All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிளாணிஶ்ரீயின் 'காதலன்' - கதை திரி

Status
Not open for further replies.

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்.

காதலன் கதையை ஆரம்பத்துலேந்து படிக்க நிறைய பேரு லிங்க் கேட்டுருந்திங்க..

சோ இது வரை கொடுத்துருக்க 13 எப்பியோட லிங்க் கீழ இருக்கு
படிகாதவங்க படிச்சிட்டி ஒரு chho சொல்லிட்டு போங்க..

படிச்சவங்க மறுபடியும் படிச்சிட்டு choo சொன்னாலும் நான் கோச்சிக மாட்டேன்.

இதுல ஏதோ font பிரச்சினை இருக்கு ..

அதுனால ஒரு சில இடத்துல alignment ஒரு மாறி இருக்கும்.. அட்ஜஸ் கரோ...
பிலீஸ்....

நெக்ஸ்ட் ud எங்கன்னு கேக்குறது புரியுது...

Wednesday evg or Thursday mrg update Ota vanthu meet panreen..

நீங்க அங்க காருறது எனக்கு இங்க கேட்குது மீ எஸ்கேப்...

புதன் கிழமை வரேன்.. டீயர்ஸ்...

மிளாணிஸ்ரீ

kaadhalan.pdf
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 14 :

இம்மையும் நீ...
மறுமையும் நீ..
இன்பமும் நீ..
துன்பமும் நீ...
காயங்கள் தந்தாலும் .
களிம்புகள் நீயாவாய்...
கண்ணீர் தந்தாலும்
கைகூட்டை நீயாவாய்..
நரகமே என்றாலும்
என்னோடே நீ வருவாய்...

அம்மா “ஏன் உனக்கு லவ் மேரேஜ்ல இவ்ளோ வெறுப்பு என்று எப்பொழுதும் கேட்கும் கேள்வியை தன் அம்மாவை நோக்கி தன் தந்தையின் மடியில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள் ஜனனி .

தன் மடியில் தலை வைத்துப்படுத்திருக்கும் தன் இரண்டாவது மகன் விஸ்வாவின் தலையை வருடிய படி அமர்ந்து இருந்த சுந்தரியின் முகம் ஜனனியின் கேள்வியில் தானாகவே சோகத்தை கடன் வாங்கி கொண்டது..

தன் லாப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டே தன் குட்டி தங்கை கேட்கும் கேள்விக்கு மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு தனக்கு தெரிந்த தன் அம்மா சொல்லும் அந்த அருத பழைய கதையை கேட்க தயாரானான்,அந்த வீட்டின் மூத்தபையன் கண்ணன்.

விஸ்வாவிருக்கும் ,முருகனும் கண்ணனை போல் அல்லாமல் ஒரு கவலையுடன் அந்த கதையை கேட்க தயாரானார்கள்.

“ பாப்பு, என் தாத்தாவோட அப்பா இருக்காருல அவருக்கு ரெண்டு பசங்க ஒன்னு என் அப்பாவோட அப்பா,இன்னொருத்தவங்க என் சின்னதாத்தா .

என் சின்னதாத்தா அவங்க அப்பாவோட 55 வது வயசிலதான் பொறந்தாங்க. அதனால அவங்க மேல என் கொள்ளு தாத்தாக்கு ரொம்ப இஷ்டம்.

( 55 வது வயசில ரொமான்ஸ் பண்ணிட்டு திரிஞ்சிருக்க, பெருசு நல்ல வேலை செத்துட்ட இல்ல நானே கருணை கொலைப்பண்ணிருப்பேன்.,கடுப்புகல கிளப்பிக்கிட்டு)

அவரு அந்த ஊருல உள்ள ஒரு பெண்ணை காதலிச்சிருக்காரு ஆனால் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க என் கொள்ளு தாத்தா ஒத்துக்கவே இல்லை..

ஆனால் சின்னதாத்தா அவங்க சொல்ற எதையுமே கேட்காம அந்த பொண்ண யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டாங்க..

தான் செல்லமா வளர்த்த பையன் தன் சொல்பேச்சி கேட்காம இப்படி கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு வந்துட்டானேன்னு வேதனையில அவங்க உள்ளே நுழையும் போதே ஹார்ட் அட்டாக் வந்து அப்பவே இறந்துட்டாங்க..
கண்ணன் இடையில் “அம்மா உன் கொள்ளு தாத்தா அட்டாக்ல சாகும் போது 80 வயதுதானா” என்றான்.

சுந்தரியும் “ ஆமா டா கண்ணா “ என்றார்.

“நீ மேல சொல்லு” என்ற சொன்ன கண்ணன் தலையை லாப்டாப்பில் விட்டுக்கொண்டான்.

அவர் தன் கண்களை தொடைத்த படி “ அது மட்டும் இல்ல டா பாப்பு”
என் அப்பாவோட அண்ணனும் அதே மாறி வீட்டுல சொல்ல சொல்ல கேட்காம தான் காதலித்த பெண்ணையே கல்யாணம் பண்ணி கூப்பிட்டு வந்துட்டாங்க..

ஆரம்பத்துல எதும் பிரச்சனை இல்லனாலும் கொஞ்ச நாட்களுக்கு அப்பறம் என் தாத்தாக்கு ரொம்ப உடம்பும் முடியாம ஆகி அவங்களும் பெரியப்பாக்கு கல்யாண ஆன கொஞ்ச நாட்களிலேயே இறந்துட்டாங்க...

கண்ணன் “ அம்மா உன் தாத்தாக்கு லிவர் பெயிலியர் அப்படினு தான டாக்டர் சர்டிபிகேட் கொடுத்தாங்க” என்றான்.

அவரும் முழுவதும் சோகத்தில் இருப்பதால் கண்ணன் கிண்டல் செய்கிறான் என்பதை உணராமல் அழுத்துகொண்டே ஆமாம் என்றார்.

ஜனனியும் ,கண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
ஜனனி “ அதுக்கு அப்பறம் என்ன அம்மா ஆச்சி” என்றாள்.

அதுக்கு அப்பறம் நாங்க எல்லோரும் ஒரு சாமியார்ட்ட கேட்டபோது அவர் ஏதோ ஒரு ஜென்மத்தில் எங்க குடும்பத்துல உள்ள ஆம்பிளைங்க ,ஒரு காதல் ஜோடியை சேர விடாம கொடுமைப்படுத்திருக்காங்க.

அவங்களோட சாபம்தான் உங்க குடும்பத்தை பழி வாங்குது.முடிந்த வரை யாரும் காதல் கல்யாணம் பண்ணிக்காதிங்க ...அப்படி மீறி பண்ணா உங்க குடும்பத்துல உள்ள ஆண்களுக்கு நல்லது இல்லை அப்படின்னு சொன்னார்.

கண்ணன் ” அந்த சாமியார் கூட புழல் ஜெயில்ல இருக்காரு டா பாப்பு குட்டி” என்றான்.

சுந்தரி கண்ணன் சொல்வதை காதில் வாங்காமல் அதனால “ என் புள்ளைங்க உங்க மூணுபேருக்கும் நான் தான் பொண்ணு, மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன்.

அப்படி என் பேச்சை மீறி ஏதாவது பண்ணீங்க அவ்வளவுதான்”. என்று கோபமாக எழுந்து சென்றுவிட்டார்.

எந்த படிப்பறிவும் இல்லாமல் ..தாய் தந்தையின் சொல்லை கேட்டு வீட்டிலையே வளர்ந்த சுந்தரிக்கு இது முழுக்க முழுக்க உண்மை என்றே தோன்றியது.

அதுவும் தன் உயிர்க்கு ஏதும் ஆபத்து என்றால் தன் பிள்ளைகளின் விருப்பமே பிராதானம் என்றுபிருப்பார்.

ஆனால் இதில் கேள்வி குறியாக இருப்பது தன் கணவனின் உயிர் அல்லவா,அதனால் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

கண்ணன் தன் அன்னையின் வார்த்தைகளை அசட்டையாக எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.அதற்கு காரணமும் இருக்கிறது

தன் அம்மா சொல்வதில் எதுவும் உண்மை இருக்குமோ என்று தன் குடும்ப வரலாறை திருப்பி பார்க்கும் போது தெரிந்து கொண்டதுதான் சுந்தரியின் கொள்ளு தாத்தா 80 வயதில் இறந்தது,அவரின் தாத்தா லிவர் பெயிலியரால் இருந்தது...

பின் அவர்களுக்கு குறி சொன்ன சாமியார் ஜெயிலில் இருப்பது எல்லாம்.

அதனால் சுந்தரி இந்த கதையை சொல்லும் போது இவனுக்கு ஏதோ காசியம் கேட்பது போல் தான் இருக்கும்.

விஸ்வா கண்ணனை விட சின்னவனாக இருந்தாலும் அவனுக்கு அனைத்திலும் ஒரு தொலைநோக்கி பார்வை உண்டு.

என்னதான் அம்மா சொல்வதில் பெரிதான காரணம் ஒன்றும் இல்லை என்றாலும் அவர் கண்களில் தெரியும் அவருக்கான நம்பிக்கை என்றாவது ஒரு நாள் ஆபத்தை தரும் என்று முழுதாக நம்பினான்.

ஏதோ யோசனையில் இருந்த விஸ்வாவை கலைத்தது ஜனனியின் குரல்

“ விச்சு அண்ணா நாளைக்கு நானும் உன் காலேஜ்க்கு வரேன் பிளீஸ் அண்ணா,நான் வந்து ஜஸ்ட் பாத்துட்டு அப்பா கூட திரும்பி வந்துடுறேன் அண்ணா “ கூறி கெஞ்சலுடன் அவனை பார்த்தாள்.

தன் ஆசை தங்கை இவ்வளோ கெஞ்சும் போது அவனாலும் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை

“ சரி டா பாப்பு “ என்று அனுமதி வழங்கவே, சுகமாய் தன் தந்தையின் தோளில் உறங்கி போனாள் ஜனனி.

முருகன் ஒன்றை பத்தாக்கும் வல்லமை பொருந்தியவர்.தன் சிறு வயதிலையே தொட முடியாத அனைத்து உயரங்களையும் தொட்டவர் யாரின் உதவியும் இல்லாமல்.

அவரின் தொழில் இதுதான் என்று யாரலையும் கணித்து கூற முடியாது அனைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்குபவர்.

ஒரு ஊரின் சிறப்பு என்னவோ அதை சார்ந்து கண்டிப்பாக முருகன் ஏதாவது ஒரு தொழிலை செய்வார்.

உதரணாமக புதுக்கோட்டை என்றால் கண்டிப்பாக அவருக்கு அங்கே ஏக்கர் கணக்கில் முந்திரி தோப்பு இருக்கும், சேலம் என்றால் ஏக்கர் கணக்கில் மாந்ததோப்பு இருக்கும், மதுரை என்றால் மல்லிபூதோட்டம் இருக்கும்.

சென்னையில் இரண்டு லெதர் பாக்ஃடிரியும், முன்று மென்பெருள் நிறுவனமும் உள்ளது.இது எதையும் தேவை என்றால் ஒழிய அவர் நேரில் பார்வை இட்டது இல்லை.

நம்பிக்கையான ஆட்களை வைத்து மிகவும் திறம்பட நடத்துவார்.
ஆனால் வீட்டில் எப்பொழுதுமே தன் பொண்டாடியின் பேச்சை கேட்கும் சாதரண கணவன்தான்.

தன் பெரியபுள்ளை மட்டுமே தன் தொழிலுக்கு துணையாக வைத்துக்கொண்டு அதுவும் கண்ணன் விருப்பட்டதால் மட்டுமே,

மாநிலத்திலே முதல் மாணவனாக வந்திருக்கும் தன் இளைய மகனை சிவில் என்ஜினியராகவும் , பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்த தன் மகளை டாக்டராகவும் அவர்கள் விருப்ப படியே ஆக்க முடிவெடுத்துவிட்டார்.

மறுநாள் காலையில் முருகன்,விஸ்வா,ஜனனி மூவரும் விஷ்வாவின் கல்லூரிக்கு கிளம்பினார்கள்.விஷ்வாவின் கல்லூரி நகரத்தின் மையப்பகுதியில் இருக்கிறது,

இவர்களின் வீடு மிகவும் தூரமாக இருப்பதால் கல்லூரிக்கு அருகே உள்ள அபார்மென்டில் ஒன்றை சொந்தமாக வாங்கிகொடுத்தார் முருகன்.

(குட் அப்பா)

தங்கள் காரில் வந்து காலேஜ் வாசலில் இறங்கிகொண்டிருக்கும் போது அவ்வழியே தன் தேனுகுட்டியிடம் காலை அடனேன்ஷை போனில் போட்டபடி வந்த சந்தோஷ் அவர்களை கவனித்துவிட்டான்.

ஏற்கனவே அட்மிசன் போட வரும்போது விஷ்வாவை சிலமுறை பார்த்து பேசி இருக்கிறான்.அவர்கள் இடையில் ஒரு நல்ல நட்பும் அப்போதே இருந்தது ,அதனால் அவர்கள் அருகில் சென்று “ ஹாய் விஸ்வா” என்க.

“வாடா சந்தோஷ்” என்று திரும்பிய போதுதான் விஸ்வாவின் கையை பிடித்தபடி பட்டுப்பாவடை சட்டையில் நல்ல கொழு கொழுவென்று சிவந்த நிறத்தில் ,கழுத்திலும் ,கையிலும் வைர நகைகள் மின்ன நின்ற அந்த கொலுபொம்மயையை பார்த்தான்.

பார்த்தவன் மனதில் பசக்கென்று ஒட்டியது அவளின் பால் முகம் அதை கவனித்த ஜனனி “இந்த பிளாக் டாக்(dog) எதுக்கு நம்மல இப்படி பாக்குறான்” என்று ,அனிச்சை செயலாய் தன் அண்ணனின் பின்னால் ஒழிந்துகொண்டாள்.

அது வெட்கத்தாலா ,இல்லை பயத்தாலா என்று அந்து சிறு பெண்ணால் பிரித்து பார்க்க முடியவில்லை.
அவள் பின்னே மறைந்ததும் தன்னிலை திரும்பியவன் “சின்ன புள்ளையை போய் இப்படி பாக்குறியே டா”,என மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு விஷ்வாவின் பக்கம் தன் கவனத்தை திருப்பினான்.

விஸ்வா “முருகனை அறிமுகப்படுத்த சந்தோஷ் அங்கேயே அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகொண்டான்.

முருகன் பெருமையுடன் அவனை அணைத்துக்கொண்டு “ நல்ல மரியாதை தெரிஞ்ச பிள்ளை “ என்றார்.

பின் ஜனனியை அறிமுகப்படுத்திவிட்டு ஜனனியின்புறம் திரும்பி “பாப்பு இது சந்தோஷ் அண்ணன், என் கூட தான் இன்னும் நான்கு வருசத்துக்கு படிக்க போறான்” என்றான்.

சந்தோஷ் “ அய்யோ கடவுளே அண்ணனா,ஏய் குண்டு என்ன கெட்டவார்த்தையில கூட திட்டுடி ,தயவு செய்து அண்ணனு மட்டும் கூப்பிடாத என்று சிரிப்பை இழுத்து பிடித்தபடி அவளை பார்த்து இருந்தான்.

ஏன் என்று தெரியாவிட்டாலும் அவள் வாயிலிருந்து அண்ணன் என்று வருவது அவனுக்கு பிடிக்கவில்லை.

ஜனனி “ அண்ணனா,இவனா ,இங்கு பாரு விச்சு ,நான் உன்னையே அண்ணன்னு மூடு இருந்தாதான் கூப்பிடுவேன்,இவனையெல்லாம் முடியவே முடியாது,பேரு சந்தோஷ்தான ,சந்து, பொந்து அப்படின்னு கூப்பிட்டு கொள்கிறேன்”

என்றவள் தான் வரும்போது வாங்கி வந்த ஐஸ்கிரீமை காரில் இருந்து எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிட்டாள்.

(இந்த கதையில எந்த பொம்பள பிள்ளையும் அடக்கமாவே இருக்க மாட்டாங்க போலப்பா)

முருகன்” பாப்பு” என்று அதட்டவே ,சந்தோஷ் “பரவாயில்ல அப்பா, சந்து எனக்கு ஓகேதான் என்றவனுக்கு உள்ளுக்குள் “அப்பாடா” என்று இருந்தது.

அதன்பின் நாட்கள் ரெக்கை கட்டி பறக்கவே,விஸ்வா சந்தோஷின் நெருங்கிய நண்பன் ஆனான்.

அவர்கள் இருவரும் படிக்கும் கல்லூரி மிகவும் பணகாரர்கள் படிக்கும் கல்லூரி,
தங்கள் பெயருக்கு பின்னால் ஒரு பட்டம் வேண்டும் என்பதால்

படிப்பவர்களும்,கல்லூரி வாழ்கையில் இருக்கும் சந்தோசங்களை அனுபவிக்க படிப்பவர்களும் அதிகம் உள்ள அந்த கல்லூரியில் அவர்களுக்கு இணையாக வசதி,அழகு, என அனைத்து இருந்த போதும் எப்பொழுதும் அடக்கமாக எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல்,பெண்களை திரும்பியும் பார்க்காமல் நல்ல கலரில் ஹிந்தி பட ஹீரோ மாதிரி இருக்கும் தன் நண்பன் விஷ்வாவை அவ்வளவு பிடித்துவிட்டது சந்தோஷிற்கு

(விஷ்வாவை மட்டுமா)

விஷ்வாவை பார்த்ததும்தான் அவனுக்கு சென்னையின் மேலுள்ள தவறான அபிப்பிராயம் மாறியது.நாம் எங்கு இருந்தாலும் நம் குணத்தை தீர்மானிப்பது நம்

வளர்ப்புமுறையும்,தங்கள் சுயஅறிவு மற்றும் சுயகட்டுபாடு என்று .

சந்தோஷ் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவன் காலை பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு தன் அபார்ட்மென்ட்க்கு வந்துவிட்டான்.

எல்லோரிடமும் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகும் விஸ்வா தன்னிடம் மட்டும் அதிக உரிமை எடுத்துக்கொள்வதால் அவனாலும் மறுக்க முடியாமல் ஒத்துக்கொண்டான்,தனக்கு ஆகும் செலவை கொடுத்துவிடுவேன் என்ற நிபத்தனையோடு.

சந்தோஷிற்கு அகலியை சமாளிப்பதுதான் பேரும் பாடாகிப்போனது,காலையில் 2 மணி நேரம்,மாலை நான்கு மணி நேரம் பேசி ,வார விடுமுறைகளில் நேரே சென்று பார்த்து வந்தாலும் அவளின் அழுகையை மாற்ற முடியவில்லை.

“யாரு எனக்கு சாப்பாடு ஊட்டிவிடுவா,யாரு என்னை ஸ்கூல்க்கு அழைச்சிட்டு போவா,யாரு என்கூட கிரிக்கெட் விளையாடுவா ,யாரு எனக்கு பாடம் சொல்லி கொடுப்பா என்று ஒரு நாளைக்கு ஆயிரம் யாரை கேட்டு அவனை கதறவிட்டாள்.

பிறந்தது முதலே இவனோடவே ஒட்டுண்ணியாய் வாழ்ந்தவளுக்கு அவனின் பிரிவு சாமாளிக்க கூடியதாக இல்லை.

சந்தோஷிற்கு அப்படிதான் என்றாலும் அவனின் வயது அவனை கொஞ்சம் முதிர்வுடன் யோசிக்க வைத்தது . அவளோ குழந்தையாகவே யோசித்தாள்.

தான் போனில் பேசும் நேரத்தை அதிகப்படுதியவன் காலையில் எழுவது முதல் எல்லாவற்றையும் அவளிடம் பேசினான் ,அவன் வகுப்பில் நடக்கும் பாடமும் அதில் அடக்கம்.எவ்வளவு பேசினாலும் அவள் பழையபடி “மிஸ் யூ”,புராணத்திலே வந்தாள்.

அப்படி அவன் பேசும் போது விஷ்வாவை பற்றியும் பேசுவான்.அவனை பற்றி பேசும் போது மட்டும் அவளிடம் ஒரு அமைதி வந்து ,சுவாரசியமாக கேட்க ஆரம்பிப்பாள்.அதனால் அவனும் அவனை பற்றி அதிகமாக பேசினான்.

அவனின் நல்ல குணங்கள் என அனைத்தையும் சொன்னான்.

(ஜனனிய பத்தி மட்டும் சொல்ல மாட்டியே ...அதுலெல்லாம் நீ விவரம்டா கருவாயா)

அவன் பேசவிட்டாலும் அவளே “ஏய் அந்த வளர்ந்து கெட்டவன் இன்னைக்கு என்ன பண்ணான்”,எத்தன பேரோட ப்ரோபோசல வேண்டாம் சொன்னான்” என்று கேட்பாள்.

நாட்கள் அதன் போக்கில் போய் கொண்டிருக்க,விஷ்வாவும் ,சந்தோஷும் கடைசி வருடம் படித்துக்கொண்டு இருக்க,ஜனனி இரண்டாம் ஆண்டு மெடிசினும், அகலி முதல் வருட இளநிலையும் படித்துக்கொண்டிருந்தார்கள்.

அதன் பின் சந்தோஷ் ஜனனியை பார்க்கவில்லை என்றாலும் அவளின் முகம் அவன் இதயத்தில் அழகாக பதிந்து போனது.

விதி அவர்களின் வாழ்கையில் விளையாட முதல் காயயை நகர்த்தும் வேலைக்காக கண்கொத்தி பாம்பாக காத்திருந்தது.

வருவாள்...

மிளாணி
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்.

காதலன் நெக்ஸ்ட் எபி போட்டுட்டேன் ..
படிச்சி பார்த்துட்டு ஒரு கமென்ட்ஸ்ல ஒரு choo சொல்லுங்கள்.

லாஸ்ட் எபிக்கு choo சொன்ன அனைவருக்கும் எம் நன்றிகள்..

நன்றியுடன்
மிளாணி
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 15
கோழிகுஞ்சாட்டம் ..
உன் கையில் சுருண்டு நான் கிடக்கணும்...!

மஞ்சமே தேவை இல்லை
உன் மார்பில் மயங்கி நான் கிடக்கணும்.....

நீ....
பிச்சி பிச்சி என்னைத்திண்ண
பித்து நான் பிடிக்கணும்..

பிறந்த பலனெல்லாம்..
உன் அணைப்பிலே உணரனும்..

இச்சி இச்சி நீ கொடுக்க
நான் இன்பமா லயிக்கணும்..

இன்னதுன்னே தெரியாம
உன் உலத்துல நான் தொலையனும்....

இறுக்கமா நான் இருந்தா
உன் இதழொற்றல் கொடுக்கணும்..

இன்பமா நான் இருந்த
எனக்கு இனக்கமா நடக்கணும்...

வினாடி கூட பிரியாமல் உன் நூலாடையில்
நான் புதையனும்...

நோகாமல்,கோணாமல்... அதை நீ ரசிக்கணும்.....

இப்படி நொடிக்கு நூறு ஆசை இருக்க ... நூத்த கிழவி ஆகும்
முன்னே வந்துவிடு என் மாமா...

அவளை ஒரு நொடி கூட யோசிக்க விடாமல் தன் காரியத்தை கச்சிதமாக முடித்தான் விஸ்வா... அவன் அந்த செயினை போடும் வரையிலும் அவனுக்கு பதட்டம்தான்.

ஆனால் அவன் நினைத்த படி எதுவும் இல்லாமல் நல்ல படியாக அவர்களின் திருமணம் அரசு பதிவோடு முடிந்தது.
எல்லோருடைய பார்வையும் வித்யாசமாக தன் மேல் படுவதை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அகலி.

அவன் அந்த செயினை கழுத்தில் போடும் போது அவள் உடலும் ஒரு முறை அதிர்ந்தே அடங்கியது.அவள் மனதில் பதிந்து போன விஷயங்கள் அதை தாண்டி அதிகம் யோசிக்க விடவில்லை.

அகலியின் உடல்நிலை ஓரளவு பரவாயில்லை என்று ஜனனி சொல்லவே அவளை டிஸ்சார்ஜ் செய்து எல்லோரும் தமிழின் வீட்டிற்கு வந்து விட்டனர்.

எல்லோரும் ஹாலில் அமர்ந்து பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர்.அப்பொழுது

சுந்தரி அகலியின் அப்பாவை நோக்கி ” அண்ணா எங்க பூர்வீக ஊருல வைகாசி திருவிழா ஆரம்பிக்க போறாங்க..ஒரு வாரம் முழுசும் ரொம்ப விசேஷமா இருக்கும்,

நீங்க எல்லோரும் குடுப்பத்தோடு கண்டிப்பா வரணும்,நாம எல்லோரும் போவதற்கு நான் ஜனனி அப்பாவை ஏற்கனவே ஏற்பாடு பண்ண சொல்லிட்டேன்,அகலிக்கும் மனசுக்கு ஒரு மாறுதலா இருக்கும் ”என்றார்.

ரத்தினம் “ இல்லமா அங்க எல்லாம் போட்டது போட்ட படி கெடக்கு... பாப்பாக்கு உடம்பு முடியலனோனதான் பார்க்க வந்தோம்... நான் ,அண்ணன், மூர்த்தி.மூன்றுபேரும் மூனுபக்கம் போனதா சமாளிக்க முடியும்,

மூர்த்தி” ஆமாங்க நான் பெத்துவச்சிருக்குறத தார் குச்சி வச்சி பின்னடியே விரட்டுனாதான் வேலை பார்ப்பான்,இல்லை படுத்து தூங்கிட்டு அரைபயலுவலோட சுத்திக்கிட்டு இருப்பான்,

அவனும் லோன் விஷயமா அலைஞ்சிட்டு இருக்கான் ,” என்றார்.

( அவன் சீன்ல இல்லனாலும் அவனை கலாய்க்காம இருக்கமாட்டீங்க போல பாவம் ராஜா).

சுந்தரிக்கும் அவர்கள் சொல்வது நியமாகவே பட்டது,தன் கணவனும்,தன் பிள்ளைகளும் தொழில் தொழில் என்று அலைவதை பார்த்தவர் ஆயிற்றே.

சரி என்று ஒத்துக்கொண்டவர்.” திருவிழாக்கு ஒரு நாள் முன்னாடியேவாவது கண்டிப்பா எல்லோரும் வரவேண்டும்" என்றும்

"இப்ப நாங்க அகலியையும் ,சந்தோஷையும் அலைச்சிக்கிட்டு போறோம்”என்றார்.

உடனே குறுக்க புகுந்த விஸ்வா” அம்மா சந்தோஷுக்கு கூட இங்க நிறைய வேலை இருக்குமா,அவன் கம்பெனில அவனுக்கு கொடுத்த வேலையை முடிச்சிட்டு ,அவன் அந்த வேலையை ரிசைன் பண்ண போறான்,இல்ல டா சந்தோஷ்” என்று அவனை அர்த்த பார்வை பார்த்தான்.

“நான் எப்படா அதெல்லாம் உன்னிடம் சொன்னேன்..நீ மட்டும் இல்லாமல் நான் மட்டும் எப்படி டா என் வேலையை பார்ப்பேன்,வேலையே உன் கம்பெனில தானடா” என்று நினைத்தவன்
அவனை முறைத்துக்கொண்டே “ ஆமா விஸ்வா” என்றவன்.

சுந்தரியிடம் திரும்பி அவன் சொன்ன அத்தனை விஷயங்களுக்கும் பெப்பர் ,காரம் எல்லாம் போட்டு கொஞ்சம் தூக்கலாகவே சொன்னான்,அவரும் நம்பி விட்டார். .

ஜனனியும் அவளுக்கு நிறைய அப்பாய்ன்மென்ட் இருப்பதால் 2 நாட்கள் கழித்து வருவதாக ஒப்புக்கொண்டாள்.

கடைசியாக அகலி ,விஸ்வா,முருகன்,சுந்தரி,டாக்டரிடம் கான்செல் செய்துவிட்டு கண்ணனையும் அழைத்துச்செல்வதாக முடிவுசெய்யப்பட்டது.

இவ்வளவு நேரம் வெறும் பார்வையாளராக இருந்த அகலிக்கு ஒன்னும் புரியவில்லை. மாமாவின் குடும்பத்தார் தீடீரென்று காட்டும் இவ்வளவு நெருக்கம்,அதேபோல் தன் குடும்பமும் நடந்து கொள்வது எல்லாம் வித்யாசமாக பட்டது.

கடைசியாக தான் மட்டும் அவர்களின் ஊருக்கு செல்லவேண்டும் என்றதும்,முனுக்கென்று கண்களில் கண்ணீர் வர “ நான் எங்கேயும் வரல” என்று அழுதுக்கொண்டே சொன்னாள்.

அவளின் அழுகையில் விஸ்வாவின் இலகு நிலை காணாமல் போய் குற்ற உணர்ச்சி தலை தூக்க அது கோபமாக உருமாறியது.

அவன் கோபமுகத்தை பார்த்தவள் அனிச்சை செயலாய் “ சந்தோஷ் “ என அவனிடம் செல்ல எழவே

விஸ்வா “ இருக்க இடத்த விட்டு நகர்ந்த நான் மனுசனா இருக்க மாட்டேன்” என்றான்.

அவள் பயபார்வையை பார்த்த சந்தோஷ் ”குழந்தை பயப்படுற டா விஸ்வா” என்க

டேய்”இன்னொரு தட இவளை கொழந்தைன்னு சொன்னா, உன்னை கொன்னுடுவேன் பாத்துக்க ,குழந்தையாம் குழந்தை,

அவளை சரி பண்ணனும் டா,அதுக்கு கொஞ்சிக்கிட்டு இருந்தா லாயக்கு படாது,முன்னாடியெல்லாம் எப்படி இருந்தவள் துரு துருன்னு"

அப்பெல்லாம் உன் குழந்தை என்னை எவளோ டார்ச்சர் பண்னிருக்கானு தெரியுமா, நான் தான் இவளுக்கு பயந்துகிட்டு எங்கயாவது ஒளிஞ்சிப்பேன்,

நீ நல்ல பெங்களூருல போய் எண்ஜாய் பண்ண,இவள்ட என்னை கோத்துவிட்டுட்டு,

(ரொம்ப பாதிக்க பட்டுருப்பானோ,
அந்த லவ் டார்ச்சர் தானடா விச்சுகுட்டி நான் எதுக்கு இருக்கேன் எல்லோரிடமும் நான் சொல்றேன்....என்னா அடி.. குழந்தையாம் குழந்தை...ம்க்கும்)

என்று கோபத்தில் ஆரம்பித்தவன் சிரிப்புடன் முடித்தான்.அங்கு உள்ள விஸ்வாவின் குடும்பத்தை தவிர பழைய அகலியின் டார்ச்சர் தெரியும் என்பதால் சிரிப்புடன் அமைதியாகி விட்டனர்.

அகலியின் பக்கம் திரும்பியவன் “என் கூட நீ ஊருக்கு வர யாரு வந்தாலும் வரலானாலும்,இன்னொரு தடை உன் கண்ணுல கண்ணீரோ,பயமோ தெரிந்தது இந்த விஸ்வா உயிரோட இருக்கமாட்டான்”.

அந்த வார்த்தையில்,அந்த பார்வையில் சொன்னதை செய்வேன் என்ற உறுதியை தவிர வேறொன்றும் இல்லை.

அவன் சொல்லிமுடித்தவுடன் அவள் கண்களில் கண்ணீர் அணைப்போட்டது போல நின்றது...அந்த பயத்தை கூட மிகவும் சிரமப்பட்டு கண்களில் தெரியாமல் மறைத்தாள்.

“அம்மா நீங்க கிளம்புங்க, வீட்ல போய் ட்ரெஸ்லாம் பேக் பண்ணிட்டு தமிழ் வீட்டுக்கு வந்துடுங்க,நான் அண்ணனுக்கு இன்னைக்கு செக்கப் இருக்குல அவனை நான் ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போய்ட்டு வந்துடுறேன்” என்றான்.

ஜனனி நேராக ஹாஸ்பிடல் செல்ல சுந்தரியையும்,முருகனையும்,அபார்ட்மெண்ட் வாசலில் இறக்கிவிட்டவன் ,” அப்பா அண்ணாவை கொஞ்சம் ரெடியா இருக்க வைங்க,நான் ஒரு அரை மணிநேரத்தில் வந்துடுறேன்” என்றவன் சென்றுவிட்டான்.

வீட்டுக்கு வந்த சுந்தரிக்கு தன் பெரிய மகனின் நினைவு வரவே..

“ ஏங்க கண்ணனோட இந்த நிலைமைக்கு நான்தானங்க காரணம்,இவளோ முட்டாளா இருந்து இத்தனை வருசமா இப்படி என் புள்ளைங்களோட வாழ்க்கையை பாலாக்கிட்டேனேங்க” என்று அழுத படி சொன்னார்.

முருகன் “ நூறு சதவிகிதம் நீ மட்டும் காரணம் இல்லை நானும்தான், அன்னைக்கு நீ செஞ்ச எல்லாத்தையும் நான் தடுத்திருந்தேனா இன்னைக்கு இந்த நிலமை யாருக்கும் வந்திருக்காது,ஆனால் விதியை மீறி,ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதை மீறி நம்மால எதுவும் செய்ய முடியாது சுந்தரி”என்றார்.

கண்களை துடைத்துக்கொண்டு தங்கள் பெரிய புள்ளையின் ரூமிற்கு சென்ற சுந்தரி நேராக சென்று அங்கு உள்ள ஒரு பெண்ணின் போட்டோவின் காலில் விழுந்து கதறிவிட்டார்.

“என்னை மன்னச்சிடுமா உன் உயிரை பரிச்ச பாவி நான் மாசு மறு இல்லாமல் மாமி மாமினு எவளோ அசிங்க படுத்துனாலும் சொட்டு மரியாதை குறையாம பேசுவியே உன்னை கொடுமைபடுத்த நான் எப்படித்தான் துணிஞ்சேன்னு எனக்கு தெரியல,

அன்னைக்கு நான் உன்னை பேசும் போதெல்லாம் என் புருஷன் உயிருத்தான் பெருசா தெரிஞ்சது,ஆனால் உன்னை கொன்னுட்டு இப்படி என் புள்ளைய பட்டமரமா நிற்க வச்சிட்டேனே, நான் பாவி,

நீ செத்து போனப்ப கூட இனி என் புருஷன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைனு சுயம்நலமா நினைச்சிட்டேனே என் தாயி என்னை மன்னிப்பியா..

என் உயிர எடுத்துக்கிட்டு உன் உயிரை கொடுத்து அந்த கடவுள் என் புள்ளையோட வாழ்க்கையை திருப்பி கொடுப்பானா” என புலம்பி கொண்டிருந்தார்.

இதை எல்லாம் தடுக்க முடியாமல் வேதனையோடு அமைதியாக நின்றார் முருகன்.

அவர் அழுது புலம்பிக்கொண்டு இருப்பது அவன் காதில் கேட்டாலும் அவன் எதுவும் செய்யவில்லை.

மனைவி இறந்தவுடன் சிறிது நாட்கள் தன்னுணர்வு இல்லாமல் இருந்தவன் கொஞ்சநாட்கள் கழித்து தெளிந்தான்,
தன்னை அனைவரும் நோயாளி போல் பார்க்கவும் அதையே தனக்கான அடையாளமாய் மாற்றிக்கொண்டான்.

ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி ,,அவள் வாழ்க்கையை அழித்த தனக்கு இது தேவையான ஒன்று தான் என்று தனிமையை அவன் நிரந்தர துணையாக்கி கொண்டான்.

சில நேரங்களில் தன் அம்மா தான் செய்த தவறை உணராமல் ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டதை உணராமல் இருப்பதை பார்க்கும் போதுதான் அவன் தன்னையும் மீறி கோபத்தில் எல்லாவற்றையும் போட்டு உடைப்பது கத்துவது எல்லாம்.

அப்படிபட்ட தன் அம்மா இன்று தான் செய்த தவறை உணர்ந்து கதறும் போது அவன் மனதில் ஏதோ ஒன்று இதமாவதை உணர்ந்தான்.
அவர் சொன்ன கடைசி வார்த்தையில் அவனுமே உடைந்துவிட்டான்.

எப்பொழுதுமே அன்பை மட்டும் காட்டும் அம்மா ,தன் மனைவியிடம் கோபமாக நடந்துகொண்டாலும் அவனிடம் பாசமாகவே நடப்பார் அதற்குமேல் அவனாலும் முடியவில்லை.

வேகமாக தன் இடத்தைவிட்டு எழுந்தவன் தன் அம்மாவின் அருகில் அமர்ந்து” அம்மா போதும் விடுங்க,அழாதீங்க,

அவளும் இவளோ கோழையா இருந்துருக்க வேண்டாம் விடுங்க, நீங்க அழாதீங்க,என்று தன் தாயை சமாதானப்படுத்தினான்.

சில வருடங்களுக்கு அப்பறம் தன் மகனின் குரலை கேட்டவரின் சந்தோசம் அதிகரிப்பதற்கு பதிலாக துக்கம் அதிகமாகி அவர் இன்னும் அழுதுவிட்டார்.

பின் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டு சமாதானம் சொல்லி,சுந்தரி கண்ணனுக்கு சாப்பாடு ஊட்ட அதை முருகன் நிறைவுடன் பார்த்து கொண்டிருக்க, விஸ்வா வந்துவிட்டான்,

தன் அண்ணன் ஹாலில் அமர்ந்து கொண்டு தன் அன்னையிடம் சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருந்ததை பார்த்துவிட்டான்.

தன் அண்ணனின் கண்களில் எப்பொழுதும் தெரியும் ஒரு வெறுமை,வெறுப்பு எதுவும் இல்லாமல் தெளிவாக இருக்க அதை பார்த்த விஸ்வாவிருக்கு எல்லையில்லா சந்தோஷம்

அவனை கட்டிக்கொண்டு முத்தத்தால் அர்ச்சித்துவிட்டான் .

“என் சின்ன மருமகள் வந்த நேரம் என் புள்ளை எனக்கு கிடைச்சிட்டான் “என்று முகம் முழுவதும் சந்தோஷத்துடன் நடந்ததை பகிர்ந்துகொண்டார் சுந்தரி.

“சின்ன மருமகளா , டேய் விச்சு என்று அவன் வயிற்றில் குத்த, அவன் சிரித்து கொண்டே நடந்ததை கூறினான்.

கண்ணன் மிகவும் சிரமப்பட்டு தன் அம்மாவின் மேல் வரும் கோபத்தை விரட்ட போராடி வெற்றியும் கண்டான்.

மாலை வீட்டிற்கு வந்த ஜனனியும் கண்ணனை கண்ணீரால் அர்ச்சித்து விட்டாள்.

அதன் பின் வேலைகள் மல மல வென்று நடந்தது.,கண்ணனுக்கு நார்மல் செக்கப் செய்துவிட்டு விஸ்வா தனக்கு தேவையான சில விவரங்களை அந்த டாக்டரிடம் தெரிந்து கொண்டு மறுநாள் குடும்பம் முழுவதும் தமிழின் வீட்டிற்கு சென்றது.

நேற்றே அகலியின் குடும்பம் ஊருக்கு சென்றுவிட்டதால் தமிழ், காவியாஅகலி,சந்தோஷ் மட்டுமே இருந்தனர்.

சந்தோஷிடமும் ,தமிழிடமும் கண்ணனை அறிமுகப்படுத்திகியவன் சந்தோஷிடம்” டேய் எங்க டா என் பொண்டாட்டி” என்று கேட்டான்,

சந்தோஷ்” மச்சான் தேனுக்குட்டி டா” என்று விஸ்வாவின் பின்னாடி பார்த்து பதறினான்.

விஸ்வாவிருக்கு இதயம் ஒருமுறை நின்று துடிக்க திரும்பி பார்த்தான்.

அங்கு யாரும் இல்லை என்றதும் சந்தோஷை முறைக்க” அது எப்படி எப்படி என்னை கழட்டிவிட்டுட்டு ,உன் ஆபிஸ் வேலையும் என் தலையில கட்டிட்டு ஜாலியா போறல்ல அதுக்கு தண்டனை “என்றான்.

அவனை துரத்தி அடித்து கொண்டிருக்க அகலி வந்தாள்.

முழு வெள்ளை நிற சுடிதாரில் கையில் 2 நாட்களுக்கு முன் கிழித்து கொண்டதால் உண்டான கட்டுடன் தலைமுடியை இரண்டு பக்கமும் எடுத்து கேட்ச் கிளிப் போட்டு ,
கருப்பு நிற கடுகளவு போட்டுட்டேன் சிறு குங்கும கீற்றுடன்

அவன் அணிவித்த சிறிது தடிமனான தாலி செயின் அவளின் குட்டி கழுத்திருக்கு பெரிதாக தெரிய முகத்தை நிதர்சனமாக வைத்துக்கொண்டு வந்த தன்னவளை விழி ஆகலாமல் பார்த்தான்.

வந்தவள் இயல்பு போல் சந்தோஷின் மணிக்கட்டை பிடித்துக்கொண்டு நின்றாள்.

அவன் பதட்டத்துடன் விஸ்வாவின் பெற்றோரை பார்க்கவே அவர்கள் இதமான சிரிப்புடன் “ அவள் உனக்கு குழந்தை மாறின்னு எங்களுக்கு தெரியும் சந்தோஷ்” என்றனர்.

அவனுக்கு நிறைவாக இருந்தது,அதே நிறைவுடன் ஜனனி பார்க்கவும் அவள் கண்களும் அதையே சொன்னது.

அகலியை கண்ணனுக்கு அறிமுகப்படுத்திவிட்டு அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.

சந்தோஷ் ஜனனியை வீட்டில் ட்ராப் செய்கிறேன் என்று சொல்லிவிட்டான்.

விஸ்வாவை காரை ஓட்ட சொல்லிவிட்டு,கண்ணன் முன்னேயும் ,முருகன் ,சுந்தரி, அகலி மூவரும் பின்னால் அமரந்தனர்.

விஸ்வா சுந்தரியிடம் “ அம்மா அவள் என் பொண்டாட்டி மா,நேத்துதான் எங்களுக்கு கல்யாணம் ஆகிருக்கு கொஞ்சம் ரொமான்ஸ் பண்ண விடாம என்ன இப்படி கார் ஓட்ட சொல்றீங்களே “ என்று சண்டை போட்டு கொண்டிருந்தான்.

( மெதுவாதான்).

“விச்சு இதை நீ உன் குட்டிமாட சொல்லி அவள் என்னைக்கு பயப்டாம வெட்கப்படுறாளோ,அன்னைக்கு உன் பொண்டாட்டி உன் கன்ரோல்.அதுவரை என் மருமகள் என் கூடத்தான்” என்றார்.
விஸ்வா தன் தாயை பொய்யாக முறைத்துக்கொண்டே காரை கிளப்பினான்.

வருவாள்.

மிளாணிஸ்ரீ
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்,

காதலன் நெக்ஸ்ட் எபி போட்டுட்டேன்

படிச்சிட்டு எப்படி இருக்குன்னு ஒரு “cho” சொல்லிடுங்க.

லாஸ்ட் எபிக்கு choo சொன்ன எல்லோருக்கும் நன்றிகள்..

நன்றியுடன்

மிளாணி
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 16.

விளக்கு அணைக்கும் நேரம்மேலாம் விரும்பி களித்தேன் உன்னோடு....

மனம் நோகாமல் மனைவியாய் வாழ்ந்தேன் உன்னோடு...

மானப்பெண்ணாய் இருப்பதை விட உன் மணப்பெண்ணாய் இருப்பதே சிறந்தது என்று..

கொட்டிகிடக்கும் வார்த்தைகளில் கிழிந்து தொங்கும் என் இதயம் என்றாவது புரியுமா உனக்கு....

அடித்து நொறுக்கும் மழையிலும் புழுங்கி சாகும் என் மனம் புரியுமா உனக்கு என்றாவது ....

நூறு டிகிரி வெயிலிலும் எதிர்காலத்தை பற்றிய என் நெஞ்சின் குளிர் புரியுமா உனக்கு என்றேனும் .....

பயம் சுமந்த மனதால் இறக்க முடியவில்லை என்னால்....

உனை சுமந்த உயிரால் வாழ முடியவில்லை என்னால்....

இரண்டு நாட்கள் அதன் போக்கில் பரபரப்பாக சென்று கொண்டிருக்க மூன்றாம் நாளை 12 மணி அளவில் சந்தோஷ் ஒரு முக்கியமான பைலை எடுக்க விஸ்வாவின் அப்பார்ட்மென்ட்டிற்கு சென்றான்.

அவன் காலேஜ் படிக்கும் போது விஸ்வாவோடு தான் தங்கியிருந்த அதே அப்பார்ட்மெண்ட்.

காலிங்பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க அவனின் அவள், கையில் மசாலா பூசிய தோசை கரண்டியுடன் முடியை தூக்கி சுற்றி கேட்ச் கிளிப் போட்டிருக்க முனியில் உள்ள முடி மட்டும் அவள் தலைக்கு மேல் கிரீடம் போல் இருக்க

கருப்பு நிற ஸ்கர்ட் முட்டி வரை இருக்க அதே கருப்பு நிற டீசேர்ட்டில் உதயமானாள்

அவளின் லேசாக பூசிய உடம்பிற்கு அந்த உடை அதிக கவர்ச்சியை கொடுக்க” ஹாய் சந்து என்ன வீடு வரைக்கும் வந்துருக்க என்ன விஷயம் ” என சந்தோசமாக கேட்டாள் ஜனனி.

ஏற்கனவே பலவருடங்களாக ஒரு தீண்டல் கூட இல்லாமல் பட்டினியாக இருப்பவன் யாரும் இல்லாத தனிமையில் தன்னவளை பார்க்க அவனின் இளமை உணர்வுகள் எல்லாம் விழித்துக்ககொள்ளவில்லை என்றால் தான் அதிசயம்.

அகலியும் இதேபோல் உடை அணிவாள் தான்.அவள் எப்படி இருந்தாலும் பிறந்த 3 நாட்களில் தன் விரலை இறுக பிடித்துக்கொண்டு விடாமல் இருந்த அந்த குழந்தைதான் அவனுக்கு

ஆனால் ஜனனியோ தன் இளமையை உணரவைத்தவள் ,தானும் காதலிக்கபடுகிறோம் என்ற கர்வத்தை கொடுத்தவள்,

ஒருவார்த்தை கூட செல்லாமல் பிரிந்து சென்றாலும் தனக்காக குறையாத காதலுடன் காத்திருப்பவள் ,

தான் திரும்பி வந்த போதும் ஒரு வார்த்தை கூட கேட்காமல் தன்னை, தன் சூழ்நிலையை புரிந்து கொண்டவள்.
அவன் தன் யோசனையில் உழன்று கொண்டிருக்க அவனை பிடித்து வேகமாக “ டேய் பிளாக்கி”உலக்கினான்.

அதில் சிந்தை களைந்தவன் அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து “ ஏய் குண்டு என்ன டி இது ட்ரெஸ் ,இப்படி எல்லாம் ட்ரஸ் பண்ண அத்தான் காலி” என்றான்.

அப்பொழுதுதான் தன் உடை நினைவு வந்தவளுக்கு வெட்கம் பிடுங்கி திங்க..வேகமாக அங்கு உள்ள சோபாவில் உட்கார்ந்தவள்

இடுப்பிற்கு கீழே இறங்காத டீசேர்டையும் ,முட்டிக்கு கீழே இறங்காத ஷ்கேர்ட்டையும் இரண்டு கைகளாலும் கீழே இறக்கி விட அவள் முயற்சி செய்து கொண்டிருக்க

அதை பார்த்ததும் அவளை சீண்டும் எண்ணம் அதிகமாக “ஏய் தக்காளி கீழே இறக்குறனு மேலே கலண்டுக்க போகுது டி” என்றான்.

அவன் என்னவோ எதார்த்தமாகத்தான் சொன்னான் அதை கற்பனையில் நினைத்து பார்த்தவளுக்கு “ஐயோ” என்று இருக்க

“ நான் உனக்கு டீ எடுத்துட்டு வரேன்” என்றவள் ஒரே ஓட்டமாக கிச்சனுக்குள் ஒழிந்தாள்.

அவள் போவதை சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவன் டிவியில் நியுஸ் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

ரொம்ப நேரமாகியும் வராததால் என்னவென்று பார்க்க கிச்சனுக்குள் நுழைந்த்தவன் அவள் சமையல் செய்யும் அழகை பார்த்து மலைத்து போய் நின்றுவிட்டான்.

( மலைத்து போயா இருக்காதே ,நம்ம ஜனனி அவளோ ஒர்த் இல்லையே )

அந்த மலைப்பு“ வாவ் “ என்று இல்லாமல் “வ்வே” என்று இருந்தது. ஆம் அவள் பச்சை மீனை காஸ் அடுப்பில் உள்ள கடாயில் போட்டு அதன் மீது மிளகாய் தூளை அள்ளி போட்டு இன்னும் அதன் மீது உப்பு தூளை அள்ளி போட்டு,

அதை கரண்டியால் புரட்டி போடுவதும் அதை கூர்ந்து பார்ப்பதுவுமாக இருக்க,

அவளை நெருங்கியவன் “ எங்க டி என் டீ” என்றான்.

அவன் சொன்னதும் “ஐயோ “ என்று பக்கத்து அடுப்பை பார்க்க சில்வர் நிற அந்த வெசல் கருமை நிறத்தில் மாறி இருந்தது.அதை வேகமாக அணைத்தவள்

“சாரி சந்தோஷ் மீன் வருக்குற ஆர்வத்துல மறந்துட்டன் “ என்றாள்.

“எது இது மீன் வறுவலாடி உனக்கு” என்றான்.

“ம்ம்ம்ம்” என்று அவனை ஒரு இயலாத பார்வை பார்த்தவள்,”போ சந்தோஷ் நானே சமைக்க தெரியாம கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்,அம்மாவும்,அன்னம்மா அக்காவும் வருக்குற மீன்ல நான் சாப்பிடும் போது காரமும்,உப்பும் தான் தெரியும் ,அதான் நான் ட்ரை பண்ணேன்” என்று தனக்கு சமையலில் டீயை தவிர எதுவும் தெரியாது என்று நிருபித்தாள்.

( பாருடா இந்த பொன்னு சாப்பிட்டு பார்த்தே சமைக்குற அளவுக்கு பெரிய அப்பாடக்கரா இருக்கும் போல அட த்து....)

“அடிப்பாவி “என்று அவளை வேகாமாக விலக்கியவன்..

( டேய் அப்ப நீ பைல் எடுக்க வரலையா?).

ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்த மீனை எடுத்து போட்டவன் தேவையான மிளகாய் தூள்,உப்பு தூள் போட்டு ஒரு முட்டையின் வெள்ளை கருவை அதில் உடைத்து ஊற்றி,நறுக்கிய நான்கு வெங்காயம்,நசுக்கிய பூண்டை போட்டு அரை எழும்பிச்சசை பழ சாரை ஊற்றியவன் நன்று பிசைந்து அதை சிறிது நேரம் மூடிவைத்து விட்டு , அந்த கேப்பில் சாதம் குக்கரில் வைத்து விட்டு,

நறுக்கிய சின்ன வெங்காயம்.தக்காளியை மைய அரைத்து,காய்ந்த மிளகாய், கொஞ்சம் மிளகும் அரைத்து வெங்காயம்.தக்காளி போட்டு தாளித்து அரைத்த தக்காளி சாறை ஊற்றி மீனை போட்டு
மீன் கொழம்பை தாளித்துவிட்டு அவன் ஊறிய மீனை வறுக்க,

அவன் மீன் வறுக்கும் அழகை பார்க்க அவளுக்கு 2 கண்கள் போதவில்லை. அவன் சமைக்க ஆரம்பிக்கும் போதே கையில் நோட்டுடன் வந்தவள் அவன் செய்யும் வேகத்துக்கு இவளால் எழுத கூட முடியவில்லை.

அந்த முயற்சியை கை விட்டவள் தன் கையை கன்னத்தில் வைத்து தன் கருப்பனை வாயை பிளந்து சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

அவன் எல்லா வேலையும் அரை மணி நேரத்தில் முடித்தவன்,அவளை பார்க்க அவள் கையை லேசாக தூக்கி இருப்பதால் அவள் ஸ்கேர்ட்டின் மேல் உட்கார்ந்திருந்த அவள் டீசேர்ட் சற்று தூக்க அவள் தள தள இடுப்பு கண்ணில் பட

அவனின் மோட் ரொமாண்டிக் மூடிற்கு மாற

“ தக்காளி” என்று அவளை நெருங்கியவன் அவள் இடுப்பில் கை வைத்து அருகில் இழுத்து அவள் இதழில் இதழ் பதித்தான்

இல்லை இல்லை தூர்வாறினான் என்றே சொல்லலாம்,

(இந்தாப்ப சந்தோஷ் எங்க வீட்ல கிணறு தூர்வாரனும், கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ண நல்லா இருக்கும்,)

இத்தனை நாள் பிரிவு தன்னவளின் செழுமை,மென்மை , புதிதான சுகம் தன் உடம்பில் அணு அணுவாக பரவும் விதம்,என அனைத்தும் அவனை எங்கோ இட்டு சென்றது.

ஜனனிக்கோ அவள் உயிர் மட்டும் அல்ல அவளின் உடல் உறுப்புகளை எல்லாம் அவன் வாய் வழியே முழுங்குவதை போல் இருந்தது.

தன் உயிர் போனாலும் இந்த சுகம் வேண்டும் வேண்டும் என்று அவள் பெண்மை பறைசாற்ற அவளும் அவனுக்கு வலைந்து கொடுத்தாள்.

ஓரளுக்கு மேல் அவளுக்கு மூச்சி திணற நொடிகள் நிமிடங்களாக ,நிமிடங்கள் மணிநேரமாக அவன் ஆரம்பித்த அதே வேகத்தில் இருக்க அவன் கைகளும் அவள் மேனியின் மென்மையான பகுதியில் பரவ உச்ச சுக வேதனையா?

முதல் அனுபவமா எது என்று தெரியாமல் அவள் அப்படியே மயங்கி விழுந்தாள்.

அவள் மயங்கி விழுந்ததும் ஒரு நொடி விதிர்த்தவன் ,அவளை அப்படியே போட்டுவிட்டு பத்து அடி சென்று நின்றுகொண்டு “ஏய் தக்காளி எழுந்திரி டி, ஏய் ஏய் என்று எழுப்பினான் பயந்துகொண்டே,

(அட கொக்கமக்க முத்தம் கொடுத்துட்டு பண்ற வேலைய பாத்தீங்களா,)

அவன் முத்தம் கொடுப்பதை நிறுத்தியதும் அவள் உடம்பில் உணர்ச்சியின் ஆதிக்கம் குறையவே அரை மயக்க நிலையில்,அவன் நிற்பதும் ,சொல்வதும் கேட்க அந்த நிலையிலும் “என் செல்ல கருவாயன் “ என்று கொஞ்ச தோன்றியது அவளுக்கு.

அவனை கை நீட்டி அருகில் அழைத்தவள் “தண்ணீர்” என்றாள்.
அதன் பின்னே அவன் மூளை வேலைசெய்து அவளின் மயக்கத்தை சரி செய்தது.

அதன் பின் அமைதியாக அவன் இருக்க இவளுக்கு “ஏண்டா மயங்கி விழுந்தோம் “ என்று ஆகிவிட்டது
அது அவர்கள் சாப்பிடும் வரை தொடரவே “இது வேலைக்காவது” என்று நினைத்தவள் சாப்பிட்டுவிட்டு அவன் கேட்ட பைலை எடுத்து கொடுத்தவள் அவன் “கிளம்புகிறேன்” என்று திரும்பும்போது

அவன் கையை பிடித்து தன் பக்கமாக திரும்பியவள் அவன் கன்னங்களில் தன் இரு கையையும் வைக்க அவளின் குளுமையான உள்ளங்கை அவன் சூடான கன்னத்திற்கு இதமாக இருக்க பைலை கீழே வைத்தவன் அவள் கைகளின் மேல் கையை வைத்து தன் கன்னத்தில் அழுத்தமாக புதைத்துக்கொண்டான்.

ஜனனி” இப்ப எதுக்கு இந்த சோகம் ,உன்னவள் உன்னிடம் உணர்ந்து கொண்ட உணர்வின் பரிசுதான் அந்த மயக்கம்,

(இது என்ன புதுசா இருக்கு)

நீ வேணுன்னா இப்ப கிஸ் பண்ணு எனக்கு மயக்கம் வராது “என்றாள்.

அதை கேட்ட சந்தோஷின் கண்கள் சிரிக்க

அவள் மேலும் அவன் இரு கண்களிலும் தன் இதழை பதித்தவள்.

உன்னிடம் எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த கருப்புதான் டா” என்று அவன் கன்னத்தை அழுத்தியவள் “என்னை இறுக்கி பிடிச்சிக்கோ,டைட்டா இன்னும் டைட்டா உனக்குள்ள புதைந்து போய் உன் கருப்பு முழுக்க எனக்கு வேணும், அந்த கருப்புல நான் கறைஞ்சி காணம போகணும்” என்றாள் மென்மையாக

அவளின் ஓவ்வொரு வார்த்தைக்கும் அவனின் அணைப்பு அதிகமாக அவனின் நெஞ்சுக்குள் நிஜமாகவே புதைந்துவிட்டாள்.

அவனின் கைகள் மீண்டும் தன் வேலையை ஆரம்பிக்க சிறு நேரத்தில் சுதாரித்தவன் இதற்கு மேல் சென்றால் தான் எல்லை மீறி விடுவோம் என்றும், அவளும் தடுக்கும் நிலையில் இல்லை என்ற தோன்ற அவளை விலக்கி அவள் முடியை சரி செய்தவன்

“நாளைக்கு மதியம் ஊருக்கு போகணும் ரெடியா இரு” என்றவன் அவள் நெற்றியில் தன் முத்திரையை கொடுத்தவன் கிளம்பிவிட்டான்.

இங்கே ஊரில் விஸ்வாவின் நிலைமையே மிகவும் மோசம்.

இரண்டு நாட்களாக தன் பொண்டாட்டியுடன் தனியா இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.

முயற்சி முயற்சியாக மட்டுமே இருக்க அவள் தனியே மாட்டும் வழியை தான் காணவில்லை.

எப்பொழுதும் தன் அம்மாவின் பின்னாடி” அத்தம்மா”.” அத்தம்மா” என்று வாள்பிடித்து கொண்டு திரிவது, இல்லை அப்பாவுடன் ஊரை சுற்றி பார்க்க செல்வது,

அல்லது இரவில் பக்கத்து வீட்டில் உள்ள குட்டி பசங்களுடன் குடும்பமே சேர்ந்து பூஸ்ட் விளையாடுவது இதில் தன் அண்ணன் கண்ணன் , அப்பா முருகன் எல்லோரும் அடக்கம்.

அது அந்த காலத்தில் கட்டப்பட்ட மச்சி வீடு என்பதால் இரவில் நிலா வெளிச்சத்தில் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட அகலி அப்படியே சுந்தரியின் மடியில் அங்கேயே தூங்கியும் விடுவாள்.

அவளை தூக்கி ரூமில் படுக்க வைப்பது மட்டும் விஸ்வாவின் வேலை.அதுவும் சுந்தரியின் ரூமில் தான்.

“இதுக்கு மட்டும் நான் வேணுமா” என்று கோபம் போல் சொன்னாலும் அந்த வாய்ப்பை இழக்க விரும்பாமல் அவளை பூ போல் அழுங்காமல் தூக்கி செல்வான்.

தன் மகன் இரும்பைபோல் இருப்பவன், தன் சிரிப்பை கூட அளந்து இடத்திற்கும்,தேவைக்கும் ஏற்ப மாறி அளவோடு கொடுப்பவன் ,

ஒரு சின்னவளின் காதலில் கரைந்து ,தொலைந்து, சின்னா பின்னமாகி கொண்டிருப்பதை பெருமையுடன் பார்த்து கொண்டனர் முருகன் தம்பதிகள்.

அகலியின் குடும்பம் முழுவதும் அவளிடம் சோக முகமே இரண்டு வருடமாக காட்டிக்கொண்டிருக்க, சாந்தோஷிற்கும் அகலியின் இந்த நிலையில் அவன் மூளையும் வேலை நிறுத்தம் செய்ய ,

அவளை சகஜசமாக்கும் வேலையை யாரும் செய்யவில்லை.

ஆனால் இங்கே சுந்தரி அதற்கான முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டார்.அவளின் குழந்தைத்தனம் தெரிந்து தன் அக்கம் பக்கம் உள்ள எல்லா குழந்தைகளையும் தன் வீட்டிலே இருக்குமாறு பார்த்துக்கொண்டார்..

அவளுக்கும் , நிகழ்ந்த கொடுமை சென்னையில் நடந்ததால் அங்கு இருக்கும் வரை ஏதோ பிரச்சனைக்கு மிக அருகில் இருப்பது போல் ஒரு தோற்றம்

ஆனால் இங்கே வந்ததிலிருந்து அதிலிருந்து தூரமாக வந்தது போல் ஒரு விடுதலை உணர்வு.

அவளின் துயரங்கள் எல்லாம் அவளின் நியாபக பரணில் கடைசி பரணில் இருக்க,

முன்னதாக இருக்கும் பரணில் இருப்பது என்னவோ அவளின் மாமனும்,தன் குடும்பத்தில் உள்ளவர்களை போல் தன்னை தாங்கும் மாமானின் குடும்பமே.

கழன்று கொண்டிருக்கும் எரிமலை குழம்புகள் மேல் அளவில் அணைந்து சம நிலையில் அமைதியாக இருந்தாலும் அதன் ஆழத்தில் அதற்கான மிச்சம் இருந்து கொண்டுதான் இருக்கும் .

அது போல் அகலியின் காயங்கள் ஆழ்மனதில் புதைந்தாலும் அந்த கொடூர நினைவுகளின் மிச்சம் இருக்கத்தான் செய்தது.

அது என்றாவது வெடிக்கும் என்று விஸ்வா அறிந்தே இருந்தான் ,அதை நிரந்தரமாக அணைக்க தன்னால் முடிந்த சில வேலைகளை செய்து அதில் சிறிதளவு வெற்றியும் கண்டிருக்கிறான்.

மூன்றாவது நாள் காலையில் தன் வீட்டில் உள்ள அனைவரும் கொஞ்சம் வேலையாக இருக்க அகலி தூங்கும் அறையை பூனை பதத்தோடு நெருங்கினான்.

உள்ளே சென்றதும் ரூமை லாக் செய்துவிட்டு அவள் தூங்கும் கட்டிலின் கால் பகுதியில் நின்றவன் பெட்ஷீட்டை போர்த்திக்கொண்டு தூங்கும் அகலியை கொஞ்சம் நேரம் கண் அசைவு இல்லாமல் பார்த்தவன்,

கட்டிலின் கால் வழியே பெட்ஷீட்டுக்கள் தலையை விட்டவன் அவளின் பக்கவாட்டில் ஊர்ந்த படி பெட்ஷீட்டின் உள்வழியாக மேலே சென்றான்.

அவளின் பக்கத்தில் சென்றவன் அவளின் இடுப்பில் கை போட்டு அவளின் முகத்துக்கு மிக அருகில் சென்று “ மல்லி பூ” என்று கிசு கிசுப்பாக அழைத்தான்.

அவனின் ஒரு வார்த்தையிலே கண்களை திறந்தவள் “ மாமா” என்று கண்களில் சிரிப்போ என சந்தேகம் கொள்ளும் அளவுக்கு ஒரு சிறு சிரிப்புடன் மென்மையான குரலில் அது சோகமா ,இல்லை சாதரணமாக இருந்ததா என்று யாராலும் அறிய முடியாத அளவுக்கு பதில் சொன்னாள்.

“ குட்டிமா மாமாக்கு ஒரு முத்தம் கொடு” என்றான்.

இது என்ன கேள்வி என்பது போல் அவனை பார்த்தவள் அவன் இரு கன்னங்களிளும் அழுத்தமாக முத்தம் கொடுத்தாள்.

“ குட்டிமா இங்க இல்ல டா இங்க,கன்னத்துலதான் நீ எல்லோருக்கும் கொடுப்பியே ” என்று தன் இதழை அவளின் இதழுக்கும் ஒரு இன்ச் இடைவெளியில் வைத்துக்கொண்டு கேட்டான்.

அவளின் இமைகள் இரண்டும் பட படவென்று அடிக்க அவளின் நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ள

“ மா...மாமா ஒருமாறி இருக்கு தள்ளிப்போங்க “என்று காற்று போன குரலில் அவள் சொல்ல

“ நோ வே , என்றவன் அவளின் இதழ் மேல் தன் இதழை வைத்து தனக்கும் மற்றவருக்கும் உள்ள வித்தியாசத்தை வார்த்தைகளே இல்லாமல் அவளுக்கு விளக்கி கொண்டிருந்தான்.

அகலி அவனின் சட்டை காலரை பிடித்துக்கொள்ள அவனுக்கும் இந்த நிலை நீளத்தான் ஆசை இதற்கே அவளின் எதிரொலி என்னவென்று தெரியவில்லை என்று

தன் சொல் பேச்சி கேட்காத தன் இதழை முயன்று அவளிடம் இருந்து விடுவித்து அவள் முகம் பார்த்தான்.

அவன் காலரை பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டிருந்தவள் கண்களை திறக்க அவள் உடம்பில் இருக்கும் அரை லிட்டர் ரத்தமும் அவள் முகத்துக்கே வந்துவிட செக்க சிவேல் என்று இருந்த அவள் முகமும் ,

ரத்தமென கலங்கி இருந்த அவள் விழிகளும் அவளின் வெட்கத்தின் அளவை காட்ட விஸ்வா குஷியாகி போனான்.

( அடக்கடவுளே மக்களே இந்த பொண்ணுக்கு தாலி கல்யாணம்னு சொன்னதான் பயம் போல.

ரொமான்ஸ்க்கெல்லாம் ஒன்னும் இல்லை போல...அய்யோ கடவுளே இவன் தொல்லை இனி தங்காதே...என் வாசகர்களுக்கு கண்ணை மூடிக்கிட்டு படிக்க வேற தெரியாதே நான் என்ன பண்ணுவேன்).

தன் கனவில் ஒரு வித லயிப்பில் இருந்தவன் அகலியின் “ அத்தம்மா “ என்ற குரலில் சிந்தை களைந்து

அவன் என்னவென்று யோசிக்கும் முன் அவனை தள்ளிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்றவள் “அத்தம்மா “ அத்தம்மா “ என்று கிட்சனை நோக்கி ஓடினாள்.

அவளின் குரல் கேட்டிக்கொண்டே வெளியே வந்த சுந்தரி...”என்ன டா” பயந்து கொண்டே கேட்க கண்ணன் ,முருகன் எல்லாம் அடுக்களையில் கூடி விட்டனர்.

சுந்தரியின் கையை பிடித்துக்கொண்டே விஸ்வாவை நோக்கி ஒரு கையை நீட்டி “ அத்தம்மா மாமா என்னை பேட் டச் பண்றாங்க,எனக்கு இங்க முத்தம் கொடுத்துட்டாங்கா” என்று ஒரு முகச் சுருக்கத்து தன் உதட்டை காட்ட கண்ணணுக்கும்,முருகனுக்கும் ஒரு மாறி ஆகிவிட ஆளுக்கு ஒரு பக்கம் சென்றுவிட்டனர்.

சுந்தரிக்கும் ஒரு மாறி ஆகிவிட்ட “அய்யோ இவளோ குழந்தையா இருக்காளே “ என்று தோன்றியது.

அவளை பின்தொடர்ந்து கொண்டே வந்த விஸ்வாவிர்க்கோ தன் மானத்தை அவள் வாங்கிக்கொண்டு இருப்பதை விட அவள் தான் முன்பு பார்த்த அகலியை போல் இருக்க அவனுக்கு நிறைவாக இருந்தது.

சுந்தரி “ விச்சு கண்ணா ஏன் டா மானத்தை வாங்குற” என்றார்.

அவனோ தன் அன்னையின் கையை பிடித்துக்கொண்டு உதட்டை சுழித்துக்கொண்டு “ எப்படி மாட்டிவிட்டுடன் பாத்தீங்களா” என்று அவனை பார்த்துக்கொண்டு நின்ற அகலி மேலே இருந்தது.

விஸ்வா ” அம்மா உங்களை கொல்ல போறேன் பாருங்க ,நீங்க தான் இவள்ட நான் ஏதாவது பண்ணுனேனா சொல்ல சொல்லிருப்பீங்க,

அதான் இவள் கரெக்ட்டா உங்கள்ட வந்து சொல்ற, பிளீஸ் அவளுக்கு எதை எதை சொல்லணும் சொல்ல கூடாதுன்னு சொல்லி குடுங்க,

என் மானத்தை வாங்குறதயே முதல் வேலையா செய்வாள்” என்று பழைய அகலியின் நினைவில் சொன்னான்.

அவன் சொல்வதை மருமகளும் ,மாமியாரும் துளி கூட கண்டு கொள்ளாமல் செல்வதை சந்தோஷத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்..

12 மணி அளவில் கிச்சனில் சுந்தரியுடன் நின்ற அகலியை “ குட்டிம்மா உன்னை பார்க்க நம்ம வீட்டுக்கு ஒருத்தவங்க வந்துருக்காங்க என்று அவளை அழைக்க அவளும் செம்மறி ஆடு மாறி அவன் பின்னயே செல்ல

அவள் கண்களை தன் கைகளால் மூடிக்கொண்டு காலுக்கு அழைத்து சென்றவன் கண்களை திறக்க அங்கே ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.

அவளின் பின் வழியே அவளின் தோளை பிடித்துக்கொண்டே “ குட்டிம்மா இது யாருன்னு தெரியுதா” என்று கேட்டான் .

“ ம்ம்ம்ம்” , என்று யோசித்தவள் “ இவங்க இவங்க ரீனா அக்காவோட அக்காவோ தங்கச்சியோ” என்றாள்.

விஸ்வா ” இல்லைடா இவள் ரீனா தான்” என்றான்.எவ்வளவு முயன்றும் அவன் குரலில் தெரியும் கோபத்தை ரீனா உணர்ந்தே இருந்தாள்.

ரீனா என்றதும் வேகமாக அவள் அருகில் சென்றவள் “ அக்கா எப்படி இருக்கீங்க,எவ்வளோ நாள் ஆகுது , நீங்க ரீனான்னு என்னால நம்பவே முடியல நிறைய மாறிட்டிங்க” என்றாள்.

அவளின் நம்பிகையின்மைக்கு காரணம் இருந்தது
எப்பொழுதும் கர்வத்தை காட்டும் அடர்ந்த மை பூசிய அவள் விழிகள் அமைதியை கடன் வாங்கிக்கொள்ள,

பளிச்சிடும் உதட்டு சாயம் பூசி எப்பொழுதும் ஏளன வளைவுடன் இருக்கும் அவள் இதழ்கள் வெளிறி போய் வெறுமையுடன் இருக்க,

விரித்து விட்ட முடியுடன் எப்பொழுதும் “பெர்மிங் ஹேர் “ஸ்டைலில் இருப்பவள் முடியை தூக்கி போனிடைல் போட்டிருக்க.

முட்டியை விட்டு இறங்காத அவள் உடை இன்று பிங்க் நிற குர்த்தாவகவும் டார்க் ஒசன் நிற ஜீன்சாகவும் மாறி இருந்தது.

தன் கை பிடித்துகொண்டு தன்னிடம் பேசும் அந்த குட்டி பெண்ணை பார்க்க பார்க்க தன்னையே அழித்துக்கொள்ளும் வெறி வந்தது ரீனாவிற்கு.

என்ன பேச எது பேச என்று அவளுக்கு தெரியவில்லை எப்பொழுதும் அகங்கார வார்த்தைகளை மட்டுமே பேசிய வாயிற்கு அமைதியாக பேச தெரியவில்லை .

அதானால் கொஞ்ச நாட்களாக அவள் வாய்க்கு உள்பூட்டு போட்டிருந்தாள்.

சுந்தரி கொஞ்சம் நல்லவளாக இருந்தாள் கண்ணனின் மனைவி இறந்திருக்க மாட்டாள்.

விஸ்வா கொஞ்சம் கெட்டவனா இருந்தால் ரீனாவை அசிங்கபடுத்தாமல் அவள் அழைப்பை ஏற்று இருப்பான் அவள் அகலி மேல் வன்மம் வளர்த்திருக்க மாட்டாள்.

Rk(ரீனாவின் அண்ணன்) கொஞ்சம் நல்லவனாக இருந்திருந்தால் ரீனா கொஞ்சம் நல்லவளாக வளர்ந்திருப்பாள்

ரீனா கொஞ்சம் நல்லவளாக இருந்தாள் அகலியின் வாழ்க்கையை சிதைத்திருக்க மாட்டாள்.

அகலி கொஞ்சம் கெட்டவளாக இருந்திருந்தால் அந்த சம்பவத்தை அவள் ஈசியாக மறந்திருப்பாள்.

கண்ணனின் மனைவி இறக்காமல் இருந்திருந்தால் விஸ்வா அகலியின் காதலை ஏற்ற இருப்பான்.சுந்தரியின் கொடுமையில் அகலி பலியாடாக ஆகி இருப்பாள்.

நல்லவருக்கு நல்லது நடக்கும் ,கெட்டவர்களுக்கு கெட்டது நடக்கும் என்பதெல்லாம் மனித வாழ்க்கையில் கிடையாது போல

ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதையில் பொம்மையாக இருக்கும் நாமெல்லாம் விதி என்னும் நூலால் வித விதமாக ஆட்டப்படுகிறோம் என்பதே உண்மை...
வருவாள்.

மிளாணி
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்
காதலன் கதையோட அடுத்த epi போஸ்ட் பண்ணியிட்டேன்.படிச்சி பார்த்துட்டு ஒரு choo சொல்லுங்க
இதுவும் கரண்டா உள்ள எபி தான் பிளாஷ்பேக் நெக்ஸ்ட் update ல தரேன்.
இதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு பாருங்க..
லாஸ்ட் எபிக்கு chho சொன்ன எல்லோருக்கும் என் நன்றிகள்..
“உணர்ந்தேன் உன்னாலே “ எப்பியோட இதே நேரம் இதே இடம் மீண்டும் சந்திக்கிறேன்..
நன்றிகளுடன்..
மிளாணி
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 17:

உன் கடைவிழி காதல் வேண்டும்......
காலம் என்னை கடக்கும் முன்.......

என் நாசி உணரும் உன் வாசம் வேண்டும்.....
வாழ்க்கை என்னை வழுக்கும் முன்....

என் ஊன் உடையும் உன் அணைப்பு வேண்டும்....
எதார்த்தம் என்னை எதிர்கொள்ளும் முன்...

என் இதழ் உணரும் உன் முத்தம் வேண்டும்...
என்னவன் என்று எவனோ வரும்முன்....

என் உச்சம் அடையும் உன் ஸ்பரிசம் வேண்டும்...
என் உறவுகள் என்னை நெறுக்கும் முன்...

தன்னலம் இல்லா உன் தவிப்பு வேண்டும்...
என் தந்தையின் தற்கொலை மிரட்டலுக்கு முன்...

தாசி போலானாலும் உன் தாரம் ஆகவேண்டும் ஒரு நொடி....
என் தாயின் தந்திரத்துக்கு முன்......

ஆம்....

தயாராகிட்டேன்...

இல்லை....இல்லை... தயார் படுத்திவிட்டார்கள்.....

யாருக்கோ...
என்னை தாரைவார்க்க...

இறுதியாக

என் இறுதியாத்திரைக்கு முன்...
இவையனைத்தும் தந்துவிடு.......

வருகிறேன்.....

இல்லை போகிறேன்...

உயிர் உள்ள பிணமாக....

விழி கொண்ட குருடாக.....

வார்த்தைகள் கொண்ட ஊமையாக...

உணர்ச்சி கொண்ட உணர்வாக.......

_மிளாணி
மல்லிகா அந்த வீடு முழுவதும் சுற்றி சுற்றி ஓட முடியாமல் ஒடிக்கொண்டிருக்க அவரை துரத்திக்கொண்டிருந்தாள் அகலி.

வேலை முடித்துக்கொண்டு காரில் வந்து இறங்கிய முருகன்” பாப்பா ஏன் டா அவளை இப்படி துரத்துற “ என்றார்.

“அப்பா நீங்க அம்மாவை பிடிங்க” என்று அவருக்கு கட்டளை விடுத்தவள் மீண்டும் துரத்த ஆரம்பித்து விட்டாள்.
“இந்த சின்ன புள்ளையோட இதே வேலையா போய்ட்டு,எல்லோரையும் விளையாட்டு புள்ளையா ஆக்கிட்டும்” என்றவர் தன் மனையாளை ஒரு வழியாக பிடித்து அகலியின் கையில் ஒப்படைத்தார்.

காரணம் இதுதான் அகலி பெரிய மனுஷி ஆனதும் அவர் தாம் அணிந்திருந்த கொழுசை கலட்டிவிட்டார்.

இன்னும் சில கிராமங்களில் இந்த முறை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பெண் வயதிற்கு வந்துவிட்டாள் அவர்களின் தாயார் கொலுசு அணிய மாட்டார்கள்,தொங்கும் தோடு அதாவது ஜிமிக்கி , தொங்கல் போன்ற தோடு அணிய மாட்டார்கள், காதோடு இருக்கும் தோடுகளையே அணிவார்கள்.


மேலும் பெண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டாள், தலைமுடியை பின்னி தொங்க விடாமல் கொண்டையாக போட்டு கொள்வது,புடவையை பின் செய்யாமல் வெறும் கொசுவம் மட்டும் வைத்து போட்டுக்கொள்வது என்ற வழக்கம் உள்ளது.

இந்த அநியாயம் அகலிக்கு தெரியவே பொங்கி கொண்டுவந்துவிட்டாள்.அவர் சத்தம் இல்லாத கொலுசு அணிவதால் அவளுக்கு இனம் கண்டுக்கொள்ள முடியவில்லை.

இன்று அவளுக்கு தலைக்கு எண்ணெய் வைத்து தேய்த்து விடும் போது அவள் கண்ணில் படவே போட்டே ஆகவேண்டும் என்று டார்ச்சர் செய்ய கிளம்பிவிட்டாள்.


( எருமமாடு வயசாகுது இன்னும் குழுப்பாட்டிவிட்டுகிட்டு, மூக்கு சிந்திவிட்டுகிட்டு இருங்க)


ஒரு வழியாக மல்லிகாவை மிரட்டி ,உருட்டி, போட வைத்த பின்னே அவரை விட்டார்.

பின் தன் அறைக்கு வந்தவள் சந்தோஷ் தனக்கு புதிதாக வாங்கி கொடுத்த அந்த சாம்சங் j7 மொபைலை எடுத்து அதில உள்ள விஸ்வாவின் போட்டாவை எடுத்து ,மெதுவாக அதை வருடி பார்த்துக்கொண்டிருந்தாள்.

( இது எப்பலேந்து தேனு....சரி இல்லையே)

“ வீர் ஒரு சில மாசத்துலையே ஒருந்தவங்களால இப்படி அவங்கதான் மற்றவங்களோட உலகமா மாற்ற வைக்க முடியுமா? அதுவும் ஒரு வார்த்தை பேசாம....?

ஆனால் நீ என்னை மாத்திவச்சிட்டியே எப்படி,சாதரண ஸைச விட கொஞ்சம் பெருசா இருக்குற உன் முட்ட கண்ணா?

இல்லை ஓங்கு தங்கானா உன் உயரமா,இல்லை தும்ப பூ மாறி இருக்குற உன் நிறமா, இல்லை இப்ப கொஞ்ச நாளா வச்சிருக்குற இந்த அழகான மீசையும், இந்த தாடியுமா....?

இல்லை நீ எந்த பொண்ணுங்களையும், நிமிர்ந்து கூட பார்க்க மாட்டியாமே அதனாலயா?

(ஹா ஹா கவலை படாத பாப்பா அவன் உன்னையுமே பார்க்க மாட்டான்.....)

இல்லை எனக்கு பிடிக்கிற பானி பூரி உனக்கும் ரொம்ப புடிக்குமே அதனாலயா?

( கண்டிப்பா இந்த காரணமாதான் இருக்கும், மேலே நீ சொன்ன மத்த காரணத்திருக்கும் உனக்கும் சம்மந்தமே இல்லை,10th படிக்கும் போதே பானி பூரி கடை வச்சிருக்கவன கல்யாணம் பண்ணி கேட்டவ தான நீ)

அவன் தன்னவனை உணர்ந்து கொண்ட தருணத்தை நோக்கி பயணம் ஆனது அவள் நினைவுகள்.

( உனக்கு இப்படி இப்படி கவிதை தனமால்லாம் பிளஷபக் கிடையாது ஓடி போ..)

அந்த கேவலமான தருணத்தை நோக்கி பயணமானது அவள் நினைவுகள்...

தங்கள் பக்கத்து வீட்டு வசந்தி அக்கா 2 மாதங்களுக்கு முன்தான் திருமணம் ஆனவள் ,தன் பிறந்த வீட்டிற்கு வந்தவள் திரும்பி போகவே இல்லை.

அவர்கள் வீட்டு குட்டி பசங்களோடு விளையாட சென்று இருந்த அகலி அழுதுக்கொண்டிருந்த வசந்தியின் அருகில் அமர்ந்து கொண்டு

“ ஏன் அக்கா அழுகுற” என்று தட்டாங்காய் விளையாண்டு கொண்டே கேட்டுக்கொண்டிருந்தாள்,

வசந்தி” அதை ஏன் டி கேட்கிற நான் கட்டிக்கிட்டு போனவன் சரியான சந்தேக பிராணியா இருக்கான், எந்த ஆம்பிளை கூட பேசுனாலும் சந்தேகப்பட்டு அவங்க கூட சேர்த்து வைத்து பேசுறான்.

என் வீட்டுக்கு வந்த ஒண்ணுவிட்ட அண்ணன்ட பேசுனத்துக்கு சண்டை போட்டு ,என் மண்டைய ஓடச்சி அனுப்பிட்டான்,

எனக்கே இந்த நிலமைனா உன்னையும் சந்தோசையும் யோசிச்சி பாரு,நீ அவன் இல்லாம அரை நிமிஷம் கூட இருக்க மாட்ட,என்னதான் உன் குடும்பத்துக்கு நீங்க ஒண்ணுனாலும் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நீங்க சொந்தம் பந்தம் கூட இல்லாதவங்கதான் , நீ சந்தோஷிடம் பேசுவதை குறைத்து கொள் “

(உன் புருஷன் மாறி எல்லோருமே கேவலமா இருப்பங்காளா, அதும் இந்த மெண்டல்ட போய் சொல்றியே, அவள் ஹெவியா யோசித்து ரொம்ப கேவலமா ஏதும் செய்ய போறாள்)


என்று அட்வைஸ் செய்கிறேன் பேர்வழி என்று அந்த அரை லூசை ,முழு லூசாக்கிவிட்டு சென்றாள் வசந்தி.

சந்தோஷிடம் பேசுவதை குறைத்துக்கொள் என்றதுமே இவளுக்கு கண்களில் கண்ணீர் குளமாக வந்து விட

இதுவரை அப்படி யோசிக்காத அகலிக்கு என்ன செய்யவதென்று புரியாமல் “ என் சந்தோஷிடம் பேச வேண்டாம்னு சொல்ற யாரும் எனக்கு வேண்டாம்,எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று முருக்கிக்கொண்டிருக்க

“உன் வீட்டார்கள் கண்டிப்பாக உன்னை அப்படியே விட மாட்டார்கள் “ என்று அவளை விட கொஞ்சம் மெச்சுரிட்டு அதிகம் உள்ள அவள் மனசாட்சி அவளுக்கு அறிவுரை செய்ய ,மீண்டும் உட்கார்ந்து பலமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.


சந்தோஷிடம் ஒரு போன் செய்து கேட்டால் அவன் ஒரே வரியில் “ என் தேனுக்குட்டியை உள்ளங்கையில் வைத்து தாங்கும் குணத்திலும்,அழகிலும் என எல்லாவற்றிலும் உயர்ந்தவன்தான் வருவான்” என்றும் ,

அதற்கு நடமாடும் எடுத்துக்காட்ட்டாய் விளங்கும் தன் நண்பன் விஸ்வாவை பரிந்துரை செய்வதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் வீட்டில் பேசி அதை பெரியவர்கள் நிச்சயிக்க பட்ட திருமணமாகவும் மாற்றி இருப்பான்.

( அது நடந்திருந்தால் விதிக்கும் எனக்கும் வேலை இல்லாமல் போய்விடும் என்பதால் இந்த அகலி லூசை வைத்து ஏதாவது வித்தியாசமாய் ட்ரை பண்ணலாம்னு இருக்கோம்)


ஆனால் அகலியோ ” நாமே இவளோ கஷ்டப்படுறோம் காருவாயன் இன்னும் ரொம்ப கஷ்டப்படுவான்” என்று இவளை போலவே அந்த தெளிந்த அறிவுடைய சந்தோஷையும் அரை லூசாக நினைத்து அவனிடம் சொல்லவில்லை.

ஒரு வாரம் சாப்பிடாமல் தூங்காமல் அவள் இதற்கு கண்டுபிடித்த வழிதான் தன்னையும் சந்தோசையும் புரிந்து கொண்ட தங்கள் உறவில் உள்ள தூய்மையான பாசத்தை புரிந்து கொள்பவனை தான் கல்யாணம் செய்து கொண்டாள் எதுவும் பிரச்சனை இல்லை என்பதுதான்.

( இதை கண்டுபிடிக்க உனக்கு ஒரு வாரம் ஆகி இருக்கு....உன்னை லூசு லிஸ்டில் சேர்க்குறதா,இல்லை வளர்ந்த குழந்தை லிஸ்ட்ல சேர்க்குறதா எனக்கு தெரியல, என் ரீடர்ஸ்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்)

இந்த முடிவை எடுத்தவுடன் அவள் மனதில் மின்னலென வந்து போனது தாடி மீசை இல்லாமல் சந்தோஷின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் விஸ்வாதான்.

எந்த மறுபருசீலனையும் இல்லாமல் அவனை தான் கல்யாணம் செய்து கொள்ள போகிறோம் என்று முடிவு செய்தவள் அவன் போட்டாவை எடுத்து ஆராய ஆரம்பித்தாள்.

( டேய் விஸ்வா உன் லவ் பிளாஷ்பேக் இவளோ கேவலமா இருக்கு.....)

எப்பொழுதும் அவனை பற்றி சந்தோஷிடம் பேசும் போதும்,கேட்கும் போதும் நேரம் கடப்பதே தெரியாமல் இருப்பதும், ஜாலியாக இருப்பதற்கும் ஏனோ அவளின் மனம் வேறு ஒரு பெயரை கொடுத்தது அதுதான் நிறைவு,இனம் புரியாது இன்பம் என்று....

ஒருவேளை சந்தோஷக்காக இல்லாமல் வேறு யாரோ ஒருவன் தன் வாழ்வில் என்று யோசிக்கும் போது கூட தான் வீரை தான் டிக் செய்திருப்போமோ என்று அவள் மனம் யோசிக்க அதற்கு அவள் பதில் ஆமென்று இருக்க,
அவள் இன்பமாக அவனை தனக்குள் நிரப்ப ஆரம்பித்தாள்.

எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல் தன் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை என்று ஒரு ஒரு அடையாளத்தோடு நிச்சயம் முடிந்ததும் “ மாப்பிள்ளையிடம் பேசு மா” என்று

தன் தந்தை கொடுக்கும் போன் நம்பரை “இது வேற இம்சயா இருக்கே “ என்று கடமைக்கு பேச ஆரம்பிக்கும் பெண்கள் கல்யாணத்திற்குள் அவன் தான் தன் உலகம், என்று காலம் மாற்றுவதை போல

அகலியின் மனதில் ஒவ்வொரு நாள் கடக்க கடக்க விஸ்வாவின் மேலான காதல் இருக்க இடம் இல்லாமல் நிரம்பி வழிந்தது.

அதுவும் சந்தோஷ் அன்று சொன்ன ஒரு விஷயத்தில் மழைக்காலத்தில் ஏறும் தக்காளி விலை போல் ஏறிப்போனது அவன் மீதான காதல்.


அது என்னவென்றால் “ அவனின் கல்லூரியில் படிக்கும் பெண் தன் காதலனுடன் சற்று எல்லை மீறி பழகி இருக்க அதை அவன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்ததோடு மட்டும் இல்லாமல் அதை காட்டி தன் நண்பர்களோடும் அவளை தவறாக இருக்க வேண்டும் என்று மிரட்டவே

விஸ்வாவின் நல்ல குணம் தப்பை தட்டி கேட்க்கும் தைரியம் அனைவருக்கும் தெரியும் என்பதால் அந்த பாதிக்க பட்ட பெண் அவனிடம் கூறவே

விஸ்வா “உங்க காதலன் மேல நீங்க வச்சிருக்குற காதல,நம்பிக்கையை இப்படித்தான் நீங்க காட்டனும்ன்ற அவசியம் இல்லை உங்கள் பெண்மை நீங்க உங்க கணவனுக்கு கொடுக்க வேண்டிய உன்னதமான பரிசு,அது உங்கள் உயிரை விட மேலான காதலனா இருந்தாலும் அவன் கணவனா ஆனதும் தான் கொடுக்கணும் “ என்று அந்த பெண்ணுக்கும் ஒரு கொட்டு வைத்தவன்

அந்த பையனை பிடித்து அவனிடம் உள்ள ஆதாரங்களை அழித்துவிட்டு இன்னும் 2 வருடங்களுக்கு அவனால் எழுந்த நடமாட முடியாத அளவிற்கு அவனை ஹாஸ்பிட்டலில் படுக்க போட்டுவிட்டு தான் ஓய்ந்தான்.

அடிப்பட்ட பையனின் பெற்றோர்கள் போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்கவே விஸ்வா கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டான்.

உண்மையான காரணத்தை சொன்னால் உடனே பெயில் கிடைத்து விடும் என்று வக்கீல் எவ்வளவு எடுத்து சொல்லியும் அவன் மறுத்து 20 நாட்கள் கழித்தே வெளியே வந்தான் என்பதாகவும்.

அதை கேட்டதும் அகலி ஏதோ அவளே செய்தது போல் பூரித்து போனாள்.

தனக்கு பிடித்தவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட நமக்கு மலையளவு பெரிதாக தெரிய ,


பெரிய பெரிய விஷயங்களை அசால்ட்டாக செய்யும் தன்னவனை நிரம்ப பிடித்துவிட்டது அகலிக்கு.

இவை அனைத்தையும் நினைத்து பார்த்துக்கொண்டு அவன் போட்டாவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அகலி அவன் நிழலிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
இன்னும் 2 வருஷம் தான் வீர் அதுக்கு அப்பறம் இந்த அகலியோட ஆக்சன் பார்ப்ப, எல்லோரோட லவ்வையும் மாறி என் காதலையும் அசால்டா வேண்டாம் சொல்லலாம்னு நினைக்காத
என் காதல் ஆக்டொபஸ் மாதிரி நாலு பக்கமும் உன்னை நகர விடாம இழுத்து எனக்குள்ள சுருட்டு வச்சிக்கும் என வீர வசனம் பேசியவள்.

பூஜை அறையில் உள்ள சிவனிடம் வந்து கெஞ்சிக்கொண்டிருந்தால்” எப்படியாவது வீருக்கு என்னை பிடிக்க வச்சிடு பிளீஸ், நீ இருக்குற தைரியத்தில் அவன்கிட்ட நான் ரொம்ப வீராப்ப பேசிட்டு வந்துட்டேன்” ,

( அதானே பார்த்தேன் அகலி பாப்பா இவளோ சீரியஸா பேசுற ஆள் இல்லையே இவரை நம்பிய நீ இருக்க இவரு நல்ல சோதி சோதின்னு சோதிச்சிட்டுதான நல்லது செய்வாரு)

நான் வேணுன்னா எங்க ஊருல இருக்க உன் வீட்டுக்கு
(அது வீடாம்மா உனக்கு அது கோவில் எங்க சொல்லு பார்ப்போம் கோவில்)
வந்து டெய்லி சுத்தம் பண்ணி வைக்கிறேன்,அப்பறம் அங்க உள்ள சிவனடியார்களுக்கு சாப்பாடு கொடுக்கிறேன் என்றவள் சிவனிடம் எந்த ரிஃப்ளெயும் இல்லாமல் போகவே

அவள் சோகத்துடன் முகத்தை வைத்துக்கொண்டு “ சரி உன் பசங்க விநாயகர், முருகன் வீட்டுக்கும் அதே மாறி பன்றேன் “ என்றாள்.
இந்த டீல் அவருக்கு பிடித்து போகவே அவர் குஷியாகி தன் மாலையில் உள்ள ஒரு மலரை சம்மதம் போல் கீழே உதிர்த்தார்

( இவள் கும்பிடும் கடவுளும் இவளை மாறியே பப்பியா இருக்கே)

அதில் சந்தோசம் அடைந்த அகலி சிவனின் போட்டாவை தூக்கி இரண்டு சுற்று சுற்றியவள் காமாட்சியின் “ பாப்பா சாமி போட்டாவை அப்படியெல்லாம் பண்ண கூடாது” என்ற குரலில்

“ அப்படியா அப்பத்தா “என்றவள் போட்டாவை கீழே வைத்துவிட்டு அவரின் கையை பிடித்துக்கொண்டு அவருக்கு மயக்கம் வரும் வரை சுற்றி விட்டு டோராவிற்கு உதவி செய்ய டோராவின் பயணங்கள் பார்க்க சென்றதோடு மட்டும் இல்லாமல்

டீவியை பரர்ப்பவள் “குள்ளநரி திருடக்கூடாது, குள்ளநரி திருடக்கூடாது என்றும், டோராவுடன் சேர்ந்து ஒன்று, இரண்டு என்று எண்ணிக்கொண்டிருந்தாள் பக்கத்துவீட்டு குட்டி பசங்களோடு சேர்ந்து

( இந்த ஜென்மத்தில நீ விஸ்வாவை நீ கரெக்ட் பண்ண முடியாது சோ.... சேட், )

சென்னையில்

ஒரு முக்கியமான வேலை விஷயமாக கண்ணன், விஸ்வா,முருகன் அனைவரும் அவர்களின் பூர்வீக ஊருக்கு சென்று இருக்க
விஸ்வா இல்லாமல் சந்தோஸ் மட்டும் இருக்க தன் தேனுக்குட்டியிடம் பேசி முடித்துவிட்டு அசதியாக

ஹாலில் டிவி பார்த்தித்துக்கொண்டிருக்க ஹாலிங் பெல் அடிக்க சென்று கதவை திறந்தவன் அதிர்ந்து விட்டான்.

அங்கே அவனின் குண்டு தக்காளி ஆலிவ் பச்சை நிற டாப், வெள்ளை நிற சால் மற்றும் ,பேண்ட் அணிந்து கொண்டு பெரிய படிப்பாளி என்பதற்கு அடையாளமாய் கண்ணில் ஒரு பவர் கிளாசுடன் தென்பட்டாள்.

3 வருட இடைவெளியில் நன்று பொசு பொசுவென்று வளர்ந்து தன் காதலுக்கும் தன் இளமைக்கும் பெரிய சோதனையாக வந்து எதிரில் நின்றவளை விழி அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தான்
( mr. காருவாயன் நீங்க விடுற ஜொள்ளு மழையில் இங்க முட்டிக்கால் வரை ஒரே தண்ணீர்)
அவளை உள்ளே அழைக்க கூட தோன்றாமல் நின்றவனை இடித்து கொண்டே உள்ளே நுழைந்தவள் “ ஹாய் சந்து எப்படி இருக்க” என்று பல நாள் பழகியவள் போல் பேச

அதில் தன்னுணர்வு அடைந்தவன் “ ஹாய் குண்டு என்று சொல்ல வந்தவன் அப்படியே அதை முழுங்கி ஜனனி எப்படி இருக்க ,விச்சு இல்லையே” அவள் தன் அண்ணனை தான் பார்க்க வந்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டு சொன்னான்.


தெரியும் என்று சொன்னனவள் “ நான் உன்னை பார்க்க தான் வந்தேன்,என்றவள் மேலும்

“ இன்னும் 4 வருஷம் டைம் தான் உனக்கு அதுக்குள்ள நான் மெடிஸின் முடிச்சிட்டி 1 வருஷம் பிராக்டிசும் முடிச்சிடுவேன்..

அதுக்குள்ள உனக்குன்னு ஏதும் எய்ம்,கடமை இருந்த அதையெல்லாம் முடிச்சிக்கோ,அதுக்கு அப்புறம் நான் விச்சுகிட்ட சொல்லி எங்க வீட்ல பேர்மிஸ்ஸன் வாங்கிக்கிறேன்,அதுக்கு அப்பறம் நீ அத்தை மாமாலாம் அழைச்சிட்டு வந்து எங்க வீட்டுல பேசு.

கல்யாணத்துக்கு அப்பறம் சென்னைனாலும் எனக்கு பிரச்சனை இல்லை,உங்க ஊருனாலும் எனக்கு பிரச்சனை இல்லை ஊருல இருக்கணும்னா எனக்கு அடிப்படை வசதியுள்ள ஒரு குட்டி ஹாஸ்பிடல் கட்டி கொடுத்துடு,

அப்பறம் ஹாஸ்பிடல் எதும் வருமானம்லாம் என்னிடம் எதிர்பார்க்க கூடாது ஏன்னா அங்க இலவச மருத்துவம்தான் நான் பண்ண போறேன்,

அப்பறம் எனக்கு 2 பையன் அதுவும் உன்னை மாறி கருப்பாதான் வேண்டும்” என்று முடித்தவள்

( அட கொக்க மக்க என்ன ஒரு கோணங்கி தனம் )

ஒரே சாட்டில் அவனை அதிர வைத்து தன்னை சில வருடங்களாக இரவில் தூங்க விடாமல் செய்யும் அன்று அவன் பார்த்த ஆழப்பார்வைக்கு தண்டனை கொடுத்து நியாயம் செய்துவிட்டவள் போல நிம்மதியுடன்

“நான் வருகிறேன்” கிளம்பிவிட்டாள்,அவள் பேச்சில் ஆடிபோய் இருந்தவன்

( பாவம் இந்த கதையில வர பசங்க 2 பேரும்)

அவள் கதவை திறக்கும் சத்தத்தில் வேகமாக அவள் கையை பிடித்து நிறுத்தி

“ நான்...நான் உன்னை லவ் பன்றேன்னு உனக்கு எப்படி தெரியும்” என்றான்.

அவளுக்கும் இது வரை இருந்த தைரியம் காணாமல் போக மெதுவாக “ அது நீ அன்னைக்கு பார்த்த பார்வையிலே வித்தியாசம் எனக்கு தெரிஞ்சது ,அப்ப எனக்கு புரியலனாலும் தினம் தூங்கும் போது நீ பார்த்த பார்வை தான் என்னை அதை செல்லும் செய்தியை ஆராய சொன்னது,

அதை பத்தி அதிகமா யோசித்து என்னை அறியாமல் உன்னை அதிகமா நினைக்க ஆரம்பிச்சிட்டேன் ,,நான் பர்ஸ்ட் இயர் முடிக்கும் போதுதான் அந்த பார்வைக்கான அர்த்தம் புரிந்தது” என்று சொன்னவளின் முகம் சிவக்க


அப்பறம் இந்த ஒரு வருஷமும் நீ வருவ வருவ வந்து என்னை மீட் பண்ணி பேசுவ அப்படினு வைட் பண்ணேன் ஆனால் நீ வரல,நான்தான் தப்பா புரிஞ்சிகிட்டனோன்னு உன்னை நேரில பார்த்த ஒரு தெளிவு கிடைக்கும்னு வந்தேன்,

நீ கதவை திறக்கும் போது பார்த்த பார்வையில தைரியம் வந்து என் மனசுல உள்ளதை எல்லாத்தையும் சொல்லிட்டேன் “ என்று தலையை குனிந்து கொண்டே சொன்னவள்


கடைசியாக “உடனே நான் உன்னை லவ் பன்றேனு நினைக்காத பிளாக் அண்ட் வைட் காம்பினேஷன் நல்லா இருக்கும்னு என் பிரண்ட்ஸ் சொன்னாங்க,அதனால தான் போனா போகுதுன்னு உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கிறேன்” என்றாள்.

சந்தோஷின் நிலையே சொல்ல முடியாத சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தது. தான் ஒரு துரும்பை கூட கிள்ளி போடாமல் தான் அன்று பார்த்த ஒரு பார்வையை அடிப்படையாய் வைத்துக்கொண்டு தன்னை தன் காதலை கவுரவ படுத்திய தன் குண்டு தக்காளியை அப்படியே ஜுஸ் போட்டு குடிக்கும் அளவிற்க்கு ஆசையும் காதலும் போட்டி போட

ஏதேதோ வேண்ட வேண்டும் என்று கோவிலுக்குள் செல்லும் போது அங்கே உள்ள அமைதியும் ,அந்த வாசைனையும் ,அலங்கரிக்கப்பட்ட சாமி சிலையையும் பார்த்து மெய் மறந்து கைகளை மட்டும் கூப்பிக்கொண்டே மணிக்கணக்கில் சாமியை பார்த்துவிட்டு அந்த சொல்ல முடியாத உணர்வை அனுபவித்து விட்டு வருவோமே

அவள் காதல் கொடுத்த நிரம்ப சந்தோசத்தில் அவனுக்கு எதுவும் தோன்றவில்லை..

அவள் கைகளை அவன் பிடித்த அழுத்தமே அவள் வார்த்தைகளால் சொன்ன அத்தனை வார்த்தைகளை விட அதிக செய்திகளை அவளுக்கு நொடியில் உணர்த்த அது கொடுத்த சுகத்தில் அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டாள்.


அவனும் அவளின் காலுக்கு கீழே அமர்ந்து அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

நேரம் ஆக ஆக அவனிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே அவன் பார்வை வேறு புது அவஸ்தயை கொடுக்க “ சந்தோஷ் நான் போகணும்” என்றாள்.


“ம்ம்ம் சரி “ என்று சொன்னவனின் குரலில் அப்படி ஒரு கரகரப்பு

அவன் பிடித்து கொண்டிருந்த அந்த கையை பார்த்தவள் “ ஒரு முத்தம் கூட கொடுக்க மாட்டான் போலவே” என்று நினைத்து கைய உருவிக்கொள்ள

( ஜானு நீ இந்த விஷயத்துல கொஞ்சம் வீக் டா, இதே அகலினா பச்சக்குன்னு கொடுத்துட்டு பத்தடி தள்ளி போய் பளிப்பு காட்டிருப்பாள்).

அவளின் எண்ணம் உணர்ந்து சிறு சிரிப்புடன் அவள் உருவிய கையை பிடித்து அழுத்தி முத்தம் கொடுத்தவன்,

“மீதம் எல்லாம் என் தகுதியை நான் உயர்த்திகிட்டதுக்கு அப்பறம், நான் இப்ப உங்க அண்ணன்ட கேட்ட அவனோட நண்பன் அப்படின்றத்துக்காக உடனே எனக்கு உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்க சரி சொல்லிடுவான்.


ஆனால்” சந்தோஷ்ன்ற தனிமனிதன் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் என் தனி அடையயாளத்தோடு வந்து கேட்டாலும் எனக்காக மட்டும் உன்னை கொடுக்கணும் ,அதனால நானா சொல்ற வரை நீ உங்க அண்ணனிடம் சொல்லிகாத” என்றான்.

என்னதான் தானும் வசதி என்றாலும் ஜனனி அளவிற்க்கா என்றால் நிச்சயமாக இல்லை, அதனால் தான் தன் சுய தகுதியை உயர்த்திக்கொள்ள கொஞ்சம் கால அவகாசம் கேட்டான்.

தன்னவனின் தன்மானம் கண்டு கலங்கிய கண்களுடன் சரி என்று சொன்னாள் ஜனனி.
ஜனனியிடம் பேசும் போதெல்லாம் தன் நண்பனுக்கு துரோகம் செய்கிறோமோ என்று அவனுக்கு உருத்த


அவர்கள் இருவரும் பார்த்துக்கொள்வது , பேசிக்கொள்வது எல்லாமே மிக மிக கம்மி என்ற போதும் அவர்கள் காதல்,நம்பிக்கை,நேசம் எல்லாம் மலையளவு உயர்ந்தே இருந்தது.

அகலி அங்கே விஸ்வாவின் நிழலோடு காதல் செய்ய தன்னவள் அருகில் இருந்தும் கனவோடு காதல் செய்து கொண்டிருந்தான் சந்தோஷ்.
நாட்கள் அதன் போக்கில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்க இன்னும் இரண்டு நாட்களில் வைவா என்ற நிலையில்
ஓங்கி அடித்த அதிர்வின் காரணமாக உதடு கிழிந்து ரத்தம் வர ரீனா அவமானத்தோடு கீழே விழுந்து கிடக்க

கோபத்தால் உடம்பெல்லாம் செந்தனாலக கொதிக்க தன் நெற்றிக்கண்ணை திறந்த படி நின்று இருந்தான் விஷவேந்திரன்.

வருவாள்...

மிளாணிஸ்ரீ
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

காதலன் அடித்த எபி போட்டிட்டேன் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு ஒரு choo சொல்லிட்டு போங்க

அப்பறம் யாரு யாரு டோரா பூஜ்ஜி,சோட்டா பீம், சின்சாண் பார்ப்பீங்க கையை தூக்குங்க

லாஸ்ட் எபிக்கு choo எல்லோருக்கும் என் நன்றிகள்

நன்றிகளுடன்
மிளாணி
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 18:

எனக்கே தெரியாமல் எனக்குள்ளே வந்தவனே....

கணக்கே தெரியாமல் காயங்கள் நூறு தந்தவனே...

ஏறெடுத்தும் நீ பார்க்காமல் என் ரத்தம் உறையுதடா....

என் நரம்பே என்னை இன்று கட்டிப்போட்டு சிரிக்குதடா.....

நான்கு அறையில் நான் மாட்டியே நாளுக்கு நாள் சாகுறேனே..

உன் அன்பில் நான் மாட்டியே உயிர் போக வேண்டுகிறேனே....

ஆசையோடு நான் உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும்..

அசையாமல் நீ நின்னு ஒத்துழைப்பு கொடுக்கணும்....

கூண்டுக்கிளியாய் இருந்த என்னை கவ்விப்போனாய் பூனையாய்...

சாகடித்தாலும் பரவாயில்லை கூட்டிப்போ கணவனாய்.....

விஸ்வாவின் வீட்டிற்கு வந்ததிலிருந்து அமைதியை கடன் வாங்கிக்கொண்டாள் ரீனா.

அப்படி இருக்க வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை ஆனால் அவளுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரியவில்லை.

அழுக்காகவே பிறந்து,அழுக்கிலையே வளர்ந்து அவள் செய்த பாவங்கள் ஒன்றா இரண்டா....?

இப்பொழுது கூட அவள் செய்த விஷயங்கள் சரியா தவறா என்று அவளுக்கு சொல்ல தெரியவில்லை...

அது சராசரி வாழும் பெண்களிலிருந்து,மனிதர்களிலிருந்து வித்யாசமாக இருந்திருக்கிறது,அடுத்தவர்களை நரகத்தில் தள்ளியிருக்கிறது,பலரின் கண்ணீருக்கு காரணமாக இருக்கிறது,பலரின் இறப்பிற்கு திறப்பு விழா செய்திருக்கிறது

அது மட்டுமே அவள் இப்பொழுது உணர்வது அதுவும் தனக்கு நடந்த அந்த நிகழ்விலிருந்துதான்.அதற்கு முன் அவள் மனநிலை தான் மிகவும் அதிருஷ்டசாலி தான் கேட்டது அனைத்தும் தனக்கு கிடைத்துவிடும்,எனக்கு விருப்பம் உள்ளதை நான் எடுத்துக்கொள்வேன், அதில் அடுத்தவர்களுடனான விருப்பம் ,வாழ்க்கை,எதுவும் அவளுக்கு தேவை இல்லை

தேவை இல்லை என்று சொல்வதை விட தெரியவில்லை என்றேதான் சொல்லவேண்டும்.

நியாயங்கள் ,அநியாயங்கள் எல்லாமே தான் வளர்க்க பட்ட விதம்,சூழ்நிலை , சுற்றி உள்ளவர்களை வைத்தே நம் மூலையியிலும் ,செயலிலும் வார்க்கப்படுகின்றன.

அதனால் தான் குழந்தைகள் முன் சண்டைபோடுவதையோ, கொச்சை வார்த்தைகள் பேசுவதையே நம் முன்னோர்கள் ஆதரிப்பது இல்லை.

மீன்,கோழி, ஆடு இன்னும் சில கடல் வாழ் உயிரினங்களை நாக்கை சுழற்றி வித விதமாக சமைத்து சாப்பிடும் நாம் மாட்டு கறி தின்பவர்களையும், வெளிநாடுகளில் பாம்பு கறி, பண்ணி கறி தின்பவர்களையும்,இன்னும் சில காட்டு பகுதிகளில் மனித மாமிசத்தை தின்பவர்களையும் அருவருப்பாகவும், கொடியவர்களாகவும் கொலைகாரர்களாக பார்ப்பது
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை..

இதில் வெஜ் பிரியர்களும் அடக்கம் அவர்களின் நியாயம் லெதர் ஷூ,லெதர் பேக் என்றும் ,ஆயிரம் தேனீக்களை அழித்து “நாங்கள் மலைத்தேன் தான் சாப்பிட்டுவோம் “ என்ற பெருமையிலும், பிரசவம் முடிந்து 4 நாட்களே ஆன பசுவின் காம்பை அது சிவக்கும் வரை கறந்து சுத்தமான பால்,சுத்தாமன நெய் என்று அவர்கள் சுத்தம் பேசுவதிலும் அநியாயங்களாக மாற்றப்படுகிறது..

நம்மை கடிக்கும் ஒரு கொசுவை கொன்றாலும் அதுவும் ஒரு உயிர் இழப்புதான்.....ஒரு மனிதனை கொன்றாலும் அது உயிர் இழப்புதான்

நல்லது,கெட்டது, சரி ,தவறு எல்லாம் நம் சாதகமான நிலை(comfortable zone) மற்றும் நமக்காக எழுதிக்கொண்ட ரூல் புக்கின் அடிப்படையில் இடத்தை பொறுத்து மாறுபடுகிறது.

அதே போல் அநீதியின் பக்கத்திலையே வளர்ந்த ரீனா இப்படி இருப்பது பெரிய ஆச்சரியம் இல்லை என்றே தோன்றுகிறது...

மகாபாரத போரின் பெரும் மனித இழப்பில் கண்ணனை பார்த்து ஒரு சாமானியன் “எதற்கு இவ்வளோ பெரிய போர் ,இவ்வளவு பெரிய மனித இழப்பு , நீயோ இயக்குபவனாய் இருக்கையில் “ என்று கோபமாக கேட்டானாம்.

அதற்கு கண்ணன் சிரித்துக்கொண்டே “ பூமியில் மனிதத் தொகை அதிகமாகி விட்டது இப்படி ஏதாவது போர் வைத்தால் தான் அதை குறைத்து சரி செய்ய முடியும்” என்றானாம்...

(என்ன ஒரு வில்லத்தனம் உனக்கும் ,சகுனிக்கும் பெரிய வித்தியாசம் இல்லைனு சரியதான் எல்லோரும் சொல்றாங்க)

கொஞ்சம் யோசித்து பாருங்கள் யாரும் சாகவில்லை ,எந்த உயிர்களும் சாகவில்லை நம் உலகின் நிலைமையை

இருக்க இடமில்லாமல் நிரம்பி வழிவதோடு மட்டும் இல்லாமல் எல்லாவற்றிலும் பற்றாக்குறை ஏற்படும்.

உலகில் எல்லோரும் வெஜ் மட்டும் சாப்பிட்டால் உலகின் உணவு பற்றாகுறையின் அளவும், மற்ற உயிர்களின் உற்பத்தியும் நினைக்கவே நம்மால் முடியவில்லை அது மட்டும் நடந்தால் ...?

அதனால் தான் ஆறு அறிவு உள்ள மனித இனத்தை அழிப்பதை கடவுள் வேலையாகவும், நம்மை விட குறைந்த அறிவுடைய மற்றவற்றை அழிக்க நம்மையும் படைத்திருக்கிறான் போல இறைவன் ....

அவரின் சேவகர்களாக முன் ஜென்ம கர்மாவின் அடிப்படையில் கே, ஆர்( ரீனாவின் அண்ணன்), ரீனா போன்றவர்களை படைத்து அவரின் தேவையோ, அல்ல அவர்களின் கர்மாவின் தண்டனை காலம் ஏதோ ஒன்று முடித்த பிறகு அவர்களை யாரோ ஒருவரை வைத்து அழிப்பதோ இல்லை ,அவர்களை திருந்த செய்யும் வேலையையும் செய்து விடுகிறார்.

( இப்ப என்னமா உனக்கு ....ரீனா கெட்டவளா இருக்குறதுக்கு, அவளோட சூழ்நிலையும்,ஏற்கனவே விதிக்க பட்டதும் தான் காரணம் அவ்வளோதான.. புரிஞ்சிடிச்சு...நீ கிளம்பு ......எப்ப பாரு பத்து பக்கத்துக்கு பிலாசபி பேசிக்கிட்டு....)

ரீனாவின் மனநிலை பிறந்த குழந்தையின் மன நிலையில் இருந்தது, இந்த மனிதர்களின் உலகம் புதிதாக இருந்தது ,அதில் வாழ வேண்டும் என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை குறைந்த பட்சம் அதை புரிந்து கொள்ளவேண்டும்..

தான் இதுவரை செய்தது பாவம் என்று அறிந்ததற்க்கே அவள் தன்னை அழித்துக்கொள்ள முடிவு செய்து விட்டாள்.

ஆனால் அது ஒரு நொடி வலியல்லவா,அது அவளுக்கு வேண்டாம் என்று நினைத்தவள் தான் உயிருடன் வாழ்வதுதான் தனக்கான சரியான தண்டனை என்று அவள் வாழ ஆரம்பித்தாள்.

அது அவ்வளவு சுலபாமாக இல்லை..கொஞ்சம் கொஞ்சமாக. தன் பாவத்தின் வீரியமும் ,அதனால் வாழ்க்கை இழந்தவர்களை பார்க்கும் போது அவளின் வலியை அவளால் தங்க முடியவில்லை...

இருந்தும் இந்த தண்டனை தனக்கு வேண்டும் என்று அனுபவித்து கொண்டிருக்கிறாள்.

மற்றவர்களை விட அவள் அகலிக்கு கொடுத்த வலி சாதாரணம் தான்.

அதற்கே அவள்படும் துன்பங்களை அன்று விஸ்வா சொன்னதை கேட்டவள் “ஒரு பூ மனதுகாரியை பிய்த்து எரிந்து விட்டோமே “என்று அவள் அன்று வரை தூங்கவில்லை...

அதுவும் நேற்று தான் வந்ததிலிருந்து அவள் தன் கூடவே இருந்து தன்னை” அக்கா அக்கா” என்று அழைத்து உயிரை விடுவது

அப்பொழுது அவள் அடைந்த உணர்வை அவளால் சொல்ல முடியவில்லை...
விஸ்வாவின் தோழி என்றே ஒரே காரணத்திற்க்காக அவர்கள் வீட்டார்கள் காட்டும் அன்பு இதுவரை

அவள் அறிந்து இருக்கிறாளா என்றால் கண்டிப்பாக இல்லைதான்..

எல்லாவற்றையும் யோசித்து கொண்டு அமர்ந்தவளை “ மாமா வலிக்கும், வேண்டாம் வேண்டாம் பிளீஸ்” என்று கெஞ்சும் அகலியின் குரல் கலைத்தது.

அவள் நிமிர்ந்து பார்க்கும் போது ப்ளூ கலர் 3 4த் பேண்ட் ,வைட் கலர் டீசேர்ட்டில் ஓடிவரும் அகலி கண்ணில்பட்டாள்...

அந்த உடையில் மிகவும் குட்டி பெண்ணாக இருந்தவளை பார்க்க மீண்டும் நொந்து போனாள்..

அவளை துரத்திக்கொண்டு விஸ்வாவின் குடும்பமே வர அகலி ரீனாவின் அருகில் வந்ததும் கண்ணன் அவளை நோக்கி பிடிக்குமாறு கண்ணை காட்ட

அவளுக்கு எங்கே அதெல்லாம் புரியும்.அவள் அப்படியே நிற்க மீண்டும் சத்தமாக சொல்லவும் அவளை பிடித்துவிட்டாள்.

கையில் ஒரு “மெடிக்கல் கிட்” டுடன் நிற்கும் அகலி ரீனாவை நோக்கி “ அக்கா பிளீஸ் அக்கா விடுங்க என்று கண்ணீரோடு சொல்ல அவள் கண்ணீர் ஒரு மாதிரி ஆக அவள் பிடியை தளர்த்த அந்த கேப்பில் அவள் கையில் உள்ளதை அந்த வீட்டின் பின் உள்ள கிணற்றில் போட்டு வந்தவள்...

“அப்பாடா” என்று அங்கு உள்ள சோபாவில் அமர,

அவள் குடும்பமே அவளை முறைத்துக்கொண்டு நின்றது.விஸ்வா மட்டும் அசதியான சிரிப்புடன் அவள் அருகில் போய் அமர்ந்து கொண்டான்.

காரணம் இதுதான் விஸ்வாவிருக்கு தொடர் அலைச்சலால் உடம்பு வலி ,காய்ச்சல்,தலை வலி வந்துவிட்டது

காலையில் டாக்டர் வந்து அவனை பரிசோதித்து” ஒரு இன்ஜெக்க்ஷன் போட்டால் சரியாகிவிடும்” என்று சொல்லி அவர் ஊசியை போட வர

ஒரே எட்டில் அவர் அருகில் சென்றவள் “ ஊசியை பிடிங்கி ஜன்னல் வழியே வெளியே எறிந்தவள்

“ ஊசியெல்லாம் போடாதீங்க ,மாமக்கு வலிக்கும் அப்பறம் கை வீங்கி போயிடும், கசக்காத டானிக் கொடுங்க அதுலயும் சரியா போகலானா மாத்திரை கொடுங்க “என்றாள்,

( அவனுக்கு போட்டு அந்த ஊசிக்கு வலிக்காம இருந்தா சரி...வானத்து அளவு வளர்ந்து நிக்கிறான்..வலிக்குமா வலிக்கும் )

தான் அவனுக்காக ஹாஸ்ப்பிட்டலில் பட்ட துயரங்கள் , இரண்டு வருடமாக தான் பட்ட கஷ்டம் எல்லாவற்றையும் விட தன் மாமானின் இந்த வலி அவளுக்கு பெரியதாய் தெரிவதை பெருமை படுவதா வேதனை படுவதா என்று அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க

டாக்டர் கடமையே கண்ணாக” இது என்ன சின்ன புள்ளை தனமா” என்று மீண்டும் ஒரு ஊசியை எடுக்க போக நொடியில் அவரின் மெடிக்கல் கிட்டை அபேஷ் செய்து கொண்டு

“ குட்டிமா” என்ற விஸ்வாவின் குரலில் இப்போது திரும்பி அவன் கண்களை பார்த்தால் கண்டிப்பாக அவன் சொல்வதை செய்ய தோன்றும் என்று தெரியவே

“மாமா வலிக்கும் “ என்று திரும்பி பார்க்காமல் சொன்னவள் ரீனாவின் கையில் மாட்டிக்கொண்டாள்.

“ அய்யோ மாமாவிற்கு ஊசி போட்டுடிவங்களோ “என்று கண்கள் கண்ணீருடன் அவளுடன் மன்றாடி அதை டிஸ்போஸ் செய்துவிட்டே ஓய்ந்தாள்..

தன் அருகில் அமரும் தன் மாமனை பார்த்தவள் “அய்யோ திட்ட போறங்களே “என்று பயம் வர

“ஊசி வலிக்கும் மாமா “என்று தலையை குனிந்து கொண்டே சொல்ல அங்கு உள்ள எல்லோரும் விஸ்வா உட்பட அனைவரும் சிரிக்க

நடந்ததை முருகன் ரீனாவிடம் சொன்னார்

அதை கேட்ட ரீனாவிற்கு சிரிப்பிற்கு பதில் அழுகை வந்தது “ அய்யோ குழந்தை” என்று..

சுந்தரி ”அப்பறம் உன் மாமனுக்கு எப்படிமா காய்ச்சல் சரியாகும்” என்க

அகலி “ அத்தம்மா அம்மா சின்ன வயசுல எங்கயாவது விழுந்து எனக்கு அடிப்பட்டுட்டுனா எனக்கு எங்க அடிப்பட்டதோ அங்க ஒரு கிஸ் கொடுப்பாங்க சரியாகிடும்” என்று சொன்னவள்

விஸ்வாவின் இரண்டு கண்ணகளையும் பிடித்து இரண்டு நெத்தி பொட்டுகளிலும் முத்தம் கொடுத்தாள்.

( தலை வலிய சரி பணரங்களாம்..... கருமம் கருமம்)

சுந்தரிக்கு வெட்கம் வந்துவிட கல்யாணம் என்று ஒன்று ஆனது தெரிந்தாலாவது அம்மா என்ற முறையில் அவளுக்கு எதுவும் சொல்லி கொடுக்கலாம்

இப்ப அதற்கும் வழி இல்லை என்று தன்னை நொந்து கொண்டவர் அந்த இடத்தை தன் கணவனோடு காலி செய்ய
உள்ளே அழுதுக்கொண்டு வெளியே மரம் போல் நின்றவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கண்ணனும் அந்த இடத்தை காலி செய்தான்.

அவன் கையை இழுத்ததும் சுயம் திரும்பியவள் எதுவும் பதில் சொல்லாமல் அவனிடம் இருந்து கையை உருவியவள் நிதர்சனமான முகத்தோடு

அந்த இடத்தை விட்டு காலி செய்தாள். அவள் சென்ற திசையையே பார்த்து கொண்டு நின்றான் கண்ணன்.

இங்கே விஸ்வாவோ அகலியை சீண்டி கொண்டிருந்தான்

“குட்டிமா தலை வலி சரியாயிட்டி அப்படியே அந்த உடம்பு வலியையும் ,காய்ச்சலையும் சரி பண்ணிடு” என்று விசமமாக சிரிக்க

( நீ இப்படியே குடும்பம் பண்ணு விளங்கிடும்)

அது புரிந்தாள் இது நம் அகலி இல்லையே அவனிடம் “ம்ம்ம்ம் “என்றவள், தலைவலிக்கு தலையில முத்தம் கொடுத்தோம் உடம்பு வலிக்கு தனக்கு தானே பேசிக்கொண்டவள்.
“மாமா எங்கே வலிக்குது “என்றாள் அவன் தன் தலை முதல் கால்வரை தன் கைகளால் காட்டினான்.
அவன் முகத்தை இரு கைகளால் பிடித்துக்கொண்டவள் அவன் நெத்தி,கண்,காது, கன்னம் என்று தன் முத்திரையை பதித்துக்கொண்டே வர

அது அவனுக்கு பொக்கை வாய் உள்ள பல் இல்லாத அறு மாத குழந்தை முத்தம் கொடுக்கிறேன் பேர்வழி என்று முகத்தை எச்சில் பண்ணுமே அது போல் தான் இருந்தது..அதில் அவனின் அந்தரங்க உணர்வுகள் எதுவும் தூண்ட படவில்லை ,

மாறாக என்னவள் கள்ளம்,கபடம் இல்லாமல் தூய்மையானவள் என்றே தோன்ற “போதும் டா இப்ப வலி போய்டிச்சி “என்றவன்

அவளை தன் நெஞ்சோடு இறுக்க அணைத்துக்கொண்டான்,அவளும் சொகுசு பூனையாய் அவனின் பொசு பொசு மார்பு முடிகள் உரச அவனுக்குள் புதைந்து கொண்டாள்..

விஸ்வாவின் அருகில் அவளின் கவலைகள் துயரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது..ஒருவேளை விஸ்வாவிருக்கு அவளின் நிலை முன்னமே தெரிந்திருந்தாள் அப்பவே அவளுக்கு விமோச்சனம் கிடைத்திருக்குமோ என்னவோ..

அன்று மாலை விஸ்வாவின் வீட்டின் முன் உள்ள ஆற்று மணலில் ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டியபடி தன் கைகளால் மணலை நீள வாக்கில் குவித்து அதில் ஒரு சின்ன குச்சியை ஒழித்து வைத்து பக்கத்து வீட்டு குட்டி பெண்ணோடு விளையாடி கொண்டிருக்க அவள் விளையாடுவதை விஸ்வா நிறைவோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

கண்ணன் தன் தம்பி மனைவியை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான் தன் குழந்தை போல என்பதை தவிர வேறு ஒரு கோணத்தில் பார்க்க முடியவில்லை அவ்வளவு குழந்தைத்தனம் அவள் முகத்தில்..

இந்த குழந்தையை வைத்துக்கொண்டு தன் தம்பி எப்படி குடும்பம் நடத்த போகிறான் என்ற கவலையும் இல்லாமல் இல்லை
அவளை பார்த்துக்கொண்டே பார்வையை திருப்பியவனின் கண்ணில் வெறுமையாக அமர்ந்திருக்கும் ரீனா பட்டாள்.

அது அமைதியா ,சோகமா என்று அவனுக்கு தெரியவில்லை வந்ததிலிருந்து அவள் பேசிய வார்த்தைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அது அவள் பேசக்கூடாது என்பதை போல் அல்லாமல் பேசத் தெரியாத நிலையாகவே அவனுக்கு தெரிந்தது தனிமையின் கொடுமை அவனுக்கு தெரியுமே அவன் அனுபவித்த நரகம் ஆயிற்றே..

அவளை பார்க்கும் போதெல்லாம் தன்னை பார்ப்பதை போல் தான் அவனுக்கு தெரியும்..

அவள் ஒரு முறை சிரித்தால் அழகாக இருக்கும் என்று அவன் மனம் சொன்னது

( அந்த ஆணவ சிரிப்பை நீ பார்த்தே ஆகனுமா டா தம்பி வேண்டாம் அவள் பிளாஷ்பேக் கேட்ட நீ காலி...)
அவர்கள் அவர்கள் எண்ணத்தில் எல்லோரும் மூழ்கி இருக்க அங்கே ஒரு கார் நின்றது..

அதில் ராஜா ,சந்தோஷ், ஜனனி மூன்று பேரும் இறங்கினார்கள்...

சந்தோஷை பார்த்ததும் அவளின் சொந்த உணர்வு தோன்ற வேகமாக அவனை அருகில் சென்று பக்கவாட்டில் நின்று கொண்டு அவன் இடுப்பை பிடித்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..

கண்ணீரோடு அவளை தன் வலக்கையால் அவளை அணைத்துக்கொண்டான்.

அவன் இறங்கியதும் அவளை பார்த்துவிட்டான் உடல் முழுவதும் மண்ணோடு அவளின் வெள்ளை சட்டை முழுவதும் அழுக்கு கலரில் இருக்க

“இவள் என் தேனுகுட்டி , இரண்டு வருடமாக தொலைந்து போன என் குழந்தை, தொலைத்தவனாளையே கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டிருக்கிறாள்” என்ற நிறைவு தந்த கண்ணீர் அது.

நன்றி உணர்வோடு தன் நண்பனை பார்த்தான்.
அருகில் உள்ள ராஜாவை பார்த்து “ டேய் தம்பி எப்படி இருக்கு “ என்க

ரொம்ப நாட்களுக்கு பிறகு அவளின் தன்னை சீண்டும் அழைப்பு அவனுக்கும் கண்களில் கண்ணீரே “ உன்னை விட நான் ஒரு வயசு பெரியவன் டீ என்றான் குரலில் கரா கரப்புடன்

அவளும் “ சாந்தோஷிற்கு தம்பினா எனக்கு தம்பித்தான்” என்று எப்பொழுதும் சொல்லும் பதிலை சொல்லிக்கொண்டு சந்தோஷி அழைத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

சந்தோஷ்” தேனுகுட்டி நீ இன்னும் சின்ன புள்ளை இல்லை ,இந்த மாறி சின்ன புள்ளை விளையாட்டலாம் விளையாட கூடாது,அப்பறம் எப்பொழுதும் புடவை கட்ட முடியாலனாலும் சுடிதார் போட்டுகனும்,இந்த மாறி ட்ரெஸ்ல்லாம் போட கூடாது என்று பெண் வீட்டானாய் அவளுக்கு அறிவுரை வழங்கினான்.

திடிரென்று ஏன் இதெல்லாம் சொல்கிறான் என்று அவளின் குட்டி மூளை யோசிக்காமல் சந்தோஷ் சொன்னாள் அது சரியே என்ற மனநிலையில் பிறந்ததிலிருந்து இருந்தவள்

“ சரி சந்தோஷ்” என்றவள் உடனே உடை மாற்ற உள்ளே சென்றாள்

“ குட்டிமா எல்லோருக்கும் வேலைக்கார அக்காட சொல்லி குடிக்க எடுத்துட்டு வா” என்ற விஸ்வாவின் குரலில் “சரி மாமா” என்று சொல்லி உள்ளே சென்றாள்.
“ அவள் இஷ்டத்துக்கு இருக்கட்டும் அவளை இப்படி இரு அப்படி இருன்னு தொல்லை பண்ணதா டா,எனக்கு இவள்ட பிடிச்சதே இந்த குழந்தைதனம் தான்” என்றான்.

சந்தோஷ்” அது இல்லை டா மச்சான், கட்டிக்கிட்டு வந்த வீட்டில இப்படி இருக்குறது தப்பு அதான் “ என்றான்.

விஸ்வா “ அப்ப ஜனனி உங்க வீட்டுக்கு வந்தாலும் அவளை இப்படி எல்லாம் இருக்க சொல்லி கட்டாயப்படுத்துவியோ” என்றான் சற்று காட்டமாக

இந்த காரணத்தால் ஜனனியை தனக்கு திருமணம் செய்து கொடுக்காமல் போய் விடுவானோ என்ற எண்ணம் மட்டும் மனம் முழுவதும் ஆக்கிரமிக்க
தலையில் கைவைத்து நின்ற ஜனனியோ, “அண்ணா மாட்டிக்கிட்டானே “ என்ற முழித்துக்கொண்டு நிற்கும் ராஜாவையோ ,நமட்டு சிரிப்புடன் நிற்கும் கண்ணனையோ அவன் கவனிக்காமல்

சந்தோஷ்” இல்லை டா விச்சு,தக்காளி எங்க வீட்டில எப்படி வேணுன்னா இருக்கலாம், எங்க வீட்டில் யாரும் எதுவும்சொல்ல மாட்டாங்க,

அகலிய நான் இனி எதும் சொல்ல மாட்டேன் நீ எதும் விபரீதமா முடிவு எடுக்காத “ என்று மூச்சு விடாமல் சொன்னவன் எல்லோரும் தன்னை வித்யாசமாக பார்த்த பின்னே தான் உளரியது புரிய நாக்கை கடித்து கொண்டான்.

தான் சொல்லாமல் அவனுக்கு தெரிந்து விட்டதே என்று குற்ற உணர்வோடு தன் நண்பனை பார்க்க அவன் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட விஸ்வா அவனை அணைத்துக்கொண்டு

“உன்னை விட ஒரு நல்ல அடிமை என் தங்கச்சிக்கு தேடினாலும் கிடைக்க மாட்டான் டா, அதனால நீ என்னிடம் சொல்லனு வருத்த படாத,நான் உன் தேனுக்குட்டிக்கு பண்ணத விட இதெல்லாம் கம்மி தான்” என்றான் துயரம் அப்பிய குரலில்

அவனின் துயரத்தை கேட்டு தன்னை தெளிந்து கொண்ட சந்தோஷ்

” அதெல்லாம் இல்ல டா நான் உடனே உன்னிடம் வந்து பேசிருந்தா இவ்வளோ நாள் ஆகிருக்காது,என் மேலே தான் எல்லாம் தப்பும்” என்றான்.

உண்மையில் இந்த பிரச்சனைக்கு காரணம் ஆனவள் அவர்களின் இந்த பாசத்தை ஏதோ ஒரு புது உலகத்தை பார்ப்பது போல் பார்த்தாள்.

இது வரை அவளுக்கு இது மாதிரி ஒரு நிகழ்வு நடந்திருக்கா என்று யோசித்தால் அவளின் பதில் இல்லை என்றே இருந்தது.

தன் அண்ணன் இறந்த போது கூட தனக்கு அழுகை வர வில்லை ,மாறாக தன் கூட இருக்கும் ஒரு நபர் இனி இல்லை என்ற லேசான வருத்தம் மட்டுமே இருந்தது.

அதை நினைத்து இன்று பார்ப்பவளுக்கு கஷ்டமே “ சராசரி மனிதனுக்கு உள்ள சாதரண உணர்வுகள் கூட எனக்கு மறுக்கபட்டது ஏன் என்று குழம்பி போனாள்.

இப்பொழுதுதான் சந்தோஷ் ரீனாவை கவனித்தான்

ரீனாவை பற்றி அவனுக்கு நன்கு தெரியும் அவளின் குணம் என்றுமே அவனுக்கு பிடிக்காது.

இருந்தாலும் தனக்கு தெரிந்தவளை கண்டு அவனுக்கு முகம் திருப்பவும் மனம் இல்லாமல் “ ரீனா நீங்க என்ன இங்க , எப்படி இருக்கீங்க” என்றான்.

அவனின் கேள்விக்கு “ ம்ம் இருக்கேன்” என்ற பதிலோடு அவள் அங்கிருந்து சென்றுபவிட்டாள்.

அவளின் மாற்றம் அவன் கண்களிலும் தப்பாமல் விழுந்தது..

சந்தோஷ் விஸ்வாவை கேள்வியாக பார்க்க சொல்கிறேன் என்பதோடு நிறுத்திக்கொண்டான்.

ஜனனி சந்தோஷமாக தன் அண்ணனின் அருகில் வந்தவள் “ விச்சு உனக்கு எப்படி தெரியும் “ என்று கேட்டாள்.

விஸ்வா” நீங்க அன்னைக்கு ஹஸ்ப்பிட்டலில் முழிச்சு முழிலையே எனக்கு லேசா சந்தேகம் வந்தது, அதுக்கு அப்புறம் உன் பிரண்ட் நிம்மிட போன் பண்ணி கேட்டப்ப அவள் எல்லாத்தயும் சொல்லிட்டாள்.

அகலி பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்பறம் இதை பத்தி பேசிக்கலாம்னு நானும் விட்டுட்டேன்,அம்மா ,அப்பாட்ட எப்பவோ பெர்மிஷன் வாங்கியாச்சி,

அம்மா இனி என் பசங்களோட விருப்பம்தானு சொல்லிட்டாங்க ,ஆனால் அண்ணன் கல்யாணம் என் கல்யாணம் எல்லாம் அவசரகதில முடிஞ்சதால கொஞ்சம் நாள் ஆனாலும் ரொம்ப சிறப்பாக செய்யணும் என்று மட்டும் சொன்னார்கள் “ என்றான்

கல்யாணம் என்றதும் சந்தோசம் என்றாலும் எல்லோருடைய நினைவும் அகலியை நோக்கி செல்லவே அதை புரிந்து கொண்ட விஸ்வா “ குட்டிமா ட நான் பேசிக்கிறேன்” என்றான்.

அவர்களின் எண்ணத்தின் நாயகி சாக்கலேட் கலர்முழு கை சுடிதாரில் அவர்களை நோக்கி வந்து கொண்டிருக்க அவர்களின் பேச்சு தடைப்பட்டு போனது.

விஸ்வா சந்தோஷின் காதில் “ டேய் இப்ப பாரு உன் தேனுகுட்டி உன் பக்கத்துல வந்து உட்காருவா பாரு”, நீ வந்தா அவளுக்கு என் நியாபகமே வரவே வராது பாரு” என்க

அவன் வாக்கை காப்பாற்றுபவள் போல் அவள் சந்தோஷின் அருகே போக

விஸ்வா “ அம்மு இங்க என் பக்கத்துல வந்து உட்காரு டி, அவன் கருப்பு உனக்கு ஒட்டிக்க போகுது “என்றான் விளையாட்டாய் .

ஜனனி தன் அண்ணனை பார்த்து பொய்யாக முறைக்க அவன் சும்மா என்று கண்ணை காட்ட அவளும் சிரித்துக்கொண்டே எதுவும் சொல்லவில்லை.

அகலியும்” சரி “ என்று அவன் அருகில் சென்று அமர்ந்து அவன் காதில் மெதுவாக “ மாமா பக்கத்துல உடகார்ந்தலாம் கலர் ஒட்டிக்காது”,என்று ஏதோ அவனுக்கு தெரியாததை சொல்வது போல் கண்ணை உருட்டி உருட்டி சொல்ல

அவனும்” அப்படியா டி அய்யோ எனக்கு தெரியாதே” என்றான்.

எல்லோரும் அவர்களின் சிரிப்பை தொண்டைக்குள்ளையே முழுங்கினர்.

அதன் பின் வெளியில் சென்ற முருகனும் ,சுந்தரியும் வந்து எல்லோரும் சந்தோசத்துடனும் ,ரீனா சொல்ல முடியாத ,சொல்ல தெரியாத உணர்வுடன் இரவு உணவை முடித்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு எல்லாம் அவர்கள் அவர்கள் அறையில் நுழைய

அகலியும் , விஸ்வாவும் தங்கள் அறைக்கு சென்றனர்.

ஆம் அன்று விஸ்வா முத்தம் கொடுத்ததிலிருந்தது இருவரும் ஒரு அறையில் தான் தூங்குகிறார்கள்.

அதற்கு தான் தன் அன்னையிடம் போட்ட குட்டிக்காரணம் எல்லாம் நினைவு வந்து தானே சிரித்துக்கொண்டான்.
அவரும் கண்டிப்பான வார்த்தைகளை அவனுக்கு அறிவுரை சொல்லியே அதற்கு ஒத்துக்கொண்டார்.

இயல்பான பெண்களுக்கே உள்ள மறுப்பு,கூடாது என்ற உள்ளுணர்வு அகலிக்கும் வந்தது.
ஆனால் அவை எல்லாம் தன் மாமன் ,தன் வீர் என்ற நிலையில் பின்னுக்கு தள்ள தன் தாய் தந்தை,அப்பத்தா மாதிரி அவனும் தன் குடும்பம் என்று நினைத்து ஒத்துக்கொண்டாள்.

அவள் உள்ளே சென்றதும் கதவை மூடியவன் தன் இரு கைகளையும் அகல விரித்து “ குட்டிமா மாமாவை கட்டிக்கோ” என்றான்.

அவளும் சந்தோசமாக அவனை அணைத்துக்கொண்டு அவனின் நெஞ்சு வரை மட்டுமே இருப்பவள் அவன் இடுப்பை கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் தன் தாடையை வைத்து அண்ணாந்து அவன் முகத்தை பார்த்து கண்களை விடாமல் நான்கு சிமிட்டு சிமிட்டவும் அந்த அழகில் தன்னை தொலைத்தவன் அவள் கண்களில் இரு முத்தம் வைத்து அவளை இறுக்கி கொண்டான் இன்னும் நன்றாக

“குட்டிமா நான் உன்னிடம் ஒன்னு சொல்ல போறேன் அதுக்கு முன்னாடி மாமா எப்பொழுதும் உன் கூட இருப்பேன் ,உனக்கு சின்ன கஷ்டம்னா கூட நான் துடிச்சு போய்ட்டுவன்,எனக்கு நீ மட்டும்தான் எல்லாம் “ என்றான்.

“தெரியும்” என்றவள் அவனை நன்கு கட்டிக்கொண்டாள்

அவனும் அவளை பாதுகாப்பாக பிடித்துகொண்டு “ அம்மு ஜனனியும் , சந்தோசும் ஒருத்தவங்க ஒருத்தவங்களை விரும்புறாங்க , நம்ம வீட்டுல எல்லோருக்கும் ஓகே ,அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கணும் “ என்று

சொன்ன தாமதத்தில் அவள் உடல் ஒரு முறை நடுங்க அவளை இன்னும் இறுக்கி பிடித்துக்கொண்டான்

வருவாள்

மிளாணி



ஹாய் பிரண்ட்ஸ்
காதலன் நெக்ஸ்ட் ud போட்டுட்டேன்..படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..
தாமதத்திற்க்கு மன்னிக்கவும்..
Office வேலை வீட்டிலும் தொடர்வதால் தொடர்ந்து ud போட முடியவில்லை ...
ஒரு கதையே எழுத்துகிட்டு நீ போடுற சீன் தாங்கலை என்று நீங்கள் தலையில் அடித்து கொள்வது எனக்கு தெரிகிறது..
முடிந்த வரை சரியாக ud கொடுக்க முயற்சி செய்கிறேன்...

கடைசி பதிவிற்கு choo சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..
என்னை புரிந்து கொண்டு காத்திருந்த அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்

மிளா
அத்தியாயம் 18:

எனக்கே தெரியாமல் எனக்குள்ளே வந்தவனே....

கணக்கே தெரியாமல் காயங்கள் நூறு தந்தவனே...

ஏறெடுத்தும் நீ பார்க்காமல் என் ரத்தம் உறையுதடா....

என் நரம்பே என்னை இன்று கட்டிப்போட்டு சிரிக்குதடா.....

நான்கு அறையில் நான் மாட்டியே நாளுக்கு நாள் சாகுறேனே..

உன் அன்பில் நான் மாட்டியே உயிர் போக வேண்டுகிறேனே....

ஆசையோடு நான் உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும்..

அசையாமல் நீ நின்னு ஒத்துழைப்பு கொடுக்கணும்....

கூண்டுக்கிளியாய் இருந்த என்னை கவ்விப்போனாய் பூனையாய்...

சாகடித்தாலும் பரவாயில்லை கூட்டிப்போ கணவனாய்.....

விஸ்வாவின் வீட்டிற்கு வந்ததிலிருந்து அமைதியை கடன் வாங்கிக்கொண்டாள் ரீனா.

அப்படி இருக்க வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை ஆனால் அவளுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரியவில்லை.

அழுக்காகவே பிறந்து,அழுக்கிலையே வளர்ந்து அவள் செய்த பாவங்கள் ஒன்றா இரண்டா....?

இப்பொழுது கூட அவள் செய்த விஷயங்கள் சரியா தவறா என்று அவளுக்கு சொல்ல தெரியவில்லை...

அது சராசரி வாழும் பெண்களிலிருந்து,மனிதர்களிலிருந்து வித்யாசமாக இருந்திருக்கிறது,அடுத்தவர்களை நரகத்தில் தள்ளியிருக்கிறது,பலரின் கண்ணீருக்கு காரணமாக இருக்கிறது,பலரின் இறப்பிற்கு திறப்பு விழா செய்திருக்கிறது

அது மட்டுமே அவள் இப்பொழுது உணர்வது அதுவும் தனக்கு நடந்த அந்த நிகழ்விலிருந்துதான்.அதற்கு முன் அவள் மனநிலை தான் மிகவும் அதிருஷ்டசாலி தான் கேட்டது அனைத்தும் தனக்கு கிடைத்துவிடும்,எனக்கு விருப்பம் உள்ளதை நான் எடுத்துக்கொள்வேன், அதில் அடுத்தவர்களுடனான விருப்பம் ,வாழ்க்கை,எதுவும் அவளுக்கு தேவை இல்லை

தேவை இல்லை என்று சொல்வதை விட தெரியவில்லை என்றேதான் சொல்லவேண்டும்.

நியாயங்கள் ,அநியாயங்கள் எல்லாமே தான் வளர்க்க பட்ட விதம்,சூழ்நிலை , சுற்றி உள்ளவர்களை வைத்தே நம் மூலையியிலும் ,செயலிலும் வார்க்கப்படுகின்றன.

அதனால் தான் குழந்தைகள் முன் சண்டைபோடுவதையோ, கொச்சை வார்த்தைகள் பேசுவதையே நம் முன்னோர்கள் ஆதரிப்பது இல்லை.

மீன்,கோழி, ஆடு இன்னும் சில கடல் வாழ் உயிரினங்களை நாக்கை சுழற்றி வித விதமாக சமைத்து சாப்பிடும் நாம் மாட்டு கறி தின்பவர்களையும், வெளிநாடுகளில் பாம்பு கறி, பண்ணி கறி தின்பவர்களையும்,இன்னும் சில காட்டு பகுதிகளில் மனித மாமிசத்தை தின்பவர்களையும் அருவருப்பாகவும், கொடியவர்களாகவும் கொலைகாரர்களாக பார்ப்பது
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை..

இதில் வெஜ் பிரியர்களும் அடக்கம் அவர்களின் நியாயம் லெதர் ஷூ,லெதர் பேக் என்றும் ,ஆயிரம் தேனீக்களை அழித்து “நாங்கள் மலைத்தேன் தான் சாப்பிட்டுவோம் “ என்ற பெருமையிலும், பிரசவம் முடிந்து 4 நாட்களே ஆன பசுவின் காம்பை அது சிவக்கும் வரை கறந்து சுத்தமான பால்,சுத்தாமன நெய் என்று அவர்கள் சுத்தம் பேசுவதிலும் அநியாயங்களாக மாற்றப்படுகிறது..

நம்மை கடிக்கும் ஒரு கொசுவை கொன்றாலும் அதுவும் ஒரு உயிர் இழப்புதான்.....ஒரு மனிதனை கொன்றாலும் அது உயிர் இழப்புதான்

நல்லது,கெட்டது, சரி ,தவறு எல்லாம் நம் சாதகமான நிலை(comfortable zone) மற்றும் நமக்காக எழுதிக்கொண்ட ரூல் புக்கின் அடிப்படையில் இடத்தை பொறுத்து மாறுபடுகிறது.

அதே போல் அநீதியின் பக்கத்திலையே வளர்ந்த ரீனா இப்படி இருப்பது பெரிய ஆச்சரியம் இல்லை என்றே தோன்றுகிறது...

மகாபாரத போரின் பெரும் மனித இழப்பில் கண்ணனை பார்த்து ஒரு சாமானியன் “எதற்கு இவ்வளோ பெரிய போர் ,இவ்வளவு பெரிய மனித இழப்பு , நீயோ இயக்குபவனாய் இருக்கையில் “ என்று கோபமாக கேட்டானாம்.

அதற்கு கண்ணன் சிரித்துக்கொண்டே “ பூமியில் மனிதத் தொகை அதிகமாகி விட்டது இப்படி ஏதாவது போர் வைத்தால் தான் அதை குறைத்து சரி செய்ய முடியும்” என்றானாம்...

(என்ன ஒரு வில்லத்தனம் உனக்கும் ,சகுனிக்கும் பெரிய வித்தியாசம் இல்லைனு சரியதான் எல்லோரும் சொல்றாங்க)

கொஞ்சம் யோசித்து பாருங்கள் யாரும் சாகவில்லை ,எந்த உயிர்களும் சாகவில்லை நம் உலகின் நிலைமையை

இருக்க இடமில்லாமல் நிரம்பி வழிவதோடு மட்டும் இல்லாமல் எல்லாவற்றிலும் பற்றாக்குறை ஏற்படும்.

உலகில் எல்லோரும் வெஜ் மட்டும் சாப்பிட்டால் உலகின் உணவு பற்றாகுறையின் அளவும், மற்ற உயிர்களின் உற்பத்தியும் நினைக்கவே நம்மால் முடியவில்லை அது மட்டும் நடந்தால் ...?

அதனால் தான் ஆறு அறிவு உள்ள மனித இனத்தை அழிப்பதை கடவுள் வேலையாகவும், நம்மை விட குறைந்த அறிவுடைய மற்றவற்றை அழிக்க நம்மையும் படைத்திருக்கிறான் போல இறைவன் ....

அவரின் சேவகர்களாக முன் ஜென்ம கர்மாவின் அடிப்படையில் கே, ஆர்( ரீனாவின் அண்ணன்), ரீனா போன்றவர்களை படைத்து அவரின் தேவையோ, அல்ல அவர்களின் கர்மாவின் தண்டனை காலம் ஏதோ ஒன்று முடித்த பிறகு அவர்களை யாரோ ஒருவரை வைத்து அழிப்பதோ இல்லை ,அவர்களை திருந்த செய்யும் வேலையையும் செய்து விடுகிறார்.

( இப்ப என்னமா உனக்கு ....ரீனா கெட்டவளா இருக்குறதுக்கு, அவளோட சூழ்நிலையும்,ஏற?
 
Status
Not open for further replies.
Top