“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 25 & 26 2

 விழியில் விழுந்து…இதயம் நுழைந்து.

அத்தியாயம்:25.

 

விஷ்ணுபரத் ஷன்மதியிடம் தன்னைத் தொலைத்தவன் மேலும் மேலும் அவளுள் மூழ்கி முத்தெடுக்க நினைத்த சமயத்தில், அவன் முகத்தில் ஈரம் பட்டது. முகத்தில் பட்ட ஈரத்தில் தன் சுயநினைவு வந்தவன், விலகி மனைவியின் முகம் பார்த்தான். ஷன்மதி கண்களை இறுக மூடி இருந்தாலும் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருந்தது. உடல் விறைத்து எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தவளை பார்த்து விஷ்ணுவின் மனதில் வலி குடி புகுந்தது.

 

‘ச்சே…. என்ன மனிதன் நான். அவளே தன் வாழ்க்கையில் நடந்ததை எண்ணி மறக்க முடியாமல் தவிக்கும் போது, அவளின் மனதின் காயத்திற்கு மருந்து போடாமல் இப்படி மிருகத்தனமாக நடந்து கொண்டேனே.’ தன் மீதே அவனுக்கு வெறுப்பு வந்தது.

 

இன்னும் கண் இறுக மூடி படுத்து இருக்கும் ஷன்மதியின் கன்னம் தட்டி, ‘ஷம்மு… ஷம்மும்மா…’ அந்த வார்த்தைக்கே வலிக்குமோ என்பது போல் விஷ்ணுவின் குரல் அவ்வளவு மென்மையாக இருந்தது.

 

விஷ்ணுவின் அழைப்பில் விழித்தவள் பதறி அவசரமாக எழுந்தவள் ஒன்றும் பேசாமல் முழங்காலில் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள். ஷன்மதி அழுவது கண்டு மனம் பொறுக்காமல் அவளை அருகில் இழுத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். அணைப்பில் இருந்து விலகியவளை மறுபடியும் இழுத்து அணைத்தவன்,

 

‘ஷம்மு ப்ளீஸ்… அழாதே. சாரிடா… இது மாதிரி இனி மேல் நடக்காது. உன் விருப்பம் இல்லாமல் நான் எதுவும் செய்ய மாட்டேன்.’

 

விஷ்ணு கூறியதை கேட்டதும் அவளின் அழுகை கூடியது. அழுகையின் ஊடே, ‘அதான் நான் சொன்னேன் என்னால் உங்களுக்கு எந்தச் சுகமும் கிடைக்காது. நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் என்று தான் நான் உங்களை விட்டு பிரிந்ததே. இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க.’ என்று ஷன்மதி கூறியதை கேட்டு விஷ்ணுவிற்குக் கோபம் தலைக்கேறியது.

 

ஆனாலும் ஷன்மதி நிலையில் இருந்து பார்த்தால் அவள் சொல்வதும் நியாயமே என்று நினைத்தவன், கண்களை இறுக மூடி தன் மனதை சமன் செய்தான். பின் ஷன்மதியிடம்,

 

‘ஷம்மு… நான் வேற கல்யாணம் பண்ணிக்கனும்னு எண்ணம் இருந்திருந்தால் எப்பொழுதோ பண்ணி இருப்பேன். என்னைப் பொறுத்தவரை நீ தான் என் மனைவி. இவ்வளவு வருஷம் தனியா இருந்த எனக்கு இனி மேலும் தனியா வாழ தெரியும். அதனால இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க என்ற அசட்டுப் பேச்சை இத்தோடு விட்டு விடு. நாம இத்தனை வருஷம் பிரிந்து இருந்தது போதும். இனி ஒருபோதும் பிரிவு என்ற பேச்சே இருக்கக் கூடாது. இனி ஒருபோதும் நீ அழக்கூடாது.’ என்று கூறியவன் ஷன்மதியின் இரு கண்ணிலும் தன் இதழை ஒற்றி எடுத்தான்.

 

‘இவ்வளவு நாள் நீ இல்லாமல் நான் தவிச்சது போதும். நீ என் அருகில் இருந்தாலே போதும்.’ என்று கூறுபவனைக் கண்டு ஷன்மதியின் மனமும் அதைத் தான் நினைத்தது. விஷ்ணு அருகில் இருந்தாலே தனக்கும் மன அமைதி ஏற்படுகிறது என்பதை ஷன்மதியும் உணர்ந்து தான் இருந்தாள்.

 

‘பரத், ஷரத் பத்தி…’ என்றவளின் வாயை தன் கரத்தைக் கொண்டு மூடியவன்,

 

‘ஷரத் உனக்கு மகன் என்றால் அவன் எனக்கும் மகன் தான். இனி அவன் நம் மகன்.’

என்று கூறியவன் ,

 

‘வா போகலாம். வீணா தேடப் போகிறாள்.’ என்றதும் தான் ஷன்மதிக்கு நினைவு வந்தது.

 

‘ஐயோ வீணா அகிலேஷ்க்கு டிரெஸ் எடுத்துட்டு வரச் சொன்னாளே.’ என்று பதட்டத்துடன் எழுந்தவளை பார்த்து,

 

‘ரிலாக்ஸ் ஷம்மு. எனக்கு நீ இங்கு இருப்பது எப்படித் தெரியும்?.’

 

விஷ்ணுவின் வார்த்தையில் ஷன்மதிக்கு எல்லாம் புரிந்தது. வீணா வேணும் என்றே தான் மேலே அறைக்கு அனுப்பினாளா என்று நினைத்தவள் முகம் சிவந்தது. இருவரும் கீழே சென்றனர். விஷ்ணுவின் முகம் மலர்ந்து இருப்பதையும், தன் தோழியின் முகம் சிவந்து இருப்பதையும் பார்த்து வீணாவின் மனதில் நிம்மதி குடி கொண்டது. வீணாவிடம் சென்ற விஷ்ணு,

 

‘வீணா எனக்கு வேலை இருக்குன்னு சொல்லும் போது, யுவனுக்கும் ரகுவுக்கும் இல்லாத வேலை நமக்கு மட்டும் என்ன என்று யோசித்தேன். ஆனா இப்போ புரிந்து விட்டது. இந்த வேலையை நான் மட்டும் தானே செய்ய முடியும்.’ வீணாவிடம் சொன்னவன், ஷன்மதியை பார்த்துக் கண் சிமிட்டி சிரித்தான். அவன் சொன்ன விதத்தில் மற்ற இருவரும் வாய் விட்டு சிரித்தனர்.

 

மாலை வேளையில் வீணாவின் வீடு வண்ண விளக்குகளால் ஜொலித்தது. ரகு-வீணா தம்பதியினர் வாயிலில் நின்று விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டு இருந்தனர். விஷ்ணுவின் கண்களோ தன் மனைவியையே பின் தொடர்ந்தது. மாலை நேர விழா என்பதால் பாலாடை நிறத்தில் எளிமையான பட்டுடுத்தி அழகு தேவதையாய் இருந்தவளை கண்கள் பின் தொடராமல் என்ன செய்யும். ஷன்மதி இதைக் கவனிக்க வில்லை.

 

ஆனால் இதை மூன்று ஜோடிக் கண்கள் கவனித்துக் கொண்டு இருந்தது. விஷ்ணுவின் பார்வை ஷன்மதியை தொடர்வதைக் கண்டு யோகேந்திரனும், யசோதாவும் ஒருவருக்கொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். மூன்றாவது ஜோடிக் கண்களுக்குச் சொந்தக்காரர் நம்ம ஷன்மதியின் அம்மா ஆண்டாள் தான்.

 

‘இவ்வளவு பிரியம் வைத்து இருக்கும் இந்தப் பையனை புரிந்து கொள்ளாமல் ஏன் தான் இவள் இத்தனை காலம் பிரிந்து இருந்தாளோ.’ என்று மனதில் நினைத்தவர் பெருமூச்சொன்றை வெளியிட்டார்.

 

பிறந்த நாள் விழா கொண்டாட்டம் முடிந்து ஷன்மதி, ஆண்டா, ஷரத் கிளம்ப எத்தனிக்க, அங்கு வந்த யசோதா,

 

‘மதி உன்னை வீணா கூப்பிடுகிறாள். என்னன்னு போய்க் கேட்டு வாம்மா.’

 

‘சரிங்க அத்தை.’ என்றவள் உள்ளே சென்றாள்.

 

வீணாவிடம் பேசிவிட்டு வெளியே வந்தவள் கண்ணில், விஷ்ணு யசோதாவிடம் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்தாள். அவன் முகம் சிவந்து இருந்தது. சிரித்தபடி ஒரு கையால் தன் தலை முடியை கோதிக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தவனைக் கண்டு ஷன்மதியின் மனமும் மயங்கியது. அவள் பார்வையை உணர்ந்து திரும்பிய விஷ்ணு கண்ணால் அவளை “வா” என்று அழைத்தான்.

 

அருகில் சென்ற ஷன்மதியிடம் யசோதா, ‘சரி மதி நீ கிளம்பும்மா. விஷ்ணு பத்திரமாகக் கூட்டிட்டு போப்பா.’

 

‘சரிம்மா.’ என்றவன் ஷரத்தை துக்கிக் கொண்டு ஷன்மதியை பார்த்தான். அவளோ தன்

அம்மாவிடம்,

 

‘வாங்கம்மா போகலாம்.’

 

‘இவ்வளவு நாள் கழிச்சு சம்பந்தி அம்மாவை பார்த்து இருக்கேன். நான் அவங்களோட பேசிட்டு இங்கேயே தங்கி கொள்கிறேன். நீ கிளம்பும்மா.’ என்ற ஆண்டாளிடம் ஷன்மதியால் மறுக்க முடியவில்லை.”சரி” என்று தலையை ஆட்டியவள், எல்லோரிடமும் விடை பெற்றாள்.

 

விஷ்ணு ரகுவின் வீட்டு டிரைவரிடம் காரை எடுக்கச் சொன்னான். அவனுக்குச் சென்னை புதுசு என்பதால் அப்படிச் செய்தான். காரில் ஏறி அமர்ந்த பின் ஷரத் விஷ்ணுவிடம் பேசிக் கொண்டே உறங்கி விட்டான். வீடு வந்ததும் ஷன்மதி தூங்கிய ஷரத்தைவிஷ்ணுவின் மடியில் இருந்து தூக்கியவள், வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று மகனை படுக்கையில் கிடத்தினாள். போர்வையை எடுத்து மகனுக்குப் போர்த்தி விட்டு திரும்பியவள், படுக்கை அறை வாயிலை அடைத்தபடி நின்று இருந்த விஷ்ணுவை கண்டு

திகைத்தாள்.

 

பின் சுதாரித்துக் கொண்டு, ‘நீங்கள் கிளம்பலையா?.’

 

‘ஐயோ என் மக்கு மனைவியே… ‘ என்று அவள் நெற்றியில் செல்லமாக முட்டியவன்,

 

‘நான் ஏன் போகணும்? என் மனைவி, மகன் எங்கேயோ அங்கே தான் நானும் இருப்பேன்.’ என்று அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.

 

ஷன்மதிக்குப் புரிந்தது. யசோதா தான் விஷ்ணுவிடம் ஏதோ சொல்லி இருக்க வேண்டும். அதான் அவன் அம்மாவிடம் பேசும் போது முகம் சிவக்க நின்றிருந்தானா?.தன் போக்கில் யோசித்துக் கொண்டு இருந்தவள் முன் சொடக்கு போட்டு அவள்கவனத்தைத் திருப்பினான்.

 

‘ஹலோ மேடம் என்ன நின்னுகிட்டே கனவா?.’

 

‘இது எல்லாம் உங்க அம்மா ஏற்பாடா?.’

 

‘இல்லையே உன் மாமியாரும் என் மாமியாரும் சேர்ந்து செய்த ஏற்பாடு.’ என்று கிண்டலுடன் கூறியவன், பின் சீரியசான குரலில்,

 

‘இங்கே பாரு ஷம்மு. நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி. இதில் என்ன தவறு இருக்கிறது.நான் உன் கூட இல்லைன்னா தான் தவறு.’ விஷ்ணுவின் குரலில் ஒன்றும் பேசாமல் இருந்தவள்,

 

‘சரி நீங்க படுத்து தூங்குங்க. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு.’ என்று சொல்லிவிட்டு அவசரமாக வெளியேறினாள். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒடுபவளை விஷ்ணுவின் கேலி சிரிப்புத் துரத்தியது.

 

வேலை என்று ஒன்றும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் முகம் பார்ப்பதற்குக் கூச்சப்பட்டு வெளியே வந்தவள், ஒரு அரை மணி நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிவிட்டுப் படுக்கை அறைக்கு வந்தாள். மெதுவாக விஷ்ணு தூங்கி விட்டானா என்று பார்க்க வந்தவள், அங்கு விஷ்ணு தூங்காமல் ஷரத்தின் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து அவள் மனம் நெகிழ்ந்தது.

 

ஷன்மதி வந்த அரவம் கேட்டு விஷ்ணு திரும்பி பார்த்தான். இனியும் தப்பிக்க முடியாது என்று எண்ணியவள் பேசாமல் ஷரத்தின் மறு பக்கம் வந்து படுத்தாள். விஷ்ணு ஷன்மதியின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்தவன்,

 

‘ஷரத்தை வளர்க்க தனியா ரொம்பக் கஷ்டப்பட்டாயா?’ விஷ்ணுவின் குரலில் வேதனை தெரிந்தது.

 

கணவன் இல்லாமல் குழந்தையுடன் இருப்பவளை இந்த உலகம் என்ன பார்வையில் பார்க்கும் என்பதை அனுபவித்த ஷன்மதிக்கு அந்த வேதனை நினைவில் வந்து கண்களில் நீர் அரும்பியது. நல்ல வேளை அம்மா, வீணா, ரகு உடன் இருந்ததால் தப்பித்தேன் என்று நினைத்தவள், விஷ்ணு மனம் சங்கடப்படக் கூடாது என்று, கண்ணீரை உள்ளுக்குள் இழுத்து கட்டுப்படுத்தியவள் ,

 

‘இல்லை’ என்று மெதுவாகக் கூறி புன்னகைத்தாள்.

 

ஒரு கணம் என்றாலும் அவள் முகத்தில் தோன்றிய வேதனையின் சாயலை விஷ்ணு கண்டு கொண்டான். அவனின் மனமும் வேதனை அடைந்தது. இனி மேலாவது அவளைச் சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவன், ஷன்மதியின் தலையை ஆறுதலாகத் தடவியவன், அவள் முன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, ‘தூங்கு’ என்று கூறி மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டான்.

 

ஷன்மதி அருகில் இருப்பதே நிம்மதி என்று எண்ணியவனுக்கு நன்றாக உறக்கம் வந்தது. ஆனால் ஷன்மதிக்கு தான் தூக்கம் வரவில்லை. நன்கு உறங்கிக் கொண்டு இருந்த விஷ்ணு ஷன்மதியின் அசைவில் விழித்தான். அவள் உறக்கம் வரமால் தவிப்பதைக் கண்டவன்,

 

‘என்ன ஷம்மு தூக்கம் வரலியா?’ விஷ்ணுவின் குரலில் திரும்பி பார்த்தவள்,

 

‘ம்’ ஒற்றைச் சொல்லில் பதில் அளித்தாள்.

 

விஷ்ணு எழுந்தவன் ஷரத்தை கட்டிலின் ஓரமாகப் படுக்க வைத்து, அவன் கீழே விழாதபடி தலையணைகளை அணைவாகக் கொடுத்தவன், ஷன்மதியின் அருகில் சென்று படுத்தான். திடுக்கிட்டு பார்த்த ஷன்மதியை மென்மையாக அணைத்து முத்தமிட்டவன், அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்.

 

‘என்கிட்ட ஏன் பயம் ஷம்மு? நான் தான் சொல்லி இருக்கேனே உன் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது என்று. பயமில்லாமல் தூங்கு.’ என்றவன், ஒரு கையால் அவளை அணைத்துக் கொண்டு மறுகையால் அவள் தலையை மென்மையாக வருடிக் கொடுத்தான். அவ்வளவு நேரம் அலைபாய்ந்த ஷன்மதியின் மனம், விஷ்ணுவின் அணைப்பிலும் வருடலிலும் அமைதி அடைந்து தூக்கத்தில் ஆழ்ந்தது.

 

ஷன்மதியை அணைத்து இருந்த விஷ்ணுவின் மனமோ தூக்கத்தை மறந்தது. ‘இவளின் மனக்காயத்தை ஆற்றி இவளை அதில் இருந்து எப்படி வெளிக் கொணர்வது?’ என்று விஷ்ணுவின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.

 

விழியில் விழுந்து…இதயம் நுழைந்து.

அத்தியாயம்:26.

 

வீணாவின் மகன் அகிலேஷ்க்கு மொட்டை போட திருப்பதி சென்றனர். பெருமாள் சந்நிதியில் நிற்கும் போது விஷ்ணுவின் மனமும், ஷன்மதியின் மனமும் உணர்ச்சி கொந்தளிப்பில் தவித்தது. இதே போன்று பெருமாள் சந்நிதியில் நடந்த தங்கள் திருமணம் இருவருக்கும் ஞாபகம் வந்தது. அர்ச்சகரின்,

 

“ஜரகண்டி” என்ற குரலில் சுய நினைவு அடைந்தவர்கள் வெளியே வந்தனர். வெளியே

வந்த விஷ்ணு ஷன்மதியின் கைகளை இறுக பற்றியவன் அதன் பின் விடவே இல்லை. ஷன்மதிக்கும் அவன் தன் கரங்களை இறுக்கப் பற்றி இருந்தது சற்று ஆறுதலாக இருக்கவே அவளும் ஒன்றும் பேசவில்லை.

 

திருப்பதி போய்விட்டு வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பதற்கு ஏற்ப, அங்குச் சென்று வந்த பின் ஷன்மதியின் நடத்தையிலும் கொஞ்சம் மாற்றம் வந்தது. விஷ்ணுவிடம் சகஜமாகப் பேசும் அளவிற்கு மாறி இருந்தாள். விஷ்ணு அவளை மாற்றி இருந்தான். விஷ்ணுவின் ஒவ்வொரு செயலும் ஷன்மதிக்காக என்பது போல் இருந்தது. உனக்காக நான் இருக்கிறேன் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.

 

ஒரு மனைவி தன் கணவனுக்குச் செய்யும் அன்றாட வேலைகளைச் செய்யப் பழகி இருந்தாள். ஆனாலும் ஷன்மதியால் ஒரு அளவிற்கு மேல் விஷ்ணுவிடம் நெருங்க முடியவில்லை. அந்தத் தயக்கம் இன்னும் இருந்து கொண்டே தான் இருந்தது. விஷ்ணு அதை எல்லாம் பெரிதாகக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவள் தன் அருகில் இருந்தாள் போதும்

என்றே நினைத்தான்.

 

விஷ்ணு ஷன்மதியை தாங்குவதைக் கண்டு விலாசினிக்கு மட்டும் பிடிக்கவில்லை. அவள் மனதில் எரிமலை வெடித்துக் கொண்டு இருந்தது. அது என்று வெடிக்கப் போகிறதோ தெரியவில்லை.

 

திருப்பதி போயிட்டு வந்த பின் எல்லோரும் ஊருக்கு செல்ல கிளம்பினர். யசோதா விஷ்ணுவிடம்,

 

‘விஷ்ணு நீ இருந்து ஷன்மதி,ஷரத் உன் மாமியார் எல்லோரையும் கூட்டிக் கொண்டு வா. நாங்கள் போய் அவர்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பார்க்கிறோம்.’ யசோதாவின் வார்த்தைகளை ஆண்டாள் மறுத்தார்.

 

‘பொண்ணு குடுத்த இடத்தில் நான் எப்படி வந்து தங்கிக் கொள்வது. நான் இங்கேயே இருக்கேன். அதான் வீணா, ரகு இருக்காங்களே. எனக்கு என்ன பயம்?’ தாயின் வார்த்தைகளைக் கேட்டதும் ஷன்மதிக்கு தூக்கிவாரி போட்டது. இவ்வளவு நாள் கூட இருந்த அன்னையைப் பிரிந்து செல்வதா? என்று அவள் மனமும் கலங்கியது.

 

‘நானும் உங்க கூட இங்கேயே இருந்து விடுகிறேன். அங்கே நான் போகல.’

 

‘மதி அசடாட்டம் பேசாதே. இவ்வளவு நாள் மாப்பிள்ளையைப் பிரிந்து இருந்தது போதும். அவர் கூடக் கிளம்பி போகிற வழியைப் பாரு.’

 

வீணாவும் முன் வந்து, ‘நான் அம்மாவை பார்த்துக் கொள்கிறேன் ஷன்மதி. நீ கவலைப்படாம அண்ணா கூடப் போ.’

 

இதை எல்லாம் கவனித்த விஷ்ணு தன் மாமியாரிடம், ‘நீங்கள் எங்களுடன் வருவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. உங்களுக்குத் தேவையானதை நான் செய்து தருகிறேன். தயவு செய்து எங்களுடன் வாங்க.’

 

மருமகனின் பேச்சில் ஆச்சிரியம் அடைந்த ஆண்டாள், சம்பந்தி அம்மாள் ஏதும் சொல்லிவிடப் போகிறார்கள் என்று பயத்துடன் அவர் முகம் பார்த்தார். ஆண்டாள் முகத்தில் இருந்த பயத்தைபார்த்த யசோதா ,அவர் அருகில் சென்று அவர் கையை வாஞ்சனையுடன் பிடித்துக் கொண்டு,

 

‘அங்கு எல்லாம் பெண் வீட்டில் தான் பெண்ணைப் பெற்றவர்கள் இருப்பார்கள். நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம். நீங்கள் வருவது எங்களுக்குச் சந்தோசமே. நாம் அனைவரும் ஒரு வீட்டில் இருப்போம்.’ யசோதாவின் அன்பில் ஆண்டாள் நெகிழ்ந்து போனார்.

 

ஷன்மதியை கூட்டிக் கொண்டு போக முடிவு செய்த பின் காரியங்கள் மிக வேகமாக நடந்தன. முதலில் இருவரின் திருமணத்தையும் பதிவு செய்தனர். இடைப்பட்ட நாட்களில் விஷ்ணு ஷன்மதிக்கும் ஷரத்துக்கும் விலை உயர்ந்த ஆடைகள், நகைகள் என வாங்கிக் குவித்தான். ஷன்மதி வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல விஷ்ணுவும் வீணாவும் அவளை அடக்கினர். விஷ்ணு கிளம்புவதற்கு முன் ரகுவிடம் ஒரு

காசோலையை நீட்டினான்.அதில் 10 லட்சத்திற்குத் தொகை குறிப்பிட பட்டு இருந்தது.

 

‘விஷ்ணு என்னது இது.’ என்ற ரகுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு,

 

‘நீங்கள் என் ஷம்மு பார்த்துக் கொண்டதற்கு நான் செய்வது கொஞ்சம் தான். இந்தப் பணம் நீங்கள் நடத்தும் இல்லத்திற்குத் தான் குடுத்து இருக்கிறேன். உங்களுக்குக் குடுத்து நான் நட்பை கொச்சைப் படுத்தவில்லை.’ விஷ்ணுவின் மனதை புரிந்து கொண்ட ரகுவும்,அவனைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

 

ஷன்மதிக்கும் வீணாவிடம் இருந்து விடைபெறும் போது பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. கண்கள் கலங்க தோழியிடம் விடைபெற்றாள். வீணாவிற்கு வருத்தம் இருந்தாலும் தோழியின் வாழ்வு முக்கியமே என்பதால் சிரித்தபடி விடை குடுத்தாள்.

 

இதோ விஷ்ணு ஷன்மதி ,ஷரத் ,ஆண்டாள் எல்லோருமாக மும்பை வந்து சேர்ந்து விட்டான். யசோதா தன் மருமகளை வரவேற்க விமான நிலையத்திற்கே வந்து விட்டார். கூட யுவனும் , அஷானியும் வந்து இருந்தனர். தன் மருமகளை வாஞ்சையுடன் வரவேற்றார்.

 

யுவன் விஷ்ணுவிடம் கார் சாவியைக் குடுத்தவன், ‘நீ சிஸ்டர் கூட்டிட்டு வா. நான் மத்தவங்களைக் கூட்டிட்டு போறேன்.’ சிறியவர்கள் இருவரும் ,

 

‘நான் அப்பா கூடப் போறேன்.’

 

‘நான் மாமா கூடத் தான் வருவேன்.’ என்று விஷ்ணுவின் இரு கைகளிலும் தொத்திக் கொண்டார்கள். யுவன் தன் மகளைக் கண்டிக்க விஷ்ணு தடுத்தான்.

 

‘நான் கூட்டிட்டு வரேண்டா. நீ ஏன் சத்தம் போடுற?.’ என்றவன் சிறியவர்களை அழைத்துக் கொண்டு நகர ஆரம்பிக்க, ஷன்மதி எங்குச் செல்வது என்று தயங்கி நின்றாள். அவளின் தயக்கத்தைப் பார்த்த யசோதா,

 

‘நீ விஷ்ணு கூட வாம்மா. நான் உன் அம்மா கூடப் போகிறேன்.’ என்று ஆண்டாளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

 

விமான நிலையத்தில் இருந்து வீடு வந்து சேருவதற்கு ஒரு முக்கால் மணி நேரம் ஆனது. அந்த முக்கால் மணி நேரத்தில் விஷ்ணுவிற்கு 40 போன் கால்கள் வந்து இருக்கும். அவன் பேசிய பாஷை புரியவில்லை என்றாலும் அவன் குரலில் இருந்த கோபம் ஷன்மதிக்குப் புரிந்தது. அவளுக்கு இது தன் பரத் தானா என்ற சந்தேகம் வந்தது. அவள் மனதில் தோன்றிய பயம் கண்ணில் தெரிந்தது.

 

கை பேசியை அணைத்து விட்டு தன் சட்டை பையில் போட்டவன், ஷன்மதி பார்வை உணர்ந்து திரும்பினான்.அவள் கண்ணில் இருந்த பயம் கண்டு, இடது கையால் அவளது வலது கையைத் தன் நெஞ்சோடு சேர்த்து வைத்தவன்,

 

‘பயந்துட்டீயா, கோபம் எல்லாம் மத்தவங்க கிட்ட தான். உன் கிட்ட இல்லை.’

 

பின் இருக்கையில் ஷரத்துடன் விளையாடிக் கொண்டு இருந்த அஷானி முன் பக்கம் எட்டி பார்த்து, ‘அத்தை, மாமா நம்ம கிட்ட கோபப்பட மாட்டாங்க. நீங்க பயப்படாதீங்க.’

என்று அத்தைக்கு ஆறுதல் கூறியது.

 

அதைக் கேட்ட விஷ்ணு பெருமூச்சு ஒன்றை விட்டபடி, ‘ம்… சின்னப் பிள்ளைகளுக்கு என் அருமை தெரியுது. இந்தப் பெரிய குழந்தைக்குத் தெரியலையே.’

 

ஷன்மதி ஒன்றும் பேசாமல் வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தாள். ஷரத்தும், அஷானியும் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறியபடி விஷ்ணு வந்தான். அதற்குள் வீடும் வந்து விட்டது. ஷன்மதி அந்த வீட்டின் பிரமாண்டத்தைக் கண்டு பிரமித்தாள்.அவள் தந்தையும் வசதியானவர் தான். ஆனால் அவள் வீட்டை கொண்டு இரு மடங்கு பெரியதாக இந்த வீடு இருந்தது.

 

ஷர்மிளா, அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஆரத்தி சுற்றினாள். ஷன்மதிக்குக் கூச்சமாக இருந்தது. ‘என்ன இது புது மருமகள் போல’ என்று நினைத்தாள். யசோதா ஷன்மதியை அறைக்குச் சென்று ஓய்வு எடுக்குமாறு கூறினார். ஆண்டாளை அவர் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். விஷ்ணு ஷன்மதி ஷரத்தை அறைக்கு அழைத்துச் சென்றான். படுக்கை அறை பெரிய ஹால் அளவிற்குப் பெரியதாக இருந்தது. படுக்கை அறையிலேயே டிவி ,

பிரிஜ் அனைத்து வசதிகளும் இருந்தது. இதைப் பார்த்து ஷரத் குதுகலம் அடைந்தான்.

 

‘அப்பா ரூம் ரொம்ப நல்ல இருக்கு.’ என்று கூறியவன் விஷ்ணுவின் கையைப் பிடித்து இழுத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.

 

‘ஹலோ இதுக்கே இப்படிச் சொன்னா எப்படி.’ என்று ஷரத்தை தூக்கியவன் படுக்கை அறையின் பக்கவாட்டு அறையைத் திறந்தான். கடலின் நீல நிறத்தில் சுவர் வர்ணம் அடித்து, அதே நீல வண்ணத்தில் கட்டில், மெத்தை விரிப்புகளுடன் சிறுவனுக்கு வேண்டிய வசதியுடன் இருந்தது. சுவரிலும் ,மெத்தை விரிப்பிலும் அழகான கார்ட்டூன் சித்திரங்கள் இடம் பெற்று இருந்தது. அருகில் இருந்த அலமாரியில் ஷரத்துக்குதேவையான விளையாட்டுச் சாமான்கள், புத்தங்கங்கள் இருந்தது.

 

இதை எல்லாம் பார்த்த ஷரத் மேலும் தந்தையை இறுக்கி அணைத்து முத்தமிட்டான். ஷன்மதிக்கு ஆச்சிரியமாக இருந்தது. இவன் தங்களுடன் தானே இருந்தான். இது எப்படிச் செய்தான். தன் ஆச்சிரியத்தை வாய் விட்டு கேட்டே விட்டாள்.

‘இது எல்லாம் எப்படிச் செஞ்சிங்க?.’

 

‘யுவனிடம் சொன்னேன். ஐடியா மட்டும் தான் என்னது. அதைச் செய்தது அவன் தான். ஷம்மு பிடிச்சு இருக்கா?.’

 

‘ம்.’ என்றவளை பார்த்து சிரித்தவன்,

 

‘நீயும் ,ஷரத்தும் ரெப்ரஷ் பண்ணிகோங்க. சாப்பிடுவதற்குக் கீழே வந்தா போதும். எனக்கு யுவனோடு பேச வேண்டி இருக்கு. நான் போகிறேன்.’

 

விஷ்ணு சென்றதும் ஷரத்துக்கு உடம்பு கழுவி வேறு உடை அணிவித்தாள். அதற்கு மேல் ஷரத்தால் ஒரு அறைக்குள் அடைபட்டு இருக்க முடியவில்லை. அஷானியுடன் விளையாடப் போகிறேன் என்று ஓடிவிட்டான். ஷன்மதியும் குளித்து உடை மாற்றியவள், கீழே போக மனம் இல்லாமல், ஜன்னல் வழியே தெரிந்த தோட்டத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

ஷரத் ஆண்டாள் இருவரும் கூட இங்கு இயல்பாகப் பொருந்தி விட்டார்கள். ஆனால் ஷன்மதியால் அப்படிப் பொருந்த முடியவில்லை. இங்கு வந்து பார்த்த பின் விஷ்ணுவின் இன்றைய நிலைமை விஸ்வரூபம் எடுத்து அவள் கண் முன் ஆடியது. விஷ்ணு பெரிய கோடீஸ்வரன் என்பதை அவன் வீடும், வீட்டின் முன் நின்று இருந்த காரின் எண்ணிக்கையும் சொல்லாமல் சொல்லியது. அவனின் வசதிக்கு, தகுதிக்கு தான் எந்த விதத்தில் பொருத்தமாவோம் என்ற நினைப்பே அவள் மனதை அலைக்கழித்தது.

 

ஷன்மதி சாப்பிட வராததால் அவளை அழைக்க வந்த விஷ்ணுவின் கண்ணில், ஜன்னல் அருகே எழிலோவியமாய் நின்று இருந்த ஷன்மதி பட்டாள். அவள் அருகே சென்றவன், அவளைத் தன் புறம் திருப்பியவன்,

 

‘என்ன மேடம் யோசனை பலமா இருக்கு.’ நிமிர்ந்து விஷ்ணுவை பார்த்த ஷன்மதி ,அன்று பார்த்த பரத்துக்கும் இன்று பார்க்கும் பரத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று நினைத்தவள்,

 

‘எனக்கு உங்களைப் பார்த்தா பயமாயிருக்கு.’

 

‘ஏய் நான் என்ன பார்க்க அவ்வளவு பயங்கரமாவா இருக்கு.’ என்று சொல்லிவிட்டு சிரித்தவனைப் பார்த்து,

 

‘ஐயோ நான் அப்படிச் சொல்லல.நான் காதலிச்ச பரத் வேற. இப்ப நீங்க வசதியானவர். உங்கள் தகுதிக்கு நான் ஏற்றவளா?.’ திக்கி திணறி தான் சொல்ல வந்ததைச் சொல்லி முடித்தாள்.

 

‘ஆஹா என்ன ஒரு பெரிய கண்டுபிடிப்பு. ஆமாம் நீ தகுதி இல்லாதவள் தான்.’ என்று அமைதியுடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்ணில் அடிப்பட்ட வலி தெரிந்தது.

2 Comments

  1. Vishnu’s love was amazing👌👌

  2. oru vazhiyaha shanmathiyai azhaithukonndu vanthu vittan ini avathan maara veandudum very nice uds super mam(viji)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *