ஹாய் டியர்ஸ்
"எனை தான் அன்பே மறந்தாயோ..!!"
கதையை இனி அமேசான் கிண்டிலில் படிக்கலாம்..
இதோ கதையில் இருந்து ஒரு குட்டி டீசர்..
******
ஷியாமும் யுக்தாவும் தேன்நிலவுக்கு வந்த இடத்தில் உலகத்தையே மறந்து அவர்கள் இருவர் மட்டுமே உலகம் என்பது போல் காதல் வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தனர்.
வழக்கம் போலவே தன் காதலை ஷியாம் அவனின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அசைவிலும் அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தான்.
அவனுக்கு கொஞ்சமும் சளைக்காமல் தன் காதலின் அளவை யுக்தாவும் ஷியாமிற்கு புரியும்படி நடந்துக் கொண்டிருந்தாள்.
இந்தத் தருணத்திற்காக வருடக் கணக்காக காத்திருந்த ஷியாமின் காத்திருப்பு கொஞ்சமும் வீண் போகவில்லை அவனின் காதல் அவளின் மனதையும் அவன்பால் மொத்தமாக சாய்த்து இருந்தது.
ஒரு மாலை நேரம் படகு சவாரி செய்ய இருவரும் கிளம்பினர். யுக்தாவின் இடையில் கை பதித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஷ்யாம் நடக்க, விரும்பியே அவனோடு இணைந்து இழைந்து நடந்து கொண்டிருந்தாள் யுக்தா.
இவர்களின் இணக்கமும் நெருக்கமும் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்க.. சிலரை அதுவே பொறாமை கொள்ள செய்து கொண்டிருந்தது. அப்படி ஒரு அன்னியோன்யம் அவர்களிடையே இருவரின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
அதே மனநிலையோடு திகட்டத் திகட்ட காதலோடும் சிலபல கொஞ்சல்களோடும் தங்கள் படகு சவாரியை முடித்து விட்டு கரை வந்து சேர்ந்தார்கள் இருவரும்.
முதலில் ஷியாம் இறங்கி கை கொடுக்க அவனின் கைகளைப் பற்றிக் கொண்டு இறங்கியவள் தன் நடையை தொடர இருந்த நொடி, எதிரில் நின்று கொண்டிருந்தவனைக் கண்டு அதிர்ந்து “தீரஜ்ஜ்ஜ்...” என்ற அலறலோடு மயங்கி சரிந்தாள் யுக்தா.
யுக்தாவின் அலறலை கேட்டு அதிர்ந்தவன், அவள் மயங்கிச் சரியவும் “யுகி..” என்று பதற்றத்தோடு அவளை தாங்க.. அவனுக்கு கொஞ்சமும் குறையாத பதட்டத்தோடு “சஞ்சு...” என்ற அலறலோடு ஓடிவந்து அவளை தாங்கி இருந்தான் தீரஜ்.
ஷியாம் ‘யார் இவன்..?’ என்பது போல் பார்த்தாலும் அப்போது இருந்த பதட்டத்தில் வேறு எந்த எண்ணமும் இல்லாமல் தன் மனைவியை காப்பாற்றுவதே ஒரே நோக்கமாக அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான் என்று மருத்துவர் கூறிவிட.. ஆனாலும் கண் விழிக்காமல் படுத்து கிடந்தவளை எண்ணி தீரஜ் ஒரு பக்கமும், ஷியாம் ஒரு பக்கமுமாக துடித்து தவித்து காத்துக் கிடந்தனர்.
இருவரையும் சில மணி நேரங்கள் துடியாய் துடிக்க வைத்துவிட்டு யுக்தா கண் விழிக்க.. அதற்காகவே அவளின் இரு புறமும் காத்துக் கிடந்தவர்கள் பதட்டத்தோடு ஆவலாக நெருங்கி அவள் முகம் பார்த்தனர்.
கண்விழித்ததும் முதலில் ஷியாமை கண்டு ஒரு அன்னியப் பார்வையை பார்த்து விட்டு தன் விழிகளை அறை முழுவதும் சுழற்றியவள் இடது பக்கம் நின்றிருந்த தீரஜை கண்ட நொடி முகம் பூவாய் மலர தன் ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி “தீரஜ்...” என்று அழைத்தாள் சஞ்சு
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னோடு ரேட்டிங் மற்றும் ரிவ்யூ மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இப்போதைக்கு இந்த கதை ப்ரீ இல்லை..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா