All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யா ஹேமந்த்குமாரின் "நிலவின் இளங்கதிரே" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

RamyaHemanthkumar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்
இது என்னோட முதல் கதை..கதையோட முதல் இரு அத்தியாயங்களை முடித்து விட்டேன்..மற்றவர்களையும் முடித்து விட்டு விரைவில் பதிவிடுகிறேன்..நன்றி
Thanks mam and friends..For your support
 

RamyaHemanthkumar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1 நிலவின் இளங்கதிரே

காலை இளங்கதிரே உன்னை காணாமல் தேயும் நிலவை ஓர் முறை பார்த்துவிடு
என் வாழ்வின் வர்ணங்களை அள்ளிதந்திடும் உன் கைகளை நான் பற்றும் நாள் வரை காத்திருப்பேன். இந்த தேயும் நிலவும் உன்னால் அன்று முழுநிலவாகி போகும்...

அந்த அதிகாலை வேளையில் கோவையின் மத்தியப்பகுதில் இருந்த அந்த சிறிய பங்களாவின் கேட் முன் நின்றது கதிரின் கார் எப்பொழுதும் போல தொடர் ஹாரன் சத்தத்துடன்.. தோட்டத்தில் நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த முனியன் அந்த சத்தத்தை கேட்டு அவசரமாக வந்து கதவை திறந்து வைத்தான்.
"என்னப்பா முனியா கேட்டை திறக்க இவ்வளவு நேரமா",
முனியன் "மன்னிச்சிடுங்கயா தோட்டத்தில் இருந்தேன். அதான் லேட் ஆகிடுச்சு " என்றான்.
"எப்பொழுதும் ஒரு சாக்கு வைத்துக்கொள், ஆமா நீ தோட்டத்தில் இருந்தால் கேட்டை யார் பார்த்துப்பா..அதுக்கு வேற ஒரு புது ஆள் போட்டுக்கலாமா.".என்று வெடிகுண்டை கொளுத்தி போட்டுவிட்டு காரை பார்க் செய்ய போய்விட்டான்..முனியனுக்கு திக்கென்று இருந்தது...அந்த அதிர்ச்சி களைய சிறிது நேரம் கூட பிடித்தது..மனதில் இவரு விளையாட்டுக்கு சொல்லுகிறாரா இல்ல நிஜமாவே புதுசா ஆள் போட்டுடுவரோ என்று ..கதிருக்கு அது சுலபம் தான். ஆனால் முனியனுக்கு அப்படி இல்லேயே. காவல் வேலை, தோட்ட வேலை என இரு சம்பளம் வாங்கும் அவனுக்கு திக்கென்று தான் இருந்தது..தோட்டவேலை இரண்டுமணி நேரம் மற்றநேரங்களில் காவல் வேலை என செய்து கொண்டிருந்தான்.. அந்த வேலை பறிபோனால் சம்பளம் பத்தாதே..மாதாமாதம் குடும்ப செலவுக்கு இந்த வேலை கண்டிப்பாக வேணும்... அதனால் எதற்கும் அம்மாவிடம் சொல்லிரலாம். அம்மா சொன்ன சின்னையா கேட்பார்..தன்வேலை நிரந்தரமாகிவிடும் என்ற நம்பிக்கையில் கேட்டை மூடிவிட்டு தோட்டத்திற்கு போய் விட்டான்..
காரை நிறுத்திவிட்டு வீட்டின் உள்ளே சென்ற கதிர் முதலில் பார்த்தது ஹாலில் சாய்ந்தபடி உறங்கும் தன் அன்னையை தான்..எப்பொழுதும் போல கடிந்தபடி அவரிடம் சென்றான்..அரவம் கேட்டு விழித்த அபிராமி
"வந்திட்டியப்பா " என்றார் கனிவுடன்.
மகனோ "என்னம்மா உடம்ப கெடுத்துட்டு இப்படி ஹாலிலே தூங்கிட்டு இருக்கீங்க. எத்தனை தடவை சொல்லறது எனக்காக வெய்ட் பண்ணாதீங்கன்னு" என்றான் கோபமாக.
"இல்லப்பா கதிர். உன்கிட்ட ஒரு விசயம் பேசனும்னு தான் நைட்டு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்..நீ வர லேட் ஆனதும் அப்படியே தூங்கிட்டேன் போல"..
இரண்டு வாரங்களாக மனதில் உருப்போட்டு நேற்றைய இரவு சொல்லலாம் என்று இருந்தால் மகனோ அதிகாலையில் வந்திருந்தான்...இவனிடம் இனி எப்படி அந்த விஷயத்தை ஆரம்பிப்பது...யோசனையில் இருந்தவரை கதிரின் குரல் நிகழ்வுக்கு கொண்டு வந்தது..
"என்னம்மா ஏதாவது முக்கியமானதா. ரொம்ப யோசனையாக இருக்குறீங்க"... என்றான்.
மகனின் முகத்தை பார்த்தார், இரவு முழுவதும் வேலை செய்த களைப்பு அதில் தெரிந்தது. அவனது குரலிலும் முகத்திலும் இருந்த களைப்பை பார்த்துவிட்டு,
"நீ பிரஷ் ஆகிட்டு வந்துடுப்பா அப்பறம் பேசிக்கலாம்".என்றார்
முக்கியமான விஷயம் ,களைப்புடன் இருப்பவனிடம் சொன்னால் கோபத்துடன்தான் பதில் வரும். கதிரோ,
"பரவாயில்ல சொல்லுங்கமா என்ன விசயம்"
என்றான்.
அவனுக்கு தெரிந்து அம்மா இவ்வளவு பீடிகை போடுபவர் அல்ல எந்த விசயத்தையும் நேருக்கு நேர் சொல்லி விடுவார்..ஆனால் அபிரமியோ மகன் பொறுமையாக கேட்க வேண்டும் அப்போதுதான் தான் நினைத்தது நடக்கும் என நினைத்துக்கொண்டார்..ஆகவே மகனிடம்," நீ போய் பிரஷ் ஆகிட்டு வா கதிர் அப்புறம் சொல்லறேன்" என உறுதியுடன் முடித்துவிட்டு தன் அறைக்கு சென்று விட்டார்...குழப்பத்துடன் இருந்த கதிரோ நேரே சென்றது பிருத்வியின் அறைக்கு... பிருத்வி இளங்கதிரின் நான்கு வயது இளவரசன்... தூக்கத்தில் சிரித்த மகனின் முகத்தை பார்த்தபோது, ஓய்வில்லாமல் இரவு முழுவதும் வேலை செய்த களைப்பு காணாமல் போனது..மகனின் தலையை மென்மையாக வருடிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்..அபிராமி குளித்துவிட்டு பூஜை அறையில் இருந்து வெளியே வரவும் அலுவலகம் செல்ல தயாராகி கதிர் கீழே வரவும் சரியாக இருந்தது..மாநிறத்தில் சற்று உயரமாக அதற்கேற்ற எடையுடன் தன் கணவன் ஆதீஸ்வரனின் சாயலுடன் வந்தவனை பார்த்தார்..முப்பது வயதில் இருந்தவனை மனைவியை இழந்த நான்கு வயது குழந்தைக்கு தகப்பன் என்று சொல்லி விட முடியாது...அப்படி இருந்தான் கதிர்...தன் இருபது வயதில் தந்தையை இழந்து அவரின் தொழிலை காக்க வேண்டி கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்..அந்த உழைப்பு ஐந்து வருடத்தில் முன்னேற்றி விட அதற்கடுத்த வருடம் சுப லேகா உடன் காதல் திருமணம் ..என அனைத்தும் நல்ல முறையில் நடைபெற்றது... யார் கண் பட்டதோ பிருத்விக்கு உயிர் கொடுத்து விட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டாள் சுபா. சுபா லேகா அழகான பெண்..ஒல்லியான உடல்வாகு...அவளது நீண்ட கண்களின் ஓரத்தில் புன்னகை ஒட்டிக்கொண்டு இருக்கும்.கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தி.. ஆனால் மருமகளாக இல்லாமல் மகளாகவே இருந்தாள்...அதனாலயே பிரசவத்தின் இறுதி நாட்களில் அவளின் மாற்றத்தை கணிக்க முடிந்தது... அவளது மனதில் ஏதோ ஒரு வலி இருப்பதை அறிந்து கொண்டு அவளிடம் கேட்டார்... ஆனால் பதில் தான் கிடைக்கவில்லை... பிருத்வி பிறந்த ஒரே மாதத்தில் சுபா இறந்து விட்டாள்... கதிருக்கும் ஒன்றும் தெரியாது... காரணம் தெரியாத மரணத்தில் துயரத்தின் உச்சிக்கு சென்றவன் தன் மகனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனது முகத்தில் மென்மை, சிரிப்பு இவை இரண்டுமே தாயையும் மகனையும் பார்க்கும் போது மட்டுமே.. மற்றவர்க்கு கடுமையான முகம் மட்டுமே..தாயை பார்த்து புன்னகை ஒன்றை சிந்திவிட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தான்...தட்டை வைத்து பரிமாறிய அவரிடம் சாப்பிட்டுகொண்டே,
"இப்போ சொல்லுங்கமா, என்ன விஷயம்"
"நீ சாப்பிடுப்பா நான் அப்புறம் சொல்லறேன்"
"ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு மா, நேரமாக போகணும், so இப்போவே சொல்லுங்க" என்றான் சாப்பிட்டுக்கொண்டே. பெருமூச்சை இழுத்து விட்டு, அபிராமி சொல்லத் துவங்கினார்,"நீ குன்னூர் போகணும் கதிர் "
"அம்மம்ம்மா" கிட்டத்தட்ட கத்தினான்.. கிச்சனில் வேலை செய்து கொண்டிருந்த அன்னமும் தோட்டத்தில் இருந்த முனியனும் சத்தத்தை கேட்டு ஓடி வந்தனர்..ஓடி வந்த இருவரையும் மௌனமாக இருந்த அன்னையையும் பார்த்து விட்டு, வந்தவர்களிடம் திரும்பி ,"ரெண்டு பேரும் போய் வேலையை பாருங்க" என்று விரட்டினான்..பிருத்வி அப்போது அவன் ரூமில் விளையாடிக்கொண்டிருந்ததால்அவனுக்கு கேட்கவில்லை... அதனால் அம்மாவிடம் திரும்பி,"மன்னிச்சுக்கோங்கம்மா ..கோபத்தில் கத்திட்டேன். என்னால அங்க போக முடியாது.. ஏன்னு உங்களுக்கே தெரியும்"...சற்று கோபத்தை தளர்த்தி தன்னிலை விளக்கத்துடன் முடித்தான்.. ஆனால் அபிராமி,"நீ போகத்தான் வேணும் கதிர். சுபாவுடைய தங்கைக்கு கல்யாணமாம். நீயும் பிரித்வியும் அதற்கு போகணும்..அம்மா சொல் பேச்சு கேளுப்பா"..
"நானே போகமாட்டேன்னு சொல்லறேன். இதுல ப்ரித்வியையும் கூட கூட்டிட்டு போக சொல்லரீங்க,".. மூக்கில் மீண்டும் கோபம் ஒட்டிக்கொண்டது.
அபிரமியோ, உன் கோபத்தை கண்டு நான் அலருவெனா என்று நினைத்து க்கொண்டு ,"நீயும் ப்ரித்வியும் நாளைக்கே குன்னூர் கிளம்புறீங்க.. நான் அவங்களுக்கு வாக்கு கொடுத்து இருக்கேன்..அவங்க பேரனை பார்க்கவும் கொஞ்சவும் அவங்களுக்கு உரிமை இருக்கு கதிர்..இத்தனை நாள் நீ அவங்களை அலட்சியப்படுத்தினத்துக்கு இந்த ஒரு வாரம் அவங்களுக்கு நிம்மதிய கொடுத்திட்டு வா கதிர்..சுந்தரம் அண்ணா (அவர் தாங்க சுப லேகாவோட அப்பா) ரொம்ப கஷ்டத்தில் இருக்காரு கதிர். போய் அவங்களோட ஆசையை நிறைவேத்து"..
அம்மா முடிவு எடுத்து விட்டார் இனி மாற்றம் கிடையாது.. அவங்களை கோபிக்கவும் முடியாது.. ஆனால்,"எல்லாம் ok தான் அம்மா. ஆனால் நான் சுபாவுக்கு கொடுத்த முதல் வாக்கு ..அங்க போகவே கூடாதுங்கிறதுதானே அம்மா" ..தனிவுடனே சொன்னான்.
அபிரமிக்கு கோபம் வந்து விட்டது.."அப்படீன்னா உயிரோட இருக்குற நான் கொடுத்த வாக்கை விட உன் மனைவிக்கு நீ கொடுத்தது தான் உனக்கு முக்கியம் இல்லயாப்பா...போதும்ப்பா. இனி எப்போதும் என்னோடு பேசாதே ஆனால் சுபாவின் இறுதி ஆசையும் அதுதானே.. சந்தர்ப்பம் அமையும் போது நீ போகவேண்டும் என்பது.. அதையும் நியாபகம் வைத்து யோசிப்பா"...கோபத்தில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்து உள்ளே சென்று விட்டார்...கதிருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. திருமணத்தன்று சுபா வாங்கிய சத்தியம் நியாபகம் வந்தது..சுபாவுக்கு பிடிவாதம் ஜாஸ்தி. தன்னுடைய பிடிவத்தால் எதையும் சாதித்து கொள்வாள்..பிடிவாதமாக திருமணத்திற்கு பிறகு குன்னூர் செல்வதை தவிர்த்தாள்.. ஏன் என்று கேட்டால் காரணம் சொல்லவும் மாட்டாள்..பிறகு தானும் செல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டாள். அப்போதுதான் கதிருக்கு இன்னொன்றும் நியாபகம் வந்தது.. சுபா இறக்கும் தருவாயில் கடைசி நிமிடங்களில் கதிரிடம்,
" நீங்க எனக்கு ஒரு ப்ரோமிஸ் பண்ணனும் கதிர்"
பதட்டத்துடன்,"என்ன சுபா சொல்லு"
"ஊரிலுள்ள என்னோட தங்கைக்கு இந்த லெட்டர கொடுத்துடுங்க...நீங்க அங்க போகுற சூழ்நிலை வந்தால் மட்டும் கொடுங்க.. இல்லேன்னா வேண்டாம்.. ஆனால் எந்த சூழ்நிலைலயும் சந்திரா படிக்காமல் நீங்க இந்த லெட்டர படிக்கக்கூடாது"..
"சந்திராவா ஆனால் உன்னோட சிஸ்டர் பேரு சூர்யா தானே" என்றான் குழப்பத்துடன். சுபாவின் குடும்பபின்னணி கதிருக்கு அவ்வளவாக தெரியாது என்பது மட்டுமே உண்மை.. ஊட்டியில் அவளை முதன்முதலாக பார்த்ததும் பிடித்திருந்தது.. அவளையே பின்தொடர்ந்து பார்த்ததில் அவள் கோவையில் கல்லூரியில் படிப்பது தெரிந்தது..தினமும் அவளுக்கு பாடிகார்டு வேலை பார்த்ததில் கிடைத்த ஒரே தகவல் அவள் ஊர் குன்னூர் என்பது மட்டுமே.. மற்றபடி அவள் பெயரை கூட சேகரிக்க முடியவில்லை...பிறகு அந்த ஊரில் தேடுதல் வேட்டை ஆரம்பித்து ஒரு வழியாக ஒரு சில விஷயங்களை தெரிந்து கொண்டான்..அவனுக்கு தெரிந்த வரையில் சுபாவின் அம்மா சுபாவின் பத்து வயதில் காய்ச்சல் வந்து இறந்திருந்தார்.. அப்பா சுந்தரம் மெக்கானிக்.. தங்கை சூர்யா லேகா அப்போதுதான் கல்லூரி முதலாம் ஆண்டு..அவன் சேகரித்த தகவல்கள் அவ்வளவே...இறுதியில் அம்மாவுடன் பெண் கேட்க போய் விட்டான்..பிறகு திருமணம் நடந்தது.. .... இப்போது இங்கே நிற்கிறான்...
பெருமூச்சொன்றை இழுத்து விட்டு சுபா பேசினாள்.
"இல்லேங்க சூர்யா என்னோட மூன்றாவது தங்கை..சந்திராவும் நானும் ட்வின்ஸ்"
"அப்படியா ஆனால்"...கதிர் ஏன் இதுவரை சொல்லவில்லை என்று கேட்க நினைத்தான்..ஆனால் சுபாவோ,
" பிளீஸ் இதுக்கு மேல கேட்காதீங்க...அங்க போகுற சூழ்நிலை வந்தால் மட்டும் லெட்டர குடுங்க..போதும்"..அதற்கு மேல் அவன் கேட்கவில்லை...அவளால் மூச்சு சீராக விட முடியவில்லை... கதிர் பதட்டத்துடன்,
"சரிம்மா நான் குடுத்துடறேன்.. பிளீஸ் நீ ஸ்டரைன் பண்ணிக்காத"..
"ம்ம்ம்..என்னங்க"
"என்னம்மா சொல்லு"
"I love you"
"Me too"
" என்ன எப்போவுமே தப்பா நினைக்கமாடீங்கல்ல"
கண்ணீருடன், "மாட்டேன்மா, you are my love.. and you are my life.."
அதுவே அவள் கேட்ட கடைசி வார்த்தைகள்.. கண்களில் கண்ணீருடன் உதட்டில் சிறு புன்னகையுடன் அவள் உயிர் பிரிந்திருந்தது...அதன் பிறகு கதிர் சுபாவின் வீட்டினர் பற்றி நினைக்கவே இல்லை.. ஆனால் இப்பொழுது தன் கடமையை செய்யும் நேரம் வந்து விட்டது .
வேறு வழி இல்லாததால் அம்மாவுக்காக போகலாம் கூடவே அந்த லெட்டரையும் குடுத்து விடலாம் என்று முடிவெடுத்தான்...ஆனால் சுபாவுடைய எந்த தங்கைக்கு திருமணம் அம்மாவிடம் கேட்க மறந்துட்டேனே..ஊருக்கு போறேன்னு முடிவு பண்ணினது அம்மாகிட்ட சொல்லணும்.. அம்மாவை தேடி அவங்க ரூமுக்கு போனான்..
கதவை தட்டிவிட்டு, அம்மாவை பார்த்தான்.. அபிராமி சாயும் நாற்காலியில் உட்கார்ந்து ஜன்னலை பார்த்துக்கொண்டிருந்தார்..இவர் இன்னும் சிறுபிள்ளை தான் என்று நினைத்துக்கொண்டு , அம்மா என்று அழைத்தான்.
அவன் அழைப்பை கேட்டு திரும்பியவர்,
"என்ன கதிர்?'
"நாங்க கல்யாணத்துக்கு போறோம் ok வா"
அபிராமி புன்னகைத்தார். அவருக்கு தெரியும் மகன் இந்த முடிவைத்தான் எடுப்பான் என்று.
"சரி போயிட்டுவாங்க "
"அம்மா சுபாவுடைய எந்த தங்கைக்கு கல்யாணம்?"
"சூர்யாக்கு கதிர்"
"அப்படினா அந்த பெண் சந்திராக்கு திருமணம் முடிந்துவிட்டதா..நம்மையெல்லாம் கூப்பிட்டதாக நினைவில்லையே"..
அபிராமி,'கதிரிடம் இப்போது எதுவும் சொல்லவேண்டாம்' என நினைத்து கொண்டு,
"நீ அங்க போனால் தெரியப்போகுது... அப்புறம் கதிர் நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு காலைலயே நேரமா கிளம்பிடுங்க அப்போது தான் சரியாக இருக்கும்.. நான் அவங்களுக்கு போன் பண்ணி சொல்லிடறேன்..சரியாப்பா" என்றார்..
வெள்ளிக்கிழமை கல்யாணத்துக்கு இந்த ஞாயத்துக்கிழமையே போக சொல்லுகிறார்.. மீண்டும் ஏதாவது சொன்னால் அம்மா கோபித்துத்துக்கொள்ளக் கூடும்.. அதனால்,
"சரிங்கம்மா..அப்போ நான் ஆபீஸ் போய் கொஞ்சம் ஒர்க் இருக்கு முடிச்சிட்டு வந்துடறேன்..லேட் ஆகும்.. எங்க ரெண்டு பேருக்கும் ட்ரெஸ் மட்டும் பேக் பண்ணிடறீங்களா மா"
"சரிப்பா நீ போய்ட்டு வா"
கதிர் ஆபீஸ் கிளம்பிவிட்டான்.. அபிராமி போன் செய்து சுந்தரத்துக்கு தகவல் சொன்னார்..மறுநாள் இருவரும் அபிராமியிடம் சொல்லிவிட்டு கிளம்ப வந்தனர்...
"அம்மா நாங்க கல்யாணத்துக்கு போய்ட்டுவறோம்..ok வா.."
"ஹ்ம்ம் போட்டுவாங்கப்பா"...
அபிராமி திருமணத்திற்கு முதல் நாள் வருவதாக சொல்லியதால் கதிரும் பிருத்வியும் சென்றனர்..
 

RamyaHemanthkumar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேற்றைய என் நினைவுகளை நீ மறக்கலாம். என்னால் மறக்கமுடியமா
உன்னை விட்டு விலக என்னால் முடியும் என் மனதால் முடியுமா..



பெங்களூரில் ஞாயிறு காலை டீபாயின் மேல் இருந்த போன் அலறியது.. இரவு முழுவதும் தூங்காமல் விடிகின்றவேலையே தூக்கம் வந்தது சந்தராவுக்கு..மெல்ல கண்களை பிரித்து பார்த்தாள் முடியவில்லை .அதனால் கைகளினாலயே போனை துழாவி எடுத்தாள். அழைத்தது யார் என பார்த்தாள்..போன் ஸ்க்ரீனில் அப்பா என்று இருந்தது... சட்டென எழுந்து உட்கார்ந்து விட்டாள்.. இவரு எதுக்கு இப்போ கால் பண்ணறாரு... நேற்று இரவு தான் அவருடன் சண்டையிட்டு கல்யாணத்துக்கு வர முடியாது என்று கூறியிருந்தாள்... இப்போது மறுபடியும் கால் பண்ணுகிறார் என்றால் ஏதாவது பிரச்னையோ...

ஸ்க்ரீனில் உள்ள பச்சை பொத்தானை அழுத்தி,
"ஹலோ சொல்லுங்கப்பா, காலைலயே போன் பண்ணி இருக்கீங்க ஏதாவது பிரச்சனையா?"என்றாள் பதட்டத்துடன்.. அவரோ,
"கல்யாணத்துக்கு நீ நிஜமாவே வரலையா சந்திரா"என்றார்... மறுபடியும் காலங்காத்தலையே ஒரு சண்டையை ஆரம்பிக்கணுமா என்றிருந்தது அவளுக்கு... நேற்றைய பேச்சுக்கே இராத்தூக்கம் போனது... இப்போ பகலிலுமா.. சலிப்புடன்,
"இல்லைங்கப்பா அங்க வந்தா எல்லாரும் கேள்வியா கேட்பாங்க... சூர்யாக்கு ஏதாவது பிரச்னை வரலாம் so நான் வரலங்கப்பா"
"..."
"அப்பா"மீண்டும் அழைத்தாள்.
"..."
இருமுறை அழைத்தும் எதிர்முனையில் பதில் இல்லை...கொஞ்சம் சத்தத்துடன்
"அப்பா லைனில் இருக்கீங்களா" என்றாள்.

பெருமூச்சு ஒன்று வந்தது... சலிப்புடன்
"இருக்கேன்மா.. இன்னும் நான் உயிருடன் தான் இருக்கேன்.. இந்த ஐந்து வருஷங்களில் நீயும் இங்க வரல எங்களையும் வரவேணாம்னு சொல்லிட்டே.. இந்த கல்யாணத்துக்காவது வருவேனு நினைச்சேன்.. அதுவும் முடியாதுன்னு சொல்லிட்டே..எனக்கு இப்போவெல்லாம் உடம்பு முன்ன மாதிரி இல்லமா..மனசும் விட்டுப்போச்சு.. தூரத்தில உன்ன தள்ளி வெய்ச்சலாதல அப்பாக்கு உன்மேல பாசமே இல்லேன்னு நினைச்சுட்டியாம்மா..உன்ன. உன்ன ஒரு தடவ பார்க்கணும் போல இருக்குமா..தயவுசெய்ஞ்சு ஒரு தடவ மட்டும் வந்துட்டு போ..அதுக்கப்பறம் உன்ன நான் தொந்தரவு செய்யமாட்டேன்.. இன்னும் ஐந்து நாளில் கல்யாணம்... இந்த ஐந்து நாள் மட்டும் என்கூட இருமா..அதுக்கப்புறம் உன் விருப்பம்...நான் போனை வெய்ச்சுடறேன் சந்திரா"..
சந்திரா பதில் பேசும் முன் அழைப்பு துண்டிக்கப்பட்டது....

சந்தராவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..
இத்தனை வருடங்களில் எதையும் மறக்கவும் இல்லை மறக்கமுடியவும் இல்லை..மறக்க நினைத்தால் அதுவே முதலில் வந்து நிற்கும்.. இன்னைக்கு எந்த நினைவும் என்னை தொந்தரவு செய்து என நினைத்தால் அன்றைக்கு ஏதோ ஒன்று நிகழ அந்த விஷயம் எதையோ நியாபகப்படுத்த கடைசியில் ஒன்றன்பின் ஒன்றாக லைன் கட்டி நியாபகத்திற்கு வரும்...

சுந்தரத்திற்கும் மாலதிக்கும் பெரியோரால் நிச்சயக்கப்பட்டே திருமணம் நடந்திருந்தது..முதல் வருடம் இரட்டையரான சுப லேகா சந்திர லேகா வை பெற்றெடுத்த மாலதி, அடுத்த வருடம் சூர்யா லேகாவையும் பெற்றெடுத்தாள்..முதல் பிரசவமே சிரமமாக இருக்க இரண்டாவது பிரசவம் அதைவிட சிரமமாக இருந்தது..இயற்கையான உடல் பலகீனம் இரண்டு பிரசவங்களில் மேலும் அவளை பலகீனம் செய்து இருந்தது....சுந்தரத்தாலும் மூன்று குழந்தைகளையும் ஒருசேர பார்த்துக்கொள்ள முடியாமல் போக சுந்தரத்தின் தங்கை கமலா சந்திராவை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்..சந்திராவுக்கும் சுபாவுக்கு அப்போது ஆறு வயது தான் இருக்கும்..சுபாவும் சூர்யாவும் ஒரே மாதிரி தன்னைப்போல பிடிவாதம் ஜாஸ்தி ஆனால் சந்திரா மாலதி போல மென்மையான குணம்.. அதிர்ந்து கூட பேசாதவள்....அதனாலயே சந்திராவை கமலாவிடம் ஒப்படைத்தார் சுந்தரம்..மற்ற இருவரையும் கமலாவால் சமாளிக்க முடியாது என அவர் நினைத்தார்.. ஆனால் அது பெரும் தவறு என பின்னரே தெரிந்தது...ஒருவேளை சந்திரா இங்கே வளர்த்திருந்தால் ஓரளவு சூர்யாவை சமாளிக்க முடிந்திருக்கும்.. கமலாவின் வளர்ப்பு சுபாவையும் மாற்றி இருக்கும்..ஆனால் அது காலம் கடந்த யோசனை.. அதன்பிறகு திடீர் காய்ச்சல் வந்து மாலதியை உயிரிழக்க செய்தது..கமலாவும் சந்திராவும் பெங்களூருக்கு சென்றனர்..கமலா வங்கி பணியில் இருந்தார்..இறந்துபோன தன் காதலனை நினைத்து வேறு கல்யாணமும் செய்துகொள்ளவில்லை...அவரை கேட்டால் தன் காதலன் தன் கணவன் என்பார்..சுந்தரமும் மேற்கொண்டு அவரை வற்புறுதவில்லை...

கமலா வங்கிக்கும் சந்திரா முதலில் ஸ்கூல் பிறகு கல்லூரி என அவர்கள் வாழ்வு தெளிந்த நீரோடை போல போய்க்கொண்டு இருந்தது..குன்னூரிலிருந்து வந்ததிலிருந்து சந்திரா கமலாவின் மகளாகவே வளர்ந்து வந்தாள். அவளும் சின்ன பெண் தானே படிப்பு பாட்டு பரதம் அதை விட்டால் கமலம்மா தன் தோழி தர்ஷினி என சிறிய வட்டத்துக்குள் இருந்தாள். சுந்தரம் முதலில் அடிக்கடி போன் செய்து பேசியவர் ,அவரது வேலை பழுவால் அடுத்து வந்த நாட்களில் அவரால் பேச முடியாது இருந்தது.. அதனால் தந்தையை மறந்து கமலம்மாவே உறவென ஆகிப்போனது சந்திராவுக்கு..அடுத்த பல வருடங்களில்
பழைய நினைவுகள் அவளுக்கு மறந்தே போய் இருந்தது....கமலாவும் நியாபக படுத்த விரும்பவில்லை..

அவர்களின் அமைதியான வாழ்க்கை எல்லாம் சந்திரா கல்லூரியின் கடைசி வருடம் வரையில் மட்டுமே...பிறகு அடித்த புயலில் சிக்கிக்கொண்ட சந்திராவை எவராலும் மீட்க முடியவில்லை...
அன்று மட்டும் கமலாம்மா பேச்சை கேட்டு இருந்தால் இன்று இவ்வளவு துன்பம் இல்லை என பல சமயம் சந்திரா நினைத்ததுண்டு..

கல்லூரியின் இறுதி வருடத்தில் ஊட்டிக்கு ப்ராஜக்ட்டுக்காக செல்ல வேண்டி இருந்தது..அதற்காக கமலாவிடம் கேட்க அவரது அறைக்கு சென்றாள்... சந்திராவின் நீண்ட நாள் கனவு ப்ராஜக்ட் அது..அதற்காக ஊட்டி செல்ல அனுமதி கிடைக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், ..கமலா அப்போது ஏதோ புக் படித்துக்கொண்டிருந்தார்..அவரை பின்னால் இருந்து கட்டிக்கொண்டு, செல்லம் கொஞ்சினாள்.

மகளை கண்டு கொண்டவர்,
"பூனைக்குட்டிக்கு என்ன வேணும் என்ன செல்லம் கொஞ்சுது"..என கேட்டார்.
சந்திரா அவர் அருகில் உட்கார்ந்து கொண்டு ,"பூனைக்குட்டிக்கு கமலாம்மாகிட்ட ஒரு பர்மிஸ்ஸன் வாங்கணும் "
"அதுதானே பார்த்தேன்..என்ன பெர்மிசின் வேணும் "
அவர் முகத்தை பார்த்துக்கொண்டே,
"ப்ரொஜக்ட் செய்யணும்மா" என்றாள்
"செய்யேன். அதுக்கு என்ன ?நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா "
"இல்லம்மா "
"வேர என்ன வேணும்"
கண்களை மூடிக்கொண்டு, "ஊட்டி போகணும் அதுக்கு நீங்க அனுமதி கொடுத்தாலே போதும்". என சொல்லி முடித்தவள் கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
ஆனால் கமலாவிடம் எந்த பதிலும் இல்லாமல் போகவே கண்களை திறந்து பார்த்தவள் அம்மாவின் யோசனையான முகத்தை பார்த்து ஏதும் கேட்காமல் மௌனித்து விட்டாள்.

கமலாவோ சந்திராவிடம் உண்மையை கூறிவிடலமா, அவளுக்கு அங்கு ஒரு குடும்பம் இருப்பதை ,கூறினால் மகள் தன்னை பிரிந்து சென்று விடுவாளோ என்று பல சிந்தனைகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது..
கமலாவின் தோள்பட்டையை உலுக்கி அம்மா என்று கூறினாள். மகளின் குரலில் இயல்புக்கு வந்தவர்," சந்திரா நீ எங்கேயும் போக வேணாம் இங்கேயே ப்ரொஜக்ட் செய்" என்று தடுக்கப்பார்த்தார் .
மகளோ,
"அம்மா ப்ளீஸ் நான் உங்க ஒரே பொண்ணு, செல்ல பொண்ணு தானே ப்ளீஸ் பெர்மிசின் குடுங்க" என்றாள்.
மகளின் கெஞ்சலை பார்த்தவர், ஒரு முடிவுக்கு வந்தார்.
அது மகளின் பழைய வாழ்க்கையை அவளிடம் சொல்லி விடுவது என்று.. அவர் சொல்லவில்லை என்றாலும் கொங்கு மண்டலத்து வாசமும் அங்கு இருக்கும் சொந்தங்களும் அவளுக்கு பழைய நினைவுகளை நியாபகப்படுத்திவிடாதா..அது அவளது வாழ்வில் குழப்பங்களை ஏற்படுத்தும்...முன்னெச்சரிக்கையாக தானே சொல்வதுதான் சரி என கமலா முடிவெடுத்தார்.

சந்திரா அம்மா முகத்தில் ஏற்படும் மாறுதல்களை கவனித்தவாறு இருந்தாள் .அப்போது கமலா பேச துவங்கினார்..

"சந்திராம்மா"

"ஹ்ம்ம் சொல்லுங்கம்மா"

"நான் நீ போக அனுமதி தரேன் அதற்கு முன் ஒரு சில விஷயங்கள் உன்கிட்ட சொல்லணும்" என்றார்

சந்தோசத்தில் அவரை கட்டிக்கொண்டு,
"தன்க்ஸ்"
கமலம்மா என்றாள்....
சந்திராவிற்கு அனுமதி கிடைத்த சந்தோசம் அவளது முகத்தில் தெரிந்தது..

அவளை கூர்மையாக ஒரு முறை பார்த்துவிட்டு அவளை விலக்கிவிட்டு ஜன்னல் அருகில் வந்து நின்று கொண்டு, வெளிப்புறத்தை பார்த்தபடியே பேச ஆரம்பித்தார்..

"சந்திரா நீ என் அண்ணன் மகள் அப்டிங்கறது தெரியும் தானே.."

"தெரியும் கமலாம்மா அதை ஏன் இப்போ சொல்லறீங்க.. "

சந்திராவுக்கு தெரிந்து இருந்தது.. முக்கியமான பார்ம்களில் அப்பா பேர் எழுதும்போதெல்லாம் அவளுக்கு அவர்களின் நியாபகம் வரத்தான் செய்யும்.. ஆனால் கமலாவின் அருகாமை சந்திராவுக்கு அவர்கள் பற்றிய நினைப்பை மறக்க செய்துவிடும்... அதனாலேயே தனக்கு விருப்பமான ப்ரொஜக்ட் செய்யவேண்டிய இடம் ஊட்டி எனும் போது எதையும் சமாளித்து விடலாம் என்று நினைத்தாள்.. அதையே அம்மாவிடமும் கூறினாள்..

ஆனால் கமலாவோ,
"நீ ப்ரொஜக்டக்கு போகுர இடத்துல உனக்கு குழப்பங்கள் வரலாம்..உன்னால அவங்க லைஃப்ல பிரச்சனை வரத நான் விரும்பல சந்திரா..அதனால தான் சொல்லறேன்.. நீ அங்க போக வேணாம்"..என தீர்மானமாக சொன்னார்

ஆனால் மகளோ முதலில் அனுமதி தந்தவர் இப்போது மறுக்கும் காரணத்தை நினைத்து சிரித்துவிட்டு,

"அம்மா நான் ஏதோ தப்பு செய்ஞ்சுட்டு இங்க ஓடியா வந்துட்டேன்.. அப்பா தானே என்ன இங்க உங்ககூட இருக்கச்சொல்லி
அனுப்பிச்சு வெய்ச்சாரு.. அதுக்கப்பறம் நான் அங்க போறதுக்கு எதுக்கு பயப்படனும்.. நான் போறது அவங்க வாழ்க்கைகல எப்படி பிரச்சனை ஏற்படுத்தும்.. நான் அவங்களோட மகள் தானே அவரோட மகள்களோட சகோதரி தானே நான் அவங்களுக்கு பிரச்சனை பண்ணுவேணா.. நான் உங்க வளர்ப்பு அம்மா..என்ன பத்தி உங்களுக்கு தானே தெரியும்... நான் எப்படிமா தப்பு பண்ணுவேன்.. அதுமட்டும் இல்லம்மா நான் அவங்க வீட்டுக்கெல்லாம் போகிறதா இல்லம்மா.. தர்சினியோட கெஸ்ட் ஹவுஸ் அங்க இருக்கு.. அங்கதான் தங்கறதா முடிவு பண்ணியிருக்கோம்..."

"ஓ இதுல அவளும் கூட்டா.."

"கூட்டோ பொறியலோ நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே செய்வோம் தனியாவெல்லாம் செய்ய மாட்டோம்."

சந்திராவின் தோழி தர்சினியை கமலாவிற்கு நன்றாகவே தெரியும்.. இருவரும் பள்ளி தோழிகள்..கல்லூரியிலும் இணைப்பிரியது ஒரே பாடம் எடுத்து தங்கள் தோழமையை வளர்த்து வருகிறார்கள்..தர்ஷினியோடு சந்திராவை அனுப்பலாம் தான்.. ஆனாலும் ஏதோ ஒன்று நெருடியது...

"அம்மா ப்ளீஸ்..."

"சரி போய்ட்டு வா.. ஆனால் ஜாக்கிறதை..."

"ஹ்ம்ம் என்னோட செல்ல அம்மா..." மீண்டும் கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சினாள்..

"ஆனால் சந்திரா நான் பிரச்சனை வரும்னு சொன்னது அவங்களுக்கு மட்டும் இல்லை.. உனக்கு கூட வரலாம்"...

"ஹ்ம்ம் சரிம்மா பத்திரமா போய்ட்டு.. மூனே மாசத்துல பட்டு பட்டுனு வேலையை முடிச்சிட்டு..டக்கு டக்குனு வீட்டுக்கு வந்துடறேன் ..ஓகே வா..."

மகள் தந்த பதிலில் சிரித்து விட்டு, "எப்போ கிளம்பணும் " எனக்கேட்டார்.

"நெஸ்ட் வீக்.."

" கமலாம்மா நான் போய் தர்ஷினிக்கிட்ட சொல்லிட்டு வந்துடறேன்... பேக்கிங் வேற பண்ணனும்... bye மா.." என்று தோழியிடம் சொல்ல கிளம்பி விட்டாள்..

மகள் என்னதான் சமாதானப்படுத்தி இருந்தாலும் அந்த தாயின் மனதில் ஏதோ நெருடியது.. சந்திராவை பெற்றது மாலதி என்றாலும் அவளை வளர்த்தது கமலா தானே.. திருமணமே செய்துகொள்ளாமல் எந்த ஒரு பற்றுகோலும் இல்லாமல் இருந்தவருக்கு சந்திராவே வாழ்வின் ஆதாரமாகி போனாள்.. அவளுடைய வாழ்வில் எந்த ஒரு சிறு துன்பமும் வருவதை அந்த தாய் விரும்பவில்லை.. அதனாலயே சந்திரா கிளம்பும் கடைசி நாள் வரை அவளிடம் பேசி பார்த்தார்... இறுதியில் சந்திராவின் ஆசையே வென்றது...

ஆனால் அந்த தாயின் நெருடல் இறுதியில் நிஜமாகி தன் மகளை நோகடித்து கடைசியில் தன்னை போலவே தன் மகளையும் தனிமரமாக மாற்றிவிட்டே திருப்பி அனுப்பி இருந்தது...எல்லா அம்மக்களையும் போலவே தன் மகளும் தன்னைப்போல அல்லாமல் குடும்பம் குழந்தைகள் என வாழவேண்டும் என ஆசை பட்டர்... ஆனால் தான் ஆசையாக வளர்த்த மகள் படும் பாட்டை பார்க்க முடியாமலே இறைவனடி சேர்ந்தார்...

அதன் பிறகு சந்திரா பெங்களூரை விட்டும் தானும் கமலாம்மாவும் இருந்த வீட்டை விட்டும் வரவே இல்லை..தர்ஷினி எவ்வளவோ சொல்லியும் கூட அவள் மனம் மாறவேயில்லை..

அன்று தன் மனதை புரிந்து கொள்ளாமல் தன்னை திருப்பி அனுப்பியவர் கமலாம்மா இறந்தபோது கூட மகளை கூப்பிட்டுக்கொள்ளவே இல்லை..சுபா இறந்து ஒரு வருடம் கழித்தே அவரிடமிருந்து அழைப்பு வந்தது... அப்போதுதான் தன் இன்னொரு மகளின் நியாபகம் வந்ததோ என்னவோ...அதனாலயே அவரின் அழைப்புகளை அவள் ஏற்பதே இல்லை... ஆனால் இப்போது போக வேண்டுமா என்ற எண்ணம்...அங்கு போனால் மீண்டும் அவமானங்கள் ஏற்படலாம்... மனம் நோகும்படி ஏதேனும் நடக்கலாம்... அப்பா மாறிவிட்டதாக தோன்றினாலும் சூர்யா, அவளுக்கும் தன்னை பிடிக்கதே... இவை அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு அங்கு சொல்லலாம் என்றால் அவன் அங்கு வருவானே... அவனை மீண்டும் பார்த்தால் தன்னுடைய நிலை மறக்கலாம்.. அவனுடைய நியாபகம் ஒட்டிக்கொள்ளும்.. மீண்டும் துன்பமே..

ஆனால் என்னுடைய நிலை அவனுக்கு தெரியுமா என்ன.. என்னைத்தான் அவனுக்கு தெரியாதே...
மனம் மீண்டும் முரண்டியது...

இறுதியில் போக முடிவெடுத்தாள்.. அவள் முடிவை தர்ஷினியிடம் கூறியபோது வலுவான எதிர்ப்பே வந்தது... மீண்டும் தன் தோழியின் நிலைமை மோசமாவதை அவள் விரும்பவில்லை... ஏனெனில் அனைத்தையும் கண்முன் கண்டவளாயிற்றே... ஆனால் சந்திராவின் மனதில் இருந்த திடம் அவளுடைய எதிர்ப்பை பலகீனப்படுத்தி சம்மதமும் வாங்கியது...தன்னால் சமாளிக்க முடியும் என்று தோழியுடம் உறுதியாக கூறினாலும் அவள் மனமோ உன்னால் சமாளிக்க முடியுமா அவனைக்கண்டாலும் என கேள்வி எழுப்பியது... அவன் நினைவை மறக்கவே இந்த பயணம் என திரும்பத்திரும்ப மனதில் உருப்போட்டுக்கொண்டாள்...அவன் நினைவுகளை அழிக்கவே முன் போலவே இப்போதும் தன் பயணத்தை மேற்கொண்டாள் சந்திரா.. தான் முன்பு செய்த அந்த இரயில் பயணம் எப்படி அவனை அவளுள் விதைத்ததோ அதுபோலவே இப்போது செய்யும் பயணம் மறக்க செய்யும் என அந்த பேதைப்பெண் நினைத்தாள்... ஆனால் அவளால் மறக்கமுடிந்ததா... அவன் நினைவுகளை விட்டு விலக முடிந்ததா...
 

RamyaHemanthkumar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
3 நிலவின் இளங்கதிரே

நெஞ்சில் உன்னையே தேக்கி வைத்திருந்தேனடி
கண்ணில் உன்னையே பார்த்திருந்தேனடி
என்றாவது உன்னை சிறை செய்வேன் என் ஆயுள் முழுக்க உன் அருகில் இருக்கவேண்டி...


நீண்ட நாட்களுக்கு பிறகு பயணம் செய்தாலும் அப்போது போலவே இப்போதும் மனதில் ஏதோ உற்சாகம் தோன்றியது கதிருக்கு..காரில் கதிரும் ப்ரித்வியும் கோவையிலிருந்து இருவரும் குன்னூர் கல்யாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர்...அபிராமி திருமணத்திற்கு முதல் நாள் வருவதாக கூறியதால் இருவர் மட்டும் காரில் பயணப்பட்டனர்.... முதலில் போக வேண்டுமா என்ற நினைத்த பயணம் இப்போது தன் பழைய நியாபகங்களை கிளப்பி விட்டிருந்தது கதிருக்கு..ஏனோ தன் காதல் நினைவுகளை மீட்டெடுத்தால் என்ன என்று தான் தோன்றியது...
மகனை பார்த்தான் ப்ரித்வியோ காரில் ஏறியதிலிருந்தே குதூகலமாக வேடிக்கை பார்த்து வந்துகொண்டிருந்தான்... தந்தையுடன் வெளியே சென்றுகொண்டிருக்கும் எண்ணமே அந்த சந்தோசத்தை அவனுக்கு கொடுத்தது..கதிருக்கோ அவன் காதலின் நினைவுகளை மனம் புரட்டிப்பார்த்தது.

வேலை சம்பந்தமாக பலமுறை ஊட்டிக்கு சென்றிருந்தாலும் அன்றே அவளை முதல் முறையாக பார்த்திருந்தான்..அப்போதும் இதே போல காரில் தான் பயணம்... மலைப்பதையில் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு பஸ் முன்னால் கூட்டம் கூடி இருந்தது.. ஏதோ பிரச்சனை போல.. ஏதாவது உதவி வேண்டுமா என்ன கேட்க வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கு சென்று பார்த்தான்..

கூட்டத்திலிருந்து காச்மூச் என்ன ஒரே சத்தம்.. ஓரளவு விலக்கி பார்த்தால் இரு பெண்கள் கூட்டத்தின் நடுவில் இருந்தனர்.. அதில் ஒரு பெண் ஒருவனைப்போட்டு அடி அடியென அடித்துக்கொண்டிருந்தாள்...

இன்னொரு பெண்ணோ அடித்துக்கொண்டிருந்தவளிடம் , "பிரச்சனை வேணாம் டி அவனை விட்டுடு" எனக்கூறிக்கொண்டிருந்தாள்..

இவளோ, அடித்த கை வலித்திருக்கும் போல அதை உதறிவிட்டு, அருகிலிருந்த மரக்கிளையில் இருந்த பெரிய குச்சியை உடைக்க போய்விட்டாள்.. அவனை அடித்தது போதவில்லை போல..யார் தடுத்தும் அவள் கேட்பதாக இல்லை..

"இன்றைக்கு இவள் கோபம் அடங்காது இவனை ஒரு வழி பண்ணாம இவளும் விடமாட்டாள் போல இருக்கே"...எனக்கூறி அவள் தோழி அவளிடம் சென்றாள்...

"யே லூசு இப்போ என்ன பண்ணிட்டு இருக்க"

"பார்த்தால் தெரியல..குச்சியை ஓடச்சிட்டு இருக்கேன்.."

"ஏய் நீ அடிச்ச அடியில அவனை பாரு எழுந்திரிக்கக்கூட முடியாம பரிதாபமாக உலுந்து கிடக்குறான்..இன்னும் அவனை அடிக்க போறியா.."

"ஆமா என்னோட கோபம் தீருற வரைக்கும் அடிப்பேன்.. அவன் பணின காரியத்துக்கு" எனக்கூறிக்கொண்டே குச்சியை இன்னும் வேகமாக உடைக்கப்பார்த்தாள்..

அப்போதுதான் கதிருக்கு இவள் ஏன் சண்டை போடுகிறாள் என்று. தோன்றியது...அருகில் இருந்தவரிடம் கேட்டபோது அவர்சொன்னது,
'அந்த இருப்பெண்களும் சீட்டில் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தனர்..இவன் அவர்கள் பின்னாடி உட்கார்ந்து கொண்டு அந்த பெண்ணின் காலை உரசி இருக்கிறான்.. சமாதனப்படுத்தும் பெண்ணிடம் தான் முதலில் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறான்.. அவள் முறைத்து விட்டு திரும்பி விட்டாள்.. இவனோ விடாது அடுத்த பெண்னிடமும் அவ்வாறு நடக்க அவள் கையில் இருந்த பேக்கால் அடிக்க ஆரம்பித்தவள் இன்னும் நிறுத்தவில்லை...

கதிருக்கும் அந்த பெண் செய்வது சரி தான் என்று தோன்றியது .ஆனால் இதுவோ மலைப்பாதை.. இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிவிடும்..அதன் பிறகு கட்டுவிலங்குகளின் நடமாட்டம் இருக்கக்கூடும்..அதனால் இவர்கள் கிளம்புவதே உசிதம் என்று தோன்றியது .அவன் நினைப்பை போலவே பஸ்ஸின் டிரைவரும் கண்டக்டரும் கூட்டத்தை சமாளித்து பஸ்ஸை எப்படி கிளப்புவது என ஆலோசிக்க துவங்கினர்...

அதே சமயம் அந்த பெண்ணின் தோழி அவளுடன் ,
"ஏய் போதும்டி டைம் ஆச்சு கிளம்பலாம் அவனை விட்டுடு..."

இவளோ, "அவனை விட்டால் இதே மாதிரி தான் மறுபடியும் வேற பொண்ணுகிட்ட பண்ணுவான்.. அதனால அவனை" என சொல்லிக்கொண்டே இன்னும் பலமாக குச்சியை உடைக்க பார்த்தாள்..
அதுவும் உடைவென என அடம்பிடித்தது ..

"அடியே இங்க பிரச்சனை நடந்தால் நாம போகுற இடத்துல லேட் ஆகும் பரவலையா"

"என்ன ஆனாலும் பரவலை அவனை உண்டு இல்லேன்னு பண்ணாம நான் வரமாட்டேன்..."

தோழியோ சலித்துவிட்டு,
"சரி நீ என்ன பண்ணனும்னு நினைக்கறியோ அதையே பண்ணு. லேட்டா ஆச்சுன்னு காலேஜ்ல சேர முடியாது.. அப்புறம் லேட் ஆனதுக்கு வீட்ல காரணம் கேட்டா இதையே சொல்லு.. அப்புறம் படிப்பும் வேணாம் ஒன்னும் வேணாம்னு வீட்லயே உட்காரவேய்ச்சிருவங்க பரவலையா..."

அப்போதுதான் வீட்டை பற்றி யோசித்தவள், "ஆமாம்டி கிளம்பலாம்.. ஆனா இவன என்ன பண்ணறது... "

அதற்குள் பஸ்ஸின் கண்டக்டரும் டிரைவரும் இவர்கள் அருகில் வந்து பேசினார் .

"இதபாருக்கம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டிடும் so பஸ்ஸ கிளப்பனும் அதனால
வண்டில ஏறுரீங்களா.."

"சரிங்க பஸ்ல ஏறுறோம் ஆனா இவன் வரக்கூடாது"... என்றாள் முடிவுடன்..

"சரிம்மா ரெண்டு பேரும் பஸ்ல ஏறுங்க"..
அவள் அவனை பார்த்து முறைத்துவிட்டு பஸ்ஸில் ஏறிவிட்டாள்.

கூட்டத்தில் இருந்த மற்றவர்களையும் ஏறச்சொன்னார்..
அவனை மட்டும் பார்த்து, "நீ வரக்கூடாது" என்று சொல்லிவிட்டு, பஸ்ஸ எடுக்க கிளம்பிவிட்டார்...
அவனோ அடிபட்ட வேதனையுடன் அப்படியே உட்கார்த்துவிட்டான்... பஸ் கிளம்பிவிட்டது...

அவள் அந்த பஸ்ஸில் போய் விட்டாள் கதிரின் மனதையும் எடுத்துக்கொண்டு...

அடிவங்கியவன் அங்கேயே உட்கார்ந்து விட்டான்.. கதிரும் அவனுடைய கார் இருக்கும் இடத்திற்கு சென்று காரை ஸ்டர்ட் செய்தான்... பஸ் கிளம்பிய பிறகு அனைத்து வண்டிகளும் கிளம்பி இருந்தன.. அடிப்பட்டவன் அனைவரிடமும் லிப்ட் கேட்டான்.. அனைவரும் மறுத்து சென்றனர்... கதிரிடமும் கேட்டான்.. மறுத்துவிட்டான்..

அவன் மனதில், 'என்னவளிடம் தவறாக நடத்திக்கொண்டு என்னிடமே உதவி கேட்கிறான்'.. என்று கோபம் தான் வந்தது.. ஆனால் அவளே செமத்தியாக அடி கொடுத்திருந்தாள். அதனால் அவனை வீட்டைவிட்டு பஸ்ஸை பின்தொடந்து சென்றுவிட்டான்...

கதிரின் கார் பஸ்ஸை பின்தொடர்ந்து... அவன் மனமோ அவளை...

ஊட்டியில் பஸ்ஸை விட்டு இறங்கிய தோழிகள் இருவரையும் கதிர் பார்த்தான்..


அவள் பேக்கை தூக்கி தொப்பென்று கீழே போட்டாள்..

அவள் தோழி
"ஏண்டி, உனக்கு இன்னும் கோபம் போகலியா? அவனைத்தான் போட்டு அந்தஅடி அடிச்சிட்டேல அப்புறமும் என்ன இப்போ கோபத்தை பேக் மேல காண்பிக்குற."

"நான் என்னடி பண்ணறது கோபம் இன்னும் தீரமாட்டேங்குது.
ஏண்டி என்னை மட்டுமா அவன் சீண்டுனான் உன்னையும் தானே"

"எனக்காகவா, எனக்காக நீ என்ன வேணாலும் பண்ணுவியா"

"நீ என்னோட செல்லமடி உனக்காக செய்யமாட்டேனா"

அவள் தோழி சிரித்துவிட்டு, இவளை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே,
"அப்போ எனக்கு கிஸ் குடேன்"

அவள் கேட்டதில் திகைத்த இருவரில் முதலில் சுதாரித்த அந்த பெண் தன் தோழியை பார்த்து,
"இப்படியெல்லாம் பேசதடி நம்மளை தப்பாக நினைப்பாக... அதுமட்டும் இல்ல இப்போதைக்கு ஸ்டாக் இல்ல"..
என்றாள்..

அனைத்தையும் கேட்டு கதிர் சிரித்தே விட்டான்.

அவள் தோழியும் சிரித்துவிட்டு ,
"ஸ்டாக் இல்லையா ..ஹ்ம்ம் சரிதான். நான் மட்டும் பையனா பொறந்து இருந்தேனா எப்போவோ உன்னை கல்யாணம் பண்ணி ஹனிமூனுக்கே கூட்டிட்டு வந்திருப்பேண்டி... அவ்வளவு அழகி டி நீ... என்ன பொண்ணா பொறந்து உன்னோட பிரண்டா ஆகி போய்ட்டேன்.. என்னோட அண்ணாக்காவது ok சொல்லிவேணு பார்த்தா பிடிகுடுக்கமாட்டேங்குறே நீ...."

"நான் அன்னைக்கே சொன்னேன்ல உன்னோட அண்ணனை பார்த்தால் எனக்கு அந்த பீலிங் வரல அதான்.."

"ஹ்ம்ம் சரிதான்.. ஆனால் அண்ணா தான் பாவம்..உன்னை இத்தனநாள் சைட் அடிச்சிட்டு நீ அண்ணன்னு கூப்பிட்டதிலிருந்து பாவமா சுத்திட்டு இருக்கு.."

"சரி சரி நம்ம வந்த வேலையை பார்க்கலாமா" என்று இவள் பேச்சை மாற்றினாள்.. காலேஜ் பக்கத்துலயே ஹாஸ்டல் பார்த்துடலாம் ok va.."

"ஆறு மாசத்துக்கு ஹாஸ்டல் தருவங்களா"

"எல்லாம் தருவாங்க வா போகலாம்" என்று தோழிகள் இருவரும் ஹாஸ்டல் துழாவி சென்றனர்.

அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து சென்றதில் அவர்களின் பேச்சுக்களில் இருந்து கதிர் கண்டுகொண்டது தோழிகள் இருவரும் ஆறுமாத ப்ரொஜக்ட் வேலைக்காக ஊட்டி வந்திருந்தனர் என்பதே... அவர்களை மேலும் பின்தொடர்ந்து அவர்களுடைய காலேஜ் மற்றும் தங்கும் ஹாஸ்டலையும் பார்த்துவிட்டுத்தான் தன் வேலையை பார்க்க சென்றான்...

அதன்பிறகு அடிக்கடி கதிர் அங்கு வந்தான்.. அவர்களை மறைந்திருந்து பார்ப்பான்..
இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருந்தது...அந்த சமயத்தில் தான் கதிர் ஒரு முக்கியமான வேலை விஷயமாக சென்னை போனான்...அங்கு
 

RamyaHemanthkumar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai பிரண்ட்ஸ்
Sorry sorry என்னடா 3 எபிசோடே போட்டுட்டு nxt எபிசோடே போடாமல் எஸ்கேப் ஆகிட்டேன்னு.. உங்க கோபமெல்லாம் எனக்கு புரியுது... but என்னப்பா பண்ணறது வீட்டுல விசேஷங்க.. நெறைய வேலைங்க.. என்னோட 3 months குட்டி பாப்பாவ பார்த்துக்கணுமா.. அதான் ஏரியா பக்கமே வர முடியல... டைப் பண்ணலாம்னு மொபைலை எடுக்கவே முடியலிங்க.. ,அதனால நான் கதைய ட்ராப் பண்ணறேன்னு நினைச்சுடாதீங்க.. புல்லா முடிக்கறேன்.. ஆனா இப்போ இல்ல... எனக்கு டைம் வேணும்பா... அதனால எந்த எடத்துல சந்திரா கதிரை மீட் பண்ணரா கதிர் எப்படி சுபாவை கல்யாணம் பண்ணிக்கிறான் கடைசில சந்திரா எப்படி கதிரொட சேர்ந்தாள்னு கொஞ்சம் வெய்ட் பண்ணி தெரிஞ்சுக்கோங்க...again sorry for late information and excuse...

By ரம்யா
 
Status
Not open for further replies.
Top