.. யஷ்வந்த் “அதைத் தான்.. எங்கே சொல்ல விட்டே.. பை மினிட்ஸ் பேசணும் என்றுச் சொல்றேன் தானே!” என்றுவிட்டு கம்பியை விட்டேறிந்தான்.
அது ஒரு மூலையில் சென்று விழுந்தது.
தற்போதைக்கு அவள் எதிர்பார்த்த ஆபத்து இல்லை.. என்ற தெரிந்த பின்.. அவளது மனதில் சிறு தைரியம் தோன்றியது.
எனவே ஷம்ருதா “எங்கே சொல்லுங்க பார்க்கலாம்.. என்னை கடத்திட்டு வந்ததிற்கு.. என்ன நியாயமான காரணம் சொல்லறேனு பார்க்கலாம்.” என்று மார்பிற்கு குறுக்கே கரங்களைக் கட்டியவாறு நின்றாள்.
கடற்காற்றில் தாறுமாறாக பறந்த அவளது கூந்தல் அவளது உள்ளம் கொதித்து கொண்டிருப்பதை சுட்டிக் காட்டுவது போல் இருந்தது. அதை அடக்கி.. சுருட்டி காதிற்கு பின்னால் சொருகிவிட்டு அவனை கோபத்துடன் முறைத்தாள்.
யஷ்வந்த் “அதற்கு முன்.. ஒண்ணு சொல்ல விரும்பறேன். உன்கிட்ட உன் சம்மதமின்றி.. யாரும் தப்பா நடந்துக்க முடியாது. ஆள் பார்க்க தான்.. மெலிவா இருக்கே! ஆனா ஸ்டெரென்த்தும் ஜாஸ்தி, தைரியமும் ஜாஸ்தி! பிளஷர் ஆஃப் மைன்ட்டும் நல்லா வொர்க் ஆகுது. ஐ தின்க் நீ செல்ஃபோனை ஒரு மணி நேரம் வச்சுட்டு உட்கார்ந்திருக்கிற ஆளில்லை. சுறுசுறுப்பாக எதையாவது செய்துக் கொண்டிருக்கும் ஆள் ரைட்டா! குட்!” என்று மெச்சினான்.
ஷம்ருதா எரிச்சல் மாறாமல் “என்ன செய்ய.. ஆல்வேஸ் பெண்கள் தான் அலர்ட்டா இருக்க வேண்டியது இருக்கு! புல் அட்வைஸ் எல்லாம் அவங்களுக்கு தான்.. ஆனா ஆண்கள் திருத்த மாட்டாங்க! நாங்க தான் அவங்களை அவாய்ட் செய்யணும். கவனமா இருக்கணுமா! ஐயம் சிக் ஆஃப் திஸ் சம் பீப்பிள்ஸ் மென்டாலட்டி!” என்று கொதிப்புடன் முடித்தாள்.
யஷ்வந்த் பெருமூச்சுடன் “நியாயமான ஆதங்கம் தான்! சம்மதமில்லாத பெண்ணை தப்பா பார்த்தாலே.. அவனோட பிரைவேட் பாடி பார்ட் வெடித்து போகிற மாதிரி.. கடவுள் ஆண்களை படைச்சுருந்தா நல்லாயிருந்திருக்கும்.” என்றவனின் முகத்திலும் சிறு கோபம் எட்டிப் பார்த்தது.
சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.
அந்த மௌனத்தை ஷம்ருதாவே கலைத்தாள்.
“சொல்வதற்கு விசயம் இல்லைன்னா.. கப்பலை திருப்பலாமே! இத்தனை நியாயம் பேசுகிற நீ.. இப்போ நீ செய்த அநியாயத்தை எப்படி நியாயப்படுத்த போகிறேன்னு நான் பார்க்கணும்.” என்று சிறு இளக்காரத்துடன் கேட்டாள்.
யஷ்வந்த் “ஒகே சொல்கிறேன்! விதார்த் என் லைஃப்ல சமீபத்தில் நடந்த இன்சிடன்ஸ் பற்றி சொல்லியிருப்பான் என்று நினைக்கிறேன்.” என்றான்.
ஷம்ருதா ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
யஷ்வந்த் “அபர்ணாவை என் பிரெண்ட்ஸ் பார்த்தது இல்லை. அவங்க கூட இன்டர்டுயூஸ் செய்ய வரும் போது தான் ஆக்ஸிடென்ட் ஆச்சு!” என்ற பின் சில கணங்கள் அமைதியானான்.
பின் தொடர்ந்து “அபர்ணா அழகா இருப்பா! அபர்ணா பார்ப்பதற்கு கொஞ்சம் உன் சாயல்!” என்றதும்.. ஷம்ருதா நடுவில் குறுக்கிட்டாள்.
“ஓ மை காட்! ஐ கான்ட் பீலிவ் திஸ்! உன் லவ்வர் மாதிரி நான் இருக்கிறேன் என்பதற்காக என்னை கடத்திட்டு வந்துருக்கியா! புல் ஷீட்! இந்த உலகத்திலே.. ஒருத்தர் மாதிரி ஏழு பேர் இருப்பார்களாம். மீதி ஐந்து பேரையும் கண்டுப்பிடிச்சு கடத்திட்டு வரப் போறீயா! உனக்கே இது புலீஸ்ஸா இல்லையா! உன் லவ்வர் மாதிரி இருக்கிற நான்.. எப்படி உன்னை லவ் செய்வேன் என்று எதிர்பார்க்கலாம். அதுவும் நான் உன் பிரெண்டிற்கு மனைவியாக போகிறவள் நான், கொஞ்சமாவது எத்தீக்ஸோட பேசு!” என்று வெடித்தாள்.
யஷ்வந்த் “நான் எப்போ உன்னை லவ் செய்கிறேன்.. நீயும் என்னை லவ் செய் என்றுச் சொன்னேன்.” என்றவன் தொடர்ந்து “பழகலாம் என்றுத் தானே கேட்டேன்.” என்றான்.
ஷம்ருதா “வாட்! வாட் டு யூ மீன்?” என்று இருவரும் கடற்காற்றை மீறி சற்று கத்தி பேசினார்கள்.
யஷ்வந்த் “நீயும் நானும் முதலிலேயே மீட் செய்திருக்கோம் தெரியுமா?” என்றுக் கூறியவன், அவனே பதிலும் கூறினான்.
“ஆறு மாசத்துக்கு முன்னாடி உன்னோட ஆன்ட்டி கிரிஜா.. சுபம் ஹாஸ்பெட்டல அட்மிட் ஆகிருந்தாங்க தானே! அவங்களை பார்க்க உன் அம்மாவோட வரும்போது.. கட்டுடன் ஓடி வந்த ஒருவனை நீ தாங்கி பிடிச்சுருக்கே.. அப்போ அவன் உன்னைப் பார்த்து..” என்றுக் கூறுகையில் ஷம்ருதா “அபர்ணானு சொன்னான்.. அதாவது நீ சொன்னே!” என்று புருவங்களும் கண்களும் விரிய கேட்டாள்.
பின் ஷம்ருதா “சோ?” என்கவும், யஷ்வந்த் “அபர்ணா மாதிரி இருக்கிற உன்னை மீட் செய்ய நினைச்சேன். அது ஒரு ஆத்ம திருப்திக்காக தான்! பட் அதுக்குள்ள நீ என்னோட பிரெண்ட்டோட பியான்ஸியா மீட் செய்யவும், டிஸ்அப்பாயின்மென்ட்டாகவும், அப்செட்டாகவும் இருந்துச்சு! உன் கூட இன்னொருத்தருக்கு சொந்தமானவளா.. பழக பிடிக்கலை. அதனால் இது.. நீ ஷம்ருதாவா.. நான் யஷ்வந்த்தா ஒரு ஜென்யூன் மீட்டிங் அவ்வளவு தான்!” என்றான்.
அதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்ட ஷம்ருதா “இதை சென்னையிலேயே கேட்டிருந்தால்.. நாம் தனியா மீட் செய்து பேசியிருக்கலாமே! எதுக்கு இந்த பிளான்!” என்றாள்.
அதற்கு யஷ்வந்த் “உன்னைப் பற்றி உனக்கே நல்லா தெரியும் தானே! நீ நிஜமா ஒத்துருப்பாயா என்ன! விதார்த் பற்றி எனக்கு நல்லா தெரியும். அவன் ஒத்துக்குவான் என்று நினைக்கிறாயா! அவன் என்றில்லை.. எவனும்.. தனக்கு மனைவியாக வரப் போகிறவளை.. இன்னொருத்தன் அவன் நண்பனாக இருந்தாலும்.. தனியா மீட் செய்ய.. அனுமதிக்க மாட்டாங்க! நானும் ஓப்பனா சொல்றேன். உன்னை சிஸ்டராக எல்லாம் என்னால் பார்க்க முடியாது. அதனால் தான் இங்கே இப்படிக் கூட்டிட்டு வந்தேன். விதார்த்திற்கு ஃபோன் போட்டு.. நீ ஷேப்பாக இருப்பதையும் சொல்லிட்டேன். எனக்கு முக்கியமான பிஸினஸ் மீட்டிங் இருப்பது போலவும்.. அதில் நான் கலந்துட்டது போலவும் செட் பண்ணியாச்சு! என்ன இந்த விளக்கம் போதுமா! யூ னோ ஒன் தின்க்.. இதுவரை நான் யாருக்கும்.. நான் செய்வதற்கு விளக்கம் கொடுத்தது கிடையாது. எல்லாரும் நான் என்ன செய்தாலும் சரியாக தான் இருக்கும் என்று நம்புவாங்க..” என்றான்.
ஷம்ருதா பலத்த யோசனையில் இருந்தாள்.
பின் “என் சேஃப்டி விசயத்தில் இன்னும் உன்னை நம்ப முடியலை. இங்கே இருக்கிறவங்க எல்லாம் உன் ஆட்கள்!” என்று சற்று பயத்துடன் சுற்றியும் பார்த்தாள்.
‘எப்படி நம்பிக்கை கொடுப்பது?’ என்றுப் புரியாமல் கடலை பார்த்தவாறு யோசித்தவன், பின் ஷம்ருதாவிடம் திரும்பி “ஒகே! இப்போ உன் ஃபோன் எடுத்து தருகிறேன். அதில் ஒரு வீடியோ எடுக்கலாம். அதுல நீ என் கூட தான் இருக்கிறே என்று என்னையும் கவர் பண்ணி சொல்லு! நானும் அதில் உனக்கு எதாவது ஆச்சு என்றால் நான்தான் காரணம் என்றுச் சொல்கிறேன். அதை உன்னோட வீட்டில் இருக்கிற உன்னோட சிஸ்டத்திற்கும் அனுப்பலாம். நீ ஆபத்து என்று நினைப்பது எதுவும்.. இங்கே நடக்கலைன்னா.. நீ உன் ஃபோனில் இருக்கிற வீடியோவையும்.. வீட்டிற்கு போய்.. உன் சிஸ்டத்தில் இருக்கிற வீடியோவையும் டெலிட் செய்! அதுவரை.. உன் சேஃப்டிக்காக இருக்கட்டும். நீ என்னை நம்பியாகணும். அதே போல்.. நானும் உன்னை நம்பலாம் தானே! அந்த வீடியோவை வேற யாருக்கும் அனுப்பி விடக் கூடாது. ஒகே வா! உன் ஃபோனையும் உன் கையில் கொடுத்திருவேன். பட் உன் ஃபோனில் இருக்கிற சிம் என்கிட்ட இருக்கட்டும். அதே மாதிரி.. அதில் இருக்கும் டேட்டாவையும் கட் செய்திருவேன்.” என்றான்.
பெரிய மூச்சை இழுத்து விட்ட ஷம்ருதா “லைஃப்ல சில சமயம் ஸ்டெரேன்ஞ் ஆனா விசயம் நடக்குமாம். எனக்கு இப்படி நடந்திருக்கு.. ஒகே! லெட் சீ! என் ஃபோன் எடுத்து கொடு..” என்று கையை நீட்டினாள்.
யஷ்வந்த் கூப்பிட்டால் கேட்கும் தூரத்தில் நின்றிருந்த பணியாளரை அழைத்து.. மேற்கூரையில் அவன் வீசிய செல்பேசியை எடுத்து தரக் கூறினான்.
“எவ்வளவு ஃபோர்ஸா வீசினே! என் ஃபோனுக்கு என்ன ஆச்சோ!” என்றவாறு பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த பணியாளன் செல்பேசியை எடுத்து.. கையை நீட்டிக் கொண்டிருந்த ஷம்ருதாவை தாண்டி யஷ்ந்தின் கையில் கொடுத்தான்.
ஷம்ருதா கோபத்துடன் பார்க்கவும், யஷ்வந்த் சிரிப்புடன் “நான் தானே எடுத்துட்டு வரச் சொன்னேன்.” என்றான்.
பின் அதை ஷம்ருதாவிடம் தரவும்.. அவளும் அவனும் யஷ்வந்த் கூறியது போல் காணொளியை பதிவு செய்தனர். பின் அதை அவளுடைய ஈமெயிலுக்கு அனுப்பினாள். அவள் அனுப்பியதும்.. யஷ்வந்த் கரத்தை நீட்டவும், ஷம்ருதா சிறு முறைப்புடன் அவனது கரத்தில் செல்பேசியை வைத்தாள்.
யஷ்வந்த் கூறியது போல்.. அதில் இருந்த சிம் கார்ட்டை எடுத்தவன், மற்றும் டேட்டா ஆப்ஷனையும் அழித்தான். பின் அதை ஷம்ருதாவிடம் கொடுக்கவும், வாங்கி கொண்டாள்.
பின் மார்பிற்கு குறுக்கே கரங்களை கட்டிக் கொண்ட ஷம்ருதா “எதோ என்கிட்ட பேசணும், பழகணும் என்றுச் சொன்னே தானே கமான் பேசு! என்ன பேசணும்!” என்றுக் கேட்கவும், யஷ்வந்த் குபீர் என்றுச் சிரித்து விட்டான்.
பின் “அதுக்கு முன்னாடி.. நீ விதார்த் கிட்டப் பேச வேண்டாமா!” என்றுக் கேட்டவன், விதார்த்தின் செல்பேசிக்கு.. கப்பல் கேப்டனின் செல்பேசி எண்ணை குறுந்தகவல் மூலம் அனுப்பினான்.
அடுத்த நிமிடமே விதார்த் கப்பல் கேப்டனை அழைத்தான். அதை ஏற்று காதில் வைத்த அவர் அச்சு பிசகாமல் யஷ்வந்த் சொல்லி கொடுத்தது போல்.. ஷம்ருதா தவறுதலாக இந்த கப்பலில் ஏறி விட்டதையும்.. இங்கு அவள் மட்டுமில்லாமல்.. வேறு சில பயணிகளும் குடும்பத்துடன் இருப்பதாகவும் கூறினார்.
அவர் கூறிய பொய்யை வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்த ஷம்ருதாவிடம் யஷ்வந்த் “அடுத்து அவன் உன்கிட்ட தான் பேசணும் என்றுச் சொல்வான். அப்போ தான் அவனுக்கு திருப்தி கிடைக்கும். உனக்கு என்ன பேசணும் என்றுத் தெரியும் தானே!” என்றுப் புருவத்தை உயர்த்தி கேட்டான்.
ஷம்ருதா சிறு துடுக்குடன் “நான் இங்கே நடப்பதையும்.. நீ பேசியதையும்.. சொல்லிட்டா..” என்றுக் கேட்டாள்.
அதற்கு யஷ்வந்த் முறுவலுடன் “அப்படி நீ சொல்லிட்டா.. நீ முதலில் நினைத்து பயந்தது நடக்கும்.” என்று சர்வ சாதாரணமாக கூறினான்.
“என்ன மிரட்டலா?”
“நீயும் தான் மிரட்டறே!”
அதற்கு பதில் பேச அவள் வாயை திறக்கையில்.. கப்பலின் கேப்டன் அவளிடம் செல்பேசியை நீட்டினார்.
யஷ்வந்தை பார்த்தவாறு வாங்கிய ஷம்ருதா.. அவனது மீதிருந்து பார்வை எடுக்காமலேயே “ஹலோ விதார்த்!” என்றாள்.
“.....”
“ஆமா விதார்த்! கப்பல் மாறி ஏறிட்டேன். “
“....”
“நான் என்ன செய்ய! தனித்தனியாக செக் செய்து அனுப்பியதால் வந்த வினை இது!”
“...”
“வாட்! என்ன சொல்றே! அவங்கெல்லாம்… இன்னொருத்தருக்கு வெயிட் செய்து ஒண்ணா.. கப்பலுக்கு போனாங்களா! அதெப்படி எனக்கு தெரியும். எல்லாரும் அவங்கவங்க ரூமிற்கு போயிருப்பாங்கனு நினைச்சேன்.”
“....”
“ஹெ ஸ்டாப் இட் விதார்த்! அதுதான் தப்பா ஏறிட்டேன்னு நானே.. சொல்லி வருத்தப்பட்டு.. தப்பை ஒத்துக்கிட்டேன் தானே! திருப்பி திருப்பி.. அதைச் சொல்லி காட்டி என்ன யூஸ்! வெர்ரி பண்ணாதேனு எனக்கு தைரியம் சொல்வேனு பார்த்தா! திட்டிட்டே இருக்கே!”
“...”
“ஒகே! ஒகே! புரியுது. நீயும் டென்ஷன் ஆகிட்டே! நான் நல்லா தான் இருக்கேன். டொன்ட் வெர்ரி! இங்கே எனக்கு எந்த பிராப்பளமும் இல்லை.”
“....”
“வாட்! ஷிப்பை நீங்க இருக்கிற ஷிப்பிற்கு திருப்ப சொல்வதா!” என்று யஷ்வந்தை பார்த்தாள்.
யஷ்வந்த் கப்பல் கேப்டனை பார்க்கவும், அவர் ஷம்ருதாவிடம் இருந்து செல்பேசியை வாங்கி “ஸாரி ஸார்! ஷிப் சில ஐலென்ட்டிற்கு போய்.. அங்கே பேசேன்ஜர்ஸை இறக்கி விட்டுட்டு.. நாளைக்கு தான் மாலத்தீவ்ஸிற்கு வரும். இவங்க எங்க ஓனரோட பிரென்ட்! அதனால் நாங்க பத்திரமா பார்த்துக்குவோம். உங்களுக்கு அவங்க கூடப் பேசணும் என்றால்.. இந்த நம்பருக்கு ஃபோன் போடுங்க! கொடுக்கிறேன். இப்போ கட் செய்கிறேன் ஸார்! ஸாரி! நான் என் வொர்க்கை பார்க்கணும்.” என்று அழைப்பை துண்டித்தார்.
ஷம்ருதா “ஹெ! பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லணும். விதார்த்திற்கு இந்த கப்பல் தெரியுமே!” என்று சற்றுமுன் பார்த்த திசையை பார்த்து அதிர்ந்தாள். விரைந்து சென்று.. கப்பலின் விளிம்பு கம்பியை பிடித்தவாறு பார்த்தாள்.
அங்கு அப்பொழுது சிறு புள்ளியாக தெரிந்த கப்பல் தற்பொழுது இல்லை. கேள்வியாக யஷ்வந்தை பார்க்கவும், அவன் “அந்த கப்பல் வேற டைரக்ஷன்ல போகுது.. இந்த கப்பல் வேற டைரக்ஷன்ல போகுது. கேப்டன் சொன்னது உண்மை தான்.. வேற ஜலென்ட்ஸ் வழியாக போய்.. அப்பறம் தான் மாலத்தீவிற்கு போகும். பட் எஸ் பேசேன்ஸர்ஸை இறக்கி விடுவதற்கு என்றுச் சொன்னது பொய்!” என்றான்.
இதற்கு என்ன பதில் கூறுவது என்றுத் தெரியாமல்.. கடலைப் பார்த்தவாறு திரும்பி நின்றாள். அவள் எதாவது கூறினாலும்.. அதற்கு நியாயமான பதில் ஒன்றை வைத்திருக்கிறான். ஆனால் அவன் செய்வது நியாயமற்ற செயல் என்று அவனுக்கு தெரியவில்லையா! அல்லது தெரிய தேவையில்லையா!
இரண்டாவதாக தான் இருக்க வேண்டும்.. என்று நினைத்தவள், அவனைப் பற்றி நினைப்பு தனக்கு எதற்கு.. என்றுத் தோள்களைக் குலுக்கினாள்.
மனதில் இருந்த குழப்பங்களை ஓரம் தள்ளிவிட்டு.. கடலை பார்த்தவளுக்கு.. அதன் அழகு இரசிக்க வைத்தது. அவளது முதல் கடற்பயணம் என்ற சிலிர்ப்பு தோன்றவும், மனம் படபடக்க.. இதழ்கள் புன்னகையில் விரிய.. பார்த்துக் கொண்டிருந்தாள்.
அங்கிருந்து பார்வையை எடுக்காமலேயே “கப்பல்ல போவது என்றால் நீர் தளும்பலுக்கு ஏற்ப.. ஆடி ஆடி போகுன்னு நினைச்சேன். இது ரோட்டுல போகிற கார் மாதிரி ஸ்லோவாக தான் என்றாலும் சீராக போகுது.!” என்று தனது சந்தேகத்தை கேட்டாள்.
அதற்கு யஷ்வந்த் “ஸ்கூல்ல பிஷிக்ஸ் படிச்சது ஞாபகம் இல்லையா! சின்னதை நீரில் போட்டால் அதிகமாக தளும்பும்.. ஆனால் பெரிய பொருளை நீரில் போட்டால் அதிகம் தளும்பாது.” என்றான்.
ஷம்ருதா “ஓ..” என்றுவிட்டு மெல்ல குனிந்து பார்க்க முயன்றாள். அவளுக்கு தலை சுத்துவது போன்று இருந்தது.
அப்பொழுது “நான் சொன்ன பிறகு தான்.. உனக்கு ஹஸ்பெட்டல நடந்தது ஞாபகம் வந்துச்சா!” என்று யஷ்வந்தின் குரல் இடையிட்டது.
இயற்கையில் லயித்திருந்தவளுக்கு யஷ்வந்தின் குரல் நாராசமாய் கேட்டது. திரும்பி அவனை முறைத்தவள், பின் நன்றாக அவனைப் பார்த்த மாதிரி நின்று “அது ஒரு இன்ஸிடன்டா ஞாபகம் இருந்துச்சு! இரத்தகறையோட ரூமை விட்டு ஓடி வந்த பேசன்ட்டை பிடிச்சது சாதாரண விசயம் இல்லை தானே! ஆனா நிஜமா உன் முகம் ஞாபகம் இல்லை. அப்படி ஞாபகம் இருந்திருந்தா.. உன்னைப் பார்த்ததும் கேட்டிருப்பேன்.” என்றாள்.
யஷ்வந்த் “ஏன் அப்படி ஓடினேன்னு எனக்கு தான் தெரியும். ஆனா அதுக்கு பிறகு.. எனக்கும் அது ஞாபகம் இல்லை. அபர்ணா கூட வாழ முடியாதது என் மைன்டை ரொம்பவே டிஸ்டர்ப் செய்திருச்சு! அதுனால கொஞ்சம் ஒரு மாதிரி சுத்திட்டு இருந்தேன். அப்போ ஒருநாள்.. அந்த சம்பவம் நினைவு வந்த போது தான்! அபர்ணா மாதிரி பெண்ணை பார்த்தது ஞாபகத்திற்கு வந்துச்சு! அப்பறம் உன் அட்ரஸை தேடி கண்டுப்பிடிச்சு.. உன் முன்னாடி வந்து நிற்கலாம் என்றுப் பார்த்தா.. நீயே வந்து நின்றாய்! ஆனா.. என் பிரெண்ட்டிற்கு மனைவியாக போகிறவ என்ற அறிமுகத்தோட வந்தே! அதனால் என்னால ப்ரீயா பேச முடியலை. சோ!” என்று கையை விரித்து காட்டி தோள்களை குலுக்கினான்.
அவளும் தோள்களை குலுக்கி “எப்படிப் பேசியிருந்தாலும் நோ யூஸ்! அடுத்தது என்ன நடக்கும் என்றுக் கூட எனக்கு தெரியும். நான் உன் கூடப் பழக விரும்புகிறேன் அதனால் தான் கூட்டிட்டு வந்தேன். நீ எந்த பிரச்சனையும் இல்லாம போய் சேரலாமினு.. நீ எப்படி பூசி மொழுகி சொன்னாலும்.. கடைசில உன் மேலே காதல் வந்துருச்சு.. என்னை காதலி என் காதலி என்று வசனம் பேசப் போறே!” என்றாள்.
அதைக் கேட்டு நன்றாக சிரித்த யஷ்வந்த் “ஏன் அப்படி?” என்றுக் கேட்டான்.
அதற்கு ஷம்ருதா “உங்களை மாதிரி ஆட்களை எவ்வளவு பேரை பார்த்திருக்கேன். வேணும்ன்னா கடைசில பாரு.. உன்னை லவ் செய்கிறேன்.. என்று வந்து தான் நிற்க போறே! ஆனா என்கிட்ட அது பலிக்காது.” என்றாள்.
அதற்கு யஷ்வந்த் “ஏன் நான்தான் லவ் செய்கிறேன்னு வந்து நிற்பேனா.. நீ வந்து நிற்க மாட்டியா!” என்றுக் கேட்டான்.
“வாட்! நோ வே!”
“ஒருவேளை உனக்கு என் மேலே லவ் தோன்றிருச்சுன்னா!” என்று மீண்டும் கேட்டான்.
உடனே ஷம்ருதா “அதுதான் நடக்காதுனு சொல்றேனே!” என்று சீறினாள்.
யஷ்வந்த் “ஏ ரிலேக்ஸ்! எதுக்கு இந்த கோபம்! நீ மட்டும்.. நான் இப்படித்தான் செய்ய போறேன்னு கெஸ்ஸா சொல்லலாம். ஆனா நான் சொல்ல கூடாதா!” என்றுக் கேட்ட மறு வினாடி ஷம்ருதா “சொல்ல கூடாது!” என்றாள்.
யஷ்வந்திற்கு சிரிப்பு தான் வந்தது “ஒய்?” என்றுக் காரணம் கேட்டான்.
“பிகாஸ்! இங்கே நான்தான் விக்டம்! அதாவது நான்தான் பாதிக்கப்பட்டிருக்கேன்.”
“சோ?”
“சோ! நான் என்ன வேணுன்னாலும் பேசுவேன். ஆனா நீ பேசக் கூடாது.” என்றாள்.
அதைக் கேட்டு யஷ்வந்த் நன்றாகவே சிரித்தான்.
ஷம்ருதா “உனக்கு சிரிப்பா இருக்கா! சிரி! சிரி! சோ நீ இந்த மாதிரி சில சமயம்.. லூஸ் மாதிரி பேசுவதை சகிச்சுக்கணும். அதைத் தவிர வேற எந்த பிராப்ளமும் நடக்காது தானே!” என்றுக் கேட்டாள்.
“அப்சலூட்லி நாட்!” என்று யஷ்வந்த் கூறிய மறுகணம் சிறிய சுழல்காற்று ஒன்று அடிக்கவும்.. அதில் சிக்கி கொண்ட கப்பல் சுழற்காற்றினால் ஏற்பட்ட அலையில் ஏறி இறங்கியது. அதனால் யஷ்வந்திற்கு நேராக நின்றிருந்த ஷம்ருதா தடுமாறவும், அவளைத் தாங்கி பிடித்த யஷ்வந்தும் தடுமாறி, அவளுடன் அவன் விழுந்தான்.
ஷம்ருதா திகைப்புடன் தளத்தின் தரையில் கிடக்க.. அவளது இரு பக்கமும் கரங்களை ஊன்றியவாறு.. அவளது மேல் யஷ்வந்த் விழுந்திருந்தான்.
அவனது முகத்திலும் திகைப்பு காணப்பட்டது.
கப்பலும் அவர்களது திகைப்பை பிரிதிபலிக்க இன்னும் சிறிது ஆட்டம் போட்டது.