“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 30 (இறுதி அத்தியாயம்) 16

விழியில் விழுந்து…இதயம் நுழைந்து.

அத்தியாயம்:31.

 

சுகன் திருமணத்திற்குப் பத்து நாட்கள் முன் வந்துவிட்டான். வந்தவன் நேரே விலாசினியை பார்க்க வந்துவிட்டான். அவளிடம் மனம் விட்டுப் பேசினான். அவ்வளவு நாள் அவனை ஏறெடுத்தும் பார்க்காத விலாசினி அப்பொழுது தான் அவனைப் பார்க்கிறாள். நல்ல அழகாய்க் கம்பீரமாக இருந்தவனைப் பார்த்து ஏன் இத்தனை நாள் இவனைப் பார்க்காமல் விட்டேன் என்று அவள் மனம் கேட்கத் தான் செய்தது. அதை எல்லாம் விட அவள் மேல் உயிரை வைத்து இருக்கும் அவனின் அன்பு, செயல், வார்த்தை எல்லாம் கண்டதும் விலாசினிக்கும் அவனிடம் நேசம் வரத் தான் செய்தது.

 

‘ஹாய் வினி. ஹவ் ஆர் யூ?. ம்… பார்த்தா நல்லா தான் இருக்கேன்னு தெரியுது.’ ரசனையுடன் சுகனின் கண்கள் தன் மேல் மொய்த்ததைக் கண்டு விலாசினியின் முகம் ரத்த சிவப்பை கொண்டது.

 

‘நல்லா இருக்கேன்.’ அவளுக்கே கேட்காத குரலில் கூறியவளை கண்டு வாய்விட்டு நகைத்தான் சுகன். அவனின் சிரிப்பையையே மெய்மறந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்

விலாசினி. வரிசையான பற்கள் பளீரிட அழகாகச் சிரித்தவனைக் கண்டு மனம் மயங்கியது. சிரித்து முடித்தவன் விலாசினியின் பார்வை உணர்ந்து ஒற்றைப் புருவத்தைத் தூக்கி என்ன என்பது பார்த்தான்.

 

‘என்ன நான் பாஸ் மார்க் வாங்குவேனா?.’ கிண்டலுடன் விலாசினியை பார்த்து கேட்டான்.

 

‘ஹண்ட்ரட் மார்க்கே உங்களுக்குக் குடுக்கலாம்.’ அவளை அறியாமல் கூறியவள், அவன் என்ன நினைத்துக் கொள்வானோ என்ற பயத்தில் உதட்டைக் கடித்தாள்.

 

‘ம்… அந்த உதட்டை ஏன் இந்தப் பாடு படுத்தற?. மனசில் பட்டதைச் சொன்னதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு சஞ்சலம்?. நான் உன் சுகன் அல்லவா?. நீ என்ன சொன்னாலும் தப்பா நினைக்க மாட்டேன்.’ என்றவன் அவளின் கையைப் பிடித்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.

 

‘ஐ லவ் யூ வினி. உன்னை நான் கடந்த ஏழு வருடமாக விரும்புகிறேன். நீ அப்பொழுது சிறு பெண். அதனால் நீ படித்து முடிக்கும் வரை காத்து இருந்தேன். ஏழு வருசமா உன்னிடம் சொல்லாமல் எனக்குள்ளே போட்டு பூட்டி வைத்து இருந்தேன். இன்று தான் ஏழு வருட என் மனப்பாரம் அகன்று இருக்கு.’ தன்னிடம் காதல் யாசகம் கேட்கும் சுகனை விலாசினிக்கு பிடித்து ஆச்சிரியம் ஏதும் இல்லையே.

 

சுகனிடம் எதுவும் மறைக்க விலாசினிக்கு தோணவில்லை. தனக்கு விஷ்ணுவின் ஏற்பட்ட ஈர்ப்பை காதலை அவனிடம் மறைக்காமல் கூறினாள். ஏதோ தைரியத்தில் அவ்வாறு கூறி விட்டாளே தவிரச் சுகன் என்ன சொல்வானோ என்று பயத்துடன் அவனைப் பார்த்தாள். விலாசினியின் கண்களில் இருந்த பயம் சுகனை என்ன செய்ததோ அவன் தன் இருக்கையை விட்டு எழுந்து அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை ஆதரவுடன் தடவிக் குடுத்தான். அதுவரை தன் மனதில் இருந்த சஞ்சலம் மறைந்து நிம்மதி பரவுதை விலாசினி உணர்ந்தாள். ஏதோ மனபாரம் அகன்றவள் போல் அவன் தோளின் மேல் தன் தலையைச் சாய்த்தாள்.

 

‘சிறிய வயதில் இந்த மாதிரி இன்பாக்சுவேசன் வருவது சகஜம். சிறுவயதில் எனக்குக் கூட என் பக்கத்து வீட்டு அக்காவை பிடிக்கும். அவர்களுடன் யார் பேசினாலும் பொறாமையாக இருக்கும். அப்பொழுது புரியவில்லை. இப்பொழுது அதை நினைக்கும் போது சிரிப்பு வருகிறது. அதனால் இதை இத்துடன் மறந்து விடு. ஏதோ பெரிய தவறு செய்தவள் போல் பீல் பண்ணாதே.’ என்றவாறு அவளின் முன் உச்சியில் தன் இதழை பதித்தவன் மீது விலாசினிக்கு காதல் கரை புரண்டு ஓடியதை சொல்லத் தேவை இல்லை.

 

திருமண நாளும் வந்தது. காலையில் அக்னி வலம் வந்து திருமணம் இனிதே முடிந்தது. மாலையில் வரவேற்பின் போது தான் பிரச்சினை வந்தது. விஷ்ணுவின் மாமா பெண் நிஷாந்தினி அதற்கு வந்து இருந்தாள். விஷ்ணுவிடம் நிஷாந்தியை மனம் முடிக்க எல்லோரும் வலியுறுத்தினர். ஆனால் விஷ்ணு பிடி குடுக்காததால் வேறு இடத்தில் திருமணம் பேசி முடித்தனர். நிஷாந்தினி தன் கணவர் ரவீந்திரனுடன் லண்டனில் வசிக்கிறாள் .

 

வரவேற்புக்கு வந்த நிஷாந்தினி நேரே விஷ்ணு ஷன்மதியிடம் வந்தவள், ‘அத்தான் இந்தத் தேவதைக்காகத் தான் என்னை வேண்டாம் என்று சொன்னாயா?.’

என்று அவனிடம் வம்பிளுத்தவள் ஷன்மதியிடம் திரும்பி,

 

‘நீங்கள் ரொம்ப அழகாக இருக்கீங்க. அதிலேயும் உங்க நீண்ட தலைமுடி வாவ்! எவ்வளவு அழகு.’ விஷ்ணு அவள் சொல்வதைச் சிரித்துக் கொண்டே கேட்டவன் , நிஷாந்தினியை ஷன்மதிக்கு அறிமுகம் செய்து வைத்தான். ஷன்மதியின் கண்களும் வேகமாக நிஷாவை தான் அளவேடுத்தது.

 

மாநிறமாக இருந்தாலும் அழகாகத் தான் இருந்தாள். தன் குட்டை முடியை ஆட்டியபடி வெகுளித்தனமாகப் பேசியவளை நியாயத்திற்கு ஷன்மதிக்குப் பிடித்துத் தான் இருக்க வேண்டும். ஆனால் அவள் விஷ்ணுவிற்குப் பார்த்த பெண் என்ற ஒரே காரணத்தினால் அவளுக்குப் பிடிக்காமல் போய்விட்டது. விலாசினியை பொருட்படுத்தாமல் விட்ட ஷன்மதியால் நிஷாவை அவ்வாறு விட முடியவில்லை.

 

வரவேற்பு நிகழ்ச்சி முடிய தாமதமாகும் என்று யசோதா ஷரத், அஷானியை அழைத்துக் கொண்டு கிளம்பினார். ஆண்டாளும் அவருடன் கிளம்பினார்.

 

‘சிறு குழந்தைகள் ரொம்ப நேரம் கண் விழிக்க வேண்டாம். அதில்லாமல் இனி உங்களைப் போன்ற இளசுகளுக்குத் தான் கொண்டாட்டம். இதில் இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்.’ என்று கூறவும் சரி என்று விஷ்ணுவும், ஷன்மதியும் கூறினர்.

 

அதன் பின் நடந்தது தான் ஷன்மதிக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. எல்லோரும் நடனம் ஆடுகிறேன் என்று புது மணத் தம்பதிகளுடன் நடனம் ஆடினர். விஷ்ணுவும் ஷன்மதியிடம் வந்து,

 

‘ஷம்மு வா வந்து டான்ஸ் ஆடு.’ என்று அவள் கை பற்றி அழைக்க இது எல்லாம் பழக்கம் இல்லாத ஷன்மதி மறுத்து விட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். விஷ்ணுவும்

புன்னகைத்துக் கொண்டே அவள் அருகில் அமர்ந்து அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.

 

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த நிஷா, ‘என்ன அத்தான். இப்படி உட்கார்ந்து விட்டிங்க. வாங்க வந்து டான்ஸ் பண்ணுங்க.’ என்று அவன் கையைப் பிடிக்க, விஷ்ணு சிரித்துக் கொண்டே ஷன்மதியின் கையை விடுவித்து நிஷாவுடன் சென்றான். நிஷாவின் கணவர் ரவீந்திரன் ஷன்மதி அருகில் வந்து அமர்ந்தான். இதைச் சிறு புன்னகையுடன் அவன்

பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த ஷன்மதிக்கு எரிச்சலாக வந்தது. கட்டிய மனைவியை வேறு ஒருவருடன் ஆட விட்டு இங்கே உட்கார்ந்து இளிக்கறதை பாரு என்று ரவியைப் பிடித்து மனதில் திட்டிக்கொண்டாள்.

 

‘அவள் தான் கூப்பிட்டால் என்றால் இவனும் பல்லைக் காட்டிக் கொண்டு போய்விட வேண்டுமா?.’ என்று விஷ்ணுவுக்கும் அர்ச்சனை விழத்தான் செய்தது.

 

ஆனால் ஷன்மதி பொருமும் அளவுக்கு அங்கு ஒன்றும் நடந்து விடவில்லை. அவர்கள் நடனத்தில் எந்த விரசமும் இல்லை என்பதை ஷன்மதி கவனித்துப் பார்த்து இருந்தால் புரிந்து இருக்கும். இரண்டு ஸ்டெப்ஸ் நிஷாவுடன் ஆடிய விஷ்ணு ,அதற்குப் பின் அவள் கணவன் கையோடு அவள் கையைக் கோர்த்து விட்டு ஷன்மதியுடன் அமர்ந்து கொண்டான்.

 

ஷன்மதியிடம் தென்பட்ட மாற்றம் விஷ்ணு கவனிக்க வில்லை. வரவேற்பு முடிந்து எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினர் விஷ்ணுவும் , ஷன்மதியும். காரில் வரும் பொழுதும் ஷன்மதி ஒன்றும் பேசவில்லை. கார் நின்றதும் இறங்கியவள் அவர்கள் அடுக்கு மாடி குடியிருப்புக்கு வந்ததை உணர்ந்தாள். அவளின் பார்வையை உணர்ந்து,

 

‘இந்நேரம் வீட்டிற்குப் போய் அவர்களைச் சங்கடப் படுத்த வேண்டாமே.’ விஷ்ணு கூறியதும் ஒன்றும் பேசாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்.

 

விஷ்ணுவிற்குத் தெரியும் இன்று எப்படியும் தாமதமாகும் என்று . அதனால் காலையிலேயே அவனுக்கும் ஷன்மதிக்கும் வேண்டிய பொருட்களை இங்குக் கொண்டு வைத்து விட்டான். இன்று எப்படியாவது ஷன்மதியை நெருங்க வேண்டும் என்று மனதில் அவன் நினைத்தான்.

 

கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தவன், சற்றும் தாமதிக்காமல் ஷன்மதியை தூக்கியவன் படுக்கை அறைக்குச் சென்றான். ஷன்மதியோ கோபத்தில் இருந்ததால் அவனிடம் இருந்து திமிறி விலகினாள், விஷ்ணுவோ அவளுக்கு இன்னமும் விருப்பம் வரவில்லையோ என்று எண்ணியவன் பேசாமல் படுக்கையில் அமர்ந்து கழுத்து டையை இறக்கி கழட்டிக் கொண்டு இருந்தான். விஷ்ணுவிடம் இருந்து கேள்வி வரும் என்று காத்திருந்தவளுக்கு அவனின் செய்கையைக் கோபத்தை உண்டு பண்ணியது.

 

‘அந்த நிஷா ரொம்ப அழகு இல்லையா பரத்.’ அன்று கேட்ட கேள்வி இன்றும் ஷன்மதி கேட்டதும் விஷ்ணுவிற்குப் புரிந்து போனது. கொஞ்சம் நேரம் சீண்டித் தான் பார்ப்போம் என்று எண்ணியவன்,

 

‘ம்.. நல்ல அழகு என்ன ஷம்மு. உன்னை விடக் கொஞ்சம் அழகு கூடத்தான் என்ன.’

 

விஷ்ணுவின் பதிலில் ஷன்மதியின் கோபம் கூடியது. விஷ்ணு தனக்காக இத்தனை வருடங்கள் காத்துக் கொண்டு இருந்தவன் என்பதை மறந்தாள். இயல்பாகக் கணவன் மேல் மனைவிக்கு வரும் தனக்கே சொந்தமானவன் என்ற உணர்வு எழுந்தது.

 

‘ஒஹ்… அதான் அவள் கூட அப்படி ஒட்டிக் கிட்டு டான்ஸ் ஆடினீங்களா?. ‘

 

‘எப்படி ஒட்டிக்கிட்டு ஆடினேன்?. அதே மாதிரி செஞ்சு காண்பி பார்ப்போம்.’ விஷ்ணு மேலும் சீண்ட, அவ்வளவு தான் எங்கு இருந்து தான் ஷன்மதிக்கு அவ்வளவு ஆத்திரம் வந்ததோ,

 

‘ஏன்டா நான் பக்கத்தில் இருக்கும் போதே இப்படின்னா. நான் இல்லாட்டி…’ அவனின் சட்டையை உலுக்கியவள், ‘போடா. போ அவள் கிட்டேயே போ.’ அதற்கும் விஷ்ணு சிரித்துக் கொண்டே இருக்கவும், ‘என்ன இளிப்பு வேண்டி கிடக்கு.’ என்று ஆத்திரமாகப் பார்த்தாள்.

 

‘போ போ ன்னு சொல்ற. நீ கொஞ்சம் எழுந்திரிச்சா நா போறேன்.’ அப்பொழுது தான் கவனித்தாள் தான் அவன் மேல் படுத்து இருப்பதை. எப்படி, எப்பொழுது என்று யோசித்தவள், விஷ்ணுவின் புன்னகையில் புரிந்து போனது. எல்லாம் இவன் வேலை தானா? என்று நினைத்தவள் எழ முயற்சி செய்தாள்.

 

‘விடுடா என்னை…’ என்றவளின் குரலில் இன்னமும் கோபம் இருந்ததை உணர்த்தியது.

 

‘ஏன் ஷம்மு இன்னமும் கோபம் குறையலையா?’ அவள் ஒன்றும் பேசாமல் அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதிலேயே மும்முரமாக இருந்தாள்.

 

‘ஷம்மு நான் அவளை விரும்பி இருந்தாலோ இல்லை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ எப்பொழுதோ பண்ணி இருப்பேன்.’ விஷ்ணு நான் உனக்காகத் தான் இவ்வளவு நாள் காத்து இருந்தேன் என்று சொல்லாமல் சொன்னான். திமிறிக் கொண்டு இருந்தவள், அவன் சொல் கேட்டு தன் நிலை அடைந்தாள். கோபம் குறைந்து புத்தி செயல்படத் துவங்கியது. தான் செய்த சிறுபிள்ளைத்தனத்தை எண்ணி வெட்கியவள்,

 

‘சாரி பரத்.’ என்று முணுமுணுத்தாள். அவன் மேல் தான் வைத்து இருக்கும் அன்பை எப்படிச் சொல்வது என்று முழித்தவள், மறுகணம் அவன் முகம் எங்கும் ஆவேசமாக முத்தமிட்டாள்.

 

‘சாரி பரத்.’ என்று சொல்லிக் கொண்டே அவள் முத்தமிட்டதைப் பார்த்தவன்,அவள் காதில்

அருகில்,

 

‘இப்ப தான் அம்மா பார்முக்கு வந்து இருக்கீங்க.’ என்றவன் அவளை இறுக அணைத்தான்.

 

இனி ஒரு கணமும் உன்னைப் பிரிந்து இருக்க முடியாது என்று அவனின் செய்கை உணர்த்தியது. அவனின் அணைப்பில் கட்டுண்ட ஷன்மதியும் மனமும் உடலும் நெகிழ அவனுடன் ஒன்றினாள். மனைவின் இந்த நெகிழ்வு விஷ்ணுவுக்கு ஆச்சிரியத்தைக் குடுக்க

மேலும் ஷன்மதியிடம் மூழ்கி முத்தெடுக்கத் துவங்கினான். அத்தனை வருட காதல் தாபம் எல்லாம் ஒன்று சேர இருவரும் புது உலகிற்குச் சென்றனர்.

 

காலையில் கண்விழித்த ஷன்மதி அருகில் கணவன் இல்லாதது கண்டு பதறி எழுந்தாள். அவள் எழவும் போனில் இருந்து அலாரம் அடிக்கவும் எடுத்துப் பார்த்தாள். விஷ்ணு தான் போனில் இருந்த காலெண்டரில் அலாரம் செட் பண்ணி இருந்தான். அதில் சிறு குறுஞ் செய்தி ஒன்று இருந்தது. அது இது தான். அவளுக்குத் தேவையான பொருட்கள் அருகில் இருக்கும் கபோர்டில் இருக்கிறது. தான் சீக்கிரம் வந்துவிடுவேன் என்று இருந்தது.

 

படுக்கையில் இருந்து எழுந்தவள் குளியல் அறைக்குச் சென்று குளித்துக் கொண்டு வந்தாள். குளித்து வந்தவள் அங்கு இருந்த பூஜை அறைக்குச் சென்று விளக்கேற்றி கண் மூடி கும்பிட்டாள். மனம் ஆண்டவனுக்கு நன்றி சொன்னது. பின் படுக்கை அறைக்கு நுழைந்தவள் அங்கு அழுங்கி நலுங்கி கிடந்த படுக்கை விரிப்புகளைக் கண்டதும் ,இரவு நடந்தது எல்லாம் ஞாபகம் வந்து அவள் முகத்தைச் சிவப்பாக்கியது. எல்லாவற்றையும் சீர் செய்தவள் பிறகு நேரம் போகாமல் பல்கனி பக்கம் வந்து நின்றாள். தூரத்தில் தெரியும்

கடலை பார்த்துக் கொண்டு இருந்தவள் நேரம் போவது தெரியாமல் நின்றிருந்தாள்.

 

‘அம்மா.’ ஷரத் வந்து காலைக் கட்டவும் தான் சுய நினைவு வந்தவள் அவனைத் தூக்கினாள்.

 

‘ஷரத் கண்ணா சாப்பிட்டாயா?.’

 

‘ம்… ரெண்டு தோசை சாப்பிட்டேன்.’

 

அப்பொழுது தான் அங்கு நின்று இருந்த விஷ்ணுவை பார்த்தாள் ஷன்மதி. அவனைக் கண்டதும் முகம் அந்தி வானமாகச் சிவந்தது. அவளின் முகம் சிவந்ததை ரசித்தபடி அவள் அருகில் வந்தவன்,

 

‘ஷரத் நீ சாப்பிட்ட மாதிரி அம்மாவும் சாப்பிட வேண்டாமா?.’ என்றவன் ஷரத்தை தன் கையில் வாங்கியவன்,

‘வா வந்து சாப்பிடு.’ என்று ஷன்மதியை அழைத்துச் சென்றான். அதன் பின் உணவு மேஜையில் யார் யாருக்கு ஊட்டி விட்டார்கள் என்பது தெரியாமல் மூவரும் உணவு அருந்தினர்.

 

ஷன்மதி சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுங்கு படுத்தி வரும் பொழுது, அப்பாவும் மகனும் பல்கனியில் இருந்த சேரில் அமர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்தனர். விஷ்ணுவின் அருகில் சென்று அமர்ந்த ஷன்மதி அவன் தோளில் சாய்ந்து அமர்ந்தாள். விஷ்ணுவும் அவளின் செய்கையைப் புரிந்து கொண்டு தன் கன்னத்தை அவள் உச்சி வகிட்டில் வைத்து அழுத்தினான். ஷரத்தும் தன் பங்கிற்கு அம்மாவை மறுபக்கம் வந்து அணைத்துக்

கொண்டான்.

 

காதல் கல்யாணம் வேண்டாம் என்று இருந்தவளை தன் அன்பினால் காதலித்துக் கல்யாணம் பண்ணி வாழ்க்கையில் பிடிப்பு வரச் செய்தான் இந்த அன்பு காதலன் கணவன். அன்று தன் விழியில் விழுந்து இதயம் நுழைந்து தன் உயிரில் உணர்வில் கலந்தவளை, இன்றும் அந்த நேசம் கொஞ்சமும் குறையாமல் இருக்கும் அந்தக் காதல் கணவன் இனி அவளையும், ஷரத்தையும் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்வான். ஷன்மதியின் வாழ்க்கை இனி அர்த்தம் உள்ளதாக இருக்கும்.

 

அடுத்து வந்த விஷ்ணுபரத்-ஷன்மதி திருமணநாளின் போது ஷன்மதி ஏழு மாத கர்ப்பிணி. காலையில் இருவரும் யோகேந்திரன் யசோதாவிடம் ஆசிர்வாதம் வாங்கினர். யோகேந்திரன்-யசோதா இருவரும், ஷன்மதியை குனியக் கூடாது என்று கூறி நின்றபடி அவளை ஆசிர்வதித்தனர். விஷ்ணு மட்டும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.

 

‘தீர்க்காயுசா இதே போல் சந்தோசமாக இருங்கள்.’ அடுத்து ஆண்டாளிடமும் ஆசிர்வாதம் வாங்கினர். ஏழு மாத கர்ப்பிணியாகச் சந்தோசத்துடன் தன் மகளைப் பார்க்கும் போது ஆண்டாளுக்கும் மனது நிறைந்தது. இதற்கு எல்லாம் காரணமான மருமகனை மனதில் நன்றியுடன் நினைத்தார்.

 

காலை உணவு உண்டு எல்லோரும் அமர்ந்து பேசிக்கக் கொண்டு இருந்தனர். ஷரத் விஷ்ணுவிடம்,

 

‘அப்பா எப்போப்பா தங்கச்சி பாப்பா வரும்?. எனக்குப் பார்க்கணும் போல் ஆசையா இருக்கு.’ விழிவிரித்து ஆசையுடன் கேட்ட மகனை தன்னுடன் அணைத்தவன்,

 

‘ம்… நீ பாப்பா சீக்கிரம் வரணும்ன்னு சாமியைக் கும்பிடு. பாப்பா சீக்கிரம் வந்துடும்.’

 

ஷரத்தின் வேண்டுதலாலோ என்னவோ சொன்ன தேதிக்கு முன் ஷன்மதிக்கு வலி வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிரசவ அறைக்குச் செல்ல கணவனுக்கு மட்டும் அனுமதி உண்டு என்பதால் விஷ்ணு அவள் கூடவே இருந்தான்.ஷன்மதி படும் வேதனைகளைப் பார்த்தவன் கண்ணிலும் நீர் அரும்பியது.

 

‘ஷம்மு ப்ளீஸ்…கொஞ்சம் நேரம் தான் .ரொம்ப வலிக்குதாடா.’ என்று கண்ணில் கண்ணீருடன், பதைபதைப்புடன் தன் கையைப் பிடித்துக் கொண்டு கேட்கும் கணவனைப் பார்க்கும் பொழுது ஷன்மதி தன் வலிகளைப் பல்லை கடித்துக் கட்டுப் படுத்திக் கொண்டாள். அவளுக்கும் விஷ்ணு படும் வேதனை சகிக்க முடியவில்லை.

 

இப்படியாக அரை மணி நேரம் எல்லோருக்கும் ஆட்டம் காண்பித்து அவர்களின் பெண்ணரசி மண்ணுலகம் விஜயம் செய்தாள். குழந்தையைக் கையில் வாங்கும் முன், விஷ்ணு ஷன்மதியின் முன் நெற்றியில் முத்தமிட்டு ,அவள் தலையை வருடியவன் ,

 

‘தேங்க்ஸ்.’ என்றான்.

 

இந்த ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தம் புதைந்து இருப்பதாக ஷன்மதிக்குப் பட்டது. அதற்குள் மருத்துவர் குழந்தையைக் குடுக்க, குழந்தையிடம் சென்றது இருவரின் பார்வையும். அச்சு அசலாக ஷன்மதியை உரித்து வைத்து இருந்த பெண்ணைப் பார்த்தும் விஷ்ணுவிற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

 

அதற்குள் குடும்ப உறுப்பினர்கள் வரவும் , எல்லோரும் குழந்தையைக் கொஞ்ச என்று நேரம் சென்றது. ஷரத் தன் தங்கையைக் கொஞ்சி கொஞ்சி மகிழ்ந்தான். குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா பெரியதாக நடத்தினர். விஷ்ணுவும் ஷன்மதியும் ஏக மனதாக ஷாலினி என்ற பெயரை தேர்ந்தெடுத்தனர். வந்திருந்தவர்கள் எல்லோரும் குழந்தையைப் பார்த்து ஷன்மதியை போல் இருக்கிறது, அம்மாவை போல் நல்ல அழகு என்று கூறினர்.

 

இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த ஷரத்தின் மனதில் தான் யாரை மாதிரி என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க தொடங்கினான். விஷ்ணு சாப்பிடுவதற்காக ஷரத்தை தேடியவன் , அவன் ஒதுங்கி அமைதியாக உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து , ஷன்மதியை அழைத்துக் கொண்டு அருகில் சென்றான்.

 

‘ஹலோ மை பாய் ஏன் தனியா இருக்கே?.’ ஷரத் அதற்கும் அமைதியாக இருக்கவும் ஷன்மதி,

‘ஏன் ஷரத் கண்ணா பேச மாட்டிங்களா?. ஏன் அப்பா அம்மா மேல் கோபம்?.’ தாய் கேட்டதும் அவளை அணைத்துக் கொண்டு,

 

‘எல்லாரும் பாப்பா அம்மா மாதிரின்னு சொல்றாங்க. அப்ப ஷரத் யாரை மாதிரி?.’ ஷரத்தின் கேள்வியில் ஷன்மதி என்ன பதில் சொல்வது என்று திகைத்து விட்டாள்.

 

ஷன்மதியிடம் இருந்து ஷரத்தை தூக்கிய விஷ்ணு, ‘ஒஹ்… மை பாய் இது தான் உன் கவலையா?. உனக்கு இந்த அப்பா ஞாபகம் வரலியா?. நீ என்னை மாதிரிடா செல்லம்.’

என்று ஷரத்தின் பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டான். விஷ்ணுவின் பதிலில் ஷரத் சமாதானம் அடைந்தான்.

 

‘அப்ப நான் உங்களை மாதிரி உயரமா வளருவேனா?.’

 

‘என்னை விட உயரமா.’ என்ற விஷ்ணுவின் கன்னத்தில் ஷரத் முத்தமிட்டவன்,

 

‘நான் போய்ப் பாப்பாவை பார்க்க போறேன்.’ என்று அவன் கைகளில் இருந்து இறங்கி ஓடினான்.

 

இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ஷன்மதியின் கண்களில் அன்பு, காதலும் நிரம்பி வழிந்தது. அம்மாவும், அத்தையும் போட்டி போட்டுக் கொண்டு கவனித்ததில் ஷன்மதியின் உடல் முதலில் இருந்ததை விட நன்கு மெருகேறி இருந்தது. அழகு தேவதை போல் தன் அருகில் நின்று இருந்த மனைவியின் மையல் பார்வையில் தன்னைத் தொலைத்தான் விஷ்ணு. அவள் அருகே வந்து வேண்டும் வேண்டும் உரசிக் கொண்டு நின்றவன் ,

 

‘மேடம் இந்தப் பார்வை பார்த்தால் ஒரு சின்னப் பையன் மனசு தாங்குமா?. ம்… உன் பொண்ணால மூணு மாசம் பக்கத்திலே வரக் கூடாது. மூணுமாச கெடுவை நாம ஏன் ஒரு மாசமா தளர்த்த கூடாது ஷம்மு.’ இன்னும் இங்கு இருந்தால் இன்றே என்று தன் மனதை மாற்றி விடுவான் என்பதை உணர்ந்த ஷன்மதி,

 

‘அத்தை கூப்பிட்டீங்களா?.’ என்று உள்ளே விரைந்தாள். வெட்கப்பட்டு உள்ளே மனைவி ஓடுவதைக் கண்டு நகைத்த விஷ்ணுவின் நகையோலி ஷன்மதியை துரத்தியது.

 

முற்றும் *_*

 

16 Comments

 1. VVIN #Amazing story Plot…..remba nallairundhuchu Akka…..lov to read…thanks a lot fr the story….❣️❣️❣️❣️

 2. ARUMAIYA IRUNTHADU. SEMMA STORY.

 3. Fabulous story
  Loved it
  Thank u so so much

 4. Super Sri
  Enakku roomba puditha story
  Thanks

 5. samma akka vera leval eppume love you akka

 6. Super story. vishnu character superb

 7. Wow…… super story sis😍😍😍 Vishnu character amazing avanoda love, and 9 years wait panni sammu voda sernthathu yellame super, arumayan story kuduthathuku valthukkal Sri sis😘😘😘😘😘😘

  1
 8. Super story mam👌👌

 9. So nice.Everytime when I read it is like a new story.What a hero!Awesome

 10. Nice story sis

  raghumohana2002
 11. roma romba azhgana kaadal kadai vishnuvai pola oru kaadalan oru kanavan chancese illai story pramaatham roma nantraaha irunthathu niraivana mudivu superb mam(viji)

 12. Lovely story.. Enjoyed a lot

 13. Nice story

 14. Arumaiyana kathai sissy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *