“நெஞ்சம் தாம் கலந்தனவே” – 11 33

அத்தியாயம் : 11

 

“அப்பாவும் இப்படித்தான் சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுத்துட்டே இருப்பாங்க. எனக்கு எங்கப்பாவை ரொம்பப் பிடிக்கும்.” அவளது வார்த்தைகளில் உணர்வு பெற்றவன் அவளைப் பார்த்தான்.

 

“என்னை உன் அப்பாவா நினைச்சுக்கோ சக்தி…” அவனது விழிகளிலும், வார்த்தைகளிலும் கனிவு வந்தது. அதைக் கேட்டு அவள் கண்ணீரை மறந்து களுக்கென்று சிரித்தாள்.

 

“கணவர் எப்படி அப்பாவாக முடியும்?”

 

“ஏன் முடியாது?” அவள் சிரிக்கவும் தான் அவனுக்கு மனது லேசானது.

 

“அதெப்படி முடியும்?” அவள் தலையை ஒரு பக்கமாய்ச் சாய்த்தபடி கேட்டாள்.

 

“ஏன் முடியாது?” என்றவன் அவளது முக வடிவை ஒற்றை விரலால் அளவெடுத்தபடி,

 

“அழகான உன்னைப் பார்க்கும் போது எல்லாம் என் மனசு கணவனாய் தடுமாறத் தான் செய்யுது. ஆனால் உன்னுடைய குழந்தைத்தனத்தைக் கண்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். இப்போ நான் உனக்கு யார்?”

 

அவனது கேள்வியில் அவள் பேந்த பேந்தவென்று விழித்தாள். அதைக் கண்டு வாய்விட்டு சிரித்தவன் தனது பர்சை எடுத்து அதிலிருந்து கடன் அட்டையை உருவி எடுத்தவன் அதை மனைவியின் கையில் திணித்தான். அவள் புரியாது அவனைப் பார்க்க…

 

“தாத்தாவோட பிறந்தநாள் விழாவுக்கான செலவுக்கு வச்சுக்கோ…”

 

“ம், ம்…” தலையை ஆட்டியவளின் தலை மீது கை வைத்து,

 

“தலையாட்டி பொம்மை…” என்று கூறியவன் சிரித்தபடி சென்றுவிட்டான்.

 

‘பொம்மையா? நானா?’ அவள் திகைப்பாய் எண்ணியபடி நின்றிருந்தாள்.

 

*******************************

 

தாத்தாவின் பிறந்தநாள் காலையில் இருந்தே களை கட்ட ஆரம்பித்து விட்டது. குணசேகரன், சுந்தரி இருவரும் தங்களது மனஸ்தாபத்தை மறந்து பெரியவருக்காக இந்தக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர். என்ன அதிசயம்! சாருலதா கூட அமைதியாக அங்கு வந்து நின்றாள். இந்த ஒற்றுமைக்குக் காரணம் சக்திப்ரியா தான்… அவள் தான் எல்லோரையும் வற்புறுத்தி வரவழைத்து இருந்தாள். சரணும், சங்கீதாவுடன் இணைந்து நின்றான். எல்லாம் தாத்தாவிற்காகத் தான். இன்று ஒரு நாள் அவரது மனம் கோணாதவாறு நடக்க விரும்பினான். சங்கீதா சந்தோசத்துடன் கணவனுடனே சுற்றி கொண்டிருந்தாள். சிவகுரு மட்டும் ஆளை காணோம்… அவன் தனக்கு முக்கிய வேலை இருப்பதாகச் சொல்லியவன், மாலையில் விழாவிற்கு வருவதாகக் கூறி விட்டு அலுவலகம் சென்று விட்டான்.

 

அதற்காக சக்திப்ரியா சண்டை போட்டு ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணவில்லை. மாறாக, “நீங்க போங்க மாமா… நாங்க பார்த்துக்கிறோம்.” என்று இன்முகத்துடன் அவனை வழியனுப்பி வைத்தாள்… அவன் தான் அவளை முறைத்துக் கொண்டு போனான்.

 

‘கொஞ்சமாவது நானில்லையே என்கிற வருத்தம் இருக்கிறதா? சந்தோசமா வழியனுப்பி வைக்கிறதை பார்… இவளை எல்லாம்…’ அவன் கோபத்தில் பற்களைக் கடித்தபடி காரை விருட்டென்று கிளப்பிக் கொண்டு சென்றான்.

 

மாலையில் சிவகுரு வீடு திரும்பிய போது வீடு திருவிழா கோலம் பூண்டியிருந்தது. மனைவியின் ஏற்பாட்டைக் கண்டு அவன் மனதில் மெச்சியபடி தங்களது அறைக்குச் சென்றான். அங்கு அழகு தேவதையாய் தயாராகி இருந்த மனைவியைக் கண்டு அவனது விழிகளில் அவனையும் அறியாது மையல் எட்டிப்பார்த்தது.

 

“வந்துட்டீங்களா?” என்றபடி திரும்பி பார்த்த சக்திப்ரியா கணவனது பார்வை மாற்றத்தை கண்டு முன்ஜாக்கிரதையாக,

 

“உங்களுக்கு வேண்டிய டிரெஸ் எல்லாம் எடுத்து வச்சயிருக்கேன். கிளம்பி வாங்க…” என்றவள் அங்கிருந்து தப்பிக்க முயல… ஒரே எட்டில் அவளது கையை எட்டிப்பிடித்தவன்,

 

“எங்கே தப்பிச்சு போற…?” என்க…

 

“ஃபங்க்சனுக்கு டைம்மாச்சு மாமா…” அவனது அருகாமையில் அவள் திணறினாள்.

 

“ஒரு நிமிசம்…” என்றவன் அவளை அணைப்பது போல் அருகில் வர… அவள் பயத்துடன் பின்னால் நகர்ந்தாள்.

 

“உனக்கு எப்பவும் ஒரே நினைப்பு தானா?” என்று கேட்டு அவளை மேலும் அதிர வைத்தவன் தனது கையிலிருந்த வைர கழுத்தணியை அவளது சங்கு கழுத்தில் மாட்டி விட்டான். அவனது செயலில் அவள் பெருமூச்சுடன் அவனைப் பார்த்தாள்.

 

மற்றொரு கையில் இருந்த நகைப்பெட்டியை அவளிடம் கொடுத்தவன், “இதில் இருப்பதை மாற்றிவிட்டு போ…” என்றுவிட்டு செல்ல…

 

அவனது செயலில் சக்திப்ரியாவின் இதழ்கள் தானாக விரிந்தது. அவள் மந்தகாச புன்னகையுடன் அதிலிருந்த கம்மல், வளையல், மோதிரம் எல்லாவற்றையும் அணிந்து கொண்டாள். அதை அவள் கண்ணாடி முன் நின்று அழகு கூடப் பார்க்கவில்லை. அப்படியொரு எண்ணம் அவளுக்குத் தோன்றவும் இல்லை.

 

கீழே இறங்கி வந்த சக்திப்ரியாவை கண்ட சாருலதாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. அதிலும் அவள் அணிந்திருந்த வைர அணிகலன்களின் மதிப்பு அவளது ஆத்திரத்தில் பெட்ரோலை ஊற்றியது.

 

‘அன்னக்காவடிக்கு வந்த வாழ்க்கையைப் பார்’ என்று அவள் மனதிற்குள் பொருமினாள். அந்த நொடி சிவகுருவையும், சக்திப்ரியாவையும் ஒருங்கே மட்டம் தட்ட அவளது மனதில் லட்டு போன்று அழகான திட்டம் ஒன்று தோன்றியது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்…

 

எல்லோருக்கும் சிற்றுண்டி எடுத்து வைத்துக் கொண்டிருந்த மனைவியைக் கண்ட சிவகுரு விழா நடக்கும் இடத்திற்குச் செல்லாது நேரே அவளை நோக்கி வந்தான். அவள் அருகில் வந்ததும் பின்பக்கம் இருந்து அவள் புறம் குனிந்தவன் அவளது காதருகில் ரகசியமாய்,

 

“ரொம்ப அழகாயிருக்கடி…” என்க…

 

“நான் அவ்வளவு அழகா மாமா?” அவள் விழிகளை விரித்தபடி அறியாமையுடன் கேட்க…

 

“நீ அழகு இல்லை… நான் வாங்கிக் கொடுத்த ஜூவல்ஸ் தான் அழகாயிருக்கு. அதோடு சேர்த்து நீயும் கொஞ்சம் அழகா இருக்க.” என்று அவன் நமட்டு சிரிப்புடன் கூற…

 

“ஓ… நான் கண்ணாடி பார்க்கலையே…” என்று அவள் வருத்தப்பட…

 

அவன் அவளைத் திருப்பித் தன்னைப் பார்க்கும்படி நிறுத்தி வைத்தவன் அவளது விழிகளோடு விழி கலந்து, “என் கண்களைப் பார்… லுக் அட் மை ஐஸ்…” என்க… அவள் அவனது விழி வீச்சில் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவள் போல் அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

 

“என் கண்ணைப் பார்… நீ எவ்வளவு அழகுன்னு தெரியும்.” என்று கூறியவனின் மயக்கும் குரலில் அவள் மயங்கியே போனாள்.

 

இதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சாருலதாவின் மனதில் பொறாமை தீ பற்றிக் கொண்டது. இதுவரை அவளிடம் கோபம் மட்டும் தான் இருந்தது. முதன்முறையாக அவளுள் பொறாமை எட்டிப்பார்த்தது. தான் இருக்கும் இடத்தில் சக்திப்ரியா இருப்பதைக் கண்டு அவளுக்கு அத்தனை ஆத்திரமாக வந்தது.

 

ஆறு மணியில் இருந்து விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். ராணியும், ஞானமும் வந்திருந்தனர். அக்கா, தங்கை இருவரும் சந்தோசமாக விழாவில் கலந்து கொள்வதைக் கண்டு இருவரது மனதும் நிறைந்து போனது.

 

காலையில் கோவிலுக்குப் போய் உற்சாகமாய் ஆரம்பித்த தாத்தாவின் பிறந்தநாள் மாலையில் கேக் வெட்டி ஆர்ப்பாட்டத்துடன் இனிதே முடிவுற்றது. தாத்தாவுக்கும் ரொம்பச் சந்தோசமாக இருந்தது. அதிலும் சிவகுரு விழாவில் கலந்து கொண்டது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவன் குடும்பத்தினரோடு அவ்வளவு சீக்கிரம் இணங்கி வர மாட்டான். இப்போது மனைவிக்காக அவன் தன்னை மாற்றிக் கொண்டது கண்டு அவருள் பெரும் வியப்பு…

 

‘பயல், காதல் இல்லை… பிடிச்சிருக்கான்னு தெரியலைன்னு சொல்லி சொல்லியே இப்படிப் பொண்டாட்டி கிட்ட தலைக்குப்புற விழுந்துட்டானே.’ அவர் மனதில் பேரனை கேலி செய்தாலும் அவனது மகிழ்ச்சி கண்டு நிறைவாக உணர்ந்தார்.

 

எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தால் சாருலதாவிற்குப் பிடிக்காதே… அதனால் சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தாள். அப்போது சக்திப்ரியா கையில் குளிர்பானம் அடங்கிய தட்டை ஏந்தியபடி வந்து கொண்டிருந்தாள். அவள் அருகே புன்னகையுடன் சென்ற சாருலதா சக்திப்ரியாவின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு விருந்தினரை பார்த்து புன்னகைக்க… அதைக் கண்டு துணுக்குற்ற சிவகுரு நேரே மனைவியின் அருகே வந்தான். சாருலதா ஏதோ செய்யப் போகிறாள் என்பதை ஊகித்தவனாய் அவன் மனைவி அருகில் பாதுகாப்பாய் நின்று கொண்டான். அவனைக் கண்டு எள்ளலாய் புன்னகைத்த சாருலதா,

 

“தி கிரேட் பிசினஸ்மேன் சிவகுருவின் மனைவி சக்திப்ரியா பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியாத ஒரு ரகசியத்தை இப்போது நான் சொல்ல போகிறேன்.” என்று பீடிகையோடு நிறுத்த… சக்திப்ரியா திகைத்துப் போய்ச் சாருலதாவை பார்த்தாள்.

 

“என் மனைவியைப் பற்றி நீ ஒண்ணும் சொல்ல தேவையில்லை.” அவன் அடிக்குரலில் உறுமினான். அதற்கு எல்லாம் சாருலதா பயப்படுவாளா என்ன!

 

“புத்திசாலி சிவகுருவுக்கு அடிமுட்டாளாய் மனைவி அமைந்திருக்கிறது.” சாருலதா கூறியதை கேட்டு எல்லோரும் ஆச்சரியத்துடன் சிவகுருவை பார்த்தனர். அவனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். எல்லாமே நேர்த்தியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவன்… அப்படிப்பட்டவன் எப்படி மனைவி விசயத்தில் சறுக்கினான்? எல்லோர் மனதிலும் ஒரே மாதிரியாய் கேள்வி எழுந்தது.

 

சிவகுரு ஆத்திரத்தில் பல்லை கடித்தான். சக்திப்ரியாவுக்கு அவமானத்தில் பூமிக்குள் புதையுண்டு போக மாட்டோமோ என்று இருந்தது. அவள் உதட்டை கடித்தபடி, தலையைக் குனிந்து கொண்டு கண்ணீரோடு நின்றிருந்தாள்.

 

சாருலதா தனது கையிலிருந்த காகிதத்தைக் காட்டி, “இது தான் அம்மணியோட ஃபைனல் மார்க் சீட்… பத்துப் பாடத்தில் ஃபெயில்…” என்று கூறியவள் கேலியாய் சிரித்தாள். அதைக் கண்டு எல்லோரும் நக்கலாய் சக்திப்ரியாவை பார்த்து சிரித்தனர். தாத்தா, சரண், சங்கீதா, ராணி, ஞானம் எல்லோரும் திகைத்து போய் நின்றிருந்தனர்.

 

“ஸ்டாப் இட்…” சிவகுரு எல்லோரையும் பார்த்து உரக்க கத்தினான். அதில் எல்லோரும் திகைத்து போய் அவனைப் பார்த்தனர். அவன் மனைவியைத் தோளோடு சேர்த்து அணைத்தபடி,

 

“அதுக்கு என்ன இப்போ? படிப்பு இல்லைன்னா என்ன? அவளுக்கும் சேர்த்து நான் படிச்சிருக்கேன். வாழ்க்கைக்குப் படிப்பு தேவையில்லை. நல்ல குணம் தான் தேவை. என்னுடைய மனைவி தேவதை. இந்த மாதிரி ஒரு தேவதை பெண் யாருக்கு எல்லாம் மனைவியாய்க் கிடைச்சிருக்கு? உங்க மனசாட்சியைக் கேட்டுட்டு கையைத் தூக்குங்க.” அதைக் கேட்டு எல்லோருமே தலைகுனிந்தனர். யாருமே கையைத் தூக்கவில்லை. எல்லோருடைய மனைவியும் தத்தம் கணவன்மாரை முறைத்தனர்.

 

“என் மனைவி எனக்குக் குழந்தை மாதிரி… அவளைப் போல் நல்லவளை எங்கும் காண முடியாது. நானாக விரும்பித்தான் அவளைத் திருமணம் செய்தேன். ஒரு சிலரை போல் கீழ்த்தரமாக என்னை மயக்கி வளைத்து போட அவள் நினைக்கவில்லை.” என்றவனின் பார்வை சாருலதாவை துளைத்தெடுத்தது. அதைக் கேட்டு அவளது முகம் அவமானத்தில் கன்றிப் போய்விட்டது.

 

சக்திப்ரியா கணவனை ஆச்சரியத்துடன் பார்த்திருந்தாள். தாத்தா, சரண், சங்கீதா, ராணி, ஞானம் எல்லோரும் மகிழ்ந்து போயினர்.

 

“வெல்செட் மாமா…” என்றபடி கைத்தட்டி ஆர்ப்பரித்தாள் சங்கீதா. அவளுடன் சேர்ந்து சரணும் கைத்தட்டி விசிலடிக்க… விருந்தினர்களும் கைத்தட்டி சிவகுருவின் பேச்சை ஆமோதித்தனர்.

 

சிவகுருவையும், சக்திப்ரியாவையும் அவமானப்படுத்த நினைத்த சாருலதா தான் இப்போது அவமானப்பட்டு நின்றாள்.

 

“சாரு, வாயை வைத்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டியா?” குணசேகரனும், சுந்தரியும் அவளை அதட்டினர்.

 

விழா முடிந்து அனைவரும் சென்றதும் முதல் வேலையாகச் சிவகுரு குணசேகரனிடம், “நீங்கள் தனியே போய்விட்டால் நன்றாக இருக்கும் மாமா…” என்று கூறிவிட்டான்.

 

“இந்த நேரத்தில் எங்கே போவாங்க?” சக்திப்ரியா அவர்களுக்காகப் பரிந்து கொண்டு வர… அவளை முறைத்து பார்த்தவன் விறுவிறுவெனத் தங்களது அறைக்குச் சென்றுவிட்டான்.

 

“நீங்க எங்கேயும் போக வேண்டாம்ப்பா… நான் மாமாவிடம் பேசி கொள்கிறேன்.” என்று குணசேகரனிடம் கூறிய சக்திப்ரியா தனது அறையை நோக்கி ஓடினாள்.

 

கட்டிலில் கண்மூடி படுத்திருந்தவன் அருகில் வந்து நின்றவள், “மாமா…” என்று கத்தி அழைக்க… அடுத்த நொடி அவள் அவன் மீது வீழ்ந்திருந்தாள். சிவகுரு தான் அவளது கையைப் பிடித்து இழுத்திருந்தான். அவள் தன் முகம் அருகில் இருந்த கணவனது முகத்தைத் திகைப்புடன் பார்த்திருந்தாள்.

 

“என்னடி பயம் விட்டு போச்சா?” என்று அவன் கேட்க… அவனது கடுமையில் அவள் பயத்தில் வாயடைத்து போய் அவனைப் பார்த்திருந்தாள்.

 

“இப்படிக் கத்த கூடாதுன்னு உனக்குச் சொல்லியிருக்கேன்ல…” அதற்கு ஆமென்று அவள் தலையாட்ட…

 

“இத்தனை நாளாய் என்னைக் கண்டு பயந்து சுத்திக்கிட்டு இருந்தவளுக்கு இப்ப மட்டும் எப்படித் தைரியம் வந்துச்சு?”

 

“அவங்க பாவம் இல்லையா?”

 

“யார்?” அவன் முகத்தைச் சுளித்தான்.

 

“குணசேகரன் அப்பாவும், சுந்தரி அம்மாவும்…”

 

“இல்லை…” என்றான் உறுதியான குரலில்… அவள் அவனையே வைத்த கண் வாங்காது பார்த்தாள்.

 

“என்னடி பார்வை எல்லாம் பலமாயிருக்கு?” அவன் தான் பிடித்திருந்த அவளது இடையில் கையின் அழுத்தத்தைக் கூட்டினான்.

 

“நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா?” அவளது வார்த்தைகளில் அவனது பிடி தளர்ந்தது.

 

“இப்போ இந்தக் கேள்விக்கு என்ன அவசியம் வந்தது?” அவன் கேட்டதும் தான் தாமதம் அவள் பொலபொலவென்று கண்ணீர் வடித்தாள். அவளது கண்ணீரை கண்டு அவன் பதறி போய் எழுந்தவன் அவளைத் தனது கைவளைவில் வைத்துக் கொண்டே,

 

“ப்ச், எதுக்கு அழற?” என்று அவளது விழிகளைத் துடைத்து விட்டான்.

 

“நீங்க சாருக்கா திருமணத்தை நிறுத்தியது தப்பு இல்லையா?” என்று அழுதபடி கேட்டவளை கண்டு அவனுள் கோபம் எழுந்தது.

 

“இன்னைக்கு அவள் நடந்து கொண்டதை பார்த்தும் நீ இப்படிக் கேட்பது தான் எனக்குக் கோபம் வருது.”

 

“அதான் நீங்க சமாளிச்சிட்டீங்களே. எனக்காக நீங்க இருக்கும் போது எனக்கு என்ன கவலை?”

 

“வக்கணையா பேச மட்டும் செய்… ஆனா எதையும் யோசிக்காதே. சாருவை இப்படியே விட்டால் நம் வாழ்க்கையில் புகுந்து குழப்பம் பண்ணுவாள். அவளை எல்லாம் தள்ளி தான் நிறுத்தணும்.”

 

“அவள் என்னைப் பத்தி தப்பா சொன்னால் நீங்க நம்புவீங்களா மாமா?”

 

“முட்டாள்… உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?”

 

“அதே மாதிரி தான் நானும்… உங்களைப் பத்தி என் கிட்ட சொன்னால் நானும் நம்ப மாட்டேன். நாம நமக்கு இடையில் மூணாவது மனுசனை நுழைய விட்டால் தான் தவறு. நம்மில் தவறை வச்சிட்டு அடுத்தவங்களைக் குறை சொல்ல கூடாது.” தெளிவாகப் பேசிய மனைவியை அவன் ஆச்சரியம் பொங்க பார்த்தான்.

 

“எப்போதுமே நமக்கு இடையே பிரச்சனை வர போவது இல்லை. அதுக்காக நீங்க அவங்க வாழ்க்கையில் விளையாடுறது நல்லது இல்லை. பெண் பாவம் பொல்லாதது மாமா…”

 

“அவள் பெண்ணல்ல… அரக்கி…” அவன் கடுப்புடன் மொழிந்தான். அதைக் கேட்டு அவளுக்குச் சிரிப்பு வந்தது.

 

“அவங்க கெட்டவங்களாகவே இருந்துட்டு போகட்டும். நாம நல்லவங்களா இருப்போமே. அதுவும் என் கணவன், என் மாமா நல்லவங்களா இருந்தால் தான் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.”

 

அவளது இந்த வார்த்தைக்காக எதையும் செய்ய விழைந்தது அவனது உள்ளம்…! அவனது அமைதி அவளுள் கலவரம் மூட்டியது.

 

“நாம செய்ற பாவம் நம்ம சந்ததியை பாதிக்கும் மாமா. நாம பண்ற தப்புக்கு நம்ம குழந்தைங்க பலியாகலாமா?” அவள் வாரிசுகளைப் பற்றிப் பேசியதும் அவன் முற்றிலும் கரைந்தே போனான். அவளது கையை மென்மையாகப் பற்றியவன்,

 

“இப்போ நான் என்ன செய்யணும் சொல்லு?” என்று மென்மையுடன் கேட்க…

 

“மாப்பிள்ளை வீட்டார் கேட்ட சீர்களை எல்லாம் செய்து கொடுத்து, சாருக்கா கல்யாணத்தை நீங்க தான் முன்னே இருந்து நடத்தி கொடுக்கணும்.” அவளது தன்னலமற்ற வார்த்தைகளைக் கேட்டு அவன் மனம் நெகிழ்ந்து போனான்.

 

“உத்தரவு மகராணி…” மேலை நாட்டு பாணியில் குனிந்து நிமிர்ந்தவன் புன்னகையுடன் கூற… அவனது புன்னகை அவளையும் தொற்றிக் கொண்டது.

 

“நான் உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்துறேனா மாமா?” அவன் இல்லை என்பது போல் தலையாட்டினான்.

 

“இல்லை… என்னை ரொம்ப ரொம்பச் சந்தோசமா வச்சியிருக்க…” அவன் ஆழ்மனதில் இருந்து அந்த வார்த்தைகளை உதிர்த்தான்.

 

இங்குக் காதல் சொல்லப்படவில்லை… மாறாகக் கல்வெட்டாய் மனதில் செதுக்கப்பட்டது!!!

 

தொடரும்…!!!

 

 

 

33 Comments

 1. Super da

 2. Awesome ud mam, sakthi, kuru mari ellarum eruntha avangalukulla perive varathu.

 3. Super mam

 4. Super Super Super mam.. Semma semma episode… Ava அப்பா iranthathukum shiva vukum ethavathu சம்மந்தம் இருக்குமா… அவன் நானே Unnaku அப்பா va இருப்பேன்னு solran semma la… Naa அது romba ethir paappen என் husband kita… Debit card 💳 ellam koduthu jamaaikiraanga polaye தாத்தா birthday 🎂 va… Avaluku jewels எல்லாம் வாங்கி கொடுத்து Super சாரு ku semma stomach burning 🔥 போல… Eppadi avala insult பண்றா பாருங்க.. Shiva athuku விட்டல Super shiva… Athe maari ava இங்க இருந்தா தான் பிரச்சனை நின்ன கல்யாணம் panni veikka shiva kita pesitaa… அவன் நல்லவன் ah இருந்தா romba romba பிடிக்கமாமே… Shakthi semma charater.. Super Super mam.. Eagerly waiting for next episode

 5. Semma semma super ud srima…sakthi childish ah behave pannalum perfect ah birthday party ah nadathita ellaraium Vara vechu awesome….
  Saru Ku evlo patalum puthiye varathu pola…
  Sakthi ah insult panta nenachu last la Ava tha insult agi ninna…
  Sakthi great Ava kasta paduthunavangulkum nallathu nenaikura…semma ud…

 6. Nice episode mam

  Kavithasenthil
 7. Soo sweet mam..

 8. Super

  kailasammegala
 9. Super mam

 10. wow superrrrrrrrrr
  so sweet sakthi

 11. Thanks for the font size

 12. Awesome episode ma’am. Sakthi’s maturity is really very marvellous 👍👍👍

  Nisha Nandini J P
 13. Nice ud sis

  raghumohana2002
 14. Very nice ud mam😘

 15. Semaaaaaaaaaa Sakthi……yennayum sethu nee santhosama vechirukka……

 16. Ud super sister

 17. Super ud sister😘

 18. Dont know why!!!but love dis stoty a lot …..shakthi’s balancing character should be admired👏👏😘😘

 19. Super

  Vijayalakshmi 80
 20. Very nice ud

 21. Sakthi super asathite…un Mama thalai kuppura kavizhndhuttan…

  1
 22. Nice srima

 23. Nice update mam

 24. Sakthi character suoer mam

  Kavitha sivakumar
 25. Nice update Mam..Sakthi sema

 26. Nice character sakshi

 27. Nice character sakthi love her

 28. Super very nice mam

 29. Super mam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *