All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Recipes And Cooking Tips

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

நம் தோழமைகளில் பலர் சமையலில் நிபுணர்களாக இருப்பீர்கள்... நீங்க எல்லோரும் இங்கே உங்களது சமையல் திறமையை காட்டுங்கள்... நாங்கள் காத்திருக்கிறோம்...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Durga Elango

Well-known member
பீட்ரூட் அல்வா
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – ஒன்று
உருளைக்கிழங்கு – ஒன்று
சக்கரை – ஒரு கப்
பால் – 3 கப்
சோள மாவு – ஒரு தேக்கரண்டி
முந்திரி – 8
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – கால் கப்

செய்முறை

பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கால் கப் பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மூன்று கப் பாலை அரை கப்பாகும் அளவிற்கு நன்கு சுண்ட காய்ச்சவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி, அதோடு கால் கப் பாலில் சோள மாவு கரைத்து ஊற்றி அடுப்பில் வைத்து கிளறவும்.
அதனுடன் சக்கரை மற்றும் உப்பு சேர்த்து இடைவிடாது, சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும்.
கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கி, முந்திரி சேர்க்கவும். சுவையான பீட்ரூட் அல்வா தயார்.
சூடாக பரிமாறவும்
 

Mathijagadheesh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi frnds,
உலுந்கலி
செய்முறை:
1 Glass உலுந்தம் பருப்புடன் சிறிதளவு வேந்தயம் சேர்த்து நன்கு
வறுத்து கெள்ளவும்
அதனுடன் சிறிதளவு பச்சரிசி சேர்ந்து நன்கு அறைக்க வேண்டும்.பின் அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு Mix செய்ய வேண்டும்.தேவையான அளவு கருப்பட்டி அல்லது வெல்லத்தை பொடியாக்கி அதை சிறிதளவு நீர் சேர்ந்து அடுப்பில் வைத்து நன்கு கரைந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும்,ஒரு பாத்திரத்தில் நல்ல எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் அதில் கரைத்து வைத்த உலுந்த மாவை ஊற்றி நன்கு கிண்ட வேண்டும்,அது கேட்டி ஆனவுடன் கருப்பட்டி orவெல்லம் பாகை சேர்த்து நன்கு கிண்ட வேண்டும் கேட்டி ஆக வந்தவுடன் இறக்கி நெய் சேர்ந்து பரிமாறளாம்.

குறிப்பு:
இது பெண்களுக்கு மிகவும் நல்லது. இடுப்பு நன்கு பலம் பெறும்.
 

Vasugi

Active member
Vazhaipoo பிர ட் ட ல் :

வழைப்பூ : 1

கட லை பருப் பு : 150கி

சிகப்பு மற்றும் பச்சை மிளகாய் : 6

சோம்பு : 25கி

சின்ன ஜீரகம் : 5கி

சின்ன வெ ங்காயம் :10

பூண்டு : 5 ப ல்

இஞ்சி : 1 துண்டு

கடலை எண்ணெய் :50கி

உப்பு ருசிக்கேற்ப

பெருங்காயம் சிறிதளவு

செய்முறை :
வாழை பூவை சுத்தம் செய்துஅறிந்த வேக வைத்து கொள்ள வேண்டும் .
எண் ணெய் தவிர்த் து அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் ஒன்றும்
இரண்டுமாக அரைக்கவும் .
சூடான வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்த பின்னர் அரைத்த பொருட்களை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் வாழைப்பூ மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். இளசூட்டில் சிறிது நேரம் வதக்கிய பின் ன ர் பெருங்காயம் சேர்த்து கலந்து இறக்கவும். ருசியான வாழைபூ பிரட்டல் தயார்.

பின் குறிப்பு:

வேகவைத்த வாழைப்பூவோ டு புளிப்பில்லதா தயிர் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட வயிற்று புண் குணமாகும்.
 

Vasugi

Active member
Meethi palaiya soru vaichu ethum tiffin seiyalama?
Hai ,
Pazhaya soru mixieyil orae oru sutru suttri eduthu kollavum .
Athanudan sigappu arisi aval vengayam karuvaepilai jeeraham pachai milavai poondu ,enjee serthu pisainthu killu pakoodavaga podalam.




Note :
Pazhaya sathathil thaneer ootri athai marunaal kalaiyil kudithuvara pitham mattrum kabam theerum.
Moeroodu paruhivara udal soodu thaniyum. Ithanai chinna vaendiyathu saerthu sappida innum koodathal
Payan.
 

Chris Raj

Well-known member
Thanks
Hai ,
Pazhaya soru mixieyil orae oru sutru suttri eduthu kollavum .
Athanudan sigappu arisi aval vengayam karuvaepilai jeeraham pachai milavai poondu ,enjee serthu pisainthu killu pakoodavaga podalam.




Note :
Pazhaya sathathil thaneer ootri athai marunaal kalaiyil kudithuvara pitham mattrum kabam theerum.
Moeroodu paruhivara udal soodu thaniyum. Ithanai chinna vaendiyathu saerthu sappida innum koodathal
Payan.
Thanks sis
 

Vasugi

Active member
Pirandai thuvaiyal:
நெல்லஎண்ணெய் : 50 மி

பிரண்டை : சுத்தம் செய்தது ஒரு கை பிடியளவு
இஞ்சி : ஒரு பெரிய துண்டு

பூண்டு : ஒரு கை பிடி அளவு

கடலை பருப்பு : 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்: 7

புளி : எலுமிச்சை அளவு

உப்பு தேவையான அளவு

செய்முறை :

மேலே கொடுத்துள்ள பொருட்களை

தனி தனியே வருத்து கொள்ள வேண்டும்.

இதனுடன் புளி உப்பு சேர்த்து அரைத்து

கொள்ளவும். பின் நல்லெண்ணெய் சேர்த்து

நன்கு வதக்கி இறக்கவும்.

இள பிரண்டை கிடைத்தால் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும்

குறிப்பு :

சின்ன வெங்காயம், நாட்டு காய் மற்றும் பிரண்டை துவையலை சேர்த்து புளி குழம்பாகவும் வைக்கலாம்.

மருத்துவ குணங்கள்:
பசியை துண்டும். எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது . பூச்சி போக்கும்
 
Top