“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 19 & 20 13

விழியில் விழுந்து…இதயம் நுழைந்து.

அத்தியாயம்:19.

 

அஷ்வந்த் ராகவனிடம் ,ஷன்மதிக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டம் இல்லை என்றும், அவள் வேறு ஒருவனைக் காதலிக்கிறாள் என்றும் கூறினான். ராகவனுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

 

‘டேய், அஷ்வந்த் உனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் சொல்லிவிடு. அதற்காக ஒரு பெண்ணின் மீது அபாண்டமாகப் பழி போடாதேப்பா.’

 

‘அப்பா நான் பொய் சொல்லவில்லை. உண்மையில் மதி வேறு ஒரு பையனை காதலிக்கிறாள். ஸ்ரீநிவாசன் அங்கிளிடம் பேசி அந்தப் பையனுக்கே அவளைத் திருமணம் செய்து வைக்கும் வழியைப் பாருங்க.’

 

ஆனாலும் ராகவனால் இதை நம்பத்தான் முடியவில்லை. குனிந்த தலை நிமிராத மதியின் மனதிலும் காதலா? என்று அவருக்குப் பெரும் ஆச்சிரியம். அஷ்வந்திடம் ஒரு முறைக்கு இரு முறை கேட்டு உறுதி படுத்தியவர், ஸ்ரீனிவாசனின் அலுவலகலத்திற்குச் சென்று அவரைப் பார்த்தார்.

 

‘வா வா ராகவா என்ன அதிசயமா இருக்கு? போன் கூடப் பண்ணாம வந்து இருக்க?’

 

‘ஏண்டா உன்னைப் பார்க்க வர்றதுக்கு நான் போன் பண்ணிட்டு தான் வரணுமா என்ன? நான் பேச வந்த விஷயம் வேற.’ ராகவன் ஸ்ரீனிவாசனிடம் எல்லாவற்றையும் கூற கூற, ஸ்ரீநிவாசனுக்கு ஆத்திரம் அதிகமானது.

 

‘ராகவா அந்தக் கழுதையை நாலு அறை அறைஞ்சா கல்யாணத்துக்கு ஒத்துக்கப் போறா. அதை விட்டு விட்டு அவ காதலிக்கற பையனுக்கே கல்யாணம் பண்ணிக் குடுக்கணுமா?. அவ சின்னப் பொண்ணு ஏதோ உளறுறா என்றால் நீயும் அதுக்குச் சப்போர்ட் பண்றீயே.’

 

‘இல்லை வாசன், மதி யாரை விரும்புகிறாளோ அவன் கூடச் சேர்த்து வைக்கிறது தான் நியாயம். மனசுல ஒருத்தனை வச்சுகிட்டு வேறு ஒருவனுடன் வாழ்வது கொடுமையப்பா. அந்த நிலைமை நம் பொண்ணுக்கு வர வேண்டாம். இந்தக் காலத்தில் காதல் திருமணம் சகஜம். அந்தப் பையனை வரச் சொல்லி பேசி பார்ப்போம். நல்ல பையனா இருந்தா நாமளே அவனோட பெற்றோர் கிட்ட பேசுவோம். என்னப்பா வாசன், நான் சொல்றது சரிதானே.’

 

ஸ்ரீனிவாசனின் கண்கள் கலங்கி விட்டது. ‘ராகவா நீ கடன் குடுத்து குடுத்து என்னைக் கடனாளி ஆக்கிவிட்டாய். அந்தக் கடனை இந்த வகையில் அடைக்கலாம் என்று பார்த்தால், இந்தப் பாவி மக இப்படி ஒரு காரியம் பண்ணி இருக்காளே?.’

 

‘ஓங்கி அறைஞ்சேனா. நான் என்ன ஷன்மதிக்காகக் கடன் குடுத்த மாதிரி இல்ல பேசற. எத்தனை வருட நட்பு நம்மது. அதுக்காகத்தான் நான் கொடுத்தது. என்ன ஷன்மதி மருமகளா வந்தா நல்லா இருக்கும் என்று நினைத்தேன். அதான் நடக்கல. ம்… பரவாயில்லை, மருமகளா இல்லைன்னா என்ன மகளா நினைச்சுக்கிறேன். அவ காதலுக்கு நீ சரின்னு சொல்லப் போறீயா இல்லையா? அதை முதல்ல நீ சொல்லு.’

 

‘உனக்காக ஒத்துக் கொள்கிறேன் ராகவா. ஆனா பையன் பேக்ரவுண்ட் பிடிச்சு இருந்தா மட்டும் தான் ஓகே சொல்வேன்.’

 

‘அப்பாடி இந்த மட்டுக்கும் நீ சம்மதித்தாயே. மதி சின்னப் பொண்ணு கோபப்பட்டு அடித்து விடாதே. பார்த்துப் பக்குவமா பேசு. ஆத்திரத்தில் அறிவை இழந்துடாதே.என்ன நான் சொல்றது சரியா?.’

 

“சரி” எனபது போல் தலை அசைத்த நண்பனின் கையை ஆதரவுடன் அழுத்தி விடை பெற்றார் ராகவன்.

 

அதன் பின் வீட்டிற்கு வந்த ஸ்ரீனிவாசனின் முகம் கோபத்தில் இருந்தது. ‘ஆண்டாள்…ஆண்டாள்…’ என்று கத்தியவரை,

 

‘என்னங்க நான் இங்கே தானே இருக்கேன்.ஏன் கத்துறீங்க?.’

 

‘எங்கே உன் பொண்ணு?.’

 

‘என் பொண்ணா? இது எப்ப இருந்து? ஏன் உங்களுக்கும் பொண்ணு இல்லையாக்கும்?.’

 

‘ஏன்டி நீ வேற நேரங்காலம் தெரியாம பேசிக்கிட்டு. அம்மா தாயே போய் நம்ம பொண்ணைக் கூட்டிட்டு வா.’

 

‘ம்க்கும்” என்று முகவாயை தோள்பட்டையில் இடித்தவாறு சென்ற ஆண்டாள் ஷன்மதியைஅழைத்து வந்தார். ஷன்மதியை நிமிர்ந்து பார்த்த ஸ்ரீநிவாசனால் அவள் காதலிக்கிறாள் என்பதை நம்ப முடியவில்லை. கள்ளங்கபடமற்ற இந்த முகத்தை வைத்து எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை. முகத்தில் இல்லை கபடம், மனதில் தான் இருக்கிறது என்று நினைத்தவர்,

 

‘மதி நான் கேட்கப் போற கேள்விக்கு உண்மையைச் சொல்லு? நீ யாரையாவது காதலிக்கிறீயா?.’

 

‘என்னங்க நம்ம பொண்ணைப் பார்த்தா இப்படிக் கேட்கிறீங்க? அவ குனிந்த தலை நிமிராதவள் ஆச்சே.’

 

‘வாயை மூடுடி. ஆமா தினம் கூடவே நீ போய்ப் பார்த்த பாரு.பெரிசா பேச வந்துட்டா? மதி உன்னைத் தானே கேட்கிறேன் பதில் சொல்லு?.’ ஷன்மதிக்குப் புரிந்தது, அஷ்வந்த் ராகவன் மாமாவிடம் பேசி, அது அப்பாவின் காதுக்கு வந்து இருக்கிறது என்று. எப்படியும் திருமணத்தை நிறுத்தி தான் ஆக வேண்டும் என்று மனதில்நினைத்தவள் ,

 

‘ஆமாம்ப்பா’ என்றாள்.

 

‘பார்த்தியா உன் பொண்ணு சொல்றதை. இப்ப சொல்லு உன் குனிச்ச தலை நிமிராத பொண்ணைப் பத்தி.’

 

‘அடிப்பாவி, ஏண்டி இப்படிப் பண்ணினே?.ராகவன் அண்ணனுக்கு என்ன பதில் சொல்லப் போறோம்? அஷ்வந்துக்கு நாங்க என்ன பதில் சொல்ல போறோம்? வாயை திறந்து சொல்லுடி.’

 

‘நீயும் நானும் பதில் சொல்ல வேண்டிய கஷ்டத்தை உன் பொண்ணு வைக்கல. அவளே அஷ்வந்த் கிட்ட சொல்லிட்டா. அஷ்வந்த் ராகவனிடம் சொல்லி, ராகவன் என்னைப் பார்த்து பேசிட்டுப் போறான். அவ யாரை விரும்புகிறாளோ அவனுக்கே கட்டிவச்சுடுன்னு சொல்லிட்டுப் போறான்.’

 

‘என்னங்க அவ யாரையாவது காதலிப்பா நாம விசாரிக்காம, குலம் கோத்திரம் பார்க்காம கட்டி குடுக்க முடியுமா?.’

 

‘நாம இவ்வளவு பேசறோம். உன் மக வாயை திறக்கிறாளா பாரு.’

 

அம்மாவும் அப்பாவும் பேசுவதைக் கண்டு, தன்னால் எல்லோருக்கும் தொந்திரவு தான் என்றுஎண்ணியவள் மனம் வேதனையில் கசங்கியது.

 

‘அப்பா என்னை மன்னிச்சுடுங்க.’ என்று ஸ்ரீனிவாசனின் மடியில் தலை வைத்து அழுதாள் ஷன்மதி. மகளின் அழுகையைக் கண்டதும் கோபத்தில் இருந்த ஸ்ரீனிவாசனின் மனமும் மாறியது. அவளின் தலை ஆதரவுடன்தடவியவர்,

 

‘அம்மாடி அப்பா ஏதோ கோபத்துல கத்திட்டேன். சாரிடா. இப்ப சொல்லு யார் அந்தப் பையன்? அவனை வீட்டிற்குக் கூட்டிட்டு வா. உனக்காக அவன் அப்பா அம்மாகிட்ட நாங்க பேசுறோம். உன் சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்.’

 

‘என்னங்க அவ தான் உளர்றான்னா, நீங்களும் அவ கூடச் சேர்ந்து பேசுறீங்களே?’ ஆண்டாள் பதறினார்.

 

‘ஆண்டாள் பேசாம சும்மா இரு.நான் முடிவு பண்ணிட்டேன். என் மக

சந்தோசம் தான் எனக்கு முக்கியம். மதி நீ சொல்லுடா?’

 

ஷன்மதி திகைத்து உறைந்து நின்றுவிட்டாள். தான் காதலிப்பதை அவ்வளவு சீக்கிரம் தந்தை ஏற்றுக் கொள்வார் என்று அவள் நினைக்கவில்லை. ஷன்மதியின் கண்ணில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது. தங்கள் செல்ல மகள் தேம்பி தேம்பி அழுவதைப் பார்த்த அந்தத் தாயும், தந்தையும் பதறி போய்விட்டனர்.

 

‘ஏன்டா கண்ணா அழற? நாங்க தான் உன் விருப்பத்திற்குச் சரி என்று சொல்லிட்டோமே.’ அதற்காகத் தான் அழவில்லை என்பது போல் ஷன்மதி தலை அசைத்தாள்.

 

‘பின்னே எதுக்கு அழற?’

 

‘நான்… நான்… அவரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.’

 

‘மதி உனக்குப் புத்தி கேட்டு போச்சா. நாங்க பார்க்கிற பையன் வேண்டாம்னு சொன்ன… அதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஆனா நீ காதலிக்கிற பையனும் வேண்டாம்னா என்ன அர்த்தம்.’ ஆண்டாள் ஷன்மதியை அதட்டினார்.

 

‘ஷ்… பேசாம இரு’ என்று மனைவியை அதட்டிய ஸ்ரீநிவாசன், ‘மதிக்குட்டி,என்ன தான் பிரச்சினை உனக்குச் சொல்லுடா. சொன்ன தானே எங்களுக்குப் புரியும்.’

 

இரு வருடமாகப் பெற்றோருக்குத் தெரியாமல் மனதில் போட்டு மூடி வைத்து இருந்த ரகசியத்தை, தனக்கு நேர்ந்த அவலத்தைத் தன்னையும் அறியாமல் ஷன்மதி சொல்லத் தொடங்கினாள். தந்தைக்கு நெஞ்சு வலி இருப்பதை அந்த நிமிடத்தில் மறந்தும் போனாள். பாவம் அவளும் சிறு பெண் தானே. யாரிடம் தன் அவலத்தைச் சொல்லி ஆறுதல் தேடமுடியும். பெற்றோரிடம் மட்டும் தானே ஆறுதல் தேட முடியும்.

 

விழியில் விழுந்து…இதயம் நுழைந்து.

அத்தியாயம்:20.

 

ஷன்மதி சொல்லியதை கேட்டதும் அவள் பெற்றோர் உறைந்து நின்றுவிட்டனர். தங்களின் செல்ல மகளுக்கா இந்த நிலைமை வரணும். அதை அறியாமல் அவளின் நடவடிக்கையில் தெரிந்த மாற்றத்தை கூட உணராமல் இருந்ததை எண்ணி அவர்கள் இருவரின் மனமும் வெட்கி கூனி குறுகினர் .

 

‘அடிப்பாவி மகளே உன் நிலைமை இப்படியா ஆகணும்? அதைத் தெரிஞ்சுக்கக் கூட முடியாத பாவியா நான் போயிட்டேனே. என் மகளைப் பத்தி எல்லாம் எனக்குத் தெரியும்னு இருமார்ந்து இருந்தேனே. கடவுளே நாங்கள் உனக்கு என்ன பாவம் செய்தோம் இப்படி என் பொண்ணு வாழ்க்கையைப் பாழாக்கிட்டியே.’ ஆண்டாள் அழவும் தான் ஷன்மதி தான் சொன்ன விசயத்தையே உணர்ந்தாள்.

 

‘அப்பா,அம்மா என்னை மன்னிச்சுடுங்க. நான் மறைக்கணும்னு நினைக்கல. அப்பாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம் அதனால சொல்ல வேண்டாம்னு பாட்டி தான் சொன்னாங்க.’

 

‘நீ இப்ப சொன்னதைக் கேட்டு நான் இன்னும் உயிரோட தானே இருக்கேன். ஏன்டா உன் கஷ்டத்தை விட என் உயிர் பெரியதாடா. என் அம்மாவுக்கு நான், என் உயிர் பெரியது. ஆனா எனக்கு நீதான் உயிர். உன் துன்பம் இந்த அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சேர்ந்தது இல்லையா. இந்தச் சின்ன வயதில் எவ்வளவு பெரிய விஷயத்தை மனதில் வைத்து பூட்டிக் கொண்டு எங்களுக்காக வெளியில் சிரிச்சுக்கிட்டே நடமாடினேயே நீ. உன் மனசு யாருக்கு வரும்.’ என்று சொன்ன ஸ்ரீநிவாசன், அதற்கு மேல் தாங்க முடியாமல் அழுதுவிட்டார்.

 

அங்கே யார் யார்க்கு ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்து இருந்தனர். அதற்குப் பின் வந்த இரு நாளும் யாரும் யாரிடமும் பேசவில்லை.பேசத் தோன்றவில்லை. மனதில் வேதனையைப் புதைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டு இருக்கும் தன் தந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று ஷன்மதிக்குப் பயமாக இருந்தது.

 

விஷ்ணுவின் மனமோ வேகமாகத் திட்டம் போட்டுக் கொண்டு இருந்தது. அவனின் ஒரே குறிக்கோள் ஷம்முவை தன்னுடையவளாக்கி கொள்வது மட்டும் தான். தன் பெற்றோர் இதற்கு ஒத்துக் கொள்வார்களா, ஷன்மதியின் பெற்றோர் என்ன சொல்வார்கள் என்று எதைப் பத்தியும் அவன் யோசிக்கவில்லை. ஷன்மதியின் துயர் துடைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. விஷ்ணு ஷன்மதியை சந்திக்க நாள் குறித்து வீணாவிடம் சொல்லி அனுப்பினான்.

 

‘வீணா, ஷம்முவை கோவிலுக்கு வரச் சொல்லு. ஆனா நான் வரச் சொன்னதா சொல்லாதே. அப்புறம் அவ வரமாட்டா.’

 

வீணாவும் அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு, ஷன்மதியிடம் போன் செய்து கோவிலுக்கு வர முடியுமா என்று கேட்டாள். ஷன்மதிக்கும் வேதனையில் தவிக்கும் மனதிற்கு ஒரு மாற்றம் தேவை இருந்ததால் வருகிறேன் என்று சொல்லிவிட்டாள். ஆண்டாளும் தன் பெண் வீட்டில் அடைந்து கிடைப்பதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது. அதனால் கோவிலுக்குப் போகச் சம்மதம் குடுத்தார்.

 

ஷன்மதி கோவிலுக்குச் சென்று பார்க்கும் போது வீணா இன்னும் வந்து இருக்கவில்லை. வீணா வந்ததும் உள்ளே தரிசனத்திற்குச் செல்லலாம் என்று எண்ணி அங்கு இருந்த மண்டபத்தில் உட்கார்ந்தாள். மனதில் ஆயிரம் உணர்ச்சிகளின் போராட்டம். மனதின் போராட்டம் தாங்காமல் அங்கு இருந்த தூணில் சாய்ந்து கண் மூடி அமர்ந்தாள். மனம் முழுவதும் விஷ்ணுபரத்தின் ஞாபகங்களே வியாபித்து இருந்தது. அவளை அறியாமல் அவள் கண்ணில் கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது.

 

“ஷம்மு” என்ற விஷ்ணுவின் குரலில் பதறி கண் விழித்தாள். விஷ்ணு அவள் அருகில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்ததும் அவளுக்கு எல்லாம் விளங்கியது. வீணா விஷ்ணுவிற்காகத் தான் தன்னை வரச் சொல்லி இருக்கிறாள் என்று. எங்கே விஷ்ணுவை நேரில் சந்தித்தால் தான் கட்டுப்பாட்டை மீறி உடைந்து விடுவோமோ என்று எண்ணி அவனைத் தவிர்த்து வந்தவள், இப்பொழுது நேரில் காணவும் செய்வதறியாது திகைத்து நின்றாள்.

 

ஷன்மதியின் கண்ணீரை தன் கை கொண்டு துடைத்தவன், ‘இது போல் உன் மனதின் துயரையும் துடைக்க எனக்கு அனுமதி தருவாயா?.’ ஷன்மதி குழப்பத்துடன் பார்த்தாள்.

 

‘வீணா எல்லாம் சொல்லிவிட்டாள். நீ என்னை விரும்புகிறாயா என்று மட்டும் தான் எனக்குத் தெரிய வேண்டி இருந்தது. அது எனக்குத் தெரிஞ்சாச்சு. இப்பொழுது தான் நான் உன்னை முன்னைகாட்டிலும் அதிகமாக விரும்புகிறேன்.’ என்று கூறியவன், அவளின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.

 

ஷன்மதி விஷ்ணுவின் பதிலில் ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள். அவளின் நிலையை எடுத்துச் சொல்லாமல், அதைத் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாமல், அவள் விரும்புவதை மட்டும் எடுத்துக் கொண்டு தன்னிடம் காதல் யாசகம் கேட்கும் அவனிடம் காதல் பெருகி வழிந்தது.

 

“என்ன மாதிரியான மனிதன் இவன்.என்னை போன்ற பெண்களைக் கண்டால் ஏளனமாக நோக்கும் ஆண்கள் மத்தியில் இவன் என்னிடம் காதல் சொல்ல வந்து இருக்கிறானே. இவனுக்கு நான் என்ன செய்யப் போகிறேன். சரி என்று சொல்லி இவன் வாழ்வை பாழாக்கவா? வேண்டாம் கூடவே கூடாது.” என்று மனதில் நினைத்தவள்,

 

‘நான்…நான்… எனக்கு…’ அவள் சொல்ல வந்ததை உணர்ந்து விஷ்ணுவின் கரம் அவள் வாயை மூடியது.

 

‘அது ஒரு விபத்து. அது உன்னை அறியாமல் நடந்தது. அதையே நினைத்து நினைத்து உன் மனதை வருத்திக்காதே. எனக்கு உன் காதல், அன்பு மட்டும் போதும்.’

 

‘இல்லை பரத், உங்களுக்கு அது மட்டும் போதும். ஆனால் உங்க பேரன்ட்சுக்கு நீங்க ஒரே பையன். உங்களுக்கு வரப் போறவளை பத்தி அவங்களுக்கு ஒரு கனவு இருக்கும். என்னைப் பத்தி தெரிஞ்சா என்ன பாடுபடும் அவங்க மனசு.’ என்றவளை,

 

‘ஹேய் நிப்பாட்டு, நிப்பாட்டு. நீ பாட்டுக்கு பேசிட்டே போறீயே. இதை எல்லாம் யார் அவங்க கிட்ட சொல்ல போறாங்க.’

 

‘அப்ப பொய் சொல்ல போறீங்களா?’ விழியை அகல விரித்துச் சிறு குழந்தை போல் கேட்டவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும் என்று பரபரத்த கைகளை அடக்கி கொண்டவன்.

 

‘ஏன் பொய் என்று நினைக்கிறே? சில விஷயங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. அதுவும் நம் இருவருக்கும் இடையில் யாரும் வர நான் வர விட மாட்டேன். அது என் பெற்றோராக இருந்தாலும் கூட.’

 

விஷ்ணுவின் வார்த்தையில் ஷன்மதியின் மனம் ஆனந்தத்தில் அலைபாய்ந்தது. ஆனாலும் ஆனாலும் ஏனோ ஒரு தயக்கம் அவளிடம் இருந்து கொண்டே இருந்தது. அது வார்த்தையில் வெளிப்படவும் செய்தது.

 

‘இல்லை பரத், அது மட்டுமல்ல என்னால் உங்களுக்கு…’ என்று சொல்ல முடியாமல் தடுமாறியவள் ,

 

‘என் மனம் இறுகி போய்விட்டது. என்னைத் திருமணம் செய்வதால் உங்கள் சந்தோசமும் தொலைய போகிறது. தயவுசெஞ்சு நீங்க வேற நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க.’ என்று சொல்லிவிட்டு அழுபவளை என்ன செய்வது என்று தெரியாமல்

பார்த்தான் விஷ்ணு.

 

விஷ்ணுவிற்கு ஆயாசமாக இருந்தது. என்ன இவள் கீறல் விழுந்த ரிக்கார்ட் போல் சொன்னதையேசொல்லிக்கிட்டு இருக்காள். இவளுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது. இனி அவளுக்குப் பேசி புரிய வைத்து பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்தவன், ஒன்றும் பேசாமல் எழுந்தான். கை பற்றி அவள் எழவும் உதவி செய்தான்.

 

விஷ்ணு ஒன்றும் பேசாமல் எழுந்தது ஷன்மதிக்கு ஏமாற்றமாக இருந்தது. நாம் தான் அவனை வேண்டாம் என்கிறோம். இப்ப அவன் பேசாமல் இருந்தாலும் கஷ்டமாக இருக்கிறது. இந்த மனம் என்ன தான் நினைக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை.

 

‘வா வந்ததுக்குச் சாமியாவது கும்பிட்டு விட்டு போவோம்.’ என்று அழைத்தவனிடம் மறுபேச்சுப் பேசாமல் பின் தொடர்ந்தாள். பெருமாள் சந்நிதி வந்ததும் அங்கு இருந்த அர்ச்சகர்,

 

‘தம்பி உங்களுக்காகத் தான் காத்துக் கொண்டு இருக்கேன்.’ என்று அழைத்துச் சென்றார்.

 

விஷ்ணு இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வந்து பழக்கம் போல என்று மனதுக்குள் நினைத்தாள். ஷன்மதிக்கு தப்பாக ஏதும் நினைக்கத் தோன்றவில்லை.அர்ச்சகர் இருவரிடமும் வந்து ,

 

‘பேர் நட்சத்திரம் சொல்லுங்கோ.’

 

‘விஷ்ணு பரணி… ‘ என்று சொன்னவன் ஷன்மதியை திரும்பி கேள்வியாகப் பார்த்தான்.

 

‘ஷன்மதி சுவாதி நட்சத்திரம்’ என்று அவள் கூற… அர்ச்சகர் உள்ளே சென்று பூஜையை ஆரம்பித்தார்.

 

ஷன்மதி கண் மூடி கடவுளை வேண்டினாள். ‘இனி நான் என்றுமே பரத்துடன் இப்படிச் சேர்ந்து வரமுடியாது’ என்று மனதில் நினைத்தவள், ‘அவரையாவது சந்தோசத்துடன் வை’ என்று வேண்டினாள். ‘இந்தச் சந்தோசமாவது எனக்குத் தந்தாயே’ என்று அவள் மனம் கடவுளுக்கு நன்றி தெரிவித்தது. மனம் நெகிழ, உள்ளம் உருக கண்மூடி நின்று இருந்தாள்.

 

‘ஷம்மு நான் எது செய்தாலும் உன் நன்மைக்குத் தான். அது உனக்குத் தெரியும் தானே.’ என்று விஷ்ணுவின் கிசுகிசுப்பான குரல் அவள் காதருகில் கேட்டது. நெகிழ்ந்து இருந்த மனதின் விளைவா இல்லை விஷ்ணுவின் குரலில் இருந்த காதலினாலா எது? என்று தெரியவில்லை “ம்” என்று சொன்னவள் கண்ணைத் திறந்து பார்த்தாள்.

 

கையில் தாலியை ஏந்தியபடி நின்ற விஷ்ணு கண் இமைக்கும் நேரத்தில் அவள் கழுத்தில் கட்டினான். திகைத்து நின்று இருந்த ஷன்மதியை பார்க்க அவனுக்கும் பாவமாக இருந்தது. ஆனால் பாவம் பார்த்தால் காலம் முழுவதும் அவள் தன்னை நினைத்துக் கண்ணீர் வடிப்பாள் என்பது நிச்சயம். அதற்கு இது பரவாயில்லை. ஷம்முவை சமாளித்து விடலாம் என்று எண்ணினான்.

 

‘பரத் என்ன காரியம் பண்ணிட்டீங்க?.’

 

‘உஷ்…பேச கூடாது. காலம் புரா என்னை நினைச்சுட்டுக் கண்ணீர் வடிச்கிட்டு இருக்கப் போறீயா? நானும் உன்னை நினைச்சுட்டுக் கல்யாணம் பண்ணாம வாழணுமா? ஏன் ஷம்மு இந்தக் கஷ்டம்? நான் என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கற. எனக்கும் வேற வழி தெரியல. ‘ என்று கை பிடித்து அழைத்தவனின் கையை உதறியவள்,

 

‘தாலி கட்டினால் மட்டும் போதுமா? சேர்ந்து வாழ என் மனமும் ஒத்துக்க வேண்டாமா? என்னால் உங்க நிம்மதி கெட வேண்டாம். என்னை மறந்துடுங்க.’ என்று கூறியவள் அவனைத் திரும்பியும் பார்க்காமல் வேக நடையுடன் கோவிலை விட்டு வெளியேறினாள் ஷன்மதி.

 

‘விஷ்ணு என்னடா இது உன் நிலைமை இப்படியா ஆகவேண்டும். எப்படித் தான் இவளுக்குப் புரிய வைப்பதோ.’ என்று மனதுக்குள் புலம்பியவன் எந்த ஒரு வழியும் தெரியாமல் அப்படியே நின்றான்.

13 Comments

 1. Super Super Super mam.. Emotional episode… Ashwanth அவன் அப்பா kita solli avan appa ava அப்பா kita solli avaruku avvallavu kovam… Athe கோவம் thoda வீடு ku vanthavaru avalodaya கண்ணீர் ah பார்த்ததும் கோவம் எல்லாம் poidichi… இப்போ love panra பையன் யாரு கல்யாணம் panni veikiran nu sollitaaru iva vera வழி இல்லாமல் எல்லா உண்மை யும் sollita ava அப்பா அம்மா kita avangala அது தாங்கவே முடியல… இங்க விஷ்ணு avala கோவில் ku வர solli பேசினா iva சொன்னா thaye solra so தாலி kattitaan… Iva paatukitu thitutu poita… இனிமேல் என்ன aaga pooguthoo.. Super Super mam…

  5
 2. ENNA PA INTHA PONNU SOLRATHA KEKKA MATRA NAMBA VISHNU PAVAM ILLA SIKKURAM AVA MANASA MATHI VISHNU KODA ANUPPUNGA SIS

  1
  ANANDHI SHARWIN
 3. supermam ellam therinthu thaan vishnu taali katti irukkiraan piragu yean intha 9yrspirivu aavaludan next udiku waiting mam(viji)

  1
 4. sammu baby vishnuva purinjikaye ma yen epdi panra samma epi akka sammu amma appa samma vera leval akka love you

  1
 5. Very nice epi mam.yethna thadavai padithalum poothusaa padikkiira madhiriye irrukku👍👍😍

  1
 6. mam maaya maan story intha site il poduveengala

  1
  josephinesuganyaraj
 7. Super ud mam

  1
 8. Superb

 9. Nice update sis

 10. Twistku mela twist…waiting for the mega twist🙄

 11. Hi sister
  Old storikkum ithukkum romba difference erukke. Fullah change panniteengala.

  Sulochana Chandrasekar
 12. Nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *