All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
story complete ayudhuchu romba feeling a iruku. Inimel Mon, wed & Friday unga story illama romba miss panuven. Abeyan ku oru girl baby porandha apparum storya mudichu irukalam.
Waiting for your next story.
Thank you so much my dear. romba romba santhoshamaa irukum. appadi mudichirunthaa, athu intha kathyoda kanaththa kurachidum. aanaa unka ellarukkumaakavum epilogue poduvenpaa. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ama sis nenga yen kkpm second part try panda kudathu😂😂😂😂🤣🤣🤣🤣
Epilog potA alagu kettudum nu solitinga.,.
So second part Ku wait pandalama sis🤔🤔
Abayan oda innum four child dream um real agerum eppdi 😉😉 sis k va 😅😅😅😅😊😅
Waiting for second part sis .. don't forget
paththa vachitiye paratta.... ammaa thaaye... enmaa en.. summaa oramaa en paattukku irunthu kathai ezhuthittu irunthen... ippadi pannitteeyale... avvvvvvv..........summave kummi adippaanka ippa.... avvvv naa enna pannuven.... :cry::cry::cry::cry::cry::cry::eek::eek::eek::eek::eek:
 

sivanayani

விஜயமலர்
Na itha story starting la iruthu padikaren...
Super fanatic story.ana enaku story complete aakatha mathiri oru feel bcuz aarathana marriage and next oru baby then resort opening,appa amma voda babies athan resort stay pana mathiri kanauv,akkaku thank pana mathiri ithu ellam miss aakara mathiri oru feeling
Thank you so much pa really happy. akkaakkellaam thank pannanumaa. michamellaam unka karppanaikku vittidalaamnu yosikkiren. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உயிரை கொல்வது மட்டும்தான் கொலையா??? மனதை கொல்வதும் கொலைதானே.. அப்படி தமக்கைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக ஒரு பாவிக்கு தண்டனை தர நாயகன் தேர்ந்தெடுக்கும் வழி அவனின் மகளான, தன்னுயிர் காதலியின் மனதை துடிக்க துடிக்க கொல்கிறது..! அப்படி கொன்ற தன்னவளின் மனதை உயிர்ப்பித்தானா?? ஒரு பாவிக்கு தண்டனை தர தெரிந்தே பாவம் செய்யும் நாயகனின் உணர்வுப் போராட்டங்கள் மற்றும் தந்தையின் பாவத்துக்கு பலியான நாயகியின் மனப்போராட்டங்களை உணர்வுப்பூர்வமாக உணர செய்திருக்கும் கதை..!

கனமான கதைக்களம்.. ஆரம்பம் முதல் இறுதி வரை அந்த அழுத்தம் குறையாமலேயே பயணிக்கிறது.. பெண்ணை பலாத்காரம் செய்யும் எவனும் அதற்குண்டான கொடுமையான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது கதை..! இப்படி ஒரு கதைக்களத்தை எடுத்ததுக்கு பாராட்டுக்கள் நயனிமா.. உங்க எழுத்தின் மூலம் கதைக்கு நியாயம் செஞ்சிருக்கீங்க..!

அபயன்.. சகோதரிக்கு நல்ல சகோதரன், அவளுக்கும், அவளின் மகளுக்கும் தாயுமானவன், காலம் கடந்து சேர்ந்தாலும் தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையானவன்.. ஆனால் விதியால் மனைவிக்கு நல்ல கணவனாக இருக்க முடியாததின் வலியை இறுதிவரை அனுபவிப்பவன்.. அவனோட வலியையும், அவனுக்கான தண்டனையையும் உங்க எழுத்துக்களால் விவரிக்கும் போது மனம் ரொம்பவே கனக்கத்தான் செய்யுது..! பதினோரு வயது பிள்ளையின் மனநிலையை யோசிக்கும் போது அவன் மேல பரிதாபம்தான் வந்தது.. துள்ளி திரிந்த சிறுபிள்ளை அடையக்கூடாத துன்பங்களை எல்லாம் அவன் அடைஞ்சிட்டான்... எப்போ இவனோட வலிகள் எல்லாம் தீருமோன்னு ஒரு கட்டத்துல நினைக்கவே வச்சுடறான்..!

மிளிர் மீதான அவனோட காதல் அளப்பரியது.. அழகானது..! காதலியின் வேதனையை விட பலமடங்கு அதிகமான வேதனையை தான் அனுபவிக்க அவன் செய்யும் ஒவ்வொன்றும்.. அப்பப்பா.. அவனவள் மீதான அவனின் எல்லையில்லா காதலின் ஆழத்தை காட்டுகிறது.. ! அதையெல்லாம் மிளிர் உணரும் தருணம் அவ்ளோ ஆத்மார்த்தமாக இருந்தது..

மிளிர்.. பாதிப்புக்குள்ளான ஒரு பெண்ணின் தவிப்பையும், பயத்தையும், உணர்வுகளையும் தாங்கி கணவன் மீது பொங்கும் காதலையும் அடக்க முடியாமல் தவிக்கிறாள்..! காதலையும் மீறி தோன்றும் அவனின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும் தருணங்களில் கணவனே ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்ணால் அதிலிருந்து அவ்வளவு சீக்கிரம் வெளிவர முடியாது என்பதை உணர முடிகிறது..! கணவனின் காதலை உணர்ந்த பிறகும் "மன்னித்துவிட்டேன்.. ஆனால் மறக்கமுடியுமா தெரியலை.. மறக்க முயற்சி செய்கிறேன்..!" என அவள் சொல்வது இதுதான் யதார்த்தம் என தோன்றுகிறது.. காலமும், கணவனின் காதலும் அவள் காயத்தை ஆற்றும் என நம்புகிறோம்..!

காந்திமதி.. இன்னல்களை கடந்து நிமிர்ந்து நிற்கும் கம்பீரமான பெண்மணி... காதல் என நினைத்து காமத்துக்கு பலியான இவரின் நிலை எந்த பெண்ணுக்கும் வர கூடாதுன்னு வலியோடு நினைக்க வைக்கிறார்.. மனநலம் பாதிக்கப்பட்டு இவர் பட்ட துயரங்கள் கொஞ்சமா நஞ்சமா... தம்பியின் அன்பினால் தேறி வரும் இவர் மிளிர்க்கு சொல்லும் அறிவுரைகள் வாழ்க்கை பாடம்..!

ஆராதனா.. அரக்கனின் அட்டகாசத்தில் விளைந்த குட்டி தேவதை.. ஆத்வீகன், சாத்வீகன்.. அழகு குட்டி செல்லங்கள்.. அபயனோடு இவர்கள் போடும் ஆட்டங்கள் கொள்ளை அழகு...

விக்னேஷ்வரனை பத்தி நினைச்சாலே கோவம்தான் வருது.. அதனால அந்தாளை பத்தி நான் சொல்ல மாட்டேன்..😡😡😡😡

கடற்கரை பௌர்ணமி காட்சி செம அழகு.. அதை விவரிக்க வார்த்தைகள் இல்ல.. சுருக்கமா சொல்லணும்னா உங்களோட எழுத்து மயக்கிடுச்சி.. எழுதின உங்க கைக்கு பெரிய உம்மா😘😘😘

முடிவு இதுதான்னு சொல்லாம, எதிர்மறையாகவும் இல்லாம காலம் மாற்றும்னு கற்பனைக்கு விட்டது எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.. வித்தியாசமான கதைக்கு ஏற்ற முடிவாகவே எனக்கு பட்டுச்சு...

காந்திமதி எந்த பாவமும் செய்யலை.. அதான் அவருக்கு பெண்குழந்தை பிறந்தா.. அதே போல மிளிரும் எந்த பாவமும் செய்யலை இல்லையா.. அதனால அவளுக்கும் பெண்குழந்தைகள் பிறக்கும்.. அபயனோட பாவத்தை அவள் காதலால் கழுவுவாள்னு என்னோட கற்பனைக்கு விட்டுட்டேன்..😁😁

இதே போல இன்னும் பல சிறப்பான கதைகளை படைக்க வாழ்த்துக்கள் நயனிமா!!💐💐💐💐
wow... wow wow... What a spectacular and magnificent review. no words to say Santhamma.. படிக்கிறப்பவே, சும்மா அதிருது. கதையோட ஒவ்வொரு வார்த்தைகளையும் புழிஞ்சு ஒரு டம்ளர்ல ஊத்தி கொடுத்திருக்கீங்க. உங்க அன்புக்கு நான் அடிமைப்பா.. தலைவணங்கி இரு கரம் கூப்பி நன்றி சொல்றேன்... எனக்கும் இந்த முடிவுதான் புடிச்சிருக்கு. ஆனா வாசகர்களுடைய அன்பாயும் நாம புரிஞ்சுக்கணும்ல.. அதுதான்.. யோசிக்கிறேன்பா... :love::love::love::love::love:
 
Top